தேவன் மறைந்திருந்து எளிமையில் வெளிப்படுதல் மார்ச் 17,1963 காலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா காலை வணக்கம், நண்பர்களே, இக்காலை நேரத்தில் இக்கூடாரத்திற்கு வந்து இக்கட்டிடத்தின் அழகான அமைப்பையும் இங்கு தேவனுடைய பிள்ளைகள் ஒழுங்காக உட்கார்ந்திருப்பதையும் காண்பதை என் வாழ்க்கையில் நேர்ந்த அநேக உயரிய சம்பவங்களில் ஒன்றாக நான் கருதுகின்றேன். நேற்று இங்கு நான் வந்தபோது கட்டிடத்தின் அழகான அமைப்பைக் கண்டு வியப்புற்றேன், இது இவ்வளவு அழகாக அமையும் என்று நான் கனவிலும்கூட நினைக்கவில்லை. திட்டப் படத்தில் (Blueprint), ஏதோ ஒரு சிறு அறை ஒரு பக்கத்தில் வரையப்பட்டிருப்பதை நான் கண்டேன். ஆனால் அது கட்டப்பட்டபிறகு மிகவும் அழகாயிருக்கிறது. இந்த அழகான ஸ்தலத்திற்காக சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இக்காலையில் என் மனைவி, பிள்ளைகளின் வாழ்த்துக்களை உங்களுக்குக் கொண்டு வந்துள்ளேன். இப்பிரதிஷ்டை ஆராதனையிலும், கிறிஸ்துவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாரத்தின் ஆராதனையிலும் கலந்து கொள்ள அவர்கள் மிகவும் விரும்பினர். ஆனால் பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் இருக்கின்றனர். வீட்டையடைய வேண்டுமென்ற ஆவல் அவர்களை விட்டு சற்று போயிருக்கிறது. ஆனால் உங்களைக் காணவேண்டுமென்ற ஆவல் எங்களை விட்டு என்றும் போகவே போகாது. நண்பர்கள் இருப்பதும் மிகவும் நல்லது. எல்லாவிடங்களிலுமுள்ள என் நண்பர்களை நான் மதிக்கிறேன். ஆனால் பழைய நண்பர்களிடம் விசேஷித்த ஒன்றுண்டு. நாம் புதிய நண்பர்களைச் சம்பாதித்துக் கொண்டாலும் பழைய நண்பர்களுடன் அவர்களை ஒப்பிட முடியாது. நான் எங்கு சுற்றித் திரிந்தாலும், இந்த ஸ்தலம் எனக்கு புனிதமாகத் திகழும். முப்பது வருடங்களுக்கு முன்னால், இந்த இடம் சேறு நிரம்பிய ஒரு குட்டையாக இருக்கும் போதே, அதனை இயேசு கிறிஸ்துவுக்கு நான் பிரதிஷ்டை செய்தேன். குட்டையாக இருந்த காரணத்தால் தான் இதனருகில் ரஸ்தா ஏதுமில்லை, ரஸ்தா குளத்திற்கு தூரத்தில் அப்பொழுது அமைக்கப்பட்டது. இக்குட்டையில் லீலிப் புஷ்பங்கள் வளர்ந்திருந்தன. லீலிப் புஷ்பம் ஓர் விசித்திரமான புஷ்பமாகும். அது சேற்றில் பிறந்தாலும் கூட, அது சேற்றிலிருந்தும் தண்ணீரிலிருந்தும் வெளி வந்து அதன் அழகைக் காண்பிக்கிறது. அதுதான் இக்கூடாரத்துக்கும் சம்பவித்துள்ளது. இங்கிருந்து இதழ்கள் (அதாவது செய்திகள்) பல பாகங்களுக்கும் சென்று பள்ளத்தாக்கின் லீலியாகிய இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காண்பிக்கின்றன. இக்கூடாரம் அநேக காலம் நிலைத்திருப்பதாக! தேவனுக்கென்னு முற்றிலும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வீடாக இது திகழ்வதாக! 1933ம் வருடத்திலேயே இக்கூடாரம் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தாலும், கிறிஸ்துவின்பேரிலுள்ள அன்பின் காரணமாகவும் பக்தியின் காரணமாகவும், இதனைக் கட்ட சாத்தியமாக்கின ஜனங்களுக்கென்று பிரத்தியேகமாக மறுபடியும் ஒரு சிறிய பிரதிஷ்டை ஆராதனை நடத்துவது ஒரு நல்ல காரியமாகும். இக்கட்டிடத்திற்கென்று பண உதவி செய்த ஒவ்வொருவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அரும்பணி புரிந்த அருமை சகோதரரான சகோ. பாங்க்ஸ் உட் (Banks Wood) சகோ. ராய் ராபர்ஸன் (Roy Roberson) அவர்களுக்கும், ஒரே மனதுடன் தன்னலமின்றி பாடுபட்டு இக்கட்டிடம் சரிவர கட்டி முடிக்க உதவின ஏனைய சகோதரருக்கும் என் பாராட்டுகளை அளிக்கிறேன். எனக்கு எத்தகைய பிரசங்க பீடம் விருப்பமென்பதை சகோ. உட் அறிந்திருந்தார். அதே போன்று அதைக் கட்டப்போவதாக அவர் என்னிடம் கூறவேயில்லை. ஆனால் நான் விரும்பியவாறே அப்பிரசங்க பீடத்தை அவர் கட்டியிருக்கிறார். எல்லாமே பிரமாதமாகவே அமைந்துள்ளது. என் நன்றியுள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் போதா. ஆனால் தேவன் என் உணர்ச்சிகளை அறிந்திருக்கிறார். இதனை தேவனுடைய வாசஸ் தலமாக்க உதவின நீங்கள் உங்கள் காணிக்கைகளுக்கும் மற்றெல்லா காரியங்களுக்கும் தேவன் உங்களுக்கு கைம்மாறு செய்வாராக! என் மைத்துனராகிய வெபர் ஜுனியர் (Weber Junior) கொத்தவேலை செய்துள்ளார்! இதனைக் காட்டிலும் எதுவும் நேர்த்தியாக இருக்க முடியாது. ஏனெனில் குறைவற்ற விதத்தில் அதைக் கட்டியிருக்கிறார். வேறொரு சகோதரன் ஒலி அமைப்பைச் செய்திருக்கிறார். இக்கட்டிடம் சமமட்டமாக இருந்தாலும் கூட ஒலியானது பிரதிபலிக்கவில்லை. எங்கு நின்றாலும், ஒரே விதமான ஒலி எல்லாவிடங்களிலும் கேட்கின்றது. எல்லா அறைகளிலும் ஒலிப்பெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. நாம் விரும்பும் வண்ணம் ஒலியை மிருதுவாக்கலாம்; அல்லது சப்தமாக்கிக் கொள்ளலாம். சர்வ வல்லமையுள்ள தேவனின் கரங்கள் தாம் இவைகளையெல்லாம் செய்தன என நான் நம்புகிறேன். முப்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு மண் தரை தான் இக்கட்டிடத்திற்கு இருந்தது. குளிர் காய்வதற்கென நாங்கள் மரத்தூளை உபயோகித்து பழைய கரி அடுப்புகளின் அருகில் உட்காருவது வழக்கம். கட்டிடம் கட்டும் பொறுப்பேற்ற சகோ. உட்டும் சகோ. ராபர்ஸனும், பழைய கட்டிடத்தில் சதுரத்தூண்கள் அமைந்திருந்த ஸ்தலத்தை எனக்குக் காண்பித்தனர். ஒரு முறை அடுப்பினின்று புறப்பட்ட நெருப்பு கைம்மரத்தை (rafter) இரண்டு மூன்று அடிகள் எரித்து விட்டது. தேவன் தாமே அது முழுவதும் எரிந்து போகாமல் பாதுகாத்தார். கூடாரத்தின் முழு பாரமும் அதன் மேல்தான் அமர்ந்திருந்தது. என்றாலும் அது விழுந்து போகவில்லை. தேவனுடைய கரம் தான் அதைத் தடுத்தது. ஆனால் இப்பொழுதோ எஃகினால் செய்யப்பட்ட உத்திரங்களால் (girders) அது ஸ்திரமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு அழகிய கட்டிடமாக அமைவது மாத்திரமல்ல, இங்கு ஆராதனைக்குக் குழுமியுள்ளவர்களில் ஒவ்வொருவரிலும் இயேசு கிறிஸ்துவின் அழகான தன்மை காணப்படுவதாக. இது தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு ஸ்தலமாக திகழ்வதாக! இதில் ஆராதனை செய்பவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜனங்களாக இருப்பார்களாக! ஒரு சபையின் அழகு, அதன் அங்கத்தினர்களின் நற்குணத்தின் பேரில் சார்ந்துள்ளது. இது எப்பொழுதும் அழகான தேவனுடைய வீடாகத் திகழும் என நான் நம்புகிறேன். நான் அனேக வருடங்களுக்கு முன்பு மூலைக் கல்லை நாட்டி பிரதிஷ்டை ஆராதனை நடத்திய போது, ஒரு மகத்தான தரிசனத்தைக் கண்டேன். அத்தரிசனம் இன்று காலை நான் பிரதிஷ்டை செய்த மூலைக் கல்லின் மேல் எழுதப்பட்டுள்ளது. நான் ஆலயத்திலிருந்து வெளி வர தாமதித்ததைக் குறித்து நீங்கள் ஒருக்கால் வியந்திருக்கலாம். அதனுள் நுழைந்ததும் என் முதன் வேலையாக ஒரு வாலிபனுக்கும் வாலிபப் பெண்ணுக்கும் அலுவலகத்தில் விவாகத்தை நடத்தி வைத்தேன். கிறிஸ்துவுக்கென்று ஒரு மணவாட்டியை ஆயத்தப்படுத்தும் உண்மையுள்ள ஊழியக்காரனாக நான் இருப்பேன் என்பதற்கு இது ஓர் அடையாளமாயிருப்பதாக. நான் அனேக வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை ஆராதனையை நடத்தினவாறே இப்போதும் நடத்துவோம். மூலைக்கல்லை நாட்டி முதன் முறையாக பிரதிஷ்டை செய்தபோது நான் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது சென்ற ஓர் வாலிபனாயிருந்தேன். அப்பொழுது எனக்கு விவாகமாகவில்லை. தேவ ஜனங்களோடு சரியான முறையில் தேவனை ஆராதிக்க ஒரு தகுந்த ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குள்ளிருந்தது. ஒரு அழகான கட்டிடத்தின் மூலமாக நாம் தேவனை சரிவரத் தொழுது கொள்ள இயலாது, ஆனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஜீவியத்தின் மூலமாகவே அவ்வாறு செய்ய முடியும். நாம் பிரதிஷ்டை ஜெபத்தை ஏறெடுக்கு முன்பு, வேதத்தை வாசித்து இந்த கூடாரத்தை தேவனுக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக! அதன் பின்னர் ஒரு சுவிசேஷ செய்தியை இக்காலையில் கொடுப்பேன். அது இனி நான் பிரசங்கிக்கப் போகும் செய்திக்கு ஒரு ஆதாரமாயிருக்கும். இன்றிரவு, நான் வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தைக் குறித்து பேச விரும்புகிறேன். அது ஏழு சபையின் காலங்களை ஏழு முத்திரைகளுடன் பொருத்துகின்றது. திங்களிரவு வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவனைக் குறித்து சிந்திப்போம். செவ்வாயிரவு கறுப்பு குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் பற்றியும், அவ்வாறே நான்கு குதிரைகளின் மேல் வீற்றிருக்கிறவர்களெல்லாரையும் குறித்து தியானிப்போம். அதன் பின்பு ஆறாம் முத்திரை திறக்கப்படுகின்றது. தேவனுக்குச் சித்தமானால் ஞாயிறு காலையில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்படும் (அதைக் குறித்து பின்னர் அறிவிப்போம்). ஞாயிறு இரவு ஏழாம் முத்திரையுடன் கூட்டத்தை முடிப்போம். ஏழாம் முத்திரையைப் பற்றி ‘பரலோகத்தில் ஏறக்குறைய அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று’ என்னும் சிறிய வசனம் மாத்திரமே வேதத்தில் காணப்படுகின்றது (வெளி. 8:1). ஆகையால் ஏழாம் முத்திரையைத் திறப்பதற்குக் கர்த்தர் தாமே அருள்புரிவாராக! இம்முத்திரைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பதனை உங்களைப் போலவே நானும் அறியாதவனாயிருக்கிறேன். அவைகளை வியாக்கியானம் செய்யும் வேததத்துவ போதனைகளுண்டு. ஆனால் அவை மனிதனால் அளிக்கப்பட்டவை. எனவே அவை சரியாயிருக்க முடியாது. அதன் உண்மையான வியாக்கியானம் தேவ ஆவியால் ஏவப்பட்டு அளிக்கப்பட வேண்டும். அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர் மாத்திரமே மீட்புக்குரிய புத்தகத்தைத் திறக்க முடியும். இந்த கட்டிடத்தில் நாம் வியாபாரம் எதுவும் செய்யக்கூடாது. தேவனுடைய வீட்டில் வாங்கவோ விற்கவோ கூடாது. புத்தகங்கள் விற்பதற்கு வேறு ஸ்தலங்கள் உள்ளன. தேவனுடைய வீடானது பரிசுத்தமானதாயும் ஆராதனைக்கென்று ஒதுக்கப்பட்ட ஸ்தலமாயுமிருக்க வேண்டும். தேவன் ஒரு நல்ல ஸ்தலத்தை நமக்கு அளித்திருக்கிறார். அதனை நாம் அவருக்கென பிரதிஷ்டை செய்து அதனுடன் நம்மையும் அவருக்கென்று பிரதிஷ்டை செய்வோமாக! இப்பொழுது நான் கூறப்போவது சற்று கொடூரமாகக் காணக்கூடும். இந்த ஸ்தலம் ஒருவரையொருவர் சந்தித்து அளவளாவும் ஸ்தலமன்று: ஆராதிக்கும் போது நாம் தேவனோடு பேசுவதைத் தவிர வேறு சமயத்தில் ஒருவரோடொருவர் ஒரு வார்த்தையும் முணுமுணுக்கக் கூடாது; மிக்க அவசியமானால் ஏதாவது ஒரு வார்த்தை பேசலாம். நாம் கூட்டமாகக்கூடி வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது; நாம் கட்டிடத்திற்குள் இங்கும் அங்கும் நடக்கக் கூடாது; அல்லது நம் பிள்ளைகளை ஓட அனுமதிக்க கூடாது. இங்கு குழுமியிருக்கும் அனேகர் அன்னியராயிருக்கின்றனர். ஆனால் இக்கூடாரத்தின் அங்கத்தினர்கள் இது சர்வ வல்லமையுள்ளவரின் ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட விருக்கிறது என்பதனை அறிவர். ஆகையால், நாம் நம்மை பிரதிஷ்டை செய்து, பிரகாரத்துக்குள் நுழையும்போது அமைதியாயிருந்து தேவனை ஆராதிப்போம். நாம் ஜனங்களைச் சந்திப்பதற்கென வேறு அனேக ஸ்தலங்கள் உள்ளன. ஒருவரையொருவர் சந்திக்க விரும்பினால் உங்கள் வீடுகளில் சந்திக்கலாம். இப்பிரகாரம் (Sanctuary) ஆராதனைக்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஒருவரோடொருவர் சம்பாஷிக்க விரும்பினால் கூடாரத்தின் வெளியில் நின்று பேசிவிட்டு வாருங்கள். நீங்கள் அங்கு பேசுவதும் வீணான சம்பாஷணையாயிராமல் அது பரிசுத்தமுள்ளதாயும் சரியானதாயும் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் கூடாரத்திற்குள் நுழையும் போது அமைதியைக் கையாளுங்கள். நீங்கள் தேவனுடன் உரையாட இங்கு வருகின்றீர்கள். அவரும் உங்களுக்கு மறு உத்தரவு அருள விட்டுக் கொடுங்கள். நம்மிடமுள்ள ஒரு குறைபாடு என்னவெனில், நாம் அதிகமாக அவருடன் உரையாட விரும்புகின்றோமேயன்றி, அவர் நம்முடன் பேசுவதை உற்று கேட்க நாம் விரும்புவதில்லை, நீங்கள் இதற்குள் வரும்போது, அவருக்குக் காத்திருங்கள். பழைய கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்த போது மேஜர் உல்ரிச் (Major Ulrich) இசையிசைத்தார். நான் மூன்று சிலுவைகள் பின்னால் நின்று அந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தேன். அவ்வாராதனையில் பங்கேற்ற ஒரு நபரும் கூட ஒருக்கால் இன்று காலை நம் மத்தியில் இல்லாமலிருக்கலாம். யாரும் இடையில் பேசுவதற்கு நான் அப்பொழுது சம்மதிப்பதேயில்லை. வாயில் காப்போர் கதவுகள் அருகில் நின்று யாரும் பேசாதபடி கூர்ந்து கவனித்துக்கொள்வர். நீங்கள் விரும்பினால் அமைதியாக பீடத்தின் முன்னால் வந்து அமைதியாக ஜெபித்து விட்டு, உங்கள் ஆசனங்களுக்குச் சென்று வேதத்தைத் திறந்து வாசிக்கலாம். உங்களுக்கு அடுத்து உட்கார்ந்திருப்பவர்கள் அவ்வாறு செய்யாவிடில், அது அவர்களைச் சார்ந்தது. அவர்கள் உங்களிடம் பேச விரும்பினால், ‘நான் உங்களை வெளியில் சந்தித்து பேசுகிறேன். இங்கு நான் ஆண்டவரை ஆராதிக்க வந்துள்ளேன்’ என்று அவர்களிடம் கூறுங்கள். நீங்கள் வேதத்தைப் படித்துக் கொண்டிருக்கலாம் அல்லது அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருக்கலாம். முன்பிருந்த கூடாரத்தில் பியானோ கருவி அம்மூலையில் இருந்தது. சகோதரி கெர்டி (Sister Gertie) ஆராதனை சமயம் வரும் வரை, ‘மீட்பர் மரித்த குருசண்டை’ என்னும் பாட்டையோ அல்லது வேறுபாட்டையோ மிருதுவாக பியானோ கருவியில் வாசிப்பார். அதன் பின்பு பாட்டுக் குழுவின் தலைவர் எழுந்து நின்று, சபையார் ஒரிரண்டு பாட்டுக்களைப் பாட, அவர் அவைகளை நடத்துவார். இல்லையெனில் யாராவது ஒருவர் தனியாகப் (Solo) பாடுவார். இவ்விதமாக இசையிசைக்கப் பாடும் போது பிரசங்கிக்கும் சமயம் வரும் வரை நான் கேட்டுக் கொண்டேயிருப்பேன். சபையார் ஜெபித்து அல்லது துதித்துக் கொண்டிருக்கும் போது ஒரு போதகர் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்துடன் அவர்கள் மத்தியில் பிரசங்கிக்க வந்தால், அவர்கள் பரலோகத்திலிருந்து வரும் செய்தியைக் கேட்பார்களென்பது திண்ணம், ஆனால் ஒரு போதகர் குழப்பமுற்ற நிலையில் சபையாரின் மத்தியில் வரும்போது, எல்லாம் குழப்பமாயிருக்கும். அதன் காரணமாக, பரிசுத்த ஆவியானவரும் துக்கமடைவார். இங்கு சிறு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வேண்டுவதைப் பெற்றுக் கொள்ளவேண்டுமாயின், அழுவதைத் தவிர வேறொன்றையும் அவர்கள் அறியார்கள். அழும் குழந்தைகளைத் தாய்மார்கள் கொண்டு சென்று ஆவன செய்வதற்கு ஒரு அறை இங்கு கட்டப்பட்டுள்ளது. நான் அபிஷேகத்தினால் பிரசங்கிக்கும் சமயம், குழந்தைகள் அழுதால் அது என்னைப் பாதிப்பதில்லை. ஆனால் பிரசங்கத்தைக் கேட்கும் ஒரு சிலருக்கு அது தொந்தரவாய் இருக்கக் கூடும். அழும் குழந்தைகளை ஒதுக்கும் அறையிலிருந்து கட்டிடத்தின் எல்லா பாகங்களையும் காணலாம். அங்கு ஒரு ஒலிப்பெருக்கி அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் விருப்பப்படி, ஒலியின் அளவை நீங்கள் கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம். தாய்மார்களின் சௌகரியத்திற்காக ஒரு கழுநீர் அறையும் குழாயும் வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடுப்புக்களை மாற்றுவதற்கும் அங்கு வசதியுண்டு. வாலிபப் பிள்ளைகள் குறிப்புச் சீட்டுகளைச் சபையில் மாற்றிக் கொள்வதைக் தவிர்க்க வேண்டும். அவ்விதம் நேர்ந்தால் அவர்களைத் தடுப்பதற்கென்றே வாயிற்காப்போர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் .இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆசனங்களை, பிரசங்கத்தை உண்மையாய் விரும்பிக் கேட்பவர்களுக்கு அளித்தல் நல்லது. நீங்கள் சத்தமிட்டு தேவனைத் துதிக்க விரும்பினால் யாரும் உங்களைத் தடை செய்யப்போவதில்லை. ஏனெனில் உங்களுக்கு விருப்பமுள்ள முறையில் தேவனை ஆராதிப்பதற்கென்றே நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் பேசிக்கொண்டும் குறிப்புச் சீட்டுகளை மாற்றிக் கொண்டும் தேவனை நீங்கள் ஆராதிக்க முடியாது. அவ்வாறு செய்யும்போது மற்றவரும் தேவனை தொழுது கொள்வதை விட்டு அகல நீங்கள் ஏதுவாயிருக்கின்றீர்கள். இச்சபையானது தேவனுடைய ராஜ்யத்திற்கென்றும் அவருடைய வசனம் பிரசங்கிக்கப்படுவதற்கும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், நீங்கள் இங்கு வந்து ஜெபம் செய்து தேவனை ஆராதித்தல் வேண்டும். வேறொரு காரியத்தை நான் உங்களுக்குக்கூற விரும்புகிறேன். ஆராதனை முடிந்தவுடன் கூடாரத்தை விட்டு உடனே சென்று விடுங்கள். யாரிடமாவது நீங்கள் பேசவிரும்பினால், இதன் உள்ளில் பேசவேண்டாம். அவர்கள் வீட்டிற்குச் சென்று நீங்கள் பேசலாம். தேவனுக்கென்று இந்த ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்வோமாக! இது நாம் தேவனைச் சந்திக்கும் ஸ்தலமாகும். பிரகாரத்தினின்று தேவனுடைய வார்த்தை புறப்பட்டுச் செல்லுகின்றது. அவ்விதம் நாம் செய்வது நம்முடைய பரமபிதாவுக்கு பிரீதியாயிருக்கும். நான் ஜெபர்ஸ்ன்வில்லை விட்டுச் சென்று பிறகு அனேகர் வெவ்வேறு பாகங்களிருந்து இங்கு குடிவந்திருக்கின்றனர் என்று கேள்விப்பட்டேன். ஒரு வாலிபனாக நான் மூலைக்கல்லை நாட்டி இக்கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்தபோது, கர்த்தர் வருமளவும் இது நிலைத்திருக்க வேண்டுமென்று நான் அப்பொழுது ஜெபித்தேன். அந்த கூடாரத்தை எழுப்பினதன் மூலம் நான் அதிக கடனாளியானேன். சபையார் சொற்ப பேராயிருந்தபடியால் ஒரு முறை காணிக்கை எடுத்தால் முப்பது அல்லது நாற்பது சென்டுகள் மாத்திரம் தான் கிடைக்கும். ஆனால் கடனை அடைப்பதற்கும் மற்ற செலவிற்கும் மாதம் 150 அல்லது 200 டாலர்கள் தேவைப்பட்டன. நான் வேலையிலிருந்தபடியால், இக்கடனை என்னால் தீர்க்க முடியுமென்ற உறுதி எனக்குள்ளிருந்தது. என் போதக உத்தியோகத்தின் பதினேழு வருடகாலத்தில் நான் என் ஜீவனத்திற்கு அவசியமானதைக் தவிர, எனக்குக் கிடைத்த எல்லா பணத்தையும், உண்டிப் பெட்டியில் சேர்ந்த காசுகளையும் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று செலவிட்டேன். ஒரு வருட காலத்திற்குள் இது ஒரு மோட்டார் வண்டிக் கொட்டகையாக (garage) மாறுமென்று அனேகர் எண்ணினர், தீர்க்கதரிசனமும் உரைத்தனர். சாத்தானும் ஒரு வழக்கு மன்ற வியாஜ்யத்தின் மூலம் இதனைப் பறிக்கப் பார்த்தான். இக்கூடாரத்தில் பணிபுரிந்த சமயம் காலில் அடிப்பட்டது என்று ஒருவன் வியாஜ்யம் தொடர்ந்து, அதற்கு நஷ்டஈடாக இக்கூடாரத்தையே கேட்டான். அனேக வருடங்களாக இவ்வூழியத்தில் நான் நிலை நின்றேன். ஒரு வருட காலத்தில் இக் கூடாரம் அழிந்து போகும் என்னும் எண்ணத்திற்கு மாறாக இது அமெரிக்காவின் தலைசிறந்த சபைகளுள் ஒன்றாக இன்று விளங்குகிறது. இங்கிருந்து ஜீவனுள்ள தேவனின் வார்த்தை புறப்பட்டு உலகின் எல்லா பாகங்களுக்கும் சென்று கொண்டேயிருக்கின்றது. ஆம் அது உலகைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. இதற்கு நாம் நன்றியுள்ளவர்களாயிருப்போமாக! நாம் ஆராதிப்பதற்கென்று ஒரு நல்ல கூடாரம் நமக்குண்டு. நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஊழியத்தில் நாம் நம்மை அர்ப்பணித்து கிறிஸ்துவுக்கு நம்மை பிரதிஷ்டை செய்வோமாக! ஜீவனுள்ள தேவனின் ஊழியக்காரனும், உண்மையான போதகனும், நம் அருமை சகோதரனுமான சகோ. நெவில் (Bro. Neville), தான் செய்தியை அறிந்த அளவுக்கு தன் முழு முயற்சியுடன் ஊழியத்தில் நிலை கொண்டிருக்கிறார். அவர் சாதுவான குணம் படைத்தவர். கடூரமான வார்த்தைகள் உபயோகித்து, ஜனங்களின் மனதைப் புண்படுத்த அவர் விரும்புவதில்லை. அவர் யாரையும் ‘அமைதியாயிரு’ என்றோ அல்லது ‘உட்காரு’ என்றோ அதட்டுவதை நான் அவர் ஒலிநாடாக்களில் (tapes) கேட்டதில்லை. ஆனால் நான் அவ்வாறு செய்வதுண்டு. நான் கூறுவதெல்லாம் ஒலி நாடாக்களில் பதிவாகின்றன என்பது ஞாபகமிருக் கட்டும். ஒவ்வொரு உதவியாளனும் கண்காணிப்பாளனும், தான் தேவனிடத்திலிருந்து அழைப்பைப் பெற்றதை நினைவுகூர்ந்து, அளிக்கப்பட்ட ஊழியத்தில் உத்தமமாக பணியாற்ற நான் வேண்டுகிறேன். கண்காணிப்பாளர்கள் தாம் சபையின் காவல்படையினர். உண்மையான அன்பு பிழைகளைத் திருத்த முயலும் என்பதை நினைவு கூருங்கள். ஆகையால் உங்கள் பிழைகள் திருத்தப்படும் போது நீங்கள் அதை நல்ல முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய்மார்களே! உங்கள் குழந்தைகள் அழுதால் கொண்டுபோவதற்கென தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு பிள்ளைகளே! நீங்கள் கட்டிடத்தினுள் அங்குமிங்கும் ஓடக்கூடாது. பெரியோர்களே! நீங்கள் உள்ளே ஒருவருக்கொருவர் பேசக்கூடாது. அது தவறாகும். அது தேவனுக்குப் பிரீதியாயிருப்பதில்லை. ‘என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவிடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறதே’ என்று இயேசு கூறினார். அவர்கள் ஜெப ஆலயத்தில் விற்கவும் வாங்கவும் இருந்தார்கள். இயேசு ஒரு கயிற்றைப் பின்னி அவர்களெல்லாரையும் ஆலயத்தினின்று விரட்டினார். அவ்வாறு இப்பிரகாரத்தில் நேரிடுவதை நாம் விரும்புவதில்லை. ஆகையால் நமது ஜீவியம், சபை, ஊழியம், பணி மற்றும் நமக்குள்ள எல்லாவற்றையும் தேவனுடைய ராஜ்யத்திற்கென்று நாம் பிரதிஷ்டை செய்வோமாக! பிரதிஷ்டை ஜெபம் ஏறெடுக்கு முன்பு வேதத்திலிருந்து ஒரு பாகத்தை வாசிக்க விரும்புகிறேன். இது ஒரு மறு பிரதிஷ்டை தான். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னமே இது பிரதிஷ்டை செய்யப்பட்டுவிட்டது. நாம் வேதத்தை வாசித்து சற்று நேரம் அதைக் குறித்து பேசினால், தேவன் தம் ஆசீர்வாதங்களை நமக்களிப்பார் என்று நான் நம்புகிறேன். வேறொரு காரியம். இப்பொழுது பிரசங்கங்கள் பதிவு செய்ய உபயோகிக்கும் ரிக்கார்டர்களை வைப்பதற்கென ஒரு பிரத்தியேக அறை உண்டு. ஆகையால் பிரசங்கங்களைப் பதிவு செய்ய விரும்புகிறவர்கள் அங்கு சென்று பதிவு செய்துகொள்ளலாம். ஞானஸ்நான ஆராதனைக்கென்று ஒரு தனி அறையுண்டு. அப்பொழுது அணிந்துகொள்ள வேண்டிய நீண்ட ஆடைகள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு காரியம், கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவது போன்ற ஒரு உருவத்தை (Crucifix) நான் ஆலயத்தில் வைத்திருப்பதைக் குறித்து வேதம் கூறுவதை சரிவர அறியாத அனேகர் என்னைத் தவறாக நினைக்கின்றனர். ஒரு முறை நான் மூன்று சிலுவைகளை இங்கு வைத்திருந்தேன். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் கத்தோலிக்க கொள்கையைத் தழுவியது என்று ஒருவகை ஸ்தாபனத்தார் பிரசங்கித்ததன் காரணமாக, ஒரு சகோதரன் இம் மூன்று சிலுவைகளையும் கண்டு பதறினார். வேதமாணாக்கனாவது அல்லது மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனாவது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவின் உருவம் கத்தோலிக்கர்களுக்கே உரியது என்று என்னிடம் கூறட்டும். அத்தகைய உருவம் கத்தோலிக்க மார்க்கத்துக்கு அடையாளமல்ல. அது தேவனையும் அவரது ராஜ்யத்தையும் குறிக்கிறது. மரித்த பின்பு பரிசுத்தவான்கள் என்னும் பட்டம் சூடப்பட்டவர் தாம் கத்தோலிக்க மார்க்கத்தின் அடையாளமாயிருக்கின்றனர். தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரேயென்றும் அவர்தான் கிறிஸ்து என்றும் நாம் விசுவாசிக்கிறோம். ஆனால் கத்தோலிக்கர்களுக்கோ ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் மத்தியஸ்தராயிருக்கின்றனர். உத்தம வாழ்க்கையை நடத்திய கத்தோலிக்கன் எவனும் மரித்த பின்பு மத்தியஸ்தனாக மாறுகிறான் என்பதே அவர்களது எண்ணம். ஆனால் கிறிஸ்து அறையப்பட்ட சிலுவையின் உருவம் இயேசு கிறிஸ்துவையே குறிக்கின்றது. ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று மற்றவர் அறிந்து கொள்வதற்கென சிலுவைகளை முதுகில் சுமந்து கொண்டு சென்றதாக சபையின் சரித்திரம் எடுத்துரைக்கிறது. ஆதிகாலத்து கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர்கள் என்று தற்காலத்து கத்தோலிக்கர்கள் உரிமை பாராட்டுகின்றனர். ஆனால் கத்தோலிக்க சபையானது அக்காலத்தில் ஸ்தாபிக்கப்படவில்லை. ‘முதுகில் சிலுவை சுமந்தவர்கள்’ (Crossback) என்று ஜனங்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கீறீர்கள். அது தற்காலத்து கத்தோலிக்கரைக் குறிப்பிடுவதாக நீங்கள் எண்ணுகிறீர்களா? அது பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு உலகம் முழுவதும் பரம்பியுள்ள சபையைக் குறிக்கிறது. அவர்கள் தான் உண்மையான கத்தோலிக்கர். நாமெல்லாம் வேதத்தை விசுவாசிக்கும் மூல கத்தோலிக்கர். தற்கால கத்தோலிக்கர், கத்தோலிக்க ஸ்தாபனம் என அழைக்கப்படுவதைச் சேர்ந்தவர்கள். நாம் அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களல்ல. நாம் அதினின்று விடுவிக்கப்பட்டு விட்டோம். நாம் அப்போஸ்தலரின் கொள்கைகளையும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் ஆதிகாலத்து சபை விசுவாசித்த அனைத்தையும் தொடர்ச்சியாக பின்பற்றுபவர்கள். ஆனால் கத்தோலிக்க ஸ்தாபனத்தார் இவை யாவையும் பின்பற்றுவதில்லை. இயேசு கிறிஸ்து எந்த ஒலிவ மரத்தின்கீழ் ஜெபம் செய்தாரோ, அந்த ஒலிவ மரத்திலிருந்து வெட்டி இந்த சிலுவையின் உருவம் செய்ய அனேக வருடங்களானது. இதனை சகோ. ஆர்கன் பிரைட் (Bro. Arganbright) எனக்களித்தார். இந்த கூடாரத்துடன் இச்சிலுவையையும் சேர்த்து பிரதிஷ்டை செய்ய விரும்புகிறேன். இது எனது இடது பாகத்தில் தொங்குவதைப் பாருங்கள். யார் அதை அங்கு மாட்டினார்களோ நான் அறியேன். ஆனால் அது மாட்டப்பட்ட இடம் எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! இயேசு தமது வலது பாரிசத்திலுள்ள கள்ளனை மன்னித்தார். நான் தான் அவன் (மன்னிக்கப்பட்டவர்) ‘சிலுவை அவசியமா? நாம் சொரூபத்தை வைக்கக் கூடாதே’ என்று நீங்கள் கேட்கலாம். ‘யாதொரு சொரூபத்தையாகிலும் விக்கிரகத்தையாகிலும் உங்களுக்கு உண்டாக்க வேண்டாமென்று கூறின அதே தேவன், ‘இரண்டு கேரூபின்களை உண்டாக்கி அவைகளின் சிறகுகள் ஒன்றையொன்று பார்த்தவாறு, ஜனங்கள் ஜெபிக்கும் கிருபாசனத்தண்டையில் வை’ என்று கட்டளையிட்டார். ஆகையால் பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் இந்த சிலுவை சரியான இடத்தில் மாட்டப்பட்டுள்ளது. நான் அவரது வலது பாரிசத்திலிருக்கும் ஒருவனாக இருப்பதற்காக நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அவர் என் பாவங்களை மன்னித்தாரென்று நான் விசுவாசிக்கிறேன். நான் என் வாழ்க்கையில் இதுவரை களவு செய்ததேயில்லை. ஆனால் அவர் எனக்களித்த சமயத்தை நான் சரிவர உபயோகிக்காததன் காரணமாக களவு செய்வதவனாவேன். நான் செய்யத்தகாத அனேக காரியங்களைச் செய்திருக்கிறேன். என் பாவங்களையெல்லாம் அவர் மன்னித்ததற்காக இன்று காலையில் நான் அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இப்பொழுது 1 நாளாகமம் 17ம் அதிகாரத்திலிருந்து சில வசனங்களைப் படித்து, சுமார் ஐந்து நிமிடங்கள் பிரதிஷ்டை ஆராதனைக்குரிய பிரசங்கம் நிகழ்த்திய பிறகு ஜெபம் செய்து அதன் பின்பு செய்தியைப் பிரசங்கிப்போம். 1 நாளாகமம் 17ம் அதிகாரம்: ‘தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன்தீர்க்க தரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும். நான் கேதுரு மர வீட்டிலே வாசம் பண்ணுகிறேன். கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின் கீழ் இருக்கிறது என்றான். அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான்.அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்:நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக்கட்ட வேண்டாம். நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம் பண்ணாமல் ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்க கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளின் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுரு மரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ? இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின் மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டு மந்தையை விட்டு எடுத்து, நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்’ (1-8 வசனங்கள்). நாம் கண்ட அதே காரியத்தை தாவீது காண்கிறான். ‘கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி திரைகளின் கீழ் இருக்கும் போது ஜனங்களாகிய நீங்கள் கேதுரு மர வீட்டை எனக்குக் கட்டிக் கொடுத்தது உசிதமல்ல’ என்று தாவீது கூறினான். (மிருகங்கள் தோல்கள் ஒன்று சேர்த்து தைத்து திரைகள் உண்டாக்கப்பட்டன). கர்த்தருக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்ற எண்ணத்தைக் கர்த்தர் தாவீதின் மனதில் எழும்பப்பண்ணினார். தாவீது, கர்த்தர் பேரில் அன்பு கொண்டவனும், தன்னையே தத்தம் செய்தவனாயிருந்தாலும் கூட, அவன் அதிக இரத்தம் சிந்தினவனாயிருந்தான். தாவீது அக்காலத்தில் தீர்க்கதரிசியாக விளங்கிய நாத்தானின் முன்பு இவ்வார்த்தைகளைச் சொன்னான். தேவன் தாவீதின் பேரில் அன்பு கொண்டுள்ளார் என்பதனை நாத்தான் அறிந்து, ‘உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும். தேவன் உம்மோடிருக்கிறார் என்றான். இது என்னே வாக்குமூலம்! அன்று ராத்திரியிலே தேவன் கிருபையுள்ளவராய் இறங்கி வந்து நாத்தானுடன் பேசுகின்றார். இது தாவீதின் அன்புக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. அவன் தேவனுடைய ஆலயத்தைக் கட்ட அனுமதிக்கப் படுவதில்லை என்பதனைக் கூறவே தேவன் நாத்தானுடன் பேசுகின்றார். நாத்தானுடன் அவர், ‘உன்னை ஆட்டு மந்தையை விட்டு எடுத்தேன் என்பதாய் என் தாசனாகிய தாவீதிடம் சொல்’ என்று கூறினார். அவன் ஒன்றுமில்லை என்று அவர் எடுத்துக் காட்டினார். அந்த வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ‘ஒன்றுமில்லாத உன்னை நான் எடுத்து பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்களித்தேன்’ என்னும் வசனத்தை என்னுடைய வாழ்க்கையில் பொருத்திக் கொள்ள விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு இந்த பட்டினத்தில் யாரும் எனக்காகக் கவலைப்படுவது கிடையாது. நான் அவர்களை நேசித்தாலும், என் குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக யாரும் என்னை நேசிப்பதில்லை. இதைக் கூறுவதனால் என் அருமை பெற்றோரை நான் அவமதிக்கிறேன் என்று எண்ண வேண்டாம். இன்று காலை இப்பிரகாரத்தில் என் தாயார் ஆராதனையில் பங்கு கொண்டிருந்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! இக்கட்டிடத்திற்கென்று பண உதவி செய்து மரித்து போனவர்கள் இன்று காலை நடக்கும் ஆராதனையை அக்கரையிலிருந்து காண ஒருக்கால் தேவன் அனுமதிப்பார். மது குடித்ததன் காரணமாக பிரான்ஹாம் குடும்பத்திற்கு நல்ல பெயரே கிடையாது. யாரும் என்னுடன் சாவகாசம் வைத்துக் கொள்வதில்லை. என்னுடன் பேசுவதற்கு யாருமே முன்வருவதில்லை என்று என் மனைவியிடம் ஒரு சமயம் நான் குறை கூறினதுண்டு. யாரும் எனக்காக கவலைப்படுவதேயில்லை. ஆனால், இப்பொழுதோ சற்று இளைப்பாறு வதற்கு ஜனங்களிடமிருந்து நான் ஒளிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தேவன் நமக்கு ஒரு மகத்தான ஸ்தலத்தை அளித்து அனேக பெரிய காரியங்களைச் செய்திருக்கிறார். ஆதியில் எனக்கு மோசமான பெயரிருந் தாலும், அவர் எனக்கு பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த ஒரு நாமத்தைக் கொடுத்துள்ளார். நான் சென்றவிடமெல்லாம் என் சத்துருக்களை அதமாக்கினார். அதற்கு முன்பாக யாதொன்றும் நிற்க முடியவில்லை. இதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். கந்தை அணிந்து சிறுவனாக, இங்கிருந்து இரண்டு, மூன்று வீதிகளுக்கு (Blocks) அப்பாலுள்ள இன்கிராம்வில் (Ingramville) பள்ளி கூடத்தில் படிக்கும் போது, முழு பள்ளிக்கூடமே நான் கந்தை அணிந்து குட்டையில் விளையாடுவதைக் கண்டு சிரித்தது. அக்குட்டையின் அடிப்பாகத்தில் லீலிப்புஷ்பத்தின் வித்து இருந்ததென்றும், அது இவ்வளவு அழகாக மலரும் என்றும் நான் எங்ஙனம் அறிவேன்? யாரும் என்னுடன் அப்பொழுது பேசாத நிலையில், ஜனங்கள் மத்தியில் மதிப்பையுண்டு பண்ணும் ஒரு நாமத்தை தேவன் எனக்குத் தந்தருளுவாரென்பதை நான் எங்ஙனம் அறிவேன்? ஆலயத்தைக் கட்டுவதற்குத் தாவீதுக்கு அனுமதியில்லை. அவன் அதைக் கட்ட முடியாமற் போயிற்று. ஆனால் கர்த்தர், ‘உன் சந்ததியில் ஒரு புத்திரனை எழும்பப் பண்ணுவேன். அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான். அது நித்திய ஆலயமாயிருக்கும், உன் புத்திரனாகிய தாவீதின் குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கும் ராஜ்யத்தை ஆளுவான்’ (1 நாளா. 17 : 11 - 14) என்றார். மாம்சத்தில் தோன்றிய தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் இயற்கை பலத்தைக் கொண்டு கர்த்தருக்கு ஒரு ஆலயத்iக் கட்டினான். ஆனால் தாவீதின் உண்மையான சந்ததியான தாவீதின் குமாரன் (இயேசுகிறிஸ்து) தோன்றின போது, சாலொமோன் கட்டிய தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி நிர்மூலமாக்கப்படும் என்று கூறினார். அவர் வேறொரு ஆலயத்தைச் சுட்டிக் காண்பிக்க முயன்றார். திவ்விய வாசகனாகிய யோவான் இயேசு சுட்டிக் காண்பித்த ஆலயத்தைக் காண்கிறான் என்று வெளிப்படுத்தின விசேஷசத்தில் நாம் வாசிக்கிறோம் (வெளி. 21). அந்த புதிய ஆலயம் தேவனிடத்திலிருந்து பரலோகத்தை விட்டு இறங்கிவர அவன் கண்டான். அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப் பட்டிருந்தது. மேலும் அப்பொழுது பரலோகத்திலிருந்து ஒரு பெருஞ் சத்தம் பின்வருமாறு உண்டாயிற்று: ‘இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது: அவர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார். தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார். இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின’. அப்பொழுது உண்மையான தாவீதின் குமாரன் (அவரைக் குறித்து இவ்வாரத்தின் செய்திகளில் தியானிக்கப் போகிறோம்), தம்முடைய ஆலமாகிய உண்மையான கூடாரத்துக்கு வருவார். அதைக் கட்டுவதற் காகத் தான் இப்பொழுது அவர் சென்றிருக்கிறார். யோவான் 14ம் அதிகாரத்தில், ‘என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு. நான் போகிறேன்...’ என்று இயேசு கூறுகிறார். அப்படியாயின் என்ன பொருள்? அது ஏற்கனவே முன் குறிக்கப்பட்டுவிட்டது என்று தான் பொருள்படும். ‘நான் போய் உங்களுக்கு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன்’ என்றார் (யோ. 14:3). வரப்போகும் அந்த மகத்தான காலத்தில் அது சம்பவிக்கும் என்று நாமறிவோம், உண்மையான தாவீதின் குமாரனாகிய இயேசுகிறிஸ்து சிங்காசனத்தில் அமர்ந்து, அவரோடு ஆலயத்திலிருக்கும் அவருடைய மணவாட்டியையும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நித்திய காலமாய் அரசாளுவார். தாவீது அதிக இரத்தம் சிந்தினபடியால் உண்மையான தேவனுடைய ஆலயத்தைக் கட்டக் கூடாமற் போயிற்று. அவ்விதம் கட்டுவதற்கு அவன் ஆயத்தமாயிருக்கவில்லை. இன்றைக்கும் நாம் அப்படித்தான் இருக்கிறோம். உண்மையான தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்கு நாம் ஆயத்தமில்லாதவராயிருக்கிறோம். அதைக் கட்ட ஒருவரால் மாத்திரமே கூடும். இப்பொழுது அது இயேசுகிறிஸ்துவால் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையான கூடாரம் பூமியில் ஸ்தாபிக்கப்படும் வரை, இந்த சிறிய கூடாரமும், சாலொமோன் கட்டிய தேவாலயமும், மற்றவைகளும் தேவனை ஆராதிப்பதற்கென்று அளிக்கப்பட்ட தற்காலிக ஸ்தலங்களாகும். உண்மையான கூடாரம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், நீதியானது வானத்திற்கு வானம் அரசாளும்; துக்கம் ஒரு போதும் இருக்காது. மரித்தோர் அடக்க ஆராதனை அந்த கூடாரத்தில் நிகழ்வதில்லை. விவாக ஆராதனையும் அங்கு நடப்பதில்லை. ஏனெனில் நித்தியத்தில் ஒரே ஒரு மகத்தான விவாகம் நடைபெறும். அது எவ்வளவு உன்னதமான சமயமாயிருக்கும்! உண்மையான கூடாரம் வருவதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம் என்பதன் அறிகுறியாக,அவருடைய ஆவியின் தன்மையைப் பெற்று அந்த கூடாரத்தில் நாம் எவ்விதம் வழிபடுவோமோ அவ்விதமே இந்த கூடாரத்திலும் நாம் வழிபடுவோமென்று நம் மனதில் தீர்மானித்துக் கொள்வோமாக! நாம் வேதத்தைப் படிக்கும் போது எழுந்து நிற்போமாக: ‘பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்து போயின; சமுத்திரமும் இல்லாமற் போயிற்று. யோவானாகிய நான் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தை விட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப் போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. மேலும் பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ் சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள். தேவன் தாமே அவர்களோடே கூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்’ (வெளி. 21:1-3). நாம் தலை வணங்கி ஜெயிப்போம்: எங்கள் பரம பிதாவே, நாங்கள் பயத்தோடும், மரியாதையுடனும், பக்தியோடும் உமது சந்நிதியில் நிற்கிறோம். ஆண்டவரே, நீர் எங்களுக்குக் கிருபையாக அளித்த பணத்தின் மூலம் ஒரு ஆராதனை ஸ்தலத்தை நாங்கள் கட்ட முடிந்தது. எங்களுடைய அந்த காணிக்கையைத் தயவாய் அங்கீகரிக்க உம்மை வேண்டிக் கொள்கிறோம். பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்வதற்குத் தகுதியுள்ள ஒரு ஸ்தலத்தை நாங்கள் பூமியில் ஆயத்தம் செய்யவே முடியாது. ஆயினும் நாங்கள் உம்பேரில் வைத்திருக்கும் அன்பின் அடையாளமாக இதை உமக்குக் காணிக்கையாகப் படைக்கிறோம். நீர் எங்களுக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காவும் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறோம். ஆண்டவரே, இந்தக் கட்டிடமும் நிலமும் அனேக வருடங்களுக்கு முன்னமே உமது ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த பழைய நினைவுகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தேவனாகிய கர்த்தாவே, அன்று நான் தரிசனத்திலே பழைய கட்டிடம் புதுப்பிக்கப் பட்டதையும், நான் நதியைக் கடந்து செல்லுவதையும் கண்டேன். இன்றைக்கு அது நிறைவேறிற்று. வானத்தையும் பூமியையும் படைத்த சிருஷ்டி கர்த்தராகிய தேவனே, உம் மந்தையின் ஜனங்களாகவும் உம்முடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாகவும் நாங்கள் இங்கு நிற்கிறோம். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய ஊழியத்திற்கென்று, என்னையும், இச்சபை போதகரையும், சபையின் அங்கத்தினரையும், இக்கூடாரத்தையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அர்ப்பணிக்கிறோம். சுவிசேஷம் இங்கிருந்து உலகின் எல்லாப் பாகங்களுக்கும் சென்று, உலகின் நாலு பாகங்களிலிருந்தும் ஜனங்கள் இங்கு வந்து தேவனுடைய மகிமை இங்கிருந்து புறப்படுவதைக் காணட்டும், நீர் எங்களுக்கு முன்பு செய்த நன்மையைக் காட்டிலும் அதிகமாக எதிர்காலத்தில் எங்களுக்கு நன்மை கிடைப்பதாக. பிதாவே, உம்முடைய வார்த்தையின் மூலமாய் எங்களையும் எங்களுக்குள்ளே எல்லாவற்றையும் உம்முடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கிறோம். சபையாரும் தேவனுடைய வசனத்தைக் கேட்பதற்காக அவர்களை இன்று காலையில் அர்ப்பணிக்கின்றனர். போதகராகிய நாங்களும் தேவ வசனத்தைப் போதிக்க எங்களை சமர்ப்பிக்கிறோம். முப்பது வருடங்களுக்கு முன்னால் மூலைக்கல்லில் எழுதப்பட்ட விதமாய், சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் நாங்கள் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணவும், எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்து கொண்டு புத்தி சொல்ல எங்களை அர்ப்பணிக்கிறோம். ஜனங்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்திற்குச் செவியை விலக்கி, கட்டுகதைகளுக்குச் சாய்ந்து போகும் காலம் வரும் என்பதாக நீர் சொல்லியிருக்கிறீர். ஆண்டவரே, தேவனுடைய வசனத்தை ஜனங்களுக்கு எடுத்துரைக்க நாங்கள் முயன்று கொண்டிருக்கும் சமயத்தில், நாங்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு, இரட்டிப்பாக பலப்படவும், எருசலேம் தேவாலயத்தை பிரதிஷ்டை செய்த சமயம் சாலொமோன் ஜெபம் பண்ணி முடிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் மேக ஸ்தம்பத்தின் உருவிலும், அக்கினி ஸ்தம்பத்தின் உருவிலும் முன்வாசல் வழியாய் பிரவேசித்து, கேரூபின்களின் மேலேறி, பரிசுத்த ஸ்தலத்தில் இளைப்பாறினதுபோன்று, இரட்டிப்பான ஆவியால் நாங்கள் பிரசங்கிக்கும் அந்தஸ்தலத்தையும் வல்லமையுள்ளதாய் நிரப்பவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். தேவனே, ‘உம்முடைய ஜனங்கள் கஷ்டத்திலிருக்கும்போது, இந்த பரிசுத்த ஸ்தலத்தை நோக்கி ஜெபம் பண்ணினால் பரலோகத்திலிருந்து அவர்கள் ஜெபத்தைக் கேட்டருளுவீராக’ என்று சாலொமோன் ஜெபித்தான். ஆண்டவரே, இந்த காலையில்இங்கு பரிசுத்த ஆவியானவர் தங்கள் ஜீவியத்தை உமக்கென்று அர்ப்பணித்துள்ள ஒவ்வொரு ஆத்துமாவின் இருதயத்திலும் பிரவேசிப்பாராக. கர்த்தருடைய மகிமை அதிகமாயிருந்தபடியால், ஊழியக்காரர் தேவனுக்கு முன்பாக ஊழியஞ் செய்ய கூடாமற் போயிற்று என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கிறோம். கர்த்தராகிய தேவனே, எங்களையும் இந்த கூடாரத்தையும் உமது ஊழியத்திற்கென்று நாங்கள் பிரதிஷ்டை செய்யும்போது, அதே சம்பவம் மறுபடியும் இப்பொழுது நிகழட்டும், ‘கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறதே, இந்த காலையில் எங்களையும் இந்த கூடாரத்தையும், சாயங்கால நேரத்தில் உண்டாகும் வெளிச்சத்திற்காக, உமது ஊழியத்திற்கென்று சமர்ப்பிக்கின்றோம், அந்த வெளிச்சம் உமது வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஆறுதலையும் விசுவாசத்தையும் அளிக்கட்டும். மணவாளன் வந்து மணவாட்டியை கிறிஸ்துவின் சுவிசேஷத்தினால் உடுத்துவித்து, அவர்களை ஏற்றுக்கொள்ள அவர்கள் காத்திருக்கின்றனர். இந்த கூடாரத்தையும், என்னையும், சகோ. நெவில்லையும் (Bro. Neville) சபையாரனைவரையும் தேவனுடைய ஊழியத்திற்கென்று சமர்ப்பிக் கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, ஆமென். நீங்கள் உட்கார்ந்து கொள்ளலாம். ‘கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்’ என்று தாவீது கூறினான். அவ்விதமாக கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவோமென்று யாராவது நம்மிடம் சொல்லும்போது, தேவனுடைய வீட்டில் ஒன்று கூடுவதற்கு நாம் மகிழ்ச்சியடைவோமாக, ஆமென். பிரதிஷ்டை ஆராதனைக்குப் பிறகு, இன்னும் ஒரு மணி நேரம் அவகாசம் எனக்குண்டு. நாம் பயபக்தியாயும், பரிசுத்தமாயும், தேவனுடைய சமூகத்தில் அமரிக்கையாயுமிருப்போமென்று நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என்பது ஞாபகமிருக்கட்டும். தேவனுடைய வீட்டில் தேவனை ஆராதித்து, நம்மாலானவரை பயபக்தியாயிருப்போம், ஆராதனை முடிந்தவுடனே இக்கட்டிடத்தை விட்டு வெளியேறுங்கள், அப்படி செய்தால் வாயில் காப்போன் துப்புரவு செய்து அடுத்த ஆராதனைக்கு ஆயத்தமாயிருக்க ஏதுவாகும். ஆராதனை முடிந்த பதினைந்து நிமிடங்களுக்குள் எல்லாரும் வெளியேறி விடவேண்டும். ஒருவரோடொருவர் சினேகிதமாயிருங்கள், எல்லாரோடும் கைகுலுக்கி மறுபடியும் ஆராதனையில் கலந்து கொள்ள அழையுங்கள். வரப்போகும் இந்த வாரத்தில் இக்கூடாரத்தில் பயபக்தியான ஆராதனைகள் நடக்குமென்று நான் எதிர்பார்க்கிறேன். நாமெல்லாம் அதை எதிர்நோக்கியிருக்கிறோம். கடந்த இரவு நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, சிலவற்றை நான் தரிசனத்தில் காணத் தொடங்கினேன். ஆகையால் கர்த்தருடைய ஒத்தாசையைக் கொண்டு ‘இது மகத்தான சமயமாயிருக்கும்’ என நான் நம்புகிறேன். நான் ‘மகத்தான சமயம்’ என்று சொல்லும் போது அப்படிப்பட்டக் காரியத்தைக் குறித்து நான் இன்று காலையில் பேசப்போகிறேன். மனிதன் பெரிதாகக் கருதும் காரியங்கள் உண்மையாக பெரியதாகக் காணப்படுவதில்லை. ஆனால் தேவன் பெரிதாக எண்ணும் காரியங்களை மனிதன் மூடத்தனமானவைகள் என்று அழைக்கிறான். தேவன் மூடத்தனமாய் கருதுபவைகளை மனிதன் பெரிதென எண்ணுகின்றான். இவைகளை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வார்த்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். ஆராதனைகள் நீண்டதாக இருக்கின்றன, அவை அவ்வாறு தான் இருக்கும். ஏனெனில் இவை கடினமாக ஆராதனைகள்,அதிக போதனையும் சமர்ப்பணமும் அவசியமாயிருக்கின்றது. நான் இப்பொழுது தங்கியுள்ள வீட்டில் நான் எடை குறைந்திருக்கிறேன் என்று சொல்லி, என்னை அதிகமாக போஷிக்கின்றனர். நான் தொடர்ச்சியாக ஊழியம் செய்துகொண்டு வருகிறேன். அடுத்த ஞாயிறு இரவு இந்த ஸ்தலத்தைவிட்டு சென்று விரையில் மெக்ஸிகோவில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யவேண்டும். இது ஒரு கடினமாக காரியம். ஆகையால் தான் அதிகம் உண்ணுவதை நான் தவிர்த்து இக்கூட்டங் களுக்காக என்னை ஆயத்தம் செய்து கொள்கிறேன். இன்று காலை சகோ. ஜுனியர் ஜாக்ஸன் (Bro. Junior Jackson) சகோ. ரட்டில் (Bro. Ruddle) மற்றும் அனேக போதகர்களைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கர்த்தர் உங்களெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக! இன்று காலையில் நான் குறிப்புகள் எழுதிக்கொண்டு வந்திருக்கிற ஒரு பொருளின் பேரில் பேச விரும்புகின்றேன். நான் முதலில் ஏசாயா 53ம் அதிகாரத்திலிருந்து படிக்க விரும்புகின்றேன். நீங்கள் வேதத்தை திருப்பி அந்த அதிகாரத்தை எடுக்கும் போது ஓரிரண்டு அறிவிப்புகளை நான் செய்ய ஆசைப்படுகிறேன். இன்றிரவு இந்த புத்தகத்தைக் குறித்து பேசி (வெளி 5ம் அதிகாரம்), அதனைக் கடைசி சபையின் காலத்துக்கும், முத்திரைகள் திறக்கப்படுதலுக்கும் இடையே பொருத்த விரும்புகிறேன். அவ்விரண்டுக்குமிடையில் ஒரு அகலமான பிளவுண்டு. நான் சபையின் காலங்களைக் குறித்துப் பேசி முடித்தவுடன் தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி பேசினேன். ஏனெனில் அவையிரண்டும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. ஏழு முத்திரைகளைக் குறித்து பிரசங்கிக்கு முன்பு தானியேலின் எழுபது வாரங்களைப் பற்றி நான் பிரசங்கித்தாக வேண்டும் என்று முடிவு கொண்டேன். ஏனெனில் அது ஏழு முத்திரைகளுடன் பொருத்தப்பட வேண்டும். இன்னும் ஒன்று மாத்திரமே பாக்கியுள்ளது. அது தான் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தை விவரிக்கும் வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரம். அதைக் குறித்து இன்றிரவு சிந்திப்போம். இன்று இரவு சற்று சீக்கிரமாகவே ஆராதனை ஆரம்பிப்போம். எல்லாரும் 7 மணிக்கு இங்கு வரமுடியுமா? சரி 6.30 மணிக்கு பாட்டு ஆராதனையை ஆரம்பிக்கலாம். 7 மணிக்கெல்லாம் நான் இங்கு வந்துவிடுவேன். இந்த வாரம் முழுவதும் சற்று நேரத்துடன் ஆராதனையை ஆரம்பிப்போம். கிறிஸ்தவனைப் போல் பாட்டுகள் பாடுவதில் ஆர்வம் கொண்டவர் யாருமேயில்லை. நாமெல்லாரும் பாடுவதில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆனால் இப்பொழுதோ நாம் வார்த்தையை தியானிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருப்போம். அதிலே நாம் நிலைத்திருப்போம். நாம் இப்பொழுது போதனையில் லயித்திருக்கிறோம். அது எனக்கு எவ்வளவு அதிக பிரயாசை (Strain) என்பதை நீங்கள் அறியலாம். நான் எதையாவது தவறாக பிரசங்கித்தால், அதற்காக நான் தேவனிடத்தில் உத்தரவாதமாயிருப்பேன். ஆகையால் தான் மற்றவர்கள் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. அது தேவனால் ஏவப்பட வேண்டும். ஏழு இடி முழக்கங்களைத் தங்கள் கைகளில் பிடித்திருக்கிற ஏழு தூதர்கள் அதை வெளிப்படுத்தித் தருவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது ஏசாயா 53ம் அதிகாரம் முதலிரண்டு வசனங்களை வாசிப்போம். இது ஏழு முத்திரைகளுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது ஒரு சிறிய செய்தி. பிரதிஷ்டை ஆராதனை இருப்பதால், புத்தகம் திறக்கப்படுதலைக் குறித்துப் பேச சமயமிருக்காது என்று நான் நினைத்தேன். அதை நாம் இன்றிரவு சிந்திப்போம். இது ஒரு சிறிய ஆராதனை நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டு அதைப்பற்றிக் கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒலிநாடாக்களில் (Tapes) பதிவு செய்தால், ஒலிநாடாக்களிலுள்ள போதனையில் நிலை கொண்டிருங்கள். ஒலி நாடாக்கள் கூறுவதைத் தவிர வேறொன்றையும் கூறாதீர்கள். ஒலி நாடாக்கள் சொல்லுவதை மாத்திரம் சொல்ல ஜாக்கிரதையாயிருங்கள். வேறொன்றையும் சொல்லாதிருங்கள். இதை நான் என் சுயமாய் சொல்லவில்லை. தேவன் தான் இதைக் கூறுகிறார். ஒலிநாடாக்கள் சொல்லாதைச் சொல்வதன் மூலம் அனேக சமயங்களில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. அநேகர் எழுந்திருந்து, ‘இதற்கு இதுதான் அர்த்தம் என்று இவர் சொன்னார்’ என்று கூறுகின்றனர். ஒலிநாடாக்கள் சொல்லுவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதோடு விட்டுவிடுங்கள். அவ்விதமாகவே வேதம் கூறுவதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் அவசியம். உங்கள் சொந்த அர்த்தத்தை அதனுடன் சேர்க்காதீர்கள். ஏனெனில் வேதம் ஏற்கனவே வியாக்கியானம் செய்யப்பட்டாகி விட்டது. ‘எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?’ (ஏசா. 53:1) வேறு விதமாய் கூறினால், ‘எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசித்தால் கர்த்தருடைய புயம் வெளிப்பட்டு விட்டது’ என்று அர்த்தம். மத்தேயு 11ம் அதிகாரம், 25-26 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். ‘அந்த சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்கு பிரியமாயிருந்தது. இந்த வேதவசனங்களிலிருந்து இன்றைக்குப் பேசவிருக்கும் செய்தியின் தலைப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ‘தேவன் எளிமையில் மறைந்து, அவ்வாறே வெளிப்படுதல்’ புத்திமான்கள் அவரைக் காணக்கூடாதவாறு தேவன் எளிமையில் மறைந்திருப்பதை நினைக்கும் போது அது விசித்திரமாயிருக்கிறது. ஏழு முத்திரைகளைக் குறித்து போதிக்கு முன்பு இதனைப் பற்றி நாம் சிந்திக்கலாம். அவர் தம்மை வெளிப்படுத்தும் விதத்தில் அநேகர் அவரைக் கண்டு கொள்ள முடியாமல் இழந்து போகின்றனர். தேவன் எவ்வாறிருக்க வேண்டுமென்றும் அவர் என்ன செய்ய வேண்டுமென்றும் மனிதன் தன் சொந்த கருத்துக்களை உடையவனாயிருக்கிறான். நான் முன்பு அனேக முறை உங்களிடம் கூறினவாறு, மனிதன் மனிதனாகவே இன்னும் இருக்கிறான். தேவன் கடந்த காலத்தில் செய்தவைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கிறான். அது போன்று அவர் எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதனை எதிர் நோக்கியிருக்கிறான். ஆனால் அவர் நிகழ்காலத்தில் செய்பவைகளை அவன் அசட்டை செய்கிறான். அதன் காரணமாகத் தான் அவரை அவர்கள் இழந்து போகின்றனர். அவர்கள் பின்நோக்கி அவர் செய்த மகத்தான கிரியைகளைக் காண்கின்றனர். ஆனால் ஒரு எளிய முறையில் அவர் பெரிதான கிரியைகளை நடப்பித்ததை அவர்கள் உணராதிருக்கின்றனர். அவர்கள் மகத்தான சம்பவம் நிகழப் போகிறதென்று எதிர்நோக்கியிருக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அவர்கள் எதிர்ப்பார்த்திருக்கும் காரியம் அவர்கள் கண்களுக்கு முன்பாகவே சம்பவிக்கும். ஆனால் அது ஒரு எளிய விதத்தில் அமைந்திருப்பதால் அவர்கள் அதை அறியாதிருக்கின்றனர். ஊடிகா (Utica) என்னும் பகுதியில் ஜிம் டார்ஸி (Jim Dorsey) என்பவர் ஒருவர் இருந்தார். உள்நாட்டுப் போரில் சண்டையிட்ட அனுபவம் வாய்ந்த போர் வீரர் அவர். யார் சார்பில் அவர் சண்டையிட்டாரென்று எனக்கு ஞாபகமில்லை. புரட்சிக்காரர் சார்பில் அவர் சண்டையிட்டார் என்று நினைக்கிறேன். தேவன் இல்லை என்று சொல்லும் நாத்திகனாக அவர் இருந்தார். உங்களில் அனேகருக்கு அவரைத் தெரிந்திருக்குமென்று நினைக்கிறேன். நதியின் கீழ்புறத்தில் அவர் தர்பூசணி பழம் பயிரிட்டிருந்தார். நான் சிறுவனாயிருக்கையில் அவர் எனக்கு நிறைய தர்பூசணி பழங்கள் கொடுத்திருக்கிறார். என் தகப்பனாருக்கு அவர் ஒரு நெருங்கிய நண்பர். அவருடைய வாழ்க்கையில் அவர் கொண்டிருந்த எண்ணத்திற்கு மாறாக சொல்லப்பட்ட ஒரு காரியம் அவரை மனந்திரும்பி தலைகுனிந்து கண்ணீர் விடச் செய்தது. இது என் சிறு வயதில் சம்பவித்தது. அவர் தம் எண்பத்தைந்தாவது வயதில் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். ஒருநாள் ஞாயிறு பள்ளியிலிருந்து வரும் ஒரு சிறுமியைப் பார்த்து, ‘ஞாயிறு பள்ளிக்குச் சென்று சமயத்தை ஏன் வீணாக்குகிறாய்?’ என்று அவர் கேட்டார். அந்தப் பெண் ‘தேவன் இருக்கிறார் என்று நான் விசுவாசிப்பதால் அப்படிச் செய்கிறேன்’ என்று பதிலுரைத்தாள். அதற்கு டார்ஸி, ‘சிறுமியே, நீ அப்படி விசுவாசிப்பது தவறாகும்’ என்றார். உடனே அந்த சிறு பெண் தரையில் குனிந்து, ஒரு சிறு பூவைப் பறித்து, அதன் இதழ்களைப் பிய்த்து, ‘இது எப்படி ஜீவிக்கிறது என்று நீங்கள் சொல்ல முடியுமா?’ என்று கேட்டாள். டார்ஸி அது முதல் சிந்திக்கத் தொடங்கினார். ‘அது பூமியில் முளைக்கிறது’ என்று டார்ஸி பதிலுரைத்திருக்கலாம். உடனே ‘பூமி எங்கிருந்து வந்தது? அந்த வித்து எப்படி பூமிக்குள் சென்றது? என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கக்கூடும். இவ்விதமாக அவர் சிந்தனை மேலிட்டவராய் தேவன் இருக்கிறாரென்று கண்டுகொள்ள முடிந்தது. நாம் நினைக்கும் வண்ணம் பகட்டான காரியங்களில் அல்ல, எளிமையான காரியங்களில் தேவன் தத்ரூபமாக காணப்படுகிறார். எனவே, தேவன் தம்மை வெளிப்படுத்தி, பின்பு மறைந்து கொள்வதில் பிரியம் கொள்கிறார். அதேவிதமாக தம்மை மறைத்துக்கெண்டு சாதாரணமான சிறு காரியங்களில் தம்மை வெளிப்படுத்துகிறார். மனிதன் தேவன் பேரில் முற்றிலுமாக சார்ந்திருக்க வேண்டுமென்றே சிருஷ்டிக்கப்பட்டான். அதனால்தான் அவன் ஆட்டுகுட்டிகளுக்கும் செம்மறியாடுகளுக்கும் ஒப்பிடப்படுகிறான். ஒரு செம்மறியாடு தன்னைத்தானே வழிநடத்திக்கொள்ள முடியாது. அதை வழிநடத்த ஒருவன் தேவை. அவ்வாறே, பரிசுத்த ஆவியானவரும் நம்மை வழி நடத்திக் கொண்டு வருகிறார். எளியவர்கள் கண்டு கொள்ளத்தக்க தாக தேவன் தம் கிரியைகள் எல்லாவற்றையும் எளிய விதத்தில் சிருஷ்டித்திருக்கிறார். சாதாரணமானவர்கள் தம்மை அறிந்துகொள்ள வேண்டுமென்று கருதி, தேவனும் எளியவர்களிடம் எளியவராகி விடுகிறார். ஏசாயா 35ம் அதிகாரத்தில், ‘பேதையராயிருந்தாலும் திசை கெட்டுப் போவதில்லை’ என்று எழுதப்பட்டுள்ளது. தேவன் மகத்தானவர்? என்ற காரணத்தால், அவரை மகத்தானவராகக் காண நாம் எதிர்பார்க்கின்றோம். அதன் காரணமாக சாதாரண காரியங்களை நாம் இழந்து விடுகிறோம். எளிமையைக் கண்டு நாம் இடறிப் போகிறோம். அதனால் நாம் தேவனைக் கண்டு கொள்ளாமல் இழந்து போகிறோம். தேவன் எளிமையில் காட்சியளித்ததன் காரணமாக அக்காலத்து ஞானிகள் அவரை இழந்து போயினர். ஏனெனில் தேவனைவிட மகத்தானவர் யாருமில்லை என்பதனைத் தங்கள் அறிவுக்கூர்மையால் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அவர் சாதாரணமாக வெளிப்பட்டபோது, அவர்கள் இடறி விழுந்து அவரைக் காணத் தவறினர். இதனை நன்றாக சிந்தியுங்கள். இங்கு காண வந்திருப்பவர்களே, உங்கள்அறைகளுக்குச் சென்றவுடன் இங்கு கூறப்பட்டவைகளை நன்றாக ஆலோசித்துப் பாருங்கள். இதை விவரிக்க வேண்டிய அளவுக்கு விவரிக்க நமக்கு சமயம் போதாது. ஆயினும், நீங்கள் அறைகளுக்குச் சென்ற பிறகு இவைகளெல்லாவற்றையும் ஒன்றாகப் பிணைத்து தியானியுங்கள். அவர் வெளிப்படும் விதத்தில் அவரைக் காணத் தவறுகின்றனர். அவர் மகத்தானவராயிருந்தும் எளியவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தக் கருதி, எளியமுறையில் மறைந்திருக்கிறார், பெரியவைகளில் அவரைக் காண நினையாதீர்கள். ஏனெனில் அவர் அவைகளைத் தாண்டிச் சென்று விடுகிறார். தேவனுடைய எளிமையைக் கூர்ந்து கவனியுங்கள். அப்பொழுது இங்கேயே எளிய விதத்தில் தேவனைக் கண்டு கொள்வீர்கள். மெருகேற்றப்பட்ட உலக ஞானம்,கல்வி, இவைகளைக் கொண்டவர்கள் அவரை எப்பொழுதும் காணத் தவறுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் இரண்டு அல்லது மூன்று பேர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். நான் கல்வித் திட்டத்தையும் அதைப் போதிக்கும் பள்ளிக்கூடங்களையும் குறைகூறிப் படிப்பறியாமையை ஆதரிக்கிறேன் என்று எண்ணவேண்டாம். நான் அவ்விதம் செய்வதில்லை. ஆனால் ஜனங்கள் கல்வியறிவுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றனர். வேத பள்ளிகளிலும் இவ்விதம் இருப்பதால், தேவன் அவர்களுக்கு முன் வைத்தவைகளை அவர்கள் காணக்கூடாமற் போகின்றனர். ஸ்தாபனத்திலிருக்கும் சகோதரரின் பேரில் எனக்கு யாதொரு வெறுப்பும் இல்லை. ஆனால் ஸ்தாபனத்தின் கொள்கைகளை நான் தீவிரமாய் எதிர்க்கிறேன். ஏனெனில், ஸ்தாபனங்கள் தங்களைப் பெரிதாகக் கருதி, தங்கள் போதகருக்கு முக்கியமான இடங்களில் கல்வி அறிவை அளித்து, அவர்கள் சரியானபடி வேத கல்வி அறிவு பெறாவிடில் அவர்களை வெளியேற்றுகின்றன; அந்தப் போதகர்களுக்கு மனோதத்துவப் பரிசோதனை செய்யப்படுகின்றன. மனோதத்துவத்தினால் ஒரு போதகன் பரிசோதிக்கப்படுவது தேவனுடைய சித்தமன்று. அவன் தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கப் போவதால், வார்த்தையைக் கொண்டு அவன் பரிசோதிக்கப்படுவதே தேவனுடைய முறையாகும். நாம் இன்று தத்துவத்தைக் குறித்தும், பிரமாணங்களைக் குறித்தும், ஸ்தாபனங்களின் கொள்கைகளைக் குறித்தும் பிரசங்கிக்கிறோம். ஆனால் வார்த்தை நமக்குப் புரியவில்லை என்று சொல்லி தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதை நாம் விட்டுவிடுகிறோம். வார்த்தையை நாம் புரிந்துகொள்ளமுடியும். அவ்வாறு செய்வதாக அவர் வாக்களித்துள்ளார். வார்த்தையை விளக்கிக் காண்பிக்க நாம் இப்பொழுது அவரிடத்தில் கேட்போம். இப்பொழுது சில நிமிடங்களுக்கு வேதத்தில் காணும் சிலரைக் குறித்து சிந்திப்போம். நோவாவின் காலத்தில் உலக ஞானத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அது மதிப்பீடு அடைந்திருப்பதைக் கர்த்தர் கண்டார். கர்த்தர், தம் மகத்துவத்தை அந்த ஜனங்களுக்குக் காண்பிக்க எண்ணி, ஒரு சாதாரண மனிதன் மூலமாய் ஒரு சாதாரண செய்தியை அனுப்பினார். நோவாவின் காலத்தில் நாகரீகம் உச்ச நிலையை அடைந்திருத்ததென்றும், தற்கால நாகரீகமும் கூட இன்னும் அந்நிலையை அடையவில்லையென்றும் கூறப்படுகின்றது. ஆனால் முடிவில் நம் நாகரீகம் அந்த காலத்தின் நாகரீகத்தின் நிலையை அடையும். ஏனெனில் ‘நோவாவின் நாட்களில் நடந்தது போல, மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும்’ என்று ஆண்டவர் உரைத்திருக்கிறார். அவர் சில திருஷ்டாந்தங்களையும் நமக்கு அளித்திருக்கிறார். எகிப்தில் பிரமாண்டமான நுனிக் கோபுரங்களும் (Pyramids) விக்கிரங்களும் (Sphinx) எழுதப்பட்டுள்ளன. அத்தகைய வடிவங்களை இக்காலத்தில் கட்டுவதற்கு நமக்குப் போதிய ஞானம் கிடையாது. அக்காலத்து சவங்களை தைலமிட்டு அவைகள் இந்நாள் வரை கெடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட மம்மிகளை (Mummys) செய்வதற்கு நம்மிடம் தைலங்கள் கிடையா. 5000 வருடங்கள் கெடாமலிருக்கும் சாயங்களை (Colour) அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். இன்று வரைக்கும் அவை சாயம் போகாமலிருக்கின்றன. அப்படிப்பட்ட சாயங்கள் நம்மிடமில்லை. இவையெல்லாம் நம் நாகரீகத்தைக் காட்டிலும் அக்காலத்து நாகரீகம் சிறப்பாயிருந்ததென்பதற்கு அத்தாட்சிகளாம். இதிலிருந்து கல்விக்கும் விஞ்ஞானத்திற்கும் எத்தகைய நாகரீகத் துக்கும் முக்கியத்துவம் அக்காலத்தில் அளிக்கப்பட்டிருந்தது என்பதை நாம் ஊகிக்கலாம். படிப்பில்லாமை அக்காலத்தில் இருந்திருக்க முடியாது. ஆகையால் செய்தியைக் கொடுக்க ஒரு சரியான மனிதனைக் கர்த்தர் அவர்கள் மத்தியில் தேடி, முடிவில் நோவா என்னும் பேர் கொண்ட படிப்பில்லாத ஒருவனைத் தெரிந்தெடுத்தார். நோவா ஒருக்கால் குடியானவனாயிருந்திருக்கக்கூடும்; அல்லது ஆடு மேய்ப்பவனாயிருந்திருக்கலாம். ஜனங்கள் மத்தியில் பிரசங்கிப்பதற்கென ஒரு சாதாரண செய்தியைக் கர்த்தர் அவனிடம் கொடுத்தார். அக்காலத்து கல்விமான்கள் செய்தியின் எளிமையைக் கண்டு இடறி விழுந்தனர். எனினும் அந்த செய்தி விஞ்ஞானத்தின் மத்தியில் அடிப்படையானதாய் அமைந்திருந்தது. வானத்தில் தண்ணீர் இல்லாத போது மழை எப்படி பெய்யும் என்று அனேகர் எண்ணினர். மிதக்கவிட தண்ணீர் இல்லாத போது, வெள்ளம் வரும்போது அதனுள் நுழைவதற்கென ஒரு பேழையைக் கட்டும் பணியான ஒரு சாதாரண செய்தியாக நோவாவின் செய்தி அமைந்திருந்தது. நோவா ஒரு எல்லைமீறிய மதவைராக்கியம் பொருந்தினவனாக (Fanatic) கருதப்பட்டான். இக்காலத்தில் அத்தகையோரை ஆங்கிலத்தில் ‘Oddball’ என்று கூறுவர். தேவனுடைய பிள்ளைகள் எல்லாருமே வினோதமானவர்தாம். நான் அவர்களில் ஒருவனாயிருப்பதனால் மகிழ்ச்சியுறுகிறேன். அவர்கள் நவீனநாகரீகத்தின் போக்கினின்று வித்தியாசப்பட்டவர்கள். ஆகையால் தான் அவர்கள் விநோதமாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அவர்கள், பரிசுத்த ஆசாரியக் கூட்டமாயும், ராஜரீகசந்ததியுமாயிருந்து தேவனுக்கு ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகின்றனர். அவருடைய நாமத்திற்கு உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளை அவர்கள் செலுத்துகின்றனர். என்னே ஜனங்கள்! அவர்கள் அவருக்குச் சொந்தமானவர்கள். பக்திவைராக்கியம் அதிகமுள்ள ஒருவன் சபைக்கு வந்து ஜனங்களின் சிந்தனைகளுக்கு மாறாக பிரசங்கித்தால் எவ்வளவு விசித்திரமாக இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள். விஞ்ஞானிகள் அதனைப் பைத்தியக்காரத்தனம் என்று அழைத்திருக்கக்கூடும். ஏனெனில் விஞ்ஞான ரீதியாக அங்கு மழையே (தண்ணீரே) இல்லை என்று அவர்களால் நிரூபிக்கமுடியும். ஆனால் இந்த சாதாரண மேய்ப்பனோ, தேவன் மழை பெய்யும் என்று சொன்னால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று விசுவாசித்தான். நோவாவின் காலத்தில் நேரிட்டதை இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். யாராகிலும் ஜெபத்தினால் குணமடைந்தால் உடனே ஜனங்கள் ‘இதுவெறும் மன உணர்ச்சியின் விளைவு தான். புற்றுநோய் இன்னும் அவனுக்குள் இருக்கிறது என்று விஞ்ஞான ரீதியாக நாங்கள் நிரூபிக்க முடியும்’ என்று சொல்வார்கள். ஆனால் ஒரு சாதாரண விசுவாசிக்கோ அந்த புற்றுநோய் போய்விட்டது. ஏனெனில் அவன் புற்றுநோயைக் கவனிப்பதில்லை. நோவாவைப் போன்று அவன் வாக்குத்தத்தத்தை நோக்கிப் பார்க்கிறான். ‘நோவாவின் நாட்களில் நடந்ததுபோல, மனுஷ குமாரனுடைய நாட்களிலும் நடக்கும்’ (லூக் 17:26) என்னும் வாக்கின் உண்மையை நீங்கள் காண முடிகிறதல்லவா? வைத்தியர் ஒருக்கால் ‘சதை வளர்ச்சி (Tumour) இன்னும் அங்குதான் இருக்கிறது. ஆகையால் புற்றுநோய் அகலவில்லை’ என்றும், ‘உன் கை முடமாகத்hன் இருக்கிறது. குணமானாய் என்று நீ எண்ணினால், நீ பைத்தியக்காரன்’ என்று விஞ்ஞான ரீதியாகக் கூறலாம். நோவாவின் நாட்களிலிருந்த அதே ஆவி தான் இக்காலத்திலும் இருக்கிறது. நோவாவின் காலத்தில், ‘மழை வானத்தில் இல்லை, நாங்கள் கருவிகளைச் சந்திரனுக்கு அனுப்பி எங்களால் பார்க்க முடியும். அங்கு தண்ணீர் இல்லவே இல்லை’ என்று கூறியிருப்பார்கள். மழை பெய்யும் என்று தேவன் கூறினால் அது நிச்சயமாக பெய்யும். ‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது’ (எபி. 11:1). விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை தன் முடிவான இளைப்பாறும் ஸ்தலமாகக் கொண்டிருக்கிறது. அங்குதான் அதற்கு இளைப்பாறும் ஸ்தலம். உங்களுக்குப்புரிகிறதா? தேவனுடைய வார்த்தையின் பேரில் தான் அதன் இளைப்பாறும் ஸ்தலம் அமைந்துள்ளது. நோவாவும் அங்கு தான் இளைப்பாறிக் கொண்டிருந்தான். ‘தேவன் சொன்னார்’, அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. நோவா பைத்தியக்காரனாக அக்காலத்தில் கருதப்பட்டான். இன்றைக்கும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்கும் ஜனங்களை ஸ்தாபனங்கள், ‘உணர்ச்சி வசப்பட்டு, சத்தமிடும்’ திகில் கொண்ட பைத்தியக்கார மக்கள்’ என்று அழைக்கின்றன. தேவனுடைய வார்த்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதிக்கிறதென்றும், அது ஒரு வாக்குத்தத்தமென்றும் அவர்கள் அறியாதிருக்கின்றனர். ‘கிழவனின் மூளை கெட்டுவிட்டது’ என்றும் ‘அவன் கூறுவது விஞ்ஞானப் பூர்வமாகத் தவறு’ என்றும் ஜனங்கள் எவ்வளவாக நோவாவைப் பரிகசித்தாலும், நோவாவுக்கு அது தேவனுடைய வார்த்தையாக அமைந்திருந்தது. புத்திமான்களும் கல்விமான்களும் அந்த எளிய செய்தியின் மேல் இடறி விழுந்து தங்கள் ஜீவனை இழந்தனர். என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்! அது இந்த சந்ததிக்கும் உரியது. ‘நான் நோவாவின் காலத்தில் வாழ்ந்திருந்தால்....’ என்று ஜனங்கள் கூறுவதுண்டு. நீங்கள் அப்பொழுது வாழ்ந்திருந்தால்,அக்காலத்து ஜனங்களின் போக்கையே நீங்களும் கடைபிடித்திருப்பீர்கள். ஏனெனில் இன்றைக்கு அதே காரியம் வேறு வகையில் மீண்டும் சம்பவிக்கிறது. அன்றைக்கு ஜனங்கள் இடறினதுபோல் இன்றைக்கும் இடறுகிறார்கள். அக்காலத்தில் அனேக பிரசங்கிகள் இருந்திருக்கக் கூடும். ஆனால் நோவா மாத்திரமே தேவனால் ஏவப்பட்டு அனுப்பப்பட்டவனாயிருந்தான். விபசாரமும் கேடுபாடும் நிறைந்த சந்ததியை தேவன் பொறுக்கக் கூடாமல் அழிக்கப்போகிறாரென்று நோவாவால் காணமுடிந்தது. நாமும் இன்றைக்கு அதே போல் காண்கிறோம் - விபச்சாரமும் கேடுபாடும் நிறைந்த நவீன சோதோம் கொமோரா, கல்விஞானம் நிறைந்தவர்களாய், தேவனும் அவருடைய வார்த்தையும் வெளிப்படும் எளிய தன்மையின் பேரில் இடறி விழுகின்றனர். உலகிலுள்ள யாவருமே, ‘தேவனுடைய வார்த்தை வெளிப்படுதலை நாங்கள் காணவில்லை’ என்று கூற இயலாது. கடைசி நாட்களுக்குரிய ‘சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்’ என்னும் வாக்குத்தத்தம் இப்பொழுதும் நிறைவேறிக் கொண்டு வருகிறது. அதைக் காண்பதற்கு நாம் சிலாக்கியம் பெற்றுள்ளோம். ஆனால் நாகரீகம் பொருந்திய உலகத்தின் மக்களுக்கு அது மறைக்கப்பட்டுள்ளது. இயேசு பிதாவை நோக்கி, ‘இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்வி மான்களுக்கும் மறைப்பது’ (லூக்.10:21) உமது திருவுளத்துக்குச் சித்தமாயி ருந்தது. அவர்களது அறிவினால் அவர்கள் ஆதியில் பாவச்சேற்றில் அமிழ்ந்து போக அறிவு தான் காரணமாயிருந்தது. ஏனெனில் சாத்தானை ஏவாள் சந்தித்தபோது அவள் அறிவைத் தேடினாள். சாத்தானும் அவளுக்கு அதைத்தந்தான். அறிவானது வார்த்தைக்கு முரண்பட்டதாக அமைந்துள்ளது. நாம் அறிவை அல்லது ஞானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லப்படவில்லை. ஏற்கனவே கூறப்பட்டுள்ள வார்த்தையின் பேரில் நாம் விசுவாசம் கொள்ள வேண்டுமென்று தான் போதிக்கப்பட்டுள்ளோம். ஆனால் இன்றைய கல்விமான்களோ வார்த்தைக்கு மெருகேற்றி தங்கள் சொந்த வியாக்கியானத்தை அளிக்கின்றனர். எல்லா காலத்திலும் இதுவே சம்பவிக்கிறது. அன்றைக்கு ஜனங்கள் காணத் தவறினது போன்று இன்றைக்கும் காணத் தவறுகின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தனர். அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்த காரணத்தால் சாதாரண ஒரு செய்தியை விசுவாசிக்க அவர்களால் கூடாமற் போயிற்று. தேவன் சத்தியத்தை எளிய விதத்தில் அளித்ததன் விளைவாக கல்விமான்களும் புத்திசாலிகளும் அதைக் காணத் தவறினர். ஒரு மகத்தான தேவன் தம்மை எளிமையாக ஆக்கிக் கொள்வதில் தான் தேவனுடைய மகத்துவமே அடங்கியுள்ளது. இன்றைக்கு மனிதர்கள் தங்களை மிகப் பெரியவர்களாக கருதி பெரிய அத்தியட்சகரென்றும், டாக்டர், பரிசுத்த போப்பாண்டவர் என்றெல்லாம் பட்டங்களைச் சூடிக் கொள்கின்றனர். இதிலிருந்து அவர்கள் தேவனைச் சார்ந்தவர்களல்ல என்பதை ருசுப்படுத்துகின்றனர். தகுதியற்ற அவர்கள் தங்களைப் பெரிதாகக் கருதிக் கொள்கின்றனர்.ஆனால் மகத்துவம் பொருந்திய தேவனோ தன்னை எளிமையாக்கிக் கொள்கிறார். ஏளிமையில் தான் மகத்துவம் அடங்கியுள்ளது. நாம் ஜெட் விமானங்களை உண்டாக்கிக் கொள்ளலாம். அல்லது ஒரு செயற்கை கிரகத்தை வானத்திற்கு அனுப்பலாம். ஆனால் புல்லின் ஒரு இதழையாவது நம்மால் சிருஷ்டிக்க முடியாது. ஆமென். புல்லின் அமைப்பு யாது என்று ஆலாசித்து அதை உண்டாக்கின தேவனை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக வேறொருவர் ஒரு பாய்ந்து தாக்கும் ஆயுதத்தை (Missile) உண்டாக்கும் முன்பே, நம் ஆயுதம் அங்கு துரிதமாக சென்று தாக்க வேண்டுமென்று எண்ணி ஒன்றை உண்டாக்க நாம் முற்படுகிறோம். நாம் சபையின் சாமர்த்தியமுள்ளவர்களாயும் புத்தி கூர்மையுள்ளவர் களாகவும் மாறி, லட்சக்கணக்கான பண மதிப்புள்ள கட்டிடங்களைக் கட்டிக் கொள்கிறோம். நம் கட்டிடம் மெத்தோடிஸ்டுகள் கட்டின கட்டிடத்தைக் காட்டிலும், அல்லது பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன் ஸ்தாபனத்தார் கட்டின கட்டிடத்தைக் காட்டிலும் விலை மதிப்புள்ளதாயிருக்க வேண்டுமென்றும் நாம் போட்டியிடுகிறோம். நாம் கல்விமான்களாக நம்முடைய சொந்த வழிகளைப் பின்பற்றும் காரணத்தால், நம்மை நாமே தாழ்த்தி, ஒரு சிறிய மூலையில் நடத்தப்படும் ஊழியத்தில் தேவன் பிரசன்னராயிருப்பதைக் காணத் தவறி விடுகிறோம். அதன் எளிமையின் காரணமாக நாம் இடறி விடுகிறோம். அவர்கள் அதிக கல்வி அறிவு படைத்ததன் விளைவாக ஒரு சாதாரண செய்தியை அவர்களால் விசுவாசிக்க முடியவில்லை, அவர்களுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு ஒத்ததாக அது அமைந்திருக்கவில்லை. அக்காலத்தில் அவர்களுக்கிருந்த கல்வித் திட்டங்களுக்கு ஏற்ப அது அமைந்திருக்கவில்லை. தேவன் இருக்கிறாரென்றும் அவர் மகத்தானவரென்றும் அவர்கள் படித்திருந்தனர். ஆனால் அவருடைய மகத்துவத்துக்கேற்ற ஒரு மகத்துவத்தை அவர்கள் உண்டாக்கிக் கொள்ள முயன்றனர், ஆனால் மேலே சொல்வதற்குரிய வழி எப்பொழுதும் தாழ்வில் தான் அமைந்திருக்கிறது. வடதுருவம் வடக்கிலிருக்கிறதென்றும் தென்துருவம் தெற்கிலிருக்கிற தென்றும் நாம் எங்ஙனம் அறிவோம்? அல்லது வடதுருவம் தென்திசையிலிருக்கின்றதோ அல்லது தென்துருவம் வடதிசையிலுள்ளதோ என்றுயாரறிவார்? நாம் வெற்றிடத்தில் (Space) தொங்கிக் கொண்டிருக்கிறோம். வடதுருவம் மேல் நோக்கியிருக்கிறது என்று நாம் கூறுகிறோம், அதை நாம் எப்படி அறிவோம்? ஒருக்கால் தென்துருவம் வடதிசையை நோக்கியிருக்கலாம், நாம் அறியமாட்டோம். ‘மேலே போவது தாழ்மையில்தான் இருக்கிறதென்று நீங்கள் எப்படி சொல்லலாம்?’ என்று ஒருக்கால் நீங்கள் என்னைக் கேட்கலாம். இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு நான் இதைக் கூறுகிறேன். ‘தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்றார், (லூக். 14:11) ஆகவே உண்மையாக, ஒருவன் உயர்த்தப்படுவது அவனுடைய தாழ்மையிலும், தாழ்த்தப்படுவது அவன் தன்னை உயர்த்துவதிலும் சார்ந்திருக்கிறது. சிக்காகோவிலுள்ள ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒரு போதகர் பெந்தேகோஸ்தரிடம் பிரசங்கிக்கச் சென்றிருந்தார். அவர் வேத பள்ளியில் நன்கு பயின்று டாக்டர் பட்டமெல்லாம் பெற்றிருந்தார். அவர் பிரசங்கத்தில் உபயோகித்த வார்த்தைகள் ஒன்றையும் அவர்கள் புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று. அவர் அதிக கல்வி அறிவு பெற்று, புத்திசாலியாக இருந்தார். டக் கூட்ஸ் (Tuck Coots) என்பவர் சமீப காலத்தில் ஜனாதிபதி தேர்தலில் நின்று தோற்றவர். நான் ஃபோர்ட் அம்மையாரின் அடக்க ஆராதனையில் நிகழ்த்திய பிரசங்கத்தை அவர் கேட்டார். நான் அச்சமயம் உயிர்த்தெழுதலைக் குறித்து இவ்விதம் பிரசங்கித்தேன். ‘சூரியன் உயிர்த்தெழுவது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் நான் உயிர்த்தெழுவேன். இலையுதிர் காலத்தில் இலை நிலத்தில் விழுந்து செத்து, மறுபடியும் ஏற்ற சீதோஷ்ண காலத்தில் இலைகள் மரத்தில் தோன்றுவது எவ்வளவு நிச்சயமோ, நாம் உயிர்த்தெழுவதும் அவ்வளவு திண்ணம். நானும் சகோ. நெவிலும் காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது டக் என்னிடம் வந்து, ‘பில்லி, உம் செய்தியை நான் மிகவும் பாராட்டுகிறேன்’ என்றார். அப்பொழுது நான் டக்கிடம், ‘எனக்கு அதிக கல்வியறிவு கிடையாது’ என்றேன். அது தான் மிகவும் சிறந்த தகுதி’ என்று அவர் பதிலளித்தார். அவர் ஒரு முறை ஆட்லாய் ஸ்டீவன்ஸன் (Adlai Stevenson) பேசுவதைக் கேட்டாராம். அவர் மிகவும் சிறந்த ஒரு பேச்சாளர். ஆனால் அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருந்து பதினைந்து நிமிடத்திற்குள் டக் தூங்கிவிட்டாராம். இதை கூறுவதனால் ஆட்லாய் ஸ்டீவன்ஸன் என்னை மன்னிக்க வேண்டும். ‘கல்லூரி அறிவு ஸ்டீவன்ஸன் பெற்றிருந்தததனால், அவர் பேசினதில் ஒரு சில வார்த்தைகள்கூட என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் உங்கள் ஆராதனைகளில் நான் ஒரு முறையாவது உறங்குவதை நீங்கள் கண்டிருக்க முடியாது’ என்று டக் கூறினார். எளிமையில் தான் தேவன் தங்கியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். அக்காலத்தில் அவர்கள் அதிக புத்திசாலிகளாயிருந்தபடியால் தேவன் எளிய விதத்தில் நிகழ்த்திய காரியங்களின் அர்த்தத்தை அவர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை.ஆனால் மகத்துவம் வாய்ந்த யேகோவா வார்த்தையில் மறைந்திருந்தார். அவர் வார்த்தையில் விசுவாசம் கொண்டுள்ளவர்களுக்கு அவர் தம்மை வெளிப்படுத்தி, அவர்களை ரட்சித்து, ஒரு எளிய செய்தி கூறுவதை நிறைவேறச் செய்கிறார். நோவாவின் எளியச் செய்தியைக் கர்த்தர் நிறைவேறச்செய்தார். மறுபடியும் மோசேயின் நாட்களில் - விடுதலையின் வேறொரு சமயம், தம் ஜனங்களை விடுவிக்க தேவன் ஒன்றைச் செய்யும்போது அவர் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அது ஒரு எளிய செய்தியாயிருக்கும். முத்திரைகளை (வெளி: 6-ம் அதிகாரம்) உடைக்கும் போது நாம் இதைக் குறித்து அறிந்து கொள்ளலாம். (இச்செய்தியை முதலில் பிரசங்கிப்பதன் நோக்கம் அதுவே). முத்திரைகளின் வெளிப்பாடு மிகவும் எளிமையாயிருப்பதால், கல்விமான்கள் அதைக் காணத்தவறி விடுகின்றனர். என்னே தேவனின் எளிமைக் கோலம்! தேவன் எவ்வாறு எளிமையில் மறைந்து கொள்கின்றார்! இன்றைக்கு அணுவையும் பிளக்க மனிதர் அறிவு பெற்றிருக்கின்றனர். ஆனால் உயிர் எங்கிருந்து தோன்றுகிறது என்று அவர்களால் கூறமுடியவில்லை. புல் சாதாரணமானது தான்; தேவன் அதில் மறைந்திருக்கிறார். சந்திரனுக்கு ஒரு விண்கலத்தை (Rocket) இன்று அனுப்பமுடியும்.ஆயினும் புல்லின் உயிரைப்பற்றி அவர்களால் விளக்கம் கூறமுடியாது. ஏனெனில் அதற்கு விளக்கம் கூற இயலாது. அது சாதாரணமான ஒரு காரியமாயிருப்பதனால் மனிதர் அதற்கு விளக்கம் கூறாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கவனியுங்கள், இஸ்ரவேல் மக்களைக் கர்த்தர் விடுவிக்க சமயம் வந்த போது அவர் என்ன செய்தார்? அவர் ஒரு எளிய குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அது ஒரு லேவியின் குடும்பம், அந்த குடும்பத்தின் தலைவனும் அவன் மனைவியும் சேற்றில் பணிபுரிந்து, தங்கள் விரோதிகளுக்குச் செங்கல் அறுத்துக் கொடுத்தனர். அவன் இஸ்ரவேல் குடும்பத்தைத் சேர்ந்த ஒரு சாதாரண அடிமை. ஆனால் தேவன் ஒரு ரட்சகனை எழுப்ப அந்த குடும்பத்தைத் தெரிந்து கொண்டார். அவர் ஒரு ராஜ குடும்பத்திலிருந்து அவனைத் தெரிந்து கொள்ளவில்லை; அல்லது ஒரு ஆசாரியனையும் அவர் தெரிந்து கொள்ளவில்லை. ஒரு சாதாரண குடும்பத்தை அவர் தெரிந்து கொண்டார் எளிமைக்கு ஓர் உதாரணம். அதன் பின்பு அவர் என்ன செய்தார்? அக்குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தது - மானிடவர்க்கத்தைச் சேர்ந்த எளிய இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கக் கர்த்தர் சூரியனையோ அல்லது காற்றையோ தெரிந்து கொண்டிருக்கலாம்; அல்லது அதற்கென்று ஒரு தேவதூதனை நியமித்திருக்கலாம். அல்லேலுயா! எதை வேண்டுமானாலும் தேவன் செய்யலாம். ஆனால் அவருடைய திட்டத்திலிருந்து அவர் ஒரு போதும் மாறுவது கிடையாது. அவர் எப்பொழுதும் எளிமையில் தான் கிரியை செய்கிறார். அதன் காரணமாகத் தான் இன்றைக்கும் அது எளிமையாக அமைந்திருத்தல் வேண்டும். சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கென ஆதியிலேயே தேவன் சூரியனையோ, காற்றையோ அல்லது தேவதூதனையோ நியமித்திருக்கலாம். ஆனால் அதற்கென்று அவர் மனிதனை நியமித்தார். அதிலிருந்து அவர் ஒரு போதும் மாறுவதில்லை. சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க ஸ்தாபனங்களையோ அல்லது குழுவினரையோ,யந்திரங்களையோ, அல்லது தேவதூதர்களையோ அவர் ஏற்படுத்தவில்லை, அதற்கென்று அவர் மனிதனை தான் நியமித்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்கு விடுதலையை அவர் கொணர்ந்தபோது, அடிமைகளின் மத்தியில் காணப்பட்ட ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண மனிதனை அவர் அனுப்பினார். அவர் மகத்துவம் பொருந்திய எத்தகைய தேவன்! எளிமையில் தம்மை வெளிப்படுத்துகிறார். இப்பொழுது கவனியுங்கள். ஊலக ஞானத்தினால் விடுதலையைக் கொண்டு வர முடியாது என்பதைக் காண்பிப்பதற்காகவே மோசேக்கு அவர் உலக ஞானத்தில் பயிற்சியளித்தார். நாம் விசுவாசத்தினால் மாத்திரமே விடுவிக்கப்பட முடியும். எகிப்தியர்க்கு ஞானத்தைப் போதிக்கும் அளவிற்கு அவன் கல்வி பயில அவர் அவனை அனுமதித்தார். அவன் கல்வி அறிவு படைத்தவனாயிருந்தான். தங்கள் பெயரையும் கூட எழுதுவதற்குப் போதிய கல்வி அறிவு படைத்திராத அந்த எளிய குடும்பத்துடன் கர்த்தர் இருந்தார். மோசே புத்திமான்களுக்குக் கல்வி புகட்டும் அளவிற்கு அறிவைப் பெற்றிருந்தாலும் தன் கல்வி அறிவினால் விடுதலையைக் கொண்டுவர முடியவில்லை. அம்முயற்சியில் அவன் பயங்கரமாகத் தோல்வி கண்டான். ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, எகிப்தின் ஞானத்தினாலும் அல்ல, வேத பள்ளிகளின் கல்வி ஞானத்தினாலும் அல்ல. ஸ்தாபனங்களின் எண்ணிக்கையினாலும் அல்ல, கல்வித்திறனால் போதிக்கப்படும் போதகத்தின் வல்லமையினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலே ஆகும்’ என்று கர்த்தர் வெளிப்படுத்தினார். முடிவில் மோசேயின் கல்வி அறிவெல்லாம் மறைந்தது. எரியும் முட்செடியில் அவன் அவரைக் கண்டபோது அவன் தன் பாதரட்சைகளைக் கழற்றி, தன்னைத் தானே தாழ்த்தி, தான் பெற்றிருந்த ஞானத்தை அறவே மறந்து போனான். நாம் நம் சுயபுத்தியின் பேரிலோ அல்லது மற்றவர்களின் ஞானத்தின் பேரிலோ சார்ந்திருக்கக் கூடாது என்பதனைக் காண்பிப்பதற்கென கர்த்தர் மோசேக்குக் கல்வி அறிவில் பயிற்சி கொடுத்து, தேவனுடைய கரமே முக்கியம் வாய்ந்தது என்பதனை உணர்த்திக் காண்பிக்க அவனை அவர் விழச்செய்தார். எளிமையில் தேவன் அவரை வெளிப்படுத்துவதற்கென்றே அவனை அவ்வாறு விழச் செய்தார். மோசே பார்வோனுக்கு அடுத்தபடியான ஸ்தானம் வகிக்கக் கர்த்தர் அவனை உயர்த்தினார். ஒரு தலைசிறந்த தளபதியாக அவன் விளங்கினான். சுற்றிலுமுள்ள நாடுகளை அவன்ஜெயித்து கைப்பற்றினான் என்று சரித்திரம் கூறுகிறது. தனக்குள்ள இராணுவ, கல்வி திறமையனைத்தேடும் கூட அவன் தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முன் வந்தபோது, கர்த்தர் அவனை வனாத்தரத்துக்குக் கொண்டு சென்று, அவனுக்குள்ள எல்லாவற்றையும் களைந்து போட்டு எளிமையில் அவனுக்குத் தரிசனமாகி, ஜனங்களை விடுவிக்க கையில் ஒரு கம்புடன் மாத்திரம் அவனை அனுப்பினார். அவன் அந்த பழைய கோணலான கம்பை வைத்துக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை விடுவித்தான்.தேவன் எளிமையில் வெளிப்படுதல். கர்த்தர் மோசேக்குள்ளும் அந்த கம்பினுள்ளும் இருந்தார். கர்த்தர் மோசேக்குள் இருந்த காரணத்தால், மோசே அந்த கம்பைத் தன் கையில் வைத்திருந்தது, தேவன் அதைத் தமது கையில் வைத்திருந்ததற்குச் சமானமாயிருந்தது. ‘பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, தேவனுடைய ஆவியினாலே ஆகும்’ என்று வேதம் கூறுகிறது. வார்த்தையின் மேல் சார்ந்திருக்கும் விசுவாசத்தினாலே காரியம் வாய்க்கும், மோசே, தான் ஒரு இரட்சகனாயிருப்பான் என்று தன் தாயின் போதகத்தின் மூலம் புரிந்து கொண்டான். ஆகவே தன்னை இராணுவத்தினால் பயிற்றுவித்தான். இராணுவப் பலத்தினால் இரட்சிக்க முடியும் என்று நினைத்து அவன் தோல்வியுற்றான். அவனுடைய படிப்பு அவனுக்கு உதவவில்லை. ஆகவே அவன் தன்னுடைய எல்லாவற்றையும் மறந்து தேவனை அவருடைய வார்த்தையில் சந்திக்க வேண்டியதாயிருந்தது. பின்பு தான் அவன் ஜனங்களை விடுவித்தான். தேவன் அவருடைய வார்த்தையின் மேலுள்ள விசுவாசத்தினால் விடுவிக்கிறார் ஆதிகாலந்தொட்டு அது அவ்விதமாகவே இருக்கிறது. காயீனையும் ஆபேலையும் நாம் சற்று பார்ப்போம். காயீன் பகட்டினால் தேவனைப் பிரியப்படுத்த முயன்றான். அவ்வாறே இன்னும் அழகான உடையணிந்த சபையாரும். அங்கிகள் அணிந்த போதகரும், அங்கிகள் அணிந்த பாடற்குழுவினரும் தேவனைப் பிரியப்படுத்துவதாக மனிதர் எண்ணுகின்றனர். அத்தகைய எண்ணம் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடிகிறதா? காயீனும் அதே காரியங்களைச் செய்ய முயன்றான். அவன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதை அழகு படுத்தினான். அவன் நேர்மையான எண்ணத்தோடு இவைகளைச் செய்து அவரை ஆராதித்தான். அவன், நான் உண்மையாய் இருக்கும் வரை, இதில் வேறு எந்தவித வித்தியாசமுமில்லை’ என்று எண்ணினான். ஆனால் அது வித்தியாசமுண்டாக்கினது, நீங்கள் உண்மையாகவே இருந்தும் தவறாக இருக்க முடியும். காயீன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி அழகான பழங்களையும் புஷ்பங்களையும், அதன் மேல் வைத்து, ‘உண்மையாகவே, மகத்தான பரிசுத்தமுள்ள, அழகுள்ள கர்த்தர், இந்த பலியை அங்கீகரிப்பார்’ என்று அவனுக்குள் எண்ணினான். ஆனால் அவன் தன் சுய ஞானத்தைக் கொண்டு இவைகளைச் செய்தான் என்று பாருங்கள். இன்றைக்கும் அவ்விதமாகவே மனிதர் தங்கள் சொந்த ஞானத்தினாலும், கல்வியினாலும், வேத பள்ளியில் கற்றவைகளினாலும், அவர்களுக்குப் புகட்டப்பட்ட வேதசாஸ்திரங்களினாலும் தேவனைப் பிரியப்படுத்தி முயல்கின்றனர். ஆனால் ஆபேலோ விசுவாசத்தினால், வெளிப்பாட்டின் மூலம், காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியைத் தேவனுக்குச் செலுத்தினான். மனிதனுடைய நிர்ணயத்தின்படி பார்த்தால், அவன் செலுத்தின பலியில் சுத்தம் என்று அழைக்கப்பட எதுவுமில்லை. அந்த ஆட்டுக்குட்டியை அவன் கழுத்தினருகில் பிடித்து, ஒரு திராட்சைக் கொடியினால் அதைக்கட்டி, பலி பீடத்துக்கு இழுத்துச் சென்றிருப்பான். அதைப் பார்க்க அழகாகவே இருந்திருக்க முடியாது. அந்த ஆட்டுக்குட்டியை அவன் பலிபீடத்தின் மேல் கிடத்தி, ஒரு கூர்மையான கல்லையெடுத்து அதன் தொண்டையை அறுத்திருப்பான். அப்பொழுது இரத்தம் அதன் மேல் பீறிட்டு வந்து அதன் குரல் எழுப்பிக்கொண்டே செத்திருக்கும். அது ஒரு பயங்கரமான காட்சியாயிருந்திருக்கும். ஆயினும், அது ஒரு பகட்டற்ற சாதாரண சம்பவமாக இருந்தது. தகப்பனின் இரத்தமும் தாயின் இரத்தமும் சேர்ந்ததால் அவன் பிறந்தாரென்று அறிந்திருந்தான். அதுமட்டுமின்றி, இரத்தத்தின் காரணமாகவே மானிடவர்க்கம் பாவத்தில் விழுந்ததென்றும், ஆகையால் இரத்தம் மாத்திரமே அவர்களை மீட்க முடியுமென்றும் அவனுக்குத் தெரியும். அவனுக்கு இச்சத்தியம் வெளிப்பட்டதனால் காயீனைக் காட்டிலும் மேன்மையான பலியை அவன் தேவனுக்குச் செலுத்தினான். அன்றொரு நாள் பத்திரிகையிலே ஒரு தீவிரவாத தர்க்கத்தைக் கண்டேன். அதாவது ஏவாள் புசித்தது ஆப்பிள் கனி அல்லவென்றும் அது ஏப்ரிகாட் (Aprieot) கனியென்றும் அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த ஆவி எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். அல்லாமலும், மோசே உண்மையாகவே சிவந்த சமுத்திரத்தைக் (Red Sea) கடக்கவில்லையென்றும், அங்கு நாணல் புல் (Reed) முடிச்சுகள் இருந்ததென்றும்,இஸ்ரவேல் ஜனங்களை மோசே அந்நாணல் புல்லின் மேல் நடத்திச் சென்றான் என்றெல்லாம் கூறப்படுகிறது. இங்ஙனம் கூறுவது நிந்தையன்றோ? தேவன் பலத்த கீழ்க்காற்றை எழும்பப் பண்ணினார். அது தண்ணீரை வலதுபுறம் இடது புறமாக பிரித்ததென்று வேதம் கூறுகிறது. அவர்கள் தங்கள் யோசனையைக் கொண்டு அது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்று ஊகிக்கத் தலைபடுகின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் உண்மையைக் காணத் தவறுகின்றனர். தவறிக்கொண்டேயிருப்பர். வெளிப்புறம் பக்தியாக காட்சியளிக்கும் மாம்ச சிந்தையுள்ள மனிதனுக்குக் காயீன் அடையாளமாயிருக்கிறான். அத்தகைய மனிதன், மனிதன் காணத்தக்கவாறு அனேக காரியங்களைச் செய்ய விழைகிறான். அவன் ஆலயத்திற்குச் சென்று அந்த கட்டிடத்திற்கு வேண்டிய அனைத்தும் செய்கிறான். ஒரே ஒரு சபைதான் உண்டு. நீங்கள் அதில் சேர்வதில்லை சபைகள் என்று கூறப்படுபவை அனைத்தும் விடுதிகளாம் (Lodges). நீங்கள் மெதோடிஸ்ட் விடுதியைச் சேரலாம்; அல்லது பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தேகோஸ்தே விடுதிகளைச் சேரலாம். இவையெல்லாம் விடுதிகளே. அவை சபையன்று, நீங்கள் சபைக்குள் பிறக்கிறீர்கள். மெதோடிஸ்ட் சபை, பெந்தேகோஸ்தே சபையென்றெல்லாம் கிடையாது. அவ்வாறு தவறாகும். அவைகள் மனிதர் சேருவதற்குகந்த விடுதிகளாகும். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் நீங்கள் பிறக்கிறீர்கள். அதுதான் இயேசு கிறிஸ்துவின் சரீரமான இரகசியமான சபையாகும். சிந்தப்பட்ட இரத்தத்தின் பேரில் ஆபேல் விசுவாசம் கொண்டிருந்தான். அந்த இரகசியத்தை அவனுக்கு வெளிப்படுத்த கர்த்தர் விருப்பம் கொண்டார். அதை விவரிக்க சமயமிருந்தால் நலமாயிருக்கும. ஆனால் காயீன் தனக்கிருந்த ஞானத்தைக் கொண்டு அதைச் செய்தான். ‘சகோ. பிரான்ஹாமே, காயீனைக் கல்விமானாக நீர் சித்தரிக்க முயல்கிறீர்’, என்று நீங்கள் கேட்கலாம். அவன் கல்விமான்தான். அவனுடைய சந்ததியில் பிறந்த ஒவ்வொருவரையும் கவனியுங்கள். அவர்கள் ஒவ்வொருவரும் விஞ்ஞானிகளும், வைத்தியர்களும், புத்திசாலிகளுமாயிருந்தார்கள். ஆனால் சேத்திலிருந்து நோவாவின் காலம் வரை வழி வந்த சந்ததியைப் பாருங்கள். அவர்கள் எளிய குடியானவர்களும் ஆடு மேய்ப்பவர்களுமாயிருந்தனர். இதற்கு மாறாக காயீனின் சந்ததிபுத்தி கூர்மை படைத்தவராயிருந்தனர். அவர்கள் உலோகத் தொழில் செய்து, கட்டிடங்களைக் கட்டினர். ஆனால் சேத்தின் சந்ததி கூடாரங்களில் வசித்து, ஆடு மேய்த்து, தேவனுடைய வாக்குத்தத்தங்களில் நிலை நின்றனர். அவர்கள் மத்தியிலிருந்து தான் நோவா தெரிந்தெடுக்கப்பட்டான். பவுலும், ஜான் வெஸ்லியும், மார்டின் லூதரும், இன்னும் மற்றவரும், தேவனுடைய வாக்குத்தத்தங்களில் பரிபூரணமாய் விசுவாசிக்கும் சந்ததியிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்டனர். இன்றுவரை அதேபோல்தான் சம்பவிக்கிறது. ஒரு சத்தியத்தை ரூபகாரப்படுத்துவது தேவனுக்குப் பிரியமான செயலாகும். அநேகர் தங்களை முக்கியமானவர்களாய் பாராட்டிக் கொள்வதுண்டு. ஆனால் தேவன் அதை அங்கீகரிப்பதில்லை. ஆனால் ஒருவன் கூறுவதை தேவனே சரியென்று ஆமோதிக்கும் போது, அதுதான் சத்தியமென்பது நமக்கு ருசுவாகும். பலிபீடத்தின் மேல் காணிக்கைகள் செலுத்தப்பட்டபோது, கர்த்தர், மனித ஞானம் கொண்டு காயீன் அவரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தார். ஆனால் ஆபேல் சாதாரண விசுவாசம் கொண்டவனாக, அது பழங்கள் அல்லது பூமியின் கனிகள் அல்ல, அது இரத்தம் என்று தேவனிடத்திலிருந்து பெற்று வெளிப்பாட்டின் மூலம் அறிந்து கொண்டு அதை விசுவாசித்த போது, தேவன் அவன் காணிக்கையை அங்கீகரித்து அவன் சரியென்று நிரூபித்தார். வியாதிக்காகவோ அல்லது மற்றவைகளுக்காகவோ நான் ஜெபிக்கும்போது நம் ஜெபம் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது ஏற்றுக்கொள்ளப்படாதா என்று நாம் நினைக்கிறோம். இதையேதான் இயேசுவும், ‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால். நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’ என்றார் (யோவா. 15:7). எலியாவின் நாட்களில், தேவன் ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்து கொள்ளச் சித்தம் கொண்டார். அது தான் தேவனின் தெரிந்து கொள்ளுதல், அந்த காலத்தில் ரபீகளும, ஆசாரியர்களும் மற்றும் அனேக பெரியவர்களும் இருந்தனர். ஆகாப் அரசனும்கூட ஒரு யூதன்தான். அவனிடம் பெரியவர்கள் அனேகர் இருந்தனர். ஆனால் தேவன் ஒரு கல்விமானுக்குள் அல்ல,ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்திருந்தார். அவன் உலகில் பிரக்கியாதி பெற்றவனல்ல. அவன் ராணுவத்தில் ஒரு பெரியவனும் அல்ல. அவனுடைய தாயும் தந்தையும் யாரென்று கூட நமக்குத் தெரியாது. அவனைத் தீர்க்கதரிசியாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அவன் தேவனால் எங்கேயோ வளர்க்கப்பட்ட ஒரு சாதாரண குடியானவன். அவன் வனாந்தரத்தில் தேவனுக்கென்று சஞ்சரித்தான். ஒரு நாள் எங்கிருந்தோ அவன் தோன்றி, அக்காலத்திலுள்ள வழிபாடு முறைமையை எதிர்த்தான் என்பதை மாத்திரமே நாம் அறிவோம். அவனைக் குறித்து ஜனங்கள் என்ன நினைத்தார்கள் தெரியுமா? “அவன் எந்த வேத பள்ளியிலிருந்து வந்தான்? அவன் பரிசேயரிடமிருந்தானா அல்லது சதுசேயரிடமிருந்தானா அல்லது எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவன்?’ என்றெல்லாம் அவர்கள் கேட்டிருக்கக்கூடும். அவன் இவர்கள் யாரையும் சார்ந்தவனல்ல. ஆனால் அவன் தவறான எல்லாவற்றையும் கடிந்து கொண்டான். அவன் அங்ஙனம் கடிந்து கொள்ள வேண்டுமென்று தேவன் சித்தம் கொண்டார். கல்வி அறிவு இல்லாத அந்த எளிய மனிதன் பள்ளிக்கூடம் எதற்கும் செல்லவில்லை. ஆனால் தேவன் அவனுக்குள் மறைந்திருக்க விருப்பம் கொண்டார். இதை உங்களால் கிரகித்துக் கொள்ள முடிகிறதா? தேவன் படிப்பறியாத ஒரு பைத்தியக்காரனுக்குள் மறைந்திருக்கிறார். (உலகத்தின் கண்களுக்கு அவன் பைத்தியக்காரனாகத் தோன்றுகிறான்). எலியா ஒரு மந்திரவாதி என்று அவன் பேரில் குற்றஞ்சாட்டினார்கள். எல்லா தீர்க்கதரிசிகளுக்கும் இவ்வித குற்றச்சாட்டு கிடைக்கும். இயேசுவையும்கூட அவர்கள், பிசாசுகளின் தலைவன் பெயல்சபூர் என்றும், பைத்தியக்காரன் என்றும் பெயர் சூட்டினார்கள். அவர்களை இயேசு மன்னித்தார். ஆனால் இந்த கடைசி காலத்தில் அவ்விதம் கூறுவது தேவ தூஷணமாகக் கருதப்படும் என்பதாய் இயேசு கூறினார். அது இவ்வுலகத்திலும் மறு உலகத்திலும் மன்னிக்கப்படுவதில்லை. அது நித்திய பிரிவினைக்கு ஒருவனை ஆளாக்கும். எலியா ஒரு பைத்தியக்காரனாக எண்ணப்பட்டான். அக்காலத்தில் இக்காலத்தினரைப் போன்று பெண்கள் மயிர் கத்தரித்து, யேசேபேலைப் போன்று வர்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர். போதகரும் உலகப் பற்றுள்ளவராக இருந்தனர். அப்பொழுது என்ன நேர்ந்தது? எலியா அங்கு தோன்றி யேசேபேல் முதல் எல்லாரையும் கடிந்து கொள்ள ஆரம்பித்தான். ‘நீ சொல்வதை நாங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு போதகன்மார் உண்டு’ என்று ஜனங்கள் கூறியிருக்கலாம்.அது உண்மைதான் என்றாலும் எலியா அவர்களுடைய போதகனாயும் கூட இருந்தான். அவன் யேசேபேலுக்கும் போதகன். யேசேபேலுக்கு வேறு விதமான போதகர் இருந்திருக்கக் கூடும். ஆனால் அவன் தேவனால் அவளிடம் அனுப்பப்பட்ட போதகனாயிருந்தான். அவள் அவனை வெறுத்தாலும், அவன் அவள் போதகன்தான். கவனியுங்கள், எலியா தன்னைத் தாழ்த்தி தேவன் கூறினவற்றில் நிலைநின்ற காரணத்தால் தேவன் அவன்மேல் பிரியம் கொண்டு எலியாவுக்குள்ளிருந்த அந்த ஆவியை மூன்று முறை திரும்பவும் அளிப்பதாக வாக்குத்தத்தம் செய்தார். ஆமென்! அந்த வாக்குத்தத்தத்தை அவர் நிறைவேற்றினார். ஆமென்! அது அவனுக்குப் பின்வந்த எலிசாவின் மேலும், அதன் பின்பு யோவான் ஸ்நானன் மேலும் வந்தது. மல்கியா 5ம் அதிகாரத்தின்படி, இந்த கடைசி நாட்களில் எலியாவின் ஆவி மறுபடியும் காணப்படும். காட்டில் வசித்த அந்த எளிய, படிப்பறியாத மனிதனின் மேலுள்ள அந்த ஆவியில் தேவன் பிரியம் கொண்டார். அது அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தது. ‘எலியாவே, இதை செய்’ என்று அவர் கூறினால், எலியா உடனே செய்வான். தேவனே அவனுக்குள் எளிமையில் மறைந்திருந்தார். ஆனால் ஜனங்கள் ‘அவன் பைத்தியக்கார கிழவன். அவனிடம் தொடர்பு எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம்’ என்றார்கள். அவன் வயது சென்றவனாகி, வழுக்கை விழுந்து, மீசை தொங்கி, நரைத்து, தலையிலுள்ள சிறிது மயிரும் தோள்வரை தொங்கி, கைகள் மெலிந்து, தசைகள் தளர்ந்து, கண்கள் ஆகாயத்தை நோக்கினவாறு, கையில் ஒரு கோணலான கம்பையும் பிடித்து, சமாரியாவுக்குச் செல்லும் ரஸ்தாவில் அவன் நடந்து வரும்போது அவனது தோற்றம் வசீகரமாயிருந்திருக்காது. ஆனால் அவன் ‘கர்த்தர் உரைக்கின்றதாவது’ என்று கூறத்தக்க தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அவன் சொல்ல வேண்டியதை திக்கி திக்கிச் சொல்லவில்லை, அவன் ஆகாபின் முன் நடந்து சென்று, ‘நான் கட்டளையிட்டாலன்றி, வானத்திலிருந்து பனியும்கூட விழாது’என்று தைரியமாகச் சொன்னான். கர்த்தர் அவனுடைய எளிமையைச் கௌரவித்து நிறைவேற்றினார். அக்காலத்திலிருந்து எல்லா போதகரும் இவனுக்கு விரோதமாயிருந்து அவனை ஒழிக்க முயன்றனர். அவன் நடத்திய கூட்டங்களில் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. தேவன் அவனுக்குள் மறைந்திருந்தாலும், அவனைப் பைத்தியக்காரனென்று அவர்கள் எணிண்னர். ஆனால் அவனுக்குள் விதைக்கப்பட்ட வித்து முதிர்வுபெற சமயமானபோது, கர்த்தர் வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி தம்மை வெளிப்படுத்தினார். தேவன் எளிமையில் மறைந்து தம்மை வெளிப்படுத்தினார். ஆம் அப்படி செய்வது தேவனுக்குப் பிரியமாயிருந்தது. எப்பொழுதும் அதே விதத்தில் அவர் கிரியை செய்கிறார். இவைகளை அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று நாமறிவோம். ஆனால் அனேகரிலுள்ள தவறு என்னவெனில், அவர்கள் ஸ்தாபன கொள்கைகளைப் பின்பற்றி, கல்வி அறிவுக்கு முக்கியத்துவம் செலுத்துவதால், கர்த்தர் அப்படிப்பட்டவர்களை உபயோகிக்க முடியாது. ஒருவனுக்குக் கர்த்தர் தொடக்கத்தில் ஒரு நல்ல ஊழியத்தைக் கொடுக்கலாம். ஆனால் அந்த மனிதன் மற்றவர்கள் சொல்வதை ஆமோதித்து, அதையே போதித்து, இவ்விதமாக ஒரு ஸ்தாபனத்தில் சிக்கிக் கொண்டால், தேவன் அவருடைய கரத்தை அவனிடமிருந்து எடுத்து, அவனைத் தனியே விட்டு விடுவார். அதன் பின்னர் கர்த்தருடைய வார்த்தையை ஏற்றுக் கொண்டு திவ்விய வெளிப்பாட்டைப் பெற்று அதனின்று வழுவாத ஒருவனைக் கர்த்தர் தெரிந்தெடுப்பார். அவன் தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்பான். அவ்விதம் தான் அவர் ஆதிமுதற்கொண்டு கிரியை செய்து வருகிறார். ஆகையால் மனிதன் கல்வித்திறனுள்ளவனாய், சொந்த வியாக்கியானத்தை அளிக்கும் போது....உதாரணமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இப்போதைக் குறியதல்ல. அது முன்காலத்திற்குரியது என்றும், ‘பரிசுத்த ஆவியானவர் பெந்தேகோஸ்தே நாளில் வந்த விதமாய் இப்போது வருவதில்லை. நாம் விசுவாசிக்கும்போதே பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்’ என்றெல்லாம் கூறுகின்றனர். உதாரணமாக இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கொடுக்கப்படும் ஞானஸ்நானத்தை எடுத்துக்கொள்வோம். வேதம் அது சரியென்று போதிக்கும்போது, ‘வேதப்பள்ளிகள் இவ்விதம் கூறுகின்றன’ என்று அவர்கள் கூறுகின்றனர். அதுதான் தவறான செயலுக்கு ஒப்புரவாகுதலாகும். அவ்விதமான ஒரு மனிதனை தேவன் உபயோகிக்கமுடியாது. ஒரு மனிதன் எல்லாராலும் துன்புறுத்தப்பட்டு, பரிகசிக்கப்பட அவர் ஒருக்கால் சம்மதிக்கலாம். ஆனால் உண்மையான சவால் வரும்போது தேவன் எளிமையில் நின்று அவனுடைய ஊழியத்தை உறுதிப்படுத்துவார். ஒரு வித்து ஒரு பூவை முளைப்பிக்கிறது. அதோடு அந்த வித்து அழுகிப்போனது போல் காட்சியளிக்கிறது. ஆனால் அந்த சிறிய வித்திலிருந்து ஜீவன் புறப்பட்டு வேறொரு பூவை முளைக்கச் செய்கிறது. தேவன் எளிமையில் வெளிப்படுதல், அவர் எப்பொழுதும் அதையே செய்கிறார். மேன்மைக்குச் செல்லும் வழி எப்பொழுதும் தாழ்மையில்தானுள்ளது. ‘என்னிடம் இது இருக்கிறது, அது இருக்கி றது’ என்று நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். உங்களைத் தாழ்த்துங்கள், உங்களிடம் ஒன்றுமில்லை. தேவ கிருபை மாத்திரமே உங்களிடம் இருக்குமானால் அதற்காக தேவனிடத்தில் நன்றியுள்ளவர்களாய் இருங்கள். உங்களை எப்பொழுதும் தாழ்த்திக் கொண்டேயிருங்கள். வேறொரு சாரரைக் குறித்து நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். அவர்கள் ரஸ்தாவின் மற்றொரு எல்லைக்குச் சென்று எல்லை மீறிய மதவைராக்கியம் பொருந்தினவர்களாய் காணப்படுகின்றனர். இந்த ‘பிரதரன்’ (Brethren) குழுவினரிடம் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. அவர்கள் ஒளியின் வழியிலிருந்து பிரிந்து சென்று கனடாவில் ஒன்றுகூடி, ஒரு குழுவினை அமைத்து தங்களுக்கென்று அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் நியமித்துக் கொண்டு விழுந்து போயினர். ஆகையால் ஒரு சாரார் கல்வி அறிவு படைத்தவர்களாய், அலட்சிய முள்ளவர்களாய் சத்தியத்தை மறுதலிக்கின்றனர். மற்றொரு சாரார் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் பக்தி வைராக்கியம் பொருந்தினவர்களாய் தங்களைக் கருதிக் கொண்டு வார்த்தையை மறுதலிக்கின்றனர். ஆனால் உண்மையான சபையோ இவ்விரண்டு சாராருக்கும் இடையில், ரஸ்தாவின் நடுவில் சென்று கொண்டிருக்கும். அங்கு ஒரு பரிசுத்த வழி உண்டாயிருக்கும் என்று ஏசாயா கூறுவது போல் இந்த உண்மையான சபையானது தேவனால் சொல்லப்பட்ட வேத அறிவையுடையதாயிருந்து ஆவிக்குரிய அனல் தன்னகத்திலேயுடைய தாயிருக்கும். நசரீன் (Nazarene) சபையிலுள்ள அருமையான, பரிசுத்தமுள்ள சகோதரரைக் கவனிப்போம், அது தேவனால் தொடங்கப்பட்ட ஒரு சிறு அசைவாயிருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அன்னியபாஷை பேசுதலைத் தேவன் சபையில் கொண்டு வந்தபோது, அவர்கள் மதவைராக்கியம் பொருந்தினவர்களாய், சுயநீதி கொண்டவர்களாய், அது பிசாசினால் உண்டானது என்று கூறி அதை ஏற்க மறுத்தனர். ஆகையால் ரஸ்தாவின் ஒரு எல்லையில் மதவைராக்கியம் கொண்ட பிரதரன், நசரீன் குழுவினர் போன்றவர் காணப்படுகின்றனர். அதன் மறு எல்லையில் கல்வி ஞானம் கொண்டு அலட்சியம் செய்பவர்கள் உள்ளனர். ஏசாயா, ‘அங்கு பெரும்பாதை இருக்கும் என்றான். நசரீன் குழுவினரும் மற்றைய ‘பரிசுத்த குழுவினரும் தேவனுக்கு மகிமை, நாங்கள் ஆசீர்வாதமுள்ள, பழைய பெரும் பாதையில் நடந்து செல்கிறோம்’ என்று கூறுவதுண்டு. ஆனால் ஏசாயா கூறினது அதுவன்று. அவன் ‘அங்கு ஒரு பெரும்பாதையும் ஒரு வழியும் இருக்கும்’ என்றான். (ஆங்கில வேதத்தில், ‘And an highway shall be there, and a way’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் வேதத்தில் அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்’ என்று பெரும்பாதையையும் வழியையும் ஒன்று சேர்த்து மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது - ஏசா. 35:8. தமிழாக்கியோன்). அந்த பெரும்பாதை ‘ பரிசுத்த பெரும் பாதை’ என்று அழைக்கப்படவில்லை. வழியே ‘பரிசுத்த வழி’ என்று அழைக்கப்படுகிறது. பரிசுத்த பெரும்பாதையில் செல்வதாக எண்ணிக் கொள்பவர்கள் தங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ள முயல்கின்றனர். ஒரு பருந்து, புறாவின் சிறகுகளை இணைத்துக் கொண்டு, அது புறாவாகிவிட்டது என்று எண்ணுவதற்கு இது சமானம். அது என்ன செய்தாலும், அது பருந்துவின் சுபாவத்தைத் தான் பெற்றிருக்கும், ஒரு காகம் மயிலின் சிறகைப்பொருத்திக்கொண்டு, ‘நான் எவ்வளவு அழகான பறவை பார்’ என்று சொல்வதற்கு அது ஒத்திருக்கும். இவையெல்லாம் செயற்கை முறையில் உண்டாக்கப்பட்டவை. ஒரு மயில், தனக்கு மயில் இறகுகள் உண்டாகுமோ இல்லையோ என்று கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறே ஒரு புறாவுக்கும், தனக்குப் புறாவின் தன்மை உள்ளவரை, புறாவின் சிறகுகள் அதில் தோன்றும். ‘பரிசுத்த குழுவினர், ‘பெண்கள் நீண்ட மயிர் வளர்த்து, நீண்ட கைகள் உள்ள ஆடைகள், நீண்ட பாவாடைகள் அணிய வேண்டும் என்றும், ‘கலியாண மோதிரமோ அல்லது ஆபரணங்கள் எதுவும் அணியக்கூடாது’ என்றும் சொல்கின்றனர். ஆகவே அது சுயநீதி கொண்ட பரிசுத்தமாக அமைகிறது. அது செயற்கையாக அவர்கள் உண்டாக்கிக் கொண்ட பரிசுத்தம். ஆனால் ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபையோ எதையும் சுயநீதியாக உற்பத்தி செய்ய வேண்டுவதில்லை. இன்றைய ஸ்தாபனங்களைப் பாருங்கள், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தவர் இப்போது முடியைக் கத்தரித்து, மோதிரங்களை அணிகின்றனர். ஆனால் அனேக வருடங்களுக்கு முன்னால் அவர்கள், ‘நாங்கள் தான் சபை, நாங்கள் தான் சபை’ என்று பறை சாற்றினர். ‘சபை’ என்று அழைக்கப்படுவது கிறிஸ்துவின் சரீரமாகும். அது தேவனுடைய ராஜ்யத்தில் பிறந்த தனிப்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்த கூட்டமாகும். அது அவர்கள் உள்ளிருந்து வெளிப்புறம் தானாகவே வெளிவரும் ஒரு உணர்ச்சியாகும். அவர்கள் எவ்வித முயற்சியுமின்றி தானாகவே கிறிஸ்துவ ஜீவியம் செய்கின்றனர். ஒரு செம்மறியாட்டைப் பார்த்து, ‘நீ ஆட்டு மயிர் உற்பத்தி செய்ய வேண்டும்’ என்று நாம் சொல்வதில்லை. அவ்வாறே செம்மறியாடும், ‘என் எஜமானன் ஆட்டு மயிரை உற்பத்தி செய்ய சொல்கிறார். ஆகையால் நான் அதற்கென்று பாடுபட வேண்டும்’ என்றும் கூறுவதில்லை. அது செய்ய வேண்டிய ஒரே காரியம் அது செம்மறியாடாகவே இருக்க வேண்டும். அப்பொழுது தானாகவே ஆட்டு மயிர் அதன்மேல் தோன்றும். நாமும் செயற்கையாக கனிகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. நாம் தேவனுடைய மரமாக இருந்தால் நம்மில் தானாகவே கனிகள் காணப்படும். தேவனுடைய வார்த்தை எனக்குள் இருக்கும் வரை, என்னில் கனிகள் காணப்படும். ‘நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’ என்று இயேசு உரைத்தார் (யோ 15:7). நீங்கள் அதை உற்பத்தி செய்வதற்கென்று அரும்பாடுபடவேண்டிய அவசியமில்லை. அது அங்கேயே உள்ளது. மற்றைய சாரார் பாதையின் வேறொரு எல்லைக்குச் சென்று மூடவைராக்கியம் பொருந்தினவராயிருக்கின்றனர். அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு மேலும் கீழும் குதித்து, அன்னியபாஷைபேசி, தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையன்று. இயேசு, ‘அந்நாளில் அனேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள் என்றார். அப்பொழுது அவர் ‘நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை’ என்பார். (மத் 7:22. 23) ஆகையால் நண்பர்களே, அதுவன்று. அன்னிய பாஷை பேசுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமா? நானும் அன்னிய பாஷை பேசுதலில் விசுவாசம் கொண்டுள்ளேன். ஆனால் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் ஒரே அடையாளம் அன்னிய பாஷை பேசுதல் என்பதை நான் நம்புவதில்லை. ஆவியின் கனிகள் தான் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளமாம். இதனால் தான் எனக்கும் பெந்தேகோஸ்தே சகோதரருக்குமிடையில் வேறுபாடு காணப்படுகின்றது. அவர்கள், ‘ஒரு மனிதன் அன்னிய பாஷை பேசினால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டான்’ என்கின்றனர். அது மாத்திரம் பரிசுத்த ஆவியின் அடையாளமல்ல என்பது தான் என் கருத்து. ஜனங்கள் மண்டை ஒட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, வேகமாக அன்னியபாஷை பேசி, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். அமெரிக்க இந்தியர்கள், மழை பெய்யும் போது, பாம்புகளைத் தங்கள் மேல் சுற்றிக்கொண்டு, கைகளைத் தூக்கி நடனமாடுவதையும் அப்பொழுது மந்திரவாதி நீண்ட ஈட்டியால் தன்னைக் குத்திக் கொண்டு, ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது தானாகவே அன்னிய பாஷையில் எழுதி அதன் அர்த்தத்தை விவரிப்பதை நான் கண்டிக்கிறேன். ஆகையால் இவையனைத்தும் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அடையாளங்கள் என்று என்னிடம் கூறமுடியாது. நான் அனுபவம் வாய்ந்தவன். ‘அவர்களுடைய கனிகளினால் (அன்னிய பாஷை பேசுவதனாலல்ல, உணர்ச்சி வசப்பட்டதினாலல்ல) அவர்களை அறிவீர்கள்’ என்று இயேசு சொன்னார் (மத்: 7 :16), அது தான் ஆவியின் கனிகள். ஆம், தேவன் தம்மை எளிமையில், இனிமையில் வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு நாளும் அதே தான் சம்பவிக்கும். வார்த்தையில் நிலை கொண்டிருக்கும் ஒருவனிடம் ஏதோ ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவன் வார்த்தையைக் காணும் போது, மற்றவர் என்ன கூறினாலும் அவன் ‘ஆமென்’ என்று சொல்லி அதை ஆமோதிப்பான். அவன் அதை விசுவாசிக்கிறான். ஆனால் சாத்தான் பக்தி வைராக்கியம் கொண்டதாக எண்ணும் மக்களின் மத்தியில் குடிகொண்டு, அவர்கள் மேலும் கீழும் குதிப்பதனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக அவர்கள் எண்ணும்படி செய்கிறான். (சாத்தான் தன் அலுவலை நன்கு செய்யும் ஒருவன்). இவையாவற்றையும் அவர்கள் செய்து பிறரை வெறுக்கிறார்கள், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் உண்மையான அன்னிய பாஷையை நீங்கள் பேசி அதே சமயத்தில் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமலும் இருக்கலாம் என்பது ஞாபகமிருக்கட்டும். ‘நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை நான் சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஒசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்’ (1 கொரி 13) என்று வேதம் கூறுகிறது. அவர்கள் இந்த வசனத்தின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தினர், ‘நாங்கள் சத்தமிட்டு ஆராதிக்கும் போதே பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம்’ என்கின்றனர். நசரீன் ஸ்தாபனத்தார் அவர்கள் பரிசுத்தமாக வாழ்ந்த போது அதைப் பெற்றுக் கொண்டதாகவும், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தார் அன்னிய பாஷை பேசும்போது அதைப் பெற்றுக் கொண்டதாகவும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் அப்பொழுது அதைப் பெற்றுக் கொள்ளவில்லை. தேவன் இவ்வித உணர்ச்சிகளின் மூலமாய் தம்மை வெளிப்படுத்துவதில்லை. அவர் யாவரும் காணத்தக்கவாறு எளிமையில் வெளிப்படுகிறார். ஆனால் உங்கள் சொந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் நீங்கள் புகுத்துவதனால், தேவன் அந்த எளியமுறையில் காணமுடிகிறதில்லை. ஏதேனின் கால முதற்கொண்டு, ஒரு மேசியா தோன்றுவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டு வருகின்றது. அவர் எவ்விதமாய் இருப்பாரென்று வேதம் கூறுவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். மோசேயும் அவரைக் குறித்து, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார் (உபா: 18:15) என்று சொல்லியிருக்கிறான். மேசியா ஒரு தீர்க்கதரிசியாயிருப்பாரென்றும் அவர் எத்தகைய ஊழியத்தை உடையவராயிருப்பாரென்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவர் என்ன செய்யப்போகிறாரென்று எல்லாத் தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்திருந்தனர். ஆனால் தீர்க்கதரிசிகள் அடையாளங்களினால் தீர்க்கதரிசனம் உரைத்திருந்தால், யாரும் அதைப் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. அதன் விளைவாக மேசியா தோன்றியபோது அவர் யாருக்காக அனுப்பப்பட்டாரோ, அவர்கள் தங்கள் சொந்த வியாக்கியானத்தின் மூலம் அவர் எவ்விதமாக இருக்க வேண்டுமென்று பாவனை செய்யத் தொடங்கினர். ஆனால் வேதம் ஒருபோதும் மாறுவதில்லை. அது எப்பொழுதும் அதே விதமாகவே இருக்கிறது. ஆகவே தான் நான் வேதம் இவ்விதம் உரைக்கிறது என்று சொல்லி அதில் நிலை கொள்கிறேன். வேதத்தை நாம் தனிப்பட்ட விதத்தில் வியாக்கியானம் செய்வது தவறாகும். ஆனால் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தார் போன்றவர் தங்களுக்கு விருப்பமான வழிகளில் அதற்கு அர்த்தமுண்டாக்கிக் கொண்டு, ‘அதன் அர்த்தம் அதுவல்ல, இது தான்’ என்கின்றனர். ஆனால் வேதம் சொன்னபடியே அதன் அர்த்தம் அமைந்துள்ளது. அது எப்படி? என்று யாராவது கேட்டால் அதைக் குறித்துச் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை. அதைக் கர்த்தரே கூறினபடியால் தேவன் தம்முடைய வார்த்தையைக் குறித்து கருத்துள்ளவராயிருக்கிறார். மேசியா தோன்றுவாரென்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. அவர் எவ்விதம் தோன்றுவாரென்று தீர்க்கதரிசிகள் அறிந்திருந்தனர். அவர் மிகவும் எளிமையான விதத்தில் வந்த காரணத்தால் அக்காலத்து ஸ்தாபனங்கள் அவரைக் கண்டு கொள்ளத் தவறினர். நான் கூறுவது சரியா? ஒருவன் ஒரு பிரத்தியேக சந்ததியில் பிறந்தாலன்றி, அவன் போதகனாகவோ அல்லது ஆசாரியனாகவோ ஆக முடியாது. அவன் தான் லேவி கோத்திரத்தான். அவன் முப்பாட்டனாரெல்லாரும் ஆசாரிய ஊழியம் செய்தும் தேவனுடைய பிரமாணங்களைக் கைக்கொண்டு தற்போதைய கத்தோலிக்க போதகர்களைப் போன்று, ஆலயத்தில் இரவும் பகலும் தங்கியிருந்தனர். அந்த ஊழியம் அடுத்து வரும் சந்ததியிலுள்ள ஒருவனுக்கு அளிக்கப்பட்டு இவ்விதம் தலைமுறை தலைமுறையாக ஊழியம் நடந்து வந்தது. ‘என் பாட்டனார் ஒரு மெதோடிஸ்ட் அத்தியட்சகர்’, என் பாட்டனார் ஒரு அத்தியட்சகர்’ என்று ஜனங்கள் பெருமையடித்துக் கொள்வதை நாம் கேட்டிருக்கலாம். லேவி கோத்திரத்தார் ஆசாரிய ஊழியம் நடத்திக் கொண்டு வரும்போது, தேவனுடைய கட்டளைகளைக் கைவிட்டு, தங்கள் சொந்த முறைகளைக் கடைபிடிக்கத் தொடங்கினர். லேவியன் ஒருவன் தன் தகப்பன் அவனுக்குக் கற்றுக் கொடுத்த விதத்தில் ஆசாரிய ஊழியம் செய்வான். தகப்பன் உண்மையான வழியைப் பின் பற்றாதவனாயிருந்தால் மகனும் அவ்விதமே இருப்பான். இங்ஙனம் தங்களுக்கென்று அவர்கள் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக்கொண்டு, முடிவில் பரிசுத்த ஆவியானவர் சத்தியத்தை அவர்களுக்கு அளிக்க முயற்சித்தபோது அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமுடியாமற் போயிற்று. அதுவே தான் இன்றைக்கும் சம்பவிக்கிறது. நான் கொடூரமாக பேசவிரும்பவில்லை. ஆனால் நான் கூறுவது சரியே. அவர்கள் வேறு வழியைப் பின்பற்றி அதிக சிக்கலை உண்டாக்கிக் கொண்டனர். ‘தேவனுக்குப் பேரப்பிள்ளைகள் இல்லை’ என்று ஒரு பழமொழி உண்டு. அது உங்களுக்குத் தெரியுமா? தேவனுக்கு மகன்களும் மகள்களும் தான் உள்ளனர். ஆனால் பேரப்பிள்ளைகள் கிடையாது. ஒவ்வொருவரும் அதே கிரயத்தைச் செலுத்தி நம் முன்னோர் பின்பற்றின அதே வழியில் தான் தேவனையடைய முடியும். மேசியா சாதாரண ஒருவராக வந்தார். நாலாயிரம் வருடங்களாக தீர்க்கதரிசிகள் அவரைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். தாவீதும் அவரைக் குறித்துப் பாடினான். அவர் வந்து என்ன செய்வாரென்று படத்தில் வரைவது போல் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களோ அவர் என்ன செய்ய வேண்டுமென்று தங்கள் சொந்த எண்ணங்களை உருவாக்கிக் கொண்டனர். அவர் எளிய முறையில் தோன்றினபோது, அவர்களது வேத சாஸ்திரம் அனைத்தும் நாசமானது. ஆனால் அவரோ தேவனுடைய வார்த்தை சொன்னபடியே வந்தார். மேசியா ஒரு பிரத்தியேக முறையில் தோன்றுவார் என்று தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தனர் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இன்னும் ஒரு மணி நேரம் நமக்கிருந்தால் இதைக் குறித்து நாம் தெளிவாக விளக்கலாம். ஆனால் சமயமில்லாதது மிகவும் வருந்தத்தக்கது. ‘பெத்லகேமே, நீ யூதாவிலே சிறியதாயிருந்தும்....’ என்று கர்த்தர் கூறி அவர் எங்கு பிறப்பார் என்றும், அவர் என்ன செய்வாரென்றெல்லாம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் எளிமையில் தோன்றிய போது, அந்த காலத்து கல்விமான்கள் குழப்பமுற்று அவரைக் கண்டுகொள்ளத் தவறினர். ஆனால் இயேசு வார்த்தைக்கு முரண்பட்ட விதத்தில் தோன்றவில்லை. அவர் வார்த்தையின் பிரகாரமே வந்தார். ஆனால் அவர்களுடைய கருத்துக்களுக்கு முரண்பாடாய் அவர் தோன்றினார், அவர்களுடைய ஆசாரிய பயிற்சிக்கு விரோதமாய் அவர் பிரசங்கித்தார். மேசியா தோன்றும் போது, அவர் நேராக ஆலயத்துக்கு வந்து ‘காய்பாவே நான் வந்துவிட்டேன்’ என்று சொல்வார் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். அல்லது ஒரு கோடி தேவதூதர்கள் அவரை வணங்கிய வண்ணம் அவர் தோன்றுவார் என்றும், தேவன், ‘பூமியிலுள்ள ஜனங்களே, நீங்கள் ஒரு மகத்தான சபை, நீங்கள் என் ஜனம், நான் யந்திரக் கைப்பிடியைச் சுழற்றி வானத்தின் தாழ்வாரங்களைக் கீழே இறக்கப் போகிறேன். இன்று காலை ஒரு மேசியாவை உங்களுக்கு அனுப்புவேன். அவர் உங்கள் முற்றத்தில் நேராக இறங்குவார்’ என்று சொல்வார். அப்பொழுது அங்கு சூழ்ந்திருக்கும் ஜனங்கள், ‘டாக்டர் பட்டம் பெற்றவர்களே, நீங்கள் முன்னால் நின்று இயேசுவுக்கு முதலில் வரவேற்பு கொடுங்கள்’ என்று சொல்வார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருப்பார்கள். ஒருக்கால் இன்றைக்கும் அவர்கள் அவ்வாறு நினைக்க வழியுண்டு. நான் கூறுவது கொடூரமாகக் காணப்படலாம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கூற நான் முயல்கிறேன். ‘நாங்கள் நினைத்த வண்ணமே அது நடக்க வேண்டும். நாங்கள் நினைத்ததற்கு மாறாக அது நடந்தால், அது அந்திக் கிறிஸ்துவின் கிரியையாகும்’ என்று அவர்கள் எண்ணுகின்றனர். மேலும் அவருடைய இரண்டாம் வருகையில் ஒரு கோடி தேவ தூதர்கள் மேளம் அடித்துக் கொண்டு வணங்க, மரித்தவரும் இவர்களும் சாலொமோன் தேவாலயம் கட்டப்பட்ட இடத்தில் இறங்கி பரிசுத்தவான்களும் புத்திமான்களும் மரித்த இடமாகிய இந்த புனித ஸ்தலத்தில் சுற்றி அங்குமிங்குமாக உலாவுவார்கள் என்று கற்பனை செய்கின்றனர். இயேசு அவர்களை நோக்கி, ‘மாயக்காரரே, பிசாசின் மக்களே, உங்கள் பிதாக்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்று, அவர்கள் அவர்களுக்கு எழுப்பின கல்லறைகளை நீங்கள் சிங்காரிக்கிறீர்கள், எத்தனை நீதிமான்களையும் தீர்க்கதரிசிகளையும் உங்களிடத்தில் அனுப்பினேன்! அவர்கள் எல்லாரையும் நீங்கள் கொன்று போட்டீர்கள்’ என்றார். (மத் 23:29-32), நீதிமான்களென்று தேவன் அழைத்தவர்களை அவர்கள் பைத்தியக்காரரென்றும் மூடரென்றும் அழைக்கின்றனர். ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசு, கன்னி வயிற்றில் பிறந்தார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஒரு தச்சனாவார். அவருடைய தாயார் யாதுமறியாத ஒரு சிறு பெண். அவள் பிரதான ஆசாரியனின் மகளல்ல, நாசேரேத் என்னும் ஒரு இழிவான ஊரில் வாழ்ந்த ஒரு சிறு பெண்ணின் மூலம் அவர் தோன்றினார். அவர் வளர்ப்புத் தகப்பனார் மனைவியை இழந்த ஒருவர் (Widower). அவர் மனைவி ஏற்கனவே மரித்துப் போனாள். அவருக்கு முதல் மனைவியின் மூலம் சில பிள்ளைகள் இருந்தனர், அவர் இந்த சிறு பெண்ணுடன் விவாக நியமனம் செய்திருந்தார். தவறான முறையில் இயேசு பிறந்தாரென்று, அவர் பிறக்கும் போதே வசைச் சொல்லுடன் பிறந்தார். அவருடைய தோற்றம் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை அதிகமாகப் பாதித்தது. அவர்களுடைய கல்வி அறிவு அதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வேதத்தைப் பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள், அவர் எவ்விதம் தோன்றுவாரென்பதை அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆயினும் அவர் கர்த்தர் உரைத்தவிதமாகவே தோன்றினார். ஓ! அதை நினைக்கும்போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அதே சம்பவம் இப்பொழுது மறுபடியும் நிகழ்வதைக் காணும்போது.... தேவன் ஒருபோதும் மாறாதவராயிருக்கிறார். (12 மணி ஆகிவிட்டது. நான் நிறுத்தி விடவா அல்லது தொடர்ந்து பிரசங்கிக்கவா? சற்று நேரம் நீங்கள் உட்கார்ந்து கேட்கலாம் என்று நினைக்கிறேன். பிரசங்கிக்கவிருக்கும் செய்திக்கு ஆதாரமாக இருக்கும் ஒன்றை இப்பொழுது நான் கூறிக்கொண்டிருக்கிறேன். கூடுமானால் இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களில் உங்களை விட்டுவிடுகிறேன், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக). அது எளிமையான முறையில் நிகழ்ந்ததால், அவர்களது குறி தவறினது. ஆனால் தேவனுடைய இலக்கை அது சரியாக அடித்தது. தேவன் சொன்ன விதமாகவே அவர் தோன்றினார். ஆனால் அதைப்பற்றி அவர்கள் கொண்டிருந்த கருத்துக்கள் தவறாயின. அவ்வாறே மோசேயின் காலத்திலும், நோவாவின் காலத்திலும் மனிதர் கொண்டிருந்த கருத்துக்கள் தவறாயிருந்தன. தேவன் வார்த்தையின்படியே தோன்றுவார். இயேசு தோன்றி அவர்களது கருத்துக்களுக்கு முரண்பாடானவைகளைப் பிரசங்கித்தார். ஆகையால் அவர்கள், ‘நீ மேசியாவானால் இதைச் செய்’ என்றும், ‘நீ மேசியாவானால் சிலுவையிலிருந்து இறங்கி வந்து மேசியாவென்று நிரூபி’ என்றும் சொன்னார்கள். ஆனால் தேவன் ஜனங்களுக்கு வேடிக்கை காட்டுவதில்லை, தமக்குப் பிரியமுள்ளதும் சரியாய் காணப்படும் காரியத்தை மாத்திரமே அவர் செய்கிறார். சர்வ வல்லமையுள்ள தேவன், பூமியையும் எல்லாவற்றையும் சிருஷ்டித்த மகத்தான யேகோவா, தம் சொந்த பிள்ளைக்கு மாட்டுச்சாணம் குவிந்துள்ள மாட்டுத் தொழுவத்தைக் காட்டிலும் ஒரு நல்ல இடத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை என்று நினைப்பது ஒரு சாதாரண மனிதனுக்குக் கேலிக்கிடமாகக் காணப்பட்டது. ஆனால் அது என்ன? அதுதான் தேவனின் எளிமை அதுதான் அவரை மகத்தானவராக ஆக்கியது. கல்வி அறிவு அதனைச் சகிக்க முடியவில்லை. . அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் தேவன் மகத்தானவராயிருப்பதால் அவர் தம்மை அவ்வளவாக தாழ்த்த முடிந்தது. அவருக்கு அணிந்து கொள்ள ஆடைகளும் கூட கிடையாது என்பதை யோசித்துப் பார்க்கவும், சத்திரத்தில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மலையின் ஒரு பாகத்தில், குகை போன்ற ஒரு சிறிய ஸ்தலத்தில், வைக்கோல் படுக்கையின் மேல் தேவனுடைய குமாரன் அவதரித்தார். அவருடைய தாயார் விவாக நியமனத்திற்கு முன்பே கர்ப்பந்தரித்தாள். ஜனங்களில் சிலர் அதைக்கண்டு, இம்முறையில் தான் தேவனுடைய குமாரன் தோன்ற வேண்டுமென்று அறிந்திருந்தனர், மரியாளும் என்ன நேரிடுகிறது என்பதை தன் இருதயத்தில் அறிந்திருந்தாள். யோசேப்புக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் கர்த்தருடைய தூதன் இரவில் அவனிடம் வந்து, ‘யோசேப்பே, நீ தாவீதின் குமாரன். உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது’ என்றான். அத்துடன் அந்த காரியம் முடிவு பெற்றது. யோசேப்பு தேவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததால் தேவன் அவனுடன் பேச முடிந்தது. ஆனால் இன்றைக்கு நாம் வேததத்துவ போர்வைகளை நம்மைச் சுற்றிப் போர்த்திக் கொண்டிருப்பதால், அந்த குழுவைச் சார்ந்தவர் தவிர வேறு யாரும் நம்மிடம் பேச முடியாமல் போகிறது. நான் யாரையும் கடிந்து கொள்ள விரும்பவில்லை. அதோடு அதை விட்டு விடுகிறேன். நான் சொல்ல வந்த காரியத்தை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். கவனியுங்கள், மாட்டுத் தொழுவம் அவர்களுக்குப் பரிகாசமாக இருந்தது. அவர் பள்ளிக்கூடம் சென்றதாக வேதத்தில் குறிப்பு எதுவுமில்லை. ஆயினும், ஒரு சாதாரண பையன் தன் பன்னிரண்டாம் வயதிலேயே தன் போதகத்தினால் ஆலயத்திலிருந்த ஆசாரியர்களைப் பிரமிக்க வைத்தான். அது என்ன? அதுதான் தேவன் மறைந்திருத்தல், நான் இப்பொழுது பக்தி வசப்படுகிறேன். தேவன் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தம்மை மறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் சிறு பையனாக தெருவில் விளையாடச் சென்றிருக்கும்போது, மற்ற பிள்ளைகளின் பெற்றோர் அவர்களிடம், ‘அந்த பையனுடன் விளையாடாதே, அவனுடன் எந்த சாவகாசமும் வேண்டாம், அவனுடைய தாயார் ஒரு வேசி, அவளுக்கு விவாகமாகு முன்பு அவன் பிறந்தான்’ என்று சொல்லியிருப்பார்கள். மற்றவர்கள் அவளைக் குறித்து என்ன நினைத்தாலும் மரியாள் கவலை கொள்ளவில்லை. அவள் இவையெல்லாவற்றையும் இருதயத்தில் வைத்து சிந்தனை பண்ணினான், அவர்களிருவரும் அதை தங்கள் இருதயங்களில் மறைத்து வைத்தார்கள். ஜனங்களின் பேச்சுக்கு விரோதமாக அவர்கள் ஒன்றும் சொல்லமுடியாது என்று அவர்கள் அறிந்திருந்தனர். சில சமயங்களில் தேவன் தம் இருதயத்திற்குந்த மனிதனை நோக்கி, ‘நீ ஒன்றும் பேசாதே, அதைக் குறித்து ஒன்றும் சொல்லாதே’ என்று கூறுவது வழக்கம். நான் நடத்தும் கூட்டங்களில் ஜனங்கள் என்னிடம் வந்து, ‘நீர் கிறிஸ்துவின் ஊழியக்காரனானதால், இது சம்பவிக்கப் போவதை நீர் முன்கூட்டியே அறிந்திருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். ஆம், இந்தக் காரியம் சம்பவிக்குமென்று நான் முன்னமே அறிவேன். ஆனால் ‘அதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லக்கூடாது’ என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கும் போது, நான் என்ன செய்யமுடியும்! அந்த சம்பவம் நிகழப்போவதை அனேக வருடங்களுக்கு முன்னால் நான் தரிசனத்தில் காணும்போது, அது இன்னின்ன விதமாய் சம்பவிக்குமென்று நான் ஒரு புத்தகத்தில் எழுதி வைப்பதுண்டு. அந்த புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதை நான் அவர்களிடம் காண்பிக்கும் போது, அவர்கள் வியப்புற்று, ‘தேவனுடைய விந்தையை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்று சொல்வார்கள். யோசேப்பும் மரியாளும் அந்தக் குழந்தை யாரைச் சேர்ந்தது என்று அறிந்திருந்தனர். இயேசுவும் தம் பிதா யாரென்று அறிந்திருந்தார். அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டும்’, மரத்தை வெட்டி கதவுகள் செய்வதல்ல. அவர் பிதாவுக்கடுத்த காரியங்களை அவர் செய்ய வேண்டியிருந்தது. அவர் தாயிடம் அவர், ‘என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?’ என்றார். முறை தவறிப் பிறந்த எந்த ஒரு குழந்தையும் நூதனமானதாய் கருதப்படுவதுண்டு. ஆனால் அசுத்தமாயும், முறைகேடானதுமாக உலகம் கருதியிருந்த ஒன்றில் தேவன் மறைந்திருந்தார். அழுகி செத்துப்போன வித்தினின்று ஜீவனைப் பிறப்பிக்க தேவன் மறைந்திருக்கிறார். தேவன் ஒரு எளிய சலவைத் தொழில் செய்யும் பெண்ணுக்குள் மறைந்து கிடக்கக்கூடும்; அல்லது ஆகாரத்தைத் தன் அக்குளில் வைத்து தன் மனைவியையும் பிள்ளைகளையும் முத்தம் செய்து காலையில் வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரண மனிதனுக்குள் அவர் மறைந்து கிடந்து, பிரதான அத்தியட்சகர் அறிந்து கொள்ளமுடியாத ஒன்றை அவர் செய்யக்கூடும். அவர் எக்காளம் ஊதி, ஒருவரை அனுப்புவதில்லை. அவர் எல்லாவற்றிலும் மகிமையை மாத்திரம் பெற்றுக் கொள்கிறார் அவ்வளவுதான், பேதையர் அதைக் கேட்டு சந்தோஷமடைகின்றனர். தேவன் ஒரு எளிய குழந்தைக்குள் மறைந்திருந்தார்,ஒரு எளிய குடும்பத்தில் மறைந்திருந்தார். ஆனால் அக்காலத்து குருமார்கள், கல்விமான்கள், ஏரோது ராஜா, ரோம அரசர்கள் யாரும் அதைக் கண்டு கொள்ள இயலவில்லை. ஏசாயா 40ம் அதிகாரத்தில் யோவான் ஸ்நானன்.... வேண்டுமானால் நாம் மல்கியா 3ம் அதிகாரத்தையும் வாசிக்கலாம், நீங்கள் வேண்டுமென்றால் அதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சமயம் அனுமதித்தால், அதை வேதத்தினின்று படித்தால் நலமாயிருக்கும். ஏசாயா 40ம் அதிகாரத்தை நாம் சற்று வாசிப்போம். ‘என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்’ இயேசு பிறப்பதற்கு 712ம் ஆண்டுகளுக்கு முன்பு தீர்க்கதரிசி அவரைக் குறித்து சொல்லுகிறான். ‘என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள். எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள் என்றும், பள்ளங்களெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும், குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும்’ (அவன் எப்படிப்பட்ட மனுஷனாக இருந்திருக்க வேண்டும்) இப்பொழுது மல்கியாவின் புத்தகத்திற்கு வருவோம்.பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம். தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் கடைசி புத்தகம். மல்கியா முடிவு கால சம்பவங்களைக் காண்கிறான் என்பதை மறந்து போகவேண்டாம். மல்கியா 3ம் அதிகாரம். ‘இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார், இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்’. இது யோவான் ஸ்நானனைக் குறித்து உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம். இயேசுவும் மத்தேயு. 11:10ல், ‘இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்.... என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான்’ என்றார். மேசியாவுக்கு முன்பு ஒரு முன்னோடியாகத் தூதன் வரவேண்டுமென்று 700 வருடங்களுக்கு முன்னால் உரைக்கப்பட்டது எத்தனை அதிசயம்! ஆனால் அவன் எளிமையில் தோன்றின போதோ, அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர். அவன் ஒரு ஆசாரியனின் மகன், அவன் வேத பள்ளிக்குச் சென்று அவன் தகப்பனின் உத்தியோகத்தை மேற் கொள்ளாதது தவறான காரியமாக எண்ண வகையுண்டு. ஆனால் அவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு ஊழியம் மிகவும் முக்கியமானது. ஒன்பதாம் வயதில் அவன் வனாந்தரத்துக்குச் சென்று, பல வருடங்களுக்குப் பின்னர் வனாந்தரத்தினின்று புறப்பட்டு ஜனங்களிடையே பிரசங்கித்தான். அவன் எளிமையில் வெளிப்பட்ட காரணத்தால், நாகரீகம் பொருந்திய அவர்களுடைய கல்வியறிவு அவனை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்த மனிதன் தோன்றும் போது, உண்மையாகவே பள்ளங்களெல்லாம் உயர்த்தப்படும், சகல மலையும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கரடு முரடானவை சமமாக்கப்படும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். தாவீதும் இதனைக் கண்டு, ‘மலைகள் ஆட்டுக் கடாக்களைப் போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப் போலவும் துள்ளினது’ என்றான். அவர்கள் நினைத்தவாறு சம்பவித்ததா? கல்வி அறிவு படைத்திராத ஒரு மீசைக்காரக்கிழவன் ஆட்டுத்தோல் போர்த்தினவனாக யூதாவின் வனாந்தரத்திலிருந்து தடுமாறி நடந்துவந்து,’ ‘மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்றும், ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்’ என்று பிரசங்கித்தான். அவனாக அதைப் பிரசங்கிக்கவில்லை. வெளிப்புறத் தோற்றத்திற்கு அவன் பிரசங்கித்த மாதிரி காணப்பட்டது, ஆனால் அவன் பாதையை செவ்வைபடுத்திக் கொண்டிருந்தான். அப்பொழுது தான் கரடுமுரடானவை சமமாக்கப்பட்டன. உயர்ந்த மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டன, ‘ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ணவல்லவராயிருக்கிறார்’ என்றான் (மத். 3.9) உயர்ந்த ஸ்தலங்கள் தாழ்த்தப்பட்டன. ஓ! தேவனுக்கு மகிமை! வித்தியாசத்தை உங்களால் காண முடிகின்றதா! அவன் அவர்கள் ஸ்தாபனத்திற்கு வருவான் என்று அவர்கள் எண்ணினார்கள். ஆனால் அவன் ஒரு எளிய முறையில் தோன்றி தன் பிரசங்கத்தினால் உயர்ந்த ஸ்தலங்களைத் தாழ்த்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அவன் அவர்களைப் பயங்கரமாக கடிந்து கொண்டான்! ‘விரியன் பாம்புக் குட்டிகளே, புல்லின் கீழுள்ள பாம்புகளே, இப்பொழுதே கோடாரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது! ஆகையால், நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று ஜலத்தினால் நான் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன். எனக்குப் பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கின்றார். அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது. அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார், பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்’ என்றான் (மத். 3:10-12). அப்பொழுதுதான் கரடு முரடானவைகள் சமமாக்கப்பட்டன. ஆனால் ஜனங்கள் அதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆயினும், வார்த்தை சொன்ன விதமாகவே அது நிறைவேறினது. அது எளிமையாகத் தோன்றினதால், ஜனங்கள் அதைக் காணத் தவறினர். நீங்கள் அவர்களைப் போல் குருடராயிருக்க வேண்டாம். அது என்ன? வார்த்தையாகிய தேவன் எளிமையில் மறைத்திருத்தல். கழுத்துப் பட்டையைத் தூக்கி விட்டுக்கொண்டு, கல்வி அறிவு படைத்த குருவானவர் அல்ல அது. யோவானின் சீஷர்கள் இயேசுவைக் காண வந்து, திரும்பிச் சென்ற பிறகு, இயேசுவும் யோவானைக் குறித்து அதையே தான் சொன்னார். ‘நீங்கள் எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் தரித்த மனுஷனையோ, அல்லது போதகனின் அங்கியைத் தரித்தவனையோ? அவ்விதமான போதனைக் காணவா சென்றீர்கள்?’என்று அவர் கேட்டார்(மத். 11:7). ‘அத்தகைய குருவானவர்கள் தெளிப்பு ஞானஸ்நானத்தின் போது குழந்தைகளை முத்தமிட்டு, மரித்தவரை அடக்கம் செய்வதற்கு மாத்திரமே அறிவர். ஆனால் போர்க்களத்தில் உபயோகிக்க வேண்டிய இரு பிடிகளுள்ள பட்டயத்தைக் குறித்து அவர்கள் அறியமாட்டார்கள். ஒரு கூட்டத்தில் கல்வித் திறன் படைத்த ஒரு சொற்பொழிவு ஆற்றவே அவர்களுக்குத் தெரியும். அத்தகைய இடத்திற்கு அவர்கள் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் போர்க்களத்தில் எதிரியைச் சந்திக்க வேண்டுமானால் அவர்களால் முடியாது. அவர்கள் அரசர் மாளிகைகளில் இருந்து கொண்டு ஆங்குள்ளோரிடம் சமயத்தை வீணாக்குகிறார்கள்’ என்றார். மேலும் அவர், ‘எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?’ என்றார். ஒரு மனிதன் ஒருவனிடம் வந்து, ‘நீ உன் ஸ்தாபனத்தை விட்டு என் ஸ்தாபனத்திற்கு வருவாயானால், நான் அனேக நன்மைகளைச் செய்து தருவேன்’ என்று கூற அவனும் அதற்குத் தலையசைத்தால் அவன் காற்றினால் அசையும் நாணலுக்கு ஒப்பாவான். அவ்விதமாகவே, யோவானிடம், ‘நீ பரிசேயரைச் சேராமல் சதுசேயராகிய எங்களைச் சேர்ந்துக்கொள்’ என்று கூறப்பட்டால், யோவான் சம்மதித்திருப்பானா? இல்லவே இல்லை. மேலும் இயேசு, ‘நீங்கள் எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?’ என்றார். ஒரு தீர்க்கதரிசி தான் அவ்விதம் உறுதியாய் நிற்க முடியும். அது தான் தீர்க்கதரிசியின் அடையாளம். தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் வருகிறது. இயேசு, ‘எதைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே’ என்றார். அவன் ஏன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனாய் இருந்தான்? அவன் உடன்படிக்கையின் தூதனாயிருந்தபடியால், அது தான் நியாயப்பிரமாணத்தையும் கிருபையையும் பிணைத்தது. அவ்விதம் பிணைக்கும் முக்கியமான கல் தான் யோவான் ஸ்நானன், இயேசு, ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், ‘இதோ நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன் (மல்கியா 3ம் அதிகாரம்). அவன் எனக்கு முன்னேபோய் வழியை ஆயத்தம் பண்ணுவான்’ என்று தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டவன் இவன் தான்’ என்றார். ஆம், அவன் எளிமையில் காணப்பட்டான். தேவன் எளிமையில் மறைந்திருத்தல். யோவான் ஸ்நானன், ‘இயேசு வருவார்’ என்று பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பிரசங்கித்தான். இயேசு வரும் போது பெரிய சம்பவங்கள் நிகழுமென்றும் அவர் வல்லமை பொருந்தினவராய் வந்து ரோமரையும் கிரேக்கரையும் மடங்கடித்து பூமியில் இராமல் அற்றுப் போகப் பண்ணுவார் என்றெல்லாம் அவர்கள் கற்பனை செய்திருந்தனர். ஆனால் அவர் எளியவராக எல்லோராலும் தள்ளப்பட்டவராக வந்தபோது அது என்ன? தேவன் எளிமையில் மறைந்திருத்தல். அதன் பின்னர் அவர் தம் செய்தியின் முடிவில், ‘என்னில் பாவமுண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? நான் செய்வேன் என்று வேதம் கூறின அனைத்தையும் நான் செய்தேன், என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாமலிருந்தால், என்னைக் குற்றப்படுத்துங்கள். நான் செய்வேனென்று வேதம் கூறிய யாவற்றையும் நான் செய்யாமலிருந்தேனா? பாவம் என்பது அவிசுவாசம், நான் அவிசுவாசம் கொண்டுள்ளதாக யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்? நான் தேவனுடைய விரலினால் பிசாசுகளை ஒட்டினால், நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்றார். ஏளிமை மரணபரியந்தம் தம்மை தாழ்த்தினார். ஆனால் உயிர்த்தெழுந்த காலையன்று.... அவர் தம்முடையக் களத்தை நன்றாய் விளக்கினார். கோதுமையையோ களஞ்சியத்தில் முத்தரித்தார். அங்கு அது, நித்திய ஜீவனைப் பெற்றதாய் அந்தமகத்தான நாளுக்கென்று காத்திருந்து, இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. ஆண்டவரின் வருகையில் நாமெல்லாரும் உயிரோடெழுந்து அவருடன் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, களஞ்சியத்தில் சேர்க்கப்படுவோம், பதரும், அதனுடன் கூட கோதுமையைச் சுற்றியிருந்து அதனை அந்தப்புறமும் இந்தபுறமும் இழுத்துக் கொள்ள முனைந்து உமியும் அவியாத அக்கினியில் சுட்டெரிக்கப்படும். ஆமென்! ஓ, அவர் அதிசயமானவரல்லவா? அவரை அவர்கள் கண்டுக் கொள்ளத் தவறினர். யோவான், வேததத்துவ சாஸ்திர முறையை அனுசரித்து பிரசங்கிக்கவில்லை. அவன் ஒரு பிரசங்கியைப் போல் பிரசங்கிக்கவில்லை. இயற்கையில் சாதரணமாகக் காணப்படும் பொருட்களை உபயோகித்தே அவன் பிரசங்கித்தான். ‘கோடாரி’, ‘மரம்’, ‘பாம்புகள்’, ‘கோதுமை’, ‘களஞ்சியம்’ போன்ற வாக்குகளை அவன் உபயோகித்தான். அவன் காட்டில் வசித்த ஒருவனைப் போல் பிரசங்கித்தான். அவன் படகுகளைக் கட்டுவதற்கென யோர்தானில் காணப்பட்ட கட்டைகளின் மேல்நின்று பிரசங்கித்த காரணத்தால் அவனைக் ‘கட்டைப் பிரசங்கி’ என்று அழைத்திருக்கக்கூடும். உலக ஞானத்தினின்று தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். தனிப்பட்ட விஷயம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். நாம் இப்பொழுது வாழ்ந்துவரும் நாட்களைக் குறித்து சற்று ஆலோசியுங்கள். நாம் இப்பொழுது குழுமியுள்ள இந்த எளிய ஸ்தலத்திற்கு தேவன் இறங்கி வந்து அற்புதங்களைச் செய்து கொண்டிருக்கும் இச்சமயத்தில் ஐசுவரியவான்களும், பெருமைக்காரரும், கல்வியறிவு படைத்த அனேகரும், ‘அற்புதங்களின் காலம் கடந்து போய்விட்டது. அற்புத சுகமளித்தல் என்பது இப்பொழுது கிடையாது’ என்று கூறி வருகின்றனர். தாவீதையும் கோலியாத்தையும் குறித்து இந்த இடத்தில் நான் நிகழ்த்தின பிரசங்கம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? நான் ஊழியத்திற்கென்று சென்ற போது அனேகர் என்னிடம், ‘கல்வி அறிவு படைத்த இந்த உலகத்தை நீங்கள் எங்ஙனம் சந்தித்து, சுவிசேஷத்தைக் கூறப்போகின்றீர்கள்?’ என்று கேட்டனர். அப்பொழுது நான், ‘எனக்கு அது தெரியாது. தேவன், போவென்று என்னிடம் கட்டளையிட்டார். அவ்வளவு தான், அது அவருடைய வார்த்தை. அவர் அதை நிறைவேற்றுவதாக வாக்களித்துள்ளார்’ என்று சொன்னேன். நீங்கள் அங்கு தொங்கும் புகைப்படத்தில் காணும் அந்த தூதன், முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்பாக ஒரு ஜுன் மாதம் அங்குள்ள அந்த நதியினருகில் இறங்கிவந்து. 5000 பேர்களுக்கு முன்பாக, ‘யோவான் ஸ்நானன் இயேசுகிறிஸ்துவின் முதல் வருகைக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டது போன்று, உன்னுடைய செய்தியும் உலகம் பூராவும் பரவுவதற்கு சமயம் வந்துவிட்டது’ என்றான். ராய் ஸ்லாட்டர் (Roy Slaughter), ஸ்பென்ஸரின் மனைவி, ஜார்ஜ்ரைட் (George Wright) அல்லது இங்கு உட்கார்ந்திருக்கும் சில வயோதிபர் அற்புத சுகமளித்தலைக் குறித்து அன்று உண்டாயிருந்த குறை கூறுதலை ஞாபகத்தில் கொண்டிருக்கலாம். அவர்கள் ‘இது அற்புத சுகமளித்தலன்று, மனோதத்துவத்தின் மூலம் உண்டான சுகம்’ என்றெல்லாம் குறைகூறினர். ஆனால் தேவனோ அந்நேரத்தில் ஒரு ஊமையான போசம் (Possum) (கங்காரு போன்ற மிருகம்) என்னும் மிருகத்தை அனுப்பினார். அது தேவனுடைய வல்லமையினால் சுகம் பெற்றது (சாவுக்கேதுவான வியாதியுற்றிருந்த அந்த மிருகம் சுகமாக்கப்பட்டது - தமிழாக்கியோன்). ஒரு முறை நானும் லயல் வுட்டும் (Lyle Wood), பாங்ஸும் (Banks) படகில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, தேவன் அவர்களுக்குத் தமது மகிமையைக் காண்பிக்க எண்ணினார். அங்கு ஒரு சிறிய மீன் செத்து போய் அதன் சுவாச உறுப்புகளும் குடல்களும் வாயின் வழியாக வெளியில் வந்த வண்ணமாய், அரைமணி நேரமாக தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது. அவ்வமயம் பரிசுத்த ஆவியானவர் படகுக்குள் வந்தார்; நான் அந்த மீனுடன் பேசி, அதன் உயிர் திரும்பவும் அதனுள் வரும்படி கட்டளையிட்டேன். அது உயிரடைந்து உயிருள்ள சாதாரண மீனைப்போல் நீந்தி தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இவ்விதமாய் சம்பவிக்கப் போவதாக பரிசுத்த ஆவியானவர் அதற்கு முந்தின நாளன்று எனக்கு அறிவித்தார். அது என்ன? தேவன் எளிமையில் மறைந்திருத்தல். தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அவர் மிருகத்தையோ, மீனையோஅல்லது வேறெதையுமே சுகப்படுத்த முடியும். அவர் அனுப்பின செய்தியை ஜனங்கள் விசுவாசிக்காவிடில், அவர்கள் அதைச் விசுவாசிக்க ஒரு மிருகத்தை உயிரோடெழுப்பக்கூடும், மரித்துப்போன ஒரு ஸ்திரியை அவரால் உயிரோடெழுப்ப முடியும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்த சந்ததிக்கு என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்! அவர்கள் செய்தியைக் கேட்டு இடறி, ‘நீ இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை’, என்று குறை கூறிக்கொண்டிருக்கும் சமயம், அவர் சுகம்பெற ஒரு சாதாரண மிருகத்தை அனுப்புகிறார். என்னே ஒரு கடிந்து கொள்ளுதல்! அது என்ன? தேவன் எளிமையில் வெளிப்பட்டு அவரை மகத்துவமுள்ளவராகக் காண்பித்தலே. இந்த சந்ததியை, அவர்களுடைய அவிசுவாசித்தினிமித்தம் கடிந்து கொள்ளுகிறார். ஒரு முறை ஒரு கத்தோலிக்க மனிதன் என்னிடம், ‘அற்புத சுகமளித்தல் தேவனுடைய வரமாயிருந்தால், அது கத்தோலிக்க சபைக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றான். அது போன்று மெதோடிஸ்டு சபையினரும், பெந்தேகோஸ்தே சபையினரும், அது உண்மையானால் அது அவர்களது சபைகளுக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றனர். ஆனால் எவர்களிடத்திற்கும் அது வரவில்லை. அது உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் வல்லமையினால் மாத்திரமே வருகிறது. நான் கூறுவதை உங்கள் இருதயத்தில் வைத்து சிந்தனை செய்யுங்கள். அதை நழுவ விடவேண்டாம். இந்த ஸ்தாபனத்தாரின் கருத்துக்களுக்கு ஏற்ப தேவன் அவர்கள் ஸ்தாபனங்களுக்கு வரவேண்டுமென்றும். இல்லையெனில் அது தேவனல்ல; அது மனோத்துவம் அல்லது பிசாசு என்று அவர்கள் எண்ணுகின்றனர். முடிவாக நான் இதைக் கூறவிரும்புகிறேன்; தேவனுடைய எளிமையான செய்தியை நிராகரித்தால், நித்தியமாக அழிக்கப்படுவோம். அந்த செய்தியை பரிகசித்து அதனை காலால் உதைக்கலாம் என்று ஜனங்கள் எண்ணுகின்றனர். ஆனால் அது தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கும். நோவாவின் காலத்தில் வாழ்ந்து அவன் செய்தியை ஏற்றுக் கொள்ளாதவர் அழிந்து போயினர். இயேசு மரித்த பின்பு, உயிரோடெழுமுன்பு, அந்தகாரச் சங்கிலிகளினால் கட்டப்பட்டிருந்த அவர்களுக்கும் போதகம் பண்ணினார். அவர் பாதாளத்திற்குச் சென்று, நோவாவின் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தும், ஒரு எளிய மனிதன் கொண்டு வந்த ஒரு சாதாரண தேவனுடைய செய்திக்கும் கீழ்ப்படியாமல் போனதின் விளைவாக காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த ஆவிகளுக்கு பிரசங்கித்தார். தீர்க்கதரிசியின் செய்திக்கு கீழ்ப்படியாத அனைவரும் ..... மோசே கர்த்தரிடத்தில் செய்தியைப் பெற்றிருந்து, அக்கினி ஸ்தம்பத்தினால் அவனுடைய ஊழியம் உறுதி பெற்று, இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தில் வழிநடத்திச் சென்றான். அவர்களோ ஒரு ஸ்தாபனம், உண்டாக்கிக் கொள்ள முயன்று, அதன் விளைவாக யோசுவா, காலேப் என்பவரைத் தவிர, மற்றவரெல்லாம் மாண்டு போயினர். பரிசேயர் குருடராயிருந்தபடியால் அதை சரிவரக் காணக் கூடாமல், ‘எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்’ என்றனர் (யோ:6:31). ஆனால் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, ‘அவர்கள் எல்லாரும் மரித்தார்கள்’ என்றார். (யோ : 6.49). இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய மகிமையைக் கண்கூடாகக் கண்டு, அக்கினி ஸ்தம்பத்தின் வெளிச்சத்தில், தேவனுடைய வல்லமையின் பிரசன்னத்தில் நடந்து சென்றனர். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த ஸ்தலங்களின் வழியாக அவர்கள் சென்றனர். தேவன் அவர்களுக்கென்று வானத்திலிருந்து விழப்பண்ணின மன்னாவை அவர்கள் புசித்தனர் என்றாலும் அவர்கள் நரகத்துக்குச் சென்றனர்: ‘உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்’ என்னும் இயேசுவின் வாக்கை நாம் ஆராய்ந்து பார்த்தால், அது தேவனுடைய சமூகத்திலிருந்து நித்தியமாக உண்டாகும் பிரிவினையைக் காட்டுகின்றது. அவர்களெல்லாரும் மரித்தார்கள். இயேசுவை ஏற்றக் கொள்ள மறுத்த அனைவரும் அழிந்து போயினர். நான் என்ன சொல்லுகிறேன் என்று புரிகிறதா? தேவனுடைய எளிமையை ஏற்றுக்கொள்ள மறுத்த அனைவரும் அழிந்து போயினர். ‘ஐயோ நான் தவறு செய்துவிட்டேன்’ என்று சொல்லி உங்களால் தப்பித்துக்கொள்ள முடியாது. நீங்கள் அவ்வாறு செய்யவும் முடியாது, தேவன் அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார். நீங்கள் நித்தியமாய் அழிந்து போவீர்கள். நாம் இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். ஒரு ஊழியம் தேவனால் சரிவர நிரூபிக்கப்பட்டால், அது தேவனுடைய வார்த்தையைக் கொண்டதாயிருக்கிறது. மோசே, எலியா, யோவான், இயேசு இவர்களின் காலத்தில் செய்தியை ஏற்றக்கொள்ள மறுத்தவர் அனைவரும் அழிந்து போயினர். ஒரு சிறு சம்பவத்தை இப்பொழுது கூறப்போகிறேன். இதைக் கூறுவதனால் நான் யாரையும் அதிகம் புண்படுத்தமாட்டேன் என்று நினைக்கிறேன். ஒருதினம், நான் டெக்ஸாஸிலுள்ள ஹுஸ்டன் (Houston, Texas) என்னும் ஸ்தலத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வாலிபனும் ஒரு பெண்ணும் தொந்தரவில் சிக்கிக் கொண்டனர். (அதைப் பற்றி நீங்கள் பத்திரிக்கைகளில் வாசித்திருப்பீர்கள்) அவர்களுக்கென ஒரு மன்னிப்புப் பத்திரத்தில் கையெழுத்துக்கள் வாங்க எண்ணி, கூட்டம் ஒன்றைக்கூட்டி ஒரு செய்தியைப் பிரசங்கிக்க நினைத்தேன். அந்த வாலிபன் ஐரிஸ் (Iris) என்பவரின் மனைவிக்கு அவர் முதல் கணவரின் மூலம் பிறந்த மகனாவான் (Step son). ஐரிஸ் என்பவர்தான் அங்கு தொங்கும் கர்த்தருடைய தூதனின் புகைப்படத்தை எடுத்தவர். அவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர். அவர் மனைவி யூத மார்க்கத்தைச் சேர்ந்தவள். அவர்கள் தங்களுக்குள்ளே எந்தவித மத சம்பந்தமான காரியங்களையும் பேசிக் கொள்வதில்லை. டெட் கிப்பர்மன் (Ted Kipperman) என்பவர் ஐரிசுடன் புகைப்பட வியாபாரத்தில் ஈடுபட்டவர். அவர் டக்லன் ஸ்டூடியோ (Douglas Studio) என்னும் புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோவின் சொந்தக்காரர். பாப்டிஸ்ட் சபையைச் சேர்ந்த டாக்டர் பெஸ் (Bess) என்பர் சகோ. பாஸ்வர்த்தின் (Bosworth) கூட்டத்தில், அவர் கைமுட்டியை பாஸ்வர்த்தின் முகத்திற்கு நேராக வைத்து அவரைக் குத்தும்போல் பாவனை செய்து ‘நான் அவரைக் குத்துவது போன்ற ஒரு புகைப்படம் எடுங்கள்’ என்று சொன்னபோது, இவர்தான் அதை எடுத்தார். ‘அந்தக் கிழவனின் தோலை உரித்து தெய்வீக சுகம் மரித்ததன் ஞாபகர்த்தமாக அதை என் படிக்கும் அறையில் மாட்டுவேன்’ என்று சவால் விட்டவர் இந்த டாக்டர் பெஸ் என்பவர்தான். நான் ஹுஸ்டனுக்குப் போக கர்த்தராகிய தேவன் எனக்குக் கட்டளையிட்டார். நானும் கர்த்தருடைய நாமத்தில் அங்கு சென்றிருந்தேன். அங்கு நேர்ந்த தர்க்கங்களையும் சம்பவங்களையும் குறித்து நீங்கள் புத்தகங்களில் வாசித்திருப்பீர்கள். அன்று இரவு நான் தேவனுடைய சமூகத்தில் என்னை அதிகமாகத் தாழ்த்தினேன். டாக்டர் பெஸ், ‘இவர்கள் அறிவீனம் கொண்ட ஒரு கூட்டக்காரர். தெய்விக சுகமளித்தலில் விசுவாசம் கொண்டவர் யாருமேயில்லை. அதெல்லாம் சுத்த பொய்’ என்றார். தேவன் எளிமையில் காணப்படுகிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியாமற் போனார்கள். அவர்கள் சகோ. பாஸ்வர்த்தை பார்த்து, ‘இந்த மனிதன் ஆரம்பப் பள்ளியிலும் கூட படிக்கவில்லை’ என்று பழித்தார்கள். டாக்டர் பெஸ்ஸூம் அவருடன் இருந்தவர்களும் கல்வியறிவு படைத்த பட்டதாரிகளாயிருந்தனர். அதைக் கொண்டு சகோ. பாஸ்வர்த்தைத் திணறச் செய்யலாம் என்று டாக்டர் பெஸ் எண்ணினார். ஆனால் தேவனுடைய வார்த்தையின் பேரில் தர்க்கம் வந்தபோது, டாக்டர் பெஸ் பத்தில் ஒரு பாகம்கூட சகோ. பாஸ்வர்த்துக்கு நிகரில்லை. சகோ. பாஸ்வர்த் தான் செய்வது சரியென்பதை நன்கு அறிந்திருந்தார். இன்று உட்கார்ந்திருக்கும் உங்களில் அனேகர் அன்று நேர்ந்த தர்க்கத்தைக் கேட்டீர்கள். டாக்டர் பெஸ் கைகளை மேலே தூக்கிய வண்ணம், ‘இவர்கள் அறிவீனம் படைத்தவர்கள். யோக்கியமுள்ளவர் யாரும் தெய்வீக சுகமளித்தலில் விசுவாசம் கொள்வதில்லை’ என்றார். அப்பொழுது சகோ. பாஸ்வர்த் (அன்றைய இரவு கூட்டத்தில், சுமார் 30000 பேர் கூடியிருந்தனர்) ஜனங்களை நோக்கி, ‘சகோ பிரான்ஹாம் இந்த பட்டினத்தில் கூட்டம் நடத்தின நாள் தொடங்கி, பாப்டிஸ்ட் சபையைச் சார்ந்த உங்களில் எத்தனைபேர் தேவனுடைய வல்லமையால் தெய்வீக சுகம் பெற்று அதற்கு ஆதாரமாக டாக்டர்களின் நற்சாட்சி பத்திரம் பெற்றிருக்கிறீர்கள்? தயவுசெய்து எழுந்து நில்லுங்கள்’ என்றார். அப்பொழுது 300 பேர் எழுந்து நின்றனர். அவர் டாக்டர் பெஸ்ஸைப் பார்த்து, ‘இதற்கு என்ன சொல்லுகிறீர்?’ என்று கேட்டார். ஆம், தேவன் எளிமையில் மறைந்திருந்தார். அப்பொழுது டாக்டர் பெஸ், ‘தெய்வீக சுகமளிப்பவனைக் கொண்டு வாருங்கள். அவன் என் முன்னிலையில் யாரையாவது வசீகரிக்கட்டும் (hypnotize), ஒரு வருடம் கழித்து வசீகரிக்கப்பட்டவனின் நிலையை நான் காணட்டும்’ என்று சவால் விட்டார். அந்த புகைப்படம் எடுத்த டெட் கிப்பர்மனும் ஐரிஸும் அப்பொழுது அங்கிருந்தனர். ஐரிஸ், ‘பிரான்ஹாம் வசீகரிக்கும் திறனைப் பெற்றவரேயன்றி, வேறொருவருமல்ல. தொண்டையில் களகண்ட மாலை (Goiter) இருந்த ஒரு ஸ்திரியை நான் அறிவேன். பிரான்ஹாம் அவளை வசீகரித்தார். அடுத்த நாள் நான் அவளைக் கண்டபோது, அது மறைந்து போயிருந்தது’ என்றார். டாக்டர் பெஸ் என்னை நிந்தித்தார். நான் அந்த பட்டினத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டுமென்றும், அவர் தான் என்னை முதலில் விரட்டியடிக்கப் போவதாகவும் கூறினார். ‘ஹுஸ்டன் க்ரானிக்கல்’ (Houston Chronicle) என்னும் முதல் பத்திரிகையின் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் இது பிரசுரிக்கப்பட்டது. நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. என் பிதாவுக்கடுத்தவைகளைச் செய்யவே நான் அங்கு சென்றிருந்தேன் அவ்வளவு தான். அவர் தான் என்னை அங்கு அனுப்பினார். நான் வார்த்தையில் நிலைநிற்க வேண்டியதே என் கடமையாகும். அன்றிரவு நான், ‘யாராவது என்னை தெய்வீக சுகமளிப்பவன் என்று கூறினால் அது தவறாகும். தெய்வீக சுகமளிப்பவன் என்று நான் அழைக்கப்பட விரும்பவில்லை. டாக்டர் பெஸ் ரட்சிப்பைக் குறித்து பிரசங்கித்தால் அவர் தெய்வீக ரட்சகர் என்று அழைக்கப்பட விரும்ப மாட்டார். அவ்வாறே நான் தெய்வீக சுகமளித்தலைப் பற்றி பிரசங்கிப்பதன் காரணத்தால் தெய்வீக சுகமளிப்பவன் என்று அழைக்கப்பட விரும்பவில்லை. அவரும் தெய்வீக ரட்சகரல்ல; நானும் தெய்வீக சுகமளிப்பவன் அல்ல. அவருடைய தழும்புகளால் மாத்திரமே நாம் குணமானோம் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்’ என்றேன். மேலும், ‘தேவனுடைய வரத்தைக் குறித்தும் அவருடைய பிரசன்னத்தைக் குறித்தும் சந்தேகமிருந்தால், அவரே அதை நிரூபிப்பார்’ என்றேன். அவ்வமயம், கர்த்தருடைய தூதன் சுழன்று கொண்டு இறங்கி வந்தார். அப்பொழுது நான், ‘இனி நான் பேச வேண்டிய அவசியமில்லை. அவரே எனக்குப் பதிலாகப் பேசிவிட்டார்’ என்று சொல்லி வெளி நடந்தேன். ஹுஸ்டன் பட்டினம் அழகான பட்டினங்களில் ஒன்றாகும். அன்றொரு நாள் நான் அதன் வீதிகளின் வழியாக நடந்து சென்ற போது, அதைப் பார்ப்பதற்கே அவமானமாயிருந்தது. வீதிகள் அழுக்குப் படிந்து காணப்பட்டன. திரைப்பட நடிகர்கள் தங்கும் ரைஸ் ஹோட்டலுக்குள் (Rice Hotel) சென்றேன். அங்கு கூரையின் மேலிருந்து சுண்ணாம்பு கொட்டிக் கொண்டேயிருந்தது. தரையிலிருந்து சிமிட்டி அடர்ந்து வந்திருப்பதை நான் கண்டேன் ஹோட்டல் முழுவதும் அழுக்கு நிறைந்ததாய் காட்சியளித்தது. அந்த பட்டினத்தின் போதகர்களிடையே இதுவரை நான் கேட்டிராத குழப்பம் குடி கொண்டிருந்தது. ஏன்? வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அந்தகாரத்தில் நடக்க வேண்டும். அவர்கள் பிள்ளைகள் மரணத்திற்குள்ளாயினர். எளிமையில் தேவன் தம்மை வெளிப்படுத்த சித்தம் கொண்டபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஆகையால் தேவன் தாமே மக்களுக்குக் காட்சியளித்தார். அங்கு எடுத்த புகைப்படம் உலகம் பூராவும் பரபரப்பை உண்டு பண்ணியது. இவ்வுலகின் சரித்திரத்திலேயே முதன் முறையாக தெய்வீக உருவம் புகைப்படத்தில் எடுக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்ளுகின்றனர். அது வாஷிங்டனில் மதக்கலைகளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறையில் தொங்க விடப்பட்டிருக்கிறது. அது தேவன் எளிமையில் மறைந்திருந்து, பின்பு தம்மை வெளிப்படுத்துதல். அவர் இயேசுவின் மரணத்தால் தம்மை மறைத்துக் கொண்டு, அவர் உயிர்த்தெழுதலில் தம்மை வெளிப்படுத்திக் காண்பித்தார். இதைப் பற்றிக் கூறப்போனால் அதற்கு முடிவேயில்லை. இதற்கு ஆதாரமாக எத்தனையோ சம்பவங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.... ஆயினும் கட்டிடத்தின் அடித்தளத்திற்குச் சென்று கண்களை மூடிக்கொண்டு, சூரிய வெளிச்சம் கிடையாது என்று ஜனங்கள் சொல்வதற்கு இவர்கள் ஒத்திருக்கின்றனர். சரியான ஒன்றை ஏற்றிக்கொள்ள மறுப்பதனால் நீங்கள் தவறு செய்கின்றீர்கள் என்பதனை நினைவுகொள்ளுங்கள். உங்கள் கண்களைத் திறக்க மறுப்பதனால், நீங்கள் இருளில் வாழ்கின்றீர்கள். நீங்கள் கண்ணைத் திறந்து பார்க்க மறுத்தால், உங்களால் எப்படி காணமுடியும்? உலகில் நிகழும் சாதாரண காரியங்களைப் பாருங்கள். நீங்கள் செய்யாமல் விட்டு விடும் சிறிய காரியங்கள் தான் உங்களைக் கஷ்டத்தில் ஆழ்த்துகின்றன..... நீங்கள் செய்ய முயலும் பெரிய காரியங்கள் அல்ல. மத்தேயு 11:10.ல் இயேசு, ‘நீங்கள் ஏற்றுக் கொள்ள மனதாயிருந்தால், வழியை ஆயத்தம் பண்ண எனக்கு முன்னே அனுப்பப்பட்டவன் யோவான் ஸ்நானன் இவன் தான்’ என்றார். இயேசு, ‘மனுஷகுமாரன் எருசலேமுக்குப் போகிறார். அங்கே நான் பாவிகளின் கையில் ஒப்புக் கொடுக்கப்படுவேன். அவர்கள் மனுஷகுமாரனைக் கொன்று போடுவார்கள். ஆனாலும் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்திருப்பார்’ என்று சொல்லி, ‘நீங்கள் மறுரூப மலையில் கண்ட தரிசனத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்று சீஷர்களுக்கு கட்டளையிட்டார். இப்பொழுது நான் சொல்லப்போவதை சிந்தித்துப் பாருங்கள். யோவான் ஸ்நானனுடன் நடந்து, அவனுடன் வனாந்தரத்தில் புசித்து நதிக்கரையில் அவனுடன் உட்கார்ந்து சம்பாஷித்த அவனுடைய அதே சீஷர்கள் தான் இயேசுவிடம், ‘எலியா முதலில் வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்கள், நீர் சிலுவையில் அறையுண்டு பின்பு உயிர்த்தெழப் போவதாகச் சொல்கிறீர். நீர் தான் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆளப்போகும் மேசியா, கிறிஸ்து வருவதற்கு முன் எலியா வரவேண்டு மென்று வேதவாக்கியங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றனவே’ என்று கேட்டனர். அப்பொழுது இயேசு, ‘எலியா முதலில் வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை’ என்று கூறினார். உங்களைச் சற்று புண்படுத்த எண்ணுகிறேன். வேண்டுமென்று நான் அப்படிச் செய்யப் போவதில்லை. நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டுமென்ற காரணத்தால் தான் நான் அங்ஙனம் செய்ய முற்படுகிறேன். யோவானின் ஊழியத்தில் மனந்திரும்பின சீஷர்கள் தான், இப்பொழுது இயேசுவுடன் கூட நடந்து எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டுமென்று வேதம் ஏன் கூறுகிறது?’ என்று கேட்கின்றனர். அவர்கள் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை, நான் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? ஒரு சில பேருக்கு மாத்திரமே யோவான் ஸ்நானன் தான் எலியா என்பது வெளிப்படுத்தப் பட்டது. அவர்கள் மாத்திரமே அந்த உண்மையை அறிந்து கொள்ள நியமிக்கப்பட்டிருந்தனர். ‘எலியா முதலில் வந்தாயிற்று. நீங்கள் அதை அறியவில்லை’ என்று இயேசு சொன்னார். ‘ஆயினும் செய்ய போவது என்ன என்று வேதம் கூறிய அனைத்தையும் அவன் செய்து முடித்தான். நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டு விசுவாசிக்க, அவன் உங்களை சீர்படுத்தினான். அவனுக்கு என்ன செய்யப்படும் என்று வேதம் கூறியதையும் அவர்கள் அவனுக்குச் செய்தனர்’ என்றார். உங்களுக்கு இப்பொழுது சற்று நடுக்கத்தை உண்டாக்க விரும்புகிறேன். எடுக்கப்படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும். அது மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாதபடி ஒரு சாதாரண சம்பவமாயிருக்கும். எடுக்கப்படுதல் (Rapture) வரப்போகும் ஒரு நாளில் நிகழும், யாரும் அது சம்பவித்துவிட்டது என்று அறியவே மாட்டார்கள். இப்பொழுது நீங்கள் எழுந்து போய்விட வேண்டாம். நான் கூறுவதை ஒரு நிமிடம் ஆலோசனை செய்து பாருங்கள். நான் இப்பொழுது முடித்து விடுகிறேன். எடுக்கப்படுதல் ஒரு எளிய விதத்தில் சம்பவித்த பிறகு, நியாயத்தீர்ப்பு ஜனங்களின் மேல் விழும். அப்பொழுது அவர்கள் மனுஷகுமாரனைக் காண்பார்கள். அவரிடம், ‘எலியா எங்களுக்கு அனுப்பப்பட வேண்டுமே? எடுக்கப்படுதல் சம்பவிக்க வேண்டுமே?’ என்று கேட்பார்கள். அவர் அதற்கு பிரதியுத்திரமாக, அவையெல்லாம் ஏற்கனவே சம்பவித்து விட்டன, நீங்கள் அதை அறியவில்லை’ என்பார். தேவன் எளிமையில் காணப்படுதல். இந்த வாரம் எடுக்கப்படுதலைப் பற்றி சில ஆழமான போதனைகளைக் கேட்கப் போகிறோம். கவனியுங்கள். வெகு சிலர் மாத்திரமே எடுக்கப்படுதலில் மணவாட்டியாக செல்வர். ஆனால் அனேக போதகர்கள், லட்சக்கணக்காண மக்கள் எடுக்கப்படுதலில் செல்வதாக போதித்து, அதை விவரிக்க படங்களும் வரைந்து காண்பிக்கின்றனர். மெதோடிஸ்ட் போதகர் பிரசங்கிக்கும் போது எடுக்கப்படுதலில் செல்பவர் எல்லாம் மெதோடிஸ்ட் சபையினராயிருப்பர் என்றும், பெந்தோகோஸ்தே போதகர் பிரசங்கிக்கும் போது அவர்களெல்லாரும் பெந்தேகோஸ்தே சபையினராயிருப்பார்கள் என்று சொல்கின்றனர். அது உண்மையல்ல. ஒருக்கால் ஜெபர்ஸன்வில் பட்டினத்திலிருந்து ஒரே ஒரு நபர் மாத்திரமே எடுக்கப்படுதலில் செல்லக்கூடும். அவர் எங்கேயோ காணாமற் போனார் என்று ஒரு சிலர் நினைத்துக் கொள்வார்கள். மற்றவர்கள் அதைப் பற்றி அறியவே மாட்டார்கள். ஜார்ஜியா (Georgia) பட்டினத்திலிருந்து ஒருவரும், ஆப்பிரிக்கா கண்டத்தில் ஒருவரும், இப்படியாக சொற்ப பேர் மாத்திரமே எடுக்கப்படுதலில் செல்வர். ஆக உயிருள்ளவர்களில் 500 பேர் மாத்திரம் மறுரூபமடைந்து செல்லலாம். அது சபையல்ல. அது மணவாட்டி, சபையானது ஆயிரக்கணக்கான பேர்களைக் கொண்டதாயிருக்கும். ஆனால் அவர்கள் இரண்டாவது உயிர்த்தெழுதலின் பிறகு தான் வருவார்கள். அவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடைவதில்லை. மணவாட்டியின் அங்கத்தினர் மாத்திரமே ஆயிரம் வருஷ அரசாட்சியில் பங்கு கொள்வர். இந்த நிமிடத்தில் 500 பேர் பூமியை விட்டுச் சென்றால், உலகத்தினர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ள முடியாது. இயேசு, ‘படுக்கையில் படுத்திருக்கும் இருவரில் ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான்’ என்றார். அது இரவில் நிகழ்கின்றது. ‘வயலில் இருவர் வேலை செய்து கொண்டிருப்பார்கள் (பூமியின் மற்றைய பாகத்தில் அப்பொழுது பகலாயிருக்கும்) ஒருவன் எடுத்துக் கொள்ளப்படுவான். மற்றவன் கைவிடப்படுவான்’ ‘நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்’ (லூக்கா. 17.33-36) நினைத்துப் பாருங்கள், எல்லாமே அப்பொழுது சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கும். அப்பொழுது ‘அந்த போதகர் எங்கேயோ சென்று விட்டார், அவர் திரும்ப வரவில்லை’ என்ற செய்தி மெதுவாகப் பரவும். ஒருக்கால் அவர் வேட்டையாட காட்டுக்குப் போயிருப்பார். அவர் இனி திரும்ப வரமாட்டார்’ என்று கூறிக் கொள்வார்கள். அந்த பெண் காணாமற் போய் விட்டாள். ஒருக்கால் யாராவது அவளை மானபங்கப் படுத்திவிட்டு நதியில் எறிந்திருப்பார்கள்’ என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். ஒரு கோடி மக்களில் ஒரு மனிதனுக்குக் கூட எடுக்கப்படுதல் நிகழ்ந்துவிட்டது என்று தெரிந்து கொள்ள வகையில்லை. எடுக்கப்படுதலில் பங்கு பெற்றவர்களுடன் அறிமுகமான யாராவது ஒருவர், ‘அந்த பெண் காணாமற் போனாள். ஏனென்று எனக்குச் சற்றும் புரியவில்லை. அவள் அவ்விதமாக வீட்டை விட்டு இது வரை வெளியேறினதேயில்லை’ என்று இவ்விதமாக சொல்லக்கூடும. கல்லறைகள் எவ்வாறு திறக்கப்படும் என்று நினைக்கிறீர்கள்? அதைப் பற்றி பேச எனக்கு இப்பொழுது அவகாசமில்லை. என்றாலும் தேவனுடைய எளிமையை வலியுறுத்த ஒரு சில காரியங்களை மாத்திரம் கூறுகிறேன். நம் சரீரம் கால்ஷியம், பொட்டாஸியம் இவைகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. சரீரம் அழியும்போது இவையெல்லாம் சேர்ந்து ஒரு கரண்டியளவு தான் உள்ளது. இது மறுபடியும் உயிர்த்தெழுதலில் ஜீவனைப் பெறுகிறது. தேவன் பேசும்போது உயிர்த்தெழுதல் உண்டாகி, எடுக்கப்படுதல் சம்பவிக்கிறது. ஒரு தேவதூதன் இறங்கி வந்து, மண்வெட்டியினால் கல்லறைகளிலுள்ள மண்ணை அகற்றி, அதனுள்ளிலிருந்து ஒரு செத்த பிணத்தை எடுப்பான் என்று நாம் நினைப்பதெல்லாம் தவறு. முதலாவதாக இந்த சரீரம் பாவத்தில் பிறந்தது. உயிர்த்தெழுதலில் அளிக்கப்படுவது அதற்கு ஒப்பான ஒரு புது சரீரம். இந்த சரீரத்தை நாம் அப்பொழுது பெற்றுக் கொண்டால், நாம் மறுபடியும் மரிப்போம். நாம் நினைப்பது போன்று கல்லறைகள் திறக்கப்பட்டு, மரித்தோர் அவைகளினின்று வெளியேறுவதில்லை. அது அவ்விதமாக சம்பவிப்பதில்லை. அது இரகசியமாக நிகழும், ஏனெனில் அவர் இரவில் திருடன் வருகிற விதமாய் வருவார். எடுக்கப்படுதல் சம்பவித்த பிறகு நியாயத்தீர்ப்பு - வாதைகள். வியாதிகள் போன்றவை - விழுமென்று அவர் ஏற்கனவே நமக்கு சொல்லியிருக்கிறார். நியாயத்தீர்ப்பின் கோரத்தினின்று தப்பித்துகொள்ள ஜனங்கள் மரித்துப் போக ஆசிப்பர். ‘ஆண்டவரே, முதலில் எடுக்கப்படுதல் சம்பவிக்க வேண்டுமே, பின்னை ஏன் இந்த நியாயத்தீர்ப்பு இப்பொழுது எங்கள்மேல் விழ வேண்டும்?’ என்று அவர்கள் கூக்குரலிடுவர். அவர் அதற்கு, ‘எடுக்கப்படுதல் ஏற்கனவே சம்பவித்துவிட்டது. நீங்கள் அதை அறியவில்லை’ என்பார். தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். என்னஅதிசயம். விசுவாசிகள் ஏன் அவருடைய வருகையை அறிவிக்கும் எளிய அடையாளங்களை நம்புவதில்லை? அவர்கள் சூரியன் மத்தியான வேளையில் இருளடையும், சந்திரன் அஸ்தமிக்கும் போன்ற வேதத்தில் கூறப்பட்ட அடையாளங்களை எதிர் நோக்கியிருக்கின்றனர். அதை விவரிக்க நமக்கு இப்பொழுது சமயமிருந்தால்.... அவையெல்லாம் எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி நான் குறிப்புகளை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். இவ்வாரம் முத்திரைகள் உடைக்கப்படுதலைப் பிரசங்கிக்கும் போது, இவைகளையும் குறித்து சிந்திக்கலாம். கர்த்தருடைய தூதன் அந்த முத்திரைகளை நமக்காக உடைத்துத் தருவார். அது மறைபொருளான ஏழு இடிமுழக்கங்களால் முத்திரிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும். ஒரு எளிய கூட்டத்தார் கொண்டுள்ள எளிமையையும் தேவனுடைய அடையாளங்களையும் ஜனங்கள் ஏன் விசுவாசிப்பதில்லை?ஆதிமுதற் கொண்டு அது அவ்வாறே நிகழ்ந்து வருகிறது. உண்மையான தேவனுடைய வார்த்தை எளிமையில் வெளிப்படும் போது அவர்கள் அதிக கல்வி அறிவு படைத்து சாமர்த்தியம் கொண்டதன் விளைவாக அதை ஏற்க மறுக்கின்றனர். தேவனுடைய வார்த்தைக்குத் தங்கள் சொந்த கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.`இதன் அர்த்தம் இப்படியல்ல. அதற்கு இது தான் அர்த்தம்’ என்கின்றனர். கவனியுங்கள். இந்த ஸ்தலத்தில் தேவன் எனக்கு அருளிய தரிசனங்களும்கூட தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாகத்தான், நான், ஒலி நாடாக்களில் (Tapes) என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் சொல்லுங்கள், தரிசனங்கள் என்ன கூறுகின்றனவோ அதை மாத்திரம் கூறுங்கள்’ என்று அடிக்கடி கூறுகின்றேன். நீங்கள் நன்றாக விழித்திருந்தால் எல்லாவற்றையும் உங்களால் காணமுடியும். ஏதாவது ஒன்றைக் காண்பிக்க வேண்டுமானால் அதை என் கையில் பிடித்து உங்களுக்குக் காண்பிக்க வேண்டிய அவசியம் அப்பொழுது ஏற்படாது. கல்வி அறிவு படைத்த சமார்த்தியமுள்ளவர் அதை காணாதவாறு இழந்துபோவர். நான் வேட்டையாடச் செல்லும் போது என்ன நேரிடும் என்பதை நான் தரிசனத்தில் கண்டு உங்களுக்கு முன்கூட்டியே அறிவித்தேன். ஆனால் அது ஜனங்களை இடறச் செய்தது. அவ்வாறே என் தாயின் மரணத்தையும், இன்னும் நேரிடவிருந்த ஏனைய சம்பவங்களையும் நான் தரிசனத்தில் கண்டு அவைகளை முன்கூட்டி அறிவித்தேன். அவர் எனக்கு தரிசனத்தில் காண்பித்தவாறே அவை யாவும் சம்பவித்தன. யோவான், `நான் மேசியாவல்ல. நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிற வனுடைய சத்தம்’ என்று சொன்னபோதிலும் அவனுடைய சீஷர்களே இயேசுவிடம், `எலியா முதலில் வரவேண்டுமென்று வேதம் போதிக்கிறதே!’ என்று கேட்டனர். தேவனுடைய எளிமை ஜனங்களுக்குத் தலைகீழ் பாடமாக அமைகிறது. இதை மாத்திரம் கூறி தேவனுடைய ஒத்தாசையைக் கொண்டு முடித்துவிடுகிறேன் உங்களை இவ்வளவு நேரம் வைத்துக் கொண்டதற்காக வருந்துகிறேன்’ இன்னும் சில மணி நேரங்களில் நாம் மறுபடியும் இங்கு கூடப் போகிறோம். சாதாரண ஒரு துளி எழுதும் மையை (Ink) நாம் கவனிப்போம். எல்லாமே ஒரு நோக்கத்திற்காக அமைந்திருக்கிறது. இன்று காலையில் நீங்கள் இங்கு கூடி வந்திருப்பதிலும் ஒரு நோக்கமுண்டு. நான் சார்லிவீட்டில் உண்டதும், நெல்லி எனக்கு சமைத்துப் போட்டதும் இந்த கூடாரம் இங்கு எழுப்பப்பட்டிருப்பதும், இவையெல்லாவற்றிலும் ஒரு நோக்கமுண்டு. எந்த ஒரு சம்பவமும் காரணமின்றி நடைபெறுவதில்லை. சாதாரண ஒரு துளி எழுதும் மையை நாம் கவனிப்போம். அது எங்கிருந்து வந்தது? அது கருப்பு மை என்று நாம் வைத்துக் கொள்வோம். அது ஒரு நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டது. நான் சிறையிலிருந்து விடுபட எனக்களிக்கப்படும் மன்னிப்பை அதைக்கொண்டு எழுதலாம். நான் மரண தண்டனை அடைந்தால் அதனின்று விடுபட அவசியமான மன்னிப்பின் பத்திரத்தை அந்த மையினால் எழுதலாம் அது யோவான் 3 :16ஐ எழுதி, அதை நான் விசுவாசிப்பதன் மூலம் என் ஆத்துமாவைக் காக்க முடியும். அல்லது நியாயஸ்தலத்தில் நான் குற்றவாளியென்று தீர்க்கப்பட்டால் என் மரண தண்டனையை அது எழுத முடியும். அது ஒரு நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டது. அது எங்கிருந்து வந்தது என்பதை சற்று பார்ப்போம். ரசாயனங்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டு மை உண்டாக்கப்பட்டது. அது கருமை நிறமாயிருக்கிறது. அது உங்கள் ஆடைகளின் மேல் விழுந்தால் கறைபடியும். ஆனால் அந்த கறையைப் போக்குவதற்கு ஒருவகை ரசாயனத்தை நாம் உபயோகப்படுத்துகிறோம். பெண்களாகிய நீங்கள் க்ளோராக்ஸ் பிளீச் (Chlorox Bleach) என்னும் வெண்மையாக்கும் திரவத்தை உபயோகிக்கிறீர்கள்.இந்த ரசாயனம் நிரம்பிய ஒரு தொட்டியில் ஒரு துளி மையை நான் ஊற்றினால், அந்த மையின் நிறம் மறைந்து விடுகிறது. அந்த துளி மையும் எங்கேயோ போய்விடுகிறது. அந்த மையை மறையச் செய்யும் ரசாயனத்தின் ஒரு பாகம் தண்ணீராகும். தண்ணீர் ஹைட்ரஜன்வாயுவும், பிராண வாயுவும் ஒன்று சேர்வதனால் உண்டாகிறது. இவ்விரண்டு வாயுக்களும் வெடிக்கும் தன்மை வாய்ந்தவை. அவை ரசாயனப் பொருட்கள். ஆனால் அவை ஒன்று சேரும்போது தண்ணீராக மாறுகிறது. தண்ணீரை ரசாயனப் பொருட்களாகப் பிரிக்கும்போது இவ்விரண்டு வாயுக்களும் கிடைக்கின்றன. ரசாயன சாஸ்திரிகள் இங்கு உட்கார்ந்துகொண்டு ஒருக்கால் நான் சொல்வதைக் கேட்டு கொண்டிருக்கலாம். என் தாழ்மையான முறையில், தேவன் அவரை அதில் வெளிப்படுத்துவார் என்னும் நம்பிக்கையுடன், இதை நான் விவரிக்க விரும்புகிறேன். மையை வெண்மையாக்கும் திரவத்தில் போட்ட மாத்திரத்தில் மையின் கருமைநிறம் மறைந்து விடுகிறது. அந்தநிறத்தை நாம் மறுபடியும் காணமுடியாது. ஏன்? அது ரசாயன பொருட்களாக உடைந்த காரணத்தால் தான். `அதுமூல அமிலங்களாக மாறிவிட்டது’ என்று விஞ்ஞானம் கூறும். அமிலங்கள் எங்கிருந்து வந்தன? அது புகையிலிருந்து (Fumes) வந்ததாக வைத்துக் கொள்வோம். இந்தபுகை எங்கிருந்து வந்தது? அது மூலக் கூறுகள் (Molecules) ஒன்று சேர்ந்ததனால் உண்டானது. இந்த மூலக்கூறுகள் எங்கிருந்து வந்தன? அணுக்களிலிருந்து, இந்த அணுக்கள் எங்கிருந்து வந்தன? எலக்ட்ரான்களிலிருந்து இப்படி சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் அது சிருஷ்டி கர்த்தரிடமிருந்து வர வேண்டுமென்று நாம் அறிந்து கொள்ளலாம். ஆகையால் நீங்கள் இங்கு தற்செயலாக உட்கார்ந்து கொண்டிருக்கவில்லை. நானும் உங்களைத் தற்செயலாக 12 : 30 அல்லது 1 : 00 மணி வரை வைத்துக் கொண்டிருக்கவில்லை. `நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்’ என்று வேதம் கூறுகிறது. அதற்கொரு காரணமுண்டு. நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு ஒரு காரணமுண்டு. நீங்கள் விசுவாசியாமலிப்பதற்கு ஒரு காரணமுண்டு. நாம் மூலக் கூறுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஒரு பிரத்தியேக எண்ணிக்கை கொண்ட மூலக் கூறுகள் ஒன்று சேர்வதனால் வித்தியாசமான வர்ணங்கள் கிடைக்கின்றன. அந்த மூலக் கூறுகளை நாம் மேலும் பிரிக்கும் போது, ஒவ்வொரு மூலக் கூறும் வித்தியாசமான எண்ணிக்கைக் கொண்ட அணுக்கள் சேர்வதால் உண்டாயிருக்கிறது. இவ்விதமாக நாம் பிரித்துக்கொண்டே போனால் அணுவைவிட சிறியதாகவுள்ள பொருட்களை அடைவோம். கடைசியில் அது சிருஷ்டிகர்த்தரில் முடிவு பெறும். அதாவது சிருஷ்டிகர்த்தர் அந்த நுணுவான பொருட்களை உண்டாக்கி அவை ஒன்று சேர்ந்ததனால் அணுவாக மாறுகின்றன. அணுக்களின் நிலையை அது அடையும்போது விஞ்ஞானம் அதைக் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றது. அணுக்கள் ஒன்று சேர்ந்து மூலக் கூறுகளாக மாறும்போது, அணுக்களைவிட மூலக் கூறுகளை நன்றாக விஞ்ஞானிகள் காணமுடிகிறது. இப்படியே சேர்த்துக் கொண்டே போனால் அவை ரசாயன பொருட்களாக மாறி அவை ஒன்று சேர்க்கப்படுகின்றன. மனிதன் பாவம் செய்தபோது, அவன் தேவனிடத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு, அகன்ற ஆழமான பிளவைக் (Chasm) கடந்து மரணத்தின் பாகத்தில் நின்றான். அவன் பழைய நிலைக்கு வர அவனுக்கு வழியே இல்லாமல் இருந்தது. அதன் பின்பு தேவன் ஆட்டிக்குட்டி, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைப் பாவப் பரிகாரமாக ஏற்றுக் கொண்டார். பாவத்தில் விழுந்து பிளவைக் கடக்கு முன்பு மனிதன் தேவ புத்திரனாயிருந்தான். அவன் தேவனுடைய புத்திரன். பூமியெல்லாம் அவனுக்குச் சொந்தமாயிருந்தது. இயற்கையை அவனால் அடக்க முடிந்தது. அவன் வாயினால் பேசி, சிருஷ்டித்தான். ஆம், அவனே ஒரு சிருஷ்டிகனாயிருந்தான். ஆனால் அவன் பிளவைக் கடந்த மாத்திரத்தில் அவன் புத்திரத்துவத்தை இழந்தான். அவன் தன் சுபாவத்தில் பாவியாக ஆனான். சாத்தானின் ஆளுகைக்கு அவன் உட்பட்டான். கர்த்தர் பலியின் மூலம் சிந்தப்பட்ட இரத்தத்தின் இரசாயனத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் பாவத்தைப் போக்கவில்லை. அது பாவத்தை மூடினது. என் கையில் ஒரு சிவப்புப் புள்ளி இருந்து அதை ஒரு வெள்ளைப் புள்ளியால் மூடினால், அந்த சிவப்புப் புள்ளி இன்னும் அங்கேயேதான் இருக்கிறது. ஆனால் கர்த்தர் பாவத்தைப் போக்க வானத்திலிருந்து வெண்மையாக்கும் திரவத்தை (Bleach) அனுப்பினார். அதுதான் தம் சொந்தக் குமாரனின் இரத்தம். நாம் பாவங்களை அறிக்கையிடும் போது, பாவம் தேவனுடைய வெண்மையாக்கும் திரவத்தில் விழுவதால், அது முற்றிலுமாக மறைந்து விடுகிறது. அதை மறுபடியும் காணமுடியாது. பாவத்தின் வர்ணம் இவ்விதமாக காலந்தோறும் மறைந்து, கடைசியில் அது நம்மைக் குற்றப்படுத்தும் சாத்தானைத் தாக்கி, நியாயத் தீர்ப்பு நாள் வரைக்கும் அது அவன் மேல் தங்கியிருக்கும். அப்படியானால் பாவம் செய்த தேவனுடைய புத்திரனின் நிலையென்ன? அவன் பிளவின் மறுபுறம் நிற்கும் பிதாவுடன் மறுபடியும் ஐக்கியம் கொள்கிறான். அல்லேலூயா! மை வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்தவுடன் மறைந்து விடுவதுபோன்று அவனுடைய பாவம் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை. ஒரு மனிதன் பாவத்தை அறிக்கையிட்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் மூழ்க்கப்படும்போது, பாவம் அவரின் இரத்தத்தில் மூழ்கி, அதன் மூலக் கூறுகள் அனைத்தும் சாத்தானை அடைந்து, நியாயத் தீர்ப்பின் நாள் வரை அவன் மேல்தங்கியிருக்கும். (அந்த நாளில் அவன் அக்கினிக் கடலில் தள்ளப்படுவான்) அப்பொழுது அந்த பிளவு அடைக்கப்பட்டு அவனுடைய பாவம் மறுபடியுமாக நினைக்கப்படுவதில்லை. அதன் பின்பு மனிதன் தேவபுத்திரனாக ஏற்றுக் கொள்ளப்படுவான் - எளிமை. மோசே, காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தின் கீழ் தேவனுடைய வார்த்தை உண்மையென வாயினால் அறிக்கையிட்டான், கர்த்தர் இந்த எளிய மனிதனைத் தெரிந்தெடுத்து அவருடைய வார்த்தையை அவன் வாயிலேயே போட்டார். அவன் யோகோவாவின் ஊழியக்காரன் என்பதனை நீரூபித்தான். யோகோவா அவனுடன் தரிசனத்தின் மூலம் பேசினார். அவன் நடந்து சென்று தன் கைகளைக் கிழக்கு திசைக்கு நேராக நீட்டினான். கர்த்தர் அவனுடன் பேசினார் என்று நினைவிருக்கட்டும். அது தேவனுடைய சிந்தையாயிருந்தது. தேவன் எப்பொழுதும் மனிதனை உபயோகிக்கிறார். கர்த்தர் அவனுடன் பேசினார். அவர் `உன் கையிலுள்ள தடியை கிழக்கு திசைக்கு நேராக நீட்டு, வண்டுகள் உண்டாகக்கடவது என்று சொல்’ என்றார். காளை, வெள்ளாட்டுக்காடா இவைகளின் இரத்தத்தின் கீழிருந்த மோசே கீழ்திசைக்குச் சென்று தன் தடியை அதற்கு நேராக நீட்டி, `வண்டுகள் உண்டாகக்கடவது என்று கர்த்தர் உரைக்கிறார்’ என்றான். அதற்கு முன்பு அவர்கள் வண்டுகளைப் பற்றி கேள்விபட்டதேயில்லை. வார்த்தையானது அப்படியாவதற்கு முன்பு தேவனுடைய சிந்தையாயிருந்தது. அது பேசப்பட்டபோது வார்த்தையாக வெளிப்பட்டது. அப்படியானால் மோசே பேசினது தேவனுடைய வார்த்தையாகும். அது மனித உதடுகளின் மூலம் வெளிவந்தது. அவன் பேசிய மாத்திரத்தில் ஒரு பச்சை வண்டு அங்கு பறந்து வந்தது, அதன் பின்பு ஒவ்வொரு கெஜத்திற்கும் ஐந்து பவுண்ட் எடையுள்ள வண்டுகள் காணப்பட்டன. அது என்ன? அதுதான் சிருஷ்டிகனாகிய மோசேயின் மூலம் பேசப்பட்ட தேவனுடைய வார்த்தையாகும். அவன் காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழ் தேவனுடைய சமூகத்தில் நின்று கொண்டிருந்தான். அவன் பேசிய வார்த்தைகள் அவனுடைய சொந்த வார்த்தைகளல்ல. `நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’(யோ. 15.7). இன்றைய சபையின் நிலையென்ன! `தவளைகள் உண்டாகக் கடவது’ என்று மோசே கட்டளையிட்டான். அந்த நாட்டில் அதற்கு முன்பு ஒரு தவளையும் கிடையாது. ஒரு மணி நேரத்திற்குள் சில இடங்களில் பத்து அடி ஆழத்திற்கு தவளைகள் உண்டாயிருந்தன. அது என்ன? அதுதான் சிருஷ்டி கர்த்தராகிய தேவன் ஒரு சாதாரண மனிதனுக்குள் மறைந்திருந்தலாகும். இப்பொழுது உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பாவத்தைப் போக்காமல் அதை மூடின காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் ஒரு மனிதனை தேவனுடைய சிருஷ்டிப்பின் வார்த்தையைப் பேசி வண்டுகளைச் சிருஷ்டிக்கச் செய்ய முடியுமானால், பாவத்தை முற்றிலும் போக்கும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம், ஒரு மனிதன் தேவனுடைய வார்த்தையைப் பேசி ஒரு அணிலைச் சிருஷ்டிக்கச் செய்யும் போது ஏன் இடறுகிறீர்கள்? நீங்கள் தடுமாற வேண்டாம். எளிமையைக் கண்டு நீங்கள் இடறவேண்டாம். அவர் இப்பொழுதும் தேவனாயிருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள். அவர் பாவங்களை மன்னிக்கிறவராயிருக்கிறார். மாற்கு 11.23: `எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து, நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்’. நான் குறிப்புகள் எழுதிய மூன்று, நான்கு பக்கங்கள் இன்னும் உள்ளன. மிக்கநன்றி, தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். உங்களால் அதை காணமுடியவில்லையா? எங்கேயோ தவறு உண்டு. தேவன் ஒரு போதும் பொய் சொல்வதில்லை. அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அவர் எளிமையில் மறைந்திருக்கிறார். அது எளிமையாயிருக்கும் காரணத்தால், கல்விமான்களும், அறிவு படைத்தவர்களும், `அது வசீகரணம் (Telepathy)’ என்கின்றனர். தேவன் கடந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அப்படியே கூறமுடியும். நீ இப்பொழுது எப்படியிருக்கிறாய் என்றும், சிலகாலம் கழித்து நீ எப்படியிருப்பாய் என்றும் அவரால் கூறமுடியும். அது இயேசுகிறிஸ்துவின் இரத்தமாகிய வெண்மையாக்கும் திரவத்தினால் (Bleach) மாத்திரமே சத்தியமாகிறது. அவர் தேவனுடைய சமுகத்தில் நின்று ஒரு பாவியின் பாவத்தை அந்த வெண்மையாக்கும் திரவத்தினால் போக்குகிறார், `நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்கள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’. `என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்’. தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் (தீர்க்கதரிசிகள்) தேவர்களென்று உங்கள் பிரமாணம் சொல்லவில்லையா? பின்னை நான் தேவகுமாரன் என்று என்னை அழைத்துக் கொண்டதால் என்னை ஏன் குற்றப் படுத்துகிறீர்கள்?’அவர்கள் அதைக் காணத் தவறினர் (யோ 14: 12,10:35, 36). சபையே, இன்று இரவு முதல் பிரசங்கிக்க விருக்கும் செய்திகளில் அதைக்காணத் தவறவேண்டாம். நாம் வாழும் இந்த நாட்களை அறிந்து கொள்ளுங்கள். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் உங்கள் பாவங்களை வெகுதூரம் அப்புறப்படுத்தி, அதை தேவன் நினையாதிருக்கிறார் என்பதனை நினைவு கூருங்கள். அவருடைய இரத்தம் எல்லா கறையையும் போக்குகிறது. `பாவம், சிவந்த கறையை விட்டிருந்தது அவரோ அதை உறைந்த மழையைப்போல் வெண்மையாக்கினார், எனவே சிங்காசனத்தின் முன்பாக அவரில் நான் பூரணனாக நிற்பேன்’ நான் எங்ஙனம் பூரணமாக முடியும்? இரத்தத்தின் மூலமாக அன்றி என்னால் அது கூடாது. எனக்கும் தேவனுக்குமிடையே அந்தஇரத்தம் நிற்கிறது. நான் அதை ஏற்றுக் கொண்டேன். நான் ஒரு பாவி. ஆனால் அவர் தேவன். ஆனால் இரத்தத்தின் ரசாயனம் எங்களுக்கிடையே நின்று, பாவத்தைக்கொன்று போடுகிறது. தேவன் பிளீச்சிலுள்ள (Bleach) தண்ணீரின் வெண்மையைப் போன்று, என்னை வெண்மையாக் கருதுகிறார். பாவம் அறவே போய்விட்டது. அது தேவனிடத்தில் சேரவும் முடியாது, ஏனெனில் வழியின் நடுவே ஒரு பலி இருக்கிறது. தேவனுடைய சாதாரண வார்த்தையை நம்புவதற்கு உங்கள் விசுவாசம் எங்கே போயிற்று? தேவனுடைய வார்த்தையை அப்படியே நம்புங்கள். ஒரு எளிய கூட்டத்தினருள் தேவன் இப்பொழுது எளிமையில் மறைந்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் அவர் தம்மை வெளிப்படுத்துவார். முந்தைய காலங்களிலும் அவர் அங்ஙனமே செய்துள்ளார். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? `நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்’ நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா, அவர் அதிசயமானவரல்லவா? இந்த செய்தி, அது அளிக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றுமென நம்புகிறேன். நீங்கள் பகட்டான காரியங்களுக்கு எதிர்நோக்கியிராதபடிக்கு இந்த செய்தி உங்களை மாற்றட்டும். நீங்கள் தேவனை மகத்துவமுள்ளவராகக் காணும்போது, அவர் எவ்வளவு தாழ்மையுள்ளவர் என்பதை நினைவு கூருங்கள், அப்பொழுது நீங்கள் தேவனைக் காண்பீர்கள். எலியா குகைக்குச் சென்றபோது, அங்கு இரத்தம், இடிமுழக்கம், மின்னல் போன்ற உணர்ச்கிகள் உண்டாயின. இன்றைக்கும் முகத்தில் இரத்தம் தோன்றப் பண்ணுதல் போன்ற உணர்ச்சிகள் நம்மிடைய காணப்படுகின்றன. ஆனால் அவ்வித உணர்ச்சிகள் அந்த தீர்க்கதரிசியைத் தொல்லை படுத்தவில்லை. அவன் அங்கு படுத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அமர்ந்த மெல்லிய சத்தம் ஒன்றை அவன் கேட்டான். அது என்ன? அதுதான் வார்த்தை. அதன் பின்பு அவன் முகத்தை மூடிக் கொண்டு வெளி நடந்தான். நண்பர்களே, பெரிய காரியங்களில் தேவனைக் காண விழையாதீர், பெரிய காரியங்கள் சம்பவிக்கப்போவதாக அவர் கூறுகிறார். பெரிய காரியங்கள் சம்பவிக்கும் காலம் வரும். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளுகிறீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் பெரிய காரியங்கள் என்று அழைக்கப்படுபவை உண்மையாக சம்பவிக்கும்போது அது மிகவும் எளிமையாக அமைந்திருப்பதன் காரணமாக நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல் இழந்து போவீர்கள். `அது சம்பவிக்கவில்லையே’ என்று நீங்கள் சொல்வீர்கள். அது உங்கள் முன்னிலையில் நடந்தது. ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ள முடியவில்லை. தேவன் தம்மை மகத்துவமுள்ளவராக வெளிப்படுத்த எளிமையில் வாழ்கிறார். அவர் தம்மை தாழ்த்துவதன் மூலமே அவருடைய மகத்துவம் விளங்குகிறது. ஒரு பெரியவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளமுடியாது. அப்படியானால் அவன் போதிய அளவுக்குப் பெரிய வனாகவில்லையென்று அர்த்தமாகிறது. அவன் அந்நிலையடையும் போது, தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான். ஒரு சமயம் சிக்காகோவிலுள்ள அந்த வயோதிப பரிசுத்தவான் இவ்விதம் கூறினார்: `அந்த மனிதன் கல்வியறிவு பெற்றவனாய் மேலே சென்று, மீண்டும் வரும்போது தோல்வியடைந்தவனாய் தலைகுனிந்து கீழேயிறங்கி வந்தான். அவன் எம்முறையில் கீழே இறங்கி வந்தானோ, அவ்விதம் மேலே சென்றிருந்தால் அவன் மேலே சென்ற விதமாய் கீழே இறங்கி வந்திருப்பான். அவர் கூறியது சரியாகும். உங்களைத் தாழ்த்துங்கள். தாழ்மையுள்ள வர்களாய் இருங்கள். விசேஷித்தவர்களாக இருக்க முயல வேண்டாம். இயேசுவை நேசியுங்கள். `ஆண்டவரே, என் இருதயத்தில் கபடு இருந்தால், என்னிடம் ஏதாவது தவறு காணப்பட்டால், பிதாவே அதைக் களைந்து போடும், நான் அவ்விதம் இருக்க விரும்பவில்லை’ என்று ஜெபியுங்கள். `ஆண்டவரே, அந்த நாளில் அவர்களில் ஒருவராக எண்ணப்பட நான் விரும்புகிறேன், அந்த நாள் சமீபித்து வருகிறதை நான் அறிகிறேன்’. தேவன் மாத்திரமே அந்த முத்திரைகளைத் திறக்க வல்லவராயிருக்கிறார் என்பது நினைவிருக்கட்டும். நாம் அதற்காக அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். கர்த்தர் உங்களைஆசீர்வதிப்பாராக. ******* ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு மார்ச் 17,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவு ஆராதனையில் பங்கு கொள்ள மறுபடியுமாக தேவனுடைய வீட்டிற்குள் வருவதும், காலையிலிருந்து மன்னாவைப் புசித்து வாழ்ந்து அவருடைய மகத்தான பிரசன்னத்தின் மூலமாய் நம் ஆத்துமாக்கள் அபரிமிதமாய் ஆசீர்வதிக்கப்படுவதும் ஓர் சிறந்த சிலாக்கியமாகும். இன்றிரவு `ஏழு சபையின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவு’ என்னும் பொருளை முதலாவதாக ஆராய்வோம். இன்று பகல் வேளையில், நான் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கர்த்தருக்குச் சித்தமானால், வரப் போகும் கோடைக் காலத்தில், அதற்குள் அவர் என்னைத் தம் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளாவிட்டால், அல்லது நான் அயல்நாடுகளுக்குச் செல்லாமலிருந்தால், மறுபடியுமாக `ஏழு கடைசி எக்காளத்தைக்’ குறித்துப் பேச விரும்புகிறேன். இவையெல்லாம் ஒன்றோடொன்று இணைகின்றன. அதன் பிறகு, `ஏழு கடைசி வாதைகள்’ உண்டு. இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்றுபொருந்துவதை பிரசங்கத்தில் நாம் காணலாம். ஆகவே, இன்றிரவு என் பிரசங்கம் சற்று நீண்டதாக இருக்கலாம். நான் இங்கு வந்தவுடன்.... பீனிக்ஸ் (Phoenix) பட்டிணத்தில் நான் எத்தனை பிரசங்கங்கள் நிகழ்த்தினபோதிலும், ஒரு முறையாவது என் தொண்டை கரகரப்பாகவில்லை. இருபத்தேழு ஆராதனைகள் அங்கு தொடர்ச்சியாக நடத்தினேன் என்று நினைக்கிறேன். என்றாலும் என் தொண்டை கரகரப்பாகவேயில்லை. இங்குள்ள மோசமான சீதோஷ்ண நிலைதான் (தொண்டை கரகரப்பாவதற்கு) காரணம். இது ஒரு பள்ளத்தாக்கு. இங்குள்ள சீதோஷ்ணநிலை ஆரோக்கியமானது தான். ஆனால் ஒரு போதகர் இங்கு தன் பிரசங்கத்தை நிகழ்த்தும்போது, ஆரம்பத்திலேயே தொண்டை கரகரப்பாகிவிடுகிறது. ஆகையால்தான் இது மோசம் என்கிறேன். வைத்திய நண்பர் ஒருவர், ஒரு முறை என் தொண்டையைப் பரிசோதித்து, `தொண்டையில் எவ்வித கோளாறுமில்லை; அதிகம் பிரசங்கித்ததினால் குரல்வளை சற்று கடினப்பட்டிருக்கிறது’ என்றார். என் தொண்டை பிரசங்கிப்பதற்கு உபயோகமாயிருந்தால் அதுவே போதுமென்று நான் ஆறுதல் கொண்டேன். தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கிக்க இது போதிய அளவுக்கு நன்றாயிருக்கிறது. பவுல் அநேக அடிகளைப் பெற்று தன் சரீரத்தில் இயேசுகிறிஸ்துவின் அச்சடையாளங்களைப் பெற்றிருந்தது போல், நம்மால் அடிகளைத் தாங்கி அவைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தவறுகளை எடுத்துரைத்ததின் மூலம் தொண்டையில் நேர்ந்த ஒரு அச்சடையாளத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும். ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் அடிக்கப்பட வேண்டிய அவசியம் இதுவரை நமக்கு உண்டாயிருக்கவில்லை என்பதற்காக நாம் தேவனை ஸ்தோத்தரிப்போம். உங்களில் எத்தனை பேர், `ஐயன்மீர், இதுவா சமயம்?’ என்னும் என் செய்தியை கேட்டிருக்கிறீர்கள், அல்லது புத்தகத்தில் வாசித்திருக்கிறீர்கள்? அது என்னைச் சற்று அலட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இதுவரை கேட்காமலிருந்தால் எப்படியாவது அதைக் கேட்க முயலுங்கள். ஆராதனை தொடங்கும் முன்பு இதைக் கூற விரும்புகிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு என் மன அமைதி குலைந்து போனது. என்னால் ஆராதனைகளும் கூட நடத்த முடியவில்லை. மோசமான ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகிறது எனும் எண்ணம் மனதில் குடிகொண்டது. அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ஆகவே, விடியற்காலையில் நான் எழுந்து சபினோகான்யானுக்குச் (Sabino Canyon) சென்றேன். அது என் வீட்டிலிருந்து முப்பது அல்லது நாற்பது நிமிடங்கள் மோட்டார் பிரயாணம் செய்யும் தொலைவில் உள்ளது. மலையின் மேல் செல்ல முப்பது மைல் நீளமுள்ள ரஸ்தா அமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு விசித்திரமான ஸ்தலமாகும். நான் புறப்படும் ஸ்தலத்தில் உஷ்ணம் 80 அல்லது 90 டிகிரிகள் இருக்கும். ஆனால் நான் முப்பது நிமிடம் பிரயாணம் செய்து அந்த மலையின் உச்சியை அடையும்போது அங்கு 8 அடி ஆழத்திற்கு பனி உறைந்திருக்கும். சமீபத்தில் பீனிக்ஸ் பட்டிணத்தில் உஷ்ணம் 28 டிகிரிகள் இருந்தது. (நீச்சல் குளத்தை அதன் காரணமாக உஷ்ணப்படுத்த வேண்டியிருந்தது). அங்கிருந்து நான் நாற்பது நிமிடங்கள் மோட்டார் பிரயாணம் செய்து ப்ளாட் ஸ்டாஃப் (Flag Staff) என்னும் இடத்தை அடைந்தவுடன் அங்கு உஷ்ணம் பூஜ்யத்திக்குக் கீழ் நாற்பது டிகிரிகள் இருந்தது. அதுதான் பாலைவனத் திற்கும், குளிர் பிரதேசங்களுக்குமுள்ள ஓர் வித்தியாசம். ஆனால், ஆஸ்துமாவினால் அவதியுறுவோர்க்கு பாலைவன சீதோஷ்ணம் ஆரோக்கியமுள்ளது. நான் அந்த மலைக்கு (கான்யானுக்கு) சென்று, என்னால் ஏற முடிந்த அளவுக்கு நான் உயரே சென்றேன். அங்கு உட்கார்ந்து கொண்டு என் அமைதி குலைதலுக்கு காரணமென்ன என்று ஆண்டவரை வினவினேன். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. நான் அவ்வாறு ஜெபித்துக் கொண்டிருக்கும் சமயம், ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. நான் உங்களிடம் உண்மையைக் கூற விரும்புகிறேன். ஒருக்கால் நான் அங்கு உறங்கியிருக்கலாம். அல்லது நினைவு இழந்த நிலையில் (trance) நான் இருந்திருக்கக்கூடும். அல்லது ஒரு தரிசனமாக இருந்திருக்கலாம். அது ஒரு தரிசனம் தான் என்று நான் நம்ப வகையுண்டு. நான் என்கைகளை உயர்த்திய வண்ணம், `ஆண்டவரே, அந்த வெடியின் அர்த்தம் என்ன? ஒரு கூர் நுனி கோபுரத்தின் (Pyramid) அமைப்பில் ஏழு தூதர்கள் இறங்கி வந்து என்னை தூக்கிச் சென்று கிழக்கு திசையை நோக்கி சென்றதன் அர்த்தம் என்ன?’ என்று கேட்டேன். நான் நின்றவாறு ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு காரியம் சம்பவித்தது. என் கையில் ஏதோ ஒன்று விழுந்தது. (நீங்கள் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாதிருந்தால், இது மிகவும் விசித்திரமாகத் தென்படும்). நான் பார்த்த போது, அது ஒரு பட்டயம். அதன் கைப்பிடி நான் இதுவரை கண்டிராத சிறந்த அழகுள்ள முத்துக்களால் உண்டாக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு (guard) (அது எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். வாள் சண்டையிடும் போது, குத்தப்படாதிருக்க, கைகளை அங்கு வைத்துக் கொள்வது வழக்கம்) பொன்னினால் செய்யப்பட்டிருந்தது, கத்தியின் பாகம் அதிக நீளமில்லாமல் காணப்பட்டது. ஆனால் அது பளபளப்பான வெள்ளியினால் செய்யப்பட்டு மிகக் கூர்மையாயிருந்தது. அதுவரை நான் கண்டிராத அளவுக்கு அழகுள்ளதாக அது விளங்கினது. என் கையில் அது சரியாகப் பொருந்தினது. நான் அதைப் பிடித்துக் கொண்டே, `எவ்வளவு அழகாயிருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டேன். பட்டயத்தைக் கண்டாலே எனக்கு அதிக பயம். பட்டயம் உபயோகித்த காலங்களில் நான் இல்லாமல் இருந்ததற்கு நான் மகிழ்ச்சியடைந்ததுண்டு. `இந்த பட்டயத்தை வைத்துக் கொண்டுநான் என்ன செய்வேன்?’ என்று நான் சிந்தனை பண்ணினேன். நான் அதைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் போது, எங்கிருந்தோ ஒரு சத்தம் தோன்றி, `அது ராஜாவின் பட்டயம்’ என்றுரைத்தது. அதன் பின்பு அது என்னைவிட்டு எடுக்கப்பட்டது. அதன் அர்த்தம் என்னவென்று நான் ஆலோசித்தேன். அந்த சத்தம் `அது ஒரு ராஜாவின் பட்டயம்’ என்று சொல்லியிருந்தால், நான் அப்பொழுது புரிந்து கொண்டிருப்பேன். ஆனால் அது `ராஜாவின் பட்டயம்’ (The King’s sword) என்று கூறினது `ராஜா’ என்று திண்ணமாக அழைக்கப்படுபவர் ஒருவர்தான் உண்டு. அவர் தான் தேவன். அவருடைய பட்டயம் இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாய் இருக்கிறது. `நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...’ வாள் போரைக் குறித்த எந்த விதி முறையும் எனக்குத் தெரியாது. ஆனால் சண்டையிடும் இருவரும், ஒருவர் பட்டயத்தின் மேல் மற்றொருவரின் பட்டயம் அமரும் நிலைக்கு (Lock) வரும்போது, அதன் பிறகு வெற்றி போரிடுபவரின் பலத்தைச் சார்ந்தது. ஏனெனில் பட்டயங்களின் முனைகள் அந்நிலையில் ஒருவரோடொருவரின் இருதயத்தை நோக்கியிருக்கும். அதிக பலம் பொருந்தியவன் பட்டயத்தை எதிரியின் இருதயத்தில் ஊடுருவச் செய்வான். அவ்வாறே தேவனுடைய வார்த்தை பட்டயமாயிருப்பினும், அதை எதிரியின் இருதயத்தில் பாயச் செய்ய `பலத்த விசுவாசம்’ என்னும் பலமுள்ள கை தேவைப்படுகிறது. ஆகவே, நான் அவரிடத்தில் பெற்றதையெல்லாம் உங்களிடம் கூறிவிட்டேன். நமது ஆண்டவரும், பிதாவினிடத்திலிருந்து அவர் பெற்ற அனைத்தையும் ஒன்றையும் மறைக்காமல் எடுத்துக் கூறியிருக்கிறார். நானும் அவ்வப்போது எனக்கு வெளிப்படும் போது, உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லுவேன். நீங்கள் ஞானமுள்ளவர்களாய், ஜெபம் செய்து கொண்டிருந்தால் வெகு விரையில் முக்கியமான ஒன்றை புரிந்து கொள்வீர்கள். அது கூடிய சீக்கிரத்தில் வெளிப்படும். நாமெல்லாரும் வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம். நாளை இரவு `முதலாவது முத்திரை’. அது நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்தவர்கள் திறந்த நான்கு முத்திரைகளில் முதல் முத்திரையாகும். இந்த நான்கு முத்திரைகளும் பூமியைத் தாக்குகின்றன. திங்கள், செவ்வாய், புதன், வியாழன் இந்நாட்களுக்குள் இந்த நான்கு முத்திரைகளைக் குறித்து செய்தி கொடுக்கலாம். அதன் பின்னர், ஐந்தாம், ஆறாம், ஏழாம் முத்திரைகள். அவை சற்று நீண்டதாயிருக்கும். அது நீங்கள் இளைப்பாறுவதற்கு சற்று ஏதுவாயிருக்கும். ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு கூட்டங்களைத் தொடங்க முடிவு செய்திருக்கிறோம். நான் சரியாக 7.30 மணிக்கு மேடைக்கு வருவேன். அப்பொழுது நள்ளிரவில் நாம் கூட்டத்தை முடித்து வெளியேறலாம். இன்று காலை நான் கொடுக்கப்பட்ட சமயத்திற்கு மேல் ஒரு மணி நேரம் அதிகமாகப் பிரசங்கித்துவிட்டேன். நான் அவ்விதம் செய்யவேண்டு மென்று நினைக்கவில்லை. இந்த முத்திரைகளின் இரகசியத்தை நான் இதுவரை அறியேன். அதை எனக்கு வெளிப்படுத்த நான் தேவன் பேரில் சார்ந்திருக்கிறேன். தேவன் கிருபையாய் இவ்வாரம் உதவி செய்வார் என்று நம்பி..... நீங்கள் அதை ஆழமாய் புரிந்து கொண்டால்..... நான் தரிசனத்தில் காண்பவைகளை, தேவன் அனுமதித்தாலன்றி, என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. `ஒரு வீட்டிற்கு நீங்கள் செல்லுங்கள். அங்கு ஒரு தொப்பியைக் காண்பீர்கள். இந்தக் குழந்தையை அவ்விடத்தில் கிடத்தினாலன்றி அது சுகம் பெறாது’ என்றெல்லாம் நான் சொல்வதை நீங்கள் எத்தனையோ முறை கேட்டதுண்டு அல்லவா? நான் அவர்களிடம் அவ்வாறு கூற முடியாது. நானாகவும் அந்தக் குழந்தையைக் தூக்கி சென்று அந்த ஸ்தலத்தில் கிடத்த முடியாது. அக்குழந்தை எவ்வாறாயினும் அந்த இடத்தில் சேர்ந்தாக வேண்டும். அப்பொழுது அக்குழந்தை சுகம் பெறுவதற்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கும். அந்த சமயத்தில்தான் நான் அக்குழந்தையைக் குறித்து கண்ட தரிசனத்தை வெளிப்படுத்த முடியும். ஆகையால், நீங்கள் ஜெபசிந்தையில் இருங்கள். நாம் வேதத்தைப் படிக்கும் முன்பு தலை வணங்கி அவரிடம் பேசுவோம். `கர்த்தராகிய இயேசுவே, நாங்கள் முற்றிலும் குறையுள்ளவர்களாயிருக் கிறோம். இந்த பரிசுத்தமான நேரத்தில் உம்மிடம் அனுமதி பெறாமல், இந்த பரிசுத்த வேத புத்தகத்தைப் படித்து தன் அர்த்தத்தை விளக்க நாங்கள் முயற்சி செய்யமாட்டோம். இந்த புத்தகத்தின் அர்த்தத்தை ஒருவர் மாத்திரமே வெளிப்படுத்த முடியும். அவர் இப்பொழுது முன் வந்து உம்முடைய ஊழியக்காரரின் பலவீனமான முயற்சிகளை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம். வார்த்தை புறப்பட்டுச் செல்லும் போது அதனை ஆசீர்வதியும். அது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் செல்லட்டும். நீதியின் மேல் பசிதாகம் கொண்டு தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ள விரும்பும் யாவர் மேலும் அதுவிழுந்து அதன் பலனைக் கொடுக்கட்டும். நாங்கள் கேட்பவைகளை அளியும், ஆண்டவரே, எல்லாத்துதியும் உமக்கே உரியது. ஆத்துமபசி, தாகம் கொண்டவர்கள் இன்றிரவு தேவனுடைய வார்த்தையிலிருந்து ஆகாரமும் தண்ணீரும் பெற்றுக் கொள்ளட்டும். இவை யாவையும் வெளிப்பாட்டை அளிக்கவல்ல கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்’. நாம் இப்பொழுது வெளிப்படுத்தின விசேஷம் 5-ம் அதிகாரத்தை தியானிக்கப் போகிறோம். இது ஏழு முத்திரைகளல்ல. அது ஏழு சபைகளின் காலங்களுக்கும் ஏழு முத்திரைகளுக்கும் இடையேயுள்ள பிளவாகும். வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்தில் சபை எடுக்கப்பட்ட பின்னர், நடைபெறவிருக்கும் சிலசம்பவங்கள் கூறப்பட்டுள்ளன. சபையானது வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரம் வரை திரும்பி வருவதில்லை. ஆகையால் சபையானது உபத்திரவ காலத்தில் பங்கு கொள்வதில்லை. இந்த கருத்து, நான் இதுவரை அறிந்துள்ள எல்லா போதகர்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு முரண்பட்டது. நான் அவர்களுடன் இணங்காமல் இருக்க வேண்டும் என்பதற்கல்ல, நான் உங்கள் சகோதரனாய் இருக்க விரும்புகிறேன். ஆதலால் நான் உண்மையென்று திண்ணமாக அறிந்திருப்பதை உங்களுக்குப் போதித்தாக வேண்டும். சபையானது உபத்திரவ காலத்திற்கு முன் எடுக்கப்படாவிட்டால், மற்றைய சம்பவங்களை அதனுடன் என்னால் பொருத்த இயலவில்லை. சபை உபத்திரவக் காலத்துக்கு முன்பு செல்கின்றதோ, அல்லது பின்பு செல்கின்றதோ, எவ்வாறாயினும் நான் அதனுடன் செல்ல விரும்புகிறேன். அதுதான் முக்கியமான காரியமாகும். இப்படிப்பட்ட காரியங்களை, கல்வியறிவு இல்லாத நான், பழைய ஏற்பாட்டின் சம்பவங்களை முன்னடையாளமாகக் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கிறேன். பழைய ஏற்பாட்டில் என்ன நிகழ்ந்தது என்று நாம் பார்ப்போம். அது புதிய ஏற்பாட்டில் நிகழும் சம்பவத்திற்கு நிழலாக அல்லது முன்னடையாளமாக அமைந்துள்ளது. நோவா உபத்திரவம் உண்டாவதற்கு முன்னே பேழைக்குள் சென்றான். அது ஓர் முன்னடையாளம். ஆனால் நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் முன்பே ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். ஒரு சிறிய உபத்திரவம் கூட தொடங்குவதற்கு முன்பே லோத்து சோதோமிலிருந்து வெளியேற்றப்பட்டான். ஆபிரகாம் உபத்திரவ காலத்துடன் எப்பொழுதுமே சம்பந்தப்படவில்லை... முன்னடையாளம். நாம் இப்பொழுது முதல் மூன்று வசனங்களைப் படிப்போம். அன்றியும், உள்ளும் புறமும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அந்த புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்த புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். (நீங்கள் அபாத்திரத்தைக் குறித்து பேசுகின்றீர்கள். இங்கு எந்த மனிதனும் அதைப் பார்க்கக்கூட பாத்திரவானாய் இல்லை - எந்த இடத்திலும் இல்லை). அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம், இதோ யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். அப்பொழுது இதோ அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன். அது ஏழு கொம்புகளையும், ஏழு கண்களையும் உடையதாயிருந்தது. அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப் படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்த வருடைய வலது கரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். நாம் 7ம் வசனத்துடன் நிறுத்துவோம். ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட இந்த புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஏழு இடி முழக்கங்கள் முழங்கவிருக்கும் சமயத்தில் வெளிப்படுகின்றது. நீங்கள் சரிவர புரிந்து கொள்ள நாம் 10ம் அதிகாரத்தைப் படிப்போம். இது கடைசிக் காலத்தைக் குறிக்கிறது, கேளுங்கள்: பின்பு பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கி வரக் கண்டேன், மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது. அவனுடைய சிரசின் மேல் வானவில்லிருந்தது.... நீங்கள் நன்றாக கவனித்தால், அது கிறிஸ்து என்று விளங்கும். அவர் பழைய ஏற்பாட்டில் `உடன்படிக்கையின் தூதன்’ என அழைக்கப்படுகிறார், அவர் யூதர்களிடம் நேரடியாக வருகிறார். ஏனெனில் சபை அப்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது. ..... அவனுடைய முகம் சூரியனைப் போலவும், அவனுடைய கால்கள் அக்கனி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது. வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் `தூதன்’ என்று யார் அழைக்கப்படுகிறது என்பது நினைவிருக்கிறதா? அங்கு `தூதன்’ என்னும் பதம் இவ்வுலகில் தேவனுடைய செய்தியைக் கொண்டுவரும் ஒரு மனிதனைக் குறிக்கிறது. இப்பொழுது அவர் இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தூதனாக வருகிறார். சபை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது.... அல்லது அது எடுக்கப்படவிருக்கிறது. அவர் தமது சபைக்கு வருகிறார். இப்பொழுது கவனியுங்கள். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது..... 5ம் அதிகாரத்தில் அந்த புஸ்தகம் மூடப்பட்டு முத்தரிக்கப்பட்டிருந்தது. இங்கு அது திறக்கப்பட்டுள்ளது. அது திறக்கப்பட்டுவிட்டது. அவர் கையிலிருந்த சிறு புஸ்தகம் திறக்கப்பட்டு விட்டது. நான் மறுபடியும் அந்த வசனத்தை வாசிக்கட்டும். திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவர் கையில் இருந்தது. தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும், தனது இடது பாதத்தைப் பூமியின் மேலும் வைத்து, சிங்கம் கெர்ச்சிக்கிறது போல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்..... (அவர் யூதா கோத்திரத்தின் சிங்கம் என்பதனை நாமறிவோம்; 5ம் அதிகாரத்தில் அவர் ஆட்டுக்குட்டியாக தோற்றமளிக்கிறார், இங்கே அவர் சிங்கம்). ... அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. (அவன் கண்டவைகளை எழுத வேண்டுமென்று யோவானுக்குக் கட்டளைக் கொடுக்கப்பட்டிருந்தது. ஆகையால் அப்போஸ்தலனும் தீர்க்கதரிசியுமாகிய அவன் இதை எழுதுவதற்குகெனஎழுதுகோலை எடுக்கிறான்). அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரை போடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். (அவை என்ன என்பது நமக்குத் தெரியாது. அவை இனிமேல் வெளிப்பட வேண்டும். அந்த இடி முழக்கங்கள் சொன்னவை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்படவில்லை). சமுத்திரத்தின் மேலும் பூமியின் மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி (கவனியுங்கள்) இனி காலம் செல்லாது,ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக் காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும் என்று வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர் மேல் ஆணையிட்டுச் சொன்னான். ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தில் அடங்கியுள்ள இரகசியம் ஏழாம் சபையின் தூதனின் செய்தி முழங்கும் போது வெளிப்படும். ஏழாம் தூதன் எக்காளம் ஊதத் தொடங்குகிறான். அந்த செய்திகள் தான் இப்பொழுது ஒலிநாடாக்களிலும் புத்தக வடிவிலும் உள்ளன. அந்த செய்தி முழங்கும் தொடக்கத்தில், தேவரகசியம் நிறைவேறவேண்டும். ஏழாம் தூதனின் செய்தி முழங்குவதற்கு முன்பு, புத்தகத்தில் அடங்கியுள்ள தேவரகசியம் வெளிப்படுவதில்லை என்பதனை கவனியுங்கள். இந்த குறிப்புகள் யாவும் நாம் முத்திரைகளைப் பற்றி தியானிக்கும் போது முக்கியமானதாய் இருக்கும். இவையெல்லாம் ஒன்றோடொன்று பிணைய வேண்டும். எழுதப்பட்ட அந்த இரகசியத்தை எந்த மனிதனும் அறியமாட்டான். தேவன் மாத்திரமே, இயேசு கிறிஸ்துவே அதை அறிவார். அது இரகசியமடங்கிய ஒரு புத்தகம். அது மீட்பின் புத்தகம் (அதைப் பற்றி இன்னும் சற்று நேரத்தில் சிந்திப்போம்). இதுவரை அந்த மீட்பின் புத்தகத்தை யாரும் முற்றிலுமாக புரிந்து கொள்ள இயலவில்லை. முதல் ஆறு சபையின் காலங்களில் அது ஆராயப்பட்டது. ஆனால், ஏழாம் தூதன் முழங்கும்போது, இது வரை அக்காலத்தவர் விவரிக்க முடியாதிருந்த இரகசியங்கள் வெளிப்படும். அந்த இரகசியங்களின் அர்த்தம் நேரடியாக தேவனிடத்திலிருந்து அவருடைய வார்த்தையாக புறப்பட்டு வந்து,அதன் விளைவாக தேவ ரகசியம் வெளிப்படும். அப்பொழுது இது வரை வெளிப்படாத, தேவத்துவம், சர்ப்பத்தின் வித்து போன்ற சத்தியங்கள் வெளிப்படும். நான் கதை கட்டிக் கூறுவதாக எண்ண வேண்டாம். அவையெல்லாம்`கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறதாவது’. ஏழாம் தூதனின் செய்தி முழங்கும்போது, தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலமாய் உரைத்த தேவ ரகசியம் நிறைவேறும் என்பதை நான் வேத புத்தகத்திலிருந்து உங்களுக்கு படித்துக் காண்பித்தேன். (இந்த தீர்க்கதரிசிகள் தாம் தேவனுடைய வார்த்தையை எழுதினர்) ஏழாம் சபையின் காலமாகிய கடைசி சபையின் காலத்தில் அதற்கு முன்பிருந்த சபையின் காலங்களில் ஆராயப்பட்டு விவரிக்கப்படாமல் விடப்பட்ட இரகசியங்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்படும். முத்திரைகள் உடைக்கப்பட்டு, தேவ ரகசியம் வெளிப்படவேண்டிய சமயத்தில், பலமுள்ள தூதன், கிறிஸ்து, கீழே இறங்கி வந்து, தம் பாதங்களில் ஒன்றை சமுத்திரத்தின் மேலும் மற்றொன்றை பூமியின் மேலும் வைக்கிறார். அவருடைய சிரசின் மேல் வானவில் இருந்தது. பலமுள்ள தூதன் பூமிக்கு இறங்கி வரும் போது இந்த ஏழாம் தூதன் பூமியில் ஏற்கனவே இருக்கிறான் என்பது நினைவிருக்கட்டும். யோவான் செய்தியைக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது, அதே சமயத்தில் மேசியா வந்ததற்கு இது ஒத்திருக்கிறது, இயேசுவை அறிமுகப்படுத்துவற்காக தான் குறிக்கப்பட்டவன் என்பதை யோவான் அறிந்திருந்தபடியால், அவன் அவரைக் காண்பான் என்பது அவனுக்கு நன்றாக தெரியும். மல்கியா 4ம் அதிகாரத்தில் எழுதப்பட்ட வாக்கியங்களின் மூலம் யோவானைப் போன்ற ஒரு எலியா கடைசிக் காலத்தில் இருக்க வேண்டுமென்றும், தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வருமென்றும், அவன் பரிசுத்த ஆவியின் மூலம் தேவரகசியம் அனைத்தையும் வெளிப்படுத்தி, பிள்ளைகளின் விசுவாசத்தை அப்போஸ்தல பிதாக்களின் விசுவாசத்திற்கு திருப்புவான் என்றும் நாமறிவோம். ஸ்தாபனங்களின் காலத்தில் ஆராயப்பட்ட தேவ ரகசியம் யாவையும் அவன் வெளிப்படுத்துவான். அங்ஙனம்தான் வேதம் கூறுகிறது. வேதம் என்ன கூறுகிறதோ அதற்கு மாத்திரமே நான் பொறுப்பு. ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தில் மீட்பின் இரகசியம் அடங்கியுள்ளது. அது தேவனிடத்திலிருந்து வந்த மீட்பின் புத்தகம். ஏழாம் சபையின் தூதன் செய்தியை முழங்கும் சமயம், தேவ ரகசியம் நிறைவேறும். ஏழாம் சபையின் தூதன் பூமியில் இருக்கிறான். வேறொரு தூதன் பலமுள்ள தூதன் வானத்திலிருந்து இறங்கி வருகிறான். அவன் சிரசின்மேல் வானவில் இருந்தது உடன்படிக்கைக்கு அடையாளம். அது கிறிஸ்துவாகத்தான் இருக்கமுடியும். வெளிப்படுத்தின விசேஷம் முதலாம் அதிகாரத்தில் அவர் ஏழு பொன் குத்து விளக்குகளின் மத்தியில் உலாவி சுற்றிலும் வானவில் அமைந்திருந்தது, பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் அவர் ஒப்பாயிருந்த காட்சியைப் போன்றே இந்தக் காட்சியிலும் அவர் சிரசின் மேல் வானவில்லைக் கொண்டவராய் வருகிறார். தேவ ரகசியம் நிறைவேறி, முத்திரைகள் உடைக்கப்பட்டு, `இனி காலம் செல்லாது’ என்று சொல்லப்பட வேண்டிய சமயத்தில் அவர் 10ம் அதிகாரத்தில் கூறப்பட்ட வண்ணம் இறங்கி வருகிறார். அவர் இறங்கி வந்து, `ஏழாம் தூதன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்’ என்கிறார். ஆகையால் அந்த தூதன் பிரத்தியட்சமாவதற்கு சமயம் வந்துவிட்டது. நாம் மிக அருகாமையில் இருக்கிறோம். நான் கூறுவது சரி. அந்த ஏழு முத்திரைகள் அந்த புத்தகத்திலுள்ள இரகசியத்தை முத்தரித்திருக்கின்றன. அந்த இரகசியம் என்னவென்பதை நாம் நிச்சயமாக அறியும் வரை, அது என்னவாய் இருக்குமென்று நாம் ஊகிக்கத் தான் முடியும். இன்று காலை, `தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார்’ என்ற செய்தியில் நான் கூறிய படி, ஒரு காரியம் முற்றிலுமாக, உண்மையாக பரிசுத்த ஆவியானவரால் வெளிப்படுத்தப்பட்டு, அது உறுதிப்பட்டாலன்றி, நாம் அதை இழந்து போவோம். ஒரு தீர்க்கதரிசி ஒரு காரியத்தை உரைத்து, அதை தேவன் சரியென்று நிரூபிக்காவிடில், அந்தக் காரியத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து அதை மறந்துவிட வேண்டும், தேவனுடைய பிள்ளைகள் இந்த விஷயத்தில் கவனமாயிருப்பர். ஏழு முத்திரைகள் ஏழு இடிமுழக்கங்களின்று வித்தியாசப்பட்டவை. ஏழாம் சபையின் தூதன் செய்தியளிக்கும் வரை அந்த முத்திரைகள் திறக்கப்படுவதில்லை. ஏழாம் தூதன் முழங்கும் அச்செய்தியில் தேவனுடைய வெளிப்பாடு பரிபூரணப்பட்டிருக்கும்.தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியம்.தேவனுடைய வார்த்தை அவ்விதமாகவே கூறுகிறது. இந்த சமயத்தில் தான் தேவரகசியம் நிறைவேற வேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரத்தில் அது முத்தரிக்கப்பட்டதாய் உள்ளது. 10ம் அதிகாரத்தில் அது திறக்கப்படுகிறது. அப்புத்தகம் எவ்வாறு திறக்கப்பட்டதென்று வேதம் எடுத்துரைப்பதை நாம் இப்பொழுது கவனிப்போம். ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை வாங்கி அதன் முத்திரைகளை உடைத்து, அப்புத்தகத்தைத் திறக்கும் வரை அதிலுள்ள இரகசியம் வெளியரங்கமாவதில்லை. ஆட்டுக்குட்டியானவர் தாம் அந்த புத்தகத்தை வாங்க வேண்டும். ஏனெனில் அது அவருடையது. பரலோகத்திலுள்ள ஒருவரும், பூமியிலுள்ள ஒருவரும் போப் ஆண்டவர், அத்தியட்சகர், கார்டினல், அரசாங்க போதகர் அல்லது மற்றவர் அம்முத்திரைகளை உடைக்க அல்லது புத்தகத்திலுள்ள இரகசியத்தை வெளிப்படுத்த முடியாது. ஆட்டுக்குட்டியானவரால் மாத்திரமே அது முடியும். நாம் அப்புத்தகத்தின் இரகசியத்தை ஆராய்ந்து, ஊகித்து, அதைக் கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறி அது என்னவாயிருக்கும் என்றெல்லாம் வியந்ததுண்டு, அதன் காரணமாகத் தான் நாம் இதைக் குறித்து குழப்படைந்திருக்கிறோம், ஆனால் ஆட்டுக்குட்டியானவர் அந்த மீட்பின் புத்தகத்தை முற்றிலுமாக திறப்பார் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தம் நமக்குண்டு. நாம் வாழும் இந்த கடைசி நாட்களில் ஆட்டுக்குட்டியானவர் அந்த முத்திரைகளை உடைப்பார், ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைக்கும் வரை அதனுள் இருக்கும் இரகசியம் வெளிப்படாது. ஏனெனில் அப்புத்தகம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்தில் உள்ளது என்பதனை நினைவுகூரவும், ஆட்டுக் குட்டியானவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரிடம் வந்து, அவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்குகிறார். அது ஆழமான இரகசியம். பரிசுத்த ஆவியின் உதவியினால் அதை நாம் அறிந்து கொள்ள முயல்வோம். நாம் அவர் பேரில் சார்ந்திருக்கிறோம். சமயம் வழுகிவிட்ட கடைசி காலத்தில் அதன் இரகசியம் வெளிப்படும். அந்தப் புத்தகத்தை வியாக்கியானம் செய்ய எந்த ஸ்தாபனத்திற்கும் உரிமையில்லை. ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை விளக்க முடியும். அவர் மாத்திரமே அதைக் குறித்து பேச முடியும். அவர் மாத்திரமே வார்த்தையை உயிர்ப்பித்து அதன் அர்த்தத்தை வெளிப்படுத்தமுடியும். சபையின் காலங்களும் ஸ்தாபனங்களின் காலங்களும் முடிவு பெற்ற பின்னரே அந்த இரகசியம் வெளிப்படும். ஸ்தாபனங்கள் ஒரு சிறிய போதகத்iப் பற்றிக் கொண்டு, ஒரு பக்கம் சென்று, இது தான் முக்கியம் என்று கூறுகின்றன. இவ்விதமாக ஒவ்வொரு ஸ்தாபனமும் ஒரு சிறிய போதகத்தின் மேல் ஸ்தாபனத்தைக் கட்டிக் கொண்டதன் விளைவாக, நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்கள் இன்று உள்ளன. என்றாலும் அவைகளிலெல்லாம் குழப்பமே காணப்படுகின்றது. ஜனங்கள் சத்தியமாவது என்ன? என்று பிரமிப்படைகின்றனர். அதுதான் இன்றைய ஸ்தாபனங்களின் நிலையாகும். ஆனால், இவைகளின் காலம் முடிவு பெற்றவுடன், ஏழாம் தூதனுடைய சத்தம் முழங்குமென்றும், அவ்வமயம் இப்புத்தகத்தின் அர்த்தம் வெளிப்படுமென்றும் தேவன் வாக்களித்துள்ளார். `ஸ்தாபனங்களின் அங்கத்தினர் ரட்சிக்கப்படவில்லை’ என்று நீங்கள் கூறவேண்டாம். ஆனால் அவர்கள் புரிந்து கொள்ள முடியாத இரகசியங்கள் உதாரணமாக கடவுள் மூவராயிருந்து எங்ஙனம் ஒருவராயிருக்கமுடியும்? வேதம் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க சொல்லி அதே சமயத்தில் எப்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்க சொல்லும்? ஏவாள் ஒரு கனியைத் தின்பதனால் முழு உலகத்தையும் எவ்வாறு சேதப்படுத்த முடிந்தது போன்ற இரகசியங்கள் இந்த கடைசி காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. ஐரினேயஸ், பரி, மார்டின், பாலி கார்ப், லூதர், வெஸ்லி போன்ற போர் வீரர்கள் இவ்வுலகத்தில் தோன்றி வெளிச்சம் பிரகாசிக்கச் செய்தனர். ஆனால் அவர்கள் அநேக காரியங்களை வெளிப்படுத்த முடியாமல் இருளிலே விட்டுவிட்டனர். லூதரின் காலத்தைப் போன்று பெந்தேகோஸ்தே காலமும் தோன்றியது. அவர்கள் போதித்தது சரியல்ல என்று சொல்லாதீர்கள். ஆனால் அவர்களால் விவரிக்க முடியாத சிலவற்றை அவர்கள் விட்டு விட்டனர். இவையெல்லாவற்றையும் வெளிப்படுத்துவதற்கு அப்பொழுது முத்திரைகள் உடைக்கப்படவில்லை. ஆனால் இந்த கடைசி காலத்தில் ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைத்து, எல்லா இரகசியங்களும் வெளிப்பட்டு சபைக்கு அறிவிக்கப்படவேண்டும். அதன் பின்பு சமயமிராது. எவ்வளவு அதிசயம், பாருங்கள்! மீட்பின் புத்தகம் முன் செல்லுகிறது. 1,44,000 பேர் எவ்வித மீட்புக்குள் கொண்டு வரப்படுகின்றனர் என்று நாம் பின்னர் பார்ப்போம். அவர்கள் யூதர்கள். இப்பொழுது நாம் சற்று படிப்போம். என் நினைவில் சில வேத வாக்கியங்கள் வருகின்றன. அவைகளை நாம் படிக்க வேண்டும். அனேகர் புத்தகங்களில் வேத வாக்கியங்களை குறிக்கிறதையும், வேத புத்தகத்தில் கோடிடுவதையும் நான் காண்கின்றேன். அது மிகவும் நல்லது. நீங்கள் வீடுகளில் சென்று குறிக்கப்பட்ட வேத வாக்கியங்களைப் படிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நீங்கள் தனியாக அவைகளைப் படித்தால், நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். அவைகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள தேவனுடைய ஒத்தாசையைக் கோருங்கள், நான் குறிப்பில் எழுதியுள்ள இந்த வசனத்தைப் படிக்கலாம்: எபேசியர் 1:13-14. நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு விசுவாசிகளான போது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார். பரிசுத்த ஆவியே முத்திரை என்பதை இங்கு காணலாம். ஒரு முத்திரை எதற்கு அடையாளமாயுள்ளது? முடிவு பெற்ற ஒரு கிரியைக்கு, ஒரு நபருக்கு பரிசுத்த ஆவி முத்திரையாயிருக்கிறது. அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றவுடன், அவன் புலம்பும் காலம் முடிவடைகிறது. ஏனெனில் அது முடிவு பெற்ற ஒரு கிரியையாகும். நான் ஒரு போக்குவரத்து நிர்வாகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தின்பண்டங்களை டப்பாக்களில் அடைக்கும் தொழிற்சாலையிலிருந்து (Canning Factory) வரும் டப்பாக்களை லாரிகளில் ஏற்றுவது வழக்கம். அந்த வண்டியை நாங்கள் மூடிமுத் திரையிடும் முன்பு, டப்பாக்கள் சரிவர அடுக்கப்பட்டுள்ளனவா என்று சோதனையாளர் பார்வையிடுவார். இல்லையெனில், அவை ஒன்றின் மேல் ஒன்று மோதி உடைந்து, டப்பாக்களிலுள்ள பொருட்கள் சிதறிவிடும், அவ்வாறு நேர்ந்தால் போக்குவரத்து நிர்வாகம் தான் அதற்கு பொறுப்பு. சோதனையாளர் பரிசோதிக்கும் போது, டப்பாக்கள் சரிவர அடுக்கப்படவில்லையென்று கண்டால், நாங்கள் எல்லாவற்றையும் கீழே இறக்கி, அவருக்குத் திருப்தியுண்டாகும் வரை மறுபடியும் அடுக்க வேண்டும். அவருக்குத் திருப்தி ஏற்பட்டபிறகு, அவர் கதவை மூடி அதற்கு முத்திரை வைப்பார். வண்டி சேரவேண்டிய இடத்தை அடையும் வரை யாரும் அந்த முத்திரையை உடைக்கக் கூடாது. அதை தான் பரிசுத்த ஆவியானவர் செய்து கொண்டு வருகிறார். அவர் பார்வையிடுகிறார். ஆகையால் தான் `நான் அன்னிய பாஷை பேசினேன். நான் கூக்குரலிட்டு நடனமாடினேன்’ என்று சொல்வதில் உபயோகமில்லை. பரிசுத்த ஆவியானவர், தாம் திருப்தியடையும் வரை ஒரு மனிதனை பார்வையிடுகிறார். எல்லாம் சரிவர அமைந்துள்ளது என்று அவர் திருப்தி கொண்டால், அவன் சேரவேண்டிய நித்தியத்திற்கென்று முத்திரிக்கப்படுகிறான். அதன் பிறகு அந்த முத்திரையையாராலும் உடைக்க முடியாது. அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். ஏபே 4:30 `மீட்பு’ என்னும் வார்த்தையைக் கவனிக்கவும். மீட்பின் புத்தகத்தின் இரகசியம் வெளிப்பட்டு மீட்பர் வந்து தமக்குச் சொந்தமானவர்களைக் கொண்டு செல்லும் நாள் வரைக்கும் பரிசுத்த ஆவியை நீங்கள் துக்கப்படுத்தாதிருங்கள். தேவனுக்குப் பிரீதியாயுள்ளவைகளை மாத்திரம் செய்யுங்கள். ஏனெனில் இப்பொழுது அந்த புத்தகம் முத்திரிக்கப்பட்டுள்ளது. நீங்களும் முத்திரிக்கப்பட்டிருக்கிறீர்கள். பரிசுத்த ஆவிதான் அந்த முத்திரை. முத்திரை முடிவு பெற்ற ஒரு செயலைக் குறிக்கிறது. (நான் அகராதியிலிருந்து இந்த அர்த்தத்தை அறிந்தேன்). ஏழாம் முத்திரை உடைக்கப்படும் போது, முத்திரைகளால் முத்திரிக்கப்பட்ட தேவரகசியம் வெளிப்படும். (டப்பாக்கள் ஏற்றப்பட்ட) லாரி வண்டிக்குள் என்ன இருக்கிறது என்று அது சேரவேண்டிய இடத்தை அடைந்தவுடன் அங்கு பணி புரிபவர் ஊகிக்கத் தலைபடலாம். ஆனால் அந்த முத்திரையை உடைத்து அதன் கதவைத் திறந்தவுடனே அதற்குள் இருப்பவைகளை நாம் கண்கூடாகக் காணலாம். அது கடைசி காலத்தில் மாத்திரமே நடைபெறும். முத்திரை என்பது சொந்தத்தையும் குறிக்கிறது; முத்திரையின் மேல் ஒரு அடையாளம் காணப்படும். முத்திரிக்கப்பட்டது யாருக்கு சொந்தம் என்பதனை அது காண்பிக்கிறது. நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டு, பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்பட்டால், நாம் இவ்வுலகத்தையோ அல்லது இவ்வுலகத்துடன் சம்பந்தப்பட்டவைகளையோ சார்ந்தவரல்ல. நாம் தேவனுக்குச் சொந்தமானவர்களாயிருக்கிறோம். மேலும், முத்திரை பாதுகாப்புக்கு அடையாளமாயிருக்கிறது. நித்தியப் பாதுகாப்பில் (External Security) நம்பிக்கை கொள்ளாதவரே, ஒரு முத்திரை முத்தரிக்கப்பட்டு, அது சேரவேண்டிய இடத்தை அடையும் வரை பாதுகாக்கப்படும் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. அந்த முத்திரையை உடைக்க முயலுபவனுக்கு ஐயோ! பரிசுத்த ஆவியின் முத்திரை ஒருக்காலும் உடைக்கப்பட முடியாது. `பிசாசு என்னை இவ்விதம் செய்யத் தூண்டினான்’ என்று ஜனங்கள் என்னிடம் கூறுவதுண்டு. பிசாசு உங்களைத் தூண்டவில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படவில்லையென்றுதான் அர்த்தம். ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படும்போது, அவன் வெளியே சென்று, மறுபடியும் உள்ளே வராமல் தடுக்கப்படுகிறான். நீங்கள் தவறு செய்யும் போது, நீங்கள் தான் அவனை நாடிச் சென்றீர்கள். உங்களுக்குள் அவன் வர வேண்டுமானால், நீங்கள் கடைப்பிடித்த முறைகளை அவனும் கடைப்பிடிக்க வேண்டும். அவன் இரட்சிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் நிரையப்பட வேண்டும். அப்பொழுது தான் அவன் உங்கள் சகோதரனாவான். ஆகையால் தவறு செய்ய அவன் உங்களைத் தூண்டவில்லை. நீங்கள் தான் இவ்விரண்டையும் பிரிக்கும் எல்லையின் (Borderline) அருகில் சென்று, உலகத்தின் காரியங்களை இச்சித்து, திரும்பவும் எல்லைக்குள் வந்தீர்கள். நீங்கள் யோர்தானைக் கடந்து கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. அதாவது நீங்கள் உலகத்திற்கு மரிக்கவில்லை. இப்பொழுது கவனியுங்கள், இந்த புத்தகம் முத்தரிக்கப்பட்டுள்ளது. நீங்களும் மீட்கப்படும் நாளுக்கென்று அதனுடன் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள். ரோமர் . 8.22, 23-ல் அதை நாம் வாசிப்போம். ஒவ்வொருவரும் தனித்தனியாக அதை படித்தால் நலமாயிருக்கும். காலதாமதமாவதற்கு முன்னமே நாம் அவரை நோக்கிப் பார்க்க, நான் அளிக்கும் இவ்வேத வாக்கியங்கள் ஏதுவாயிருக்கும். ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வசிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது. அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங் கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து நமக்குள் தவிக்கிறோம்.(ரோமர் . 8.22-23) என்ன அதிசயம்! என்ன அதிசயம்! வயோதிபராகிய நமக்கு இது ஒரு சந்தோஷ உணர்ச்சியை அளிக்கிறதல்லவா? அந்த நாளுக்கென்று காத்திருப்பது நம்மெல்லோருக்கும் ஒரு நல்ல உணர்ச்சியை அளிக்க வேண்டும். இவ்வசனங்களில் சொல்லப்பட்டவை முதலாம் உயிர்த்தெழுதலின் போது சம்பவிக்கும். இயற்கை தவிக்கிறது. நாமும் தவிக்கிறோம், சர்வ சிருஷ்டியுமே தவிக்கிறது. ஏனெனில் ஏதோ ஒன்று சரியாயிருக்கவில்லை என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகையால் நாம் செய்யக்கூடிய ஒன்றே ஒன்று, நமக்குள் தவித்து அது வருவதற்காகக் காத்திருத்தலாகும். ஏனெனில் அது புது ஜீவனை நமக்கு அளித்து ஒரு புதிய உலகில் நம்மைக் கொண்டு சேர்க்கும். நானும் என் மனைவியும் சிறப்பு அங்காடிக்குச் (Super Market) சென்றிருந்தோம். அங்கு ஒரு பெண் ஆடை அணிந்திருப்பதைக் கண்டோம். தற்பொழுது அமெரிக்காவில் அது ஒரு விசித்திரமானக் காட்சியாகும். ஏனெனில் பெரும்பாலான பெண்கள் ஆடையணிவதேயில்லை. அவர்கள் ஆடையணிய மறந்து விடுகின்றனர். ஆடையின்றி அவர்கள் செல்கின்றனர். அவர்கள் வேண்டுமென்றே மறந்து விடுகின்றனர் போலும்! என் மனைவி மேடா (Meda) என்னிடம், `பில்லி, ஏன் அப்படி செய்கின்றனர்?’ என்று கேட்டாள். அதற்கு நான், `தேசம் பெற்றிருக்கும் ஆவிக்கு அது எடுத்துக் காட்டு’ என்றேன். `நாம் ஜெர்மானிக்குச் சென்றால் அவர்கள் ஒருவிதமான ஆவியைப் பெற்றுள்ளதைக் காணலாம். பின்லாந்து நாட்டினர்க்கு வேறுவகை ஆவியுண்டு. ஒவ்வொரு தேசமும் ஒரு பிரத்தியேக ஆவியைப் பெற்றுள்ளது’ என்று நான் அவளிடம் சொன்னேன். அமெரிக்கா தேசத்தின் தற்போதைய ஆவி கேளிக்கையும் பரிகாசமுமாம், ஏன் தெரியுமா? நாம் அப்போஸ்தலருடைய உபதேசங்களின் மேல் கட்டப்பட்டிருந்தோம். வாஷிங்டன், லிங்கன் போன்ற சிறந்த தலைவர்களின் வழிநடத்துதலை அஸ்திபாரமாகக் கொண்டு அதன் மேல் கட்டப்பட்டிருந்தோம். ஆனால் இப்பொழுது அதனின்று விலகி விட்டோம். அழிவு வரப் போகிறதென்பதை நாமறிவோம். நம்முடைய பெயர் இப்பொழுது அணுகுண்டுகளின் மேல் எழுதப்பட்டிருக்கிறது. அடிமைத்தனம் வரப்போகிறது என்பதை அறிவோம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஒரு நகைச் சுவையாளன் எல்லாவிடங்களிலும் சென்று ஹாஸ்யங்களைச் சொல்லிக் கொண்டு வருகிறான். முறை கேடான வழிகளில் ஆண்களும் ஒருவரோடொருவர் கேவலமானதை நடப்பிக்கின்றனர். ஒரு சமயம் ஒரு பையன் கல்லறைத் தோட்டத்தின் வழியாகச் செல்லும் போது விசில் அடித்துக்கொண்டே அவனுக்கு எவ்வித பயமுமில்லை என்று நினைத்துக் கொண்டு சென்ற சம்பவம் என் நினைவுக்கு வருகிறது. உண்மையைக் கூறினால் அவனுக்கு உள்ளில் பயம்தான். ஆனால் அவன் விசில் அடித்து அவனுக்கு பயமில்லையென்று சொல்லிக் கொண்டே தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுகிறான். இன்றைக்கு அமெரிக்காவின் நிலை அதுவே. ஆனால் கைகளை உயர்த்தி தேவனை நோக்கியிருக்கும் ஒரு விசுவாசிக்கு என்னே ஒரு ஆசீர்வாதமான நம்பிக்கை! இவைகள் சம்பவிப்பதை அவன் காணும் போது மீட்பு சமீபமாயிருப்பதை அவன் அறிகிறான் விசுவாசிக்கு இது உண்மையாகவே ஒரு மகத்தான சமயம். நாம் சரீரத்தில் தவிப்பது... ஒரு மரம் வெட்டப்படும்போது தவிப்பதை நீங்கள் கண்டதுண்டோ? அது ஜீவிக்க விரும்புகிறது. அவ்வாறே ஒரு மிருகமும் சாகும் போது துடிதுடிக்கிறது. மனிதனும் அப்படியே, இயற்கை தவிக்கிறது. நாமும் நமக்குள்ளே தவிக்கிறோம்.... ஏதோ தவறு ஒன்றுண்டு என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நாம் படித்த வசனங்களில், மனிதனும் பூமியும் ஏதோ ஒன்றை இழந்திருப்பதைக் காணலாம். சர்வ சிருஷ்டியும் ஏதோ ஒன்றை இழந்துள்ளது. ஏதோ ஒரு காரணத்தால் அவை தவிக்கின்றன என்பதை நாம் தேவாவியால் அருளப்பட்ட வார்த்தையின் மூலம் அறியலாம். காரணமில்லாமல் நீங்கள் தவிப்பதில்லை. எழுதும் மையைக் குறித்து நான் பேசும்போது உங்களிடம் சொன்னவாறு எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு. பிணியாளிகளுக்கு ஜெபம் செய்யும்போது அப்படியே தான். அவர்களை சுகப்படுத்த முடியும். ஆனால் அவர்கள் வியாதியாயிருக்கும் காரணத்தை நான் முன்னர் அறியவேண்டும். அதற்கு தரிசனங்கள் மிகவும் அவசியமாயுள்ளன. மனிதனுடைய இருதயத்தின் இரகசியங்களை அவை வெளிப்படுத்தி, அந்த மனிதன் எங்கு தவறு செய்தான் என்றும், அதற்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிவிக்கின்றன. நீங்கள் எவ்வளவாக மருந்து உட்கொண்டாலும், எவ்வளவாக தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்து ஜெபித்தாலும், ஏதாவது தவறு உங்களில் காணப்பட்டால், அவன் அதாவது பிசாசு அங்கேயே படுத்திருப்பான். ஆகையால், நாம் மருத்துவ துறையில் முன்னேறியிருந்தாலும், இவைகளைக் குறித்து ஒன்றும் அறியோம். நீங்கள் `அவனுக்குப் புற்றுநோய் இருக்கிறது’ என்று சொல்கிறீர்கள். புற்று நோய் என்பது மருத்துவம் அந்த வியாதிக்கு சூட்டின பெயர். ஆனால் அது என்னவென்று ஆராயத்தலைப்பட்டால், அது பிசாசு தான். நாம் `பாவம்’ என்று கூறுகிறோம். அனேகர் குடிப்பது, விபசாரம் செய்வது `பாவம்’ என்று கருதுகின்றனர். அவை பாவத்தின் தன்மைகளாகும் (attributes). அவை பாவத்தின் காரணத்தால் உண்டாகின்றன. ஆனால் உண்மையாக பாவம் என்பது அவிசுவாசமேயாகும். நீ விசுவாசியாயிருந்தால், இவைகளைச் செய்யமாட்டாய். ஆனால், நீ உன்னை எவ்வளவாகப் பரிசுத்தமாக்கிக் கொள்ளவும், பக்தியாக்கிக் கொள்ளவும் முயன்றாலும், இவைகளை நீ செய்வாயானால், நீ அவிசுவாசிதான். அது வேதப் பூர்வமாகும். எதையோவொன்றை அது இழந்து தவிக்கிறது. அது ஆரம்பத்தில் உண்டாயிருந்த நிலைக்குத் திரும்பிவர முயல்கிறது. ஒருவன் ஆழமான குழியில் விழுந்து, அதனின்று வெளிவர கஷ்டப்பட்டு முயற்சி செய்வதைக் கற்பனை செய்து பாருங்கள். அவன் எங்ஙனமாயினும் குழியிலிருந்து வெளிவர வேண்டும். அவன் சாதாரணமாக இருக்க வேண்டிய நிலையில் இல்லை. ஆகையால் அவன் பித்தம் பிடித்தவனை போன்று கதறியழுது சுவர்களின் மேலேறி வெளிவர முயல்வான். அவர்கள் ஆரம்பத்திலிருந்த நிலைக்குத் திரும்பிவர வேண்டுமென்று தவிக்கின்றனர். வியாதியால் பீடிக்கப்பட்டவரும், வலியால் அவதியுறுபவரும் வேதனையின் காரணமாக முனகித் தவிப்பதை நாம் காணலாம். அவர்கள் சாதாரணமாக இருக்க வேண்டிய நிலையில் இல்லை. அவர்களில் தவறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்பத்திலிருந்த ஆரோக்கியமான நிலைக்கு வர வேண்டுமென்று துடிக்கின்றனர்.இயற்கையும், மனிதரும் தவிப்பதாக வேதம் கூறுகின்றது. அவர்கள் இருக்க வேண்டிய நிலையில் இல்லையென்பதை அது காண்பிக்கின்றது. அந்த நிலையிலிருந்து விழுந்து போயிருக்கின்றனர். இதற்கு விளக்கம் கூற நமக்கு யாரும் அவசியமில்லை; அவர்கள் நித்திய ஜீவனிலிருந்து விழுந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம்; ஏதேன் தோட்டத்தில் ஆதாமும், ஏவாளும் பாவத்தில் விழுந்த காரணத்தால் அவர்கள் நித்திய ஜீவனின் உரிமையை இழந்தனர்; அதன் விளைவாக அவர்கள் சர்வ சிருஷ்டியையும் மரணத்திற்கு ஆளாக்கினர். ஆதாமின் காலத்திற்கு முன்பு ஒரு மரமும் கூட சாகவில்லை. அதற்கு முன்பு ஒரு மிருகமாவது சாகவில்லை. மரிக்காமல் இருக்கக் கூடியவர் ஒருவரேதான். அவர்தான் தேவன். ஏனெனில் அவர் நித்தியமானவர். நாம் மரிக்காமலிருக்கச் செய்யக்கூடியது நித்திய ஜீவன் ஒன்று தான். நாம் தேவனுடைய புத்திரராயிருக்க வேண்டுமெனில் நித்திய ஜீவனைப் பெற வேண்டும். நான் காலை செய்தியில் கூறியது போன்று, நாம் பாவத்தில் மரிக்கும் போது, நம்முடைய பிறப்புரிமையை விற்றுப் போட்டு பிளவைக் கடந்து அப்பால் செல்லுகிறோம். அவ்விடத்தில் தேவன் நம்மை நெருங்கமுடியாது. ஆதாம் பாவத்தில் விழுந்த போது, அவன் சர்வ சிருஷ்டிக்கும் மரணத்தைக் கொண்டு வந்தான்; அவனுடைய விருப்பப்படி எது வேண்டுமானாலும் தெரிந்து கொள்வதற்கு அவனுக்குச் சுயாதீனம் அளிக்கப்பட்டிருந்தது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் முன்னிலையில் இரண்டு மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒன்று நல்ல மரம், மற்றொன்று கெட்ட மரம். நம் ஒவ்வொருவருடைய முன்னிலையிலும் இவ்விரண்டு மரங்களும் வைக்கப்பட்டுள்ளன. `அவர்கள் தவறு செய்தனர்’ என்று நீங்கள் கூறலாம்; இனி மேல் ஆதாமின் மேல் நாம் தவறை சுமத்த முடியாது. ஏனெனில், தவறானதும், சரியானதும் உன் முன்னிலையில் இப்பொழுது வைக்கப்பட்டுள்ளதால், பொறுப்பு உன்னுடையதாகும். ஆதாமும் ஏவாளுமிருந்த அதே அடிப்படையில் நாமிருக்கிறோம். ஆனால், நாம் மீட்கப்பட்ட பின்னர், நாம் எதையும் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அவர் தெரிந்து கொள்ளுதலையே நாம் விருப்புகிறோம். ஆதாமும் ஏவாளும் தாமாகவே தெரிந்துகொள்ள விரும்பினர். ஞானத்தைப் பெற்றுக் கொள்வதனால் என்ன நேரிடும் என்று காண அவர்கள் விழைந்தனர். அவர்கள் அதை ஆராய முற்பட்டு அதன் விளைவால் மரணம் எய்தினர். ஒரு மனிதன் மீட்கப்பட்ட பின்னர், அவன் கல்வியறிவு பெற வேண்டுமென்று கவலை கொள்வதில்லை. அவன் உலகத்தின் காரியங்களுக்காக இனி ஒரு போதும் கவலையுறுவதில்லை. அவன் தன் சுயமாக எதனையும் தெரிந்துகொள்ள முயல்வதில்லை. கிறிஸ்துவை அவன் தெரிந்துகொண்டான். அவ்வளவுதான். அதன் விளைவால் அவன் மீட்கப்பட்டு விட்டான். இனிமேல் அவன் தன்னை வழி நடத்திக் கொள்ள விரும்புவதில்லை. அவன் எங்கு செல்ல வேண்டுமென்றும் என்ன செய்ய வேண்டுமென்றும் யாரும் அவனுக்குப் போதிக்க அவன் விரும்புவதில்லை. அவன் காத்திருந்து தன்னை உண்டாக்கிய கர்த்தரின் தீர்மானத்தை அறிய விரும்புகிறான். அவர் போகச் கட்டளையிடும் போது அவர் நாமத்தில் அவன் செல்கிறான். ஆனால் ஞானத்தைக் தேடும் மனிதன், `இந்த சபை நன்றாயிருந்தாலும், அங்கு அதிக சம்பளம் கொடுக்கின்றனர். ஆகையால் நான் அங்கு போகிறேன்’ என்கிறான். ஞானம் என்ன செய்கிறதென்று பாருங்கள். ஆதாம் தேவனுடைய வார்த்தையில் நிலை கொள்வதற்குப் பதிலாக தன் மனைவியின் விவேகத்திற்குச் செவிக் கொடுத்ததால் பாவஞ் செய்தான். அவளும் சாத்தானுடன் வாதித்து, ஆதாமுக்கென்று ஒன்றை உற்பத்தி செய்து கொண்டாள். ஆதாம் தேவனுடைய வார்த்தையை தளர விட்டு, தன் புத்திர பாகத்தை விற்றுப் போட்டான். அவன் சொத்துரிமையையும், தேவனுடன் கொண்டிருந்த ஐக்கியத்தையும், நித்திய ஜீவனின் உரிமையையும் இழந்து போனான். `இதைப் புசிக்கும் நாவில் நீ சாகவே சாவாய்’ என்னும் தேவனுடைய வார்த்தை நினைவிருக்கட்டும். அவன் பூமியின் மேல் பரிபூரண அதிகாரம் கொண்டிருந்தான். அவன் பூலோகத்தின் தேவனாய் இருந்தான். கடவுள் அண்டசராசரங்களின் தேவன். அவன் புத்திரன் இப்பூமியின் மேல் ஆளுகை செய்தான். அவன் பேசினான், அவன் பெயரிட்டான், அவன் இயற்கையை நிறுத்தினான். எது வேண்டுமானாலும் அவனால் செய்ய முடிந்தது. ஆனால் பாவத்தில் விழுந்தபோது அந்த உரிமையை அவன் இழந்து போனான். `இந்த மலை பெயர்த்து அப்புறம் செல்லட்டும்’ என்று ஆதாம் கட்டளையிட்டால் அது நடக்கும். `இந்த மரம் பிடுங்கப்பட்டு, அங்கு நடப்படட்டும்’ என்று அவன் சொன்னால் அது நிறைவேறும். ஏனெனில் தேவனுக்குக் கீழிருந்த ஒரு சிறிய தேவனாக, தேவ புத்திரனாக அவன் பூமியின்மேல் ஆதிக்கம் கொண்டிருந்தான். ஆதாம் பூமியின் மேலிருந்த தன் உரிமையை இழந்து போனான். அது, அவன் யாருக்கு அதை விற்றுப் போட்டானோ அவன் ஆதிக்கத்தில் சென்றது.சாத்தான் அவன் தேவன் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தைப் பிசாசின் விவேகத்திற்காக விற்றுப் போட்டான். ஆகையால் அவன் பெற்றிருந்த நித்திய ஜீவன், ஜீவ விருட்சத்தின் மேல் அவனுக்கிருந்த உரிமை, பூலோகத்தின் மேலிருந்த உரிமை எல்லாவற்றையும் அவன் சாத்தானுக்கு விற்றுப்போட்டான். ஆகவே ஆதாமின் சந்ததிக்கு பூமியின் மேலிருந்த உரிமை பறி போயிற்று. நான் வாழும் டூஸான் (Tucson) நாட்டில், மலையின் உச்சியில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் கீழே நோக்கியவனாக அவனுடன், `300 வருடங்களுக்கு முன்பு வயோதியனான பாப்பகோ (Papago) என்னும் அமெரிக்க இந்தியன், தன் மனைவியுடன் குழந்தைகளை முதுகில் சுமந்த வண்ணமாய் அங்கு வந்து குடியிருந்து, சமாதானமாய் வாழ்ந்த காலத்தைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அக்காலத்தில் அவர்கள் மத்தியில் விபச்சாரம், மது அருந்துதல், சூதாட்டம் போன்ற தீய பழக்கங்கள் ஏதும் காணப்படவில்லை. அவர்கள் சுத்தமான வாழ்க்கையைக் கடைபிடித்தனர். அப்பொழுது ஒநாய் (Coyote) ஊளையிட்டுக் கொண்டே தண்ணீருள்ள இடத்தைக் கடந்து ஒவ்வொரு இரவும் டூஸானுக்கு வரும். நதியின் கரையில் மரங்களும் (Mesquite), முட்செடிகளும் (Cactus) பூப்பூத்து அழகாகக் காணப்பட்டிருக்கும். யேகோவா பரலோகத்திலிருந்து இக்காட்சியை பார்த்து சந்தோஷம் கொண்டு புன்னகை செய்திருப்பார். ஆனால், வெள்ளையன் அங்கு வந்தவுடன் என்னசெய்தான்? அவன் முட்செடிகளையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டு, மதுவைக் குடித்து தூர எறிந்த குப்பிகளினாலும் டப்பாக்களினாலும் அவ்விடத்தை அசுசிப்படுத்தினான். மேலும் அவன் நாட்டின் நற்பண்புகளைப் பாழாக்கினான். அமெரிக்க இந்தியருக்கு ஆகாரமாயிருந்த எருமைகளைக் கொன்றுபோட்டு, அவர்கள் ஆகாரமின்றி தவிக்கச் செய்தான்’ என்றேன். நான் டூம்ஸ்டோன் (Tombstone) என்னும் ஸ்தலத்திலுள்ள மியூஸியத்தில், ஜெரோனிமோ (Geronimo) என்ற அமெரிக்க இந்திய தலைவனின் படங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருக்கால் ஜெரோனிமோ ஒரு துரோகி (Renegade) என்று உங்களில் அனேகர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் ஒரு உண்மையான அமெரிக்கனாகும். அவன்தன் உரிமைக்காக சண்டை யிட்டான். தேவன் அவனுக்கு ஒரு நாட்டை, அவன் தங்குவதற்குரிய இடத்தைக் கொடுத்திருந்தார். நான் அவனைக் குறை கூறமாட்டேன். ஆனால் வெள்ளைக்கார போர்வீரர்கள் அமெரிக்க இந்தியர்களை ஈக்களை கொல்வதைப் போல் கொன்றுப் போட்டு, பலாத்காரமாக நாட்டைக் கைப்பற்றினர். ஜெரோனிமோவின் வைத்தியசாலையை நான் படத்தில் கண்டேன். அது ஒரு மரத்தின்மேல் மூன்று துப்பட்டிகள் விரிக்கப்பட்ட ஒரு கூடாரமாய் இருந்தது. தேவன் தங்களுக்குக் கொடுத்த உரிமைக்காக போரிட்டு, காயப்பட்ட உண்மையான அமெரிக்கர்கள் (அதாவது அமெரிக்க இந்தியர்கள்) அங்கு கொண்டுவரப்பட்டனர். ஜெரோனிமோ ஒரு குழந்தையை இடுப்பிலும், ஒரு குழந்தையைத் தோளிலும் சுமந்தவனாய், யுத்தவீரர்கள் இரத்தம் பீறிட, அவர்களைக் காப்பாற்ற பெனிசீலின் (Penicillin) போன்ற மருந்துகள் இல்லாமல் அவர்கள் பரிதாபமாய் மரிப்பதைக் காண்பதைப் போன்ற ஒரு படமுண்டு, அவனைத் துரோகியென்று நீங்கள் அழைக்கிறீர்கள். அவனைச் சான்றோன் என அழைக்கவும். கோகைஸ் (Cochise) என்னும் அமெரிக்க இந்தியன் வெள்ளையர்களுக்குப் பணிந்திருக்கமாட்டான். அவன் ஒரு வயோதிபன், ஆனால் அமெரிக்க இராணுவத்தினர் அங்கு சென்று எருமைகளைக் கொன்று போடுவர், அவைகளைக் சுடுவதற்கென துப்பாக்கியை ஷார்ப் (Sharpe) என்பவர் கண்டுபிடித்தார். அவர்கள், `இன்றைக்கு ஒரு நல்ல நாள், நான் நாற்பது எருமைகளை கொன்றேன்’ என்று பெருமைக் கொள்வார்கள். அந்த நாற்பது எருமைகள் அமெரிக்க இந்தியர் எல்லாருக்கும் இரண்டு வருட காலத்திற்குப் போதிய உணவாக இருந்திருக்கும். வெள்ளையர்கள் கொன்ற எருமைகளை என்ன செய்தனர்? அவைகளின் உடல்களை வனாந்தரத்தில் அப்படியே விட்டு விட்டனர். அவை அழுகிபோய், துர்நாற்றம் நாடு முழுவதும் பரவினது. ஓநாய்கள் அவைகளைத் தின்றன. ஆனால் அமெரிக்க இந்தியர் ஒரு எருமையைக் கொன்றால், அப்பொழுது மத சம்பந்தமான ஒரு சடங்கு உண்டாகும். அவர்கள் குளம்புகளை எடுத்து தட்டுகள் உண்டாக்குவார்கள். அதன் மாமிசத்தை அவர்கள் புசிப்பார்கள். அவர்கள் மாமிசத்தை தொங்கவிட்டு உலரவைப்பார்கள். அதன் தோலை அவர்கள் உலர்த்தி ஆடைகளும், கூடாரங்களும் உண்டாக்குவார்கள். அதன் எல்லா பாகங்களையும் அவர்கள் உபயோகித்தனர். ஆனால் வெள்ளையன் வந்தபோதோ... அவன் தான் துரோகி, அவன் தான் அயோக்கியன். அவன் எருமைகளைக் கொன்று போட்டு அமெரிக்க இந்தியர்களைப் பட்டினியிட்டான். உத்தமமான எவனும் தேவன் தனக்களித்த உரிமைக்காகப் போராடுவான். அமெரிக்க நாட்டின் கொடியின் மேல் அந்த மாசு படிந்துவிட்டது. இந்தநாடு அமெரிக்க இந்தியர்களைச் சேர்ந்தது. ஜப்பான் நாடாவது அல்லது ருஷியாவாவது அமெரிக்காவை அடைந்து, `நீங்கள் வெளியேறுங்கள்’ என்று நம்மிடம் சொல்லி நமக்கும் தம்முடைய பிள்ளைகளுக்கும் நாம் அமெரிக்க இந்தியருக்குச் செய்தது போன்று செய்தால் எப்படியிருக்கும் என்று ஆலோசியுங்கள். நாம் விதைத்தோம், அதை இப்பொழுது நாம் அறுக்கப் போகிறோம் என்பது நினைவிருக் கட்டும், அது தான் தேவனுடைய நியதி. நடுவதற்கும் ஒரு காலம் உண்டு. அறுவடைக்கும் ஒருகாலம் உண்டு. நாம் செய்தது மிகவும் மோசமான ஒரு காரியம். என்ன நேர்ந்தது? ஆதாமின் கறைபடிந்த சந்ததி மாசுபடுத்தி நாட்டை அழித்தனர். அவ்வாறு வேதம் கூறுவதை நீங்கள் அறிவீர்களா? ஆதாமின் கறைபடிந்த சந்ததி அவ்விதம் செய்ததால், கர்த்தர் அவர்களை அழித்துப்போடுவார். அதை வேதத்திலிருந்து படிக்க விரும்புகிறீர்களா? அந்த வசனத்தை நான் குறித்து வைத்திருக்கிறேன். வெளி : 11:18 ஐப்பாருங்கள். ஜாதிகள் கோபித்தார்கள். அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது (தேவன் கோபமடைவதைக் கவனியுங்கள்) ......மரித்தோர் நியாயத் தீர்ப்படைவதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும், பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்து சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதுக்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் காலம் வந்தது ........ வெளி. 11:18. அவர்கள் என்ன செய்யப் போகின்றனர்? அவர்கள் விதைத்ததை நிச்சயம் அறுக்கப் போகின்றனர். தெருக்களில் பாவம் நடமாடுவதைக் காணும்போது.... இன்றைய ஞாயிறு இரவில் எத்தனை பேர் விபச்சாரங்களில் ஈடுபட்டிருப்பர்! ஜெபர்ஸன்வில் என்னும் இச்சிறு பட்டணத்தில் எத்தனை பெண்கள் தங்கள் விவாகப் பொருத்தனையை மீறியிருப்பார்கள்? சிக்காகோவில் முப்பது நாட்களுக்குள் வைத்திய சாலைகளில் குறிக்கப்பட்டுள்ள கருச்சிதைவுகளின் எண்ணிக்கை எத்தனை என்று நினைக்கிறீர்கள்? குறிக்கப்பட்டவை மாத்திரம் ஒரு மாதத்தில் இருபத்தையாயிரம் முதல் முப்பதாயிரம் வரை (25,000 to 30000). இவையன்றி குறிக்கப்படாதவை எத்தனையோ உண்டாகும். இன்று சிக்காகோ பட்டிணத்தில் அருந்தப்பட்ட மதுவின் அளவு எவ்வளவாயிருக்கும்? ஒரே ஒரு இரவில் லாஸ் ஏன்ஜலிஸ் (Los Angeles) பட்டினத்தில் என்னவெல்லாம் நிகழ்கின்றன! எத்தனை முறை தேவனுடைய நாமம் ஜெபர்ஸன்வில் பட்டினத்தில் வீணாக வழங்கப் பட்டுள்ளது? ஜார்ஜ்ராஜர்ஸ் கிளார்க் (George Rogers Clarke) என்பவர் தோணியில் இங்கு இறங்கினபோது எல்லாம் சிறப்பாயிருந் தனவா? அல்லது இப்பொழுது அக்காலத்தைக் காட்டிலும் சிறப்பாயிருக்கின்றனவா? நாம் இப்பூமியை நம் முறை கேட்டினால் முற்றிலும் மாசுபடுத்தி விட்டோம். பூமியைக் கெடுத்தவர்களை தேவன் அழித்துப்போடுவார். தேவன் அவ்விதமாக உரைத்துள்ளார். மலையுச்சிக்குச் சென்று, தேவன் இயற்கையை எவ்விதம் சிருஷ்டித்தாரோ அவ்விதம் அதைக் காண வேண்டுமென்ற வாஞ்சை எனக்குள் எப்பொழுதும் உண்டு. பிளாரிடாவில் (Florida) செயற்கை பனைமரங்களை வைத்துள்ளனர். அதை நான் வெறுக்கிறேன். ஹாலிவுட்டில் (Holywood) செயற்கையாக செய்யப்பட்டுள்ள வசீகரமான காட்சிகளைக் காண்பதைப் பார்க்கிலும் ஒரு முதலை தன் வாலையிழுப்பதைக் காண நான் விரும்புகிறேன். ஹாலிவுட்டில் பகட்டையும் அங்குள்ள குடிக்காரரையும் காண்பதற்கு ஓ! ஏதாவது ஒரு நாளில்.... ஆம். சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள் என்று மத்தேயு 5ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. அது சரி. சாந்த குணமுள்ள வர்களும் தாழ்மையுள்ளவர்களும் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள். `சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்’ என்று இயேசு கூறியுள்ளார். இவர்கள் சாதாரணமானவர்கள்; இவர்கள் தங்களைப் பெரியவர்களாகக் காண்பித்துக் கொள்ள முனைவதில்லை. அவர்கள் பூமியைக் கெடுத்துப் போட்டார்கள். தேவன் அவர்களை அழித்துப் போடுவார். ஆனால் பூமி சுத்தமாக்கப்பட்ட பின்னர் சாந்த குணமுள்ளவர்கள் அதை சுதந்தரித்துக் கொள்வார்கள். ஆதாம் இழந்துபோன அந்த உரிமைப் பத்திரம் இப்பொழுது அதற்கு மூல சொந்தக்காரரான சர்வ வல்லமையுள்ள தேவனின் கைகளில் உள்ளது. அது பூமிக்கும், நித்ய ஜீவனுக்கும் உரிம பத்திரமாக இருந்தது. ஆதாம் அதை இழந்தபோது, சாத்தானின் அசுத்த கரங்கள் அதை எடுத்துக்கொள்ள முடியவில்லை. அது மூலச் சொந்தக்காரரான தேவனை அடைந்தது. அந்த உரிமைப் பத்திரத்தைக் கையில் பிடித்தவாறு அவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். அதை நினைக்கையில் நான் பக்திவசப்படுகிறேன். ஆம். நித்திய ஜீவனின் உரிமைப்பத்திரம். ஆதாம் விசுவாசத்திற்கு பதிலாக ஞானத்தைத் தெரிந்து கொண்ட காரணத்தி னால் அதை இழந்து போன போது அது அதன் சொந்தக்காரரான சர்வ வல்லமையுள்ள தேவனின் கரங்களையடைந்தது என்ன ஒரு பெரிய காரியம். அது தேவனுடைய கரங்களில் மீட்பின் உரிமையைக் கோருபவர்க்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. தேவன் மீட்பிற்கென்று ஒரு வழியை உண்டு பண்ணினார். ஒரு நாளின் மீட்பர் அந்தப் புத்தகத்தை தேவனுடைய கரத்திலிருந்து வாங்கிக் கொள்வார். நாம் இப்பொழுது எங்கு வந்திருக்கிறோம் என்று புரிகிறதா? சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரைச் சற்று கவனிப்போம். மீட்பின் உரிமைக்காக காத்துக் கொண்டிருத்தல் - அது தான் மீட்பு. அந்த மீட்பின் புத்தகம், உரிமைப் பத்திரம், சாராம்ச (abstract) உரிமைப் பத்திரம் என்ன? `சாராம்சம்’ (abstract) என்னும் பதத்திற்கு அர்த்தமென்ன? ஆரம்பத்தில் அது எவ்விதம் உண்டாயிருந்ததோ அதை ஆராய முற்படுதல். நாம் இன்றுகாலை சிந்தித்த அந்த சிறு துளியைப் போன்று அது வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்தவுடன், அது மூலப் பொருளாக மாறி மறைந்துவிட்டது. அவ்வாறே பாவமும் அறிக்கையிடப்பட்டு இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் விழுந்த மாத்திரத்தில், அது சிருஷ்டி கர்த்தரிடமுள்ள உரிமையை மறுபடியும் திரும்ப அளிக்கிறது. நாமும் தேவ புத்திரராக ஆகிறோம்.சர்வ வல்லவரின் கரங்களிலுள்ள உரிமைப் பத்திரம். அதை நாம் மீட்டுக் கொள்வதனால், ஆதாமும், ஏவாளும் இழந்த எல்லா உரிமைகளையும் நாம் திரும்ப பெற்றுக் கொள்கிறோம். மறுபடியும் பிறந்த கிறிஸ்தவனுக்கு இது எத்தகைய ஊக்கத்தை அளிக்க வேண்டும்! நித்திய ஜீவனின் உரிமைப் பத்திரத்தை நாம் சட்ட ரீதியாக பெறும்போது, ஆதாமும், ஏவாளும் இழந்த அத்தனையும் நாம் பெற்றுக் கொள்கிறோம். சகோதரனே, உரிமைப் பத்திரம் பெறுவதைக் குறித்து நீ என்ன நினைக்கிறாய்! ஆதாம் மீட்பிற்கு அவசியமானவைகளைப் பெற்றிருக்கவில்லை. அவன் பாவம் செய்ததனால் தேவனிடத்திலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டு பிளவிற்கு அப்புறம் சென்று விட்டான். ஆகையால் கர்த்தர் அவனை மீட்க முடியவில்லை. ஆனால் மீட்பு அவசியமாயிருந்தது. தேவனுடைய பிரமாணத்தின்படி, அவனை மீட்பதற்கென்று மீட்கும் இனத்தான் (Kinsman Redeemer) ஒருவன் அவசியம். அது லேவியராகமம் 25ம் அதிகாரத்தில் காணப்படுகின்றது. குறித்துக் கொள்ள விரும்புகிறவர்கள் குறித்துக் கொள்ளவும். அதை ஆராய்வதற்கு நமக்கு போதிய சமயமில்லை. ஆனால் தேவனுடைய பிரமாணம், மீட்பதற்காக வேறொரு வரை (Substitute) ஏற்றுக்கொள்ள அனுமதித்தது. வேறொருவரை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்திருக்கலாம். ஆனால் அவரோ நம்மேல் வைத்த அன்பின் காரணமாக அதை ஏற்றுக் கொண்டார். மனிதன் பாவத்தில் விழுந்தான். அவன் மீட்கப்படுவதற்கு வழியேயில்லை. அவன் தொலைந்து போனான். ஆனால் தேவனுடைய கிருபையோ இயேசுகிறிஸ்து என்னப்பட்டவரில் மீட்கும் இனத்தானைச் சந்தித்தது. பிரமாணத்திற்கு அது அவசியமாயிருந்தது. கிருபை அந்த அவசியத்தை நிறைவேற்றியது. ஓ! ஆச்சரியமான கிருபை, கேட்பதற்கு எவ்வளவு இனிமையாயிருக்கிறது. தேவனுடைய பிரமாணத்தின்படி, குற்றமற்ற ஒருவர் பாவம் செய்தவனுக்குப் பதிலாக அவசியமாயிருக்கிறார். ஆனால் யார் குற்றமற்றவர்? ஒவ்வொரு மனிதனும் ஆண், பெண் சேர்க்கையின் மூலம் பிறந்தவன். அவ்வாறு பிறக்காத ஆதாம், அவனுக்குண்டாயிருந்த நித்திய ஜீவனின் உரிமையையும் இப்பூமியின் அரசனாக இருக்கும் உரிமையையும் பறிகொடுத்தான். `எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலேயே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர். நாங்கள் பூமியிலே அரசாளுவோம்’ என்னும் வேத வாக்கியத்தை நினைக்கும்போது.... கவனியுங்கள், பாவத்தில் விழுந்த ஒருவனை மீட்டெடுக்க ஒரு மீட்கும் இனத்தான் தேவை. இந்த தேவையைக் கிருபை என்னப்பட்டது இயேசு கிறிஸ்து என்பவரின் மூலமாய் பூர்த்திசெய்தது. மானிட வர்க்கத்தில் இனத்தான் ஒருவர் பிறக்க வேண்டும். அவர் இதற்கென்று ஒரு தேவதூதனைத் தெரிந்து கொள்ள இயலாது. நாம் தேவ தூதனுக்கு இனத்தாரல்ல. ஆகையால் அது ஒரு மனிதனாக இருக்க வேண்டும். மனிதனாகப் பிறப்பவன் தான் நம் இனத்தானாய் இருக்க முடியும். தேவதூதன் பாவத்தில் விழவில்லை. அவன் வித்தியாசமான சரீரமுடையவன். அவன் பாவம் எதுவும் செய்யவில்லை. ஆனால் தேவனுடைய பிரமாணத்தின்படி ஒரு மீட்கும் இனத்தான் அவசியம். ஆனால் பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் இனச் சேர்க்கையினால் உண்டானவன். ஏதேன் தோட்டத்தில் பாவம் எங்ஙனம் தோன்றியது என்பதைக் காண முடிகிறதா? இன சேர்க்கையின் மூலமே பாவம் தொடங்கியது. அங்குதான் சர்ப்பத்தின் வித்து தோன்றியது. கன்னியின் மூலம் நேர்ந்த பிறப்புதான் மீட்கும் இனத்தானைத் தோன்றச் செய்தது. ஆமென். சர்வ வல்லமையுள்ள தேவனே இம்மானுவேல் ஆனார். தேவன் எவ்வாறு தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்று பாருங்கள். நாமாகவே இதைச் செய்ய முடியாது. ஆனால் கிருபை அங்கு தோன்றி, பிரமாணத்தை மேற்கொண்டு, அந்தப் பொருளை உண்டாக்குகிறது. ஆமென். நீங்கள் பரம வீட்டிற்குச் செல்லும்போது... சகோ. நெவில் பாடிய வண்ணம் `என் சிறு அறையை நான் அங்கு பெறும் போது அங்கு ஒரு காலை, `அதிசயமான கிருபை, கேட்பதற்கு எவ்வளவு இனிமை, என்னைப் போன்ற ஈனனை இரட்சித்தது’ என்னும் பாட்டு பாடுவதை நீங்கள் கேட்கும் போது, `கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சகோ. பிரான்ஹாம் அந்த ஸ்தலத்தை அடைந்துவிட்டார்’ என்று நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். இப்பொழுது பாருங்கள். ரூத்தின் புத்தகம் இதனை அழகாகச் சித்தரிக்கிறது. நகோமி தன் சொத்துக்களை இழந்துவிட்டாள். (எத்தனை பேர் இதைப்பற்றி நான் முன்பு பிரசங்கித்ததைக் கேட்டிருக்கிறீர்கள்? அப்படியானால் உங்கள் கைகளை உயர்த்துங்கள்). போவாஸ் அவளுடைய நெருங்கிய இனத்தான். ஆகவே அவள் மீட்கும் இனத்தானாக ஆக வேண்டியிருந்தது, அவன் நகோமியை மீட்டு ரூத்தைப் பெற்றுக் கொண்டான். போவாஸ் இயேசுவுக்கு அடையாளமாய் இருக்கிறான். அவர் இஸ்ரவேலை மீட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றார். நான் இந்தப் பொருளின் மேல் நிகழ்த்திய பிரசங்கம் ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் அந்த ஒலி நாடாவை வாங்கிக் கொள்ளலாம். ஆகவே, கன்னியின் மூலம் பிறந்த ஒருவர்தான் மீட்கும் இனத்தானாக இருக்க முடியும். பரிசுத்த ஆவியானவர் மரியாளை நிழலிட்டார். அதன் மூலம் இயேசு கன்னியின் வயிற்றில் தோன்றினார். ஆகையால், இயேசு யூதனல்ல. அவர் புறஜாதியானுமல்ல. இயேசு தேவனாயிருந்தார். அது உண்மை. அவருடைய இரத்தம் இன சேர்க்கையினால் உண்டாகவில்லை. அது பரிசுத்தமாக உண்டாக்கப்பட்ட தேவனுடைய இரத்தம். நாம் யூதனின் இரத்தத்தினால் இரட்சிக்கப்படவில்லை. அவ்வாறே நாம் புறஜாதியானின் இரத்தத்தினாலும் இரட்சிக்கப்படவில்லை. நாம் தேவனுடைய இரத்தத்தினால் இரட்சிக்கப்பட்டோம். நான் கூறுவது வேத பூர்வமாக அமைந்துள்ளது. வேதம் அவ்வாறே கூறுகிறது. இயேசு தேவனாயிருந்தார். அவர் மூன்றாம் ஆள், அல்லது இரண்டாம் ஆள் அல்ல, அவர் தேவன். அவர் இம்மானுவேல். தேவன் மகிமையை விட்டு இறங்கி தம்மை வெளிப்படுத்தினார். பூத்-கிளிப்பர்ன் (Booth-Clibborn) எழுதிய அந்த அழகான ஞானப்பாட்டு எனக்கு மிகவும் விருப்பம். மகிமையை விட்டு ஜீவனுள்ள வரலாறாக என் தேவனும் இரட்சகருமானவர் இறங்கி வந்தார் இயேசுவென்பது அவருடைய நாமம் தொழுவத்தில் பிறந்தார் அவர் சொந்தமானவர்க்கு அன்னியரானார் துக்கம் நிறைந்தவரும், கண்ணீரும் துன்பமும் நிறைந்த மனிதனவர். நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவர என்னே ஒரு தாழ்த்துதல் நள்ளிரவில், நம்பிக்கை சற்றேனும் இல்லாதநேரத்தில் கிருபையும் மென்மை இருதயமுமுள்ள தேவன் தமது ஒளியை தள்ளிவைத்து என் ஆத்துமாவை இரட்சிக்க என்னைத் தேடி வந்தார். ஒ, எவ்வளவாய் அவரை நேசிக்கிறேன்! எவ்வளவாய் அவரை மதிக்கிறேன் என் மூச்சும், என் வெளிச்சமும், எனக்குள்ள எல்லாமே அவரை மதிக்கின்றன. மகத்தான சிருஷ்டிகர் என் இரட்சகரானார் தேவனுடைய பரிபூரணம் அவருக்குள் வாசமாயிருந்தது அதுதான் தேவையை சந்தித்தது. கிருபையானது இயேசு கிறிஸ்து என்பவரைப் பிறப்பித்தது. தேவன் தம் கூடாரத்தை விசாலமாக்கி, மனிதனாகப் பிறந்தார். சர்வ வல்லவர் மரணமெய்தினார். மனிதனை மீட்பதற்கென்று அவர் மனித ரூபம் கொண்டு வந்தார். அவரைக் காணும் வரை சற்று பொறுத்திருங்கள். அந்த புத்தகத்தைத் திறக்க வேறு யாரும் பாத்திரவானாயில்லை. ரூத்தின் புத்தகத்தில் மீட்கும் இனத்தான் `கோயல்’ (Goel) என்று அழைக்கப்படுகிறான். அவன் மீட்பதற்கு மனமுள்ளவனாய் இருக்க வேண்டும். ஆவிகளை சிருஷ்டித்த தேவன், நம் பாவத்தைச் சுமந்து, கிரயத்தைச் செலுத்தி, நம்மை மறுபடியும் தேவனிடத்தில் சேர்க்க விரும்பி, அவர் நம் இனத்தானான மனிதனானார். கிறிஸ்து நம்மை இப்பொழுது மீட்டுக் கொண்டார். நாமெல்லோரும் மீட்கப்பட்டோம். ஆனால் அவருடைய உரிமையை அவர் இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒருக்கால் நான் சொல்வது தவறு என்று நீங்கள் எண்ணலாம், ஆனால் ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் மீட்பின் புத்தகத்தை வாங்கும்போது ஆதாம் இழந்த அனைத்தையும் அவர் மீட்டுக் கொள்ளுகிறார். அவர் ஏற்கனவே நம்மை மீட்டெடுத்து விட்டார். ஆனால் அவர் தம் உடைமைகளை இன்னமும் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்கென்று குறிக்கப்பட்ட சமயம் வரும் வரை அவர் அவ்விதம் செய்ய முடியாது. அதன் பின்பு உயிர்த்தெழுதல் சம்பவிக்கும். பின்னர் பூமி புதுப்பிக்கப்படும், அப்பொழுது அவர் தம் உடைமைகளைப் பெற்றுக்கொள்வார் - நம்மை மீட்டெடுத்தபோது அவருக்குக் கிடைத்த உடமை. இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருக்கும் ஏழு முத்திரைகளைக் கொண்ட மீட்பின் புத்தகத்தில் இது விவரிக்கப்பட்டுள்ளது. தேவனுக்குச் சித்தமானால் கிறிஸ்து முடிவில் என்ன செய்வாரென்பது இவ்வாரம் ஏழு முத்திரைகள் உடைக்கப்படும் போது வெளிப்படும். தேவனுடைய மகத்தான மீட்பின் திட்டம் என்னவென்றும் அது எங்ஙனம் நிகழுமென்றும், அது எப்பொழுது சம்பவிக்குமென்று நாம் அப்பொழுது அறிந்துக் கொள்ளலாம். அவையெல்லாம் இப்புத்தகத்தில் எழுதப்பட்டு ஏழு முத்திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே அந்த முத்திரைகளை உடைக்க முடியும். எரேமியாவின் புத்தகத்தை நீங்கள் வாசித்தால், எரேமியா அடிமையாகக் கொண்டு செல்லப்பட்டபோது, அவன் மாமனின் மகனிடத்திலிருந்து நிலத்தை வாங்கினான். அது முத்தரிக்கப்பட்டது. ஏழு முத்திரைகளைக் குறித்து சிந்திக்கும்போது அதை நாம் பார்ப்போம். பழைய ஏற்பாட்டின் காலத்தில் எல்லா சம்பவங்களும் சுருள்களில் எழுதப்பட்டன. அங்கே ஒரு இரகசியம் எழுதப்பட்டு, அது சுருட்டப்பட்டு மறைந்திருக்கும். அது இன்னாருக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு, சுருட்டப்பட்டு, முத்தரிக்கப்பட்டிருக்கும். பின்னர் வேறொரு இரகசியம் - இது இன்னாரின் உரிமையாகும் என்று எழுதப்பட்டு, சுருட்டப்பட்டு வேறொரு பாகத்தில் முத்தரிக்கப்பட்டிருக்கும். இவ்விதம் அனேக காரியங்கள் எழுதப்பட்டு, அது சுருளாக (Scroll) சுருட்டப்பட்டிருக்கும். இப்பொழுது நமக்குள்ளது போன்று அக்காலத்தில் எழுதி வைக்க புத்தகங்கள் கிடையாது. சுருளில் தான் அவை எழுதிவைக்கப்படும். முத்தரிக்கப்பட்ட சுருளாக அது இருந்தால், ஒரு முத்திரையை உடைத்து, அதற்குள் எழுதப்பட்டிருக்கும் இரகசியத்தை அறிந்து கொள்ளலாம். அவ்விதமாகவே மற்றொரு முத்திரையை உடைத்து, அதனுள் அடங்கியிருக்கும் இரகசியத்தைக் காணலாம். இப்புத்தகத்தில் உலகத் தோற்றத்துக்கு முன்னிருந்த இரகசியங்கள் எழுதப்பட்டு, எது ஏழு வித்தியாசமான முத்திரைகளால் முத்தரிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு முத்திரையை நாம் உடைக்கும் போது அதனுள் எழுதப்பட்டுள்ள இரகசியத்தை நாம் அறியலாம். கர்த்தருக்குச் சித்தமானால் இம்முத்திரைகளை நாம் அவிழ்த்து, புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் இரகசியங்களை நாம் அறிய முற்படுவோம். நமக்கு இது ஒரு மகத்தான தருணமாயிருக்கும் என்று நம்புகிறேன். மீட்பின் இரகசியம் கொண்டு புத்தகம் ஏழாம் தூதனின் செய்தி அளிக்கப்படும் வரை திறக்கப்படுவதில்லை. எரேமியா, அந்த சுருள் ஒரு மண்பாண்டத்தினுள் வைக்கப்பட வேண்டும்’ என்கிறான். அது எவ்வளவு ஒரு அழகான காரியம்! சற்று நேரம் அதைக் குறித்து பேசலாம். சுருள் மண்பாண்டத்தினுள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மண்பாண்டம் மாம்சமாகி (மகிமை) மரித்து உயிரோடெழுந்தது. அந்த நிலம் கிரயத்துக்குக் கொள்ளப்படும் வரை அது மண்பாண்டத்தினுள் வைக்கப்பட்டிருந்தது. ஓ எவ்வளவு அழகாக பொருந்துகிறது! இச்செய்திகள் யாவும் கடைசி சபையின் தூதன் வரும் வரை மண்பாண்டத்தினுள் மறைக்கப்பட்டிருந்தன. தேவனால் குறிக்கப்பட்ட இந்த காலம் வரும் வரை, அனேகர் அதைத் தேடி, `அது இங்கிருக்கிது, அது அங்கேயுள்ளது’ என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு, அதன் இரகசியத்தை வெளிப்படுத்த முயன்றனர். அவர்கள் கூறியதே சரியென்று அவர்கள் நம்பினர். ஆனால் இப்பொழுதோ தேவனுடைய கரத்திலிருந்து அது நேரடியாக நமக்கு வெளிப்பட்டு, அது கர்த்தரால் உறுதிப்படுத்தப்படும் தேவன் அவ்விதம் செய்வதாக வாக்களித்துள்ளார். இப்பொழுது நாம் இரண்டாம் வசனத்தைப் பார்ப்போம். முதலாம் வசனத்தின் வியாக்கியானத்தில் நாம் அதிக நேரம் நிலைத்து விட்டோம். இரண்டாம் வசனத்தின் பேரில் நாம் அவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டாம். `புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையும் கண்டேன். நாம் மறுபடியும் முதலாம் வசனத்தைப் படித்து இவ்விரண்டு வசனங்களையும் ஒன்று சேர்ப்போம். ......சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே கண்டேன். அது யார்? தேவன். ஜீவ புத்தகத்தின் முழு உரிமையாளர். அவர்அதைப் புடித்துக் கொண்டிருக்கிறார். ஆதாம் அதைப் பறிகொடுத்தபோது, அது மூல உரிமையாளரை அடைந்தது. அது அவருக்கே சொந்தம். யோவான், தான் கண்ட தரிசனத்தில், `உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலே’ கண்டான். பாருங்கள், உள்ளும் புறமும் எழுதப்பட்டுள்ளது. முத்திரைகள் உடைக்கப்படும் போது, அது வேதத்தில் கூறப்பட்டவைகளுடன் நன்றாக பொருந்துவதை நாம் காணலாம். வேதத்திலுள்ள எல்லா இரகசியங்களும் இந்த முத்திரைகளில் அடங்கியுள்ளன. குறிக்கப்பட்ட சமயம் வரும் வரை முத்திரைகள் உடைக்கப்பட முடியாது. அந்த புஸ்தகம் சுருட்டப்பட்டு, இங்கு ஒன்றும் அங்கு ஒன்றுமாக முத்தரிக்கப்பட்டு, ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகமாகத் திகழ்கிறது. அது ஒரு மீட்பின் புத்தகம், இரகசியம் எழுதப்பட்டு உட்பாகத்தில் சுருட்டப்பட்டு, வெளிப்புறத்தில் முத்தரிக்கப்பட்டுள்ளது. அது வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் என்றும் கறுப்புக் குதிரையின்மேல் வீற்றிருக்கிறவன் என்றும் உரைக்கிறது. ஆனால் அந்த புத்தகத்தின் இரகசியம் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேத புத்தகங்களில் அடங்கியுள்ளது. ஏழு முத்திரைகள் கொண்ட இந்த புத்தகத்தில் அடங்கியுள்ள தேவனுடைய முழு மீட்பின் திட்டம், முத்திரைகள் உடைக்கப்படும் போது முற்றிலுமாக வெளிப்படும். ஓ! இது ஒரு முக்கியமான தருணம். அதை அறிந்து கொள்ள தேவன் உதவிசெய்வாராக. இரண்டாம் வசனத்தில் பலமுள்ள தூதன், `புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள பாத்திரவான் யார்’ என்று மிகுந்த சத்தமிட்டு கேட்கிறான். அப்புத்தகம் இப்பொழுது அதன் உரிமையாளர் கையிலுள்ளது. மானிட வர்க்கத்தின் முதலாம் தேவ புத்திரன் சாத்தானுக்குச் செவி கொடுத்து, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக அவன் ஞானத்தை ஏற்றுக் கொண்டு அதன் உரிமையை பறிகொடுத்த போது, அது அவர் கரத்தையடைந்தது. தேவபுத்திரர் என்று தங்களை அழைத்துக் கொள்பவர் ஆதாம் செய்தவாறே, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக வேதப்பள்ளியின் கருத்துக்களை அங்கீகரிப்பார். அந்த புத்தகம் மூல உரிமையாளரிடம் சென்று விட்டது. யோவான் ஆவிக்குள்ளாகி, சபையின் காலங்களைத் தரிசனமாகக் கண்ட பின்னர், பரலோகத்திற்கு எடுக்கப்படுகிறான். வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தில், இங்கே ஏறிவா’ இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்’ என்று சத்தம் யோவானுக்குண்டானது. இப்புத்தகத்தை வலது கரத்தில் பிடித்துக் கொண்டு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஒருவரை யோவான் காண்கிறன். அப்புத்தகத்தில் மீட்பின் உரிமை பத்திரம் உள்ளது. அது ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது. பலமுள்ள தூதன் ஒருவன், `புத்தகத்தைத் திறக்கவும், அதன் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார்?’ என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுவதை யோவான் காண்கிறான். இங்கே அந்த மீட்பின் புத்தகம் காணப்படுகிறது. அதில் மீட்பின் திட்டம் முழுமையும் அடங்கியுள்ளது. நாம் மீட்கப்படுவதற்குரிய ஒரே வழி அது தான். ஏனெனில் பரலோகங்களும், பூலோகமும் மீட்கப்படுவதற்குரிய உரிமைப் பத்திரம் அதில் அடங்கியுள்ளது. `அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள பாத்திரவான் யார்? அவர் முன் வந்து புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளட்டும்’. வானத்திலாவது பூமியிலாவது, பூமியின் கீழாவது ஜீவனுள்ளோரிலும், மரித்தோரிலும் ஒருவனும் அந்த புத்தகத்தைத் திறந்து வாசிக்கப் பாத்திரவனாய் காணப்படவில்லை யென்று யோவன் கூறுகிறான். தூதன் மீட்கும் இனத்தானை வரும்படி அழைக்கிறான். தேவன் `எனக்கு ஒரு பிரமாணம் உண்டு. அதன்படி மீட்கும் இனத்தான் ஒருவன் பாவம் செய்தவனுக்குப் பதிலாக மரிக்க வேண்டும். அந்த மீட்கும் இனத்தான் எங்கே? யார் அந்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ள பாத்திரவான்?’ என்றார். ஆதாம் தொடங்கி யாருமே பாத்திரவானாகக் காணப்படவில்லை. அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், எலியா, யோபு, அனேக பரிசுத்தவான்கள் எல்லாருமே அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களில் எவரும் அந்த புத்தகத்தைப் பார்க்கவும் கூட பாத்திரவானாகக் காணப்படவில்லை. அப்படியெனில், அந்த புத்தகத்தை வாங்கி அவர்கள் எங்ஙனம் முத்திரைகள் உடைக்க முடியும்? போப்பாண்டவர் எங்கே? உங்கள் அத்தியட்சகர் எங்கே? நமது தகுதி எங்கே? நாம் ஒன்றும் அற்றவர்கள். யோவான், ஒரு மனிதனும் (ஆங்கிலத்தில் No man was worthy என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அதைத் திறக்கவும் வாசிக்கவும் கூடாதிருந்தது என்கிறான். அவன் தேவ தூதனோ, காபிரியேல் அல்லது மிகாவேல் தூதனோ அல்லது சேராபீன்களோ, பாத்திரவான்களல்ல என்று கூறவில்லை. அவர்கள் பாவம் செய்யாதவர்கள். ஆனால் அவர்கள் வித்தியாசமான இனத்தார். ஆனால் இதற்கு மீட்கும் இனத்தானாகிய ஒரு மனிதன் அவசியம். அதை பார்க்கவும் கூட எந்த மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை. போப்பாண்டவரும், பிரதம அத்தியட்சகரும் போதகர்மாரும், மற்றவரும் அதை பார்ப்பதற்குத் தகுந்த பரிசுத்தம் இல்லாதவராயிருந்தனர். இது கடூரமாகத் தென்படும். ஆனால் அப்படிதான் வேதம் கூறுகிறது. யோவான் சொன்னதை நான் அங்ஙனமே கூறுகிறேன். யோவான் மிகவும் அழுததாக வேதம் உரைக்கிறது. யோவான் பாத்திரவானாகக் காணப்படாததனால் அவன் அழுதான் என்று ஒருவர் போதித்ததை நான் கேட்டிருக்கிறேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ள யாவரும் அதற்கு வித்தியாசமான காரணம் உண்டு என்பதனை அறிவார். `அந்த புத்தகத்தைத் திறக்கப் பாத்திரவனாய் எவருமே காணப்பட வில்லையென்றால் சிருஷ்டி அனைத்துமே அழிந்து விடுமே` என்ற காரணத்தால்தான் யோவான் அழுதிருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். தேவன் தம்முடைய பிரமாணத்தை ஒரு போதும் மாற்றுவதில்லை. யோவானுடைய அழுகை ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. அப்பொழுது நான்கு ஜீவன்களின் மத்தியில் நின்ற முப்பர்களில் ஒருவன், யோவானை நோக்கி, `நீ அழ வேண்டாம். (என்னே தேவனுடைய கிருபை!) யோவானே, நீ மனமுடைய வேண்டாம். ஏனெனில் யூதா கோத்திரத்துச் சிங்கமும், தாவீதின் வேருமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார்’ என்றான். `ஜெயங்கொண்டிருக்கிறார்’ என்னும் பதம் போராடி மேற்கொள்வதைக் குறிக்கும். கெத்சமனே தோட்டத்தில் இயேசுவின் வியர்வை இரத்தத்தின் பெருந்துளியாக பூமியில் விழுந்த சமயம், அவர் ஜெயங்கொள்ளத் தொடங்கினார். சிங்கமும் தாவீதின் வேருமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார். யாக்கோபு தூதனுடன் போராடினான். தூதன் அவனை விட்டுப் போக எத்தனித்த போது, `நான் உம்மை விட மாட்டேன்’ என்று விடாப் பிடியாய் அவனைப் பிடித்துக் கொண்டான். அவன் விரும்பியதைப் பெற்றுக் கொள்ளுமளவும் அவன் தூதனை விடவில்லை. அவன் பெயர் யாக்கோபு,அதாவது ஏமாற்றுபவன் என்பதிலிருந்து, இஸ்ரவேல் அதாவது தேவனுடைய அரசகுமாரன் என்று மாற்றப்பட்டது. அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான். இந்த யூதா கோத்திரத்து சிங்கமும் ஜெயங் கொண்டார். மூப்பன் யோவானை நோக்கி, `நீ அழ வேண்டாம். ஏனெனில் யூதா கோத்திரத்தின் சிங்கமும் தாவீதின் வேருமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே ஜெயங்கொண்டார். அது முடிந்தது’ என்றான். அவர் ஒரு வெண்மையாக்கும் நீரை (Bleach) உண்டாக்கி, தன் ஞானத்தால் மானிட வர்க்கத்தைக் கறைபடுத்தின சாத்தானின் மாசு படிந்த கைகளில் பாவம் மறுபடியும் போகச் செய்தார். ஆனால் யோவான் திரும்பி பார்த்த போது, அவன் ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். சிங்கத்திலிருந்து அது எவ்வளவு வித்தியாசப்பட்டது! சிங்கம் ஜெயங்கொண்டதாக மூப்பன் கூறுகிறான். ஆம், தேவன் எளிமையில் மறைந்திருப்பதைப் பாருங்கள். சிங்கம் மிருகங்களின் அரசன். அது மற்றெல்லா மிருங்களைக் காட்டிலும் மிகவும் பலமுள்ள மிருகம். ஆப்பிரிக்காவின் காடுகளில் நானும் என் மகன் பில்லி பாலும் (Billy Paul) வேட்டைக்காக ஒளிந்து கொண்டிருக்கும் தருணத்தில், ஒட்டகச் சிவிங்கிகள் `கீச்’ சென்று சத்தமிடுவதையும், கம்பீரமான யானைகள் தங்கள்துதிக்கைகளைச் சுழற்றி, `வீ, வீ, வீ’ என்று ஓசையிடுவதையும், காட்டு மிருகங்கள் இரையைத் தேடி விதவிதமாக சப்தமிடுவதையும், வண்டுகள் பறக்கும்போது உண்டாக்கும் சத்தங்களையும் கேட்டதுண்டு. ஆனால் தூரத்தில் ஒரு சிங்கத்தின் கர்ச்சனைகேட்டால், காட்டிலுள்ள அனைத்துமே நிசப்தமாகிவிடும். வண்டுகளும் கூட சப்தமிடுவதை நிறுத்திவிடும். அரசன் பேசினால்... அவ்வாறே, நம் ராஜா தம் வார்த்தைகளை பேசினால், எல்லாமே நிசப்தமாகிவிடும். ஸ்தாபனங்களின் கொள்கைளெல்லாம் தவிடு பொடியாகிவிடும். சந்தேகமனைத்தும் தீர்ந்துவிடும். மூப்பன் யோவானை நோக்கி, `நீ அழ வேண்டாம், நீ தரிசனம் கண்டு கொண்டிருக்கிறாய். நான் உனக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். யாருமே மீட்கப்பட முடியாதென்று நீ கவலை கொண்டிருக்கின்றாய். யூதாகோத்திரத்தின் சிங்கத்தைத் தவிர யாருமே இந்த தேவையைப் பூர்த்திசெய்ய இயலாது’ என்றான். யூதா கோத்திரத்தின் சின்னம் சிங்கம் என்பதை நான் முன்பு கரும்பலகையில் உங்களுக்குப் படம் வரைந்து காண்பித்திருக்கிறேன். அந்த நான்கு ஜீவன்கள் சிங்கம், காளை, மனுஷமுகம், பறக்கும் கழுகு சிங்காசனத்தைச் சுற்றிலும் இருந்தன என்பது நினைவிருக்கிறதா? அதாவது மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைச் சுற்றியிருக்கின்றனர். கீர்த்தி வாய்ந்த ஒரு போதகர் ஒரு நாள், `அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புத்தகம் கட்டிடம் கட்டுவதற்கென்று உண்டாக்கப்பட்ட சாரம் (Scaffolding work)’ என்றார். அது உண்மையல்ல, பரிசுத்தமுள்ள சபை முதன் முதலாக தோற்றுவித்த திராட்சைக் கொடிதான் அது. அது வேறொரு கொடியை மறுபடியும் தோற்றுவித்தால், அது முதலில் காணப்பட்ட திராட்சைக் கொடியைப் போன்றே இருக்கும். ஆனால் இப்பொழுது திராட்சைக் கொடியில் ஒட்டு போடப்பட்டு, அந்த ஒட்டுக் கிளைகள் எலுமிச்சம் பழங்களையும், ஆரஞ்சு பழங்களையும் கொடுக்கின்றன. ஆனால் அந்த திராட்சைக் கொடியில் வேறொரு கிளை முளைத்தால், அது முதலிலிருந்த கிளையைப் போன்றே காணப்படும். மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் இவர்கள் எழுதின சுவிசேஷ புத்தகங்கள் அங்கு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல்காத்துக் கொண்டிருக்கின்றன - மனிதனின் ஞானம், சிங்கத்தின் வலிமை, காளையின் உழைப்பு, கழுகின் வேகம், நாம் ஏழு சபைகளின் காலத்தைக் குறித்துப் பேசுகையில், இவைகளை விவரித்துள்ளோம். அவன் அவரை `யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்றழைக்கிறான். ஏன்? `சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை. நியாயப் பிரமாணிகன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை,’ அவர் யூதாவின் கோத்திரத்தில் பிறக்கவேண்டும். யூதா கோத்திரத்தின் சின்னமான சிங்கம் ஜெயங்கொண்டு விட்டார்; அவர் மேற்கொண்டார். யோவான் சிங்கத்தைக் காண எண்ணி திரும்பிப்பார்க்கையில் அவன் ஒரு ஆட்டுக்குட்டியை அங்கு காண்கிறான்,என்ன விசித்திரம்! அது உலகத் தோற்றத்துக்கு முன் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஆட்டுக்குட்டி. அது காயப்பட்டு இரத்தம் தோய்ந்து காணப்பட்டது. அது கொலை செய்யப்பட்டாலும் மறுபடியும் ஜீவனுள்ளதாய் இருக்கிறது. ஓ! இந்த காட்சியைக் கண்டு நீங்கள் எங்ஙனம் இன்னமும் பாவிகளாய் இருக்க முடியும்? யோவான் இதற்கு முன்பு இந்த ஆட்டுக்குட்டியானவரைக் கவனிக்கவில்லை. அவன் அவரை முன்னமே கண்டதாக எங்கும் எழுதப்படவில்லை. ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்தார். அவர் எங்கிருந்து வந்தார்? அவர் பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வந்தார், கொலை செய்யப்பட்டு உயிரோடெழுந்து, பின்னர் அவர் அங்கு தான் வீற்றிருந்தார். அவர் உயிரோடெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்த நமக்காக சதாகாலமும் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். ஆமென். அவர் தமது சொந்த வாக்குத்தத்தத்தின் மூலம் ஜனங்களின் அறியாமைக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக் கொண்டு இருக்கிறார். அவர் பேரில் தான் நானும் சார்ந்திருக்கிறேன். அவர் பாவமன்னிப்பிற்குரிய வெண்மையாக்கும் திரவத்தை (Bleach) உடையவராயிருக்கிறார். யோவான் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைக் காண்கிறான். அது காயப்பட்டு, அறுக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்து காணப்பட்டது. பாவிகளாகிய நமது ஸ்தானத்தை அது எடுத்துக் கொண்டு நமக்காக அது காயப்பட்டது. ஒரு சாதாரண ஆட்டுக்குட்டி நமது ஸ்தானத்தை எடுத்துக் கொள்வது வியப்பாயிருக்கிறதல்லவா? யோவான் ஆட்டுக் குட்டியானவரை அதற்கு முன்பு தன் தரிசனத்தில் காணவில்லை. அவர் பரலோகத்தில் நமது பாவங்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தின் கீழ் தேவனிடத்தில் வந்து, பாவப் பரிகாரமாக செலுத்தப்பட்ட அந்தப் பலியின் மேல் விசுவாசங்கொண்டு, அதன் மூலம் இயேசுவின் மரணத்தைச் சுட்டிக் காட்டினவர்களுகெல்லாம் அவர் இரத்தம் சிந்தப்பட்டது. உங்களையும் என்னையும் பாவக் குற்றத்திலிருந்து நிவிர்த்தியாக்க அவர் அங்கிருக்கிறார். ஓ தேவனே! இன்றிரவு அவர் அங்கிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஒவ்வொரு பாவிக்காகவும் ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டிருக்கிறார். யேகோவா இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவரையன்றி வேறுயாரை இங்கு காண முடியும்? யோவான் கண்ட தரிசனத்தில், ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்ட வண்ணமாக பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் மகிமையிலிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் அங்கு பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தார். நம் பாவமான சிந்தைகளை நாம் ஒரு புறம் ஒதுக்கி விட்டு அவரை ஏற்றுக் கொண்டால், இன்றிரவு அவர் மகிமையிலிருந்து புறப்பட்டு தம்மைநமக்கு வெளிப்படுத்துவார். அது எவ்வளவு மகிமையுள்ள ஓர் செயலாயிருக்கும்! அவர் பரிந்து பேசும் செயலில் ஈடுபட்டிருந்தார். ஆனால் முத்திரைகளைத் திறக்க சமயம் வந்துவிட்டது. ஆகையால் தேவனுடைய பிரகாரத்திலிருந்து அவர் புறப்பட்டு வருகிறார்.பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிற்று என்பதனைக் குறித்து நாம் சிந்திக்கும் வரை பொறுமையாயிருப்போம். அவர் அங்கிருந்து புறப்பட்டு வந்தால், அதன் பிறகு பரிந்துபேசுதல் இருக்காது, பலியானது அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டால் அது ஒரு நியாயசனமாக மாறி விடுகின்றது. இரத்தம் தோய்ந்து ஆட்டுக்குட்டி வெளியேறினதால், அங்கு இரத்தம் கிடையாது. நீங்கள் அந்த சமயம் வரை இரட்சிக்கப்படாமல் ஏனோ தானோவென்று இருக்க வேண்டாம். பழைய ஏற்பாட்டில், கிருபாசத்தில் இரத்தம் இருந்தவரை, அது கிருபாசனமாயிருந்தது. ஆனால் இரத்தம் எடுபட்டவுடன் அது நியாயாசன மாகின்றது. ஆட்டுக்குட்டியானவர் அங்கிருந்து புறப்பட்டு வந்தவுடன், அது நியாயாசனமாக மாறுகிறது. அவர் என்னவாயிருந்தார்? அவர் பரிந்து பேசுகிறவராய் இருந்தார். அப்படியானால் மரியாள் நமக்காக பரிந்து பேச முடியாது. பரி, பிரான்ஸிஸ், பரி, அசிசி, பரி, சிசிலி அல்லது கத்தோலிக்கர்கள் உண்டாக்கியுள்ள கணக்கற்ற பரிசுத்தவான்கள் பரிந்து பேசுபவர்களாக இருக்கமுடியாது. யோவான் பரிந்து பேசும் ஸ்தலத்திலிருந்து ஆயிரம் `பரிசுத்தவான்கள்’ வருவதைக் காணவில்லை. அவன், அடிக்கப்பட்டு, இரத்தம் தோய்ந்த ஒரே ஒரு ஆட்டுகுட்டியானவரைக் காண்கிறான். ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள் ஆதி சபையின் காலங்களில் கொல்லப்பட்டனர். ஆனால் அது அவர்களுக்கு தகுந்ததாயிருந்தது. சிலுவையில் அறையப்பட்ட கள்ளன் சொன்னது போன்று, `நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்கபலனை அடைகிறோம். இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லை. அவர் ஒருவர் மாத்திரமே பாத்திரவானாயிருந்தார். அவர் அடிக்கப்பட்ட வண்ணமாய் பரிந்து பேசும் ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். எதற்கு? அவர் மீட்டவர்களை உரிமையாக்கிக் கொள்வதற்கு. ஆமென்! ஒரு மூலையில் சென்று சற்றுநேரம் கண்ணீர் விடுவதற்கு நமக்குத் தோன்றுகிறதல்லவா? அவர் தம்முடையவர்களை சொந்தமாக்கிக் கொள்வதற்காக புறப்பட்டு வருகிறார். அவரது பரிந்து பேசும் நாட்கள் முடிவடைந்துவிட்டன. பலமுள்ள தூதன் பூமியில் நின்று, `இனிகாலம் செல்லாது’ என்று சொல்லும் தருணம் தான் அது. அரைமணி நேர அமைதல் உண்டான போது என்ன சம்பவித்தது என்பதை கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த ஞாயிறு இரவு ஏழாம் முத்திரையைக் குறித்து நான் பேசும்போது அறிந்து கொள்ளலாம். அவர் தமக்குச் சொந்தமானவர்களை உரிமையாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருகிறார். அவர் மீட்கும் இனத்தானின் உத்தியோகத்தை நிறைவேற்றி முடித்துவிட்டார். அவர் மனிதனாக இறங்கி வந்து, மரித்தார். அவர் மீட்பின் உத்தியோகத்தை முடித்துவிட்டாலும், இன்னும் தமக்குச் சேர வேண்டியவர்களை உரிமையாக்கிக் கொள்ள அழைக்கப்படவில்லை. இப்பொழுது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள அவர் வருகிறார். (என்ன நிகழ்கிறதென்று பாருங்கள்) அதற்காகத் தான் அவர் கொல்லப்பட்டார். மனிதனுக்குப் பதிலாக மரித்து அவனை மீட்பதற்கென்று அவனுடைய இனத்தானாக அவர் மனித ரூபம் கொண்டார். மூப்பன் அவரைச் சிங்கமென்று அழைத்தது சரியே. ஏனெனில் அவர் இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவராக பரிந்து பேசும் உத்தியோகத்தைச் செய்து கொண்டு வந்தார். ஆனால் இப்பொழுதோ ஒரு சிங்கமாக புறப்பட்டு வருகிறார். அவர் பரிந்து பேசின நாட்கள் முடிவடைந்துவிட்டன. `அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்’. அந்த காலம் முடிவடைந்து விட்டது. ஓ சகோதரனே, அதன் பின்பு என்ன? இது ஏழாம் சபையின் காலத்தில் நிகழ்கிறது என்பது நினைவிருக்கட்டும். அப்பொழுது தேவரகசியம் வெளிப்படும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இதை நீங்கள் அறிந்த கொள்ள வேண்டும். அவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, விசுவாசிக்காகப் பரிந்து பேசிக்கொணடிருந்தார். இரண்டாயிரம் வருட காலமாக அவர் ஆட்டுக்குட்டியானவராக அங்கு வீற்றிருந்தார். ஆனால் இப்பொழுது உரிமை பத்திரம் கொண்ட புத்தகத்தை வாங்கி அதன் முத்திரைகளை உடைத்து அதனுள் காணப்படும் தேவ ரகசியங்களை வெளிப்படுத்த அவர் நித்தியத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அது எப்பொழுது? கடைசி காலத்தில், உங்களுக்குப் புரிகின்றதா? சரி. அப்படியானால் தொடர்ந்து கவனிப்போம். அவர் முத்திரைகளை உடைத்து ஏழாம் தூதனுக்குத் தேவரகசியங்களை வெளிப்படுத்துவார். ஏழாம் தூதனின் செய்தி ஏழு முத்திரைகளின் கீழ் அடங்கியுள்ள தேவ ரகசியங்களை வெளிப்படுத்தும், அதுதான் அவர் கூறியிருக்கிறார். எல்லா தேவரகசியங்களும் ஏழு முத்திரைகளின் கீழ் அடங்கியுள்ளன. தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டி யானவர் புறப்பட்டு வந்து சிங்கமாகிறார். அவர் சிங்கமான போது, அந்த புத்தகத்தை வாங்குகிறார். அது அவரது உரிமை, தேவரகசியம் அடங்கியுள்ள அந்த புத்தகத்தை தேவன் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். யாராலும் அப்புத்தகத்தைத் தேவனுடைய கரத்திலிருந்து வாங்க முடியவில்லை. போப்பாண்டவர், போதகன் மற்ற யாரும் அதை வாங்க முடியாமல் போயிற்று. ஏழு முத்திரைகளின் இரகசியம் இன்னமும் வெளிப்படவில்லை. ஆனால் மத்தியஸ்தர், பரிந்து பேசும் ஊழியம் முடிந்த பிறகு சிங்கமாகப் புறப்பட்டு வருகிறார். அவரைக் கவனியுங்கள். இத்தேவ ரகசியங்கள் என்னவாயிருக்கும் என்று ஸ்தாபனத்தார் சபையின் காலங்களில் அநுமானித்துக் கொண்டு தான் வந்துள்ளனர். ஆனால் புத்தகத்திலுள்ள தேவ ரகசியங்கள் தேவனுடைய வார்த்தையாக இருக்குமாயின் அது ஏழாம் தூதனான தீர்க்கதரிசியினிடத்தில் தான் வரவேண்டும் அவைகளைப் போப்பாண்டவர், போதகன்மார் யாருமே அறியமாட்டார். அவர்களிடத்தில் தேவனுடைய வார்த்தை வருவதில்லை. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில்தான் வரவேண்டும். அவ்விதம் தான் மல்கியா 4ம் அதிகாரம் வாக்களித்துள்ளது. அந்த தீர்க்கதரிசி வரும்போது இதுவரை ஸ்தாபனங்கள் சரிவர அறிந்து கொள்ளாது குழப்பியிருக்கும் எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்தி பிள்ளைகளின் விசுவாசத்தை பிதாக்களிடம் திருப்புவார். அதன் பின்னர் நியாயத்தீர்ப்பு பூமியின் மேல்விழுந்து, அது எரிந்து போகும். பின்பு ஆயிரம் வருஷ அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்களின் சாம்பலின் மேல் நடத்து செல்வார்கள். உங்களுக்கு இது புரிகின்றதா? சரி. ஸ்தாபனங்களின் காலத்தில் அவர்கள் தேவ ரகசியங்களை ஊகிக்கத் தலைப்பட்டனர். ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள ஏழாம் தூதனுக்கு மாத்திரம் ஸ்தாபன காலங்களில் அறியப்படாத தேவ ரகசியங்கள் வெளிப்படுத்தப்படும். நான் ஸ்தாபனங்களிலுள்ள சகோதரரைக் குற்றப்படுத்துவதில்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஸ்தாபனத்தின் முறைமை (Denominational System) தான் தவறானதாகும். தேவரகசியத்தை அறிந்து கொள்ள அவர்கள் முயலவேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு வெளிப்பட முடியாது. தேவ வசனம் அவ்வாறே கூறுகிறது. அவர்கள் அதை ஊகித்து, ஊகித்தது உண்மையென்று விசுவாசித்து, அதன்படி நடந்தனர். ஆனால் அவையெல்லாம் தவறென்னு நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆமென். வேத வாக்கியம் எவ்வளவு உண்மையுள்ளது! இப்பொழுது கவனியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் வந்து தமக்கு உரிமையான ராஜாவின் ஸ்தானத்தை வகித்துக் கொள்கிறார். அப்பொழுது அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்கு முடி சூட்டி, அவரை ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என வாழ்த்துவார்கள். பாருங்கள், கால தாமதமாகிவிட்டது. வெளி 10: 6 `இனி காலம் செல்லாது’. இந்த ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகள் உண்டு என்பதை கவனியுங்கள். கொம்பு மிருகத்தின் வல்லமைக்கு அடையாளம். அந்த ஆட்டுக்குட்டி ஒரு மிருகமல்ல. ஏனெனில் அவர் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கினார். ஏழு கொம்புகளையுடையவராய் அவர் வந்த போது, அவர் அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்து காணப்பட்டார். அவர் நித்தியத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். அதோடு அவர் மத்தியஸ்த ஊழியம் நின்றுவிடுகிறது. அதற்குப் பிறகு நீங்கள் மரியாளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபத்தை ஏறெடுங்கள்! வானத்திலாவது, பூமியிலாவது ஒருவனும் அந்த புத்தகத்தை வாங்கிக்கொள்ள முடியாமலிருந்தது. யோவான் அதனால் மிகவும் அழுதான். ஓ கத்தோலிக்க சகோதரனே! உன்னால் அதை அறிந்து கொள்ள முடியவில்லையா? மரித்த ஒருவருக்கு ஜெபத்தை ஏறெடுக்கவேண்டாம். ஆட்டுக்குட்டியானவர் ஒருவர் மாத்திரமே மத்தியஸ்தர், அவர் மாத்திரம்தான் புறப்பட்டு வருகிறார். அவர் வந்து என்ன செய்தார்? அவர் அதுவரை, தம் இரத்தம் ஒவ்வொருவருக்கும் பாவ நிவர்த்தி செய்யும்வரை, அவர்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அந்த புத்தகத்தில் என்ன எழுதியுள்ளதென்பதை ஆட்டுக்குட்டியானவர் அறிவார். யாருடைய பெயர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பு அப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்பதை அறிந்தவராய், புத்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் மீட்கப்படும் வரை, அவர்களுக்காக அவர் பரிந்து பேசிக் கொண்டிருந்தார், இப்பொழுது அவர் அங்கிருந்து புறப்பட்டு வருகிறார். அவர் இனத்தானின் வேலையைச் செய்து முடித்தார். இனத்தானின் வேலை மூப்பர்களிடத்தில் சாட்சி பகருவதாகும். போவாஸ் கழற்றின பாதரட்சையை வாங்கிய சம்பவம் நினைவிருக்கிறதா? அதையெல்லாம் அவர் இப்பொழுது செய்து முடித்துவிட்டார். அவர் இப்பொழுது மணவாட்டியை எடுத்துக்கொள்ள வருகிறார். ஆமென். இப்பொழுது அவர் ராஜாவாக வருகிறார். அவர் தமது அரசிக்காக எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார். ஆமென்! இப்புத்தகத்தில் எல்லா இரகசியங்களும் எழுதப்பட்டு ஏழு முத்திரைகளின் கீழ் கூறப்பட்டுள்ளது. ஓ சகோதரனே! ஏழு முத்திரைகள் அவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. கவனியுங்கள், இந்த அடையாளங்களை இப்பொழுது பார்ப்போம். இப்பொழுது ஒன்பது மணியாகின்றது. இன்னமும் மூன்று மணி நேரம் நமக்குண்டு. ஜனங்கள் களைப்படைந்திருப்பதாக சாத்தான் என்னிடம் முறையிட்டுக் கொண்டேயிருக்கிறான். ஒருக்கால் அவர்கள் களைப் படைந்திருக்கலாம். ஆயினும் நாம் தொடர்ந்து கவனிப்போம். ஏழு கொம்புகளும், ஏழு சபைகளாம். அவை ஏழு சபைகளின் காலத்தைக் குறிக்கின்றன. அவை ஆட்டுக்குட்டியானவரின் பாதுகாப்பு, தேவனால் அனுப்பப்பட்ட ஒரு சாரார் மூலமாகவே அவர் தமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டார். ஏழுகண்களும் ஏழு சபையின் காலங்களிலிருந்த ஏழு தூதர்களாம். இப்பொழுது சில வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? என்ன சொல்லுகிறீர்கள்? உங்களுக்கு சமயம் உண்டா? சரி அப்படியானால் சகரியாவின் புஸ்தகத்தைப் பார்ப்போம். இதில் அதிக நேரம் செலவிட நான் விரும்பவில்லை. என்றாலும் அதை நீங்கள் வாசிக்கத் தவறவும் கூடாது. அதைக் காட்டிலும் முக்கியமானது என்னவிருக்கிறது? மனிதனுக்கு நித்திய ஜீவனைக் காட்டிலும் முக்கியமானது எதுவுமில்லை, நாம் அதைப் பெற்றுக்கொள்ள கவனமாயிருக்க வேண்டும். சகரியாவின் புத்தகம் 5:8:9 வசனங்கள், அந்த அடையாளங்களை இங்கு காணப்போகிறோம். இப்போதும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை (அது கிறிஸ்து) நான் வரப்பண்ணுவேன். இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல், இந்த ஒரே கல்லின் மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது. இதோ நான் அதின் சித்திர வேலையை நிறைவேற்றி இந்த தேசத்தில் அக்கிரமத்தை ஒரே நாளில் நீக்கிப் போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். இப்பொழுது சகரியா 4.10 வாசிப்போம். கவனியுங்கள். அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டை பண்ணலாம்? (தேவன் எளிமையில் காணப்படுதல்) .... பூமியெங்கும் சுற்றிப் பாரக்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்கு நூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது. ஏழு கண்கள்.....கண்கள் பார்வைக்கு அடையாளம். பார்வை தீர்க்கதரிசிகளைக் குறிக்கிறது,ஞான திருஷ்டிக்காரர் (Seers). இந்த ஆட்டுக்குட்டிக்கு ஏழு கொம்புகள் இருந்தன. ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கண் இருந்தது.மொத்தம் ஏழு கண்கள். அது என்ன? அது தான் கிறிஸ்துவும் அவருடைய மணவாட்டியும், ஏழு சபையின் காலங்களில் ஏழு தீர்க்கதரிசிகள் புறப்பட்டு சென்றனர்.ஏழு ஞான திருஷ்டிக்காரர், கண்கள். ஆகவே கடைசி சபையின் காலத்திலுள்ள வரும் ஒரு ஞானதிருஷ்டிக்காரனாய் இருக்க வேண்டும். கவனியுங்கள். அவர் ஒரு மிருகமல்ல. அவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தவரின் வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கினார். சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தவர் யார்? அவர் தான் தம் வலது கரத்தில் பிடித்துக் கொண்டிருந்த மீட்பின் புத்தகத்தின் மூல உரிமையாளர். தேவதூதனும் கூட அப்புத்தகத்தை அவர் கையிலிருந்து பெற முடியவில்லை. இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் நடந்து சென்று அவருடைய கரத்திலிருந்து அதை வாங்குகிறார். அது என்ன? சகோதரனே, வேதத்திலே இதுதான் மிகுந்த பயபக்தியூட்டும் ஒரு செயல். இந்த செயலைத் தேவதூதனோ மற்றும் யாருமோ செய்ய முடியவில்லை, ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தில் உட்கார்ந்தவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்குகிறார். இப்பொழுது அது ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தம். ஆமென். தேவனுடைய பிரமாணத்தின்படி ஒரு மீட்கும் இனத்தான் அவசியமாயிருந்தது. ஆட்டுக்குட்டியானவர் தைரியமாக வந்து, `நான் தான் அவர்கள் இனத்தான். நான்தான் அவர்கள் மீட்பர். நான் அவர்களுக்காகப் பரிந்து பேசினேன். இப்பொழுது அவர்களுக்காக உரிமைகோர வந்தேன்’ என்றார். ஆமென்! ஆமென்! `நான் உரிமையைப் பெற்றுக் கொள்ள வந்தேன். அவர்கள் பாவத்தில் விழுந்த போது இழந்துபோன உரிமை அனைத்தும் அதில் உள்ளது. நான் கிரயத்தைச் செலுத்திவிட்டேன்’ என்றார். ஓ சகோதரனே! இது உன்னை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகின்றதல்லவா? நாம் செய்த நற்கிரியைகளினாலல்ல, அவருடைய கிருபையினால் மாத்திரமே இரட்சிக்கப்பட்டோம். ஒரு நிமிடம் பொறுங்கள். மூப்பர்களும் மற்றெல்லாரும் தங்கள் கிரீடங்களைக் கழற்றிவிட்டு, அவருக்கு முன்பாக வணக்கமாய் விழுகின்றனர். வேறு எவராலும் செய்ய முடியாது. அவர் தமக்கு உரிமையானவற்றை நேரிடையாக தேவனுடைய கரத்திலிருந்து பெற நடந்து வருகிறார். `நான் அவர்களுக்காக மரித்தேன். நான்தான் அவர்களின் மீட்கும் உறவினன். நான்தான் மத்தியஸ்தன், என் இரத்தம் தான் சிந்தப்பட்டது. நான் மாமிசமாகி இந்த உலக தோற்றத்துக்கு முன்னர் முன்குறித்த சபையை திருப்ப வெளிப்பட்டேன். வேறு எவராலும் அதைச்செய்ய தகுதியாய் காணவில்லை. எனவே, நானே அதைச் செய்து முடித்தேன். நான்தான் அவர்களின் உறவினன்’. பின்பு அந்த புத்தகத்தை எடுத்தார். ஆமென். ஓ! இன்றிரவு எனக்காக காத்திருக்கும் அவர் யார்? சபையே, காத்திருக்கும் அவர் யார்? உனக்காக காத்திருக்கும் அவர் மீட்கும் உறவினன். ஓ! என்ன அருமையான திட்டம். இப்பொழுது அவர் உரிமைபத்திரம் அவர் கரத்தில் இருக்கிறது. மத்தியஸ்தம் முடிவடைகிறது. காலாகாலமாக தேவனிடத்தில் இருந்தது, இப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் கையில் உள்ளது. இப்பொழுது அவர் மீட்பின் உரிமைப் பத்திரத்தைத் தம்கையில் கொண்டுள்ளார். அதுவரை அது தேவனுடைய கரத்திலிருந்தது. இப்பொழுதோ அது ஆட்டுக்குட்டியானவரின் கரத்திலுள்ளது. சர்வ சிருஷ்டியின் மீட்பின் உரிமைப் பத்திரம் இப்பொழுது அவர் கையிலிருக்கிறது. மானிடவர்க்கத்திற்கு அதை மறுபடியும் அளிக்க அவர் வந்திருக்கிறார். தேவதூதர்களுக்கல்ல, அவர்களை மறுபடியும் தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக்க அவர் அதை அளிக்க வந்திருக்கிறார். அவர்கள் இழந்து போன அனைத்தையும் அவர்கள் மறுபடியும் பெற்று ஏதேன் தோட்டத்தின் நிலைக்குத் திரும்ப வேண்டும் சர்வ சிருஷ்டியும், மரங்களும், மிருகங்களும், மற்றவையாவும் அந்நிலைக்கு வர வேண்டும். ஓ! இது உங்களுக்கு ஓர் நல்ல உணர்ச்சியை அளிக்கின்றதல்லவா? நான் களைப்பாயிருந்தேன். ஆனால் இப்பொழுது இல்லை. சில நேரங்களில் வயது சென்றதால் பிரசங்கிக்க முடிவதில்லை என்று நான் நினைப்பதுண்டு. ஆனால் பக்தியூட்டும் இத்தகைய சம்பவங்களைக் காணும் போது, எனக்கு வாலிப உணர்ச்சி ஏற்படுகின்றது. அது நமக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. எனக்காக ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று நான் நன்கு அறிவேன். நான் செலுத்த முடியாத கிரயத்தைச் செலுத்தியிருக்கிறார். இப்பொழுது அவர் தம் மீட்பின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறார். யாருக்காக அவர் அதை பெறுகிறார்? அவருக்காகவல்ல, நமக்காகவே. அவர் நம்மில் ஒருவர். அவர் நமது இனத்தான். ஓ! அவர் நமது சகோதரன். அவர் நமது ரட்சகர். அவர் நமது தேவன். அவர் நமது மீட்கும் இனத்தான். அவர் எனக்கு எல்லாமுமாயிருக்கிறார். அவரையன்றி நான் என்னவாயிருந்திருப்பேன்? அல்லது என்னவாயிருக்க முடியும்? அவர்கள் மரித்தார்கள்.... `என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று இயேசு சொன்னார். `உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்’. `என் மாமசத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு! நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன்’. அவன் முதலாம் ஜாமத்தில் நித்திரையடைந்தாலும், அல்லது இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமங்களில் நித்திரையடைந்தாலும், அல்லது எந்த ஸ்தலத்திலாகிலும் நித்திரையடைந்தாலும் பரவாயில்லை. என்ன நேரிடும்? தேவ எக்காளம் முழங்கும். கடைசிமுத்திரை திறக்கப்பட்டு, கடைசி தூதன் செய்தியையளித்துக் கொண்டிருக்கும் அதே தருணத்தில், கடைசி எக்காளம் முழங்கும். அப்பொழுது மீட்பர் தம் இரத்தத்தினால் கழுவப்பட்ட சபையாகிய தம் பொக்கிஷங்களைப் பெற்றுக்கொள்ள புறப்பட்டு வருவார். இப்பொழுது ஓ! சர்வ சிருஷ்டியும்அவர் கரத்தில் தான் உள்ளன. மீட்பின் திட்டம் முழுவதும் அவர் வாங்கின அப்புத்தகத்தில் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது கவனியுங்கள்! அவர் மாத்திரமே, அதன் இரகசியங்களை யாருக்கு வெளிப்படுத்த சித்தம் கொண்டிருக்கிறாரோ, அவருக்கு அவைகளை வெளிப்படுத்துவார். ஆட்டுக்குட்டியானவர் தம் கரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கும்போது, ஏழு முத்திரைகளைத் திறந்து, கடந்து போன காலத்தை நமக்குக் காண்பிக்க தேவன் கிருபையும் இரக்கமும் அருள வேண்டுமாய் நாம் அவரிடத்தில் மன்றாடுவோமாக! முத்திரைகளைக் குறித்து நாம் சிந்திக்கும் போது, நாம் கடந்த காலத்துக்குச் சென்று, பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள், `எதுவரைக்கும் ஆண்டவரே, எதுவரைக்கும் ஆண்டவரே?’ என்று கூக்குரலிடுவதை நாம் காணலாம். அவர் பலிபீடத்தின்மேல் மத்தியஸ்தராக இருந்து, அவர்களைப் போல் உபத்திரவப்பட வேண்டியவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் சிறிது காலம் இளைப்பாற வேண்டும் என்பார். ஆனால் கடைசி முத்திரையின் காலத்தில் அவர் அங்கிருந்து புறப்பட்டு வருவார். அதன் பின்பு ஒரு போதும் மத்தியஸ்தரல்ல. அவர் ராஜாவாக வருகிறார். அவர் அரசனானால் அவருக்குப் பிரஜைகள் இருக்கவேண்டும். அவரால் மீட்கப்பட்டவர்கள் தாம் அவர் பிரஜைகள். அவர் தாம் மீட்டுக் கொண்டவர்களின் மேல் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் வரை, அவர்கள் அவர் முன்னிலையில் வரமுடியாது. இப்பொழுதோ அவர் மத்தியஸ்த உத்தியோகத்தை விட்டு உரிமைகளுடன் அவர் வருகிறார். அவர் மத்தியஸ்தராயிருந்தபோது, மரணம் நம்மை ஆட்கொண்டது. கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கிறவர்கள் நித்திரை யடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில் கடைசி எக்காளத்தில் தேவ எக்காளம் முழங்கும். அப்பொழுது கடைசி முத்திரை உடைக்கப்பட்டிருக்கும். ஏழாம் தூதன் தன்செய்தியை அளித்த பின்னர் கடைசி எக்காளம் முழங்கும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் அவர்களோடு கூட எடுக்கப்பட்டு அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அவர் தம் சொத்துக்களைப் பெற்றுக் கொள்ள புறப்பட்டு வருகிறார். அவர் ஏழு முத்திரைகளை உடைத்து, கடைசி சபைக்கு இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். இந்த சபை மாத்திரமே இப்பொழுது உயிரோடுள்ளது. மற்ற சபையினர் யாவரும் நித்திரையடைந்துள்ளனர். ஏழாம் ஜாமத்தில், `இதோ மணவாளன் வருகிறார்’ என்ற சத்தம் உண்டாயிற்று, உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள், அதாவது பெயர் கிறிஸ்தவ சபைகளின் (Nominal Churches) அங்கத்தினர்கள், அப்பொழுது, `நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன்’ என்பார்கள். நீங்கள் பிரஸ்பிடேரியன்மார்களையும், எபிஸ்கோபல் ஸ்தாபனத்தாரையும் கவனித்திருக்கிறீர்களா, அன்று பீனிக்ஸ் பட்டினத்தில் நடந்த கூட்டத்தில், வியாதிசுகம் பெற எழுந்து நின்ற மனிதர்களுக்கு நான் அளித்த செய்தியையும், அப்பொழுது ஒரு சத்தம் அங்குண்டாகி, `இந்த எழுத்தாளன் பரிசுத்த பிதா என்று உன்னை அழைக்கக் காரணமென்ன? எந்த மனிதனையும் பிதா என்று அழைக்காதிருங்கள் என்று வேதம் கூறுகின்றதே?’ என்று அறிவித்ததையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். அவர்களெல்லாம் உறங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்பொழுதோ அவர்கள் `நாங்கள் விசுவாசிக்கிறோம்...’ என்று கூறுகின்றனர். ஒரு ஸ்திரீ வேறொரு ஸ்திரீயை சந்தித்து, `நான் எபிஸ்கோபல் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவள் என்பதை நீ அறிவாய். அன்றொருநாள் நான் அன்னிய பாஷையில் பேசினேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்று விட்டேன் என்று நினைக்கிறேன். ஆனால் யாரிடமும் இதைக் கூறவேண்டாம்’ என்றாள். அவள் பரிசுத்த ஆவியைப் பெற்றாள் என்பதை நான் சந்தேகிக்கிறேன். நீ ஒருக்கால் அன்னிய பாஷையில் பேசியிருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு உணர்ச்சி வசப்படும்போது, அவன் எங்ஙனம் சும்மாயிருக்க முடியும்? மேலறையில் குழுமியிருந்த பேதுரு, யாக்கோபு, யோவான், `நாங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம். ஆனால் நாங்கள் அமைதியாயிருப்போம்’ என்று கூறியிருக்க முடியுமா என்று சிந்தித்து பாருங்கள். சகோதரனே, அவர்கள் ஆர்வம் கொண்டு, கதவுகளிலும், ஜன்னல்களிலும் நுழைந்து, வீதிகளில் சென்று, குடிகாரரைப் போல் மற்றவர்களுக்குக் காணப்பட்டனர். அதுதூன் உண்மையான பரிசுத்த ஆவியைப் பெறுதலின் அடையாளம். தூங்கிக் கொண்டிருந்த கன்னிகை (அதாவது புத்தியில்லாத கன்னிகை) எதையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைப் பாருங்கள். ஆம், அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற போது (அவர்கள் எண்ணெயை வாங்கி விட்டதாக வேதம் கூறவில்லை என்பது நினைவிருக்கட்டும்). அவர்கள் எண்ணெய் வாங்க முயன்று கொண்டிருந்த போது, ஒரு சத்தம் உண்டானது. என்ன நேர்ந்தது? அந்த சத்தத்தைக் கேட்டவுடன், தூங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் அனைவரும் எழுந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர். எண்ணெய் வைத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகள் கலியான விருந்துக்குச் சென்றனர். (நான் கூறுவது சரியா) மற்றவர்கள் உபத்திரவ காலத்திற்கென்று விடப்பட்டனர். அங்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும். அவர்கள் தான் சபை (Church) மணவாட்டியல்ல. மணவாட்டி உள்ளே சென்றாள். மணவாட்டிக்கும் சபைக்கும் வித்தியாசமுண்டு. மணவாட்டி சரியான விருந்துக்குச் சென்றாள். ஏழு முத்திரைகள் இந்த கடைசி சபையின் காலத்தில் உடைக்கப்படுகின்றன. ஏன்? சத்தியம் வெளிப்படுவதற்காக. ஆட்டுக்குட்டியானவர் தம் பிரஜைகளை அவர். இராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்ளக் கருதி, முத்திரைகளை உடைத்து மணவாட்டிக்கு வெளிப்படுத்துகிறார். ஓ! அவர் தமது பிரஜைகளை இப்பொழுது தம்மிடம் சேர்த்துக் கொள்கின்றார். அது என்ன? பூமியின் புழுதியினின்றும், சமுத்திரத்தின் ஆழத்தினின்றும் எல்லாவிடங்களிலிருந்தும், அந்தகாரத்தினின்றும், பரதீசியிலிருந்தும்..... அவர்கள் எங்கிருந்தாலும், அவர் கூப்பிடுகையில் அவர்கள் மறு உத்தரவு அருளுவார்கள். அவர் தமது பிரஜைகளைச் சேர்த்துக்கொள்ள வருகிறார். அவர்தமது இரகசியங்களை வெளிப்படுத்தினார். அவர்கள் புரிந்து கொண்டனர். அப்பொழுது, `இனி காலம் செல்லாது’, காலம் முடிந்துவிட்டது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக மத்தியஸ்த ஊழியத்தைச் செய்வதை அவர் விட்டுவிட்டு சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு, அவர் செய்தியைப் புறக்கணித்த வரை நியாயத்தில் நிறுத்த சிங்கமாக, ராஜாவாக வருகிறார். அப்பொழுது அவர் மத்தியஸ்தரல்ல. பழைய ஏற்பாட்டின் போதகத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நாம் துரிதமாக முடித்துவிடுவோம். கிருபாசனத்தை விட்டு இரத்தம் எடுக்கப்பட்டவுடன், அது நியாயாசனமானது. அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர், தம் பிதாவின் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு அவர் உரிமையைப் பெற்றுக் கொள்ளும் போது, அது நியாயசனமாக மாறுகிறது. அவர் அப்பொழுது ஆட்டுக்குட்டியல்ல, அவர் சிங்கம், ராஜா. அவர் தமது ராணியை அழைத்து தம் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறார். `பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயத்தீர்ப்பர்களென்று அறியீர்களா?’ சிங்காசனங்கள் வைக்கப்பட்டதையும், புத்தகங்கள் திறக்கப்பட்டதையும், ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்ததையும் தானியேல் கண்டான் - ராஜாவும், ராணியும் வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அது தான் ஜீவ புத்தகம். அது சபைக்காக திறக்கப்படுகிறது. அப்பொழுது ராஜாவும், ராணியும் அங்கு நிற்கின்றனர். (சகோ. பிரான்ஹாம் மாடு மேய்ப்பவனின் (Cowboy) பாட்டொன்றைக் கூறுகிறார். அதன் சாராம்சம் பின்வருமாறு - தமிழாக்கியோன்) `கடந்த இரவு நான் புல்வெளியில் கிடந்த வண்ணம் வானத்தை அண்ணாந்து பார்த்து நட்சத்திரங்களை நோக்கியவாறே, மாடு மேய்க்கும் ஒருவனாவது அந்த இனிமையான ஸ்தலத்திற்குச் செல்ல முடியுமா என்று வியந்தேன்’. `சந்தோஷம் மிகுந்த அந்த ஸ்தலத்தை அடைவதற்கு ஒரு பாதையுண்டு. ஆனால் அது மங்கின வெளிச்சம் கொண்டதாயுள்ளது என்று அவர்கள் சொல்லுகின்றனர். (ஆகையால் அநேகர் அதன் வழியாக செல்வதில் விருப்பங் கொள்வதில்லை) ஆனால் கேட்டுக்குப் போகும் பாதை விசாலமானதாயும் பிரகாசமுள்ளதாயும் இருக்கிறது’ `வேறொரு பெரிய முதலாளியைக் குறித்து அவர்கள் பேசிக் கொள்கின்றனர். அவருக்கு எப்பொழுதும் கிடங்கின் அளவுக்கு மிஞ்சி மாடுகள் இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் குறுகலான நேரடி வழியில் வந்த ஒரு பாவிக்குத் தம் கிடங்கில் இடமளிப்பார்’. `அவர் உன்னை ஒருபோதும் கைவிடுவதில்லை என்று அவர்கள் சொல்கின்றனர். நம் ஒவ்வொரு செய்கையையும் பார்வையையும் அவர் அறிந்திருக்கிறார். ஆகையால் பாதுகாப்புக்கென அவருடைய குறிகள் (branded) தரிக்கப்பட்டு அவர் மாட்டுப் பட்டியலின் புத்தகத்தில் நாம் பெயரெழுதப்படுவோமாக’. `ஒரு நாளில் ஒரு பெரிய வளைத்துக்கொள்ளுதல் (Round up) உண்டாகும் என்று சொல்கின்றனர். அப்பொழுது மாடு மேய்ப்பவர்கள். (அதாவது தீர்க்கதரிசிகளும் ஞானதிருஷ்டிக்காரரும்) வேட்டை நாய்களைப் போல் அங்கு முதலாளியால் நிறுத்தப்பட்டு, தங்கள் குறியிட்ட மாடுகளை அறிந்து, அவர்களை ஒன்றாக வளைத்துக் கொள்வார்கள்’. மாடு வளைத்துக் கொள்ளுதலை நீங்கள் கண்டதுண்டா? முதலாளி அங்கு நின்றிருப்பார். அப்பொழுது மாடு மேய்ப்பவர்கள் சிறிய குதிரையின் (Pony) மேலேறி மாடுகளுக்கிடையே சவாரி செய்வர். தங்கள் குறியிட்ட மாடுகள் செல்வதை அவர்கள் கண்டவுடன், முதலாளிக்குச் சைகை செய்வார்கள். முதலாளியும் சரியென்று தலையசைப்பார். அப்பொழுது அந்த சிறிய குதிரை அவைகளுக்கிடையே சென்று முதலாளிக்குச் சொந்தமானவைகளை வேறு பிரித்து அப்படியே வளைத்துக் கொள்ளும். அந்த பாட்டையெழுதினவன் சொல்லுகிறான். `நான் வழி தவறின கன்றுக் குட்டியைப் போலிருக்கிறேன். மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனைப் போல் இருக்கிறேன். சவாரி செய்யும் மாடு மேய்ப்பவர்களின் முதலாளி வரும்போது நானும் மற்ற மாடுகளுடன் கொல்லப்படுவேன்’ (குறியிடப்படாத மாடுகளெல்லாம் கொல்லப்பட்டு, சூப் தயார் செய்யப்படுவது வழக்கம்) சவாரி செய்யும் மாடு மேய்ப்பவரின் முதலாளி யார்? அவர் தான் ஆட்டுக் குட்டியானவர். குறியிடப்பட்ட மாடுகளை நன்கறிந்து ஏழு தூதர்களை (மாடு மேய்பபவர்களை) அவர் நிறுத்தியிருக்கிறார். கவனியுங்கள், அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி சிங்காசனத்தை விட்டு சிங்கமாக, ராஜாவாக வந்து தம் உரிமைகளை அதாவது மணவாட்டியை பெற்றுக் கொள்கிறார். அதன் பின்பு அவர் என்ன செய்கிறார்? அவருடன் போட்டியிட்ட சாத்தானை அக்கினிக் கடலில் தள்ளுகிறார். அவருடைய மீட்பின் வார்த்தையைப் புறக்கணித்த ஏனையோரும் அவனுடன் அக்கினிக் கடலில் தள்ளப்படுகின்றனர். இன்னும் சிங்காசனத்தின் மேல் கிருபை வீற்றிருக்கிறது என்பதை மறந்து போக வேண்டாம். அதை நீங்கள் நிராகரிக்காதீர்கள். நீங்கள் யாரென்பதை சவாரி செய்யும் மாடு மேய்ப்போர் (தீர்க்கதரிசிகள்) அறிவார்கள். இரண்டாயிரம் வருட காலமாக சாத்தான் அவருக்குத் தொந்தரவு கொடுத்து, `என் விருப்பப்படி ஜனங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் இன்னமும் என் ஆதிக்கத்தில் இருக்கின்றனர். அவர்கள் என்னுடையவர்கள், அவர்கள் உரிமையை பறிகொடுத்துவிட்டனர்’ என்றெல்லாம் வந்தான். ஆனால் அவரோ மீட்கும் இனத்தானாக நம்மை மீட்டுக் கொண்டார். அவர் இப்பொழுது பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். சாத்தான் `அவர்களைக் கல்லறையில் வைப்பேன்’ என்கிறான். அவர் சபையை நோக்கி, `உங்களைக் கல்லறையிலிருந்து நான் உயிர்ப்பிப்பேன். ஆனால் முதலில் நான் பரிந்து பேசும் ஊழியத்தை ஏற்க வேண்டும்’ என்கிறார். அவர் ராஜாவாக வந்து எல்லா ஜாதிகளையும் இரும்புக் கோலால் அரசாளுவார். அப்பொழுது நியாயத்தீர்ப்பு உண்டாகும். ஓ சகோதரனே! நமது மீட்கும் இனத்தான் எல்லாவற்றையும் தம் கரத்தில் வைத்திருக்கிறார். அவர் என்ன செய்கிறார்? அவர் சாத்தானை நோக்கி, `அவர்கள் இப்பொழுது என்னுடையவர்கள். அவர்களை நான் கல்லறையிலிருந்து உயிர்ப்பிப்பேன்’ என்கிறார். அவர் பொய்யரையும், வார்த்தையைப் புரட்டின வர்களையும் சாத்தானுடன் அக்கினிக் கடலில் தள்ளி நிர்மூலமாக்குவார். அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். நான் செய்தியை முடிக்கும் முன்னர் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். நாம் 7ம் வசனம் வரை விவரித்து விட்டோம். இப்பொழுது 8ம் வசனம் முதல் 14ம் வசனம் முடிய என்ன நிகழ்கின்றது என்பதைப் பார்க்கலாம். `அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களுக்கும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற் கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து’. அந்த பரிசுத்தவான்கள் பலிபீடத்தின் கீழுள்ளவர்கள். அவர்கள் மீட்புக்காகவும், உயிர்த்தெழுதலுக்காகவும் ஜெபித்தனர். இப்பொழுது மூப்பர்கள், `எங்களுக்கு ஒரு பிரதிநிதி இப்பொழுது இருக்கிறார். நமக்கு பரலோகத்தில் ஒரு இனத்தான் உண்டு. அவர் தம்முடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வந்து விட்டார்’ என்று சொல்லி அந்த பரிசுத்தவான்களின் ஜெபங்களை ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக ஊற்றுகின்றனர். `தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்! ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்கள் நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்’. அவர்கள் அங்கேயே இருக்க விரும்பினர். ஆனால் இங்கே அவர்கள் மறுபடியும் பூமிக்குச் சென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாகின்றனர். தேவனுக்கு மகிமை! எனக்கு அன்னிய பாஷை பேச வேண்டுமென்கிற உணர்வு உண்டாகின்றது. அவரைத் துதிப்பதற்கு என்னிடம் போதிய பாஷை இல்லையென்று எனக்குத் தோன்றுகிறது. நான் அறியாத பாஷை அதற்கு அவசியம். `பின்னும் நான் பார்த்தபோது... அநேக தூதர்களுடையசத்தத்தைக் கேட்டேன்’. அங்கு என்ன குதூகலம் உண்டாயிருக்கிறது என்பதைக் கவனிக்கவும். ஆட்டுக்குட்டியானவர் வந்து மீட்பின் புத்தகத்தை வாங்கினவுடன், பலி பீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள் மகா சத்தமிட்டனர். மூப்பர்கள் தாழ விழுந்து வணங்கினர். அவர்கள் பரிசுத்தவான்களின் ஜெபங்களை அவருக்கு முன் ஊற்றினர். நம் இனத்தான் ஒருவர் நம் பிரதிநிதியாக இருக்கிறார். அவர்கள் முகங்குப்புற விழுந்து, `நீர் அடிக்கப்பட்டதனால் பாத்திரவானாயிருக்கிறீர்’ என்று சொல்லி ஒரு பாட்டைப் பாடுகின்றனர். தூதர்கள் என்ன செய்கின்றனர் என்பதனை இப்பொழுது கவனியுங்கள். `பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்iயும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழூந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன். அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது’. (அடேயப்பா! மேலும் கவனியுங்கள்.) `அவர்களும் மகா சத்தமிட்டு, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக் கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்’. ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஸ்தலத்தை விட்டு தமக்குச் சொந்தமானவர்களைப் பெற்றுக் கொள்ள வரும் போது, பரலோகத்தில் என்ன குதூகலம் பாருங்கள்! யோவானும் மகிழ்ச்சியடைந்தான். முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, அவன்பெயர் அப்புத்தகத்தில் எழுதப் பட்டிருப்பதை அவன் கண்டிருப்பான். அவன் என்ன சொல்லுகிறான் என்பதைக் கவனியுங்கள். `அப்பொழுது வானத்திலும் பூமியிலும் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும் அவற்றுள்ளடங்கிய வஸ்துக்கள் யாவும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமயும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்’ ஆமென்! ஆமென்! ஆமென்! ஓ! `அதற்கு நான்கு ஜீவன்களும், ஆமென் என்று சொல்லின, இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத்தொழுது கொண்டார்கள்’. ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வரும்போது பரலோகத்தில் என்ன குதூகலமான சமயம்! அந்த புத்தகம் பரலோகத்திலும் முத்தரிக்கப் பட்டுள்ளது. `என் பெயர் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறதா?’ எனக்குத் தெரியாது; அது உலகத் தோற்றத்துக்கு முன்னாலேயே அதில் எழுதப்பட்டிருக்க வேண்டும். மீட்பிற்கு முதல் அடையாளம் உலகத் தோற்றத்துக்கு முன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவராம். அவர் புத்தகத்தை வாங்கி (மகிமை), முத்திரைகளை உடைத்து, புத்தகத்தைத் திறந்து, அதில் அடங்கியுள்ள இரகசியங்களைத் தமது ஜனங்களுக்கு வெளிப்படுத்த எண்ணி, அவருடைய ஏழாம் தூதனிடம் பூமிக்கு அதை அனுப்புகிறார். அப்பொழுது என்ன சம்பவித்தது? பரலோகத்தில் மிகுந்த சத்தமும், ஆரவாரமும், அல்லேலுயாவென்ற கரகோஷமும், தேவனுக்கு மகிமை என்னும் சத்தமும் எழும்புகின்றது. வயோதியனான யோவானும் அங்கு நின்று கொண்டு சத்தமிட்டான். அவன் `வானத்திலுள்ள சிருஷ்டிகள் யாவும், பூமியிலுள்ள அனைத்தும் நான் மகா சத்தமிட்டதைக் கேட்டன’ என்கிறான். ஆமென்! சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு ஸ்தோத்திரமும், மகிமையும், மகத்துவமும், வல்லமையும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக! முத்திரைகள் உடைக்கப்படும் போது பரலோகத்தில் என்ன சந்தோஷம்! யோவான் காலமாகிய திரைக்குப் பின்னால் இருப்பவைகளைக் கண்டு, `அதோ யோவான் இருக்கிறான்’ என்று சொல்லி தன்னையே அங்கு கண்டு கொண்டு மகிழ்ச்சி மிகுதியினால் மிகுந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்திருப்பான் அல்லவா? `பரலோகத்திலுள்ளவைகள் யாவும், பூமியிலுள்ளவைகள் யாவும், சர்வ சிருஷ்டியும், `ஆமென், ஸ்தோத்திரமும், மகிமையும், ஞானமும், வல்லமையும், மகத்துவமும், ஐசுவரியமும் அவருக்கே உரியது’ என்று சொல்லுவதை நான் கேட்டேன்’ என்று யோவான் கூறுகிறான். `விரைவில் ஆட்டுக் குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு வருவார் அவள் எப்பொழுதும் தமது பக்கத்தில் இருக்க `வானத்தின் சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பர் ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும் எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர் நாம் இயேசுவுடன் நித்தியமாக அரசாளுவோம் ஓ, `வந்து புசியுங்கள்’ (வார்த்தையை) என்று எஜமானன் அழைக்கிறார் வந்து புசியுங்கள் (இதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் போதா) நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் வந்து விருந்துண்ணலாம். (அந்த மேசையை விட்டுச் சென்றால் உங்களுக்கு ஆகாரம் கிடைக்காது, திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீரை திராட்சரசமாக மாற்றினவர்....’ `என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்’ என்று அவர் வாக்களித்துள்ளார். என்னே மகிமை! இந்த கடைசி நாட்களில் இவைகளை அளிப்பதாக அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த இரகசியங்கள் வெளிப்படும் தருவாயில் இருக்கும் உங்களை, `வந்து புசியுங்கள்’ என்று அவர் அழைக்கிறார் என் சகோதரனே, அதை இழந்து போகவேண்டாம். இப்பொழுது சந்று நேரம் நாம் தலை வணங்கி ஜெபிப்போம். நாளை இரவு, தேவனுடைய கிருபையால், முதலாம் முத்திரையின் கீழுள்ள இரகசியங்களைப் பார்ப்போம். தேவன் அந்த முத்திரையை உடைத்து, உலகத் தோற்றத்துக்கு முன்னால் அதில் மறைந்திருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துவார். அதற்கு முன்பு, பாவியாகிய நண்பனே, வெதுவெதுப்பான சபையின் அங்கத்தினனே, நீ சபையின் அங்கத்தினனாய் மாத்திரம் இருந்தால், அது இருந்தும் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான், உனக்கு மறுபிறப்பு அவசியம். நீ இயேசுவின் இரத்தத்தினிடம் வரவேண்டும். உன் பாவங்களைக் கழுவி, அதை நினையாமற்போகச் செய்யும் ஒருவரிடம் நீ வரவேண்டும். ஆட்டுக்குட்டியானவரை ஆகாயத்தில் சந்திக்க நீ இன்னமும் ஆயத்தமாகவில்லையென்றால், சர்வ வல்லமையுள்ள தேவனால் எனக்களிக்கப்பட்ட வல்லமையின் ஊழியத்தில், ஒரு தூதன், அக்கினிஸ்தம்பம் இவர்கள் பங்கெடுக்கும் இந்த ஊழியத்தில், இயேசுவின் நாமத்தினால் உனக்கு நான் கட்டளையிடுகிறதாவது, ஒரு விடுதியின் அங்கத்தினனாக, இந்த பூமியில் காணப்படும் iதாபனங்களின் அங்கத்தினனாக மாத்திரம் இருந்து கொண்டு, அவரைச் சந்திக்க முயலவேண்டாம். எனக்குத் தெரிந்த வரை அவர் இப்பொழுதும் சிங்காசனத்தில் வீற்றிருந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். இத்தருணத்தை நழுவவிடாமல் இப்பொழுதே அவரண்டை வா, நீ அவரிடத்தில் வரவேண்டு மென்று விரும்பினாலும் உன்னால் வரமுடியாமல் போகும் நாள் ஒன்று வரும். அப்பொழுது பரிந்து பேசுகிறவர் உனக்கு இருக்கமாட்டார். தேவனுடைய இரகசியங்கள் வெளிப்பட்டு தேவ ஆவியினால் ஊர்ஜிதப்படும். இக்காலமாகிய ஏழாம் சபையின் காலத்தை நாம் அறிந்து கொள்வோமானால், இன்னும் அதிக சமயமில்லை என்பதை நாமறியலாம். ஆகையால் பாவியாகிய நண்பனே, இப்பொழுதே அவரண்டை வா. கர்த்தராகிய இயேசுவே, காலம் கடந்துகொண்டே போகின்றது. நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் இப்பொழுது காலதாமதமாயிருக்கலாம். இந்த சமயம் சமீபித்து வருவதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விசுவாசிக்கு இது, இந்த உலகம் இதுவரை காணாத மகத்தான சமயமாயிருக்கும். ஆனால் உம்மைப் புறக்கணித்தவனுக்கு இது மிகவும் விசனமான ஒரு சமயம். வரப்போகும் உபத்திரவங்களை விவரிப்பதற்கு வார்த்தைகள் போதா. அவ்வாறே விசுவாசிக்கு அளிக்கப்படவிருக்கும் ஆசீர்வாதங்களை விவரிப்பதற்கும் வார்த்தைகள் போதா. பிதாவே, இங்குள்ளவர்களில் சிலர் நம்பிக்கையற்றவர்களாய் இருக்கக்கூடும். அவர்கள் புத்திக்கூர்மையுள்ள மானிடர். இரத்தம் இப்பொழுதும் கிருபாசனத்தின் மேல் இருக்குமாயின், ஆட்டுக்குட்டியானவர் இன்றிரவு சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு அவர்கள் இருதயங்களுக்குள் வந்து, அவர்கள் இழந்துபோனவர்கள் என்பதை வெளிப்படுத்தி, தம் இரத்தம் தோய்ந்த கரங்களை நீட்டி, `சமயமுள்ள பொழுதே வா’ என்று அவர்களை வரவேற்கட்டும். இன்றைய செய்தியை ஜெபத்துடன் உம் கரத்தில் சமர்ப்பிக்கிறேன். பிதாவே, நீர் என்ன வேண்டுமானாலும் செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமென். நாம் தலைகுனிந்தவாறே, இந்த தேவையை நீங்கள் பூர்த்தி செய்யாமலிருந்தால், உங்கள் ஸ்தாபனத்தை மாத்திரம் நீங்கள் நம்பியிருந்தால், அவைகள் உங்களை மீட்க முடியாது. மரித்துப் போன பரிசுத்தவான்கள் பரிந்து பேசுதலில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பீர்களானால், நீங்கள் இன்னமும் இரட்சிக்கப்படவில்லை. உங்கள் நற்கிரியைகளின் பேரில் சார்ந்திருந்தால், நீங்கள் இன்னமும் இரட்சிக்கப்படவில்லை. அன்னிய பாஷை பேசுதல், குதித்து நடனமாடுதல், போன்ற உணர்ச்சிகளில் மாத்திரம் நம்பிக்கைக் கொண்டு, தனிப்பட்ட விதத்தில் ஆட்டுக்குட்டியானவரை நீங்கள் அறியாமலிருந்தால், இன்றிரவே தேவனிடத்தில் அந்தக் காரியத்தைச் சரிபடுத்திக் கொள்ள தேவனுடைய முன்னிலையில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். இருதயத்தின் ஆழத்திலிருந்து நீங்கள் ஜெபம் செய்து, எளிமையுள்ளவர்களாயிருங்கள்! ஏனெனில் தேவன் எளிமையில் மறைந்திருக்கிறார். `இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அனுதினம் சபையில் சேர்த்துக் கொண்டு வந்தார்’ என்ற வேதவாக்கியம் நினைவிருக்கிறதா? நாங்கள் இப்பொழுது உங்களுக்காக ஜெயிக்கப் போகிறோம். அப்பொழுது நீங்கள் நித்தியத்திற்கேற்ற தீர்மானம் செல்வீர்கள் என்று நம்புகிறேன். தீர்மானம் என்பது ஒரு கல்லைப் போன்றது. ஒரு கொத்தன் அந்தக் கல்லை வடிவுபடுத்தி கட்டிடத்தில் பொருத்தாவிட்டால், அதனால் என்ன பயன்? பரிசுத்த ஆவியானவர் தாமே அவ்வாறே நீங்கள் இருக்க வேண்டிய நிலையையடையும் வரை உங்களை வடிவுபடுத்தி சீர்படுத்துவாராக! நீங்கள் அனலற்ற ஸ்தாபனத்தின் அங்கத்தினராகவோ, அல்லது பாவியாகவோ, கிறிஸ்துவையற்றவர்களாய், பரிசுத்த ஆவி இல்லாதவர்களாய் இருப்பீர் களானால், தேவன் தாமே இன்றிரவு உங்களுக்கு சமாதானத்தை அருளட்டும். ஆண்டவரே, உம் சமூகத்தில் எங்ஙனம் வரவேண்மென்று வார்த்தையின் மூலம் நான் அறிந்த அளவுக்கு, உம்முடைய சமூகத்தில் நான், இவர்களுடன் கூட வருகிறேன். வார்த்தையானது இன்றிரவு அவர்களுடைய இருதயங்களில் குடிகொண்டிருக்கிறது என்று நான் நம்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் தங்கள் இருதயங்களில் வீற்றிருக்கிறார் என்னும் நிச்சயமில்லாதவர்கள் யாராவது இங்கே இருப்பார்களானால் அவர்களது மூர்க்க சுபாவம், அலட்சியம், தன்னலம் போன்றவை, பரிசுத்த ஆவி பெறாமல் அவர்களைத் தடுத்து நிறுத்தி யிருக்குமானால் ஸ்தாபனத்தின் கொள்கைகள் அல்லது உணர்ச்சிகள் தேவனுடைய இனிமையான ஐக்கியத்தினின்று அவர்களை பிரித்திருக்கு மானால், அவையெல்லாம் இப்பொழுது அகற்றப்பட வேண்டுமாய் கெஞ்சுகிறேன். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் தோய்ந்த அந்த இனத்தான், சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு, அவருடையவர்களைப் பெற்றுக் கொள்ள தேவனுடைய வெளிச்சத்தின் நடைபாதையில் நடந்து வருகிறார். அத்தகைய ஆட்டுக்குட்டியானவரை அவர்கள் இன்றிரவு ஏற்றுக் கொள்ள உதவி புரியும். ஒவ்வொரு தீர்மானமும் பயபக்தியாக செய்யப்படட்டும். அவர்கள் தங்களை உமக்கு மாத்திரம் சமர்ப்பிக்கட்டும். நீர் மாத்திரமே அவர்களை வடிவுபடுத்தி தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக மாற்ற முடியும். நான் ஏவப்பட்ட விதமாய் இந்த பயபக்தியான ஜெபத்தை ஏறெடுக்கிறேன். நீங்கள் மறுபடியும் பிறந்தாலொழிய கிறிஸ்தவர்களாக முடியாது. செய்தி உண்மையென்று நீங்கள் பரிபூரணமாக விசுவாசித்து, தேவனுடைய கிருபை மாத்திரமே உங்களை இரட்சிக்க முடியுமென்று மனப் பூர்வமாக விசுவாசித்து, அவர் உங்கள் இருதயங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை நம்பி, அவரை ஏற்றுக்கொள்ளவும், உங்கள் நிலையை அவர் மாற்றவும் நீங்கள் விரும்பினால், தயவுசெய்து அதற்கு சாட்சியாக எழுந்து நில்லுங்கள். பரம பிதாவே உம்முடைய வார்த்தையை வேதத்தினின்று எடுத்துரைப்பதைத் தவிர வேறொன்றையும் செய்ய நானறியேன். இருக்க வேண்டிய நிலையில் இல்லையென்று உணர்ந்தவர்கள் இப்பொழுது நின்று கொண்டிருக்கின்றனர். அவர்கள் எடுக்கப்படுதலுக்கென்று ஆயத்தமாக இல்லை. முதலாம் முத்திரை எங்களுக்கு திறக்கப்படும் முன்பு கூட அது நிகழலாம். பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். உமது தாசனாகிய நான் இந்த ஜெபத்தை, அவர்கள் ஜெபிக்கும் போதே, பெரிய மத்தியஸ்தராகிய கிறிஸ்துவிடம் ஏறெடுக்கிறேன். அவர்களுடன் என்னுடைய ஜெபத்தையும், இரத்தம் தோய்ந்த பலியாகிய இயேசுகிறிஸ்து வீற்றிருக்கும் தந்தம் நிறம் கொண்ட தேவனுடைய சிங்காசனத்திற்கு ஏறெடுக்கிறேன். அவர் எந்த சமயத்திலும் சிங்காசனத்தை விட்டு புறப்படக் கூடும். அதன் பிறகு கிருபை இராது. அப்பொழுது அது நியாயாசனமாகும். இப்பொழுது எழுந்து நிற்கும் ஜனங்கள், தங்கள் இருதயங்களில் பாவ அறிக்கை செய்து கொண்டு, பரிசுத்த ஆவியானவர் அவர்களை உருவாக்கி, வடிவுபடுத்தி, தேவனுடைய வீட்டில் ஜீவனுள்ள கற்களாக அவர்களைப் பொருத்த விருப்பங் கொள்கின்றனர். ஆண்டவரே, அவர்களுக்கு அதை அருள் புரியும். பிதாவே அவர்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். `மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்’ என்று நீர் உரைத்திருக்கிறீர். நீர் எல்லார் முன்னிலையிலும் இன்றிரவு சிங்காசனத்தில் வீற்றிருக்கும் போது, இவர்கள் எழுந்து நின்று தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்கள் இருதயங்களின் ஆழத்திலிருந்து அறிக்கை செயவார்களானால், நீர் அவர்களுக்காகப் பரிந்து பேசி, அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் உண்டாயிருக்கும் கிருபையினாலும் இரக்கத்தினாலும் அவர்களை சேர்த்துக் கொள்வீர். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடையவர்களாவார்கள், ஆமென். நின்று கொண்டிருப்பவர்களில் யாருக்காவது பாவமும், குற்றமும் அகன்று போயின என்னும் உணர்வு உண்டாயிருந்தால், உங்கள் கைகளை உயர்த்துங்கள். ஒருவரோடு ஒருவர் கை குலுக்கி, `சகோதரனே, உனக்காக ஜெபிக்கிறேன்’ என்றும் `சகோதரியே, உனக்காக நான் ஜெபிக்கிறேன்; கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக’ என்றும் சொல்லுங்கள். மற்றவையெல்லாம் சர்வ வல்லமையுள்ளவரின் கரங்களில் உள்ளன. `அழைக்கிறார், அழைக்கிறார் விரும்பியே இயேசு உன்னை தயவாய் அழைக்கிறார்’ அவரில் நீங்கள் அன்பு கூறுகின்றீர்களா? அவர் அதிசயமான வரல்லவா? அவரில்லாமல் நான் என்ன செய்யமுடியும்? `மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’. ஆண்டவரே, உம் வார்த்தையினால் என்னைப் போஷித்தருளும், `சபை கூடிவருதலைச் சிலர் விட்டு விடுகிறது போல நாமும் விட்டு விடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம். நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய் பார்க்கிறீர்களோ அவ்வளவாய் புத்தி சொல்லவேண்டும்’. கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு முத்திரைகள் உடைக்கப் படும்போது, தேவனுடைய வார்த்தை ஜனங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டுமென்று, தேவ கிருபையை முன்னிட்டு முழு முயற்சியுடன் அவரிடம் மன்றாடுவோம்.. நான் உங்களை மறுபடியும் சந்திக்கும் வரை தேவன் உங்களோடு கூட இருப்பாராக! இப்பொழுது ஆராதனையை நம் அருமை சகோதரரும், போதகருமான சகோ. நெவிலிடம் சமர்ப்பிக்கிறேன். எத்தனை பேர் சகோ. நெவில்லை நேசிக்கிறீர்கள்? நாமெல்லாரும் அவரை நேசிக்கிறோம். சகோ. நெவில், முன்னால் வாரும், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ******* முதலாம் முத்திரை மார்ச் 18,1963 பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா இப்பொழுது ஜெபிப்பதற்காகத் தலை வணங்குவோம். எங்கள் பரம தந்தையே, உம்மை ஆராதிப்பதற்கென்று இன்னுமொரு தருணம் அளிக்கப்பட்டதற்காக இந்த இரவு நேரத்தில் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம். நாங்கள் உயிர் வாழ்ந்து, நித்திய ஜீவனின் மகத்தான வெளிப்பாடு எங்களுக்குள் தங்கியிருப்பதற்காக உம்மைத் துதிக்கிறோம். பிதாவே, தேவனுடைய வார்த்தையை ஒன்றாக சேர்ந்து ஆராய்வதற்கென இன்றிரவு நாங்கள் கூடி வந்துள்ளோம். உலகத் தோற்றத்துக்கு முன் மறைக்கப் பட்டிருக்கும் இந்த இரகசியங்களை ஆட்டுக்குட்டியானவர் ஒருவரே எங்களுக்கு வெளிப்படுத்தித் தர முடியும். இன்றிரவு அவர் எங்கள் மத்தியில் வந்து தமது வார்த்தையை வெளிப்படுத்த நாங்கள் கெஞ்கிறோம். இந்தக் கடைசி காலத்தில், அவருக்கு நாங்கள் எவ்விதத்தில் சிறந்த ஊழியர்களாயிருக்க வேண்டும் என்பதை அதன் மூலம் அறிந்துகொள்வோம். தேவனே கடைசி நாட்களில் இருக்கும் பலவீனராகிய எங்களுக்கு நாங்கள் வாழும் காலத்தையும், வெகு விரையில் ஆண்டவர் வரப்போகிறார் என்னும் நிச்சயத்தையும் எங்களுக்கு அறிவுறுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவையனைத்தையும் கேட்கிறோம். ஆமென். `கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மனமகிழ்ச்சியாயிருந்தேன்’ என்று தாவீது ஒரு முறை கூறியிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். நாம் இங்கு கூடி வருவது பெரும் சிலாக்கியமாகும். நாம் ஒன்றுகூடி தேவனுடைய வார்த்தையை ஆராய்வது இந்த மகத்தான நம்பிக்கையை நமக்களிக்கிறது. அனேகர் இடமில்லாத காரணத்தால் நின்று கொண்டேயிருக்கின்றனர். என்னாலானவரை நான் துரிதமாக ஆராதனையை முடித்து விட முயல்வேன். கடந்த இரண்டு நாட்களாக பரிசுத்த ஆவியின் பிரசன்னத்தினால் நீங்கள் களிகூர்ந்திருப்பீர்களென்று நம்புகிறேன். வெகுகாலமாக நிகழாத ஒரு காரியம் இன்றைக்கு நிகழ்ந்தது, முத்திரைகள் உடைக்கப்படும் பாகத்தை நான் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இருபது வருடங்களுக்கு முன்பாக இதை நான் படித்ததுண்டு, ஆனால் அப்பொழுது எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. இந்த முத்திரைகளில் ஏதோ விசேஷித்த ஒன்று அடங்கியிருப்பதாக எனக்குத் தென்பட்டது. ஏனெனில் முத்திரைகள் கொண்டது ஒரு முழுப்புத்தகமாகும். அந்த முழு புத்தகமும் முத்திரிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு முத்திரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதை இவ்விதம் சுருட்டுகிறோம். கடைசியில் காகிதத்தின் ஒருசிறு பாகம் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். அது முதலாம் முத்திரை, அது புத்தகத்தின் முதல் பாகம். அதன் பின்பு அது மறுபடியும் இவ்விதமாகவே சுருட்டப்பட்டு, முடிவில் வேறொரு பாகம் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். அது இரண்டாம் முத்திரை. ஆக மொத்தம் இரண்டு முத்திரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த விதமாக சுருள்களாக வேதப் புத்தகம் முழுவதுமே அக்காலத்தில் எழுதப்பட்டது. இம்முத்திரைகளை நாம் உடைக்கும்போது, புத்தகத்திலுள்ள இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன. நீங்கள் வீட்டிற்குச் சென்று எரேமியா புத்தகத்தைப் படித்தீர்களா? உங்களில் அனேகர் சென்ற இரவு அந்த பாகத்தைக் குறித்துக் கொண்டீர்களே? அது எழுதி முத்தரிக்கப்பட்டு, அவன் எழுபது வார சிறைவாசம் கழித்து தன் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வரும் வரை, அது வைக்கப்பட்டிருந்தது. அவையெல்லாவற்றையும் விவரிக்க இயலாது. ஏனெனில் அது நித்திய வார்த்தையாக, நித்திய புத்தகமாக இருக்கிறது. ஆகையால் முக்கியமான பாகங்களை மாத்திரம் நாம் அறிந்து கொள்ள முயல வேண்டும். இன்றைக்கு அனேக வேத வாக்கியங்களை நான் குறித்துக்கொண்டு வந்துள்ளேன். நீங்கள் இவைகளைப் படிக்கலாம். இவைகளை இப்பொழுது படித்தீர்களானால், ஒலிநாடாக்களைக் (Tapes) கேட்கும் போது அவை நன்றாக உங்களுக்குப் புரியும். வேதத்தில் அனேக இரகசியங்கள் அடங்கியுள்ளன. எனக்கு அறையினுள் வெளிப்பட்ட விதமாய், எல்லாவற்றையும் நான் உங்களுக்கு இந்த மேடையின் மேல் நின்று வெளிப்படுத்தினால், அது மிகவும் அற்புதமாயிருக்கும். ஆனால் இங்கு நான் வந்தவுடன் ஒருவாறு நெருக்கப்படுவதனால், ஜனங்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனக் கருதி, முக்கியமான பாகத்தை மாத்திரமே அவர்களுக்கு எடுத்துரைக்க முடிகிறது. சகோ, உங்ரன் (Ungren) `மகிமையை விட்டு இறங்கி வந்தார்’ என்னும் பாட்டை இப்பொழுது பாடினார். அதை நான் பாராட்டுகிறேன். அவர் மகிமையை விட்டு இறங்கி வரவில்லையென்றால், நம்முடைய கதி என்னவாயிருக்கும்? நமக்கு உதவி செய்ய அவர் இறங்கி வந்ததற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துவோம். நாம் இதுவரை வெளிப்படுத்தின விசேஷம் 1 முதல் 5 அதிகாரங்களைப் படித்துவிட்டோம். சென்ற இரவு 5ம் அதிகாரத்தை தியானித்தோம். இன்றிரவு 6ம் அதிகாரத்தைப் பார்ப்போம். நாம் இந்த அதிகாரத்தை ஆராயும்போது, பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படும் அனேக பாகங்களை நாம் குறிப்பிட நேரிடும். ஏனெனில் வேத புத்தகம் முழுவதுமே இயேசுகிறிஸ்துவை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. தேவன் தம்மை கிறிஸ்துவின் மூலமாய் இப்புத்தகத்தில் வெளிப்படுத் கிறார். கிறிஸ்து தேவனை வெளிப்படுத்துகிறார். அவர் தேவனை வெளிப்படுத்த இவ்வுலகில் வந்தார், ஏனெனில் அவரும் தேவனும் ஒன்றாயிருக்கின்றனர். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தைத் தம்மோடு கூட ஒப்புரவாக்கினார். வேறு விதமாகக் கூறினால், தேவன் கிறிஸ்துவின் மூலம், தம்மை வெளிப்படுத்தாதிருந்தால், தேவன் யாரென்பதை நாம் அறிந்து கொண்டிருக்க முடியாது. பல வருடங்களுக்கு முன்னால், தேவன் என்பேரில் கோபங் கொண்டிருக்கிறார்! ஆனால் கிறிஸ்து என்னை நேசிக்கிறார் என்று நான் நினைத்ததுண்டு. உண்மையைக் கூறினால், அவர்களிருவரும் ஒருவர்தான். கிறிஸ்து தேவனுடைய இருதயமாயிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களும் (அதைக் குறித்து நாம் நன்கு ஆராய்ந்தோம்) ஏழு சபையின் காலங்களை விவரிக்கின்றன ஏழு சபை காலங்கள் அல்லாமல், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், கலசங்கள்,தவளைகள் போன்ற அசுத்த ஆவிகள் இவையெல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன, ஒரு பெரிய படம் வரைந்து இவையெல்லாவற்றையும் அதனதன் ஸ்தானத்தில் பொருத்தி, உங்களுக்கு விவரிக்க எனக்கு மிகவும் ஆசையாயிருக்கிறது. அதை ஒரு சிறிய காகித துண்டில் வரைந்து வைத்திருக்கிறேன். எல்லாமே அதில் சரியாக அமைந்துள்ளன. வந்து போன காலங்கள் அனைத்தும் சரியாக பொருந்துகின்றன. நான் வரைந்தது ஒருக்கால் எல்லாமே சரியாயிராது. ஆனால் அவ்வளவு தான் நான் அறிந்தது. என்னால் முயன்றவரை நான் ஒரு செயல் புரிந்து, அதில் ஏதாவது ஒரு தவறு நேரிடின், தேவன் நிச்சயமாக அப்பிழையை மன்னிப்பார். முதல் மூன்று அதிகாரங்கள் ஏழு சபையின் காலங்களைப் பற்றினவை. 4ம் அதிகாரத்தில் யோவான் பரலோகத்ததிற்கு எடுக்கப்படுகிறான். சபையின் காலங்களைக் குறித்து அதிகம் சொல்லப்படவில்லை. அனேகருக்கு எடுக்கப்படுதல் நிகழ்ந்ததே தெரியாமலிருக்கும். நான் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) கூறினபடி. உபத்திரவ காலம் வரும் போது, எடுக்கப்படுதல் ஏன் சம்பவிக்கவில்லை என்று அனேகர் கேட்பார்கள். அப்பொழுது எடுக்கப்படுதல் ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். ஆனால் அவர்கள் அதை அறியாமலிருப்பார்கள். மணவாட்டியாகிய புறஜாதி சபைக்கு அனேக வாக்குத்தத்தங்கள் அளிக்கப்படவில்லை. சபையும், மணவாட்டியும் வெவ்வேறு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எல்லாமே மூன்று மூன்றாக அமைய வேண்டும். (நான்காக அல்ல) மூன்று, ஏழு, பத்து, பன்னிரெண்டு, இருபத்து நான்கு, நாற்பது, ஐம்பது. தேவன் தம்முடைய செய்திகளை வேதத்தின் எண்களைக் கொண்டு உறுதிபடுத்துகிறார். இந்த எண்களைத் தவிர, குறைவான எண்கள் உண்டானால், அடுத்து நிகழும் சம்பவத்துடன் அது பொருந்தாது, அப்பொழுது ஆரம்பத்திலிருந்து நீங்கள் மறுபடியும் எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். சகோ. லீ வேயில் (Lee Vayle) இங்கிருக்கிறார் என்று நினைக்கிறேன். அன்றொருநாள் பாதையை விட்டு விலகிச் செல்லும் மனிதரைக் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இது ஒரு இலக்கை நோக்கிச் சுடுவது போன்றதாகும். துப்பாக்கி சரிவர அமைந்து சுடுபவர் சரியான பயிற்சி பெற்று, இலக்கை நன்றாக நோக்கி சுட்டால், குண்டு இலக்கை அடிக்கும், சுடும்போது துப்பாக்கியின் குழாய் குறியை விட்டு அசைந்து போனால், அல்லது அதிர்ச்சியினால் ஆடிப்போனால், அல்லது பலத்த காற்று அதை அசைத்தால், குறி தவறிப்போகும். மீண்டும் இலக்கை சரியாகச் சுடவேண்டுமானால், ஆரம்பத்திலிருந்து துப்பாக்கியை சரிவர அமைத்து சுட வேண்டும். இல்லையெனில் குறி மறுபடியும் தவறிவிடும். வேதம் வாசிப்பதும் அவ்விதமாகவே அமைந்துள்ளது. நாம் அதை ஆராயத் தொடங்கி அது சரிவர அமையவில்லையெனில், நாம் எங்கேயோ தவறு செய்திருக்கிறோம் என்பது அதன் அர்த்தம். ஆகையால் நாம் மீண்டும் அதை ஆரம்பத்திலிருந்து படிக்க வேண்டும். நம் ஞானத்தை உபயோகித்து அதை புரிந்து கொள்ள முடியாது. வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அதை செய்ய முடியாது என்று நாம் வேதத்தில் கண்டோம். ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை செய்ய முடியும். வேதப் பள்ளிகள் அளிக்கும் வியாக்கியானம் எதுவாயினும் அது ஒன்றுமில்லை. ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். அவர் நமக்குதவி செய்வார் என்று நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். முன்னே நடந்ததும், இப்பொழுது நடக்கிறதும், இனி நடக்கப் போகிற காரியங்களையும் காண்பதற்கென யோவான் 4ம் அதிகாரத்தில் பரலோகத்திற்கு எடுக்கப்பட்டான். ஆனால் சபையானது அதற்கு முன்னமே இயேசுவைச் சந்திக்க ஆகாயத்தில் எடுக்கப்படுகிறது. வெளி.19ம் அதிகாரம் வரை அது மீண்டும் காணப்படுவதில்லை. அந்த அதிகாரத்தில் இயேசு ராஜாதி ராஜாவாக, கர்த்தாதி கர்த்தாவாக சபையுடன் திரும்ப வருகிறார். எப்பொழுதாவது ஒரு நாள் அவர் வருவார். அதற்கு முன்னால் இவையாவையும் விவரித்து முடிக்கலாமென நம்புகிறேன். அவ்வாறு இயலாவிடில், அதன் சாராம்சத்தையாவது நாம் அறிந்து கொள்ளலாம். 5ம் அதிகாரத்தில், ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்ட்ட புத்தகத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. முதலாவதாக, நாம் முதலாம் முத்திரையைச் சிந்திப்போம். ஆனால் அதற்கு முன்பு (இதற்கு ஆதாரமாக), நேற்று கூறினவைகளைப் பார்ப்போம் அந்த புத்தகம் மூல சொந்தக்காரரின் கையில் இருப்பதை யோவான் காண்கிறான். ஆதாம் எங்ஙனம் அதை இழந்தான் என்பது நினைவிருக்கிறதா? சாத்தானின் விவேகத்தைப் பெற்று அவன் அப்புத்தகத்தை பறிகொடுத்து, தனக்கிருந்த உரிமை யாவையும் அவன் இழந்து போனான். அவனை மீட்பதற்கு வேத வழியே இல்லாமலிருந்தது. பின்னர் தேவன் மனித ரூபங் கொண்டு மீட்பராகி, நம்மை மீட்டுக் கொண்டார். கடந்த காலங்களில் இரகசியமாயிருந்ததை இக்கடைசி காலத்தில் வெளிப்பட வேண்டியிருக்கிறது. `புத்தகத்தைத் திறக்கப் பாத்திரவான் யார்?’ என்னும் கேள்வி எழுந்தபோது, வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அதைச் செய்யப் பாத்திரவானாகக் காணப்படவில்லை. அதைப் பார்ப்பதற்கும்கூட யாரும் பாத்திரவானாக இல்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்! யோவான் அப்பொழுது அழத் தொடங்கினான். அப்படியானால், மீட்கப்படுவதற்கு எவ்வித வாய்ப்புமில்லை. எல்லாமே தோல்வி கண்டிருக்கவேண்டும். ஆனால் யோவானின் அழுகை விரையில் நின்றது. ஏனெனில் மூப்பர்களில் ஒருவன், `யோவானே, அழவேண்டாம். புத்தகத்தைத் திறப்பதற்கு யூதா கோத்திரத்து சிங்கமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார்’ என்றான். வேறு விதமாகக் கூறினால், அவர் மேற்கொண்டு, ஜெயங் கொண்டார். யோவான் திரும்பிப் பார்த்து, ஒரு ஆட்டுக்குட்டி வருவதைக் கண்டான். அது இரத்தம் தோய்ந்ததாய், அடிக்கப்பட்டு காயப்பட்டிருந்தது. அது சிலுவையில் துண்டு துண்டாக துண்டிக்கப்பட்டது,விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டு, கைகள் ஆணிகளால் கடாவப்பட்டு, தலை முள் முடியால் சூடப்பட்டிருந்தது. அவர் காண்பதற்கு பயங்கரமாக இருந்தார். இத்தகைய ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, மீட்பின் உரிமைப் பத்திரத்தைக் கையில் கொண்டவராய், சிங்காசனத்தில் வீற்றிருந்தவரின் அருகில் சென்று, அப்புத்தகத்தை அவர் கையிலிருந்து வாங்கி, முத்திரைகளை உடைத்து, புத்தகத்தைத் திறந்தார். இச்சம்பவம் நிகழ்ந்த போது பரலோகத்தில் மகத்தான காரியங்கள் நடைபெற்றன. இருபத்து நான்கு மூப்பர்களும், ஜீவன்களும் பரலோகத்திலுள்ள தூதரும், `பாத்திரவான்’ என்று மகா சத்தமிட்டு ஆர்ப்பரித்து, பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற் கலசங்களை ஊற்றினர். பலிபீடத்தின் கீழிருந்த பரிசுத்தவான்கள் சத்தமிட்டனர். நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், ஆட்டுக்குட்டியானவரே, நீர் பாத்திரவானாயிருக்கிறீர். நீர் எங்களை மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர், நாங்கள் பூமியிலே அரசாளுவோம்’ என்று பாடினர். அந்த புத்தகம் உலகத் தோற்றத்துக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டு எழுதப்பட்டது. இந்த புத்தகம் வேதப் புத்தகம் உலகத்தோற்றத்துக்கு முன்னால் எழுதப்பட்டது. கிறிஸ்துவும் ஆட்டுக்குட்டியானவராக உலகத்தோற்றத்துக்கு முன்னமே அடிக்கப்பட்டார். அவருடைய மணவாட்டி அங்கத்தினரின் பெயர்கள் உலகத்தோற்றத்துக்கு முன்னமே ஆட்டுக் குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டன. ஆனால் அப்பொழுது அது முத்தரிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுதோ, அதில் யாருடைய பெயர்கள் உள்ளன என்று வெளிப்படுகின்றது. என்ன மகத்தான காரியம்! யோவான், `ஆமென், துதியும் கனமும் அவருடையது’ என்று அவன் கூறியதை பரலோகத்திலுள்ள யாவரும், பூலோகத்திலுள்ள அனைவரும் கேட்டதாக உரைக்கிறான். பரலோகத்தில் அவனுக்கு அது ஒரு மகத்தான தருணமாயிருந்தது. ஏனெனில் ஆட்டுக்குட்டியானவர் பாத்திரவானாயிருந்தார். நாம் 6ம் அதிகாரத்தைத் தியானிக்கத் தொடங்கும் இச் சமயத்தில் ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தைக் கையில் ஏந்தியவாறு நின்று கொண்டு இரகசியங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார். நான் கூறுவதைப் புரிந்து கொள்ள ஜனங்கள் ஆவிக்குரியவர்களாக இருக்கிறார்களென்று நம்புகிறேன். இன்று பகல் 12.00 மணிக்குப் பரிசுத்த ஆவியானவர் என் அறைக்குள் நுழைந்து, நான் தவறாக நினைத்திருந்த ஒன்றைத் திருத்தியிராவிடில், நான் உங்களிடம் இன்று செய்தியளிக்கும் போது பயங்கரமான தவறு ஒன்றைப் பிரசங்கித்திருப்பேன். நான் பழைய பிரசங்கங்களிலிருந்து சிலவற்றை எடுத்து அப்பொழுது குறிப்பு எழுதிக் கொண்டிருந்தேன். முதலாம் முத்திரையின் இரகசியம் எனக்குத் தெரியாது. அனேக வருடங்களுக்கு முன்னர் இதைக்குறித்து நான் அளித்த செய்தியிலிருந்து சில குறிப்புகளை எழுதிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் டாக்டர் ஸிமித் (Dr. Smith) என்பவரின் கருத்துக்களையும், அனேக பிரசித்தி வாய்ந்த போதகர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும் ஒன்று தொகுத்து அப்பிரசங்கத்தை ஆயத்தம் செய்தேன். இவைகளை ஆதாரமாக வைத்துக் கொண்டு முதலாம் முத்திரையைப் படிக்கலாமென்று தீர்மானம் செய்தேன். ஆனால் இன்று 12.00 மணிக்கு பரிசுத்த ஆவியானவர் வேகமாய் முதலாம் முத்திரை அறைக்குள் நுழைந்தார். உடனே, முதலாம் முத்திரையைக் குறித்த இரகசியம் முழுவதும் திறக்கப்பட்டு வெளிப்பட்டது. இன்றிரவு முதலாம் முத்திரையைக் குறித்து நான் கூறப்போவது முற்றிலும் சத்தியம் என்று திண்ணமாகக் கூறுகிறேன். அது உண்மையென்பது எனக்குத் தெரியும். ஏனெனில் ஒரு வெளிப்பாடு தேவனுடைய வார்த்தைக்கு முரண்பட்டதாயிருந்தால், அது வெளிப்பாடேயல்ல. சில காரியங்கள் சத்தியமாகத் தென்படும். ஆனால் அவை சத்தியமாய் இல்லாமல் இருக்கக்கூடும். ஆட்டுக்குட்டியானவர் இப்பொழுது புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். 6ம் அதிகாரத்தைப் படிப்போம். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்: அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப் பவனாகவும் புறப்பட்டான். அது முதலாம் முத்திரை. இதைத்தான் இன்றிரவு தேவகிருபையைக் கொண்டு விவரணம் செய்யப் போகிறோம், ஒரு மனிதன் இதனை தன் சொந்த ஞானத்தினால் வியாக்கியானம் செய்ய முயன்றால் அவன் ஆபத்துகள் நிறைந்த நிலத்தின் மேல் நடக்கிறான். (அதாவது, அவன் நிச்சயமாக தவறு செய்வான்). ஆனால் நான் கூறப்போகும் இதன் விளக்கம் நான் சர்வ வல்லவரிடமிருந்து இன்று நேரடியாகப் பெற்ற வெளிப்பாடு என்பது உறுதி. ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட சுருள் புத்தகம் இப்பொழுது ஆட்டுக்குட்டியானவரால் வெளியிடப்படுகிறது. அந்த ஸ்தலத்தை தான் நாம் இப்பொழுது அடைந்திருக்கிறோம். தேவன் நமக்கு ஒத்தாசை செய்வாராக. முத்திரைகள் உடைக்கப்படும் போது, புத்தகத்திலுள்ள இரகசியங்களும் வெளிப்படுகின்றன. திரு. போகன்னான் (Bohannon) என்பவர் என் ஆப்த நண்பர். அவர் இன்றைய கூட்டத்தில் இருந்தால், அல்லது அவர் பந்துக்கள் யாராயினும் இருந்தால், நான் இப்போது கூறப் போவதை அவமரியாதையாகக் கொள்ள வேண்டாம். அவர் அரசாங்க உத்தியோகத்தில் மேலதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்பொழுது நானும் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இரட்சிக்கப்பட்டவுடன், ஒரு நாள் அவருடன் வெளிப்படுத்தின விசேஷத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். அவர் மிகவும் நல்லவர் தான். அவர் ஒரு ஸ்தாபனத்தில் அங்கத்தினராயிருந்தார். அவர் என்னிடம், `யோவான் காரமுள்ள உணவை வயிறு புடைக்கத்தின்று உறங்கச் சென்றிருப்பான்’ என்றார். (அதன் காரணமாக அர்த்தமற்ற சொப்பனத்தை அவன் கண்டான் என்று குறிப்பாக அவர் சொன்னார்.) என்னால் அதைத் தாங்க முடியவில்லை. நான் அவரிடம்; `தேவனுடைய வார்த்தையைக் குறித்து அவ்விதம் கூற உமக்கு வெட்கமில்லையா?’ என்று கேட்டேன். (அவர் மேலதிகாரியானதால், இதன் விளைவாக, அவர் என்னை வேலையிலிருந்தும் நீக்கியிருக்க முடியும்). அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று வயதாயிருக்கும் வேலை கிடைப்பதென்பது அக்காலத்தில் துர்லபமாயிருந்தது. ஆயினும் தேவனுடைய வார்த்தையை யாராவது அவமதித்தால், எனக்கு ஒரு பயம் ஏற்படுவதுண்டு, நான் கூறுவது முற்றிலும் உண்மையாகும். யோவான் கண்டது ஒரு சொப்பனமன்று; அல்லது ஒரு தீயக் கனவும் (nightmare) அல்ல. அவன் ஆகாரம் உட்கொண்டதனாலும் அல்ல. அவன் தேவனுடைய வார்த்தையைப் புத்தக வடிவில் எழுத முயன்றதன் காரணத்தால், ரோம அரசாங்கத்தாரால் பத்மு தீவுக்கு அவன் நாடு கடத்தப்பட்டான். கர்த்தருடைய நாளில் அவன் அத்தீவில் இருந்தான். அவனுக்குப் பின்னால் எக்காள சத்தம் போன்ற ஒரு பெரிதான சத்தத்தைக் கேட்டு அதைப் பார்க்க திரும்பின போது, ஏழு குத்து விளக்குகளின் மத்தியில் நிற்கும் மனுஷ குமாரனை அவன் கண்டான். (வெளி. 1.10). அப்புத்தகத்தில் வெளிப்பாடு அடங்கியுள்ளது. வெளிப்பாடு என்பது அதுவரை அறிவிக்கப்படாத ஒன்றை அறிவித்தலாம். அதில் அடங்கியுள்ள இரகசியம் முழுமையும் கடைசி காலம் வரை அறிவிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது, அவ்வாறு வேதம் கூறுவதை நாம் பார்க்கலாம். முத்திரைகள் உடைக்கப்படும்போது அப்புத்தகத்தில் அடங்கியுள்ள இரகசியங்கள் வெளிப்படும். முத்திரைகள் முற்றிலும் உடைக்கப்பட்டு விட்டால், மீட்பின் சமயம் முடிவடைந்து விட்டது. ஏனெனில் அப்பொழுது ஆட்டுக்குட்டியானவர் தம்மத்தியஸ்த உத்தியோகத்தை விட்டுவிட்டு தம் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வந்து விடுவார். அது வேதப் பூர்வமானது. சென்ற இரவு அதை வேதத்திலிருந்து வாசித்தோம். அவர் புறப்பட்டு வந்து புத்தகத்தை வாங்குகிறார். அப்பொழுது அவர் மத்தியஸ்தரல்ல. அவர் சிங்கமென்று அழைக்கப்படுகிறார். அங்ஙனமாயின் அவர் ராஜா. இன்றிரவு நாம் சிந்திக்கப் போகும் நாடகத்தில், சாத்தான் அவனது முகமூடியை மாற்றிக்கொண்டே போவதை நாம் காணலாம். கிறிஸ்து ஆவியின் ரூபமாயிருந்து மனித ரூபம் கொண்ட போது அவர் ஒரு நடிகனின் ஆடையை உடுத்திக்கொண்டார்.அதாவது மனித உடல் அவர் மீட்கும் இனத்தான் ஆவதற்கு மனித ரூபம் கொண்டு இறங்கி வந்தார். அது ஒரு நடிகனின் ரூபம்தான். எல்லாமே ஜீவன், மிருகம் போன்ற உவமைகளாக கூறப்பட்டுள்ளது. ஏனெனில், இது ஓர் நாடகமாகும். இந்த நடிகர்கள் முதலாம் சபையின் காலம் தொடங்கி நடிக்கின்றனர். ஏனெனில் கிறிஸ்து தம்மை ஏழு சபையின் காலங்களுக்கு வெளிப்படுத்துகிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? இந்த ஏழு சபையின் காலங்கள் தோறும் ஒரு பெரிய குழப்பம் ஏற்படுகிறது. சபையின் கால முடிவில், ஏழாம் தூதனின் செய்தி சபையின் காலங்களில் வெளிப்படாத இரகசியங்களை சபைக்கு வெளிப்படுத்தித் தரும். வேதம் கூறும் காலங்களில், இரகசியங்கள் உண்டாயிருந்தன. அவர்கள் யாவரும் யோவான் கண்ட விதமாகவே இச்சம்பவங்களை அர்த்தங்கொண்டனர். உதாரணமாக யோவான் வெள்ளைக் குதிரையின் மேலிருப்பவனைக் காண்கிறான். அதில் ஒரு இரகசியம் அடங்கியுள்ளது. அதின் இரகசியம் என்னவென்பதை வேதம் கூறும் காலத்திலுள்ளவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அந்த இரகசியம் என்ன வென்று வெளிப்படவேண்டும். ஆட்டுக்குட்டியானவர் பிதாவின் சிங்காசனத்தைவிட்டு புறப்பட்ட பின்னர் இந்த இரகசியங்களின் அர்த்தம் வெளிப்படும். நான் இப்பொழுது ஒன்றைக் கூறப்போகிறேன். செய்தியை ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொள்பவர்கள்... எந்த மனிதனும் அவன் விரும்பியதைப் பேசலாம். சரியென்று அவனுக்குக் காணப்படுவதை அவன் பேசுவதற்கு உரிமையுண்டு. ஒரு போதகர் இப்பொழுது நான் கூறப் போவதை தன் சபையாருக்கு அறிவிக்க விருப்பங்கொள்ளாமலிருந் தால், அதை அறிவிக்க வேண்டாம். நான் யாருக்கென்று அனுப்பப்பட்டேனோ, அவர்களுக்காக இதை சொல்லுகிறேன். அவர்களுக்கு நான் சத்தியத்தை உரைத்தாக வேண்டும். மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து கொண்டிருந்த ஆட்டுக் குட்டியானவருக்கு யார் யாருடைய பெயர் உலகத் தோற்றத்துக்கு முன் எழுதப்பட்டுள்ளது என்பது தெரியும். அப்பெயர் கொண்டவர்கள் உலகத்தில் தோன்றும் வரை, அவர் மத்தியஸ்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும். உங்களுக்குப் புரிகிறதா? முன் குறித்தலின் பரிபூரணம். தேவன் எவர்களை நித்திய ஜீவனுக்கென்று நியமித்தாரோ, அவர்களுக்காக அவர் மரிக்க வந்தார். ஆகையால் அவர்களின் எண்ணிக்கை முடிவடையும் வரை அவர் மத்தியஸ்த ஊழியத்தில் இருக்க வேண்டும். யாரும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. ஆனால் யார் கெட்டுப் போனவர்கள், யார் கெட்டுப் போனதில்லை என்பதை அவர் முன்னறிந்திருந்தார். ஆகையால் பூலோகத்தில் தோன்றாத ஒருவரின் பெயர் அதில் இருந்தாலும் கூட, அந்த மனிதன் தோன்றி ரட்சிக்கப்படும் வரை கிறிஸ்து மத்தியஸ்த ஊழியத்தில் நிலைத்திருக்க வேண்டும். கடைசி பெயர் வெண்மையாக்கும் திரவத்தில் (Bleach) விழுந்த மாத்திரத்தில், அவருடைய மத்தியஸ்த ஊழியம் முடிவு பெறும், `அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும். பரிசுத்த முள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்’ அவர் மத்தியஸ்த பிரகாரத்தை விட்டுப் புறப்பட்டவுடன்,அது நியாயாசனமாக மாறுகின்றது. அப்பொழுது கிறிஸ்துவை விட்டு அப்பாற்பட்டவர்களுக்கு ஐயோ! இப்பொழுது நாம், திட்டம் எவ்விதம் அமைந்துள்ளது என்பதைக் காண்போம். ஒரு காரியம் முதலில் சம்பவிக்கும்போது, அது பரலோகத்தில் முதலில் அறிவிக்கப்படுகின்றது. ஒரு முத்திரை திறக்கப்படுகின்றது. அது என்ன? ஒரு இரகசியம் வெளியரங்கமாகிறது. இரகசியம் வெளிப்படும் போது எக்காளம் முழங்குகின்றது. அது போர் உண்டாகும் என்று அறிவிக்கிறது. வாதை விழுகின்றது, சபையின் காலம் திறக்கப்படுகின்றது. பார்த்தீர்களா? போர் எதற்காக? அந்தச் சபையின் தூதன், முழுவதும் வெளிப்படாத தேவரகசியத்தை பெற்றுக்கொண்டு ஜனங்களிடையே சென்று அதை அறிவிக்கிறான். அது என்ன செய்கிறது? ஒரு யுத்தத்தைத் தொடங்குகிறது ஆவிக்குரிய யுத்தம். அதன் பின்னர் தேவன் அவர் தூதனையும் அக்காலத்தில் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் நித்திரையடையச் செய்து, அவர் செய்தியைப் புறக்கணித்தவர்கள் மீது வாதையை வரப்பண்ணுகிறார் தற்காலிக நியாயத் தீர்ப்பு. அது முடிவடைந்த பின்னர், ஜனங்கள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டு, வெஸ்லி போன்ற மனிதனின் கிரியைகளில் முக்கியத்தும் செலுத்துவதனால், எல்லாமே குழப்பமடைகின்றது. பின்னர் வேறொரு தேவரகசியம் புறப்பட்டுச் செல்ல சமயம் வரும் போது, வேறொரு சபையின் காலத்து தூதன் பூமியில் தோன்றுகிறான். அவன் வரும்போது, எக்காளம் ஊதுகிறான். அவன் போர் ஒன்றை அறிவிக்கிறான். அவன் மரித்த பின்பு, வாதை விழுந்து ஒரு கூட்டத்தாரை ஆவிக்குரிய மரணத்தில் ஆழ்த்துகின்றது. கடைசி தூதன் தோன்றும் வரை இது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்ந்து இவ்விதமாக தேவனுடைய மகத்தான திட்டம் நிறைவேறுகின்றது. கடைசி தூதன் வெளிப்படுத்துவதற்கு ஒரு பிரத்தியேகமான இரகசியம் அளிக்கப்படவில்லை. ஆனால் அவன், அவனுக்கு முன்பிருந்த காலங்களில் உண்மையாக வெளிப்படாத சகல சத்தியங்களையும் திரட்டி, அவனுக்கு வெளிப்பாடு அவ்வப்போது அளிக்கப்படும்போது எடுத்துரைக்கிறான். அதைக் குறித்து அறிய வேண்டுமானால் வெளி. 10:1-7ஐ படியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தை வாங்கி அதன் முத்திரைகளை உடைத்து, அதனுள் அடங்கிய இரகசியத்தை ஏழாம் தூதனுக்குக் காண்பிக்கிறார். தேவரகசியத்தை வெளிப்படுத்துவது மாத்திரமே ஏழாம் தூதனின் ஊழியமாக அமைந்திருக்கிறது. ஏழு சபையின் காலங்களைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டவைகள் நிறைவேறியுள்ளன என்பதை நாம் சரித்திரப் பூர்வமாய் சில நாட்களுக்கு முன்பு நிரூபித்துக் காண்பித்தோம். அது ஏழாம் சபைக்கு ஏழாம் தூதன் அளித்த செய்தியாகும். சரி, கடந்த காலங்களில் தேவரகசியமாயிருந்தவைகளை ஏழாம் தூதன் அவன் காலத்தில் வெளிப்படுத்துகிறான். வெளி. 10.7 அவ்விதம் கூறுகின்றது. ஏழாம் தூதன் தன் நாட்களில் சுவிசேஷ எக்காளத்தை பலமாய் முழங்கி, தேவ ரகசியத்தை நிறைவேற்ற வேண்டும். ஆதி சபையின் காலங்களில் ஒரு போதகம் உண்டாகி, அது பின்னர் உபதேச சட்டமாக மாறி, ஒரு ஸ்தாபனம் உண்டாக்கப்பட்டது. இருளின் காலங்களில் லூதர் தோன்றி, முதல் சீர்திருத்தத்தை உண்டு பண்ணினார். அவர், அவருடைய சபையின் காலத்தில், அதற்கு முன்பு மறைவாயிருந்த தேவ ரகசியத்தை வெளிப்படுத்தினார். ஆனால் எல்லா இரகசியங்களையும் அவர் வெளிப்படுத்தி முடிக்கவில்லை. அதன் பின்னர் வெஸ்லி, தோன்றி, `பரிசுத்தமாக்கப்படுதல்’ (Sanctification) என்பதைப் பிரசங்கித்தார். ஆயினும் அவர் எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கு தவறான போதகத்தை அவர்களிருவரும் கைக் கொண்டனர். உதாரணமாக வெஸ்லி முழுக்கு ஞானஸ்நானத்திற்குப் பதிலாக தெளிக்கப்படுதலைக் கைக் கொண்டார். அவ்வாறே லூதர், `கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம்’ என்பதற்குப் பதிலாக `பிதா, குமாரன், பரிசுத்த ஆவியை’ ஏற்றுக்கொண்டார். பின்னர் பெந்தேகோஸ்தே காலம் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்துடன் தோன்றியது. அவர்கள் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அதன் பின்னர் வேறொரு சபை காலமிராது. அத்துடன் அது முடிவடைகிறது லவோதிக்கேயா சபை, ஒவ்வொரு சபையின் தூதனும் அந்த சபையின் காலம் முடிவடையும் போது தோன்றுகிறான் என்பதை நாம் பார்க்கலாம். பவுல் அவன் சபையின் காலத்தின் முடிவில் தோன்றுகிறான். அவ்வாறே, ஐரினேயஸ், மார்டின் இவர்கள் தோன்றினர். லூதர், கத்தோலிக்க சபையின் கால முடிவிலும், வெஸ்லி, லூதரன் கால முடிவிலும் தோன்றினர். பெந்தேகோஸ்தே, `பரிசுத்தமாக்கப்படுதல்’ போதிக்கப்பட்ட காலத்தின் முடிவில் தோன்றி பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து போதித்தது. பெந்தேகோஸ்தே சபையின் கால முடிவில் நாம் ஒரு செய்தியைப் பெறப் போகிறோம் என்பதாக தேவனுடைய வார்த்தை உரைக்கிறதை இன்றிரவு தேவ ஒத்தாசையைக் கொண்டு உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். கடைசிக்காலத் தூதனின் அந்த செய்தியானது, அதுவரை தளர்ந்து விடப்பட்டுக் காணப்பட்ட பாகங்களையெல்லாம் நேராக்கி, சபை எடுக்கப்படுவதற்கென, தேவனுடைய சகல இரகசியங்களையும் வெளிப்படுத்தும். பின்னர், வேதத்தில் எழுதப்படாத ஏழு இடிமுழக்கங்களின் இரகசியங்கள் உள்ளன. மணவாட்டியை ஒன்று சேர்த்து எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை அளிக்கும் பொருட்டு, இவ்வேழு இடிமுழக்கங்களின் இரகசியங்கள் கடைசி நாட்களில் வெளிப்படுமென்று நான் நம்பகிறேன். ஏனெனில் இப்பொழுது நம்மிடம் உள்ளதைக் கொண்டு, நாம் எடுக்கப்படுதலில் செல்லமுடியாது. இப்பொழுது தெய்வீக சுகமளிப்புக்கும் கூட போதிய விசுவாசம் நமக்கில்லை. ஒரு இமைப்பொழுதில் நம் சரீரம் மாறி நாம் பூமியிலிருந்து எடுக்கப்படுவதற்கு, நமக்குப் போதிய விசுவாசம் இருக்க வேண்டும். சற்று பின்பு, தேவனுக்குச் சித்தமானால், அது எங்கு எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இந்த சபையின் காலங்கள்தோறும் முத்திரைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்பட்டு, இப்பொழுது கடைசி முத்திரை உடைக்கப்படுகின்றது. இக்காலங்களில் முத்திரைகள் உடைக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் அதன் மூலம் வெளிப்பட்ட சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்கள் ஊகித்ததே சரியென்று எண்ணி, அதைக் கடைசிக் காலத்தில் கடை பிடித்தவர்கள் யாவரும் உபத்திரவ காலத்திற்குள் செல்லவேண்டும். இவ்விதம் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் தீங்கு செய்தவர்கள் ஒரு சபையின் பேரால் அதைச் செய்தார்கள் என்பதை இன்னும் சில நேரத்தில் கண்டு கொள்ளலாம். அது மாத்திரமல்ல, அவர்கள் தான் உண்மையைhன சபை என்றும் அவர்கள் கூறிக் கொண்டனர். ஆகையால் நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாய் இருப்பதைக் குறித்து வியப்படைவதற்கில்லை, என்னை அறியாமலே அவைகளுக்கு விரோதமாய் நான் இருந்து வந்திருக்கிறேன். அது ஆதியில் தீவிரமில்லாத (mild) ஒன்றாகத் தொடங்கி, காலங்கள் தோறும் மோசமாகிக் கொண்டே வந்திருக்கிறது. ஜனங்களும் `மிகவும் நன்றாயிருக்கிறது’ என்று கூறி, அதை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் கடைசி காலத்தில் மிகவும் மோசமான ஒரு நிலையையடைந்து, அதன் விளைவாக உபத்திரவ காலத்திற்குள் செல்வர். கிறிஸ்துவின் மணவாட்டி உபத்திரவ காலத்திற்குள் செல்கிறாள் என்று எங்ஙனம் ஒருவன் கூறமுடியும்? என்னால் அதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை, அவள் உபத்திரவ காலத்திற்கு முன்பு எடுக்கப்படுகிறாள். சபையானது ஏற்கனவே நியாயத் தீர்க்கப்பட்டிருந்தால், மணவாட்டி இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் நியாயத் தீர்க்கப்பட்டிருந்தால், தேவன் முற்றிலும் பாவமில்லாத ஒருவனை எங்ஙனம் நியாயந்தீர்க்க முடியும்? மறுபடியும் பிறந்த உண்மையான விசுவாசி ஒவ்வொருவனும் தேவனுக்கு முன்பாக பாவமில்லாதவனாயிருக்கிறான். அவன் தன் கிரியைகளில் சார்ந்திராமல், பாவங்களை அறிக்கையிட்டு பாவங்கள் நீங்கப்பட இயேசுவின் இரத்தத்தின் பேரில் சார்ந்திருக்கிறான். வேதம் அவ்வாறே கூறுகின்றது. `தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான்’ (1 யோ. 5.18). ஏனெனில் அவன் பாவம் செய்ய முடியாது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் ஒரு மனிதனுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் போது, அம்மனிதனைப் பாவி என்று நீங்கள் எவ்வாறு அழைக்கலாம்! அந்த வெண்மையாக்கும் திரவம் பாவத்தைச் சிதறடித்து, அதை ஒன்றுமில்லாமல் செய்யும். இயேசுகிறிஸ்துவின் சுத்த இரத்தம் பாவத்தை அதன் வழியாகக் கடந்து செல்ல எவ்வாறு அனுமதிக்கும்? அது ஒருக்காலும் முடியாது. `பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்’ என்று இயேசு சொன்னார். (மத். 5.48). நாம் சற்குணராயிருக்க வேண்டுமென்று இயேசு சொன்ன காரணத்தினால் தான் அந்த எண்ணமே நம் மனதில் உதித்தது. நாம் சற்குணராயிருக்க வேண்டுமென்று இயேசு விரும்பினால், அதற்கான வழியையும் அவர் உண்டாக்கவேண்டும். அவர் தமது சொந்த இரத்தத்தின் மூலம் அவ்வழியை நமக்கு வகுத்துள்ளார். அநேக காலங்களுக்கு முன்னாலிருந்த இரகசியங்கள் சபையின் காலங்களிலும் இரகசியங்களாகவே இருந்துவந்து, இக்கடைசி காலத்தில் முத்திரைகள் உடைக்கப்படும் போது அவை வெளிப்பட வேண்டும். அந்த சமயத்தில் மத்தியஸ்த ஊழியம் முடிவடைந்திருக்கும். மணவாட்டி எடுக்கப்பட்ட பின்னர், கைவிடப்பட்டவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்லவேண்டும். II தெசலோனிக்கேயர் புத்தகத்தில் இது அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. II தெசலோனிக்கேயர் 2.7 நான் இதை எழுதும் போது, எனக்கு நடுக்கம் பிடித்தது: `அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது: ஆனாலும் தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. தடை செய்கிறவன் யார்? பாருங்கள், அக்கிரமத்தின் இரகசியம் முதலாம் சபையின் காலத்திலேயே கிரியை செய்தது. அக்கிரமம் என்பது என்ன? நாம் செய்யக்கூடாது என்று அறிந்தும், அக்காரித்தைச் செய்வது தான் அக்கிரமம். இன்றைக்கு உலகத்தில் அக்கிரமச் செய்கைக்காரர் உள்ளதாக பவுல் கூறியிருக்கிறான். நாம் 3-ம் வசனத்திலிருந்து வாசிப்போம்! எவ்விதத்திலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் (ம-னு-ஷ-ன்) வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். (பாவங்களை மன்னித்தல்) நான் உங்களிடத்திலிருந்த போது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? (இது போதிக்கப்பட்ட போது, நானும் அப்பொழுது அமர்ந்திருந்து கேட்டிருக்க எனக்கு விருப்பமுண்டு. நீங்கள் அவ்வாறு விரும்புவதில்லையா?) அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்கள்! அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே! பாருங்கள்! அக்காலத்திலல்ல, தன் காலத்தில் - முத்திரை உடைக்கப்படும் போது, அது என்னவென்று நாமெல்லாரும் அறிவோம். இந்த அக்கிரமக்காரன் யார்? அக்கிரமம் செய்து, தன் காலத்தில் வெளிப்படும் இந்த பாவ மனுஷன் யார்? அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது. (வஞ்கிக்கிறவர்கள், ஜனங்களைத் தவறான ஒன்றில் வழிநடத்தி அவர்களை ஏமாற்றுகிறவர்கள்) ஆனாலும் தடை செய்கிறவன் (சபை - கிறிஸ்துவின் மணவாட்டி) நடுவிலிருந்து (கர்த்தரால்) நீக்கப்படு முன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான், (கடைசிக் காலத்தில், முத்திரை உடைக்கப்படும்போது (என் காலத்திலல்ல, அவன் வெளிப்படும் அந்த காலத்தில்’ என்று பவுல் கூறுகிறான்). அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தின்hலே அழித்து (அதைப்பற்றி சிறிது நேரத்தில் நாம் சிந்திக்கப் போகிறோம்)... வாயின் சுவாசத்தினாலே (அது என்னவென்பதைப் பார்க்கலாம்) அழிந்து தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம் பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி (அவன் கிரியை சாத்தானின் செயலைப் போன்றிருக்கும்) சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் (ஜனங்களை அநீதியினால் வஞ்சிப்பான்) இருக்கும். (ஆனால் மணவாட்டியை அவன் வஞ்சிக்க முடியாது). இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின் மேலுள்ள அன்பை அவர்கள் அங்கீகரியாமற் போனபடியால் (கிறிஸ்துதான் சத்தியம், கிறிஸ்துதான் வார்த்தை. அவர்கள் சத்தியத்தை ஏற்பதைக் காட்டிலும் ஸ்தாபனங்களின் பிரமாணங்களை ஏற்பர்) அப்படி நடக்கும். ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள் ளாக்கப்படும்படிக்கு அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாக (`ஒரு பொய்யை’ அல்ல, `பொய்யை’ ஏவாளிடம் அதே பொய்யை அவன் சொன்னான்) கொடிய வஞ்சத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். என்னே ஒரு வாக்குமூலம்! மணவாட்டி எடுக்கப்பட்ட பின்னர், ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்தெடுக்கப்பட்ட உண்மையான கிறிஸ்துவின் மணவாட்டி எடுக்கப்பட்ட பின்னர் பாவ மனுஷன் வெளிப்படுவான். மணவாட்டி தன் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுவதை அனேகர் அறியவே மாட்டார்கள் என்று அன்றொரு நாள் நான் உங்களிடம் கூறினேன். அது உண்மை. ஒருவர் என்னிடம், `சகோ. பிரான்ஹாம்! அப்படியானால் மணவாட்டி மிகச் சிறிய கூட்டமாக இருக்குமே என்றார். இயேசு, `நோவாவின் நாட்களில் நடந்தது போல’ என்று கூறினார். நீங்கள் அவரிடம் அதைக் கேட்டு பாருங்கள். அக்காலத்தில் எட்டு பேர் தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர். மனுஷகுமாரன் வரும் நாளிலும் அவ்விதமாகவே இருக்கும். இன்றிரவு 800 பேர் எடுக்கப்பட்டால், நாளை அல்லது எப்பொழுதுமே அதைக் குறித்து ஒரு வார்த்தையும்கூட நீங்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். அவர்கள் போய்விட்டு இருப்பார்கள். நீங்கள் அதை அறியாமல் இருக்கலாம். நான் உங்களைப் பயப்படுத்தவோ அல்லது உங்களில் கவலையுண்டாக்கவோ முயலவில்லை. நீங்கள் எப்பொழுதும், ஒவ்வொரு நிமிடமும் ஆயத்தமாயிருக்க வேண்டும். அர்த்தமற்றவை யாவையும் அகற்றுங்கள். தேவனுடன் அலுவலில் ஈடுபடுங்கள். ஏனெனில் நீங்கள் நினைப்பதை காட்டிலும் காலதாமதமாகிவிட்டது. தவறான மணவாட்டி ஒன்று உண்டு என்பதை அறியவும். அதை வெளிப்படுத்தின விசேஷம் 17ம் அதிகாரத்தில் பார்க்கலாம். அவன், `நான் ஒரு விதவை, எனக்கு ஒரு குறைவுமில்லை’ என்று சொல்லிக் கொள்கிறாள். அவள் சிவப்பு மிருகத்தின் மேல் உட்கார்ந்திருக்கிறாள். ஆனால் உண்மையான மணவாட்டியோ, ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை ஒருங்கே கொண்ட ஆயிரமாயிரம் பேராயிருக்கும். ஒவ்வொரு சபையின் காலத்திலும் அளிக்கப்பட்ட செய்தியை விசுவாசித்து ஏற்றுக் கொண்டவர் அனைவரும் மீட்கப்படும் நாளுக்கென்று முத்தரிக்கப்படுகின்றனர். ஏழாம் ஜாமத்தில், `இதோ மணவாளன் வருகிறார்’ அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள், என்னும் சத்தம் உண்டானது என்று இயேசு கூறினபோது, இதைத்தான் குறிப்பிட்டார். ஏழாம் ஜாமமென்பது கடைசி சபையின் காலம். அப்பொழுது புத்தியில்லாத கன்னிகைகள் உறக்கத்தினின்று எழுந்து, கண்களைத் துடைத்தவாறு, `நாங்களும் எண்ணெயைப் பெற வேண்டும். நீங்களும் அவ்வாறே செய்யுங்கள்’ என்று கூறுவர். ஆனால் உண்மையான மணவாட்டி புத்தியில்லாத கன்னிகைகளை நோக்கி, `நாங்கள் உள்ளே செல்வதற்குப் போதிய எண்ணெய் மாத்திரமே எங்களிடம் உள்ளது. உங்களுக்கு எண்ணெய் கொடுக்க எங்களால் இயலாது. எண்ணெய் வேண்டுமானால், நீங்கள் சென்று ஜெபியுங்கள்’ என்பார்கள். புத்தியில்லாத கன்னிகைகள் எண்ணெய் வாங்கச் சென்ற சமயம், மணவாளன் வந்துவிட்டார். மணவாட்டி அவருடன் கல்யாண விருந்துக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது முற்றிலும் உத்தமமான மீதியானவர்கள் - அதாவது சபை வெளியே விடப்படுகின்றனர். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத். 25.1-12).`மணவாளன் வருகிறார்’ என்னும் சத்தம் எழுந்தவுடன், சபையின் காலங்கள் தோறும் நித்திரையடைந்திருந்த ஒவ்வொருவரும் உயிரோடெழுகின்றனர். இக்காலத்திலுள்ள சில ஆயிரம் பேரை மாத்திரம் தேவன் தேடிப் பிடித்து அவர்களை எடுத்துச் செல்வார் என்று கூறுவது சரியல்ல. ஒவ்வொரு சபையின் காலத்திலும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் எடுக்கப்படுவர். தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி நபர் கடைசி காலத்தில் உட் பிரவேசிக்கும் வரை, கிறிஸ்து மத்தியஸ்த ஸ்தானத்தை வகிக்க வேண்டும். இத்தகைய வெளிப்பாடு ஜனங்களுக்கு அளிக்கப்படும் போது, அவர்கள் என்ன நிகழ்ந்துள்ளது என்று புரிந்து கொள்கின்றனர். உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? மரணமடைந்த மற்றவர்கள் ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள் ஆயிரம் வருஷம் முடிவடையுமளவும் உயிரடையவில்லை. அதன் பின்பு அவர்கள் உயிரோடெழுந்து மணவாட்டிக்கு முன்பாக ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக நிற்கின்றனர். ஓ மகிமை! சில ஸ்தாபனங்கள் இன்று தங்களைப் `பரலோகத்தின் ராணி’ என்று அழைத்துக் கொள்கின்றன. ஆனால் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவின் மணவாட்டி தான் உண்மையில் பரலோகத்தின் ராணியாவாள். அவள் அவருடன் புறப்பட்டு வருகிறாள். தானியேல் இக்காட்சியைக் கண்டு, `ஆயிரமாயிரம் பேர் அவரைச் சேவித்தார்கள்’ என்கிறான் (தானி 7.9-10) தானியேலின் புத்தகத்தைப் படித்தால், அப்பொழுது நியாய சங்கம் உட்கார்ந்தது. புத்தகங்கள் திறக்கப்பட்டன என்று நாம் பார்க்கலாம். அவர் வரும் போது தம் மணவாட்டியுடன் கூட வருகிறார். மனைவி கணவனுக்குச் சேவை செய்வாள். ஆயிரமாயிரம் பேர் அவருக்குச் சேவை செய்ததாக தானியேலின் புத்தகம் உரைக்கிறது. நியாய சங்கம் உட்கார்ந்தது: புத்தகங்கள் திறக்கப்பட்டன. வேறொரு புத்தகமும் திறக்கப்பட்டது. அது ஜீவபுஸ்தகம், மணவாட்டி அவருடன் சென்று மறுபடியும் வந்து தங்கள் தங்கள் தலைமுறைகளில் சுவிசேஷ செய்தியை ஏற்றுக்கொள்ள மறுத்தவர் அனைவரையும் நியாயத் தீர்ப்பாள். `தென் தேசத்து ராஜஸ்திரீ நியாயத் தீர்ப்பு நாளிலே அந்த சந்ததி யாரோடெழுந்து இவர்கள் மேல் குற்றஞ் சுமத்துவாள்’ என்று இயேசு கூறவில்லையா? அவள் சாலோமோனுடைய ஞானத்தைக் கேட்க பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள். இதோ சாலோமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்! தென் தேசத்து ஷீபாவின் ராணி நியாயத்தீர்ப்பு நாளிலே அங்கு நின்று கொண்டு தன் சாட்சியைக் கூறுவாள். அந்த சந்ததியிலே யூத மார்க்கத்தைக் கடைபிடித்த ஒருவனும் கூட இல்லை. ஏனெனில் அவர்கள் குருடராயிருந்து அவரைக் கண்டு கொள்ளத் தவறினர். அவர்கள் அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் எளிமையில் தோன்றிய காரணத்தால் அவர்கள் குப்புற விழுந்தனர். ஆனால் அந்த புகழ் வாய்ந்த ராணியோ தன்னைத் தாழ்த்தி செய்தியை ஏற்றுக் கொண்டாள். அவர் நியாயத் தீர்ப்பின் நாளில் நின்று அந்த சந்ததியின் மேல் குற்றம் சுமத்துவான் என்று இயேசு கூறினார். இங்கே மூன்று சாராரை நாம் காணலாம். புத்தகம் திறக்கப்பட்டது. மரித்தோர் நியாயத் தீர்ப்படைந்தனர். வேறொரு புத்தகம் ஜீவபுஸ்தகம் - ஜீவப்புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள், `உங்கள் பெயர்கள் ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் எல்லாம் சரியாயிருக்கிறது’ என்கிறார்கள். இல்லை ஐயா! யூதாஸ்காரியோத்தின் பெயரும் அதில் எழுதப்பட்டிருக்கிறதே என்று கவனித்துப் பாருங்கள். இது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? மத்தேயு பத்தாம் அதிகாரத்தில், இயேசு சீஷர்களுக்கு பிசாசுகளைத் துரத்தவும், பிணியாளிகளை சொஸ்தப்படுத்தவும், குஷ்டரோகிகளை குணமாக்கவும், மரித்தோரை உயிர்ப்பிக்கவும் அதிகாரம் கொடுத்தார். அவர்களில் யூதாஸ்காரியோத்தும் ஒருவனாவான். அவர்கள் பிசாசுகளைத் துரத்தி, அற்புதங்களைச் செய்து திரும்பிவந்து அவரிடம், `ஆண்டவரே, பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகின்றன’ என்றனர். அதற்கு இயேசு அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, `பிசாசுகள் உங்களுக்குக் கீழ்ப்படிவதனால் நீங்கள் சந்தோஷப்படாமல், `பரலோகத்தில் உங்கள் பெயரெழுதப்பட்டிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள் என்றார். யூதாஸும் அவர்களில் ஒருவனாயிருந்தான். ஆனால் என்ன நேர்ந்தது? தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் பெந்தேகோஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியைப் பெற வேண்டிய சமயம் வந்தபோது, யூதாஸ் தன் உண்மையான சொரூபத்தைக் காண்பித்தான். அவனும் நியாயத் தீர்ப்பில் இருப்பான். புத்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவபுஸ்தகமும் திறக்கப்பட்டது. ஒவ்வொரு மனிதனும் நியாயந் தீர்க்கப்பட்டான். மணவாட்டியோ கிறிஸ்துவுடன் நின்று கொண்டு உலகத்தை நியாயத் தீர்க்கிறாள். பவுல், (மணவாட்டியிடம்) `உங்களுக்குள்ளே வழக்குண்டானால் வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல் அந்தக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயத் தீர்ப்பார்களென்று அறியீர்களா?’ என்றான்.(I கொரி : 6:1-2) ஆம், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயத்தீர்த்து அதைக் கைப்பற்றுவார்கள். நீங்கள் ஒருக்கால் இந்த சிறு மணவாட்டியின் குழு எவ்வாறு அங்ஙனம் செய்யமுடியும்?’ என்று கேட்கலாம். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அதன் பிறகு என்னைப் பொறுத்தவரை மறு பேச்சே கிடையாது. இப்பொழுது கவனியுங்கள். மரணமடைந்த மற்றவர்கள் (அதாவது மரித்துப் போன ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள்) ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. ஆயிரம் வருஷம் முடிவடைந்த பின்பு, இரண்டாம் உயிர்த்தெழுதல் நிகழ்கின்றது. அப்பொழுது இவர்கள் உயிரோடெழுந்து ஒன்று சேர்க்கப்படுகின்றனர். கிறிஸ்துவும் மணவாட்டியும் (சபையல்ல, மணவாட்டி) அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். (உயரோடெழுந்தவர்கள், வெள்ளாடுகள் செம்மறியாடுகளிலிருந்து பிரிக்கப்படுவது போன்று, இரு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். அங்கே ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள் காணப்படு கின்றனர். அவர்கள் சத்தியத்தைக் கேட்டு அதைப் புறக்கணித்தவர்கள். அவர்கள் எண்ணிய எண்ணங்களெல்லாம் வானத்தின் விரிவுகளிலே எழுதப்பட்டிருக்கும் போது அவர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? தேவனுடைய மகத்தான டெலிவிஷனில் உங்கள் எண்ணங்களெல்லாம் திரையிடப்படும். அச்சமயம் உங்கள் சிந்தனைகளே உங்களுக்கு விரோதமாக சாட்சி பகரும். ஆகையால் நீங்கள் வெளிப்புற ஒன்றைச் சொல்லி, உட்புறத்தில் வேறு விதமாக எண்ணும் இயல்புடையவர்களாயிருந்தால், அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள். உங்கள் சிந்தனைகளெல்லாம் கர்த்தரையே நோக்கியிருக்கட்டும். அவைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு அதில் நிலைகொண்டிருங்கள். எப்பொழுதும் ஒன்றையே பேசுங்கள். `நான் விசுவாசிப்பதாய் தற்பொழுது சொல்லிவிடுகிறேன். ஆனால் அது சரியா, தவறா என்பதை பிறகு ஆராயலாம்’ என்று மாய்மாலம் கொள்ள வேண்டாம். இந்த சாராரைப் பாருங்கள், அவர்கள் மரிக்கும் காரணம், உபத்திரவ காலத்தில் நேரிடும் சோதனையில் அவர்கள் பங்கு கொண்டு சுத்தகரிக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் இரத்தத்தின் கீழ் இல்லை! அவர்கள் இரத்தத்தின்கீழ் உள்ளதாக சொல்லிக் கொள்கின்றனர்.ஆனால் உண்மையாக அவர்கள் இல்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் கீழ் இருந்திருப்பார்களானால், அந்த வெண்மையாக்கும் திரவம் பாவத்தின் லட்சணம் அனைத்தையும் போக்கியிருக்கும். அப்படியானால் அவர்கள் சுத்திகரிக்கப்படுவதற்கு உபத்திரவ காலம் போன்ற ஒரு சோதனை அவர்களுக்கு அவசியமில்லையே! நீங்கள் ஏற்கனவே மரித்து, உங்கள் ஜீவன் கிறிஸ்துவின் மூலமாய் தேவனுக்குள் மறைந்து கிடந்து, பரிசுத்த ஆவியினால் நீங்கள் முத்தரிக்கப்பட்டிருந்தால், பின்னை ஏன் நீங்கள் நியாயந் தீர்க்கப்படவேண்டும்? நீங்கள் கிறிஸ்துவுக்குள் பாவமில்லாமல் பரிபூரணப்பட்டிருந்தால், உங்களுக்கு சுத்திகரிப்பு அவசியமேது? உங்களுக்கு நியாயந் தீர்ப்பு எதற்கு? தேவ ரகசியங்கள் வெளிப்படும் தருணம் இதுதான், நண்பர்களே, எல்லாம் முடிவுக்கு வருகிறது என்று நான் நம்புகிறேன். எப்பொழுது? அதை நானறியேன். என்னால் அதைக் கூறமுடியாது. இன்றிரவு அது ஒருக்கால் நேர்ந்தால், அதற்கு நான் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஒருக்கால் இன்றிரவு அவர் வரலாம். இல்லையேல் அவர் இன்னும் இருபது வருடத்திற்கு வராமலும் இருக்கலாம். அவர் எப்பொழுது வருவார் என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் என் வாழ்க்கை இன்றிரவு முடிவடையலாம். நான் செய்த அனைத்தும் அச்சமயத்தில் முடிவு பெறும், நான் வாழ்ந்த ஜீவியத்திற்காக, அவரை நியாயத் தீர்ப்பில் சந்திக்க வேண்டும். ஒரு மரம் எப்பக்கம் சாய்கிறதோ, அப்பக்கத்திலே அது விழும். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்றபோது.... `சகோ. பிரான்ஹாமே, அதைப் பற்றி எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் கூறலாம். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்று திரும்பி வந்தபோது, மணவாட்டி ஏற்கனவே சென்றுவிட்டாள். கதவும் அடைபட்டுவிட்டது. அவர்கள் கதவைத் தட்டி, `எங்களை உள்ளே அனுமதியும், எங்களை உள்ளே அனுமதியும்’ என்று கூக்குரலிட்டனர். ஆனால் அவர்கள் புறம்பான இருளில்தான் இருந்தனர். அதற்கு ஒரு முன்னடையாளம் உங்களுக்கு வேண்டுமானால், நோவாவின் காலத்தில், அவனும் அவன் குடும்பத்தினரும் பேழைக்குள் சென்று நியாயத் தீர்ப்பின் காலத்தில் அவர்கள் நியாயத் தீர்ப்புக்கு தப்பினர். ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் மணவாட்டிக்கு முன்னடையாளமல்ல. ஏனோக்கு தான் மணவாட்டிக்கு முன்னடையாளமாய் இருந்தவன். நோவா உபத்திரவ காலத்திற்குள் பிரவேசித்து துன்பப்பட்டு குடிகாரனாகி மரித்துப்போனான். ஆனால் ஏனோக்கு 500 வருடங்களாக தேவனுடன் சஞ்சரித்து, எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசம் கொண்டவனாய் தேவனைப் பிரியப்படுத்தினான். அவன் நடந்து சென்று, வானத்தைக்கடந்து, மரணத்தை ருசி பாராமல் தன் பரலோக வீட்டை அடைந்தான். அவன் மரிக்கவேயில்லை. `உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வ தில்லை’ என்பதற்கு அது முன்னடையாளமாயிருக்கிறது. நித்திரையடைந் தவர்கள் வயது சென்ற காரணத்தாலும் சரீர நிலையின் காரணத்தாலும் நித்திரையடைந்தனர். அவர்கள் மரிக்கவில்லை நித்திரையடைந்திருக்கின்றனர். மணவாளன் வந்து அவர்களை நித்திரையினின்று எழுப்ப வேண்டும், உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில் தேவ எக்காளம் முழங்கும் போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள், உயிரோடிருக்கிற நாம் அவர்களோடு கூட எடுக்கப்பட்டு சர்த்தரை ஆகாயத்தில் சந்திப்போம். மரணமடைந்த மற்றவர்கள் ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. அவர்கள் நோவாவைப் போல் உபத்திரவ காலத்திற்குள் பிரவேசித்தனர். நோவா ஏனோக்கை கவனித்துக் கொண்டேயிருந்தான். ஏனெனில் ஏனோக்கு காணப்படாமற் போனால், நியாயத் தீர்ப்பின் சமயம் நெருங்கிவிட்டது என்பதை அவன் அறிந்திருந்தான். நோவா பேழையின் அருகில் இருந்து கொண்டிருந்தான், அவன் வானத்திற்கு எடுக்கப்படவில்லை. அவன் ஒரு துண்டு மரத்தை உயர்த்தி, உபத்திரவத்தின் மேல் சவாரி செய்தான். உபத்திரவ காலத்தை அவன் கடந்து, பின்பு மரித்துப் போனான். ஆனால் ஏனோக்கு மாணமின்றி எடுக்கப்பட்டான். சபையானது நித்திரையடைந்தவர்களுடன் கூட எடுக்கப்பட்டு கர்த்தரை ஆகாயத்தில் சந்திப்பதற்கு, ஏனோக்கின் சம்பவம் ஒரு முன்னடையாளமாக அமைந்துள்ளது. ஆனால் கைவிடப்பட்ட சபையோ உபத்திரவ காலத்திற்குள் பிரவேசித்தது. இப்பொழுது முத்திரையைக் குறித்து சற்று ஆராய்வோம், நாம் மற்றவைகளை சொல்லிக்கொண்டே போனால் முத்திரைகளைச் சிந்திப்பதற்கு நமக்கு சமயமிராது. முத்திரைகள் நீண்ட நேரம்.... அவ்வப்போது நாம் எக்காளத்தைக் குறித்தும் ஆராய்வோம். ஏனெனில் முத்திரைகள் உடைக்கப்படும் அதே சமயத்தில் எக்காளமும் முழங்குகின்றது. அவையிரண்டும் ஒன்றாகும்.சபையின் காலம் தொடங்குகின்றது. எக்காளம் போரை அல்லது அரசியல் சம்பந்தமாக நேரிடும் தகராறைக் குறிக்கிறது. அரசியல் தகராறு போருக்குக் காரணமாயிருக்கும். இப்பொழுது நம்மிடையில் உள்ளது போன்று, அரசியலில் குழப்பம் உண்டானால் யுத்தம் நெருங்கிவிட்டது என்பது அதன் அர்த்தம். இராஜ்யம் இப்பொழுதும் சாத்தானுக்கு தான் சொந்தமாயிருக்கிறது. ஏன்? கிறிஸ்து அதை மீட்டுக் கொண்டார். ஆனாலும் அவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, தம் பிரஜைகளை சேர்த்துக் கொண்டு வருகிறார். புத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட கடைசி நபர் அவரை ஏற்றுக் கொண்டு முத்தரிக்கப்படும் வரை அவர் அவ்வூழியத்தில் நிலை கொள்ளவேண்டும். இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா? அதன் பின்பு அவர் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கி, தம் உடமைகளைப் பெற்றுக் கொள்ளுகிறார். அவர் செய்யும் முதலாவது செயல் மணவாட்டியை அழைத்துக் கொள்வதாகும், ஆமென்! அதன் பின்னர் அவர் சாத்தானைக் கட்டி, அவனையும் அவனைச் சார்ந்தோரையும் அக்கினியில் தள்ளுகிறார். ருஷியா அந்திக் கிறிஸ்துவல்ல. அந்திக் கிறிஸ்து மிகவும் மிருதுவான, தந்திரமுள்ள ஒருவன். வெளிப்புறம் நல்லவைன் போல் காணப்படுவான். பரிசுத்த ஆவி மாத்திரமே அவனை மேற்கொள்ள முடியும். எக்காளம் அரசியல் தகராறை எடுத்துக் காட்டுகிறது - யுத்தம் . மத்தேயு 24ம் அதிகாரத்தில் இயேசு `நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது....’ என்கிறார். அது ஒரு எக்காள முழக்கமாகும். தொடர்ந்து ஒவ்வொரு காலங்களிலும் சம்பவிக்கின்றது. நாம் எக்காளத்தை குறித்து சிந்திக்கும்போது, கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள யுத்தங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த சபையின் காலங்களைப் பின் தொடர்ந்தன என்று நாம் பார்க்கலாம். அவை முத்திரைகளையும் பின்தொடர்ந்தன. எக்காளம் என்பது அரசியல் தகராறைக் குறிக்கிறது. ஆனால் முத்திரை என்பது மத சம்பந்தமாக நேரிடும் குழப்பத்திற்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. ஒரு முத்திரை திறக்கப்படும் போது, ஒரு செய்தி அளிக்கப்படுகிறது. சபையானது தன் சொந்த அரசியல் முறைகளைக் கையாடி, கௌரவம் கொண்ட அனேகர்களை அங்கத்தினர்களாய்க் கொண்டதாய் குழப்பமுற்றிருக்கும் நிலையில், தூதன் அங்கு தோன்றி உண்மையான செய்தியை அறிவித்து, அவர்களை சின்னாபின்னப்படுத்துகிறான். முத்திரை திறக்கப்படுதல் மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும். சபையானது அமைதி கொண்டிருக்கும் சமயம் இங்கிலாந்து சபை, கத்தோலிக்க சபை, `நாங்கள் ஸ்தாபிக்கப்பட்டு அமைதி கொண்டிருக்கிறோம்’ என்று கூறிக்கொள்கின்றன. கத்தோலிக்க சபை இவ்விதம் நினைத்துக்கொண்டிருந்தபோது, லூத்தர் அங்கு தோன்றினார். அப்பொழுது மதசம்பந்தமான தகராறு நேரிட்டது. அவ்வாறு இங்கிலாந்து சபையானது ஸ்விங்ஸி (Zwingli), கால்வின் (Calvin) போன்ற சுவிசேஷர்களைக் கொண்டதாய் விளங்கி, பின்னர் அமைதி கொண்டிருந்த போது, வெஸ்லி அங்கு தோன்றினார். அதன் விளைவால் மதசம்பந்தமான தகராறு நேரிடுகிறது. முத்திரை எப்பொழுதுமே மதசம்பந்தமான தகராறுக்கு அறிகுறியாகும். ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். என்ன நேர்ந்தது? அப்பொழுது... இடி முழக்கம் போன்ற சத்தமாய் சொல்லக் கேட்டேன். ஓ! இதைக் குறித்து சில நிமிடங்கள் தியானிக்க எவ்வளவு ஆவல் கொண்டுள்ளேன்! தேவனுடைய ஆறுதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் மக்கள் இவை யாவையும் அறிந்து நன்கு ஆராய முற்படுவார்கள் என்று நம்புகிறேன். ஒலி நாடாக்களைக் கேட்பவரும் கூட இதனை நன்கு சிந்தியுங்கள். ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைத்தபோது, இடிமுழக்கம் போன்ற சத்தம் உண்டாகின்றது, இதற்கு ஒரு அர்த்தம் உண்டு. அர்த்தமில்லாமல் எதுவும் நேரிடுவதில்லை. ஒரு இடி முழக்கம் உண்டானது. இடிமுழக்கம் என்ன என்பதைக் குறித்து நான் ஆலோசிக்கலானேன். யோவான் 12ம் அதிகாரத்தை நாம் எடுத்து 23ம் வசனத்திலிருந்து வாசிப்போம். அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி, மனுஷகுமாரன் மகிமைப் படும்படியான வேளை வந்தது. இங்கு ஒரு யுகம் முடிவடையும் ஒரு தருணத்தைக் காண்கிறோம். இயேசுவின் ஊழியம் முடிவடைந்து விட்டது. `மனுஷகுமாரன் மகிமைப் படும்படியான வேளை வந்தது’ அப்படியானால் மணவாட்டி எடுக்கப்படும்படியான சமயம் வரும்போது, அல்லது `இனி காலம் செல்லாது’ என்று சொல்லப்பட வேண்டிய சமயம் வரும்போது என்ன நேரிடும்? பலமுள்ள தூதன் ஒரு பாதத்தைச் சமுத்திரத்தின் மேலும் ஒரு பாதத்தைப் பூமியின் மேலும் வைத்து, சிரசின் மேல் வானவில் கொண்டவனாய் கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி, `இனி காலம் செல்லாது’ என்கிறான் (வெளி 10. 1-6) எவ்வளவு நன்றாக அமைந்திருக்கிறது! சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு சத்திய வாக்குமூலம், `மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது’. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்து போவான், இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ, அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக் கொள்ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்கிறவனானால் `என்னைப் பின்பற்றக் கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ் செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது.... அவர் தம் பாதையின் முடிவை அடைந்ததால் அவர் கலங்குகிறார் என்று நீங்கள் கூறலாம், அவ்விதமாகவே, ஆவிக்குரிய ஏதோ ஒன்று நிகழ்ந்து உங்களைக் கலக்கும் போது உங்களுக்கு எப்படி தோன்றுகிறது? இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன்? பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனா, ஆகிலும் இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது, மகிமைப்படுத்தினேன். இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள் இடி முழக்க முண்டாயிற்று என்றார்கள்.... ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை வாங்கி முதலாம் முத்திரையை உடைத்தபோது, தேவன் தம் நித்திய சிங்காசனத்திலிருந்து பேசி, அம்முத்திரையில் அடங்கியுள்ள இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். ஆனால் அது யோவானுடைய முன்னிலையில் ஒரு அடையாளமாகவே (Symbol) இருந்தது. ஏனெனில் அச்சமயம் அந்த இரகசியம் வெளிப்படவில்லை. கடைசி காலம் வரும் வரை அது வெளிப்பட முடியாது. அது ஒரு அடையாளமாக அளிக்கப்பட்டது. பலத்த இடிமுழக்கம் தேவனுடைய சத்தமாகும். வேதம் அவ்வாறே கூறுகின்றது. நின்றுகொண்டிருந்த ஜனங்கள் இடிமுழக்க முண்டானது என்று நினைத்தனர். ஆனால் அது தேவனுடைய சத்தமாகும். இயேசுவுக்கு அது வெளிப்பட்டதனால், அவர் அதை புரிந்து கொள்ள முடிந்தது. முதலாம் முத்திரை அடையாள ரூபமாக திறக்கப்பட்ட போது இடிமுழக்கமுண்டாயிற்று. அப்படியானால் அதன் உண்மையான இரகசியம் வெளிப்படுவதற்கென அது திறக்கப்படும் போது எவ்வாறிருக்கும்? ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்த மாத்திரத்தில் இடி முழக்கமுண்டானது. அது எதை வெளிப்படுத்தினது? அதன் அர்த்தம் எல்லாமே அப்பொழுது வெளிப்படவில்லை. முதலாவது தேவன் பேசுகிறார். பின்பு அது அடையாளமாக அளிக்கப்படுகிறது. அதன் பின்னர் அதனுள் அடங்கிய இரகசியம் வெளிப்படுகிறது மூன்று காரியங்கள். முதலாவதாக அது சிங்காசனத்திலிருந்து கிடைக்கப் பெறுகிறது. அதைக் காணவோ, கேட்கவோ முடிகிறதில்லை. அது முத்தரிக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக் கொள்ள ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் கிரயமாக செலுத்தப்பட்டது. அவர் பேசினபோது, இடிமுழக்கமுண்டாகி, வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டு செல்கிறான். அப்பொழுதும் அது அடையாளமாகவே அமைந்துள்ளது. அதன் அர்த்தம் கடைசி காலத்தில் வெளிப்படும் என்பதாய் அவர் கூறியுள்ளார். அது சபைக்கு அடையாளமாக அளிக்கப்பட்டுள்ளது. சபையே, உனக்குப் புரிகிறதா? அது முத்தரிக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிவர். அதன் அர்த்தம் என்னவென்பதை அவர்களால் இது வரை அறிந்துகொள்ள முடியவில்லை, வெள்ளைக் குதிரையின்மேல் வீற்றிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான் என்று மாத்திரம் அவர்கள் அறிவார்கள். இக்கடைசி காலத்தில் முத்திரை உண்மையாக உடைக்கப்படும்போது அது வெளியாகும். அந்த முத்திரை யாருக்கு உடைக்கப்படுகின்றது? கிறிஸ்துவுக்கல்ல, சபைக்கு இதை கவனியுங்கள்.... ஓ! அது எனக்கு நடுக்கத்தையளிக்கிறது. நான் கூறுவதன் அர்த்தத்தை சபை உண்மையாக புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன், மணவாட்டியே, உனக்குப் புரிகிறதா? தேவனுடைய சத்தம் இடிமுழக்கம் போன்றதாகும். அச்சத்தம் எங்கிருந்து வந்தது? ஆட்டுக்குட்டியானவர் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து முடித்து, புறப்பட்ட அதே சிங்காசனத்திலிருந்து அவர் தம் ஸ்தானத்தை வகித்து, உடைமைகளைப் பெற்றுக் கொள்ள அங்கு நின்று கொண்டிருக்கிறார். ஆனால் சத்தமோ சிங்காசனத்தினுள்ளிருந்து புறப்பட்டு வெளிவருகிறது. கவனியுங்கள் ஆட்டுக்குட்டியானவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். இடிமுழக்கமானது, அவர் விட்டு வந்த ஸ்தலத்திலிருந்து புறப்பட்டு வருகிறது. இயேசு தம் சொந்த சிங்கா சனத்தில் அமருவதற்கென்று பிதாவின் சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிறார், மகிமை! நண்பனே, அதை இழந்து போகவேண்டாம். தேவன் கிறிஸ்துவை எழுப்பி, தம் சிங்காசனத்தில் அவரை அமரச் செய்து, நித்தியமாக இராஜ்யத்தை பூமியில் அவருக்களிப்பதாக அவர் தாவீதுக்குச் செய்த வாக்குத்தத்தை கிறிஸ்தவர்களாகிய நாமெல்லாரும் அறிவோம். அவர் தம் வாக்குத்தத்தத்தின்படியே செய்தார். இயேசுவும், `அந்திக்கிறிஸ்துவையும் உலகத்திலுள்ளவைகளையும் ஜெயங் கொள்ளுகிறவன் எவனோ, நான் ஜெயங்கொண்டு என் பிதாவின் சிங்காசனத்தில் அவரோடே கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூடஉட்காரும்படிக்கு அருள் செய்வேன்’ என்றார் (வெளி 3.21) என்றாவது ஒரு நாள் அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு எழுந்து, தம் சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருவார். இப்பொழுது தம் பிரஜைகளை அழைத்துக்கொள்ள அவர் வருகிறார். எங்ஙனம் அவர்களைப் பெற்றுக்கொள்வார்? அவர் ஏற்கனவே மீட்பின் புத்தகத்தைத் தம் கையில் கொண்டிருக்கிறார். மகிமை! ஓ. எனக்கு பாடவேண்டுமென்று தோன்றுகிறது. `விரைவில் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தமது பக்கத்தில் இருக்க வானத்தின் சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பார் (அதைக் காண) ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும் எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர் நாம் இயேசுவுடன் நித்தியமாக விருந்துண்போம்’ ஓ! இப்பொழுது நாம் உன்னதங்களில் வீற்றிருப்பதை சற்று சிந்தியுங்கள். எடுக்கப்படுதல் நிகழும் முன்பு, பூமியில் நாம் இருந்துகொண்டு சுவர்களில் சாய்ந்துகொண்டு, மழையில் நனைந்து இவ்வளவாக அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமானால், அவர் அங்கு உட்கார்ந்திருப்பதை நாம் கண்கூடாகக் காணும்போது, இதைக் காட்டிலும் எவ்வளாவ நாம் மகிழ்ச்சி கொள்வோம் என்பதை ஊகித்துப் பாருங்கள். ஓ! அது ஓர் மகத்தான தருணமாயிருக்கும். குமாரன் பிதாவின் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு தாவீதின் குமாரனாகிறார், அவர் அப்பொழுதே தாவீதின் குமாரனாக வருவாரென்று இஸ்ரவேல் ஜனங்கள் எதிர்பார்த்திருந்தனர். சிரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயும், குருடனான பர்த்திமேயுவும் அவரைத் `தாவீதின் குமாரனே! என்று அழைத்தது நினைவிருக்கிறதா? இயேசு அவரைக் குறித்த திட்டம் என்னவென்பதை அறிந்திருந்தார். அவர்களோ அதை அறிந்து கொள்ளவில்லை. அவரை இராஜாவாக்க அவர்கள் பலவந்தப்படுத்தினர். பிலாத்துவும் கூட அவரை `இதோ உங்கள் ராஜா’ என்று அறிமுகப்படுத்தினான் இயேசுவோ, `என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால், என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே! என் ராஜ்யம் பரலோகத்திலுள்ளது’ என்றார் அவர். நீங்கள் ஜெபம் பண்ணும்போது, உம்டைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல் பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபியுங்கள்’ என்று கற்பித்தார், ஆமென்! இது எத்தனை மகத்துவமுள்ளதாயிருக்கிறது! அவர் பிதாவின் சிங்காசனத்தை விட்டு தம் சொந்த சிங்காசனத்தில் வீற்றிருக்க வருகிறார். இப்பொழுது அவர் தம் மத்தியஸ்த ஊழியத்தை விட்டுவிட்டு, தம் சொந்த சிங்காசனத்தையும் அவர் மீட்ட பிரஜைகளையும் உரிமையாக்கிக்கொள்ள வருகிறார்’ அப்பொழுதுதான் சிங்கம் போன்ற முகத்துடைய ஜீவன் யோவானிடத்தில், `வந்து பார்’ என்றது. அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி வந்து பார் என்று.... (வெளி. 6.1) அந்த நான்கு ஜீவன்கள் யாரென்று உங்களுக்குத் தெரியும். அந்த செய்தியை நான் முன்பு அளித்துள்ளேன். ஒன்று சிங்கத்திற்கு கொப்பாகவும், வேறொன்று காளைக்கொப்பாகவும் வேறொன்று மனுஷ முகம் கொண்டதாகவும், மற்றொன்று கழுகுக்கு ஒப்பாகவும் இருந்தன (வெளி 4.7) ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஜீவன் வந்து வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்பவர்களைக் காண அழைப்பதை நாம் காணலாம். ஆகமொத்தம் நான்கு ஜீவன்களும், வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்யும் நால்வரும் உள்ளனர். யோவான் இடிமுழக்கம் போன்ற சத்தத்தைக் கேட்கிறான். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று அவனிடம், `வந்து பார்’ என்றது ஆட்டுக் குட்டியானவர் புத்தகத்தை வாங்கி யோவானின் முன்னிலையில் நின்று முத்திரையை உடைக்கும் போது, இடிமுழக்கம் உண்டாகின்றது. சத்தத்தைக் கேட்டவுடன் யோவான் ஒருக்கால் உயர குதித்திருப்பான். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, `முத்திரையின் கீழ் என்ன அடங்கியுள்ளது என்பதைக் காண வா’ என்று அழைக்கிறது. `யோவானே, நீ காண்பவைகளை ஒரு புஸ்தகத்தில் எழுது’ ஓ! என்ன ஆச்சரியம். அது என்னவென்பதைக் காண யோவான் அங்கு செல்கிறான். இடிமுழக்கம் கூறினதென்ன என்பதை அறிய யோவான் அங்கு செல்லும் போது தான் அந்த ஜீவன், `முதலாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இரகசியத்தை வந்து பார்’ என்று அவனை அழைக்கிறது. சிருஷ்டி கர்த்தரின் சத்தம் அதாவது இடி முழக்கம் அதைக் கூறியுள்ளது. ஆகையால் அது என்னவென்பதை அவன் அறியவேண்டும். ஓ! என்ன ஆச்சரியம்! யோவான் இந்த இடிமுழக்கம் கூறினதை எழுதுகிறான். அவன் கண்டவை யாவையும் எழுதவேண்டுமென்ற கட்டளை அவனுக்கு உண்டாயிருந்தது. ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிக்hரத்தில் குறிப்பிட்டுள்ள ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை எழுத வேண்டாம் என்று அவன் கட்டளையிடப்பட்டான். அவை யாவும் பரம ரகசியம், அவையென்னவென்பதை நாம் இதுவரை அறியோம். ஆனால் இப்பொழுதே அது வெளிப்படும் என்பது என்னுடைய கருத்து. அது வெளிப்படும் போது எடுக்கப்படுதலுக்கேற்ற விசுவாசத்தை அது சபைக்கு அளிக்கும். நாம் இதுவரை அறிந்த எல்லாவற்றையும் ஆராய்ந்திருக்கிறோம். ஒவ்வொரு சபையின் காலங்களிலும் நிகழ்ந்தவைகளை நாம் கவனித்துக் கொண்டு வந்துள்ளோம். தேவனுடைய ரகசியங்களை நாம் கண்டிருக்கிறோம். கடைசி நாட்களில் மணவாட்டி ஒன்று கூடுவதைக் குறித்தும் நாம் அறிந்திருக்கிறோம். ஆயினும் நம்மை தெளிவு படுத்திக்கொள்ள அவசியமான ஏதோ ஒன்று இன்னமும் வெளிப்படாமல் உள்ளது. அந்த இரகசியங்கள் ஒன்றன் பின் ஒன்றாக யோவான் காலத்தில் வெளிப்பட்ட போது, தேவன் அவனிடம், `யோவானே, அதை மறைத்துவை. அதை எழுத வேண்டாம். ஏனெனில் அதைப் படிப்பவர்கள் தடுமாறி விழுவார்கள். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கும் நாளில் நான் அவர்களுக்கு அதை வெளிப்படுத்துவேன்’ என்று சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவ்விடி முழக்கங்கள் காரணமின்றி உரைக்கவில்லை. அந்த துளி மையைப் போன்று, எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கமுண்டு. சிருஷ்டி கர்த்தர் மொழிந்தார். யோவான் அவர் சத்தத்தைக் கேட்டு, காணச் சென்றான். ஆட்டுக்குட்டியானவர் யோவானின் மூலம் அடையாளங்களை சபைக்கு அளிக்கிறார். அவர் யோவானிடம், `இது என்னவென்று யாருக்கும் அறிவிக்க வேண்டாம். நீ கீழே இறங்கிச் சென்று ஏழாம் முத்திரையின்கீழ் அடங்கியுள்ள இரகசியம் இதுதான் என்று சொல்ல வேண்டாம். அப்படி கூறினால், காலங்கள் தோறும் வைத்திருக்கும் என் திட்டம் வெளியரங்கமாகி விடும். அது ஓர் இரகசியமாக இருக்க வேண்டும்’ என்றார். அவர் மேலும், `என் வருகையின் நேரத்தை யாரும் அறிய முடியாது. நான் வருகிறேன் என்று மாத்திரம் அவர்கள் அறிந்தால் போதுமானது’ என்றார். ஆம், அவ்வளவு தான் அவர் எப்பொழுது வருகிறார் என்று நான் அறிய வேண்டிய அவசியமில்லை. அவர் எந்நேரம் வரினும், நான் அதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். யோவான் அதைக் காணச் செல்கிறான். அவன் காண்பதை அவன் சபையின் காலங்களுக்கென்று எழுத வேண்டும். `நீ கண்ட ஏழு குத்து விளக்குகளின் விவரணத்தை எழுதி சபைகளுக்குத் தெரியப்படுத்து’ என்று அவனுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. ஒரு இடி முழக்கம் உண்டானது. அது தேவனுடைய சத்தம் என்பதை யோவான் உணர்ந்தான். சிங்கத்திற்கொத்த ஜீவன், நீ வந்து அது என்னவென்று பார்’ என்று சொல்ல, யோவானும் அதைக் கண்டு எழுதுவதற்கென்று புறப்பட்டுச் செல்கிறான். அவன் கண்ட காட்சியின் அர்த்தத்தை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. அவன் கண்டது, தேவன் சபைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் அனுப்பிய காட்சிகளாம். அதன் அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டிய தருணம் வரும் போது, அவர் அதை வெளிப்படுத்துவார். கடைசி காலம் வரைக்கும் அவர் அதை இரகசியமாக வைத்திருப்பார். ஆனால் கடைசி சபை தூதனின் செய்தி முழங்கும்போது, இந்த இரகசியங்கள் அனைத்தும் வெளியரங்கமாகும். யோவான் ஒரு வெள்ளைக் குதிரை செல்வதையும் அதன் மேல் ஒருவன் வீற்றிருக்கிறதையும் காண்கிறான். நான்கு ஜீவன்களில் ஒன்று அவனிடம் `வந்து பார்’ என்று சொன்னவுடன், அவன் சென்று இந்தக் காட்சியைக் கண்டு அதை சபைக்கு எழுதி வைக்கிறான். அவன் ஒரு வெள்ளைக் குதிரையைக் காண்கிறான். அதன் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது, அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். இதை மாத்திரமே யோவான் கண்டு, அதை எழுதி வைத்தான். அது ஒரு அடையாளமாக இருக்கிறது. சபைக்கு அது அவ்விதமாகவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைசி காலத்தில் அதன் இரகசியம் வெளிப்படும் என்று வாக்களிக்கப்பட்டுள்ளது. நாம் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள தேவன் உதவி செய்வாராக. இந்த ஏழாம் சபையின் தூதனை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அவன் ஒரு ஸ்தாபனம் உண்டாக்கவில்லையென்பதை அறியலாம். அவன் ஸ்தாபனங்களை எதிர்ப்பவன். எலியா ஸ்தாபனங்களின் விரோதியா? ஆம். எலியாவின் ஆவியைக் கொண்ட யோவான் ஸ்நானன் ஸ்தாபனங்களை எதிர்த்தவனா? எலியா எவ்விதமான ஆவியைக் கொண்டிருந்தான்? அவனைக் குறித்து யாருமே அதிகம் அறியவில்லை. அவன் ஒரு சாதாரண மனிதன். ஆனால் அவன் ஒரு தீர்க்கதரிசி. அவனை எல்லோரும் வெறுத்தனர். இஸ்ரவேல் ஜனங்களின் செல்வாக்கு ஓங்கி, அவர்கள் தேவனை விட்டு அகன்று உலகப் பிரகாரமாக இருந்த சமயத்தில் அவன் தோன்றினான். அவன் ஸ்திரீகளை வெறுத்தான், வனாந்தரத்தை விரும்பினான். அது தான் அவன் இயல்பு. எலியா பெற்றிருந்த அதே ஆவியைக் கொண்டவனாக யோவான் தோன்றினான். ஒரு முக்கியஸ்தனைப் போல் அவன் ஆடை உடுத்தி யிருக்கவில்லை. அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு மனிதனாயிருந்தான். அவன் செய்த வேறொன்று, ஸ்தாபனங்களை வெறுத்தலாகும். அவன், `நீங்கள் இதைச் சார்ந்தவர், அதைச் சார்ந்தவர் என்று கூறிக்கொள்ள வேண்டாம். தேவன் இந்தக் கற்களினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்’ என்றான். அவன் சத்தியத்தை விட்டுக் கொடுக்காத ஒருவன். இயேசு அவனைக் குறித்து, `காற்றினால் அசையும் நாணலைப் பார்க்கவா வனாந்தரத்திற்குச் சென்றீர்கள்?’ என்றார், யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. யோவானும் என்ன செய்தான்? எலியா யேசேபேலிடம் தவறுகளை எடுத்துரைத்தது போன்று, யோவானும் (யோவான் ஸ்நானன்) ஏரோதியாளின் தவறை உணர்த்திக் காண்பித்தான். அவன் ஏரோதின் முகத்தை நோக்கி, `நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல’ என்று தைரியமாய் கண்டித்தான். அதற்காக அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். யேசேபேலுக்குள்ளிருந்த அதே ஆவி தான் ஏரோதியாளுக்குள்ளும் இருந்தது, அதே ஆவிதான் இன்றைய யேசேபேல் சபைகளிலும் காணப்படுகின்றது. இதில் நாம் கற்கவேண்டிய ஒரு பெரிய பாடமுண்டு. அக்காலத்து ஜனங்கள் எலியாவின் ஆவியை அறிந்து கொண்டிருக்க வேண்டும். யோவான் அங்கு நின்று ஜனங்களைக் கண்டித்தபோது அது எலியாவின் ஆவி என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அந்த எலியாவின் ஆவி முடிவு காலத்திற்கு சற்று முன்பு திரும்பவும் வருமென்று வேதம் வாக்களித்துள்ளது. அந்த ஆவியின் இயல்பை நீங்கள் அறிந்து கொள்ளலாம். எலியாவின் ஆவியைக் கொண்டவன், லூத்தர், வெஸ்லி இவர்களைப் போன்று வேறொரு ஸ்தாபனத்தை உண்டாக்க மாட்டான். ஏனெனில் வேறொரு சபை காலம் வரப் போவதில்லை. ஆகையால் ஸ்தாபனத்தை அவன் எதிர்க்க வேண்டும். அவனுக்குள் இருக்கும் ஆவி, எலியா, யோவான் என்பவர்களுக்குளிருந்த ஆவிக்கு ஒத்ததாயிருக்கும். அதே ஆவி, நான் கடந்த இரவு உங்களிடம் கூறினவாறு, `அந்த ஆவியை மூன்று வித்தியாசமான சமயங்களில் உபயோகிக்க தேவன் பிரியம் கொண்டார்’. மூன்று என்பது தேவனுடைய எண்ணிக்கையாகும்.இரண்டல்ல, மூன்று. அவர் ஏற்கனவே அதை இருமுறை உபயோகித்து விட்டார். இப்பொழுது அதை மறுபடியும் உபயோகிக்கப் போகிறார். அவ்விதம் செய்யப்போவதாக அவர் வாக்களித்துள்ளார். அவன் வேறொரு ஸ்தாபனத்தை உண்டாக்கப் போவதில்லை. ஏனெனில், லவோதிக்கேயா சபையின் காலம் தான் கடைசி சபையின் காலம். ஏழாம் சபைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஏழாம் தூதன் பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு சகல இரகசியங்களையும் வெளிப்படுத்துவான். சென்ற இரவு உங்களில் எத்தனை பேர் கூட்டத்திற்கு வந்தீர்கள்? கைகளை உயர்த்துங்கள். அது வேதத்தில் எங்கு காணப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 10ம் அதிகாரம்) ஆகையால் அதைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. சீர்திருத்தக்காரர் வந்து தங்களுக்கு முன்பிருந்த நிலைகுலைந்த சபையைச் சீர்ப்படுத்தின பிறகு, அவர்கள் மறுபடியும் உலக வழிகளில் சென்று ஒரு சபையின் காலத்தை உண்டாக்கிக்கொண்டனர் என்பதை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம். உதாரணமாக, ரோமன் கத்தோலிக்க சபையின் காலத்தில், லூத்தர் என்னும் சீர்திருத்தக்காரர் தோன்றி சபையின் முறைகளை ஆட்சேபித்தார். அதன் பின்னர் அவர் எவைகளை ஆட்சேபித்தாரோ, அவைகளின் மேலேயே வேறொரு சபை கட்டினார். அதன் விளைவாக வேறொரு சபையின் காலம் தோன்றியது. சபை மறுபடியும் குழப்பமுற்ற நிலையில் இருந்தபோது, ஜான்வெஸ்லி தோன்றி அவ்வாறே வேறொரு சபையின் காலத்தை உண்டாக்கினார். நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்கு விளங்குகின்றதா? அவர்களெல்லாரும் சீர்திருத்தக்காரர். ஆனால் கடைசி சபையின் காலத்து தூதன் ஓர் சீர்திருத்தக்காரன் அல்ல. அவர் ஒரு தீர்க்கதரிசி. எந்த ஒரு தீரக்கதரிசியாகிலும் ஒரு சபையின் காலத்தை உண்டாக்கியதாக நீங்கள் காண்பியுங்கள்! மற்றவரெல்லாம் சீர்திருத்தக்காரர். அவர்கள் தீர்க்கதரிசிகளல்ல. தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வருகிறது. அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்தால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்கள் தொடர்ச்சியாக ஞானஸ்நானம் கொடுத்திருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் மகத்தான தேவனுடைய ஊழியக்காரர். அவர்கள் வாழ்ந்த காலத்தின் தேவைகளை அவர்கள் அறிந்திருந்தனர். தேவன் அவர்களை அபிஷேகித்திருந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று தவறான முறைகளுக்கு விரோதமாய் பிரசங்கித்து அவைகளைச் சின்னாபின்னப்படுத்தினர். ஆனால் தேவனுடைய வார்த்தை முழுமையும் அவர்களிடத்தில் வரவில்லை. ஏனெனில் அவர்கள் தீர்க்கதரிசிகளல்ல, அவர்கள் சீர்திருத்தக்காரர். ஆனால் இக்கடைசி நாட்களில் ஒரு தீர்க்கதரிசிக்கு தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படும். அவன் சீர்திருத்தக்காரனாய் இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையை கிரகித்துக்கொள்ள அவன் வரம் பெற்ற ஒரு தீர்க்கதரிசியாய் இருக்க வேண்டும். சீர்திருத்தக்காரர், அவர்கள் காலத்தில் உண்டாயிருந்த தவறுகளை அறிந்திருந்தனர். நற்கருணையில் கொடுக்கப்படும் அப்பம் கிறிஸ்துவின் சரீரமல்ல என்பதை லூத்தர் நன்கு அறிந்திருந்தார். அவர், `விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்’ என்று பிரசங்கித்தார். அதுதான் அவருடைய செய்தி, அவ்வாறே, ஜான்வெஸ்லியும் தோன்றி பரிசுத்தமாக்குதலைப் பிரசங்கித்தார். அவருடைய செய்தி அதுவாக இருந்தது. பெந்தேகோஸ்தேகாரர் பரிசுத்த ஆவியைக் குறித்த செய்தியை கொணர்ந்தனர். ஆனால் கடைசி நாட்களில் கடைசி காலத்தின் தூதன் ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்குவதில்லை. சீர்திருத்தக்காரர் விட்டு விட்ட எல்லா தேவரகசியங்களையும் அவன் ஒன்று சேர்த்து, ஜனங்களுக்கு அதை வெளிப்படுத்துவான். தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும். (வெளி. 10.6). இந்த ஏழாம் தூதன், பூமியிலுள்ள தூதன், ஆனால் பலமுள்ள தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்தவர். அவர் வேறொருவர். ஆனால் ஏழாம் தூதனுடைய சத்தத்தைக் குறித்து இங்கு சொல்லப்படுகிறது. இந்த தூதன் சபையின் காலத்துக்குத் தூது கொண்டுவரும் ஒரு மனிதன். எல்லா இரகசியங்களையும் வெளிப்படுத்துவதே இந்த தூதனின் ஊழியமாயிருக்கும். அது எளிமையாய் இருப்பதால், ஜனங்கள் குப்புறவிழுவார்கள். ஆனால் அந்த ஊழியம் அடையாளங்களினால் முற்றிலும் உறுதிப்படுத்தப்படும். காண விரும்புபவர் யாவரும் அதைக் காணலாம். ஆனால் இயேசு, `கண்களிலிருந்தும் காணாதவர்களாகவும், காதுகளிலிருந்தும் கேளாதவர்களாயும் இவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது என்று ஏசாயா உங்களைக் குறித்து நன்றாய் சொன்னான்’ என்பதாய் கூறியுள்ளார். கவனியுங்கள், மற்றவர் சீர்த்திருத்தக்காரர், அவர்கள் காலத்தின் தேவைகளை அறிந்து சீர்திருத்தம் உண்டாக்கினர். ஆனால் கடைசி காலத்து தூதன் சீர்திருத்தம் உண்டாக்குபவனல்ல, அவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான் என்பதாக வெளி. 10.6 உரைக்கிறது. அது அம்மனிதனுக்குள் இருக்கும் வார்த்தையாகும். தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் உருவக்குத்துகிறதாயும் இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருப்பதாய் எபிரேயர் 4.12 கூறுகிறது. இம்மனிதன் தேவனுடைய இரகசியங்களை தேவனுடைய வார்த்தையைக் கொண்டு வெளிப்படுத்தி, பிள்ளைகளின் விசுவாசத்iப் பிதாக்களிடத்தில் திருப்புவான். ஆம், ஏழாம் தூதன் மூலவேத விசுவாசத்திற்கு ஜனங்களைத் திருப்புவான். ஓ! இது எனக்கு எவ்வளவு பிரியம்! சீர்திருத்தக்காரர் முழுவதும் புரிந்து கொள்ள முடியாத முத்திரைகளின் இரகசியங்கள் வெளியரங்கமாக வேண்டும். மல்கியா 4ம் அதிகாரம் சற்று நோக்குவோம். அதை குறித்து வைத்துக்கொள்ளவும். அதில் கூறப்பட்டவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் ஜனங்களை பிதாக்களின் மூல விசுவாசத்திற்கு திருப்புவான். அந்த மனிதன் வருவதற்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். அவன் தாழ்மையுள்ளவனாய் இருப்பதன் காரணத்தால், லட்சக்கணக்கான பேர் அவனை அறிந்து கொள்ள மாட்டார்கள். ஆனால் ஒரு சிறு குழு மாத்திரமே அவன் யாரென்பதையும் புரிந்து கொள்வர். கிறிஸ்துவுக்கு முன்பாக ஒரு தூதன் வருவானென்றும், அவன் வனாந்தரத்திலிருந்து புறப்படுகிற சத்தமாயிருப்பானென்றும் யோவானின் வருகை முன்னறிவிக்கப்பட்டது. மல்கியா அவனைக் கண்டான். கிறிஸ்துவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக வரும் எவியாவைக் குறித்து மல்கியா 3ம் அதிகாரத்தில் எழுதப்புட்டுள்ளது, `இல்லை, அது4ம் அதிகாரம்’ என்று நீங்கள் கூறலாம். மன்னிக்கவும். இயேசுவே அது 3ம் அதிகாரத்தில் உள்ளதாக கூறுகிறார். மத்தேயு 11.10ல் (அவர் யோவானைக் குறித்து பேசும் போது), `இதோ என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்..... என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்’ என்றார். இப்பொழுது மல்கியா 3ம் அதிகாரத்தைப் படித்துப் பாருங்கள். சிலர் அதை மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்டதுடன் பொருத்துகின்றனர். அது தவறாகும். மல்கியா 4ல் கூறப்பட்ட தூதன் சென்றவுடன், உலகம் முழுவதும் எரிந்து விடுகிறது. அப்பொழுது நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். இதை நீங்கள் யோவான் ஸ்நானனுடைய வருகையுடன் பொருத்தினால் அக்காலத்தில் நடவாத ஒன்றை வேதம் கூறியிருப்பதாக அர்த்தமாகிறது. 2000 வருடம் கடந்த போதும், இவ்வுலகம் இன்னும் எரிந்து சாம்பலாகவில்லை. ஆகையால் அது எதிர்காலத்தில், இனிமேல் நிகழவிருப்பதை உரைக்கிறது. ஆகையால் இதை அறிந்து கொள்ள வெளிப்பாடு அவசியம். தேவனுடைய வெளிப்பாடின்றி மத்தேயு 28.19ம், அப்போஸ்தலர் 2.38ம் ஒன்று என்று எங்ஙனம் அறியமுடியும்? அற்புதங்களின் காலம் முடிவடைந்து விட்டது என்று கூறுபவர் வெளிப்பாடில்லாதவர்கள். வெளிப்பாடு இருந்தால் மாத்திரமே எது தவறு எது சரியென்று அறிந்து கொள்ள முடியும். அவர்கள் வேதபள்ளியில் படித்ததனால் வெளிப்பாடின்றி உள்ளனர். மல்கியா 4ம் அதிகாரத்தை சற்று நோக்குவோம். அவன் தீர்க்கதரிசியாயிருந்து பிதாக்களின் மூல விசுவாசத்திற்குத் திருப்புவான். கடைசி காலத்தில், உபத்திரவ காலம் தொடங்கும் போது மூன்றரை வருட காலம் அல்லது தானியேலின் எழுபது வாரங்கள் (தானியேல் மொழிந்த எழுபது வாரங்களின் பிற்பகுதி மூன்றரை வருடங்கள்) - எத்தனை பேருக்கு இது ஞாபகமிருக்கிறது? எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது, பாருங்கள், மேசியா வந்து அப்பொழுது சங்கரிக்கப்படுவார். அவர் வாரத்தின் பாதியில் பலியையும் காணிக்கையையும் ஒழியப் பண்ணுவார். ஆகவே, மூன்றரை வருடகாலமாக மேசியாவின் போதகம் யூதர்களிடம் செல்லும். தேவன் ஒரே சமயத்தில் யூதர்களிடமும் புற ஜாதிகளிடமும் ஈடுபடுவதில்லை, அவர் இஸ்ரவேலரை ஒரு நாடாக நடத்துகிறார். ஆனால் புறஜாதியாரிடம் தனிப்பட்ட நபராக ஈடுபடுகிறார். அவர் புறஜாதியார் மத்தியிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை அவர் மணவாட்டியாகத் தெரிந்து கொள்கிறார். இப்பொழுது இஸ்ரவேலரை ஒரு நாடாக வழி நடத்திக் கொண்டு வருகிறார், அவள் இப்பொழுது ஒரு நாடாக ஆகிவிட்டாள். பால் பாயிட் (Paul Boyd) எனக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், சகோ, பிரான்ஹாமே, என்ன நேரிட்டபோதிலும் யூதர்களுக்கு இன்னமும் புறஜாதியாரிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி காணப்படுகின்றது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அது அவ்விதம் தான் அமைந்திருக்க வேண்டும். மார்டின் லூத்தர் யூதர்கள் அந்திக் கிறிஸ்துவென்றும், அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு அவர்கள் வீடுகள் எரிக்கப்பட வேண்டுமென்றும் அறிக்கை விடுத்தது தெரியுமா? லூத்தர் அதை எழுத்து மூலம் அறிவித்தார். மார்டின் லூத்தர் கூறியதை ஹிட்லர் நிறைவேற்றினார். மார்டின் லூத்தர் ஏன் இவ்வாறு கூறினார்? ஏனெனில் அவர் ஒரு சீர்த்திருத்தக்காரர்,தீர்க்கதரிசியல்ல, கர்த்தர் தீர்க்கதரிசியாகிய மோசேயுடன் தொடர்பு கொண்டு இஸ்ரவேலரை ஆசீர்வதித்தார். அவன், `உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பான். உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவனாயிருப்பான், என்றான். ஒரு தீர்க்கதரிசி கூறியுள்ளதை எங்ஙனம் மற்றொரு தீர்க்கதரிசி மறுக்க முடியும்? அது முடியவே முடியாது. அவை ஒன்றுக்கொன்று இசைந்திருக்க வேண்டும். ஜெர்மானிய தேசம் ஒரு கிறிஸ்தவ நாடாகும். ஆனால் அவர்கள் யூதர்களுக்கு இழைத்த தீங்கிற்குப் பிரதிபலன் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் நீங்கள் அவர்களைக் குறை கூற முடியாது. இக்கூட்டத்தில் யூதர்கள் யாராவது இருப்பார்களாயின், நீங்கள் எதற்கும் கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கு நல்ல சமயம் வரப்போகின்றது. தேவன் உங்களை ஒருபோதும் மறப்பதில்லை. அவர்கள் நமக்காக குருடராயினர். தீர்க்கதரிசி ஒருவன் ஆண்டவரிடம், நீர் இஸ்ரவேலரை மறப்பீரோ?’ என்று கதறினான். அவர் அவனிடம் `உன் அளவு கோலை எடுத்து வானம் எவ்வளவு உயரமென்றும் சமுத்திரம் எவ்வளவு ஆழமாயிருக்கிறது என்றும் அளந்து சொல்’ என்றார். அவன் அவைகளை அளக்க இயலாது என்றான். `அவ்வாறே நானும் இஸ்ரவேலை மறக்க முடியாது’ என்று ஆண்டவர் பதிலளித்தார். ஆம், இஸ்ரவேலர் அவர் ஜனங்கள், அவர் பணியாட்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே புறஜாதியாரிலிருந்து அவருடைய மணவாட்டியாய்த் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளனர். இந்த எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தானியேல் கூறிய வண்ணம், மேசியா வந்து வாரத்தின் பாதியில் சங்கரிக்கப்படுவார். இயேசு மூன்றரை வருட காலமாக ஊழியம் செய்தார். இந்த வாரத்தின் பிற்பகுதி தான் உபத்திரவ காலம். அப்பொழுது மணவாட்டி சபை.... ஓ! இது மிகவும் மகத்தானது. இதை இழந்து போக வேண்டாம். மணவாட்டி மணவாளனுடன் செல்கின்றாள். ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகு, அவர்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். இதை வேதத்திலிருந்து காண்பிக்க விரும்புகிறேன். இது தேவனுடைய வார்த்தையென்பது மறுக்க முடியாத உண்மை. நாம் அதை மறுத்தால், அவிசுவாசியாகக் கருதப்பட வேண்டும். அதை நாம் விசுவாசித்தே ஆகவேண்டும். `என்னால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை’ என்று நீங்கள் கூறலாம். எனக்கும் அது புரியவில்லை. அதை வெளிப்படுத்த நான் அவரில் சார்ந்திருக்கிறேன். பாருங்கள்! இதோ சூளையைப் போல் எரிகிற நான் வரும், அப்பொழுது அகங்காரிகள் யாவரும் (அமெரிக்கர்களைப் போன்றவர் யாவரும்) அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள், வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்! (அவர்கள் எரிந்துவிடப் போகின்றனர்), அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும் (மல்.4.1). அப்படியானால் நித்தியமான நரகம் எங்கேயிருக்கிறது? இந்தக் கடைசி நாட்களில் இவையாவும் வெளிப்பட வேண்டும். நரகம் நித்தியமானதென்று வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. நரகத்தில் நித்தியமாக வாசம் செய்ய வேண்டுமானால் அதற்கு நித்திய ஜீவன் அவசியமாயிருக்குமே! ஒரேவகை நித்திய ஜீவன் தான் உண்டு. அதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம். தொடக்கம் உண்டாயிருக்கும் எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு. நரகம் எனப்படுவது பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. ஆகையால் அது எரிந்து சாம்பலாகிவிடும். அது உண்மை. அது நிகழும் போது, அது வேரையும் கொப்பையும் வைக்கமாற் போகும். ஆனாலும் என் நாமத்திற்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும், அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல் வளருவீர்கள். துன்மார்க்கரை மிதிப்பீர்கள், நான் இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங் கால்களில் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (மல். 4.2-3) உபத்திர காலத்திற்குப் பின்பு துன்மார்க்கர் எங்கிருப்பார்கள்? சாம்பலாய் போவார்கள். ஒரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப் பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். இதோ கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நான் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் (மல். 4.5). ஆமென்! பழைய ஏற்பாடு இதைக் கூறிவிட்டு முடிவு பெறுகிறது. புதிய ஏற்பாடும் அது போன்றே முடிவு பெறுகிறது. அங்ஙனமாயின், இதை நீங்கள் எப்படி தள்ளிவிட முடியும்? பாருங்கள், `அந்த நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான் (மல். 4.6) அது தேவனுடைய வார்த்தை, அவர் அனுப்புவதாக வாக்களித்துள்ளார். ஆகையால் அது நிகழ்ந்தாக வேண்டும். தேவன் அதை எவ்விதம் செய்யப்போகிறார் என்பதைக் காண மிகவும் அழகாயிருக்கிறது. முதலாவதாக மணவாட்டி மணவாளனுடன் செல்கிறார். அதன் பின்னர் துன்மார்க்கர் அவியாத அக்கினியில் எரிந்து போவார்கள். உலகம் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், அது மறுபடியும் உண்டாகிறது. உலகிலுள்ள அனைத்தும் அப்பொழுது சுத்திகரிக்கப்படும். மகத்தான அந்த கடைசி தருணத்தில் எரிமலைகள் குழம்பைக் கக்கும், உலகமே பிளந்து போகும். பாவமென்னும் சாக்கடைக் குழியும், பூமியின் மேல் காணப்படும் யாவும் ஒன்றுமில்லாமல் உருகிப்போகும். அவை தேவனால் அனுப்பப்பட்ட தீயினால் எரிந்து போகும் போது, ஒரு துளி மையின் நிறம் வெண்மையாக்கும் திரவத்தில் விழும் போது எவ்வாறு மறைந்து மூலநிலைக்குத் திரும்புகிறதோ, அவ்வாறே அசுத்தமாயிருக்கும் எல்லா பொருட்களும் எரிந்து போய் அதனதன் மூல நிலைக்குத் திரும்பும். அப்பொழுது சாத்தானும் பாவத்துடன் கூட எரிந்து போவான். இவ்வுலகம் புதுப்பிக்கப்பட்டு, ஏதேன் தோட்டத்தின் அழகைப் போன்று விளங்கும். ஓ! அந்த மகத்தான நேரம் வரவிருக்கிறது. இப்பொழுது கூறப்போவதை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். மணவாட்டி எடுக்கப்பட்ட பின்பு, சபையானது உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கும் சமயத்தில், வெளி. 11-ல் கூறப்பட்ட இரண்டு சாட்கிகள் 144,000 பேரை அழைப்பார்கள். இவ்விரண்டு சாட்சிகளும் இரட்டுடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். ரோமரால் உண்டாக்கப்பட்ட கால அட்டவணையில் (calendar) 28, 30, 31 நாட்கள் மாறி மாறி வருகின்றன. ஆனால் உண்மையான கால அட்டவணையில் ஒவ்வொரு மாதத்திற்கு முப்பது நாட்கள் மாத்திரமே உண்டு. ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்களை முப்பதால் வகுத்தால் சரியாக மூன்றரை வருடம் கிடைக்கின்றது. மேசியாவின் செய்தி இஸ்ரவேலுக்குப் பிரசங்கிக்கப்பட அளிக்கப்பட்ட சமயம் அதுதான். அவர் வந்து தம்மை வெளிப்படுத்தும்போது நிகழும் காரியம். யோசேப்பு ஒரு ஆவிக்குரிய மனிதன் என்னும் காரணத்தால் தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு வேறு தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். அவன் தரிசனம் கண்டு, சொப்பனத்தின் அர்த்தத்தை விவரிப்பதுண்டு. அவன் அவ்வாறு செய்தபடியால், ஏறக்குறைய முப்பது வெள்ளிக் காசுக்கு விற்கப்பட்டு வேறு தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டான். கிறிஸ்துவின் ஆவி அவனுக்குள் வாசம் செய்ததால், அவன் கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாயிருந்தான். அவன் சிறையிடப்பட்டான். அங்கு ஒருவன் இரட்சிக்கப்பட்டான். மற்றவன் கைவிடப்பட்டான். அவ்வாறே இயேசுவும் சிலுவையாகிய சிறையில் இருந்த போது, ஒரு கள்ளன் இரட்சிக்கப்பட்டான், மற்றவன் கைவிடப்பட்டான், அவர் மரித்து, கல்லறையில் வைக்கப்பட்டார். அவர் உயிரோடெழுந்து பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு பிதாவின் பாரிசத்தில் உட்கார்ந்தார். யோசேப்பும் பார்வோனின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தான், எவரும் யோசேப்பை முதலில் காணாமல் பார்வோனைக் காண முடியாது. அவ்வாறே, குமாரனின் மூலமேயன்றி எந்த மனிதனும் பிதாவினிடத்தில் வரமுடியாது. யோசேப்பு சிங்காசனத்தை விட்டு எழுந்த போது, எக்காளம் முழங்கி, `யோசேப்பு வருகிறார்’ என்று அறிவிக்கப்பட்டது. அப்பொழுது முழங்கால்கள் யாவும் யோசேப்புக்கு முன்பாக முடங்கின. ஆட்டுக்குட்டியானவரும் மத்தியஸ்த ஊழியத்தை முடித்து, சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு மீட்பின் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வரும்போது, முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும். யோசேப்புக்குப் புறஜாதி மனைவியை பார்வோன் அளித்தான். யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம், மனாசே இவர்கள் யாக்கோபிடத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது அவன் கைகளைக் குறுக்கிட்டு இளையவனுக்கு ஆசீர்வாதத்தை அளித்தான். இவ்விருவரும் பன்னிரண்டு கோத்திரத்தில் சேர்க்கப்பட்டனர். யாக்கோபு தன்னிலே அவர்களை ஆசீர்வதித்தான். யோசேப்பு அங்கு நின்று கொண்டு, `தகப்பனே, நீ தவறு செய்துவிட்டீர். உம்வலது கர ஆசீர்வாதத்தை மூத்தவனுக்கு அளிப்பதற்குப் பதிலாக இளைவனுக்கு அளித்து விட்டீர்’ என்றான். அதற்கு யாக்கோபு, `என் கைகள் குறுக்கிடப்பட்டதை நான் அறிவேன். கர்த்தர்தான் அவ்விதம் செய்தார்’ என்றான். ஏன்? இஸ்ரவேலர் மணவாட்டியாகும் உரிமையைப் பெற்றிருந்த போது அவர்கள் சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுபோட்டனர். ஆசீர்வாதம் மூத்தவனான இஸ்ரவேலரை விட்டு, சிலுவையின் மூலம் இளையவனான புறஜாதிக்கு வந்தது. யோசேப்பின் சகோதரர் தானியம் வாங்க அவனிடத்தில் வந்த போது, யோசேப்பு அவர்களை உடனே கண்டு கொண்டான், யோசேப்பு செழிப்பின் மகனாய் இருந்தான். அவன் எங்கு சென்றாலும் செழித்தோங்கினான். நம் யோசேப்பாகிய இயேசு பூமிக்கு மறுபடியும் வரும்வரை காத்திருங்கள். அப்பொழுது வனாந்தரம் ரோஜாக்களைப் போன்று செழிப்படையும். நீதியின் சூரியன் நம் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் கொண்டவராய் உதிப்பார், ஓ! அரிஸோனாவில் (Arizona) காணப்படும் முட்செடிகளும் அழகான மரங்களாக மாறும். அது ஓர் அழகான காட்சியாயிருக்கும். யோசேப்பு அங்கு வந்து, `உங்கள் தகப்பனார் இன்னும் உயிரோடிருக்கிறாரா?’ என்று வினாவினான். அவன் தகப்பனார் உயிரோடு இருக்கிறாரா என்று அறிய அவன் ஆவல் கொண்டான். அவர்கள் `ஆம்’ என்றனர். யோசேப்பு பென்யமீனைக் கண்டான். யோசேப்பு புறஜாதியாரிடத்தில் விற்கப்பட்டு சென்ற பிறகு பென்யமீன் பிறந்தான். இயேசு சென்ற பிறகு 144000 பேர் ஒன்று கூடுவதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு. அவன் பென்யமீனைக் கண்டபோது அவன் இருதயம் வெடித்துவிடும் போலிருந்தது. யோசேப்புக்கு எபிரேய மொழி தெரியும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர். அவன் ஒரு மொழி பெயர்ப்பாளனை வைத்துக் கொண்டு எகிப்தியனைப் போல் பாவனை செய்தான். யோசேப்பு அவன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்த விரும்பினபோது, அவன் மனைவியை அனுப்பிவிட்டான். அவள் அச்சமயம் மாளிகையில் இருந்தாள். இயேசுவும் தம் சொந்த ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டு, புறஜாதி மணவாட்டியைத் தெரிந்து கொண்டார். அவர் அவளை கலியாண விருந்துக்காக தம் பிதாவின் மாளிகைக்குக் கூட்டிச் சென்று திரும்பவும் வந்து தம் சகோதரராகிய 144000 பேருக்குத் தம்மை வெளிப்படுத்துவார். எவ்வளவு அழகான பொருத்தம், பாருங்கள். யோசேப்பு அங்கு வல்லமையுள்ள அரசகுமாரனாக நின்று கொண்டிருந்த போது, அவன் சகோதரர் அவனை அறிந்து கொள்ளவில்லை. இஸ்ரவேலரும் இன்றைக்கு இயேசுவை அறிந்து கொள்ளக் கூடாத நிலையில் இருக்கின்றனர். அவரை அறிந்து கொள்ள வேண்டிய சமயம் இன்னும் வரவில்லை. யோசேப்பு தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல், `நான் யோசேப்பு, உங்கள் சகோதரன்’ என்று கூறினான். அவன் பென்யமீனின் கழுத்தில் விழுந்து கதறினான். அவன் சகோதரர் பயந்து போய், `நமக்கு இனி ஆபத்து. யோசேப்பை நாம் கொல்ல முயன்றோம், இப்பொழுது அவன் நம்மைக் கொன்று போடுவான்’ என்று நினைத்தனர். ஆனால் யோசேப்பு, `நீங்கள் ஒன்றுக்கும் பயப்படவேண்டாம். உங்கள் ஜீவனைக் காப்பதற்கென தேவன் என்னை முன் கூட்டி அனுப்பினார்’ என்றான். இயேசு 1,44,000 பேரான யூதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும் போது, அவர்கள், `உம் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏது?’ என்று கேட்பார்கள். அவர், `இவை என் சிநேகிதரின் வீட்டில் உண்டானவை’ என்பார். அப்பொழுது அவர்கள் மேசியாவைக் கொன்றதை உணருவார்கள். அவரோ அவர்களிடம், யோசேப்பு கூறியது போன்று, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் ஜீவனைக் காப்பதற்காக இதைச் செய்தீர்கள்’ என்பார். ஏbனினில் யூதர்கள் குருடராக்கப்படாமல் இருந்தால், புறஜாதிகள் காணியாட்சிக்குள் பிரவேசித்திருக்க இயலாது. ஆகவே, அவர்களது கிரியைகளின் மூலம் அவர் சபையின் ஜீவனை காத்தார். இன்று அவர்கள் அவரை அறிந்து கொள்ள முடியாது. அதற்கேற்ற தருணம் இன்னும் வரவில்லை. நாமும் ஏற்ற தருணம் வரும்போது வேதத்தில் அடங்கிய இரகசியங்களை அறிந்து கொள்வதற்கு இது ஓர் உவமானமாகும். வெளிப்படுத்தின விசேஷத்தின் ஏழு இடிமுழக்கங்கள் மறுரூபமடைவதற்கு ஏற்ற விசுவாசத்தை அளிக்க தேவன் தாமே வழிகாட்டுவராக! இந்த வெள்ளைக் குதிரையின் அர்த்தமென்ன? அதை நான் மறுபடியும் படிக்கட்டும். என் பொருளுக்கு அப்பாற்பட்ட காரியங்களைப் பிரசங்கித்ததற்கு மன்னிக்கவும் ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி, நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்த போது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன். அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான். அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. (அதற்கு முன்பு அவனுக்குக் கிரீடம் இல்லாதிருந்தது). அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். (அவ்வளவுதான், அது ஒரு முத்திரை) (வெளி. 6.1-2). இந்த அடையாளச் சின்னம் என்னவென்பதை பார்ப்போம். இடிமுழக்கம் எதைக் குறிக்கிறது என்று நாம் ஆராய்ந்து அறிந்தோம். முத்திரை திறக்கப்பட்டபோது உண்டான தேவனுடைய சத்தம் தான் இடி முழக்கம். வெள்ளைக் குதிரையின் அர்த்தமென்ன? இங்குதான் நமக்கு வெளிப்பாடு அவசியம். நாம் இப்பொழுது இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வாறே நான் கூறப்போவதும் சத்தியமென்பது உறுதி. அதை குறித்து எனக்குக் கிடைத்த எல்லாப் புத்தகங்களையும் நான் படித்திருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னால், ஏழாம் நாளை ஆசரிக்கும் கூட்டத்தாருக்கு இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி மற்றவர்களைக் காட்டிலும் அதிக வெளிப்பாடு உண்டு என்று ஒருவர் என்னிடம் கூறினார். ஆகையால் அவர்களிடமிருந்த சில நல்ல புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். ஸ்மித் (Smith) என்பவர் எழுதிய `தானியேலின் வெளிப்பாடு’ என்னும் புத்தகத்தைப் படித்தேன், அதில் வெள்ளைக் குதிரையைப் பற்றி ஒரு நல்ல விவரணம் கொடுக்கப்பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் அப்பொழுது தெரியாததால் அவர்கள் சொல்வதையே நானும் சொல்வதென்று தீர்மானித்தேன். வெள்ளைக் குதிரை வல்லமைக்கு எடுத்துக்காட்டென்றும், அதின் மேல் வீற்றிருந்தவர் பரிசுத்த ஆவியானவரென்றும், அவர் தேவனுடைய ராஜ்யத்துக்கென்று அந்தக் காலத்தை ஜெயித்தாரென்றும், கையிலுள்ள வில்லைக் கொண்டு தேவனுடைய அன்பின் அம்புகளை ஜனங்களின் இருதயங்களில் எய்து அவர்களை ஜெயித்தாரென்றும் அப்புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. கேட்பதற்கு இவ்விவரணம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் அது உண்மையன்று. வெள்ளை நிறம் நீதிக்கு அறிகுறியாயிருக்கிறது என்பதை நாமறிவோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் மேற்கூறிய விதமாக அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை. பரிசுத்த ஆவியானவர் எனக்களித்த வெளிப்பாடு இதுவாகும். கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவரே. ஆனால் வித்தியாசமான ரூபங்களில் காணப்படுகிறார். இங்கு ஆட்டுக்குட்டியானவர் கிறிஸ்து கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அங்கு வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் புறப்பட்டு செல்கிறான். ஆகையால் அது பரிசுத்த ஆவியானவராய் இருக்க முடியாது. கிறிஸ்து மூவரில் ஒருவராக எப்படியிருக்க முடியும் என்னும் இரகசியம் இக்கடைசி நாட்களில் வெளிப்பட வேண்டும், பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்னப்படுபவை திரித்துவக்காரர் கூறுவது போன்று மூன்று ஆட்கள் அல்லது மூன்று கடவுள்கள் அல்ல. ஒரே ஆள் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் அல்லது மூன்று உத்தியோகங்களில் காணப்படுகிறார். நீங்கள் போதகர்களிடம் பேசும்போது, `உத்தியோகம்’ என்ற பதத்தை உபயோகிக்க முடியாது. கிறிஸ்துவும், `என் உத்தியோகத்தினிடத்தில் வேண்டிக் கொள்வேன். அப்பொழுது அவர் வேறொரு உத்தியோகத்தை அனுப்புவார்’ என்று கூறியிருக்க முடியாது என்பதனை நாமறிவோம். உங்களுக்கு விருப்பமானால், ஒரே தேவனின் மூன்று தன்மைகள் (attributes) என்று கூறலாம் மூன்று கடவுள்களல்ல. ஆகையால் கிறிஸ்து எவ்வாறு புத்தகத்தைக் கையில் வைத்து நின்று கொண்டு அதே சமயத்தில் வெள்ளைக் குதிரையின் மேலேறி சென்று ஜெயிக்க முடியும்.ஆகவே, வெள்ளைக் குதிரையின் மேலுள்ளவன் கிறிஸ்துவல்ல! கிறிஸ்துவின் வேறொரு ரூபம்தான் பரிசுத்த ஆவியானவர். ஆட்டுக் குட்டியானவர் தான் புத்தகத்தைத் திறக்கிறார். ஆட்டுக் குட்டியானவர் கிறிஸ்துவே அதோடு கிறிஸ்து காணப்படவில்லை. மறுபடியும் வெளிப்படுத்தின விசேஷம் 19-ம் அதிகாரத்தில் அவர் வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்துகொண்டு வருகிறார். நாம் துரிதமாக வெளி 19.11-16 படிப்போம். 11-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரென்னப்பட்டவர், அவர் நீதியான நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார், அவருடைய கண்கள் அக்கினி ஜூவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன, (அந்த கிரீடங்களைப் பாருங்கள்) அவருக்கேயன்றி வேறொருவருக்குத் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இதை குறித்து சற்று நேரம் தியானிக்க எனக்கு எத்தனை விருப்பம்! ஓ! எனக்கு ஒரு எண்ணம் உதித்திருக்கிறது. ஒருக்கால்.... யாரும் அதை அறியார்கள், `யேகோவா’ என்னும் நாமம் சரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்களா? டாக்டர் வேயில் (Dr. Vayle) அது உண்மை என்பது உமக்குத் தெரியும். மொழி பெயர்ப்பாளர்கள் அதை சரிவர மொழி பெயர்க்க இயலவில்லை. அது ஆங்கிலத்தில் J-V-H-U என்று எழுத்து கூட்டப்பட்டுள்ளது. அது `யேகோவா’ அல்ல. அது என்னவென்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் `யேகோவா’ என்று அழைத்தனர். ஆனால் அது அவரது நாமமல்ல. வெற்றி உண்டான ஒவ்வொரு முறையும் அவருடைய நாமம் மாறினது. ஆபிரகாமின் நாட்களைப் பாருங்கள். அவன் முதலில் ஆபிராம் என்று அழைக்கப்பட்டான். அவன் ஆபிரகாம் என்று அழைக்கப்படும் வரை அவனுக்கு குமாரன் பிறக்கவில்லை. சாராவின் பெயர் சாராள் என்று மாற்றப்படும் வரை அவளுடைய கர்ப்பம் செத்திருந்தது. `யாக்கோபு’ என்பதற்கு `எத்தன்’ என்று அர்த்தம். அவன் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு தீர்க்கதரிசியாகிய தன் தகப்பனை ஏமாற்றி சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக்கொண்டான். அவன் புன்னை கொப்புகளை வெட்டி இடையிடையே வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து தணிணீரில் போட்டு, ஆடுகள் பொலிந்தபோது அவைகளை பயமுறுத்தி புள்ளியுள்ள குட்டிகளை ஈனும்படி செய்தான். அவன் எத்தனன்றி வேறொருவனுமல்ல. ஆனால் ஒரு இரவில் அவன் உண்மையான ஒருவரை இறுகப் பிடித்துக்கொண்டான். அது உண்மையென்று அவன் அறிந்து, அவன் மேற்கொள்ளும் வரை அதில் நிலைத்திருந்தான் - அவன் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. அதற்கு, `தேவனுக்கு முன்பாக வல்லமையுள்ள அரசகுமாரன்’ என்று அர்த்தமாம். சீமோன் மீன் பிடிக்கும் செம்படவனாயிருந்தான், ஆனால் அவன் அவரை இயேசு என்று அறிந்தவுடன் அவன் மேற்கொண்டு பேதுரு என்னும் பெயருடையவனானான். இயேசு அவன் பெயரையும் அவன் தகப்பனாரின் பெயரையும் பகுத்தறிந்து அறிவித்ததனால் அவரை மேசியாவென்று அவன் கண்டு கொண்டான். சவுல் என்பது ஒரு நல்ல பெயர். சவுல் என்பவன் ஒரு காலத்தில் இஸ்ரவேலின் ராஜாவாயிருந்தான். ஆனால் அது ஒரு அப்போஸ்தலனுக்குப் பொருந்தும் பெயரல்ல. ஆகையால் இயேசு அந்த அப்போஸ்தலனின் பெயரை சவுல் என்பதலிருந்து பவுல் என்பதாக மாற்றினார், யாக்கோபு, யோவான் இவ்விருவரும் `இடிமுழக்கத்தின் மக்கள்’ என்று அழைக்கப்பட்டனர். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது, `மீட்பர்’ என்னும் நாமமுடையவராயிருந்தார். அவர் மரணத்தையும் பாதாளத்தையும் ஜெயித்து அவைகளை மேற்கொண்டு உன்னதத்திற்கு ஏறிச் சென்ற போது, ஒரு புதிய நாமத்தைப் பெற்றுக் கொண்டார். ஆகையால் தான் அவர்கள் எவ்வளவு கூக்குரலிட்டாலும் ஒன்றும் பெற்றுக்கொள்வதில்லை. இடி முழக்கங்களின் இரகசியம் வெளிப்படும் போது அந்த நாமம் என்னவென்பது அறியப்படும். இங்கு இரகசியத்தைப் பாருங்கள். அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறார். இச்சபையை மறுரூபப்படுத்த ஏதோ ஒன்று அவசியமாயிருக்கிறது. ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அவரைத் தவிர வேறு எந்த மனிதனும் அந்த நாமம் என்னவென்பதை அறியாதிருந்தான். இரத்தத்தினால் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. (கவனியுங்கள்) பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது, இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். அவர் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தில் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி. 19-13:16) அதோ, மேசியா அங்கு வருகிறார்! வில்லைக் கையிலேந்தி வெள்ளைக் குதிரையில் மேலேறி வருபவன் வித்தியாசமானவன், இவ்விருவருக்கு முள்ள வேறுபாட்டை கவனியுங்கள். அவர் புத்தகத்தைக் கையில் ஏந்தியவராய் அங்கு நின்று கொண்டிருக்கிறார். மீட்பின் ஊழியம் அப்பொழுது தான் முடிவடைந்துள்ளது. இன்னமும் அவர் தம் ஸ்தானத்தை வகிக்கவில்லை. ஆகையால், வில்லைக் கையிலேந்தி வெள்ளைக் குதிரையின் மேலேறியிருப்பவன் பரிசுத்த ஆவியானவரல்ல, பெரிய மனிதர்களுடன் நான் இணங்காதிருக்க வேண்டும் என்பது என் எண்ணமல்ல, நான் அவ்விதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த வெளிப்பாடு இதுவே. நீங்கள் வித்தியாசமான கருத்து கொண்டிருந்தால் பரவாயில்லை. நான் இவ்விதம் தான் விசுவாசிக்கிறேன். அதன் பின்னர் கிறிஸ்து காணப்படவில்லை என்பதை கவனிக்கவும். ஆனால் அவர் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறார். ஆகவே, இந்த மனிதன் வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருந்ததால் அவன் கிறிஸ்துவைப் போல் நடித்து ஆள்மாறாட்டம் செய்கிறான் என்று அர்த்தமாகிறது. இவனுக்கு எவ்வித பெயருமில்லை. அவன் இரண்டு மூன்று பட்டங்களை உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் அவனுக்குப் பெயர் கிடையாது. கிறிஸ்துவுக்கோ ஒரு பெயருண்டு. அது என்ன? `தேவனுடைய வார்த்தை’, `ஆதியிலே அந்த வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ அந்த வார்த்தை மாம்சமானார். (யோவான் 1.1.14) குதிரையின் மேல் சவாரி செய்கிறவனுக்கு அவன் வில்லில் அம்பு இல்லை. அதை கவனித்தீர்களா? அவன் கையில் ஒரு வில் இருந்தது, ஆனால் அம்புகளைக் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லை. ஆகவே, அவன் ஒரு பொய்க்காரனாயிருக்க வேண்டும். அவனிடம் அனேக இடிகள் இருந்தன. ஆனால் மின்னல் இல்லை எனலாம். ஆனால் கிறிஸ்துவிடம் இடியும் மின்னலும் ஆகிய இரண்டுமுண்டாயிருந்தன, அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்பட்டது. அதனைக் கொண்டு அவர் தேசங்களை வெட்டுகிறார். ஆனால் மற்றவனிடம் வெட்டுவதற்கு ஒன்றுமில்லை. அவன் மாய்மாலக்காரனின் பாகத்தை ஏற்றிருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையின் மேலேறி ஜெயிப்பதற்குப் புறப்படுகிறான். கிறிஸ்துவினிடம் கூர்மையான பட்டயம் உள்ளது. கவனியுங்கள்! அது அவர் வாயிலிருந்து புறப்படுகிறது ஜீவனுள்ள வார்த்தை, அது தான் தம் ஊழியக்காரருக்கு வெளிப்படும் தேவனுடைய தடியை நீட்டி வண்டுகளை வரவழைப்பாயாக’ என்றார். அப்பொழுது வண்டுகள் பறந்து வந்தன. கர்த்தர் கூறச் சொன்ன அனைத்தும் அவன் கூறினான். அப்பொழுது அது சம்பவித்தது. அவரே ஜீவனுள்ள வார்த்தை, தேவனும் வார்த்தையும் ஒருவரே, தேவனே வார்த்தையாயிருந்தார். முதலாம் சபையின் காலத்தில் காணப்படும் இந்த மர்மமான குதிரை சவாரிக்காரன் யார்? அதை நாம் யோசிப்போம். முதலாம் சபையின் காலத்தில் சவாரி செய்யத் தொடங்கி கடைசி வரை சவாரி செய்யும் இந்த மர்ம மனிதன் யார்? இரண்டாம் முத்திரை தொடங்கி கடைசி வரை செல்கின்றது, அவ்வாறே மூன்றாம் முத்திரை. நான்காம் முத்திரை, ஐந்தாம் ஆறாம், ஏழாம் முத்திரைகள் அனைத்தும் கடைசி வரை செல்கின்றன. இதுவரை சுருட்டப்பட்டு இரகசியங்களைக் கொண்ட இப்புத்தம் கடைசி காலத்தில் திறக்கப்படும், அப்பொழுது இரகசியம் வெளிப்பட்டு அது என்னவென்பது நமக்கு புரியும். உண்மையில் இது முதலாம் சபையின் காலத்தில் தொடங்கின. ஏனெனில் முதலாம் சபை இச்செய்தியைப் பெற்றுக் கொண்டது. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் புறப்பட்டுச் செல்கிறான். அவன் யார்? அவன் ஜெயிக்கும் வல்லலமை கொண்டவன். அவன் யாரென்று நான் கூறட்டுமா? அவன்தான் அந்திக் கிறிஸ்து நிச்சயமாக அவன் அந்திக் கிறிஸ்துதான். இவ்விரண்டும் வித்தியாசம் அறியக்கூடாதபடி ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருக்குமென்றும், கூடுமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களாகிய மணவாட்டியும் வஞ்சிக்கப்படலாம் என்று இயேசு சொன்னார் - அந்திக்கிறிஸ்து! அது அந்திக் கிறிஸ்துவின் ஆவியாகும். நாம் முதலாம் சபையைக் குறித்து பேசும்போது, அச்சபையின் காலத்தில் ஆரம்பமான ஒரு செயலுக்குப் பரிசுத்த ஆவியானவர் விரோதமாயிருந்தாரென்று நாம் கண்டோம். அது `நிக்கோலாய் மதஸ்தரின் கிரியைகள்’ என்று அழைக்கப்பட்டது. உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிக்கொலாய் என்னும் பதம் `சபையின் மேல் ஜெயங் கொள்ளுதல்’ என்று பொருள்படும். அதாவது பரிசுத்த ஆவியின் வழி நடத்துதலை நிராகரித்து, அப்பொறுப்பை பரிசுத்த மனிதன் என்று அழைக்கப்படும் ஒருவனுக்கு அளித்தல். அவன் எல்லாவற்றிற்கும் தலைவனானான். ஒரு சபையின் காலத்தில் கிரியைகளாயிருந்த அது, வேறொரு சபையின் காலத்தில் போதகமாக மாறினது. நிசாயாவில் மகாநாடு ஒன்று கூட்டப்பட்டு அது சபையின் போதகமாக ஆனது. அப்பொழுது முதலாவதாக என்ன நேர்ந்தது? ஒரு ஸ்தாபனம் அதன் விளைவாக உண்டானது. நான் கூறுவது சரியா? ஸ்தாபிக்கப்பட்ட முதலாம் சபை எங்கிருந்து தோன்றினது? ரோமன் கத்தோலிக்க சபை, வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தில் அவள் வேசியென்றும் அவள் குமாரத்திகள் வேசிகளென்றும் அழைக்கப்படவில்லையா? அவளுடன் ஸ்தாபனங்கள் உண்டாக்கிக் கொண்ட அனைவரும் வேசிகள் தாம்! அவர்கள் தங்கள் வேசித்தனத்தின் அருவருப்புகளை போதகமாக ஆக்கிக் கொண்டனர். மனிதருடைய பாரம்பரியங்களைக் கற்பனைகளாகப் போதித்தனர். கவனியுங்கள், அவன் ஜெயிப்பதற்குப் புறப்படுகின்றான். ஆரம்பத்தில் அவனுக்கு கிரீடம் இல்லை. பின்னர் அவனுக்குக் கிரீடம் அளிக்கப்படுகிறது. அவன் நிக்கோலாய் கொள்கையின் ஆவியாகத் தொடங்கி, ஜனங்களிடையே ஸ்தாபனம் உண்டுபண்ணி, 300 வருடங்கள் கழித்து நிசாயா மகாநாட்டில் (Nicene Council) அது போதகமாக மாறினது. கிறிஸ்து முதலாம் சபையின் காலத்தில், `நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய்’ என்று சொன்னது நினைவிருக்கிறதா? (வெளி. 2:6) அவன் ஜெயிக்கிறவனாகப் புறப்பட்டு பரிசுத்த வேதாகமத்தை அகற்றி, ஆதிக்கத்தை ஒரு மனிதனுக்களித்தான். பாவங்களை மன்னிக்க அம்மனிதன் அதிகாரத்தை இவனிடமிருந்து பெற்று கொள்ளுகிறான். பவுலும் இதைக் குறித்து, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் தேவன் போல் உட்கார்ந்து கடைசி நாளில் வெளிப்படுவான் என்று கூறியிருக்கிறான். தடை செய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்பட்டு பரிசுத்த ஆவி எடுபடும் போது, அவன் தன்னை வெளிப்படுத்துவான். இன்றைக்கு அவன் மாறுவேடத்தில் வெள்ளைக் குதிரையின் மேல் இருக்கிறான். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து மாறுவதை சில நிமிடங்களில் நாம் காணலாம். அதுமட்டுமல்ல, அவன் அனேக தலைகளும் கொம்புகளுமுள்ள மிருகமாகவும் மாறுகிறான். வெள்ளைக் குதிரை இப்பொழுது அவன் ஜனங்களை ஏமாற்றுபவனாயிருக்கிறான். இதுவரை ஜனங்கள் இந்த உண்மையை அறிந்து கொள்ளவில்லை. இப்பொழுது அது வேத வாக்கியங்களின் மூலம் வெளியாகின்றது. முடிவில் அந்திக்கிறிஸ்து ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். (incarnate). அப்பொழுது அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகின்றது. ஆரம்பத்தில் நிக்கொலாய் ஆவியாக அவன் இருந்தான். ஒரு ஆவிக்கு நாம் கிரீடம் சூட்டமுடியாது. ஆனால் 300 வருடங்கள் கழித்து அவன் போப்பாண்டவராகிறான். அப்பொழுது ஜனங்கள் அவனுக்கு முடிசூடுகின்றனர். தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. ஆனால் அந்த ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும் போது, அவனுக்குக் கிரீடம் சூடப்படுகின்றது. நிக்கொலாய் போதகமே ஒரு மனித உருவை அடையும்போது, ஜனங்கள் அதற்கு முடிசூட்டுகின்றனர். ஆனால் அது ஒரு போதகமாக மாத்திரம் திகழ்ந்தபோது, அவர்கள் அதற்கு முடிசூட்ட முடியாது, மகிமை! அவ்விதமாகவே, நமது மத்தியில் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் இருப்பவர் நமக்குள் இயேசுவாக வாசம் செய்யும்போது, அவரை நாம் ராஜாதி ராஜாவாக முடிசூட்டுவோம். கிறிஸ்து சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் சமயம் அந்திக்கிறிஸ்துவும் சிம்மாசனத்திலிருக்கிறான் யூதாஸ். கிறிஸ்து உலகத்தை விட்டுச் சென்றபோது யூதாஸும் உலகை விட்டுச் சென்றான். பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் வந்தபோது அந்திக்கிறிஸ்துவும் மறுபடியும் வருகிறான். அப்போஸ்தலனாகிய யோவான், `பிள்ளைகளே, அந்திக்கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. அவன் ஏற்கெனவே உலகில் தோன்றி கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைகளை நடப்பிக்கிறான்’ என்றார். ஆம், அந்திக்கிறிஸ்து அங்கே நிக்கொலாய் ஆவியாக ஸ்தாபனத்தை உண்டாக்குகிறான். நான் ஸ்தாபனங்களின் பேரில் வெறுப்புக் கொண்டுள்ளதில் வியப்பு எதுவுமில்லை. நானாகவே அதை வெறுக்கவில்லை. எனக்குள் இருக்கிறவர் அதை வெறுக்கிறார். அவர் என் மூலம் வெறுப்பைத் தெரிவிக்கிறார். நான் ஸ்தாபனங்களால் சூழப்பட்டிருப்பினும், இதுவரை நான் அவைகளை வெறுக்கும் காரணத்தை என்னால் சரிவர அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுது எனக்குப் புரிந்து விட்டது. தேவன் வெறுத்த நிக்கொலாய் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்யும்போது, ஜனங்கள் அதற்கு முடிசூட்டுகின்றனர். அவர்கள் அவ்விதம் செய்வார்கள் என்று வேதம் எவ்வளவு சரியாக எடுத்துரைக்கின்றது! அந்திக்கிறிஸ்து சபையின் ராஜ்யங்களைக் கைப்பற்றுவான் என்று தானியேலும் கூறியுள்ளான். தானியேல் 11.21. அவ்வாறு கைப்பற்றப்போகும் ஒருவனைக் குறித்து தானியேல் சொல்கிறான். அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான். (ரோமாபுரியைக் குறித்து சொல்கிறான்). இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள். (இப்பொழுது கவனியுங்கள்) ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம் பேசி, ராஜ்யத்தைக் கட்டிக் கொள்ளுவான். அந்திக்கிறிஸ்து என்ன செய்வான் என்று தானியேல் கூறினது சரியாக அப்படியே நடந்தது. அவனைச் சார்ந்த ஜனங்களிடையே அவன் சரியாகப் பொருந்துவான். அவன்அளிக்கும் ஆகாரம் இக்காலத்து சபைகளுக்கு அறுசுவையாயிருக்கும். ஏனெனில் இச்சபையின் காலத்தில், ஜனங்களுக்கு வார்த்தையாகிய கிறிஸ்து அவசியமில்லை. அவர்களுக்கு ஸ்தாபனம் தான் வேண்டியதாயிருக்கிறது. `நீங்கள் கிறிஸ்தவரா?’ என்று உங்களை யாரும் விசாரிப்பதில்லை. எடுத்தவுடன் `நீங்கள் எந்தச் சபையைச் சேர்ந்தவர்கள்?’ என்று கேட்கின்றனர். அவர்களுக்குக் கிறிஸ்து வார்த்தை அவசியமில்லை. அவர்கள் திருத்தப்பட வேண்டுமென்று தேவனுடைய வார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்தால், அவர்கள் அதை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தங்கள் விருப்பம்போல் வாழ்க்கையை நடத்தி அதேசமயத்தில் சபையின் அங்கத்தினராயிருந்து அதன் நற்சாட்சி பெறவேண்டுமென்று கருதுகின்றனர். ஆகையால் அந்திக்கிறிஸ்து அளிக்கும் ஆகாரம் அவர்கள் விருப்பத்திற்கேற்ப அமைந்துள்ளது. முடிவில் அந்திக்கிறிஸ்து `அவள்’ என்று வேதத்தில் அழைக்கப்படுவதைப் பாருங்கள். அவள் வேசியாயிருந்தாள். அவளுக்குக் குமாரத்திகள் இருந்தனர். அது இக்காலத்து ஜனங்களிடையே சரிவர பொருந்துகிறது. அது தான் அவர்களும் விரும்புகின்றனர். வார்த்தை புறக்கணிக்கப்படும் போது, ஜனங்கள் தங்கள் இருதயத்தின் வாஞ்சைகளுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். 2 தெசலோனிக்கேயர் 2.9-12 சற்று முன்பு படித்தோம். அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் பொய்யை விசுவாசிக்கும்படி செய்து ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவர் என்று பரிசுத்த ஆவியானவரே உரைத்திருக்கிறார். இன்றைய சபையின் (ஸ்தாபனத்தின்) விருப்பமும் அதுவல்லவா? நீங்கள் இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டுமென்று வேதம் கூறுவதை நாம் எடுத்துக் கூறினோமானால், உடனே அவர்கள், தாங்கள் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் என்று சொல்லி, `நீங்கள் கூறுவதைக் கேட்டு அதன்படி நடக்க அவசியமில்லை’ என்பார்கள். ஆகையால் தேவன், `அவர்கள் அதை விரும்பினால், அதை நான் அனுமதிப்பேன். அதுசத்தியம் என்று அவர்கள் விசுவாசிக்கக் செய்வேன். சத்தியத்தை குறித்து கேடான சிந்தையை அவர்களுக்குக் கொடுப்பேன்’ என்கிறார். வேதம் என்ன சொல்லுகிறதென்பதை கவனியுங்கள், `யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல.... இவர்களும் இக்கடைசி காலத்தில் சத்தியத்தைக் குறித்து கேடான, சிந்தையுடையவர்களாய், நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக் கேதுவாகப் புரட்டி, ஆண்டவராகிய தேவனை மறுத்தலிப்பார்கள். கத்தோலிக்கர்கள் மாத்திரமல்ல, பிராடெஸ்டெண்டுகளும் கூட இவ்விதம் செய்வார்கள் - இவ்வனைவரும் .... ஸ்தாபனங்கள் அனைத்தும். அந்திக் கிறிஸ்து முதலாம் சபையின் காலத்தில் புறப்பட்டான். ஆனால் அவன் ஒவ்வொரு சபையின் காலத்திலும் சவாரி செய்து கொண்டே செல்கிறான். அவனை உற்று நோக்குங்கள். `அப்போஸ்தலர் காலத்தில் கூடவா?’ என்று நீங்கள் வினவலாம். அப்பொழுது அவன் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாக இருந்தான். அடுத்து சபையின் காலத்தில் அவன் நிக்கொலாய் மதஸ்தரின் போதகமானான். அழகான ஆடைகள் அணிந்து அதிக கல்வி கற்று, நாகரீகம் பொருந்திய முக்கியஸ்தர்கள் தங்கள் சபைகளின் பரிசுத்த ஆவியின் போதகத்தை விரும்பவில்லை. அவர்கள் ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்திருப்பதற்கு மாத்திரம் விரும்பினர். நிசாயாவின் மகா நாட்டில் சபை அஞ்ஞான மார்க்கத்தைக் கிரகித்துக் கொண்டது. ரோமன் கத்தோலிக்க சபை அஞ்ஞான முறைகளைக் கையாண்டு, பரலோகத்தின் ராணி என்று அழைக்கப்பட்ட அஸ்தரோத்தை இயேசுவின் தாயாகிய மரியாள் என்ற பெயரினால் சபையில் புகுத்தி, மரித்தவர்களை மத்தியஸ்தர்களாக்கி வட்ட வடிவில் அமைந்த ரொட்டியை (Wafer) கிறிஸ்துவின் சரீரமென அழைத்தது. ஒரு கத்தோலிக்கன் அவன் ஆலயத்தைக் கடந்து செல்லும் போது, சிலுவை அடையாளத்தைப் போட்டுக் கொள்கிறான். ஏனெனில் அங்கு பீடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கு குருவானவரின் வல்லமையினால் தேவனாக மாற்றப்படுகின்றதாம். இவையெல்லாம் வெறும் அஞ்ஞான பழக்க வழக்கங்களேயன்றி வேறல்ல. அவர்களின் இருதயத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ள தேவன் அனுமதித்துள்ளார். ஆகவே தான் அவர்கள் இப்பழக்க வழக்கங்களைக் கையாளுகின்றனர். தேவன் அமைத்திருக்கும் வழியைப் பின்பற்றி அவரை ஆராதிக்க நீ விருப்பங்கொள்ளாவிடில், தேவன் உன்னை நிர்ப்பந்தம் செய்யவில்லை. உன் விருப்பத்திற்கு அவர் உன்னை விட்டுக் கொடுக்கிறார். ஆனால் ஒரு விஷயத்தை மாத்திரம் கூற விரும்புகிறேன். உன் பெயர் உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புத்தகத்தில் எழுதியிருக்குமானால், தேவன் அமைத்த முறைகளை அனுசரிப்பதற்கு நீ பெருமகிழ்ச்சி கொள்வாய். ஒரு நொடிப் பொழுதும்கூட நீ அதற்குத் தாமதிப்பதில்லை. `நான் உங்களைப் போலவே பக்தியுள்ளவனாயிருக்கிறேன்’ என்று நீ சொல்லலாம். சரி, அது உண்மையாயிருக்கலாம். கர்த்தராகிய இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியார்கள் பக்தி கொண்டவராயில்லை என்று யார் கூற முடியும்? அவ்வாறே வனாந்தரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் பக்தி கொண்டவராயில்லையா? `கர்த்தர் என்னை அதிகமாய் ஆசீர்வதிக்கிறார்’ என்று நீ ஒருக்கால் பெருமிதம் கொள்ளலாம். ஜனங்கள் தங்கள் ஜீவனத்திற்கு உழைக்க வேண்டிய அவசியம்கூட இருக்கவில்லை. கர்த்தர் அவர்களை வானத்தின் மன்னாவால் போஷித்தார். ஆனால் அவர்கள் எல்லாரும் அழிந்து மாண்டு போனார்களென்று இயேசு கூறினார். இயேசுவின் காலத்திலிருந்த ஆசாரியர்கள் பக்தி வைராக்கியம் கொண்டிருந்தனர். அவர்கள் நல்லவரல்ல என்று யாரும் குறை கூற முடியாது. அவர்கள் பிரமாணத்தின் சரியாக நடந்தனர். அவர்களுடைய சபை செய்யக் கூறின யாவையும் அவர்கள் செய்தனர் என்றாலும் யோவான் அவர்களை, `புல்லின் கீழ் பதுங்கிக் கொண்டிருக்கும் பாம்பின் கூட்டமே, அந்த ஸ்தாபனத்தைச் சேர்ந்திருக்கும் காரணத்தால் நீங்கள் தேவனுடையவர்கள் என்று உங்களை எண்ணிக் கொள்ள வேண்டாம்’ என்றான். இயேசுவும் அவர்களை நோக்கி, `நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள்’ என்று கூறினார். மேலும் அவர், `ஒவ்வொரு முறையும் தேவன் தீர்க்கதரிசியை அனுப்பின போது, அவர்களை நீங்கள் கல்லெறிந்து கொன்று கல்லறைகளில் அடக்கம் செய்தீர்கள். இப்பொழுது கல்லறைகளைச் சுத்தம் செய்து மெருகேற்றுகிறீர்கள்’ என்றார். கத்தோலிக்க சபையும் அதையல்லவா செய்கிறது! ஜோன் ஆப்ஆர்க் (Joan of Arc), பரி. பாட்ரிக் (St. Patrick) இன்னும் மற்றவர்களை அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தாம் இவர்களைக் கல்லறைகளில் அடக்கம் செய்தனர். ஆனால் சில நூற்றாண்டுகள் கழித்து அவர்கள் ஜோன் ஆப் ஆர்க்கின் உடலைத் தோண்டியெடுத்து, நதியில் எறிந்து, அவளை மந்திரவாதியென்றழைத்து சுட்டெரித்தனர். `நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டாயிருக்கிறீர்கள். அவனுடைய கிரியைகளை நீங்களும் செய்கின்றீர்கள். உலகம் பூராவும் இவ்வாறே சம்பவிக்கும். அவர்கள் அதைச் செய்ய விரும்பினபடியால், தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்புவார். வெளிப்படுத்தல் 17ல் கூறப்பட்ட வேசி மகா பாபிலோன் இரகசியம் வேசிகளுக்குத் தாய். யோவான் அவளைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அவள் கிறிஸ்துவினுடைய பரிசுத்தவான்களின் இரத்தால் வெறி கொண்டிருந்தாள் இரத்தாம்பரத்தினாலும் பொன்னினாலும் அலங்கரிக்கப்பட்ட அழகான சபை ஆனால் வேசித்தனமும் அருவருப்பும் நிறைந்த பாத்திரம் அவள் கையில் இருந்தது. `வேசித்தனம்’ என்பது என்ன? அது `அநீதமான வாழ்க்கை நடத்துவது’ என்று பொருள்படும். அது தான் அவள் அளித்த போதகம். தேவனுடைய வார்த்தையை அவள் அவமாக்கி `மரியாளே வாழ்க’ போன்ற முறைகளை சபைக்கு அளித்தாள். பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினர். `கத்தோலிக்க சபை தான் அவ்விதம் செய்கின்றது’ என்று நீங்கள் கூறலாம். அவள் வேசிகளுக்குத் தாய் என்பது நினைவிருக்கட்டும். சீர்திருத்தக்காரன் மரித்து அவன் செய்தியும் மறந்து போன பிறகு, நீங்கள் ஸ்தாபனத்தை ஏற்படுத்தி உங்கள் விருப்பப்படி வாழத் தொடங்கினீர்கள். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க நீங்கள் விருப்பங் கொள்ளவில்லை. வார்த்தையுடன் செல்வதற்குப் பதிலாக நீங்கள் ஸ்தாபனத்தில் நிலைத்து நின்று உங்களுக்கென்று சட்டதிட்டம் ஏற்படுத்திக் கொண்டீர்கள். அவன் தானியேவின் ஜனங்களை அழிக்கும் பிரபு என்பதை அறிவீர்களா? (ஒரு சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டிக் கொள்கிறேன். என்னால் முடிந்தவரை, நான் துரிதமாக முடிக்கிறேன். ஆனால் இது உண்மையென்று உங்களிடம் கூறவிரும்புகிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தாமே இதை எனக்கு அளித்திருக்கிறார் என்பது உறுதி). தானியேல் 9.26,27 வசனங்களைப் படிக்க விரும்புகிறேன். அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை கவனியுங்கள். அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார், ஆனாலும் தமக்காக அல்ல, நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப் போடுவார்கள் (அதுதான் அந்த குருக்களாட்சி heirarchy). அதின் முடிவு ஜலப் பிரவாகம் போல் இருக்கும். முடிவு பரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், மூன்றரை வருட ஊழியத்திற்குப் பிறகு கிறிஸ்து சங்கரிக்கப்பட்டார். அதன் பின்பு ஆலயத்தை அழித்தவன் யார்? சூராம தளபதியாகிய தீத்து (Titus) என்பவன். அவன் பரிசுத்த ஸ்தலத்தை அழித்தான். இவனை சற்று கவனியுங்கள். இயேசு பிறந்த போது... சிவப்பான வலுசர்ப்பம் பரலோகத்தில் அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப் போடும்படிக்கு அவளுக்கு முன்பாக நின்றது. (இயேசுவாகிய) குழந்தை பிறந்த போது அதைப் பட்சிக்க முயன்றது யார்? ரோமபுரி! அதுதான் அந்த சிவப்பான வலுசர்ப்பம்! இங்கே பிரபு. இங்கே அந்த மிருகம். அவர்கள் அனைவரும் பிள்ளையைப் பட்சித்துப் போட நின்று கொண்டிருக்கின்றனர். ஆனால் தேவன் பிள்ளையைப் பரலோகத்திற்கு எடுத்துக் கொண்டு, சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி செய்தார். குறிப்பிட்ட காலம் வரை கிறிஸ்து அங்குதான் இருப்பார். அன்றைக்கு நான் யாரோ ஒருவரிடம் அமெரிக்காவின் பொருளாதார நிலையைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அது சகோ. ராபர்ஸன் (Bro. Roberson) என்று நினைக்கிறேன். அதைப் பற்றி நான் சிறிது காலம் முன்பு உங்களிடையே பிரசங்கித்திருக்கிறேன். நாம் நமது கடன்களை வரிப்பணத்தைக் கொண்டு அடைத்து வருகிறோம். கடன் அடைத்து தீர்க்க இன்னும் நாற்பது வருடங்கள் செல்லும். நீங்கள் எப்போதாவது `கேயர்’ (KAIR) அல்லது `லைப்லைன்’ (Life Line) வானொலி நிலையங்களின் அறிவிப்பை வாஷிங்டனிலிருந்து ரேடியோவில் கேட்டதுண்டா? நாம் பயங்கரமான நிலையில் உள்ளோம். அதற்கு என்ன காரணம்? தங்கம் எல்லாம் வங்கியில் செலுத்தப்பட்டு, அதற்குரிய பாண்டு (Bonds) பத்திரங்களை யூதர்கள் வைத்துக் கொண்டிருக்கின்றனர்... அது ரோமாபுரியாயிருக்கப் போகின்றது. பெரும்பான்மையான உலகத்தின் செல்வம் ரோமாபுரியின் வசமுள்ளது. எஞ்சினவை யூதர்களிடமிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள். பரிசுத்த ஆவியானவர் இதை எனக்கு எவ்வாறு வெளிப்படுத்தினார் என்று பாருங்கள். அவர் ஒரு வாரமளவும் அனேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக் கையையும் ஒழியப் பண்ணுவார். அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும். (தமிழ் வேதத்தில் சரியான மொழி பெயர்ப்பல்ல தமிழாக்கியோன்) ஆங்கில வேதத்தில் அவன் (அந்தப் பிரபு) உடன் படிக்கையை உறுதிப்படுத்தி அந்த வாரம் பாதி சென்ற போது பலியையும் காணிக்கையும் ஒழியப் பண்ணுவான் என்றும், அருவருப்பைப் பரப்ப அவன் முடிவு காலம் வரை பாழாக்குவான் என்றும், பாழாக்கப்படுகிறவர்களின் மேல் அவன் நிர்ணயித்தது ஊற்றப்படும் என்றும் அர்த்தங் கொண்டுள்ளது - தமிழாக்கியோன்). கவனியுங்கள்! அது எவ்வளவு சாமார்த்தியமுள்ள காரியம்! இது ரோமாபரிதான் என்று நாம் அறிந்து கொண்டோம். அவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன். அவன் ஒரு போதகமாகப் புறப்பட்டான் என்று நாம் அறிவோம். அஞ்ஞான ரோமமார்க்கம், போப்பாண்டவரின் ரோமன் கத்தோலிக்க மார்க்கமாக மாறி, அதற்கு முடிசூட்டப்பட்டது. இப்பொழுது கவனியுங்கள்! கடைசி காலத்தில் - கிறிஸ்து பிரசங்கித்த காலத்திலல்ல - வாரத்தின் பிற்பகுதியில், நாம் இப்பொழுது தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து சிந்தித்தோம், இன்னமும் மூன்றரை வருடகாலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான் கூறுவது சரியா? அச்சமயம் இந்த பிரபு தானியேலின் ஜனங்களுடன் (அதாவது யூதர்களுடன்) உடன்படிக்கை செய்வான். அது மணவாட்டி எடுக்கப்பட்ட பிறகு சம்பவிக்கும், அவள் அதைக் காணமாட்டாள். தானியேலின் வாரத்தின் பிற்பகுதியில், ஜனங்கள் அந்தப் பிரபுவுடன் உடன்படிக்கை செய்கின்றனர். யூதர்களுடைய செல்வத்தைப் பறிப்பதற்காக இந்த உடன்படிக்கை செய்யப்படுகிறது. ஏனெனில் கத்தோலிக்க மார்க்கத்தாரும், யூதர்களும் உலகத்தின் செல்வம் முழுமையுமே கைப்பற்றியுள்ளனர். நான் வாடிகனுக்குச் (Vatican) சென்றபோது, அங்குள்ள மூன்று கிரீடங்களையும் கண்டேன். நான் போப்பாண்டவரை ஒரு புதன்கிழமை பகல் 3.00 மணிக்குப் பேட்டிக் காண பாரன் பான் ப்ளும்பெர்க் (Baron Von Blumberg) ஒழுங்கு செய்திருந்தார். நான் அவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட போது, என் கால்பட்டையிலுள்ள முன்கவசத்தை (cuffs) வெட்டி விட்டார்கள். அது பரவாயில்லை. ஆனால் நான் அவரைக் கண்டு திரும்பிவரும் போது, என் முதுகைக் காண்பித்து வரக்கூடாதாம். அதுவும் பரவாயில்லை. ஆனால் நான் அவருக்கு முன்பாக ஒரு காலில் முழங்காற்படியிட்டு அவருடைய விரலை முத்தம் செய்ய வேண்டுமென்றனர். அதை நான் செய்ய மறுத்துவிட்டேன். `சகோதரன்’ என்று அழைக்கப்பட விரும்புகிறவர்களை நான் சகோதரன் என்று அழைப்பேன். `சங்கை’(Reverend) என்னும் பட்டப் பெயரால் ஒருவன் அழைக்கப்பட விரும்பினாலும் நான் அவனை `சங்கை’ என்று அழைப்பேன். ஆனால் ஒரு மனிதனைப் பணிந்து ஆராதனை செய்யமாட்டேன். ஏனெனில் ஆராதனை யாவும் இயேசுகிறிஸ்துவுக்கே உரியது. அவருடைய ஸ்தானத்தை எந்த மனிதனும் வகிக்க முடியாது. அதை நான் செய்ய மறுத்துவிட்டேன். ஆனால் வாடிகனை நான் சுற்றிப் பார்த்தேன். கோடி, கோடி, கோடிக்கணக்கான டாலர்கள் கொடுத்தாலும் அதை வாங்க முடியாது. உலகத்தின் செல்வங்கள் அனைத்தும் அவளிடத்தில் காணப்பட்டதென்று வேதம் உரைக்கிறது. விலை மதிக்க முடியாத அந்த ஸ்தலங்களைப் பாவனை செய்து பாருங்கள். ருஷியாவில் கம்யூனிஸ்ட் தலையெடுக்கக் காரணம் யாது? இன்று அநேக போதகர்கள் கம்யூனிஸத்துக்கு விரோதமாய் பிரசங்கிப்பதைக் கேட்கும் போது எனக்கு வயிறு குமட்டுகிறது. கம்யூனிஸம் என்பது ஒன்றுமில்லை. அது இப்பூமியில் சிந்தப்பட்ட பரிசுத்தவான்களின் இரத்தத்திற்காக பழி வாங்குவதற்கென்று தேவன் உபயோகிக்கும் ஒரு கருவியாக உள்ளது. சபை எடுக்கப்பட்ட பின்னர். ரோமாபுரியும் யூதரும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை செய்து கொள்வர். பரிசுத்த ஜனங்களோடு அவர்கள் உடன்படிக்கை செய்வார்களென்று வேதம் கூறுகிறது. அமெரிக்கா தேசமும் ஏனையநாடுகளும் பொருளாதார சீர்குலைவு அடையும் நிலைவந்துவிட்டது. நம் கடனைத்தீர்க்க இன்னும் நாற்பது வருடகாலம் நம் வரிபணத்திலிருந்து செலுத்தப்பட வேண்டுமானால், நமது நிலையென்ன? நாணயங்களை வாங்கிக் கொண்டு பாண்டு பத்திரங்களைச் செலுத்துவதுதான் இதற்கு விமோசனம். நாம் அவ்வாறு செய்ய முடியாது. வால் ஸ்ட்ரீட் (Wall Street) தான் பணத்தையெல்லாம் சேமித்து வைத்துள்ளது. யூதர்கள்தான் வால் ஸ்ட்ரீட்டில் ஆதிக்கம் கொண்டுள்ளனர். அவர்கள் உலக வாணிபத்துறையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய செல்வமனைத்தும் வாடிகனில் சிக்கியுள்ளது. நாம் அவ்வாறு செய்ய முடியாது. மதுபானம் விற்பவர்களும் புகையிலை வியாபாரிகளும் கோடிக்கணக்கான டாலர்களை வங்கியிலிட்டு பாண்டு பத்திரங்களை வாங்குவார்கள் என்று நினைக்கிறீர்களா? அவர்கள் அரிசோனாவில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி, ஐம்பதாயிரம் டாலர்கள் மதிப்புள்ள கிணறுகளை வெட்டியிருக்கின்றனர். அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தை முதலீடு செய்து வீடுகள் பல கட்டி, அவைகளை லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இவர்களா தங்கள் பணத்தைச் செலுத்தி பாண்டு பத்திரம் வாங்குபவர்கள்? காஸ்ட்ரோ (Castro) (க்யூபா தேசத்து ஜனாதிபதி) ஒரு புத்தியுள்ள காரியத்தைச் செய்தான், அவன் பணத்தை திரும்பவும் அளித்து, பாண்டு பத்திரங்களைக் கிழித்து போட்டான். நாம் பணத்தை வாங்கி பாண்டு பத்திரங்கள் அளித்தால், மீண்டும் பணத்தைத் திரும்பக் கொடுத்து பாண்டு பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியாது. ஆனால் கத்தோலிக்க சபை அவ்வாறு செய்வதற்கு அவளிடம் போதிய பணம் உண்டு. அவள் அதை கண்டிப்பாக செய்வாள். அதற்கென்று அவள் யூதருடன் தன்னை ஒப்புரவு செய்து கொள்வாள். இந்த உடன்படிக்கை அவள் யூதருடன் செய்யும் போது... இதை நான் வேத ஆதாரம் கொண்டு சொல்கிறேன்.... இந்த உடன்படிக்கையை அவள் செய்யும்போது, `அவன் உபாயத்தினால் கைக்கூடி வரப்பண்ணுவான்’ என்று தானி 8.23, 25 உரைக்கின்றது. அவன் யூதர்களுடன் உடன்படிக்கை செய்கிறான், ஆனால் யூதர்களின் செல்வம் அவன் கையில் சிக்கிக் கொண்ட பிறகு அந்த மூன்றரை வருட காலத்தின் மத்தியில் அவன் உடன்படிக்கையை முறிக்கிறான். அவ்வாறு செய்யும்போது, அவன் அந்திக் கிறிஸ்துவென்று முடிவு காலம் வரை அழைக்கப்படுகிறான். ஏனெனில் அவனும் அவன் பிள்ளைகளும் கிறிஸ்துவுக்கும் அவர் வார்த்தைக்கும் விரோதமாய் இருப்பார்கள். செல்வத்தின் ஆதிக்கம் அவன் கையில் வந்தவுடன் யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை அவன் முறிப்பானென்னு தானியேல் கூறுகிறான். அச்சமயம், உலகத்தின் செல்வமனைத்தும் அவன் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுள்ளதால், உலகிலுள்ள வாணிபமெல்லாம் அவள் கைக்குள் இருக்கும். இந்த சமயத்தில் தான், இரண்டு தீர்க்கதரிசிகள் எழும்பி 1,44,000 பேரை அழைப்பார்கள். அதன் பின்பு என்ன நேரிடும்? வெளி 13-ல் கூறியுள்ள மிருகத்தின் முத்திரை போடப்படும். ஏனெனில் உலக வாணிபமெல்லாம் அவன் அதிகாரத்தில் இருக்கும். அந்த முத்திரையிடப்பட்டவன் அல்லாது வேறு யாரும் விற்கவோ கொள்ளவோ முடியாது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவ்வமயம் சபையானது மூன்றரை வருடகாலம் மகிமையில் சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும். இது நிகழும் போது, நாம் இவ்வுலகில் இருக்கமாட்டோம். அவனும் அவன் பிள்ளைகளும் அந்திக்கிறிஸ்துவென அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்துவுக்கு அல்லது அவர் வார்த்தைக்கு விரோதமாயுள்ளவன் அந்திக்கிறிஸ்துவாவான். ஏனெனில் கிறிஸ்து தான் வார்த்தை. வெளி 12.7-9ல் சாத்தான் கீழே தள்ளப்படும் போது... நீங்கள் வேண்டுமானால் அதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அதைப்படிக்க நமக்கு இப்பொழுது சமயமில்லை. நம் சகோதரர் மேல் குற்றஞ்சாட்டுகிறவனாகிய சாத்தான், சபை எடுக்கப்பட்ட பின்னர் தாழத்தள்ளப்பட்டான் என்று வெளி. 12.7-9 கூறுகின்றது. சபை எடுக்கப்படும்போது, சாத்தான் தாழத்தள்ளப்படுகிறான். பின்பு அவன் அந்திக்கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து மிருகம் என்று அழைக்கப் படுகிறான். வெளி. 13ல் அவன் மிருகத்தின் முத்திரையைப் போடுகிறான். ஏனெனில் தடைசெய்கிறவன்... இப்பொழுது கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் பரிசுத்தத்துடன் பூமியை விட்டுச் சென்றிருப்பார்கள்.... தேவனுடைய ஆலயத்தில் அவன் உட்கார்ந்து தேவன்போல் தன்னைக் காண்பித்து, உலகில் மனிதருடைய பாவங்களை மன்னிப்பான் என்று தெசலோனிக்கேயர் நிரூபத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் வெளிப்படும் சமயம் வரும் வரை இது தொடர்ச்சியாக நடைபெற்று, அக்கிரமம் உலகில் மிகுதியாகும். அப்பொழுது சபையானது எடுக்கப்படும். அது எடுக்கப்பட்ட பின்னர், அவன் அந்திக்கிறிஸ்துவாக மாறுகிறான், ஓ! அந்த மகத்தான சபை... அவன் அந்திக்கிறிஸ்துவினின்று மாறி மிருகமென்று அழைக்கப்படுகிறான். இதை ஜனங்களுக்குப் புரிய வைக்க எனக்கு எத்தனை ஆவல்! அந்திக்கிறிஸ்து என்பதும் மிருகம் என்பதும் ஒரே ஆவிதான். அங்கே திரித்துவம் காணப்படுகிறது. பிசாசின் வல்லமை மூன்று கட்டங்களில் வெளிப்படுகிறது. நிக்கொலாய் ஆவி கிரீடம் சூடப்படுவதற்கு முன் அது மனிதனுக்குள் வாசம் செய்ய வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். இதை கவனியுங்கள்! மூன்று கட்டங்கள், முதலாவது கட்டத்தில் அவன் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். இரண்டாவது கட்டத்தில் அவன் கள்ளத் தீர்க்கதரிசி என்று பெயர் சூடப்படுகிறான். மூன்றாவது கட்டத்தில் அவன் மிருகம் என்று அழைக்கப்படுகிறான். நிக்கொலாய் மதஸ்தரின் போதகம்,அந்திக் கிறிஸ்துவின் போதகம் பவுலின் காலத்தில் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக எழும்பினது அந்திக்கிறிஸ்து. பின்பு கத்தோலிக்க சபையின் குருக்களாட்சி (heirarchy)யைக் குறித்து பிரசங்கிக்கும் தீர்க்கதரிசியாக அவன் விளங்குகிறான் கள்ளத் தீர்க்கதரசி, போப்பாண்டவர்தான் தவறான போதகத்துக்குத் தீர்க்கதரிசி. ஆகவே அதன் காரணமாக அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். மூன்றாம் கட்டத்தில் அவன் மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். அஞ்ஞான ரோம மார்க்கம் பெற்றிருந்த எல்லா வல்லமையும் ஒரு மனிதன் பெற்று முடிசூடப்படுகிறான். ஏனெனில் ஏழு தலைகளுள்ள மிருகம் - வலுசர்ப்பம் (வெளி. 12.9) பரலோகத்திலிருந்து தாழத் தள்ளப்பட்டு இந்த கள்ளத் தீர்க்கதரிசிக்குள் வாசம் செய்கிறது. அந்த வலுசர்ப்பம் ஏழு தலைகளில் ஏழு கிரீடங்களைச் சூடியிருந்தது (வெளி. 12.3). அது பூமியில் தள்ளப்படுகிறது. நாம் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறோம்? யார் இந்த வெள்ளைக் குதிரையின் மேல் இப்பொழுது சவாரி செய்பவன்? அவன்தான் சாத்தானின் பராக்கிரமசாலி (Superman). ஒரு இரவு நான் இங்கு உட்கார்ந்திருக்கும் சகோ. நார்மன் (Bro. Norman), சகோ. பிரட் (bro. Fred) இவ்விருவருடன், ஒரு மனிதன் அந்திக் கிறிஸ்துவைக் குறித்துப் பிரசங்கிப்பதைக் கேட்கச் சென்றிருந்தேன். அவர் `அசெம்பிளீஸ் ஆப் காட்’ (Assemblies of God) என்னும் ஸ்தாபனத்தின் தலைசிறந்த போதகர். அவர் அந்திக் கிறிஸ்து யாரென்பதை இவ்விதம் விவரித்தார். `அவர்கள் ஒரு வைட்டமின் மாத்திரையை ஒரு மனிதனுக்குக் கொடுப்பார்கள். அப்பொழுது அவன் ஒரு பட்டினம் பூராவும் நிரப்பும் அளவிற்கு ஒரு பெரிய சொரூபமாக மாறுவான்’. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக உரிமை பாராட்டும் ஒரு மனிதன் இவ்வித தவறான நம்பிக்கை கொண்டிருக்கலாமா? வேதம் அந்திக்கிறிஸ்து யாரென்பதை தெளிவாக எடுத்துக் கூறுகின்றதே! அவன் ஒரு மனிதன். வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் சாத்தானின் பராக்கிரமசாலியல்லாமல் வேறு யாருமில்லை பிசாசு அவனுக்குள் வாசம் செய்யும் ஒருவன், அவன் கல்வியறிவு படைத்த நிபுணன். அவன் ஞானத்தை விற்க முயல்கிறான். அதை ஏவாளுக்கு அவன் விற்றான். நமக்கும் அதை அவன் விற்றுப்போட்டான். அதன் விளைவாக நாம் விரும்பியிருந்த பராக்கிரமசாலியை நாம் பெற்றுக் கொண்டோம். (சகோ. பிரான்ஹாம் அப்போதிருந்த அமெரிக்காவின் ஜனாதிபதியைக் குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). முழு உலகமே ஒரு பராக்கிரமசாலி வேண்டுமென்று விரும்புகிறது. அவர்கள் அவனைப் பெற்றுக் கொள்வார்கள். சபை எடுக்கப்பட்டு சாத்தான் கீழே தள்ளப்படும் வரை சற்று காத்திருங்கள். சாத்தான் மனிதனுக்குள் வாசம் செய்வான். நன்கு பணிபுரிய அவர்களுக்கு ஒருவன் தேவைப்படுகிறது. அவர்கள் விருப்பப்படி அவன் செய்வான். சாத்தானின் பராக்கிரமசாலி கல்வியறிவு படைத்து, ஞானமுள்ளவனாய், தனக்குச் சொந்தமான சபை தத்துவத்தை உண்டாக்கிக் கொண்டு, ஸ்தாபனமாகிய வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து மக்களை ஏமாற்றுகிறான். அவன் உலகிலுள்ள எல்லா மதங்களையும் ஜெயிப்பான். ஏனெனில் அவர்களெல்லாரும் உலக சபை மாநாட்டின் அங்கத்தினர்களாகி விடுவர். ஏற்கனவே அதற்கென்று கட்டிடங்கள் கட்டி, எல்லாம் ஆயத்தமாயிருக்கின்றது. இனி செய்ய வேண்டியது வேறொன்றுமில்லை. எல்லா ஸ்தாபனங்களும் அந்த மாநாட்டில் புகுந்து விட்டன. அதற்கு ஆதரவளிப்பது யார்? ரோமாபுரிதான். இப்பொழுது போப்பாண்டவர், `நாமெல்லாரும் ஒன்று ஆகையால் நாம் ஒன்றுபட்டு ஒன்றாக நடப்போம்’ என்று அறை கூவுகிறார். முழு சுவிசேஷத்தைப் பின்பற்றுபவரும் கூட அதில் சேர்வதற்கென தங்கள் சுவிசேஷ போதகங்களை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஸ்தாபனத்தின் காரியங்களைக் காணக் கூடாதவாறு குருடராகி இருக்கின்றனர். அவர்கள் சத்தியத்தைப் புறக்கணித்து விட்டனர். சத்தியம் அவர்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது. ஆனால் அவர்களோ அதை விட்டகன்றனர். இப்பொழுது பொய்யை விசுவாசிக்கத் தக்கதாக அவர்கள் கொடிய வஞ்சகத்தால் பீடிக்கப்பட்டு ஆக்கினைக்குள்ளாகின்றனர். அந்திக் கிறிஸ்து அவர்களெல்லாரையும் தன் அதிகாரத்துக்குட்படுத்துகிறான். உலகத் தோற்றத்துக்கு முன்னால் முத்தரிக்கப்பட்டு புத்தகத்தில் பெயரெழுதப்படாத எல்லாரையும் அவன் ஏமாற்றினான் என்று வேதம் கூறுகின்றது. `அவன் ஏமாற்றினான்’ என்று கூறினால், அவன் நிச்சயமாக ஏமாற்றினான் என்பதாகும். `நான் இன்னின்ன ஸ்தாபனத்தை சேர்ந்தவன்’ என்று அவர்கள் சொல்லுகின்றனர். அது தான் வேசியின் ஸ்தாபனம். அது தொடங்கப்பட்ட நான் முதற்கொண்டு முழுவதும் அந்திக்கிறிஸ்துவின் ஆதிக்கத்தில் உள்ளது. இப்பொழுதே அவன் ஜெயித்து எல்லாவற்றையும் தன் ஆதிக்கத்தில் வைத்துள்ளான் என்பதைப் பாருங்கள். ஆனால் அவன் மிருகமாக ஆகும் வரை, அந்திக்கிறிஸ்துவாக இருப்பான். கொடூர தண்டனை என்னவென்பதைக் காண வேண்மானால் சற்று பொறுங்கள். பூமியில் கைவிடப்பட்டவர்கள் என்ன விதமான கொடூரத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பதை அப்பொழுது காணலாம். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாகும். மணவாட்டி எடுக்கப்பட்ட பின்பு, வலுசர்ப்பம் (ரோமாபுரி) தன் வாயிலிருந்து வெள்ளத்தை கைவிடப்பட்ட ஸ்திரியின் சந்ததியின் மேல் ஊற்றி, அவளுடன் போர் செய்கின்றது. அவள் உள்ளே பிரவேசிக்க விருப்பங் கொள்ளவில்லை. ஆகையால் அவள் மிருகத்தை போன்று வேட்டையாடப்படுவாள் (வெளி 12.13, 17) ஆனால் மணவாட்டி தேவனுடைய கிருபையினால் இரத்தத்தின் கீழ் இருந்ததால், அவள் இதை அனுபவிக்க வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அவளுக்கு உபத்திரவ காலம் கிடையவே கிடையாது. இனிமேல் சபைக்கு அடுத்ததாக நிகழவேண்டியது எடுக்கப்படுதலாகும். ஆமென்! ஆமென்! ஓ! இது எனக்கு எவ்வளவு பிரியமாயிருக்கிறது! அந்திகிறிஸ்து எத்தகைய ஜெயங் கொள்வான் என்று நாம் பார்த்தோம். அவன் உண்மையாகவே ஜெயங்கொள்வான். அவன் ஏற்கனவே ஜெயங் கொண்டுவிட்டான். அவன் இனிமேலும் ஜெயிப்பதற்கு எல்லாம் ஆயுத்தமாயிருக்கிறது. அவர்கள் இழிவான ஆதாயத்தை இச்சிக்கின்றனர். தேவனைக் காட்டிலும் செல்வத்தை அதிகமாய் அவர்கள் நேசிக்கின்றனர். இப்பொழுது அவர்களுடைய எண்ணமெல்லாம் அவர்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பதாகும். அது என்ன? `சபைக்குக் காசை கொடுத்தால் அவள் உலகம் பூராவும் சுவிஷேகரை அனுப்பி முழு உலகையும் கிறிஸ்துவுக்காக மாற்றிவிடுவாள்’ என்று அனேகமுறை சொல்லக் கேட்டிருக்கிறோம். பரிதாப நிலையிலுள்ள என் குருட்டு நண்பனே, உனக்கு ஒன்றைக் கூறவிரும்புகிறேன். உலகம் பணத்தின் மூலம் ஜெயிக்கப்படாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக மாத்திரமே அது ஜெயிக்கப்படும். மரித்தாலும் பரவாயில்லையென்று தேவனுடைய வார்த்தையில் உறுதியாக நிற்கும் வீரமுள்ள மனிதர்களைத் தேவனுக்கென்று அனுப்புங்கள். அவர்கள் மாத்திரமே அவருக்காக ஜெயிக்க முடியும். உலகத் தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவரே அதை கேட்பார்கள். பணத்திற்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. பணம் அவர்களை ஸ்தாபனங்களின் பாரம்பரியத்தில் தான் ஆழ்த்தும். அவன் கல்வியறிவு படைத்த நிபுணனாய், சாமர்த்தியம் கொண்டவனாய் இருப்பான். அவளைச் சூழ்ந்துள்ள அவள் பிள்ளைகளும் அனேக வேத தத்துவ பட்டங்களை பெற்றிருப்பார்கள். ஏன்? அதுதான் சாத்தானின் முறைமையாகும். வேதத்துக்கு விரோதமாய் அமைந்திருக்கும் சாமர்த்தியமான உபாயம் சாத்தானால் உண்டானது. ஏவாளை அதன் மூலமாகவே அவன் வசியப்படுத்தினான். ஏவாள் அவனிடம், `இதைச் செய்ய வேண்டாமென்று கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்றாள். அவன், `ஆம், தேவன் அப்படிச் சொல்லியிருப்பார். என்றாலும் நான் உன் கண்களைத் திறந்து ஞானத்தைச் சிறிது அளிக்கிறேன்’ என்றான். அவள் அதைப் பெற்றுக் கொண்டாள். இந்த தேசமும் அதைப் பெற்றுக் கொள்ள விரும்பினது. ஆகையால் அதைப் பெற்றுக் கொண்டது. அவன் உலகிலுள்ள எல்லா மதங்களின் மேலும் வெற்றி சிறக்கிறான். கடைசி வாரத்தில், தானியேலின் ஜனங்களாகிய யூதர்களுடன் அவன் உடன்படிக்கை செய்கிறான். இங்கு புறஜாதியாரென்றும் தானியேலின் ஜனங்களென்றும் பாகுபாடு உண்டாகின்றது. அதை நான் கரும்பல கையில் எழுதி உங்களுக்கு முன்னமே விவரித்திருக்கிறேன், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், ஸ்தாபனங்களின் முறைமை பிசாசினால் உண்டானது. அது பிசாசின் வேராக அமைந்துள்ளது.. நான் ஸ்தாபனங்களிலுள்ள ஜனங்களை குறித்து சொல்லவில்லை. அவர்களில் அனேகர் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கின்றனர்.... நாம் எக்காளங்களைப் பற்றி ஆராயும் போது... மூன்றாம் தூதன் தோன்றி,, `என் ஜனங்களே அவளை விட்டு வெளியே வாருங்கள்’ என்று சொல்லும்போது.... தூதன் முழங்கும் போது, கடைசி எக்காளத்திற்காக செய்தி விழுகிறது.... கடைசி தூதனின் செய்தியின் போது, கடைசி முத்திரை திறக்கப்படுகிறது. இவையெல்லாம் ஒரே நேரத்தில் சம்பவிக்கிறது. இவன் ஜெயித்துக் கொண்டு செல்லும்போது, தேவனும் ஏதாவது ஒன்றைச் செய்வார் (நான் முடித்துவிடுகிறேன்) சாத்தானுக்கே நாம் எல்லாப் புகழையும் அளிக்க வேண்டாம். அவனைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். இது நிகழ்ந்து கொண்டே வந்து, ஸ்தாபனங்களெல்லாம் ஒன்று சேர்ந்து கம்யூனிஸத்தை எதிர்க்கும் போது - அவர்களை ஜெயிப்பதற்கென்றே ஆண்டவர் கம்யூனிஸத்தை எழுப்பியுள்ளாரென்பதை அவர்கள் அறியார்கள். ருஷியாவில் கம்யூனிஸம் எழும்பக் காரணமென்ன? அங்குள்ள சபை அசூசிப்பட்டிருந்த காரணத்தால் தான். ருஷியாவில் அவர்கள் பணத்தையெல்லாம் எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு ஒன்றும் கொடுக்காமல் அவர்களை சாகும்வரை பட்டினி கிடத்திகனர். நான் சமீபத்தில் மெக்ஸிகோவுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள ஏழை பிள்ளையைக் கண்டேன். எந்த கத்தோலிக்க தேசமும் தங்கள் ஜீவனாம்சத்துக்கு வேண்டியவைகளைப் போதுமான அளவுக்குப் பெற்றிருக்கவில்லை பிரான்சு, இத்தாலி, மெக்ஸிகோ போன்றவை. ஏன்? சபையானது எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விடுகிறது. ஆகையால் தான் ருஷியா கிறிஸ்தவ மார்க்கத்தை உதைத்துத் தள்ளிற்று. மெக்ஸிகோவில் நான் கண்ட சம்பவத்தைக் கூறுகிறேன். ஆலயமணி அடிப்பதைக் கேட்டபோது, ஏதோ பொன் விழா தான் அங்கு கொண்டாடப் போகின்றனர் என்று நினைத்தேன். ஆனால் ஒரு ஏழ்மையான பெண்மணி காலை இழுத்து இழுத்து நடந்து வர அவளது தகப்பனார் அவள் குழந்தைகளைக் சுமந்து கொண்டு வந்தார். அக்குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. மரித்த ஒரு ஸ்திரீக்கு, அவள் பரலோகத்துக்குப் போகவேண்டுமென்று கருதி. அந்த பெண்மணி நோன்பு (Penance) செய்கின்றதாக நான் அறிந்தேன். என்னே ஒரு பரிதாபமான செயல்! கத்தோலிக்க நாடுகளிலுள்ள சபை எல்லாவற்றையும் பறித்துக் கொள்வதால், ஜனங்களின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாயுள்ளது. பாஞ்சோ ப்ராங்க் (Pancho Frank) என்பவன் அங்கு கொத்தனார் பணி செய்து வாரத்துக்கு 10 பீசோக்கள் (Pesos) சம்பாதிக்கிறான். அவள் ஒரு ஜோடி பாதரட்சை வாங்க வேண்டுமென்றால் 20 பீசோக்கள் தேவைப்படும். அத்தகைய பொருளாதார நிலை இங்கிருந்தால் என்னவாயிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அங்கு சிக்கோ (Chico) என்னும் புனைப்பெயர் கொண்டவன் வாரத்திற்கு 5 பிசோக்கள் சம்பாதிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனுக்குப் பத்துக்குழந்தைகள் இருப்பார்கள். ஆனால் யாரோ ஒருவர் கதவைத் தட்டி, அவன் பாவ நிவர்த்திக்கென்று பீடத்தின் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்க வேண்டுமென்று சொல்லி, அவன் சம்பாதனையில் 4 பீசோக்கள் வாங்கிக் கொண்டு செல்வார். அந்தப் பீடம் லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்ட பொன்னினால் செய்யப் பட்டிருக்கும். அப்படியானால் அவர்களுடைய நிலையென்னவென்று சிந்தித்துப் பாருங்கள். சபை எல்லாவற்றையுமே பிடுங்கிக் கொள்கிறது. ரோமன் கத்தோலிக்க சபை, அனைத்தையும் தன் கரங்களில் கொண்டுள்ளது. அத்துடன் யூதரின் செல்வமும் அவர்கள் செய்யும் உடன்படிக்கையின் மூலம் ஒன்று சேரும். அப்பொழுது அந்திக்கிறிஸ்து மிருகமாக மாறி, உடன்படிக்கையை முறித்து, ஸ்திரீயின் சந்ததியில் மீதியாயுள்ளவர்களை பீறிட்டு, வாயினின்று வெள்ளத்தை ஊற்றி விட்டு, அவர்களுடன் போரிடுவான். அப்பொழுது அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அதே சமயத்தில் மணவாட்டி மகிமையில் கலியாணம் செய்து கொள்கிறாள். அதை இழந்துவிட வேண்டாம். நண்பர்களே நான் அங்கு இருப்பதற்குத் தேவன் தாமே ஒத்தாசை செய்வாராக. அதற்காக என்ன கிரயம் செலுத்த வேண்டுமானாலும் பரவாயில்லை. எவ்வாறாயினும் நான் அங்கு இருக்க விரும்புகிறேன். கவனியுங்கள் அந்திக் கிறிஸ்துவின் துன்புறுத்தல் யாவும் பூமியில் நிகழ்வதற்கு சற்று முன்பு, தேவன்... வாக்குத்தத்தம் செய்துள்ளார். எல்லா ஸ்தாபனங்களும் தங்களிடையேயுள்ள சபை பிரமாணங்களைக் குறித்த வித்தியாசத்தைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் சத்தியமான வார்த்தையைக் கொண்ட ஒரு உண்மையான தீர்க்கதரிசியை ஒரு செய்தியுடன் அனுப்புவதாக தேவன் வாக்களித்துள்ளார். அவன் ஜனங்களை தேவனுடைய மூல வார்த்தைக்கும் பிதாக்களின் விசுவாசத்திற்கும் திருப்புவதனால், பரிசுத்த ஆவியின் வல்லமை பரலோகத்திலிருந்து அவர்கள் மத்தியில் இறங்கி, அவர்களுக்கு எடுக்கப்படுதலுக்கேற்ற வல்லமையை அளித்து, அவர்களை உட்பிரவேசிக்கச் செய்யும். இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அந்த வார்த்தை உறதிப்படுத்தும். `இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன். நான் செய்த கிரியைகளையே நீங்களும் செய்வீர்கள். நான் உங்களுடனே இருப்பேன். இன்றும் கொஞ்சக்காலம், அதன் பிறகு அவர்கள் என்னைக் காணமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டு சிதறிப் போவார்கள். ஆனால் நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் முடிவு பரியந்தம் உங்களோடும் கூட இருக்கிறேன். முடிவில் தேவ கோபாக்கினை ஊற்றப்படும். ஓ தேவனே! அந்த வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவன் யார்? நீங்கள் இப்பொழுது குருடராயில்லை. அவன் யாரென்பதை உங்களால் இப்பொழுது காண முடிகிறது. அவன்தான் அந்திக்கிறிஸ்து. ஏமாற்றும் அந்த ஆவி புறப்பட்டு ஸ்தாபனங்களில் நுழைந்துவிட்டது. தேவன் இவைகளை என் மூலம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருப்பதைப் பாருங்கள். ஒரு மனிதன் வெள்ளைக் குதிரையின் மேலேறி கையில் வில்லைப் பிடித்துக் கொண்டு, அம்புகளின்றி செல்வதை அவர் நமக்குக் காண்பித்தார். அவன் ஒரு பொய்க்காரன். அவனுக்கு வல்லமை எதுவுமில்லை, நீங்கள் `சபையின் வல்லமை’ என்று கூறுகின்றீர்கள். அந்த வல்லமை எங்கே? அவர்கள் வல்லமை காணப்படும்படி என்ன செய்கின்றனர்? அவர்கள், `நாங்கள் தான் ஆதி சபை’ என்கின்றனர்.ஆதி சபை பிசாசுகளைத் துரத்தி பிணியாளிகளை சொஸ்தமாக்கி, மரித்தோரை உயிரோடெழுப்பினது. அது தரிசங்களை கண்டது. அவையெல்லாம் இப்பொழுது எங்கே? பொய்க்காரன் அம்புகளில்லாமல் வில்லைப் பிடித்திருக்கிறான். ஆனால் கிறிஸ்து வெள்ளைக் குதிரையின் மேல் வரும்போது, அவர் வாயிலிருது மின்னல் வேகத்தில் ஒரு பட்டயம் புறப்பட்டுச் சென்றது. அது அவர் விரோதிகளை அழித்து, பிசாசைக் கீழே தள்ளிற்று. அவர் வஸ்திரம் இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருந்தது. அவர் தொடையில் `தேவனுடைய வார்த்தை’ என்று எழுதப்பட்டிந்தது. ஆமென். அவர் பரலோகத்திலிருந்து தம் சேனைகளுடன் வருகிறார். ஆனால் வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்யும் மற்றவனோ எக்காலத்தும் பூமியில்தான் இருக்கிறான். அவன் அந்திக்கிறிஸ்துவாயிருந்து கள்ளத் தீர்க்கதரிசியாக மாறுவான். முதலில் அவன் அந்திக்கிறிஸ்துவாக ஆவியாக இருக்கிறான். பின்னர் அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். அதன் பின்பு பிசாசு கீழே தள்ளப்படும்போது, அவன் ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து `மிருகம்’ என்றழைக்கப்படுகிறான். மூன்று கட்டங்கள் முதலாவதாக அவன் பிசாசின் ஆவியாயிருக்கிறான். பின்னர் கள்ளப் போதகத்தைப் போதிக்கும் கள்ளத் தீர்க்கதரிசியாக அவன் ஆகிறான். அடுத்ததாக அவன் பிசாசாகவே மனிதனுக்கள் குடிகொண்டு வருகிறான். இந்த பிசாசு பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டு ஒரு மனிதனுக்குள் குடிகொள்ளும் அதே சமயத்தில், பரிசுத்த ஆவியானவரும் மேலே சென்று மனிதனுக்குள் வாசம் செய்ய வருகிறார். என்னே ஒரு மகத்தான தருணம்! நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், நாம் இரண்டாம் முத்திரையைப் பார்ப்போம். அவரை நீங்கள் நேசிக்கிறீர்களா? நான் கூறியதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சகோதரரே, ஒரு காரியத்தை உங்களிடம் கூற விரும்புகிறேன். பரிசுத்த ஆவியானவர் எதற்காக எப்பொழுதும் ஸ்தாபனங்களுக்கு விரோதமாக என்னை எச்சரித்துக் கொண்டே வந்தார் என்பதை இன்று முதன்முறையாக நன்றாகப் புரிந்து கொண்டேன். இவைகளைத் தேவன் எனக்குக் காண்பித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். அது சத்தியம் என்பது எனக்குத் தெரியும். இதோ இந்த இரகசியம் வெளிப்பட்டு விட்டது. அவன் காலங்கள் தோறும் சவாரி செய்து கொண்டே வந்து முடிவில் அவன் யாரென்பதை முற்றிலுமாக வெளிப்படுத்துகிறான். ஆனால் நாமோ அவனைக் கண்டு ஏமாறப் போவதில்லை. உங்கள் கண்கள் இப்பொழுது திறக்கப்பட்டுள்ளன. அவ்விதமான காரியங்களை விட்டு அகன்று செல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் அன்பு கூருங்கள். அவரில் எப்பொழுதும் நிலைத்திருங்கள். ஆம், ஐயா, பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள். ******* இரண்டாம் முத்திரை மார்ச் 19,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், நண்பர்களே, ஜெபம் ஏறெடுக்க நாமெல்லாரும் சற்று எழுந்து நிற்போம். எங்கள் பரமபிதாவே, நாங்கள் மறுபடியும் தேவனுடைய ஊழியத்தில் இன்றிரவு பயபக்தியுடன் இக்கூடாரத்தில் கூடியுள்ளோம். எங்களில் இருவர் அல்லது மூவர் எங்கு கூடினாலும், அவர்கள் மத்தியில் பிரசன்னராய் இருப்பதாக நீர் வாக்களித்திருக்கிறீர். உமது நாமத்தில் நாங்கள் கூடிவந்திருக்கிறபடியால் எங்கள் மத்தியில் நீர் இருப்பீர் என்று நிச்சயம் எங்களுக்குண்டு. பிதாவே, இன்றிரவு நீர் வந்து எங்களுக்கு இரண்டாம் முத்திரையை உடைத்துத் தருமாறு கெஞ்சுகிறோம். அந்தக் கவிஞன் கூறியது போன்று, காலமாகிய திரைக்குப் பின்னால் என்னவிருக்கிறது என்பதைக் நாங்களும் காண விரும்புகிறோம். அப்படிப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் தாமே எங்கள் மத்தியில் வந்து, முத்திரையை உடைத்து, நாங்கள் அறிந்து கொள்ள வேண்டியவைகளை எங்களுக்கு வெளிப்படுத்தித் தருமாறு வேண்டுகிறோம். கிறிஸ்துவின் மகத்தான ஐக்கியத்தில் பிரவேசிக்காத யாராவது இன்றிரவு இங்கிருந்தால், அவர்கள் நித்தியத்திற்கேற்ற தீர்மானத்தைச் செய்து, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட கிருபை செய்தருளும். பிதாவே, வியாதியஸ்தர் யாராவது இங்கிருந்தால், அவர்களைச் சுகப்படுத்தும் இங்கு அனேக உறுமால்கள் வைக்கப்பட்டுள்ள, பரி, பவுலின் காலத்தில் அவனுடைய தேகத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்து பிசாசு பிடித்தவர்களின் மேல் போட, அசுத்த ஆவி அவர்களை விட்டுப் போய் அவர்கள் சுகமடைந்ததாக நாங்கள் வேதத்திலிருந்து அறிகிறோம். அதை நினைவுபடுத்திக்கொண்டு கைகளை இவ்வுறுமால்களின் மேல் வைக்கிறேன். ஆண்டவருடைய வருகை வெகு சீக்கிரத்தில் உள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம். அந்த நேரம் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிகிறோம். 1900 வருடங்களுக்குப் பின்பு இவை யாவும் மறுபடியும் சபைக்குத் திரும்ப வந்துள்ளது. பிதாவே, நாங்கள் கேட்கிறவைகளை அருளிச் செய்ய வேண்டுமாய் உம்மிடம் மன்றாடுகிறோம். ஆண்டவரே, உம் தாசனைப் பலப்படுத்தும், எல்லாவிடங்களிலும் உள்ள ஊழியக்காரர்களுக்கு ஒத்தாசை செய்யும். இன்றிரவு இங்கு கூடி வந்திருப்பவர்களையும் பலப்படுத்தி அவர்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ள உதவி செய்யும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இன்றிரவு தேவனுடைய வீட்டுக்கு மறுபடியும் வந்திருப்பது மிகவும் நல்லது. அனேகர் நின்று கொண்டிருக்கின்றனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் இதைக் குறித்து நாங்கள் வேறொன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம். முன்னூறு அல்லது நானூறு பேர் அதிகம் கொள்ளத்தக்கதாய், இக்கூடாரத்தை நாங்கள் விஸ்தரித்தோம். ஆனால் இத்தகைய விசேஷித்த கூட்டங்கள் நடைபெறும்போது, கூட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. முத்திரைகளைக் குறித்துப் படித்து ஜெபிப்பதனால் எனக்கு இது ஒரு நல்ல தருணமாக அமைந்துள்ளது. உங்களுக்கும் அது அவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன். இது எனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக உங்களுக்கும் இருக்கும் என்று கருதுகின்றேன். ஆகையால் இது உங்களுக்கு ஒரு மகத்தான தருணம். ஆராதனை முடிந்தவுடன் என் சிநேகிதியை முன்னால் வரஅழைக்க விரும்புகிறேன். அவள் வேறு யாருமில்லை. என் மகள் சாராள் (Sarah) தான். அவளுக்கு இன்று பன்னிரண்டாவது பிறந்தநாள். நாளை கழித்து பெக்கியின் (Becky) பிறந்த நாள். அவளையும் நான் முன்னால் வர அழைக்க வேண்டும். இன்றிரவு நாம் இரண்டாம் முத்திரையைப் படிக்கப் போகிறோம். முதல் நான்கு முத்திரைகளுக்கு, குதிரை சவாரி செய்யும் நால்வர் உண்டு. இப்பொழுது சம்பவித்த ஒன்றை நான் உங்களுக்கு மறுபடியும் எடுத்துக்கூட விரும்புகிறேன். அனேக வருடங்களுக்கு முன்பு நான் செய்தியளித்த பழைய குறிப்புகளை ஆசனத்தில் அமர்ந்துகொண்டு நோக்கியவாறு, `என்னால் முயன்ற வரை அப்பொழுது நான் செய்தியளித்தேன்’ என்று நினைத்துக் கொண்டேன். அப்பொழுது ஒன்று சம்பவித்தது. அது நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் வித்தியாசமாயிருந்தது. ஒரு வித்தியாசமான வெளிப்பாடு எனக்கு அளிக்கப்பட்டது. நான் உடனே பென்சிலை எடுத்துக் கொண்டு, அவர் அங்கு இருக்கும் போதே, வேகமாக எழுதத் தொடங்கினேன். ஓ! அரைமணி நேரத்துக்கு முன்பு முக்கியமான ஒன்று சம்பவித்தது. நான் சகோ. உட் (Bro. Wood) என்பவரிடம் அதைக் கூறினேன். நான் உங்களுக்கு எடுத்துரைக்க கூடாத அனேக காரியங்கள் சம்பவிக்கின்றன. அவை யாவும் எனக்கு அதிக உபயோகமாயுள்ளன. இக்கட்டித்தில் என் நண்பர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நீங்கள் எல்லாருமே என் நண்பர்கள்தான். நான் குறிப்பிடும் இந்த நண்பர் சகோ. லீ. வேயில் Bro. Lee Vayle). அவர் அருமையான ஒரு சகோதரன். மேலும் அவர் வேதத்தை மிகவும் நன்றாகப் படித்தவர். டாக்டர் வேயில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற பாப்டிஸ்ட். நம்மிடையே வேதத்தைச் சிறந்த முறையில் படித்தவர்களில் அவரும் ஒருவர். இதை நான் வெறும் புகழ்ச்சியாகக் கூறவில்லை. உண்மையாக நான் அவ்வாறு கருதுவத னால் இதைக் கூறுகிறேன். அவர் ஒரு சிறு குறிப்பு எழுதி பில்லியின் (Billy) மூலம் எனக்கனுப்பினார். அவர் என்ன எழுதியுள்ளார் என்பதை உங்களிடம் கூற விரும்புகின்றேன். சகோ. வேயில் எழுதியனுப்பியுள்ளதை நான் ஆறு மாதத்திற்கு முன்பு படித்ததாக நினைவிருக்கிறது. சகோ. வேயில் இவ்விதம் குறிப்பிட்டுள்ளார். `எனக்குத் திட்டவட்டமாய் தெரியாது. பாலிகார்ப் (Polycarp) பரி, யோவானின் மாணாக்கன் என்று நினைக்கிறேன்’. (அது உண்மைதான்). `ஐரினேயஸ் (Irenaeus) பாலிகார்ப்பின் மாணாக்கன் என்று நினைக்கிறேன்’. (அது மிகவும் சரியே). `தெரிந்து கொள்ளப்பட்ட கிறிஸ்துவின் சரீரத்தின் கடைசி அங்கத்தினர் அதில் உட்பிரவேசித்த பிறகு இயேசு மறுபடியும் வருவார் என்று ஐரினேயஸ் கூறியுள்ளார்’. கிறிஸ்து மரித்து 400 வருடங்களுக்குப் பின்னர், ஐரினேயஸ் இவ்விதம் கூறியுள்ளார். அது `நிசாயா மகாநாடு’ என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தின் முதலாம் அல்லது இரண்டாம் பகுதியில் காணப்படுகிறது. தெரிந்து கொள்ளப்பட்ட கடைசி அங்கத்தினன் உட்பிரவேசிக்க வேண்டுமென்று அனேக வருடங்களுக்கு முன்னர் ஐரினேயஸ் சொல்லியிருக்கிறார். தெரிந்து கொள்ளப்படுதல், அழைக்கப்படுதல் என்பது சமீப காலத்தில் எழுந்த ஒரு தவறான போதகமென்று ஜனங்கள் நினைக்கின்றனர். உண்மையாக, அது பழமையான ஒரு போதகமாகும். உண்மையான வேத மாணக்கனான ஐரினேயஸ் தெரிந்து கொள்ளுதல் என்பதில் விசுவாசம் கொண்டிருந்தார். அவர் சபையின் தூதர்களில் ஒருவர் என்பதை நாம் பார்த்தோம். தேவ இரகசியங்கள் யாவும் முத்திரைகளின் கீழ் மறைக்கப்பட்டு, கடைசி நாட்களில் முழுமையாக வெளிப்பட வேண்டும். பவுல், ஐரினேயஸ், மார்டின் என்பவர்கள் அதைப் பற்றி குறிப்பாகச் சொன்னார்கள். அது கடைசி காலத்தில் முழுவதுமாக வெளிப்பட வேண்டும். நமது முயற்சியைக் கர்த்தர் இன்றிரவு ஆசீர்வதிப்பாரென்று நாம் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். முதலாம் முத்திரை அது எனக்கு அதிக சந்தோஷத்தையும் ஆசீர்வாதத்தையும் அளித்தது. நான் அதிக நேரம் உங்களைத் தாமதிக்க விரும்பவில்லை. ஆனால் சில நாட்கள் கழித்து இக்கூட்டங்கள் முடிவு பெற்ற பின்னர் நான் இங்கிருந்து போய் விடவேண்டும். ஆகையால் நீங்கள் சிறிது கஷ்டப் பட்டாலும் பரவாயில்லை. சகோ. ஜுனியர் ஜாக்ஸன் அங்கு நின்று கொண்டிருப்பதைக் காண்கிறேன். சில வினாடிகளுக்கு முன்பு சகோ. ரட்டிலைக் (Bro. Ruddle) கண்டேன். அவர்கள் நம்முடன் ஐக்கியங்கொண்ட சபைகளின் போதகர்கள். அவர்கள் தங்கள் ஆராதனைகளை விட்டு வந்து இங்கு கலந்து கொள்வதை நான் பாராட்டுகிறேன். சகோ. ஹுப்பர் சுவரில் சாய்ந்த வண்ணம் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவர் ஊடிகா (Utica) சபையினின்று வந்திருக்கிறார். உங்கள் ஒத்துழைப்பை நாம் மிகவும் பாராட்டுகிறேன். நாம் சபையின் காலங்களைக் குறித்து போதித்தவாறே, ஏழு முத்திரைகளைக் குறித்து இப்பொழுது போதித்துக் கொண்டிருக்கிறோம். சென்றமுறை நான் சபையின் காலங்களைப் போதித்து முடித்த பின்பு, அதை விவரிக்க கரும்பலகையில் வரைந்து காண்பித்த போது என்ன நிகழ்ந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? கர்த்தருடைய தூதன் அச்சமயம் ஒளியாக இறங்கி வந்து, நூற்றுக்கணக்கானவருடைய முன்னிலையில் சுவரில் வரைந்து காண்பித்தார். இப்பொழுதும் இயற்கைக்கு மேம்பட்டவைகளை அவர் செய்து கொண்டு வருகிறார். ஆகையால் மகத்தான காரியங்கள் சம்பவிக்குமென்று நாம் எதிர்பார்க்கிறோம். அடுத்தபடியாக என்ன நிகழவிருக்கிறது என்பதை நாமறியோம்.ஆனால் அதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு அவர் எவ்வளவு மகத்தான தேவனாயிருக்கிறார்! அவர் அதிசயமானவர். நாம் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். நான் முதலிரண்டு வசனங்களைப் படிக்கிறேன். அதன் பின்பு இரண்டாம் முத்திரையைக்குறித்த மூன்றாம், நான்காம் வசனங்களைப் படிக்கலாம். ஐந்தாம், ஆறாம் வசனங்கள் மூன்றாம் முத்திரையைப் பற்றியவை, பிறகு ஏழாம், எட்டாம் வசனம்... குதிரை சவாரி செய்யும் ஒவ்வொருவனுக்கும் இரண்டு வசனங்கள். மங்கிய நிறமுள்ள குதிரையின் மேலேறியிருப்பவனை நீங்கள் கவனியுங்கள். குதிரையின் மேலிருக்கிறவன் குதிரைகளை மாற்றிக் கொண்டே வருகிறான். கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு இரவு ஏழாம் முத்திரை திறக்கப்படும் போது... அப்பொழுது நிகழ்நத ஒரே சம்பவம் பரலோகத்தில் அரைமணி நேர அமைதலாகும். அதை நாம் அறிந்து கொள்ள தேவன் கிருபை செய்வாராக! இப்பொழுது மூன்றாம் வசனத்தைப் படிக்கிறேன். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லக்கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது, (நாலாம் வசனம்) அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது (வெளி. 6.3-4). ஜீவனானது யோவானிடம், `நீ வந்து பார்’ என்று சொன்னது. அப்பொழுது யோவான் ஒரு அடையாளத்தைக் கண்டான். அவன் அந்த அடையாளத்தை சபைக்கு அறிவிக்க வேண்டும். கடைசி காலத்தில் முத்திரைகள் திறக்கப்படும் போது, இதன் இரகசியம் வெளியாக வேண்டும். உங்களெல்லாருக்கும் புரிகின்றதா? இக்காலத்தில் வாழ்வதற்காக நீங்கள் மகிழ்ச்சியுறுகிறீர்கள் அல்லவா? நான் சென்ற ஞாயிறு காலை கூறியவாறு, எல்லாமே எளிமையான விதத்தில் நிகழ்வதால், ஜனங்கள் அதைக் கடந்து சென்று அது நிகழ்வதை அறியவே மாட்டார்கள். நாம் கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கிறோம் என்பது நினைவிருக்கட்டும். அவர் எந்த நேரத்திலும் வரக்கூடும். எடுக்கப்படுதலும் அவ்விதமாகவே சம்பவிக்கும் என்று நான் உங்களிடம் கூறினேன். அது சம்பவித்தை யாருமே அறியமாட்டார்கள். இயேசு கிறிஸ்து இவ்வுலகில் தோன்றிய போதும் அவ்வாறே நிகழ்ந்தது என்பதை நாம் வேதத்தின் வாயிலாக அறியலாம். அவர் யாரென்பதை யாருமே கண்டு கொள்ள முடியவில்லை, அவர் பைத்தியக்காரனென்று ஜனங்கள் கருதினர். வேறு சிலர், `உனக்குப் பிசாசு பிடித்திருப்பதால் நீ பைத்தியக்காரனாயிருக்கிறாய். தவறான முறையில் பிறந்த நீயா தேவாலயத்தின் ஆசாரியர்களாகிய எங்களுக்குப் போதிப்பது?’ என்றனர். அதை அவர்கள் நிந்தையாகக் கருதினர். ஏசாயா தீர்க்கதரிசி தொடங்கி மல்கியா தீர்க்கதரிசி வரை, 712 வருட காலமாக தீர்க்கதரிசிகள் யோவான் ஸ்நானனின் தோற்றத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். அவனுடைய வருகையை அவர்கள் எந்நேரமும் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால் அவன் வந்து, பிரசங்கித்து, ஊழியம் செய்து, மகிமையில் பிரவேசித்த பிறகும், அப்போஸ்தலர்களும் கூட அவன் யாரென்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. மனுஷகுமாரன் எருசலேமுக்குச் சென்று பாடுபட வேண்டுமென்று இயேசு கூறினபோது, அவர்கள் இயேசுவிடம், `எலியா முன்பு வரவேண்டுமென்று வேதம் உரைக்கின்றதே?’ என்று கேட்டனர். இயேசு அதற்கு, `எலியா முன்பு வந்தாயிற்று ஆனால் நீங்கள் அவனை அறிந்துகொள்ளவில்லை. அவன் என்ன செய்வானென்று வேதம் கூறுகின்றதோ, அதை அவன் அப்படியே செய்தான்’ என்றார். அவர்கள் அது யாரென்று அறிந்து கொள்ள இயலவில்லை. இயேசு, `அவன் தான் யோவான் ஸ்நானன்’ என்றார். `ஓ! அப்படியா என்று அவர்கள் ஆச்சரியப்பட்டனர். உடனே அவர்கள் விழித்தெழுந்தனர். அவ்வாறே இயேசுவும் அனேக அற்புதங்களைச் செய்த போதும், மக்கள் அவரைக் கண்டு கொள்ளத் தவறினர். அவர் அவர்களிடம் `என்னிடம் பாவம் (அவிசுவாசம்) உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்? நான் உலகில் வரும்போது செய்வதாக வேதம் உரைத்துள்ள செயல்களை நான் செய்யாமலிருக்கின்றேனோ? அப்படியானால் நான் எதில் பாவம் செய்துள்ளேன் என்பதைக் காண்பியுங்கள். சரி, இப்பொழுது நீங்கள் யாரென்பதை நான் பகுத்தறிந்து சொல்லுகிறேன். அப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா என்று பார்ப்போம்’ என்றார். ஆனால் அவர்களோ அவரை விசுவாசிக்கவில்லை. அவர் புரிந்த செயல்களை அவருடன் இணைத்து நோக்கி, அவர் யாரென்பதை அறிந்து கொள்ள அவர்கள் முயலவில்லை. அவருடன் நடந்த அப்போஸ்தலர்களும் கூட அவருடைய செயல்களைக் கண்டு இடறினதாக வேதம் கூறகின்றது. ஆனால் முடிவில் அவர்கள், `ஆண்டவரே, இப்பொழுது நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும் எந்த மனிதனும் உமக்குப் போதிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம்’ என்றனர். இவைகளையெல்லாம் குறித்துப் பேசிக்கொண்டே போனால், முத்திரைகளைப் பற்றி சிந்திக்க நமக்கு சமயமிராது. வியாதியஸ்தருக்கு ஜெபம் செய்ய வேண்டுமென்று அனேக விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன, எனக்கு விண்ணப்பம் கிடைக்கும்போதெல்லாம் நான் அவர்களுக்காக ஜெபித்து கொண்டு வருகிறேன். உறுமால்களையும் ஜெபித்து அனுப்புகிறேன். கடைசி முத்திரையை நாம் ஞாயிறு காலையில் முடித்து விட்டால் கர்த்தருக்குச் சித்தமானால் நாம் பிணியாளிகளுக்காக ஜெபிக்கும் ஆராதனை ஒன்று நடத்தலாம். காலை முழுவதையும் அவர்களுக்காக ஜெபிப்பதில் நாம் செலவிடலாம், அது சற்று விசித்திரமாக ஒரு சிலருக்கு தோன்றலாம். இக்காலத்தில் தேவனுடைய இரகசியங்கள் வெளிப்படுவதற்கு அவருடைய கிருபை எவ்வளவு மகத்துவமுள்ளதாயிருக்கிறது! நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று நாமெல்லாரும் விசுவாசிக்கிறோம். இந்த கடைசி நாட்களில் தான் இரகசியங்கள் வெளிப்பட வேண்டும். தேவன் தம் இரகசியங்களை எவ்விதம் வெளிப்படுத்துவாரென்று வேதத்திலிருந்து நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? ஆமோஸ் 3.6, 7 வசனங்களைப் படியுங்கள். ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். இக்கடைசி நாட்களில் ஒரு தீர்க்கதரிசி எழும்புவானென்னு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. அனேக வேத மாணாக்கர் இங்கு அமர்ந்துள்ளனர். நான் கூறுவதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த ஒலிநாடாக்களும் (tapes) ஏறக்குறைய உலகத்தின் எல்லா பாகங்களுக்கும் செல்கின்றன. நம் மத்தியில் காணப்படும் `எலியாவின் அங்கி’ போன்ற மனித தத்துவம் (cult) ஒன்றை நானும் புகுத்த முனைகிறேன் என்று நினைக்க வேண்டாம். இவை யாவும் வரப்போகும் உண்மையான செயலுக்கு முன்பே நிகழ்ந்து ஜனங்கள் வழி தவறச் செய்கின்றன. கிறிஸ்து வருவதற்கு முன் கள்ளப் போதகர்கள் எழும்பினர் என்பதை நீங்கள் அறிவீர்களா? அப்போஸ்தலர்களை அடித்துத் துன்புறுத்த வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்ட போது, அக்காலத்தில் யூத மார்க்கத்தின் போதனைகளில் தலைசிறந்து விளங்கிய கமாலியேல் அவர்களிடம், `இவர்களை விட்டு விடுங்கள். இது தேவனால் உண்டாயிருந்தால் நீங்கள் தேவனோடு போர் செய்கிறவர்களாய் காணப்படுவீர்கள்’ என்றான். மேலும் அவன், `ஒரு மனிதன் சில நாட்களுக்கு முன்பு 400 பேரை வனாந்தரத்துக்குக் கொண்டு செல்லவில்லையா?’ என்றான். இவையெல்லாம் என்ன உண்மையான ஒன்று வருவதற்கு முன்னால் நிகழும் சம்பவங்கள். சாத்தான் இக்கள்ளப் போதகர்களை எழுப்புகிறான். அவனுடைய சமார்த்தியத்தை சற்று கவனியுங்கள். வேதத்தின் வாயிலாக இப்பொழுது அவனுடைய உண்மையான இயல்பு நமக்கு வெளியரங்கமாகிக் கொண்டு வருகிறது. அவன் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க முடியவில்லை. அவன் ஒரு அந்திக்கிறிஸ்து,அவன் போதகம் சத்தியத்தைப் போன்று காணப்படுவதால், உலகத் தோற்றத்துக்கு முன் ஜீவப் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் கூட வஞ்சிக்கப்படலாம் என்று இயேசு கூறினார். அவன் மிக சமார்த்தியமுள்ளவன். உண்மையான ஒன்று வருவதை அவன் காணும் போது அது வருவதற்கு முன்னால் அதை கவிழ்ப்பதற்கு அவன் விழைகிறான். கடைசி நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்புவார்களென்று உங்களுக்குத் தெரியுமல்லவா? எலியாவின் ஆவியைக் கொண்டவன் இந்த மகத்தான செய்தியை அளித்தவுடனே இவர்கள் தோன்றுவார்கள். எலியாவின் ஆவியைப்b பற்றிருப்பவனை ஜனங்கள் மேசியா என்று தவறாக எண்ணக் கூடும். ஆனால் அவனோ, யோவான் ஸ்நானனைப் போல், `நான் அவரல்ல’ என்று திட்டவட்டமாகக் கூறுவான். யோவான் ஸ்நானனிடம் ஜனங்கள், `நீ மேசியா வல்லவா?’ என்று கேட்டனர். அதற்கு அவன், `நான் மேசியா அல்ல. அவருடைய பாதரட்சைகளின் வாரை அழிப்பதற்கும் நான் பாத்திரனல்ல. நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன். அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்’ என்றான். அச்சமயம் இயேசு பூமியில் இருந்தாரென்பதை யோவான் நிச்சயமாக அறிந்திருந்ததனால் `அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்’ என்று கூறினான். ஒளியானது புறாவைப் போல் செட்டைகளை விரித்து அவர் மேலிறங்கி அவரைப் பிரகாசிக்கச் செய்தபோது, `அதோ அவர்’ என்றான். யோவான் மாத்திரமே அப்பொழுது உண்டான சத்தத்தைக் கேட்டான். அங்கு கூடியிருந்தவர்களில் வேறு யாரும் அதைக் கேட்கவில்லை. உண்மையான ஊழியக்காரன் எழும்பும் முன்பு, அனேக கள்ள ஊழியக்காரர்களைச் சாத்தான் தோன்றச் செய்து, ஜனங்களின் மனதைக் குழப்பச் செய்கிறான். சரியானது எது, தவறு எது என்பதைப் பகுத்தறிய முடியாதர்வர்கள் இடறி விழுகின்றனர்? ஆனால் தெரிந்து கொள்ளப்படு பவர்களோ இடறுவதில்லை. ஏனெனில் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட முடியாதென்று வேதம் கூறுகிறது. கிறிஸ்து வருவதற்கு முன்பு அனேக கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி தங்களைக் கிறிஸ்து என்று அழைத்துக் கொள்வார்களென்று வேதம் சொல்கின்றது. `இதோ அவர் வனாந்தரத்தில் இருக்கிறார் என்று ஜனங்கள் சொன்னால் அதை நம்பாதேயுங்கள். இதோ, அவர் அறை வீட்டுக்குள் இருக்கிறார் என்று சொன்னால் நம்பாதேயுங்கள். ஏனெனில் மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்’. ஆம், அவர் வருகை திண்ணம், அது உலகம் பூராவும் காணக்கூடிய (Universal) ஒரு சம்பவமாய் இருக்கும். எடுக்கப்படுதல் நிகழ்ந்தவுடன் இத்தகைய ஆள்மாறாட்டம் இருக்கும். ஆகையால் நமக்கும் அதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டவன் வரும்போது, அவன் தீர்க்கதரிசியாயிருப்பான். தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பெற்றிருப்பான். ஏனெனில் தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் மாத்திரமே வரும். அது உறுதி தேவன் தம் செயல்களை மாற்றுவது கிடையாது. அவர் ஆரம்பத்திலேயே தலைசிறந்த முறையைத் தெரிந்து கொள்வதனால் அவர் அதை ஒரு போதும் மாற்றுவதில்லை. சுவிசேஷத்தை அறிவிக்க, அவர் வேண்டுமானால் சூரியனையோ சந்திரனையோ, அல்லது காற்றையோ தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார். அவர் இதற்கென்று குழுக்களைத் தெரிந்து கொள்ளவில்லை. தனிப்பட்ட நபரையே அவர் தெரிந்து கொண்டார். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் பூமியில் எப்பொழுதும் இருக்கவில்லை. மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்பட்டவன். ஆகையால் தேவன் ஒரே ஒரு மனிதனைத் தெரிந்து கொள்கிறார். அவருக்கு ஒருவன் போதும். அவனை அவர் கரத்தில் ஏந்தி அவர் விருப்பத்திற்கேற்ப எதை வேண்டுமானாலும் செய்யலாம். நோவா, எலியா, மோசே இவர்களின் நாட்களில் ........ மோசேயின் காலத்தில் தாத்தான், கோரா என்பவர்கள் அவனுக்கு விரோதமாய் எழும்பி, `எங்களிடையே நீ (மோசே) ஒருவன் மாத்திரம் பரிசுத்தவானல்ல’ என்றனர். அப்பொழுது கர்த்தர், `நீங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து போங்கள். நான் பூமியை பிளந்து அவர்களை விழுங்கிப்போடுவேன்’ என்றார். இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்த போது, கர்த்தர் அவர்கள் எல்லாரையும் அழித்து போடுவதாகச் சொன்னார். ஆனால் மோசே, கிறிஸ்துவின் ஸ்தானத்தை வகித்து, அவர்களிருவரிடையே நின்று, `ஆண்டவரே, இதை செய்யாதிரும்’ என்று மன்றாடினான். மோசே இம்மத்தியஸ்த ஊழியத்திற்கென்று நியமிக்கப்பட்டிருந்ததால், கர்த்தர் மோசேயைக் கடந்து இஸ்ரவேல் ஜனங்களை அழித்துப் போடவில்லை. அவன் கிறிஸ்துவின் பாகத்தை அப்பொழுது ஏற்றிருந்தான். கிறிஸ்து மோசேக்குள் வாசம் செய்திருந்தார் என்பது முற்றிலும் உண்மையாகும். கர்த்தர் தம்மை இக்காலத்தில் வெளிப்படுத்துகிறபடியால் நாம் மிகவும் மகிழ்ச்சி கொண்டிருக்கிறோம். அந்த மகத்தான நாள் நெருங்கிவிட்டது. வெளிச்சம் விட்டுவிட்டுப் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. (Flash). பரதீசியிலுள்ள பறவைகள் பாடத் தொடங்கி விட்டன. அந்த நாள் சமீபத்து விட்டது என்பதனை அவையறியும். ஏதோ ஒன்று வெகு விரையில் நிகழவிருக்கிறது. வேத வாக்கியங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டிருப்பதால், அவை முற்றிலும் உண்மையாகும். ஆகவே தான் கத்தோலிக்க சபையின் நண்பர்களுடன் எனக்கு வேறுபாடு உண்டு. அது மனிதனால் எழுதப்படவில்லை. அது தேவ ஆவியினால் ஏவப்பட்டது. சிறு சிறு விஷயங்கள் அதனுடன் சேர்க்கப்பட்டன. ஆனால் தேவனுடைய வார்த்தையை ஒன்றோடொன்று சம்பந்தப்படுத்தி நோக்கும் போது, சேர்க்கப்பட்டவைகளில் முரண்பாடு காணப்படுவதால் அவை தாமாகவே அகன்று விடுகின்றன. எழுதப்பட்ட வாக்கியங்களில் முரண்பாடு எதுவுமில்லாத ஒரு இலக்கியத்தையாவது எனக்குக் காண்பியுங்கள். ஆனால் வேதத்தில் எவ்வித முரண்பாடும் இல்லை. வேத விமரிசகர் (Critics) முரண்பாடு வேதத்தில் உள்ளதாக கூறியுள்ளனர். அவ்வித முரண்பாடுகளைச் சுட்டிக் காண்பிக்க நான் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அவர்கள் எதையும் காண்பிக்கவில்லை. காண்பிக்கத் தக்கவாறு எவ்வித முரண்பாடும் வேதத்தில் கிடையாது. மனித சிந்தை குழப்பமுற்றிருக்கும் காரணத்தால் முரண்பாடு உள்ளதாகத் தோன்றுகிறது. தேவன் குழப்பமற்றவர். அவர் என்ன செய்கிறாரென்பது அவருக்கு நன்றாகத் தெரியும். கத்தோலிக்க சபை கூறுவது போன்று) தேவன் உலகத்தை ஒரு சபையைக் கொண்டு நியாயத்தீர்ப்பாரென்றால், எந்த சபையைக் கொண்டு அவர் நியாயந் தீர்க்கப் போகிறார்? நம்மிடையேயுள்ள கணக்கற்ற சபைகளைப் பாருங்கள். ஏறக்குறைய தொளாயிரம் ஸ்தாபனங்கள் நம்மிடையேயுண்டு. ஒரு ஸ்தாபனம் ஒரு விதம் போதிக்கின்றது. வேறொரு ஸ்தாபனம் வேறு விதம் போதிக்கின்றது. அவர்களிடையே என்ன ஒரு குழப்பம்! யார் என்ன வேண்டுமானாலும் செய்து, அதே சமயத்தில் உள்ளே பிரவேசிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். நியாயந்தீர்க்க கர்த்தருக்கு ஒரு நியமம் (Standard) அவசியம்.அது தான் அவருடைய வார்த்தை. கத்தோலிக்க சபையை நான் குறை கூறுகிறேனென்று நினைக்க வேண்டாம். பிராடெஸ்டெண்டுகளும் அதே நிலையில் தன் இன்றுள்ளனர். ஒரு கத்தோலிக்க பாதிரி என்னிடம், தேவன் சபையிலிருக்கிறார் என்றும், சபை பிழையற்றது என்றும் கூறினார். அதை நான் ஆமோதிக்காமல், தேவன் வார்த்தையிலி ருக்கிறார் என்றும் வார்த்தை தான் பிழையற்றது என்பதாக தேவன் கூறியுள்ளார் என்றும் சொன்னேன். அவர், ஆதி சபையின் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்று போதிக்கப்பட்டதென்றும், அந்த ஆதி சபை கத்தோலிக்க சபை என்றும் கூறினார். `அப்படியானால் நான் பழைமையான நாகரீகம் கொண்ட கத்தோலிக்கன் என்று பதிலுரைத்தேன். மேலும் நான், `நான் ஆதி சபை கொண்டிருந்த பழைமையான முறைகளில் விசுவாசம் கொண்டுள்ளேன். இன்றைய ஜனங்கள் எல்லாவற்றையும் குழப்பியுள்ளனர். ஸ்திரீகளும் மரித்தவர்களும் பரிந்து பேசுதல், மாமிசம் உண்ணாமலிருத்தல் போன்ற போதகங்கள் வேதத்தில் காணப்படுவதில்லை. அத்தகைய போதகங்களை வேதத்திலிருந்து எனக்குக் காண்பியுங்கள்’ என்றேன். அதற்கு அவர் மாறுத்தரமாக, `அவை வேதத்தில் காணப்பட வேண்டுமென்ற அவசியமில்லை’. சபை அவைகளைக் கைக்கொள்ளக் கட்டளையிட்டால் அது ஆதாரப் பூர்வமானதாகும்’ என்றார். நான் உடனே, `யாராவது வேதத்திலுள்ளவைகளில் ஏதாவது ஒன்றைக் கூட்டினால் அல்லது குறைத்தால், அவனுடைய பாகத்தைத் தேவன் ஜீவபுத்தகத்திலிருந்து கிறுக்கிப் போடுவார் என்று வேதம் கூறியிருக்கிறதே!’ என்று பதிலுரைத்தேன். ஆகையால் தேவனுடைய வார்த்தை முக்கியம் வாய்ந்தது. நான் அந்த வார்த்தையை விசுவாசிக்கிறேன். ஆமோஸ் தீர்க்கதரிசியின் புத்தகமும் மற்றைய வேத வாக்கியங்களும் அவ்வாறு கூறினால்... நாம் இப்பொழுது அதன் விசேஷித்த பாகங்களைப் பார்த்துக் கொண்டு வருகிறோம். நான் அந்த அறைக்குள் சென்று அபிஷேகம் என் மேல் வரும் போது அங்கு நடைபெறுவதையெல்லாம் என்னால் எழுத முடிந்தால், நான் ஒவ்வொரு முத்திரையைக் குறித்தும் மூன்று மாத காலம் செய்தி கொடுக்க முடியும். ஆகையால் முக்கியமான பாகங்களை மாத்திரமே நான் பிரசங்கித்துக் கொண்டு வருகிறேன். ஜனங்கள் இதை விசுவாசிக்கும் போது பக்குவப்படுவார்கள். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளாகிய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்’ என்று ஆமாஸ் கூறியுள்ளான். ஆகையால் இப்பொழுது அவர் வெளிப்படுத்திக் கொண்டு வருபவைகளை அவர் செயல்படுத்த வேண்டும். நியாயந்தீர்க்க வருவதற்கு அவர் ஆயுத்தமாயிருக்கிறார் என்று நான் நம்புகிறேன். அவர் ஏதோ ஒன்றைச் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் இப்பொழுது வெளிப்படுவதனால் நாம் கடைசி நாட்களில் அதாவது லவோதிக்கேயா சபையின் கால முடிவில் இருக்கிறோம் என்று அவை சாட்சி பகருகின்றன, ஏனெனில் இவை கடைசி நாட்களில் தான் வெளிப்பட வேண்டும். இதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாம் அறிய வேண்டுமென்று பரிசுத்த ஆவியானவர் விரும்புவதை நன்றாகக் கிரகித்துக் கொள்ளுங்கள், கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கு இரகசியங்களை வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்யார். அவர் ஒன்றைச் செய்யு முன்பு, அதை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். அவர் அங்ஙனம் அதை வெளிப்படுத்தும் போது, ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது என்பது அதன் அர்த்தம். நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் யாவும் கடைசி நாட்களில் கடைசி எக்காளம் தொனிக்கு முன்பு கடைசி சபையின் காலத்தில் அளிக்கப்படும் செய்தியின் முடிவில் வெளிப்பட வேண்டும். அதை நீங்கள் படிக்க வேண்டுமானால் வெளி 10.1-7 வசனங்களைப் படியுங்கள். சென்ற இரவு இரண்டு, மூன்று முறையாக அதை நான் குறிப்பிட்டேன். `ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவன் எக்காளம் ஊதப்போகிற போது, தேவ ரகசியம் நிறைவேறும்’ ஏழு முத்திரைகள் கொண்ட புத்தகம் திறக்கப்படும் போது தேவரகசியம் முழுவதும் வெளியரங்கமாகும். அநேக வருடகாலமாக, அதில் அடங்கியுள்ள இரகசியங்கள் என்னவென்று ஜனங்கள் ஆராயத் தலைப்பட்டனர். ஆனால் அவை கடைசி காலம் வரைக்கும் மறைக்கப்பட்டிருப்பதால் அவைகளை அவர்கள் புரிந்து கொள்ள வகையில்லை. அடையாளங்களாக அவை அளிக்கப்பட்டுள்ளதால் அவைகளின் அர்த்தமென்னவென்பதை கடைசி காலம் வரைக்கும் யாரும் புரிந்து கொள்ள இயலவில்லை. அவைகளின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுவதன் காரணத்தால் நாம் கடைசி காலத்தில் வாழ்கிறோம் என்பது ருசுவாகிறது. அவர் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தாமல் யாதொன்றையும் செய்ய மாட்டார் என்பதை நினைவு கூருங்கள். அவர் அதை எளிமையான விதத்தில் நிகழ்த்துவதால் புத்திமான்களும் கல்விமான்களும் அதைக் காணக்கூடாமல் போகின்றனர். வேண்டுமாயின் மத் 11.25-26ஐக் குறித்துக் கொள்ளுங்கள். பாவம் முதன் முதலாக இவ்வுலகில் கிரியை செய்த போது, வார்த்தைக்குப் பதிலாக ஞானம் விரும்பப்பட்டது. அதை மறந்து போக வேண்டாம். அவர் நமக்கு அறிவித்திருக்கிறவைகளை சற்று நோக்குங்கள். இக்கூடாரத்திலிருக்கும் நீங்கள் அவருடன் உன்ன தங்களில் வீற்றிருக்கிறீர்களே! இவை அனைத்துக்கும் நாம் தேவனுக்கு நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். இதை நான் என் கூடாரத்தின் மக்களுக்குச் சொல்லுகிறேன். இங்கு தீர்க்கதரிசனமாக அறிவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காரியங்களில் ஏதாவது ஒன்று நிகழவில்லை என்று உங்களால் சுட்டிக் காண்பிக்க முடியுமானால் செய்யுங்கள் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். அவர் எனக்கு இந்த மேடையின் மீது அளித்தவைகளில் யாதொன்றாவது நிகழாமல் போகவில்லையென்று எவராலும் சொல்ல முடியாது. ஒரு மனித சிந்தை இவ்வளவு பரிபூரணமாக அமைந்திருக்க முடியுமா? ஒருக்காலும் முடியாது. முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜுன் மாதம் அவர் நதியினருகில் ஒளியின் ரூபத்தில் தோன்றின போது நான் சிறு பையனாயிருக்கும் முதற்கொண்டு எனக்குத் தேவனுடைய சத்தம் கேட்பதையும் அந்த ஒளி தோன்றுவதையும் நான் கூறியிருக்கிறேன் என்பதை உங்களில் வயது சென்றவர்கள் அறிவீர்கள். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஜனங்கள் எண்ணினர். யாராவது என்னிடம் இவையெல்லாம் சம்பவிக்கின்றன என்று கூறியிருந்தால் நானும் அவ்வாறே நினைத்திருப்பேன், ஆனால் சபையோ 1933ம் வருடம் முதற்கொண்டு அதைக் குறித்து வியப்படையவில்லை. அன்று நான் நூற்றுக்கணக்கானவருக்கு அந்த நதியில் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருக்கும் சமயம்... அப்பொழுது மேயர் (Mayer) என்னும் பையன் என்னிடம், `பில்லி, ஜனங்களை நீர் தண்ணீரில் அமிழ்த்த வா (Duck) கொண்டு செல்கிறீர்?’ என்று பரிகாசமாகக் கேட்டான். (அந்த ஜிம் மேயர் மரித்துவிட்டார் என்று நினைக்கிறேன். ஒரு மாது அவரைச் சுட்டுக் கொன்று விட்டதாக நான் கேள்விப்பட்டேன்). அதற்கு நான் அவனிடம் `இல்லை’ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறேன்’ என்று பதிலுரைத்தேன். ஞானஸ்நானம் பெறுவதற்கென குழுமியிருந்தவர்களில் ஒரு பெண் மணி, `நான் தண்ணீரில் அமிழ்க்கப்பட்டால் பரவாயில்லை’ என்று அலட்சியமாக சொன்னாள். நான் அவளிடம், `நீ அவ்விதம் கூறினதால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள நீ தகுதியற்றவள். நீ மனந்திரும்பி, திரும்பவும் வா’ என்று சொல்லி அவளை அனுப்பி விட்டேன். அது விளையாட்டல்ல. அது தேவனுடைய வார்த்தை கட்டளையிடும் கிறிஸ்துவின் சுவிசேஷமாம். நீங்கள் அதை அர்த்தமற்றவையென்றும், மூடத்தனம் என்றும் கூறுகின்றீர்கள். மூடத்தனம் என்று அழைக்கப்படுவதற்கு வேறு அனேக காரியங்கள் உண்டு. இவ்வாறு சம்பவிக்கும் என்பதால் வேதம் கூறியுள்ளது. அவ்விதமே அது சம்பவிக்கிறது. ஜனங்கள் ஞானஸ்நானம் பெற நதியின் கரையில் அன்று நின்று கொண்டிருந்த போது, கர்த்தருடைய தூதன் இறங்கி வந்தான். தூரத்தில் அவன் வருகை ஒரு நட்சத்திரத்தைப் போல் தோற்றமளித்தது. அவன் அருகாமையில் வந்தபோது அந்த ஒளி மரகதம் போன்ற நிறம் கொண்டதாயிருந்தது. என்றெல்லாம் நான் உங்களிடம் முன்பே கூறியுள்ளேன். நான் ஞானஸ்நானம் கொடுத்துக் கொண்டிருந்த போது அது இறங்கி வந்து நதியின் மேல் நின்றது. அப்பட்டிணத்திலுள்ள வியாபாரிகள், `இதுவென்ன?’ என்று கேட்டனர். அதற்கு நான், `அந்த காட்சி எனக்காகவல்ல. நீங்கள் விசுவாசிப்பதற்கென்று உங்களுக்காக அளிக்கப்பட்டது. நான் சத்தியத்தை அறிவிக்கிறேன் என்பதை அறிவுறுத்தவே கர்த்தர் இது நேரிடச் செய்தார்’ என்றேன். அப்பொழுது நான் 21 வயது நிறைந்த வாலிபனாயிருந்தபடியால் அவர்கள் அதை விசுவாசிக்காமற் போயினர். ஏனெனில் ஒரு வாலிபனுக்கு இது நேரிடுவது மிகையான காரியமாகும். இங்கு அமர்ந்திருக்கும் நம் தர்மகர்த்தாக்களில் ஒருவரான சகோ. ராய் ராபர்ஸன், ஹுஸ்டன் பட்டிணத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட போது அவர் அங்கிருந்ததை சில நிமிடங்களுக்கு முன்னால் எனக்கு ஞாபகப்படுத்தினார். அன்று நடந்த விவாதத்தின் போது நானும் அங்கிருந்தேன். சகோ. ராயும் அவருடன்கூட வேறொருவர் மாத்திரமே அன்று டேப் ரிகார்டர்களை வைத்திருந்தனர். அவை பழைய காலத்து மின்சார டேப் ரிக்கார்டர்கள் (சகோ. ராய் ராபர்ஸன் அங்கு அமர்ந்திருப்பதை காண்கிறேன்.) அப்பொழுது சகோதரி ராபர்ஸன் வியாதிப்பட்டிருந்தாள். சகோ. ராய் போரில் அனுபவம் வாய்ந்த ஒருவர். அவர் இரண்டு கால்களும் போர்களத்தில் காயப்பட்டன.அவர் சைனியத்தில் பெரிய ஒரு உத்தியோகஸ்தராக இருந்தார். ஜெர்மானிய துருப்புகள் அவர் உபயோகித்திருந்த டாங்கியை (Tank) தாக்கி, அவரைக் காயப்படுத்தி குற்றுயிராக்கினர். அவர் மரித்தவரைப் போல் அனேக காலம் கிடந்திருந்தார். நரம்புகள் பாதிக்கப்பட்டதால், அவர் இனி ஒருக்காலும் நடக்க முடியாது என்று கூறினார். ஆனால் இப்பொழுதோ அவர் என்னைக் காட்டிலும் வேகமாக நடக்கிறார். அவர் ஹுஸ்டனில் முக்கியமான ஒன்றைக் கண்டு கொண்டார். அன்று அவர் பதிவு செய்த ஒலிநாடாவை இன்று ஆராதனை முடிந்தவுடன் உங்களுக்குப் போட்டுக் காண்பிப்பார். வியாதியாயிருந்த அவர் மனைவி ஹுஸ்டனில் நடந்த அந்த ஆராதனைக்குக் கொண்டு வரப்பட்டாள். அவள் வியாதிப்பட்டு அதிக விசனமுற்றவளாய், ஜன்னலின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு ஜெபம் செய்து கொள்வதற்கென, ஜனங்கள் செல்லும் வரிசையில் எவ்வாறாயினும் கலந்து கொள்ள ஜெபச் சீட்டைப் பெற வேண்டுமென்று அதிக ஆவல் கொண்டிருந்தாள். (அதற்கு முன்பு அவர்களை நான் கண்டதேயில்லை. அவர்களும் என்னை அறிந்திருக்கவில்லை). அன்றிரவு அவ்வரிசையில் அவள் கலந்து கொண்டாள். அவள் மேடை மீது ஏறினவுடன் பரிசுத்த ஆவியானவர் அவளிடம் `நீ இந்தப் பட்டிணத்தைச் சேர்ந்தவளல்ல, நியூ ஆல்பனி (New Albany) என்னும் பட்டிணத்திலிருந்து வந்திருக்கிறாய். இன்று ஜன்னலின் அருகில் நீ உட்கார்ந்தவாறு, எப்படியும் ஜெபச் சீட்டு கிடைக்க வேண்டுமே என்று கவலை கொண்டிருந்தாய்’ என்று என் மூலம் அறிவித்தார். அனேக வருடங்களுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் இந்த ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது நிகழ்ந்த அந்தக் கூட்டங்களில் முதலாம் நாளன்று 3000 பேர் மாத்திரமே வந்திருந்தனர். அது பின்பு 8000 பேராகப் பெருகி, முடிவில் 30000 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நான் முதல் கூட்டத்தில் பேசினபோது, `நான் ஏன் இதைச் சொல்லுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. (அதுவும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.) ஆனால் இது என் வாழ்க்கையில் நேர்ந்த முக்கியமான காரியங்களில் ஒன்றாக இருக்கும். இக்கூட்டத்தில் இதுவரை யாரும் காணாத ஒரு மகத்தான சம்பவம் நிகழப் போகிறது’ என்று கூறினேன். எட்டு, ஒன்பது அல்லது பத்து நாட்களுக்குப் பின்னர், 30000 பேருக்கு முன்பாக கர்த்தருடைய தூதன் தோன்றினான். அப்பொழுது புகைப்படமும் எடுக்கப்பட்டது. அது வாஷிங்டனில் தனி பிரசுர உரிமையைப் (copyright) பெற்றிருக்கிறது. உலகிலேயே தெய்வீகமான ஒன்றைப் புகைப்படம் எடுத்தது இதுவே முதன் முறையாகும். நான் சில நேரங்களில், `ஒருவர் மரணத்தினால் நிழலிடப்பட்டிருக்கிறார். ஒரு கருத்த முகமூடி அவர் மேலிருக்கிறது. அவர் மரிக்கும் தருவாயிலிருக்கிறார் என்று கூறுவதை நீங்கள் கேட்டதுண்டு. நான் தென் பைன்ஸ் (Southern Pines) என்னும் இடத்தில் கடைசி நாள் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த சமயம், ஒரு மாதுமரிக்கும் தருவாயிலிருப்பதை நான் பகுத்தறிந்து கூறினேன். அப்பொழுது அருகில் இருந்த பெண்மணிக்கு அவளுடைய புகைப்படம் எடுக்க வேண்டுமென்று ஏவுதல் உண்டானது. அந்தப் படத்தில் அவள் தலையை கருமை நிறமுள்ள நிழல் மூடியிருப்பதை நீங்கள் காணலாம். அது அறிக்கைப் பலகையில் (Bulletin Board) தொங்க விடப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர், நீ சுகமாகப் போகிறாய். கர்த்தர் உன்னைச் சுகப்படுத்தி விட்டார். புற்று நோய் உன்னை விட்டு அகன்றது’ என்று அறிவித்தவுடன் அந்த பெண்மணி வேறொரு புகைப்படும் எடுத்தாள். அதில் அந்த கருமை நிறமுள்ள முகமூடி மறைந்து போயிருந்தது. கர்த்தர் ஒவ்வொரு நாழிகையிலும் நடக்கப் போவதை அறிவார், நாமோ அதை அறியோம் என்பது இதன் மூலம் ருசுவாகிறது. தாம் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். இவ்விடம் பேசிக் கொண்டே போகலாம். முதலாம் முத்திரைய் பற்றி அறிந்துள்ளதை இப்பொழுது நாம் ஒரு சில நிமிடங்கள் விமசரினம் செய்வோம். முதலாம் முத்திரை உடைக்கப்பட்ட போது, சாத்தான் மதசம்பந்தமான ஒரு பராக்கிரமசாலியைக் கொண்டிருந்தான் என்று பார்த்தோம். வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் ஆதி சபையென்று அனேக வருட காலமாக தவறாக நினைத்திருந்தனர். எல்லா முத்திரைகளின் இரகசியங்கள் என்னவென்பதை இதுவரை அறியேன். ஒன்று மாத்திரம் அறிவேன். அவை யாவும் தேவனுடைய சத்தியமாயிருப்பதால், எல்லாம் சரிவர பொருந்த வேண்டும். வெள்ளைக் குதிரையின் மேலேறியிருப்பவன் ரோம சபை என்பது திண்ணம். யூதர்கள் தான் அந்திக்கிறிஸ்து என நம்புகிறவர்கள் உண்மைக்கு அனேக மைல்கள் அப்பாற்பட்டவராயிருக்கின்றனர். யூதர்களை அந்திக் கிறிஸ்துவாகக் கருத வேண்டாம். நாம் மனந்திரும்பி, காணியாட்சிக்குள் உட்பிரவேசிக்க தருணம் அளிக்கப்படுவதற்கென அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன. அந்திக்கிறிஸ்து புறஜாதியாயிருப்பான். அவன் சத்தியத்துக்கு விரோதமாயிருப்பான். வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் பராக்கிரமசாலியாய் மாறி, சிங்காசனத்தில் அமர்ந்து, முடி சூடப்படுவான். தேவனுக்குப் பதிலாக அவன் ஆராதிக்கப்படுகிறான். ஒரு மனிதன் தோன்றுவானென்று பவுல் 2 தெசலோனிக்கேயர் 2: 3ல் உரைத்த அவன் யார்? பவுல் தேவனுடைய தீர்க்கதரிசியானதால், அவன் காலங்களின் வழியாய் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கண்டான். `ஆவியானவர் வெளிப்படையாய் சொல்லுகிறபடி பிற்காலங்களில் சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்குச் செவி கொடுத்து விசுவாசத்தை விட்டு விலகிப் போவார்கள்’ என்று கூறப்பட்டதன் காரணம் யாது? வஞ்சிக்கிற ஆவி என்பது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அது தான் சபையில் காணப்படும் வஞ்சக ஆவி குருவானவர்களின் வஞ்சக ஆவி, பிசாசின் கிரியைகள், சபையில் காணப்படும் மாய்மாலம், துணிகரமுள்ளவர்கள் இறுமாப்புள்ளவர்கள் (சாமர்த்தியமுள்ளவர்கள், அறிவு படைத்தவர்கள்) தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து (நாங்கள் கிறிஸ்தவர்கள், நாம் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்’ என்பார்கள்) பரிசுத்த ஆவியின் வல்லமையையும், கிரியையும் வெளிப்பாடுகளையும் மறுதலிப்பவர்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. மேலும் பவுல், `இப்படிப்பட்டவர்கள் பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண் பிள்ளைகளுடைய வீடுகளில் நுழைந்து (பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் பெண்பிள்ளைகள் அல்ல) அவர்களை வசப்படுத்திக் கொள்வார்கள்’ என்றான். பற்பல இச்சைகள் அப்படிப்பட்ட பெண் பிள்ளைகள் எல்லாவித சமுதாயத்திலும் நுழைந்து, விருப்பம் போல வாழ்க்கை நடத்தி, `நாங்கள் ஆலயத்துக்குச் செல்லுகிறோம். ஆகையால் மற்றவர்களைப் போல நாங்களும் நல்லவர்கள்’ என்று கூறிக் கொள்வார்கள். நடன கச்சேரிகள்,மயிரைக் கத்தரித்தல், வர்ணம் தீட்டிக் கொள்ளுதல், விருப்பம் போல ஆடை உடுத்திக் கொள்ளுதல் போன்ற காரியங்களில் வாஞ்சையாயிருக்கின்றனர், என்றாலும் `நாங்கள் பெந்தேகோஸ்தர். நாங்கள் மற்றவர்களைப் போல நல்லவர்கள்’ என்று கூறுகின்றனர்.ஓ! உங்கள் சொந்த கிரியைகளே உங்களை கண்டுபிடிக்கும். மேலும் பவுல், `இவர்கள் துர்புத்தியுள்ள மனுஷர், சத்தியத்துக்கு எதிர்த்து நிற்பவர்கள்’ என்றான். சத்தியம் என்பது என்ன? அதுதான் கிறிஸ்துவாகிய வார்த்தை. நான் பெண்களை வெறுக்கிறவன் என்று அனேகர் சொல்லுகின்றனர். அது உண்மையன்று. அது வெறும் பொய். அவர்கள் என் சகோதரிகள். அன்பு கண்டித்து சீர்படுத்துகிறது. அங்ஙனம் சீர்படுத்தாவிடில் அது அன்பல்ல. அது மாமிசப் பிரகாரமான (Phileo) அன்பல்ல, தெய்வீக அன்பு (Agape), ஒரு அழகான பெண்ணைக் காணும்போது, மாமிசப் பிரகாரமான அன்பு ஒருக்கால் உங்களில் உண்டாக்கக் கூடும். ஆனால் தெய்வீக அன்பு வித்தியாசப்பட்டது. அந்த அன்பு கோனலானவைகளை நேராக்கி, தேவனை சந்திக்க செய்து அவருடன் நித்திய காலமாக வாழச் செய்கிறது. நீங்கள் புரிந்து கொண்டீர்களென்று நினைக்கிறேன். மேலும் பவுல், `யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள். ஆனால் இவர்களுடைய மதிகேடு வெளிப்படும்’ என்கிறான். முக்கியமான ஒன்றைச் செய்ய கர்த்தர் மோசேக்குக் கட்டளை கொடுத்திருந்தார். அவன் தன் கோலைத் தரையில் போட்டால் அது சர்ப்பமாக மாறுமென்று தேவன் அவனிடம் சொன்னார். அவனும் உத்தமமாக அதைப் பின்பற்றி பார்வோனின் முன்னிலையில் கர்த்தர் கட்டளையிட்டபடி செய்தான். அப்பொழுது அது சர்ப்பமாக மாறினது. அப்பொழுது பார்வோன், `இது மந்திரவாதியின் தந்திரம்’ என்று சொல்லி தன்னுடைய யந்நேயையும் யம்பிரேயையும் வரவழைக்கிறான். அவர்களும் தங்கள் கோல்களைத் தரையில் போட, அவை சர்ப்பமாக மாறின. மோசேயினால் என்ன செய்ய முடியும்? அது என்ன? தேவனுடைய உண்மையான கிரியை ஒவ்வொன்றுக்கும் சாத்தான் அதற்கு ஒப்பான ஒரு கிரியையை நடப்பித்து ஜனங்களை வழித்தவறச் செய்கிறான். அப்பொழுது மோசே, `நான் தவறு செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஆகையால் நான் போய்விடுவது நல்லது’ என்று மனதினுள் எண்ணியிருப்பான். தேவனுடைய கட்டளையை முற்றிலும் கீழ்ப்படிந்தவனாய் அங்கு நின்று கொண்டிருக்கையில், மோசேயின் சர்ப்பம் மற்ற சர்ப்பங்களை விழுங்கியது. மோசே தன் சர்ப்பத்தை கையிலெடுத்த போது, அது கோலாக மாறினது. அக்கோலைக் கொண்டு அவன் அநேக அற்புதங்கள் செய்தான். போலி சர்ப்பம் உண்மையான சர்ப்பத்துக்குள் மறைந்து விட்டது ஆச்சரியமல்லவா? என் கத்தோலிக்க நண்பர்களே, ஒரு நிமிடம் அமைதியாயிருங்கள். பிராடெஸ்டெண்டுகள், மற்றுமுள்ளவர்கள் அனைவரும் இப்பொழுது எந்நிலையில் உள்ளனர் என்பதை நாம் காணலாம். முதலாம் சபையை கவனியுங்கள், கத்தோலிக்க சபை தங்களை மூல சபை என்று அழைத்துக் கொள்வது ஒரு விதத்தில் சரியே. கத்தோலிக்க சபையும் பெந்தேகோஸ்தே நாளில்தான் ஆரம்பித்தது. சபையின் சரித்திரம் படிக்கும் வரை நான் அதை நம்பவில்லை. அவர்கள் பெந்தேகோஸ்தே காலத்தில் ஆரம்பித்தது உண்மைதான். ஆனால் அவர்கள் அகன்று போகத் தொடங்கினர். பெந்தேகோஸ்தே ஸ்தாபனமும் தற்போதைய வேகத்தில் அகன்று செல்லுமானால், கத்தோலிக்க சபையைப் போன்று அதற்கு 2000 வருட காலம் அவசியமில்லை. இன்றிலிருந்து 160 வருடங்களுக்குள்ளாக அவர்கள் கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மிகுதியாக அகன்று சென்றிடுவார்கள். வெள்ளைக் குதிரையின் மேலேயிருப்பவன் மூன்று கட்டங்களில் காணப்படுகின்றான். (இரண்டாம் முத்திரையை தியானிப்பதற்கு அவசியமான சூழ்நிலையை உண்டாக்குவதற்காக இவைகளைக் கூறுகிறேன்). பிசாசும், தேவனைப் போன்று, மூன்று கட்டங்களில் காணப்படுகிறான். ஆனால், அவன்அதே பிசாசு தான். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மேல் ஊற்றப்பட்ட பின்னர், அவர்கள் எல்லாவற்றையும் பொதுவாக அனுபவித்தனர். தேவனுடைய ஆவியானவர் அவர்கள் மேல் தங்கியிருந்தார். அப்போஸ்தலர்கள் வீடுகள் தோறும் சென்று அவர்களுடன் அப்பம் பிட்டனர். அனேக அடையாளங்களும் அற்புதங்களும் அப்போஸ்தலர்களால் அக்காலத்தில் செய்யப்பட்டன. அப்பொழுது சாத்தான் அவர்களிடம் ஒரு முறுமுறுப்பை உண்டாக்கினான். அதன் பின்னர் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த எளியவரும் அடிமைகளும் வெவ்வேறு பாகத்தில் சென்று அவர்கள் எஜமான்களுக்கு தேவனைக் குறித்து சாட்சி பகன்றனர். பிறகு சைனியத் தலைவர்களும், மற்றும் பல கௌரவம் வாய்ந்தவர்களும் இவர்கள் நிகழ்த்தும் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டு கிறிஸ்தவ மார்க்கத்தில் சேர்ந்தனர். பழைய இருளடைந்த அறைகளில் கிறிஸ்தவர்கள் கைகளைத் தட்டி சத்தமிட்டு அன்னிய பாஷை பேசுவதை கௌரவம் வாய்ந்த அவர்களால் சகிக்க முடிய வில்லை. அத்தகைய பரிசுத்த ஆவியின் கிரியைகளில் அவர்களுக்கு விசுவாசமும் இல்லை. ஆகையால் அம்முறைகளை மாற்றி அமைக்க அவர்கள் எண்ணினர். இயேசுவும் வெளிப்படுத்தல் 2-ம் அதிகாரத்தில் முதலாம் சபைக்குச் செய்தியை அளிக்கும்போது, நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளைக் குறிப்பிடுகிறார். நிக்கொலாய் என்பது `சபையின் மேல் ஜெயங் கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அவர்கள் `பரிசுத்த மனிதன்’ என்னும் ஒருவனை சபையில் ஏற்படுத்த முயன்றனர். அவர்கள் விட்டு வந்த அஞ்ஞான மதத்தின் மாதிரியின்படி கிறிஸ்தவ மார்க்கத்தையும் அமைக்கத் தலைப்பட்டனர். நிக்கொலாய் என்பது வேதத்தில் அந்திக்கிறிஸ்து என்று அழைக்கப் படுகின்றது. ஏனெனில் அது கிறிஸ்துவின் மூல உபதேசங்களுக்கும் அப்போஸ்தலர் உபதேசங்களுக்கும் விரோதமாயிருந்தது. சில வருடங்களுக்கு முன்னால் புகழ்வாய்ந்த மனிதன் நடத்தும் கூட்டத்திற்கு நான் சென்றிருந்தேன். அவருடைய பெயரை அறிவிக்க நான் விரும்பவில்லை. அவருடன் நான் கைகுலுக்கினேன், ஆகையால் நான் கூட்டத்திலிருக்கிறேன் என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், `இக்காலத்தில் பெந்தேகோஸ்தேக்காரர் என்று அழைக்கப்படுபவர் நம்மிடையேயுள்ளனர். அவர்கள் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளனர். ஆனால் அது சபை கட்டப்படுவதற்கென தற்காலிகமான சாரமாய் அமைந்த ஒன்றாகும் (Scaffold work)’ என்றார். வேதத்தை நன்கு படித்து அறிந்திருந்த அந்த வயோதிபர் இவ்வாறு கூறலாமா? அந்த சொற்கள் பரிசுத்த ஆவியினால் உண்டானவையல்ல. ஏனெனில் சாதாரண அறிவைப் பெற்றிருக்கும் மனிதனும் கூட அவை அப்போஸ்தலருடைய கிரியைகள் அல்லவென்றும், அவை பரிசுத்த ஆவியானவர் அப்போஸ்தலர்களின் மூலம் நடப்பித்த கிரியைகள் என்றறிவான். சபையின் காலங்களைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, எவ்வாறு நான்கு ஜீவன்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவரின் சுவிசேஷ புத்தகங்கள் சூழ நின்று மத்தியிலுள்ள அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல் காக்கின்றன என்று பார்த்தோம். அவர்கள் எழுதின சுவிசேஷங்களின் விளைவினால் அப்போஸ்தலருடைய நடபடிகள் உண்டாயின. அதுதன் மரத்தில் தோன்றிய முதல் கிளையாகும். அம்மரத்தில் வேறொரு கிளை தோன்றுமாயின், அப்பொழுது நடைபெறும் கிரியைகள் அப்போஸ்தலருடைய நடபடிகளின்புத்தகத்தைப் போன்ற வேறாரு புத்தகத்தில் எழுதப்படும். ஆகையால் ஒரே வகையான ஜீவன் தான் அவைகளில் காண முடியும்’. ஆனால் இன்றைக்கு மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், லூத்தரன், கிறிஸ்துவின் சபை, பெந்தேகோஸ்தே சபை என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்களில் இந்த ஜீவன் காணப்படுகின்றதா? அதை ஒருக்காலும் நீங்கள் இத்தகைய ஸ்தாபனங்களில் காண முடியாது. பெந்தேகேஸ்தே ஸ்தாபனத்தில் இது சிறிதாகிலும் காணப்படுகின்றது என்பதைநான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் லவோதிக்கேயா சபையின் காலத்தில் தோன்றியவர்கள். அவர்கள் சத்தியத்தைக் கடைப்பிடித்திருந்தனர். 92.ஆனால் இப்பொழுதோ அதைப் புறக்கணித்து விட்டனர். அவர்கள் வெதுவெதுப்பாக ஆனபடியால், தேவன் அவர்களைத் தம் வாயிலிருந்து வாந்தி பண்ணிப்போட்டார். இது வேதபூர்வமானது. வேதம் ஒரு போதும் பொய்யுரையாது. வேதம் உங்கள் சிந்தனைக்கு இணங்க வேண்டுமென்று நீங்கள் எண்ணவேண்டாம். அதற்கு மாறாக உங்கள் சிந்தனை எப்பொழுதும் வேத வாக்கியங்களுடன் ஒத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் தேவனுடன் நடைபோட முடியும். அதற்காக உங்கள் சிந்தனையை நீங்கள் எவ்வளவாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் சிந்தனை வேதத்துடன் இணைந்திருக்கட்டும். பரிசுத்த ஆவி முதன் முறையாக மக்களின் மேல் விழுந்த போது என்ன நிகழ்ந்ததென்று பாருங்கள். தேவன் முதன்முறை என்ன செய்தாரோ, அவ்வாறே ஒவ்வொரு முறையும் அவர் செய்ய வேண்டும். இல்லையெனில் அவர் முதலில் தவறு செய்தார் என்று அர்த்தமாகிறது. நாம் மானிடராகையால், தவறு செய்வதற்கு ஏதுவுண்டு. ஆனால் தேவனின் முதல் தீர்மானம் பரிபூரணமானது. அவர் செய்யத் தீர்மானித்திருக்கும் முறையைக் காட்டிலும் சிறந்த முறை இருக்கமுடியாது. ஏனெனில் அது ஆரம்பத்திலேயே பரிபூரணமாயிருக்கும். இல்லையெனில், அவர் முடிவற்றவர் (infinite) அல்ல. அவர் முடிவற்றவராயிருந்தால், அவர் எல்லாமறிந்தவராயிருத்தல் வேண்டும் (Omniscient). அவர் எல்லாமறிந்தவராயிருந்தால், அவர் சர்வ வல்லமை பொருந்தினவராய் (Omnipotent) இருத்தல் வேண்டும். ஆமென்! அவர் தேவனாயிருப்பதற்கு இத்தகைய தன்மைகளைப் பெற்றிருத்தல் அவசியம், அவர் பின்னர் அதிகம் அறிந்து கொண்டார் என்று நீங்கள் சொல்ல முடியாது. ஏனெனில் அவர் அறிந்திருப்பதைக் காட்டிலும் அதிகம் அறிந்து கொள்ள முடியாது. அவரே ஞானத்தின் ஊற்றாவார். நமக்குள்ள ஞானம் சாத்தானிடமிருந்து தோன்றினது. ஏதேன் தோட்டத்தில் ஏவாள் விசுவாசத்துக்குப் பதிலாக ஞானத்தை தெரிந்து கொண்டாள். அந்த ஞானத்தை நாம் அவளிடமிருந்து சவீகரித்துள்ளோம். வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறவன் அந்திக்கிறிஸ்து என்று முதலில் அழைக்கப்படுகிறான். இரண்டாம் கட்டத்தில் அவன் கள்ளக்கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் அதுவரை மக்களிடையே காணப்பட்ட ஆவி அப்பொழுது ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறது. வெள்ளைக் குதிரையின் மேலேறியிருந்தவன் புறப்பட்டுச் சென்றபோது அவனுக்குக் கிரீடமில்லை என்பது நினைவிருக்கிறதா? பின்பு, அவனுக்குக் கிரீடம் சூட்டப்படுகிறது. அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் (Nicolaitane Sprit) ஆவியாயிருந்து, பின்னர் ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, சிம்மாசனத்தில் வீற்றிருந்து, கிரீடம் சூடப்படுகிறான். அச்சிம்மாசனத்தில் அவன் வெகுகாலம் வீற்றிருந்தான் என்பதை முத்திரைகள் உடைக்கப்படும்போது நாம் பார்க்கலாம். வெகு காலம் கழிந்த பின்னர், சாத்தான் பரலோகத்திலிருந்து தாழத் தள்ளப்பட்ட போது, அவன் அதே மனிதனுக்குள் புகுந்து கொள்கிறான். அப்பொழுது அவன் மிருகமென அழைக்கப்படுகிறான். அவன் மிகுந்த வல்லமை கொண்டவனாய், அற்புதங்கள் அனேகம் செய்து, யுத்தத்தில் அனேகரைக் கொன்று போடுவான். ஆம், ரோமாபுரி தன்னாலியன்றவரை இவை அனைத்தையும் செய்யும். அவன் கொடூரமான ரோம தண்டiனை அனேகருக்கு விதித்து அவர்களைக் கொன்று போடுவான். இப்பொழுது சில வேத வாக்கியங்களைப் படிக்க முடிந்தால் எவ்வளவு நலமாயிக்கும்! இயேசு கிறிஸ்துவும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் ரோம தண்டனை விதிக்கப்பட்டு மரித்தார். அடுத்த பெரிய வெள்ளிக்கிழமை பகலன்று நாம் பிரசங்ககிக்கத் தீர்மானித்திருக்கும் செய்தி, `அங்கே அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்’ என்னும் தலைப்பைக் கொண்டதாயிருக்கும். `அங்கே உலகத்திலேயே பரிசுத்தமான, மதசம்பந்தமான காரியங்களில் ஈடுபட்டிருந்த ஸ்தலம் எருசலேம். `அவர்கள்’ உலகிலேயே மிகவும் பரிசுத்தமுள்ளவரென்று கருதப்பட்ட யூதர்கள், `அவரை’ இதுவரை வாழ்ந்தவர் எல்லாரிலும் மிகவும் மகத்தானவர். `சிலுவையிலறைந்தார்கள்’ ரோமாபுரி கொண்டிருந்த மிகக் கொடூரமான தண்டனை. வியாபாரிகளின் சங்கத்தில் நான் இச்செய்தியை அளிக்கும் போது, தங்கள் நிலையை அவர்கள் அறிந்து கொள்ளக் கர்த்தர் உதவி செய்வாராக! அவர்களைத் தாக்க வேண்டுமென்பதற்காக அல்ல. அவர்கள் பிரசுரிக்கும் `வியாபரிகளின் பத்திரிகை’ (Business Men’s Journal) யில் பரிசுத்த பிதாக்களைக் குறித்தும் முக்கியஸ்தர்களைக் குறித்தும் அவர்கள் எழுதுபவை அனைத்தும் அர்த்தமற்றவை என்பதை அறிவுறுத்தவே. கிறிஸ்தவர்கள் எந்த ஒரு மனிதனையும் `பிதா’ என்று அழைக்கக் கூடாது. என்னால் முடிந்த வரை அவர்களுக்கு நான் ஆவிக்குரிய வழிகளில் உதவி செய்ய முயன்றிருக்கிறேன். (இந்த பிரசங்கம் பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிநாடாக்கள் அங்கு செல்கின்றன என்பதை கவனிக்கவும்). ஆகையால் இனிமேல் அவர்களுக்கு நான் புத்திமதி கூறப்போவதில்லை. முதலாவதாக நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் தொடங்கின. அக்காலத்தில் மக்கள் கூச்சலிட்டு, கைகளைக் தட்டிப் பாடி, பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு, பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்ந்தது போன்று குடிகாரரைப் போல் நடந்து கொண்டனர். இதை கௌரவம் வாய்ந்தவர்கள் சகிக்க முடியாமல் அவர்களிடமிருந்து பிரிந்து போக விழைந்தனர். அவர்களைக் குடிகாரரென்று அவர்கள் அழைத்தனர். அவர்களால் தங்களைத் தாழ்த்திக் கொண்டு அங்ஙனம் கௌரவக் குறைவாக நடந்து கொள்ள முடியவில்லை. தேவன் தம்மை இழிவான நிலைக்குத் தாழ்த்துவதனால் அவர் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அவரைக் காட்டிலும் மகத்தானவர் யாருமில்லை. ஆனால் எந்த மனிதனும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள முடியாத அவ்வளவு இழிவான நிலைக்கு அவர் தம்மை தாழ்த்திக் கொண்டார். அவர் பரலோகத்தின் ராஜாவாயிருந்தார். ஆனால் பூமியிலேயே மிகவும் எளிமையான பட்டினமாகிய எரிகோவுக்கு அவர் வந்தார். அங்கு மிகவும் குள்ளனான சகேயுவும் கூட கீழே குனிந்து தம்மைக் காணத் தக்கவாறு அவர் தம்மை அந்த நிலைக்குத் தாழ்த்திக் கொண்டார். அவர் மந்திரவாதியென்றும் பெயல் செயூப் என்றும் மிகவும் மோச பெயர்களால் அழைக்கப்பட்டார். உலகம் அவரை அவ்வாறு தான் எண்ணியிருந்தது. அவர் கொடூரமான மரணம் எய்தினார். எல்லா ஸ்தாபனங்களாலும் அவர் புறக்கணிக்கப்பட்டார். அவருக்குத் தலை சாய்ப்பதற்கும் இடமில்லாமல் இருந்தது. ஆனால் தேவன் அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தினதால் இப்பொழுது அவர் பரலோகத்தைக் காண குனிந்து பார்க்க வேண்டியதாயிருக்கிறது. தேவன் அவருக்கு மகத்தான நாமத்தையளித்து, அவர் இப்பொழுது வானோர், பூதலத்தோர் இவர்களின் நாமக்காரணராயிருக்கிறார். வானோரின் குடும்பங்களும் பூதலத்தோரின் குடும்பங்களும் `இயேசு’ வென்று பெயரிடப்பட்டுள்ளன. முழங்கால்கள் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் படிக்கும் நாவுகள் யாவும் இங்குள்ளவரும், பாதாளத்திலுள்ளவரும் அவரைக் கர்த்தர் என்று அறிக்கை பண்ணும் படிக்கும், அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்றிருக்கிறார். பாதாளம் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட வேண்டும். எல்லாமே அவருக்கு முன்பாக பணிய வேண்டும். முதலில் அவர் எளிமையுள்ளவராயிருந்து பின்னர் மகத்தான ஸ்தானத்திற்கு தேவனால் உயர்த்தப்படுகிறார். தன்னைத் தாழ்த்துகிறவனெவனும் உயர்த்தப்படுவான். இந்த நிக்கொலாய் ஆவி ஞானத்தைப் பெற்று சாமார்த்தியமுள்ளதாய் இருக்க விரும்பியது. ஏவாள் ஞானத்தைப் பெற்று தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஆலோசனை செய்தது போன்று. இந்த ஆவியும் செய்தது. சபையும் அதைப் பின்பற்றத் தொடங்கியது. நம் சபையை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இந்த பட்டினத்தின் நகராண்மைக் கழகத் தலைவரும் (Mayor) போலீஸ் அதிகாரிகளும் இதன் அங்கத்தினராகச் சேர்ந்தால், முதலாவதாக நம் செயற்குழுவையும் மற்ற அங்கத்தினரையும் சந்தித்து, `இவையெல்லாம் வித்தியாசமாயிருக்க வேண்டும், என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு எண்ணம் தோன்றும். சபையின் போதகர் உண்மையாக பரிசுத்த ஆவியால் நிறையப்படாமலிருந்தால், போதகர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்க நேரிடும். அவ்வாறே முதலாம் சபையின் காலத்திலும் தொடங்கினது. `அவர்கள் கூறுவது நியாயமாய்த் தோன்றுகின்றது’ என்று ஜனங்கள் கூற முற்பட்டு அவர்களுக்குச் செவி கொடுப்பார்கள். ஒரு மனிதன் இங்கு வந்து, `இந்த ஆலயம் சிறியதாயிருக்கிறது. நாம் ஐந்து லட்சம் டாலர்கள் மதிப்புள்ள ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டுவோம். அதற்குப் பணம் சேமிப்பதற்கென நாம் வானொலி மூலம் அறிக்கை விடுக்கலாம்’ என்று கூறினார் என்று வைத்துக் கொள்வோம். அங்ஙனமாயின், தொண்ணூறு சதவிகிதம் அவர் தன்னலமான சிரத்தை கொண்டுள்ளார் என்று அர்த்தம். அவர் ஒரு பெரிய ஆலயத்தைக் கட்டினால், எல்லா காரியங்களையும் அவர் தம் விருப்பத்திற்கேற்ப செய்வார். ஆலயத்தைக் கட்டுவதற்கு அவர் நிதி வசூலித்த காரணத்தால், அவருக்கு விரோதமாக நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பின்னர் தேவனை குறித்து ஒன்றுமே அறியாத ஒரு மனிதன் வேத பள்ளியிலிருந்து கொண்டு வரப்பட்டு போதகனாக நியமிக்கப்படுவான். இப்போதகன் அம்மனிதனின் விருப்பத்திற்கிணங்குவான். ஏனெனில் அவர் போதகனுக்கு ஒரு புதிய மோட்டார் வண்டி வாங்கிக் கொடுத்திருப்பார். அல்லாமல், போதகன் விரும்பிய யாவையும் அவர் வாங்கிக் கொடுப்பார். ஞானம், சாமர்த்தியம் இவ்விரண்டையும் கூர்ந்து நோக்குங்கள், ஆதி சபையின் காலத்தில் சபைக்குள் நுழைந்தவர்கள், `பெண்மணிகள் மயிரை எப்படி வைத்திருந்தால் என்ன? அதில் என்ன வித்தியாசமுள்ளது? என்று கேட்டனர். ஆனால் வேதம் அதில் வித்தியாசம் உள்ளதாகத்தான் கூறுகிறது. தேவன் அதில் வித்தியாசம் உண்டு என்றால், அதில் நிச்சயமாக வித்தியாசமுண்டு. ஆனால் அவ்விதமான வித்தியாசம் சபையில் நுழைக்கப்பட்டால், போதகன் அதை ஆட்சேபித்து வெளியேற வேண்டும், அல்லது அதை ஆமோதித்து அங்கு நிலைத்திருக்க வேண்டும். சபையின் மக்கள் தாம் அதற்கு சம்மதம் தெரிவித்து அதை சபையில் நுழைத்தனர். இந்த நிக்கொலாய் ஆவி கௌரவம் வாய்ந்தவர்கள் அங்கத்தினராயிருந்த சபையில் அசைவாடத் தொடங்கினது. அதிக பணமும் அவர்களால் சபைக்கு கிடைத்தது. ஆகையால் மக்கள் இவர்கள் சொற்கேட்டு பணிந்தனர் பிசாசின் ஒழுங்கற்றதன்மை. ஏவாளும் இதை தான் ஏதேன் தோட்டத்தில் செய்தாள். ஏவாள் ஆதாமின் மனைவியாவதற்கு முன்பு பிசாசின் உபாயத்திற்குப் பணிந்தாள். அவள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் ஞானத்தை உபயோகித்தாள். ஆதாம் ஏவாளுடன் கணவனும் மனைவியுமாக வாழ்வதற்கு முன்னமே சாத்தான் அவளைத் தோற்கடித்தான். `மணவாட்டி மரம்’ (The Bride Tree) என்னும் என் செய்தியைக் கேட்டதுண்டா? அது இதைப் போதிக்கிறது. இப்பொழுது கவனியுங்கள் ஏவாள் ஞானத்திற்குப் பணிந்தாள், அவள் சாத்தானிடம், `கர்த்தர் இவ்விதம் உரைத்திருக்கிறார்’ என்று சொல்ல, அவன், `அவர் அவ்விதம் சொல்லியிருக்கவே மாட்டார். நீ ஞானத்தைப் பெற விரும்புகிறாய். சிலவற்றை அறிந்து கொள்ள நீ விரும்புகிறாய். ஊமையைப் போல் ஏன் இருக்கிறாய்? நீ சிலவற்றை அறிந்து கொள்ள வேண்டும்’ என்றான். மானிட வர்க்கத்தின் முதலாம் மணவாட்டி, தேவனுடைய வார்த்தையை அரணாகக் கொண்டிருந்தாலும், கணவனுடன் சேருவதற்கு முன்பு சாத்தானின் பொய்க்குச் செவி கொடுத்து கிருபையினின்று விழுந்து போனாள். தேவனுடைய வார்த்தையின் பின்னால் மறைந்திருந்தால், அவள் ஒருக்காலும் விழுந்திருக்கவே மாட்டாள். இது மாம்சப்பிரகாரமான மணவாட்டிக்கு நேரிட்டது. அவளுக்குக் கொடுக்கப்பட்ட சாபமென்ன? தேவனுடைய வார்த்தையினின்று வெளிவர வேண்டுமென்பது தான் அவளுக்கு அளிக்கப்பட்ட சாபமாகும். அவர் தேவனுடைய வார்த்தையை 98 சதவிகிதம் விசுவாசித்தாள். இதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அவள் முதலில் கர்த்தர் கூறிய அனைத்தையுமே விசுவாசித்தாள். அவர் கூறின யாவையும் அவள் சாத்தானுக்குத் தெரிவித்தாள். சாத்தானும் அது சரியென்று ஆமோதித்தான். குறி வைத்து சுடும்போது துப்பாக்கி சற்று அகன்று போனால் எவ்வாறு குறி தவறி விடுமோ, அதுபோன்று சாத்தானும் உங்களை மடக்கி வார்த்தையிலிருந்து சற்று அகலும்படி செய்கிறான். ஏவாள் தேவன் கூறின வார்த்தையைப் பெரும்பாலும் விசுவாசித்தாள். என்றாலும் அவள் தவறி விட்டாள். சிறிது விவேகத்தை ஏற்றுக்கொண்டு ஏவாள் தேவனுடைய வார்த்தையைப் புறக்கணித்ததன் விளைவு....., `நீவிர் ஏன் பெண்களைக் குறித்து எப்பொழுதுமே குறை கூறிக் கொண்டிருக்கிறீர்?’ என்று நீங்கள் கேட்கலாம்...., `பரிசுத்த ஆவியைப் பெறுவதன் அடையாளம் அன்னிய பாஷை பேசுவது என்று சொன்னாலும் அல்லவென்று சொன்னாலும் அதில் என்ன வித்தியாசமுள்ளது?’ என்றும் நீங்கள் கேட்கலாம். உண்மையாக அதில் வித்தியாசமுண்டு, அவையெல்லாம் இக்காலத்தில் சரிபடுத்தப்பட வேண்டும். ஏழு சபையின் காலங்கள் தோறும் இவையனைத்தும் ஊகிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் தேவனே உண்மையை விளக்கிக் காண்பித்து அதை உறுதிப்படுத்தி நிரூபிக்கும் தருணம் இப்பொழுது வந்துவிட்டது. அவ்வாறு செய்யாவிடில் அவர் தேவனல்ல. தேவன் தம் வார்த்தையை ஆதரிக்க வேண்டும். இப்பொழுது கவனியுங்கள், மாமிசப் பிரகாரமான ஸ்திரி ஞானத்தையும் விவேகத்தையும் விரும்பி தேவனுடைய வார்த்தையை விட்டகன்று மானிட வர்க்கத்துக்கு மரணத்தை இழைத்தாள், ஆவிக்குரிய ஸ்திரீயும் கிறிஸ்துவின் மணவாட்டி பெந்தேகோஸ்தே நாளில் தோன்றி நிசாயாவின் மாநாட்டில் தேவனுடைய வார்த்தையை இழந்து போனாள். லீ! (Lee) அது சரியென்று உமக்குத் தெரியுமா? நிசாயா மாநாட்டில் அவள் ஆவிக்குரிய பிறப்புரிமையை விற்றுப் போட்டு கான்ஸ்டன்டைன் அரசனின் பிரம்மாண்டமான ஆலயங்களையும், ரோமாபுரி ஏற்படுத்தின கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டாள். நான் கூறுவது கத்தோலிக்கர்களை புண்படுத்தும். ஆனால் பிராடெஸ்டெண்டுகளும், அதையே செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் வேசியின் குமாரத்திகளென வேதத்தில் அழைக்கப் படுகின்றனர். அவர்களைச் சேராத ஒரு சிறு கூட்டம் மணவாட்டியின் ஸ்தானத்தை வகிக்கிறது. ஆம். அவள் கணவன் அவளைச்சேரு முன்பு அவளுக்குக் கலியாணம் ஆகு முன்பு அவள் தன் கற்பை இழந்து போனாள். லவோதிக்கேயா சபையின் காலத்தில் அவள், `நான் அரசியைப் போல் இருக்கிறேன். நான் திரவிய சம்பன்னன், எனக்கு ஒரு குறைவுமில்லை’ என்று சொல்வது உங்களுக்கு நினைவிருக்கலாம். `நான்தான் பரிசுத்த சபை. முழு உலகமே என்னை நோக்கிப் பார்த்து என் பேரில் சார்ந்திருக்கிறது’ என்று அவள் கூறுகின்றாள். ஆனால் தேவனோ அவளை நோக்கி, `நீ நீர்பாக்கியமுள்ளவளும், பரிதபிக்கப்பட்டத்தக்கவளும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருப்பதை அறியாமல் இருக்கிறாய்’ என்கிறார். அதுதான் அவளது நிலைமை. இக்கடைசி நாட்களில் அவளுடைய நிலைமை அவ்வாறாக இருக்கும் என்று பரிசுத்த ஆவியானவர் கூறியிருப்பதால், அது நிச்சயமாக அவ்வாறே இருக்க வேண்டும். ஏவாள் பாவத்தில் விழுந்த போது, சர்வ சிருஷ்டியுமே அவளுடன் பாவத்தில் விழுந்தது. சபையும், தேவனுடைய வார்த்தையும் அவருடைய ஆவியையும் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, ரோம சபையின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதனால், அன்று முதல் நிறுவப்பட்ட எல்லா ஸ்தாபனங்களும் சபிக்கப்பட்டு அதனுடன் பாவத்தில் விழ வேண்டுவதை தவிர வேறு வழியில்லை. ஒரு கூட்டம் மக்கள் ஒரு விஷயத்தைக் குறித்து ஆலோசிக்கும் போது, ஒருவன் ஒரு விதமாகவும் வேறொருவன் வேறு விதமாகவும் சிந்திப்பான். இதையெல்லாவற்றையும் ஒன்றுபடுத்தும் போது, அதன் விளைவு குழப்பம் தான். அதுதான் நிசாயா மாநாட்டில் நடைபெற்றது. அதுவேதான் மெதோடிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், கிறிஸ்து சபை ஸ்தாபனத்தார். இன்னும் ஏனைய ஸ்தாபனத்தார் அனைவரும் செய்தனர். ஸ்தாபனத்தைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், தேவனுடைய வெளிப்பாட்டை அவன் பெற்றிருப்பினும், அவனுடைய ஸ்தாபனத்தின் கொள்கைகள் கூறுவதையே பிரசங்கிக்க வேண்டும். இல்லையேல் அவன் விரட்டியடிக்கப்படுவான். நான் கூறுவது தவறு என்று நீங்கள் என்னிடம் சொல்லமுடியாது. நானும் ஸ்தாபனத்தில் இருந்திருக்கிறேன். ஆகையால் அங்கு நடப்பவை எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, அவையாவுமே சபிக்கப்பட்டுள்ளது. `என் ஜனங்களே, அவளுக்கு நேரிடும்வாதைகளில் அகப்படாமல் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள்’ என்று தூதன் உரைத்ததில் வியப்பொன்றுமில்லை. ஏனெனில் அவள் சபிக்கப்பட்டிருக்கிறாள். அவளுடைய பிறப்புரிமையையும் கற்பையும் அவள் விற்றுப் போட்டதால் தேவ கோபாக்கினை அவள் மேல் தங்கியுள்ளது. ஆகையால் அவள் துன்பப்பட வேண்டும். ஆயினும் இத்தகைய நிலைமையிலும் கூட, கடைசி காலத்தில் அவளுக்கு எல்லாவற்றையும் திரும்ப அளிப்பதாக கர்த்தர் யோவேல் 2.25ல் (வேண்டுமானால் அவ்வசனத்தைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்) வாக்களித்துள்ளார். `பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது. வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது. பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது’. இவ்விதம் ஒவ்வொரு பூச்சியும் சபையை தின்று போட்டு முடிவில் அடிமரம் மாத்திரம் மீந்திருக்கிறது. கவனியுங்கள், ரோமர்கள் விட்டதை லூத்தரன் ஸ்தாபனத்தார் தின்றனர். லூத்தரன்கள் விட்டதை மெதோடிஸ்ட் ஸ்தாபனத்தார் தின்றனர். மெதோடிஸ்டுகள் விட்டதை பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தார் தின்று, முடிவில் அடிமரம் மாத்திரமே எஞ்சியுள்ளது, முசுக்கட்டைப்பூச்சி, வெட்டுக்கிளி இவை யாவும் ஒரேபூச்சி தன் வளர்ச்சியில் வித்தியாசமான நிலையை அடைதலாகும் என்று நாம் புத்தகங்களின் வாயிலாக அறியலாம். அந்த குறிப்பை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு, முத்திரைகளுக்கு வாருங்கள். ஒரே பூச்சி தான் வித்தியாசமான நிலைகளில் காணப்படுகின்றது என்பதை நாம் முத்திரைகளை ஒன்றன் பின் ஒன்றாக சிந்திக்கும் போது அறிந்து கொள்ளலாம். ஒரே பூச்சி தன் வளர்ச்சியில் நான்கு வித்தியாசமான நிலைகளை அடைகின்றன. முத்திரைகளிலும் ஒரே ஆவி நான்கு வித்தியாசமான கட்டங்களில் காணப்படுகின்றது. ஒன்று தின்னாமல் விட்டதை, மற்றொன்று தின்று, முடிவில் அடிமரம் மாத்திரம் உள்ளது. ஆனால் யோவேல், `நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன் (என்று கர்த்தர் உரைக்கிறார்)’ என்கிறான் (யோவேல் 2.25). கர்த்தர் அதை எவ்விதம் செய்யப் போகிறார்? அது கிறிஸ்துவின் போதனைகளுக்கு விரோதமான அந்திக்கிறிஸ்துவாகத் தோன்றி தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபனத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டது. காலங்கள் கடந்து போகும் தோறும், சீர்திருத்தக்காரரும் அதில் ஈடுபட்டனர். ஆனால் `ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் (வெளி. 10.1-7) அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவ ரகசியம் நிறைவேறும்’ என்று வேதம் உரைக்கிறது. சூளையைப்போல் எரியும் பெரிதும் பயங்கரமான நாள் வருவதற்கு முன்னே கர்த்தர் எலியா தீர்க்கதரிசியை அனுப்புவாரென்றும், அவன் பிள்ளைகளுடைய இருதயத்தை, பிதாக்கள் கொண்டிருந்த மூல அப்போஸ்தல பெந்தேகோஸ்தே விசுவாசத்திற்கு திருப்புவானென்றும் மல்கியா 4-ம் அதிகாரம் வெளிப்படையாகக் கூறுகிறது. அந்த வாக்குத்தத்தம் நமக்களிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாம் வாழ்வது கடைசி நாட்களாயிருக்குமானால் ஏதோ ஒன்று இப்பொழுது சம்பவித்தாக வேண்டும். அது இப்பொழுது நிகழ்ந்து கொண்டு வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். சாத்தானின் திரித்துவத்தைக் கவனியுங்கள். ஒரே ஆள் ஒன்றன் பின் ஒன்றாக மனிதனுக்குள் வாசம் செய்கிறான். சபையைத் தின்ற பூச்சிகளும் அவ்வாறே ஒன்றன் பின் ஒன்றாக மாறுகிறது. நிக்கொலாய் அந்திக்கிறிஸ்துவின் ஆவி போப்பாண்டவர் கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம் பிசாசே மனிதனுக்குள் வாசம் செய்தல், இதை நீங்கள் மனதில் கொண்டால், குதிரையின் மேல் சவாரி செய்பவர்களும் ஒன்றன்பின் ஒன்றாக அந்நிலையையடையவதைக் காணலாம். நான் உங்கள் முன்னிலையில் இதை ஒரு படமாக சித்தரிக்க முயல்கிறேன். கரும்பலகையில் வரைந்தால், இதை நீங்கள் இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாய் இருக்கிறான். யோவானும், `பிள்ளைகளே, அந்திகிறிஸ்துவின் ஆவி இப்பொழுதே கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியை செய்து கொண்டு வருகிறது’ என்றான். அப்பொழுதே வித்து முளைக்கத் தொடங்கினது. அடுத்த சபையின் காலத்தில் அது போதகமாக மாறி, அதற்கடுத்த சபையின் காலத்தில் அவன் முடிசூடப்படுகிறான். இது மிகவும் வெளிப்படையாய் அமைந்திருக்கவில்லையா? அந்திக்கிறிஸ்துவின் ஆவி தேவனுடைய வசனத்துக்கு விரோதமாய் கிரியை நடப்பித்து, மக்களை வசனத்திலிருந்து விலகும்படி செய்தது. அதுதான் நடந்த முதல் சம்பவம். ஏவாள் காயீனை கண்டிக்காததனால் இது ஏற்படவில்லை. முதலாவதாக, ஜனங்கள் தேவனுடைய வார்த்தையினின்று திருப்பப்பட்டனர். அதுதான் எல்லாவற்றிலும் ஆரம்பம், தேவனுடைய வார்த்தையை விட்டகன்று ரோமாபுரியின் தத்துவங்களை ஏற்றுக் கொண்டதன் விளைவாக ஜீவனுள்ள தேவனுடைய சபை கிறிஸ்துவின் மணவாட்டி, ஆவிக்குரிய விபச்சாரம் செய்தாள். எல்லா ஸ்தாபனங்களும் அவ்விதமே செய்தன. தேவனுடைய வார்த்தையை நாம் பழைய நிலைக்குக் கொண்டு வரும் போது, அது முன்பு செய்த கிரியைகளையே இப்பொழுதும் செய்யும். `என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத் தானும் செய்வான்’ என்று இயேசு கூறியுள்ளார். சில கிரியைகளை நடப்பிக்க அவர்கள் அவரிடம் கேட்டுக் கொண்டபோது அவர், `பிதாவானவர் காண்பிக்கிறதை மாத்திரம் நான் செய்கிறேன். அதை நான் முதலில் காணாமல் எதையும் செய்வதில்லை. பிதாவானவர் செய்யக் காண்கிறதெதுவோ அதையேயன்றி வேறொன்றையும் நான் செய்ய மாட்டேன். பிதாவானவர் எவைகளைச் செய்கிறாரோ அவைகளை நானும் அந்தப்படி செய்வேன்’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு பத்திரிகையைப் படிப்பது போன்று அவ்வளவு தெளிவாய் இது காணப்படுகிறதல்லவா? அவன் ஆரம்பத்தில் அந்திக் கிறிஸ்துவின் ஆவியாயிருந்தான். அந்திக்கிறிஸ்துவின் ஆவி போதிப்பதையே போதிக்கும் ஒரு மனிதனை அந்த ஆவி ஆட்கொண்டு, அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். அப்படியானால் ஸ்தாபனத்தில் அங்கத்தினனாயிருப்பவனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். முடிவாக அவன் `மிருகமாக’ மாறுகிறான். பிசாசு பரலோகத்திலிருந்து தாழத் தள்ளப்படும் போது அவன் மனிதனுக்குள் குடிகொள்கிறான். யூதாஸ்காரியோத்தும் அப்படிப்பட்டவனாய் இருந்தான். அவன் கிறிஸ்துவுக்கு விரோதமாயிருந்தவர்களில் ஒருவனா? ஏன், அவன் பொக்கிஷாதாரியாக இருந்தான். அவருடன் அவன் நடந்து சென்றான். அவரும் மற்ற அப்போஸ்தலர்களும் செய்தது போன்று அவனும் பிசாசுகளைத் துரத்தினான். தேவன் கிறிஸ்துவுக்குள் வசம் செய்தார். தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு இம்மானுவேலானார். இயேசு தேவ குமாரனாயிருந்தது போன்று யூதாஸும் கேட்டின் மகனாயிருந்தான் ஒன்று தேவன் வாசம் செய்தல், மற்றொன்று பிசாசு வாசம் செய்தல், இயேசுவின் காலத்தில் மூன்று சிலுவைகளைத் தான் சிலர் நினைவு கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அப்பொழுது நான்கு சிலுவைகள் இருந்தன. கொல்கதாவில் மூன்று சிலுவைகள் இருந்தன, மத்தியில் இயேசு தொங்கினார். அவர் வலது பாரிசத்தில் ஒரு கள்ளனும் இடது பாரிசத்தில் வேறொரு கள்ளனும் தொங்கினர். ஒரு கள்ளன் இயேசுவிடம் (இயேசு வார்த்தையென்பது உங்களுக்குத் தெரியும்) `நீர் வார்த்தையாயிருந்தால், உம்மை ஏன் நீர் இரட்சித்துக் கொள்ளக் கூடாது? அதைக் குறித்து ஏதாவது ஒன்று நீர் செய்யக் கூடாதா? என்று கேட்டான். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. அந்த பழைய பிசாசுகள் வந்து, `நீவிர் தெய்வீக சுகமளித்தலில் நம்பிக்கை கொண்டிருந்தால், இங்குள்ள குருடனின் கண்களை ஏன் திறக்கக் கூடாது? கூடுமானால் எங்களை குருடாக்கும்’ என்று கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அதே பழைய பிசாசு தான் அது. `நீர் சிலுவையிலிருந்து இறங்கி வாரும். அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்’ என்றும் `நீர் தேவனுடைய குமாரனானால், இந்த கல்லுகள் அப்பங்களாகும்படி செய்யும்’ என்றும் சொன்ன அதே பிசாசு தான் இதுவும். அவர்களைவிட்டு அகன்று செல்லுங்கள். இயேசுவும் அதையே செய்தார். அவர்களுக்காக அவர் கோமாளித்தனம் செய்யவில்லை. அவர் முகத்தை அவர்கள் ஒரு கந்தைத் துணியால் மூடி, விலை மதிக்க முடியாத அவர் கண்களை மறைத்து, ஒரு கோலினால் அவர் தலையில் அடித்து, `நீர் தீர்க்கதரிசியானால் உம்மையடித்தது யாரென்று சொல்லும்’ என்றனர். (அவர்கள் கோலை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டனர்). உம்மை அடித்தது யாரென்று சொன்னால், அப்பொழுது நீர் தீர்க்கதரிசியென்று நாங்கள் விசுவாசிப்போம்’ என்றனர். அவர் வாயைத் திறவாது மௌனமாய் நின்றர். அவர் அப்பொழுது கோமாளித்தனம் செய்யவில்லை. பிதாவானவர் காண்பிப்பதை மாத்திரமே அவர் செய்வார். இக்காலத்தில் அவர்கள் என்ன செய்தாலும் செய்யட்டும். அதற்குரிய பலனை அனுபவிக்கும் சமயம் வரப்போகிறது. ஆகையால் கவலைகொள்ள வேண்டாம். அவர்கள் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டார்கள். ஆனால் வல்லமை அப்பொழுது அவரிடமிருந்து புறப்படவில்லை. ஆனால் ஒரு ஏழை ஸ்திரீ சுகமாக வேண்டுமென்று கருதி அவர் வஸ்திரத்தின் ஒரத்தைத் தொட்டாள். அப்பொழுது அவர் திரும்பப் பார்த்து, `என்னைத் தொட்டது யார்?’ என்று கேட்டார். என்னே வித்தியாசமான தொடுதல், நீங்கள் எவ்வாறு அவரைத் தொடுகிறீர்கள் எத்தகைய விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை அது சார்ந்தது. சாத்தான் திரித்துவத்தில் தன்னை வெளிப்படுத்துவது போன்று தேவனும் திரித்துவத்தில் கிரியை செய்கிறார் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலம் அவர் ஜனங்களுக்குள் வாசம் செய்தல். இயேசு மனிதருக்குள் வாசம் செய்யும்போது கிறிஸ்துவுக்குள்ளிருந்து அதே ஜீவன் அப்பொழுது அம்மனிதருக்குள் வருகிறது. ஒரு திராட்சைச் செடியிலுள்ள ஜீவனையெடுத்து அதை பூசணிக்காய் கொடியில் புகுத்தினால் என்னவாகும்? அதில் இனி ஒருபோதும் பூசணிக்காய் காய்க்காது. அது திராட்சைப் பழங்களைக் கொடுக்கும். உங்களிலுள்ள ஜீவன் நீங்கள் யாரென்பதை வெளிப்படுத்துகிறது. மனிதர் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாகக் கூறிக் கொண்டு அதே சமயத்தில் தேவனுடைய வார்த்தையை மறுதலிப்பார்களானால் அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தமாகிறது. பரிசுத்த ஆவியானவர்தாம் அந்த வார்த்தையை எழுதியுள்ளார். `என் ஆவி ஒருவனுக்குள் இருந்தால், என் கிரியைகளை அவனும் செய்வான்’ என்பதாய் இயேசு சொல்லியிருக்கிறார். நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது யோவான் 14.12ல் காணப்படுகின்றது. `நான் என் பிதாவினிடத்திற்குப் `போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான். இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்’. அவர் அம்மனிதனைப் பரிசுத்தமாக்கி, சுத்திகரித்த, தேவனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவானாகும்படி செய்கிறார். அந்த மைதுளி வெண்மையாக்கும் திரவத்தில் விழுந்து, பிளவின் மற்ற எல்லைக்கு அவனைக் கொண்டு செல்கிறது. சாத்தான் தன் பிரஜைகளுக்குள் குடிகொள்ளும்போது, அவன் செய்த கிரியைகளை அவர்களும் செய்கின்றனர். உங்களுக்குப் புரிகின்றதல்லவா? ஒன்றும் அறியாத பெண்ணிடம் (ஏவாளிடம்) அவன் வந்து அவளை ஏமாற்றினான். அதைதான் சில பிசாசுகள் இன்றைக்கும் செய்கின்றன. ஊழியத்தை அப்பொழுது தான் தொடங்கியிருக்கும் ஒரு போதகனிடம் அவர்கள் சென்று, `எங்களுடன் சேர்ந்து விடுங்கள்’ என்று அழைப்பு விடுக்கின்றனர். அதே பிசாசின் கிரியை தான் அது, நான் கூறுவது உண்மையாகும். சாத்தான் தன் சபைக்குள் குடி கொள்ளும்போது, அவர்கள் அனேக கொலைகளைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஏனெனில் சாத்தான் கொலைகாரனும், பொய்யனும் கள்ளனுமாயிருக்கிறான். சாத்தான் அவன் ஜனங்களிடையே வாசம் செய்து, அவர்களுக்கு ஞானத்தையும் சாமார்த்தியத்தையும் அளிக்கிறான். கூர்மையான அறிவு படைத்தவர்களுடன் தேவன் எப்போதாவது தொடர்பு கொண்டிருந்தார் என்பதை நீங்கள் வேதத்திலிருந்து எனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அறிவு படைத்தவர்கள் தாம் பிசாசினால் பீடிக்கப்படுகின்றனர் என்பதை ஆராய்ந்து கண்டு பிடியுங்கள். இது உத்திரவாதமுள்ள ஒரு வாக்குமூலம். ஆனால் அது முற்றிலும் உண்மையாகும். ஆபேலின் சந்ததியையும் காயீனின் சந்ததியையும் அந்த பதினான்கு சந்ததிகளை நீங்கள் ஆராய்ந்து, எது ஞானம் படைத்த சந்ததியென்றும், எது தாழ்மையுள்ள சந்ததியென்றும் கண்டு கொள்ளுங்கள். இயேசு ஏன் புத்திமான்களைத் தெரிந்து கொள்ளவில்லை? அவர் மீன் பிடிப்பவர்களையும் கையெழுத்து போடக்கூட அறியாதவர்களையும் சபையின் தலைவராகத் தெரிந்து கொண்டார். ஞானம் என்பது ஒன்றுமற்றது. அது கிறிஸ்துவுக்கு விரோதமாய் அமைந்துள்ளது. உலக ஞானம் எப்பொழுதும் கிறிஸ்துவுக்குப் பகையாயிருக்கிறது. வேத பள்ளிகளை நிறுவ இயேசு ஒருக்காலும் நம்மிடம் கூறவில்லை. அவர் `தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கியுங்கள். சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ என்று மாத்திரமே கூறினார். `விசுவாசிகளால் நடக்கும் அடையாளங்களாவன’ என்று அவர் கூறி என்னென்ன அடையாளங்கள் காணப்படுமென்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, `நீங்கள் எல்லா தேசங்களிலும் தேவனுடைய வல்லமையை இவ்வடையாளங்களின் மூலம் நிரூபித்துக் காண்பியுங்கள்’ என்று அவர் சொன்னார். தேவனுடைய வார்த்தையைக் குதர்க்கமாக அர்த்தம் செய்து, ஜனங்கள் வார்த்தையை நிராகரிக்கச் செய்து, ஞானத்தை மக்களிடையே புகுத்துவதே சாத்தானின் தொழிலாகும். அதன் பின்னர் தேவ வசனத்தைப் புறக்கணித்த தன் பிரஜைகளுக்கு அவன் அடையாளம் போடுகிறான் (சற்று நேரம் எனக்காகப் பொறுத்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் அறியாமலிருக்க எனக்கு மனதில்லை). பழைய ஏற்பாட்டிலிருந்து இதற்கு ஒர் எடுத்துக்காட்டைக் கூற விரும்புகிறேன். நீங்கள் எக்காரணத் தைக் கொண்டும் குழப்பமுற்று செல்லக்கூடாது. பழைய ஏற்பாட்டின் காலத்தில், ஐம்பது வருடங்களில் ஒரு முறை வரும் யூபிலி வருடத்தில், அடிமையானவன் விருப்பங் கொண்டால் விடுதலை யாகலாம். சுதந்தரமாவதற்கு எதுவும் அவனைத் தடை செய்ய முடியாது. அந்த யூபிலி வருடத்தில் எக்காளம் முழங்கும். ஆனால் அடிமையானவன் விடுதலையாவதற்கு விருப்பங்கொள்ளாமல் தன் எஜமானனுடன் திருப்தி கொண்டிருந்தால், அவனை அவர்கள் ஆலயத்திற்குக் கொண்டு செல்வர், அவன் எஜமானன் ஒரு கம்பியை எடுத்து அவன் காதைக்குத்துவான். அவன் இனி ஒருபோதும் விடுதலையாக முடியாதென்றும் அவன் வாழ்நாள் முழுவதும் தன் எஜமானைச் சேவிக்க வேண்டுமென்பதற்கும் அதுவே அடையாளம். அதன் பிறகு எத்தனை யூபிலி வருடங்கள் தோன்றி எக்காளம் முழங்கினாலும் அவன் விடுதலையாக முடியாது. ஏனெனில் விடுதலையின் பிறப்புரிமையை அவன் விற்றுப் போட்டு விட்டான். அவ்வாறே, ஒருவன் சுவிசேஷமாகிய சத்தியத்தைப் புறக்கணிக்கும் போது, சாத்தான் அவனுக்கு அடையாளமிடுகிறான். எங்கே? அவன் காதில் சத்தியத்தைக் கேட்கக் கூடாதவாறு அவனைச் சாத்தான் செவிடாக்குகிறான். அதுதான் அவன் முடிவு அவன் சத்தியத்தைக் கேட்க மறுத்தால் சாத்தானுடைய குழுவில் தான் அவன் நிலைத்திருக்க வேண்டும். `சத்தியத்தையும் அறிவீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்’ (யோ. 8.32). ஆம், சத்தியம் விடுதலையாக்குகிறது. தேவனும் யோவான் 14:12 மாற்கு 16 இவைகளில் சொல்லப்பட்டவிதமாய் தம் ஜனங்களை அடையாளமிடுகிறார். `விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன’. அவர் அதைக் கேலியாகக் கூறினாரா? (சபையார் `அல்ல’வென்று பதிலளிக்கின்றனர்). அல்லது சிலர் கூறுவது போன்று அவர் அப்போஸ் தலர்களுக்கு மாத்திரம்,அதை அளிக்கிறாரா?(சபையார் `இல்லை’ யென்கின்றனர்). அதன் முன் வசனத்தைச் சற்று கவனியுங்கள். `நீங்கள் (எங்கே) உலகமெங்கும் போய் (என்ன செய்ய வேண்டும்?) சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ அந்த கட்டளையில் மூன்றில் ஒரு பாகத்தைக் கூடநாம் இதுவரை நிறைவேற்றி முடிக்கவில்லை. `சுவிசேஷம் உலகின் எல்லா பாகங்களிலும் சர்வ சிருஷ்டிக்கும் எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இவ்வடையாளங்கள் நிகழும்’ என்பதாகும். விசுவாசிக்கிறவர்கள் அனைவருமே இவ்வடையாளங்களைச் செய்வார்கள்.ஒரு சிலர் மாத்திரமல்ல. ஒரு முறை ஒருவர் என்னிடம், `சுகமாக்கும் வரங்களைத் தேவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுக்கு மாத்திரமே அருளினார்’ என்றார். அவர் அதைச் சொல்லக் கேட்டவர்கள் இங்கு அனேகருண்டு, ஆனால் சில நிமிடங்களுக்குள்ளாக போதுமான அளவுக்கு அவருக்குப் பதிலளிக்கப் பட்டது. `உலகின் எல்லா பாகங்களிலும் சர்வ சிருஷ்டிக்கும் இவ்வடையாளங்கள் காணப்படும்’ என்பதைக் கவனியுங்கள். அவிசுவாசமென்னும் சாத்தானின் அடையாளத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளாதீர்கள், அவன் உங்களை சுவற்றிற்கு நேராக நிறுத்தி உங்கள் காதுகளைக் குத்திப் போடுவான். நீங்களும் கூட்டத்திற்கு வெளியே சென்று, `அதைப்பற்றி எனக்குத் தெரியாது’ என்று சொல்வீர்கள். வீட்டிற்குச் சென்று படித்துப் பாருங்கள். உத்தம இருதயத்துடன் ஜெபம் செய்யுங்கள். ஏனெனில் இத்தருணத்தில் எல்லாமே வேதபூர்வமாக அமைந்துள்ளன. அனேக வருடங்களாக நிகழ்ந்தவை இப்பொழுது நிரூபிக்கப்படுகின்றன. அவன் உங்கள் காதுகளைத் துளைத்து அவிசுவாசமென்னும் அடையாளத்தைப் போட அனுமதிக்க வேண்டாம். அவன் ஆரம்ப முதல் அவிசுவாசியாயிருக்கிறான். அவன் ஆதியிலே சந்தேகம் கொண்டான். அவன் வேத வாக்கியங்களை தன்னுடைய அறிவினால் புரட்டவும் குதர்க்கமான அர்த்தம் அளிக்கவும் அனுமதிக்க வேண்டாம். நீங்கள் தாழ்மையுள்ளவர்களாய், `கர்த்தர் இவ்விதம் உரைத்துள்ளார். அத்துடன் அது முடிவு பெற்று விட்டது’ என்று சொல்லுங்கள். இப்பொழுது இரண்டாம் முத்திரையைக் கவனிப்போம், அடிக்கப்பட்டு உயிரோடெழுந்த ஆட்டுக்குட்டியானவர் இரண்டாம் முத்திரையைத் திறந்தபோது, காளைக்கொப்பான இரண்டாம் ஜீவன், `முத்திரையினுள் அடங்கிய இரகசியம் என்னவென்று வந்துபார்’ என்றது. ஆட்டுக்குட்டியானவர் மாத்திரமே ஒவ்வொரு முத்திரையையும் திறக்கவேண்டும். வரிசைக் கிரமமாக நாம் பார்க்கும் போது, இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பானது என்று அறியலாம். முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்தது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரையைத் திறந்தவுடனே காளைக் கொப்பான ஜீவன், `வந்து பார்’ என்றது. யோவானும் அதைக் காணச் சென்றான். அவன் சென்றபோது ஒரு சிவப்பான குதிரை புறப்பட்டதைக் கண்டான். எனக்குத் தெரிந்தவரை அவன் கையிலிருந்த பெரிய பட்டயம் (இன்னும் அடுத்த பதினைந்து, இருபது நிமிடங்களில் நாம் மூன்று காரியங்களைப் பார்க்க வேண்டும்). வேதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்கலாம். 4-ம் வசனம். `அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது (முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதாயிருந்தது). அதில் மேல் ஏறியிருந்த வனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத் தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது’ (வெளி. 6.4) இது அடையாளச் சின்னமாயுள்ளது. அதை நாம் உற்று நோக்க வேண்டும். இயேசுவும் மத்தேயு 24-ல் இதையே தீர்க்கதரிசனமாக உரைத்தார். `யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் நீங்கள் கேள்விப்படுவீர்கள்.... ஆனாலும் முடிவு உடனே வராது’. அவர்கள் இயேசுவை மூன்று கேள்விகள் கேட்டனர். அவரும் அந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலுரைத்தார். இங்கு தான் ஏழாம் நாளை ஓய்வுநாளாக ஆசரிப்பவர்கள், `அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! நீங்கள் ஓடிப்போவது ஓய்வுநாளில் சம்பவியாதபடிக்கு வேண்டிக் கொள்ளுங்கள் (ஏனெனில் பட்டினத்தின் வாசல்கள் ஓய்வுநாளில் மூடப்பட்டிருக்கும்)’ போன்ற இயேசுவின் சொற்களைப் படித்து குழப்பமுறுகின்றனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் இயேசு உரைத்த இப்பதிலுக்கும் யாதொரு தொடர்புமில்லை, அதாவது அவர் கூறின பதில் யாவும் கடைசி காலத்திற்குரியவையல்ல. `நீங்கள் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்’ என்றும், `உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்’ என்றும் அவர் கூறினவை கடைசி காலத்தைப் பற்றியவையல்ல. அவர்கள் மூன்று கேள்விகள் கேட்டனர்’ - இவை எப்பொழுது சம்பவிக்கும்?’ `ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அழிக்கப்படும் நாள் எப்பொழுது வரும்?’ `உலகத்தின் முடிவு எப்பொழுது வரும்?’ உலகத்தின் முடிவைக் குறித்த கேள்விக்கு அவர் பதிலுரைக்கும் போது, `அத்திமரம் துளிர் விடும்போது... அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். இவைகளெல்லாம் சம்பவிக்கு முன்னே இந்த சந்ததி ஒழிந்து போகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்றார். இதைக்குறித்த வெளிப்பாடில்லாத ஒரு அவிசுவாசி இதை வித்தியாசமாக அர்த்தங்கொள்கிறான். `இந்தச் சந்ததி’ என்ற அவர் சொற்கள் அவர் காலத்திலிருந்த அந்தச் சந்ததியல்ல, அத்திமரம் துளிர்விடுவதைக் காணும் சந்ததி என்று பொருள்படும். கடந்த 2500 வருட காலத்தில் முதன் முறையாக இஸ்ரவேல் ஒரு நாடாக ஆனது. உலகத்திலேயே மிகவும் பழமையான கொடி தற்பொழுது எருசலேமில் பறந்து கொண்டிருக்கிறது. இஸ்ரவேல் தாய் நாட்டிற்குத் திரும்பிவிட்டான். இங்குள்ளஒரு சகோதரன் ஒரு சமயம் யூதர்களிடையே சென்று சுவிசேஷ ஊழியம் செய்ய விருப்பங் கொண்டார். அப்பொழுது நான் அவரிடம், `இப்பொழுதல்ல, வேறொரு சமயம் நீங்கள் செல்லலாம்’ என்றேன். இஸ்ரவேல் ஒரு தேசமாக மனந்திரும்புகிறது தனிப்பட்ட நபராகவல்ல. `ஒரு தேசம் ஒரு நாளில் பிறக்கும்’, அதுதான் இஸ்ரவேல் தேசம். `இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்’ என்று பவுல் கூறினது நினைவிருக்கட்டும். ஆம், இஸ்ரவேலரெல்லாரும். அவர், `அத்திமரங்களையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள், அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது, என்று சொன்னார். 2500 வருட காலத்தில் முதன் முறையாக இஸ்ரவேல் தாய் நாட்டிற்குத் திரும்பியுள்ளது. `நள்ளிரவுக்கு மூன்று நிமிடங்கள்’ என்னும் யூதரைக் குறித்த படக்காட்சி நம்மிடமுண்டு, அது ஒரு நாடாக ஆகி, ஆறு முனை நட்சத்திரம் கொண்ட தாவீதின் கொடி இப்பொழுது அங்கு பறந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக ஸ்தாபனங்களில் எழுந்துள்ள எழுப்புதல் போன்று முன்பு எப்பொழுதாவது நிகழ்ந்துள்ளதா? மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் போன்ற ஸ்தாபனங்கள் பில்லி கிரகாமின் ஊழியத்தில் இப்பொழுது எழுப்புதலடைந்துள்ளது போன்று, எப்பொழுதாவது ஒரு மனிதனுடைய ஊழியத்தில் மலர்ச்சி பெற்றதா? முன்பு எப்பொழுதாவது ஒரு மனிதன் H-A-M என்ற எழுத்துக்களுடன் முடிவடையும் ஒரு பெயரைக் கொண்டு மாம்சப் பிரகாரமான சபைக்கு ஊழியம் செய்துள்ளானா என்று உங்கள் சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யுங்கள். ஆபிரகாம் (ABRAHAM) என்னும் பெயர் ஆங்கிலத்தில் ஏழு எழுத்துக்களைக் கொண்டதாயுள்ளது. ஆனால் நம்முடைய சகோதரன் பில்லி கிரகாம், GRAHAM என்னும் ஆறு எழுத்துக்களைக் கொண்டவராயிருக்கிறார் ஏழல்ல. ஆறு என்பது உலகப் பிரகாரமான ஓர் எண்ணாகும். ஆகையால்தான் அவர் மாமிசப் பிரகாரமான சபையில் ஊழியஞ் செய்து கொண்டு வருகிறார். சோதோமிலிருந்த லோத்து மாமிசப் பிரகாரமான சபைக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறான். இரு தூதர்கள் அங்கு சென்று பிரசங்கித்து, சுவிசேஷத்தின் மூலமே அவர்களைக் குருடராக்குகின்றனர். ஆனால், ஒருவர் ஆபிரகாமுடன் தங்கிவிட்டார். அவரை ஆபிரகாம், `ஏலோயிம்’ அல்லது `ஆண்டவர்’ என்றழைத்தான். மூன்று பேர் வருவதைக் கண்ட போது ஆபிரகாம், `என் ஆண்டவரே’ என்கிறான். இதற்கு மாறாக லோத்து இருவர் வருவதைக் கண்டு, `என் ஆண்டவன்மாரே என்று பன்மையில் அழைக்கிறான். அதுதான் வித்தியாசம். அது ஒரு திரித்துவ வார்த்தையாகும். `லோத்தின் நாட்களில் நடந்ததது போல....’ என்று இயேசு கூறியுள்ளார். இப்பொழுது புரிகின்றதா? கவனியுங்கள், ஒரு ஆள் ஆபிரகாமிடம் ஆவிக்குரிய சபையாகிய மணவாட்டியிடம் வருகிறார். அவர் ஆரம்பமுதல் சோதோமில் இருக்கவேயில்லை. அவனிடம் வந்தவர் சோதோமுக்கு சென்ற மற்றிருவர் போன்று போதனை செய்யவில்லை, ஆனால் ஒரு அடையாளத்தை அங்கு காண்பிக்கிறார். அது தான் மேசியாவின் அடையாளம், அவர் பின்புறம் கூடாரத்தை நோக்கியவாறு இருந்தது. அவர் ஆபிரகாமிடம், `ஆபிரகாமே, உன் மனைவி சாராள் எங்கே?’ என்று கேட்டார். சில நாட்களுக்கு முன்பு அவன் ஆபிராம் என்றும் அவள் சாராய் என்றும் அழைக்கப்பட்டனர். ஆபிரகாம் மாறுத்தரமாக, `அவள் உமக்குப் பின்புறத்தில் கூடாரத்தில் இருக்கிறாள்’ என்றான். அவர், `நான் (`நான்’ என்று ஒருமையில் கூறுவதைக் கவனியுங்கள்) என் வாக்கின்படி உன்னிடத்தில் திரும்ப வருவேன்’ என்றார். கடைசி நாட்களிலும் அவர் தம்மை மாமிசத்தில் வெளிப்படுத்தப் போவதாக வாக்களித்துள்ளார். சாராள் ஏறக்குறைய நூறு வயது சென்றவளாயிருந்த தால், அவள் இதைக் கேட்டபோது, `கிழவியாகிய எனக்கா? என்று சொல்லி, கூடாரத்தின் திரைக்குப் பின்னாலிருந்து நகைத்தாள். அவர்களிருவரும் முதிர்வயதானபடியால் கணவனும் மனைவியுமாக அவர்கள் தொடர்பு கொள்வது ஏற்கனவே நின்று போயிருந்தது. ஆபிரகாம் அப்பொழுது நூறு வயது சென்றவனாயிருந்தான், சாராளுக்கு அப்பொழுது தொண்ணூறு வயதாயிருந்தது. அவர் உடனே. சாராள் ஏன் நகைத்தாள்?’ என்று கேட்டார் அவர் முதுகுப்புறம் அச்சமயம் கூடாரத்தை நோக்கியிருந்தது. அவர் ஒரு அடையாளத்தை அவனுக்குக் காண்பித்தார். கடைசி காலத்தில் இது மறுபடியும் சம்பவிக்குமென்று அவர் வாக்களித்துள்ளார். இரண்டு பேர் சோதோமுக்குச் சென்று லோத்துக்கு செய்தியையளித்து, அந்த ஸ்தலம் தீக்கிரையாக்கப்படுமென்றும் அவர்கள் அவ்விடமிருந்து வெளியேற வேண்டுமென்றும் கூறினர். லோத்தும் தடுமாறிக் கொண்டே வெளியேறினான்.மாமிசப் பிரகாரமான சபை பாவச் சேற்றில் உழன்று கொண்டு, அதே சமயத்தில் ஸ்தாபனங்களின் திட்டங்களை அனுசரித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் ஓர் நிலைமைக்கு இது எடுத்துக்காட்டு, ஆனால் மணவாட்டியோ.... அந்த மனிதன் சோதோமுக்குச் செல்லவில்லை. அவர் மணவாட்டியை மாத்திரமே அழைக்கிறார். பாருங்கள், நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம். தேவன் அங்கு (ஆபிரகாமிடம்) மாம்சத்தில் வெளிப்பட்டார் என்று நாமறிகிறோம். இயேசுவும், `தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடம் வருகிறது. அவ்வாறு தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை நீங்கள் தேவர்களென்று அழைத்திருக்க, நான் என்னைத் தேவகுமாரன் என்று சொன்னபடியால் என் மேல் ஏன் நீங்கள் குற்றச்சாட்ட வேண்டும்?’ என்று கேட்டார். நாம் இப்பொழுது எங்கிருக்கிறோம்? நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள், யுத்தகங்களும் யுத்தங்களின் செய்திகளும் உண்டாகுமென்று நாம் பார்த்தோம். அல்லாமல், அத்திமரமும் துளிர் விட்டாயிற்று, அதனுடன் மற்ற மரங்களும் மேதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் போன்றவர் துளிர்விடத் தொடங்கிவிட்டன, அவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகியிருக்கிறது. இச்சமயத்தில் தேவன், தாம் தெரிந்து கொண்ட மணவாட்டியை அந்த மகத்தான சம்பவத்திற்காக ஒன்று சேர்க்கிறாரென்று நான் நம்புகிறேன். யோவான் கண்டது என்னவென்பதைப் பார்ப்போம். சிவப்பான குதிரையின் மேலேறி ஒருவன் புறப்பட்டுச் செல்கிறான். ஒரு பெரிய பட்டயத்தினால் ஜனங்களைக் கொன்று போடும்டி அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அதைக் குறித்து எனக்குத் கிடைக்கப்பெற்ற வெளிப்பாடு இதுவே. சாத்தான் மறுபடியும் வேறொரு ரூபத்தில் காணப்படுகின்றான். நான் அன்றிரவு உங்களிடம் கூறினவாறு, எக்காளத் தொனி ஜனங்களிடையே அல்லது தேசங்களிடையே நேரிடும் உள்நாட்டுப் போர்களைக் குறிக்கிறது. இவன் கையில் பட்டயம் ஒன்றை ஏந்தியிருப்பதால், அது சபை அரசியலில் நேரிடும் யுத்தத்தைக் குறிக்கிறது. குதிரைகளின் நிறங்கள் மாறிக் கொண்டே வருவதைக் கவனியுங்கள் ஆனால் அவைகளின் மேல் சவாரி செய்பவன் ஒருவனே. குதிரை என்பது ஒரு மிருகம். வேதத்தில் மிருகம் வல்லமைக்கு அறிகுறியாக இருக்கிறது. அதே முறைமை வேறொரு நிறமுள்ள அதிகாரத்தின் மீது சவாரி செய்கிறது களங்கமற்ற வெள்ளை நிறத்திலிருந்து இரத்த சிவப்பு நிறத்திற்கு மாறுதல். அவன் எவ்வாறு வருகிறான் என்பதைக் கவனியுங்கள். அவன் தொடக்கத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் ஒரு சிறு கொள்கையாக விளங்கினான். அப்பொழுது அவன் யாரையும் கொன்று போடவில்லை. (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது வெளி, 2.ல் உள்ளது) அவன் மக்களிடையே ஒரு ஆவியாகத் திகழ்ந்தான். அந்த ஆவி யாரையும் கொன்று போடவில்லை. அவன் களங்கமற்றவனைப் போல் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தான். இன்றைக்கு ஜனங்கள் `உலகம் பூராவும் வியாபிக்கும் ஒரு சபையை நாம் நிறுவலாமே’ (Universal Church) என்று சொல்கின்றனர். அது மிகவும் களங்கமில்லாதது போல் காணப்படுகின்றது. `நாமெல்லாரும் ஒன்றுகூடி ஐக்கியங் கொள்ளலாமே!’ என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். அது களங்கமற்றது போல் தென்படுகிறது வெள்ளைக் குதிரை. ஆகையால் கௌரவம் வாய்ந்தவர்களும் கல்விமான்களும் ஒன்று சேர்ந்து `மேசன்ஸ்’ (Masons) என்றும், ஆட் பெல்லோஸ் லாட்ஜ்’(Odd Fellows Lodge) என்றும் தங்களையழைத்துக் கொள்கின்றனர். ஆம், விசுவாசிகளுக்கு இது விந்தையாகவே தான் இருக்கிறது. (Odd’ என்னும் பதம் விந்தையென்று பொருள்படும் - தமிழாக்கியோன்). வேறு சிலர் ஒன்றுகூடி, `எங்களுக்கு உங்கள் பேரில் எவ்வித விரோதமுமில்லை. நீங்கள் செய்வதெல்லாம் சரிதான். ஆனால் எங்களுக்கு வியாபாரத் தொடர்பு இருப்பதனால், ஒரு குழுவை நாங்கள் அமைத்துக் கொண்டால் நல்லது என்று எங்களுக்குத் தோன்றுகிறது’ என்கின்றனர். இவையாவும் களங்கமற்றவை போல் தென்படுகின்றன. ஆனால் இத்தகைய கொள்கைகளை உண்டாக்கின அந்த ஏமாற்றும் ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, அந்த மனிதன் கிறிஸ்துவின் ஸ்தானத்தைப் பறித்துக் கொண்டு, இப்பொழுது கிறிஸ்துவைப்போல் ஆராதிக்கப்படுகிறான். வாடிகனில் `தேவனுக்குப் பதிலாக’ என்று அர்த்தம் கொள்ளும் சொற்கள் லத்தீனில் எழுதப்பட்டுள்ளது. (Vicarius Filli Dei). அப்படியானால் அவன் `பிரதிகுரு’ (Vicar) என்று அர்த்தம். அதாவது அவன் வேறொருவருடைய ஸ்தானத்தை வசிக்கிறான். தேவகுமாரனின் ஸ்தானத்தை அவன் பறித்துக் கொண்டான். `அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுள்ளவன் கணக்குப் பார்க்கக் கடவன், அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது, அதினுடைய இலக்கம் `அறுநூற்றறுபத்தாறு’ என்று வேதம் கூறியுள்ளது. வாடிகனில் எழுதப்பட்ட லத்தீன் சொற்களில் காணப்படும் ரோம எழுத்துக்களின் எண்ணிக் கையை (உதாரணமாக ‘V’க்கு 5, ‘i’க்கு1) கூட்டினால் 666 என்ற எண் கிடைக்கிறது. அவன் தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்காருவான் என்று வேதம் கூறுகின்றது. அவன் தேவனைப் போன்று ஆராதிக்கப்படுகின்றான். சிறு கொள்கையையளித்த அந்த ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்த போது அவன் தேவகுமாரனுக்குப் பதிலாக `பிரதிகுருவாக’ (Vicar) ஆகிறான், ஓ! பயங்கரமான அந்த ஏமாற்றும் ஆவி!’ நீங்கள் வேண்டுமானால் 2 தெசலோனிக்கேயர் 2.3 படியுங்கள். சாத்தான் எல்லா தேசங்களிலும் காணப்படும் அரசியல் வல்லமைக்குத் தலைவனாக விளங்குகிறான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? விரும்பினால் மத். 4.8ஐக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இயேசுவைச் சாத்தான் ஒரு உயர்ந்த மலையின் மேல் கொண்டு சென்று முன்பிருந்ததும் இனி வரப்போவதுமான உலகத்தின் இராஜ்யங்கள் அனைத்தையும் ஒரு நொடிப்பொழுதில் காண்பித்து, `நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்’ என்று சொன்னான். இந்த இராஜ்யங்கள் அனைத்தும் ஒருநாள் அவர் ஆதிக்கத்தின் கீழ்வரும் என்பதை இயேசு அறிந்திருந்தார். அவ்வாறே இன்றைக்கும் `பரிதாபமுள்ள பரிசுத்த உருளைகளே (holy rollers) உலகமே எங்கள் கரங்களிலுள்ளது’ என்று நம்மைப் பார்த்து பரிகாசம் செய்கின்றனர். ஆனால் `சாந்த குணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்’ என்று இயேசு கூறியுள்ளார். இந்த இராஜ்யங்கள் அனைத்தும் அவர் ஆதிக்கத்தின் கீழ்வரும் என்று இயேசு அறிந்து, `அப்பாலே போ சாத்தானே! உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே’ என்று கடிந்து கொண்டார். (வேதம் உரைத்தவாறு) பிசாசு மதசம்பந்தமான இந்த பராக்கிரமாசலியினுள் குடிகொள்ளும் போது, அவன் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றாக இணைக்கிறான்.அவன் ஆதிக்கம் கொண்டிருந்த இவ்விரண்டும் ஒன்றாகின்றன. அந்திக்கிறிஸ்துவின் ஆவி புறப்பட்டுச் சென்று கிறிஸ்துவின் போதனைகளுக்கு விரோதமாய் செயல் புரிந்தது. `கிறிஸ்து சொன்னதற்கு இதுவல்ல அர்த்தம். அதுவல்ல அர்த்தம். அவர் கூறியுள்ளது நமக்காக அல்ல. ஆதிகாலத்தவருக்கு’ என்றெல்லாம் விரோதமாக அது போதிக்கிறது. வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவனுக்கு கிரீடம் இல்லாமல் இருந்தது. பின்னர் அவனுக்குக் கிரீடம் அளிக்கப்படுகிறது. அவனிடம் வில்லிருந்தது. ஆனால் அம்பில்லை. ஒரு ஆவிக்குக் கிரீடம் சூட முடியாது. ஆகையால் அந்த ஆவி ஒரு மனிதனுக்குள் வாசம் செய்து, கள்ளத் தீர்க்கதரிசி என்னும் இரண்டாம் உத்தியோகத்தை மேற்கொள்ளும் போது, அவன்முடிசூடப்படுகிறான். அப்பொழுது அவன் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டவனாய் உலக சபை ஒன்றை நிறுவத் தலைப்படுகிறான். அமெரிக்காவைத் குறித்து சொல்லப்பட்டிருக்கும் வெளிப்படுத்தல் 13ம் அதிகாரத்தில் ஒரு சிறு மிருகம் ஆட்டுக்குட்டிக் கொப்பாக இரண்டு கொம்புகளை உடையதாயிருந்தது என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஒரு கொம்பு அரசாங்க ஆதிக்கத்தையும் மற்றொரு கொம்பு மதசம்பந்த மான ஆதிக்கத்தையும் குறிக்கின்றது. அமெரிக்க நாட்டின் எண்ணிக்கை பதின்மூன்று, அது ஒரு ஸ்திரீயின் நாடாகும். அதைக் குறித்து வெளிப்படுத்துதல் 13ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது மிக அதிசயமல்லவா? நம் கொடியில் பதின்மூன்று கோடுகளும், பதின்மூன்று நட்சத்திரங்களும் உள்ளன. எல்லாமே பதின்மூன்று, பதின்மூன்று என்பதாக அமைந்துள்ளது. அவ்வாறே எல்லாமே தொடர்ச்சியாக ஸ்திரீ, ஸ்திரீ என்பதாக அமைந்துள்ளது. முடிவில் ஒரு ஸ்திரீ ஆதிக்கம் கொள்வாள் என்று முப்பது வருடங்களுக்கு முன்னமேநான் முன்னறிவித்தேன். அப்பொழுது நான் முன்னறிவித்த ஏழு காரியங்களில், ஐந்து ஏற்கனவே நிறைவேறிவிட்டன. அவளை ஆதிக்கத்திற்குக் கொண்டுவரவிருக்கும் அந்த மனிதனை நீங்கள் அரசியலில் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். சொல்ல வேண்டிய காரியங்கள் அனேகமுண்டு. அப்படி சொல்லிக் கொண்டே போனால், நாம் நம்முடைய பொருளுக்கு வர இயலாது. உங்களை அதிக நேரம் தாமதிக்கமாட்டேன். சாத்தான் உலகத்திலுள்ள எல்லா இராஜ்யங்களின் பேரிலும் அரசியல் ஆதிக்கம் கொண்டிருக்கிறான். எல்லா இராஜ்யங்களும் அவனுக்குச் சொந்தமானவை. அதன் காரணமாகவே யுத்தங்களும் இரத்தம் சிந்துதலும் உண்டாகின்றன. ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அவர்களுக்கு இந்தப் பட்டயம் அளிக்கப்படுகின்றதென்பது வினோதமாகக் காணப்படவில்லையா? அவன் தொடக்கத்தில் மதசம்பந்தமான ஆதிக்கம் கொண்டிருக்க வில்லை. அவன் கள்ளப் போதனைகளைப் போதித்தான். அது பிறகு கோட்பாடாக மாறியது. பின்னர் அந்த ஆவி மனிதனுக்குள் வாசம் செய்து கள்ளத் தீர்க்கதரிசி யென்னும் உத்தியோகத்தை மேற்கொண்டு, அவன் ரோமாபுரிக்குச் செல்லுகிறான் இஸ்ரவேலரிடம் அல்ல. அங்கு நிசாயாவில் ஒரு மாநாடு கூட்டப்பட்டு, அத்தியட்சகர் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதன் விளைவாக சபையும், அரசாங்கமும் ஒன்றாக இணைக்கப்படுகின்றது. அப்பொழுது அவன் தன் கையிலிருந்த வில்லை கீழே போட்டு விட்டு, வெள்ளைக் குதிரையிலிருந்து கீழேயிறங்கி சிவப்பு குதிரையின் மேலேறுகிறான், தன்னுடன் இணங்காத யாவரையும் அவன் அப்பொழுது கொன்று போடுகிறான். அதுதான் இரண்டாம் முத்திரை, அதே ஆள்தான்! அவன் அரசாங்கத்தையும் சபையையும் ஒன்றாக இணைக்கிறான். இன்றைக்கும் அதையே செய்ய முயல்கின்றனர். இன்றைக்கு லூயிவில் (Louisville) பட்டினத்திலுள்ள பாப்டிஸ்ட் குழுவினர் (நீங்கள் ரேடியோவில் கேட்டிருக்கலாம்), நாம் கத்தோலிக்க சபையுடன் உண்மையில் சேரவேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் ஆராதனையில் நாம் அவர்களுடன் ஐக்கியங் கொள்ளுதல் அவசியமென்றும் கூறுகின்றனர். லூயிவில் பட்டினத்தில் இது நிகழும் தருணம், கர்த்தர் முத்திரைகளின் இரகசியங்களை தம் மக்களுக்கு வெளிப்படுத்தி அவ்வாறு செய்யவேண்டாமென்று அறிவுறுத்துகிறார். இரண்டும் ஒரே நேரத்தில் கிரியை செய்கின்றன. காகமும் புறாவும் ஒரே கம்பத்தின் மேல் உட்கார்ந்தன என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் சபையும் அரசாங்கத்தையும் ஒன்றாக இணைத்த பிறகு, தன் சொந்த மார்க்கம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு அவன் விருப்பத்திற்கேற்ப செய்கிறான். அப்பொழுது அவனுடன் இணங்காத அனைவரையும் கொல்வதற்கு அவன் உரிமை பெறுகிறான். தேவனுடைய வார்த்தையைக் கைக்கொண்ட ஜீவனுள்ள தேவனின் உத்தம பரிசுத்தவான்கள் அவனுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்த காரணத்தால் அவர்களை அவன் கொன்று போட்டான். ஆதி சபையின் காலத்தைப் பற்றியும், நிசாயாவின் காலத்தைப் பற்றியும் நன்கு படித்திருக்கும் சகோ. லீ வேயில், மற்றுள்ளோரே! இதைப் படித்தீர்களோ என்னவோ எனக்குத் தெரியாது. ஸ்மக்கர் (Smucker) என்பவர் எழுதியுள்ள `மகத்தான சீர்திருத்தம்’ (Glorious Reformation) என்னும் புத்தகத்தில் இது காணப்படுகின்றது. ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரி. அகஸ்டின் ரோம சபையின் குருவானவராக ஆனபோது ஒருமுறை பரிசுத்த ஆவியானவர் அவரை அபிஷேகிக்க முயன்ற போது, அவர் அதைப் புறக்கணித்து விட்டார். இதை எத்தனை பேர் அறிவீர்கள்? இன்றைக்கு பிராடெஸ்டெண்ட் சபைகளும் அவ்வாறே பரிசுத்த ஆவியை நிராகரித்து விட்டன. அகஸ்டின் ஹிப்போ நாட்டிற்குச் சென்று, ரோமன் கத்தோலிக்க சபையில் விசுவாசங் கொள்ளாத அனைவரும் கொலை செய்யப்படுவது தேவனுக்குப் பிரீதியாயுள்ளது என்னும் வெளிப்பாட்டை அவர் தேவனிடமிருந்து பெற்றிருப்பதாக ஒரு சாசனத்தில் எழுதி, அதற்கு கையொப்பமிட்டார். `இரத்தச் சாட்சிகள்’ என்னும் புத்தகத்திலிருந்து இதை நான் எடுத்துக் கூறுகிறேன். `பரி, அகஸ்டின் காலத்திலிருந்து 1586 வரை ரோமன் கத்தோலிக்க சபை 68,000,000 பிராடெஸ்டெண்டுகளை கொலை செய்துள்ளது’. அப்படியானால் அவன் பட்டயம் சிவப்பாயுள்ளதா? அவன் சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கின்றானா? அதே ஆதிக்கம்! அதே ஆள்! அது தான் இந்த முத்திரையின் இரகசியம். இரத்த சாட்சிகளாக மரித்தவர் மாத்திரம் 68,000,000 பேர் என்பதை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதுவுமல்லாமல், கொலை செய்யப்பட்டடவர் இன்னும் எத்தனையோ பேருண்டு. எவ்வளவு பயங்கரம்! இருளின் காலங்களில் கத்தோலிக்கர் கொள்கைகளை ஏற்காத லட்சக்கணக்கானவர் சிங்கங்களுக்கு இரையாயினர்! அல்லாமலும் இன்னும் அநேக விதங்களில் அவர்கள் கொலை செய்யப்பட்டனரென்றும் உங்களுக்கு தெரியுமா? சகோ. லீ! ஸ்மக்கர் (Smucker) எழுதிய `மகத்தான சீர்திருத்தம்’ என்னும் புத்தகத்திலிருந்து இரத்த சாட்சிகளின் பட்டியலை நான் எடுத்தேன். பரி, பாட்ரிக்கைச் சார்ந்தவர்கள் இரத்த சாட்சியாய் மரிக்கும் வரையுள்ள எண்ணிக்கை தான் அது. இவையனைத்தும் செய்துவிட்டு அவர்கள் பரி. பாட்ரிக்கை தங்கள் சபையின் பரிசுத்தவானென்னு அழைக்கின்றனர். அவர் எவ்வளவாக கத்தோலிக்கராக இருந்தாரோ, அவ்வளவாக நானும் கத்தோலிக்கனாக இருக்கிறேன். நான் எவ்வளவாக கத்தோலிக்கனா யிருக்கிறேனென்று நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் ரோமன் கத்தோலிக்க சபையின் போதகங்களை வெறுத்தார். போப்பாண்டவரிடம் செல்ல அவர் மறுத்தார். பரி. பாட்ரிக் வேத பள்ளிகள் நடத்திய வட ஐயர்லாந்துக்கு (Northern Ireland) நீங்கள் சென்றதுண்டா? அவர் முதலில் பாட்ரிக் என்று அழைக்கப்படவில்லை. அவர் சுகாடஸ் (Sucatus) என்னும் பெயர் கொண்டிருந்தார். அவரது தமக்கையை அவர் இழந்தார்.... சரி, வெளிப்படுத்தல் 17ம் அதிகாரத்தைப் படிப்போம். உங்கள் இருதயங்களைத் திறந்து பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குப் போதிக்க அனுமதியுங்கள். ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து... இங்கு ஏழு கலசங்களைப் பாருங்கள். நாம் ஏழு என்னும் எண்ணிக்கையுடையவைகளை சிந்தித்துக் கொண்டு வந்திருக்கிறோம். சபையின் காலங்களுக்குப் பிறகு அவையெல்லாம் ஒரே நேரத்தில் சம்பவிக்கின்றன. அந்த ஒரே புத்தகத்தில் இவை முத்தரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவை ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து, ஒன்றோடொன்று இணைகின்றன. இரண்டு ஆவிகள் கிரியை செய்து கொண்டு வருகின்றன - ஒன்று கர்த்தர், மற்றொன்று பிசாசு. .... என்னோடே பேசி, நீ வா, திரளான தண்ணீர்கள் மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே, அவர்களுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே. வேசி என்னப்படுபவள் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும். அது ஆணாக இருக்க முடியாது. வேதத்தில், ஸ்திரீ சபைக்கு அடையாளமாயிருக்கிறாள். கிறிஸ்துவின் மணவாட்டியும் ஒரு ஸ்திரீயாகவே சித்தரிக்கப்படுகிறாள். தண்ணீர்கள் என்பது எதைக் குறிக்கிறது? 15ம் வசனம் படியுங்கள். பின்னும் அவன் என்னை நோக்கி, அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். சபை உலக முழுவதும் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த வேசி தண்ணீர்களின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம் பண்ணினார்களே (நிக்கொலாய் போதகத்தைப் பின்பற்றி ஆவிக்குரிய வேசித்தனம் செய்தார்கள்). அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறி கொண்டிருந்தார்களே. (இங்குள்ள குடிகாரக் குழுவைப் பாருங்கள்). அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி, ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டு போனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன். இது கத்தோலிக்க சபையைக் குறிக்கிறது என்று கத்தோலிக்க புத்தகங்களே சம்மதிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? `எங்கள் மார்க்க விசுவாசத்தின் உண்மைகள்’ (Facts of our Faith) என்னும் புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. அது ஒரு போதகருக்குச் சொந்தமான புத்தகம். இந்த அடையாளத்தை (ஏழு தலைகளையுடைய மிருகம்) சற்று கவனியுங்கள். `அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்’. ரோமாபுரி ஏழு மலைகளின் மேல் கட்டப்பட்டுள்ளது என்பது நிச்சயமாகும் - ஏழு தலைகள், பத்து கொம்புகள், பத்து கொம்புகள் பத்து இராஜ்யங்களைக் குறிக்கின்றன. அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடயுந்தரித்து, பொன்னி னாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற் பாத்திரத்தை தன் கையில் பிடித்திருந்தாள். அந்த அந்திக் கிறிஸ்துவின் ஆவி வேசித்தனம், மணவாட்டியெனக் கருதப்படுகிறவள் வேசித்தனம் செய்கிறாள். ஏவாள் செய்தது போன்று சபையும் வேசித்தனம் செய்கின்றது. மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறி கொண்டிருக்கிறதைக் கண்டேன், அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். சிலுவைகள் இன்னும் மற்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு அவள் மிகவும் அழகானவளாய் காணப்பட்டாள். பரிசுத்தவான்களுடைய இரத்தத்தைக் குடித்த குற்றத்தை அவள் எவ்வாறு செய்திருக்க முடியுமென்று யோவான் குழப்பமுற்றாள். அப்பொழுது தூதன் அவனிடம் என்ன கூறுகிறான் பாருங்கள். அப்பொழுது தூதனானவன் என்னை நோக்கி, ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையுமுடையதாய் இவைகளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். (இது முத்திரைகளில் அடங்கியுள்ள இரகசியமல்ல. இது வேறொன்று). நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது. இப்பொழுது இல்லை, அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, (அதற்கு அஸ்திபாரம் இல்லை - போப்பாண்டவர்) நாசமடையப் போகிறது. உலகத்தோற்ற முதல் ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப் பட்டிராத பூமியின் குடிகள். இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். உங்கள் பெயர் எப்பொழுது ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டது? நீங்கள் சென்றிருந்த அந்த எழுப்புதல் கூட்டத்தின் போதா? அல்லவே அல்ல. உலகத் தோற்றத்துக்கு முன்னால். இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகம், அந்த மிருகத்தைப் பாருங்கள். ஒன்று சாகும். மற்றொன்று அதன் ஸ்தானத்தை வகிக்கும். இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதும் - முடிவில் அது நாசமடையப் போகிறது. ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும் (ஆவிக்குரிய வரங்கள் ஒன்பதென்றும், அதில் ஞானம் ஒரு வரம் என்றும் எத்தனை பேர் அறிவீர்கள்?) அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம் (இதைப் புரிந்து கொள்ளாதவன் முற்றிலும் குருடனாயும், செவிடனாயும், ஊமையனாகவும் இருத்தல் வேண்டும்.). அவைகள் ஏழு ராஜாக்களாம், இவர்களில் ஐந்து பேர் விழுந்தார்கள். ஒருவன் இருக்கிறான். (நீரோ), மற்றவன் இன்னும் வரவில்லை, வரும் போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்க வேண்டும். நீரோ என்ன செய்தான் என்பது நினைவிருக்கிறதா? அவன் பட்டினத்தை எரித்துப் போட்டு, கிறிஸ்தவர்கள் மேல் பழியைச் சுமத்தினான். அவன் தன் தாயை ஒரு மரத்தின் மேல் உட்காரவைத்து அதை குதிரையைக் கொண்டு வீதிகள் முழுவதும் இழுக்கச் செய்தான். ரோமாபுரி எரியும் போது அவன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான். இருந்ததும், இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும்... அந்திக் கிறிஸ்துவின் ஆவி மனிதனுக்குள் வாசம் செய்து கிரீடம் சூடப்பட்டபோது, அஞ்ஞான ரோம மார்க்கம் போப்பாண்டவரின் ரோம மார்க்கத்துடன் இணைந்தது. அவன் சபைக்கும் அரசாங்கத்துக்கும் முடிசூடப்பட்ட அரசனாக விளங்கினான். ஓ... சகோதரனே! அது முழுவதும் அசுத்தத்தால் நிறைந்துள்ளது. ....அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும் நாசமடையப் போகிறவனு மாயிருக்கிறான். (நாசமடையும் வரை அவர்கள் தங்கள் முறைமைகளை மாற்றப் போவதில்லை). நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம், இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை,இவர்கள் மிருகத்துடன் கூட ஒரு மணி நேரமளவும் ராஜாக்கள் போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். (அவர்கள் சர்வாதிகாரிகளாக ஆகின்றனர்). இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள், இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடன் யுத்தம் பண்ணுவார்கள். ஆட்டுக் குட்டியானவர் கர்த்தாதி கர்த்தாவும் ராஜாதி ராஜாதி ராஜாவுமாயிருக் கிறபடியால் அவர்களை ஜெயிப்பார், அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மை யுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். பின்னும் அவன் என்னை நோக்கி, அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே, அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். நீ மிருகத்தின் மேல் கண்ட பத்துக்கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து (நாம் சென்ற இரவு கூறினது போன்று அந்த உடன் படிக்கை முறிக்கப்படும்போது) அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள். பூமியின் வர்த்தகர்கள், `ஐயோ! பாபிலோன் மாநகரமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! ’ என்று புலம்புவார்கள் என்று வேதம் கூறியுள்ளதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? (வெளி. 18.16). தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனை யுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள் மேல் ராஜ்ய பாரம் பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான். ருஷ்யா தேசம் எல்லா தேசங்களின் மேலும் ஆளுகை செய்வதில்லை. நாமும் எல்லோர் மேலும் ஆளுகை செய்வதில்லை. நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் உருவம் கைகளில் தொடங்கி பாத விரல்களில் முடிவது போன்று, உலகம் முழுமையையும் அரசாட்சி செய்வது ஒன்றே ஒன்றாகும். அது தான் ரோமாபுரி. ரோமாபுரி தேசம் அரசாட்சி செய்வதில்லை. ரோமாபுரி சபைதான் அவ்விதம் செய்கிறது. வானத்தின் கீழ் காணப்படும் தேசங்களும் ரோமாபுரியின் ஆதிக்கத்தில் உள்ளது. கத்தோலிக்க சபை `சமாதானம்’ என்று அறைகூவும் போது, அங்கு சாமாதானம் ஏற்படுகிறது. அது `சண்டையிடாதிருங்கள்’ என்றால், சண்டையிடுவதை அவர்கள் நிறுத்தி விடுகின்றனர். அவன் செய்வதை வேறு யாராலும் செய்ய முடியாது. ஆகவே அவனால் செய்யக்கூடும் அற்புதங்களைக் கண்டு அவர்கள் வியந்தனர். அவன் யுத்தத்தை நிறுத்தமுடியும். `நிறுத்துங்கள்’ என்று அவன் சொன்னால் போதும். அப்பொழுது யுத்தம் நின்று விடும். ஆனால் அவன் அவ்விதம் சொல்லி யுத்தத்தை நிறுத்துவானா? இல்லவே இல்லை. அவர்கள் ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாக அதிகாரம் பெற்றுள்ளனர் என்பதைக் கவனியுங்கள். தொடக்கத்தில் அவன் வில்லைப் பிடித்திருத்தான், ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. பிறகு அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து சிவப்பு நிறமுள்ள குதிரைக்கு மாறி, தன் கையிலுள்ள பட்டயத்தினால் கொலை புரிகிறான் பிசாசின் கைகளில் பட்டயம். பேதுரு பட்டயத்தை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக் காரனைக் காதற வெட்டினபோது இயேசு அவனிடம், `பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்’ என்றார். சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் பட்டயத்தை வைத்துக் கொண்டு, தன்னுடன் இணங்காத அனைவரையும் கொன்று, அதனால் ஏற்பட்ட இரத்தப் பெருக்கின் வழியாகச் செல்கிறான். இந்த முத்திரையின் அர்த்தம் நன்கு புரிகின்றதா? `பட்டயத்தை எடுக்கிறவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்’ என்று இயேசு உரைத்தார். இரத்தச் சாட்சிகளின் இரத்தம் சிந்தின இக்குதிரையின் மேல் சவாரி செய்பவனும் அவனைச் சார்ந்தோரும் இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய பட்டயத்தால் கொல்லப்படுவர். அவர்கள் அந்திக்கிறிஸ்துவின் கொள்கையாகிய பட்டயத்தைக் கொண்டு, காலங்கள் தோறும் தேவனை உண்மையாக வழிப்பட்ட லட்சக்கணக்கானவர்களைக் கொன்று போட்டனர். ஆகையால் இயேசு பட்டயத்துடன் வரும்போது அவருடைய வார்த்தை அவருடைய வாயிலிருந்து புறப்பட்டுச் செல்கிறது அவருக்கு முன்னால் வரும் அனைவரையும் கொன்று போடுவார், அதை நீங்கள் நம்புகிறீர்களா? சற்று பொறுங்கள். நானாகவே இதைச் சொல்லுகிறேனா அல்லது தேவனுடைய வார்த்தை இவ்விதம் உரைக்கிறதா என்று பார்ப்போம். வெளி. 19.11. பின்பு பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்... (ஆமென்). இதோ ஒரு வெள்ளைக் குதிரை காணப்பட்டது. அதின் மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுள்ளவரெனப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம் பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன. அவருடைய சிரசின் மேல் அநேக கிரீடங்கள் இருந்தன. (ஓ சகோதரனே! அவருடைய பரிசுத்தவான்கள் அவருக்குக் கிரீடம் சூடியுள்ளனர்). அவருக்கேயன்றி வேறொருவருக்குத் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. (நாம் இன்னும் அந்த நாமத்தை அறிந்து கொள்ளவில்லை). இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (ஏனெனில் அவரும் வார்த்தையும் ஒன்றாகும்). (ஆங்கிலத்தில் `அவர் தேவனுடைய வார்த்தை என்னும் நாமத்தால் அழைக்கப்பட்டார்’ என்று எழுதப்பட்டுள்ளது - தழிழாக்கியோன்). இப்பொழுது கவனியுங்கள், அவருடைய `நாமங்கள்’ என்று பன்மையில் கூறப்படவில்லை. `நாமம்’ என்று கூறப்பட்டுள்ளது. அவருடைய நாமம் `தேவனுடைய வார்த்தை’ என்பதல்ல. அவர் அந்நாமத்தால் அழைக்கப்படுகிறார், அவர் ஒரே நாமத்தை மாத்திரம் அறிந்திருந்தார் வேறெந்த நாமத்தையும் அல்ல, பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரத்தரித்தவர்களாய், குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். (வெண்மை வஸ்திரம் பரிசுத்தவான்களின் நீதியாகும்). இயேசு என்ன சொன்னார்? `பட்டயத்தை எடுக்கிறவர்கள் பட்டயத்தால் மடிய வேண்டும்’. சரி, சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் வருகிறான். நீங்கள் ஒருக்கால் காலங்கள் தோறும் 68,000,000 பேரை அல்லது அதைக் காட்டிலும் அதிகமானவரைக் கொன்றிருக்கலாம். ஆனால் இயேசு, `பட்டயத்தை எடுத்தவர்கள் யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது. தேவனுடைய வார்த்தையானது இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும்.... கணுக்களையும் ஊனையும் பிரிக்கத் தக்கதாக உருவக் குத்துகிறதாயும் இருக்கிறது’ என்று எபிரேயர் 4ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தேவனுடைய வார்த்தை வேறெதைச் செய்கிறது? அது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாய் இருக்கிறது. ... இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்! அவர் சர்வவல்லமயுள்ள தேவனுடைய உக்கிர கோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. தேவனுடைய மக்கள் அந்திக் கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு இணங்க மறுத்ததால், சாத்தான் தன் ஆதிக்கத்தின் கீழிருந்த அரசாங்க அதிகாரத்தையும் ஆவிக்குரிய அதிகாரத்தையும் ஒன்றாக இணைத்து உலகெங்கும் பரவியுள்ள ஒரு சபையை உண்டாக்கி, வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்கி சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேலேறிப் புறப்பட்டுச் சென்று, கோடிக்கணக் கானவர்களை பட்டயத்தால் கொன்று போட்டான். அவன் எந்த வார்த்தைக்கு விரோதமாக போதித்தானோ, அதே வார்த்தை இயேசு கிறிஸ்துவின் உதடுகளிலிருந்து வல்லமை பொருந்தியதாய் புறப்பட்டு, அவனையும் அவனைச் சார்ந்தவர் அனைவரையும் கொன்று போடும், ஆமென்! கர்த்தர் உரைக்கிறதாவது, அதுதான் இரண்டாம் முத்திரையின் இரகசியம். நீங்கள் அவரில் அன்பு கூறுகிறீர்களா? அனேக தரிசனங்களைக் கண்டு, வெளிப்பாடுகளைப் பெற்று, அவ்விதம் சம்பவிக்கும் என்று நான் கூறின ஒவ்வொன்றும் அதே போன்று நிகழ்ந்தது. இதையறிந்தவர் எத்தனை பேர்? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நூற்றுக்கணக்கானவர் கைகளை உயர்த்தியுள்ளனர். இங்குள்ள அனைவருமே கைகளை உயர்த்தியிருக்கின்றனர். ஓ! நண்பர்களே, இம்மானுவேலின் இரத்தத்தால் நிறைந்த ஊற்றண்டைக்கு வாருங்கள். எப்பாவத் தீங்கும் அதனால் நிவர்த்தியாகும். அவரை விசுவாசித்து இப்பொழுதே வாருங்கள். வேறொரு தருணத்திற்காகக் காத்திராதேயுங்கள். நண்பர்களே, உங்கள் ஜீவித்தில் ஏதாவது காணப்பட்டால், நாங்கள் உதவி செய்ய இங்கிருக்கிறோம்... ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அது எப்பொழுது சம்பவிக்குமென்றும் எனக்குத் தெரியாது. ஆனால் என்ன நேரிடப்போகிறது என்பது எனக்குத் தெரியும். அது கண்டிப்பாக நிகழுமென்பது எனக்குத் தெரியும். ஏனெனில் அவர் இப்பொழுது எனக்கு அதை வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். தீர்க்கதரிசிகளுக்கு அதை வெளிப்படுத்தாமல் அவர் செய்வதில்லை (ஆமோஸ் 3). இவை யாவும் ஏழாம் சபையின் காலமுடிவில் அக்காலத்துத் தூதன் தோன்றும்போது நிறைவேறும் என்பதாய் அவர் வாக்களித்துள்ளார். முத்திரைகளின் இரகசியம் அப்பொழுது வெளிப்படும். இப்பொழுது வெளிப்படுத்தப்படுகிறது என்று கர்த்தரின் நாமத்தைக் கொண்டு சொல்லுகிறேன். நண்பர்களே, நான் சொல்வதை நம்புங்கள், பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள். நானும் பில்லியும் விமானத்தை விட்டு இறங்கி இந்தியாவை அடைந்தபோது, ஒரு ஆங்கிலப் பத்திரிகையை நான் படிக்க நேர்ந்தது. அதில் `பூகம்பம் நின்றுவிட்டிருக்க வேண்டும். பறவைகள் திரும்பி வருகின்றன’ என்று அச்சிடப்பட்டிருந்தது. ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்தது. இந்தியாவில் நம்மைப்போன்று கம்பிகளினால் செய்யப்பட்ட வேலிகள் கிடையாது. அவர்கள் அடைப்புக்காகக் கற்பாறைகளை உபயோகிக் கின்றனர். அவர்கள் வீடுகளையும் கற்பாறைகளைக் கொண்டே கட்டுகின்றனர். கல்கத்தா முழுவதிலும் ஜனங்கள் தெருக்களில் வாழ்ந்து பட்டினி கிடக்கின்றனர். அவர்கள் மதில்களை வீடுகளின் பக்கத்தில் சுற்றிலும் கற்பாறை களினால் கட்டுகின்றனர். ஆடுமாடுகளுக்கென்று அவர்கள் கிணறுகளை வெட்டி அதைச் சுற்றிலும் மதில்கள் கட்டுகின்றனர். சிறு பறவைகள் இம்மதில்களில் காணப்படும் இடைவெளிகளில் கூடுகட்டி குஞ்சு பொறித்து குஞ்சுகளை வளர்க்கின்றன. உஷ்ணம் அதிகமாகும்போது ஆடுமாடுகள் மதிலின் நிழலில் வந்து நிற்கும். சடுதியாக ஏதோ ஒரு காரணத்தால் பறவைகள் பறந்து சென்று கூடுகளுக்குத் திரும்புவதில்லை. அவை வயல் வெளிகளில் அல்லது மரங்களில் அமர்ந்து கொள்கின்றன. அது போன்று ஆடுமாடுகளும் வயல்வெளிகளில் சென்று ஒன்றையொன்று தழுவிக் கொண்டு நிற்கும். அவை தங்கள் ஸ்தலங்களுக்குத் திரும்புவதில்லை. ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது என்று அவைகளுக்குத் தெரியும். அப்பொழுது திடீரென்று பூகம்பம் உண்டாகி, கற்பாறை மதில்கள் பூகம்பத்தினால் அசைந்து விழுந்து போகின்றன. பூகம்பம் நின்றவுடன், மூன்று நான்கு நாட்களாக திரும்பவராத பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்புகின்றன. அவைகள் கூடுகளுக்குத் திரும்புவதால் பூகம்பங்கள் நின்று போயிருக்கும் என்று ஜனங்கள் அறிந்து கொள்கின்றனர். நோவாவின் காலத்தில் ஆடுமாடுகளையும் பறவைகளையும் பேழைக்குள் போகச் செய்த அதே கர்த்தர் பாதுகாப்பான ஸ்தலத்துக்கு அவைகளை இன்று பறக்கச் செய்யமுடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? சகோதரரே, முக்கியமான ஒரு சம்பவம் நிகழப் போகின்றது. மதசம்பந்தமான மதில்கள் யாவும் விழுந்து அவர்கள் நிச்சயமாக மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்க இணங்குவார்கள். இந்த தேசம் முழுவதுமே அதை அங்கீகரிக்குமென்று தேவனுடைய வார்த்தை உரைக்கிறது. கவனியுங்கள், ஒரு விசித்திரமான உணர்ச்சி உங்களில் தோன்றும் போது, அந்த மதில்களை விட்டு நீங்கள் அகன்று போங்கள், இல்லாவிடில் நீங்கள் மரித்துப் போவீர்கள். ஆதை விட்டு வெளியே வாருங்கள். அந்த முறைகளை விட்டு அகன்று போங்கள். உங்களாலானவரைத் துரிதமாகக் தப்பியோடுங்கள். தேவனிடத்தில் இரக்கத்துக்காக மன்றாடுங்கள். `என் தாயார் மெதோடிஸ்டாக இருந்ததால் நானும் மெதோடிஸ்டாக இருப்பேன்’ என்றோ, அல்லது `என் தகப்பனார் பாப்டிஸ்டாக இருந்ததால் நானும் பாப்டிஸ்டாக இருப்பேன்’ என்றோ நீங்கள் கூற வேண்டாம். நீங்கள் இதை யதேச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எவ்வளவு சாதாரணமாகவும் தாழ்மையாகவும் காணப்பட்டாலும், இது தேவனுடைய வார்த்தையென்பது உறுதியாகும். உங்களால் முயன்றவரை இயேசு கிறிஸ்துவினிடம் ஓடிச் சென்று தேவன் உங்களைப் பரிசுத்த ஆவியால் நிறைக்கும் வரை அவரில் நிலைத்திருங்கள். ஏனெனில் நீங்கள் பரிசுத்த ஆவியைத் தேடியும் அது கிடையாமற் போகும் தருணம் வரப்போகிறது. ஆகையால் இப்பொழுதே கண்டிப்பாக பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபிப்போம். பரம தந்தையே, நெருங்கி வரும் அந்த பயங்கரமான நேரத்தை நினைக்கும் போதே எனக்கு நடுக்கம் உண்டாகிறது. அது வராமல் நிறுத்த எந்த வழியும் இல்லை. அது வருமென்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. ஜனங்கள் ஏன் செய்தியைக் கேட்டு அதை ஏற்றுக்கொள்வதில்லை என்று நான் எண்ணுவதுண்டு. அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதாக நீர் உரைத்திருக்கிறீர். ஆகவே தான் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். ஆனால், முத்திரைகள் திறக்கபபடும் போது, தங்கள் பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருப்பதைக் காண்பவர் அனைவரோடும் பரிசுத்த ஆவியானவர் பேசுகின்றார். ஆகையால் அவர்கள் மாத்திரம் அதை ஏற்றுக் கொள்கின்றனர். எவரும் அவர்களை அதினின்று விலக்க முடியாது. ஆடுமாடுகளையும் பறவைகளையும் பூகம்ப காலத்தில் நீர் வழி நடத்துவது போன்று அவர்களையும் நீர் வழி நடத்துகிறீர், நீரே தேவன். அவைகளுக்குள்ளிருக்கும் உணர்ச்சி போன்று, ஸ்தாபனங்களினின்று விலக வேண்டுமென்ற உணர்ச்சி அவர்களுக் குள்ளும் இருக்கிறது. மிருகங்களுக்குள்ள ஓர் உணர்ச்சி வரப்போகும் ஆபத்தைக் குறித்து அவைகளை எச்சரித்து தப்பியோடச் செய்யுமாயின், பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டதாக கூறிக் கொள்ளும் சபைக்கு அந்த பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் செய்யவேண்டும்? தேவனே, எங்கள் மேல் கிருபையாயிரும். ஆண்டவரே, எங்கள் குற்றங்குறைகளை மன்னியும், கைகால்கள் வலிக்கும்படி இந்த ஜனங்கள் ஆராதனையில் நின்றுகொண்டிருந்து, பின்பு வீடுகளுக்குச் சென்று, செய்தி நன்றாகத் தான் இருந்தது’ என்று கூறி அத்துடன் நிறுத்தி விட நாங்கள் விரும்பவில்லை. ஆண்டவரே, அதற்கு நீர் ஏதாவது ஒன்றைச் செய்யவிரும்புகிறோம். ஆண்டவரே, எங்கள் இருதயங்களை நீர் ஆராய்ந்து பார்த்து, தவறு ஏதாகிலும் இருந்தால் அதை எங்களுக்குத் தெரியப்படுத்தியருளும். காலதாமதமான பிறகு, அந்த பயங்கரமான நேரத்தை நாங்கள் அடைய நீர் அனுமதிக்க வேண்டாம். என்னை ஆராய்ந்து பாரும். ஆண்டவரே, என்னைச் சோதித்துப் பாரும். முத்திரைகள் உடைக்கப்பட்டு வெளிப்படும் இரகசியங்களை நான் தேவ கிருபையினால் இவர்களுக்கு அறிவிக்கிறேன். இவ்விதம் நிகழுமென்று சில வாரங்களுக்கு முன் நீர் எனக்கு அறிவித்தீர். பிதாவே, இப்பொழுது எங்களுக்கு அந்த இரகசியங்கள் வெளியரங்கமாகின்றன. ஆண்டவரே, என் இருதயத்தை ஆராய்ந்து பாரும். எங்கள் ஜீவியத்தில் தவறு காணப்பட்டால், ஆண்டவரே, எங்களுக்கு அதைத் தெரிவியும். இரத்தம் நிறைந்த ஊற்று உள்ள போதே எங்கள் பாவத்தையும் அவிசுவாசத்தையும் போக்கும், வெண்மையாக்கும் திரவம் இருக்கும்போதே, நாங்கள் அதை சரி படுத்திக் கொள்ள விரும்புகிறோம், எங்கள் ஆத்துமாக்களை அதில் மூழ்கவைத்து அவிசுவாசத்தைப் போக்கிக் கொள்ள விரும்புகிறோம். தேவனே, எங்கள் அவிசுவாசம் நீங்க உதவி செய்யும். ஆண்டவரே, அதை எங்களை விட்டு எடுத்துப் போடும். எடுக்கப்படுதலுக்கேற்ற கிருபையை நாங்கள் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம். அந்த இரகசியமான இடிகள் அங்கு முழங்கி சபை எடுக்கப்படும் போது அந்த இரகசியங்களை நாங்கள் பெற்றுக் கொள்ள ஆயத்தமாயிருக்கும்படி அருள் புரியும். உம்முடைய வார்த்தையைக் கொண்டு எங்களை சோதித்தறியும். நாங்கள் வார்த்தையை நோக்கி, தவறு செய்தவராகக் காணப்பட்டால்... ஆண்டவரே, பட்டப்பெயர்களினால் ஞானஸ்நானம் பெற்று உண்மையான ஞானஸ்நானம் எதுவென்று அறியாதவர் இங்கிருந்தால், பவுல் எபேசு பட்டினத்தின் மேற்கரைக்குச் சென்ற போது, கூச்சலிட்டு, சத்தமிட்டு, மகத்தான ஓர் சமயத்தை அனுபவித்துக் கொண்டிருந்த சீஷர்களிடம், `நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?’ என்று கேட்க, அவர்கள் `பரிசுத்த ஆவி உண்டென்று கேள்விப்படவேயில்லை’யென பதிலுரைத்தனர். அப்பொழுது அவன், `அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?’ என்று கேட்டான். அவர்கள் மகத்தான அந்த தீர்க்கதரிசி (யோவான் ஸ்நானன்) கொடுத்த மனத்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தனர். அப்பொழுது அவர்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியும் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று பவுல் அவர்களுக்குக் கட்டளை யிட்டான். பவுலைப் போன்று நானும் உண்மையுள்ளவனாக இருக்கக் கிருபை செய்யும். ஆண்டவரே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறாத யாவரும் தருணமுள்ளபோதே தண்ணீரைத் துரிதமாய் அடைந்து அந்நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள உம் வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு கட்டளையிடுகிறேன். பரிசுத்த ஆவியினால் நிறையப்படாதவரே, இப்பொழுதே முழங்கால்படியிட்டு, பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர் அன்பினாலும் நற்பண்பினாலும் நிறைத்து, தேவனுடைய சமூகத்தில் உங்கள் ஆத்துமாக்கள் திருப்தியடைந்து, அவரைச் சேவிக்கவும், அவரோடு சஞ்சரிக்கவும் இனி உங்கள் ஜீவகாலமெல்லாம் அவருக்காக உழைக்க உங்களுக்கு வாஞ்சை தோன்றும் வரை, நீங்கள் முழங்காலிலிருந்து எழுந்திருக்க வேண்டாமென்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். ஆண்டவர் இதை உங்களுக்கு அருள நான் வேண்டிக் கொள்கிறேன். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தி அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் தண்ணீரினால் ஞானஸ்நானம் பெறவேண்டுமென்று, அல்லது பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற வேண்டுமென்ற அவசியத்தை யாராவது இன்றிரவு உணர்ந்திருந்தால்.... உங்கள் தேவைகளை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அது இப்பொழுது உங்களுக்கு வெளிப்பட்டுள்ளது. ஜெபத்தில் நினைவு கூர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்.... நாங்கள் யாரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை உங்களுக்கு அளிக்க முடியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை செய்யக்கூடும். நாங்கள் உங்களுக்கு ஞானஸ்நானம் வேண்டுமானால் கொடுக்கலாம். தேவன் உங்கள் இருதயங்களில் பேசி அதன் அவசியத்தை உங்களுக்கு உணர்த்துவதாக நீங்கள் எண்ணினால், நாங்கள் உங்களை ஜெபத்தில் நினைவுகூர வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், நீங்கள் யாரென்று நாங்கள் அறிந்து கொள்ள தயவு செய்து எழுந்து நிற்பீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 150 பேர் எழுந்து நின்றிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், அறைகளிலும் வெளிப்புறத்திலும் கைகளை உயர்த்தியுள்ளவர்கள் எத்தனை பேரோ எனக்குத் தெரியாது. உங்களெல்லாருக்கும் ஒரு தேவையுண்டு. நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம். உங்கள் பக்கத்தில் நிற்கிறவர்கள் கிறிஸ்துவுக்கு முன்னிலையில் சாட்சியாக நிற்கின்றனர். நிற்பவர்கள் இவ்விதம் கூறுங்கள், `ஆண்டவரே, நீர் எங்களுக்குத்தேவை. உலகத் தோற்றத்துக்கு முன்னால் முத்தரிக்கப்பட்ட புத்தகத்தின் என் பெயரெழுதப்பட்டிருப்பதை இன்றிரவு நான் காண்பேன் என்று நம்புகிறேன். என் இருதயத்தில் ஏதோ ஒர் உணர்ச்சி ஏற்பட்டது. அதற்காகத்தான் நான் எழுந்து நிற்கிறேன். நீர் என்னை அழைக்கிறீரா? என் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதை நீர் எனக்கு வெளிப்படுத்த வேண்டும். பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து உமக்குள் முத்தரித்துக் கொள்ளும், ஏற்கனவே முத்தரிக்கப்பட்டவர்கள் எழுந்து நின்று, நிற்பவர்களின் தலைகளில் கைகளை வைத்து உத்தமமாக ஜெபியுங்கள். பரம பிதாவே, பரிசுத்த ஆவியானவர் இங்கு கூடியிருப்பவர்களின் மேல் அசைவாட கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறேன். (சபையார் உரக்க ஜெபிப்பதால், சகோ. பிரான்ஹாமின் ஜெபம் தெளிவாயில்லை). மூன்றாம் முத்திரை மார்ச் 20,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், நண்பர்களே, நாம் எழுந்திருந்து தலைவணங்கி சற்று நேரம் ஜெபிப்போம். எங்கள் பரம பிதாவே, அந்த அழகான பாட்டை நாங்கள் கேட்கும் போது, நீர் எங்கள் அருகாமையிலிருப்பதாக எண்ணம் எழுகின்றது. ஆண்டவரே, இன்றிரவு நீர் எங்களை உம் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டு, எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து, தேவையுள்ள எங்களுக்கு உமது ஆசீர்வாதங்களை அருள வேண்டுமாய் கெஞ்சுகின்றோம். நாங்கள் வாழும் இம்மகத்தான காலத்தில், வருடந்தோறும் உலகம் அந்தகாரப்படுவதையும், தேவன் தம்மை வார்த்தையின் மூலமும் தோற்றத்தின் மூலமும் எங்களுக்கு வெளிப்படுத்திக் கொண்டு வருவதால், அவருடைய வருகை பிரகாசமடைந்து வருவதையும் நாங்கள் உணருகிறோம். புத்தகத்தின் மூன்றாம் முத்திரையை நீர் திறந்து நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், சிறந்த கிறிஸ்தவர்களாய் எவ்வாறு வாழ வேண்டுமென்பதையும் இன்றிரவு எங்களுக்கு வெளிப்படுத்தித் தர வேண்டுமென்று உம்மை நோக்கி கெஞ்சுகிறோம். இன்றிரவு இங்கு கூடியுள்ள கிறிஸ்தவரல்லாத ஒவ்வொருவரும் உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணரச் செய்யும், பரம தந்தையே, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் யாவரும் உம்மில் இன்னும் அதிகமாக நெருங்கி ஜீவிக்கவும், கிறிஸ்தவ அன்பின் ஐக்கியத்திலும் விசுவாசத்திலும் நாங்களெல்லாரும் நிலைநிற்கவும் எங்களுக்கு உதவி புரியும். எங்கள் மத்தியில் நோயுற்றுள்ள எல்லாரும் இன்றிரவு சுகம் பெற அருள் செய்யும். தேவனே, உம்மை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். பிதாவே, உம் மகிமைக்கென்று இங்கு நடப்பவைகளையும் பேசப்படுபவைகளையும் நீர் ஆசீர்வதியும், இயேசுவின் நாமத்தில் இவைகளைக் கேட்கிறோம். ஆமென். இன்றிரவு புதன்கிழமையன்று நாமெல்லாரும் மறுபடியும் கூடி வந்துள்ளோம். கர்த்தர் தாமே தம் ஆசீர்வாதங்களை அவருடைய வார்த்தையின் மேல் பெருமாரியாக ஊற்றுவார் என்று நாம் நம்பியிருக்கிறோம். வழக்கப்படி நான் இன்று படித்துவிட்டு உங்களிடம் எடுத்துக் கூறுவதற்குத் தகுதியுள்ளவை எவையென்று யோசித்து கொண்டே, வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த தேவனுடைய வார்த்தைக்கு உண்மையான விளக்கத்தையும் அர்த்தத்தையும் தேவன் எனக்களிக்க அவர் பேரில் சார்ந்திருந்தேன். இவ்வாரத்தில் அவர் நமக்குச் செய்துள்ளவை யாவற்றிற்கும் முத்திரைகளைத் திறந்ததற்காக அவருக்கு நான் நன்றி செலுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அனேக சமயங்களில் நாம் கூறியுள்ளவை தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆகையால் இவைகளைக் குறித்த கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தால், அவைகளை எழுதி அடுத்த சனி இரவு இங்குள்ள மேசையின் மேல் வைத்து விடுங்கள், நான் அவைகளைப் படித்து விட்டு, கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று பதிலுரைக்க முனைவேன். இன்று ஒருவர் என்னை அணுகி, எடுக்கப்படுதலின் போது ஜெபர்ஸன்வில் பட்டினத்திலிருந்து ஒருவரும் நியூயார்க் பட்டினத்திலிருந்து ஒருவரும் மாத்திரமே எடுக்கப்படுவாரென்றும், மற்றவரெல்லாம் அயல் நாடுகளிலிருந்து எடுக்கப்படுவர் என்பது உண்மையா என்று வினவினார். அது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒன்றாகும். வேறொருவர், சனியிரவு கடைசி முத்திரையை ஆண்டவர் திறந்த பிறகு, ஞாயிறு காலையில் வந்துவிடுவார் என்றார். அது அவ்வாறில்லை. யாராவது அவர் எப்பொழுது வருவாரென்று அறிந்துள்ளதாக உங்களிடம் கூறினால், அவர்கள் தவறு செய்கின்றனர். ஏனெனில் அவர் வருகையின் நாளை யாரும் அறியார். ஆனால் அவர் இப்பொழுதே வந்துவிடலாம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதற்கேற்ப வாழவேண்டும். கர்த்தர், அவருடைய கால அளவின்படி, இன்னும் மூன்று நிமிடங்களுக்குள் வந்து விடுவாரென்று நான் நம்புகிறேன், அது நம் கணக்கின்படி எவ்வளவு காலமென்று தெரியுமா? சுமார் முப்பத்தைந்து வருடங்கள், அவருடைய பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாள் போல் உள்ளது. எனவே, யோவான் அப்போஸ்தலனும் வெளிப்படுத்தின விசேஷத்தில், `அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது’ என்கிறான். நாமும், அவ்வாறே `அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது’ என்கிறோம். இவ்விரண்டிற்கும் இடையேயுள்ள காலம் ஆண்டவருக்கு நேற்று கழிந்த நாள் போலுள்ளது. அவருடைய கால அளவின்படி `அவர் வருகையின் நேரம் வந்துவிட்டது’ என்று கூறப்பட்டு இன்னும் இரண்டு நாட்கள் ஆகவில்லை. அவர் வருகைக்கு மூன்று நிமிடங்களைவிட குறைவான நேரம் உள்ளது. நமக்கு அது முப்பது வருடங்களுக்குச் சமானம். அவர் வருவதற்கென சிங்காசனத்தை விட்டு அவர் எழுந்து விட்டார். .நாளை இரவு அவர் வருவாரென்று நான் ஒருக்கால் அறிவேனானால், நாளை இரவு பிரசங்கிக்கவிருக்கும் நான்காம் முத்திரையை குறித்த வெளிப்பாட்டை அருளுமாறு அவரிடம் கேட்டு, நாளை இரவு உங்களுக்கு அதை பிரசங்கிப்பேன். அவர் வரும்போது நான் என்ன செய்து கொண்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறனோ, அதையே நான் ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருப்பேன். அவர் வரும்போது, எனக்களிக்கப்பட்ட உத்தியோகத்தின் ஸ்தானத்தில் நான் காணப்படுவதைத் தவிர வேறு சிறந்த ஸ்தானம் எதுவுமில்லை. ஆகையால் அவர் வரும் வரை அவரளித்த உத்தியோகத்தில் நாம் நிலைத்திருத்தல் அவசியம். நீங்கள் ஒலிநாடாக்களை கவனமாகக் கேளுங்கள், அவை மிகவும் நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கிறிஸ்துவில் அன்பு கூருகிறவர்களே! நீங்களெல்லாரும் கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் என்று நினைக்கிறேன். ஜனங்களை குழம்பச் செய்வதெது என்பதைத் கூற விரும்புகிறேன். சிலர் ஆராதனையின் செய்தியின் முதற்பாகத்தைக் கேட்காமல், தாமதித்து வந்து பிரசங்கத்தின் முதலாம் பாகத்திலிருந்து சில குறிப்புகளையோ அல்லது யாரையாவது நான் குறை கூறுவதையோ மாத்திரம் கேட்பதனால், அவர்கள் குழப்பமுற்று, முரண்பட்ட காரியங்கள் பிரசங்கிக்கப் பட்டதாக எண்ணுகின்றனர். அது உண்மையன்று. ஆகையால் நீங்கள் புரிந்துகொள்ள இயலாத ஏதாவதொன்று இருக்குமாயின் அதை ஒரு தாளில் எழுதி சனிக்கிழமைக்குள்ளாகக் கொடுத்து விடுங்கள். உதாரணமாக, `இதன் அர்த்தம் என்னவென்று எனக்குப் புரியவில்லை’ போன்றவைகளை நீங்கள் எழுதிக் கொடுக்கலாம். கர்த்தருக்குச் சித்தமானால், ஞாயிறு காலையன்று அவைகளுக்குப் பதிலுரைக்க முயல்வேன். இன்றிரவு நாம் ஆசீர்வாதமுள்ள தேவனுடைய வார்த்தையிலிருந்து மறுபடியும் படிக்கப் போகிறோம். ஆறாம் அதிகாரம், 5ம், 6ம் வசனங்களில் காணப்படும் மூன்றாம் முத்திரையைப் படிப்போம். நாளை இரவு குதிரை சவாரி செய்யும் நால்வரைக் குறித்தும் வெள்ளைக்குதிரை, சிவப்பு குதிரை, கறுப்பு குதிரை, மங்கின நிறமுள்ள குதிரை தியானித்து முடித்திருப்போம். ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தலுக்காக நான் விடியற்காலையிலிருந்து நாள் முழுவதும் ஜெபத்தில் தரித்திருக்கிறேன். இன்று விடியற்காலை, பரிசுத்த ஆவியானவர் நானிருந்த இடத்தை அடைந்து, எல்லாவற்றையும் வெளியரங்கமாக்கினார். மூன்றாம் முத்திரை திறக்கப்பட்டதை நான் கண்டேன். நான் பேசுவதை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறாரென்று நானறிவேன். அவர் தந்த வெளிப்பாட்டிற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். இப்பொழுது சில காரியங்கள் சம்பவித்துக் கொண்டு வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என நம்புகிறேன். முக்கியமான சில காரியங்கள் நிகழ்ந்து வருகின்றன. நான் எப்போதாவது ஒரு முறை, இச்சபையைப் பரிசோதித்து, ஒரு சம்பவம் நிகழுமுன்பு அது என்னவென்பதை அறிந்து கொண்டிருக்கின்றனரா என அறிய விரும்புகிறேன். நான் கூறியதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக! வெளி. 6:5ம் வசனம். அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். நான் பார்த்த போது, இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன்கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். இம் முத்திரையைக் குறித்துச் சிந்திக்கும் முன்பாக, இதுவரை முத்திரைகளைக் குறித்து தியானித்தவைகளை நாம் அதற்கு ஆதாரமாகச் சற்று சிந்தித்து, அவைகளை இம்முத்திரையுடன் ஒன்றுக்கொன்று சம்பந்தப்படுத்துவோம். சபையின் காலங்களும் அவ்வாறே ஒன்றுக் கொன்று பொருந்துகின்றன. மீட்பின் புத்தகம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது. நான் எரேமியா தீர்க்கதரிசன புத்தகத்திலிருந்து உங்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். அவர்கள் காகிதத்தில் இவ்விதம் எழுதி .... காகிதத்தில் அல்ல, தோல்களில் எழுதி, அதை இப்படி சுருட்டினர். அதன் முனை இவ்வாறு விடப்பட்டது. அது என்னவென்பதை அம்முனை பாகம் குறிக்கும். அவ்விதம் ஒவ்வொன்றுமாக சுருட்டப்பட்டு முத்தரிக்கப்பட்டது. அதுதான் ஏழு முத்திரைகள் கொண்ட புத்தகம். தற்போது நம்மிடம் புத்தகங்கள் உள்ளது போன்று அக்காலத்தில் கிடையாது. பழைய காலங்களில் சுருள்கள் மாத்திரமே உண்டாயிருந்தன. வேதம் இவ்விதமாக சுருட்டப்பட்டிருந்தது. அதிலிருந்து ஏசாயாவின் புத்தகத்தைப் படிக்க வேண்டுமானால், நீங்கள் ஏசாயா என்று எழுதப்பட்ட முனைக்குத் திருப்பி, சுருளைப் பிரிந்து அதைப் படிக்க வேண்டும். மீட்பின் புத்தகம் ஏழு முத்திரைகளைக் கொண்டதாயிருந்தது. ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கி, ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி, முத்திரைகளை அவிழ்க்கிறார். சபையின் காலங்களைக் குறித்து நாம் சிந்தித்த போது நாம் கண்ட அதே நான்கு ஜீவன்கள் அவைகளை வேதம் முழுவதிலும் நாம் காணலாம்,முத்திரைகள் உடைக்கப்படுதலை அறிவிக்கின்றன. பின்பு, மீட்பின் இனத்தானின் (Kinsman Redeemer) ஊழியம் என்னவென்று நாம் பார்த்தோம். இத்தனை வருடங்களாக கிறிஸ்து மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து கொண்டிருந்தார். அதைப் புரிந்து கொண்டவர்கள் `ஆமென்’ என்று சொல்லுங்கள். அவருடைய மீட்பின் ஊழியம் முடிவடையப் போகும் தருணம் வரும், அப்பொழுது அவர் தற்போது அமர்ந்திருக்கும் தேவனுடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்படுவார். அது அவருடைய சிங்காசனமல்ல. `நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடு கூட உட்கார்ந்தது போல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்’. ஆகையால் அவர் வீற்றிருப்பது அவருடைய சிங்காசனமல்ல, அது ஆவியாகிய தேவனுக்குச் சொந்தமானது, அது ஆட்டுக் குட்டியானவராகிய கிறிஸ்துவுக்குச் சொந்தமானதல்ல. அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன். ஆவியாகிய அதே தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார். அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்திருக்கிறார். முதலாவதாக, `மீட்பின் புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளப் பாத்திரவான் யார்?’ என்னும் அறிக்கை விடுக்கப்படுகிறது. ஆதாமிலிருந்து மீட்பின் திட்டம் ..... ஆதாமுக்குப் பிறகு சர்வ சிருஷ்டியும் எல்லாவற்றையும் இழந்து, ஆதாமுடன் பாவத்தில் விழுந்து, திரும்பவரக் கூடாதபடிக்குப் பிளவைக் கடந்தன. பாவத்தில் விழுந்த மனிதன் மீட்கப்படுவதற்கு வேறு வழியே அப்பொழுது இல்லாமற் போயிற்று. திவ்ய வாசகனாகிய யோவான் (தீர்க்கதரிசியாகிய யோவான்) இந்தக் கேள்வி கேட்கப்படுவதைத் தரிசனத்தில் காண்கிறான். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது ஒருவனும் அந்தப் புத்தகத்தைப் பார்க்கவும் கூட பாத்திரவானாயில்லை. அப்பொழுது ஆட்டுக்குட்டி யானவர் முன் வந்து புத்தகத்தை வாங்குகிறார். `யோவானே, இனி அழ வேண்டாம். புத்தகத்தை வாங்கவும் அதைத் திறக்கவும், யூதா கோத்திரத்தின் சிங்கமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார்’ என்று ஒரு மூப்பன் சொன்னான். யோவான் சிங்கத்தைக் காண திரும்பிப் பார்த்த போது, சிங்காசனத்திலிருந்து புறப்பட்டு வருகிற ஒரு ஆட்டுக்குட்டியைக் கண்டான். யோவான் அதற்கு முன்பு இந்த ஆட்டுக்குட்டியானவரைக் காணவில்லை. ஏனெனில், அவர் இரத்தம் தோய்ந்தவராய், உலகத் தோற்றத்துக்கு முன்பு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவப் புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிருக்கும் கடைசி ஆத்மா உட்பிரவேசிக்கும் வரை, மத்தியஸ்த ஊழியத்தைச் செய்து, ஜனங்களுக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருந்தார். அனேகர் அதில் உட்பிரவேசித்திருப்பார்கள். மற்றவர்களுக்கோ உட்பிரவேசிக்க எவ்வித விருப்பமும் இராது. கடைசி ஆத்துமா உட்பிரவேசித்த பின்பு, மீட்கப்படும் சமயம் முடிவடைகிறது. அப்பொழுது மீட்டவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ள ஆட்டுக்குட்டியானவர் புறப்பட்டு வருகிறார். உலகமும் சர்வசிருஷ்டியும் அப்பொழுது அவருக்குச் சொந்தமாகும். அவர் தமது சொந்த இரத்தத்தினால் அவைகளை மீட்டுக் கொண்டார். அப்புத்தகத்தை வாங்கி அதைத் திறப்பதற்கென அவர் புறப்பட்டு வரும்போது.... யோவான் பின்பு அழவேயில்லை, அவன் அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கும் ஆட்டுக் குட்டியைக் காண்கிறான். அது ஏற்கனவே கொல்லப்பட்டு, மறுபடியும் உயிரடைந்து சிங்காசனத்தில் வீற்றிருந்து, உட்பிரவேசிக்க வேண்டிய ஆத்துமாக்களுக்காக பரிந்து பேசிக் கொண்டிருக்கிறது. கடைசி ஆள் உட்பிரவேசிக்கும் வரை, தேவன் மீட்பின் புத்தகத்தைக் கையில் வைத்திருக்க வேண்டும். இப்பொழுது அவர் போவாஸைப் போன்று மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து கொண்டிருக்கிறார். ரூத்தைப் பற்றி சமீபத்தில் நான் பிரசங்கித்தது நினைவிருக்கிறதா? ரூத் தானியத்தைச் சேர்த்தல் முடிவில் ரூத் காத்துக் கொண்டிருத்தல், இச்சரித்திரத்த நான் சபையுடன் ஒப்பிட்டுப் பேசினேன். போவாஸ், மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து, நகோமியை மீட்டெடுத்து, அவள் மூலம் ரூத்தை அடைந்தான். ரூத் ஏற்கனவே பணிசெய்து, அதன் பின்பு காத்திருந்தாள். அவள் செய்ய வேண்டிய யாவையும் செய்து முடித்த பின்னர் காத்துக் கொண்டிருந்தாள். அவ்வாறே, ஆட்டுக்குட்டியானவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும்போது, சபையில் அனேகர் பூமியின் தூளில் நித்திரையடைந்து மீட்கப்படுவதற்கென காத்துக் கொண்டிருக்கின்றனர். உலகம் மோசமாகிக்கொண்டே செல்கின்றது. பாவம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன் விளைவால் வியாதியும் துன்பமும், மரணமும், துயரமும் உண்டாகின்றன. தேவனற்ற மனிதனும், ஸ்திரீயும் தேவனளிக்கும் சுகத்தை விசுவாசத்தால் பெற்றக்கொள்ள இயலாமல், புற்று நோய் போன்ற வியாதிகளால் மரித்துப் போகின்றனர். இப்பொழுது கவனியுங்கள் பரிந்து பேசுதல் ஊழியம் முடிவடைந்த பின்னர், அவர் புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புத்தகத்தை வாங்குகிறார். அப்பொழுது யோவானும் பரலோகத்திலுள்ள மற்றவரும் களிகூருகின்றனர். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் கூச்சலிடுகின்றனர். மூப்பர்கள் தாழவிழுந்து பரிசுத்தவான்களின் ஜெபங்களைத் தரையில் ஊற்றுகின்றனர். பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள், `நீர் பாத்திரவானாயிருக்கிறீர். நீர் தேவனுக்கென்று எங்களை மீட்டுக்கொண்டீர். நாங்கள் பூமிக்குச் சென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் வாழுவோம்’ என்று சத்தமிட்டனர். பரலோகத்திலுள்ள யாவரும், பூமியின் கீழுள்ள அனைவரும் அவன் ஏறெடுத்த துதியைக் கேட்டதாக யோவான் கூறுகிறான். யோவான் தன் பெயர் அதில் எழுதப்பட்டிருப்பதைக் கண்டிருப்பான். மூப்பன், `அவர் மீட்பின் புத்தகத்தை வாங்கிக்கொள்ள பாத்திரவானா யிருக்கிறார்’ என்றான். அவர் அதை வாங்கிய பிறகு அது நியாயாதிபதிக்கு சொந்தமானதல்ல. அது மீட்பின் ஊழியத்தைச் செய்து முடித்த மீட்பருக்குச் சொந்தமானதாகும். அவர் செய்தது யாதென்பதை சபைக்குக் காண்பிக்கப் போகிறார். அவர் புத்தகத்தை வாங்கின போது அது மூடப்பட்டிருந்தது. அதிலுள்ள இரகசியம் யாருக்கும் தெரியவில்லை. அது மீட்பின் புத்தகம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தில் சொல்லியுள்ளபடி கடைசி நாட்களில் அதன் இரகசியம் வெளிப்பட வேண்டும். ஏழாம் தூதனுக்கு அச்செய்தி அளிக்கப்படும். ஏனைனில் ஏழாம் சபையின் தூதன் எக்காளம் ஊதும் போது, அவன் காலத்தில் தேவரகசியமாயிருந்த அனைத்தும் நிறைவேற வேண்டும். இவை யாவும் வெளிப்பட்ட பின்பு பலமுள்ள தூதன் அதாவது கிறிஸ்து வானத்திலிருந்து இறங்கி வருகிறார். (ஏழாம் தூதன் பூமியிலுள்ள ஒருவன் என்பது நினைவிருக்கட்டும்). கிறிஸ்து இறங்கி வருவதை நாம் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தில் காண்கிறோம். அவர் சிரசின் மேல் வானவில் கொண்டவராய், அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் அக்கினி ஸ்தம்பம் போன்ற கால்களையும் உடையவராய், ஒரு காலைப் பூமியின் மீதும் மற்றொரு காலை சமுத்திரத்தின் மீதும் வைத்து, கையை வானத்திற்கு நேராக உயர்த்தி, `இனி காலம் செல்லாது’ என்று சதாகாலங்களிலும் உயிரோடிருந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் மேல் ஆணையிட்டு கூறுகிறார். அவர் இவ்விதம் ஆணையிடும் போது, ஏழு இடிகள் சத்தமிட்டு முழங்கின. ஆவிக்குள்ளாகி பரலோகத்துக்கு எடுக்கப்பட்ட யோவான் தான் கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுத வேண்டுமென்ற உத்தரவு பெற்றிருந்தான். ஆனால் `ஏழு இடி முழக்கங்கள் சொன்னவைகளை எழுதாமல் முத்திரை போடு’ என்று அவனிடம் கூறப்பட்டது. ஏனெனில் அவை கடைசி காலத்தில் மாத்திரமே வெளிப்பட வேண்டும். அவை என்னவென்று தேவனுடைய புத்தகத்தில் (வேதாகமத்தில்) எழுதி வைக்கப்படவும் இல்லை. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளைத் திறந்த போது, யோவான் கண்டவை அவனைத் தடுமாறச் செய்தன. முதலாம் முத்திரை திறக்கப்பட்டபோது, `இன்னின்னவர் சிங்காசனத்தில் வீற்றிருந்து இன்னின்ன விதமாய் செய்வார்’ என்பதை வெளிப்படையாகக் காணுவானென்னு யோவான் எண்ணியிருந்தான். ஆனால் அதற்கு மாறாக ஒரு வெள்ளைக் குதிரையையும் அதின் மேலேறியிருக்கிறவனையும் அவன் காண்கிறான். குதிரையின் மேலிருக்கிறவன் கையில் ஒரு வில் இருந்தது. சற்று பின்னர் அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்படுகிறது. ஆட்டுக்குட்டியானவர் வேறொரு முத்திரையைத் திறந்த போது, சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் புறப்பட்டுச் சென்றான். பூமியில் சமாதானத்தை எடுத்துப் போடவும், ஒருவரையொருவர் கொல்லத்தக்கதாகவும் அவனுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. அவன் கையில் ஒரு பட்டயம் காணப்பட்டது. அது ஒரு இரகசியமான காரியமாயிருக்கிறதல்லவா? ஏழு இடிகள் முழங்கும் முன்பு, தேவரகசியம் யாவும் வெளிப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. சபையின் காலங்களை நாம் ஆராய்ந்து கொண்டே வரும்போது சீர்திருத்தக்காரர் உண்டாயிருந்தனர் தீர்க்கதரிசிகளல்ல என்று நாம் பார்க்கிறோம். ஒவ்வொரு உத்தியோகத்துக்கும் ஒரு பிரத்தியேக ஊழியமுண்டு, தொலைபேசி இயக்குநர் (Telephone Operator) மின்சார வேலை செய்பவராக (Electrician) இருக்க முடியாது. ஒருக்கால் சிறிது மின்சார வேலையை அவர் செய்யலாம். அதற்காக அவரை மின்சார வேலைக்காரனாகக் கருத முடியாது. அவ்வாறே, மின்சாரக்கம்பிகள் அமைப்பதற்கென கம்பம் நடுபவன் மின்சாரக் கம்பிகளை அமைக்க முடியாது. ஒருக்கால் அந்த அலுவலை அவர் சிறிது அறிந்திருக்கலாம். கடைசி நாட்களிலுள்ள கடைசி சபைக்கு உண்மையானது வெளிப் படுவதற்கென எலியாவின் ஆவி ஒரு மனிதனுக்குள் திரும்பவும் வாசம் செய்யும் என்பதாக தேவன் வேதத்தில் வாக்களித்துள்ளார். அது வெளிப்படையாய் சொல்லப்பட்டுள்ளது. அது நிகழ்வதற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அபிஷேகம் பெற்ற ஒருவர் எங்கேயாவது கடைசி நாட்களில் எழும்புவார். அனேக போலி மனிதர்களும் அப்பொழுது தோன்றுவார்கள். உண்மையாக அபிஷேகம் பெற்றவனை ஜனங்கள் கண்டு கொள்ளக் கூடாதென்று இது பிசாசு செய்யும் சூழ்ச்சியாகும். ஆனால் உண்மையான அந்த மனிதன் சரிவர அறிந்து கொள்ளப்படுவான். எலியா பழைய ஏற்பாட்டில் எவ்விதம் இருந்தான் என்பது உங்களுக்குத் தெரியும். இக்காலத்தில் வேறொருவன் அது போன்று இருக்கின்றான் என்று கவனித்துக்கொண்டு வாருங்கள். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அவனை அறிந்து கொள்வர் மற்றவரல்ல. மற்றவர் அவனை அறிந்து கொள்ள மாட்டார்கள். இவையெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டே வந்தோம். யோவானையும், எலியாவையும் இயேசுவையும் எவ்வாறு அவர்கள் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதை நாம் பார்த்தோம். அதுபோன்றே கடைசி நாட்களிலும் சம்பவிக்கும் என்பதாய் வேதம் கூறுகின்றது. அது கடைசி காலத்தில் மிகவும் எளிமையாக காணப்படுவதால் ஜனங்கள் அதைக் கண்டு இடறி விழுவார்கள். அது அவர்களுக்கு மிகவும் எளிமையாக அமைந்திருக்கும். ஜனங்கள் இக்காலத்தில் புத்திமான்களும் சாமர்த்தியம் உள்ளவர்களாகி அனேக காரியங்களை அறிந்து கொண்டிருக்கின்றனர். அவர்கன் தாம் இதை இழந்து போவார்கள். இயேசு புத்திமான்களையும் கல்விமான்களையும் சீஷர்களாகத் தெரிந்து கொள்ளவில்லை. படிப்பறியாத மீன் பிடிப்பவர் போன்றவரை அவர் தெரிந்து கொண்டார். அவர்கள் அக்காலத்து ஸ்தாபனங்களுடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை. அவர் சாதாரண துறையிலுள்ள மனிதரை சுங்கம் வசூலிப்பவர்கள், குடியானவர்கள், மீன் பிடிப்பவர்கள். போன்றவரை ஊழியத்திற்கென்று தெரிந்து கொண்டார். ஏனெனில் அவர்கள் தாங்கள் ஒன்று மற்றவர் என்பதை அறிந்திருந்தனர். அவர்களை உபயோகித்து பெரிய காரியங்களைச் செய்யலாம் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஒருவன் தன்னை ஒன்றுமில்லாதவன் என்று கருதும் போது மாத்திரமே கர்த்தர் அவன் மூலம் கிரியை செய்ய முடியும். ஆனால் எல்லாம் அறிந்தவர்கள் என்று நினைப்பவர்கள், அவர்கள் அறிய வேண்டியவைகளை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றனர் என்பதாக வேதம் கூறுவதை நாமறிவோம். இப்பொழுது இரகசியங்கள் வெளியரங்கமாக வேண்டும் என்று நாம் பார்க்கிறோம். நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெறுதல் போன்றவைகளைப் போதித்த லூத்தர், வெஸ்லி இன்னும் மற்ற சீர்திருத்தக்காரர் ஏன் இந்த செய்திகளை புரிந்து கொள்ள முடியாமற் போயிற்று? அவர்கள் சீர்திருத்தக்காரராயிருந்த காரணத்தால். இப்பொழுது கவனியுங்கள், நீதிமானாக்கப்படுதல், பரிசுத்த மாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்ற சத்தியங்களில் இதுவரை வெளிப்படாத இரகசியங்களும், ஏவாள் தின்றது ஆப்பிள் கனியா அல்லது மாதுளம்பழமா? சர்ப்பத்தின் வித்து என்பது என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலுள்ள ஞானஸ்நானமா, அல்லது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானமா, இவைகளில் எது சரி? போன்ற நூற்றுக்கணக்கான இரகசியங்களும் இப்பொழுது வெளிப்பட வேண்டும். கடைசி காலத்தில் இந்த மனிதன் தோன்றி வேதத்தின் வாயிலாக இந்த இரகசியங்களை வெளிப்படுத்த வேண்டும். அதைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டது மகத்தான ஒன்றாய் தோன்றினாலும், அது இப்பொழுது மகத்தானதாய் இராது. யோவான் ஸ்நானனின் தோற்றத்தை ஏசாயா, மல்கியா இவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்த போது, மலையும் குன்றும் அப்பொழுது தாழ்த்தப்படுமென்றும், பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. யோவான் கிறிஸ்துவின் முன்னோடியாக வரும் போது வனாந்தரத்தை யெல்லாம் சமப்படுத்தி அதில் புல்லை முளைப்பிப்பான் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவனோ கல்வியறிவு இல்லாதவனாய் முகம் முழுவதும் தாடியை வளர்த்துக் கொண்டு, ஒரு பழைய ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு வனாந்திரத்திலிருந்து வந்தான். அவன் ஜீவிய காலத்தில் ஒரு நாளாவது பள்ளிக்கூடம் செல்லவில்லை. அவன் யோர்தான் நதியில் நின்றுகொண்டு ஜனங்கள் மனந்திரும்ப வேண்டுமென்று பிரசங்கித்தான். அவனை யாரும் எந்த பிரசங்கப் பீடத்திற்கும் அழைக்கவில்லை. மகத்தான காரியங்கள் நடைபெறுமென்று இன்று எண்ணுவது போன்றே ஜனங்கள் அன்றும் எண்ணியிருப்பார்களென்று நினைக்கிறேன். ஆனால் அது எளிமையாக அமைந்திருந்த காரணத்தால், இயேசுவின் சீஷர்களும் கூட அதைக் காணத் தவறினர். அவர்கள் இயேசுவிடம், `நீர் உம்மை பலியாக ஒப்புக் கொடுக்கப் போகிறீர். எலியா தீர்க்கதரிசி முதலில் வரவேண்டுமென்று வேதம் உரைத்துள்ளதே!’ என்று கேட்டனர். அதற்கு அவர், `அவன் வந்தாயிற்று. நீங்களோ அதை அறியவில்லை’ என்று பதிலுரைத்தார். `அவர்கள் அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று எழுதப்பட்டுள்ளதோ, அதை அவர்கள் செய்தனர்’ என்று அவர் சொல்லி, `மனுஷ குமாரனும் இவ்விதம் பாடுபட வேண்டும்’ என்று முடித்தார். யூத வம்சத்திலிருந்தவரில் மூன்றில் ஒரு பாகம் கூட இயேசு கிறிஸ்து பூமியில் தோன்றியதை அறியவில்லை. மூட நம்பிக்கை கொண்ட ஒருவன் ஏதோ செய்து கொண்டிருக்கிறான் என்று அவர்கள் எண்ணி எவ்வித கவனமும் செலுத்தவில்லை. `அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை’. அவர் இரகசியமாக வருவார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் எடுக்கப்படுதல் இரகசியமாக நிகழும். அவரது தோற்றம் அவ்வளவு இரகசியமாக இருந்தால் அதைக் காட்டிலும் அதிக இரகசியமாக எடுக்கப்படுதலும் இருக்க வேண்டும்! அவர்கள், `பூமியில் இந்த நியாயத்தீர்ப்பு உண்டாகுமுன்பு எடுக்கப்படுதல் சம்பவிக்குமென்று நாங்கள் எதிர்பார்த்தோம்’ என்பார்கள். அவரோ, `அது ஏற்கனவே சம்பவித்து விட்டது. நீங்கள் அதை அறியாமல் போனீர்கள்’ என்பார். அது இரவில் திருடன் வருகிற விதமாய் வரும். `ரோமியோவும் ஜுலியட்டும்’ என்ற நாடகத்தில் காதலன் ஏணியை வைத்து, அதின் வழியாக இறங்கிட காதலியை அவன் அடைந்ததற்கு ஒப்பாக அது இருக்கும். ஒரு கூட்டம் தேவதூதர்கள் மண்வெட்டிகளினால் கல்லறைகளைத் தோண்டுவார்கள் என்று நினைப்பது தவறாகும். உங்கள் கண்களை நீங்கள் இமைக்கும் முன்பு இமைப் பொழுதில் நாமெல்லாரும் மறுரூபமாவோமென்று வேதம் கூறியுள்ளது. `அவர் காணாமற் போய்விட்டார்’ என்று நீங்கள் சொல்வீர்கள். உலகம் பூராவும் கணக்கெடுத்தால், ஒவ்வொரு நாளும் ஐந்நூறு பேர் காணாமற் போகக்கூடும். ஆனால் அவர்கள் காணாமற் போனதை உலகிலுள்ள எல்லாருமே அறிவது கிடையாது. எடுக்கப்படுதலிலும் அனேகம் பேர் செல்வதில்லை. நான் உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. கர்த்தர் கூறியுள்ளதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். நீங்களே அதை அறிவீர்கள். நோவாவின் நாட்களில் தண்ணீரினால் எட்டுப் பேர் காப்பாற்றப்பட்டது போல் ... உலகத்திருந்தவர்களில் எட்டுப் பேர் மாத்திரமே அக்காலத்தில் தண்ணீரினால் காப்பாற்றப்பட்டனர். `அப்படியானால் நான் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்று நீங்கள் கூறலாம். எடுக்கப்படுதலுக்கு அவசியமான விசுவாசம் உங்களிடம் இல்லை என்பதை அது காண்பிக்கின்றது. `எடுக்கப்படுதலில் ஒருவன் மாத்திரம் செல்வானேயாகில், அது நானாயிருக்க வேண்டும். ஏனெனில் நான் அவர் மீது விசுவாசம் கொண்டிருக்கிறேன்’ என்னும் விசுவாசம் உங்களுக்கு இருக்க வேண்டும். `நான் அவரிடம் நெருங்கி ஜீவிக்க விரும்புகிறேன்’ அப்படியானால் அவர் வரும்போது என்னைக் கொண்டு செல்வாரென்று நான் அறிந்திருக்கிறேன். மற்றவர் அதில் செல்லத் தவறினாலும், அவருடைய கிருபையால் நான் அங்கிருப்பேன். ஏனெனில் அவர் எனக்கு அவ்விதம் வாக்களித்துள்ளார். அவர் ஒரு போதும் பொய்யுரையார். நான் தினந்தோறும் அவர் இன்று வருவாரென்று கருதி அவருக்குகந்த விதத்தில் ஜீவிக்கிறேன் என்பதை என் ஆத்துமாவும் ஜீவனும் சாட்சி கொடுக்கின்றன ஆகவே எடுக்கப்படுதலில் நான் நிச்சயமாக இருப்பேன். எட்டுபேர் எடுக்கப்பட்டால், நான் எட்டுப்பேரில் ஒருவனாயிருப்பேன். ஐந்நூறு பேர் எடுக்கப்பட்டால் நான் ஐந்நூறு பேரில் ஒருவனாக இருப்பேன்’ என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் அவ்விதம் விசுவாசிக்காவிடில், நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தில் ஏதோ தவறுண்டு. அவ்வாறாயின் இரட்சிக்கப்பட்டதன் நிச்சயம் உங்களுக்கு ஏற்படவில்லை. இரட்சிக்கப்பட்டதாக நீங்கள் ஊகித்துக் கொள்கின்றீர்கள். அவ்விதம் செய்ய வேண்டாம். ஒவ்வொரு முத்திரையைப் பற்றிய விவரணமும் ஒரே வசனத்தில் அடங்கியுள்ளது. முதலாம் வசம் அதன் வருகையை அறிவிக்கிறது. வெள்ளைக் குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் ஆதிசபையென்று மற்றவர்களைப் போல் நானும் நினைத்திருந்தேன். பரிசுத்த ஆவியானவர் அதன் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினபோது, அது முற்றிலும் மாறுபட்டதாயிருந்தது. வெள்ளை குதிரையின் மேலிருக்கிறவன் அந்திக்கிறிஸ்து என்று நாம் பார்த்தோம். அந்திக் கிறிஸ்துவாக புறப்பட்டுச் சென்ற அதே ஆள் சிவப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்து, கையிலுள்ள பட்டயத்தினால் ஜனங்களைக் கொல்வதாக நாம் சென்ற இரவு அறிந்து கொண்டோம். மாம்ச பிரகாரமான ஒன்றுக்கு ஆவிக்குரிய ஒன்று சமானமாய் உள்ளது. மூன்றாம் முத்திரையைக் குறித்து சிந்திக்கும் முன்பு தேவன் எனக்கு அருளிய உதாரணங்களை இந்த சபைக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். அதைக் குறித்த வேத வாக்கியங்களை நான் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன். அவை ஏழு அல்லது எட்டு பக்கங்கள் உள்ளன. இவ்வித உதாரணங்களை அளிக்கும் போது நீங்கள், நன்றாக புரிந்து கொள்ள ஏதுவாகும். ஏதேன் தோட்டத்தில் மாம்சப் பிரகாரமான மணவாட்டி இருந்தாள். தொடக்கத்தில் அவள் ஆதாமுக்கென்று நியமிக்கப்பட்ட வளாயிருந்தாள். அவன் அப்பொழுது அவன் மனைவியாகவில்லை. ஆதாம் அப்பொழுது அவள் மனைவியாக அறிந்திருக்கவில்லை. யோசேப்பு தன் மனைவியாகிய மரியாளை அறியும் முன்பே, அவளுக்குப் பிள்ளை உண்டாயிருந்தது. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறியும் முன்பு அவள் பெயரளவிற்கு அவனுடைய மணவாட்டியாயிருந்தாள். அவள் தேவனுடைய வார்த்தையில் நிலைநிற்கத் தவறியதால், ஏதேன் தோட்டத்தில் விழுந்து போனாள். சாத்தான் அவர்கள் மத்தியில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறான் என்பதைக் கர்த்தர் அறிந்து அவர்களுக்கு அரணாக ஒரு ஸ்தலத்தை அளித்திருந்தார். தேவன் தம்பிள்ளைகளை பாதுகாக்க முன் வரும் போது, தேவனைத் தவிர வேறு யார் சிறந்த அரண் ஒன்றை அமைத்துதர முடியும்? என் மகன் ஜோசப்பை உயிர்போகும் ஆபத்தினின்று காக்க வேண்டுமென்று நான் விரும்பினால், அதற்கு நாற்பது அடி கான்கிரீட் அமைப்பு போதுமானதாயிருந்தாலும், அதிக பாதுகாப்பு அளிக்க நான் தொண்ணூறு அடி கான்கிரீட் அமைப்பைக் கட்டுவதற்கு முயல்வேன். ஏதாவது ஒரு நாள் இறக்க வேண்டிய என் சிறு பையைனைக் குறித்து நான் இவ்வளவு அக்கரை கொள்வேனானால், அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாகத் தேவன், தம் பிள்ளை நித்தியத்தை இழக்கக் கூடாதென்று பாதுகாப்பளிப்பார்! அவர் எதற்குப் பின்னால் ஆதாமை மறைத்திருந்தார்? தம் சொந்த வார்த்தையின் பின்னால் அவனை வைத்திருந்தார். நீங்கள் அவ்வார்த்தையில் நிலை நிற்கும் வரை, பாதுகாப்பாய் இருக்கின்றீர்கள், `நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்’ அதுதான் வார்த்தையின் முக்கியத்துவம். ஏவாள் ஏதேன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த சமயம் சர்ப்பத்தைச் சந்திக்க நேர்ந்தது. (மிகவும் நாகரீகமும் பெருமையும் கொண்டவன்). தேவன் எளிமையில் வாழ்ந்து கிரியை செய்பவர் வேறு எந்த விதத்திலும் அல்ல. அதற்கு மாறான தன்மைகளைச் சாத்தான் கொண்டிருந்தான். தாழ்மையுள்ள அந்த ஸ்திரி அங்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, புத்தியும் நாகரீகமும் கொண்ட சாத்தான் அங்கு வந்து, அவன் தீட்டியிருந்த திட்டத்தை அவளுக்கு அளிக்க முற்பட்டான். சாத்தான் எவ்வளவாக அவளைச் சூழ்ந்து இருந்தாலும் வார்த்தையை அவள் அரணாகக் கொண்டிருந்தால் எல்லாம் சரி வர அமைந்திருக்கும். சாத்தான் அவன் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் செய்யட்டும், நீங்கள் வார்த்தையில் மாத்திரம் நிலைநில்லுங்கள். அவன், `நீ ஏன் வியாதிப்பட்டிருக்கிறாய்?’ என்று கேட்டாலும் பரவாயில்லை `அவருடைய தழும்புகளால் நான் குணமானேன்’ என்று பதிலளியுங்கள். அவன், `நீ மரிக்கும் தருவாயிலிருக்கிறாய்’ என்று சொல்லுவான். `அவர் என்னை உயிரோடெழுப்புவார்’ என்று பதிலளியுங்கள். வார்த்தையை அரணாகக் கொண்டு அதன் பின்னால் மறைந்திருங்கள் அவ்வளவு தான். கிறிஸ்துவும் கூட `எழுதியிருக்கிறதே’ என்று கூறி வார்த்தையின் பின்னால் ஒதுங்கியிருந்தார். ஆனால் ஏவாளோ வார்த்தையைக் தளர விட்டாள். வார்த்தை முழுவதையும் அவள் விட்டு விடவில்லை. அதில் ஒரு சிறிய பதத்தை மாத்திரம் அவள் விட்டுவிட்டாள். சாத்தானும் அவள் அதையே செய்ய வேண்டுமென்று விரும்பினான். ஞானத்தின் காரணத்தால் அவள் தேவனுடைய வாககுத்தத்தத்தை விட்டு அகன்றாள். தேவனுடைய வார்த்தையை நீங்கள் விவேகிக்கத் தலைப்பட வேண்டாம். அதை அப்படியே விசுவாசியுங்கள். ஆதாம் ஏவாளை அறியும் முன்பே, சாத்தான் அவளை மாசுபடுத்தினான். நம்மை மீட்பதற்காகத் தேவனும் அவ்வாறே செய்தார் என்று தெரியுமா? நாம் மீட்கப்படுவதற்கு நமக்கு தேவன் அவசியம். ஆகையால் யோசேப்பு மரியாளை அறியுமுன்பு, பரிசுத்த ஆவியானவர் அவளை நிழலிட்டார். அதன் விளைவாக மீட்பர் தோன்றினார். மாம்சப் பிரகாரமான ஸ்திரீ பாவத்தில் விழுந்த போது, அவளை மீட்டெடுக்க தேவன் ஒரு வழியை வகுத்தார். உலகத்தின் முதல் மணவாட்டி, அவள் மனைவியாக வாழ்க்கை படு முன்பு, வார்த்தையில் நிலை நிற்பதற்குப் பதிலாக விவேகத்தை உபயோகித்து, மரணத்தை நித்திய பிரிவினையை ஏற்றாள். அவளுடன் அவள் கணவனும் பூமியிலுள்ள மற்றெல்லாமே விழுந்து போயின. ஆனால் இரக்கம் நிறைந்த கர்த்தர் ஸ்திரீ மீட்கப்படுவதற்கு ஒரு வழியை வகுத்தார். உண்மையான வார்த்தை அவளிடத்தில் மறுபடியும் தோன்றுமென்று அவர் வாக்களித்தார். கிறிஸ்து ஸ்திரீயின் மூலம் தோன்றுவார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். கிறிஸ்துதான் வார்த்தை. யோவான் . 1.1 `ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது’. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்’. தேவன் நம் மத்தியில் மாமிசத்தில் வாசம் செய்தார். அவர் வார்த்தையாயிருந்தார். அது வார்த்தையாகும் முன்பு சிந்தையாயிருக்கும். ஆகவே, தேவனுடைய சிந்தை பேசப்பட்டு வார்த்தையாக ஆனது. உங்கள் சிந்தனை வார்த்தையாக பேசப்பட்டு அது என்னவென்று வெளிப்பட்டாலொழிய, அது சிந்தையாகவே அமைந்திருக்கும். மோசேயைச் சுற்றி அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர் அவனிடம் `உன் கோலை கீழ்த்திசைக்கு நேராக நீட்டி வண்டுகளை வரவழைப்பாயாக’ என்றார். அப்பொழுது வண்டுகள் அங்கு இல்லை. அவன் கோலை நீட்டி, `வண்டுகள் உண்டாகட்டும்’ என்று கட்டளையிட்டான். தேவனுடைய சிந்தையானது வார்த்தையாக பேசப்பட்டு, அது வண்டுகளை சிருஷ்டித்தது. அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அதன் சொற்படி நிகழ வேண்டும். இயேசுவும், `நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்லஅது போகும்’ என்றார். மோசே வண்டுகள் உண்டாகக் கட்டளையிட்ட போது, முதலில் சில பச்சை வண்டுகள் ரீங்காரம் செய்து பறந்திருக்கும். பின்னர் ஒரு கெஜம் நிலத்திற்கு ஐந்து பவுண்டு எடையுள்ள வண்டுகள் உண்டாயிருந்தன. அவை எங்கிருந்து வந்தன? கர்த்தர் அவைகளைச் சிருஷ்டித்தார். கர்த்தர் விரும்பினால் இவ்வுலகை இன்றிரவே சிறிய கொசுக்களால் (Gnats) அழிக்க முடியும். ஏன், அவர் சந்திரன் வரையுள்ள உயரத்திற்கு கொசுக்களைக் குவியலாகக் குவிக்க முடியும். அவர், `சந்திரன் வரை கொசுக்கள் உண்டாகட்டும்’ என்று சொன்னால் மாத்திரம் போதும், அவை உயர்ந்து கொண்டே சென்று சந்திரனையடையும். தேவன் சிருஷ்டி கர்த்தராயிருப்பதால் அவர் விரும்பும் எதையும் சிருஷ்டிக்கலாம். அதை சிருஷ்டிக்க அவர் பேசினால் போதும், அத்தகைய மகத்தான தேவன் பரலோகத்தில் வீற்றிருந்து, தேவன் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும் இச்சிறு கல்வி மான்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மறுபடியும் பாபேல் காலத்தைப் போன்று இப்பொழுதுள்ளது. `வெகு காலம் கழித்து வார்த்தை உன்னிடத்தில் திரும்பவும் வரும்’ என்று கர்த்தர் ஏவாளிடம் கூறினார். அவர் வார்த்தையினின்று விழுந்தாள். எனவே, கர்த்தர் அவளை மீட்டெடுத்து வார்த்தைக்குக் கொண்டு வருவார். வெகு காலம் கழித்து அவள் வார்த்தையை அறிந்து கொள்வாள். ஒரு நோக்கத்திற்காக வார்த்தை அவளிடம் வரும். நான் கூறுவதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு முக்கிய நோக்கத்திற்காக வார்த்தை அவளிடம வரும் மீட்பிற்காக. அந்த மூல வார்த்தை வரும் வரை, ஒரு ஈடு (Substitute) அவளுக்கு அளிக்கப்பட்டது. அதாவது காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தத்தைச் செலுத்தலாமென்று அவளுக்குக் கூறப்பட்டது. ஆனால் அது பாவத்தைப் போக்கவில்லை. அது பாவத்தை மூடினது. ஏனெனில் அது மிருகத்தின் இரத்தம். மிருகத்தின் இரத்தத்தில் மிருகத்தின் ஜீவன்தான் உள்ளது. அது மனித ஜீவனுக்கு ஈடாக முடியாது. மனித இரத்தத்தில் மனித ஜீவன் உண்டு. தேவன் இன சேர்க்கையின்றி கன்னியின் வயிற்றில் அவதரிக்கும் வரை, மிருகத்தின் இரத்தம் ஈடாக அளிக்கப்பட்டது. தேவன் வாக்குத்தத்தம் செய்த வார்த்தையானது இரத்தமாகி, இயேசுகிறிஸ்து என்னும் நம் இரட்சகரில் குடிகொண்டது. ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்குமென்று கர்த்தர் வாக்கருளியிருந்தார். அந்த வித்து இயற்கையான வழியில் தோன்றியிருந்தால் அது பாவத்தில் பிறந்த வித்தாயிருக்கும். யோவான் அழுத காரணம் அதுவாகும். ஒரு மனிதனும் பாத்திரவானாகக் காணப்படவில்லை. எல்லோரும் பிளவின் மற்றைய பாகத்தில் தான் இருந்தனர். ஆனால் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு அவருடைய இரத்தம் சிந்தப்படும் போது, அதற்கு ஈடாக அளிக்கப்பட்டிருந்த காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தம் செலுத்தப்படுதல் முடிவடையும். 1 தீமோ 3.16. `அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்....’ ஆம் கன்னி வயிற்றில் பிறத்தல் அதைச்செய்தது. காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தம் பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. அது ஒரு ஈடாக மாத்திரமே அளிக்கப்பட்டிருந்தது. இயேசுகிறிஸ்து மாமிசத்தில் தோன்றும் வரை இப்பழக்கம் அனுசரிக்கப்பட்டு வந்தது. அவர் சிருஷ்டிகர்த்தரின் குமாரனாகத் தோன்றினார். அவர் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையென்பதை உறுதிப்படுத்தினார், அவர் தம் சொற்களால் சிருஷ்டித்தார். தேவனேயன்றி வேறு யாரும் சிருஷ்டிக்க முடியாது. சாத்தான் ஒன்றையும் சிருஷ்டிக்க முடியாது. ஏற்கனவே சிருஷ்டிக்கப்பட்டதை அவன் வழி தவறச் செய்வானேயன்றி (Pervert) அவனால் சிருஷ்டிக்க முடியாது. நீதி, பாதை தவறினால் அது பாவமாகிறது. பொய் என்பது என்ன? உண்மை திரித்துக் கூறப்படுதலே பொய்யாகும். அவ்வாறே விபச்சாரம் என்னப்படுவது தேவனளித்த ஒரு சட்டப்பூர்வமானச் செயலைத் தாறுமாறாக்குவது. சாத்தான் சிருஷ்டிக்க முடியவில்லை. ஆனால் கிறிஸ்து சிருஷ்டி கர்த்தர் என்பதை நிரூபித்தார். நம்முடைய பாவங்களுக்காக சிந்தப்படுமென்று வாக்களிக்கப்பட்ட அந்த இரத்தம் அவருக்குள் இருந்தது. இயேசு தேவனென்று நிரூபிக்கப்பட்டாரென்பதை அப்போஸ்தலர் 2.22ல் காணலாம். பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு இவ்விதம் பேசுகின்றான். இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள், நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். அவர் செய்த கிரியைகளின் மூலமாய் தேவன் அவர்கள் மத்தியில் இருக்கிறார் என்பது ரூசுவானது. பேதுரு ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக இதைச் சொல்லுகிறான். நிக்கொதேமுவும் இதை அறிந்திருந்தான். அவன், `ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் ஒருவன் தேவனிடத்திலிருந்து வராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட கிரியைகளைச் செய்யமாட்டான்’ என்றான். இப்பொழுது கவனியுங்கள். உண்மையான வார்த்தை ஸ்திரீயினிடத்தில் வரும் என்பதாக ஏவாளுக்கு வாக்களிக்கப்பட்டது. அது எபிரேய ஸ்திரீ ஒருவளிடத்தில் வந்த போது, அவள் தேவனுடைய மணவாட்டியாயிருந்தபடியால், அவளைத் தள்ளிவிட எத்தனித்தனர். அதை தான் யோசேப்பு செய்ய வேண்டுமென்று எத்தனித்தான். வார்த்தையானது விவாகம் செய்துகொள்வதற்கென வரும் போது, மணவாட்டி தேவனுடைய உண்மையான வாக்குத்தத்தம் என்னும் போர்வையினால் சுற்றப்படுவதற்குப் பதிலாக, ஸ்தாபன தத்துவங் களினால் சுற்றப்பட்டிருப்பதை அவர் காண்கிறார். இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையென்று நினைக்கிறேன். அதை மறுபடியும் சொல்லுகின்றேன், நீங்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும். மீட்பர் ஒருவர் வருவாரென்று மணவாட்டியாகிய ஏவாளுக்கு வாக்களிக்கப்பட்டது. அந்த மீட்பர் வார்த்தையாயிருப்பார். மீட்பர் வரும் வரை, அதற்குப் பதிலாக அவளுக்கு ஈடுகள் (Substitutes) அளிக்கப்பட்டன. ஆனால் மீட்பர் வந்த பிறகும், அவள் அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து, அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த ஈடுகளில் நிலைத்திருக்க விரும்பினால் அது தான் எபிரேய மணவாட்டி அவள் இரண்டாம் ஏவாளாகிய மணவாட்டி, ஏவாள் என்பதற்கு ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள் என்பது அர்த்தம். அவர் எபிரேய மணவாட்டியினிடத்தில் வந்த போது, அவள் அவரைப் புறக்கணித்தாள், மாம்சத்துக்குரிய ஏவாள் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான சாத்தானின் விவேகத்திற்கு செவிசாய்த்து, ஏதேன் தோட்டத்தில் விழுந்து போனாள். ஆனால் ஆவிக்குரிய ஏவாள் கிறிஸ்துவின் மணவாட்டி ஏதேனில் விழவில்லை, ரோமாபுரியில் விழுந்தாள். நிசாயா மாநாட்டில் அவள் உண்மையான பெந்தேகோஸ்தே சபையைப் புறக்கணித்து, வார்த்தையில் நிலைநிற்பதற்குப் பதிலாக ரோமாபுரியின் விவேகத்துக்குச் செவி கொடுத்தாள். அவளும் அவளைச் சூழ்ந்தவரும் ஆவிக்குரிய மரணம் எய்தினர். மாம்சப் பிரகாரமான ஏவாள் விழுந்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளும் விழுந்தாள். தேவனுடைய மணவாட்டி ஏதேன் தோட்டத்தில் விழுந்தாள். கிறிஸ்துவின் மணவாட்டி ரோமாபுரியில் விழுந்தாள். இருவரும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமான சாத்தானின் விவேகத்தை ஏற்றுக் கொண்டு தங்கள் கற்பை சாத்தானுக்கு விற்றுப் போட்டனர். முத்திரைகள் உடைக்கப்பட்ட போது, அது சாத்தான் என்றும் அவன் கடைசி வரை நிலைத்திருப்பான் என்றும் நாம் பார்த்தோம். ரோமாபுரி சாத்தானின் சிங்காசனமிருக்கிற இடம் என்று வேதம் உரைக்கிறது. ஏவாள் தன் கற்பை ஏதேன் தோட்டத்தில் சாத்தானுக்கு அளித்தாள், கிறிஸ்துவின் மணவாட்டியும் அதையே செய்து ரோமாபுரியில் வேதத்திற்குப் பதிலாக ரோம தத்துவங்களையும் விவேகத்தையும் ஏற்றுக் கொண்டாள். அந்த உதாரணத்தை நீங்கள் கவனித்தீர்களா? பழைய ஏற்பாட்டில் முன்னடையாளங்களைப் புதிய ஏற்பாட்டின் சம்பவங்களுடன் பொருத்தி நோக்கினால், நீங்கள் ஒருக்காலும் தவறு செய்யவே முடியாது. ஒருவனுடைய நிழலிலிருந்து அவன் காண்பதற்கு எவ்வாறு இருப்பான் என்பதை அறிந்து கொள்ளலாம். அதுபோன்று என்ன வரப் போகின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டுமானால், என்ன நிகழ்ந்தது என்பதை நீங்கள் முதலில் கவனியுங்கள். முன்பு நடந்த யாவும் இனி நடக்கப் போவதற்கு நிழலாயிருப்பதாக வேதம் கூறுகிறது. கிறிஸ்துவின் மணவாட்டி கற்புள்ள தேவனுடைய வார்த்தையை விற்றுப் போட்டு, எல்லாவற்றையும் மாற்றி அமைப்பதற்கு சபைக்கு அதிகாரமுண்டு என்று சொல்லும் ஒரு மனிதனை ஏற்படுத்தினாள். ஏவாள் தன் கற்பை சாத்தானுக்கு ஏதேன் தோட்டத்தில் விற்றுப் போட்டது போன்று, கிறிஸ்துவின் மணவாட்டி பெந்தேகோஸ்தே மணவாட்டி அவள் கற்பை நிசாயாவில் விற்றுப் போட்டாள். ஏவாளுக்குக் கர்த்தர் வாக்குத்தத்தம் செய்திருந்தது போல, பெந்தேகேஸ்தே சபைக்கும் அவர் வாக்களித்துள்ளார்... அவள் மனைவியாவதற்கு முன்பு தன் பிறப்புரிமையை விற்றுப் போட்டாள் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஆம், அவள் அதைச் செய்தாள், வேதத்தை ஆதாரமாகக் கொண்டிராத பிரமாணங்களினால் (Creed) என்ன பயன்? அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்னப்படுவதில் ஒரு வார்த்தையாவது வேதத்தில் காணப்படுகின்றதா என்பதை நீங்கள் கண்டறிய விரும்புகிறேன். அது கத்தோலிக்க பிரமாணம், அப்போஸ்தலருடைய பிரமாணம் அல்ல. அப்போஸ்தலருடைய நடபடிகள் 2.38 தான் உண்மையான அப்போஸ்தலருடைய பிரமாணம். அதைத் தான் அவர்கள் எப்பொழுதும் உபயோகித்தனர். அவர்கள் தங்கள் பிறப்புரிமையை விற்றுப் போட்டனர். அவர்கள் மாத்திரமல்ல. மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பிரெஸ்பிடேரியன்களும், பெந்தேகோஸ்தே ஸ்தாபனத்தாரும், ஏனையோரும் அவ்வாறே செய்தனர். அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டாள் ரோமாபுரி தான் அவளை ஸ்தாபனம் உண்டாக்கச் செய்தது. அவள் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கி, ஒரு மனிதனை அதன் தலைவனாக ஏற்படுத்தினாள். மெதோடிஸ்டுகளும், பாப்டிஸ்டுகளும், பெந்தேகோஸ்தே ஸ்தானபத்தாரும் அதையே செய்தனர்.ஒரு குழுவை ஸ்தாபனத்தின் தலைவராக ஏற்படுத்திக் கொண்டனர். தேவன் கூறியது எதுவாயிருப்பினும், அவர்கள் கூறுவதை மாத்திரமே ஒருவன் செய்ய வேண்டும். அது ஆவிக்குரிய வேசித்தனமேயன்றி வேறல்ல - தவறான ஸ்திரீ, அவள் மனிதனால் உண்டாக்கப்பட்ட பொய்யான பிரமாணங்களை நுழைத்தாள். அதன் மூலம் தேவனுடைய பார்வையில் அவள் வேசியாகக் கருதப்பட்டாள். வேதம் அவ்விதம் அவளை அழைக்கிறதென்று நீங்கள் நம்புகிறீர்களா? ஆம், ஐயா, அவள் குமாரத்திகளும் அதையே செய்துள்ளனர். வெளிப்படுதல் 17ம் அதிகாரத்தில் (வேண்டுமானால் குறித்துக் கொள்ளுங்கள்) யோவான் ஆவிக்குள்ளாகி, ஒரு வேசி உட்கார்ந்திருப்பதை காண்கிறான். (கடந்த இரவு அதைப் படித்தோம்). அங்கே ஏழு மலைகள் இருந்தன. அவள் உலகத்துக்கு தன் அசுத்தமுள்ள வேசித்தனத்தைக் கொடுத்தாள். பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் பண்ணினார்கள் ஏமாற்றுதல், திருடுதல், பொய் சொல்லுதல், ஆத்துமா இரட்சிக்கப்பட காசு வசூலித்தல் போன்றவைகள் அவர்களுடைய செய்கைகளாயிருக்கின்றன. அந்த வேசிக்கு குமாரத்திகள் இருந்தனர். அவள் ஸ்தாபன முறைமைகளை உண்டாக்கிக் கொண்டாள். அது முற்றிலும் தவறாகும். ஏவாள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாமல், அவளுக்குப் பின் வந்த எல்லாரையும் மரணத்தினுள் ஆழ்த்தியது போன்று, ஸ்தாபன முண்டாக்கிக் கொண்ட ஒவ்வொரு சபையும் அவளைச் சேர்ந்தவர்களை மரணத்தில் ஆழ்த்து கின்றது. நான் கூறுவது வேத பூர்வமானது. வெளிப்படுத்தல் 17ம் அதிகாரம் படியுங்கள். அவளும் அவளுடைய குமாரத்திகளும் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவார்களென்று வேதம் கூறுகிறது. அப்படினாயால், ஒவ்வொரு ஸ்தாபனமும் அந்த வேசியுடன் கூட அக்கினியால் சுட்டெரிக்கப்படும் வேதம் அவ்வாறு கூறுகிறது. ஆகையால் அது நிச்சயம் சம்பவிக்கும். அவள் ஒரு வேசியாயிருக்கிறாள். அவள் தன் சொந்த கணவனுக்கு விரோதமாக வேசித்தனம் செய்கிறாள். வார்த்தை தேவனாயிருக்கிறது. அதிலிருந்து ஒன்றைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது. உங்கள் மனைவி வேறொருவனை முத்தம் செய்ய நீங்கள் விரும்புவீர்களா? இல்லவே இல்லை. அதை நீங்கள் விரும்பாவிடில், சபையானது ஒரு வார்த்தையைக் கூட்டுவதையும் குறைப்பதையும் நீங்கள் விரும்பக் கூடாது. `ஒருவன் அதிலிருந்து ஒரு வார்த்தையைக் குறைத்தால் அல்லது கூட்டினால்....’ (வெளி. 22.18.19), அல்லேலூயா! கர்த்தர் தம் மனைவி வார்த்தையில் சுத்தமானவளாய் நிலைத்திருக்க விரும்புகிறார். அவள் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் நியாயப் பிரமாணமாகிய புத்தகத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும் அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது. `வானமும் பூமியும் ஒழிந்து போகும். என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை’ என்று இயேசு கூறியுள்ளார். தேவனுடைய வார்த்தைக்கு உங்கள் சொந்த விளக்கத்தைக் கொடுக்க வேண்டாம். சுத்தமான கலப்படமில்லாத ஒருவன் அவருக்குத் தேவை வேறொருவனுடன் சரசம் செய்யும் ஒருவள் அல்ல. என் மனைவி வேறொருவனுடன் சரசம் செய்வதை நான் விரும்ப மாட்டேன். தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்ட விவேகத்திற்கு நீங்கள் செவி சாய்த்தால், சாத்தானுடன் நீங்கள் சரசம் செய்கின்றீர்கள் என்று அர்த்தமாகிறது. ஆமென்! உங்களுக்கு அது பக்தி பரவச மூட்டுகின்றதல்லவா? நீங்கள் கலப்படமற்றவராய் இருக்க தேவன் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையில் நிலை நில்லுங்கள். தேவனைச் சேவிக்க விரும்பும் ஒருவனை மனந்திரும்பக் கூறி, அவர்களைச் சேர்த்துக்கொள்ள ஸ்தாபனங்கள் அழைக்கின்றன, ஸ்தாபனத்தைச் சேர்ந்த மாத்திரத்தில் அவன் ஆவிக்குரிய மரணம் அடைகிறான். வேத புத்தகம் அவ்வாறே போதிக்கின்றது. கர்த்தர் ஏவாளுக்கு வாக்குத்தத்தம் செய்தது போன்று சபைக்கும் வாக்குத்தத்தம் செய்திருந்தார். அவளிடம் வார்த்தை திரும்பவும் வருமென்று கர்த்தர் ஏவாளிடம் கூறியிருந்தார். அவள் எதை இழந்தாளோ அதை அவள் திரும்பவும் பெற்று பழைய நிலைமையை அடைய வேண்டும். அவ்வாறு செய்யக் கூடியது ஒன்றே ஒன்று மாத்திரமே. அது தான் தேவனுடைய வார்த்தை. நான் உங்களுக்கு முன்னே கூறியது போன்று, துப்பாக்கியைச் சுடும்போது குறி தவறினால், அதன் காரணம் என்னவென்று கண்டு பிடித்து, முன்பிருந்த நிலைமைக்குத் துப்பாக்கியைக் கொண்டு வந்து மறுபடியும் சுட வேண்டும். அவ்வாறு முன்பிருந்த நிலைமை என்னவென்று ஆலோசனை செய்தால், நீங்கள் நிசாயாவை (Nicea) அடைவீர்கள். அங்கிருந்து நீங்கள் மறுபடியும் தொடங்கி, ஸ்தாபனங்களை விட்டு அகன்றால்... இவைகளை நாம் இப்பொழுது முத்திரைகளைக் குறித்து சிந்திக்கும் போது பார்த்துக் கொண்டு வருகிறோம். ஸ்தாபனங்கள் கொண்டுள்ள முறைமைகளுக்கு நான் எதிரியாயிருப்பதன் காரணமென்னவென்று என் வாழ்நாள் முழுதும் நான் வியந்ததுண்டு. ஸ்தாபனத்திலுள்ள மக்களுக்கு நான் விரோதியல்ல, ஏனெனில் அவர்கள் நம்மைப் போன்று மனிதர்கள்தாம். ஆனால் ஸ்தாபனங்கள் கையாளும் முறைமைகளை நான் எதிர்க்கிறேன். முத்திரைகளின் இரகசியம் இப்பொழுது வெளிப்படுவதனால் அதன் காரணமென்னவென்பது நன்கு புரிகின்றது. மாம்சப் பிரகாரமான ஏவாளுக்குத் தேவன் வாக்களித்தது போன்று, ஆவிக்குரிய ஏவாளுக்கும் கடைசி காலத்தில் தேவனுடைய வார்த்தை அவளுக்குத் திரும்பவும் அளிக்கப்படுமென்ற உறுதி அவர் அளித்தார். அவர் சபையை மூலவார்த்தைக்கு அப்பொழுது திருப்புவார். இப்பொழுது நன்றாக கவனியுங்கள். இதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையானது ஏவாளின் வித்தின் மூலம் திரும்பவும் அளிக்கப்படுமென்னும் உறுதியைக் கர்த்தர் ஏவாளுக்கு அளித்திருந்தார். அவ்வமயம் தேவனுடைய வார்த்தையே அவள் வித்தாகத் தோன்றும். ஆனால் அதற்குப் பதிலாக கொடுக்கப்பட்டிருந்த ஈடுகளை (Substitutes) அவள் இறுகப் பற்றி, தேவனுடைய வார்த்தை அவளிடத்தில் வந்த போது அதை நிராகரித்தாள். ஏனெனில் வார்த்தை மிகவும் தாழ்மையுள்ள விதத்தில் தோன்றியது. அது பகட்டாய் காணப்படவில்லை. `ஒரு மாட்டுத் தொழுவமா? அதில் பிறந்தவனையா ஏற்றுக் கொள்வது? பள்ளிக்கூடத்தில் அவர் ஒரு நாள் கூட படிக்கவில்லையே? அவரை எப்படி நான் ஏற்றுக் கொள்ள முடியும்? ஜனங்களால் உதறித் தள்ளப்படும் ஒரு மனிதன் எவ்வாறு மேசியாவாக இருக்க முடியும்? ஒரு கந்தைத் துணியை அவர் முகத்திலே போர்த்து அவர் தலையில் சூட்டினார்களே! அப்படிப்பட்டவர் தம்மை தீர்க்கதரிசியென்று கூறிக் கொண்டால் ... ’ என்றெல்லாம் அவர்கள் சிந்தனை செய்தனர். அவர்கள் தீர்க்கதரிசிகளை அறிந்து கொள்ள முடியவில்லை. இயேசுவும், `தீர்க்கதரிசிகளை நீங்கள் அறிவீர்களானால் என்னையும் அறிவீர்கள்’ என்றார். கவனியுங்கள். எபிரேய மணவாட்டியினிடம் தேவனுடைய வார்த்தை தோன்றின போது, இது எவ்வகையில் தோன்றுமென்று தேவன் கூறியிருந்தாரோ, முற்றிலும் அவ்வாறே அது தோன்றியது. ஆனால் அவள் அதை நிராகரித்து அதற்குப் பதிலாக அளிக்கப்பட்டிருந்த ஈடுகளில் நிலை கொண்டாள். கர்த்தர் ஆவிக்குரிய ஏவாளுக்குப் பெந்தேகோஸ்தே ஆவியை தருவதாக வாக்கருளியிருந்தார். ஆனால் அவள் விழுந்து போவாளென்றும் அப்பொழுது அவள் என்னென்ன கிரியைகள் செய்வாளென்றும், அவள் விழுவதற்கு 400 வருடங்களுக்கு முன்னமே அவர் முன்னறிவித்திருந்தார். ஆனால் கடைசி நாட்களில் வார்த்தையைத் திரும்பவும் அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார். இயேசுவும் பூமியிலிருந்த போது அதையே கூறினார். அவர் அதை மறுபடியும் அளிப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் அது வரும் போது என்ன காணப்படுகிறது? அவர்கள் அதன் ஈடுகளாகிய ஸ்தாபனங்களையும் அவைகள் உண்டாக்கின பிரமாணங்களையும் விரும்பி ஏற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி வாழத் தலைப்படுவார்கள். அவர்கள், `நான் இன்னின்னவன், இன்னின்னவன்’ என்று அழைத்து, தங்களைப் பற்றி பெருமிதம் கொள்வார்கள். தேவன் அவர்கள் மத்தியில் மரித்தோரை உயிரோடெழுப்பினாலும், இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினாலும், அவர் திரும்ப வார்த்தையை சபைக்கு அளிக்கும் போது என்னென்ன செய்வாரென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள யாவையும் அவர் செய்தாலும், அவையெல்லாம் அவர்களுக்கு ஒன்றுமில்லை. `அது என்னுடைய ஸ்தாபனத்துடன் சம்பந்தப்படாத வரை அதற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை’ என்று அவர்கள் கூறுகின்றனர். கடைசி காலத்தில் தேவன் ஒரு செய்தியை அனுப்பி ஜனங்களின் இருதயத்தைத் திருப்புவாரென்று மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. யோவேலும், பூச்சிகள் பட்சித்த வருஷங்களின் விளைவைத் திரும்பவும் அளிப்பதாக தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளதாகக் குறிப்பிடுகிறான். மூல பெந்தேகோஸ்தே கிளையிலிருந்து ரோமாபுரி தின்று மீதி விட்டதை மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள் இவர்கள் தின்றனர். கடைசி நாட்களில் அவையாவையும் திரும்ப அளிப்பதாக தேவன் உறுதியளித்துள்ளார். தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசியினிடத்தில் தான் வரும் சீர்திருத்தக்காரரிடமல்ல. அது வருவதற்கு அப்பொழுது தருணமாகவில்லை. ஆனால் இப்பொழுது அந்த தருணம் வந்துவிட்டது. எனவே, அதை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது மிகவும் தாழ்மையாகவும், சாதுவானதாகவும் இருக்கும்.... அதை மேம்பட்ட மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், பெந்தோகோஸ்தேகாரர் இவர்கள் ஏற்றுக் கொள்வார்களென்று நினைக்கிறீர்களா? `பெந்தேகோஸ்தரை நீங்கள் ஏன் சொல்லுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பெந்தேகோஸ்தேயினர் தாம் லவோதிக்கேயா சபை தாங்கள் ஐசுவரியவான்களென்றும் அவர்களுக்கு ஒரு குறைவுமில்லையெனவும் எண்ணுகின்றனர். ஆனால் நீங்கள் தரித்திரராயிருப்பதை அறியாமலிருக் கிறீர்கள்’ என்று வேதம் அவர்களிடம் கூறுகின்றது. கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து நீங்கள் பிரம்மாண்டமான கட்டிடங்களைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் ஆவிக்குரிய விதத்தில் நீங்கள் இன்னும் தரித்திரரே. `கர்த்தருக்குள் நாங்கள் எல்லாவற்றையும் காண்கிறோம் என்கின்றனர் இல்லை நீங்கள் குருடர். ஸ்தோத்திரம், நாங்கள் ஆடையுடுத்தியுள்ளோம்’ என்கின்றனர் இல்லை, நீங்கள் நிர்வாணிகள். `எங்களுக்கு வேதப் பள்ளிகள் உண்டு’ என்கின்றனர் நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். அவர்கள் எண்ணியிருப்பதற்கு மாறாக அவர்கள் நிலைமையுள்ளதைக் கவனியுங்கள். லவோதிக்கேயா சபை இத்தகைய நிலையில் காணப்படும் என்று வேதம் கூறுகின்றது. இது கடைசி காலமென்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில் லவோதிக்கேயா சபையின் காலம் தான் ஏழாம் சபையின் காலம். நாம் அக்காலத்தில் வாழ்கிறோம். இரண்டாயிரம் வருடங்களில் சபையின் காலங்கள் முடிவடையும். இனி வேறு சபையின் காலங்கள் உண்டாவதில்லை. ஆகவே தான் பின்மாரி பெற்றுள்ள சகோதரராகிய நீங்கள் வேறு ஸ்தாபனத்தைத் தொடங்க முடியாது. ஏனெனில் வேறொரு சபையின் காலம் இருக்கப் போவதில்லை. நாம் அவை முடிவடையும் தருணத்தில் இருக்கிறோம். ஆமென்! பெந்தேகோஸ்தே சபையினர் அளித்த செய்தி தான் கடைசி செய்தியாயிருக்குமானால்... நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் கடைசி மூன்று சபை காலங்களில் அளிக்கப்பட்டுள்ள மூன்று செய்திகள் மறுபிறப்பை முற்றுப் பெறச் செய்கின்றன. ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் முன்பு, முதலில் வெளி வருவது தண்ணீர், அடுத்தபடியாக இரத்தம், முடிவில் ஜீவன். இயேசுவை அவர்கள் சிலுவையில் கொன்றபோது, மறுபிறப்பை முற்றுப் பெறச் செய்ய அவர் விலாவிலிருந்து தண்ணீரும், இரத்தமும், ஆவியும் வெளி வந்தன. `பிதாவே, உம்முடைய கரங்களில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று இயேசு கூறினார். (பூலோகத்திலே) சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 1 யோவான் 5.7 இதை உரைக்கிறது. நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமானாக்கப்பட முடியும். (Justified). நீங்கள் நீதிமானாக்கப்படாமல் பரிசுத்தமாக முடியும் (sanctified). பரிசுத்த ஆவியைப் பெறாமலும் நீங்கள் பரிசுத்தமாக முடியும். யோவான் 17.17ல் சீஷர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பிசாசுகளைத் துரத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் பெந்தேகோஸ்தே வரை சென்று பரிசுத்த ஆவிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. அங்கு தான் யூதாஸும் தன் உண்மை சொரூபத்தைக் காண்பித்தான். ஆவியானவர் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல் என்பவைகளின் மூலம் கிரியை செய்தார். ஆனால் முடிவில், யூதாஸின் உண்மை சுபாவம் வெளியரங்கமானது (அவன் பெந்தே கோஸ்தே நாள் வரை வரவில்லை). நாம் இப்பொழுது கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆவிக்குரிய மணவாட்டி நிசாயாவில் விழுந்த போது கடைசி நாட்களில் அவளிடம் வார்த்தை திரும்பவும் வரும் என்பதாக வாக்களிக்கப்பட்டது. `ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில், அவன் எக்காளம் ஊதப் போகிறபோது தேவரகசியம் நிறைவேறும்’ என்று வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம் உரைக்கிறது. கடைசி காலத் தூதன் அவர்களைப் பிதாக்களின் விசுவாசத்திற்குத் திருப்புவான். ஆனால் ஸ்தாபனங்கள் அதை ஏற்றுக் கொள்ளுமென்று நினைக்கிறீர்களா? இல்லை, ஐயா, மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறியுள்ளவாறு, அவன் மூல வார்த்தையைத் திரும்பவும் அளிப்பான். ஏவாள் ஏதேன் தோட்டத்தில் வார்த்தையைப் புறக்கணித்தாள். யூத மணவாட்டி கல்வாரியில் அதைப் புறக்கணித்தாள். நிசாயா குழுவினர் வார்த்தையை இந்தக் கடைசி நாட்களில் நிராகரிக்கின்றனர். வார்த்தை மாமிசமாக வெளிப்பட்டபோது, எபிரேய மணவாட்டி அவள் கைக்கொண்டிருந்த பாரம்பரியங்களிலும், கொள்கைகளிலும் லயித்துப் போய், வார்த்தையை நிராகரித்தாள். இப்பொழுது அதுவே சம்பவிக்கிறது. `சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையில் நடக்கும்’ சோதோமில் அப்பொழுது என்ன நிகழ்ந்ததோ, அதுவேதான் இப்பொழுது சம்பவிக்கும், அவ்விதம் நிகழுமென்று வேதத்தில் கூறப்பட்டுள்ள அறுநூறு வாக்குத்தத்தங்களை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்க முடியும்... ஆனால் அவர்கள் அதை நிராகரித்தனர். அவள் தன் பாரம்பரியங்களில் நிலை கொண்டிருந்தாள் இயேசுவாகிய வார்த்தை தோன்றிய போது, உண்மையான அவருடைய இரத்தத்தை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அதற்கு ஈடாகக் கொடுக்கப்பட்டிருந்த மிருகங்களின் இரத்தத்தில் அவள் திருப்தி கொண்டிருந்தாள். எனவே இயேசு எபிரேய மணவாட்டியைப் பார்த்து, `நீங்கள் உங்கள் பாரம்பரியங்களில் நிலை கொண்டுள்ளதால், தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்’ என்றார். பாரம்பரியம் நற்பயனளிக்க முடியாது. இன்றைக்கும் அவ்வாறே ஸ்தாபனங்கள் எழுப்புதல் கூட்டங்கள் நடத்துகின்றன. ஆனால் உண்மையில் அவை இருதய உணர்ச்சிகளை எழுப்புவதாக அமைந்திருக்கவில்லை. நம்மிடையே எழுப்புதல்கள் உண்டாவதாகக் கருத வேண்டாம். ஸ்தாபனங்களில் அவர்களுக்குக் கோடிக்கணக்கான அங்கத்தினர்கள் உண்டு. ஆனால் உண்மையான எழுப்புதல் எங்கேயும் காணப்படுவதில்லை. மணவாட்டிக்கும் உண்மையான எழுப்புதல் இன்னும் நிகழவில்லை. அவளுடைய உணர்ச்சியைத் தூண்டுவதற்குத் தேவனுடைய தோற்றம் இன்னும் வரவில்லை. அவளை மறுபடியும் எழுப்புவதற்கு இது வரை இரகசியமாயுள்ள அந்த ஏழு இடி முழக்கங்கள் என்னவென்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் அதை அனுப்புவதாக வாக்களித்துள்ளார். இன்றைய ஸ்தாபனங்கள் தங்கள் பிரமாணங்களையும் கொள்கைகளையும் மறந்து, வேதத்தை எடுத்துக் கொண்டு, அதில் அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக் கொண்டு தேவனிடம் மன்றாடினால், அப்பொழுது அந்த வார்த்தை சக்தி வாய்ந்ததாக இருக்கும், இயேசு, `உங்கள் பாரம்பரியத்தினால் நீங்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்குகிறீர்கள்’ என்றார். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. ஆவிக்குரிய மணவாட்டி என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஸ்தாபனங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவைகள் உண்டாக்கிக் கொண்ட கோட்பாடுகளை ஏற்றிருக்கின்றன. தேவனுடைய வார்த்தையினுள் ஸ்தாபனங்களின் பிரமாணங்களை அவள் புகுத்த முனைவதால், தேவனுடைய வார்த்தை சக்தியற்றுப் போகின்றது. `வருகையின் தூதன்’ (Herald of His Coming) என்னும் பத்திரிகையின் தலைப்பில், `ஒரு தீர்க்கதரிசி திரும்பவும் வருவது அவசியம்’ என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் அந்த தீர்க்கதரிசி உண்மையாக வரும்போது, அவர்கள் அதை அறியாமற் போவார்கள் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு காலத்திலும் அவ்விதமாகவே சம்பவித்து வருகிறது. `தேவனுடைய வார்த்தையைத் தைரியமாக நமக்குக் கொண்டு வரும் ஒரு தீர்க்கதரிசி நம்மிடையே தோன்றுவது அவசியம், வேதம் அவ்வாறு வாக்களித்துள்ளது’ என்றெல்லாம் நாம் பேசலாம். அப்பத்திரிகையின் பதிப்பாசிரியராகிய சகோ. மூர் (Bro. Moore) என்பவரை நான் அறிவேன். அவர் வீட்டில் நான் உணவருந்தி இருக்கிறேன். அவர் மிகவும் சிறந்தவர். சகோதரி மூவரும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஊழியத்திற்கென்று தியாகம் செய்துள்ளனர். `வருகையின் தூதன்’ இன்று காணப்படும் மிகச் சிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகும். ஆனால் அவர்கள் `நமக்கு ஒரு தீர்க்கதரிசி அவசியம்’ என்று முழங்கிக் கொண்டிருக்கின்றனர். வானொலியில் பாப்டிஸ்ட் சபைகள், நாம் கத்தோலிக்க சபையுடன் சேர வேண்டிய அவசியமில்லையென்றும், ஆனால் அவர்களுடன் ஒரு வித ஐக்கியங் கொள்ளுதல் அவசியமென்றும் நேற்றும், இன்றும் பிரசங்கங்கள் நிகழ்த்தின. ஆனால் அதே நேரத்தில் அந்த விஷத்தினின்று நாம் விலக வேண்டுமென்ற போதனை இவ்விடமிருந்து செல்கின்றது. ஒளியும் இருளும் ஒன்றாக ஐக்கியங் கொள்ள முடியாது. ஒளி உட்பிரவேசிக்கும் போது, இருள் தானாகவே அகன்றுவிடும். ஒளியையும் இருளையும் ஒரே ஸ்தலத்தில் அமைக்க நீங்கள் முயன்று பாருங்கள்! அது முடியாத காரியம். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரே வார்த்தை, அந்த வார்த்தை பொய்யுரையாது, தவறொன்றையும் செய்யாது, மறுபடியுமாக அதே ஸ்தலத்திற்கு அது இப்பொழுது வருகிறது. ஆம், ஐயா, ஒரு மனிதன் உங்களிடம் தவறான போதகங்களைக் கொண்டு வரும் போது, நீங்கள் எங்கு நிலை கொள்ள வேண்டுமென்று அறிந்திருந்தால்... ஒரு முயலை அதன் பட்டியில் அவிழ்த்து விட்டு, எல்லா துவாரங்களையும் அடைத்து, பட்டியின் வாசலருகில் நின்றால், அது மறுபடியும் வாசலிடம் தான் வர வேண்டும். ஏனெனில் அது வாசலின் வழியாகத் தான் வெளியேற முடியும். அது தலையை அங்குமிங்கும் நுழைத்து வெளியேற முயலுவதை நீங்கள் கவனித்துக் கொண்டே இருக்கலாம். முடிவில் அது வாசலிடம் தான் வர வேண்டும். அவ்வாறே நீங்களும் எவ்வளவாக உங்கள் தலைகளை ஸ்தாபனங் களின் பிரமாணங்களிலும் கோட்பாடுகளிலும் நுழைக்க முயன்றாலும், முடிவில் நீங்கள் தேவனுடைய வார்த்தைக்குத் தான் வரவேண்டும். ஆகவே, தேவனுடைய வார்த்தையில் நிலை நில்லுங்கள். வாக்களிக்கப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தை கடைசி நாட்களில் வரும்போது, ஸ்தாபனங்கள் தங்கள் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ள காரணத்தால், அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ள மாட்டா. எபிரேய மணவாட்டியும், உண்மையான வார்த்தை அவளிடம் தோன்றி, அனேக அற்புதங்களினால் அது உறுதிப்பட்டு நிரூபிக்கப்பட்டபோதிலும், அவள் அதை நிராகரித்தாள். அது போன்றே இன்றும் சம்பவிக்கிறது. இன்றைய ஸ்தாபனங்கள் அதை புறக்கணிக்கும் என்பதற்கு எபிரேய மணவாட்டி ஒர் உதாரணமாயிருக்கிறாள். அந்த உதாரணம் ஒருபோதும் தவறாது. ஆகையால் நீங்கள் செய்யவேண்டிய ஒன்றே ஒன்று, நீங்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டதற்காக சந்தோஷம் கொள்வதேயாகும். கடைசி நாட்களில் தேவன் தோற்றமளித்து அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். என்றாலும், ஸ்தாபனங்கள் அதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இயேசுகிறிஸ்து, யோவேல், பவுல், மல்கியா, திவ்யவாசகனாகிய யோவான், தீர்க்கதரிசிகள் இவர்கள் மூலமாய் கடைசி காலத்தில் அளிக்கப் படவிருக்கும் செய்தியைக் குறித்து தேவன் முன்னறிவித்திருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் இவ்வசனங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் (இவை ஏற்கனவே உங்களுக்குத் தெரியும்). இயேசு. யோவான் 14.12. யோவேல். யோவேல் 2.38, பவுல். 2 தீமோ. 3, மல்கியா. மல்கியா. 4. யோவான் வெளி. 10.1-7. இன்றைய சபைக்காக, வார்த்தையானது மறுபடியும் மாமிசத்தில் மக்களிடையே தோன்றியுள்ளது. ஆனாலும் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு முன்னால் அற்புதங்களைச் செய்து அவர் தேவனென்று நிரூபித்தபோது என்ன கூறினார் தெரியுமா? அவர், `வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே ...... உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்’ என்றார். கப்பர்நகூமில் அவர் ஒரு சிலரை மாத்திரம் சொஸ்தப்படுத்தி, அவர்கள் இருதயங்களின் இரகசியங்களை அறிந்து அவைகளை வெளிப்படையாகக் கூறிவிட்டு, வெளி நடந்தார். அவ்வளவு தான், பலத்த செய்கைகள் என்னவென்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. (இயேசு செய்த மேற்கூறிய காரியங்களே பலத்த செய்கைகள் - தமிழாக்கியோன்) அவர்கள் பெரிய திட்டங்களை அமைப்பது அவசியமென்று எண்ணுகின்றனர். எல்லாரும் எழுந்து நிற்க நீதிபதி ஒரு சொற்பொழிவு ஆற்றுவார். அப்பொழுது வாத்தியங்கள் முழங்கி, கொடிகள் பறந்து ஆடம்பர ஆடைகளணிந்துள்ள பெண்மணிகள் காத்திருக்க, பெரிய பெரிய பட்டங்கள் பெறவேண்டுவோர் பெரிய உயரமான குல்லாய்களைப் போட்டுக் கொண்டு, கழுத்துப்பட்டைகளைத் தூக்கி விட்டுக் கொண்டு உள்ளே நடந்து செல்வர் (வேத பள்ளிகளில் படித்து தேர்வு பெற்றவர்களுக்குப் பட்டம் வழங்கும் விழாவை விஸ்தரித்து சகோ. பிரான்ஹாம் கூறுகின்றார் - தமிழாக்கியோன்). அது மிகவும் மகத்தானது என்று ஜனங்கள் கருதுகின்றனர். ஆனால் கர்த்தரோ `அது மூடத்தனம்’ என்கிறார். படிப்பறியாத பேதையர் மூலமாய் தேவன் அனேக காரியங்களைச் செய்து உண்மையான சபைக்கு அனல் மூட்டுகிறார். ஆனால் ஜனங்கள் அவர்களைப் பார்த்து, `பரிசுத்த உருளர்களின் குழு’ (holy rollers) என்று பரிகசிக்கின்றனர். ஆனால் தேவனோ அதை மகத்தான ஒன்றாய் கருதுகிறார். ஜனங்கள் மகத்தானதாகக் கருதுபவைகளைத் தேவன் மூடத்தனமெனக் கருதுகிறார். பார்த்தீர்களா? தேவன் நாம் வாக்களித்துள்ளவைகளை நிச்சயம் நிறைவேற்றுவார். அவர் ஏற்கனவே அவைகளை நிறைவேற்றிவிட்டார். எபிரேய மணவாட்டி பாரம்பரியங்களிலேயே நிலை கொண்டிருந்தாள். இயேசு மரித்தோரை எழுப்பினார். தேவனுடைய ஆவியை அவரில் காண முடிந்தது. அவர் தேவகுமாரன் என்பதை அடையாளங்களினால் உறுதிப்படுத்திக் காண்பித்தார். முதலில் அவர் பிரசங்கம் செய்யத் தொடங்கினார். `இவன் ஒரு விந்தையான மனிதன், இவன் யார்?’ என்று ஜனங்கள் கேட்கத் தொடங்கினர். அவருக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் வந்த போது, அவர்கள் அவனிடம், `நீ மேசியாவா?’ என்று கேட்டனர். அவன், `நானில்லை, ஆனால் அவர் உங்கள் மத்தியில் இருக்கிறார்’ என்றான். தான் என்ன செய்யவேண்டும் என்பதை யோவான் அறிந்திருந்தான். உதாரணமாக, நோவா ஏனோக்கை கவனித்துக் கொண்டே வந்தான். ஏனோக்கு மேலே சென்றவுடன் நோவா, `நாம் பேழையின் அருகாமையில் செல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது’ என்றான். அவ்வாறே, யோவானும் கர்த்தர் அவனைக் கவனிக்கக் கூறிய அடையாளம் நிகழ எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஜனங்களிடம், `அவர் உங்கள் மத்தியில் எங்கேயோ நின்று கொண்டிருக்கிறார். இதுவரை நானும் யார் அவர் என்பதை அறியேன். ஆனால் அவரை நான் அறிந்து கொள்வேன்’ என்றான். அவர்கள் யோவானிடம் வந்து, `நீ மேசியாவா? நாங்கள் தலைமை ஸ்தலத்திலிருந்து (Headquarters) அனுப்பப்பட்டுள்ளோம். அங்குள்ள மூப்பர்கள் எங்களை அனுப்பினர். நீ மேசியாவானால், இங்குள்ள தாழ்ந்தவரிடத்தில் உன்னை வெளிப்படுத்துவதைக் காட்டிலும், அங்கு ஏன் வந்து உன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளக் கூடாது?’ என்றனர். அதற்கு யோவான், `நான் மேசியாவல்ல. நான் வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம்’ என்று பதிலுரைத்தான். அவர்களோ அதை கிரகித்துக் கொள்ள முடியாமற் போயினர். ஆயினும் அவர்களெல்லாரும் அவன் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். ஆனால் அவன் வந்தபோது, அவனது தோற்றத்தையும் சூழ்நிலையும் கண்டு, அது அவனாயிருக்க முடியாது என்னும் தீர்மானம் கொண்டனர். `நீ எந்த வேத பள்ளியில் படித்தாய்?’ என்று கேட்க, அவன், `எந்தப் பள்ளியிலுமில்லை’ என்று பதிலுரைத்திருப்பான், அவர்கள் `உன்னிடம் ஐக்கியச் சீட்டு (Fellowship card) உள்ளதா?’ என்று கேட்டிருந்தால், அவன், `அப்படியென்றால் என்ன?’ என்று அவர்களையே கேட்டிருப்பான். அவன் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவனாய் இருந்தான். அவன் அவர்களுக்குப் பிரதியுத்திரமாக, `என்னிடம் ஒரு செய்தி மாத்திரமே யுண்டு. அதாவது, கோடாரியானது மரங்களின் வேர்கள் அருகே வைக்கப்பட்டிருக்கிறது’ என்றான். ஒரு போதகனைப் போல் போதியாமல், மரம் வெட்டுபவன் ஒருவனைப் போன்று அவன் போதித்தான் - விரியன் பாம்பு, கோடாரி, மரங்கள்போன்ற சொற்களை அவன் உபயோகித்தான், அவன் மத சம்பந்தமான (Ecclesiastical) சொற்கள் எவையும் பேசவில்லை. அவனுக்கு நிகரான தீர்க்கதரிசி யாருமில்லை என்று இயேசு கூறினார். ஸ்திரீகளிடததில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் இதுவரை எழும்பவில்லை. நான் கூறுவது சரியே. அவன் தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவனாயிருந்தான். அவன் உடன்படிக்கையின் தூதன், இரண்டு யுகங்களுக்கிடையே தோன்றியவன். ஆனால் அவர்கள் அவனை அறிந்து கொள்ள முடியவில்லை. அவனை அவர்களால் புரிந்துகொள்ள முடியாமற் போயிற்று. அவன் விநோதமான ஒருவனாய் இருந்தபடியால், அவர்கள் அவனை அறிந்து கொள்ளத் தவறினர். இயேசு தோன்றின போதும், தச்சனுடைய குமாரனாகப் பிறந்த அவரை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். மேலும், அவர் முறை தவறிப் பிறந்தாரென்னும் மோசமான பெயர் அவருக்கு உண்டாயிருந்தது. அத்தகைய ஒருவரை அவர்கள் காணச் செல்ல மாட்டார்கள். ஆனால் தேவன் என்ன செய்தாரென்று பாருங்கள். அவர் படிப்பறியாத ஏழை செம்படவர்களையும், மரம் வெட்டுபவரையும், குடியானவரையும், வேசிகளையும் தமது ஊழியத்திற்கென்று தெரிந்து கொண்டு, கௌரவம் மிகுந்தவர்களைச் சும்மா விட்டுவிட்டார். அவர் ஏன் அங்ஙனம் செய்தார்? ஏனெனில் அவரே வார்த்தை என்பதை அந்தப் படிப்பறியாதவர்கள் அறிந்து கொண்டனர். படிப்பறியாத இவர்களைச் சற்று கவனிப்போம். பேதையான மீன் பிடிப்பவன் ஒருவன் இருக்கிறான் பேதுரு. அவனுடைய பெயரை எழுதவும் கூட அவனால் முடியாது. அவன் படிப்பறியாதவனென்றும் பேதமையுள்ளவனென்றும் வேதம் கூறுகின்றது. அவன் மீன் பிடித்து, மீன்களைக் கொண்டு வந்து வைத்து விட்டு, மறுபடியும் சென்று என்ன சத்தம் கேட்கின்றது என்று பார்க்கிறான். ஆயினும் அவன் இருதயத்தின் ஆழத்தில் மேசியா வருவாரென்று வேதம் உரைத்திருப்பதை அறிந்திருந்தான். எல்லா எபிரேயர்களும், மேசியா வருவாரென்று வேத வாக்கியங்கள் கூறியிருப்பதை நிறைவேற வேண்டுமென்பதை நன்கு அறிந்து அவர் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். மேசியாவென்று தங்களைக் கூறிக் கொண்டவர் அனேகர் எழும்பி நூற்றுக்கணக்கானவரை வனாந்தரத்திலும் மற்றவிடங்களிலும் வழி நடத்திச் சென்றனர். ஆனால் அவர்களெல்லாம் மாண்டு போயினர். உண்மையான மேசியா வரும் போது அவரைத் தூக்கியெறிவதற்கென இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன. அவ்விதமாக, தற்போதும் நம்மிடையே எலியாவின் சால்வைகளும் அங்கிகளும் காணப்படுகின்றன. உண்மையான ஒன்று வரும் போது அதை அப்புறப்படுத்துவதற்கென இவை யாவும் சம்பவிக்கின்றன. ஆனால் இத்தகைய போலிச் செயல்கள் ஏதோ ஒன்று சம்பவிக்கவிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றன. ஒரு போலி டாலர் நோட்டை காணும் போது, உண்மையான ஒரு டாலர் நோட்டு இருக்கிறது என்பதை நாமறிந்து கொள்ளலாம். ஆகவே கௌரவம் மிகுந்தவர்கள், `மேசியா வருவாரானால், அவர் காய்பாவினிடத்தில் தான் வர வேண்டும். அவர் நம்முடைய ஸ்தாபனங்களுக்கு வருவார். அல்லது அவர் பரிசேயரிடத்தில் வருவார்’ என்றெல்லாம் கூறினர். உடனே சதுசேயர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, `இல்லை, அவர் எங்களிடம் தான் வருவார்’ என்றும் கூறியிருக்க வகையுண்டு. இன்றும் அது போன்றே நிகழ்ந்து கொண்டு வருகின்றது. ஆனால் அவரோ அவர்களுடைய சிந்தனைகளுக்கு முரண்பட்ட விதத்தில் தோன்றினார். அவர் தோற்றம் தேவனுடைய வார்த்தைக்கொப்ப அமைந்திருந்தது. ஆனால் அவர்களோ வார்த்தையை அறியாமலிருந்தனர். உங்கள் சிந்தனையில் பதிய வேண்டுமென்று இதை நான கூறுகிறேன். இன்றைக்கு உங்களிடமும் அதே தவறு தான் காணப்படுகின்றது. நீங்கள் தேவனுடைய வார்த்தையை அறியாமல் இருக்கிறீர்கள்! இயேசு, `வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களில் அடையாளங்களை நிதானிக்க உங்களால் முடியவில்லையா?’ என்றார். அவர்களோ, `எங்களுக்கு மோசே போன்ற தீர்க்கதரிசிகள் உள்ளனர்’ என்றனர். அதற்கு இயேசு, `மோசேயை அறிவீர்களானால் என்னையும் அறிவீர்கள்’ என்று பதிலுரைத்தார். அவர்கள் மோசேயை அறிந்து கொள்ளவில்லை. ஆகவே தான் அவர்கள் அவரையும் அறிந்து கொள்ள முடியவில்லை. மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகளை மாத்திரமே அவர்கள் அறிந்திருந்தனர். இந்த வயோதிப செம்படவனை எடுத்துக் கொள்வோம். அவன் தன் கூடையைக் கீழே வைத்து, நரைத்திருந்த தன் தாடியை வருவிக் கொண்டே, `அவர் யாரென்பதை நான் அறிந்து கொள்வேன்’ என்று முழு தீர்மானத்தோடு காணப்பட்டான். அப்பொழுது அவன் சகோதரன் அவனிடம் வந்து, `சீக்கிரம் வா, அங்கே போகலாம். நாம் அன்றொரு நாள் கண்ட அந்த மனிதன் தான் அவன்’ (யோவானைக் குறித்து சொல்லுகிறான் - தமிழாக்கியோன்). சென்ற இரவு முழுவதும் நான்அவருடன் கழித்தேன்’ என்று சொன்னான். அதற்கு சீமான், `யார் அந்த காட்டு மனிதனா? இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன் அவன் பிரசங்கத்தை நான் கேட்டிருக்கிறேன்’ என்றான். யோவான் அங்கு ஒரு நாள் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அவன், `இதோ அவர் வருகிறார்’ என்று சொன்னான். அதற்கு அவர்கள், `உனக்கெப்படி தெரியும்?’ என்று கேட்டனர். இயேசு சாதாரண ஒரு மனிதனாகக் காட்சியளித்தார். யோவான் அவர்களிடம், `தேவ ஆவியானவர் அவர்மேல் புறாவைப்போல் இறங்குகிறதை நான் காண்கிறேன், அல்லாமலும், இவர் என்னுடைய நேசகுமாரன் இவருக்குள், வாசம் செய்ய நான் பிரியமாயிருக்கிறேன் என்னும் சத்தம் கேட்கிறது’ என்று கூறினான், பின்பு அவன் தண்ணீருக்குள் சென்று அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். சீமோன் அந்த காட்சியைக் கண்டு, `எனக்கு ஒன்றும் புரியவில்லை. இதைக்குறித்து நான் அனேக முறை கேட்டிருக்கிறேன்’ என்றான். ஆயினும் அவனுடைய இருதயத்தில் முன் குறிக்கப்பட்ட வித்து ஒன்று ஆழமாகப் பதிந்திருந்தது. `இயேசுவின் கூட்டத்திற்குச் சென்று என்ன நேரிடுகிறதென்று பார்க்கலாம்’ என்று சீமோன் கூறிவிட்டு அங்கு சென்றான். அங்கு இயேசு நின்றுகொண்டிருந்தார் - அவர் ஒரு சாதாரண மனிதனாகக் காணப்பட்டார். அவன் இயேசுவையடைந்தவுடன் அவர் அவனைக் கண்டமாத்திரத்தில், `உன் பெயர் சீமோன். உன் தகப்பனாரின் பெயர் யோனா’ என்றார். அது அவனை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அப்பொழுது அவனில் பதிந்திருந்த நித்திய ஜீவனின் வித்து உணர்வடைந்தது. ஆம், ஐயா. பேதுரு அவரிடம், `இதற்கு முன் நீர் என்னைக்கண்டதில்லையே, என் தகப்பனாரும் காலமாகி அனேக வருடங்கள் ஆகின்றதே. எங்ஙனம் எங்கள் பெயர்களை நீர் அறிந்திருக்கிறீர்?’ என்று கேட்டான். பின்பு அவன், `வேதம் என்ன சொல்கின்றதென்று பார்ப்போம்’ (மூப்பர்கள் என்ன கூறுகிறார்கள் என்றல்ல) என்று வேதத்தைப் புரட்டிப் பார்த்து, `மேசியா தீர்க்கதரிசியாயிருப்பாரென்று வேதம் கூறுகிறது. ஆகவே, அவர் தான் மேசியா’ என்று தீர்மானம் செய்தான். ஒரு நாள் இயேசு சில யூதர்களுடன் சமாரியா வழியாய் நடந்து சென்றார். சற்று பின்னர் அவர் அவர்களை விட்டு விலகிச் சென்றார். அப்பொழுது மோசமான பெயரைக் கொண்டிருந்த அந்த பெண் நடந்து செல்வதை அவர் கண்டார். அவள் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டே சென்றிருக்கலாம், அவள் கிணற்றினருகில் வந்து தண்ணீர் மொள்ளத் தொடங்கினவுடன் ஒரு மனிதன் அவளிடம், `குடிப்பதற்கு தா’ என்று கூறுவதை அவள் கேட்டாள். அவள் திரும்பிப் பார்த்து நடுத்தரமான வயதுள்ள ஒரு யூதன் அங்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். அவள், `நீர் யூதரல்லவா? நான் ஒருசமாரிய ஸ்திரீ. நீர் என்னுடன் பேசக்கூடாதே’ என்றாள். அதற்கு அவர், `உன்னிடம பேசுபவர் யாரென்று நீ அறிந்தால், நீயே என்னிடம் தண்ணீர் கேட்டிருப்பாய்’ என்றார். அதற்கு அவள், `உம்முடைய வாளியும் கயிறும் எங்கே?’ என்று கேட்டாள். அவரோ, `நான் கொடுக்கும் தண்ணீர் ஜீவத் தண்ணீராகும்’ என்றார். உடனே அவள், `நீங்களெல்லாம் தேவனை எருசலேமில் தொழுது கொள்ள வேண்டும் என்கிறீர்களே, எங்கள் பிதாக்கள் இங்கல்லவா தொழுது கொண்டு வந்தார்கள்?’ என்று கேட்டாள்.அவர், `அது சரியே, யூதர்களாகிய நாங்கள் யாரை வழிபட வேண்டுமென்பதை அறிந்திருக்கிறோம். ஆனால் மனிதன் எருசலேமிலும் இந்த மலையிலும் மாத்திரமல்ல, எங்கும் தேவனைத் தொழுது கொள்ளும் காலம் வரப்போகிறது, தேவன் ஆவியாயிருப்பதால் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்வார்கள்’ என்றார். இதைக் கேட்ட அவள் அவர் யாரென்பதை ஆராயத் தொடங்கினாள். அவர் அவளை நோக்கி, `உன் புருஷனை அழைத்து வா’ என்றார். அவள் `எனக்குப் புருஷனில்லை’ என்றாள். அதற்கு அவர், `நீ கூறுவது உண்மையே. இதற்கு முன்பு ஐந்து பேருடன் வாழ்ந்திருக்கிறாய். இப்பொழுது உனக்குள்ளது ஆறாவது ஆள்’ என்றார். அந்த வெளிச்சம் தேவன் அவளுக்குள் புதைந்திருந்த வித்தின் மேல் விழுந்தது. ஆம் ஐயா! வித்து பூமிக்குள் புதைந்து இருந்தது. கர்த்தர் தண்ணீரை விலக்கிய பின்னர் சூரிய வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன் அது முளைக்கத் தொடங்கினது என்று நாம் ஆதியாகமத்தில் பார்க்கிறோம். ஆம், வித்து முளைப்பதற்கு வெளிச்சம் அவசியமாயிருக்கிறது. அவ்வாறே இயேசுவுக்குள்ளிருந்த பரிசுத்த ஆவியானவர் அவளுடைய முன்னாள் வாழ்க்கையைக் குறித்து அவளிடம் உரைத்த போது, அந்த வெளிச்சம் வித்தின்மேல்பட்டது. அவள், `நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன்’ என்றாள். மேலும் அவள், `மேசியா வரும் போது அவர் எவ்விதம் இருப்பாரென்பதை நானறிவேன். உண்மையான தீர்க்கதரிசி எங்கள் மத்தியில் தோன்றி நூற்றுக்கணக்கான வருடங்களாகின்றன’ என்றாள். அவள், `என் புருஷனைக் குறித்து எனக்கு எத்தனை பேர் இருந்தனர் என்பதை நீர் அறிவித்தீர், எவ்விதம் அதைச் செய்தீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மேசியா வரும்போது அதையே செய்வார். அப்படினால் நீர் யார்? என்று அவள் வினவினாள். `நான் தான் அவர்’ என்று அவர் பதிலுரைத்தார். ஒரு வேசி அதைக் கண்டுக் கொண்டாள். ஆசாரியர்கள் அவர்கள் சபையாரிடம், `அந்த மனிதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள வேண்டாம். அவனுக்குப் பிசாசு பிடித்துள்ளது’ என்று எச்சரித்தனர். அதுதான் வித்தியாசம். இன்றைக்கும் அதுவே சம்பவிக்கின்றது. ஆம் ஐயா ஒளி வித்தின் மேல் விழுந்ததால் அவள் அவரை அறிந்து கொள்ள முடிந்தது. செம்படவர்கள், மரம் வெட்டுபவர்கள், குடியானவர்கள், சுங்கம் வசூலிப்பவர்கள், வேசிகள் அனைவரும் அவர் செய்யப் போவது என்ன வென்று வேத வாக்கியங்கள் கூறிய அனைத்தும் அவரில் நிறைவேறியதை அறிந்து கொண்டனர். அதே சமயத்தில் பரிசேயர் அவர்களுடைய பாரம் பரியங்களின் காரணத்தால் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் வேசிகள், குடியானவர்கள் போன்றவர்கள் முன்குறிக்கப்பட்டதனால், அவர்களுடைய சந்தேகங்கள் நிவர்த்தியாகி, அவர்களிலிருந்து வித்து முளைக்கத் தொடங்கினது. அந்த சமாரிய ஸ்திரீ, `நான் மேசியாவைக் கண்டதனால் மகிழ்ச்சி யுறுகிறேன்’ என்று கூறியதுடன் நின்றுவிடவில்லை. அவள் தண்ணீர் குடத்தையும் மறந்து விட்டு பட்டிணத்திற்குள் சென்று, `நான் செய்த எல்லாவற்றையும் கூறிய மனுஷனை வந்து பாருங்கள். மேசியா இவைகளைச் செய்வார் என்று வேத வாக்கியங்கள் கூறுகின்றதல்லவா?’ என்றாள். இயேசு கிறிஸ்து யோவான் 14.12ல் கூறியது மறுபடியும் இக்காலத்தில் நிகழும் என்பதை மக்கள் அறிவர். `நோவாவின் நாட்களில் நடந்தது போல....’ என்று லூக்காவில் கூறப்பட்டுள்ளது. தேவன் எங்ஙனம் ஒரு மனிதனால் வெளிப்பட்டு அவருடைய பின்புறத்தில் நடந்ததை அதாவது சாராள் கூடாரத்திலிருந்து சிரிப்பதை பகுத்தறிந்து கூறினாரென்றும், வார்த்தை திரும்பவும் வருமென்றும், அது ஒரு மனிதன் மூலமாக திரும்பவும் அளிக்கப்படு மென்றும் மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளதை நாமறிவோம். தேவனுடைய வார்த்தையானது இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கும் என்று எபிரேயர் 4ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது. தற்போது நிறைவேறுகிறதைக் கண்கூடாகக் கண்டும் அதனின்று அனேகர் அகன்று போகின்றனர். அவர்களுடைய பாரம்பரியம் அதை மறைத்து அவமாக்குகின்றது. அன்றைக்குச் செய்ததை அவர் இன்றைக்கும் செய்யப் போவதாக வாக்களித்து, லவோதிக்கேயா சபையின் தூதனின் மூலம் அக்கிரியைகளைச் செய்துகொண்டு வருகிறார். லவோதிக்கேயா சபை அதைக் கண்ட போதிலும், எபிரேய சபை அதை நிராகரித்தது போன்று அவர்களும் அதை நிராகரிக்கின்றனர். அவர் இக்காலத்தில் வெளிப்பட்டு, மூல விசுவாசத்திற்கு ஜனங்களைத் திரும்புவாரென்று வாக்களிக்கப்பட்டுள்ளது. அவர் தம்மை வெளிப்படுத்த வேண்டுமானால் ஜனங்களின் மத்தியில் அவர் வாசம் செய்து இக்கிரியைகளைச் செய்ய வேண்டும். அவருடைய புகைப்படம் எடுக்கப்பட்டு விஞ்ஞான ரீதியாய் அது நிரூபிக்கப்படவும் அவர் அனுமதித்தார். என்றாலும் அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை. நேற்றும், இன்றும், என்றும் மாறாத (எபி. 13.8) அந்த அக்கினி ஸ்தம்பம் புகைப்படக் கருவி (Camera) யிலுள்ள கண்ணாடியின் (lens) வழியாக ஊடுருவிச் சென்று புகைப்படத்தில் விழுந்து, விஞ்ஞான ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆயினும் அன்று செய்தது போன்று இன்றும் அவர்கள் அதை விசுவாசியாமலிருக்கின்றனர். இவைகளை நாம் அறிந்து கொள்வதற்கு தேவன் தாமே உதவி செய்வாராக என்பதே என் பிரார்த்தனையாகும். இத்துடன் இதை நிறுத்திக் கொள்ளலாம். ஏனெனில் உங்களை அதிக நேரம் தாமதிப்பதற்கு விரும்பவில்லை. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இப்பொழுது நம் மேல் இருப்பதால் முத்திரையைத் திறக்க அவர் நமக்கு உதவி செய்வாரென்று நம்புகிறேன். இன்றைய சபையின் நிலையை நாம் அறிந்து கொண்டவர்களாய், வேத வாக்கியங்களை இப்பொழுது நாம் படிக்கலாம். சபை ஆதியில் என்ன செய்ததென்றும், கடைசி காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்றும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருப்பதையும் நீங்கள் தற்போதுள்ள சபையின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு, நீங்களே தீர்ப்பு கூறுங்கள். நான் தீர்ப்பு கூறமுடியாது தேவனுடைய வார்த்தையை உங்களுக்கு அளிப்பதற்கு மாத்திரமே நான் உத்திரவாதி. அது எனக்கு அளிக்கப்பட்ட பிரகாரம் தான் உங்களுக்கு அறிவிக்கிறேன். எனக்கு அது அளிக்கப்படும் வரை, நானோ அல்லது வேறு யாரும் அதை உங்களுக்கு அறிவிக்க முடியாது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்த போது, மூன்றாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். நான் பார்த்த போது, இதோ ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன், அதின் மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். ஆட்டுக் குட்டியானவர் தம்கரத்திலுள்ள புத்தகத்தின் முத்திரைகளை ஒவ்வொன்றாக உடைக்கிறார். முதலாம், இரண்டாம் முத்திரைகளை உடைத்த பிறகு இப்பொழுது மூன்றாம் முத்திரையை அவர் உடைக்கிறார். அப்பொழுது மூன்றாம் ஜீவனானது.... மூன்றாம் ஜீவன் காண்பதற்கு எவ்விதமிருந்தது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? அது மனுஷ முகம் போன்ற முகத்தை உடையதாயிருந்தது. முதல் இரண்டு ஜீவன்களும் முறையே சிங்கத்திற்கொப்பாகவும் காளைக்கொப்பாகவும் இருந்தன. மனித முகம் போன்ற முகம் கொண்ட இந்த ஜீவன் யோவானிடம், `இது என்னவென்று வந்து பார்’ என்றது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரையைத் திறக்கும் போது, இடிமுழக்கம் போன்ற சத்தமுண்டாகிறது. அது என்னவென்பதைக் காண யோவான் செல்கிறான். அவன் ஒரு கறுப்பு குதிரையையும், அதின் மேல் ஏறியிருக்கிறவன் ஒரு தராசைக் கையில் பிடித்திருப்பதையும் காண்கிறாள். அதை தான் அவன் முதலில் கண்டான். ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார், அந்த ஜீவன் அறிவிக்கின்றது... ஒவ்வொரு ஜீவனும் அதன் முறை வரும் போது, `வந்து பார்’ என்று அறிவிக்கின்றது. ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தவுடன் யோவான் நடந்து செல்கிறான். அவர் முதலாம் முத்திரையைத் திறந்தபோது இடி முழங்கினவாறு ஒவ்வொரு முறையும் முத்திரை திறக்கப்படும்போது, இடி முழங்கியிருக்கக் கூடும். முதலில் வெள்ளைக் குதிரையின் மேல் ஒருவன் சவாரி செய்து வருவதை அவன் காண்கிறான். அவன் இவ்விதம் கடைசி வரைக்கும் சவாரி செய்து கொண்டே செல்வதை யோவான் கவனிக்கிறான். சவாரி செய்பவனின் கையில் ஒரு வில் காணப்படுகின்றது. ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. அடுத்தபடியாக அவன் ஒரு கிரீடம் பெற்றுக் கொண்டு சவாரி செய்து கொண்டு செல்கிறான். பின்னர் வேறொரு முத்திரை உடைக்கப்பட்டபோது யோவான் ஒரு சிவப்பு குதிரையைக் காண்கிறான். அதன் மேல் ஏறியிருந்தவன் கையில் ஒரு பட்டயம் இருந்தது. அவன் பட்டயத்துடன் சவாரி செய்து கொண்டு செல்கிறான். ஜனங்களைக் கொன்று போடவும் சமாதானத்தைப் பூமியிலிருந்து எடுத்துப் போடவும் அவனுக்கு அதிகாரம் கொடுக்கப் படுகின்றது. ஆட்டுக்குட்டியானவர் வேறொரு முத்திரையை உடைக்கிறார். அப்பொழுது மனிதனைப் போன்ற ஜீவன் யோவானிடம், `வந்து பார்’ என்று சொல்ல, அவனும் அது என்னவென்று காணச் செல்கிறான். அப்பொழுது கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்யும் ஒருவனை அவன் காண்கிறான். வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்தவனே சிவப்புக் குதிரையின் மேல் சவாரி செய்தானென்று நாம் சென்ற இரவு பார்த்தோம். யோவான் கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனைக் கண்ட போது, நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, `ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்று படி வாற் கோதுமை யென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’ என்றும் அறிவித்தது. கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்யும் இவனைச் சற்று கவனிப்போம். முதலாம் குதிரையின் மேல் சவாரி செய்தவனே குதிரையை மாத்திரம் மாற்றிக்கொண்டு இரண்டாம் குதிரையில் மேல் சவாரி செய்கிறான் என்று நேற்று இரவு பார்த்தோம். அவன் தன் ஊழியத்தை மாத்திரம் மாற்றிக் கொண்டான். அந்திக்கிறிஸ்துவாகிய அவன் வேறொரு உத்தியோகத்தை ஏற்கிறான். அவன் வெள்ளைக் குதிரையின் மேலிருந்த போது, ஒரு போதகத்தை நுழைக்கிறான் என்று நாம் பார்த்தோம். இப்பொழுது நாம் மூன்றாம் சபையின் காலத்திற்கு வந்துள்ளோம். மூன்றாம் குதிரையை நாம் சிந்திக்கும் போது, அது மூன்றாம் சபையின் காலத்துடன் சம்பந்தப்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதலாம் சபையின் காலத்தில் நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள் தொடங்கி, அவை சபையின் அங்கீகாரம் பெற்றன. அப்பொழுது வெள்ளைக்குதிரையின் மேலிருக்கிறவன் கிரீடம் சூடப்பட்டான். இந்த அந்திக் கிறிஸ்துவின் ஆவி பின்பு ஒரு மனிதனில் வாசம் செய்கிறது. அதன் பின்னர் பிசாசே அந்த மனிதனுக்குள் குடி கொள்வதாக நாம் பார்த்தோம். அசுத்த ஆவி வெளியில் சென்று, பிசாசே உட்புகுகிறான். அந்திக் கிறிஸ்துவின் சபை இவ்விதம் வளர்ச்சியடைந்து கொண்டு வந்த அதே சமயத்தில் மணவாட்டியும் அபிவிருத்தியடைந்து, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளின் மூலம் சீர்திருத்தமடைகிறாள். சபையின் காலங்களில் முதல் மூன்று கட்டங்கள் இருளின் காலங்களில் நிகழ்கின்றன. அடுத்து மூன்று கட்டங்களில் நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகள் உண்டாயின. பின்பு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் தேவன் மனிதனுக்குள் வாசம் செய்து நம்மிடையே வெளிப்படுகிறார். அவன் அந்திக் கிறிஸ்துவாகவும் கள்ளத் தீர்க்கதரிசியாகவும் மிருகமாகவும் இருளின் காலங்களில் இருந்து வந்து, இவ்விதம் அவன் நிலை தாழ்ந்துகொண்டே போகின்றது. ஆனால் உண்மையான சபையைச் சேர்ந்த விசுவாசியோ இருளின் காலங்களிலிருந்து வெளிவந்து, நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்பவைகளின் வழியாக கடந்து சென்று, வார்த்தை அவனுக்குள் குடிகொண்டவனாய் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறான். இது மிகவும் பூரணமாயும் அழகாகவும் இருக்கிறதல்லவா? இது எனக்கு அதிக பிரியம். குதிரை சவாரி செய்பவன் ஒரே ஒருவன்தான். ஆனால் அவன் ஊழியம் வித்தியாசமான கட்டங்களை அடைகின்றன. முதலாம் கட்டத்தில் அவன் வெள்ளைக் குதிரையின் மேலிருக்கிறான். அப்பொழுது அவன் தேவனுடைய வார்த்தைக்கு விரோமாயிருக்கும் அந்திக் கிறிஸ்துவின் போதனைகளைப் போதிக்கிறவனாக மாத்திரம் இருக்கிறான். அந்திக் கிறிஸ்து என்பவன் யார்? தேவன் கூறிய வார்த்தை முற்றிலும் உண்மை யல்ல என்று போதிப்பவனே அந்திக்கிறிஸ்து. அப்படிப்பட்டவர்கள் வார்த்தையை மறுதலிக்கின்றனர். கிறிஸ்துதான் வார்த்தை. முதலாம் கட்டத்தில் அவன் அந்திக்கிறிஸ்துவின் ஆவியாக வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்து, தன் போதனைகளை சபைக்குப் போதிக்கிறான். அது தீங்கற்ற ஒன்றாய் காணப்படுகிறது. அவ்விதமாகவே சாத்தான் நுழைவான். அவன் தந்திரமுள்ள ஒருவன். அவன் ஏவாளிடம், `நீ ஞானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாய். நன்மை, தீமை எதுவென்று அறியாமல் நீ இருக்கிறாய்’ என்றான். மேலும் அவன், `உன் கண்கள் திறக்கப்பட்டால், இவைகளை நீ அறிந்து கொள்ள முடியும். இந்தக் கனி பார்வைக்கு மிகவும் அருமையானதாயிருக்கிறது. அதை இப்பொழுது நீ புசிக்க வேண்டும்’ என்றான். அவள், `கர்த்தர் அதைப் புசிக்க வேண்டாமென்று கட்டளையிட்டிருக்கிறார்’ என்று பதிலளித்தாள். `அது எனக்குத் தெரியும். ஆனால் அவர் அவ்விதம் சொல்லியிருக்க மாட்டார்’ என்று சாத்தான் கூறினான். அவன் மிகவும் இனிமையாக ஏவாளிடம் பேசினான். அது என்ன விளைவித்தது என்று பாருங்கள். அதே போன்று, ஆதிகால சபையில் அந்திக் கிறிஸ்துவின் ஆவி எழும்பி, நிக்கொலாய் போதனைகளை அளித்தது. `நிக்கொலாய் என்பதற்கு சபையார் மேல் ஜெயங்கொள்ளுதல்’ என்று அர்த்தம் - `பரிசுத்த மனிதன்’ என்னும் ஒருவனைச் சபையின் தலைவனாக ஏற்படுத்தல். `நமக்கு ஐக்கியம் மிகவும் அவசியமாயுள்ளது. நாமெல்லாரும் சிதறியிருக்கிறோம். யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள் என்று நாம் அறிந்து கொள்ள முடிவதில்லை. எனவே, நாம் ஒன்றாக இணைந்து ஒரு ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்னும் ஆலோசனைக்கு நாம் இடங்கொடுத்து அதில் அங்கத்தினராகின்றோம். அதன் மூலம் நாம் ஒரு விடுதியை (Lodge) உண்டாக்கிக் கொள்கிறோம். அது மிகவும் உண்மையாகும். மெதோடிஸ்ட் சபை என்னும் ஒரு கிறிஸ்தவ சபை இருக்க முடியாது. அது சபையல்ல. அது ஒரு விடுதி. அவ்விதமாகவே பாப்டிஸ்ட் சபை என்று அழைக்கப்படுவது ஒரு சபையன்று. அது ஒரு விடுதி. ஒரே ஒரு சபைதான் உண்டு. அது இயேசு கிறிஸ்துவின் மறைவான (Mystical) சரீரமாயிருக்கிறது. அதில் நீங்கள் முன்குறித்தலினால் பிறக்க வேண்டும். அது மிகவும் உண்மை. `பிதாவானவர் எனக்குத் கொடுக்கிறது யாவும் என்னிடத்தில் வரும். பிதாவானவர் ஒருவனை அழைக்காவிட்டால் அவன் வர முடியாது’ என்று இயேசு கூறியுள்ளார். கடைசி நபர் உட்பிரவேசிக்கும் வரை ஆட்டுக் குட்டியானவர் அங்கு பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி நபர் உட்பிரவேசித்து விட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் புறப்பட்டு சென்று தம் உடமைகளைப் பெற்றுக் கொள்கிறார். அவர் தமது சபையை வீட்டிற்கு அழைத்து வந்து, சத்துருவையும் அவனுடைய பிரஜைகளையும் அக்கினிக் கடலில் தள்ளுகிறார். பின்பு நாம் ஆயிரம் வருஷ அரசாட்சியில் பங்கு கொள்கிறோம். குதிரை சவாரி செய்பவன் ஒரே மனிதன் தான். முதலாம் கட்டத்தில் அவன் களங்கமற்றவனைப் போல காணப்படுகிறான். பின்னர் அவனுக்குக் கிரீடம் சூடப்படுகிறது என்பதாக வேதம் உரைக்கிறது. அவர்கள் ஒரு பராக்கிரமசாலிக்கு (Superman) கிரீடம் சூடுகின்றனர். அவனைப் `போப்பாண்டவர்’ என்று வேதம் அழைப்பதில்லை, கள்ளத் தீர்க்கதரிசியென்று தான் வேதம் அழைக்கிறது. அவன் அந்திக் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டவனாய் தேவனுடைய மூல வார்த்தைக்கு விரோமாய் பிரசங்கிப்பதனால் அவன் கள்ளத் தீர்க்க தரிசியாகத் தான் இருக்க வேண்டும். மூல வார்த்தைக்கு விரோதமாய் பிரசங்கிக்கிற எவனும் அந்திக்கிறிஸ்துவே, ஏனெனில் வார்த்தை தேவனாயிருக்கிறது. அதன் பின்னர் அவனுக்குக் கிரீடம் சூடப்படுகிறது என்று நாம் பார்க்கிறோம். தொடக்கத்தில் அவன் களங்கமற்றவனாக எவ்வித உதவியுமற்ற ஒரு சிறு ஆளாகக் காணப்படுகிறான். ஆனால் நிசாயா மகாநாட்டில் கான்ஸ்டன்டைன் (Constantine) அரசன் அவனுக்கு எல்லா சொத்துக்களையும் கொடுத்தான். அதன் பின்பு அவன் என்ன செய்கிறான்? சாத்தான் தன் சிங்காசனத்தையும் அதிகாரத்தையும் அவனுக்கு அளிக்கிறான். வேதம் அவ்வாறு கூறுவதை நாம் முன்பே படித்திருக்கிறோம். இதற்கு முன்பிருந்ததும் இனி இருக்கப் போவதுமான அரசியல் எல்லாவற்றின் மேலும் பிசாசு ஆதிக்கம் வகிக்கிறான் என்று நாம் மத்தேயு 4.11ல் பார்க்கிறோம். அரசியல் ஆதிக்கம் கொண்டிருக்கும் இவன், பின்பு சபையில் நுழையப் பார்க்கிறான். ஆகவே, சபையை ஏமாற்ற அவன் முனைகிறான். அவன் தன் பராக்கிரமசாலியை ஸ்தாபனத்திற்குள் நுழையச் செய்து, அவனைப் பிரதிகுருவாக (Vicar) ‘கிறிஸ்துவுக்குப் பதிலாக’ என்று அர்த்தம் கொள்ளும் பட்டத்தால் முடி சூட்டுகிறான். கிறிஸ்து தேவனுக்குப் பதிலாக கிரியை செய்தார். இந்த மனிதன் தேவனுக்குப் பதிலாக இருப்பவனாகக் கருதப்படுகிறான். அவன் கிறிஸ்துவின் கீழ் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டுள்ளதாக எண்ணப்படுகிறான். சாத்தான் அவன் ஏற்கனவே கொண்டிருந்த அரசியல் ஆதிக்கத்தையும், முடி சூட்டப்பட்டதினால் பெற்ற மதசம்பந்தமான ஆதிக்கத்தையும் ஒன்றாக இணைக்கிறான். நரகத்தின் மேலும் அவன் ஆதிக்கம் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஜனங்கள் போதிய பணம் கொடுத்தால், அவர்களை அவன் நரகத்திலிருந்து விடுவிப்பானாம். அவன் பாவ விமோசன ஸ்தானத்திற்குப் (Purgatory) பிரதிகுருவாக இருப்பதாக கருதப்படுகிறான். பாபவிமோசன ஸ்தானம் என்பது வேதத்தில் காணப்படுவதில்லை. அவனாக அதை உண்டாக்கிக் கொண்டான். அவன் பாதாளத்திலிருந்து ஏறி வருவதாக வேதம் சொல்லுகிறது. அவன் அதே வழியில் மறுபடியும் சென்று நாசமடைவான். ஆனால் இப்பொழுது அவன் பூலோகத்தில் ஆளுகை செய்கிறான். முதலில் அவனிடம் ஒரு வில் இருந்தது. ஆனால் அவனிடம் அம்புகள் இல்லை. இப்பொழுது அவன் கையில் ஒரு பெரிய பட்டயம் இருப்பதால் அவன் ஏதாவது ஒன்றைச் செய்ய முடியும். அவன் வெள்ளைக் குதிரையிலிருந்து இறங்கி ஒரு சிவப்பு குதிரையின் மேலேறுகிறான் இரத்தம், இரத்த சிவப்பு நிறமுள்ள குதிரையின் மேல் அவன் சவாரி செய்து செல்கிறான். நேற்று இரவு உடைக்கப்பட்ட இரண்டாம் முத்திரையில் அவன் பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப் போட்டானென்றும், ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்றனர் என்றும் நாம் பார்த்தோம். ஹிப்போ நாட்டைச் சேர்ந்த பரி. அகஸ்டின் நாட்கள் முதற்கொண்டு 1580ம் வருடம் வரை 68,000,000 பிராடெஸ்டெண்டுகள் இரத்த சாட்சிகளாக மரித்துள்ளனர் என்று ரோமன் கத்தோலிக்க சபையின் இரத்த சாட்சிகளின் பட்டியலே கூறுகின்றது. ஸ்மக்கர் (Smucker) என்பவர் எழுதிய `மகிமையுள்ள சீர்திருத்தம்’ (Glorious Reform) என்னும் புத்தகத்தில் இது காணப்படுகிறது. பரிசுத்தவான் என்று அழைக்கப்பட்ட ஒருவர், ரோம சபையின் கொள்கைகளுடன் இணங்காதவன் மதத்துரோகியாகக் கருதப்பட்டு கொலை செய்யப்பட வேண்டுமென்ற வெளிப்பாட்டைப் பெற்றபோது, அவர்கள் ஜனங்களைக் கொல்லத் தொடங்கினர். அவன் சிவப்பு குதிரையின் மேலேறி, இரத்தம் சிந்திக் கொண்டே சவாரி செய்தான். அவன் ஆதிக்கம் பெற்று, பரலோகத்தின் பிரதிகுருவாக நியமிக்கப்பட்டு, தேவனைப் போல் ஆராதிக்கப்பட்டான். அவனுக்கு ஒரு கிரீடம் அளிக்கப்பட்டு, சபையையும் அரசாங்கத்தையும், அவன் ஒன்றாக இணைத்து, பூமியின் மேல் ஆளுகை செய்தான். பூமியில் அவன் தேவனைப் போலவே இருந்தான். அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாத எவரையும் கொல்வதற்கு அவன் அதிகாரம் பெற்றிருந்தான். யார் அவனுக்கு விரோதமாக ஏதாவதொன்றைக் கூற முடியும்? அவன் சபைக்குத் தலைவனாக இருக்கிறபடியால், சபை அவனுக்கு விnhதமாக ஒன்றும் கூற முடியாது. அவ்வாறே, அரசாங்கத்தின் தலைவனாக அவன் இருக்கும் காரணத்தால், அரசாங்கமும் ஒன்றும் கூற முடியாது. ஆகவே, அவர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். சிறு சிறு சபைகள் யாவும் உடைக்கப்பட்டு, அவர்கள் சிங்கங்களுக்கு இரையாயினர். வலுசர்ப்பமாகிய ரோமாபுரி அவனுக்குத் தன் சிங்காசனத்தையும் அதிகாரத்தையும் கொடுத்ததாக வேதம் கூறுகிறது. ஆகவே, அவன் குதிரையை இரத்த வெள்ளத்தின் வழியாக ஒட்டினதன் காரணமாக அதன் நிறம் சிவப்பாக மாறியது. இப்பொழுது யோவான் அவனைக் கறுப்பு குதிiயின்மேல் காண்கிறான். எனக்கு வெளிப்பாடு அளிக்கப்பட்ட விதத்தில் நான் அதை உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். இது வேத வாக்கியங்களுடன் பொருந்தாவிடில் இந்த வெளிப்பாட்டை தேவன் எனக்களிக்கவில்லை யென்று அர்த்தம். வேத வாக்கியங்கள் மற்ற வேதவாக்கியங்களுடன் இணங்க வேண்டும். கர்த்தருடைய தூதன் வேத ஆதாரமாக என்னிடம் ஒன்றைக் கூறாவிடில், நான் அவனை நம்பவே மாட்டேன். அன்று சிக்காவோவில் நூற்றுக்கணக்கான போதகர்கள் மத்தியில் நான் நின்று கொண்டிருந்தேன்... யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தீர்களா? அப்பொழுது நான் அவர்களிடம் `எனக்கு விரோதமாக நீங்கள் என்ன நினைத்திருக்கிறீர்கள்? என்னை குறுக்கு விசாரணை செய்வதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இடத்தில் நிற்பீர்கள் என்றும், நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த அறையில் அந்தக் கூட்டம் நடைபெறப் போவதில்லையென்றும் மூன்று நாட்களுக்கு முன்னமே பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார்’ என்றேன். நான், `என் போதனைகளுக்கு முரண்பட்ட கருத்துக்களை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள். கேள்விகள் பல கேட்டு என்னை மடக்க வேண்டுமென்று நீங்கள் மனதில் எண்ணம் கொண்டிருக்கிறீர்கள். உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்துடன் என் பக்கத்தில் வந்து என் போதகம் தவறென்று நிரூபிக்க உங்களை அழைக்கிறேன்’ என்றேன். அப்பொழுது எல்லோரும் அமைதியாயிருந்தனர். அப்பொழுது நான், `உங்களுக்கு என்ன நேரிட்டது? தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் உங்களால் நிற்க முடியாதென்று நீங்கள் அறிந்து கொண்டீர்களென்றால், எனக்குப் பின்னால் சென்று விடுங்கள்’ என்று சொன்னேன். `வேத படிப்பில் டாக்டர் பட்டம் பெற்று ஒருவரையொருவர் டாக்டர், டாக்டர் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே, நான் எந்த வேத பள்ளியிலும் படித்தது கிடையாது. உங்கள் வேதாகமத்துடன் என் பக்கத்தில் வந்து, சர்ப்பத்தின் வித்து, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் போன்ற என்போதனைகள் தவறென்று நிரூபியுங்கள்’ என்றேன். அவர்களில் ஒருவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. நான் இதுவரை கண்டதிலேயே மிகவும் அமைதியாக குழுவாக அது இருந்தது. உங்களில் அனேகருக்கு அச்சம்பவம் நினைவிருக்கும். எனக்கு ஒன்றும் தெரியாதென்று அவர்கள் பறை சாற்றுகின்றனர். நான் யாருடைய விவகாரத்திலும் தலையிடுவது கிடையாது. ஆனால் ஏதாவது ஒரு தர்க்கத்தில் அவர்கள் என்னை சிக்கவைக்க விரும்பினால் நானாகவே அங்கு சென்றிருக்கமாட்டேன். ஆனால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம், `அங்கே போ, நான் உன்னோடு கூட இருப்பேன்’ என்றார். அந்தக் கூட்டம் நிகழும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்னரே - சகோ. கார்ல்ஸன், சகோ. டாமிஹிக்ஸ் இவர்கள் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தனர் நான் அவர்களிடம் சென்று, `கூட்டத்திற்கென்று நீங்கள் ஆயத்தம் செய்துள்ள அந்த ஸ்தலத்தை ரத்து செய்ய நேரிடும் என்று கூறினேன். புயல் அடித்துக் கொண்டிருந்த ஓர் இரவு அன்று, நான் அப்பொழுது கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த தருணம், அவர் என்னிடம், `அந்த மூன்றாம் வரிசை கட்டிடத்திலுள்ள ஜன்னலின் அருகே நின்று கொள்’ என்று கூறினார். நானும் அவ்விதமே செய்தேன். அப்பொழுது அவர் என்னிடம், `சிக்காகோவின் போதகக் குழுவில் உன்னைப் பேச அழைப்பார்கள். நீ போதித்த என் வார்த்தையின் போதனைகளில் உன் பேரில் குற்றம் கண்டுபிடிக்க உனக்கு கண்ணி வைக்க வேண்டுமென்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்’ என்றார். மேலும் அவர், `கூட்டத்தை நடத்துவதற்கென்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த ஸ்தலம் அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அவர்கள் வேறொரு ஸ்தலத்தை ஆயத்தம் செய்ய நேரிடும்’ என்று சொல்லி, `அந்த ஸ்தலத்தைப் பார்’ என்று அதை தரிசனத்தில் எனக்குக் காண்பித்தார். அந்தக் கூட்டம் நடைபெறுவதை நான் தரிசனத்தில் முன்கூட்டியே கண்டேன். ஒரு மூலையில் நான் அமர்ந்திருந்தேன். அப்போதகர்கள் கூட்டத்தில் எங்ஙனம் உட்கார்ந்திருந்தனரோ அதே விதமாக உட்கார்ந் திருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். அப்பொழுது நான் கர்த்தரிடம், `அவர்கள் எனக்குக் கண்ணி வைக்க விருப்பங் கொண்டிருந்தால் நான் அங்கு போகாமலிருப்பது நல்லது. ஏனெனில் நான் அவர்கள் மனதைப் புண்படுத்தவோ அல்லது தவறிழைக்கவோ விரும்பவில்லை’ என்று சொன்னேன். அவரோ, `நீ அங்கு செல், நான் உன்னுடனே கூட இருப்பேன்’ என்றார். அவர் அந்த வார்த்தையை நிறைவேற்றினார். இங்கு உட்கார்ந்திருப்பவரில் சிலர் அந்தக் கூட்டத்தில் என்ன நேர்ந்ததென்பதற்கு சாட்சிகளாயிருக்கிறீர்கள். அந்த சம்பவம் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களும் உள்ளன. இந்த மூன்றாம் முத்திரையின் இரகசியம் இதுவே. இன்று விடியற்காலையில் அது எனக்கு வெளியானபோது தான் துரிதமாக வேதவாக்கியங்களை ஆராயத் தொடங்கினேன். அது உண்மையாகவே இருந்தது. எனவே, இதுவரை மூன்று முத்திரைகளுக்கு தெய்வீக வெளிப்பாடு கிடைத்து விட்டது. கறுப்புக் குதிரையைக் குறித்து எனக்குக் கிடைத்த வெளிப்பாடு இதுவேயாகும். அவன் இருளின் காலங்களில் சவாரி செய்து கொண்டு செல்கிறான். கறுப்பு குதிரை இருளின் காலங்களுக்கு அறிகுறியாகும். உண்மையான விசுவாசிகளுக்கு அது நள்ளிரவு போன்ற காலம். இருளின் காலங்களில் உண்டாயிருந்த சபையைப் பார்த்து அவர், `உனக்குக் கொஞ்சம் பெலனிருக்கிறது’ என்கிறார். உண்மையான விசுவாசிக்கு அது நள்ளிரவாயிருந்தது. உண்மையான சபை அப்பொழுது நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது. ஏனெனில் இவன் சபையின் மேலும் அரசாங்கத்தின் மேலும் அதிகாரம் பெற்றிருந்தான். அவர்களால் என்ன செய்ய முடியும்! கத்தோலிக்க மார்க்கம் இவ்வாறு சபையின் பேரிலும் அரசாங்கத்தின் பேரிலும் அதிகாரம் கொண்டிருந்தால், அந்த மார்க்கத்துடன் இணங்காதவர் அனைவரும் கொலை செய்யப்பட்டனர். ஆகவே தான் அவன் கறுப்பு குதிரையின்மேல் காணப்பட்டான். சபையின் சரித்திரத்தை நீங்கள் அறிந்திருந்தால் அவன் செய்த அந்தகாரக் கிரியைகள் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அதை அறிந்து கொள்வதற்கு சரித்திரம் அறிய வேண்டுமென்னும் அவசியமும் கிடையாது. இப்பொழுது கவனியுங்கள், சபை எல்லா நம்பிக்கையும் அற்ற நிலையில் இருந்தது அதுதான் அவன் ஏறியிருந்த கறுப்புக் குதிரையை எடுத்துக்காட்டுகின்றது. அவன் முதலில் வெள்ளைக் குதிரையின் மேலேறியிருந்தான் தந்திரமுள்ளவன், அதன் பின்பு சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு லட்சக்கணக்கானவரை அவன் கொன்று போட்டான். அவன் இப்பொழுதும் அதைச் செய்து கொண்டு வருகிறான், இப்பொழுது அவன் கறுப்பு குதிரையின் மேலேறி சவாரி செய்கிறான். இருளின் காலங்கள் சபை அதிகாரம் பெற்றவுடன் நூற்றுக்கணக் கான வருடங்களாக அது அடக்கு முறையைக் கையாண்டு எல்லாவற்றையும் நசுக்கிப் போட்டது, அதை தான் கறுப்பு குதிரை குறிக்கின்றது. அவன் கையிலே தராசு இருந்தது. `ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை, ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமை’ என்னும் சத்தம் அப்பொழுது உண்டானது. கோதுமையும் வாற்கோதுமையும் நாம் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களாம். ஆனால் அவன் காசுக்கு அதை விற்கிறான். அதன் அர்த்தம் என்னவெனில், அவனுடைய பிரஜைகளிடம் ஜெபம் ஏறெடுப்பதற்கும் கூட அவன் காசு வாங்குகிறான். இன்றைக்கும் அவர்கள் மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்காக நொவினா (Novena) என்பதை ஏறெடுத்து அதற்குக் காசு வாங்குகின்றனர். அவன் உலகத்தின் செல்வமனைத்தையும் கைப்பற்றி, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையும் தராசில் நிறுத்துக் தருகிறான். கறுப்பு குதிரையின் மேலிருக்கிறவன் தன் பிரஜைகளிடமிருந்து பணத்தை அபகரிக்கிறான். உலகத்தின் செல்வமனைத்தையும் அவன் பெற்றிருப்பதாக வேதம் கூறுகின்றது. நேற்று இரவு நான் சொன்னது போன்று, ருஷியா போன்ற நாடுகள் தங்கள் தங்கள் பிரஜைகளிடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக்கொள்கின்றன. இன்றைய சபைகளில் காணப்படும் பணம் எங்கிருந்து வந்தது என்பதை இப்பொழுது அறிகிறீர்களா? அதனின்று விலகியோடுங்கள் லட்சக்கணக்கான டாலர்கள் செலவழித்து ஒரு பெரிய ஸ்தாபனம் உண்டாக்குதல்.... அவள் தாய் யாரென்பதை அறிந்து கொண்டீர்களா? ஆண்டவரே, உமக்கு நன்றி செலுத்துகிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஆம். ஐயா அது தேவனுடைய பெரிய கிருபை, அது நள்ளிரவின் காலமாயிருந்தது. அவன் அவ்விதமான ஜீவியத்திற்கு காசு வாங்குகின்றான். பார்லியும் வாற்கோதுமையும் இயற்கையாக வளரும் தானியங்கள். அவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தைக் கடைபிடிக்கவில்லை. அவன் தன் பிரஜைகளுக்கு அளிந்திருந்த ஜீவியத்திற்குப் பணத்தை வசூலிக்கிறான். ஜனங்கள் பாபவிமோசன ஸ்தானத்திலிருந்து (Purgatory) வெளியேறுவதற்கு ஜெபம் ஏறெடுக்கப்படுவதற்கென அவன் காசு வசூலிக்கிறான். இதை நான் சபையின் சரித்திரத்தில் வாசித்தேன். மரித்தவர்களின் ஆத்துமாக்களுக்காக நொவீனா (Novena) என்னும் ஒருவகை தவசு ஏறெடுக்கின்றனர். அதற்கென பணம் செலுத்தப்பட வேண்டும். உலகத்தின் செல்வத்தை அவன் சபைக்குள் கொண்டு வருகிறான். அவன் இப்பொழுதும் சவாரி செய்து கொண்டிருக்கிறான். ஆம், ஐயா, இந்த முத்திரையின் முக்கியமான பாகத்தை சற்று கவனியுங்கள். `எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’ அதில் சிறிது மாத்திரமே விடப்பட்டுள்ளது. `அதைத் தொடாதே’ எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் சில வசனங்களை நான் உங்களுக்குத் தருகிறேன். லேவியராகமம் 8.12ல் ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கு முன்பு எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறான். சகரியா 4.12ல் குழாய்களின் வழியாக இறங்கும் எண்ணெய் தேவனுடைய ஆவிக்கு ஒப்பிடப்படுகிறது. மத்தேயு 25.3.4ல் புத்தியில்லாத கன்னிகைகளிடம் எண்ணெய் இல்லையென்றும் புத்தியுள்ள கன்னிகைகளிடம் எண்ணெய் இருந்தது என்றும் கூறப்படுகிறது - பரிசுத்த ஆவியின் நிறைவு ஆகவே எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. ஓ மகிமை! உங்களுக்குப் புரிகிறதா? சரி. எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும் திராட்சரசம் வெளிப்பாடு அளிக்கும் ஊக்கத்திற்கும் (Stimulation of revelation) அடையாளமாய் உள்ளன. எனக்கு எல்லாவிடங்களிலும் ஓட வேண்டுமென்ற உணர்ச்சி இப்பொழுது ஏற்படுகின்றது. ஆண்டவர் இதை எனக்கு, வெளிப்படுத்தின போது, உணர்ச்சி மிகுதியால் அக்கம் பக்கத்திலுள்ளவர்களை நான் தூக்கத்தினின்று எழுப்பாதாது ஆச்சரியம் தான் வெளிப்பாடு அளிக்கும் ஊக்கம், வேதத்தில் எண்ணெயும் திராட்சரசமும் எப்பொழுதும் ஒருங்கே கூறப்பட்டுள்ளன. வேதத்தின் ஒத்துவாக்கிய சங்கிரகத்தை (Concordance) நான் பார்த்தபோது, எண்ணெயும் திராட்சரசமும் ஒன்று சேர்த்து கூறப்பட்டுள்ள அநேக வரிகளை அதில் கண்டேன். வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையின் உண்மையான அர்த்தம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ள தம் பரிசுத்தவான்களுக்கு வெளிப்படும் போது, அது அவர்களை ஊக்குவிக் கின்றது. திராட்சரசத்தை ஒருவன் பானம் பண்ணினால், அது அவனுக்கு ஊக்கமளிக்கின்றது. மகிமை! இப்பொழுது நான் ஊக்குவிக்கப்பட்டு, சந்தோஷ மிகுதியினால் சத்தமிடவேண்டுமென்று எனக்குத் தோன்றுகிறது. திராட்சரசம் குடிக்கும் ஒருவன் எவ்விதம் ஊக்கம் பெற்று அசாதாரணமான விதத்தில் நடக்கின்றானோ, அதேவிதமாக தேவனுடைய ஆவியைப் பெற்ற விசுவாசிகளுக்குத் தேவனுடைய சத்தியம் வெளிப்படும் போது, அவர்களும் ஊக்குவிக்கப்பட்டு அசாதாரண விதத்தில் நடக்கத் தலைப்படுகின்றனர். மகிமை! இன்றைக்கும் அதுவே அவர்களிடையே சம்பவிக்கின்றது. இதற்கு வேறு ஆதாரம் வேண்டுமானால் அப்போஸ்தலர் 2ம் அதிகாரம் படியுங்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி அவர்கள் மேல் ஊற்றப்பட்டு, அதைக் குறித்த வேதவாக்கியம் நிறைவேறினபோது.... பரிசுத்த ஆவிக்காக அவர்கள் காத்திருந்து எட்டுநாள் கழித்து மாற்கு மத்தேயுவை நோக்கி, `நாம் ஏற்கனவே அதை பெற்றுக் கொண்டு விட்டோம். நண்பர்களே, அப்படித்தானே? இன்னும் நான் ஏன் காத்துக் கொண்டிருக்க வேண்டும்? நாம் இப்பொழுதே சென்று ஊழியத்தைத் தொடங்க வேண்டும். அவர் இங்கு காத்திருக்கும்படி சொன்னார். நாம் அவ்விதம் காத்திருந்து எட்டு நாட்களாயிற்று’ என்று சொல்லியிருந்தால் என்னவாயிருக்கும்? அவர்கள் ஒருக்கால், `இன்னும் ஒரு நாள் கூட நாம் காத்துப் பார்ப்போம்’ என்று சொல்லியிருப்பார்கள். ஒன்பது நாட்கள் கழிந்தன. யோவான் ஒருக்கால் மற்றவர்களைப் பார்த்து, `இனி நாம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லையென்று நினைக்கிறேன். பரிசுத்த ஆவியை நாம் ஏற்கனவே பெற்றுக் கொண்டு விட்டோம் என்று எண்ணுகிறேன்’ என்று சொல்லியிருக்கக் கூடும். அப்பொழுது சீமோன் அவனிடம் திறவுகோல்கள் இருந்தன `சற்று பொறுங்கள், வேதவாக்கியம் என்ன சொல்கிறதென்று கவனிப்போம். இவ்வளவு நாட்கள் காத்திருக்க வேண்டுமென்று அவர் திட்டவட்டமாகக் கூறவில்லை. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்வரை, யோவேலின் தீர்க்கதரிசனம் நிறைவேறும் வரை, `பரியாச உதடுகளினாலும் அன்னிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடு பேசுவேன்! அதுவே அவர்கள் இளைப்பாறுதல்’ என்னும் ஏசாயாவின் தீர்க்க தரிசனம் நிறைவேறும் வரை காத்திருங்கள் என்று கூறினார்’ என்று சொல்லியிருப்பான். அதுவே அவர்கள் மேல் ஊற்றப்பட்ட திராட்சரசமாகும். வேதத்தில் திராட்சரசம் என்பது இளைப்பாறுதலைக் குறிக்கிறது. இது தேவனுடைய சமூகத்திலிருந்து வரும் இளைப்பாறுதலாகும். பரிசுத்த ஆவி அக்கினி மயமாக அவர்கள் மேல் விழுந்தபோது அது அவர்களை ஊக்குவித்து உணர்ச்சி பெறச் செய்தது. அவர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள் என்று ஜனங்கள் சொல்லும் அளவிற்கு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். ஆனால் இது வெளிப்பாட்டினால் உண்டான உணர்ச்சியாகும். தேவன் வாக்குத்தத்தம் பண்ணினது அவர்களுக்கு வெளிப்பட்டு அடையாளங்களினால் உறுதிபடுத்தப்பட்டது. ஆமென், ஆகவே தான் பேதுரு அங்கு எழுந்து நின்று, `இதற்கு இது அர்த்தம். இது அதைக் குறிக்கிறது’ என்று தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டை ஜனங்களுக்கு எடுத்துரைத்தான் வெளிப்பாட்டினால் தூண்டப்படுதல். பேதுரு அங்கு எழுந்து நின்று, `யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, எனக்குச் செவி கொடுங்கள். டாக்டர் பட்டம் பெற்ற மேதைகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்’ என்றான். என்னஆச்சரியம்! வெளிப்பட்டது! வெளிப்பட்டது! அவர்கள் வெளிப்பாட்டினால் தூண்டப்பட்டு அது அடையாளங்களினால் உறுதிப்பட்டது. எல்லா காலங்களிலும் அது போன்றே சம்பவிக்கின்றது. இக்காலத்திலும் தேவன் ஒன்றைச் செய்யப் போவதாக வாக்களித்துள்ளார். இக்கடைசி நாட்களில் முத்திரைகளை உடைத்து இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாக அவர் நமக்கு வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். அந்த இரகசியங்கள் வெளிப்படுவதைக் காணும்போது நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறது. அவர் கூறினது ஒன்றாகிலும் நிறைவேறாமல் இல்லையென்பதை நாம் தைரியமாக யாரிடமும் கூற முடியும். கடைசி நாட்களுக்கென அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் நிறைவேறுவதைக் காணும் போது என் இருதயம் சந்தோஷத்தினால் பொங்குகின்றது. அது இப்பொழுது வெளிப்பட்டு உறுதிப்படுவதை நான் காண்கிறேன். நான் அதிக பக்திவசப்படுவதாக சில சமயங்களில் உங்களிடம் கூறுவதுண்டு. அப்படியானால் வெளிப்பாட்டினால் நான் அதிக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன் என்பது அதன் அர்த்தம். சரி, அவர்கள் வெளிப்பாட்டினால் அதிக உணர்ச்சிவசப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை நிரூபித்துக் காண்பித்தனர். தேவன் தம் வாக்குத்தத்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தின போது, மகிழ்ச்சியினால் ஏற்பட்ட உணர்ச்சி அவர்களில் பொங்கி எழுந்ததனால், `அவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்கள்’ என்று ஜனங்கள் சொல்லத் தொடங்கினர். அவர் அதை வெளிப்படுத்தினது மாத்திரமல்ல. அதை நிரூபித்தும் காண்பித்தார். ஆகவேதான் நான் அடிக்கடி உங்களிடம், `ஒரு மனிதன் எதை வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அது தேவனால் நிரூபிக்கப்பட வேண்டும்’ என்று கூறுவதுண்டு. `ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை. அவனுக்கு நீ பயப்பட வேண்டாம். அவன் சொன்னது நிறைவேறினால், அது நான் கூறியதாகும் என்பதை நிரூபிக்கிறது’ என்று வேதம் உரைக்கிறது. மேசியா வரும்போது என்ன செய்வாரென்று வேதம் கூறியுள்ளதை அந்த சமாரியா ஸ்திரீ அறிந்திருந்தாள். வேதம் கூறியவாறே இயேசு செய்தபோது அவள், `இவர் மேசியாவாவென்று வந்து பாருங்கள். மேசியா வரும்போது இவை நிறைவேறுமென்று வேதம் உரைக்கவில்லையா?’ என்று கூறினாள். அவள் வெளிப்படுத்தலின் மூலம் ஊக்குவிக்கப்பட்டாள். அது நிறைவேறினபோது அவள் உணர்ச்சி வசப்பட்டாள். அவள் `கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன். அவர் வரும் போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்’ என்றாள். அவள் அதை அறிந்து கொண்டாள். அவர், `நானே அவர்’ என்று கூறினபோது அவளுக்குள் அந்த உணர்ச்சி தொடங்கினது. அவள் ஊர் முழுவதும் சத்தமிட்டுக் கொண்டே சென்றாள். அவள் தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு ஓடோடிச் சென்று ஊர் ஜனங்களிடம், `வந்து பாருங்கள்’ என்றாள். கிழக்கு தேசத்து பழக்கவழக்கங்களை நீங்கள் அறிவீர்களானால் அவள் அவ்விதம் செய்தது தவறாகும். அத்தகைய ஸ்திரீ கூறுவதை யாருமே கேட்க மாட்டார்கள். முறைதவறி நடக்கும் ஸ்திரி என்னும் மோசமான பெயரை அவள் கொண்டிருந்தாள். அத்தகையவள் வீதியில் சென்று இவ்விதம் சத்தமிடும்போது, யாருமே அவளுக்குச் செவி கொடுக்க மாட்டார்கள். ஆனால் சகோதரனே! அவளிடம் ஜீவனுள்ள வார்த்தை இருந்தது. அவள் உணர்ச்சி மிகுதியால் தூண்டப்பட்டாள். காற்று பலமாக அடிக்கும் நாளில் எரிந்துகொண்டிருக்கும் வீட்டில் தீயை அணைப்பது கடினம். ஏனெனில் காற்று சதா அடித்துக்கொண்டே யிருக்கும். அது போன்றே அவளுடைய உணர்ச்சியை யாரும் அடக்க முடியவில்லை. ஏனெனில் தேவனுடைய அக்கினி அவளில் எரிந்து கொண்டேயிருந்தது. ஆம், ஐயா. அவள் அவர்களிடம், `நான் கூறுவதை நீங்கள் நம்பாவிடில் கூட்டம் நடந்துகொண்டிருக்கும் இடத்திற்கு வாருங்கள். அப்பொழுது நான் உங்களுக்குக் காண்பிப்பேன்’ என்றாள். ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் சென்றனர். அவர் மேலும் ஒருமுறை அக்கிரியைகளைச் செய்யவில்லை. ஆனால் அந்த ஸ்திரிக்கு ஏதோ ஒன்று நேர்ந்துள்ளது என்பதை மாத்திரம் அவர்கள் அறிந்து கொண்டனர். அவன் முற்றிலும் மாறிவிட்டதால், ஜனங்கள் அவரில் விசுவாசம் கொண்டனர். ஏனெனில், `விசுவாசம் கேள்வியினால் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் கேட்பதனால் வரும். தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதை அவர்கள் கண்கூடாகக் கண்டனர். அது ஒரு வித்தாயிருப்பதால், அது விதைக்கப்படும் போது முளைக்கத் தொடங்குகிறது. அது எதைக் குறித்துப் பேசுகின்றதோ அதே பலனை அது தருகின்றது. அங்ஙனம் அது செய்யாவிடில், அது தேவனுடைய வித்தல்ல, அல்லது விதைக்கிறவன் அதை விதைக்க வேண்டிய முறையை அறியவில்லையென்று அர்த்தம். அதாவது, தேவனுடைய வார்த்தையை விதைப்பதற்கு அவன் தேவனால் அனுப்பப்படவில்லை. அவன் விதையை மலையின்மேல் அல்லது விதைக்கக்கூடாத ஸ்தலத்தில் தெளித்திருப்பான். விதை சரியான இடங்களில் விழும்போது, அது சரியாக முளைக்கிறதாவென்று தேவன் பார்த்துக் கொள்கிறார். கறுப்பு குதிரையின் மேலிருக்கிறவனிடம், `எண்ணெயையும் திராட்ச ரசத்தையும் தேசப்படுத்தாதே. அவைகளில் சிறிது தான் மீந்திருக்கிறது. நீ ஜனங்களுக்கென வகுத்திருக்கும் வாழ்க்கையை அவர்களுக்கு நிறுத்துத் தருவதைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமில்லை. அது உன் விருப்பம். ஜனங்களிடம் நீ அதற்காக காசு வசூலிக்கப் போகிறாய். ஆனால் எண்ணெயையும் திராட்சரசத்தையும் நீ காணும் போது, அதை சேதப்படுத்தாமல் விட்டுவிடு’ என்று கூறப்பட்டது. அதாவது, `சுத்த வார்த்தையாகிய எண்ணெயையும் திராட்சரசத்தையும் அபிஷேகமாக பெற்ற என் சிறு மந்தையில் சிலரை நீ பிடித்து அவர்களைக் கொன்று போடுவாய். அதையே நீ செய்து கொண்டும் வருகிறாய். ஆனால் `மரியாளே வாழ்க’ என்று சொல்லவும், உன் கோட்பாடுகளில் சிலவற்றைக் கைக்கொள்ளவும் அவர்களை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம். அவர்கள் போகுமிடத்தை அறிந்திருக்கின்றனர். ஏனெனில் அவர்கள் என் எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டு என் வாக்குத்தத்தத்தை அறிந்திருக்கிறபடியால் சந்தோஷமென்னும் திராட்சரசத்தைப் பெற்றிருக்கின்றனர். அவர்களை நான் மறுபடியும் உயிரோடெழுப்புவேன். அதை சேதப்படுத்த வேண்டாம். அவர்களை குழப்பமுறச் செய்ய வேண்டாம். அவர்களை விட்டு அகன்று நில்’ என்று அவர் சொல்கிறார். அவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்தி அதை நிறைவேற்றுகிறார். அவர்கள் மறுபடியும் உயிரோடெழுவர் என்னும் நம்பிக்கை கொண்டிருந் தனர். அதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் மறுபடியும் உயிரோடு எழுந்திருப்பார்கள். இதோ அந்தக் கறுப்பு குதிரை வருகிறது இருளின் காலங்கள். வெள்ளைக் குதிரையின் மேலிருந்தவன் என்ன செய்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் சிவப்புக் குதிரையின் மேல் சவாரி செய்த போதும் என்ன நேர்ந்தது என்பது நமக்குத் தெரியும். இப்பொழுது அவன் கறுப்புக் குதிரையின் மேல் சவாரி செய்து கொண்டு வருகிறான். காலங்கள்தோறும் ஒரே ஆள் வித்தியாசமான குதிரைகளின் மேல் சவாரி செய்கிறான். அவன் கோதுமையும் வாற்கோதுமையும் நிறுத்துக் கொடுத்து அதற்குக் காசு வசூலித்தான் என்று பார்க்கிறோம். கோதுமை என்பது மாம்சப் பிரகாரமான ஜீவியத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாய் இருக்கிறது. ஆனால் எண்ணெய் பரிசுத்த ஆவிக்கும் திராட்சரசம் அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அடையாளமாயுள்ளன. `ரோமாபுரியே! அந்த ஆவிக்குரிய ஜீவியத்தை சேதப்படுத்த வேண்டாம். அதை ஒன்றும் செய்யாமல் விட்டு விடு. அது எனக்குச் சொந்தமானது’. வேறொரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். `எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’ என்று நான்கு ஜீவன்களில் ஒன்று கூறவில்லை. அதை நான் படிக்கிறேன், `அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்று படிவாற்கோதுமையென்றும்’ எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து சத்தத்தைக் கேட்டேன்’, அது யார்? அதுதான் ஆட்டுக்குட்டியானவர். நான்கு ஜீவன்கள் இதைக் கூறவில்லை. அவர்கள் மத்தியிலிருக்கும் ஆட்டுக்குட்டியானவர் இதை சொல்கிறார். ஏனெனில் அவர் தமக்குச் சொந்தமானவர்களைப் பெற்றுக்கொள்ளப் போகிறார். அவர்கள் அவருக்குச் சொந்தம். ஆமென். ஆம், ஆட்டுக்குட்டியானவர் தான் இதை அறிவித்தார் நான்கு ஜீவன்களல்ல. நான்கு ஜீவன்களில் ஒன்று யோவானை நோக்கி, `நீ வந்து யார்’ என்று சொன்னது, யோவான் சென்று கறுப்பு குதிரையையும் அதன் மேலிருக்கிறவனையும் கண்டான். ஆனால் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்த ஆடடுக்குட்டியானவர், `எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே. அப்படி செய்தால் ஒருநாள் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்’ என்று கூறுகிறார். எனக்குத் தெரிந்தவரை மூன்று முத்திரைகளின் உண்மையான அர்த்தம் இவையே. அதற்காக நான் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன். இது அவர் எனக்கு அருளின வெளிப்பாடாகும். நாம் கடைசி நாட்களில் வாழ்கிறோமென்பதை நிச்சயமாக நம்புகிறேன். நாளை இரவு, மங்கிய நிறமுள்ள குதிரையின் மேலிருக்கிறவனைப் பற்றி சிந்திப்போம். அதைக் குறித்து எனக்கு இதுவரை ஒன்றும் தெரியாது. நான் கூறுவது உண்மையென்பதை தேவன் அறிவார். அனேக வருடங்களுக்கு முன்பு நான் நான்கு குதிரைகளின் மேலிருக்கிறவர்களைக் குறித்து ஒரே நாளில் பிரசங்கித்தேன். அப்பொழுது, வெள்ளைக் குதிரை, ஆதிசபை ஜெயித்துக் கொண்டே செல்வதைக் குறிக்கின்றது என்று சொன்னேன். இந்த கருத்தை நான் ஏழாம் நாள் ஆசரிப்போரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். அடுத்ததாக, சிவப்பு குதிரை என்பது தொந்தரவுகள் சபைக்கு வரக் காத்திருக்கின்றன என்றும், அது நேரிடவிருக்கும் யுத்தங்களுக்கு ஒருக்கால் அறிகுறியாயிருக்கும் என்றேன். ஒரு நாள் பூமி அந்தகாரப்பட்டு, நட்சத்திரங்களும், சூரியனும் சந்திரனும் ஒளியைக் கொடாமற்போகுமென்றும் அதையே கறுப்புக் குதிரை சித்தரிக்கிறது என்றும் சொன்னேன். மங்கிய நிறமுள்ள குதிரை வியாதிகள் அனேகம் வரக் காத்திருக் கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது என்று அப்பொழுது நான் பிரசங்கித்தேன். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் இன்னும் எனக்கு வெளிப்படவில்லை. இக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்கள் அல்லவா? இவைகளெல்லாம் எங்கு சென்று முடிவடையும் என்பதைப் பார்க்கும் பொழுது, நாடுகள் உடைகின்றன இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் இவை புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன திகில் அவர்களை சூழ்ந்துள்ளது சிதறப்பட்டோரே உங்கள் சொந்தத்திற்கு திரும்புங்கள் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துபோயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குவீர் கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் இயேசுகிறிஸ்துவே நம் தேவன் என்னும் தேவனின் சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர் (நீங்கள் அப்படி விசுவாசிக்கின்றீர்களா?) ஆனால் நாமோ அப்போஸ்தலர்களின் அடிச்சுவடுகளில் நடப்போம் மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்துபோயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குவீர் அது மிகவும் அற்புதமானதல்லவா? `மீட்பு சமீபமாயுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது எனக்கு மிகவும் விருப்பம். சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும் மகிமையின் பாதையை நீவிர் நிச்சயம் கண்டுகொள்வீர் தண்ணீரின் வழியில் மாத்திரமே இன்றையவெளிச்சம் உண்டு அதுவே இயேசு என்னும் விலையேறப்பெற்ற நாமத்தில் அடக்கம் பண்ணப்படுதலாம் வாலிபரே, வயோதிபரே, உங்கள் எல்லா பாவங்களுக்கும் மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயம் உட்பிரவேசிப்பார் சாயங்கால வெளிச்சம் தோன்றி விட்டது தேவனும் கிறிஸ்துவும் ஒருவரே என்பது சத்தியம் தேவனுடைய வார்த்தை! ஓ! அற்புதம் விரையில் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியைக் கொண்டு செல்வார் அவள் எப்பொழுதும் தம் பக்கத்திலிருக்க வான சேனைகள் அனைத்தும் அங்கு கூடியிருப்பர் ஓ, அது மகத்தான காட்சியாயிருக்கும் எல்லா பரிசுத்தவான்களும் கரையற்ற வெண்மையுடன் இருப்பர் நாம் இயேசுவுடன் நித்தியமாக புசிப்போம் ஓ, `வந்து புசியுங்கள்’ என எஜமானன் அழைக்கிறார் நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் விருந்துண்ணலாம் திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர் பசியுள்ளோரை `வந்து புசியுங்கள்’ என அழைக்கிறார் ஒ, `வந்து புசியுங்கள்’ என எஜமானன் அழைக்கிறார் (வார்த்தையைப் புசியுங்கள்) நீங்கள் இயேசுவின் மேசையில் எந்நேரமும் விருந்துண்ணலாம் திரளான ஜனங்களை போஷித்தவர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றினவர் பசியுள்ளோரை `வந்து புசியுங்கள்’ என அழைக்கிறார் நீங்கள் ஆத்தும ஆகாரத்தைப்பெற பசியுள்ளவர் களாயிருக்கிறீர்களா? நீங்கள் பாக்கியவான்கள். அவரில் நீங்கள் அன்பு கூருகிறீர்களா? அப்படியானால், `நான் உமை நேசிக்கிறேன்’ என்று சொல்லுங்கள். நாமெல்லோரும் எழுந்து நின்று நம் கைகைளையுயர்த்தி, `நேசிக்கிறேன்’ என்ற பாட்டைப் பாடி நமக்கு அவர் பேரிலுள்ள மதிப்பைத் தெரிவிப்போம். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். ******* நான்காம் முத்திரை மார்ச் 21,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா மாலை வணக்கம், ஜெபத்திற்காக நாம் சற்று தலைவணங்கலாமா? கிருபை பொருந்திய எங்கள் பரம தந்தையே, மற்றுமொரு நாளுக்காக உமக்கு நன்றி செலுத்த நாங்கள் மறுபடியும் இன்றிரவு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மிடம் வருகிறோம். இன்றிரவு நடக்கவிருக்கும் ஆராதனையில் உம் ஆசீர்வாதங்களைக் கோருகிறோம். நாங்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து கொண்டிருக்கும் இவ்விஷயங்களின் அர்த்தத்தைப் பரிசுத்த ஆவியானவர் தாமே எங்களுக்கு வெளிப் படுத்துவாராக. ஆண்டவரே, வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொள்வதை நாங்களெல்லாரும் விலையுயர்ந்த ஒன்றாகக் கருதி, முடிவில் இவ்விடத்தை விட்டு செல்லும்போது, `வழியில் அவர் நம்முடனே பேசினபோது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?’ என்று நாங்கள் சொல்வதற்குக் கிருபை அளியும். நீர் செய்த யாவற்றிற்கும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். எங்கள் பிரயாணத்தில் எங்களுடன் தங்குவீர் என்று நம்புகிறோம். இவை யாவையும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். இன்றிரவு மறுபடியுமாக ஆராதனைக்கென்று கர்த்தருடைய வீட்டில் வருவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியுறுகிறேன். இன்று பேச வேண்டுவதற்கு வெளிப்பாடு கிடைக்காதென்று நான் எண்ணியிருந் தேன். ஆனால் முடிவில் அதன் அர்த்தம் வெளிப்பட்டது. இந்த மங்கின நிறமுள்ள குதிரையைக் குறித்த இரகசியம் வெளிப்பட்டதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். சவாரி செய்யப்படும் நான்கு குதிரைகளில் இது கடைசி குதிரையாயிருக்கிறது. இக்காலத்தில் சபைக்கு அளிக்க அவசியமுள்ள முக்கியமான செய்திகளில் இது ஒன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அடுத்த முத்திரையின் இரகசியம் என்னவென்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு நாளும் அது ஒவ்வொன்றாக வெளிப்படுகிறது. அவர் எவ்வாறு வெளிப்படுத்துகின்றாரோ, அவ்வாறே அதை நான் சபைக்கு அளிக்கிறேன். தேவன் அளித்துள்ள ஆசீர்வாதங்களிமித்தம் நீங்கள் மகிழ்ச்சியுறு கின்றீர்களா? முத்திரைகளின் இரகசியம் சபையின் காலங்களுடன் அழகாக பொருந்துவதை நீங்கள் கவனித்தீர்களா? அவையிரண்டும் முற்றிலுமாக இணைகின்றன, சபையின் காலங்களுக்கு விளக்கவுரையை அளித்த அதே பரிசுத்த ஆவியானவர் தான் முத்திரைகளின் இரகசியங் களையும் வெளிப்படுத்துகிறார் என்பதனை அது காண்பிக்கின்றது - தேவன் வித்தியாசமான வழிகளில் தம்மை வெளிப்படுத்தும் ஒரு மகத்தான கிரியையாக இது அமைந்துள்ளது. அவர் தரிசனத்தில் தம்மை தானியnலுக்கு வெளிப்படுத்தினபோது அனேக அடையாளங்களின் மூலம் - வெள்ளாடு, மரம், சொரூபம் போன்றவைகளின் மூலம் - அவைகளைக் காண்பித்தார். அவையெல்லாம் ஒரே சம்பவத்தையே எடுத்துக் காண்பிக்கின்றன என்பதை அறிந்துக்கொள்ள தவற வேண்டாம். சற்று முன்பு எண்பத்தைந்து வயது சென்ற அம்மாளுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். அந்த அம்மாள் கூறியது என்னை சிலிர்க்க வைத்தது. நான் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் முன்பு,ஒரு சிறு பெண் ஒஹையோ (Ohio) பட்டினத்தில் இரத்தப் புற்றுநோயால் (Leukemia) பீடிக்கப்பட்டு சாகும் தருவாயில் இருந்தாள். அவள் பிழைப்பாள் என்ற நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இரத்தக்குழாய்களின் மூலம் அவளுக்கு ஆகாரம் செலுத்தப்பட்டது. அவள் ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவள் சகோதரன் கிட் (Bro. Kidd) என்பவரும் அவருடய மனைவியும் கர்த்தர் எவ்விதம் ஜெபத்திற்குப் பதிலுரைக்கிறார் என்று அவர்களிடம் எடுத்துக் கூறினபோது, அவர்கள் ஒரு வாடகை மோட்டார் வண்டியில் அந்தப் பெண்ணை இங்கு அழைத்து வந்தனர். அவள் ஏறக்குறைய ஒன்பது வயது சென்ற மிகவும் அழகுள்ள பெண்ணாக இருந்தாள். அவளை அறைக்குள் கொண்டு சென்றனர். நாங்கள் கர்த்தருடைய சமூகத்தில் சென்றபோது, பரிசுத்த ஆவியானவர் அவளுக்கு நல்வாக்கு அருளினார். அவர் கூறியவாறு அவளுக்கு சாதாரண முறையில் வாய் வழியாக ஆகாரம் கொடுக்கப்பட்டது, முடிவில் அவள் அந்த இடத்தை விட்டுச் செல்லும் முன்பு, ஹாம்பர்கள் (Hamburger) (ஒருவகை மேற்கத்திய உணவு) வேண்டமென்று அழுதாள். அவளுக்கு இயற்கையான முறையில் வாய் வழியாக ஹாம்பர்கள் கொடுத்தார்கள். சில நாட்கள் சென்ற பிறகு டாக்டரிடம் அந்த பெண்ணைக் கொண்டு சென்றனர். என்ன நேர்ந்ததென்று அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த பெண்தான் அவள் என்று கண்டு கொளளக்கூடாத அளவிற்கு அவள் வித்தியாசமான தோற்றம் கொண்டவளாயிருந்தாள். இரத்தப் புற்று நோயின் அடையாளம் அவளில் சிறிதேனும் காணப்படவில்லை என்பதாக டாக்டர் கூறினார். புற்றுநோயினால் மரிக்கும் தருவாயிலிருந்து, எவ்வித நம்பிக்கையும் அற்றுப் போய், இரத்தக் குழாய்களின் வழியாக ஆகாரம் செலுத்தப்பட்டு, மஞ்சள் நிறமாய் காணப்பட்ட அதே பெண் இன்று மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்தில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறாள். இதைப் போன்ற வேறொரு சம்பவம் எனக்கு ஞாபகம் வருகிறது. நான் அப்பொழுதுதான் வீடு திரும்பியிருந்தேன். அப்பொழுது கான்ஸாஸ் (Kansas) பட்டினத்திலிருந்து இரத்த புற்று நோயால் பீடிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கொண்டு வந்தனர். அவர்கள் எபிஸ்கோபால் ஸ்தாபனத்தார் அல்லது பிரஸ்பிடேரியன்கள் என்று நினைக்கிறேன். டாக்டர்கள் அவளைக் கைவிட்டனர். `இன்னும் நான்கு நாட்கள் மாத்திரமே அவள் பிழைத்திருப்பாள்’ என்று அவர்கள் கூறியிருந்தனர். அந்த நான்கு நாட்கள் செல்வதற்கு முன், பனியை எவ்வாறாயினும் கடந்து இங்கு அடைந்து விடலாம் என்று எண்ணங் கொண்டு அவர்கள் புறப்பட்டனர். அவள் பாட்டனார் தலைநரைத்து வயது சென்ற கம்பீரமான தோற்றத்தையுடைய ஒருவர், அவர்கள் இங்கு வந்து ஒரு விடுதியில் தங்கி ஏற்கனவே இரண்டு நாட்களாகிவிட்டன. அந்த விடுதி இப்பொழுது அங்கு இல்லை. அன்று விடியற்காலை ஜெபம் செய்வதற்கென நான் அங்கு சென்றிருந்தேன். முந்தின இரவுதான் நான் வீடு திரும்பியிருந்தேன், அங்கு சென்றபோது, அவள் பாட்டனார் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தார். தாயார் அந்தப் பெண்ணைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஜெபம் செய்ய நான் முழங்கால்படியிட்ட போது, அவள் பெற்றோர் புரிந்த ஒரு செயலைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினார். நான் அவர்களை ஒருபுறம் அழைத்து அது உண்மையாவென்று வினவினேன். அவர்கள் அழுதுகொண்டே அது உண்மைதானென்று பதிலுரைத்தனர். பின்பு அந்தப் பெண் கயிறு வைத்து குதித்து விளையாடிக் கொண்டிருப்பதை நான் தரிசனத்தில் கண்டேன். ... மூன்று வாரத்திற்குள் அந்தப் பெண் பரிபூரண சுகமடைந்து, பள்ளிக்கூடத்தில் கயிறு வைத்து அவள் குதித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை அவர்கள் எனக்கு அனுப்பியிருந்தனர். இந்த சாட்சிகள் அனைத்தும் முற்றிலும் உண்மையாகும். நம்தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவரைச் சேவித்து அவரில் விசுவாசம் கொள்ளுங்கள். அவர் உண்மையுள்ளவர் என்பதை நானறிவேன். இன்றிரவு தேவ கிருபையைக் கொண்டு, நான்காம் முத்திரை என்னவென்பதைப் பற்றியும் பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பதையும் நாம் அறிந்துகொள்ள முயல்வோம். வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தில் 7ம் 8ம் வசனங்களை நான் படிக்கப் போகிறேன். ஒவ்வொரு முத்திரைக்கும் இரண்டு வசனங்கள் உண்டு. முதல் வசனம் அதன் வருகையை அறிவிக்கிறது. யோவான் என்ன கண்டான் என்பது இரண்டாம் வசனத்தில் அடங்கியுள்ளது. அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன். அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர். பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்துகொள்ளக் கர்த்தர் உதவி செய்வாராக, இது ஒரு இரகசியம். சபையின் காலங்களை ஆராயும்போது நாம் செய்தவாறு, இப்பொழுதும், இதற்கு முன்பு முத்திரைகளைக் குறித்தும், குதிரை சவாரி செய்பவர் களைக் குறித்தும் நாம் சிந்தித்ததை மறுபடியும் கூறுவோம். நான்காம் முத்திரையை பற்றி பேசுவதற்கு ஏற்ற தருணம் வந்துவிட்டது எனும் சிந்தை நமக்குள் எழும்வரை இவைகளை நாம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். மீட்பின் புத்தகம் முத்திரிக்கப்பட்டிருந்தது என்று நாம் பார்த்தோம். அது ஒரு சுருள் வடிவில் சுற்றப்பட்டிருந்தது. இக்காலத்திலுள்ள புத்தகங்களின் வடிவில் அது அமைந்திருக்கவில்லை. இத்தகைய புத்தகங்கள் சுமார் நூற்றைம்பது அல்லது இருநூறு வருடங்களுக்கு முன்னரே தோன்றின. பழங்காலத்தில் எழுதியவைகளை சுருள் வடிவில் சுருட்டி முனையைச் சுருட்டாமல் விட்டு விடுவார்கள். அது எவ்விதம் சுருட்டப்படும் என்பதனை நான் உங்களுக்கு முன்னமே எடுத்துரைத்துள்ளேன். இதைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தில் காணலாம் என்றும் நான் கூறியுள்ளேன். இவ்விதம் சுருள் வடிவில் சுருட்டப்பட்டு, முனைவிடப்பட்டு அது முத்தரிக்கப்படும். இவ்வாறு மீட்பின் புத்தகம் ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்தது. வானத்திலாவது பூமியலாவது ஒருவரும் அதைத் திறக்கவும் அல்லது அதைப் பார்க்கவும் கூட பாத்திரவானாய்க் காணப்படவில்லை. எனவே யோவான் அழத் தொடங்கினான். ஆதாமும் ஏவாளும் பாவத்தின் காரணத்தால் தேவனுடைய வார்த்தையின் மேல் அவர்கள் கொண்டிருந்த உரிமைகளை இழந்து அதைப் பறிகொடுத்த போது, அது அதன் உரிமையாளரின் கரத்தையடைந்தது. அப்புத்தகம் அவர் கையிலிருந்து வாங்கப்படாமற்போயிருந்தால்.... ஆதாமும் ஏவாளும் பூமியின்மேல் ஆதிக்கம் செலுத்தினர். அவன் தேவனுடைய குமாரனாயிருந்தபடியால், அவன் ஒரு தேவனாக பூமியின் மேல் ஆளுகை செய்தான். அது வேத வாக்கியத்திற்கு முரணான தொன்றல்ல. அது உங்களுக்கு வினோதமாகத் தென்படக்கூடும். ஆனால், இயேசு `தேவ வசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று சொல்லியிருக்க....’ என்றார். யாரிடத்தில் தேவ வசனம் வரும்? தீர்க்கதரிசிகளினிடத்தில், `தேவசனத்தைப் பெற்றுக் கொண்டவர் களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணம் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?’ என்று இயேசு கூறினார். அவர்கள் தேவர்களாயிருந்தனர். மனிதனே ஒரு குடும்பத்தில் நீ பிறந்திருப்பதால், அந்த குடும்பத்தின் பெயரை நீ ஏற்றுக் கொள்கிறாய், குமாரன் என்னும் ஸ்தானத்தில் உன் தகப்பனாரின் ஒரு பாகமாக நீ இருக்கிறாய், பாவம் பிரவேசித்தபோது, மனிதன் பிளவின் மற்ற எல்லையை அடைந்தான் என்று நாம் பார்த்தோம். காளை, வெள்ளாட்டுக்கடா, இவைகளின் இரத்தம் பாவ நிவர்த்திக்கென்று செலுத்தப்பட்டது. ஆனால் அவை பாவத்தை மூடினதேயன்றி அதைப் போக்கவில்லை. உண்மையான வெண்மையாக்கும் திரவம் வரும்வரை, இது கைக்கொள்ளப்பட வேண்டும். வெண்மையாக்கும் திரவம் பாவத்தின் கறையை அகற்றி அதை மூலப் பொருட்களாக மாற்றி, வார்த்தையைப் புரட்டின சாத்தானிடம் அதைக் கொண்டு சேர்க்கும். சாத்தானை அது அடைந்த பிறகு, அவன் நித்திய அழிவு வரும்வரை காத்திருக்கிறான். அவன் முற்றிலுமாக அழிக்கப்படுவான் என்னும் நம்பிக்கை நமக்குண்டு. இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை ஆதாரமாகக் கொண்டு பாவம் அறிக்கையிடப்படும் போது அது மறைந்து போகிறது என்று நான் நம்புகிறேன். ஒரு துளி மையை வெண்மையாக்கும் திரவத்தில் ஊற்றும்போது அது மூல இரசாயனப் பொருட்களாக மாறிமுன்பிருந்த நிலைமையை அடைவதற்கு இது ஒப்பாயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமும் அதையே செய்கிறது. மனிதன் மறுபடியுமாக பிளவைக் கடந்து தேவனுடைய குமாரனாகும்படி அது செய்கிறது. அதுமாத்திரமல்ல, அவன் சிருஷ்டிக்கும் வல்லமையையும் கூட பெறுகிறான். தேவன் அவன் மூலம் அதைக் கட்டளையிடும் போது, அது நிறைவேறும். காளை, வெள்ளாட்டுக்கடா இரத்தத்தின் கீழிருந்த மோசே.... பற்றியெரியும் மூட்செடியில் அக்கினி ஸ்தம்பத்தை அவன் சந்தித்து தேவனிடமிருந்து கட்டளை பெற்றான். அவன் ஒரு தீர்க்கதரிசி, தேவனுடைய வார்த்தை அவனிடத்தில் வந்தபோது, அவன் பேசினான். அப்பொழுது வார்த்தை சிருஷ்டித்தது. காளையின் இரத்தத்தின் கீழிருந்த மோசே அதைச் செய்தால், இயேசுவின் இரத்தத்தின் கீழுள்ளவர்கள் அதைச் செய்ய முடியுமல்லவா? ஏனெனில் இயேசுவின் இரத்தம் பாவத்தை மூடாமல் அதை அறவே அகற்றுகிறது. அப்பொழுது நீங்கள் தேவ சமூகத்தில் மீட்கப்பட்ட புத்திரர்களாக நிற்கிறீர்கள். சபையானது தற்போதுள்ள நிலையைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்ததாயிருக்கிறது. நாம் தைரியமாக வெளி வந்து பிரச்சனையை சந்திப்பதற்கு பதிலாக அனேக சமயங்களில்நாம் செய்யலாமா வேண்டாமா வென்று ஆலோசனை செய்பவர்களாகக் காணப்படுகிறோம். ஒரு காரியத்தை உங்களிடம் கூற வேண்டும். தக்க சமயம் வரும் போது அதைக் கூறுவேன். சபைகளில் எங்கோ தவறு காணப்படுகின்றது. ஸ்தாபனங்கள் தவறான போதகங்களினால் ஜனங்களின் மனதைக் குழப்பமுறச் செய்வதால் எது சரியென்று அறியாத நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். ஆனால் இக்காலத்தில் உண்மையான சத்தியம் வெளிப்படுமென்ற வாக்குறுதி நமக்குண்டு. ஏழு முத்திரைகள் கொண்ட இப்புத்தகம்... ஏழு முத்திரைகள் முடிவு பெற்றவுடன், ஏழு இடிமுழக்க இரகசியங்களை நாம் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். யோவான் அவன் கண்டவைகளையும் கேட்டவைகளையும் எழுதவேண்டுமென்ற கட்டளை பெற்றிருந்தான். ஆனால் இடிமுழக்கங்கள் சொன்னவைகளை எழுதக் கூடாதென்று அவனிடம் கூறப்பட்டது. அந்த இடிகள் முழங்கும் போது, கிறிஸ்து (அதாவது பலமுள்ள தூதன்) வானவில்லை சிரசின் மேல் கொண்டவராய் இறங்கி வந்து, ஒரு காலை சமுத்திரத்தின் மேலும், மற்றொரு காலைப் பூமியின் மீதும் வைத்து, இனி காலம் செல்லாதென்றும், சமயம் கடந்து விட்டதென்றும் ஆணையிடுகிறார் என்று நாம் பார்த்தோம். மேலும், ஆட்டுக்குட்டியானவர் பரிந்து பேசும் ஊழியத்தை விட்டு விட்டு, தம் மரணத்தினால் அவர் மீட்டுக்கொண்ட அனைவரையும் சொந்த மாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருகிறாரென்று முத்திரைகளின் இரகசியங்களைத் தியானிக்கும் போது நாம் பார்த்தோம். அந்த புத்தகத்தை யாராலுமே திறக்க முடியவில்லை. அதை யாரும் புரிந்து கொள்ளவும் இயலவில்லை. அந்த மீட்பின் புத்தகம் ஆவியாகிய பிதாவின் கையில் இருக்கிறது. இயேசு சிங்காசனத்தில் மத்தியஸ்தராக வீற்றிருக்கிறார். அவர் ஒருவரே மத்தியஸ்தர். எனவே, பரிசுத்தவான்கள் என்று அழைக்கப்படுபவரும், மரியாளும், யோசேப்பும், வேறெவரும் மத்தியஸ்தராக இருக்க முடியாது. அதற்கு இரத்தம் சிந்துதல் அவசியம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே பாவநிவர்த்தி செய்ய முடியும். ஆகவே வேறு யாரும் அந்த மத்தியஸ்த ஊழியத்தை வகிக்க முடியாது. ஆகவே, அரசியல் சம்பந்தமான காரியங்களுக்காகப் பரி, யூதா (Jude) வேண்டிக் கொள்வாரென்றும், வேறு சில காரியங்களுக்காக பரி, சிசீலியா (Cecilia) வேண்டிக் கொள்வாரென்று கருதுவதும் அர்த்தமற்றவையாகும். அவ்விதம் நினைக்கும் ஜனங்கள் உத்தமமானவர்கள் அல்ல என்று நான் கூறவில்லை. அவர்கள் அதை உத்தம இருதயத்தோடு செய்தாலும் அது தவறு என்பதைக் கூறவே முற்படுகிறேன். `ஒரு தேவதூதன் பரி, போனபிஸ் (St. Bonafice) என்பவருக்குப் பிரதியட்சமாகி அனேக காரியங்களைக் கூறியுள்ளானே!’ என்று நீங்கள் கேட்கலாம். மற்றவர் கண்ட தரிசனங்களை நான் சிறிதேனும் சந்தேகிக்கவில்லை. ஜோசப் ஸ்மித் (Joseph Smith) கண்ட தரிசனத்தையும் நான் சந்தேகிக்க வில்லை. ஆனால் அவர்கள் கூறுவது தேவனுடய வார்த்தையுடன் பொருந்தாமல் இருப்பதால் அது தவறு என்று எனக்குத் தென்படுகிறது. அவை யாவும் தேவனுடைய வார்த்தையுடன் இணங்க வேண்டும். அவ்வாறே சபையின் காலங்களைக் குறித்த வெளிப்பாடும், முத்திரையின் இரகசியங்களின் வெளிப்பாடும், மற்ற யாவும் வேதத்துடன் பொருந்த வேண்டும். ஏழு இடி முழக்கங்களின் இரகசியங்களை அறிந்திருப்பதாக ஒருவன் கூறி அவன் கூறுபவை தேவனுடைய வார்த்தையுடன் இணங்காமற் போனால், எங்கோ தவறுள்ளது. `கர்த்தர் இவ்விதம் உரைக்கிறார்’ என்று கூறும் ஒரு தீர்க்கதரிசியின் மூலமாகவே அது வெளிப்பட வேண்டும். ஏனெனில் வெளிப்படுத்தல் புத்தகத்தில் இயேசு கிறிஸ்து தம்மை பரிபூரணமாக வெளிப்படுத்துகிறார். யோவான் அழுதுகொண்டிருக்கிறான். அந்த புத்தகத்தை திறப்பதற்கு வானத்திலாவது பூமியிலாவது ஒருவனையும் பாத்திரவானாக யோவான் காணவில்லை. ஏனெனில் எல்லோருமே பாவம் செய்த பிளவின் மற்ற எல்லையை அடைந்திருந்தனர். ஒருக்கால் தேவதூதன் ஒருவன் அதற்குப் பாத்திரவானாக இருந்திருக்கலாம். ஆனால் அது ஒரு இனத்தானான (Kinsman) மனிதனான இருக்க வேண்டும். ஆனால் மனிதன் இனசேர்க்கையினால் உண்டானவன். இனசேர்க்கையின்றி பிறந்த ஒருவர் தான் அதற்குப் பாத்திரவானாயிருக்க முடியும். எனவே, தேவனே கன்னியின் வயிற்றில் பிறந்து இம்மானுவேல் ஆனார். அவருடைய இரத்தம் தகுதியுள்ளதா யிருந்தது. அவரே பிளவைக் கடந்து கிரயத்தைச் செலுத்தி, ஏனையோருக்கு வழியை உண்டு பண்ணினார். பின்பு அவர் மத்தியஸ்த ஸ்தானத்தை வகித்து இப்பொழுதும் அவ்வூழியத்தை செய்து கொண்டிருக்கிறார். அந்த புத்தகம் இதுவரை மூடப்பட்டிருந்தது. அது அடையாளங்களைக் கொண்டுள்ளது. யோவானும்கூட அதை அடையாள ரூபத்தில் கண்டான். முதலாம் முத்திரை உடைக்கப்பட்ட சம்பவம் யோவானுக்கு அறிவிக்கப்பட்டது. அவன் `ஒரு வெள்ளைக்குதிரை புறப்பட்டுச் சென்றது. அதன் மேல் ஒருவன் ஏறியிருந்தான். அவன் கையில் ஒரு வில் இருந்தது’ என்று சொல்லுகிறான். அவை அடையாளங்களாம். அதன் இரகசியம் அப்பொழுது வெளிப்படவில்லை. பூமியிலுள்ள எந்த ஒரு மனிதனும் அந்த அடையாளத்தை அறிந்தானேயன்றி அதன் உண்மையான இரகசியத்தை அறிந்திருக்கவில்லை. அதன் இரகசியத்தை அறிவதற்கென மனிதன் தட்டுத் தடுமாறி, அதன் அர்த்தம் இதுவாயிருக்கும் என்று ஊகித்துக் கொண்டே வந்தான். ஆனால் ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் தேவரகசியம் அனைத்தும் வெளிப்பட வேண்டும். (வெளி. 10:1-7). பின்னர் ஏழு இடி முழக்கங்களும் தங்கள் விசித்திரமான சத்தங்களை முழங்கின. அவை என்ன கூறினவென்பதை யோவான் அறிந்திருந்தான். அவன் அதை எழுதத் தொடங்கினபோது, எழுதவேண்டாமென்று தடை செய்யப்பட்டான். அது பரமரகசியமாய் அமைந்துள்ளது. அவை அடையாளங்களின் மூலமாகவும் கூட வர்ணிக்கப்படவில்லை. அந்த இடிகள் முழங்கின என்று மாத்திரம் நாமறிவோம். அவ்வளவுதான். ஞாயிறுகாலையன்று நடக்கவிருந்த சுகமளிக்கும் ஆராதனையை நாங்கள் ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக முத்திரைகளின் பேரில் ஜனங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலுரைப்போம். நீங்கள் புரிந்து கொள்ள முடியாதவைகளை முன் கூட்டியே எழுதியனுப்பினால், பதிலுரைப்பதற்குப் போதுமான கேள்விகள் இருக்கின்றனவா என்று நான் சனியிரவு கூறிவிடுவேன். கூடுமான வரை, கேட்கப்படும் கேள்விகள் ஏழு முத்திரைகளையொட்டி அமைந்திருக்கட்டும். நான் வீடு திரும்பவேண்டும். மேற்குபகுதியில் சில கூட்டங்களை நாம் நடத்த வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் கழித்து நான் திரும்பவும் வருவேன். அப்பொழுது சுகமளிக்கும் ஆராதனையை நடத்த தேவன் ஒரு வேளை அனுமதிப்பார். ஏழு எக்காளங்களைக் குறித்தும், ஏழு கலசங்களைக் குறித்தும் நாம் ஆராய வேண்டிய அவசியமுண்டு. அவையெல்லாம் ஒன்றுக்கொன்று பொருந்து கின்றன. ஆனால் இதுவரை அவை இரகசியங்களாகவே அமைந்துள்ளன. ஒவ்வொரு முத்திரையின் இரகசியம் எனக்கு வெளிப்படு முன்னர்,அதன் உண்மையான அர்த்தத்தை நான் அறியாமல் இருந்தேன். நான் வேதத்தை எடுத்துக்கொண்டு, அது வெளிப்படும் வரை உட்கார்ந்த வண்ணம் இருப்பேன். அதுவெளிப்படும்போது, நான் பென்சிலை எடுத்துக் கொண்டு அது முடியும் வரை அநேக மணி நேரமாக எழுதிக் கொண்டே இருப்பேன். அதன் பின்னர், `இதை நான் எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே’ என்று கூறி என் ஒத்து வாக்கியசங்கிரகத்தை (Concordance) எடுத்துப் பார்க்கும் போது, அது அங்கேயிருக்கும் வேதவாக்கியங்கள் ஒன்றோடென்று பொருந்துவதனால் இந்த வெளிப்பாடு தேவனால் அளிக்கப்பட்டது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கட்டிடம் கட்டும்போது ஒரு கல் மற்றொரு கல்லுடன் இணைவது போல், வேத வாக்கியங்களும் ஒன்றோடொன்று இணையவேண்டும். அவ்விதம் இணைகின்றதா என்று நீங்களும் ஒத்துப் பார்க்க வேண்டும். நேற்று இரவு மூன்றாம் முத்திரை நமக்குத் திறக்கப்பட்டது. முதலாவதாக ஒரு வெள்ளைக் குதிரை, அடுத்தது சிவப்புக்குதிரை, அதற்குப் பின்பு கறுப்பு குதிரை, ஒரே ஆள்தான் எல்லாக் குதிரைகளின் மேலும் சவாரி செய்கிறான். அவன் தான் அந்திக்கிறிஸ்து. தொடக்கத்தில் அவனுக்குக் கிரீடம் இல்லை. சற்று கழித்த பின்னர் அவன் கிரீடத்தைப் பெறுகிறான். பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போட அவனுக்கு ஒரு பட்டயம் பின்பு அளிக்கப்படுகின்றது. சமாதானத்தை அவன் எடுத்துப் போட்டதாக நாம் கண்டோம். அதன் பின்பு அவன் தன் கோட்பாடுகளை நுழைத்து சபைக்குக் காசை சேமிக்கிறான். ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமையும், ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமையும் விற்கப்படுகிறது. ஆனால் சிறிது விடப்பட்டிருந்த எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாபடி அவன் தடை செய்யப்படுகிறான். எண்ணெயும் திராட்சரசமும் எவைகளுக்கு உதாரணமாயிக்கின்றன என்றும், அதனால்உண்டாகும் பலன் என்னவென்பiயும் நாம் சென்ற இரவு பார்த்தோம். அது சற்று கொடூரமாகக் காணப்பட்டிருக்கும், ஆனால் நான் கூறியது முற்றிலும் உண்மையாகும். திராட்சரசத்தின் விளைவு என்னவென்று விவரித்து நாம் சென்ற இரவு கூட்டத்தை முடித்தோம். எண்ணெய் என்பது பரிசுத்த ஆவிக்கு எடுத்துக் காட்டாய் இருக்கிறது. புத்தியுள்ள கன்னிகைகளிடம் எண்ணெய் இருந்தது. பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளும் அதைப் பெற்றிருந்தனர் என்று கண்டோம். இதைக் குறித்த எல்லா வேதவாக்கியங்களையும் நாம் பார்க்க வேண்டுமானால் நேரம் அதிகமாகும். ஜனங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அளவிற்குப் போதுமான வேதவாக்கியங்களை மாத்திரம் எடுத்துக்கூற நான் முனைகிறேன். முத்திரைகளைப் பற்றி நாம் சரிவர ஆராயவேண்டுமானால், ஒவ்வொரு முத்திரையைக் குறித்து ஒரு மாதம் தினந்தோறும் பிரசங்கம் நிகழ்த்தினாலும், அதின் ஒரு பாகத்தைக்கூட நாம் முடிக்க முடியாது. பிரசங்கிக்க வேண்டிய சங்கதிகள் அவ்வளவு அதிகம் உண்டு. ஆனால் நாம் முக்கியமானவைகளை மாத்திரம் கருதுகிறோம். எண்ணெய் பரிசுத்த ஆவிக்கு அடையாளமாயிருக்கிறது. எண்ணெயும் திராட்சரசமும் ஆராதனையுடன் சம்பந்தப்பட்டது என்று நாம் கண்டோம். திராட்சரசம் வெளிப்பாடு அளிக்கும் ஊக்க உணர்ச்சிக்கு அடையாள மாயுள்ளது. ஏதாவதொன்று வெளிப்படும்போது, அது விசுவாசிக்கு உற்சாகத்தை அளிக்கிறது. அது தேவனால் வெளியாக்கப்படும் மறைபொருளாயிருக்கிறது. நாமாகவே அதை புரிந்து கொள்ளமுடியாது. ஆனால் சற்றுபின்னர் தேவன் அதை வெளிப்படுத்தி அது உண்மை யென்று அடையாளங்களினால் உறுதிப்படுத்துகிறார். சத்தியம் ஒன்று வெளிப்படும்போது, அது அடையாளங்களினால் உறுதிப்படுகிறது. ஒரு மனிதன் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும், அவன் கூறுவதை தேவன் ஆமோதிக்காவிடில், எங்கோ தவறுண்டு. தேவனுடைய வார்த்தை அப்படித்தான் கூறுகிறது. மோசே தேவனுடைய ஏவுதலினால், `வண்டுகள் உண்டாகக் கடவது’ என்று கட்டளையிட்டபோது, வண்டுகள் தோன்றின. அவன் அவ்விதம் கூறினபோது வண்டுகள் உண்டாகாவிடில், தேவனுடைய வார்த்தையை அவன் பேசவில்லையென்றும், அவன் தன் சொந்த வார்த்தையையே பேசினான் என்றும் அர்த்தம். அங்கு வண்டுகள் உண்டாகவேண்டுமென்று அவன் எண்ணியிருப்பான். ஆனால் தேவன் அவ்விதம் உரைக்காததால் வண்டுகள் அங்கு உண்டாகவில்லை என்பது அதன் அர்த்தம். தேவன் உங்களிடம், `நீ இதை செய். அது என் வார்த்தையாய் இருப்பதால், நான் உன்னுடனே இருப்பேன்’ என்று அவர் சொல்வாரானால், அவர் அதை நிறைவேற்றுவார் என்பதுதிண்ணம். அவர் கூறியது வேத புத்தகத்தில் எழுதப்படாவிடினும் அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால், அவர் அதை ஆதரிக்க வேண்டும். வேதத்தில் காணப்படாத தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படும். ஏனெனில் தேவரகசியம் யாவும் தீர்க்கதரிசிகளுக்கு மாத்திரம் வெளிப்பட வேண்டும். (ஆமோஸ் 3.7) இயற்கையான திராட்சரசம் எவ்விதம் அதைப் பருகுகிறவனுக்கு உற்சாகத்தை அளிக்கிறதோ, அவ்வாறே வெளிப்படுதலின் வல்லமையும் சோர்ந்து போயிருக்கும் விசுவாசிக்கு ஊக்கத்தையளிக்கிறது. ஆகவே, தேவ வார்த்தையின் வெளிப்பாட்டில் வல்லமை விசுவாசிக்கு உற்சாகத்தையும் திருப்தியையும் அளிக்கிறது. அது அடையாளங் களினால் உறுதிப்பட்டு நிரூபிக்கப்படுகின்றது. புதிய ஏற்பாட்டில் அது `புது திராட்சரசம்’ என்று அழைக்கப்படுகிறது. `அவர்கள் புது திராட்சரசத்தினால் நிறைந்திருக்கின்றனர்’ என்று ஆவிக்குரிய வெளிப்பாட்டைப் பெற்றவர்களைக் குறித்து நாம் கூறுவதுண்டு, அதை `ஆவிக்குரிய திராட்சரசம்’ என்று அழைத்தால் நலமாயிருக்கும். திராட்சரசம் அதைப் பருகுகிறவனுக்கு எவ்விதம் உற்சாக மூட்டுகிறதோ, அவ்விதமாகவே ஆவியாகிய தேவனுடைய வார்த்தை வெளிப்படும்போது, அந்தப் புதிய திராட்சரசம் விசுவாசிக்கு உற்சாக மூட்டுகிறது. வார்த்தைதான் ஆவி, அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவ்விதம் யார் கூறுகின்றாரென்று நாம் பார்க்கலாம். அப்பொழுது அது உண்மையா தவறா என்று நமக்கு விளங்கும். யோவான் 6ம் அதிகாரம் 63ம் வசனம் என்று நினைக்கிறேன். ஆம் அது தான். ஆவியே உயிர்ப்பிக்கிறது. மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது’. தேவனுடைய வார்த்தை ஆவியாயிருக்கிறது. ஆவியானது வார்த்தையின் உருவில் அமைந்துள்ளது. அது உயிர்ப்பிக்கப்படும் போது, வார்த்தையாகிய ஆவிகிரியை செய்கிறது. ஒரு வார்த்தை பேசப்படுமுன் அது சிந்தனையாயிருக்கிறது. அது பேசப்படும் போது, வார்த்தையாக அமைகிறது. மோசே என்ன செய்ய வேண்டுமென்று கர்த்தர் அவனுக்கு வெளிப்படுத்தினார். மோசே பேசினபோது, அது அப்படியே நிகழ்ந்தது. தேவனிடத்திலிருந்து ஒன்று வரும்போது, அது நிகழ வேண்டும். அது தேவனுடைய வார்த்தையாயிருப்பதால்,அது உற்சாகத்தையும் சந்தோஷத் தையும் அளிக்கிறது. புதிய திராட்சரசம் வார்த்தையை வெளிப்படுத்தி, உற்சாகமூட்டுகிறது. சில சமயங்களில் அதனால் கிடைக்கப் பெறும் சந்தோஷம் வரம்பு கடந்து விடுகிறது. நிரம்பி வழியும் அளவிற்கு அது மகிழ்ச்சியூட்டுகிறது. ஆனால் சிலர் அதிதீவிரமதப்பற்று கொண்டவர்களாய் இவைகளைச் செய்கின்றர். அவர்கள் இசை இசைக்கப்படும் போது மாத்திரம் குதித்து ஆடுகின்றனர். ஆனால் இசை நின்ற மாத்திரத்தில் அவர்கள் குதித்தாடுவதும் நின்று விடுகின்றது. ஆனால் உண்மையில் வார்த்தை தான் ஜீவனைக் கொடுக்கிறது. அது தான் புதிய திராட்சரசத்தின் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. பெந்தேகோஸ்தே நாளன்று தேவனுடைய வார்த்தை அடையாளங்களினால் உறதிப்பட்ட போது அதுதான் சம்பவித்தது. இயேசு சீஷர்களிடம், `என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எருசலேம் நகருக்குச்கென்று பரிசுத்த ஆவி வரும் வரைக்கும் அங்கு தங்கியிருங்கள்’ என்று லூக்கா 24.49-ல் கூறியுள்ளார். பிதாவின் வாக்குத்தத்தம் என்ன? யோவேல் 2.28ல் சொல்லியுள்ளபடி அவர் ஆவியை ஊற்றப்போகிறார். ஏசாயா 28.11ல் கூறியவண்ணம் ஆவியைப் பெற்றவர்கள் பரியாச உதடுகளினால் அன்னிய பாஷைகளினாலும் பேசுவார்கள். இயேசுவின் சீஷர்களும் எருசலேமில் மேலறையில் தங்கி பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அங்கு கூடியிருந்தவர்களில் யாராவது ஒருவர், `நாம் நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்துவிட்டோம். ஆகவே, விசுவாசத்தில் அதை ஏற்றுக் கொள்வோம்’ என்று சொன்னார் என்று வைத்துக்கொள்வோம். அது ஒரு நல்ல பாப்டிஸ்ட் (Baptist) கொள்கையாக இருக்கலாம். ஆனால் மேலறையில் கூடியிருந்தவர்களுக்கு அது சரியானதாகக் தோன்ற வில்லை. அது உண்மையாக சம்பவிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்படுவதற்கென அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். நீங்களும் பரிசுத்த ஆவியைப் பெற விரும்பினால் அதையே செய்ய வேண்டும். அதை நீங்கள் விசுவாசத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. கிறிஸ்துவை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியை நீங்கள் விசுவாசத்தினால் ஏற்றுக் கொள்ளும் போது, உங்கள் விசுவாசத்தை அங்கீகரித்ததன் சாட்சியாக அவர் உங்களை ஆவியினால் அபிஷேகித்து விருத்தசேதனம் செய்ய வேண்டும். ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. ஆனால் அவனுடைய விசுவாசத்தை அங்கீகரித்ததன் அடையாளமாக ஆண்டவர் அவனுக்கு விருத்தசேதனம் என்னும் அடையாளத்தைக் கொடுத்தார். ஆகவே, பரிசுத்த ஆவியானவர் நம்மில் ஒன்றைச் செய்யும் வரை நாம் அவருக்காக காத்திருத்தல் அவசியம். நாம் அன்னிய பாஷை பேசுவதனால் அல்லது நடனமாடுவதால் அதை நாம் பெற்றுக் கொள்ளவில்லை. நாம் முற்றிலும் மாறும் வரை - நமக்குள் ஒரு மாறுதல் ஏற்படும் போது தான் நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளோம் என்பதாகும். அது எந்த உருவில் வந்தாலும் எனக்குக் கவலையில்லை, நமக்குள் மாறுதல் ஏற்படுவது தான் முக்கியம். அன்னிய பாஷை பேசுவதில் எனக்கும் நம்பிக்கையுண்டு. ஆனால் அது மாத்திரம் போதாது. மந்திரவாதிகள் அன்னிய பாஷை பேசி, ஆவியில் நடனமாடுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் ஒரு பென்சிலைத் தரையில் வைக்க, அது அன்னிய பாஷையில் ஏதோ ஒன்றை எழுதும், வேறொருவர் அதற்கு விளக்கம் கூறுவார். முன்பு நிகழ்ந்த சம்பவங்களை அது அப்படியே எழுதும், அவர்கள் புழுதியைத் தலையின் மேல் வாரியிட்டு, கத்திகளினால் தங்களை காயப்படுத்திக் கொண்டு, காட்டு மிருகத்தின் இரத்தத்தை மேலே பூசி, பிசாசை நோக்கிக் கூப்பிடுவார்கள். எனவே, அன்னிய பாஷை பேசுதல் என்பது மாத்திரம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதன் அடையாளமன்று. `நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை’, ஆகையால் அன்னிய பாஷை பேசுவதனால் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டோம் என்பதல்ல. ஆனால் நித்திய ஆவியாகிய கிறிஸ்து உங்கள் சொந்த இரட்சகராக ஆகி, உங்களை முற்றிலும் மாற்றி, உங்கள் கருத்துக்களைக் கல்வாரியில் அவருடைய வார்த்தைக்கேற்ப அமைத்தால், உங்களில் ஏதோ ஒன்று சம்பவித்துள்ளது என்பது உறுதியாகும். ஆம், அவ்விதம் உங்களில் ஒன்று சம்பவித்தால் அதை யாரும் உங்களுக்கு எடுத்துக் கூற அவசியமில்லை. அதை நீங்களே அறிந்து கொள்வீர்கள். புதிய திராட்சரசம் வெளிப்பாட்டை அளிக்கும் போது பெந்தேகோஸ்தே நாளில் அதுதான் சம்பவித்தது. அவர்கள் மேல் ஆவி ஊற்றப்பட வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். அது நிறைவேறும் வரை அவர்கள் காத்திருந்தனர். அந்த வெளிப்பாடு அடையாளங்களினால் உறுதிப்பட்டபோது, ஆவியைப் பெற்ற அனைவரும் உற்சாகம் கொண்டனர். அவர்கள் அனல் கொண்டு தெருக்களில் சென்று பிரசங்கித்தினர். அதற்கு முன்பு அவர்கள் பயந்து போய் அறையின் கதவுகளையெல்லாம் அடைத்துக் கொண்டனர். ஆனால் ஆவியைப் பெற்ற பிறகு யாரைப் பார்த்து பயந்தார்களோ அவர்களிடமே அவர்கள் சுவிசேஷத்தைத் தைரியமாகப் போதித்தனர். அவர்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஏனெனில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருந்த உண்மையான வார்த்தை அப்பொழுது நிரூபிக்கப்பட்டது. பரிசுத்த ஆவியைப் பெற்றதன் பயனாக, என்ன நேர்ந்த போதிலும் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அதை இழந்து போகாமல், தங்கள் சாட்சிகளை தங்களின் சொந்த இரத்தத்தினால் முத்தரித்து மரித்தனர். ஏனெனில் வாக்குத்தத்தம் செய்யப்பட்டிருந்த தேவனுடைய உண்மையான வார்த்தை அடையாளங்களினால் உறுதிப்படுத்தப்பட்டது. இப்பொழுது கடைசி காலத்திற்கென அளிக்கப்பட்டிருக்கும் வாக்குத் தத்தத்தை சற்று கவனியுங்கள். அது நம் முன்னிலையில் அடையாளங் களினால் உறுதிப்படுத்தப்படுகிறது. பரிசுத்த ஆவியானவர் நம்மிடையே, அவர் என்ன செய்யப் போகிறார் என்று சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் செய்து காண்பிக்கிறார். நண்பனே, நமக்கும் ஏதோ ஒன்று சம்பவிக்கிறது. நான் ஒன்று சொல்லுகிறேன். தேவனால் முன்குறிக்கப்பட்ட உண்மையும் உத்தமுமான விசுவாசி என்னும் வித்தின் மீது வெளிச்சம்படும் போது அது புது ஜீவனை அடைகிறது. கிணற்றடியிலிருந்த அந்த பெண்.... அக்காலத்துகல்வியறிவு படைத்த ஆசாரியர்கள் இயேசுவைப் பிசாசு என்றும், குறி சொல்லுகிறவன் என்றும் அழைத்தனர். ஆனால் முன் குறிக்கப்பட்ட வித்தாகிய அந்தப் பெண் வார்த்தையினால் உயிர்ப்பிக்கப்பட்டாள். முன் குறிக்கப்படுதல் என்னும் போதகம் தவறென்று எண்ணுகின்றீர்களா? இயேசு, `என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் என்னிடத்தில் வரான், என் பிதா எனக்களித்த யாவும் என்னிடத்தில் வரும்’என்று சொன்னார். கடைசி காலத்தில் ஸ்தாபனங்களில் காணப்படும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் பற்றி இப்பொழுது நாம் படித்துக் கொண்டு வருகிறோம். ஸ்தாபன முறைகள் அனைத்தும் அந்திக் கிறிஸ்துவினால் உண்டானவை என்று நாம் நிரூபித்தும் இருக்கிறோம். ஸ்தாபன முறைமைகள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானதல்ல வென்று ஆட்சேபித்து இங்கிருந்து யாராவது ஒருவர் வெளிநடப் பாரானால், அவர்களில் ஏதோ தவறுண்டு என்று அர்த்தம்’ சபையின் சரித்திரத்தின் மூலமாகவும், வேதவாக்கியங்களின் மூலமாகவும், ஸ்தாபனங்கள் அந்திக்கிறிஸ்துவினால் உண்டானவை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. ரோமாபுரி தான் அதற்கு தலையாயுள்ளது. குமாரத்தி சபைகள் அவளைப் பின்பற்றி, இருவரும் பாதாளத்தில் தள்ளப்படுகின்றனர். நான் கூறுவது முற்றிலும் உண்மையாகும். அந்திக் கிறிஸ்துவின் ஆவியைக் குறித்து நாம் இப்பொழுது பார்த்தோம். நாம் வாழும் இந்நாட்கள் சொல்லி முடியாததும் மகிமயைhல் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை நமக்களிக்க வேண்டும். கடைசி நாட்களில் அந்திக் கிறிஸ்து முழு உலகையும் ஏமாற்றி விடுவான் என்பதாக வேதம் உரைக்கிறது. உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர் வெகு சிலர் மாத்திரமே இருப்பர். தேவனுடைய வார்த்தையின் உண்மையான வெளிப்பாடு அவர்களின் இருதயங்களைத் தொடும் போது கன்மலை பிளந்து தண்ணீர் புரண்டு வந்தது போன்று, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் இருதயத்தைப் பிளப்பதனால், புதிய ஜீவன் அவர்களிலிருந்து புரண்டோடி வரும். அதை யாருமே நிறுத்த முடியாது. சில நாட்களுக்கு முன்பு நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் தர்க்கம் செய்து, `தேவன் வானத்தையும் பூமியையும் ஆறு நாட்களில் சிருஷ்டித்தார் என்று சொல்ல உமக்கு வெட்கமில்லையா?’ என்று கேட்டார். `வேதாகமம் அப்படித்தான் கூறுகிறது’ என்று நான் பதிலுரைத்தேன். `அவர், `இவ்வுலகம் லட்சக்கணக்கான வருடங்களாய் இருக்கின்றது என்பதற்கு சான்றுகள் உண்டு’ என்றார். அதற்கு நான் `அதைக் குறித்து கவலையில்லை. ஆதியாகமம் 1.1ல் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்று எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு வித்தும் அனேகவருடங்களாக அங்கு புதைக்கப்பட்டிருந்தது என்று நான் கருதுகிறேன். தண்ணீர் விலக்கப்பட்டு, வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன் அவை வளர்ந்து மரங்களாயின’ என்றேன். மனிதனின் வாழ்க்கையில் சம்பவிக்கும் ஒரு செயலுக்கு அது ஓர் உதாரணமாய் அமைந்துள்ளது. மனிதனுக்குள்ளிருக்கும் வித்தை மறைக்கும் யாவும் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தினால் நீக்கப்பட்டு, சுவிசேஷமென்னும் வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன், அதனுள் ஜீவன் இருப்பதால் அது ஜீவிக்கத் தொடங்குகிறது. இல்லையேல் அது ஜீவிக்க முடியாது. அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே நிச்சயமாக அவர்களுக்குள் ஜீவன் உண்டு. ஆகையால் தான் கடைசி வித்து உட்பிரவேசிக்கும்வரை இயேசு தமது மத்தியஸ்த ஊழியத்தை கொண்டிருக்கிறார். வெளிச்சம் எப்பொழுது வித்தின் மேல்பட வேண்டு மென்பதை அவர் அறிவார். டாக்டர் லீ வேயில் (அவர் இக்கூட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அனேக நாட்களாக நான் அவரைக் காணவில்லை.... இதோ அவர் இங்கே இருக்கிறார்). அன்றொரு நாள் அவர் ஐரினேயஸ் (Irenaeus) கூறியவைகளை ஒரு காகிதத் துண்டில் எழுதி எனக்கு அனுப்பினார். அனேக நாட்களுக்கு முன்பாக ஜரினேயஸை அக்காலத்து சபையின் தூதனாக நான் தேர்ந்தெடுத்தேன். `கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கத்தினனாயிருக்கும் கடைசி நபர் உட்பிரவேசித்தல் கடைசி நாட்களில் நிகழும்’ என்பதாக அவர் கூறியுள்ளார். நாம் அந்த கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெந்தகோஸ்தே காலத்தவர் அகமகிழ்ந்திருந்தனர். அவர்கள் உண்மையாக ஊக்குவிக்கப்பட்டனர். தாவீதை நாம் எடுத்துக் கொள்வோம். அவன் உற்சாக மூண்டவனாய், `என் பாத்திரம் நிரம்பி வழிகிறது’ என்கிறான். அவனுடைய வாழ்க்கையில் மகத்தான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அவன் ஆவியில் நிறைந்த போது (அவன் ஒரு தீர்க்கதரிசியென்பதை நாமறிவோம். வேதம் அவனைத் தீர்க்கதரிசியென அழைக்கிறது) உயிர்த்தெழுதலை அவன் கண்டான். நீங்கள் படிக்க விரும்பினால் சங்கீதம் 1.8-11 படியுங்கள். அவன், `என் இருதயம் பூரித்தது. என் மகிமை களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரித்தவானை அழிவைக் காணவொட்டீர்’ என்றான். அவன் பாத்திரம் அப்பொழுது நிரம்பி வழிந்தது. ஏனெனில் அவன் உயிர்த்தெழுதல் நிகழ்வதைக் கண்டான்... ஆம், அவன் பாத்திரம் நிரம்பி வழிந்தது. வேறொரு முறை தாவீதின் பாத்திரம் நிரம்பி வழிந்தது. வேண்டுமானால் 2 சாமுவேல், 6.14ஐ குறித்து கொள்ளுங்கள். பெலிஸ்தர் உடன்படிக்கை பெட்டியைக் கைப்பற்றி அவர்கள் தெய்வமாகிய தாகோன் முன் அதை வைத்தனர். தாகோன் சிலை முகங்குப்புற விழுந்தது. வேறொரு இடத்திற்கு அதைக் கொண்டு சென்ற போது, அங்குள்ள ஜனங்கள் வாதையால் பீடிக்கப்பட்டனர். அவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் அதை காளை வண்டியில் ஏற்றி அனுப்பினார்கள். உடன்படிக்கை பெட்டியைத் தாவீது கண்டவுடன் அவன் உற்சாகம் கொண்டு, அவனுடைய பாத்திரம் நிரம்பி வழிந்தது. வார்த்தையானது மறுபடியும் இஸ்ரவேலருக்கு வெளிப்படுவதை அவன் கண்டு, ஆவியில் நிறைந்து, சுற்றி சுற்றி நடனமாடி வந்தான். ஆம், அவன் பாத்திரம் நிரம்பி வழிந்தது. ஏன்? வார்த்தை திரும்ப வருவதை அவன் கண்டதால். மறுபடியும் வார்த்தை நம்மிடம் திரும்ப வருவதைக் காணும் எவரும் ஊக்க உணர்ச்சி பெறுவர் என்று நான் நினைக்கிறேன். என்னே ஒரு தருணம்! என்னே ஒரு தருணம்! இப்பொழுது நாம் முத்திரையைக் குறித்து பார்ப்போம். இப்படி பேசிக்கொண்டே சென்றால் நம் பொருளுக்கு நாம் வரமாட்டோம். அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது. நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆட்டுக்குட்டியானவர் நாலாம் முத்திரையை உடைத்த போது... இங்கு சற்று நிறுத்துவோம் - நான்காம் முத்திரை, யார் அதை உடைத்தது? ஆட்டுக்குட்டியானவர். அதைத் திறக்க வேறு யாராவது பாத்திரவானாகக் காணப்பட்டார்களா? இல்லை, வேறு யாரும் அதைத் திறக்கக் கூடாதிருந்தது. ஆட்டுக்குட்டியானவர் நான்காம் முத்திரையை உடைத்தபோது, கழுகைப் போன்று காணப்பட்ட நான்காம் ஜீவன் யோவானிடம், `இப்புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை வந்து பார்’ என்றது அவர் யோவானிடம், `இது நான்காம் இரகசியம், நான் இதை அடையாளங்களாகக் காண்பித்தேன். அதைப் புரிந்து கொண்டாயோ என்னவோ?’ என்றார். என்றாலும், அவன் கண்ட விதமாக அதை எழுதினான். அதன் அர்த்தம் இரகசியமாகவே இதுவரை இருந்து வந்தது, கடைசி நாட்களில் மாத்திரமே கர்த்தர் அதை வெளிப்படுத்தித் தருவார். எடுக்கப்படுதலுக்கு முன்னர் கடைசி கால சபையின் முடிவில் அது வெளிப்படும். சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும் என்று எங்ஙனம் யாராகிலும் கூறமுடியுமென்று எனக்குப் புரியவேயில்லை, அது எதற்காக உபத்திர காலத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்? அதற்குத்தான் பாவமென்பதே கிடையாதே! நான் சபையைக் குறிப்பிடவில்லை. சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கும், நான் இங்கு குறிப்பிடுவது மணவாட்டியாகும். மணவாட்டியினிடம் பாவமென்பது கிடையாது. அது முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. அதில் சிறிதேனும் விடப்படவில்லை. அவர்கள் தேவனுடைய சமூகத்தில் பரிபூரணமுள்ளவராய் இருக்கின்றனர். அவர்களைக் சுத்திகரிக்க உபத்திரவம் அவசியமில்லை. ஆனால் மற்றவர்க்கு அது அவசியம். சபையானது உபத்திரவ காலத்திற்குள் செல்லவேண்டும். ஆனால் மணவாட்டிக்கு அது அவசியமில்லை. இதற்கு முன்னடையாளங்களாக இருப்பவைகளை நாம் எடுத்துக் காண்பித்தோம். நோவா உபத்திரவ காலத்திற்குள் சென்று வெளிவந்து, பாவத்தில் விழுந்தான். ஏனோக்கு அதற்கு முன்னால் எடுக்கப்பட்டான். உபத்திர காலத்திற்கு முன்பு பரிசுத்தவான்கள் எடுக்கப்படுவார்கள் என்பதற்கு ஏனோக்கு ஒரு உதாரணமாயிருக்கிறான். ஆட்டுக்குட்டியானவர் முத்திரையை உடைத்தார். முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பானதாய் இருந்தது (அதை நாம் சபையின் காலங்களைப் பற்றி சிந்திக்கும் போது பார்த்தோம்). இரண்டாம் ஜீவன் காளைக் கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனிதமுகம் கொண்டதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. இந்த நான்கு ஜீவன்கள் நான்கு சுவிசேஷ புத்தகங்களென்றும், அவை முறையே நான்கு திசைகளிலும் உட்கார்ந்து கொண்டு அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகத்தைக் காவல்காக்கின்றன என்றும் நாம் பார்த்தோம். எவ்வளவு அழகாக இவை பொருந்துகின்றன! குதிரை சவாரி செய்பவர்களில் இவன் தான் கடைசியானவன் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன். நாளை இரவு பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து நாம் தியானிப்போம். அதற்கு அடுத்த நாளிரவு - நியாயத்தீர்ப்பு. அதற்கும் அடுத்த இரவு, யுகம் முடிவடைதல் - எல்லாம் முடிந்துபோகும் சமயம். அப்பொழுது மணவாட்டி எடுக்கப் பட்டிருப்பாள். ஏழாம் முத்திரையின் போது, கலசங்கள் ஊற்றப்படுகின்றன, எல்லாமே அப்பொழுது ஊற்றப்படுகின்றது. அவை என்னவென்பதை நான் இதுவரை அறியேன். கவனியுங்கள், இந்த ஜீவன் பறக்கும் கழுகுக்கு ஒப்பாக இருந்தது. நான்கு வித்தியாசமான காலங்கள் உண்டாயிருந்தன. சிங்கத்தின் காலம் ஒன்று உண்டாயிருந்தது. இப்பொழுதுள்ளது நான்காம் காலம்.... அந்த ஜீவன் யோவானிடம், `மீட்பின் புத்தகத்தில் மறைந்துள்ள நான்காம் இரகசியம் மங்கின நிறமுள்ள ஒரு குதிரையையும் மற்ற குதிரைகளின் மேல் சவாரி செய்த அதே ஆள் அதின்மேல் ஏறியிருப்பதையும் கண்டான். அவனுக்கு `மரணம் என்னும் பெயரிடப்பட்டிருந்தது. இவன் மற்றைய குதிரைகளின் மேல் சவாரி செய்த போது, அவனுக்குப் பெயர் சூடப்படவில்லை என்பதை கவனிக்கவும். ஆனால் இப்பொழுது அவன் `மரணம்’ என்று அழைக்கப்படுகிறான். அதாவது அவன் யாரென்பது இப்பொழுது வெளிப்படுகிறது - மரணம். அதைக் குறித்து நாம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பிரசங்கம் செய்யலாம். வெளிப் படையாகக் கூறினால், உண்மையான ஒன்றுக்கு விரோதமாயிருப்பது, மரணமாகத்தான் இருக்க முடியும். ஜீவன், மரணம் என்பவை இரண்டு உண்டு. ஜீவனுக்கு விரோதமாயிருப்பது மரணம், பரிசுத்த ஆவியானவர் இக்காலத்தில் அளிக்கும் வெளிப்பாடு முற்றிலும் உண்மை என்பதை இது நிரூபிக்கின்றது. முதலாம் காலமாகிய சிங்கத்தின் காலத்தில் அவன் பெயர் என்னவென்பது வெளிப்படவில்லை. அதற்கடுத்த காலமாகிய காளையின் காலத்திலும் - இருளின் காலங்கள் - அது வெளிப்படவில்லை. மூன்றாம் காலமாகிய மனிதனின் காலத்திலும் - லூதர், வெஸ்லி போன்ற சீர்திருத்தக்காரர் தோன்றின காலம் - இது வெளிப்படவில்லை. ஆனால் கடைசி காலமாகிய கழுகின் காலத்தில் - அதாவது தீர்க்கதரிசியின் காலத்தில் - ஒரு தீர்க்கதரிசியின் மூலம் இரகசியங்கள் வெளிப்படவிருக்கும் காலத்தில் இது வெளிப்படுகின்றது. நீங்கள் நன்றாக இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று கருதி இதை சற்று விவரிக்க விரும்புகிறேன். நான் இப்பொழுது அளிக்கும் செய்தி இங்கு கூடியவர்களுக்கு மாத்திரமல்ல. இது பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிநாடாக்கள் எல்லாவிடங்களிலும் செல்கின்றன. ஆகவே நான் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏனெனில் யாராது ஒருவருக்கு இந்த ஒரு ஒலிநாடா மாத்திரம் கிடைத்து, மற்றைய ஒலிநாடாக்கள் கிடைக்காவிடில், அவருக்கு ஒன்றுமே புரியாது. தேவன் இதை கடைசி காலத்தில் வெளிப்படுத்துவதாக வாக்களித்துள்ளார். இதற்கு முன்பு இதைக் குறித்து அனேக குழப்பங்கள் உண்டாயிருந்தன. `எலியாவின் அங்கி’ என்று கூறப்பட்டது நம்மிடையே காணப்பட்டது, ஜான் அலெக்ஸ்hண்டர் டவி (John Alexander Dowie) என்பவர் தன்னை எலியாவென்று அழைத்துக் கொண்டார். அவர் எலியாவின் அங்கியினால் சுற்றப்பட்டு புதைக்கப்பட்டார். அவ்விதமாக அனேக செயல்கள் நம்மிடையே காணப்பட்டன. அவை என்ன? இனி வெளியாகவிருக்கும் சத்தியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துப்போடவே இவை அனைத்தும் உண்டாயின. இயேசு இவ்வுலகில் தோன்றுமுன் அனேக கள்ளக் கிறிஸ்துக்கள் தோன்றினர். எல்லா காலத்திலும் அவ்வாறே சம்பவிக்கின்றது. உண்மையான ஒன்று சம்பவிக்கும் முன்னர் போலியானவைகளைக் கொண்டு ஜனங்களின் இருதயங்களைக் குழப்பமுறச் செய்ய சாத்தான் விழைகிறான். அக்காலத்து யூதர்களிடம் கமாலியேல், `இந்நாட்களுக்கு முன்னே ஒருவன் எழும்பி நானூறு பேரை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றான். அவன் அழிந்துபோனான். அவனை நம்பியிருந்தவர்கள் சிதறி அவமாய்ப் போனார்கள்’ என்று கூறினானல்லவா? இயேசுவும், `என்பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்’ என்று சொன்னார். கமாலியேல் அவர்களிடம், `இவர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு விடுங்கள். இது மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம், தேவனால் உண்டாயிருந்த தேயானால், தேவனோடு போர் செய்கிறவர்களாகக் காணப்படுவீர்கள்’ என்றான். அவன் நியாய சாஸ்திரியாயிருந்ததால் ஞானமாய் பேசினான். இப்பொழுது கவனியுங்கள், இதுவரை வெளிப்படாத எல்லா தேவரகசியங்களையும் வெளிப்படுத்துவதற்கென உண்மையான எலியாவின் ஆவியைக் கொண்ட ஒருவரை எழுப்புவதாக கர்த்தர் மல்கியா 4ம் அதிகாரத்தில் வாக்குத்தத்தம் செய்துள்ளார். அது தவறு என்று ஒருவர் எனக்கு எழுதியுள்ள குறிப்புகளும் கடிதங்களும் என்னிடமுள்ளன. அதை எழுதினவரிடம் நான் உரையாட விரும்புகிறேன். இதை யாருமே மறுக்க முடியாது. வேத சாஸ்திரம் நன்கு படித்த எவரும் இது உண்மை என்பதனை அறிவர் அவர்களும் அவன் வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். கிறிஸ்துவுக்கு முன்பு யோவான் ஸ்நானன் தோன்றிய போது என்ன நிகழ்ந்ததோ அதுவே இப்பொழுதும் சம்பவிக்கும். யோவான்ஸ்நானைக் குறித்து மகத்தான காரியங்கள் தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டிருந்தபடியால், அவர்கள் அவனை அறிந்து கொள்ளத் தவறினர். அவன் வந்து குன்றுகளைத் தாழ்த்தி, பள்ளங்களை உயர்த்தி, கரடுமுரடானவைகளைச் சமமாக்குவானென்று, அவன் தோன்றுவதற்கு 712 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவும், 400 வருடங்களுக்கு முன்னர் மல்கியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தனர். பரலோகத்தின் நடைபாதை பூமிக்கு இறக்கப்பட்டு, அவன் தன்கையில் கோலைப் பிடித்துக்கொண்டு அதன் வழியாக இறங்கி வருவானென்று அக்காலத்தவர் எண்ணியிருந்தனர். ஆனால் என்ன நேர்ந்தது? ஐக்கிய சீட்டையோ, நற்சாட்சிப் பத்திரத்தையோ பெற்றிராத ஒருவன், சாதாரண கல்வியறிவும் கூட படைத்திராமல், வனாந்திரத்தில் வாசம் செய்து வந்தான். அவன் ஒன்பது வயது சென்றபோது - அவன் பெற்றோர் காலமான பிறகு - அவன் வனாந்தரத்துக்குச் சென்றதாக சரித்திரக்காரர்கள் கூறுகின்றனர். அவனுக்களிக்கப்பட்டிருந்த ஊழியம் மிகவும் முக்கியமான ஒன்றாய் இருந்ததால், அவன் வேதபள்ளிகள் போதிக்கும் தத்துவங்களினால் குழப்பமடையக் கூடாது. அவன் மேசியாவின் வருகையை அறிவிக்க வேண்டியதாயிருந்தது. வேதபள்ளிகளின் போதனைகளால் நிரம்பிய ஒருவனைக் கர்த்தர் உபயோகிக்க முடியாது. ஏனெனில் அவன் எப்பொழுதும் அப்போதனை களின் பேரிலேயே சார்ந்திருப்பான். அவன் தேவனுடைய வெளிப்பாட்டைப் பெறநேரிட்டாலும், அவன் உடனே அவனறிந்த போதங்களுக்குச் சென்று, அதனுடன் அந்த வெளிப்பாட்டை ஒப்பிட்டு நோக்க முயல்வான். அவைகளினின்று அவன் விலகி, தேவனை மாத்திரம் விசுவாசித்தால் எவ்வளவு நலமாயிருக்கும்! அவர்கள் அவனைக் கண்டுகொள்ளத் தவறினர். இயேசுவின் சீஷர்களும் கூட அவனை அறிந்து கொள்ளவில்லை. `எலியா முன்பு வரவேண்டுமென்று வேதவாக்கியங்கள் உரைக்கின்றனவே?’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கு இயேசு, `எலியா ஏற்கனவே வந்தாயிற்று. நீங்களோ அவனை அறியவில்லை’ என்பதாக பதிலுரைத்தார். எடுக்கப்படுதலும் அதே மாதிரி சம்பவிக்கும் அது சம்பவித்தை அவர்கள் அறியாமல் போவார்கள். நான் கூறுவது ஒருக்கால் உங்களுக்கு வினோதமாகத் தென்படும் கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு கூட்டத்துக்குப் பிறகு, அது எவ்விதம் சம்பவிக்குமென்பதை சற்று அதிகமாக நீங்கள் அறிந்துகொள்ளலாம். அது இரகசியமாக நிகழ்வதால், பெரும்பான்மையோர் அது நிகழ்ந்ததை அறியமாட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் போல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பார்கள். இயேசு உலகில் தோன்றினபோது, அக்காலத்து ஜனத்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவர் கூட அதை அறிந்திருக்கவில்லையென்று நான் சொல்லக்கூடும். எலியா தீர்க்கதரிசனம் உரைத்த போது, அவன் தேவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசி என்பதை அனேகர் அறிந்து கொள்ளவில்லை. அவனை ஒரு பைத்தியக்காரனாக - விசித்திரமான ஒருவனாக - அவர்கள் கருதி, அவனை முற்றிலும் வெறுத்தனர். மறுபடியும் பிறந்த கிறிஸ்துவன் ஒவ்வொருவனும் உலகத்தாரின் கண்களில் விசித்திரமுள்ள ஒருவனாகவே (Odd ball) தென்படுவான். ஏனெனில் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் பழைய நிலைமையிலிருந்து முற்றிலும் மாறிவிட்டீர்கள். நீங்கள் வேறொரு உலகத்தைச் சேர்ந்தவர்கள். பிளவின் மற்ற எல்லையிலுள்ள ஆவியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் இங்கேயோ எல்லாமே குழப்பமுற்றுள்ளது. நீங்கள் அவர்களினின்று வித்தியாசமுள்ளவர்களாகக் காணப்படாவிடில் உங்களில் ஏதோ தவறுண்டு அங்ஙனமாயின் நீங்கள்இன்னும் பூலோகத்துக்குரியவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் பரலோக சிந்தையை உடையவர்களாயிருத்தல் வேண்டும். பரலோகத்துக்குரியவர்கள் தேவனுடைய வார்த்தையினால் பிழைக்கின்றனர். இந்த மகத்தான சம்பவம் நிகழ்ந்தது என்று நாம் பார்த்தோம், இக்காலத்திலும் உண்மையான எலியாவின் ஆவி திரும்பவும் வரவண்டுமென்று நாம் விசுவாசிக்கிறோம். அது வருமென்று தீர்க்க தரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஏற்ற காலத்திலும் நேரத்திலும் அது தோன்றும், அது வருவதற்கென்று ஒருக்கால் நாம் இப்பொழுது அஸ்திபாரம் போட்டுக் கொண்டிருக்கலாம். என்னவாயினும் அது ஸ்தாபனத்தைச் சேர்ந்த ஒன்றாக இருக்கவே முடியாது. என் அருமை நண்பர் ஒருவர் எலியாவின் ஆவியென்பது ஒரு ஜனக் கூட்டமாயிருக்கும் என்கிறார். அதை நான் மறுக்கிறேன், அதற்கு நீங்கள் வேதத்திலிருந்து ஆதாரம் காட்டுங்கள் பார்ப்போம்! என்றும் மாறிடா தேவன் தம் திட்டங்களையும் ஒருபோதும் மாற்றுவது கிடையாது. அவர் அங்ஙனம் செய்தால் அவர் தேவனல்ல. அப்படியானால் அவர் நம்மைப் போன்று பிழைகளைச் செய்யும் மனிதனாக அவரைக் கருத வேண்டும் ஏதேன் தோட்டம் காலம் முதற்கொண்டு அவர் தமது திட்டங்களை ஒருபோதும் மாற்றி அமைத்தது கிடையாது. மீட்புக்கென்று அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதுதான் இரத்தம் சிந்துதலாகும். நாம் ஒருங்கே சேர்ந்து ஒருவரில் ஒருவர் அன்பு கூறுவதற்கென கல்வியறிவைப் பயன்படுத்தினோம், அடக்கு முறையைக் கையாண்டோம், மனோதத்துவ முறைகளை உபயோகித்துப் பார்த்தோம். ஸ்தாபன முறைகளையும் கூட நாம் பிரயோகித்தோம். ஆனால் இயேசுவின் இரத்தத்தின் கீழன்றி வேறு எவ்விடத்திலும் நாம் ஐக்கியங் கொள்ளுதல் இயலாது. தேவன் மனிதனை சந்திக்கும் ஒரே ஸ்தலம் அதுவாகும். தேவன் எப்பொழுதுமே தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகிறார். இருவர் இருந்தால் அவர்களுக்கு இருவித எண்ணங்கள் உண்டாயிருக்கும். ஒரே சமயத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசிகள் உலகில் இருந்ததேயில்லை என்பதை வேதத்தை ஆராய்ந்து கண்டு கொள்ளுங்கள். அவர் எப்பொழுதும் தன்னை முற்றிலும் ஒப்புவித்த ஒருவனை மாத்திரமே காலங்கள் தோறும் உபயோகித்துக் கொண்டு வந்திருக்கிறார். அவருடைய வார்த்தைக்கு முற்றிலுமாக செவி கொடுக்கும் ஒருவனை அவர் தேடிக் கண்டுபிடிக்கிறார். அப்படிப்பட்டவன் யார் என்ன சொன்னாலும் ஆண்டவருடைய வார்த்தைக்காக காத்துக் கொண்டிருப்பான். அது வரும் வரைக்கும் அவன் அசையவே மாட்டான். அவனுடைய ஊழியம் அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் நிரூபிக்கப்படும், உலகத்தார் அவனை வெறுப்பார்கள். ஆனால் முன் குறிப்பிட்ட வித்து, இயேசுவின் காலத்தில் அவரை அறிந்து கொண்டது போன்று. அவனை அறிந்து கொள்ளும். வெளிச்சம் அதன் மேல் பட்டவுடன் அது உயிர் பெறும். முன் குறிக்கப்பட்ட நீங்கள் அவனை எளிதில் அறிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒரு வார்த்தையும் மறுத்துப் பேச அவசியமிராது. சமாரிய ஸ்திரீ, `நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வரும்போது இவைகளைச் செய்வார்’ என்றாள். அப்பொழுது இயேசு, `நானே அவர்’ என்றார். அது அவளுக்குப் போதும், அதை அறிந்து கொள்ள அவள் முழு இரவும் அதற்கடுத்த இரவும் காத்திருக்க வேண்டிய அவசியம் உண்டாயிருக்க வில்லை. அந்த க்ஷணமே அவள் அவரை அறிந்து கொண்டாள். அவள் தெருக்களில் சென்று அந்த செய்தியை மற்றவர்களுக்கு அறிவித்தாள். இப்பொழுது கவனியுங்கள், முதலாம் காலம் சிங்கத்தின் காலம், யூதா கோத்திரத்து சிங்கமான கிறிஸ்துவின் வல்லமை, ஜனங்களின் வாழ்க்கையை அக்காலத்தில் ஆட்கொண்டது. முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாக இருந்தது - தேவனுடைய வல்லமை மனிதனின் மூலம் காணப்படுதல். அதற்கடுத்த காலம் காளையின் காலம், அல்லது சிவப்பு குதிரையின் மேல் சவாரிசெய்பவனின் காலம், முதலாம் காலம் வெள்ளைக் குதிரையின் காலம், வெள்ளைக்குதிரை சபையின் வல்லமையைக் குறிக்கிறது என்றும், அது ஜெயித்துக்கொண்டே சென்றது என்றும் ஜனங்கள் கூறக் கேட்டிருக்கிறேன். அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு ஒரு கிரீடம் பின்னர் அளிக்கப்படுகிறது என்று நாம் பார்த்தோம். அது சபைதான். ஆனால் அது எங்கு சென்றது? ரோமாபுரிக்கு அங்கு தான் அவன் கிரீடத்தைப் பெறுகிறான். இரண்டாம் காலம் சிவப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம். அதற்கடுத்த காலம் மனிதனின் காலம் அல்லது கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனின் காலம் அச்சமயத்தில் சீர்திருத்தக்காரர்கள் தோன்றினர். கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவன் அந்திக்கிறிஸ்துவாக இருந்தாலும், சீர்திருத்தக்காரர்கள் அக்காலத்தில் செய்தியளித்த காரணத்தால், அது மனிதனின் காலமாகக் கருதப்படுகிறது. மனிதன் ஞானத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறான். கறுப்பு குதிரையின் மேல் சவாரி செய்பவனுக்கு ஒரு பெயர் அப்பொழுது கொடுக்கப்படவில்லை. ஆனால் நான்காம் காலமாகிய கழுகின் காலத்தில் - கர்த்தர் தம் தீர்க்கதரிசிகளை எப்பொழுதும் கழுகுக்கு ஒப்பிடுகிறார். அவரையும் கூட அவர் கழுகென்று அழைத்துக் கொள்கிறார். கழுகு அதிக உயரம் பறப்பதால், வேறெதும் அதை தொட முடியாது. உயர பறப்பதற்கு அவசியமான உடலமைப்பை அது பெற்றுள்ளது. அது உயர செல்லும்போது, அது எங்கிருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறது. சிலர் உயரமான நிலையையடைந்ததும் அவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறியாத படியால் அதனால் எவ்வித உபயோகமுமில்லை. ஒரு காகம் அல்லது ஒரு பருந்து கழுகுடன் போட்டியிட்டு உயரப் பறக்க எண்ணினால், அது சின்னாபின்னமாகப் போய்விடும், அப்படி பறக்க வேண்டுமானால் கழுகைப் போன்று அழுத்தத்தை தாங்கக்கூடிய உடல் வன்மை அதற்கு இருக்க வேண்டும். நம்மிடம் அதே தவறுதான் காணப்படுகின்றது. நம்மில் சிலருக்கு அவ்வாறே அழுத்தத்தை மேற்கொள்ளும் அளவுக்கு சக்தியில்லை. அதன் விளைவாக நாம் உயரச் செல்லும்போது வெடித்துப் போகிறோம். அழுத்தத்தை மேற்கொள்ளும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். வரப்போவது என்னவென்பதை அறிந்து அதற்கேற்ப செய்ய நமக்குக் கழுகின் பார்வை அவசியம், கழுகின் காலம் கடைசி நாட்களில் வருமென்று வெளி, 10.7லும் மல்கியா 4.5-6லும் உரைக்கப்பட்டுள்ளது. கவனியுங்கள். இந்த மனிதன் இப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். மங்கின நிறம் - ஓ! 68,000,000 பிராடெஸ்டெண்டுகளைக் கொன்ற பிறகு, ரோம சபையை எதிர்த்ததன் விளைவாக 68,000,000 பேர் கொல்லப்பட்டதாக ஸ்மக்கர் என்பவர் எழுதிய `மகிமையுள்ள சீர்திருத்தம்’ என்னும் புத்தகத்தில் நாம் வாசித்துள்ளோம். அவன் `மரணம்’ என்று அழைக்கப்படுவதில் வியப்பொன்றுமில்லை. 68,000,000 பேரை அவன் பட்டயத்தினால் கொன்று போட்டதைத் தவிர, தேவத்துக்கு விரோதமான அவனது கள்ளப் போதகத்தினால் ஆவிக்குரிய மரணம் எய்தினவரின் எண்ணிக்கை கோடிக்கணக்காயிருக்கும். ஆகையால் `மரணம்’ என்று அவன் அழைக்கப்படுவதில் வியப்பொன்று மில்லை. அந்த மனிதனை நீங்கள் கவனித்தீர்களா? தொடக்கத்திலேயே அவன் மரணமாயிருந்தாலும், களங்கமற்றவனைப் போல் அவன் அப்பொழுது காணப்பட்டான். அதன் பின்பு ஒரு கிரீடத்தை (மூன்று கிரீடங்களை) அவன் பெறுகிறான். அவன் கிரீடம் சூடப்பட்ட போது, சபையையும் அரசாங்கத்தையும் அவன் ஒன்றாக இணைத்து அதன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான். அந்திக் கிறிஸ்து என்று அழைக்கப்படும், இவன் மனித உருவில் காணப்படும் சாத்தானாகும். சாத்தான் இயேசுவுக்கு உலகத்தின் இராஜ்யங்கள் அனைத்தையும் அவைகளின் மகிமையையும் ஒரு நொடிப் பொழுதில் காண்பித்து, அவை அவனுக்குச் சொந்தமானதென்றும், அவர் அவனைப் பணிந்து கொண்டால் உலகத்தின் இராஜ்யங்களை அவருக்கு அளிப்பதாகவும் கூறினானென்று மத்தேயு 4ம் அதிகாரத்தில் படிக்கிறோம். ஆகவே, சாத்தான் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்த முடியுமனால், சிவப்பு குதிரையின் மேலிருக்கிறவன் நிச்சயம் அதின் வழியாக சவாரி செய்து செல்ல முடியும். சாத்தான் தன்னுடைய ஊழியத்தின் நான்காவது கட்டத்தில் மிருகம் என்று அழைக்கப்படுகிறான். தொடக்கத்தில் அவன் அந்திக் கிறிஸ்துவென்றும், அதன் பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியென்றும் அழைக்கப்படுகிறான். ஆனால் இப்பொழுது அவனுக்கு மிருகம் என்னும் பெயருண்டு. அவன் ஏறிச் சென்ற முதலாம் குதிரை வெள்ளை நிறமுடையதா யிருந்தது. அதற்கடுத்து சிவப்பு நிறமுள்ளதாயும், மூன்றாம் குதிரை கறுப்புநிறம் கொண்டதாயும் இருந்தன. நான்காம் குதிரை மங்கின நிறமுள்ளதாயிருந்தது. வெள்ளை, சிவப்பு, கறுப்பு இம்மூன்று வர்ணங்களைக் கலந்தால், மங்கின நிறம் கிடைக்கின்றது. எனவே, முதன் மூன்று ஊழியங்களையும் ஒருங்கே கொண்டவனாக அவன் நான்காம் குதிரையின் மேல் சவாரி செய்கிறான். ஆண்டவருடைய எண்ணிக்கை மூன்று என்பதாகும். ஆனால் இவன் எண்ணிக்கை நான்காக இருப்பதைக் கவனிக்கவும். முதலில் அந்திக்கிறிஸ்து - வெள்ளை, இரண்டாவது கள்ளத் தீர்க்கதரிசி - சிவப்பு, மூன்றாவது வானத்துக்கும் பூமிக்கும் பாவவிமோசன ஸ்தானத்துக்கும் (Purgatory) பிரதிகுரு (Vicar) - கறுப்பு, நான்காவது மிருகம் - மங்கின நிறமுள்ள குதிரை, சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்படுகிறான். அது வெளிப்படுத்தல் 12.13ல் காணப்படுகிறது. வெளிப்படுத்தல் 13 1-8ல் அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொண்டு மிருகம் என்னும் பெயர் கொள்கிறான். முதலில் அவன் நிக்கொலாய் போதகத்தை அளிக்கும் அந்திக் கிறிஸ்துவாக இருக்கிறான். அதன் பின்னர் அவன் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான். `அந்திக்கிறிஸ்து’ என்பது கிறிஸ்துவுக்கு விரோமாயுள்ளவன் என்று பொருள்படும். தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாயுள்ள எதுவும் தேவனுக்கே விரோதமாயிருக்கிறது. ஏனெனில் வார்த்தை தான் தேவன். `ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி (கிறிஸ்துவாக ஆகி) நமக்குள்ளே வாசம் பண்ணினார்’ `தேவனுடைய வார்த்தைக்கு அவன் விரோதமாயிருப்பதால், அவன் அந்திக் கிறிஸ்து வென்று அழைக்கப்படுகிறான். ஆனால் ஒரு ஆவிக்கு கிரீடம் சூட முடியாது. எனவே தொடக்கத்தில் அவன் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள வில்லை. அவனிடம் வில் மாத்திரம் இருந்தது, ஆனால் அம்புகள் இல்லை. அவனுக்குக் கிரீடம் சூடும் தருணம் வந்தபோது அவன் அந்திக் கிறிஸ்துவின் போதகத்தைப் போதிக்கும் கள்ளத் தீர்க்கதரிசியாகிறான், புரிகிறதா? பின்னர் அவன் பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், அரசாங்கத்தையும் சபையையும் ஒன்று படுத்துகிறான். இனி மேல் அவன் யாருடைய உத்தரவும் பெற அவசியமில்லை. அவனே அரசாங்கத்தின் தலைவன், அவனே பரலோகத்தின் தலைவனும்கூட, அவன் மூன்று கிரீடங்களைப் பெற்று, பாவவிமோசன ஸ்தானம் (Purgatory) ஒன்று உண்டென்னும் கருத்தை நுழைத்து, மரித்தவர்கள் அந்த ஸ்தலத்தில் தங்கியிருக்கிறார்கள் என்றும், அதனின்று மரித்தவர் விடுபடவேண்டு மாயின் அவர்களுடைய சுற்றத்தார் அதற்கென்று காசைச் செலுத்தினால் பிரதிகுரு என்னும் ரீதியில் அவன் ஜெபம் செய்து அவர்களை விடுவிக்கும் அதிகாரம் பெற்றுள்ளான் என்றும் கூறினான். அவன் பிரதிகுரு என்று தன்னை அழைத்துக்கொண்டு தேவனுடைய ஸ்தானத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இது மிகவும் தெளிவாக இருக்கிறதல்லவா. வேதத்தில் எப்பொழுதும் அவனுடைய எண்ணிக்கை நான்காக இருக்கிறது, மூன்றல்ல. இப்பொழுது வெளிப்படுத்தல் 12ம் அதிகாரம் 13ம் வசனத்தைப் படிப்போம். வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் பிள்ளையைப் பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. பாருங்கள், அவன் பூமியில் தள்ளப்பட்டு, அந்திக் கிறிஸ்துவின் ஆவியாக ஒரு மனிதனுக்குள் வாசம் செய்கிறான். அந்த மனிதன் ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறுகிறான் - அந்திக் கிறிஸ்துவிலிருந்து கள்ளத் தீர்க்கதரிசியாக, பின்னர் மிருகம் அவனுக்குள் வருகிறது. திருச்சபை நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின்மூலம் கிறிஸ்து குடிகொள்ளுதல் போன்றவை களின் மூலம் வளர்ந்து கொண்டு வந்தவிதமாகவே சாத்தானின் சபையும் அந்திக் கிறிஸ்துவிலிருந்து கள்ளத் தீர்க்கதரிசியாக வளர்ந்து, முடிவில் அந்த மிருகம் எழும்பிவரும், ஆம், வானத்திலிருந்து அவள் தள்ளப்படுகிறான். வெளிப்படுத்தல் 13.1-8 வசனங்களைப் பார்ப்போம். பின்பு நான் கடற்கரை மணலின் மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பி வரக்கண்டேன், (12ம் அதிகாரத்தில் சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்படுகிறான். இப்பொழுது கவனியுங்கள்). அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதின் கொம்புகளின் மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின் மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது, (நமக்கு மாத்திரம் சமயம் இருந்தால், இவ்வடையாளங்களை விவரித்து அவை சாத்தானைக் குறிக்கின்றன என்று காண்பிக்கலாம்). அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தன் வாயைப் போலவும் இருந்தன, வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. (சாத்தான் குடிகொள்ளுதல்). அதின் தலைகளிலொன்று சாவுக்கேது வாய்க்காயப்பட்டிருக்கக் கண்டேன், ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக் கப்பபட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி (கம்யூனிஸத்தைக் கவனிக்க வேண்டாம். இதை கவனியுங்கள், கம்யூனிஸம் என்பது, சிந்தப்பட்ட இரத்தத்திற்கு என்றைக்காவது பழிவாங்குவதற்கென தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாக அமைந்துள்ளது. நாளை இரவு அதைக் குறித்து சிந்திப்போம்). அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங் கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். (மிருகம் யாரிடமிருந்து அதிகாரம் பெறுகிறதென்ப தைக் கவனியுங்கள். வலுசர்ப்பம் யார்? - சாத்தான்) அல்லாமலும், மிருகத்திற்கு ஒப்பானவர் யார்? அதினோடே யுத்தம் பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது. அல்லாமலும் நாற்பத்திரண்டு மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும் (ஒரு பட்டப்பெயரைச் சூடிக்கொண்டு), அவருடைய வாசஸ்தலத்தையும் (அதாவது பரிசுத்த ஆவியானவர் தங்குமிடம், அதை ரோமாபுரிக்கு - வாடிகன் பட்டினத்திற்கு மாற்றினான்). பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது (அவர்கள் மத்தியஸ்த ஊழியம் செய்கின்றனர் என்று சொல்லி அவர்களைத் தூஷிக்கின்றது). மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம் பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், (பரிசுத்தவான்களை அவன் தொழு மரத்தில் கட்டி அவர்களை எரித்து, சிங்கங்களுக்கு இரையாகக் கொடுத்து, எல்லா விதங்களிலும் அவர்களைக் கொன்று போட்டான்). ஒவ்வொரு கோத்திரத்தின் மேலும் பாஷைக்காரர் மேலும் ஜாதிகள் மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப் பட்டது. (அஞ்ஞான ரோமாபுரி போப்பாண்டவரின் ரோமாபுரியாகும் வரை இவ்விதம் உண்டாயிருக்கவில்லை. அதன் பின்பு கத்தோலிக்க ஆதிக்கம் உலக முழுவதும் பரவி அகில உலக கத்தோலிக்க சபை நிறுவப்பட்டது). உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப் போவான், பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்பட வேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். அவன் பட்டயத்தைக் கையிலேந்தியவனாய், கொல்லப் புறப்பட்டான் என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். ஆனால் அவன் பட்டயத்தினாலே மடிந்து போவான் - தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயம். இரு புறமும் கருக்குள்ள அந்த பட்டயம் அவனைக் கொன்று போடும் (ஏழு இடி முழக்கங்கள் அந்த சிறு குழுவுக்கு தங்கள் சத்தங்களை முழங்கும் வரைக் காத்திருங்கள். அப்பொழுது அவர்கள் தேவனுடைய வார்த்தையை வல்லமையாய் பிரயோகிக்க முடியும்). அந்த வார்த்தை துண்டு துண்டாக வெட்டும். வானத்தை அடைக்கவும், அவர்கள் விரும்பினதைச் செய்யவும் அவர்களுக்கு அதிகாரமுண்டாகும். தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை அவனைக் கொன்றுபோடும் - இருபுறமும் கருக்கான எந்த பட்டயத்திலும் அது கருக்கானதாயிருக்கிறது. விரும்பினால் அவர்கள் லட்சக்கணக்கான டன்கள் எடையுள்ள வண்டுகளை வரவழைக்க முடியும். ஆமென்! அவர்கள் என்ன சொன்னாலும் அது நிறைவேறும். ஏனெனில் அது தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தையாயிருந்தது. தேவன் எப்பொழுதும் மனிதனின் மூலமாகவே கிரியை செய்துகொண்டு வருகிறார். வேண்டுமானால் எகிப்தில் அவரே வண்டுகளை வரவழைத்திருக்க முடியும். ஆனால் அவர் மோசேயிடம், `மோசே, அது உன் பணியாகும். என்ன செய்யவேண்டுமென்பதை நான் உனக்குச் சொல்வேன். அதை நீ செய்வாயாக’ என்றார். அவ்வாறே அவன் அதை செய்து நிறைவேற்றினான். வண்டுகளை வரவழைக்க அவர் சந்திரனையோ அல்லது காற்றையோ உபயோகித்திருக்கலாம். ஆனால் அவர் அதற்கென்று ஒரு மனிதனைத் தெரிந்து கொண்டார். சாத்தான் வானத்திலிருந்து தள்ளப்பட்ட பின்பு அவன் ஒரு மனிதனுக்குள் குடிகொண்டு மிருகம் என்று அழைக்கப்படுகிறான் - அந்திக்கிறிஸ்து, கள்ளத்தீர்க்கதரிசி, பின்பு மிருகம், மரணம் என்னும் பெயர் அவனுக்குச் சூட்டப்படுகின்றது, பாதாளம் அவன் பின்தொடரு கின்றது - சாத்தான் அவன் சிங்காசனத்தில் முற்றிலுமாக வீற்றிருத்தல், அவன் இவ்வுலகில் சாத்தானின் பிரதிநிதியாக இருந்து வந்து, மத்தேயு 4ம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசுவுக்கு அவன் அளிப்பதாகச் சொன்ன அந்த உலகத்தின் ராஜ்யங்களின் மேல் ராஜ்யபாரம் செய்கிறான். அது சற்று பின்பு நடைபெறுகிறது. இப்பொழுது அவன் கள்ள தீர்க்கதரிசி மட்டுமே. யூதர்களுடன் அவன் செய்த உடன்படிக்கையை முறித்த பிறகு, அவன் மிருகமாக ஆகிறான். அந்த சமயத்தில் அவன் குடிகொள்ளும் மனிதனுக்கு மிருகத்தின் இருதயம் அளிக்கப்படுகின்றது, சபை எடுக்கப்பட்ட பின்னரே சாத்தான் தள்ளப்படுகிறான் என்பதை கவனிக்கவும். ஆகவே அப்பொழுதுதான் அவன் மிருகம் என்று அழைக்கப்படுவான். கவனியுங்கள், நமது மத்தியஸ்தர் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் வரை சாத்தானால் நம் பேரில் குற்றஞ் சாட்ட முடியும். ஏனெனில் அவன் எதிர்தரப்பிலிருக்கும் வழக்கறிஞன். அவன் கிறிஸ்துவின் எதிர்தரப்பி லிருந்து கொண்டு, `ஆதாம் பாவத்தில் விழுந்தான். ஆதாம் இவை யெல்லாம் செய்தான். நான் அவனை மேற்கொண்டேன். ஏவாள் ஒரு பொய்யை நம்பும்படி செய்தேன். அவள் அதன் விளைவால் உம்மால் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டாள்’ என்றெல்லாம் கூறி அவன் வாதிப்பான். ஆனால் நமது மத்தியஸ்தர் (ஆமென்) - மீட்பின் இனத்தான் (ஆமென்) - அங்கு தாம் சிந்தின இரத்தத்துடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த இரத்தம் கொடூரப் பாவியின் இருதயத்தையும் மாற்றவல்லது. மத்தியஸ்தர் இப்பொழுதும் பரிந்து பேசும் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார். ஆம், ஐயா! சாத்தான், `அவர்கள் குற்றஞ் செய்தவர்கள்’ என்பான். இயேசு `இல்லை’ என்று வாதிப்பார். கறையைப் போக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட க்ளோராக்ஸ் என்னும் வெண்மையாக்கும் திரவம் எழுதும் மையின் நிறத்தை அல்லது வேறெந்த கறையையும் அகற்றிவிடும். அது மறைந்து போவதால், அது எங்கிருந்தது என்பதை யாரும் அறியவும் முடியாது. அது மூலப் பொருட்களாக சிதைக்கப்பட்டு மறைந்து விடுகிறது. தண்ணீரும் கூட பொடி வடிவிலுள்ள க்ளோராக்ஸ் என்பதுடன் சேர்ந்து விடுகிறது. ஆமென்! தேவனுக்கு மகிமை. கறை மறைந்து அது சுத்தமாகி விடுகிறது. இயேசுகிறிஸ்துவின் இரத்தமும் அதையே செய்கிறது. உண்மையான தேவனுடைய பிள்ளை தன் பாவத்தை அறிக்கையிட்டு, அவருடைய கிருபையினால் நீதிமானாக்கப்படுகிறான். அப்பொழுது ஆண்டவர், `அவனுடைய பாவம் என்னவென்பதும் கூடஎனக்கு நினைவில்லை. அவன் என் குமாரன்’ என்று சொல்லுவார். `இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம் போ என்று சொல்லி சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அது அப்புறம் போம் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’, ஏனெனில் நீங்கள் மீட்கப்பட்ட புத்திரர். ஆமென்! அது உண்மையென்று என் அனுபவத்திலிருந்து நானறிவேன். ஏனெனில் ஆறு வெவ்வேறு தருணங்களில அணில்கள் தோன்றும்படி ஆண்டவர் செய்திருக்கிறார். மோசேயின் காலத்தில் வண்டுகளையும் தவளைகளையும் சிருஷ்டித்த கர்த்தருக்கு அணில்களையும் சிருஷ்டிக்க முடியும். அவர் சிருஷ்டிகர்த்தர். ஒரு மனிதனின் பாவம் அறிக்கை செய்யப்பட்டு அது இயேசுவின் இரத்தமென்றும் வெண்மையாகும். திரவத்தில் விழும்போது, பாவமனைத்தும் அகன்று விடுகிறது. அவன் பாவமில்லாதவனாக - குற்ற மற்றவனாக கருதப்படுவான். தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான். ஏனெனில் அவன் பாவஞ் செய்ய முடியாது. இயேசுவின் இரத்தம் என்னும் வெண்மையாக்கும் திரவம் அவனுக்கும் தேவனுக்கும் இடையே நிற்கின்றது. அது பாவத்தை உடைத்தெறிந்து அதன் ஆதிகாரணரான சாத்தானிடம் அனுப்பும்போது, பாவம் எங்ஙனம் ஆண்டவருடைய சன்னதியை அடைய முடியும்? ஆமென்! நான் பக்தியுணர்ச்சி அடைகிறேன். இதை நான் கூறும்போது, எனக்குள் உற்சாகம் எழுகின்றது. கவனியுங்கள். சாத்தான் முற்றிலுமாக சிங்காசனத்தில் வீற்றிருந்து, உலகத்தின் இராஜ்யங்களை ஆண்டவராகிய இயேசுவுக்கு அளிக்க முற்பட்டான். இப்பொழுது மிருகத்தின் இருதயம் கொண்டவனாய் அவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறான். பிசாசு குடிகொண்டிருக்கும் மிருக மாகிய அந்தமனிதன் உண்மையான தேவனுடைய வார்த்தையுடன் தொடர்பு கொண்டுள்ள ஒருவனைப் போன்று பாசாங்கு செய்கிறான். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு யூதாசும் அதையே செய்தான். அவன் ஆதிமுதற்கொண்டு பிசாசாக இருந்த போதிலும், அவன் விசுவாசி போன்று காணப்பட்டான். அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான். இயேசு வார்த்தையாயிருந்தபடியால், அவன் யாரென்பதை ஆரம்பத்திருந்தே அறிந்திருந்தார். யூதாஸ் பொக்கிஷதாரியாயிருந்து பண ஆசையினால் விழுந்து போனான். இன்றைய சபையும் அவ்வாறே பண ஆசையின் காரணமாகவே விழுந்து போயிருக்கிறது. கத்தோலிக்க சபையானது மரித்துப் போனவரின் ஆத்துமாக்களுக்காக ஜெபம் ஏறெடுப்பதற்கென சபையாரிடம் காசு வசூலிக்கின்றதைக் குறித்து நாம் கடந்த இரவு சிந்தித்தோம். கத்தோலிக்க சபையின் குமாரத்திகளான பிராடெஸ்டெண்டுகளும் இன்று பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். எல்லாமே பணத்தை யொட்டி அமைந்துள்ளது. யூதாஸ் பணத்தின் காரணமாக விழுந்தான். பிராடெஸ்டெண்டுகளும் அதே நிலையில் இன்றுள்ளனர். கவனியுங்கள். மங்கிய குதிரையின் மேல் ஏறிக்கொண்டு இவன் தன் கடைசி சவாரியைச் செய்கிறான். இது நமது நாட்களில் நிறைவேறாது. இது நிகழும்போது சபையானது எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்பொழுது அந்த முத்திரையின் இரகசியம் நமக்கு முன்னறிவிக்கப்படுகின்றது. இவன் அந்திக் கிறிஸ்துவாக முதலில் தோன்றி, பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, முடிவில் மிருகமாக - பிசாசாகவே ஆகிறான். எல்லா வண்ணங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறம் கொண்ட குதிரையின் மேல் அவன் சவாரி செய்து, மரணம் என்று அழைக்கப்படுகிறான். ஆனால் நமது ஆண்டவர் பூமியில் தோன்றும்போது வெண்மை நிறமுள்ள குதிரையின்மேல், தேவனுடைய வார்த்தை ஒரு மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் இம்மானுவேலாகத் தோன்றுவார். எவ்வளவு வித்தியாசம், பாருங்கள். அந்திக்கிறிஸ்துவோ எல்லா நிறங்களும் சேருவதனால் உண்டாகும் மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் காணப்படுகின்றான். குதிரை யென்பது ஒரு மிருகம். மிருகம் ஆதிக்கத்திற்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. அவன் எல்லா ஆதிக்கமும் ஒருங்கே கொண்டவனாயிருக்கிறான் - அரசியல் ஆதிக்கம், மதசம்பந்தமான ஆதிக்கம், பிசாசின் ஆதிக்கம், எல்லா வல்லமையும் ஒருங்கே கொண்டதன் அறிகுறியாக அவன் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். ஆனால் இயேசு சவாரி செய்துகொண்டு வருவது ஒரே நிறமுள்ள குதிரையாகும் - வார்த்தை. ஆமென்! ஆனால் அந்திக்கிறிஸ்து சவாரி செய்வது, மூன்று நிறங்கள். ஒருங்கே கொண்ட ஒரு குதிரை. வெள்ளைக் குதிரை, சிவப்புக் குதிரை, கறுப்பு குதிரை இவை சித்தரிக்கும் ஆதிக்கத்தை அவன் ஒருங்கே கொண்டிருக்கின்றான் - ஒன்றில் மூன்று கிரீடங்கள். இந்த கீரிடத்தை நான் நேரில் கண்டேன். அது ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. ஆகவே, அது உண்மை யென்பது எனக்குத்தெரியும். மூன்று கிரீடங்கள், அவன் பரலோகத்துக்கும், பாவ விமோசன ஸ்தலத்துக்கும், பூமிக்கும் பிரதி குருவாக இருக்கிறான் என்பதற்கு அறிகுறியாயிருக்கின்றன. அவன் மூன்று ஆதிக்கங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால், அவை மரணத்தை விளைவிக்கின்றன. சாத்தான் மிகவும் சமார்த்திய முள்ளவன். அவனைத் தோற்கடிக்க முயலவேண்டாம். ஆண்டவர் பேரில் மாத்திரம் நம்பிக்கை வைத்திருங்கள். நான் உங்களுக்கு முன்பு பலமுறை கூறியது போன்று, சமார்த்தியம், கல்வியறிவு அனைத்தும் சாத்தானின் மூலம் உண்டாகின்றது. இது உண்மையென்று வேதத்தின் வாயிலாக நாமறியலாம். காயீனின் சந்ததி என்னவாயினர் என்று வேதத்தில் பாருங்கள். பின்பு சேத்தின் சந்ததியார் என்னவாயிருந்தனர் என்றும் பாருங்கள். நான் அறியாமையை (Ignorance) ஆதரிக்கிறேன் என்று நீங்கள் எண்ண வேண்டாம். இல்லவே இல்லை, பவுல் என்னும் கல்வியறிவு படைத்த ஒருவனைக் குறித்து வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவன் கிறிஸ்துவை அறிவதற்கென, அவன் பெற்றிருந்த கல்வியறிவு அனைத்தையும் மறக்க வேண்டியதாயிருந்தது. அவன் `நான் உங்களிடம் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனத்துடன் வராமல், இயேசு கிறிஸ்துவின் உயரித்தெழுந்த வல்லமையுடன் வந்திருக்கிறேன்’ என்றான். அது உண்மையாகும் - பரிசுத்த ஆவியின் வல்லமை. தேவன் உபயோகித்தவர்களில் சிலர் வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் அறியாத அளவுக்கு படிப்பறியாதவர்களாயிருந்தனர். காலங்களைத் துழாவிப் பார்த்து,தெரிந்து கொள்ளப்பட்ட தீர்க்கதரிசிகள் எப்படிப் பட்டவராயிருந்தனர் என்று அறிந்து கொள்ளுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? சமார்த்தியமும், கல்வியறிவின் மூலம் கிடைக்கும் ஞானமும், ஒருவன் தேவனை விட்டு அகலும்படி செய்கின்றன. அவன் மூன்றின் மேல் ஆதிக்கம் செலுத்துகிறான்- பூமி, பரலோகம், பாவவிமோசன ஸ்தலம். அவனே ஒரு திரித்துவமாயிருக்கிறான். அவன் திரித்துவத்தின் மேல் சவாரி செய்கிறான். அவன் ஆதிக்கமும் திரித்துவமாயிருக்கிறது. அவனுடைய கிரீடம் ஒரு திரித்துவம், அவனுடைய குதிரை ஒரு திரித்துவம். ஆம், அவனே ஒரு திரித்துவம், அவன் ஆதிக்கம் ஒரு திரித்துவம். அவன் கிரீடம் ஒரு திரித்துவம். அவன் சவாரி செய்யும் குதிரை ஒரு திரித்துவம் - நான்கு என்னும் எண்ணிக்கையை இங்கு நாம் பார்க்கலாம். அவனுடைய ஊழியம் மூன்று கட்டங்களில் அமைந்துள்ளது - அந்திக்கிறிஸ்து, கள்ளத் தீர்க்கதரிசி, மிருகம். (ஆண்டவரும் தண்ணீர், இரத்தம், ஆவி என்னும் மூன்றில் தம்மை வெளிப்படுத்துகிறார். இவை மூன்றும் ஒருவனைத் தேவபுத்திரனாக ஆக்குகிறது). தண்ணீர், இரத்தம், ஆவி இவை மூன்றும் தேவனால் உண்டாயிருக்கின்றன. அவை ஒருவனைத் தேவபுத்திரனாகும்படி செய்கிறது. ஆனால் அரசியல், மதம், அசுத்த ஆவியின் வல்லமை இம்மூன்றும் பிசாசின் அறிகுறிகளா யிருக்கின்றன. கிறிஸ்து மூன்று முறை வருகிறார். அவர் மூன்று என்னும் எண்ணிக் கையில் பரிபூரணப்படுகிறார். ஆனால் சாத்தானின் எண்ணிக்கை நான்காகும். கிறிஸ்து இரத்தம் சிந்திமரிப்பதற்கென மனிதனாகத் தோன்றினார். அது அவருடைய முதலாம் வருகை. எடுத்துக் கொள்ளுதலின்போது அவர் இரண்டாம் முறை வருகிறார். அப்பொழுது நாம் மறுரூபமாகி அவரை ஆகாயத்தில் சந்திப்போம். அவர் பூமியை ஆளுவதற்கென இம்மானு வேலாக மூன்றாம் முறை வருகிறார். சாத்தான் நான்காம் கட்டத்தில் மரணம் என்று அழைக்கப்படுகிறான். தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்குவதே மரணமாகும். அதுவே `மரணம்’ என்பதின் அர்த்தம். இவன் யாரென்பதை நாம் வேதத்திலிருந்து பார்த்தோம். அவன் மலைகளின் மேல் இருக்கிறானென்னும் இன்னும் அவனைக் குறித்த வேறு அனேக விவரங்களையும் நாம் ஆராய்ந்தோம். இப்பொழுது கழுகுக் கொத்த ஜீவன் அவனை மரணமென்று அழைக்கிறது. மரணம் நித்திய பிரிவினையைக் குறிக்கின்றது. பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை. அவர்கள் நித்திரையைடைந்திருக்கின்றனர். `என் வசனத்தைக்கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு’. அது மிகவும் உண்மையாகும். அவன் நியாயத்தீர்ப்புக்குட்படாமல் மரணத்தினின்று ஜீவனுக்குள் பிரவேசிக்கிறான். `நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்’ என்றார் இயேசு. `என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். லாசரு மரித்துப் போனானா? `அவன் நித்திரையடைந்திருக்கிறான்’ `பயப்படவேண்டாம். இந்த சிறு பெண் மரிக்கவில்லை நித்திரையாயிருக்கிறாள்’. அதற்காக அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். நான் கூறுவது சரிதானா? பாருங்கள். பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை. தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலே மரணம் எனப்படும். இவன் `மரணம்’ என்னும் பெயரைக் கொண்டிருக்கிறான். எனவே, அவனை விட்டு அகன்று போங்கள். அவன் யார்? - ஒரு ஸ்தாபன முறைமை. அதுதான் ஸ்தாபனமாக்கப் பட்ட முதலாம் சபை. நிசாயா மகா நாட்டில் அவன் கான்ஸ்டன்டைன் சக்கிரவர்த்தியின் ஆலோசனை கேட்டு.... ஏவாள் தன் கணவனை அறியு முன்பு எவ்வாறு தேவனுடைய வார்த்தையில் அவிசுவாசங் கொண்டு ஏதேனில் விழுந்துபோனாள் என்று கடந்த இரவு நாம் பார்த்தோம். அவ்வாறே பெந்தேகோஸ்தே நாளன்று உருவான ஆவிக்குரிய மணவாட்டியும், கிறிஸ்து அவளை அறியு முன்பு ரோமாபுரியில் விழுந்து போனாள். அவள் என்ன செய்தாள்? வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபன கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டு தன் கற்பைப் பறி கொடுத்தாள். ஆமென்! ஓ! அதை நினைக்கும்போத எனக்கு மறுபடியும் உற்சாக உணர்ச்சி தோன்றுகின்றது. பைத்தியக்காரனைப் போல் நடிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. அது எனக்கு என்ன செய்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. இவைகளைக் கூறும்போது எனக்கு அனேக தரிசனங்கள் கிடைக்கின்றன. நான் என் சுய நிலைக்கு வருவதற்கென சில காரியங்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான் ஜனங்களின் சிந்தனைகளைப் பகுத்தறிந்து கூறும்போது, என்னை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அப்பொழுது நான் ஜனங்களைச் சிரிக்க வைக்க வேண்டுமென்று சிலவற்றைக் கூறுவேன். அவர்களை அழவைக்கும் சில காரியங்களையும் நான் கூறுவது வழக்கம். அவர்களைக் கோப மூட்டுவதற்கென்றும் சிலவற்றைச் சொல்வேன். அந்த வெளிச்சத்தை நான் கண்ட மாத்திரத்தில் அது யார் மேல் தங்குகின்ற தென்றும், அது எத்தகைய வெளிச்சம் என்று அறிந்துகொள்ளும்வரை ஏதாவதென்றைச் சொல்லிக் கொண்டேயிருப்பேன். அப்பொழுது நான், இன்னின்னாராகிய நீர் என்று அது (அந்த வெளிச்சம்) தங்கியிருக்கும் மனிதரின் பெயரைக் கூறுவேன். அதன் பின்னர் ஆவியானவர், என்னை அபிஷேகம் செய்யும் போது, என்னைச் சுற்றிலும் வெளிச்சம் விட்டு விட்டு பிரகாசிப்பதை நான் காண்பேன். ஆகவே தான் நான் ஒன்றைக் கூறிக்கொண்டேயிருந்து விட்டு, மறுபடியும் அதையே தொடக்கத்திலிருந்து கூறத்தொடங்குவேன். கடந்த ஞாயிறு முதற்கொண்டு, நான் அறையில் உட்கார்ந்து, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தினால் நிறையப்பட்டு இவ்வெளிப்பாட்டுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் கூறுவது முற்றிலும் உண்மை என்பது எனக்குத் தெரியும். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்களா? அவரை விசுவாசிக்கிறீர்கள் என்று நானறிவேன். இந்த வாரத்தின் கடைசியில் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள். `மரணம்’ என்னும் வாக்கு, `தேவனிடத்திலிருந்து நித்திய காலமாக ஏற்படும் பிரிவினை’ என்று பொருள்படும். பரிசுத்தவான்கள் மரிப்பதில்லை என்பது நினைவிருக்கட்டும். குதிரை சவாரி செய்பவனுக்கு ஒரு மங்கின நிறமுள்ள குதிரை அவன் சவாரி செய்வதற்கென அளிக்கப்படுகின்றது. அவன் மரணமென்னும் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறான். அவள் ஒரு வேசி மாத்திரமல்ல, அவள் வேசிகளின் தாய் என்பதை நாம் சென்ற இரவு பார்த்தோம். (ஆண்களும் பெண்களும் ஒருங்கே கூடியிருக் கும் போது? `வேசி’ (Whore) என்று கூறுவது சரியல்ல. ஆயினும் வேதம் அவளை அவ்வாறு அழைக்கிறது). ஒருத்தி, அவள் செய்த விவாக பொருந்தனைக்கு உண்மையாக வாழாவிடில் அவள் வேசி எனப்படுவாள். இவள் தன்னை `பரலோகத்தின் ராணி’ என்று கூறுகின்றாள். ஆனால் உண்மையில் தேவனுடைய மணவாட்டியே பரலோகத்தின் ராணி. இந்த பட்டப் பெயரைக் சூடிக்கொண்டிருப்பவள் வேசித்தனம் செய்து, பூமியின் ராஜாக்கள் அவளுடன் வேசித்தனம் செய்வதற்குக் காரணமாயிருக் கிறாள். ஐசுவரியவான்களும், பிரபலம் வாய்ந்தவர்களும், ஏன் முழு உலகமே. அவள் பின்னால் செல்கின்றது. அவளுக்கு சில குமாரத்திகள் உண்டு, அவர்களும் வேசிகள். வேசி என்பவள் ஒரு விலை மகள், அவள் விபச்சாரம், வேசித்தனம் போன்ற செயல்களில் ஈடுபடுபவள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் ஸ்தாபனங்களை அமைத்துக்கொண்டு (பெந்தேகோஸ்தேயினர் உள்பட) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட முறைமைகளைப் போதித்தனர். பெந்தேகோஸ்தேயினரே, உங்கள் மனச்சாட்சியைப் போக்கிக் கொள்ளாதீர்! நான் நேர்முகமாக இதை உங்களிடம் கூற விரும்புகிறேன். சண்டையிட்டுக் கொள்வதற்கு இது நேரமில்லை. ஏற்கனவே காலதாமதமாகிவிட்டது. நான் கூறுவதைக் கேளுங்கள். நாம் லவோதிக்கேயா சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லா சபையின் காலங்களைக் காட்டிலும் இது மிகவும் நிந்திக்கப்பட்டத்தக்க சபையாக அமைந்துள்ளது. இது வெதுவெதுப்பான ஒரு சபை. அன்றியும், கிறிஸ்து வெளியே காணப்பட்டு, உள்ளே நுழைய முயலும் சபையின் காலமும் இதுவே. இப்பொழுது சென்றுகொண்டிருக்கும் பெந்தேகோஸ்தே செய்தி அவரை அவ்வாறு செய்துள்ளது. `நாங்கள் ஐசுவரிவான்கள்’ என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் தரித்திரராய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது ஐசுவரியத்தைச் சேர்த்துக்கொண்டீர்கள். உங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் கிறிஸ்து உங்களைப் பார்த்து, `நீ நிர்வாணியும், பரிதபிக்கப் படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்பாக்கியமுள்ளவனுமாயும் இருக்கிறாய்’ என்றார். ஒருவன் தெருவில் நிர்வாணியாய் கிடந்தால், அவன் நிர்வாணத்தை மறைக்க முயலுவான்! ஆனால் அவன் நிர்வாணி என்பதை உணராமலிருந்தால், அவன் ஒரு பயங்கர நிலைமையில் இருக்கிறான். கர்த்தர் அப்படிப்பட்டவனிடம் இரக்கம் பாராட்டுவாராக! கவனியுங்கள், இந்த அந்திக்கிறிஸ்துவின் மணவாட்டியாகிய கள்ள சபை மனந்திரும்ப வேண்டுமென்று தியத்தீரா சபையின் காலத்தில் அவளுக்குத் தவணை கொடுக்கப்பட்டது. ஆனால் அவளோ மனந்திரும்ப வில்லை. நாம் சற்று வெளிப்படுத்தினவிசேஷம் இரண்டாம் அதிகாரத்தில் தியத்தீரா சபையைப் பற்றி கூறப்பட்டுள்ள பாகத்தை வாசிப்போம், ஒரு சில நிமிடங்கள் இதில் செலவிடுவதனால் பாதகமில்லை. நாம் ஆராதனையை முடிக்க வேண்டிய நேரமாகிவிட்டது. இனியும் நாம் தியானிக்க வேண்டிய பொருளைக் குறித்து பிரசங்கிக்கத் தொடங்கவேயில்லை. தியத்தீரா - வெளிப்படுத்தல் 2.18-23. தியத்தீரா சபையின்தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில், அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும் உன்பேரில் எனக்குக் குறை உண்டு. என்னவெனில், தன்னைத் தீரக்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரியானவள் (அவள் கள்ளத் தீர்க்கதரிசியின் மனைவி. ஆனால் அந்த கள்ளத் தீர்க்தரிசி உண்மையான தீர்க்கதரிசியாகக் கருதப்பட்டாள். ஆகாப் யூத குலத்தில் பிறந்த ஒருவன். ஒரு உண்மையான யூதனாக இவன் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவன் ஒரு அயோக்கியன் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் அவன் தன் மனைவியின் விருப்பத்திற்கிணங்கி எல்லாவற்றையும் செய்தான். யேசபேல் அவன் பணத்தை அபகரித்து, அவள் விருப்பப்படி அவனை இங்குமங்கும் வழி நடத்தினாள். யேசபேல் தன்னை தீர்க்கதரிசியென்று சொல்லிக் கொள்கிறாள் என்பதை கவனித்தீர்களா?) என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் (யேசபேலின் போதகம் நாடு முழுவதும் பரம்பினது) விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளையும் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன். தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நான் அவளைக் கட்டில் கிடையாக்கி (அதாவது நரகத்தில் தள்ளி) அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி (அதாவது உபத்திரவ காலத்திற்குள் அவர்கள் செல்வார்கள், சபையல்ல) அவளுடைய பிள்ளைகளையும் (வேசிகளை) கொல்லவே கொல்லு வேன்... ஆவிக்குரிய மரணம் - அதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? வேதம் அவ்வாறே கூறுகிறது. அவர்கள் கொல்லப்பட்டால், அவர்கள் நித்திய காலமாக தேவனிடமிருந்து பிரிக்கப்படுவார்கள். சரி, தியத்தீரா சபை மனந் திரும்ப வேண்டுமென்று கிறிஸ்து அவளுக்கு தவணை கொடுத்தார். தியத்தீரா சபையின் காலம் இருளின் காலமாகும். அக்காலத்தில் கறுப்பு குதிரையின் மேலிருந்தவன் சவாரி செய்து, ஆதாரனைக்கும் நொவீனாக்களுக்கும் காசு வசூலித்தான். அவனுடைய கறுப்பு குதிரையைக் கவனியுங்கள். அவன் தீயத்தீராவின் காலத்தில் மனந்திரும்ப மறுத்த பிறகு, கறுப்பு குதிரையிலிருந்து மாறி மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி, மரணம் என்னும் பெயர் கொண்டு, தன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைகிறான். இப்பொழுது தனிப்பட்ட நபர் ஒவ்வொருவருக்கும் சிறிது அதிர்ச்சி கொடுக்க விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் தேவனுடைய அழைப்பை நீ மறுத்தால், ஒரு நாளில் அதை நீ கடைசி முறையாகச் செய்ய நேரிடும். தியத்தீரா சபைக்கு மனந்திரும்பும் படியாய் தவணை கொடுக்கப்பட்டு அது முடிந்துவிட்டது. தேவனுடைய பொறுமை எப்பொழுதும் மனிதனுடன் போராடுவதில்லை. தேவனுடைய அழைப்பை அவள் ஏற்றக்கொள்ள மறுத்த பிறகு அவள் நிலை மாறி, `மரணம்’ - பிரிவினை - என்னும் பெயரைக் கொண்டாள். தேவன் அவளுடைய பிள்ளைகளாகிய பிராஸ்டெண்டுகளையும் நித்திய பிரவினையால் கொல்லுவதாக அவளிடம் சொன்னார். தியத்தீரா சபையின் காலம் - இருளின் காலம். கறுப்பு குதிரையின் மேலிருக்கிறவன் இப்பொழுது அவன் ஊழியத்தின் கடைசி கட்டத்தை அடைந்து மரணத்தை அளிக்கிறான். சபையின் காலங்கள் முத்திரைகளுடன் எவ்வளவு பூரணமாகப் பொருந்துகிறதென்று பாருங்கள். அதனால் இதன் விளக்கம் சரியென்று நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பரிசுத்த ஆவியானவர் தவறு செய்வதேயில்லை. நாம் சபையின் காலங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, அது சரியென்று அவர் உறுதிப்படுத்தினார் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய அன்பையும், நீடிய பொறுமையையும் பாருங்கள். அவர் தீயத்தீரா சபையின் மேல் நியாத்தீர்ப்பு செலுத்து முன்பு,அவன் மனந்திரும்ப வேண்டுமென்று அவளுக்குத் தவணை கொடுத்தார். கர்த்தருடைய நாமத்தில் இதை சொல்லுகிறேன், மனந்திரும்ப வேண்டுமென்று அவர் பிராடெஸ்டெண்ட் சபைகளுக்கும் இப்பொழுது தவணை அளித்துள்ளார். ஆனால் அவள் ஒருக்காலும் மனந்திரும்ப மாட்டாள். இச்செய்திகள் எல்லாவிடங்களிலும் அசைவை உண்டு பண்ணின. ஆயினும், அவள் மனந்திரும்பமாட்டாள். நீங்கள் எவ்வளவாக இச்செய்தியை விளக்கிக் காண்பித்தாலும் அவள் தன் சொந்த கோட்பாடுகளிலும் பிரமாணங்களிலும் நிலைத்திருப்பாள். அன்றொரு நாள் சிக்காகோவில் அனேக போதகர்கள் முன்னிலையில் நான் கூறினது போன்று.... அவர்கள் `சர்ப்பத்தின் வித்து’ போதகத்தைக் குறித்து என்னிடம் தர்க்கித்து என்னை மடக்கப் பார்த்தனர். அப்பொழுது நான், `உங்களில் யாராவது ஒருவர் வேதாகமத்தை எடுத்துக் கொண்டு என் பக்கத்தில் வந்து நில்லுங்கள்’ என்றேன். அப்பொழுது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. அதைக் கண்ட டாமி ஹிக்ஸ் (Tommy Hicks) என்னிடம், `சகோ. பிரான்ஹாமே, அதைப் போன்று ஒன்றை நான் அதுவரை கேட்டதேயில்லை. அது பதிவு செய்யப்பட்டுள்ள முந்நூறு ஒலிநாடாக்கள் தேவை, எல்லா போதகர்களுக்கும் நான் அதை அனுப்ப விரும்புகிறேன்’ என்றார். சுமார் ஐம்பது அல்லது எழுபத்தைந்து பேர், `நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெறுவதற்கு வருகிறோம்’ என்றனர். அவர்களில் ஒருவராவது வரவில்லை. ஏன்? மனந்திரும்ப அவர் அவர்களுக்கு தவணை கொடுத்தார். உங்கள் பிள்ளைகளை அவர் மரணத்தில் - ஆவிக்குரிய மரணத்தில் - ஆழ்த்துவார். (கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு அல்லது சனியிரவு வரப்போகும் வாதைகளைக் குறித்து பேசலாம். அப்பொழுது என்ன நடக்குமென்று நாம் பார்க்கலாம்) அவர் எகிப்துக்கு மனந்திரும்பத் தவணையளித்தார். எகிப்தில் நேர்ந்த கடைசி வாதை என்ன? - மரணம். பெந்தேகோஸ்தே சபையைத் தாக்கிய கடைசி வாதையும் அதுவே - ஆவிக்குரிய மரணம். அவள் மரித்து விட்டாள். கர்த்தரின் நாமத்தில் இதை சொல்லுகிறேன். ஆவிக்குரிய விதத்தில் அவள் மரித்துவிட்டாள். அவள் மனந்திரும்ப அவர் தவணை யளித்தார். அவளோ அதைப் புறக்கணித்து விட்டாள். இப்பொழுது அவள் மரித்த நிலையில் இருக்கிறாள். அவள் மறுபடியும் எழுந்திருக்கவே மாட்டாள். அந்த ஜனங்கள் எபிஸ்கோப்பலிய (Episcopalians) போதகர்களை வரவழைத்து, `பரிசுத்த பிதாவே’ என்று அவர்களை அழைக்கின்றனர். அவர்கள் தங்களைக் குறித்து வெட்கமடைய வேண்டும். ஒரு மனிதன் எவ்வளவாக குருடாக முடியும், பார்த்தீர்களா? உறங்கிக் கொண்டிருந்த புத்தியில்லாத கன்னிகை எண்ணெய் வாங்க வந்தபோது, அவளுக்கு எண்ணெய் கிடைக்கவில்லை, என்பதாய் இயேசு கூறவில்லையா? ஜனங்கள் `நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுவிட்டேன். நான் அன்னிய பாஷையில் பேசினேன்’ என்று சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் நம்முடைய சபை போன்ற ஒரு சபைக்கு வர விரும்புவதில்லை. அவ்விதமான ஸ்தலத்துக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை’ என்று அவர்கள் சொல்லுகின்றனர். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றதாகக் கூறிக் கொள்கிறீர்கள் - ஆனால் கௌரவமான முறைகள் தான் உங்களுக்கு அவசியமாயிருக்கிறது. நீங்கள் பாபிலோனில் தங்கியிருந்த அதே சமயத்தில் பரலோகத்தின் ஆசீர்வாதங் களை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள். நீங்கள் இவ்விரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் உலகத்தில் நிலைத்திருந்து, அதே சமயத்தில் தேவனைச் சேவிக்க முடியாது. தேவனுக்கும் உலக பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாதென்று இயேசு கூறினார். ஆகையால் நீங்கள் உண்மையாக இரட்சிக்கப்பட்டிருந்தால் பரிசுத்த ஆவியானவர் தம்மை வெளிப்படுத்தி, தேவனுடைய வார்த்தையை அவர் அங்கீகரிக்கும் கூட்டங்களில் பங்குகொள்ள விரும்புவீர்கள். `ஜனங்கள் இத்தகைய கூட்டங்களில்அதிக சத்தமிடுகின்றனர். அது எனக்கு நடுக்கத்தை உண்டாக்குகிறது’ என்று ஒருவர் சொன்னார். அப்படியானால் நீங்கள் பரலோகத்திலும் நடுக்கமுறுவீர்கள். இங்கு சத்தமிடுகிறவர்கள் எல்லாரும் பரலோகத்தை அடைந்தால் பரலோகம் எப்படி தொனிக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தேவன் நோவாவின் காலத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தது போல் இப்பொழுதும் இருக்கிறார். நோவாவின் காலத்தவர் மனந்திரும்ப வேண்டுமென்று நூற்றிருபது வருட காலமாய் அவர் நீடிய பொறுமை யுள்ளவராயிருந்தார். அவர்களோ மனந்திரும்பவில்லை. எகிப்தின் நாட்களில் அவர் அனேக வாதைகளை அனுப்பினார். ஆயினும் அவர்கள் மனந்திரும்பவில்லை. அவர் யோவான் ஸ்நானனை அனுப்பினார். அவர்கள் மனந்திரும்ப மறுத்தனர். தேவனுடைய வார்த்தையைக் கேட்கும் கூட்டத்தாரை இரட்சிக்க எண்ணி அவர் இயேசுவை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இந்த கடைசிநாட்களில், ஜனங்களை மூல விசுவாசத்திற்கு - தேவனுடைய வார்த்தைக்கு - திருப்புவதற்கென ஒரு செய்தியை அனுப்புவ தாக அவர் வாக்களித்துள்ளார். ஆனால் அவர்களோ இதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் தங்கள் கொள்கைகளையும் பிரமாணங் களையும் கைக்கொண்டு இறுமாப்புள்ளவராய் இருக்கின்றனர். ஆகவே தேவதூதனே இறங்கிவந்துஅவர்களிடம் சத்தியத்தை உரைத்தாலும் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனால் தேவன் அவ்விதம் செய்யமாட்டார், அவர் படிப்பறிவு சிறிதேனும் இல்லாத ஒருவனை இதற்கென்று தெரிந்தெடுக்கிறார். ஒன்று மற்ற ஒருவனை அவர் உபயோகித்து அவன் மூலம் கிரியைக் செய்கிறார். தங்களைப் பெரிதாக எண்ணிக்கொள்ளும் ஒருவரை தேவன் உபயோகிக்க முடியாது. தேவனுடைய பார்வையில் நீ முக்கியமானவனாக இருக்க எண்ணினால், நீ முதலில் ஒன்றுமற்றவனாக ஆகவேண்டும். ஓ! இப்பொழுது கவனியுங்கள். அவள் மனந்திரும்ப அவர் தவணை கொடுத்தார். அவளோ மனந்திரும்பவில்லை அவள் அதைப் புறக்கணித்த காரணத்தால், சாத்தான் அவளுக்குள் வாசம் செய்ய ஏதுவாகிறது. அவள் வார்த்தையைப் புறக்கணித்தாள். எனவே சாத்தான் அவளுக்குள் குடிகொள்கிறான். இவ்வாறே பிரடெஸ்டெண்ட் சபையும் வேசியாக மாறியுள்ளது. அவள் அடையாளங்களால் உறுதிபடுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை நிராகரித்ததனால், பிசாசு அவளுக்குள் வாசம் செய்ய அது வழி வகுத்தது அவன் மிருகத்துக்கு ஒரு சொரூபத்தை உண்டாக்குவான். இப்பொழுது அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து அவன் சொல்வதை அப்படியே செய்வார்கள். அது முற்றிலும் உண்மையாகும். ஆமென்! எனக்கும் கல்வியறிவு இருந்தால் இதை நன்றாக விளக்கி தந்திருப்பேன். ஆனால் எனக்குக் கல்வியறிவு கிடையாது. பரிசுத்த ஆவியானவர் இதை உங்களுக்கு நன்கு வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன். அதை விரும்பும் யாவருக்கும் அவர் நிச்சயம் வெளிப்படுத்துவார். அவள் என்ன செய்தாள் என்பதைக் கவனியுங்கள், அவள் மனந்திரும்ப வேண்டுமென்னும் தேவனின் செய்தியைப் புறக்கணித்தாள். அவள் அந்திக்கிறிஸ்துவாக தொடக்கத்தில் இருந்தாலும் பின்னர் கள்ளத் தீர்க்கதரிசியாக மாறி, சாத்தான் அவளுக்குள் குடிகொண்டு, அவள் கள்ளப்போதகத்தை போதித்து வந்தாள். இவையெல்லாவற்றிலும், அவள் மனந்திரும்ப தேவன் அவளுக்குத் தவணை கொடுத்தார். அவளை அவரிடம் இழுத்துக் கொள்ள அவர் முயன்றார். அவருடைய நீடிய பொறுமையையும் அதிசயமான அன்பையும் பாருங்கள் அந்த அன்பிற்கு இணை ஏதுமில்லை. அவருடைய முகத்தில் துப்பினவர் களைக் கூட அவர் மன்னித்தார். அதுதான் தேவன் இயல்பு, தேவனுடைய செய்தியைப் புறக்கணியாதீர்! அவள் மனந்திரும்பி, எந்நிலையிலிருந்து அவள் விழுந்தாளோ அந்நிலைக்குச் செல்ல வேண்டுமென்று அவளுக்குக் கூறப்பட்டது. அவள் எதிலிருந்து விழுந்தாள்? - வார்த்தையிலிருந்து, ஏவாள் எதிலிருந்து விழுந்து போனாள்? (சபையைhர் வார்த்தையிலிருந்து என்று பதிலளிக்கின்றனர்). ஸ்தாபனம் எதிலிருந்து விழுந்தது? (சபையார் `வார்த்தையிலிருந்து’ என்று பதிலளிக்கின்றனர்). தேவனுடைய வார்த்தைக்கு ஒவ்வொரு முறையும் திரும்புவது தவிர வேறு வழியில்லை. அவர்களோ தேவனுடைய வார்த்தையினின்று அவர்களை அகலச் செய்யும் முறைமைகளில் சேர்ந்திருக்கின்றனர். வார்த்தைக்கு அவர்களைக் கொண்டு செல்வதற்குப் பதிலாக அது வார்த்தையினின்று அவர்களை அகன்று போகும்படி செய்கிறது. அவள் பெந்தேகோஸ்தே நாளன்று ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்த மூலபெந்தேகோஸ்தே சபை என்பது நினைவிருக்கட்டும். எத்தனை வேத மாணாக்கர் இதை அறிவர்? ஆம், அவள் மூல பெந்தேகோஸ்தே சபை. அந்நிலையிலிருந்து அவள் விழுந்தாள். தேவனுடைய வார்த்தையினின்று அவள் விழுந்து போய் ஸ்தாபன கொள்கைகளை ஏற்றுக் கொண்டாள். பரிசுத்த ஆவியானவரை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அவள் வேதப்பட்டங்கள் அனேகம் பெற்ற `பரிசுத்த மனிதனை’ விரும்பினாள். பின்னர் போப்பாண்டவர் ஒருவரை அவள் நியமித்துக் கொண்டாள். காசு கொடுத்தால் யாராவது ஒருவர் அவளுக்காக ஜெபம் ஏறெடுக்க வேண்டும் என்பதையே அவள் விரும்பினாள். இன்றைக்கும் அவ்வாறே சம்பவிக்கின்றது. ஆலயத்தில் உட்காருவதற் கென்று தனியாக ஒதுக்கப்பட்ட இடம் (Pew) ஒன்று கிடைத்துவிட்டு, காணிக்கை தட்டில் நிறைய காசு போட்டால், அது போதுமானது என்று அவர்கள் எண்ணியிருக்கின்றனர். சபையின் அங்கத்தினராக மாத்திரம் இருந்தால் அதுவே போதும், வேறொன்றும் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லையென்று அவர்கள் கருதுகின்றனர், இவர்கள் தாம் வேசியின் குமாரத்திகள். அவள் எங்கிருந்து விழுந்து போனாள்? அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் இவர்களின் மூல வார்த்தையிலிருந்து, அங்கிருந்து அவள் விழுந்து போனாள். பிராடெஸ்டெண்டுகளும் அங்கிருந்துதான் விழுந்தனர். மனந்திரும்புங்கள்! தாமதமாவதற்கு முன் தேவனுடைய வார்த் தைக்குத் திரும்புங்கள்! ஏற்கனவே காலதாமதமாகியிராவிட்டால்! வரப்போகும் என்றாவது ஒரு நாளில் ஆட்டுக்குட்டியானவர் அவருடைய சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டு விடுவார். அப்பொழுது காலதாமத மாகிவிடும். ஆகவே வேசியின் குமாரத்திகள், வேசியுடன் கூட நியாயந் தீர்க்கப்படுவதற்கு முன்னதாக, மனந்திரும்ப வேண்டுமென்று இப்பொழுது அழைக்கப்படுகின்றனர். நான் உங்களிடம் அடிக்கடிக் கூறிக் கொண்டுவரும் அந்த தீர்க்கதரிசி எழும்பும்போது, கடைசி செய்தியை அவர்கள் பெறுவார்கள். அந்த தீர்க்கதரிசியைக் குறித்து அறிவதற்கென நான் அனேக புத்தகங்களைப் படித்துக்கொண்டு வருகிறேன். ஞானமுள்ள ஆவிக்குரிய சிந்தையுள்ள எந்த ஒரு மனிதனும் அந்த தீர்க்கதரிசி வந்து செய்தியை அளிக்க வேண்டுமென்பதை அறிந்திருக்கிறான். ஆனால் அவர்களிடமுள்ள தவறு என்னவெனில், `எங்களுக்கு அந்த செய்தி அவசியம். அது நிச்சயம் வரும்’ என்றெல்லாம் அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அது உண்மையில் வரும் போது மிகவும் எளிமையுள்ளதாகக் காணப்படுவதால், சென்ற காலங்களில் அவர்கள் அதைக்கண்டு கொள்ளத் தவறினது போன்று, இப்பொழுதும் அவர்கள் அதைக்காணத் தவறக்கூடும். `அது வரவேண்டியது அவசியம்’ என்று மக்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதலாம். ஆனால் அது அவர்கள் முன்னிலையில் நிகழும்போது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் கடந்து சென்று விடுகின்றனர். எல்லா காலங்களிலும் அவர்கள் அவ்வாறே செய்து கொண்டு வந்துள்ளனர். இப்பொழுது கவனியுங்கள். அவள் மனந்திரும்பி மூலவார்த்தைக்குச் செல்ல வேண்டும். அவள் குமாரத்திகளும் மனந்திரும்பி அப்போஸ் தலருடைய போதகமாகிய மூலவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டனர். ஆனால் அவர்களோ ஸ்தாபன கோட்டு பாடுகளில் அமிழ்ந்து போயிருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பது மாத்திரமல்ல, அதைக் கண்டு பரிகசிப்பார்கள். எனவே, அவள் குமாரத்திகளும் அவளுடன் கட்டில் கிடையாக்கப்பட்டு கொல்லப் படுவார்கள். முடிவில் அவர்கள் என்ன செய்கின்றனர்? அவர்கள் வெளிப்படுத்தல் 13.14ல் சொல்லப்பட்ட பிரகாரம், மிருகத்திற்கு ஒரு சொரூபத்தை உண்டாக்கி - வேறொரு தத்துவம் - ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி யைத் துன்புறுத்த முனைவர். ரோமசபை உண்மையான மணவாட்டியைப் பரிகசிப்பது போன்றே மற்றைய ஸ்தாபனங்களும் அவளைப் பரிகசிக்கின்றன. வெளிப்படுத்தல் 13.14ல் கூறப்பட்டது போல் அவள் மணவாட்டியிடம் நடந்து கொள்கிறாள். ஆனால் தேவன் அவள் பிள்ளைகளை - ஸ்தாபனங்களை - ஆவிக்குரிய மரணத்தினால் கொன்று போடுவார் என்னும் தேவனுடைய வாக்குத்தத்தத்தை நாம் காண்கிறோம். (அது வெளிப்படுத்தல் 2.22ல் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மறந்து போகவேண்டாம்). `கொல்வது’ என்பது மரணத்திற்குள்ளாக்குவதைக் குறிக்கின்றது. `மரணம்’ என்னும் பதம், தேவனுடைய சமூகத்திலிருந்து நித்திய காலமாய் பிரிந்திருக்கும்’ என்று பொருள்படும். அதை சற்று யோசித்துப் பாருங்கள். நண்பர்களே, மனிதனால் உண்டாக்கப்பட்ட கொள்கைகளை நீங்கள் நம்பவேண்டாம். தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருங்கள். கவனியுங்கள், அவனுக்கு மரணம் என்று பெயர் என்பதாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பாதாளம் அவன் பின் சென்றது. இயற்கையில் பாதாளம் எப்பொழுதும் மரணத்தைப் பின்தொடர்கிறது. ஒரு மனிதன் மரித்த பின்பு அவன் பாதாளத்தில் - அதாவது கல்லறையில் - வைக்கப்படுகிறான். ஆனால் ஒருவன் ஆவிக்குரிய மரணம் எய்தினால் அவனுக்கு அக்கினிக் கடல் காத்திருக்கிறது. தேவனிடமிருந்து நித்திய பிரிவினையை உண்டாக்கி அவர்களை எரித்துப் போடுகிறது. `அது வேரையும் கொப்பையும் வைக்காமற் போகும்’ என்று மல்கியா 4ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று உலகம் அவ்விதமே சுத்திகரிக்கப்பட வேண்டும். குதிரையின் மேலிருக்கிறவன் ஒரு ஆண் என்பதைக் கவனித்தீர் களா? அவன் கள்ளத்தீர்க்கதரிசி. ஆனால் அவனுடைய சபை பெண்ணாக வர்ணிக்கப்பட்டுள்ளது - யேசபேல், ஆகாப் - யேசபேல், எவ்வளவு அழகாக பொருந்துவதைப் பாருங்கள். குமாரத்திகள் என்று அழைக்கப்படுபவர் பெண்கள், அவர்கள் பிராடெஸ்டெண்டுகள். அவர்கள் போப்பாண்டவரைப் போன்ற ஒரு மனிதனைத் தலைவனாகக் கொண்டிருக்கவில்லை. எனினும், அவர்கள் பின்பற்றும் கொள்கைகளில், ஸ்தாபன முறைகளில், அவர்கள் வேசிகளாகவே இருக்கின்றனர். இவையெல்லாம் எந்த சம்பவத்தில் முடிவடையப் போகின்றது? ஆரம்பத்தில் என்ன சம்பவித்ததோ, அதுவே முடிவில் சம்பவிக்கும் அது பரலோகத்தில் யுத்தமாக தொடங்கினது. கடைசி காலத்திலும் அது யுத்தத்தில் முடிவடையும். பரலோகத்தில் முதலாவதாக ஒரு போர் தொடங்கினது. லூஸிபர் (Lucifer) அப்பொழுது பூமிக்குத் தள்ளப்பட்டான். அவன் ஏதேனை அப்பொழுது அசுசிப்படுத்தினான். அன்று முதல் அவன் எல்லாவற்றையுமே மாசுபடுத்திக் கொண்டு வருகிறான். அப்பொழுது பரலோகத்தில் யுத்தம் உண்டானது. கடைசி காலத்தில் அர்மகெதோன் (Armageddon) யுத்தம் பூமியில் மூண்டு அது முடிவடையும், உங்களுக்கு அது தெரியுமா? முதலாவதாக பரலோகத்தில் யுத்தம் மூண்டது. மிகாவேலும் அவனைச் சார்ந்த தூதர்களும் லூசிபரையும் அவன் தூதர்களையும் முறியடித்து அவர்களைக் கீழே தள்ளினார்கள். அவன் ஏதேனில் விழுந்த அன்று முதல், உலகத்தில் போர் செய்து கொண்டேயிருக்கிறான். ஆனால் தேவன் அவருடைய பிள்ளை களுக்குத் தம்முடைய வார்த்தையை அரணாகக் கொடுத்திருக்கிறார். ஏவாள் அந்த அரணினின்று கழுத்தை வெளியே நீட்டி, சாத்தானிடம், `நீ சொல்வது சரியென்று விசுவாசிக்கிறேன்’ என்று சொன்ன அன்று முதற்கொண்டு அந்த போர் தொடங்கினது. அதன் பின்பு தமக்குச் சொந்த மானவர்களை மீட்டுக்கொள்ள தேவன் இறங்கி வந்தார். நான் உங்களுக்கு முன்னமே கூறியுள்ள வண்ணம், `தேவன் கட்டிடம் கட்டும் ஒரு பெரிய காண்ட்ராக்டர், கட்டுவதற்கு அவசியமான எல்லா பொருட்களையும் அவ பூமியில் சேகரித்த பின்பு, அவர் கட்டிடம் கட்டுகிறார். இப்பூமியில் ஒருவிதை உண்டாவதற்கு முன்னர், சூரியவெளிச்சம் பூமியின் படும்முன்னர், உங்கள் சரீரங்கள் பூமியில் படுத்துக் கிடந்திருந்தன - ஏனெனில் நீங்கள் பூமியின் தூளிலிருந்து உண்டானவர்கள் தேவன் தாம் உங்களை உண்டாக்கின காண்ட்ராக்டர். தேவன் கால்ஷியம், பொட்டாஸியம், அண்டசராசர வெளிச்சம் (Cosmic light) இவைகளை ஒருங்கே சேர்த்து `ப்யூ’ என்று ஊதி (சகோ. பிரன்ஹாம் ஊதும் சத்தத்தை உண்டாக்குகிறார் - பதிப்பாசிரியர்) ஆதாமின் சரீரத்தை உண்டாக்கியது போன்று ஒவ்வொரு சரீரத்தையும் `ப்யூ’ என்று ஊதி உண்டாக்கி (சகோ. பிரான்ஹாம் மீண்டும் ஊதும் சத்தத்தை உண்டாக்கு கிறார் - பதிப்பாசிரியர்) `இதோ என் மற்றொரு குமாரன்’, மீண்டும் `ப்யூ’ (ஊதும் சத்தம் - பதிப்பாசிரியர்) என்று ஊது உண்டாக்கி, `இதோ வேறொருவன்’ என்று சொல்ல வேண்டுமென்று எத்தனித்திருந்தார். ஆனால் ஏவாள் என்ன செய்தாள்? அவள் அவ்வழியைக் கெடுத்து விட்டு, இனச்சேர்க்கையின் மூலம் மானிடவர்க்கத்தைப் பிறப்பித்தாள், அப்பொழுது மரணம் அதை ஆட்கொண்டது. இப்பொழுது தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவர் முன் குறித்த அனேக வித்துக்கள் காலங்கள் தோறும் உண்டாயிருந்தன. அவர் கடைசி காலத்தில், `ஏவாளே வேறொரு குழந்தையைப் பிரசவிப்பாயாக’ என்று சொல்லமாட்டார். அவர் `ப்யூ’ என்று ஊதுவார் (ஊதும் சத்தம் - பதிப்பாசிரியர்). `நீங்கள் கூப்பிடும் நாளில் நான் மறு உத்தரவு அருளுவேன்’ அது தான் கருத்து. கடைசி நபர் உட்பிரவேசித்த பிறகு, எல்லாம் முடிவடையும். யுத்தம் பரலோகத்தில் ஆரம்பித்தது. அது பூமியில் அர்மகெதோன் யுத்தத்தில் முடிவடையும். அது இப்பொழுது வெளிப்படுவதைக் கவனியுங்கள். அது வெளிப்படுவதற்கு ஆண்டவர் உதவிசெய்வாராக! குதிரையின் மேல் சவாரி செய்பவன் (அவள் என்ன செய்கிறான் என்பதைக் கவனியுங்கள்) தேவனுடைய வார்த்தையை எதிர்த்து, மனந்திரும்பி மூல வார்த்தைக்குத் திரும்பி செல்ல மறுத்தான். அந்த வார்த்தைதான் மாம்சமும் இரத்தமுமானது. அவன் அதற்குத் திரும்பி செல்ல மறுத்தான். அவன் அந்திக்கிறிஸ்து, அவன் வார்த்தையில் நிலைகொள்ளும் உண்மையான மணவாட்டியை எதிர்த்து தனக்குச் சொந்தமான மணவாட்டியைத் தெரிந்துகொண்டு, அவளுக்குக் கோட்பாடுகள், கொள்கைகள் என்றழைக்கப்படும் ஒரு வகை மார்க்கத்தை அளிக்கிறான். அவன் கிறிஸ்துவுக்கு முரண்பட்ட அந்திக்கிறிஸ்து போதகங்களை அளித்து தம் மணவாட்டியை உண்டாக்கிக் கொள்கிறான் (அவன் எவ்வளவு ஒருமைப்பட்டு இரத்தத்தின் கீழ் ஆராதனை செய்வதற்குப் பதிலாக, அவன் ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கினான். தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்வதற்கு மாறாக அவன் பிரமாணங்களையும் கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டான். பிராடெஸ்டெண்டுகள் அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணத்தை உச்சரிக்கின்றனர். அதிலுள்ள ஒரு வார்த்தையாகிலும் வேதத்திலுண்டா என்று நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க விரும்புகிறேன். அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் என்பது வேதத்திலேயே. இல்லை, நான் சில நாட்களுக்கு முன்பு எங்கோ ஒரு கூட்டத்தில் கூறியது போன்று, அப்போஸ்தலர்களுக்கு ஒரு விசுவாசப் பிரமாணம் உண்டாயிருந்தால், அது அப்போஸ்தலர் 2.38 ஆகத்தான இருந்திருக்க வேண்டும். அதைத்தான் எல்லோரும் பின்பற்ற வேண்டுமென்று அவர்கள் வலியுறுத்தினர். கிறிஸ்தவர்களைப் போன்று காணப்பட்டவரிடம் பவுல், நீங்கள் விசுவாசிகளான போது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்டான். அவர்கள் பிரதியுத்தரமாக, `பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவேயில்லை’ என்றனர். அவன், `அப்படியானால் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?` என்றான். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவது சரிதான். ஆனால் அது மாத்திரம் போதாது. நீங்கள் ஐம்பதுமுறை ஞானஸ்நானம் பெற்றாலும், பரிசுத்த ஆவியானவர் இருதயத்தை மாற்றாவிட்டால், அதனால் எவ்வித உபயோகமுமில்லை. இவையிரண் டையும் நாம் ஒருங்கே பெறவேண்டும். கவனியுங்கள் அந்திக்கிறிஸ்து உண்மையான மணவாட்டியின் போதகத்தை ஏற்க மறுக்கிறான். எனவே அவன் தன் சொந்த மணவாட்டியைத் தெரிந்து கொண்டு அவனுடைய சொந்த கோட் பாடுகளை அவளுக்குப் புகட்டி அவளை ஒரு ஸ்தாபனமாக்குகிறான். வேத வாக்கியங்கள் கூறியவாறு இவள் குமாரத்திகளை - வேறு ஸ்தாபனங்களை - ஈனுகிறாள். குமாரத்திகள் அவர்கள் தாயைப் போல் மாம்சப்பிரகாரமாக, உலகப் பிரகாரமாக ஸ்தாபனங்களாக ஆகி, ஆவிக்குரிய மணவாட்டியை - வார்த்தையை - எதிர்க்கின்றனர். சபையைச் சேர்ந்தவரல்ல என்று அவர்கள் ஒருபோதும் கூறுவதில்லை. நீங்கள் ஸ்தாபனத்தைச் சேர்ந்த யாராவது ஒருவருடன் பேசிப்பாருங்கள். `நிச்சயமாக நான் ஒரு சபையைச் சேர்ந்தவன்’ என்று அவர் கூறுவார். `நீங்கள் கிறிஸ்தவரா?’ என்று அவரிடம் கேட்டால், அவர், `நான் இன்னின்ன சபையைச் சேர்ந்தவன்’ என்று பதிலுரைப்பார். அவர்களுக்கும் சபைக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. நீங்கள் சபை என்று அழைக்கப்படும் ஒன்றைச் சேர்ந்திருக்கலாம். ஆனால் அது சபையல்ல. அவையாவும் சபைகளல்ல. அவை ஜனங்கள் ஒன்றுகூடும் விடுதிகளாம் - இனத்தோடு இனம் சேரும். ஒரே ஒரு சபைதான் உண்டு. அதுதான் காணக்கூடாத கிறிஸ்துவின் சரீரம். நீங்கள் அதில் சேருவதில்லை நீங்கள் அதில் பிறக்கிறீர்கள். நான் அடிக்கடி கூறுவது போன்று, ஐம்பத்து மூன்று வருடகாலமாக நான் பிரன்ஹாம் குடும்பத்தில் இருக்கிறேன். அதில் நான் சேரவில்லை. நான் அதில் பிறந்தேன். இந்த அழகான உதாரணத்தைப் பாருங்கள் (ஒரு வேதவாக்கியத்தை நான் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதைப் படிக்க இப்பொழுது சமயமில்லை), ஏசாவையும் யாக்கோபையும் எடுத்துக் கொள்வோம். ஏசா பக்தியுள்ளவன். அவன் அவிசுவாசி என்று தன்னைக் கூறிக்கொள்ள வில்லை. யாக்கோபு வணங்கின அதே தேவனைத்தான் அவனும் வணங்கினான். அவனுடைய தகப்பனாரும் அந்த தேவனையே வணங்கினார். ஆனால் அவன் ஞாணமுள்ளவன். அவன் எதற்கும் உபயோகமில்லாதவன். ஆனால் நல்லொழுக்கத்தைப் பொறுத்தவரை, அவன் யாக்கோபைக் காட்டிலும் நல்லொழுக்கமுள்ளவனாயிருந்தான். ஆயினும், `அதற்கும் சேஷ்ட புத்திர பாகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?’ என்று அவன் நினைத்து, சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்றுப் போட்டான். யாக்கோபோ ஏசாவைப் போல் பெரிய காரியங்களைச் செய்ய வில்லை. ஏசாவுக்கிருந்த பிறப்புரிமை அவனுக்கு இல்லை. ஆனால் அவன் எங்ஙனமாயினும் சேஷ்ட புத்திர பாகத்தைப் பெற்றுக்கொள்ள விழைந்தான். அதற்காக எம்முறையைக் கையாண்டாலும் பரவாயில்லை என்று அவன் எண்ணினான். கர்த்தர் அதற்காக அவனுக்கு மதிப்பு கொடுத்தார். மாம்சப் பிரகாரமான, உலகப் பிரகாரமான சிந்தையுள்ளவர்கள் இன்று ஏசாவைப் போலிருக்கின்றனர். `நாங்கள் இன்னின்ன சபையைச் சேர்ந்தவர்கள்’ என்று அவர்கள் சொல்லுகின்றனர். ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. கவனியுங்கள், குதிரை சவாரி செய்பவன் மங்கின குதிரையின் மேலேறி அரசியல் ஆதிக்கம் கொண்டவனாய் அவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கிறான். அவனுக்கு அரசியல் ஆதிக்கம் கிடையாது என்று நீங்கள் சொன்னால், இந்த அமெரிக்க ஜனாதிபதி எவ்விதம் தேர்ந்தெடுக்கப் பட்டார்? அந்த தவறு எங்ஙனம் உண்டானது? ஜனநாயகக் (Democrat) கட்சியைச் சேர்ந்தவர்களே? உங்கள் பிறப்புரிமையை அரசியலுக்காக விற்றுப் போட்டவர்களே! இத்தகைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க உங்கள் பிறப்புரிமையை நீங்கள் விற்றுப்போட்டீர்கள். உங்களுக்கு வெட்கமில்லையா? இந்த தேசம் இஸ்ரவேல் நாட்டின் மாதிரியையொட்டி அமைந்துள்ளது என்பதை நீங்கள் உணருகின்றீர்களா? இஸ்ரவேல் ஜனங்கள் என்ன செய்தனர்? அவர்கள் அன்னிய நாட்டில் புகுந்து அங்குள்ளவரைக் கொன்று போட்டு அந்நாட்டைக் கைப்பற்றினர். நாமும் அதையே செய்தோம். உண்மையான அமெரிக்கர்களான சிவப்பு இந்தியர்களை நாம் கொன்று போட்டோம். இஸ்ரவேல் ஜனங்களுக்கு தாவீது, சாலொமோன் போன்ற சில பெரிய மனிதர்கள் இருந்தனர். ஆனால் முடிவில் அவிசுவாசியாகிய யேசபேல் என்பவளை விவாகம் செய்து கொண்ட ஆகாப் என்னும் ஒரு துரோகி அவர்களுக்கு ராஜாவாயிருந்தான். நாமும் அதையே செய்தோம். வாஷிங்டன், லிங்கன் போன்ற பிரசித்தி பெற்ற ஜனாதிபதிகள் நமக்கிருந்தனர். ஆனால் இப்பொழுதுள்ள ஜனாதிபதியைப் பாருங்கள். அவர் ஒரு யேசபேலை விவாகம் செய்து கொண்டிருக்கிறார். அவர் ஒருக்கால் நல்லவராக இருக்கலாம். ஆனால் அவர் மனைவிதான் விவகாரம் அனைத்தையும் நடத்துகிறாள். முழு குடும்பமே விவகாரத்தில் ஈடுபடுகின்றது என்பதை இப்பொழுதே நீங்கள் காணலாம். முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பரிசுத்த ஆவியானவர் என்னிடம் என்ன கூறினார்? பழைய காலந்தவராகிய உங்களுக்கு அது தெரியும். முடிவு காலத்திற்கு முன்பு நேரிடப் போகும் ஏழு சம்பவங்களைக் குறித்து அவர் என்னிடம் சொன்னார். இப்பொழுது நடைபெறுகின்றது கடைசிக்கு முந்தின சம்பவம் புத்தங்களைப் பற்றியும் மற்றவைகளைப் பற்றியும் அவர் கூறின யாவும் அதே போன்று முற்றிலும் நிகழ்ந்தன. இப்பொழுது அமெரிக்கா தேசம் ஒரு ஸ்திரீயினால் அரசாளப்படுவதற் கென்று அவள் கைகளில் சிக்கியுள்ளது - யேசபேல். ஆனால் யேசபேலின் நாட்களில் ஒரு தீர்க்கதரிசி அவர்களுடைய சுபாவத்தை வெளிப்படுத் தினான் என்பது நினைவிருக்கட்டும். அவன் மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி ஜனங்களைக் கூட்டி சேர்க்கிறான். சபை பிரமாணங்கள், மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடுகள் இவை ஒன்றாக கலந்திருக்கின்றன. நான் கூறுவது சரியா? வண்ணங்கள் ஒன்றாகக் கலந்திருக்கின்றன. மரணத்தின் வர்ணமும் மங்கிய, நிறமுள்ள குதிரையின் உலகப் பிரகாரமான போக்கும். அவர்களிடம் தேவனுடைய வார்த்தையின் பரிசுத்த இரத்தம் காணப் படவேயில்லை கவனியுங்கள், அவர்களைப் பூமியின் நான்கு முனைகளிலிருந்தும் அர்மகெதோன் யுத்தத்திற்குக் கூட்டி சொல்கின்றனர் என்று வேதம் கூறுகின்றது. அதை நான் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அதை படிக்கப் போவதில்லை. அந்த வேதவாக்கியத்தை நினைவுப்படுத்தி உங்களிடம் கூறுகின்றேன். தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு அவர்களைக் கூட்டி சேர்க்கின்றனர். எல்லா வண்ணங்களும் கலந்த உலகப் பிரகாரமான, மங்கிய நிறம் கொண்ட வியாதிப்பட்ட குதிரை, சற்று சிந்தித்து பாருங்கள் - அது ஒரு தீங்கான காரியம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அவர்களைப் பூமியில் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டி சேர்ப்பதைக் கவனியுங்கள், ஒரு யுத்தத்திற்காக அவர்கள் கூடுகின்றனர். அந்த யுத்தம் அர்மகெ தோனில் நடக்கும் என்று வேதம் எடுத்துரைக்கிறது. அவன் அப்பொழுது மங்கின நிறமுள்ள குதிரையின் மேலேறி, மரணம் என்னும் பெயர் கொண்டு அங்கு சவாரி செய்வான், மரணம் - அந்திக்கிறிஸ்து, முதலாம் ஸ்தாபனத்தில் அவன் ஆவியாக இருந்தான். ஆனால் இது சம்பவிக்கும் போது அவன் ஆவியாக இருக்க முடியாது. வார்த்தைக்கு விரோதமாய் வேசித்தனம் செய்த அவனுடைய யேசபேலும் அவளுடைய குமாரத்தி களாகிய பிராடெஸ்டெண்டுகளும் இப்பொழுது ஒன்று சேர்க்கப் படுகின்றனர். அன்று பாப்டிஸ்ட் ஸ்தாபனத்தார் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா? `ஓ! நாங்கள் கத்தோலிக்க மார்க்கத்தாருடன் சேரமாட்டோம். அவர்களுடன் ஒருவாறு நட்பு கொள்வோம். நாங்கள் அவர்கள் சபையைச் சேரவேண்டிய அவசியமில்லை’ என்கின்றனர். அதைப் பாருங்கள் தேவனுடைய வார்த்தை அதையே கூறுகிறது - அந்தப் பழைய வேசி. அவர்கள் ஒன்று கூடி, எல்லா வண்ணங்களும் கலந்த குதிரையின் மீது அர்மகெதோன் யுத்தத்திற்குப் புறப்படுகின்றனர். வெள்ளைக் குதிரை, சிவப்பு குதிரை, கறுப்பு குதிரை இம்மூன்றும் ஒருங்கே கொண்டது தான் மங்கின நிறமுள்ள குதிரை - அரசியல் ஆதிக்கம், சபையின் மேலுள்ள ஆதிக்கம், அசுத்த ஆவியின் வல்லமை இம்மூன்றும் ஒருங்கே பெற்ற அவன் மங்கினநிறம் கொண்ட வியாதிப்பட்டதாய் தோன்றும் குதிரையின் மேல் சவாரி செய்து, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலுமிருந்து தன் பிரஜைகளை அந்த யுத்தத்திற்கென்று கூட்டி சேர்க்கிறான். தானியேல் சொப்பனத்தின் அர்த்தத்தை விளக்கி, இரும்பு ரோமாபுரியின் எல்லா ராஜ்யங்களிலும் பரவுவதை அறிவிக்கவில்லையா? இதோ அவர்களெல்லாரும் ஒன்று சேர்ந்து வருகின்றனர். இன்னும் சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து இதைக் கவனமாய்க் கேளுங்கள். நாம் ஆராதனையை முடித்துவிடலாம். அவன் மூன்று நிறங்கள் கலந்த மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து, அவன் பிரஜைகளை நாலாமுனையிலிருந்தும் கூட்டிச் சேர்க்கிறான். இந்தக் குதிரையின் மேல் சவாரி செய்பவனும் அதே மனிதன் தான். அவனைச் சந்திக்க கிறிஸ்து தயாராக இருக்கிறார் என்று வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். அது பயங்கரமான யுத்தமாக இருக்கும். கிறிஸ்து அவருடையவர்களை பூமியின் நான்கு முனைகளிலிருந்து கூட்டிச் சேர்க்கப் போவதில்லை. ஏனெனில் அவர்களில் ஒரு சிலர் மாத்திரம் பூமியில் மீந்திருப்பார்கள். அவர் என்ன செய்வார்? அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார் (நாளை பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து சிந்திக்கும்போது நான் கூறுவது சரியென்பது விளங்கும்). அவர் பனி நிற வெண்மை கொண்ட குதிரையின் மேலேறி அவர்களைப் பரலோகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் கூட்டிச் சேர்ப்பார். அவருக்கு ஒரு பெயருண்டு அது `மரணம்’ என்பதல்ல, ஜீவனைக் குறிக்கும் `தேவனுடைய வார்த்தை’ என்பதாம். ஆமென். தேவனுடைய வார்த்தை என்னும் அவர் நாமத்தை அவர் தொடையின் மீது எழுதி வைத்துள்ளார். அது ஒன்று தான் ஜீவனைக் கொடுக்க முடியும். ஏனெனில் தேவன் மாத்திரமே நித்திய ஜீவனின் உற்பத்தி ஸ்தானமாயிருக்கிறார் (Source), நான் கூறுவது சரியா? அவர் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்த, `ஜீவன்’ என்னும் பெயரைக் கொண்டு, பரலோகத்துக்குரிய தமது பிரஜைகளாகிய பரிசுத்தவான்களைக் கூட்டி சேர்க்கிறார். ஆனால் இந்த மனிதன் மூன்று வித்தியாசமான வல்லமைகளைக் கொண்டவனாய் மரணம் என்னும் பெயர் கொண்டு, பூமிக்குரிய தன் பிரஜைகளைக் கூட்டிச் சேர்க்கிறான். அவன் மீது மரணம் என்னும் பெயர் எழுதப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்துவின் மீது `ஜீவன்’ என்னும் பெயர் எழுதியிருக்கிறது. கிறிஸ்து வினுடன் கூட இருப்பவர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் வீற்றிருக்கின்றனர். அவர்கள் `உலகத் தோற்றத்துக்கு முன் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். ஆமென். அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கின் றனர். ஆமென் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாய், தெரிந்து கொள்ளுதலின் மூலம் தேவனுடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவர் களாயிருந்து, புதிய திராட்சரசத்தினாலும் எண்ணெயினாலும் ஊக்கு விக்கப்பட்டவர்களாய், வெள்ளைக் குதிரைகளின் மீது சவாரி செய்து கிறிஸ்துவைச் சந்திக்கப் புறப்படுகின்றனர். இடி முழக்கங்கள் வெகு விரையில் இவைகளை முழங்கி வெளிப்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். கவனியுங்கள், அவரே வார்த்தை, அவருடைய நாமம் `தேவனுடைய வார்த்தை’ என்பதாகும். அப்படியானால், வார்த்தைதான் ஜீவன். ஆனால் அந்திக்கிறிஸ்து என்பவன் கிறிஸ்துவுக்கு விரோதமானவன் - அதாவது தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானவன். ஸ்தாபனங்களும் அதன் கொள்கைகளும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் அமைந்திருப்ப தால், அது அந்திக்கிறிஸ்துவினால் உண்டாயிருக்க வேண்டும். அதை எங்ஙனம் நீங்கள் காணக் கூடாமல் இருக்கமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. உங்களுக்குப் புரிகின்றதா? இதை எங்ஙனம் நீங்கள் காணத்தவற முடியும்? அந்திக்கிறிஸ்து தேவனுடைய வார்த்தைக்கு விரோதமானவன் - அதாவது அதை எடுத்துப் போடுகிறவன். அவன் பல நிறங்கள் கலந்த குதிரையின் மீது சவாரி செய்கிறான் என்பது தேவனுடைய வார்த்தையின் மூலம் நமக்குப் புலனாகிறது. ஏழு சபையின் காலங்களை நாம் வியாக்கியானம் செய்தபோதும் அதையே நாம் கண்டோம், இப்பொழுது இயேசு முத்திரைகளை உடைத்து, ஏழு சபையின் காலங்களில் நடந்தவை என்னவென்பதைக் காண்பிக்கிறார். ஸ்தாபனங் களும் அவைகளின் பிரமாணங்களும் தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாய் அமைந்துள்ளதால், நாம் அவைகளுக்கு விரோதமாய் இருக்கிறோம். இங்கு ஜீவனும் மரணமும் கடைசி போராட்டத்தில் ஈடுபடுவதை நாம் பார்க்கிறோம் - உண்மையான ஜீவனாகிய வெள்ளைக் குதிரையும் ஸ்தாபன பிரமாணங்களாகிய மங்கின நிறமுள்ள குதிரையும் ஒன்றை யொன்று யுத்தம் செய்யும். உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒரு வேளை நீங்கள் இதை நம்பமாட்டீர்கள், ஒரே ஒரு மூலநிறம் தான் உண்டு. அது தான் வெள்ளை நிறம். நான் இதை ஊர்ஜீதப்படுத்துவதற்கென புத்தகங்களை ஆராய்ந்தேன். எத்தனை பேருக்கு இது தெரியும்? ஒரே ஒரு மூல நிறம்தான் உண்டு. மற்ற நிறங்கள் யாவும் வர்ணங்கள் கலந்ததனால் உண்டானவை. எனவே, கிறிஸ்து ஆதி முதற்கொண்டு கலப்படமில்லாத வார்த்தையின் மீது சவாரி செய்கிறார். ஆமென். இரசாயனம் வெள்ளை நிறத்தைப் பிரிக்காமல் இருந்தால், எல்லா நிறங்களும் வெள்ளை நிறமாகவே அமைந்திருக்கும். ஆமென்! மகிமை! இன்று சபைகளில் ஸ்தாபனங்களின் கொள்கைகளும் பிரமாணங்களும் கலந்திராவிடில், ஒவ்வொரு சபையும் அப்போஸ்தலருடைய போதகமாகிய தேவனுடைய வார்த்தையில் நிலை நின்றிருக்க, கர்த்தரும் அதை அடையாளங்களினால் உறுதிப்படுத்தி யிருப்பார். ஓ! சகோ. ஈவான்ஸ் (Bro. Evans) இதை கூறும்போது எனக்குப் பரவச உணர்ச்சி உண்டாகின்றது. ஆம், ஐயா! ஆம் ஐயா! ஒரே ஒரு மூல நிறம்தான். அதுதான் வெள்ளை. அது ஸ்தாபனங்களோடும் அதன் பிரமாணங்களோடும் கலந்துவிடவில்லை. இல்லை ஐயா! கிறிஸ்துவின் பரிசுத்தவான்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கின்றனர். அவர்கள் ஸ்தாபனங்களோடும் அவைகளின் பிரமாணங் களோடும் கலந்துவிடவில்லை. ஆனால் ஸ்தாபனங்கள் எல்லா நிறங்களும் கலந்த ஒருவகை நிறத்தைக் கொண்டதாயிருக்கின்றன. ஆனால் கிறிஸ்துவோ மூல நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்கிறார். அந்த மூல நிறமே அவருடைய மக்களின் மேலும் உள்ளது. அவர்கள் அவருடைய இரத்தத்தில் தோய்க்கப்பட்டு, அவர்கள் அணிந்துள்ள ஆடைகள் வெண்மையாக்கப்பட்டு பாவமனைத்தையும் அதன் மூல காரணமாயிருந்த சாத்தானிடம் சென்றுவிட்டது. நான் கூறுவது உண்மையாகும். ஆனால் ஸ்தாபனங்களின் பிரமாணங்களுடன் கலந்தவர்கள் மங்கின நிறமுள்ளவர்களாகி மரணத்தையடைகின்றனர். வெள்ளை நிறத்துடன் மற்ற நிறங்களைச் சேர்ப்பது தவறாகும். அதனால் மூல நிறம் மாறி விடுகிறது. மூல நிறம் வெள்ளை என்றால், அதனுடன் மற்ற நிறங்களைச் சேர்க்கும் போது, அதன் உண்மையான நோக்கத்தை நாம் மாற்றி விடுகிறோம். அவ்வாறே அவர் வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருந்து, அவரே தேவனுடைய வார்த்தையாயிருப்பாரெனில், அதனுடன் ஸ்தாபன பிரமாணங்களைக் கலந்து ஒரு வார்த்தையைக் கூட்டினாலும் அல்லது ஒரு வார்த்தையைக் எடுத்துப் போட்டாலும், நாம் எல்லாவற்றையும் தாறுமாறாக்குகிறோம். ஓ! ஆண்டவரே, நான் தேவனுடைய வார்த்தையில் நிலைக்கச் செய்யும். சத்தியமும் தவறும் ஒன்றோடென்று கலவாது, அது `கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார்’ என்று சொல்லப்பட்ட தேவனுடைய வார்த்தையாயிருக்க வேண்டும். இல்லையேல் அது தவறான ஒன்றாக இருக்க வேண்டும். அது `பரிசுத்த பிதா’ கூறினாலும் அல்லது பரிபோன பீஸ் அல்லது கான்டர்பரியின் பிரதம அத்யட்சகர் கூறினாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தைக்கு மாறாக அது அமைந்திருந் தால் அது வார்த்தையைத் தாறுமாறாக்கும். அது ஒருபோதும் கலவாது. `இவர் இத்தனை மகத்துவமான செயல்களைப் புரிந்துள்ளாரோ!’ என்று நீங்கள் கூறலாம். அவர் எதைச் செய்தாலும் எனக்குக் கவலை யில்லை. அவர் எவ்வளவு பரிசுத்தமாயிருந்தாலும் அக்கரையில்லை. நம்மிடமிருப்பது நாம் தேவனிடமிருந்து நேரடியாகப் பெற்றுள்ள சத்தியமாகும். வேறேந்த சபையும், ஸ்தாபனமும் சத்தியத்தைக் கடை பிடிக்கவில்லை. அவர்களெல்லாரும் சத்தியத்திற்குப் புறம்பேயுள்ளனர். சத்தியத்தைக் கடைபிடிக்கும் ஏதாவது ஒரு சபையை எனக்குக் காண்பியுங்கள். வேதாகமத்தில் ஒரு பாகத்தைத் திருப்பி, ஒன்றைக் கூற விரும்புகிறேன். நீங்கள், `பெந்தேகோஸ்தேயினரை குறித்து என்ன?’ என்று நினைக்கிறீர்கள். (உங்கள் நினைவுகளை இப்பொழுது நான் பகுத்தறிந் தேன்). அது உங்கள் மனதைப் புண்படுத்தியுள்ளது. அப்படியானால் நான் கூற வந்ததைச் சொல்லாமல் விட்டுவிடுகிறேன். ஏனெனில் உங்களைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. நீங்கள் மனதில் என்ன நினைத்திருக்கிறீர்கள் என்பதை நானறிவேன் என்று காண்பிக்கவே இதைக் கூறினேன். மூல காரியத்துடன் எதைக் கூட்டினாலும் அது மரண நிறம் கொள்கின்றது. கிறிஸ்து கடுகு விதையைக் குறித்து சொன்னது நினைவிருக்கும். அது எல்லா விதைகளையும் பார்க்கிலும் சிறிதாயிருந் தாலும் அது வேறொன்றுடன் கலவாது. அது அப்பட்டமான ஒன்று. உங்களுக்கு கடுகு விதையளவு விசுவாசம் இருந்தால், அதில் நிலை கொள்ளுங்கள். கவனியுங்கள், ஜீவன் வெள்ளைக் குதிரையின் மேல் சவாரி செய்பவரைப் பின்பற்றினது, அவர்தான் தேவனுடைய வார்த்தை, ஜீவன். அவர் தம்முடன் கூட இருக்கும் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களால் நிலைநிறுத்தப்படுகிறார். இந்த யுத்தம் யார் சார்பில் செல்லும்? `என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்’ என்று இயேசு கூறினார். அவர், `நீ என்னை விசுவாசித்தால், மரித்தாலும் பிழைப்பாய், உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவன் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்’ என்றார். மேலும் அவர், `என்னை விசுவாசிக்கிற வனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன்’ என்றார். அது அவர் வாக்களித்த வேதவாக்கியமாகும். சாத்தான் பூமியின் நான்கு முனைகளிலுமுள்ள பிராடெஸ்டெண்டு களையும் கத்தோலிக்கர்களையும் ஒன்று கூட்டி, அர்மகெதோன் யுத்தத்திற்கென்று படைதிரட்டி வருகிறான். சரி, இயேசுவும் தேவனுடைய வார்த்தையால் நிலைநிறுத்தப்பட்ட உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடன் பரலோகத்திலிருந்து இறங்கி வருகிறார். நான் முன்பு கூறியதுபோல், தேவன் உங்களுடன் பேசி உங்களை அனுப்புவாரெனில், அவருடைய வார்த்தையை அவர் ஆதரிக்கக் கடமை பட்டுள்ளார். நீங்கள் பரலோகத்தின் ராஜ்யப் பிரதிநிதி (Ambassador) யாக இருப்பீர்களானால், பரலோகம் முழுவதுமே உங்களை ஆதரிக்கும். பரலோகம் தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கவனியுங்கள், அவர் உயிர்த்தெழுந்த பரிசுத்தவான் களுடன் வந்து, `தேவனுடைய வார்த்தை உண்மையென நிரூபிக்கிறார். பாதாளம் அவனுக்கென்று ஆயத்தமாயிருப்பதை சாத்தான் அறிவான். மரணம் மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் - ஸ்தாபனங்களின் கொள்கைகள் - சவாரி செய்து, அவனைப் பின்பற்றினவர்களைத் தேவனிடமிருந்து நித்திய காலமாய் பிரித்தது. ஆம், நித்திய பிரவினைக்குத்தான் அவன் அவர்களை வழிநடத்தினான். ஆனால் கிறிஸ்து சவாரி செய்து தம் சபையை உயிர்த்தெழுதலின் மகிமைக்குள் நடத்தினார். நாம் முடிப்பதற்கு முன்பு 8-ம் வசனத்தின் கடைசி பாகத்தைப் பார்ப்போம். `.... அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது’. `அவைகள்’ என்பது யார்? சரி, அந்திக்கிறிஸ்து மரணம் என்று அழைக்கப்படுகிறான். பாதாளம் அவன் பின்சென்றது. அவனுடைய நான்கு விதமான திட்டத்தைக் கவனியுங்கள். அந்திக்கிறிஸ்து வெள்ளைக்குதிரை, ஆவியினால் கொல்லுகிறான் - அந்திக்கிறிஸ்து வாயிருப்பதால் ஆவிக்குரிய மரணம். இரண்டவதாக - சிவப்பு குதிரை, சபையும் அரசாங்கமும் ஒன்றாக இணைந்தபோது, அரசியல் ஆதிக்கம் கொண்டு பட்டயத்தினால் கொல்லுகிறான். கறுப்புகுதிரை - அவன் போதகங்களை அளித்து அவைகளை விலைக்கு விற்கிறான். அவள் விபச்சாரம் செய்கிறாள். அவன் ஆகாரத்தை தராசில் நிறுத்து அதனை விற்கிறான். நான்காவதாக - மங்கின நிறமுள்ள குதிரை - தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிக்கிறான். (நான்கு என்னும் எண்ணிக்கையைப் பாருங்கள்) ஓ! கர்த்தருக்குத் துதியுண்டாவதாக. நான் நேரம் கடந்துவிட்டேன். இன்னும் 10 நிமிடங்கள் தருவீர்களா? அனேகம் பேர் நான் இங்கு பேசுவதைக் குறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். எலியாவைப் பற்றி அதிக மூடவைராக்கியம் நம்மிடையே உண்டாயிருந்தது. ஆனால் அவையாவும் மடிந்து விட்டன. நான் இதைக்காணும் விதமாய் நீங்களும் காணத்தேவன் என் மூலம் துணை புரிவாராக! முடிப்பதற்கு முன்பாக இதைக்கூற விரும்புகிறேன். சபை காலத்தின் கடைசி தூதன் தீர்க்கதரிசியாகிய எலியாவைப் போன்று அபிஷேகம் செய்யப்பட்டவன் என்று விசுவாசிக்காதவர்கள் - கவனியுங்கள், கடைசி சபை காலம் முடிவடைந்த பிறகு, அவர்களின் பிணங்களைக் காட்டு மிருகங்கள் தின்று போடும். அவ்விதம் நேரிடும் என்பதற்கு யேசபேல் உதாரணமாயிருக்கிறாள். இப்பொழுது வெளிப்படுத்தல் 2.18-20 வசங்களைத் திருப்புங்கள். ஓ! ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு அதைப் படித்தோம். ஆம், நல்லொழுக்கம் சிதைந்து போன காலம் அது. யேசபேல் நவீன கள்ளச் சபைக்கு உதாரணமாயிருக்கிறாள் - மணவாட்டிக்கல்ல. பழைய ஏற்பாட்டின் யேசபேல் இக்காலத்துச் சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். வெளி 2.18-20, `தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள்...’ சரியா? அது யேசபேலுடன் ஒப்பிடப் பட்டுள்ளது. கடைசி காலத்தில் தீர்க்கதரிசியின் செய்தி சபைக்கு உண்டாகி, அவர்களை மூல வார்த்தைக்கு திரும்பும்படி அழைக்குமென்பதற்கு ஆதாரமாக வேதத்திலிருந்து அனேக வாக்கியங்களை எடுத்துக் காண்பிக்க முடியும். மல்கியா 4ம் அதிகாரம், வெளிப்படுத்தல் 10.7 அவ்வாறு கூறுவதைக் கவனியுங்கள். இயேசுவும் கூட, `லோத்தின் நாட்களில் நடந்ததுபோல’ என்று கூறியுள்ளார். இவ்விதம் அனேக வாக்கியங்களை எடுத்துரைக்கலாம். யேசபேல் தற்காலத்து சபைக்கு முன்னடையாளமாயிருக்கிறாள். இப்பொழுது கத்தோலிக்கர்களும் பிராடெஸ்டெண்டுகளும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அதை யாரும் தடுக்க முடியாது, இரண்டும் ஸ்தாபனங்கள், ஒன்று தாய், மற்றொன்று குமாரத்தி, அவ்வளவுதான். அவர்கள் ஒருவரோடொருவர் சந்தடி செய்து தர்க்கம் பண்ணினாலும் அவர்களிருவரும் வேசிகளே, நானாக அதைக் கூறவில்லை. கர்த்தர்தான் அவ்விதம் வேதத்தில் கூறியுள்ளதைநான் உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். கவனியுங்கள் யேசபேல் தேவனுடைய கட்டளையின்படி கொல்லப் படுகிறாள். கர்த்தர் யெகூவை அங்கு அனுப்பி, யேசபேல் ஜன்னலின் வழியாய் எறியப்பட்டு கொல்லப்படும்படி செய்கிறார். நாய்கள் அவள் மாம்சத்தைக் தின்றன. நான் கூறுவது சரியா? எலியா தீர்க்கதரிசனம் உரைத்தபடி, அவளுடைய கணவனான ஆகாப் ராஜாவின் இரத்தத்தை நாய்கள் நக்கின. நான் எதை வலியுறுத்தி கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? முதலாம் எலியா சபைகளினால் புறக்கணிக்கப் பட்டான். அந்த சபைக்கு யேசபேலும் ஆகாபும் தலைவர்களாக இருந்தனர் - சபையும் அரசாங்கமும் ஒன்றுபடுதல். எலியா ஆகாபின் பாவங்களை எடுத்துரைத்து சபை முழுவதும் உண்மையான வார்த்தைக்கு திரும்பும்படி கட்டளையிட்டான். இக்காலத்து சபைக்கு இரண்டாம் எலியா வரும்போது சரியாக அதையே செய்வான் - மூல விசுவாசத்திற்குத் திருப்புவான். அதனின்று நீங்கள் எவ்வாறு தப்பமுடியும் என்பது எனக்கு விளங்கவில்லை. உண்மையான வார்த்தைக்குத் திரும்புங்கள். தீர்க்கதரிசியின் செய்தியை விசுவாசிக்காதவர்களின் பிணங்களைக் காண வேண்டுமானால் வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தைக் திருப்புங்கள். தேவனுடைய வார்த்தை அவர்களைக் கொன்று போடும். அது உங்களுக்குத் தெரியும். கிறிஸ்து வரும்போது என்ன நேரிடுகிறதென் பதைக் கவனியுங்கள். வெளிப்படுத்தல் 19ம் அதிகாரம் 15ம் வசனம் தொடங்கி. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே... (இதை கவனியுங்கள். அவர் புறப்பட்டுச் செல்கிறார். 15ம் வசனம்)... புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது.... (அவருடைய வாயிலிருந்து - தேவனுடைய வாயிலிருந்து மோசேயின் வாய்க்கு வந்தது போல்)... இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார். அவர் சர்வவல்ல மையுள்ள தேவனுடைய உக்கிரகோப மாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் (13ம் வசனத்தில் அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்று எழுதப்பட்டிருக்கிறதை கவனிக்கவும்) அவருடைய வஸ்திரத்தின் மேலும் அவருடைய தொடையின் மேலும் எழுதப்பட்டிருந்தது. பின்பு ஒரு தூதன் .... (இப்பொழுது கவனியுங்கள். அவர்சங்கரித்துக் கொண்டே வருகிறார். யாரை அவர் சங்கரிக்கிறார்? யேசபேலையும் கள்ளத் தீர்க்கதரிசியாகிய ஆகாபையும்) சூரியனில் நிற்கக்கண்டேன், அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து .... மகாதேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடி வாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். அவர்களை அவர் மிருகங்களும் பறவைகளுக்கும் இரையாகக் கொடுக்கிறார். வெளிப்படுத்தலின் புத்தகம் வேறொரு அதிகாரத்தில் `பட்டயத்தினாலும் மரணத்தினாலும் பூமியின் மிருகங்களாலும் கொல்லப் படுவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது. யேசபேல் சபை - அவளுடைய சரீரத்தைப் பறவைகளும் பூமியின் மிருகங்களும் பட்சிக்கும், ஆகாப் யேசபேல் சபையின் அங்கத்தினர்களின் சரீரங்களையும் அவை பட்சிக்கும், நான் என்ன சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்குகின்றதா? சரி. ஆகாப், யேசபேல் இவர்களின் நாட்களில் எலியா தீர்க்கதரிசி யாயிருந்தான். யேசபேலின் சபைக்கும் அதையே செய்வதாக வேதத்தில் அவர் வாக்களித்துள்ளார் - ஆவியின் வடிவில் எலியாவின் ஊழியம். கவனியுங்கள். எலியா அவன் காலத்தில் சரிவர அடையாளங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டாலும், அக்காலத்தவரை தேவனுடைய வார்த் தைக்குத் திருப்ப அவனால் முடியவில்லை. அது சரியா? எலியா தன்னால் இயன்றவரை முயன்றான். அவன் அவர்களுக்கு அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பித்தான். அவர்களோ அவனைப் பார்த்து நகைத்தனர். தற்கால எலியாவின் ஊழியத்திலும் அதையே அவர்கள் செய்வார்கள். அவர்களைத் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப அவனால் இயலவில்லை. சபையே! இதைக்கேளுங்கள், இதைக்குறித்து குழப்பமடையப் போகிறவர்களே, சற்று கவனியுங்கள். எலியாவின் காலத்திலிருந்து கோடிக்கணக்கான மக்களில் - யேசபேலும் ஆகாபும் இன்றைய நம் அரசாட்சிக்கு முன்னடையாளமிருந்த அக்காலத்தில் எலியாவின் போதகத்தின் மூலம் 700 பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். அது சரியா? ஆம், அது சரி. பாருங்கள், அதை எலியா அறியாமலிருந்தான். கர்த்தர் முத்திரைகளின் ஒன்றை உடைத்து, ஸ்தாபனங்களின் பிரமாணங்களுக்கு முன்னால் முழங்காற்படியிடாத 700 பேரை அவருக்காக வைத்திருக்கிறார் என்று காண்பித்தார். அவர் புத்தகத்திலுள்ள இரகசியத்தை அவனுக்குக் காண்பிக்கும் வரை அவன் மாத்திரமே இரட்சிக்கப்பட்டுள்ளதாக அவன் கருதியிருந்தான். கர்த்தர் எலியாவுக்கு அவர் புத்தகத்தைத் திறந்து, `சற்று பொறு மகனே! ஒளிந்து கொண்டிருக்கும் 700 பேரை எனக்காக வைத்திருக்கிறேன். அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்னால் ஜீவப்புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவர்கள் எனக்குச் சொந்தமானவர்கள்’ என்றார். கர்த்தர் முத்திரையை உடைத்தார். ஆகவேதான் யோவான் அதிக சத்தமிட்டான் என்று அன்று இரவு பார்த்தோம். அவனுடைய பெயரை அவன் அப்புத்தகத்தில் கண்டிருக்க வேண்டும். எலியா முழு மூச்சுடன் பிரசங்கம் செய்தான். எல்லாவற்றையும் தன்னால் இயன்றவரை அவன் செய்தான். என்றாலும் அவர்கள் அவனை நிந்தித்து, `நீ தான் இவையெல்லாவற்றிற்கும் காரணம். நீ ஆவிகளுடன் தொடர்பு கொள்பவன் (Spiritualist) இந்த தொந்தரவை நீதான் உண்டாக்குகிறாய். இதற்கெல்லாம் குற்றவாளி நீயே’ என்றனர். இப்படி அநேக காரியங்களைக் கூறி அவன் மேல் பழி சுமத்தினர். யேசபேலும் அவனுடைய தலையைத் துண்டித்து விடுவதாகப் பயமுறுத்தினாள். எல்லாருமே அவனுக்கு விரோதமாயிருந்தனர். அப்பொழுது அவன், `ஆண்டவரே, நீர் சொன்ன யாவையும் நான் செய்து முடித்தேன், உம்முடைய வார்த்தையில் நான் அப்படியே நிலை நின்றேன். நான் பயம் எதுவுமின்றி ராஜாவின் முன்னிலையில் சென்று, நீர் கூறச் சொன்ன எல்லாவற்றையும், `கர்த்தர் உரைக்கிறதாவது’ என்று தைரிய மாகக் கூறினேன். நீர் எனக்குக் கூறின யாவும், நான் அவர்களுக்குக் கூறினேன். அவைகளில் ஒன்றாகிலும் சம்பவிக்காமற் போகவில்லை. ஆனால் இப்பொழுது அவர்களிடையே நான் ஒருவன் மாத்திரம் மீதியாயிருக்கிறேன். அவர்கள் என்னைக் கொல்ல முயல்கின்றனர்’ என்றான். கர்த்தர் அவனை நோக்கி, `நான் முத்திரையைத் திறந்து உனக்கு ஒன்றைக் காண்பிக்க விரும்புகிறேன். ஸ்தாபனங்களின் கொள்கைகளுக்கு முழங்காற்படியிடாத - ஸ்தாபனங்களுடன் சேராத - 700 பேரை எனக்காக வைத்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியுமா? 700 பேர் எடுக்கப்படுதலுக்கு ஆயத்தமாயுள்ளனர்’ என்றார். ஓ! அவர் தமது தீர்க்க்தரிசியிடம் (அவனுக்கு மாத்திரமே அவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தி, வேத வாக்கியங்களின் மூலம் உண்மையைக் காணச் செய்கிறார்). `இந்த சந்ததியில் தெரிந்து கொள்ளப்பட்ட 700 பேர்களின் பட்டியலை வைத்திருக்கிறேன்’ (இக்காலத்தையொட்டி கூறவேண்டு மானால்) அவர்கள் மதசம்பந்தமான ஸ்தாபனங்களுக்கும் அவைகளின் கொள்கைகளுக்கும் முழங்காற்படியிடாமல் இருக்கின்றனர்’ என்றார். நான் கூறுவதை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? அது வார்த்தை யின்படி அமைந்திருப்பதால் அவ்விதமாகவே இருக்க வேண்டும். அந்த மனிதன் வரும்போது, நான் இப்பீடத்தின் மேல் இப்பொழுது நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியாக அவன் தீர்க்கதரிசியாயிருப் பான். அவன் தேவனுடைய வார்த்தையில் முற்றிலும் நிலைத்திருப்பான். அவன் எந்த ஒரு ஸ்தாபனத்தின் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவன் எலியாவைப் போன்றும் யோவானைப் போன்றும் காட்டில் சஞ்சரிக்கிறவனாக இருப்பான். அவன் நன்னடத்தைகெட்ட ஸ்திரீகளை வெறுத்து அவர்களைத் தாக்குவான். எலியாவும் யோவானும் அதையே செய்தனர். அவன் தேவனுடைய வார்த்தையில் முற்றிலும் நிலைநின்று, ஸ்தாபனங்களை எதிர்ப்பான். `ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்’, உண்மையாகவே அவர் அதை நிறைவேற்றினார். நண்பர்களே, நான்காம் முத்திரை திறக்கப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்தவரை, நான்கு குதிரைகளின் மேலிருப்பவர்களைக் குறித்து நான் உங்களுக்குத் தெரியப்படுத்தினேன். இவை மாத்திரமே பூமியில் சம்பவித்தன, அடுத்த முத்திரை - பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் - பரலோகத்தில் சம்பவிப்பதை நாம் காணலாம். காட்சியானது பூமியிலிருந்து மாறி பரலோகத்துக்குச் செல்வதை நாம் நாளை இரவு காணலாம். அவர் பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களை நோக்கிப் பார்க்கிறார். அடுத்த இரவு நியாயத் தீர்ப்பு விழுவதை நாம் காணலாம். கடைசி இரவாகிய ஞாயிறு இரவன்று - இவைகளின் அர்த்தமென்னவென்பதை நான் இதுவரை அறியேன். உங்களைப் போலவே நானும் அவைகளைப் படித்திருக்கிறேன் - ஆனால் பரலோகத்தில் அரைமணி நேர அமைதல் உண்டாயிருந்தது. அங்கு ஏதோ ஒன்று சம்பவித்தது. அவர் அதை வெளிப்படுத்தித் தருவாரென்று எதிர்பார்க்கிறேன். அவர் நிச்சயமாக அதை வெளிப்படுத்தித் தருவார் என்னும் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். நான் வேதாகமத்திலுள்ள அனேக பாகங்களைத் திருப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கிறிஸ்து வந்து அந்திக் கிறிஸ்துவைச் சங்கரிப்பார் என்பதைக் காண்பிக்க வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தை நாம் பார்க்க வேண்டியதாயிருந்தது. ஆகவே தான் இம்முத்திரையைக் குறித்த இரண்டு வசனங்களை மாத்திரம் நான் சிந்தித்து அதன் பின்பு இவைகளை யெல்லாம் நிரூபிக்க நான் வேதாகமத்திலுள்ள வித்தியாசமான பாகங்களைப் படிக்க அவசியம் உண்டானது. இக்கடைசி நாட்களுக்கென்று நியமிக்கப்படும் ஏழாம் தூதன் மல்கியா 4ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி எலியா தீர்க்கதரிசியைப் போல் தேவனால் அபிஷேகிக்கப்பட்டு, தேவனுடைய மூல வார்த்தையை இச்சந்ததிக்கு வெளிப்படுத்துவான் என்பதை நிரூபிக்க நாம் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரத்தைப் படிக்க வேண்டியதாயிருந்தது. எலியா தீர்க்கதரிசி யேசபேலுக்குச் செய்தவாறு இம்மனிதன் ஆவிக்குரிய யேசபேலாகிய ஸ்தாபனங்களுக்குச் செய்வான். அது சரியென்பதை நிரூபிக்க நான் வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அல்லாமலும், மல்கியா, ஆமோஸ் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களையும் நாம் படிக்க வேண்டியதாயிருந்தது. எலியா என்பவன் தீர்க்கதரிசனம் உரைத்து யேசபேலை அந்த சந்ததியில் குற்றப்படுத்தின ஒரு தீர்க்கதரிசி. எலியா மரிக்கவேயில்லை. எண்ணூறு வருடங்கள் கழிந்து மறுரூப மலையில் இயேசுகிறிஸ்துவின் பக்கத்தில் அவன் காணப்பட்டான். அவன் மரிக்கவேயில்லை. இக்கடைசி நாட்களில் தேவனுடைய வாக்கின்படி அவன் ஆவி ஒரு மனிதனை அபிஷேகிக்கும் - இயற்கையான யேசபேலுக்கு என்ன நேரிட்டதோ, அதுவே ஆவிக்குரிய யேசபேலுக்கும் நேரிடும் என்று வாக்களிக்கப்படுகின்றது. எனவே, அதை நிரூபித்து உங்கள் சந்தேகங்களை அகற்ற, நான் வேதாகமத்தை அங்குமிங்கும் திருப்ப வேண்டியதாயிருந்தது. உங்களுக்குச் சந்தேகம் ஏதாகிலும் இருந்தால் ஒரு கடிதம் அல்லது ஒரு குறிப்பை எழுதி எனக்குத் தெரியப்படுத்துங்கள்... கடைசி நாட்களில் அவர்களுடைய மாம்சத்தை மிருகங்கள் பட்சிக்கும் என்பதும் கூட எவ்வளவு அழகாக பொருந்துகின்றது! எனக்குத் தெரிந்தவரை,தேவன் முன்னறிவித்தபடி நான்கு குதிரைகளின் மேலேறியிருப்பவர்களைக் குறித்து எனக்கு அளிக்கப்பட்ட வெளிப்பாடு மிகவும் உண்மையாகும். இயேசுவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்! நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் ஸ்தாபனங்களிலுள்ள அங்கத்தினர்களின் பேரில் எவ்வித விரோதமுமின்றி... ஏனெனில் தேவனுடைய பிள்ளைகளை கத்தோலிக்க ஸ்தாபனங்களிலும், மெதோடிஸ்ட் ஸ்தாபனங்களிலும், பாப்டிஸ்ட் ஸ்தாபனங்களிலும் உண்டு. வெளிச்சத்தைக் கண்ட மாத்திரத்தில் இத்தகைய ஸ்தாபனங்களிலிருந்து வெளிவந்தவர் இன்றிரவு எத்தனை பேர் உள்ளனர்? உங்கள் கைகைளை உயர்த்துங்கள். உங்களைப் போன்ற தேவனுடைய பிள்ளைகள் அத்தகைய ஸ்தாபனங்களில் இருக்கின்றனர். ஸ்தாபனங்களின் முறைமை தான் அவர்களை மரணத்தில் ஆழ்த்துகின்றது. அவர்கள் சத்தியத்தைக் கேட்கக் கூடாதவாறு அந்திக்கிறிஸ்துவின் ஆவி அவர்களை அந்த ஸ்தலங்களுக்குக் கொண்டு சென்றிருக்கிறது. அன்றொரு இரவு நான் முத்தரிக்கப்படுதலைக் குறித்து பேசின போது - ஒரு மனிதன் யூபிலி வருஷத்தில் அழைப்பைக் கேட்ட பிறகும் விடுதலையாக மறுத்தால், அவன் கதவுநிலைக்குக் கொண்டு செல்லப்பட்டு,அவன் காது கம்பியினால் குத்தப்பட வேண்டும். காது என்பது நாம் கேட்பதற்கென்று கொடுக்கப்பட்ட கருவியாகும். விசுவாசம் கேள்வியினால் (hearing) வரும். அவன் சத்தியத்தைக் கேட்டபிறகும், அவனுக்களிக்கப்பட்ட விடுதலையை அவன் ஏற்றுக் கொள்ள மறுத்தால், ஸ்தாபனத்தின் எஜமானனை அவன் வாழ்நாள் முழுவதும் சேவிக்க நேரிடும். ஆமென். ஓ! அவர் அதிசயமானவரல்லவா? நம் கைகைளை உயர்த்தி அவரை ஆராதிப்போம். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் இப்பொழுதும் நம் தலைகளை வணங்குவோம். இப்பல்லவியை மௌனமாகப் பாடும்போது (hum) அவரை ஆராதிப்போம். ஆண்டவரே, நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியற்றவர்களாயிருக்கிறோம். உமக் காகவும், உமது ஜனங்களுக்காகவும் நான் மகிழ்ச்சியுறுகிறேன். எங்களுடைய இரட்சிப்பைக் கல்வாரியில் நீர் சம்பாதித்தீர். அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோம். ஆண்டவரே, உமது ஆவியினால் எங்களை சோதித்தறியும். எங்களில் பொல்லாங்கு, அல்லது தேவனுடைய வார்த்தையின் பேரில் அவிசுவாசம் ஏதாவது காணப்பட்டால், அல்லது உம்முடைய ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் ஆமோதித்து `ஆமென்’ என்று சொல்லக்கூடாதவர் யாராவது இங்கிருந்தால், வெள்ளைக் குதிரையின் மேல் வீற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இறங்கி வந்து தமக்குச் சொந்தமானவர்களை அந்திக்கிறிஸ்துவின் ஆவியிலிருந்து விடுதலையாக்கி கொள்வாராக. ஆண்டவரே, அவர்களை வெளியே கொண்டுவாரும், அவர்கள் இப்பொழுதே மனந்திரும்பி உம்மிடம் விரைவில்வந்து, எண்ணெயினாலும், திராட்சரசத்தினாலும் நிறைந்து, மரணம் என்னும் ஸ்தாபன அங்கியைக்களைந்து போட்டு, மணவாளன் அளிக்கும் நித்திய ஜீவன் என்னும் வெண்ணிற அங்கியை அணிந்து கொள்ள அருள் புரியும். அப்பொழுது அவர்கள் என்றாவது ஒரு நாள் தேவனுடைய வார்த்தையால் உறுதிபடுத்தப்பட்ட உயிர்த்தெழுதலில் பங்கு கொண்டு கலியான விருந்தில் பிரவேசிப்பார்கள். மக்கள் உம்முடைய சமூகத்தில் காத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவர்களுடைய இருதயங்களை ஆராய்ந்து பாரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். என் சகோதரனே, என் சகோதரியே, என் நண்பர்களே! இப்பொழுது உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் மத்தியில் நான் வெகுகாலம் இருக்கின்றேன். ஏறக்குறைய முப்பத்து மூன்று வருடங்களாக நான் இருந்து வந்திருக்கிறேன். நான் கர்த்தரின் நாமத்தில் கூறின ஏதொன்றாகிலும் நிறைவேறாமல் இருந்திருக்கின்றதா? தருணமுள்ள பொழுதே கிறிஸ்துவைத் தேடுங்கள். அவ்விதம் செய்ய முடியாத தருணம் வெகு விரையில் வரக்கூடும். அவர் எந்த நேரத்திலும் தாம் வகித்துள்ள மத்தியஸ்த ஸ்தானத்தை விட்டுப் புறப்படக்கூடும். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் கதறினாலும், அன்னிய பாஷையில் பேசினாலும், அங்குமிங்கும் ஓடினாலும் எதை வேண்டுமானாலும் செய்தாலும், உலகத்திலுள்ள ஒவ்வொரு சபையிலும் சேர்ந்தாலும் ஒரு பிரயோஜனமுமிராது. ஏனெனில் உங்கள் பாவங்களைப் போக்க வெண்மையாக்கும் திரவம் அப்பொழுது இராது. அப்படியானால் உன் நிலை அப்பொழுது என்னவாயிருக்கும்? அவர் இன்னமும் தேவனுடைய சிங்காசனத்தில் வீற்றிருந்து பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்று என் முழு இருதயத்துடன் நம்புகிறேன். ஆனால் விரைவில் அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்து, அவர் மீட்டுக் கொண்டவர்களைச் சொந்தமாக்கிக் கொள்ளப் புறப்பட்டு வருவார். இப்பொழுது அவர் மீட்பின் இனத்தானின் ஊழியத்தில் ஈடுபட்டிருக்கிறார், ரூத் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள். போவாஸ் இனத் தானின் உத்தியோகத்தை நிறைவேற்றின பின்பு அவனுடைய உரிமை களைப் பெற்றுக் கொண்டான் என்று வேதம் கூறுகிறது. அவ்வாறே இயேசுவும் மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து முடித்த பின்னர், புறப்பட்டு வந்து புத்தகத்தை வாங்குகிறார். அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்துவிட்டபடியால், பரிந்துபேசும் ஊழியம் அப்பொழுது முடிவடைந் திருக்கும். கிருபாசனத்தில் அப்பொழுது இரத்தம் இராது. ஆகவே அது நியாயாசனமாக மாறிவிடும். என்றாவது ஒரு நாள் `எடுக்கப்படுதல் இனிமேல் நிகழும் என்று நான் நினைத்திருந்தேன்’ என்று நீங்கள் கூற, அது ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது என்று ஒரு சத்தம் உங்களிடம் பதிலுரைக்கும் நிலைக்கு வந்துவிடாதீர்கள். அதற்குத் தேவன் உங்களுக்கு உதவி புரிவாராக! நாம் தலை வணங்குவோம். சகோ. நெவில்! ஆராதனையை முடிப்பதற்கு, அல்லது என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வதற்கு, முன்னால் வாரும். நாளை இரவு நாம் மறுபடியும் சந்திக்கும்வரை கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ******* ஐந்தாம் முத்திரை மார்ச் 22,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா கர்த்தருடைய அன்பிற்காக அவருக்கு ஸ்தோத்திரம். ஜெபம் ஏறெடுக்க இப்பொழுது நாம் தலைவணங்குவோம். கிருபையுள்ள பரம தந்தையே, இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பி இக்கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியின் வல்லமையாக அவரை எங்களுக்கு அளித்திருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவனே, என்றென்றும் ஜீவிக்கும் தேவனுடைய இந்த மகத்துவமான சந்திப்புகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர் களாயிருக்கிறோம். இப்பொழுதும் பிதாவே, நாங்கள் வேறொரு முக்கியமான மணி நேரத்தில் வந்திருக்கிறோம். இந்த நேரம் ஒருக்கால் அனேகருடைய பாதைகளை மாற்றி நித்தியவழியில் அவர்களை நடத்தும் ஒன்றாக இருக்கக்கூடும். ஆண்டவரே, முத்திரைகளை அணுகுவதற்கு நாங்கள் தகுதியற்றவர்களா யிருக்கிறோம். ஏனெனில் ஆட்டுக்குட்டியானவர் அந்தபுத்தகத்தை வாங்கி முத்திரைகளை உடைப்பதாக நாங்கள் வேதத்தில் காண்கிறோம். ஓ! தேவ ஆட்டுக்குட்டியே, நீர் முன்வரவேண்டுமாய் நாங்கள் கெஞ்சுகிறோம். ஆண்டவரே, மகத்தான மீட்பராகிய உம்மை நோக்கிக் கூப்பிடுகிறோம். நீர் புறப்பட்டு வந்து, காலங்கள் தோறும் மறைக்கப் பட்டிருந்த உம் மீட்பின் திட்டத்தை எங்களுக்கு வெளிப்படுத்தித் தாரும். இன்றிரவு எங்களுக்காக ஐந்தாம் முத்திரையை உடைத்து, அதனுள் அடங்கியுள்ள இரகசியங்களை எங்களுக்கு வெளிப்படுத்தும். அப்பொழுது நாங்கள் இப்பொழுதுள்ளதைக் காட்டிலும் மேலான கிறிஸ்தவர்களாக இவ்விடம் விட்டு புறப்பட்டு, எங்களுக்கு முன் வைக்கப்பட்டுள்ள பணியை மேற்கொள்வதற்கு நாங்கள் இன்னும் அதிக தகுதியுள்ளவர்களாய் காணப்படுவோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இதை கேட்கிறோம். ஆமென். மாலை வணக்கம், நண்பர்களே, இன்றிரவு இந்த பெரிதான சம்பவத்தைக் குறித்து பேச வந்துள்ளதை நான் பெரிய சிலாக்கியமாகக் கருதுகிறேன். இராஜாவின் பணியைச் செய்வது போன்றுள்ள சந்தோஷத்தை நான் வேறெந்த பணியிலும் பெறமுடியாது. இப்பொழுது இப்பாடங்களைக் கற்றுக் கொள்வதற்கு நாம் காத்திருக்கிறோம். அவர் எனக்கு அதை வெளிப்படுத்தித் தராவிடில், நான் உங்களிடம் அதை எடுத்துக் கூற இயலாது. இதில் என் சுய சிந்தனைகளை உபயோகிக்க நான் முயல்வதில்லை - அவர் அதை எனக்கு அளிக்கும் விதமாகவே நான் உங்களிடம் கூறுகிறேன். என் சுய சிந்தனைகளை உபயோகிக்காமல், அது அளிக்கப்பட்ட விதமாகவே நான் அதை ஏற்றுக்கொள்வதால், என் வாழ்நாள் பூராகவும் அது தவறாகவே இருந்தது கிடையாது. ஆகவே, இம்முறையும் அது தவறாக இருக்க வழியில்லை. அவர் நமக்குச் செய்த எல்லாவற்றிற்காகவும் நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம் - ஜீவனுள்ள தேவனுடைய மகத்தான, அதிசயமான கரமே இதைச் செய்கின்றது. இராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமானவர் நம் மத்தியில் பிரசன்னராயிருப்பதைக் காட்டிலும் விசேஷித்த செயல் எது? நாம் எல்லாரைப் பார்க்கிலும் மிகவும் சிலாக்கியம் பெற்ற மக்களாயிருக்கிறோம். தேசத்தின் ஜனாதிபதி நம் பட்டினத்துக்கு வருவாரெனில், நாம் ஊதலை ஊதி, கொடியேற்றி, கம்பளங்களை விரிப்போம், அவரது வருகை நம் பட்டினத்திற்கு மதிப்பையளிக்கும். ஆனால், நம் சிறிய, தாழ்மையான கூடாரத்திற்கு வர ராஜாதி ராஜாவுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் என்பதைச் சற்று ஆலோசியுங்கள். கம்பளம் விரிப்பது அவருக்கு விருப்பமில்லை. அவருக்கு விரிப்பதற்கென்று தாழ்மையான இருதயங்களையே அவர் விரும்புகிறார். அங்ஙனம் செய்யும்போது, தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக அவர் சேமித்து வைத்திருக்கும் எல்லா நல்ல காரியங்களையும் அவர் அந்த இருதயங்களுக்கு வெளிப்படுத்துவார். இங்கு ஒரு சாட்சியைக் கூற விரும்புகிறேன். இப்பொழுது தான் அதை நான் சொல்லக் கேட்டேன். ஒருக்கால் அதை நான் சற்று தவறாகவும் உரைக்கலாம். ஆனால் அந்த சாட்சியைப் பற்றியவர்கள் இங்குள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, நான் இப்பொழுது தங்கியிருக்கும் அரிசோனா (Arizona) பட்டினத்தில் இருந்த போது, ஒரு சிறு பையன் கீலவாத ஜுரத்தினால் (Rheumatic fever) அவதியுறுகிறான் என்றும், அது அவனுடைய இருதயத்தைப் பாதித்துள்ளது என்றும் எனக்கு அறிவிக்கப்பட்டது. அவனுடைய பெற்றோர் எனது ஆப்த நண்பர்கள். அவர் நம் சபையில் ஒரு மூப்பராக இருக்கிறார். - சகோ. காலின்ஸ் (Bro. Collins). அவர் சிறிய பையன், மிக்கி (Mikie) (அவன் ஜோவின் விளையாட்டுத் தோழன்) இருதய கீல்வாத ஜுரத்தினால் அவதியுற்றான். வைத்தியர்கள் அவனை வீட்டுக்கு அனுப்பி வைத்து, அவன் படுக்கை யிலேயே படுத்திருக்க வேண்டுமென்றும், தண்ணீர் குடிப்பதற்கும் கூட அவன் எழுந்திருக்கக் கூடாதென்றும், ஒரு வைக்கோல் குழாய் (Straw) வழியாய் அவன் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றும் பெற்றோருக்கு உத்தரவிட்டிருந்தனர். அவனுடைய நிலைமை அவ்வளவு மோசமா யிருந்தது. அவன் பெற்றோர் நம் கூடாரத்திற்கு வரும் விசுவாசிகள். சில நாட்களுக்கு முன்னர், ஞாயிறன்று சுகமளிக்கும் ஆராதனை ஒன்று நடத்தப் போவதாக உங்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமெனக் கருதி, சுகமளிக்கும் ஆராதனை நடத்த வேண்டாமென்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் ஒரு சிறு விஷயத்தை மாத்திரம் என் இருதயத்துக்குள் தான் வைத்துக் கொண்டிருந்தேன். அந்த பையனின் பெற்றோர் என்னிடம் வந்து, அவனை கூடார அறைக்குள் கொண்டு வரலாமா என்று கேட்டனர். அவன் அங்கு கொண்டு வரப்பட்ட போது, அவன் சுகமடைந்து விட்டதாக பரிசுத்த ஆவியானவர் அறிவித்தார். பரிசுத்த ஆவியானவர் கூறியதை பெற்றோர் விசுவாசித்து, சிறுவனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினர். வைத்தியர் அதை அறிந்தார். அது அவருக்கு அதிருப்தியை உண்டாக்கியது. அவர் தாயாரிடம், சிறுவன் படுக்கையிலிருக்க வேண்டுமென்று மறுபடியும் கூறினார். அந்த அம்மாள் வைத்தியரிடம் நடந்ததை விவரமாகக் கூறினாள். அந்த வைத்தியர் ஏழாம் நாள்ஆசரிப்பு ஸ்தாபனத்தை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். அவர் தாயாரிடம், ‘சிறுவனை நான் பரிசோதித்தாவது பார்க்கட்டும்’ என்றார். அவர்களும் ‘மிக நல்லது’ என்று கூறி அவனை பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். வைத்தியர் மிகவும் அதிசயமுற்றார். என்ன செய்வதென்று அவருக்கு தெரியவில்லை. அந்த சிறு பையன் முற்றிலும் குணமடைந்து விட்டான். சகோதரி காலின்ஸ், நான் தவறாகக் கூறினேனா? அதோ, அந்த ஏழு வயது சிறுவனான மிக்கி காலின்ஸ், மூன்று நாட்களுக்கு முன்பு இந்த அறையில் சம்பவித்தது. ஓ! அந்த அறையில் மனிதரைத் தவிர வேறு யாராவது இருக்க வேண்டும். அவர் தான், தம் வார்த்தையை கௌரவிக்க அங்கு வரும் மகத்தான யேகோவா, இந்த சாட்சியைக் கேட்டதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் மாத்திரமல்ல, நீங்கள் எல்லோருமே நன்றியுள்ளவர்களாயிருக்கிறீர்கள் ஏனெனில் அது உங்கள் சிறுவனா யிருந்தால் என்ன, அல்லது என்னுடைய சிறுவனாய் இருந்தால் என்ன? நடந்த சம்பவங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தேர்ந் தெடுத்து, எனக்களிக்கப்பட்ட ஊழியம் தெய்வீக சுகமளிக்கும் ஊழியம் என்பதை வலியுறுத்தவே அவைகளைக் கூறுகிறேன். ஆனால் இப்பொழுது நான் முத்திரைகளின் இரகசியங்களை உங்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறேன் - சற்று பின்னர் நான் ஏன் இதைச் செய்கிறேன் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நான் ஒரு போதகனுமல்ல, நான் ஒரு வேதசாஸ்தர நிபுணனும் அல்ல. நான் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பவன். நான் ஆண்டவரை நேசிக்கிறேன். சென்ற இரவு இரத்த புற்று நோயால் அவதியுற்ற சிறு பெண் குணமடைந்ததை நாம் சாட்சியாகக் கூறினோம். அவளுடைய பெயரைப் பில்லி (Billy) எழுதிவைத்துள்ளார். அவள் மரிக்கும் தருவாயிலிருந்தாள். வாயின் வழியாக அவளுக்கு ஆதாரம் கொடுக்க முடியாமல், இரத்தக் குழாய்களின் வழியாக செலுத்தப்பட்டது. அவள் மிகவும் அழகுள்ளவள். அவளுடைய வயதுக்கு அவள் சிறியவளாகக் காணப்பட்டாள். அவளும் அவள் பெற்றோரும் உடுத்தியிருந்த ஆடைகளின் மூலம் அவர்கள் ஏழ்மையானவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் மிகவும் பயபக்தியுள்ளவர்கள். பரிசுத்த ஆவியானவர் அவள் சுகமடைந்து விட்டதாக அறிவித்தார். அவள்அவ்விடம் விட்டுச் செல்லுமுன், ஹாம்பர்கர் (ஒருவித மேற்கத்திய உணவு) வேண்டுமென்று அழுதாள். பரிசுத்த ஆவியானவரின், `கர்த்தர் சொல்லுகிறதாவது’ என்னும் தேவ வாக்கை அவள் பெற்றோர் கேட்டனர். அவர்கள் அன்னியர்களை. இதற்கு முன் அவர்கள் இங்கு வந்ததில்லை. வயது சென்ற ஒரு கணவன் - மனைவி, இவர்கள் திரும்பி செல்வதற்கு வேண்டிய பிரயாணச் செலவை ஏற்றனர். சகோ. கிட்டும் (Bro. Kidd) அவரது மனைவியும், அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றும் அவர்கள் எதைக் கவனமாய் கேட்க வேண்டு மென்றும் அவர்களுக்குப் போதித்தனர். அந்த சிறு பெண் திரும்பிப் போகும் வழியில் உணவு அருந்தினாள். இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவள் பள்ளிக்கூடம் சென்றாள். வைத்தியர் மிகவும் வியப்புற்றார். அவர், `அந்த பெண்ணின் உடலில் இரத்தப் புற்று நோயின் அடையாளம் சிறிதேனும் இல்லை’ என்றார். சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமை இரத்தத்தை அறவே சுத்திகரித்து, புது இரத்த அணுக்களைச் சிருஷ்டித்து, அதற்குப் புது ஜீவனை அளிக்க வல்லது. உங்கள் இரத்தத்தில்தான் உங்கள் ஜீவன் உள்ளது. அவர் பழைய இரத்த அணுக்களைப் போக்கி, புது அணுக்களைச் சிருஷ்டிக்க வல்லவர். சர்வ வல்லமையுள்ள தேவனின் சிருஷ்டிப்பின் செயல்தான், புற்றுநோயால் அவதிப்பட்ட அந்த பெண்ணுக்கு மஞ்சள் நிறமளித்த அந்த இரத்தத்தை சுத்திகரித்து, ஒரு புதிய இரத்த ஒட்டத்தைக் கொடுத்தது. (நான் இப்பொழுது உரைப்பது அவருடைய நாமத்திலல்ல, என்ன நேரிடுமென்று நான் விசுவாசிப்பதை உங்களிடம் கூறப்போகிறேன்). அன்று சபின்யோ கான்யானில் (Sabino Canyon) நடந்ததை ஆதார மாகக் கொண்டு நான் இதை சொல்லுகிறேன். சிருஷ்டி கர்த்தருடைய வல்லமையுள்ள மகத்துவத்தால் இழந்து போன அவயங்கள் திரும்பவும் அளிக்கப்படும் தருணம் அண்மையில் உள்ளது. அவர் ஒரு அணிலை - ஒரு முழு மிருகத்தை - தோன்றச் செய்யக் கூடுமானால் இழந்துபோன ஒரு சில அவயங்களை அவர் திரும்பவும் அளிக்க அவரால் நிச்சயம் முடியும், அவர் தேவன்! நான் அவரை நேசிக்கிறேன். இப்படி நாம் வெவ்வேறு பொருள்களின் பேரில் பேசிக் கொண்டே செல்கிறோம், பாவம்! ஜனங்கள் சுவர்களில் சாய்ந்த வண்ணமாயும், அறைகளிலும், கூடங்களிலும் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே, நாம் பேசவேண்டிய பொருளுக்கு நேரடியாக செல்வோம். இதை நான் கூற விரும்புகிறேன். எங்கும் பிரசன்னராயிருக்கும் அவருக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஐந்தாம் முத்திரையைக் குறித்து ஒன்றும் அறிந்திராத எனக்கு காலை விடிவதற்கு அரை மணிநேர முன்பு, நான் ஜெபம் செய்து கொண்டிருக்கையில் அதிசயவிதமாக அது வெளிப்படுத்தப்பட்டது.... நான் கடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஒரு சிறு அறையில், யாரையும் காணாமல் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு முறையும் வெளிப்பாடு வருவதற்காக காத்திருக்கிறேன், சாப்பிடும் நேரம் மாத்திரம் நான் ஒரு சில நண்பர்களிடம் சென்றுவிட்டு வருகிறேன். அந்த நண்பர்கள் யாரென்பதை நீங்கள் அறிவீர்கள் - அவர்கள் தான் சகோதரன் உட்டும் (Bro. Wood) அவர் மனைவியும், நான் அவர்களிடம் தங்கியிருக் கிறேன். அவர்களெல்லாரும் என்னை மிகவும் நன்றாக உபசரிக்கின்றனர். எனக்கு எவ்வித குறைவுமில்லை... நான் இப்பொழுது முத்திரைகளைக் குறித்த செய்தியை அளிக்க முயல்கிறேன். அது மிகவும் முக்கியமான தொன்றாகும். அது வெளிப்பட வேண்டிய தருணம் இதுவே என்பதை நான் முற்றிலும் நம்புகிறேன். இந்த ஏழு முத்திரைகளில் நீங்கள் புரிந்துகொள்ள முடியாத ஏதாவதொன்று இருப்பின், அதை எழுதி இந்த மேசையின் மேல் வைத்து விடுங்கள். அதற்கென்று சகோ. நெவில் ஒரு பெட்டியை இங்கு வைப்பார் என்று நினைக்கிறேன்.... அது இங்கு இருப்பதை நான் காண்கிறேன். இன்றிரவே உங்கள் சந்தேகங்களை எழுதி சமர்ப்பித்து விட்டால், அவைகளைப் படித்து ஞாயிறன்று பதிலளிக்க எனக்குப் போதிய அவகாசம் உண்டாகும். இப்பொழுது, `பரிசுத்த ஆவியைப் பெறுவதன் அடையாளம் இதுவா?’ போன்ற நம் பொருளுக்குப் புறம்பான கேள்விகளைக் கேட்கவேண்டாம். முத்திரைகளை யொட்டி நான் உங்களுக்குப் போதித்தவைகளில் மாத்திரம் நீங்கள் கேள்வி கேட்டால் நலமாயிருக்கும். பிணியாளிகளுக்கு நாம் ஜெபிக்கும்போது நான் வேறு விதமான ஜெபத்தை ஏறெடுப்பதுண்டு. அப்பொழுது நான் அபிஷேகம் பெறுவேன். அதன் நோக்கமே வேறேயாகும். நாம் ஆண்டவரைத் தேடி, `சொஸ்தமாவதற்கு யாராவது இன்றிரவு இருக்கிறார்களா?’ என்று கேட்பேன். அப்பொழுது அவர், `ஆம் வலது பாகத்தின் மூலையில் உட்கார்ந்துகொண்டு, மஞ்சள் நிறமுள்ள ஆடைய அணிந்திருக்கும் அந்த பெண்மணி, அவளை அழைத்து, அவளிடம் அவள் இன்னின்னதைச் செய்தாளென்றும், அவளுக்கு இன்னின்ன வியாதி உண்டு என்றும் சொல்’ என்பார். அங்கு நான் சென்று காணும்போது, அந்தப் பெண் அங்கு உட்கார்ந்திருப்பாள். ஆனால் முத்திரைகள் வெளிப்படுவதற்கென நான் ஏறெடுக்கும் ஜெபம் அதனின்று வித்தியாசப்பட்டது. நான், `கர்த்தராகிய இயேசுவே, இந்த முத்திரைகளின் அர்த்தம் என்ன? அதை எனக்கு வெளிப்படுத்தும்’ என்று இப்பொழுது ஜெபித்துக் கொண்டு வருகிறேன். இப்பொழுது நாம் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவனுடைய வார்த்தையை மறுபடியும் எடுத்துக் கொள்வோம். எனக்குப் பின்னால் இருந்து ஜெபம் ஏறெடுத்து என்னை ஆவிக்குரிய விதத்தில் தாங்கி வரும் சகோ. நெவில்லின் சகோதர அன்பை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். அவ்வாறே ஜெபத்தில் என்னைத் தாங்கும் உங்களுக்கும் என் நன்றி. இன்றிரவு - வெள்ளியிரவு - நாம் சுருக்கமாக முடிக்க முயல்வோம். ஐந்தாம் முத்திரையில் அடங்கியுள்ள எல்லாவற்றையும் கூறுவது இயலாது. ஏனெனில் ஒரே முத்திரையை நாம் அனேக மாதங்கள் வியாக்கியானம் செய்தாலும், அப்பொழுதும் அதில் அடங்கியுள்ள எல்லாவற்றையும் பேசி முடிக்க இயலாது. ஏனெனில் ஒவ்வொரு முத்திரையும் ஆதியாகமம் தொடங்கி வெளிப்படுத்தின விசேஷம் முடியவுள்ள வேதவாக்கியங்கள் அனைத்தோடும் பொருந்துவதாயிருக்கிறது. ஆகவே, இப்பொழுது நாம் தியானிக்கவிருக்கும் பொருளை விட்டு விட்டு அதிகம் அகன்று போகாதவாறு, நான் சில வேதவாக்கியங்களைக் குறித்து வைத்துக் கொண்டு அதில் நிலைகொள்வேன். அதுதான் சரியான விதம் என்று நான் நினைக்கிறேன். நான் பொருளை விட்டு அகன்று போவதைக் கண்டால், நான் அதைவிட்டு மறுபடியும் பொருளுக்கு வர எண்ணி, வேறொரு வேதவாக்கியத்தை உங்களிடம் கூறி பொருளுக்கு வர முற்படுவேன். இன்றிரவு தேவ ஒத்தாசையையும் கிருபையையும் முன்னிட்டு நாம் ஐந்தாம் முத்திரையைப் படிக்கப் போகிறோம். அது சிறியது. ஆனால் மற்றவைகளைக் காட்டிலும் இது சற்று நீளமுள்ள நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்யும் ஒவ்வொருவருக்கும் இரண்டிரண்டு வசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த முத்திரை மூன்று வசனங்களைக் கொண்டதாயிருந்தது. ஐந்தாம் முத்திரை வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 9-ம் வசனம் முதல் தொடங்குகிறது. நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்பவர்களைக் குறித்த வியாக்கியானத்தைக் கேட்காதவர் இங்கிருந்தால்.... சில சமயங்களில் நாம் இதற்கு முன் சிந்தித்தவைகளை மறுபடியும் கூறவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அவ்விதம் செய்யும்போது, அதை சரிவர புரிந்து கொள்ளாதவர்கள் அதைப் புரிந்து கொள்ள ஏதுவாகிறது. இதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் யாராகிலும் இருந்தால், சற்று பொறுத்துக் கொண்டு, இவை பதிவு செய்யப்பட்டுள்ள ஒலிநாடாக்களை வாங்கிக் கேளுங்கள், அதனால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஏனெனில் எனக்கு இவை ஆசீர்வாதமாக அமைந்துள்ளன. இபொழுது 9ம் வசனம் முதல் 11ம் வசனம் முடிய வாசிப்போம். எல்லாரும் ஆயத்தமா? அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவ வசனத்தினி மித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களைப் பலி பீடத்தின் கீழே கண்டேன். அவர்கள், பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத் தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் கொஞ்சக் காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இது ஒரு பரம இரகசியமாயிருக்கிறது. ஒலிநாடாவில் பதிவு செய்ய வேண்டுமென்று இதைக் கூறுகிறேன். இங்கு வீற்றிருக்கும் குருமார்களே, போதகர்களே, இப்பொழுது நாம் பிரசங்கிக்கப் போவதைக் காட்டிலும் வேறுபட்ட கருத்தை நீங்கள் கொண்டிருப்பீர்களானால், நானும் அத்தகைய கருத்தையுடையவனாயிருந்தேன். ஆனால் இதைக் குறித்து எனக்குக் கிடைத்த தேவ வெளிப்பாடு, நான் கொண்டிருந்த கருத்தை முற்றிலும் மாற்றினது. இது வெளிப்படும் போது, சபையின் காலங்களைப் பற்றிய வேத வாக்கியங்களின் வியாக்கியானம் இதனுடன் பொருந்துவதை நாம் காணலாம். ஆகவே தான் இவ்வெளிப்பாடு தேவனிடமிருந்து வந்துள்ளது என்பதை நானறிவேன். சில சமயங்களில், சில பிரக்கியாதி வாய்ந்த போதகர்கள் அளிக்கும் செய்திகள் உண்மையென நம்பி அவைகளின் பேரில் நாம் சார்ந்திருக் கிறோம். அந்த போதகர்களை நான் குற்றப்படுத்துகிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் பாவத்தையும், அவிசு வாசத்தையும் தவிர வேறுயாரையும் குற்றப்படுத்துவது கிடையாது. சிலர் என்னிடம், `நீங்கள் ஸ்தாபனங்களைக் குற்றப்படுத்துகிறீர்’ என்று கூறுகின்றனர். இல்லை, நான் ஸ்தாபனங்கள் அனுசரிக்கும் முறைமைகளைக் குற்றப்படுத்துகின்றேனேயல்லாமல், அதிலுள்ள மக்களைக் குற்றப்படுத்துவதில்லை. இந்த விஷயத்தில் கத்தோலிக்க ஸ்தாபனங்களையும் பிராடெஸ்டெண்ட் ஸ்தாபனங்களையும் நான் ஒரே மாதிரியே குற்றப்படுத்துகிறேன். என் மிக சிறந்த நண்பர்களில் சிலர் கத்தோலிக்கர்களாயிருக்கின்றனர். ஒரு ரோமன் கத்தோலிக்கர் எனக்காக நியாய ஸ்தலத்தில், வேறு யாரும் செய்யக்கூடாத விதத்தில் வாதாடியதன் காரணத்தால் தான் இந்த கூடாரத்தை நாம் கட்டி முடிக்கமுடிந்தது, அவர் ஒருக்கால் இங்கு அமர்ந்திருக்கலாம், அவர் நியாய ஸ்தலத்தில் கூறியதை யாருமே மறுக்க முடியவில்லை. நியாய ஸ்தலத்தில், `அந்த கூடாரத்தில் அதிகம் பேர் உட்காருவார்கள்’ என்று வாதிக்கப்பட்டது. அவரோ, `இன்னும் எண்பதுபேர் அதிகமாயிருந்தால் அதினாலொன்றும் பாதகமில்லை’ என்றார். மேலும் அவர், `அந்த கூடாரம் அங்கு கட்டப்பட்டிருக்கிறது, அதன் போதகரை நானறிவேன். நீங்களெள்லாரும் உங்கள் சபையாரின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போகலாம். அவர் மாத்திரம் செய்யக் கூடாதா?’ என்று வாதாடினார்.ஆம், ஐயா, அவர் ஒரு ரோமன் கத்தோலிக்கர்; எனக்கு அவர் மிகவும் நல்ல ஒரு நண்பன். ஒரு கத்தோலிக்க வாலிபன், எனது ஆப்த நண்பன், ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அவர் இரும்பு சாமான்கள் விற்கும் கடை ஒன்றை வைத்திருந்தார். அவர் என்னிடம், `பில்லி, எங்கள் மார்க்க முறையில் உமக்கு விசுவாசமில்லையென்பதை நானறிவேன். ஆனால் ஒரு விஷயத்தை உம்மிடம் கூற விரும்புகிறேன். நீர் எங்களுக்காக ஏறெடுத்த ஜெபத்தை ஆண்டவர் அங்கீகரித்திருக்கிறார். ஆகவே, இத்தேசத்தில் உமக்கு எங்காகிலும் தொந்தரவு நேர்ந்தால், தேசத்திலுள்ள எல்லா கத்தோலிக் கர்களும் உம்மைப் பாதுகாக்க வருவார்கள்’ என்றார். அவர் கூறின வண்ணமாகவே கூறினால், `சிலுவையை முதுகில் சுமந்த ஒவ்வொரு வனும் (Cross back) என்று அவர் கத்தோலிக்கர்களைக் குறிப்பிட்டார். ஆதி கிறிஸ்தவர்கள் சிலுவையை முதுகில் சுமந்து சென்றனர் என்பதை நாம் சரித்திரத்தின் வாயிலாக அறியலாம். இன்றைய கத்தோலிக்கர், அவர்கள் தாம் ஆதி கிறிஸ்தவர்கள் என்று உரிமை கோருகின்றனர். ஒரு வகையில் அது உண்மைதான், ஆனால் ஸ்தாபன முறைமைகள் அவர்களை வழி விலகச் செய்தது. கத்தோலிக்கர், யூதர்கள் இவர்களெல்லாரும் நாம் பிறந்த மானிடவர்க்கத்திலேயே பிறந்தவர்கள். அவர்களும் நம்மைப் போலவே புசிக்கின்றனர், குடிக்கின்றனர், உறங்குகின்றனர், மற்றவர்களை நேசிக்கின்றனர்.ஆகவே தனிப்பட்ட நபர்களை நாம் குறை கூறக்கூடாது. அவ்வாறு தனிப்பட்ட நபர்களை குறைக் கூறக் கூடாது என்றாலும், போதகன் என்ற முறையில், அவர்களை விழுங்கும் சர்ப்பத்தை நான் தாக்க வேண்டியதாயிருக்கிறது. அது நான் தேவனிடத்திலிருந்து பெற்றுள்ள ஊழியமாயிருப்பதால், அப்படிச் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன். அதில் நான் உண்மையாயும் விசுவாசமுள்ளவனாயும் நிலைத்திருக்க வேண்டும். ஆனால் கத்தோலிக்கர், யூதர், முகம்மதியர், கிரேக்கர், கிரேக்க வைதீக சபையைச் சேர்ந்தவர் இவர்களில் யாராவது ஜெபம் செய்து கொள்ள இங்கு வந்தால், என்னுடையவர்களுக்கு உத்தமமாய் நான் ஜெபம் செய்வது போன்றே அவர்களுக்கும் ஜெபம் செய்வேன் என்பது நிச்சயம். ஏனெனில் அவர்களெல்லாரும் மனிதப் பிறவிகள், நான் புத்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஷீயாக்களுக்கும், ஜைனருக்கும், முகம்மதியர் களுக்கும் இன்னும் அனேகருக்கும் ஜெபம் செய்திருக்கிறேன். அவர்கள் ஜெபம் செய்து கொள்ள வரும்போது, நான் அவர்களை எவ்வித கேள்வியும் கேட்பது கிடையாது. நான் அவர்களுக்கு ஜெபம் மாத்திரம் செய்வேன். ஏனெனில் சுகமடைந்து, ஜீவியத்தை சற்று இலகுவாக்கிக் கொள்ள எத்தனிக்கும் மனித பிறவிகள் அவர்கள். இங்கு குறைந்தபட்சம், வேதத்தை நன்குகற்றறிந்த இரண்டு மூன்று வேதசாஸ்திரிகள் இருக்கிறார்கள் என்று நானறிவேன். அவர்கள் மிகவும் புத்திசாலிகள். இப்பொருளின் பேரில் மற்றவர்கள் போதித்தவைகளை அவர்கள் நன்கு கற்றறிந்துள்ளனர். இத்தகைய போதகர்களை நான் குறை கூறுகிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்துவதை மாத்திரம் நான் உங்களிடம் கூறுகிறேன். அவ்வளவுதான். ஒரு வண்ணாத்தியோ அல்லது உழவன் ஒருவனோ தேவனுடைய வெளிப்பாட்டைப் பெற முடியாது என்று நாம் நினைக்கக் கூடாது. ஏனெனில் தேவன் தம்மை எளிமையில் வெளிப்படுத்துகிறார். இதை நாம் ஞாயிறன்று நிகழ்ந்த தொடக்க ஆராதனையில் பார்த்தோம். அது தான் தேவனை மகத்துவமுள்ளவராக ஆக்குகின்றது. அதை நாம் சற்று விமர்சனம் செய்வோம். தேவன் எளிமையில் தம்மை வெளிப்படுத்துவது தான் அவரை மகத்துவமுள்ளவராகச் செய்கின்றது. தேவன் மகத்துவமுள்ளவர். உலகம் அவரைக் கண்டுகொள்ளக் கூடாத அளவுக்கு அவர் தம்மை எளியவிதத்தில் வெளிப்படுத்த முடியும், கவனியுங்கள். இதுதான் இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாட்டில் அடங்கியுள்ள பரம இரகசியம். தேவனைக் காட்டிலும் மகத்துவமுள்ளவர் யாருமில்லை. ஆனால் அவர் தம்மை எளியவராக்கும் நிலைக்கு யாரும் அவர்களை எளியவர்களாக்கிக் கொள்ள முடியாது. அதுதான் அவரை மகத்துவம் உள்ளவராகக் செய்கின்றது. ஒரு பெரிய மனிதன் ஒருக்கால் சற்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு, `நீ எவ்வாறிருக்கிறாய்’ என்று கேட்கலாம். ஆனால் அவர் தம்மை மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தாழ்த்திக்கொள்ள முடியாது. அவர் ஒரு மனிதன். ஆகவே தாழ்ந்த நிலைக்குத் தாழ்த்திக்கொள்ள அவர் முயன்றாலும். `மற்றவர்கள் இவ்விதம் கூறியுள்ளார்கள்’ என்று அவர் சொல்வதன் மூலம் அவர் தம்மை உயர்த்திக் கொள்கிறார். ஆனால் நமது உயர்ந்த நிலைமை தேவனுடைய பார்வையில் தாழ்மையுள்ளதாய் காணப்படுகிறது. இவ்வுலகிலுள்ள கல்விமான்கள் தங்கள் ஞானத்தால் அவரைக் கண்டுகொள்ள முயல்கின்றனர். அவரைக் கணிதத்தில் மூலமாகவோ அல்லது வேறெதன் மூலமாகவோ விளங்கிக் கொள்ள விரும்பினால், ஒரு குற்றவாளியும் கூட கண்டு கொள்ளக்கூடிய அளவில், அவர் தம்மை மிகவும் சுலபமான விதத்தில் வெளிப்படுத்துகிறார் என்பது நினைவிருக் கட்டும். பேதையர் திசைகெட்டுப் போவதில்லை என்று ஏசாயா 55-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞானவான்கள் தங்கள் ஞானத்தினால் அவரைக் கண்டுகொள்ள விரும்பி, அதன் விளைவாக அவரை விட்டு அகன்று செல்கின்றனர். இதை மறந்துபோக வேண்டாம். நான் கூறுவது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படு கின்றது. ஞானவான்கள் ஞானத்தினால் அவரைக் கண்டுகொள்ள முயன்று, அவரைக் காணத் தவறுகின்றனர். எளியவர்கள் ஆவதற்குத் தகுதியுள்ள பெருந்தன்மை அவர்களிடமிருந்தால், அவர்கள் அவரைக் கண்டுகொள்வார்கள். நான் கூறுவது உண்மை என்பதை அறிவீர்களா? நான் பெரியவர் களையும், பெரிய அரசர்களையும் சக்கிரவர்த்திகளையும் சந்தித்திருக் கிறேன். அவர்களெல்லாரும் பெரிய மனிதர்கள். அதே சமயத்தில் தங்களைப் பெரியவர்களென்று எண்ணிக்கொண்டு, அவர்களாலன்றி உலகமே இயங்காது என்று கருதும் பெருமைக்காரர்களையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் உண்மையில் ஒரு பெரிய மனிதன் உங்களை உபசரித்து, நீங்கள் பெரியவர்கள் என்று நினைக்கும்படி செய்வான். அவன் அவ்வளவாக அவனைத் தாழ்த்திக் கொள்கிறான். பாருங்கள், தேவன் மிகவும் மகத்துவமுள்ளவரானபடியால், மனிதன் இறங்கக்கூடாத நிலைக்கு அவர் தம்மை தாழ்த்துகிறார். இப்பொழுது அவர்கள் வாலிபரை வேதாகமப் பள்ளிகளுக்கு அனுப்பி பட்டம் பெறச்செய்து அதன்மூலம் அவரைக்கண்டு கொள்ள விழைகின்றனர். வேத சாஸ்திர போதகங்கள் மூலமாகவும், கல்வித் திட்டங்களின் மூலமாகவும், ஸ்தாபன திட்டங்களின் மூலமாகவும், ஆலயத்தை அழகு படுத்துவதன் மூலமாகவும் அவரைக் கண்டுகொள்ள அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அவர் அங்கெல்லாம் இல்லை. இப்படிச் செய்வதனால், நீங்கள் அவரை விட்டு அகன்று சென்று விடுகிறீர்கள். எளியவர்களாவதற்குத் தக்க உயர்வு அவர்களிடமிருந்தால், அவரை அந்நிலையில் கண்டுகொள்வார்கள். ஆனால் நீங்கள் ஞானத்தைத் தேடிச் செல்லும் காரணத்தால், அவரை விட்டு அகன்று செல்கிறீர்கள். நீங்கள் இதை காணாமல் இழந்து போகக் கூடாது என்று கருதி நான் மறுபடியும் இதை வலியுறுத்துகிறேன். ஏதேன் தோட்டத்தின் காலம் தொடங்கி, மோசேயின் காலத்திலும், நோவாவின் காலத்திலும், கிறிஸ்துவின் காலத்திலும், யோவானில் காலத்திலும், அப்போஸ்தலரின் காலத்திலும் இந்நாள் வரைக்கும் அவரை ஞானத்தினால் கண்டுகொள்ள முயன்றவர் அவரை விட்டு அகன்றுதான் சென்றிருக்கின்றனர். அதை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அதை விசுவாசித்து அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். அனேக காரியங்கள் எனக்குப் புரியாமலேயே இருக்கின்றன, இங்கு உட்கார்ந்திருக்கும் வாலிபர் நான் உண்ணும் ஆகாரத்தையே உண்கிறார். ஆனால் அவர்களுக்கு மாத்திரம் மயிர் வளர்ந்திருப்பது எப்படியென்று எனக்குப் புரியவில்லை. ஆனால் நானோ வழுக்கையாயிருக்கிறேன். சுண்ணாம்புச் சத்து மயிர் வளரச் செய்கிறது என்கின்றனர். ஆனால் என் நகங்களை நான் அடிக்கடி வெட்ட வேண்டியதாயிருக்கிறது. ஆனால் வெட்டுவதற்கு மயிரில்லை. இதை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. கறுப்பு நிறமுள்ள பசு, பச்சைப் புல்லைத் தின்று, வெள்ளைப் பாலை ஈந்து, அதனின்று மஞ்சள் வெண்ணெய் கிடைப்பது எப்படி? என்னும் ஒரு பழமொழி உண்டு. ஒன்று மற்றொன்றிலிருந்து உண்டாகிறது. இதன் காரணம் என்னவென்று யார் சொல்ல முடியும்? ஒரே இனத்தைச் சேர்ந்த லீலிச் செடிகளில் ஒன்றில் சிவப்பு நிறமுள்ள பூக்களும், மற்றொன்றில் மஞ்சள் நிறம் கொண்ட பூக்களும், வேறொன்றில் நீல நிறமுள்ள பூக்களும் உண்டாகும் காரணத்தை யார் விவரிக்க முடியும்? அது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரே சூரிய வெளிச்சம்தான் அவைகளின் மேல் படுகின்றது. ஆனால் வெவ்வேறு நிறங்கள் எங்கிருந்து வந்தன? அதை நாம்புரிந்துகொள்ள முடியாது. ஆனால் அந்த உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வுலகம் எப்படி சூரியனைத் சுற்றுகிறது என்பதை ஏதாவதுதொரு கீர்த்திபெற்ற வேத சாஸ்திரி விவரிக்க விரும்புகிறேன். ஒரு பந்தை நீங்கள் ஆகாயத்தில் எறிந்து, அது ஆகாயத்திலேயே இன்னொரு முறை சுற்றச் செய்ய உங்களால் கூடுமா? ஆயினும் பூமி சுற்றுதல் பிழையின்றி சரியான விதத்தில் அமைந்திருப்பதால், இருபது வருடங்கள் கழித்து சூரிய கிரகணம் எந்த நிமிடத்தில் உண்டாகுமென்று சரியாக நாம் கூறலாம். அவைகளுக்கு கடிகாரமோ வேறெந்த இயந்திரமோ இல்லை. ஆனாலும் எவ்வித பிழையுமின்றி அவை சரியாக சுற்றிக்கொண்டே இருக்கின்றன. `வட்ட அமைப்பில் சுற்றுவதைச் சற்று நேராக ஆக்கினால் என்ன?’ என்று நீங்கள் நினைக்கலாம். அவ்விதம் செய்ய முயன்றால், நீங்கள் மூடர்களாவீர்கள். ஆகவே, ஞானத்தினால் எதையும் புரிந்துகொள்ள முயல வேண்டாம். அவர் கூறுவதை அப்படியே விசுவாசியுங்கள். நீங்கள் எளிமையுள்ளவர் களாகும்போது அதைக் கண்டு கொள்வீர்கள். அவர் தம்மை எளிமை யுள்ளவராக செய்துகொண்டதற்காக அவருக்கு நன்றி கூறுகிறேன். இப்பொழுது வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரம் 9-ம் வசனத்திற்கு வருவோம். அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவ வசனத்தினி மித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்ட வர்களுடைய ஆத்துமாக்களை பலிபீடத்தின் கீழே கண்டேன். ஐந்தாம் முத்திரை திறக்கப்படுவதை அறிவிக்க ஒரு ஜீவன் இங்கு இல்லை. ஆனால் முதல் நான்கு முத்திரைகளுக்கும் நான்கு ஜீவன்கள் இருந்தன. ஆனால் இங்கு எந்த ஜீவனும் இல்லை. அந்த நான்கு முத்திரைகள் உடைக்கப்பட்டபோதும், நான்கு ஜீவன்கள் ஒவ்வொன்றாக, `வந்து பார்’, `வந்து பார்’ என்று யோவானுக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, எந்த மிருகமும் அங்கில்லை. மிருகம் என்பது வல்லமையைக் குறிக்கிறது என்று நாமறிவோம். சபையின் காலங்களை நாம் படித்தபோது, முதலாம் ஜீவன் சிங்கத்திற் கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனித முகம் கொண்டதாகவும், நான்காம் ஜீவன் கழுகுக்கொப்பாகவும் இருந்ததென்றும், நான்கு வல்லமைகளைக் குறிக்கும் இந்த நான்கு ஜீவன்கள் வனாந்தரத்திலிருந்த ஆசரிப்பு கூடாரத்தின் மாதிரியையொட்டி அப்போஸ்தலர்களுடைய நடபடிகளின் புத்தகத்தைச் சூழ்ந்து இருந்தன என்று நாம் பார்த்தோம். நீங்கள் அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே அதை மறுபடியும் போதிக்க சமயம் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அதை நாம் வரைந்து காண்பித்தோம். வனாந்தரத்தில் உடன்படிக்கை பெட்டி எவ்வாறு காவல் காக்கப்பட்டதோ, அதே விதமாக இந்நான்கு ஜீவன்களும் சூழ நின்றுதேவனுடைய வார்த்தை நிறைவேறுவதைக் கவனித்துக் கொண்டிருந்தன. இஸ்ரவேல் கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்டிருந்த அடையாளத் தையும் நாம் அதனதன் ஸ்தானத்தில் பொருத்தினோம் எத்தனை பேர் ஏழு சபையின் காலங்களின் பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறீர்கள்? உங்களில் பெரும்பான்மையோர் - மூன்றில் இரண்டு பாகம் - கேட்டிருக்கிறீர்கள். அந்த ஜீவன்களின் தோற்றமும் இஸ்ரவேல் கோத்திரத்தாரின் அடையாளங்களும் ஒன்றே என்பதை கவனிக்கவும் பன்னிரண்டு கோத்திரத்தார் - ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று கோத்திரமாக - நான்கு பக்கங்களிலும் இருந்தனர். இந்த நான்கு ஜீவன்களும் நான்கு திசைகளிலிருந்து இஸ்ரவேல் கோத்திரத்தாரைக் காவல் காத்துக் கொண்டிருந்தன. அதன் பின்பு நாம் சுவிசேஷ புத்தகங்களுக்குச் சென்று, அந்தப் புத்தகங்கள் உடன்படிக்கைப் பெட்டியைப் பாதுகாக்கின்றன என்று பார்த்தோம். புது சபைக்கு அளிக்கப்பட்ட உடன்படிக்கையின் அடையாளமாக பரிசுத்த ஆவியானவர் பூமியில் இருக்கிறார் என்று நாம் கவனித்தோம். இயேசுவின் இரத்தம் பரிசுத்த ஆவியானவரை நமக்கு அனுப்பினது, நான்கு ஜீவன்களும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு அடையாளமாயிருக்கின்றன. அவைகளின் தன்மை நான்கு சுவிசேஷங்களின் தன்மைக்கு ஒத்ததாயிருக்கின்றது. ஒன்று சிங்கத்துடன் பேசினது, மற்றொன்று காளையுடனும், மற்றொன்று .......... நான்கு சுவிசேஷ புத்தகங்கள், இந்த நான்கு சுவிசேஷ புத்தகங்களும் பரிசுத்த ஆவியானவருக்குப் பாதுகாப்பாயிருக்கின்றன. ஆமென்! ஆறு வருடங்களுக்கு முன்னால், ஒரு பெரிய மனிதன் அப்போஸ்தலருடைய நடபடிகளின் புத்தகம் சபையின் சாரமாக (Scaffold) அமைந்துள்ளது என்று கூறினதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு அனேக முறை கூறப்படுவதை நான் கேட்டதுண்டு. ஆனால் ஒரு உயர்ந்த பதவியிலுள்ள அந்த போதகர் - அனேகர் படிக்கும் பிரபலமான புத்தகங்களை எழுதிய அவர் - அப்போஸ்தலருடைய நடபடிகள் சபையில் உபதேசிக்கப்படுவதற்கு உகந்ததல்ல என்று கூறும்போது .... அப்போஸ் தலருடைய நடபடிகள் சபைக்கு அஸ்திபாரமாய் அமைந்துள்ளது. அதன் சாரமாய் அல்ல. ஏனெனில் தேவனுடைய சபை அப்போஸ்தலருடைய உபதேசங்களை அஸ்திபாரமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளதென்று வேதம் கூறுகிறது. கிறிஸ்து அதன் மூலைக் கல்லாயிருக்கிறார். இந்த மனிதன் இவ்விதம் குறிப்பிட்ட போது, என் இருதயம் வெடித்து விடும் போலிருந்தது. அவ்விதம் அவர் கூறுவதில் யாதொரு வியப்பு மில்லை என்று முத்திரைகளைக் குறித்து ஆராயும் போது நானறிகிறேன். ஏனெனில் அது அவருக்கு வெளிப்படவில்லை. அவ்வளவுதான். அந்த நான்கு சுவிசேஷங்களும் அங்கு நின்று கொண்டு காவல் புரிகின்றன. நாம் மத்தேயு அதிகாரத்தில் (மத்தேயு சிங்கத்திற்கு அடையாளமாயிருக்கிறது) மத். 28.19ஐப் படித்து, அவர்கள் ஏன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தனர் என்று பார்த்தோம். ஆம், அந்த மத்தேயு சுவிசேஷம் அங்கு நின்று கொண்டு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ் நானம் என்னும் புனித விசுவாசத்தைக் காவல் புரிகின்றது. (நான் முத்திரைகளை விட்டு விட்டு சபையின் காலங்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறேன்.) கவனியுங்கள், ஐந்தாம் முத்திரையில், குதிரை மேல் சவாரி செய்பவன் இல்லை. அதை அறிவிக்க ஒரு ஜீவனும் அங்கில்லை. ஆட்டுக்குட்டி யானவர் அந்த முத்திரையை உடைத்தவுடன் யோவான் அதைக் காண்கிறான். அவ்வாறே ஆறாம், ஏழாம் முத்திரைகள் உடைக்கப்பட்ட போதும் அவைகளை அறிவிக்க அங்கு எந்த ஜீவனும் இல்லை. ஒரே ஆள் நான்கு வெவ்வேறு குதிரைகளின் மேல் சவாரி செய்த போது ஒரு வல்லமை அதை அறிவிக்கிறது. அவன் குதிரை மாறும் ஒவ்வொரு முறையும், ஒரு மிருகம் வந்து அந்த பரம ரகசியத்தை அறிவிக்கிறது. அவை ஒவ்வொன்றும் இரகசியமாகவே அமைந்திருந்தன. ஆனால் ஐந்தாம் முத்திரை உடைக்கப்படுதல் ஏன் அறிவிக்கப்பட வில்லை? கர்த்தராகிய இயேசு இன்று விடியற்காலை எனக்களித்த வெளிப்பாட்டின்படி, அது உடைக்கப்பட்ட போது, சபையின் காலங்கள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன. சபையின் காலங்களில் அந்திக் கிறிஸ்துவைப் பற்றிய இரகசியம் வெளிப்படுகிறது. அவன் கடைசி முறையாக எல்லா நிறங்களும் கலந்த மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து கேட்டிற்குச் செல்கிறான். (நாம் எக்காளங்களைக் குறித்துப் போதிக்கும் போது இவைகளைப் பார்க்கலாம். இப்பொழுது அதைப்பற்றி பேசத் தொடங்கினால், நாம் பேச வேண்டிய பொருளை விட்டு அகன்று விடுவோம்). ஆகவே தான் அதை அறிவிக்க அங்கு யாருமில்லை. ஆரம்பத்திலேயே நான் `எல்லாவற்றிற்கும் ஒரு காரணமுண்டு’ என்று உங்களிடம் கூறினேன். அந்த துளி மையைப் பற்றி நான் சொன்னது நினைவிருக்கிறதா? இது அறிவிக்கப்படாததற்கு நாம் காரணம் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு ஒரு காரணமுண்டு. அதை தேவனால் மாத்திரமே வெளிப்படுத்தித் தரமுடியும். ஏனெனில் எல்லாமே அவர் கரங்களில் உள்ளது. அவர் இதை வெளிப்படுத்தும் காரணம் என்னவெனில்.... மீட்பின் புத்தகத்திலிருந்து அந்திக்கிறிஸ்துவின் தன்மை என்னவென்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதாம்.... அதே சமயத்தில் சபை மேலே எடுக்கப்பட்டிருக்கும். இவை சபையின் காலங்களில் நிகழுவதில்லை. அது சரி. சபை அந்த சமயத்தில் எடுக்கப்பட்டிருக்கும். அது வெளிப்படுத்தல் 4ம் அதிகாரத்தில் எடுக்கப்பட்டு அதன் ராஜாவுடன் 19ம் அதிகாரத்தில் திரும்ப வரும். ஆனால் இந்த முத்திரைகள் முன்பு நடந்தவைகளையும், இப்பொழுது நடைபெறுபவைகளையும், இனி நடக்க விருப்பவைகளையும் அறிவிக்கின்றன. எனவே சபையின் காலங்களில் நடந்தவைகளையும் இம்முத்திரைகள் வெளிப்படுத்துகின்றன. குதிரைகளின் மேல் சவாரி செய்பவனின் நான்குகட்டங்களும் வெளியரங்கமாயின. அவைகளைத் தேவனுடைய நான்கு ஜீவன்கள் அறிவித்தன. இந்த நான்கு மிருகங்கள் நான்கு வல்லமைகளைக் குறிக்கின்றன. வேத அடையாளத்தின்படி மிருகம் வல்லமைக்கு எடுத்துக் காட்டாயிருக்கின்றது. அதை நாம் நன்கு அறிந்து கொள்ளவேண்டும். வேதத்தில் கூறப்பட்ட இந்நான்கு மிருகங்களும் மனிதரின்மேல் செலுத்தப்பட்ட நான்கு ஆதிக்கங்களைக் காண்பிக்கின்றன. தானியேல், ஒரு தேசம் ஆதிக்கத்திற்கு வருவதை ஒரு அடையாளமாகக் கண்டான். உதாரணமாக ஒரு கரடி அதன் பக்கத்திலுள்ள ஒரு விலா எலும்பைப் பிடித்துக் கொண்டிருப்பதாக அவன் கண்டான். வேறொரு தேசம் எழும்பும்போது அவன் வேறொரு அடையாளத்தைக் கண்டான் - ஒரு ஆட்டுக்கடா. வேறொரு ராஜ்யம் ஆதிக்கத்திற்கு வரும்போது அவன் அனேக தலைகள் கொண்ட ஒரு சிறுத்தையை அதற்கு அடையாளமாகக் கண்டான். பின்னர் பயங்கர பற்கள் கொண்ட ஒரு பெரிய சிங்கம் எல்லாவற்றையும் பட்சித்துப் போட்டது. அது வேறொரு ஆதிக்கத்தைக் குறித்தது. இந்த ஆதிக்கங்களில் ஒன்று நெபுகாத்நேச்சாரின் ராஜ்ய பாரமாயிருந்தது. தானியேல் இத்தகைய ராஜ்யபாரங்கள் எழும்புவதை தரிசனத்தில் கண்டான். ஆனால் இதையே நெபுகாத்நேச்சார் சொப்பனமாகக் கண்டான். தானியேல் சொப்பனத்தை விளக்கி அர்த்தம் கூறினான். அது அவன் கண்ட தரிசனத்துடன் சரியாய் ஒத்துப்போனது. ஆமென்! நாங்கள் இங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமுன்பு என்ன நேர்ந்தது தெரியுமா? ஆறு சொப்பனங்கள் உண்டாயின. அவை தரிசனத்துடன் சரியாய் ஒத்துப்போயின. ஒரு சொப்பனத்தின் அர்த்தத்தை விவரிப்பது தான் தரிசனம். ஒருவனுக்குத் தரிசனத்தைக் காணும் தன்மை இல்லாவிடில், தேவன் அவன் உறக்க நினைவில் (Subconscious) அவனுடைய பேசி அதைச் சொப்பனமாக வெளிப்படுத்துகிறார். கடைசி நாட்களில் அவர் மக்களுக்கு சொப்பனங்களையும் தரிசனங்களையும் அளிப்பதாக வாக்குறுதி செய்துள்ளார். நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது, சில காரியங்கள் உங்களுக்கு வெளிப்படுமாயின், அதுவே தரிசனமாகும். அப்பொழுது நீங்கள் நின்றுகொண்டு, என்ன நேர்ந்ததென்றும் என்னநேரிடப் போகிறதென்றும், நீங்கள் தரிசனத்தில் காண்பவைகளை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கின்றீர்கள். ஆனால் சொப்பனம் என்பது நீங்கள் உறங்கும் நிலையில் உங்கள் ஐம்புலன்களும் வேலை செய்யாமல், உறக்க நினைவில் (Subconscious) இருக்கும் பொழுது சம்பவிக்கும் ஒன்றாகும். சொப்பனம் நேரிடும்போது, நீங்கள் வேறெங்கோ செல்கின்றீர்கள். உங்கள் சுயநினைவுக்கு நீங்கள் வரும்போது, எங்கே சென்றிருந்தீர்கள் என்பதை நீங்கள் நினைவுகூருகிறீர்கள். அதை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் உறக்க நினைவில் சம்பவிக்கும் ஒன்றாகும். `நீங்கள் இல்லாத ஒன்றாக இருக்க முடியாது’ என்று உப்ஷா (Upshaw) என்னும் காங்கிரஸ்காரர் அடிக்கடி கூறுவார். அது முற்றிலும் உண்மையாகும். நீங்கள் ஞானதிருஷ்டிகாரராகப் (Seer) பிறந்தால், இரு நினைவுகளும் ஒருங்கே உங்களுக்கு இருக்க வேண்டும். தரிசனம் காண்பதற்கு மாத்திரம் ஐம்புலன்கள் கிரியை செய்யுமென்றும், சொப்பனம் காண்பதற்கு உறக்க நினைவுகிரியை செய்யாதென்றும் நீங்கள் சொல்ல முடியாது. இவ்விரண்டும் ஒருங்கே இருப்பதால், நீங்கள் உறங்கினால் தான் அவையுண்டாகும் என்று அவசியமில்லை. நீங்கள் ஒன்றிலிருந்து வேறொன்றுக்கு மாறிக் கொள்ளலாம். ஆகவே, தேவனுடைய கிருபை வரங்களும் அவர் அழைத்த அழைப்பும் தேவனால் முன் குறிக்கப்பட்டவை. அவை என்றும் மாறாதவை என்றும் வேதம் உரைக்கின்றது. அவை உலகத் தோற்றத்துக்கு முன்னாலே அளிக்கப்பட்டவை. தானியேல் புத்தகத்தில் கூறப்பட்ட மிருகம் ஒவ்வொன்றும் ஜனங்களுக் கிடையே எழும்பின ஒரு ஆதிக்கத்தைக் குறிக்கின்றது. அவ்வாறே யோவான் தரிசனத்தில் கண்ட மிருகங்களும் அவ்வப்போது எழுந்த ஆதிக்கத்திற்கு அடையாளமாயிருக்கின்றன. அமெரிக்காவும் வெளிப்படுத்தல், 13ம் அதிகாரத்தில் ஒரு ஆட்டுக் குட்டியாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் மிருகம் அரசியல் சம்பந்தமான ஆதிக்கத்தை மாத்திரம் குறிப்பதாக நீங்கள் எண்ணலாம். ஆனால் அது பரிசுத்த ஆதிக்கத்தையும் குறிக்கின்றது. ஆபிரகாமின் வேலைக்காரனான எலியேசர் ரெபேக்காளிடத்தில் வந்தபோது, அவன் சவாரி செய்து வந்த ஒட்டகத்திற்கு அவள் தண்ணீர் காட்டினாள். அவள் தண்ணீர் காட்டின அதே ஒட்டகத்தின்மீது அவள் சவாரி செய்து அவள் அதுவரை கண்டிராத மணவாளனைக் காணச் செல்கிறாள். அவள் தண்ணீர் காட்டின அதே மிருகம் அவளைத் தன் எதிர்கால வீட்டிற்கும் கணவனிடத்திற்கும் அழைத்துச் செல்கின்றது. இன்றைக்கும் அதுவே சம்பவிக்கிறது. சபை தண்ணீர் பாய்ச்சும் அதே வித்து - தேவனுடைய வார்த்தை என்னும் வித்து - உயிர்பெற்று அவளை அவள் கண்டிராத மணவாளனிடம் கொண்டு செல்கிறது. ரெபேக்காள் ஈசாக்கைக் காணும்போது அவன் தன்வீட்டை விட்டுப் புறப்பட்டு வயல்வெளியில் இருந்தான். அவ்வாறே சபையும் கிறிஸ்துவை ஆகாயத்தில் சந்தித்த பிறகு, அவர் அவளை மாளிகைக்குள், அவளுக் கென்று ஆயத்தம் செய்யப்பட்டுள்ள தம் பிதாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். என்ன அழகான பொருத்தம் பாருங்கள். ரெபேக்காளையும் ஈசாக்கு அவ்விதமே அழைத்துச் செல்கிறான். கவனியுங்கள். முதன் முறையாகக் காணும்போதே அன்பு உண்டாகின்றது. ஓ! ஈசாக்கைச் சந்திக்க ரெபேக்காள் ஓடோடிச் செல்கிறாள். அவ்வாறே சபையும் கிறிஸ்துவை ஆகாயத்தில் சந்தித்து அவருடன் சதாகாலமும் இருப்பாள். இப்பொழுது உங்கள் வேதாகமங்களைத் திருப்புங்கள். இந்த மிருகங்கள் ஆதிக்கத்தைக் குறிக்கின்றன. கவனியுங்கள், வெவ்வேறு நிறங்கொண்ட நான்கு மிருகங்கள் பிசாசுக்கு இருந்தன. அவைகளில் மங்கின நிறமுள்ள குதிரை முதன் மூன்று குதிரைகளின் நிறங்கள் ஒருங்கே கொண்டதாயிருந்தது - வெள்ளை குதிரை, சிவப்பு குதிரை, கறுப்பு குதிரை. அவை ஒவ்வொன்றும் அவனுடைய ஊழியத்தின் ஒரு கட்டத்தைக் குறிக்கின்றது. முதலாவது கட்டத்தில், பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டிருந்த மூலபெந்தகோஸ்தே சபை நிசாயாவில் அந்திக் கிறிஸ்துவின் ஆவியை ஏற்று ஒரு ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டது. பின்னர் அது ஸ்தாபன குமாரத்திகளைப் பிறப்பித்தது. அவன் மூன்று முறை தன் ஆதிக்கத்தை மாற்றிக் கொண்டு, நான்காம் முறையாக இந்த ஆதிக்கம் அனைத்தும் ஒருங்கே கொண்டு, மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் சவாரி செய்து, மரணம் என்று பெயரிடப்பட்டு, கேட்டுக்குச் செல்கிறான். அது மிகவும் வெளிப்படையாய் இருக்கிறதல்லவா? தேவனுக்கும் ஒரு குதிரையுண்டு. அவர் அதன்மேல் சவாரி செய்கிறார். அந்திக்கிறிஸ்து முதலில் தோன்றினபோது களங்கமற்றவனாய் காணப்பட்டு வெள்ளைக் குதிரையின்மேல் சவாரி செய்கிறான் - சபையில் ஒரு சிறுபோதகம். அவர்கள் ஐக்கியத்தை விரும்பினர். உங்கள் ஐக்கியம் கிறிஸ்துவுடன் இருக்கவேண்டும். ஆனால் அவர்களோ தங்களுக்குள்ளே ஐக்கியங் கொள்ள விரும்பி, இக்காலத்துப் போதகர்கள் `இனம் இனத்தோடு சேரும்’ என்று கூறுவது போன்று, அவர்கள் உட்பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டனர். ஆனால் நீங்கள் மறுபடியும் பிறந்த சகோதரராயிருந்தால், இத்தகைய மனப்பாங்கைப் பெற்றிருக்கமாட்டீர்கள். நம் சகோதரரில் தவறு ஏதேனும் காணப்பட்டால், நாம் அதை தேவ சமூகத்தில் வைத்து அவருக்காக ஜெபித்து, அவர் மறுபடியும் தேவனுடைய பிரசன்னத்தில் வரும்வரை அவரை நேசிப்போமாக, அவ்விதமாகத்தான் நாம் செய்யவேண்டும். களைகள் காணப்படுமென்று இயேசு கூறியுள்ளார். அவைகளைப் பிடுங்கும்போது, நாம் கோதுமையையும் பிடுங்கிடாதபடி அவைகளை வளரவிட வேண்டும். அதற்கேற்ற தருணம் வரும்போது, அவரே இவ்விரண்டையும் வெவ்வேறாகப் பிரிக்கட்டும். அதுவரை இவ்விரண்டையும் ஒன்றாகவே வளரவிடுங்கள். கவனியுங்கள், அந்திக் கிறிஸ்து மிருகத்தின் மீதேறி புறப்பட்டுச் சென்றபோது - அவன் ஒரு ஆதிக்கம். ஓ! இது எனக்கதிக பிரியம். நான், இப்பொழுது பக்திவசப்படத் தொடங்குகிறேன். அது ஊக்க உணர்ச்சி யினால் ஏற்படுகின்றது என்று நினைக்கிறேன். அந்த வெளிப்பாடு அந்த அறையில் தொங்கும் அக்கினிப் பந்து முன்னால் கிடைக்கப் பெறும்போது! ஓ சகோதரனே! அதை நான் சிறிய வயது முதல் கண்டு கொண்டேயிருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது என் அண்மையில் வரும்போது, எனக்குத் திகில் உண்டாகிறது. அவர் என்னை மயக்கத்துக்காகச் செய்கிறார். அதைக் கண்டு பழக்கம் கொள்ள முடியாது. அது மிகவும் புனிதமானது. கவனியுங்கள், அந்திக் கிறிஸ்து அவன் ஊழியமாகிய மிருகத்தின் மீதேறி சென்றபோது, அதனுடன் போரிட தேவன் ஒரு மிருகத்தை அனுப்புகிறார். ஒவ்வொரு முறையும் அந்திக்கிறிஸ்து, மிருகமாகிய குதிரையின் மேலேறிச் சென்று அவனது ஊழியத்தை அறிவிக்கும்போது, அதனுடன் போரிட தேவனும் அவருடைய மிருகத்தை அனுப்புகிறார். `வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்’ என்று வேதம் கூறுகின்றது. எனவே சத்துரு அந்திக் கிறிஸ்துவாகப் புறப்பட்டு சென்றபோது, அவனைச் சந்திக்க தேவன் ஒருவிதமான வல்லமையை அனுப்பினார். அவன் மறுபடியும் சிவப்பு குதிரையின் மேலேறி சென்றபோது, அவனுடன் போரிட்டு சபையைக் காத்துக்கொள்ள தேவன் வேறொரு ஜீவனை அனுப்பினார். அவ்வாறே அவன் மூன்றாம் முறை புறப்பட்டுச் சென்றபோது, தேவன் அதை அறிவிக்க அவருடைய மூன்றாம் ஜீவனை அனுப்பினார். அவன் நான்காம் முறை சென்றபோது, தேவன் அவருடைய நான்காம் ஜீவனை அனுப்பினார். அந்திக் கிறிஸ்துவின் காலம் முடிவடையும் போது, சபையின் காலமும் முடிவடைகிறது. இது மிகவும் நன்றாயிருக்கிறது. பிசாசு நான்கு மிருகங்களின்மேல் ஒன்றன்பின் ஒன்றாக மாறி அவன் பெற்றிருந்த வல்லமையை உலகத்துக்கு வெளிப்படுத்துகிறான். அது மங்கின நிறமுள்ள குதிரையுடன் முடிவடைகிறது. இப்பொழுது நாம் அவைகளை எதிர்த்த மிருகங்கள் கொண்டிருந்த தேவ வல்லமையை சற்று பார்ப்போம். அந்திக் கிறிஸ்துவின் ஆவியை எதிர்த்துச் சென்ற தேவனுடைய முதல் மிருகம்... அந்திக் கிறிஸ்து போதக ஊழியத்தை ஏற்று முதலில் புறப்பட்டுச் செல்கிறான் என்று கவனியுங்கள். அவனைச் சந்திக்கச் சென்ற மிருகத்தைக் கவனியுங்கள் - சிங்கம், யூதா கோத்திரத்துச் சிங்கமாகிய தேவனுடைய வார்த்தை . அந்திக் கிறிஸ்துவின் கள்ளப் போதகம் புறப்பட்டுச் சென்றபோது, அதை சந்திக்க உண்மையான வார்த்தை சென்றது. ஆகவே தான் அக்காலத்தில் ஐரினேயஸ், பாலிகார்ப், பரி, மார்ட்டின் போன்றவர் இருந்தனர். அந்திக் கிறிஸ்து அவனுடைய கள்ளப் போதகங்களைக் கொண்டவனாய் சவாரி செய்து கொண்டு சென்றபோது, பரிசுத்த ஆவியினால் வார்த்தையாக வெளிப்பட்ட யூதா கோத்திரத்துச் சிங்கமாகிய தேவன், அவருடைய வார்த்தையாகிய போதகங்களை அதற்கு எதிராக அனுப்பினார். அதன் காரணமாகவே ஆதி சபை சுகமாக்கும் வரங்களையும், அற்புதங்களையும், தரிசனங்களையும், வல்லமையையும் கொண்டதாய் இருந்தது. ஏனெனில் ஜீவனுள்ள வார்த்தை யூதா கோத்திரத்து சிங்க மென்னும் வடிவில் சவாரி செய்து அந்திக் கிறிஸ்துவோடு போரிட்டார். ஆமென்! தேவன் தம் வார்த்தையை அனுப்புகிறார். அந்திக்கிறிஸ்து கள்ளப் போதகத்தை அனுப்புகிறான். உண்மையான போதகம் கள்ளப் போதகத்துடன் போரிடுகிறது. இது முதலாம் சபையின் காலத்தில் நிகழ்ந்தது. அப்போஸ்தல சபை அவனைச் சந்திக்கப் புறப்படுகிறது. அந்திக் கிறிஸ்து அனுப்பின இரண்டாம் மிருகம் அவன் சவாரி செய்த சிவப்புக் குதிரையாகும். பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப் போடவும் யுத்தம் செய்யவும் அது அனுப்பப்பட்டது. அதை எதிர்க்கப் புறப்பட்ட மிருகம் காளையாகும். அது பாரம் சுமக்கும் ஒரு மிருகம். எனவே, அது உழைப்புக்கு அறிகுறியாயுள்ளது. இதை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்பதை நான் அறிந்து கொள்ளட்டும். இது சற்று குழப்பமுறச் செய்யும். தியத்தீரா சபையைக் குறித்து நாம் இப்பொழுது வேதத்தில் வாசித்து அது உழைக்கும் சபையாக இருந்ததாவென்று அறிந்து கொள்ளலாம். தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில், அக்கினி ஜூவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது, உன் கிரியைகளையும் (பாருங்கள், இச் சபை கிரியைகளைச் செய்கின்றது. ஏனெனில் அதனுடன் சவாரி செய்வது உழைக்கும் மிருகம்). உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமை யையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் (இரண்டாம் முறை கிரியைகள் என்று சொல்லப்பட்டிருக்கிறது) அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். (வெளி. 2.18,19). அது தான் தியத்தீரா சபையின் காலம். அந்திக் கிறிஸ்து தன்னை ஸ்தாபித்துக் கொண்டு தியத்தீரா சபையின் காலத்தையடைந்தபோது, அந்த சிறு சபை உழைப்பைத் தவிர வேறொன்றையும் செய்ய முடிய வில்லை. வேறொரு காரியம், காளை பலியிடப்படும் ஒரு மிருகமாகும். அக்காலத்து சபையோரும் தங்கள் ஜீவனைத் தாராளமாகப் பலியாகக் கொடுத்தனர். இருளின் காலங்களில் - கத்தோலிக்க மார்க்கம் உலகில் ஆதிக்கம் செய்த அந்த ஆயிரம் வருட காலத்தில் - விசுவாசிகள் அவர்கள் கொள் கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து, அதன் விளைவால் கொல்லப்பட்டனர். மரிப்பதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் எப்படியாயினும் மரித்தனர். அது தான் அக்காலத்து சபை யோரும் தங்கள் ஜீவனைத் தாராளமாகப் பலியாகக் கொடுத்தனர். இருளின் காலங்களில் - கத்தோலிக்க மார்க்கம் உலகில் ஆதிக்கம் செய்த அந்த ஆயிரம் வருட காலத்தில் - விசுவாசிகள் அவர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள மறுத்து, அதன் விளைவால் கொல்லப்பட்டனர். மரிப்பதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. அவர்கள் எப்படியாயினும் மரித்தனர். அது தான் அக்காலத்து ஜனங்கள் கொண்டிருந்த ஆர்வமாயிருந்தது. ஆகவே தான் ஐரினேயஸ், பாலிகார்ப், யோவான், பவுல் போன்ற மகத்தானவர்கள் அதனை எதிர்த்தனர். பவுல், `நான் போன பின்பு, கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வந்து, தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்’ என்றான். மிகவும் கண்டிப்பான அந்த வயது சென்ற அப்போஸ்தலன் வாரினால் அடிக்கப்பட்டதால் முதுகெல்லாம் வரித்தழும்புகள் கொண்டவனாய் கண்ணீர் விட்டுக் கொண்டு நிற்பதைப் பாருங்கள். அவன் கோடிக் கணக்கான மைல் தூரம் ஆகாய பரப்பின் வழியாக நித்தியத்தைக் காண முடிந்தது. கொடிதான ஓநாய்கள் வருமென்பதை அவன் முன்னறிவித் தான். வரப்போகும் காலங்களிலும் அது நிலைத்திருக்குமென்று அவன் சொன்னான். கவனியுங்கள், பரி, யோவான் எல்லோரைக் காட்டிலும் அனேக வருடங்கள் உயிர்வாழ்ந்தான். அவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டு நிரூபங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு வேதாகமமாக்க முயன்ற போது, ரோம அரசாங்கம் அவனைப் பிடித்து, பத்மூ தீவுக்கு நாடு கடத்தினது. தேவனுடைய வார்த்தையினிமித்தம் அவன் பத்மூ தீவில் இருந்தான். நிரூபங்களை மொழி பெயர்க்க பாலிகார்ப் அவனுக்கு உதவி செய்தார். அன்றொரு நாள், மரியாள் பாலிகார்ப்பின் தீரச் செயலையும், அவள் மூலமாக தேவன் உலகிற்களித்த இயேசு கிறிஸ்துவின் போதங்களை அவர் ஏற்றுக் கொண்டதையும் பாராட்டி எழுதின கடிதத்தை வாசித்துக் காண்பித்தேன். அதுபாலிகார்ப்புக்கு மரியாள் அவள் சொந்த கைப்பட எழுதின குறிப்பாகும். பாலிகார்ப் சிங்கங்களுக்கு இரையாகத் கொடுக்கப்பட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லை, அவர் சுட்டெரிக்கப்பட்டார். சிங்கத்தைக் கூண்டிலிருந்து அரங்கத்தில் விட காலதாமதமாகி விட்டபடியால், அவர்கள் ஒரு பழைய குளி அறையை இடித்துப் போட்டு, அந்த இடத்தில் அவரைச் சுட்டெரித்தனர். அவர் வீதியில் தலை குனிந்த வண்ணமாய் நடந்து கொண்டு வரும் போது, ரோம நூற்றுக்கதிபதி அவரிடம், `உங்களுக்கு வயது சென்று விட்டது. எல்லோரும் உங்களுக்கு மதிப்பு கொடுக்கின்றனர். இதை நீங்கள் ஏன் மறுதலிக்கக் கூடாது?’ என்று கேட்டான். அவர் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அப்பொழுது எங்கிருந்தோ ஒரு சத்தம் கேட்டது. அது எங்கிருந்து வந்தது என்று யாருமே அறிந்து கொள்ள முடியவில்லை. அது, `பாலிகார்ப், பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்றது. அவர் வார்த்தையில் நிலை நின்றார். அவரைச் சுட்டெரிப்பதற்கென்று கட்டைகளை அடுக்கும் போது, சங்கீதம் பரலோகத்திலிருந்து தொனித்துக் கொண்டே இறங்கி வந்தது. தேவதூதர்கள் அப்பாட்டுக் களைப் பாடினர். அவர் ஒரு முறை கூட கண் இமைக்கவில்லை. அவர் தைரியமுள்ள வீரர். அவர் நிலை நின்றார். காலங்கள் தோறும் இரத்த சாட்சிகள் துன்புறுத்தப்பட்டு மரணம் எய்தினர். அவர்கள் யார்? அவர்கள் தேவ ஆவியின் வல்லமையினால் நிரம்பினவர்கள். சபையே, ஒலி நாடாக்களில் இதை கேட்பவர்களே, இதை மறந்து போக வேண்டாம். தேவனுடைய வல்லமை ஒருவனுக்கு அளிக்கப்பட்டாலொழிய, அவன் என்னத்தைச் செய்ய முடியும்? தேவன் அவர்களுக்கு அனுப்பும் ஆவியின் மூலமாகவே அவர்கள் கிரியை செய்ய முடியும். அந்த ஆவி அவர்கள் மத்தியில் கிரியை செய்கின்றது. இதை நாம் சபை சரித்திரத்தின் வாயிலாகவும் முத்திரைகள் திறக்கப்படுவதன் மூலமாகவும் நிரூபிக்கலாம். சபை, தான் பெற்றிருந்த அபிஷேகத்தின் விளைவாக கிரியை செய்தது. அது இல்லாமல் அவர்களால் ஒன்றும் செய்ய முடிந்திராது. முதலாவதாக கெர்ச்சிக்கும் சிங்கம் - கலப்படமற்ற தேவனுடைய வார்த்தை, இரண்டாவதாக, தியத்தீரா காலத்தின் காளை, அது உழைக்கும் மிருகம் அல்லாமல், அது பலியிடப்படும் மிருகம். ரோமாபுரியிலுள்ள அந்த சிறு சபை ஆயிரம் வருடங்களாக இருளின் காலங்களில் துன்பம் அனுபவிக்கவில்லையா? ரோம சபையைச் சேராத யாவரும் உடனே கொல்லப்பட்டனர். அவர்கள் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் சென்று துன்பம் அனுபவிக்க வேண்டியதாயிருந்தது. மேசன்களே (Masons), உங்கள் கவனத்தைக் கோருகிறேன். சிலுவையின் அடையாளம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது தான் வேதாகமத்தைப் பாதுகாத்தது, அவர்கள் துன்பப்பட வேண்டியதா யிருந்தது - காளை. அது புறப்பட்டுச் சென்று ஜனங்களை இரத்தசாட்சிகளாக கொன்ற போது, அவர், `எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’ என்றார். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் மனப்பூர்வமாய் அங்கு சென்று மரித்தனர். அதைக் குறித்து அவர்கள் சிறிதேனும் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் அந்த சபைக்கு அருளப்பட்ட ஆவி பலியும் உழைப்பும் தான். அவர்கள் தேவனுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, சுயாதீனமாக அங்கு நடந்து சென்று, தியாகம் செய்யும் வீரர்களாக மரித்தனர். அங்ஙனம் மரித்தவரின் எண்ணிக்கை ஆறு கோடியே எண்பது இலட்சம் என்று எழுதப்பட்டுள்ளது. காளை - பலி. இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? சரி, அந்த ஆயிரம் வருட காலத்தில் நேர்ந்த எதிர்ப்பை பலியின் மூலமாகத்தான் சமாளிக்க முடியும். பிசாசினின்று புறப்பட்ட மூன்றாம் மிருகம் கறுப்புக் குதிரை. அந்த வல்லமையை எதிர்க்கச் சென்ற தேவனுடைய மூன்றாம் மிருகம் மனித முகம் கொண்டதாயிருந்தது - தேவனுடைய ஞானத்தைப் பெற்ற புத்திசாலிகளான மனிதர். மனிதன் மிருகத்தைக் காட்டிலும் புத்திசாலி என்று நீங்கள் அறிவீர்கள். அவன் மிருகத்தை சாமார்த்தியமாய் தோற்கடிக்க முடியும். மனிதன் என்பவன் தந்திரமுள்ளவன், புத்திசாலி. இருளின் காலங்களில் அந்திக் கிறிஸ்து கறுப்பு குதிரையின் மேலேறி ஜெபம் ஏறெடுக்கப்படுவதற் கெல்லாம் காசு வசூலித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த மிருகத்தை எதிர்க்கச் சென்ற மிருகம் மனித முகம் கொண்ட தாயிருந்தது - கல்வி கற்று,அக்காலத்துக்குரிய தேவ ஆவியினால் அபிஷேகம் பெற்ற ஞானமுள்ள மனிதர், அவர்கள் தேவனுடைய ஞானத்தைப பெற்றவர்களாயிருந்தனர். அதுதான் சீர்திருத்த காலம் - மார்டின் லூதர், ஜான் வெஸ்லி, ஸ்விங்கிலி, தாக்ஸ், கால்வின் போன்றவர் வாழ்ந்த காலம். அவர்கள் சாமார்த்தியமுள்ளவர்களாய் இருந்தனர். சாத்தானின் மூன்றாம் மிருகம் புறப்பட்டுச் சென்ற போது, அவர்களும் சமார்த்தியமுள்ளவர்களாயினர். கவனியுங்கள், `ஒரு பணத்துக்கு ஒரு படி கோதுமை. ஒரு பணத்துக்கு மூன்று படி வாற்கோதுமை’. ஓ! பணம் சம்பாதிக்கும் திட்டம். உலகத்தின் தங்கம் அனைத்தையும் பெற்றுக்கொள்ள கையாளப்பட்ட சாமர்த்தியம். அதன் மூலம் செல்வம் உள்ளே கொண்டு வரப்பட்டது. வேதம் கூறியது அவ்வாறே நிகழ்ந்தது. அவர்கள் ஏறெடுத்த ஜெபங்களுக்கும் கூட காசு வசூலித்து பாவவிமோசன ஸ்தானம்ஒன்றை ஏற்படுத்தி, அதிலிருந்து மரித்தோரை விடுவிப்பதற்கென்றே ஜெபம் செய்து காசு வசூலித்தனர். உங்கள் சொத்துக்களையெல்லாம் சபைக்கு உயிலாக எழுதி வைத்துவிட வேண்டும். சபையும் அரசாங்கமும் ஒன்றாய் இணைந்திருந்தால், சபை உங்கள் சொத்துக்களை எடுத்துக் கொள்ளும். இன்றைக்கும் சில சுவிசேஷர்கள் இத்தகைய ஆவியைக் கொண்டிருப்பதை நாம் காண்பதில்லையா? அவர்கள் வயோதிபரின் உபகாரச் சம்பளங்களை எடுத்துக்கொண்டு அவர்களுடைய வீடுகளையும் சொத்துக்களையும் மான்யமாகப் பெற்றுக் கொள்ளுகின்றனர். அதைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் பொருளின் பேரில் நிலைத்திருக்க விரும்புகிறேன். நான் பொருளினின்று அகன்று செல்வதைக் காண்கிறேன். அவர்கள் அங்ஙனம் செய்தால், அவர்களைப் பொறுத்தது. அதற்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமு மில்லை. நான் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பதற்கு மாத்திரம் பொறுப்புள்ளவனாயிருக்கிறேன். அந்த மிருகத்தை எதிர்க்கச் சென்றது மனித முகம் கொண்டதா யிருந்தது. அவன் மிகவும் புத்திசாலியாயிருந்தான். அவர்கள் ரொட்டித் துண்டை (Kosher) எடுத்து, `இதுவே இயேசுகிறிஸ்துவின் சரீரம்’ என்றனர். படியின் மேல் ஏறிக்கொண்டு சென்ற லூதர் அதைக் கேட்டு அதை கீழே எறிந்து, `அது வெறும் ரொட்டியும் திராட்சரசமுமாம். அது கிறிஸ்துவின் சரீரமன்று. கிறிஸ்துவின் சரீரம் உயர்த்தப்பட்டு இப்பொழுது தேவனுடைய வலது கரத்தில் உட்கார்ந்து கொண்டு நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறது’ என்றார். மனிதனுடைய ஞானத்தைப் பார்த்தீர்களா? ஸ்விங்லிக்கும் கால்வினுக்கும் பிறகு வெஸ்லி தோன்றினார். அச்சமயத்தில் சபையானது பாதுகாப்பு (Security) என்னும் கொள்கை யைக் கையாண்டு, எழுப்புதல் கூட்டங்கள் இனிமேல் அவசியமில்லை யென்று சொல்லிக் கொண்டிருந்தனர். `நடக்க வேண்டியது என்றாவது நடந்தே தீரும்’ என்று அவர்கள் எண்ணி விருப்பம்போல் வாழத் தலைப்பட்டனர். அக்காலத்திலிருந்த லூதரன் சபையும் ஆங்கிலிகன் சபையும் சத்தியத்தைப் புரட்டி நாடு முழுவதும் இப்பொழுதுள்ளது போன்று ஊழல் மயமாக இருந்தது. இரத்தம் சிந்தின மேரிக்குப் பிறகு (Bloody Mary) எட்டாம் ஹென்றி இங்கிலாந்து அரசாண்டான். சபை அப்பொழுது வன்முறையைக் கடைபிடித்து ஊழல் கொண்டதாய் இருந்தது. கிறிஸ்தவ மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டவர்கள் ஐந்து அல்லது ஆறு மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தி அவர்கள் விருப்பத்திற்கேற்ப செய்து, இவ்விதம் அசுத்தமான வாழ்க்கை நடத்தி வந்தனர். இவை யாவும் கண்ணுற்ற ஜான் வெஸ்லிக்கு, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஒருவனைப் பரிசுத்தமாக்குகிறது என்னும் சத்தியம் வேதத்தின் வாயிலாக வெளிப்பட்டது. அவர் என்ன செய்தார்? அவர் ஒரு சீர்திருத்தத்தை உண்டாக்கினார்? லூதர் செய்தது போன்று வெஸ்லி தம் நாட்களில் உலகத்தை இரட்சிப்புக்குள் கொண்டு வந்தார். அது என்ன? மனித முகம் கொண்ட ஜீவன் புறப்பட்டுச் செல்வது. தவறு எது என்பதைப் புரிந்து கொள்ளும் ஞானத்தை தேவன் அக்காலத்தில் அவர்களுக்கு அளித்திருந்தார். அதன் விளைவாக அவர்கள், `அது இயேசுவின் இரத்தமல்ல. அது இயேசுவின் சரீரமல்ல. அவை இயேசுவின் சரீரத்துக்கும் இரத்தத்துக்கும் அடையாளமாய் உள்ளன என்று கூறினர். இன்றைக்கும் அதன் பேரில் கத்தோலிக்கர்களும் பிராடெஸ்டெண்டுகளும் தர்க்கிக்கின்றனர். மற்ற எல்லாவற்றின் பேரிலும் அவர்களிடையே ஒரு ஒப்பந்தம் உண்டு. ஆனால் அவர்கள் கூட்டும் ஆலோசனை சங்கங்களில் இந்த விஷயத்தைக் குறித்து மாத்திரம் அவர்களிடையே வேறுபாடு காணப்படுகின்றது. அந்த ஒரு விஷயத்தில் அவர்களுக்கு ஒருமைப்பாடு இல்லை. திராட்சரசத்தையும் ரொட்டித் துண்டையும் கிறிஸ்துவின் இரத்தமாகவும் சரீரமாகவும் மாற்ற ஒரு கத்தோலிக்க குருவானவருக்கு வல்லமையுண்டு என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவேதான் அவர்கள் ஆலயங்களில் ஒரு சிறு பீடம் காணப்படு கின்றது. அவர்கள் அடையாளத்தைப் போட்டுக்கொண்டு, அஞ்ஞான வழக்கங்களைக் கடைப்பிடித்து முழங்கால் படியிட்டு, தொப்பிகளை கழற்றி இவையனைத்தையும் செய்கின்றனர், அவர்கள் ஆலயத்துக்கு மரியாதை செலுத்தவில்லை. பீடத்தின் மேல் வைக்கப்பட்டிருக்கும் அப்பத்துக்கு (Kosher) அவர்கள் மரியாதை செய்கின்றனர். அதை சாத்தான் எவ்வளவு சாமர்த்தியமாக சபையில் நுழைத்தான் என்று பாருங்கள். ஆனால் அது தவறென்று புரிந்து கொள்ள தேவன் ஒரு மனிதனுக்கு ஞானத்தின் ஆவியை அருளினார். அது சாத்தான் சவாரி செய்த மூன்றாம் மிருகத்தை எதிர்ப்பதற்கென்று அளிக்கப்பட்டது - சீர்திருத்தக்காரர். சாத்தான் சபையை மிகவும் அசுசிப்படுத்தினான். சீர்திருத்தக்காரர்கள் அவர்கள் காலத்தின் என்ன செய்தனர்? அவர்கள் சபையை விக்கிரகாராதனையான அஞ்ஞான வழிபாட்டினின்று மீட்டு, தேவனிடத்தில் அதை மீண்டும் கொண்டு வந்தனர். இப்பொழுது வெளிப்படுத்தல் 3.2 சற்று வாசிப்போம். ஏதோ ஒரு காரணத்திற்காக அதை நான் குறித்து வைத்திருக்கிறேன். அது லூதரன் காலத்தில் நிகழுகின்றது. லூதர் சபையைத் தொடங்கின மாத்திரத்தில் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். வெஸ்லியின் காலத்திலும் அதுவே நிகழ்ந்தது. பெந்தேகோஸ்தரும் அவ்விதமாகவே ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டனர். அவர்கள் என்ன செய்தனர்? எந்த ஸ்தாபனத்திலிருந்து அவர்கள் வெளிவந்தனரோ, அது கையாண்ட முறைகளை அவர்கள் மறுபடியும் அனுசரித்தனர். சர்தை சபையின் தூதனிடம் என்ன கூறப்படுகின்றது என்று பார்க்கலாம். நீ விழித்துக்கொண்டு சாகிறதற்கேதுவாயிருக் கிறவைகளை ஸ்திரப்படுத்து. (மறுபடியும் அவள் வெளிவந்த கத்தோலிக்க சபையைப் போன்ற ஒரு ஸ்தாபனத்துக்குள் செல்ல ஆயத்தமாயிருக்கிறாள்) உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாய் நான் காணவில்லை. மறுபடியுமாக அது ஸ்தாபனத்திற்குள் செல்கின்றது. ஸ்தாபன முறைமைகள் ஏன் தவறு என்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் அல்லவா? யார் அதைத் தொடங்கினது? கர்த்தரா? அல்லது அப்போஸ் தலரா? ரோமன் கத்தோலிக்க சபைதான் அதைத் தொடங்கினது. நான் சொல்வது தவறென்னு எந்த சரித்திரக்கரனாவது நிரூபிக்கட்டும் பார்க்கலாம். அவர்கள் தங்களைத் தாய்சபை என்று அழைத்துக் கொள்கின்றனர். அவர்கள் தாய் சபைதான். ஆனால் அவர்கள் ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு, மனிதனைத் தலைவனாக்கும் ஒரு முறைமையை அதில் புகுத்தினர். நாம் அவர்களைப் போன்று ஒரு மனிதனைத் தலைவனாகக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக அனேகரைக் கொண்ட ஒரு ஆலோசனை சங்கத்தையே நிறுவியுள்ளோம். அதன் விளைவாக சபையில் குழப்பமுண்டாகிறது. ஒரு ஆலோசனை சங்கம் எப்படி.....? இது ஜனநாயகம் (Democracy) சரியென்று நாம் நினைப்பது போன்றதாகும். ஆனால் அது ஒருக்காலும் சரிவர இயங்காது. அரசாங்கத்தை நடத்த இத்தகையவர் உள்ளபோது அது எங்ஙனம் சரிவர இயங்கும்? அது ஒருக்காலும் முடியாது. தேவ பக்திகொண்ட ஒரு அரசன் ஆட்சி புரிதலே சரியான முறையாகும். கவனியுங்கள். மூன்றாம் ஜீவன் மனிதனுடைய தந்திரத்துக்கு அடையாளமாயிருந்தது. அக்காலத்தில் சீர்திருத்தக்காரர்கள் அஞ்ஞான விக்கிரங்களை விட்டு விலகி, `இது அப்பம், இது திராட்சரசம்’ என்றனர். கிறிஸ்தவ மார்க்கத்துக்கு அடையாளமாயிருப்பவைகளை அந்திக் கிறிஸ்து இப்பொழுதும் தன் மார்க்கத்தில் கடைபிடிக்கிறான் என்பதைப் பாருங்கள். அவன், `நான் புத்தன்’ என்று சொன்னால் அவன் கிறிஸ்தவ மார்க்கத்துக்கு விரோதமாயுள்ளவன் என்று நாம் அறிந்து கொள்ளலாமே! ஏனெனில் அது அஞ்ஞான வழிபாடு என்று நாம் அறிவோம். ஆனால் அவன் அப்படியல்ல. அவன் மிகவும் தந்திரமுள்ளவன். கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறிக்கும் எல்லா அடையாளங்களையும் அவன் கொண்டுள்ளான். ஆனால் மூல போதங்களிலிருந்து அவன் சற்று விலகியுள்ளான் என்பது மாத்திரமே. அது தான் அவனை அந்திக் கிறிஸ்துவாகச் செய்கின்றது. ஆகவே, ஜீவன் மனித ரூபங் கொண்டதாய் புறப்பட்டு எதிர்க்கிறது.... இதை நீங்கள் மறந்து போக வேண்டாம். உங்கள் வாழ் நாள் முழுவதும் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் சொல்லுகிறதாவது, இந்த நான்கு ஜீவன்களைக் குறித்த வெளிப்பாடு உண்மையே. மனித முகம் கொண்ட ஜீவன் தேவனுடைய வல்லமையைக் கொண்டதாய், தேவன் அதற்கு அளித்த ஞானத்துடன் சென்று சபையை விக்கிரக வழிபாட்டினின்று விலக்கி, மறுபடியும் தேவனிடத்தில் திரும்பச் செய்தது. ஆனால் அதே சபையின் காலத்தில், ஆதியிலே ரோமாபுரி செய்தவண்ணமாய் அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கத் தலைப்பட்டனர். இவ்விதம் ரோமாபுரி ஸ்தாபனத்திற்குக் குமாரத்திகள் தோன்றினர். இதைக்கண்ட அவர் என்ன சொல்லுகிறார்? `உன்னை நான் நிறைவுள்ளவனாகக் காணவில்லை. எனவே உன்னிடத்தில் விடப்பட்டிருக்கும் சிறிது பலனை நீ ஸ்திரப்படுத்த வேண்டும்’ என்கிறார். அவர் மறுபடியுமாக விடுக்கும் எச்சரிக்கையைக் கவனியுங்கள். (வெளி. 3.3) ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு.... (வேறு விதமாகக் கூறினால், அந்த சீர்கேட்டினின்று நீ வெளிவரவேண்டும்). (இதை கவனியுங்கள்) நீ விழிந்திராவிட்டால் திருடனைப்போல் உன்மேல் வருவேன். நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய் வேறொரு இடத்தில், அவர் விளக்குத் தண்டை எடுத்துப் போடுவதாக எச்சரித்துள்ளனர். அது என்ன? சபையின் வெளிச்சம் அவள் வெளிவந்த அதே அஞ்ஞான இருளாகிய ஸ்தாபன முறைமைகளுக்குள் செல்கின்றாள். இப்பொழுதும் அவள் அதில் நிலைத்திருக்கிறாள். உத்தம இருதயமுள்ளவர்கள் கூட ஸ்தாபன முறை சரியென்று எண்ணியுள்ளனர். பிராடெஸ்டெண்டுகள் கத்தோலிக்கரைச் பார்த்து நகைக்கின்றனர். ஆனால் இவ்விருவரும் இந்த விஷயத்தில் சரிசமம் தான். கவனியுங்கள், இது எனக்கு மிகவும் பிரியம். அவர்களை அவர் எச்சரிப்பதைப் பாருங்கள். அந்த ஒவ்வொரு ஜீவனும் அதனதன் காலத்துக்குச் சரியாய் பொருந்துகின்றது என்பதை நீங்கள் ஆமோதிக் கிறீர்களா? இல்லையேல், உங்கள் சந்தேகங்களை எனக்கு எழுதியனுப்புங்கள். அவைகள் என்ன செய்தன என்பதை நாம் சபையின் சரித்திரத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். இதை நான் முன்பு அறிந்திருக்கவில்லை. நான் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்சி எனக்கு முன்னால் வந்தது. நீங்கள் என்னை இப்பொழுது எங்ஙனம் தத்ரூபமாய் காண்கிறீர்களோ, அவ்விதமாகவே அக்காட்சியை நான் கண்டேன். அது வேதத்துடன் பொருந்துவதால், அதன் விளக்கம் மிகவும் சரியாகும். அந்திக் கிறிஸ்துவின் நான்காவது மிருகத்துடன் போரிட அனுப்பப்பட்ட தேவனுடைய நான்காவது மிருகம் ஒரு கழுகாகும். சபையின் காலங்களையும் வேதவாக்கியங்களையும் படித்திருக்கிறவர்களே, கடைசி காலம் கழுகின் காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவன் தம் தீர்க்கதரிசிகளை கழுகுக்கு ஒப்பிடுகிறார். கடைசிகாலமாகிய கழுகின் காலத்தில் ஒரு தீர்க்கதரிசி தோன்றி உண்மையான வார்த்தையை வெளிப்படுத்துகிறார். தேவன் நியாயந்தீர்க்கும் முன்பாக ஒரு கழுகை (தீர்க்கதரிசியை) அனுப்புகிறார். நோவாவின் காலத்தில் அவர் ஒரு கழுகை அனுப்பினார். இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தினின்று வெளியே கொண்டுவரும் முன்பு, அவர் ஒரு கழுகை அனுப்பினார். ஒவ்வொரு முறையும் அவர் கடைசி கட்டத்தில் ஒரு கழுகை அனுப்புகிறார், அவர் மறுபடியும் இக்காலத்தில் ஒரு கழுகை அனுப்புகிறார். அது வேதத்துடன் சரிவர இணைகிறது. ஆகவே வேறு விதமாக நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? தீர்க்கதரிசி தான் சத்தியத்தை வெளிப்படுத்துகிறவன், அப்படியானால் கழுகின் காலம் வரும்வரை சத்தியம் எவ்வாறு வெளிப்படக்கூடும்? காளையின் காலத்திலும், மனிதனின் காலத்திலும் அவரவர்க்கு அளிக்கப்பட்ட ஊழியத்தை அவர்கள் நிறைவேற்றினார்கள். ஏனெனில் அவை தேவனால் அனுப்பப்பட்ட ஜீவன்கள். முதலில் தோன்றியது சிங்கம். அது அக்காலத்தில் எழும்பிய அந்திக் கிறிஸ்துவை எதிர்த்தது. சாத்தான் வேறொரு வல்லமையை எழுப்பினான். சாத்தானின் கடைசி ஆதிக்கம் தோன்றும் போது, பிள்ளைகளைப் பிதாக்களின் மூலவிசுவாசத்திற்குக் கொண்டு செல்வதற்கென, அவர் கழுகை அனுப்புகிறார் - கழுகின் காலம், அதன் பின்பு வேறு மிருகங்கள் இருவர் சார்பிலும் தோன்றவில்லை என்பதைக் கவனித்தீர்களா? அதனுடன் அவை முடிவு பெறுகின்றன, கடைசி தூதனின் காலத்தில் தேவ ரகசியம் யாவும் நிறைவேறுமென்று வெளிப்படுத்தல் 10:1-7ல் கூறப்பட்டுள்ளது - கழுகு. இது கடைசி காலமாயிருப்பின், ஒரு கழுகு தோன்றவேண்டும். சிங்கத்தின் காலத்தில் வெகு சிலர் மாத்திரமே மூல வார்த்தையை ஏற்றுக் கொண்டனர். காளையின் காலம் தோன்றின போது, அப்பொழுதும் ஒரு சிலர் மாத்திரமே காளையின் காலத்தின் செய்தியை ஏற்றுக்கொண்டனர். மனிதனின் காலத்தின் போது, சீர்திருத்தக்காரர் சாமர்த்தியம் கொண்டவர்களாய், ஒரு சிறு குழுவை அக்காலத்து ஸ்தாபனத்தினின்று வெளி நடத்தினர். ஆனால் சாத்தான் அவர்களை மறுபடியும் அதே ஸ்தாபன முறைகளுக்கு கொண்டு சென்று அவர்களுடன் இணைத்தான். கழுகின் காலம் தோன்றும்போது, பத்தாயிரத்தில் ஒருவரே அக்காலத்துச் செய்தியைக் கேட்டு அதை ஏற்றுக் கொள்ளுவார்கள். இயேசுவும் கூட, அவர் தமது வருகையைத் துரிதப்படுத்தாவிடில், எடுக்கப்படுதலுக்கென்று யாருமே இரட்சிக்கப்பட முடியாது என்று கூறியுள்ளார். அப்படியானால் நாம் வாழும் காலம் எது? சகோதரரே, சகோதரிகளே, நாம் எக்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிகிறீர்களா? தேவனே, நான் மிகவும் மகிழ்ச்சிக் கொள்கிறேன். என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை. நானாக இதைக் கூறுகிறேன் என்று நினைக்கவேண்டாம். நானும் உங்கள் மத்தியில் ஒருவனாக இருந்து அவர் கூறுவதைக் கேட்க வேண்டும். எனக்கு ஒரு குடும்பம் உண்டு. எனக்கு சகோதரரும் சகோதரிகளும் உண்டு. அவர்களை நான் நேசிக்கிறேன். பரலோகத்தின் தேவன் தாமே கிருபையாய் இறங்கி வந்து தரிசனங்களின் மூலமாக அவரையும் அவருடைய சத்தியத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். முப்பது வருட காலமாக இவை யாவும் உண்மையென்று நிரூபிக்கப் பட்டுள்ளது. ஆம், நாம் கடைசி காலத்தில் வந்துவிட்டோம். இது உண்மையென்று விஞ்ஞான ஆராய்ச்சி நிரூபித்துள்ளது. தேவனுடைய வார்த்தையும் அது உண்மையென்று நிரூபித்துள்ளது. அப்படியானால் நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். இந்த வெளிப்பாடு தேவனிடமிருந்து வருகிறது. இது சத்தியம். நான் சொல்வதைக் கிரகித்துக் கொண்டீர்களா? இதைக் கவனியுங்கள். வெள்ளத்துக்கு முன்பாக இருந்த உலகத்தைக் காப்பதற்குத் தருணம் வந்தபோது, அவர் ஒரு கழுகை (நோவாவை) அனுப்பினார். இஸ்ரவேலரை விடுவிக்க சமயம் வந்தபோது, அவர் மறுபடியும் ஒரு கழுகை அனுப்பினார். யோவான் பத்மூ தீவிலிருந்த போதும், அவர் ஒரு சாதாரண தூதனின் மூலம் செய்தியை அறிவிக்க வில்லை என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? யோவானுக்குத் தூதையளித்தவன் ஒரு தீர்க்கதரிசி. நீங்கள் நம்புகின்றீர்களா? அதை நாம் நிரூபிப்போம். வெளிப்படுத்தல் 22ம் அதிகாரம் - அவன் ஒரு கழுகா என்பதை நாம் பார்ப்போம், அவன் ஒரு தூதன் தான், அவன் தூதைக் கொண்டு வந்த ஒருவன். ஆனால் வெளிப்படுத்தின விசேஷம் முழுவதையும் யோவானுக்கு வெளிப்படுத்தின அந்த தூதன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், வெளிப்படுத்தல் 22.9 அதற்கு அவன், நீ இப்படிச் செய்யாதபடிக்குப்பார், உன்னோடும் உன் சகோதரரோடும். தீர்க்கதரிசிகளோடும்.... நானும் ஒரு ஊழியக்காரன். யோவான் எதைக் காண்கிறான் என்று பாருங்கள். யோவானாகிய நானே இவைகளைக் கண்டு கேட்டும் இருந்தேன். (யோவான் இப்புத்தகத்தை முடிக்கும் தருணம் இது, இது தான் அப்புத்தகத்தின் கடைசி அதிகாரம்) நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன் (அவன் ஒரு தூதன்). அதற்கு அவன். நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார், (எந்த ஒரு தீர்க்கதரிசியையும் தூதனையும் யாரும் வணங்கக்கூடாது) உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்கிறவர்களோடும் கூட நானும் ஒரு ஊழியக்காரன், தேவனைத் தொழுதுகொள் என்றான். பாருங்கள் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமானது, இது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தையை ஒரு தீர்க்கதரிசிதான் அறிவிக்க வேண்டும். ஏனெனில் அவனிடத்தில் தான் தேவனுடைய வார்த்தை வரும். அதைக் குறித்த ஒரு கேள்வியை நீங்கள் இந்தப் பெட்டியில் போடுவீர்கள் என்று நான் எதிர்பார்கிறேன். அவ்வித உணர்ச்சி எனக்குள் தோன்றுகிறது. தேவனுடைய வார்த்தை எப்பொழுதும் தீர்க்கதரிசி யினிடத்தில் தான் வரும். வேதம் ஒரு போதும் அதன் முறைகளை மாற்றுவது கிடையாது. ஆகவே நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தீர்க்கதரிசியிடமே தேவனுடைய வார்த்தை உண்டாகும். வெளி. 10.1-7, மறுபடியுமாக 9ம் வசனம் படிப்போம். அதைப் படிப்பதற்கு முன்பாக, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். இதை நீங்கள் நன்றாக புரிந்து கொண்டீர்களா? கழுகுக்குப் பின்பு வேறொரு வல்லமை புறப்பட்டுச் செல்வது கிடையாது. அந்திக்கிறிஸ்து ஒவ்வொரு முறையும் ஒரு வல்லமையை அனுப்பும்போது, அதை எதிர்க்க தேவன் ஒரு வல்லமையை அனுப்பினார். கடைசியாக கழுகு தோன்றும் போது, ஆரம்பத்தில் இருந்தவாறே அது அவருடைய வார்த்தையாக அமைந்திருக்கும். கவனியுங்கள். நாம் எதிர்பார்க்கும் அந்த மனிதன் எலியாவின் ஆவியைப் பெற்றிருப்பான். அவன் எலியாவல்ல, ஆனால் அவனைப் போன்ற ஒருவனாக இருப்பான். ஸ்தாபனங்களின் தவறாக போதகங்களில் விழுந்து கிடக்கும் மக்களை, பிதாக்களின் மூலவிசு வாசத்திற்குக் கொண்டு செல்வதே அவன் ஊழியமாயிருக்கும். இப்பொழுது வெளிப்படுத்தல் 6.9ல் காணப்படும் பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்களைக் குறித்து சிந்திப்போம். இந்த விஷயத்தில் நம்மிடையே கருத்து வேறுபாடு தோன்றப்போகிறது. ஆனால் சற்று கவனியுங்கள், நானும்கூட உங்களைப் போன்றே வித்தியாசமான கருத்தைக் கொண்டிருந்தேன். ஆனால் அது சரியாக அமையவில்லை. பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள் ஆதி சபையில் இரத்த சாட்சியாக மரித்தவர்கள் என்று நானும் எண்ணியிருந்தேன். டாக்டர் எலியாஸ் ஸ்மித் (Dr. Elias Smith) என்பவரும் அவ்விதமே கூறியுள்ளார். ஆனால் பரிசுத்த ஆவியானவர் அதைக் குறித்த தரிசனத்தை எனக்குக் காண்பித்தபோது, அது நான் நினைத்தபடியல்ல. நீங்கள் ஒருக்கால், `எனக்கென்னமோ தெரியாது’ என்று சொல்லலாம். ஒரு நிமிடம் பொறுங்கள். நாம் அதைக் கண்டுபிடிக்கலாம். இவர்கள் மணவாட்டி சபையின் ஆத்துமாக்களல்ல - இல்லவே இல்லை. பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள், அங்கு காத்துக் கொண்டிருக்கும் மணவாட்டி சபையென்றும், அவர்கள் `எதுவரைக்கும் ஆண்டவரே? எதுவரைக்கும் ஆண்டவரே?’ என்று சத்தமிடுவதாகவும் எண்ணியிருந் தோம். அதை நான் மறுபடியும் படிக்கிறேன், அப்பொழுது அதை நன்றாகப் புரிந்து கொள்வோம்; அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினி மித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தம் கொல்லப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டேன். பாருங்கள், தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும்.... அதை மனதில்பதிந்து கொள்ளுங்கள். அவர்கள், பரிசுத்தமும் சத்தியமுமுள்ளஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது, அன்றியும் அவர்கள் தங்களைப்போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னும் கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஐந்தாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, சபை ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்பதைக் கவனியுங்கள். அப்படியானால் இவர்கள் ஆதிசபையின் காலத்தில் கொல்லப்பட்டவர்கள் அல்ல. தயவு செய்து உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். ஏனெனில் இது வாக்குவாதமுள்ள ஒரு பிரச்சனை. ஆகவே நீங்கள் நன்றாய் கவனிக்க வேண்டும். குறித்துக் கொள்ள உங்களிடம் காகிதமும் எழுதுகோலும் இருக்கின்றன. ஆதிகாலத்தில் இரத்தசாட்சிகளாய் மரித்த நீதிமான்களும், சபை காலங்களிலிருந்த மற்ற நீதிமான்களும் - மணவாட்டி சபை - இது நிகழும்போது ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டபடியால், அவர்கள் பலிபீடத்தில் கீழ் இருக்க முடியாது. அவர்கள் மகிமையில் இருப்பார்கள். வெளிப்படுத்தல் 4ம் அதிகாரத்தில் அவர்கள் எடுக்கப்பட்டனர். அங்ஙனமாயின், பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் யார்? அவர்கள்தாம் ஒரு தேசமாக இரட்சிக்கப்படவிருக்கும் இஸ்ரவேலர், அவர்கள் முன்குறிக்கப்பட்டவர்கள். அவர்கள் இஸ்ரவேலரே. நீங்கள், `அது ஒருக்காலும் இல்லை’ என்று சொல்லலாம். நான் கூறுவது உண்மை. அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டும், இந்த சச்சரவை இப்பொழுது தீர்த்துக்கொள்ளலாம். அதைக் குறித்த ஐந்து அல்லது ஆறு வேதவாக்கியங்கள் உண்டு. அவைகளிலிருந்து ஒரு வேத வாக்கியத்தை மாத்திரம் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். ரோமர் 11ம் அதிகாரம், 25, 26 வசனங்களைப் பார்ப்போம். பவுல், அவன் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை வானத்திலிருந்து வந்ததூதன் பிரசங்கித்தாலும் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன் என்று கூறியுள்ளான். கவனியுங்கள். மேலும், சகோதரரே, நீஙகள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டா யிருக்கும். (ஆங்கிலத்தில், இஸ்ரவேலருக்குச் சிறிது குருடான நிலை ஏற்பட்டுள்ளது என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்). கடைசி புறஜாதி மணவாட்டி உட்பிரவேசிக்கும்வரை இஸ்ரவேலர் குருடாயிருப்பார்கள். இந்த பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள், மீட்கிறவர் சியோனிலிருந்து வந்து அவபக்தியையாக்கோபை விட்டு விலக்குவார். நான் கூறினது சரியா? பலிபீடத்தின் கீழுள்ளவர்கள் இஸ்ரவேல் ஜனங்கள், நாம் இரட்சிக்கப்படுவதற்கென இஸ்ரவேலர் குருடாக்கப் பட்டனர். அதை நீங்கள் நம்புகின்றீர்களா? யார் அவர்களைக் குருடாக் கினது? - தேவன், தேவன் தம் சொந்த பிள்ளைகளைக் குருடாக்கினார். இயேசுவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்படவேண்டுமென்று அவர்கள் அலறினதில் அதிசயமொன்றுமில்லை. அவர்கள் அவருடைய பிள்ளைகள், அவர் வார்த்தை, அவர்கள் அவரைச் சந்தோஷமாக ஏற்றுக்கெள்வார்கள் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் அவர்கள் அவரை அறிந்து கொள்ளாதபடிக்கு அவர்கள் கண்களைக் குருடாக்கினார். அவர் எளிமையான விதத்தில் தோன்றி அவரை ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்களைக் குருடாக்கினார். இயேசுவும் அவர்கள் மேல்பரிதாபம் கொண்டு, `பிதாவே, இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே’ என்று ஜெபித்தார். அவர்கள் ஒரு நோக்கத்துக்காக குருடாக்கப்பட்டதாக பவுல் அறிவிக்கிறான். கவனியுங்கள், இதை நீங்கள் நன்கு கவனிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு அங்கிகள் கொடுக்கப்பட்டன. அவர்களிடம் அங்கிகள் இல்லாமலிருந்தன. அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப் பட்டன. ஆனால் பரிசுத்தவான்களுக்கு ஏற்கனவே அங்கிகள் இருந்தன, அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால் இஸ்ரவேலருக்கோ தருணம் அளிக்கப்படவில்லை. ஏனெனில் பிதாவாகிய தேவனால் அவர்கள் குருடாக்கப்பட்டு, தேவனுடைய கிருபையினால் மணவாட்டி புறஜாதிகளி லிருந்து தெரிந்து கொள்ளப்பட்டாள். அது சரியா? யோசேப்பின் வரலாற்றிலிருந்து ஒரு அழகான உதாரணத்தை எடுத்துரைக்க விரும்புகிறேன். தேவ ஆவியைப் பெற்றிருந்த யோசேப்பு - கழுகு - அவன் சகோதரர்கள் மத்தியில் பிறந்தான், அவ்வாறே உண்மையான சபையும் பிற சபைகளின் மத்தியில் தோன்றினது. அவன் சொப்பனங்களின் அர்த்தத்தை விவரித்தான். அவன் தரிசனங்களைக் கண்டான். இதனால் அவனுடைய சகோதரர் அவனை வெறுத்தனர். அவன் பிதாவோ அவனை நேசித்தார். அவன் தன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டான் என்பதை கவனியுங்கள். அவன் பிதாவால் அல்ல, அவர்கள் அவனை ஏறக்குறைய முப்பது வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டனர். அவனைக் குழியில் தள்ளி அவன் மரித்துப் போனான் என்று எண்ணினர். ஆனால் குழியிலிருந்து அவன் எடுக்கப்பட்டு, பார்வோனின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தான். அவனுடைய சகோதரர் அவனைத் தள்ளிவிட்டதன் விளைவாய் அவனுக்கு ஒரு புறஜாதி மணவாட்டி கொடுக்கப்பட்டாள். (ஒலிநாடாவின் இரண்டாவது பாகம், செய்தியின் ஒருபாகம் பதிவாகவில்லை - பதிப்பாசிரியர்) அவன் கைகளைக் குறுக்கே வைத்ததனால் ஆசீர்வாதம் மூத்தவனிடத்திலிருந்து இளையவனுக்குச் சென்றது - யூதரிலிருந்து புறஜாதிகளுக்கு, அதாவது, இளைய சபைக்கு ஆசீர்வாதம் அளிக்கப் பட்டது. தாய்சபை சூரியனில் வீற்றிருந்து இக்குழந்தையை ஈன்றாள். கவனியுங்கள். யோசேப்பின் இருகுமாரரும் புறஜாதி தாயிலிருந்து தோன்றியவர்கள். ஆகவே இஸ்ரவேல் மணவாட்டியும், யாக்கோபின் கரங்களைக் குறுக்கிடச் செய்த அதே பரிசுத்த ஆவியின் மூலமாய், அவர்கள் கொண்டிருந்த வைதீக முறைகளைக் கைவிட்டு, கிறிஸ்தவ முறைகளை அனுசரிப்பர். யாக்கோபு, `கர்த்தர் என் கைகளைக் குறுக்கிடும்படி செய்தார்’ என்றான். அவனாகவே அதைச் செய்யவில்லை. கவனியுங்கள். யோசேப்பு அவன் சகோதரரால் புறக்கணிக்கப்பட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக்கொண்டான். இயேசுவும் தம் சொந்த ஜனங்களாகிய யூதரால் புறக்கணிக்கப்பட்டு புறஜாதி மணவாட்டியைப் பெற்றுக் கொண்டார். இப்பொழுது அப்போஸ்தலர் 15.14ஐப் படிப்போம். அதை நான் இங்கு குறித்து வைத்திருக்கிறேன். நாம் 13-ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். அவர்கள் பேசி முடிந்த பின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி.... (என்ன நேர்த்ததென்று பாருங்கள். அவர்கள் யூதராயிருந்தும் புறஜாதிகளிடம் சென்றதால் அவர்களிடையே முறுமுறுப்பு உண்டானது)... சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைக் தெரிந்துகொள்ளும்படி, முதல்முதல் அவர்களுக்குக் காட்சித்தருளின விதத்தைச் சிமியோன் (அதாவது, சீமோன் பேதுரு) விவரித்துச் சொன்னாரே பாருங்கள். என் மனைவியின் பெயர் ப்ராய் (Broy) என்பதாகும். ஆனால் நான் அவளை விவாகம் செய்துகொண்ட பிறகு அவள் பிரன்ஹாம் என்னும் பெயரை ஏற்றுக்கொண்டாள். இயேசுவும் புறஜாதிகளிலிருந்து தம் மணவாட்டியைத் தெரிந்து கொண்டார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. யோசேப்பு இதற்கு உதாரணமாயிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள் எய்க்மன் (Eichman) போன்ற பாவம் நிறைந்தவர்களால் கொல்லப்பட்டு, உயிர்த் தியாகம் செய்து மரித்தனர். கோடிக்கணக்கில் மரித்த அவர்கள், தாங்கள் கொண்டிருந்த சாட்சியில் நிலைநின்றனர். ஆனால் அவர்களெல்லாரும் யூதர்கள். அவர்கள் தேவ வசனத்தினிமித்தம் கொல்லப்பட்டனர் என்பதைக் கவனியுங்கள் - கிறிஸ்துவுக்கு சாட்சியாக அல்ல. இது உங்களுக்குப் புரிகின்றதா? சபையின் காலத்தில் இரத்த சாட்சிகளாக மரித்தவர்கள் தேவவசனத்தினிமித்தமும், கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும் மரித்தனர், அதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? ஆனால் பலிபீடத்தின் கீழேயுள்ள ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியை உடையவர்களாயிருக்கவில்லை, `..... தேவவசனத்தினி மித்தமும், தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும்’ - அவர்கள் யூதர்கள். ஹிட்லர் அவர்களை வெறுத்தான். அவ்வாறே எய்க்மனும், ஸ்டாலினும் உலகிலுள்ள ஏனையோரும் அவர்களை வெறுத்தனர். ஆனால் அவர்களோ தாங்கள் விசுவாசித்ததற்கு உண்மையுள்ள வர்களாயிருந்தனர். அவர்கள் யூதர்களாயிருந்தபடியால் கொல்லப்பட்டனர். மார்டின் லூதரும் அவர்களைக் குறித்து தப்பெண்ணம் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் எல்லாரும் புறம்பாக்கப் படவேண்டுமென்று அவர் கூறினார். அவர் வேறொரு காலத்தைச் (Another dispensation) சேர்ந்தவராதலால் தேவனுடைய வார்த்தையைச் சரிவர அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இப்பொழுதோ, தேவனுடைய சத்தியவார்த்தை வெளிப்படுகின்றது. இஸ்ரவேலர் எப்பொழுதுமே குருடராயிருக்க முடியுமா? ஒருக்காலும் இல்லை. அன்றொரு நாள் தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம் `நீங்கள் காண்டாமிருகத்தைப் போன்றிருக்கிறீர்கள்’ என்று சொல்லவில்லையா? மேலும் அவர், `உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான். உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டிருப்பான்’ எனக் கூறவில்லையா? அப்படியானால் அவர்கள் எங்ஙனம் நிரந்தரமாகக் குருடராயிருக்க முடியும்? கர்த்தர் அவர்களை மறந்துவிடுவாரென்று இஸ்ரவேலர் ஒரு முறை நினைத்திருந்தனர். யூதர்களுக்கு இக்கட்டான சமயம் வருவதை அந்த தீர்க்கதரிசி கண்டபோது, அவன் கர்த்தரிடம், `ஆண்டவரே, உம் ஜனங்களை நீர் மறந்துவிடுவீரோ?’ என்று முறையாடினான். அப்பொழுது அவர், `உன் கையிலிருப்பது என்ன? என்று கேட்டார். அவன், `அளவுகோல்’ என்று பதிலுரைத்தான். அவர், `வானம் எவ்வளவு உயரமென்றும், சமுத்திரம் எவ்வளவு ஆழமென்றும் உன்னால் அளக்க முடியுமா?’ என்றார். அவன், `முடியாது’ என்றான். அவர், `அப்படியானால் நானும் இஸ்ரவேலை ஒருபோதும் மறப்பதில்லை’ என்றார். இல்லை ஐயா! அவர் இஸ்ரவேலை ஒரு போதும் மறக்க முடியாது. அவர் தமது பிள்ளையைக் குருடாக்க வேண்டியதாயிருந்தது. சற்று யோசித்துப் பாருங்கள்! நமக்குத் தருணம் அளிப்பதெற்கென அவர் தமது பிள்ளையைக் குருடாக்கினார். நாமோ அதை உதறித் தள்ளுகிறோம். நாம் ஒன்றுமற்றவர் என்பதை அது அறிவுறுத்தவில்லையா? நாம் எவ்வளவாக நம்மை தாழ்த்தினாலும், அதை நாம் அறிந்து கொள்ளமுடியாது. ஆம், அவர்கள் தேவனுடைய வார்த்தையைப் பற்றிக் கொண்டிருந்தனர், அவர்கள் யூதர்கள், அவர்களுக்கு நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்டி ருந்தது. அதில் அவர்கள் நிலைத்திருந்தனர். நியாயப் பிரமாணம் தேவனுடைய வார்த்தையாயிருந்தது. அதில் அவர்கள் நிலைகொண்டிருந் தனர். அவர்கள் கடைபிடித்திருந்த சாட்சியினிமித்தம் உயிர்த் தியாகம் செய்து மரித்தனர். அவர்கள் தாம் சபை எடுக்கப்பட்ட பின்னர் பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள். கவனியுங்கள். அவர்களுடைய குருட்டுத்தனத்தினால் அவர்கள் மேசியாவைச் சங்கரித்தனர். அதன் பலனை இப்பொழுது அவர்கள் அனுபவிக்கின்றனர். சபை எடுக்கப்பட்ட பின்னர், தேவனுடைய பலிபீடத்தின் முன் அவர்கள் வரும்போது, அதை உணருவார்கள். தேவனுடைய கிருபை அவர்களுக்குண்டு. அவர்கள் பரிசுத்தவான்களில்லை. ஏனெனில், பரிசுத்தவான்கள் ஏற்கனவே அங்கிகள் தரித்திருப்பார்கள். ஆனால் இவர்கள் தேவவசனத் தினிமித்தமும், தேவனுடைய பிள்ளைகள் என்பதால் அவர்கள் கொண்டிருந்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டு, இப்பொழுது பலிபீடத்தின் கீழ் காணப்படும் ஆத்துமாக்கள் யூதர்கள். சபை எடுக்கப்பட்ட பின்னர் தேவனுடைய கிருபை அவர்களுக்குண்டாகி, இயேசு அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கியைக் கொடுக்கிறார். ஏனெனில் அவர்கள் தங்கள் நோக்கத்திற்கு உண்மையா யிருந்தனர். அவர்கள் குருடாக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் குருடரென்று அறியாமலிருந்தனர். அவர்கள் செய்யவேண்டுமென்று தேவன் முன் குறித்ததை அவர்கள் செய்து முடித்தனர். யோவான் இந்த ஆத்துமாக்களைத்தான் பலிபீடத்தின் கீழ் காண்கிறான். அவர்கள், `எதுவரைக்கும் ஆண்டவரே?’ என்று கதறுகின்றனர். `இன்னும் கொஞ்சக் காலம்’ என்று அவர்களுக்குப் பதிலளிக்கப் படுகின்றது. அவர்கள் மேசியாவைக் கொன்றுவிட்டதை உணருகின்றனர். அவரைச் சிலுவையில் அறைந்தபோது, அவர் மேசியாவென்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் அவர்கள் தவறை உணருகின்றனர். அந்த கொலைக்கு அவர்கள் குற்றவாளிகளாய் இருந்ததனால், அவர்கள் கொல்லப்பட்டனர். `அவருடைய இரத்தப் பழி எங்கள் மேல் சுமரட்டும்’ என்று அவர்கள் சத்தமிட்டனர். ஆனால் அதை செய்யும்போது அவர்கள் குருடராயிருந்தனர். அவர்கள் குருடாக்கப்பட்டி ராமலிருந்தால் தேவன், `அவர்களை விட்டு விடுங்கள். அவர்கள் தகுதியற்றவர்கள்’ என்று கூறியிருப்பார். ஆனால் தேவனே அவர்களைக் குருடாக்கினதால் அவருடைய கிருபை அவர்களிடம் பெருகினது. ஆமென். அந்த அதிசயமான கிருபை! இஸ்ரவேலர் எல்லாரும் இரட்சிக்கப்பட வேண்டுமாதலால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கி கொடுக்கப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவர் பெயரும் எழுதப்பட்டுள்ளது. அது உண்மை. யோசேப்பு அவனை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தும் போது, சிங்காசனத்தில் வீற்றிருந்து ஆளுகை செய்பவனாயிருந்தான். அவன் அப்பொழுது, `எல்லோரும் என்னை விட்டுப் போங்கள்’ என்று கட்டளையிட்டான். தன்னை தன் சகோதரருக்கு வெளிப்படுத்தும் போது அவன் மனைவி அரண்மனையில் இருந்தாள் - அங்கு தான் மணவாட்டி இருப்பாள். அவன் அவர்களிடம், `என்னை நீங்கள் அடையாளம் கண் கொள்ளவில்லையா? நான் தான் உங்கள் சகோதரன்’ என்று எபிரேய பாஷையில் கூறினான். அவன் அவர்களுக்குத் தீங்கிழைப்பான் என்று பயந்தனர். அவனோ, `தேவன் ஒரு நோக்கத்திற்காக அதை நேரிடச் செய்தார். ஆகவே, நீங்கள் கவலையுற வேண்டாம், உங்களை உயிரோடு காக்கும்படிக்கு தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்’ என்றான். யூதர்களும் இயேசு வருவதைக் காணும்போது, `நீர் மேசியாவென்று அறிவோம். ஆனால் இந்த வடுக்கன் எங்ஙனம் உண்டானது?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், என் சிநேகிதரின் வீட்டில் காயப்பட்டதனால் உண்டானவை’ என்று பதிலுரைப்பார். நண்பர்களே! அப்பொழுது மீதியாயுள்ள 144000 பேர் அவர்கள் தவறை உணருவர். ஒவ்வொரு குடும்பமும் நாட்கணக்காக தனித்தனியே புலம்பி, இங்குமங்கும் நடந்து, `ஐயோ! நாம் எங்ஙனம் இதை செய்தோம்? நமது மேசியாவை நாம் சிலுவையில் அறைந்து விட்டோமே!’ என்று விசனிப்பார்களென்று வேதம் கூறுகின்றது. அவர்கள் தங்கள் ஒரே பேறானவனுக்குப் புலம்புவது போல் அவருக்காகப் புலம்புவார்கள். யூதர்கள் உலகிலேயே மிக பக்தி வைராக்கியம் கொண்டவர்கள். அவர்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களாயினும், நமக்காக அவர்கள் குருடாக்கப்பட்டனர். ஆனால் நாமோ அதை அசட்டை செய்கிறோம். அப்படியானால் புறஜாதி சபைக்கு நேரிடவிருக்கும் நியாயத் தீர்ப்பு எவ்வளவு பயங்கரமாயிருக்கும்? மணவாட்டியாகிய நம்மை புறஜாதிகளினின்று தெரிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திற்காக அவர்கள் குருடாக்கப்பட்டனர். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் யாரென்பது இப்பொழுது நீங்கள் அறிந்து கொண்டீர்களா? அவர்கள் இரத்த சாட்சிகளாக மரித்த பரிசுத்தவான்கள் அல்ல. அவர்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டனர். யோசேப்பின் கிருபை அவன் சகோதரரிடம் உண்டானதுபோல், யூதர்களாகிய இவர்களிடம் தேவகிருபை உண்டாகி, அவர்கள் ஒவ்வொருவருக்கும் இயேசுவால் ஒரு அங்கி கொடுக்கப்படுகின்றது. யோசேப்பின் சகோதரர் யோசேப்பை எவ்விதமாவது ஒழிக்க எண்ணினர். ஆயினும் அவனுடைய கிருபை அவனுடைய சகோதரர் களுக்குக் கிடைத்தது. ‘பரவாயில்லை, பரவாயில்லை. நீங்களாக அதைச் செய்யவில்லை. தேவனே அதை நேரிடச் செய்தார். உங்களை உயிரோடு காப்பதற்கென தேவன் என்னை இப்புற ஜாதிகளிடம் அனுப்பினார். அவர்களிடமிருந்து நான் என்மனைவியை மணந்து கொண்டேன். நான் உங்களிடமே தங்கி இருந்திருப்பேனாகில் என் மனைவியை நான் அடைந்திருக்க முடியாது. அவளை நான் நேசிக்கிறேன். அவளும் எனக்குக் குமாரரைப் பெற்றாள். இப்பொழுது நான் உங்களையும் அழைத்துக் கொள்ளப் போகிறேன். நாமெல்லாரும் இனிமேல் ஒரே குடும்பமாக இனிது வாழ்வோம்’ என்று யோசேப்பு கூறினான். அவன் அவர்களிடம், ‘ஒன்றை மாத்திரம் கேட்க விரும்புகிறேன். என் தகப்பனார் இன்னமும் உயிரோடிருக்கிறாரா?’ என்றான். பென்யமீன் அந்த 1,44,000 பேர்களுக்கு முன்னடையாளமாயிருக் கிறான். பென்யமீனைக் கண்டபோது, யோசேப்பு என்ன செய்தான்? அவன் ஒடிப்போய் அவன் கழுத்iக் கட்டிக் கொண்டு முத்தம் செய்தான். அவன் குடும்பத்தை விட்டு பிரிந்தபிறகு அவனுடைய தாயார் பெற்றெடுத்தப் பிள்ளை தான் இந்த பென்யமீன். அவ்வாறே இயேசுவும் புறஜாதி மணவாட்டியை ஏற்றுக்கொள்ளச் சென்றிருந்தபோது, அந்த வைதீக (Orthodox) சபையாகிய யூத சபை பெற்றெடுத்த பிள்ளைகள் தாம் இந்த 144,000 பேர்... ஓ! அது உங்களுக்கு பரவசமூட்டவில்லையா? அவர்கள் யாரென்று அறிந்து கொண்டீர்களா? கவனியுங்கள், அவர்கள் யோசேப்பை ஒழிக்க முயன்ற போதிலும், யோசேப்பின் கிருபை அவர்களுக்குக் கிடைத்தது. அவ்வாறே யூதர்கள் இயேசுவை ஒழிக்க முயன்றனர். ஆனால் அவர் மறுபடியும் அவர்களிடம் வந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு அங்கியைக் கொடுத்து, அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவர்களிடம் அவருக்கு எவ்வித வெறுப்புமில்லை. ஏனெனில், ‘அவர்களெல்லாரையும் நான் எப்படியாவது இரட்சித்துக் கொள்வேன்’ என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் பழி வாங்க வேண்டுமென்று விரும்பினர் என்று பத்தாம் வசனம் உரைக்கின்றது. ஆனால் மணவாட்டி பழிவாங்க விரும்ப மாட்டாள். அவள் ஸ்தேவானைப் போன்று, ‘பிதாவே, இவர்களுக்கு மன்னியும்’ என்று சொல்லுவாள். எனவே, பழிவாங்க வேண்டுமென்று விரும்புகிறவர்கள் யூதர்களாகத்தான் இருக்க வேண்டும். இன்னும் சற்று காலம் காத்திருக்க வேண்டுமென்று அவர்களிடம் கூறப்படுகின்றது. அதை நான் மறுபடியும் படிக்கிறேன்; அவர்கள் : பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின் மேல் குடியிருக் கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத் தீர்ப்புச் செய்யாமலும் பழி வாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டு கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. அன்றியும், அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய (அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று முன் குறிக்கப்பட்டுள்ளனர்) தங்கள் உடன் பணிவிடைக் காரரும் (அது என்ன? தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலருக்குப் போதிக் கின்றனர்) தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்ச காலம் இளைப்பாற வேண்டும் என்ற அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அதாவது, அவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமென்று தேவனால் முன்னமே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேதவாக்கியம் அவ்வாறு கூறுகின்றது. அதுவரைக்கும் அவர்கள் இளைப்பாற வேண்டும். ‘இப்பொழுது நீங்கள் அங்கிகளைப் பெற்றுக் கொண்டீர்கள். ஆகவே நீங்கள் உன்னத வீட்டை அடைவீர்கள். சிறிது காலம் காத்திருங்கள்’ என்று அவர்களுக்குச் சொல்லப்படுகின்றது. அவர்கள் சகோதரர்கள் கொல்லப்படவேண்டும். அதாவது உபத்திரவ காலத்தில் அழைக்கப்படும் 144,000 பேர். நமக்கு இன்னும் சமயம் இருந்தால் நலமாயிருக்கும். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு நாம் வேறொரு முத்திரையைக் குறித்து தியானிக்கும் முன்னர் இதைப்பற்றி பேசலாம். இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் அந்திக்கிறிஸ்துவால் கொல்லப்பட வேண்டும். அவன் கடைசி முறையாக சவாரி செய்யும்போது, யூதர்களுடன் அவன் செய்திருந்த உடன்படிக்கையை முறிக்கிறான். இந்த 144,000 யூதர்கள் வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு சாட்சிகளின் மூலம் இரட்சிக்கப்படுகின்றனர். இவ்விரண்டு சாட்சிகளும் தீர்க்கதரிசனம் உரைக்க வேண்டுமென்று நீங்கள் வேதத்தில் படித்திருக்கிறீர்கள். அவர்கள் தானியேலின் எழுபது வாரங்களின் இரண்டாம் பகுதியில் தீர்க்கதரிசனம் உரைக்கின்றனர். அதுதான் கடைசி மூன்றரை வருடம். தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நாம் பேசினபோது, முத்திரைகளின் இரகசியங்களைப் பற்றி நாம் தியானிக்கும் சமயத்தில் அது நமக்கு அவசியமாயிருக்கும் என்று நான் கூறினேன். ஏன் அவ்விதம் கூறினேன் என்று எனக்கே தெரியவில்லை. அது நமக்கு அவசியமாயிருக்குமென்று ஏதோ ஒன்று என்னிடம் சொன்னது. அது இப்பொழுது உண்மையாயிருக்கிறது. மேசியா வருவாரென்றும் அவர் தீர்க்கதரிசினம் உரைப்பாரென்றும் தானியேல் கூறினான். இஸ்ரவேல் ஜனங்களுக்கு எழுபது வாரங்கள் விடப்பட்டிருந்தன. அந்த எழுபது வாரங்களின் மத்தியில் மேசியா சங்கரிக்கப்படுவார். அன்றாட பலியும் நீக்கப்படும். நான் கூறுவது சரியா? ஆனால் இன்னமும் மூன்றரை வாரங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. அவர் புறஜாதி மணவாட்டியை எடுத்துச் செல்வார். மணவாட்டி மேலே சென்றவுடனே, இரண்டு தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலரிடம் வருவார்கள். இரத்த சாட்சிகளாக மரித்த அந்த ஆத்துமாக்களின் பெயர்கள் - உண்மையான யூதர்கள் - புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அவர்கள் சன்மார்க்க வாழ்க்கை நடத்தி, யூதமார்க்கத்தை நல்லமுறையில் கடைபிடித்தனர். அவர்கள் எய்க்மன் (Eichmann) போன்றவரால் உத்தமமான மக்களை ஜெர்மானியர் சுட்டுக்கொன்றனர். அது மாத்திரமல்ல அவர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு அவர்களைக் கொன்று போட்டு, உடல்களை வேலிகளில் தொங்கவிட்டு, அவர்களைச் சுட்டெரித்தனர். ஹிட்லர், ஸ்டாலின், முசோலினி போன்ற கயவர்கள் யூதர்களை வெறுத்து அவர்கள் இரத்தத்தைக் குடித்தனர். நம் தேசம் யூதனுக்கு அவனுக்குரிய ஸ்தானத்தைக் கொடுப்பதால் இன்றும் நிலைநிற்கின்றது. ஒரு யூதனை நீங்கள் மதித்தால், தேவன் உங்களைக் கௌரவிப்பார். ஆனால் புறஜாதியாரில் தேவனுடைய கட்டளையைக் கைக்கொள்ளாதவர் இருப்பது போன்று யூதரிலும் உள்ளனர். ஆனால் ஒரு உண்மையான யூதனின் பெயரைத் தேவன் உலகத் தோற்றத்துக்கு முன்னரே புத்தகத்தில் எழுதி வைத்துள்ளார். பெயரெழுதப்பட்ட யூதர்கள் இப்பொழுது கொல்லப்படுகின்றனர். இது முற்றிலும் நிறைவேறினது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக்கான களங்கமற்ற யூதர்களை உலகிலுள்ள நாடுகள் கொன்று போட்டன. அவ்வாறு கொல்லப்பட்ட ஒவ்வொரு ஆத்துமாவும் பலிபீடத்தின்கீழ் காணப்பட்டு, நடந்தயாவற்றையும் உணர்ந்து கொண்டதாக வேதவாக்கியம் கூறுகின்றது. அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்படுகின்றன. ‘நாங்கள் இப்பொழுதே ராஜ்யத்துக்குச் செல்ல முடியாதா?’ என்று அவர்கள் கேட்கின்றனர். யூதருடைய ராஜ்யம் பூமியில் நிறுவப்பட வேண்டுமென்பது உங்களுக்குத் தெரியும். யோவான் ஸ்நானன் தன் செய்தியில் குறிப்பிட்டது ராஜ்யத்தின் சுவிசேஷமாகும். ஆனால் யூதருடைய ராஜ்யத்தைக் குறித்து இரண்டு தீர்க்கதரிசிகளும் பிரசங்கிப்பார்கள். ராஜ்யத்தின் சுவிசேஷமானது புறஜாதிகளுக்குப் பிரசங்கிக்கப்படுகின்றது. ஆனால் ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பிறகு யூதருடைய ராஜ்யம் இப்பூமியில் நிறுவப்படுகின்றது. இந்த இரண்டு சாட்சிகளும் எழும்பும் முன்னர், யூதர்கள் எய்க்மன் போன்றவரால் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்பட வேண்டுமென்று முன்குறிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தேவகிருபையினால் ஒரு வெள்ளை அங்கி கொடுக்கப்படுகின்றது. ஆமென். நான் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தாமதமாகிற தென்று நான் அறிகிறேன். பாவம், அவர்களெல்லாம் நின்றவண்ண மாகவே இருக்கின்றனர். சகோதரரே, கர்த்தர் உங்களுக்கு உதவி செய்வாராக! அந்நாளிலே உங்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கி கொடுக்கப்படுமென்று நான் நம்புகிறேன். அதிக நேரம் நிற்பதால் உங்கள் கால்கள் வலிக்கும். உங்களில் சிலர் நாள் முழுவதும் வேலை செய்கின்றீர்கள். ஆகவே நிற்பதனால் ஏற்படும் கஷ்டம் எனக்குத் தெரியும். பாவம், சில வயோதிப ஸ்திரீகளும் நின்று கொண்டிருக்கின்றனர். சில ஆண்கள் எழுந்து அவர்கள் ஆசனங்களை ஸ்திரீகளுக்குக் கொடுத்ததையும் நான் கவனித்தேன். குழந்தையைக் கையிலேந்திக் கொண்டிருந்த ஒரு ஸ்திரீக்கும் ஆசனம் கொடுத்ததையும் நானறிவேன். இதையெல்லாம் தேவனும் காண்கிறார். உங்களை அதிக நேரம் தாமதிக்க நான் விரும்பவில்லை. செய்தி என்னவென்பதை நீங்கள் புரிந்து கொள்ள நான் உதவியாயிருந்தால்.... அதுதான் என் விருப்பம். கவனியுங்கள், தானியேலின் எழுபது வாரங்களின் பிற்பகுதியில் மேசியா சங்கரிக்கப்பட வேண்டும். அது அந்த எழுபது வாரங்களின் மத்தியில் நிகழும் ஒரு சம்பவமாகும். ஏழில் பாதி எவ்வளவு? மூன்றரை, கிறிஸ்து எத்தனை வருடம் பிரசங்கித்தார்? (சபையார் ‘மூன்றரை வருடம்’ என்று பதிலுரைக்கின்றனர்.) அந்த ஜனங்களுக்கு எத்தனை வருடங்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றன? - மூன்றரை வருடங்கள். இந்த மூன்றரை வருட காலத்திற்கு முன்பு புறஜாதி மணவாட்டி ஏழு சபையின் காலங்களில் தெரிந்து கொள்ளப்பட்டு, எடுக்கப்படுகின்றாள். அதன் பின்னர், குருடாக்கப்பட்டதன் காரணமாக இரத்த சாட்சிகளாக மரித்து, பலிபீடத்தின் கீழ் காணப்படும் யூதர்களிடம் தேவன் வந்து,‘இது என்னவென்பதை அறிந்து கொண்டீர்களா? உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளை அங்கியைக் கொடுக்கப் போகிறேன்’ என்பார். அதற்கு அவர்கள், ‘இன்னும் எவ்வளவு காலம், ஆண்டவரே! நாங்கள் இப்பொழுதே புறப்பட்டுச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘இப்பொழுது இல்லை, உங்கள் உடன் சகோதரரான யூதர்கள் கொலை செய்யப்படும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். நீங்கள் கொலை செய்யப்பட்டது போல் அவர்களும் கொலை செய்யப்பட வேண்டும். மிருகம் அவர்களிடம் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்தபின்பு, அவர்களைக் கொன்று போடும்’ என்பார். வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டு சாட்சிகள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அவர்களுக்கு வல்லமை அளிக்கப்படுகின்றது. (இவர்கள் யாரென்பதை, கர்த்தருக்குச் சித்தமானால் நாம் இன்னும் சில நிமிடங்களில் கண்டு கொள்ளப் போகிறோம்) அவர்கள் யாரென்பதை வேதம் நமக்கு அறிவிக்கின்றது. ஆம், நிச்சயமாக அது அறிவிக்கின்றது. அவர்கள் ஆயிரத்து இருநூற்றறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் கூறுகின்றது. யூத நாட்கணக்கின்படி ஒரு மாதத்திற்கு முப்பதுநாட்கள் மாத்திர மேயுண்டு. ஆனால் ரோமன் நாட்கணக்கு அவ்வாறல்ல! நான் மூன்றரை வருடங்களை (நாற்பத்திரண்டு மாதங்களை) முப்பது நாட்களால் பெருக்கினால் நமக்கு கிடைப்பது ஆயிரத்து இருநூற்றருபது நாட்கள். இது மிகவும் அழகாகப் பொருந்துகின்றது. அதில் எவ்வித தவறும் இல்லை. இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் யூதரிடம் மூன்றரை வருட காலம் பிரசங்கிக்கின்றனர். அதன் விளைவால் 144,000 பேர்கள் தெரிந்து கொள்ளப்படுகின்றனர். இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் முறையே மோசேயும் எலியாவுமாம், அவர்களுடைய ஊழியத்தைக் கவனியுங்கள். அவர்கள் வேண்டும் போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளால் வாதிக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு. யார் அவ்விதம் செய்தது? - மோசே. அவர்கள் ஊழியத்தின் நாட்களிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு. மூன்றரை வருட காலம் வானத்தை அடைந்தது யார்? (சபையார், ‘எலியா’ வென்று பதிலுரைக்கின்றனர்). ஒரு மனிதன் மரித்தபிறகும் அவனுடைய பதவி மாறுவதில்லை. சவுல் பின்மாற்றமடைந்தான். யுத்தம் நேர்ந்தபோது, அவன் என்ன செய்வதென்று அறியாமலிருந்தான். அப்பொழுது தேசத்தில் ஒரு தீர்க்கதரிசி கூட இல்லை. எனவே அவன் எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயிடம் சென்றான். அவள் சாமுவேலின் ஆவியைக் கூப்பிட்டாள். சாமுவேல் எழுந்து வரும்போது, அவன் தீர்க்கதரிசியின் அங்கியை அணிந்திருந் தான். அது மாத்திரமல்ல, மரித்த பிறகும் அவன் தீர்க்கதரிசியாகவே இருந்தான். அவன், ‘கர்த்தர் உன் சத்துருவாயிருக்கும் போது, நீ என்னை எழுப்பிவரப் பண்ணினதென்ன? நாளைக்கு நீ என்னுடன் கூட இருப்பாய்’ என்றான். அவன் கூறினவாறே நிகழ்ந்தது. அவன் மரித்தும் தீர்க்கதரிசியாயிருந்தான். இந்த இரண்டு சாட்சிகளும் அவ்வாறே தீர்க்கதரிசிகளாயிருக்கின்றனர். இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்து சற்று ஆழமாக சிந்திக்கலாம். ஓ! நான் எவ்வளவாக தேவனுடைய வார்த்தையை நேசிக்கிறேன். ‘மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்’ என்று கூறப்பட்டுள்ளதில் வியப்பொன்றுமில்லை. மோசேவும் எலியாவும் மறுபடியுமாக அவர்கள் செய்த அதே கிரியைகளையே செய்கின்றனர். அதுதான் அவர்கள் எக்காலத்திலும் கொண்டிருக்கும் ஊழியமாம். இவர்கள் மரிக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும். எலியாவின் ஐந்தாம் முறை ஊழியத்தை அவன் நான்காம் முறை ஊழியத்துடன் சேர்த்து குழப்பமுற வேண்டாம். புறஜாதி சபை எலியாவின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவன் இரண்டு சாட்சிகளில் ஒருவனாக வரும்போது, யூதர்களுக்கென்று வருகிறான். எலியா நான்கு முறை வர முடியாது. ஏனெனில் நான்கு என்பது பிசாசின் எண்ணிக்கை. அவன் ஐந்து முறை வரவேண்டும். முதன் முறையாக அவன் எலியாவாக வருகிறான். இரண்டாவது முறை அவன் எலிசாவாகத் தோன்றுகிறான். அதற்கடுத்த முறை அவன் யோவான் ஸ்நானனாக வந்தான். நான்காம் முறை மல்கியா 4-ன்படி அவன் ஏழாம் சபையின் தூதனாகவும், ஐந்தாம் முறை மோசேயுடன் யூதர்களுக்காக - 144,000 பேர்களுக்காக - வருகிறான். ஆகவே இது ‘சபை எடுக்கப்பட்ட பின்னர் நிகழும், இதைக் குறித்து நீங்கள் குழப்பமுற வேண்டாம். ஐந்து என்பது கிருபையின் எண்ணிக்கையாகும். எனக்கு ஒரு விசித்திரமான உணர்ச்சி இப்பொழுது ஏற்படுகின்றது. இப்பொழுது நான் கூறப்போவதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுதல் அவசியம். மல்கியா 4ம் எலியா யூதர்களிடம் வருவதைக் குறித்தே சொல்லப்பட்டிருக்கிறது என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கலாம். அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மல்கியா 4ல் அவன் பிள்ளைகளுடைய இருதயங்களைப் பிதாக்களிடத்தில் திருப்புவான் என்று எழுதப்பட்டுள்ளது. இவ்விரண்டு ஊழியங்களிலுள்ள வித்தியாசம் என்னவென்பதை நான்காண்பிக்கிறேன். அவன் பிள்ளைகளுடைய விசுவாசத்தைப் பிதாக்களிடத்துக்கு திருப்புகிறவனாக வருவது, யூதர்களிடம் அவன் வருவதைக் குறிக்குமானால் அவன் கிறிஸ்துவை மறுதலிக்கிறான் என்று அர்த்தமாகிறது. அப்படியானால் அவன் மறுபடியும் அவர்களை நியாயப் பிரமாணத்திற்குக் கொண்டு செல்லவேண்டும், ஏனெனில் அவர்கள் முற்பிதாக்கள் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொண்டிருந்தனர். கவனியுங்கள். மல்கியா 4ல் கூறப்பட்டுள்ள ஊழியத்தை நிறைவேற்ற எலியா வரும்போது, அவன் தனியாக வருகிறான். ஆனால் வெளிப்படுத்தல் 11ல் கூறியபடி யூதர்களுக்கு ஊழியஞ் செய்ய அவன் வரும்போது, மோசேயுடன் காணப்படுகின்றான். ஆகவே இதைக் குறித்து குழப்பமுண்டாக வழியில்லை. எலியா சபையின் காலங்களின் கடைசி கட்டத்தில் வந்து அந்திக் கிறிஸ்து பறித்துக்கொண்ட பிள்ளைகளின் விசுவாசத்தை அப்போஸ்தல பிதாக்களின் மூல விசுவாசத்துக்குத் திருப்புவானென்பதை மல்கியா 4ம் அதிகாரம் எடுத்துரைக்கிறது. ஏனைய வேதவாக்கியங்களும் இதனுடன் நன்றாக இணைகின்றன. ஆனால் எலியா 144,0000 பேர்களுக்காக வரும்போது, அவன் ஒருவனாக வரவில்லை. இருவர் வருகின்றனர். எனவே இதைக் குறித்து குழப்பமுற வேண்டாம். வேதம் ஒரு போதும் பொய்யுரையாது. மகிமை! இந்த சத்தியம் எனக்கு வெளியரங்கமானபோது, ‘ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம்’ பின்பு சபை காலங்களில் அவன் மறுபடியும் தனிப்பட்டவனாக வருவதையும், முடிவில் யூதர்களுக்காக வரும்போது, அவன் மோசேயுடன் காணப்படுவதையும் நான்தரிசனமாகக் கண்டேன். ‘ஆண்டவரே, நான் உண்மையை அறிந்து கொண்டு விட்டேன்’ என்று நான் அவரிடம் கூறினேன். இங்கு யாராவது அதைக் குறித்து குழப்பமுற்றிருக்ககூடும். ஆகவே, இதை நான் உங்களுக்கு விளக்கமாக கூற வேண்டுமென்று அவர் என்னிடம் சொன்னார். இனியும் செய்ய வேண்டிய ஊழியத்திற்காக தேவன் அவர்களை உயிருடன் வைத்திருக்கிறார் என்பதை கவனிக்கவும். அவ்வூழியத்தை அவர்கள் நன்கு நிறைவேற்றுவார்கள். எலியாவின் ஆவி ஐந்து முறை ஊழியம் செய்கின்றது. மோசேயின் ஊழியம் இருமுறை காணப்படு கின்றது. அவர்களிருவரும் மரித்த நிலையில் இப்பொழுது இல்லை. மறுரூபமலையில் அவர்கள் உயிருள்ளவர்களாக, இயேசுவுடன் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் மரிக்க வேண்டும். மோசே மரித்துப் போனான். ஆனால் அவன் உயிரோடெழுந்தான். அவன் கிறிஸ்துவுக்கு எல்லாவிதங்களிலும் முன்னடையாளமாயிருக் கிறான். அவன் எங்கு புதைக்கப்பட்டான் என்பதை எவருமே அறியார். தேவ தூதர்கள் அவனைக் கொண்டு சென்றனர். அவனுடைய சவத்தை தூக்கிச் செல்லத் தேவ தூதர்கள் நியமிக்கப்பட்டனர். எந்த ஒரு மனிதனும் அவன் கொண்டு செல்லப்பட வேண்டிய இடத்திற்கு அவனைக் கொண்டு சென்றிருக்க முடியாது. அவன் எங்கு கொண்டுசெல்லப்பட்டான் என்பதையும் யாருமே அறியார். சாத்தானும்கூட அதை அறியவில்லை. அவன் மிகாவேல் தேவதூதனுடன் அவன் சரீரத்தைக் குறித்து வாக்குவாதம் செய்தான். அவன், ‘மோசேக்கு என்ன நேர்ந்ததென்று எனக்குப் புரியவேயில்லை. மலையின் மேல் ஏறி, நடுங்கிக் கொண்டே கானான் தேசத்தையும் இஸ்ரவேல் ஜனங்களையும் அவன் கண்ட காட்சி மாத்திரமே எனக்கு ஞாபகமிருக்கிறது. அது தான் நான் அவனைக் கடைசி முறையாகக் கண்டது’ என்றான். ஆம், அவன் மலையின் மேல் ஏறினான். நானும் என் ஜீவிய ஒட்டத்தின் முடிவில் அந்த மலையின் மேல் நிற்பேனாக! ஆம், ஐயா! என் நீக்ரோ சகோதரர் இங்கு வந்து, ‘என்னால் முடிந்தால் மோசே நின்ற அந்த மலையின் மேல் நானும் நிச்சயம் நிற்பேன்’ என்னும் அர்த்தம் கொண்ட பாட்டைப் பாடினது எனது நினைவுக்கு வருகின்றது. ஆம், ஐயா! அந்த மலையின் மேல் நானும் நிற்க விரும்புகிறேன். விசுவாசத்தில் நான் இப்பொழுதே அதன் மேல் நிற்கிறேன். எலியாவோ அதிகம் பணி புரிந்த காரணத்தால் மிகவும் களைப்புற்றிருந்தான். எனவே கர்த்தர் ஒரு இரதத்தை அனுப்பி அவனை வீட்டுக்கு அழைத்துக் கொண்டார். அவன் மரிக்கவேயில்லை. ஏனெனில் அவன் இன்னமும் செய்ய வேண்டிய வேலை உண்டு. வேறொருவன் எலியாவின் ஆவியைக் கொண்டவனாக வரலாம். ஆனால் எலியாவும் மோசேயும் மரணத்தை ருசி பார்க்க வேண்டும். அவர்கள் ஊழியம் முடிவடைந்த பின்னர், அவர்கள் மரணத்தை ருசிபார்க்கின்றனர். வெளிப்படுத்தல் 11ம் அதிகாரம் 7ம் வசனம் முதல் : அவர்கள் தங்கள் சாட்சியைக் சொல்லிமுடித்திருக்கும் போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடு யுத்தம் பண்ணி..... (ஓ அவர்களைக் காணவே அவனுக்கு சகிக்கவில்லை. பரிசுத்த உருளர்கள் மறுபடியும் வந்து விட்டனர் என்று அவன் எண்ணுகின்றான். எனவே அவன் அவர்களுடன் யுத்தம் செய்கிறான்).... அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். (இப்பொழுது என்ன நேரிடுகிறதென்று கவனியுங்கள்) அவர்களுடைய உடல்கள் மகாநகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்த மாய்ச் சொல்லப்டும், அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார் (எருசலேம்). அவர்கள் ஊழியம் முடிவடைந்த பின்னர், மரணத்தை அவர்கள் சந்திக்க வேண்டும். ஏழாம் தூதனின் ஊழியம் ஏன் மோசேக்கு அளிக்கப் படவில்லை? தேவன், ‘எலியாவே, நீ அதிக வேலை செய்து களைப் புற்றிருக்கிறாய். எனவே, நான் மோசேவை இவ்வூழியத்திற்கென்று அனுப்புகிறேன்’ என்று அவர் ஏன் சொல்லவில்லை. மோசேயின் ஊழியத்தை சற்று கவனியுங்கள், எலியா எல்லா தேசங்களுக்கும் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தாள். ஆனால் மோசே யூதர்களுக்கு மாத்திரம் நியாயப் பிரமாணத்தை அளித்தான். யூதர்கள், ‘நாங்கள் இன்னமும் நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்கிறோம்’ என்கின்றனர். ஆகையால், மோசே அவர்களுக்கென்று அனுப்பப்படு கின்றான். அவனுடன் கூட எலியாவும் காணப்படுகின்றாள். பாருங்கள், மோசே யூதர்களிடம் மாத்திரமே வருகிறான். அவன் யூதர்களுக்குத் தீர்க்கதரிசியாக விளங்கி, நியாயப் பிரமாணத்தை அளிக்கிறான். ஆனால் எலியா எல்லா தேசங்களுக்கும் தீர்க்கதரிசியாக இருப்பதால் அவன் புறஜாதிகளிடமும் வர முடிகிறது. எலியாவின் செய்தி என்ன? அவன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்ட ஸ்திரீகளும் ஸ்தாபனங்களுக்கும் விரோதமாக பிரசங்கித்தான். அவர்களை அவன் சின்னாபின்னமாக்கினான். வர்ணம் தீட்டியிருந்த அந்தப் பெண்ணை நாய்கள் தின்னும் என்று அவன் சொன்னான். எலியாவின் ஆவி மறுபடியும் யோவானின் மேல் வந்த போது அவன் வனாந்தரத்திலிருந்து வெளியே வந்து எலியா செய்ததையே செய்தான். அவன், ‘நீங்கள் இதைச் சார்ந்தவர்கள் அதைச் சார்ந்தவர்கள் என்று சொல்லவேண்டாம். தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்’ என்றான். அவன் ஏரோதியானை அணுகி, ‘நீ உன் மைத்துனனைக் கலியாணம் செய்து கொண்டது சரியா? நி செய்தது சிறிதேனும் நியாயமில்லை என்று தைரியமாகக் கூறினான். கவனியுங்கள். 144000 பேர் இரத்த சாட்சியாய் மரிக்கும் வரை, பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் காத்திருக்க வேண்டும். வேதவாக்கியங்கள் சரியாக இணைவதை நீங்கள் காண்கிறீர்களா? எனக்கு பிரசங்கத்திற்காக கொடுக்கப்பட்ட சமயம் முடிந்துவிட்டது. ஆனால் உங்களால் முடிந்தால், இன்னும் சில காரியங்களைக் கூற விரும்புகிறேன். இங்கு உஷ்ணமாயிருக்கிறதென்று எனக்குத் தெரியும். எனக்கும் வியர்க்கிறது. ஆனால் சில காரியங்களை உங்களிடம் கூற, நான் விரும்புகிறேன். அவை என் இருதயத்தை அனல் மூட்டும் அளவுக்கு நல்லவைகளாய் அமைந்துள்ளது. இதை நான் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக உங்களிடம் கூறுகிறேன். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு முன்பு, என் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் வெள்ளையங்கிகள் தரித்திருப்பதை நான் காண அவர் கிருபையாய் அனுமதித்தார். புறஜாதி மணவாட்டியை நான் கண்டதை உங்களிடம் கூறினது நினைவிருக்கிறதா? இப்பொழுது அவர்கள் அங்கிருக்கின்றனர். நான் அவர்களைக் கண்டபோது, அவர்களெல்லாரும் வெள்ளையங்கிகளை அணிந்திருந்தனர். ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னால் ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்து, சாய்ந்த வண்ணமாக, ‘எனக்கு ஐம்பத்து மூன்று வயதாவிட்டது. தேவனுக்கென்று ஏதாவது செய்ய வேண்டுமென்றால் உடனடியாக நான் செய்ய வேண்டும். இல்லையேல் சற்று கழிந்தால் ஒன்றும் செய்ய முடியாதபடிக்கு வயதாகிவிட்டிருக்கும்’ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவரது வருகையின் போது நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டுமென்னும் விருப்பம் எனக்கு எப்பொழுதும் இருந்து வந்தது. ஏனெனில் நான் ஒரு ஆவியாயிருக்க விரும்பவில்லை. நான் மரிப்பதற்கு பயப்படவில்லை. ஆனால் என்னமோ ஒரு ஆவியாக இருக்க நான் விரும்பினதில்லை. உடலைக் கொண்ட ஒரு மனிதனாகவே இருக்க நான் விரும்பினேன். இங்ஙனம் எண்ணியவாறே நான் படுத்துக் கொண்டிருந்த போது அதிசயமான ஒன்று சம்பவித்தது. இதை நான் தரிசனமென்று கூறத்தலைப்பட்டால், இத்தகைய ஒரு தரிசனத்தை நான் என் சிறு வயது முதல் கண்டதேயில்லை. சடுதியாக இச் சரீரத்தை விட்டுப்போகும் உணர்ச்சி எனக்கு ஏற்பட்டது. என் ஆவி என் சரீரத்தை விட்டுப் பிரிந்தது. நான் திரும்பிப் பார்த்த போது, என் சரீரம் மாத்திரம் என் மனைவியின் பக்கத்தில் படுத்திருப்பதைக் கண்டேன். இருதய அதிர்ச்சியின் காரணமாக நான் சடுதியாக இறந்துவிட்டதாக எண்ணிக் கொண்டேன். என் ஆவி சென்ற ஸ்தலத்தில் ஒரு பெரிய வயல் வெளியைக் கண்டேன். இது என்னவென்று நான் அதிசயப்பட்டுக் கொண்டிருக்கும் போது, லட்சக்கணக்கான வாலிபப் பெண்கள் வெள்ளையங்கி தரித்தவர்களாய், தலைமுடி இடுப்புவரைக்கும் வளர்ந்து, காலில் ஒன்றும் அணியாமல் என்னை நோக்கி ஒடிவருவதைக் கண்டேன். அவர்கள் மிகவும் ஆழகாயிருந்தனர். நான் ஸ்திரிகளை வெறுப்பவன் என்று எல்லோரும் கூறுவது வழக்கம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு நல்ல ஸ்தீரி விலையேறப் பெற்ற ஆபரணமாயிருக்கிறாள். நன்னடத்தை கெட்ட ஸ்திரிகளையே நான் வெறுக்கிறேன். இந்தப் பெண்கள் என்னருகில் வந்து, என்னை ஒவ்வொரு வராகக் கட்டித்தழுவி, ‘எங்கள் அருமை சகோதரனே’ என்றனர். இந்த விசித்திரமான காட்சியை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சகோதரிகளே, நான் இப்பொழுது கூறப்போவதை நீங்கள் மன்னிக்க வேண்டும். நமக்கு மாசற்ற சிந்தை இல்லாவிடில், நாம் கிறிஸ்தவர்களல்ல. நான் அவ்வாறு என் சிறு வயது முதல் வாழ்ந்து வந்திருக்கிறேன் என்பதை தேவனறிவார். நான் சிறுவனாயிருந்த போது கர்த்தருடைய தூதன் என்னிடம், நான் புகைபிடித்தல், மது அருந்துதல், அல்லது சரீரத்தை அசுசிப்படுத்தும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கூறியிருந்தார். தேவகிருபையினால் நான் அதை அனுசரித்து வந்திருக்கிறேன். இரட்சிக்கப்படுவதற்கு முன்பும்கூட நான் எந்தப் பெண்ணுடனும் சுற்றித் திரிந்ததில்லை. ஆனால் ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கட்டித் தழுவும்போது, அவர்கள் ஆரோக்கியமுள்ளவர்களா யிருந்தால், அவர்களிருவருக்கும் ஒரு உணர்ச்சி ஏற்படுகின்றது, ஏனெனில் அவர்கள் அணுக்களைக் (Cells) கொண்டவராயிருக் கின்றனர். ஆனால் நான் ஆவியில் சென்றவிடத்தில் அங்குள்ளவர் களுக்கு அணுக்கள் இல்லாததால் அவர்கள் கட்டித் தழுவினாலும் பாவம் செய்வதில்லை. அந்தப் பெண்களிடம் சகோதர அன்பு காணப்பட்ட தேயன்றி வேறல்ல. ஒரு ஸ்திரீ தனக்களிக்கப்பட்ட ஸ்தானத்தில் நிலை நின்றால், அவள் பூமியில் ஒரு விலையேறப்பெற்ற ஆபரணமாயிருக்கிறாள். அவள் அப்பொழுது கௌரவிக்கப்படும் ஒரு சிலையைப் போன்றிருக்கிறாள். ஆனால் அவள் நிலை மாறும்போது கிறிஸ்துவுக்கும் அந்திக் கிறிஸ்துவுக்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் அவர்களிருவருக்கும் உண்டு. அந்தப் பெண்கள் காண்பதற்கு மிகவும் வாலிபமாயிருந்தனர். நானும் வாலிபனைப் போலிருந்தேன். நான் இழந்து போயிருந்த தலைமயிரும் மறுபடியும் அடர்த்தியாக முளைத்துவிட்டது போன்று தோன்றியது. இது என்ன விசித்திரமாயிருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, என் மனைவி ஹோப் (Hope) வருவதைக் கண்டேன். அவள் இருபத்திரண்டு வயதில் மரணமடைந்தாள் என்பது உங்களுக்குத் தெரியும். அவள் முன்பிருந்ததுபோல அழகாகக் காணப்பட்டாள். அவளுக்குக் கறுத்த பெரிய கண்களும் நீண்ட கருமையான தலைமயிரும் இருந்ததென்று அனேகர் அறிவீர்கள். அவள் என்னை, ‘பில்லி’ என்று கூப்பிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளும், ‘எங்கள் அருமை சகோதரனே’ என்றழைத்தாள். அவள் என்னைக் கட்டித் தழுவிவிட்டு, பேசாமல் சென்றாள். ஒரு சத்தம் கேட்டது. நான் பார்த்தபோது, வாலிபர்கள் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஏறக்குறைய இருபது வயது நிரம்பியதுபோல் காணப்பட்டனர். அவர்களும் வெள்ளையங்கி தரித்து, காலணிகளின்றி என்னை அணுகி, கட்டித் தழுவி, ‘எங்கள் அருமை சகோதரனே’ என்றனர். நான் கீழே நோக்கியபோது, என் உடல் அங்கு இருப்பதைக் கண்டேன். ‘என்ன அதிசயம்’ என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு சத்தம் என்னிடம், ‘உன் ஜனங்களிடம் நீ சேர்க்கப்பட்டிருக்கிறாய்’ என்று சொன்னது. அந்த சத்தத்தை நான் காண முடியவில்லை. அப்பொழுது ஒருவர் என்னை ஒரு உயர்ந்த பீடத்தின்மேல் நிறுத்தினார். ‘ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்’ என்று நான் கேட்டபோது, அவர், ‘நீர் பூமியில் எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்தீர்’ என்றார். ‘எனக்கு ஒன்றுமே புரியவில்லை’ என்று நான் பதிலுரைத்து, ‘நான் இயேசுவைக் காண விரும்புகிறேன். அவரே என் ஜீவன்’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘அவர் இன்னும் உயர்ந்த ஸ்தலத்தில் இருக்கிறார்’ என்றார். மனிதன் மரித்த பின்பு ஆறாம் ஸ்தலத்துக்குப் போகிறான். ஆனால் தேவன் ஏழாம் ஸ்தலத்தில் இருக்கிறார். ‘இவர்களெல்லாம் என் ஜனங்களா? இவர்கள் பிரான்ஹாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா?’ என்று நான் கேட்டபோது, அவர், ‘இல்லை அவர்களெல்லாம் உன் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள்’ என்று பதில் கூறினார். அப்பொழுது ஒரு அழகிய ஸ்திரீ என்னைத் தழுவி, ‘என் அருமை சகோதரனே’ என்றாள். அந்த சத்தம் என்னிடம், ‘அவள் யாரென்று தெரிகிறதா?’ என்று கேட்டது. ‘தெரியவில்லையே’ என்று நான் கூறினேன். அதற்கு அது, ‘அவள் தொண்ணூறு வயது கடந்த பிறகு அவளை நீ கிறிஸ்துவினிடம் வழி நடத்தினாய், ஆகவே அவள் உன்னை அதிகம் மதிக்கிறாள். அவள் இனி ஒரு போதும் வயது சென்றவளாக மாறுவதில்லை’ என்றது. ‘இவர்கள் தத்ரூபமாக இருக்கிறார்களே! இவர்கள் வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அங்கு சதாகாலமும் இருப்பதனாலும் சலிப்பு கொள்வதில்லை’ என்று நினைத்துக்கொண்டே, ‘நான் ஏன் இயேசுவைக் காணமுடியாதா?’ என்று கேட்டேன். அப்பொழுது அந்த சத்தம் என்னிடம், ‘அவர் ஒருநாள் வருவார். அவர் முதலில் உன்னிடம் வந்து உனக்குத் தீர்ப்பளிப்பார்’ என்றது. அதற்கு நான், ‘இவர்களுக்கு வழிகாட்டினதினாலே அதை அனுசரித்து எனக்குத் தீர்ப்பளிக்க வேண்டுமா?’ என்று கேட்டேன். ‘ஆம்’ என்று பதில் வந்தது. ‘ஒவ்வொரு வழிகாட்டிக்கும் இவ்வாறே தீர்ப்பளிக்கப்பட வேண்டுமா? பவுலைக் குறித்து என்ன?’ என்றேன். ‘அவனும் அவனுடைய கூட்டத்துடன் நியாயந் தீர்க்கப்படுவான்’ என்றார். ‘பவுலின் கூட்டம் பிரவேசிக்குமானால் என் கூட்டமும் பிரவேசிக்க வேண்டும். ஏனெனில் அவன் பிரசங்கித்ததையே நானும் பிரசங்கித்தேன். அவன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தான். நானும் அவ்வாறே ஞானஸ்நானம் கொடுத்தேன்’ என்றேன். அதற்கு அவர்கள் எல்லோரும் ஒன்றாக, ‘அந்த நம்பிக்கையிலே தான் நாங்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறோம்’ என்றனர். ‘இதை மாத்திரம் நான் முன்னமே அறிந்திருந்தால், எல்லோரையும் இங்கு வரவழைத்திருப்பேன். அவர்கள் ஒருக்காலும் இதைக் காணத் தவறக்கூடாது’ என்று நினைத்தேன். அது மிகவும் பரிபூரணமுள்ள ஒரு காட்சியாயிருந்தது. பயபக்தியூட்டும் ஒன்றாக அது அமைந்திருந்தது. அதை விவரிப்பதற்கு அகராதியில் எந்த வார்த்தையும் கிடையாது. ‘அடுத்தது என்ன’ என்று நான் கேட்டபோது, அவர்கள், ‘இயேசு தீர்ப்பளித்த பிறகு, நாங்கள் பூமிக்குச் சென்று சரீரங்களைப் பெற்றுக் கொள்வோம்’ என்றனர். (அதைப்பற்றி நான் யோசிக்கவேயில்லை. அது வேதவாக்கியத்துடன் ஒத்திருக்கிறது). ‘அங்கு நாங்கள் புசிப்போம். இங்கு நாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை’ என்றனர். இது மிகவும் அற்புதமாயிருக்கிறதல்லவா? நான் ஏன் மரணத்திற்குப் பயந்திருந்தேன்? இது முற்றிலும் பரிபூரணமாயிருக்கிறதல்லவா? பாருங்கள். நாங்கள் அனைவரும் அங்கு பீடத்தின் (altar) கீழ் தான் இருந்தோம். அவர்கள் அங்கு இருந்து கொண்டு கர்த்தருடைய வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். இயேசு பரதீசுக்குச் சென்று ஆபிரகாம், ஈசாக்கு இன்னும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை உயிரோடெழச் செய்தார். அவர்களும் பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அனேகருக்குக் காணப்பட்டனர். அவ்விதமாகவே இப்பொழுதும் அவர் நித்திரையடைத்தவர்களின் சரீரங்களைப் பூமியின் தூளின்று எழுப்புவார். அப்பொழுது பரதீசியில் காத்திருக்கும் இவ்வாத்துமாக்கள் அவர் களுடைய சரீரங்களைப் பெற்றுக் கொள்வார்கள். ‘இது மிகவும் அதிசயம்’ என்று எண்ணியிருக்கும்போது, ஏதோ ஒன்று சத்தமிடுவதைக் கண்டேன். நான் திரும்பிப் பார்த்தபோது, நான் சவாரி செய்த ‘பிரின்ஸ்’ என்னும் குதிரை என்னருகில் நின்று அதன் தலையை என் தோளின்மேல் போட்டு என்னைத் தழுவ வந்தது. நானும் என் கையை அதன் மேலிட்டு, ‘பிரின்ஸ், நீ இங்கு இருப்பாய் என்று எனக்குத் தெரியும்’ என்றேன். பிறகு ஏதோ ஒன்று என் கையை நக்கியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. என் நாய் அங்கு நின்று கொண்டிருந்தது. ஷார்ட் (Short) என்பவர் அதற்கு விஷம் கொடுத்து கொன்றபோது, அவரைக் கொன்று பழிவாங்குவேன் என்று சபதம் செய்தேன். துப்பாக்கியை எடுத்துக் கொண்டு காவல் நிலையத்திலேயே அவரைச் சுட்டுக் கொல்ல நான் புறப்பட்டபோது, என் தகப்பனார் என்னைத் தடுத்துவிட்டார். நான் அந்த நாயின் கல்லறைக்குச் சென்று, எப்படியாவது அவரைக் கொன்று பழிவாங்குவேனென்று சபதம் செய்தேன். ஆனால் என்ன நேர்ந்தது தெரியுமா? அந்த மனிதனை நான் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்தி, அவருக்கு இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன். அவர் மரித்தபோது அவர் உடலை அடக்கம் செய்தேன். அவர் விஷம் வைத்துக் கொன்ற சில வருடங்களுக்குள் நான் இரட்சிக்கப்பட்டேன். அப்பொழுது அவரை வெறுப்பதற்கு மாறாக அவரை சிநேகித்தேன். அங்கு ஃபிரட்ஸ் (Fritz) என்னும் பெயர் கொண்ட என் நாய் என் கையை நக்கினவாறு நின்று கொண்டிருந்தது. அதைக் கண்டபோது, என்னால் அழமுடியவில்லை. அங்கு யாரும் அழவே முடியாது. அங்கு எல்லோரும் மகிழ்ச்சியுற்றிருக்க வேண்டும், விசனம் என்பது அங்கு காணப்பட முடியாது. அங்கு யாரும் மரிக்கவும் முடியாது. ஏனெனில் அங்கு எல்லாம் ஜீவனாகவே அமைந்திருந்தது. அவ்வாறே யாரும் அங்கு வயோதிப பிரயாயத்தை அடைய முடியாது. எல்லோரும் வாலிபராகவே இருந்தனர். இத்தகைய லட்சக்கணக்கானர் மத்தியில் நானும் இருந்தேன். அப்பொழுது அங்கு ஒரு சத்தம் கேட்டது. அது, ‘நீ சிநேகித்த அனைவரையும், உன்னை மனப்பூர்வமாக சிநேகித்த அனைவரையும், கர்த்தர் உனக்குக் கொடுத்திருக்கிறார்’ என்றது. இது நான் செய்த ஊழியத்திற்கு தேவன் அளித்த பலன். நான், ‘கர்த்தருக்கு ஸ்தோத்திரம்’ என்றேன். எனக்கு ஒரு விசித்திர மான உணர்ச்சி அப்பொழுது ஏற்பட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது கட்டிலின் மேல் கிடந்திருந்த என் உடல் அசையத் தொடங்கினது. அப்பொழுது நான், ‘எனக்கு இங்கிருந்து போவதற்கு மனதில்லை. என்னைப் போகவிட வேண்டாம்’ என்றேன். ஆனால் சுவிசேஷம் மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும். ஒரு நொடிப்பொழுதில் நான் மறுபடியும் கட்டிலின் மேல் படுத்துக் கொண்டிருந்தேன். இந்த என் அனுபவம் ‘வியாபாரிகளின் சத்தம்’ (Business Men’s Voice) என்னும் பத்திரிகையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்டு உலகம் பூராவும் சென்றது. சகோ. நார்மன் - அவர் இக்கூட்டத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன் - இதனை கைப்பிரதிகளாக அச்சடித்து வினியோகம் செய்தார். டாமி நிக்கலை (Tommy Nickel) நான் பாராட்டுகிறேன். அவர் இப்பொழுது வியாபாரிகள் சங்கத்தில் இல்லை, என்ன காரணமோ நான் அறியேன். திரித்துவக் கொள்கையைக் கடைபிடிக்கும் அந்தப் பத்திரிகையில் அவர், ‘பவுல் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து அவ்விதம் செய்யக் கட்டளையிட்டுள்ளார். நானும் அதையே செய்துள்ளேன் என்று நான் கூறியதை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே பிரசுரித்தார். அதை வாசித்த ஒரு போதகர், ‘சகோ. பிரான்ஹாம் உங்கள் தரிசனம் பெரும்பாலும் வேதவாக்கியங்களுடன் ஒத்திருக்கின்றது. ஆனால் குதிரை அங்கு இருந்ததாக நீர் கூறுவது மாத்திரம் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பரலோகம் மனிதருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதேயன்றி குதிரைகளுக்கல்ல’ என்று எழுதியிருந்தார். வேத தத்துவத்தினால் உண்டாகும் மனித ஞானத்தைப் பாருங்கள். அவர் அதை தரிசனம் என்று குறிப்பிட்டிருந்தார். அது ஒருக்கால் தரிசனமாய் இருந்திருக்கலாம். நான் வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூற விரும்பவில்லை. நான் முதலாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டு இத்தகைய சம்பவங்களைக் கண்டேனானால் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட பவுல் என்னவெல்லாம் கண்டிருப்பான்? அதைக் குறித்து மனிதர் பேசவும் கூடாது என்று அவன் கூறினான். எனக்கு நேர்த்ததும் எடுக்கப்படுதலா என்னவென்பது எனக்குத் தெரியவில்லை. நான் அந்த போதகருக்கு இவ்விதம் பதிலளித்தேன்; ‘என் அருமை சகோதரனே, நீங்கள் வேதவாக்கியங்களைக் குறித்து கொண்டுள்ள அறிவைக் குறித்து அதிசயமுறுகின்றேன். நான் பரலோகத்திலிருந்ததாகச் சொல்லவில்லை. பரதீசைப் போன்ற ஒரு ஸ்தலத்தில் இருந்ததாகவே நான் குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் கிறிஸ்து அதற்கும் உயரமாயுள்ள ஒரு ஸ்தலத்தில் இருந்ததால். உங்கள் சந்தேகம் தீரவேண்டுமானால், வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். இயேசு பரலோகத்திலிருந்து புறப்பட்டு வரும்போது வெள்ளைக் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு வருகிறார். (வெளி. 19.11-14). அது மாத்திரமல்ல, அவருடன் காணப்படும் பரிசுத்தவான்கள் அனைவரும் வெள்ளைக் குதிரைகளின்மேல் காணப்படுகின்றனர் என்பதை அறியவும்’. எலியாவைக் கொண்டு சென்ற குதிரைகள் எங்கிருந்து வந்தன? மனித சிந்தை அதில் தவறு காண விழைவதைப் பாருங்கள். யோவான் துன்புறுத்தப்பட்ட அவனுடைய சகோதரரைக் காண அனுமதிக்கப்பட்டான். அவ்வாறே நானும் கர்த்தருடைய வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும் என் சகோதரரையும் மற்ற பரிசுத்தவான் களையும் காண தேவனாகிய கர்த்தர் அனுமதித்தார். கவனியுங்கள். நான் கண்ட பரிசுத்தவான்கள் பலிசெலுத்தப்படும் பீடத்தின் கீழ் இல்லை. ஆனால் ஐந்தாம் முத்திரையில் காணப்படும் ஆத்துமாக்கள் தாங்கள் கடைப்பிடித்திருந்த கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்ததால், பலிபீடத்தின் கீழ் காணப்படுகின்றனர் (இதை நீங்கள் நன்கு கவனிக்க விரும்புகிறேன். இன்னும் பத்து நிமிடங்களுக்குள் சரியாக 10.00 மணிக்கு முடித்து விடுகிறேன்) கர்த்தர் எனக்குக் காண்பித்த மணவாட்டி பலிபீடத்தின் கீழ் காணப்படவில்லை. ஏனெனில் அவள் ஜீவனுள்ள தேவன் கிருபையைhய் அளித்துள்ள மன்னிப்பை ஏற்றுக் கொண்டதன் விளைவாக வெள்ளையங்கியை கிறிஸ்துவினிடமிருந்து பெற்றுக் கொண்டாள். ஐந்தாம் முத்திரை நமக்குத் திறக்கப்பட்டு விட்டதென நான் முற்றிலும் நம்புகிறேன். தேவனிடத்திலிருந்து நான் தெளிவான வெளிப்பாட்டைப் பெற்று அதைச் சுத்த மனசாட்சியுடன் உங்களுக்கு அளித்தேன். நான் அதை ஊகித்து உங்களுக்குப் போதிக்கவில்லை. எக்காலத்தும் நான் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயுள்ளவன் என்பதை நீங்கள் அறிவீர்கள். முத்திரைகள் திறக்கப்படுவதன் மூலம் அதன் உண்மை புலப்பட்டு விட்டது. ஐந்தாம் முத்திரை திறக்கப்பட்டதனால், ‘ஆத்துமாக்கள் உறங்குதல்’ (Soul Sleeping) என்னும் போதகம் தவறென்பது ருசுவாகிவிட்டது. அப்போதகத்தை விசுவாசிப்பவர் சிலர் இங்குள்ளனர் என்று நானறிவேன். ஆனால் அது தவறென்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டு விட்டது. அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் உயிரோடுள்ளனர். சரீரங்கள் மாத்திரமே கல்லறைகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்கள் தேவசமூகத்தில் பீடத்தின் கீழ் உயிரோடுள்ளன. இந்த விஷயத்தில் என் அருமை சகோதரனான சகோ. உரியா ஸ்மித் (Bro. Uria Smith) என்பவருடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. அவரைச் சார்ந்த சிலர் இங்கு அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். அவர் டாக்டர் பட்டம் பெற்ற மேதாவி. அது மாத்திரமல்ல. அவர் ஒரு நல்ல போதகரும், நல்ல எழுத்தாளருமாம். ‘வெளிப்படுத்தலில் காணப்படும் தானியேல்’ (Daniel of Revelation) என்னும் புத்தகத்தின் ஆக்கியோன் அவரே. அவர் போதகத்தைப் பின்பற்றும் உங்களுக்கு இதைக் கூற விரும்புகிறேன். அதனால் நான் இறுமாப்புள்ளவன் என்று எண்ண வேண்டாம். ‘ஆத்துமா உறங்குதல்’ என்னும் போதகத்தை வலியுறுத்த எண்ணி, பரலோகத்தில் பலிபீடம் இல்லையென்றும், தூபம் காட்டும் பீடம் ஒன்று மாத்திரமேயுண்டு என்றும் சகோ. ஸ்மித் கூறியுள்ளார். அந்த அருமை சகோதரனுடன் கருத்து வேறுபாடு உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்துடன் நான் இதைக் கூறவில்லை. அவரை மற்ற கரையில் நான் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் இந்த கடைசி நாட்களில் ஐந்தாம் முத்திரை உடைபடும்போது, அந்தப் போதகம் தவறென நிரூபிக்கப்படுகின்றது. அவர்கள் மரிக்கவில்லை, அவர்களுடைய ஆத்துமாக்கள் உயிரோடுள்ளன. கவனியுங்கள். பரலோகத்தில் பலிபீடம் இல்லையெனில், பாவத்திற்கென செலுத்தப்பட்ட பலி - ஆட்டுக்குட்டியானவர் - எங்குள்ளது? அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் கிடக்கும் ஸ்தலம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா? அங்குதான் அவர் இரத்தம் காணப்படுகின்றது. தூபம் என்பது எரிக்கப்படும் வாசனைத் திரவியமாம். அது பரிசுத்தவான்களின் ஜெபங்கள் என்று வேதம் கூறுகின்றது. பலிபீடத்தின் மேல் பலி இல்லாவிடில், ஜெபங்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. பலிபீடத்தின்மேல் காணப்படும் இரத்தமே, ஜெபங்கள் தேவனுடைய சமூகத்தையடைய அனுமதிக்கின்றது. சகோ. ஸ்மித் கூறியது தவறென்பதை நான் சகோதர அன்புடனும் அவருடைய எழுத்துக்களின்மேல் நான் கொண்டுள்ள அபிமானத்துடனும் கூறுகின்றேன். அவருடன் கருத்துவேறுபாடு கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எனக்கில்லை. ஐந்தாம் முத்திரை இதை தெளிவாக்கியுள்ளது. இதைப்பற்றிய கேள்விகளை நான் எதிர்பார்க்கிறேன். உடன்படிக்கை பெட்டி இப்பொழுது எங்குள்ளது, ஜெபங்கள் அங்கு அடைவதற்கென பாவ நிவிர்த்தியுண்டாக்கினவர் - அடிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டியானவர் - எங்குள்ளார்? ‘பூமிக்குரிய இக்கூடாரம் அழிந்து போனாலும், நித்திய வீடு பரலோகத்திலே உண்டு’ என்று வேதம் கூறுகின்றது. அங்கு தான் நான் இப்பரிசுத்தவான்களைக் கண்டேன். இப்பொழுது நான் வெளிப்படையாய் கூறப்போவதை சகோதரிகள் மன்னிக்க வேண்டுகிறேன். ஒரு தாயார் கருத்தரிக்கும்போது, அந்தக் குழந்தையின் தசைவளர்ந்து, அது கையையும் காலையும் ஆட்டுகின்றது. அது இயற்கையான சரீரம். இயற்கை அந்தச் சரீரத்தை வளரச் செய்கின்றது ..... குழந்தை பிறப்பதற்கு சற்று முன்பு, கர்ப்பிணியாயுள்ள உங்ஙகள் மனைவியை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அச்சமயம் அவள் மிகவும் அன்பாகவும், இனிய சுபாவமுள்ளவளாகவும் காணப்படு வாள், அவள் வாழ்நாள் முழுவதும் அங்ஙனம் இல்லையென்றாலும், குழந்தை பெறப்போகும் சமயத்திலாவது இனிய சுபாவமுள்ளவளாய் இருப்பாள். அது எதைக் காண்பிக்கிறது? அந்தக் குழந்தை பிறந்தவுடன் ஆவிக்குரியஜீவன் அக்குழந்தைக்குள் பிரவேசிப்பதை அது எடுத்து காண்பிக்கின்றது. ஆவிக்குரிய சரீரம் இயற்கை சரீரத்துடன் ஒன்றுபடுகின்றது. நாமெல்லாரும் பரிசுத்த ஆவியால் ஜெனிப்பிக்கப் பட்டிருக்கிறோமென வேதம் கூறுகின்றது. தேவகுமாரனாகிய கிறிஸ்து நமக்குள் உருவாகிக் கொண்டிருக்கிறார். பூமிக்குரிய நம் சரீரம் அழிந்துபோகும் போது, நமக்குள் இருக்கும் ஆவிக்குரிய சரீரத்தைப் பெற்றுக்கொள்ள வேறொரு சரீரம் அங்கு காத்துக் கொண்டிருக்கிறது. அழிவுள்ள சரீரம் அப்பொழுது அழியாமையைத் தரித்துக்கொள்கிறது - பூமிக்குரியது பரலோகத்துக் குரியதைத் தரித்துகொள்ளும். நான் சொல்லுகிறது உங்களுக்குப் புரிகின்றதா? மாம்சத்துக்குரிய சரீரம் பாவமுள்ளது. ஆனால் அது போன்ற வேறொரு சரீரத்துக்குள் நாம் அங்கு பிரவேசிக்கிறோம். அந்த மகிமைக்குரிய சரீரத்தில் அவர்களைக் காணவும் அவர்களை என்கைகளால் தொடவும் கிடைத்த சிலாக்கியத்திற்காக நான் கர்த்தருக்கு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். உங்கள் போதகனும் சகோதரனும் என்ற ரீதியில் அவர்களை நான் அச்சரீரத்தில் கண்டேன் என்று உறுதி கூறுகிறேன். மோசேயையும் எலியாவையும் பாருங்கள். மோசே மரித்தான். எலியா மரிக்காமல் பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவர்களிரு வரும் மறுரூப மலையில் ஐம்புலன்களையும் கொண்டவர்களாய், இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு அவருடன் பேசிக் கொண்டிருந்த தாகக் காணப்பட்டனர். அவர்கள் எத்தகைய சரீரம் பெற்றிருந்தனர்? சாமுவேலைப் பாருங்கள். அவன் மரித்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு எத்தோரின் மந்திரவாதியால் வெளியே கொண்டு வரப்பட்டான். சவுல் கூறினதை அவன் கேட்டான். அவனும் சவுலுடன் பேசி, வரப் போகும் காரியங்களை அறிவித்தான். அவன் மரித்த பிறகும் அவனுடைய ஆவியின் தன்மை மாறவில்லை. அவன் அப்பொழுதும் தீர்க்கதரிசி யாகவே இருந்தான். அவ்வாறே எலியாவின் ஆவி ஒரு மனிதனின் மேல் வரும் போது, எலியாவைப் போன்றே அவன் காணப்படுவான், அவன் வனாந்தரத்துக்கு செல்வான். அவன் வனாந்தரத்தின் மீது பிரியம் கொண்டிருப்பான். நல்லொழுக்கம் கெட்ட பெண்களை அவன் வெறுப்பான். அவன் ஸ்தாபனங்களுக்கு விரோதமாயிருப்பான். அவன் யாரையும் சார்ந்திருக்க மாட்டான். அவன் தன்மை அவ்வாறிருக்கும். ஒவ்வொரு முறையும் அந்த ஆவி வரும்போது அதன் தன்மை மாறுவதில்லை. மோசேயின் ஆவி ஒருவன் மேல் வரும்போதும், அவன் மோசே செய்தவைகளையே செய்வான். வெளிப்படுத்தல் 22:8-லும் நாம் அதையே காண்கிறோம். கிறிஸ்துவின் மரணத்திற்கும் சபை எடுக்கப்படுதலுக்கும் இடையேயுள்ள காலத்தில் எய்க்மன் போன்றவரால் கொல்லப்பட்ட உண்மையான யூதர்கள் பலிபீடத்தின் கீழ் காணப்படுகின்றனர் என்று இம்முத்திரை உடைக்கப்பட்டதன் மூலமாக நாமறிகிறோம். அவர்கள் பேசுகின்றனர், பேசுவதைக் கேட்கின்றனர்; அவர்கள் ஐம்புலன்களையும் கொண்டுள்ளனர் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் கல்லறைகளில் ஒன்றுமறியாத நிலையில் நித்திரை செய்து கொண்டிருக்கவில்லை. அவர்கள் விழித்துக் கொண்டு ஐம்புலன்களும் உடையவர்களாயிருக் கின்றனர். இன்று விடியற்காலை கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்களித்த வெளிப்பாட்டின் மூலம் ஐந்தாம் முத்திரையும் திறக்கப்பட்டுவிட்டது என்று நானறிவேன். அவர் உங்கள் மேலும் என் மீதும் வைத்திருக்கிற கிருபையினிமித்தம் இவ்வெளிப்பாட்டை நமக்களித்தார். என்னாலான வரை அவருடன் நெருங்கி வாழத் தீர்மானித்திருக்கிறேன். நான் உங்களுடன் அவரை மகிமையில் சந்திக்கும்வரை, மற்றவர்களும் அவருடன் நெருங்கி வாழவேண்டுமென்று போதித்து வருவேன். முதல் ஐந்து முத்திரைகளும் நமக்குத் திறக்கப்பட்டு விட்டன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் இம்முத்திரை திறக்கப்பட்டதைக் கண்ட நாம் இப்பொழுது தேவனுடைய சமூகத்தில் அமைதியாயும் பயபக்தியாயும் இருப்போம். தேவன் தாம் சிநேகித்த தம் சொந்த பிள்ளைகளைக் குருடாக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில் அவருடைய நீதியின்படி பாவம் நியாயத் தீர்க்கப்படவேண்டும். சற்று யோசித்துப் பாருங்கள். அவருடைய நீதியும் பரிசுத்தமும் நீதியைக் கோருகின்றது. தண்டனையற்ற ஒரு சட்டம் சட்டமேயல்ல, தேவன் தாம் ஏற்படுத்தின கட்டளைகளை எதிர்த்தால் அவர் தேவனாயிருக்க முடியாது. ஆகவேதான் அவர் மனிதனாக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. பாவப் பரிகாரத்திற்கென்று சாதாரண ஒருவனை அவர் தெரிந்துகொள்ள முடியவில்லை. நியாயத்தைக் கடைப்பிடிப்பதற்கென இயேசுவே குமாரனும் தேவனுமாக வேண்டியதாயிருந்தது. தேவனே அந்த தண்டனையை ஏற்றுக்கொண்டார். அதை வேறொருவர் மீது சுமத்துவது நியாயமாய் இருக்காது. எனவே, தேவன் இயேசுவாக மாம்சத்தில் வெளிப்பட்டு இம்மானுவேல் என அழைக்கப்பட்டார். அஞ்ஞான புறஜாதிகளினின்று ஒரு கூட்டத்தை மணவாட்டியாகத் தெரிந்துகொள்ள, அவர் தம் சொந்த பிள்ளைகளைக் குருடாக்கி, அவரைப் புறக்கணித்தனிமித்தம் அவர்களைத் தண்டிக்க வேண்டியதாயிருந்தது. ஆனால் அவருடைய கிருபையோ அவர்களுக்கு வெள்ளையங்கிகளை அளித்தது. நமக்குத் தருணம் அளிக்க எண்ணி அவர் இவ்விதம் செய்திருக்கும்போது, அதை நாம் எங்ஙனம் உதறித் தள்ள முடியும். இன்றிரவு இக்கட்டிடத்தில் தேவன் செலுத்திய விலைமதிக்க முடியாத கிரயத்தை இதுவரை உதறித் தள்ளினவர் யாராகிலும் இருந்து, இப்பொழுது அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் நீங்கள் இரத்த சாட்சிகளாக மரிக்காமலே உங்களுக்கு வெள்ளையங்கிகள் கொடுக்கப்படும். கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தட்டி கொண்டிருப்பாரெனில், நீங்கள் ஏன் அவரை ஏற்றுக் கொள்ளக்கூடாது? நாம் மறுபடியும் தலைகுனிவோம். தேவன் உங்களுக்காக சிந்தின இரத்தத்தின் பேரில் விசுவாசம் வைத்து அவரை ஏற்றுக் கொள்ள விரும்பினால்.... அவர் பட்டகஸ்தியை எந்த மனிதனும் படவில்லை. அவருடைய துயரம் இரத்தக் குழாய்களின் வழியாய் ஓடி, அவர் இரத்தத்திலிருந்து தண்ணீரை வேறுபிரித்தது, அவர் கல்லாரிக்குச் செல்லும் முன்னர், அவருடைய சரீரத்திலிருந்து இரத்தத் துளிகள் வெளிவந்தன. வேண்டுமானால் அவர், இக்கஸ்தியை ஏற்காது மறுத்திருக் கலாம். ஆனால் அவர் உங்களுக்காகவும் எனக்காகவும் மனப்பூர்வமாய் பாடுபட்டார். அத்தகைய இணையற்ற அன்பை நீங்கள் புறக்கணிக்கலாமர? அவர் நமக்காக முத்திரையைத் திறந்ததன் மூலமாக அவருடைய அன்பை நமக்கு வெளிப்படுத்தினார். அவர் செய்த எல்லாவற்ற்றிகாகவும் உங்கள் ஜீவியத்தை அவருக்குப் பரிபூரணமாக அர்ப்பணிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும். இப்பொழுதும் அவர் உங்களை அந்திக்கிறிஸ்துவின் கரங்களிலிருந்து விடுவிக்க சித்தமுள்ளவராயிருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள விரும்பினால், அதன் அறிகுறியாக உங்கள் கைகளை உயர்த்தி, தேவனே, நீர் கிருபையாக அளிப்பதை நான் ஏற்றுக் கொள்வேன் என்பதற்கு அடையாளமாக என் கையை உயர்த்துகிறேன். சகோ. பிரன்ஹாமே, நான் உண்மையுள்ளவனாய் ஜீவிப்பதற்கென உமது ஜெபம் எனக்கவசியம்’ என்று சொல்லுங்கள். காலங்கள் தோறும் என்ன நிகழ்ந்ததென்று வேதவாக்கியங்கள் மூலம் நமக்கு முற்றிலுமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கடந்த இருபத்தைந்து அல்லது முப்பது வருட காலமாக அது உறுதியாக்கப்பட்டு வருகிறது. இதுவரை நிகழ்ந்தது என்னவென்றும் இனி நிகழவிருப்பது என்ன வென்றும் வேதம் நமக்குத் திட்டவட்டமாக எடுத்துரைக்கிறது. கிறிஸ்து நமக்கென்று செய்து முடித்த கிரியைகளின் மேல் விசுவாசம் கொண்டு ஆசனத்தில் அமர்ந்தவாறே உங்கள் கைகளையுயர்த்தி, ‘இந்த நிமிடம் முதற்கொண்டு நான் கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு என் வாழ்நாள் முழுவதும் அவருக்கென்று ஜீவிப்பேன். அவர் என்னைப் பரிசுத்த ஆவியால் நிரப்பவேண்டுமென்று ஆசிக்கிறேன்’ என்று கூறுங்கள். நீங்கள் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளாமலிருந்தால், தண்ணீர் குளம் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம், தேவனாகிய கர்த்தரே, அனேக கரங்கள் இப்பொழுது உயர்த்தப்பட்டன. அனேக வருடங்களுக்கு முன்னர் பாவநிவர்த்திக்கென உம்முடைய இரத்தத்தை சிந்தின கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நீர் ஒரு போதும் மாறுவதில்லையென்று நான் நிச்சயம் அறிந்திருக்கிறேன், கடந்த சில வருடங்களாக நீர் எங்கள் மத்தியில் செய்து கொண்டு வருவதையும், முத்திரைகளைத் திறந்து கொடுப்பதையும் ஆதாரமாகக் கொண்டு, கிருபையின் வாசல் அடைபடத் தொடங்கிவிட்டதென்றும், உம் ஜனங்களை மீட்டுக் கொள்ள வருவதற்கு நீர் இப்பொழுது ஆயத்தமா யிருக்கிறீர் என்பதையும் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். வாசல் திறந்திருக்கும்போதே, இந்த அருமையான ஆத்துமாக்கள் உள்ளே வரட்டும். அவர்கள் இப்பொழுது தங்கியுள்ள சரீரமாகிய கூடாரம் ஒருநாளில் அழிந்துபோம், நீர்கிருபையாய் அளித்துள்ள இரட்சிப்பை விசுவாசித்து ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக அவர்கள் கைகளை உயர்த்தினர். கர்த்தாவே, இன்றிரவே, இயேசு கிறிஸ்துவின் நீதியின் அங்கியை அவர்களுக்களித்து, அவர்கள் ஆத்துமாக்களை உடுத்துவியும், அப்பொழுது அவர்கள் கிறிஸ்துவின் இரத்தத்தினால் பரிபூரணப்பட்டு அந்நாளில் உமக்கு முன்னால் நிற்கத் தகுதியைப் பெறுவார்கள், அந்நாள் அருகாமையிலுள்ளது என்று நாங்கள் அறிவோம். தேவனாகிய கர்த்தாவே, இயேசுகிறிஸ்துவின் நாமத்திலுள்ள ஞானஸ்நானம் சரியென்னும் வெளிப்பாட்டை எனக்களித்திருக்கிறீர். யோவான் ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றவர், பரிசுத்த ஆவியைப் பெற மறுபடியும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில் பவுல் அவர் களுக்குக் கட்டளையிட்டான். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ் நானம் பெறாதவர் இங்கு இருப்பார்களானால், சத்தியத்தை அவர்களுக்கு நீர் உணர்த்திக் காண்பித்து அவர்கள் உமக்குக் கீழ்ப்படிய அருள்புரியும். அவர்கள் அவ்விதம் கீழ்ப்படிந்து ஏற்றுக்கொள்வார்களானால், பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வாழ்நாள் முழுவதும் அவர்களை நிரப்பும் பலிசெலுத்தப்பட்ட தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவர்களை உமது கரங்களில் சமர்ப்பிக்கிறேன். ஆமென். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் கைகளை உயர்த்தினவர்களே, பரிசுத்த ஆவியானவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, மனந்திருப்பின பாவிகளுக்கென சொல்லப்பட்டிருக்கும் தேவனுடைய வார்த்தையைப் பின்பற்றுங்கள். பரலோகத்தின் தேவன் தாமே நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் இவ்வுறுதிக்காக உங்களுக்குப் பலனளிப்பாராக! நாளை இரவு உங்கள் காகிதங்களையும் பென்சில்களையும் கொண்டுவாருங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் நாளையும் சரியாக 7.30 மணிக்கு இங்கு கூடலாம். கர்த்தர் ஆறாம் முத்திரையை எனக்குத் திறந்து காண்பிக்க வேண்டுமென்றும் அவர் வெளிப்படுத்தினவாறே நான் அதை உங்களுக்கு எடுத்துக் காண்பிக்க வேண்டுமென்றும் எனக்காக ஜெபியுங்கள். நமக்காக மரித்து நம்மை மீட்டுக்கொண்ட அவருக்குத் துதிகளை ஏறெடுத்து நாம் பாடுவோமாக. நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில். ******* ஆறாம் முத்திரை மார்ச் 23,1963 மாலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா சற்று நேரம் நாம் தலைவணங்குவோம். ஆண்டவரே, ஆராதனைக்கென்று நாங்கள் மறுபடியும் ஒன்று கூடுகிறோம். பழைய ஏற்பாட்டின் காலங்களில் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களைப் பெற அவர்கள் சீலோவிலே (Shiloh) கூடி வந்ததை நாங்கள் நினைவு கூறுகிறோம். உம் வார்த்தையைக் கேட்க நாங்கள் இன்றிரவு கூடி வந்துள்ளோம். ஆட்டுகுட்டியானவர் ஒருவரே முத்திரைகளை உடைக்கவும், அதை அவிழ்க்கவும் பாத்திரவான் என்று நாங்கள் வேதத்தில் வாசிக்கின்றோம். பரம பிதாவே, ஆறாம் முத்திரையைக் குறித்து நாங்கள் இன்றிரவு சிந்திக்கப்போவதால், ஆட்டுக்குட்டியானவர் அதை எங்களுக்குத் திறந்து தரவேண்டுமென்று கெஞ்சுகிறோம். வானத்திலாவது பூமியிலாவது ஒருவனும் அதைத் திறக்கப் பாத்திரவானாய்க் காணப்படவில்லை. ஆகவே, எல்லாம் வல்ல நீர் இன்றிரவு இம்முத்திரையை உடைத்து, காலமாகிய திரைக்குப் பின்னால் இருப்பவைகளை நாங்கள் காண அருள் புரியும். பாவமென்னும் அந்தகாரம் சூழ்ந்துள்ள இந்நாட்களில் அது எங்களுக்கு ஒத்தாசையாக இருந்து, தைரியத்தையளிக்குமென்று நம்புகிறோம். உம் சமூகத்தில் எங்களுக்குக் கிருபை கிடைக்கச் செய்யும். நாங்கள் எங்களை உமக்கும் உமதுவார்த்தைக்கும் சமர்ப்பிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். மாலை வணக்கம், நண்பர்களே, தேவனுடைய ஆராதனைக்கு மறுபடியும் வந்துள்ளதை நான் சிலாக்கியமாகக் கருதுகிறேன். நான் வர சற்று தாமதமாகிவிட்டது. நம் சபையின் அங்கத்தினர் ஒருவர் மரிக்கும் தருவாயில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டு அங்கு சென்றிருந்தேன். அந்த மனிதனின் தாயார் நமது ஆராதனைக்கு வருபவர். மரிக்கும் தருவாயிலிருந்த அவருக்கு ஏறக்குறைய என் வயது இருக்கும். ஜெபித்த மாத்திரத்தில் அவர் எழுந்து உட்கார்ந்து கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார். நமது பாவங்களை நாம் அறிக்கையிட்டு, சரியானவைகளை மாத்திரம் செய்து, அவருடைய இரக்கங்களுக்காக அவரை நோக்கிக் கூப்பிடும் போது, அவர் நமக்கு வேண்டியவைகளை அளிக்க சித்தமுள்ளவ ராயிருக்கிறார். இங்கு உஷ்ணமாயுள்ளது என்று நானறிவேன் (உஷ்ணமளிக்கும் உபகரணம் மூடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்). வெளிச்சமற்ற ஒரு அறையில் கர்த்தருடைய வெளிப்பாட்டுக்காக நான் காத்திருப்பது இது ஏழாம் நாளாகும். அறையில் மின்சார விளக்குகளைத் தவிர வேறு வெளிச்சம் எதுவுமில்லை. அங்கு நான் வேதத்தைப் படித்துக் கொண்டும் தேவன் இம்முத்திரைகளைத் திறக்க வேண்டுமென்றும் ஜெபித்துக் கொண்டு வருகிறேன். அனேகர் கேள்விகளை எழுதி அனுப்பியுள்ளனர். பெரும் பாலார் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை எங்ஙனமாயினும் நடத்த வேண்டுமென்றும், இன்னும் ஒருநாள் தங்கியிருந்து திங்களன்று அதை நடத்த வேண்டுமென்றும் கோரியுள்ளனர். அதுவே ஜனங்களுடைய விருப்பமாய் இருக்குமானால், அதை நாம் நடத்தலாம். அதற்கென்று நீங்கள் ஜெபித்து, நன்கு ஆலோசனை செய்து எனக்குத் தெரியப் படுத்துங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் சுகமளிக்கும் ஆராதனையை நாம் நடத்தலாம், அடுத்ததாக நான் நியூ மெக்ஸிகோவிலுள்ள ஆல்புகர்க் பட்டினத்தில் பிரசங்கிக்க வேண்டும். இதற்கிடையில் சில நாட்கள் இருக்கின்றன. ஆனால் நான் அரிசோனாவுக்குச் சென்று, அங்கு கூட்டங்கள் நடத்த ஒழுங்கு செய்ய வேண்டும். எனவே, சுகமளிக்கும் ஆராதனை நடத்துவது தேவனுக்குச் சித்தமாயிருக்குமானால் அதை நடத்தலாம் அதற்கென்று நீங்கள் ஜெபியுங்கள், நானும் ஜெபிக்கிறேன். நீங்கள் வியாதியைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது, வியாதி நம்மிடையே வந்துவிடுகிறது. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் ஸ்திரீ ஆண்டவருடைய உதவியின்றி ஜீவிக்க முடியாது என்பதை பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்துகிறார். ஜெபத்திற்காக நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் அல்லவா? இந்தப் பக்கம் வாருங்கள், பாருங்கள், பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். ஆனால் இந்த சமயத்தை நான் முத்திரைகளுக்கென்று ஒதுக்கியிருக்கிறேன். எத்தனை பேர் வியாதிப்பட்டிருக்கிறீர்கள்? ஜெபம் செய்து கொள்வதற்கென எத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்? கைகளை உயர்த்துங்கள் - எல்லாவிடங்களிலுமிருந்து கைகள் உயர்த்தப்பட்டுள்ளன. திங்கள் இரவன்று சுகமளிக்கும் ஆராதனை நடத்துவது தேவனுடைய சித்தமென்று உங்களில் எத்தனைபேர் நினைக்கின்றீர்கள்? நீங்கள் விரும்புகின்றீர்களா? சரி, கர்த்தருக்குச் சித்தமானால் திங்கள் இரவன்று வியாதியஸ்தருக்காக நாம் ஜெபிப்போம். முத்திரைகள் வெளிப்படுவதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷம் அடைகிறேன். நீங்களும் மகிழ்ச்சியுறுகிறீர்களா? இந்த ஆறாம் முத்திரை வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தில் 12-ம் வசனம் தொடங்கி 17-ம் வசனம் முடியவுள்ள பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது சற்று நீண்டதாயிருக்கிறது. அநேக சம்பவங்கள் அப்பொழுது நிகழ்கின்றன. சென்ற இரவு பிரசங்கித்ததை மறுபடியும் விமரிசனம் செய்யலாம். அதற்கு முன்பு, வேறொன்றைக் கூற விரும்புகிறேன். கேள்விப் பெட்டியில் நான்கைந்து முக்கியமான கேள்விகள் இருந்தன, எலியா ஒருவன் மாத்திரம் மீதியாயிருப்பதாக அவன் எண்ணினபோது, பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம் பேரைக் கர்த்தர் அக்காலத்தில், வைத்திருந்தார். ‘ஏழாயிரம்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘எழுநூறு’ என்று சொல்லிவிட்டேன். இந்தப் பிழைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் கூறுவதை நீங்கள் கவனமாகக் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இரண்டு, மூன்று குறிப்புகள் இவ்விதம் எழுதப் பட்டிருந்தன. ‘சகோ. பிரான்ஹாம், நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுது ஏழாயிரம் பேர் இருக்கவில்லையா?’ வேறொரு சகோதரன், ‘ஏழுநூறு பேர்கள் எடுக்கப்படுதலில் செல்வார்கள் என்று நீர் தரிசனம் கண்டீரா?’ என்று எழுதியிருந்தார். இவ்விதம் யோசிப்பதனால் ஜனங்கள் குழப்பமுறுகின்றனர். இந்த முத்திரை எனக்கு வெளிப்பட்டபோது, நான் முற்றத்தில் இங்குமங்கும் நடந்தேன். அவ்வளவு மூளை இறுக்கம் (Tension). வேறொரு விஷயம், நான் கூறுவதை நீங்கள் உண்மையென்று ஏற்றுக் கொள்வதனால், அதற்கு தேவன் என்னை உத்திரவாதியாக்குவார். எனவே, நான் உங்களுக்கு ஒன்றை எடுத்துக் கூறுமுன்பு அதுமுற்றிலும் உண்மை என்று நான் அறிந்து கொள்ளுதல் அவசியம். ஏனெனில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது ஒரு மகத்தான காலமாகும். திங்கள் இரவன்று நடத்தப் போகும் சுகமளிக்கும் ஆராதனையைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சகோ. நெவில், அது உங்களுக்குத் தடங்களாயிருக்குமா? சகோ. நெவில் அருமையான ஒரு சகோதரன். அவர் எனக்கு ஆப்த நண்பராய் இருந்து வருகிறார். இந்தக் கூடாரம் கட்டி முடிந்துவிட்டது. ஞாயிறு பள்ளி நடத்த அறைகளும் ஆயத்தமாயுள்ளன. ஜெபர்ஸன்வில் பட்டினத்திலுள்ள வர்கள் ஆராதனைக்கு வருவதற்கும், ஞாயிறு பள்ளி நடத்துவதற்கும் ஒரு நல்ல ஸ்தலம் இங்குள்ளது. சகோ. நெவில் ஒரு நல்ல போதகர். பருவம் வந்தவர்க்கு வகுப்புகள் நன்றாக நடத்துவார். அவருக்குப் பூஞ்செண்டு கொடுத்து அவரைப் பாராட்ட வேண்டுமென்பதற்காக நான் இதைக் கூறவில்லை. அவருடைய மரணத்திற்குப் பின்பு அவருக்கு மலர்வளையம் செலுத்துவதைக் காட்டிலும் (அதாவது மிகவும் பாராட்டுவதைக் காட்டிலும்) இப்பொழுதே ஒரு சிறு ரோஜாப்பூ அவருக்களிக்க விரும்புகிறேன். (அதாவது அவரைச் சிறிது பாராட்ட விரும்புகிறேன்). நான் சிறுபையனாக இருந்த முதற் கொண்டு அவரை எனக்குத் தெரியும். அப்பொழுது முதல் அவர் மாறவேயில்லை. அவர் அதே போன்றிருக்கிறார். அவர் மெதோடிஸ்ட் போதகராயிருந்த போதும், என்னை அங்கு பிரசங்கிக்க அழைத்தார். கிளார்க்கஸ்வில் பட்டினத்தில் அவருக்கு ஒரு நல்ல சபை இருந்தது. அது ஹாவர்ட் பார்க் என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன் - ஹாரிஸன் அவென்யூ மெதோடிஸ்ட் சபை, சகோதரி நெவில், அங்குதான் அவர் உங்களைச் சந்தித்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனெனில் சகோதரி நெவில்லும் மெதோடிஸ்ட் சபையைச் சேர்ந்தவர். நான் திரும்பி வந்து என் சபையாரிடம், ‘சகோ. நெவில் மிகவும் நல்லவர், என்றாவது ஒருநாள் நான் அவருக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பேன்’ என்றேன். நான் கூறினவாறே நிகழ்ந்தது. இதோ அவர் இப்பொழுது என் நண்பர். அவர் மதிப்பிற்குரியவர். அவர் தன்னால் இயன்றவரை என் ஊழியத்தில் என்னைத் தாங்குகிறார். நான் எதைக் கூறினாலும் அதை அவர் ஏற்றுக் கொண்டு அதில் நிலை கொள்கிறார். முதலில் அவருக்குச் செய்தி புரியாமலிருந்தது என்றாலும் அவர் அதை விசுவாசித்த அதில் நிலை நின்றார். அதுவே அவர் செய்திக்களித்த கௌவரம். அவரை எவ்வளவாகப் புகழ்ந்தாலும் போதாது. கர்த்தர் அவரை ஆசீர்வதிப்பாராக. ஐந்தாம் முத்திரையைக் குறித்து நாம் சென்ற இரவு சிந்தித்ததை சற்று விமரிசனம் செய்து, மூன்றுவித வல்லமைகளைப் பெற்று, முடிவில் மூன்று ஆதிக்கங்களையும் ஒருங்கே கொண்டு மங்கின நிறமுள்ள குதிரையின்மேல் சவாரி செய்து, முடிவில் அவன் புறப்பட்டு வந்த அதே பாதாளமாகிய கேட்டிற்குள் செல்கிறான். ‘வெள்ளம்போல் சத்துருவரும் போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்’ என்னும் வேதவாக்கியத்தை நாம் பார்த்தோம். அது முற்றிலும் உண்மையென்றும் நாம் நேற்று இரவு அறிந்து கொண்டோம். அந்திக் கிறிஸ்து வித்தியாசமுள்ள நிறக்கொண்ட நான்கு குதிரைகளின் மேல் சவாரி செய்தானென்றும், அந்த நான்கு முறைகளிலும் நான்கு ஜீவன்கள் அவைகளைச் சந்தித்தன என்றும் நாம் பார்த்தோம். ஒவ்வொரு நிறமும் எதைக் குறிக்கின்றது என்றும் நாம் கவனித்தோம். அவை சபை காலங்களில் நிகழ்ந்தவைகளை அறிவித்தன என்றும் நாம் பார்த்தோம். எனவே தேவவார்த்தை ஒன்றோடொன்று சரிவர பொருந்தினால், அது சரியென்று அர்த்தம். தேவனுடைய வார்த்தையுடன் பொருந்தும் எதுவும் ‘ஆமென்’ என்று இருக்க வேண்டுமென்பதை நான் முற்றிலும் நம்புகிறேன். ஒரு சகோதரன், தான் தரிசனம் கண்டதாகவும், அது வல்லமையாக இருந்ததால் தேவன் மாத்திரமே அதை அளித்திருக்க முடியும் என்று கூறினார். அவர் தரிசனம் கண்டது உண்மையாயிருக்கலாம். ஆனால் அது தேவனுடைய வார்த்தையுடன் இணங்காமல் அதற்கு மாறாக அமைந்திருந்தால் அது சரியான தரிசனம் அல்ல. இங்கு மார்மோன் ஸ்தாபனத்தைச் சார்ந்த சில சகோதரரும் சகோதரிகளும் இருக்கலாம். சிலர் இந்த ஒலி நாடாக்களை வாங்கிக் கேட்கலாம். மார்மோன் ஸ்தாபனத்தார் மிகவும் நல்லவர்கள். அவர்களுடைய தீர்க்கதரிசியாகிய ஜோசப் ஸ்மித் என்பவரை மெதோடிஸ்ட் ஜனங்கள் இல்லினாய் பட்டினத்தில் கொன்று போட்டனர். அவரும் மிக நல்லவர். அவர் தரிசனம் கண்டாரென்பதை நான் சந்தேகிக்கவில்லை. அவர் மிகவும் உத்தமமானவர். ஆனால் அவர் கண்ட தரிசனம் வேதத்திற்கு முரண்பாடாய் அமைந்திருந்தது. ஆகவே அவர்கள் மார்மோன் வேதாகமம் ஒன்றை அவர்களுக்கென ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. என்னைப் பொறுத்தவரையில் என் கையிலுள்ள இந்த வேதாகமம் தான் தேவனுடைய வார்த்தை. ஒரு சமயம் ஒரு போதகன் அன்னிய நாட்டிலிருந்து ஒரு பெண்ணுடன் காரில் கூட்டத்திற்கு வந்திருந்தார். அவர்களிருவரும் கூட்டத்திற்கு வர மூன்று நாட்கள் சேர்ந்தாற்போல் பிரயாணம் செய்ய வேண்டியதாயிருந்தது என்பதை அறிந்தேன். அந்தப் பெண் மூன்று நான்கு முறை கலியாணம் செய்தவள். அந்தப் போதகர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் என்னைச் சந்தித்து என்னுடன் கைகுலுக்கினார். நான் அவரை அறைக்குள் தனியே அழைத்து வந்து, ‘போதகரே, நீங்கள் இந்த நாட்டிற்கு அன்னியர். உங்களுடன் வந்திருக்கும் பெண்ணுக்கு நல்ல பெயரில்லை. நீங்கள் இன்னின்ன இடத்திலிருந்து வருகிறீர்கள்’ என்றேன். அவரும் ‘ஆம்’ என்று ஆமோதித்தார். நான், ‘போதகன் என்னும் உங்கள் நன்மதிப்பை இது கெடுத்துவிடுமல்லவா? இதைக் காட்டிலும் மேலான ஓர் தன்மரியாதையைக் காண்பிக்க வேண்டாமா’ என்றேன். அவர் மாறுத்தரமாக, ‘அந்தப் பெண் ஒரு பரிசுத்தவாட்டி என்றார். நான், ‘சகோதரனே, அவளைக் காண்பவர் எல்லாரும் பரிசுத்தவான்கள் அல்ல. நீங்கள் செய்வதென்னவென்று உங்களை அவர்கள் கவனிக்கின்றனர். ஆகவே நீங்கள் ஜாக்கிரதையாயிருங்கள். அவள் ஏற்கனவே நான்கைந்து முறை விவாகம் செய்தவள்’ என்றேன். அவர், ‘எனக்குத் தெரியும்’ என்று பதிலுரைத்தார். ‘விவாகரத்து செய்த பெண்களை மறுபடியும் விவாகம் செய்யலா மென்று நீங்கள் போதிக்கின்றீர்களா?’ என்று கேட்டேன். அவர், ‘இல்லை, நான் உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு தரிசனம் கண்டேன். அதில் என் மனைவி வேறொருவனுடன் வாழ்வதைக் கண்டேன். பின்னர் அவள் என்னிடம் வந்து, என் அன்பே, என்னை மன்னித்து விடுங்கள். அவ்விதம் செய்ததற்கு மிகவும் வருத்தப் படுகிறேன். இனிமேல் நான் உங்களுக்கு உண்மையாக வாழ்வேன்’ என்றாள். நான் அவளை மிகவும் சிநேகித்தால் அவளை மன்னித்து விட்டேன்’ என்றார். அவர் மேலும், ‘அத்தரிசனத்தின் அர்த்தம் எனக்குக் கிடைத்தது. நான் தரிசனத்தில் கண்டவள்தான் இவள். அவள் அனேகமுறை விவாகம் செய்து கொண்டது உண்மைதான். ஆனால் அவளை அதிகமாக நேசித்ததால், அனேகமுறை அவள் கல்யாணம் செய்து கொண்டிருந்தாலும் பரவாயில்லை’ என்றார். அப்பொழுது நான், ‘உங்கள் தரிசனம் மிகவும் இனிமையாக உள்ளது. ஆனால் சத்தியத்தின் பாதையிலிருந்து அது மிகவும் அகன்றுள்ளது. அது தவறு. அதை நீங்கள் செய்யவே கூடாது’ என்றேன். வேத வாக்கியங்கள் வேத வாக்கியங்களுடன் ஒன்றோடொன்று இணைந்து, இவ்வாறு தொடர்ச்சியாக காணப்படுகின்றது. குறுக்கு விடுகதையில் (Crossword puzzle) ஒன்றுடன் மற்றொன்றைப் பொருத்துவது போன்று, வேதவாக்கியங்களை ஒன்றோடொன்று நாம் இணைத்தால், முழு காட்சியும் நமக்குக் கிடைக்கும், அவ்விதம் இணைக்கக் கூடியவர் ஒருவரே. அவர்தான் ஆட்டுக்குட்டியானவர். எனவே அவரை நாம் நோக்கிப் பார்க்கிறோம். நான்கு குதிரைகளின் மேலும் சவாரி செய்தவன் ஒரே ஆள் என்று நாம் பார்த்தோம். அவன் செய்தது என்னவென்பதை நாம் அறிந்து கொண்டோம். சபையின் காலங்களில் நடந்ததும் அதுவே என்பதையும் நாம் கண்டுகொண்டோம். அவள் ஒவ்வொரு குதிரையின் மேலேறி செயல் புரிந்தபோது, அதனை எதிர்க்க ஒரு மிருகம் தேவனால் அனுப்பப்பட்டது. முதலாம் காலத்தில் தேவனால் அனுப்பப்பட்ட மிருகம் ஒரு சிங்கம். சிங்கம் தேவனுடைய வார்த்தையைக் குறிக்கின்றது - கிறிஸ்து, அடுத்தபடியாக இருளின் காலங்களில் சபையானது ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக ஸ்தாபன கோட்டுபாடுகளை ஏற்றுக்கொண்டபோது, அதனை எதிர்க்க ஒரு காளை அனுப்பப்பட்டது. எல்லாமே இருவரின் பேரில் ஆதாரம் கொண்டுள்ளன. ஒன்று அந்திக் கிறிஸ்து, மற்றொன்று கிறிஸ்து. இன்றைக்கும் அவ்விதமாகவே இருந்து வருகின்றது. பாதிவழி கிறிஸ்தவர் (Halfway Christian) இருக்க முடியாது. குடித்தும் அதே சமயத்தில், புத்தித் தெளிவுள்ள மனிதன் ஒருக்காலும் இருக்க முடியாது. அவ்வாறே ஒரே சமயத்தில் கறுப்பு வெள்ளை நிறங்கள் முழுமையும் கொண்ட பறவைகளோ, ஒரே சமயத்தில் பாவியாகவும் பரிசுத்த வானாகவும் உள்ள மனிதரோ இருக்கவே முடியாது. ஒன்று நீங்கள் பாவியாக இருக்க வேண்டும். இல்லையேல் நீங்கள் பரிசுத்தவான்களாக இருக்க வேண்டும். இதற்கிடையே உள்ள நிலையில் நீங்கள் இருக்க முடியாது. நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களாய் இருக்க வேண்டும், அல்லது மறுபடியும் பிறவாதவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்த ஆவியைப் பெற்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும், அல்லது பரிசுத்த ஆவியினால் நிரம்பாதவர்களாய் இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாலும் லட்சியமில்லை, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படாவிடில் ஒரு உபயோகமுமில்லை. ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தால், நீங்கள் நடத்தும் வாழ்க்கை அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும். நீங்கள் ஆவியினால் நிறையப்பட்டிருக்கிறீர்கள் என்று யாருமே மற்றவருக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஆவியினால் முத்திரிக்கப்பட்டுள்ள தால், மற்றவர்கள் அதைக் கண்கூடாகக் காண்கின்றனர். ஒவ்வொரு முறையும் அந்திக்கிறிஸ்து ஒவ்வொரு குதிரையின் மேல் சவாரி செய்தான். அவன் சபை ஆதிக்கத்தையும், அரசியல் ஆதிக்கத் தையும் ஒருங்கே கொண்டிருந்தான். அவனை எதிர்க்க தேவன் அவர் கொண்டிருந்த வல்லமைகளை அனுப்பினார். சபை காலங்களில் இவையே சம்பவித்தன என்று நாம் சபை சரித்திரத்தின் மூலம் அறிந்து கொள்கிறோம். வேறொரு காலம் தோன்றினபோது, சத்துரு அந்திக் கிறிஸ்துவை சபையின் பெயரால் அனுப்பினான். ஆம், ஐயா! சபையின் பெயரில் அவள் சென்று, ‘அதுதான் உண்மையான சபை’ என்று கூறினான். ருஷியா தேசம் அந்திக் கிறிஸ்துவல்ல. அந்திக்கிறிஸ்து மார்க்கம் உண்மையான கிறிஸ்துவ மார்க்கம் போன்றே அமைந்திருந்தது. அதன் விளைவாக தெரிந்துகொள்ளப்படாதவர் அனைவரும் வஞ்சிக்கப்படுவார்கள் என்று வேதம் கூறுகின்றது. உலகத் தோற்றத்துக்கு முன்னர் ஆட்டுக் குட்டியானவரின் ஜீவப் புஸ்தகத்தில் பெயரெழுதப்படாதவர் அனைவரும் வஞ்சிக்கப்படுவர். ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, அவர்கள் பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டன. அவர் இப்பொழுது பரிசுத்த ஸ்தலத்தில் மகிமையில் நின்றுகொண்டு, புத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள ஒவ்வொரு ஆத்துமாவுக்காகவும் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர்கள் யாரென்று அவரைத் தவிர வேறு யாரும் அறியார். அவர்தான் அப்புத்தகத்தைகையிலேந்திக் கொண்டிருக்கிறார். பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபர் உட்பிரவேசிக்கும்போது அவருடைய மத்தியஸ்த ஊழியம் முடிவடையும், அப்பொழுது அவர் புறப்பட்டு வந்து, அவர் யாருக்காக பரிந்து பேசினாரோ, அவர்களை மீட்டுக் கொள்கிறார். அவர் இப்பொழுது மீட்பின் இனத்தானின் ஊழியத்தைச் செய்து கொண்டிருந்து, அதை நிறைவேற்றின பின்பு தமக்குச் சொந்தமானவர்களை ஏற்றுக் கொள்கிறார். ஓ! இதையறியும் ஒவ்வொரு கிறிஸ்தவனும் அவனை ஆராய்ந்து பார்த்து, கர்த்தருடைய சமூகத்தில் கரங்களையுயர்த்தி, ‘ஆண்டவரே, என்னைச் சுத்திகரியும். என் வாழ்க்கையில் காணப்படும் தவறுகளை எனக்குக் காண்பித்து, அதனின்று உடனடியாக, விலக உதவி செய்யும்’ என்று ஜெபிக்க வேண்டும். நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? நம்மை ஆராய்ந்து பார்க்கும் காலம் இதுவாகும். (எக்காளங்களைக் குறித்தோ அல்லது கலசங்களைக் குறித்தோ நாம் பேசும்போது இவைகளை நாம் விவரிக்கலாம்). தேவனுடைய ஆக்கினை புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர், பூமியை வாதித்த மூன்று தூதர்களும், ‘பூமியில் வாசம் பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! ஐயோ! ஐயோ!’ என்று சத்தமிடுகின்றனர். நாம் பயங்கரமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் ஆராய்ந்துகொண்டிருப்பவை. சபை எடுக்கப்பட்ட பின்னர் உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றன. சபையானது உபத்திரவ காலத்தில் பிரவேசிப்பதில்லையென்னும் சத்தியம் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் பதிய வேண்டுமென்று விரும்புகிறேன். மணவாட்டி உபத்திரவ காலத்திற்குள் செல்வதில்லை. அவள் எடுக்கப்பட்ட பிறகு, எஞ்சியுள்ள சபை உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கும் மணவாட்டியின் பேரில் எந்தவித பாவமுமில்லை. தேவனுடைய கிருபை அவளை மூடிக் கொண்டிருக்கிறது. வெண்மையாக்கும் திரவம் அவள் பாவமனைத்தையும் அறவே அகற்றிவிட்டது. அதைக் குறித்து இனி நினைக்கப்படுவதும் இல்லை. அவள் தேவனுடைய பார்வையில் பரிசுத்தமுள்ளவளாய் இருக்கிறாள். இதையறியும் மணவாட்டி முழங்காற்படியிட்டு ஆண்டவரிடம் கதற வேண்டியவளாயிருக்கிறாள். ஒரு கதை இப்பொழுது என் நிலைக்கு வருகிறது. உங்கள் சமயத்தை வீணாக்குகிறேன் என்று எண்ணவேண்டாம். இன்று பேச வேண்டிய பொருளைத் தொடங்குவதற்கு ஏற்ற ஆவியின் நிறைவு வரும் வரை, நான் ஆரம்பத்தில் இவ்விதம் பேசிக் கொண்டேயிருக்கவேண்டும். நாம் சிந்திக்கப்போகும் பொருள் புனிதமானது. அது என்னவென்று தேவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார். நாம் வாழும் இந்தக் கடைசி நாள் வரைக்கும் அது வெளிப்படாது என்று வேதம் கூறுகின்றது. இதுவரை ஜனங்கள் அது என்னவாயிருக்குமென்று ஊகித்து வந்திருக்கின்றனர். ஆனால் இப்பொழுது சத்தியம் நமக்குப் புலப்படுகின்றது. மேற்கு பாகத்திலுள்ள ஒரு பெண் ஒரு வாலிபனின் மேல் அன்பு கொண்டாள். அவனும் அவளை நேசித்தான். அவன் கால்நடை வாங்கும் ஆர்மெர் கம்பெனி முதலாளியின் மகன். பெண் கொள்வதற்கென அவன் சிக்காகோவிலிருந்து வந்திருந்தான். எல்லா பெண்களும் அவனை கவர்ச்சிக்க எண்ணி, பழங்காலத்தில் மேற்கத்திய பாகத்தில் அணியும் பிரத்தியேகமான ஆடைகளை அணிந்துகொண்டு அழகாகக் காணப்பட்டனர். சகோ. மாகியர் (Bro. Maguire) மேற்கத்திய ஆடைகளை அணிந்து கொள்ளாததன் காரணத்தால் சிறையிலடைக்கப்பட்டு, கங்காரு நீதி ஸ்தலத்தில் அபராதம் செலுத்தி, மேற்கத்திய ஆடைகளை வாங்க வேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்யப்பட்டார் (அவர் இங்கு இருக்கிறார் என்று நினைக்கிறேன்). அங்குள்ளவர்கள் துப்பாக்கிகளை ஆடையில் தொங்கவிடுவது வழக்கம். பழங்காலத்தவர் வாழ்ந்தது போன்று அவர்களும் வாழத் தலைபடுகின்றனர். அவ்வாறே கென்டகி (Kentucky) நாட்டிலும், கிழக்கு பாகத்திலிருந்த பழங்காலத்தவர் வாழ்ந்ததுபோன்று, அவர்களும் வாழத் தலைப் படுகின்றனர். ஏதோ ஒன்று அவர்கள் அவ்விதம் செய்யக் காரணமாயுள்ளது. ஆனால் பழங்காலத்தவர் கடைபிடித்திருந்த மூல சுவிசேஷத்தைக் கைக்கொள்வது மாத்திரம் உங்களுக்குப் பிடிக்க வில்லை. நவீனமான ஒன்றைக் கைக்கொள்ள நீங்கள் விரும்புகின்றீர்கள். ஒரு மனிதன் தவறு செய்யக் காரணம் யாது? அவன் குடிப்பதற்கும் வேறொரு ஸ்திரீயுடன் தவறான தொடர்பு கொள்வதற்கும் காரணம் என்ன? அவர்களுக்குள் ஒருவித தாகம் ஏற்படுகின்றது. அந்தப் பரிசுத்த தாகத்தை தேவனை ஏற்றுக்கொள்வதன் மூலமாய் தீர்த்துக் கொள்ளவதற்குப் பதிலாக உலக காரியங்களின் மூலம் அதைத் தீர்த்துக்கொள்ள வகை தேடுகின்றனர். தாகத்தை உண்டாக்குவது தேவனே. எனவே நீங்கள் ஏதோ ஒன்றுக்காக தாகமடைகிறீர்கள். அதன் மூலம் நீங்கள் தேவனிடம் திரும்ப வேண்டும். ஆனால் உலக காரியங்களின் மூலம் அதைத் தீர்த்துக் கொள்ள உங்களுக்குக் எவ்வளவு தைரியம்! அவ்வாறு செய்ய உங்களுக்கு உரிமையில்லை. அந்தத் தாகத்தைத் தீர்க்க ஒருவர் மாத்திரம் தான் இருக்கிறார். அவர் தாம் தேவன். உங்களை அவ்விதமாகவே அவர் சிருஷ்டித்துள்ளார். அந்தப் பெண்கள் எல்லாரும் அந்த வாலிபனைக் கவர்ச்சிக்க மேற்கத்திய பாகத்தில் அணிந்துகொள்ளும் உடைகளை உடுத்தி யிருந்தனர். அந்த வாலிபன் கிடைத்துவிடுவான் என்று ஒவ்வொருவரும் நம்பியிருந்தனர். ஆனால் அந்த ஸ்தலத்தில் அந்த பெண்களின் சொந்தக்காரப் பெண் ஒருவள் இருந்தாள். அவள் ஒரு அனாதை. இந்தப் பெண்கள் அனைவருக்காகவும் அவள் வேலை செய்து கொடுத்துவந்தாள். ஏனெனில் அவர்கள் நகங்களில் வர்ணம் தீட்டியிருந்ததால், பாத்திரங்களைக் கழுவி அவைகளைப் பாழாக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. அந்த வாலிபன் வந்தபோது, மேற்கத்திய பாகத்தின் சம்பிரதாயப்படி, அவர்கள் துப்பாக்கிகளை மேல் நோக்கியவாறு சுட்டு அவனை வரவேற்றனர். அன்றிரவு பழங்காலத்தவர் ஆடினது போன்ற நடனங்களை அவர்கள் ஆடினர். அந்த ஸ்தலத்திலிருந்த அனைவரும் நடனத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் இரண்டு மூன்று நாட்களாக நடந்து வந்தது. ஒரு நாளிரவு அந்த வாலிபன் சற்று இளைப்பாறுவதற்கென நடனமாடும் ஸ்தலத்தை விட்டு வெளிவந்து மாடுகள் அடைக்கப் பட்டிருக்கும் பட்டியை நோக்கி நடந்தான். அங்கு கந்தை உடுத்தியிருக்கும் இந்தப் பெண்ணைக் கண்டான். பாத்திரங்களைக் கழுவுவதற்கென தண்ணீர் நிரம்பின பாத்திரத்தை அவள் கையில் பிடித்து இருந்தாள். ‘அவளை நான் இதுவரை கண்டதில்லையே. அவள் எங்கிருந்து வருகிறாள்?’ என்று மனதில் எண்ணியவாறே அவளை அணுகினான். அவள் வெறுங்காலில் இருந்தாள். அவனைக் கண்டவுடனே வெட்கமுற்று அவள் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள். அவன், ‘உன் பெயர் என்ன?’வென்று கேட்டான். அவள் பதில் கூறாமல், ‘அவர்கள் எல்லாம் அங்கிருக்கும்போது, நீங்கள் ஏன் அங்கில்லை?’ என்று கேட்டாள். அடுத்த நாள் இரவும் அவன் பட்டியின் வேலியின்மீது உட்கார்ந்த வண்ணமாய் அவள் எப்பொழுது பாத்திரம் கழுவின தண்ணிரை வெளியே ஊற்ற வருவாளென்று காத்துக் கொண்டிருந்தான். அவள் வந்தபோது அவன் அவளை அணுகி, ‘நான் இங்கு வந்திருப்பதன் நோக்கம் என்னவென்று உனக்குத் தெரியுமா? என்று கேட்டான். அவள் ‘இல்லை’ என்று பதிலுரைத்தாள். அவன், ‘மனைவியைக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். உன்னில் காணப்படும் நற்பண்பு அவர்களிடம் இல்லை (அப்பொழுது நான் என் சபையை நினைவு கூர்ந்தேன்) என்னை நீ விவாகம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டான். அவள் மாறுத்தரமாக, ‘நானா? அதை நான் கனவிலும்கூட நினைக்க முடியாது’ என்றாள். அவன் முதலாளியின் மகன். நாட்டிலுள்ள அனேக கம்பெனிகளும் நிலங்களும் அவனுக்குச் சொந்தமானவை. அவன், ‘நான் உண்மையாகவே கூறுகிறேன். சிக்காகோ பட்டினத்தில் ஒரு நல்ல பெண்ணைக் காணமுடியவில்லை. நற்பண்பு கொண்ட உத்தமமான மனைவி எனக்குத் தேவை. நான் எவையெல்லாம் எதிர்பார்க்கிறேனோ, அவை யாவும் உன்னிடம் காணப்படுகின்றது. என்னை விவாகம் செய்து கொள்வாயா?’ என்று கேட்டான். அவள் திகைப்புற்றவளாய், ‘ஆம்’ என்று தலையசைத்தாள். அவன், ‘நீ ஆயத்தமாயிரு. சரியாக ஒரு வருடம் கழித்து நான் திரும்பவும் வந்து உன்னை நிச்சயம் அழைத்துச் செல்வேன். அதன் பின்பு நீ இவ்விதம் உழைக்க வேண்டிய அவசியமேயில்லை. உன்னை நான் சிக்காகோவுக்கு அழைத்துச் சென்று ஒரு பிரம்மாண்டமான வீட்டை உனக்குக் கட்டித் தருவேன்’ என்றான். அவள் ஒரு வருடம் முடிவதற்காக ஆவலுடன் காத்திருந்தாள். கலியாண உடை வாங்குவதற்கென அவளால் முடிந்தவரை அவள் சம்பாதித்த பணத்தைச் சேமித்து வைத்தாள் - சபைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அதன் பின்னர் கலியாண உடையை அவள் வாங்கினாள். அதைக் கண்ட மற்ற பெண்கள், ‘முட்டாளே, அவ்வளவு பெரிய அந்தஸ்து உள்ள ஒருவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்வானா?’ என்று கேலி செய்தனர். அவளோ, ‘அவர் வருவாரென்று வாக்குக் கொடுத்திருக் கிறார். அவருடைய வார்த்தையை நான் விசுவாசிக்கிறேன்’ என்றாள். கடைசியாக அந்த நாள் வந்தது. ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அங்கு வருவதாக அவன் கூறியிருந்தான். அவள் கலியாண உடை உடுத்திக் கொண்டு அவனுக்காகக் காத்திருந்தாள். அவனுடைய வருகையை அவன் கடிதத்தின் மூலம் ஊர்ஜிதப்படுத்தவில்லை. ஆயினும் அவன் நிச்சயம் வருவானென்று அவள் அறிந்திருந்தாள். எனவே, கலியாண உடை உடுத்திக் கொண்டு, அவள் அவனுடன் செல்ல ஆயத்தமானாள், அதைக்கண்ட பெண்கள் அவளைப் பார்த்து நகைத்தனர். ஆனால் அந்தப் பெண்ணோ அவன் நிச்சயம் வருவதாகச் சொன்ன அந்த வாக்குத் தத்ததின் பேரில் சார்ந்திருந்து அவனுக்காகக் காத்திருந்தாள் (மணவாட்டி தன்னை ஆயத்தப்படுத்தினாள்). அவர்கள் அவளை மிகவும் கேலி செய்தனர். அவள், ‘இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் உள்ளன. அவர் நிச்சயம் வந்துவிடுவார்’ என்று உறுதியாகக் கூறினாள். ஐந்து நிமிடங்கள் கழிந்தவுடன் குதிரைகளின் காலடி ஓசை கேட்டது. குதிரைகள் இழுத்துக் கொண்டு வந்த வண்டி நின்றது. அதைக் கண்டவுடன் அவள் குதித்தெழுந்து ஓடினாள். அவனும் வண்டியிலிருந்து கீழே குதித்தான். ஒருவரையொருவர் கட்டித் தழுவினர். அவன், ‘அன்பே, எல்லாம் முடிவடைந்தது’ என்றான். அவள் தன் சொந்தக்காரப் பெண்களை (ஸ்தாபனங்களை) விட்டு விட்டு அவனுடன் சிக்காகோவை அடைந்தாள். அந்தப் பெண்கள் ஏமாற்றமடைந்து அவளையே நோக்கிக் கொண்டிருந்தனர். இத்தகைய வேறொரு மகத்தான வாக்குத்தத்தத்தை நானறிவேன். ‘உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன். நான் மறுபடியும் வந்து உங்களைச் சேர்த்துக் கொள்வேன். நாமெல்லாரும் பைத்தியக்காரர் என்று அவர்கள் கூறலாம். ஆனால் சகோதரனே, என்னைப் பொறுத்தவரை அந்த சமயம் நெருங்கிவிட்டது. இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் இந்த முத்திரைகள் உடைவதைக் காணும்போது, சமயம் கடந்து நித்தியத்தை நாமடைவதைக் காண்கிறேன். ஏழாம் தூதனின் செய்தியின் முடிவில் அந்த தூதன் நின்று கொண்டு, ‘இனி காலம் செல்லாது’ என்று சொல்வதை என்னால் காண முடிகிறது. அவருக்கு உண்மையாயிருந்த மணவாட்டி, வரப்போகும் ஒரு நாளில் பறந்து சென்று இயேசுவின் கரங்களையடைவாள். அப்பொழுது அவர் அவளைத் தம் பிதாவின் வீட்டிற்கு கொண்டு செல்வார். சிங்கம் - வார்த்தை : காளை - உழைப்பும் பலியும், மனிதன் - சீர்த்திருத்தக்காரரின் ஞானம் என்னும் ஊழியங்களை கவனியுங்கள். முடிவில் கழுகின் காலம் தோன்றி அதுவரை வெளிப்படாமலிருந்த இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தும். சென்ற இரவு ஆராதனையில் நமக்கு வெளியான இரகசியம் அது வரை நாம் அதைக் குறித்து கொண்டிருந்த கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்டதாயிருந்தது. பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் ஆதிகால சபையில் இரத்த சாட்சிகளாக மரித்த கிறிஸ்தவர்களென்று நாம் எண்ணியிருந்தோம். ஆனால் தேவனாகிய கர்த்தர் நமக்காக அம்முத்தி ரையை உடைத்த போது, அந்த ஆத்துமாக்கள் இரத்த சாட்சிகளாக மரித்த கிறிஸ்தவர்களல்லவென்றும், அவர்கள் ஏற்கனவே மகிமையில் பிரவேசித்து விட்டனரென்றும் நாம் அறிந்து கொண்டோம். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் யூதர்கள் இனி வரப்போகும் உபத்திரவ காலத்திற்கு முன்பிருந்த காலத்தில் (Pre-tribulation period) நடந்த யுத்தத்தின் போது, அவர்கள் எல்லோராலும் வெறுக்கப்பட்டனர். ஜெர்மானிய தேசத்தில் எய்க்மன் கோடிக்கணக்கான யூதர்களைக் கொன்று போட்டான். அவர்கள் யூதர்கள் என்ற ஒரே காரணத்தால் கொலை செய்யப்பட்டனர். அவர்கள் தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினி மித்தமும் கொல்லப்பட்டதாகவேதம் உரைக்கின்றது. ஆனால் மணவாட்டி தேவவசனத்தையும் இயேசு கிறிஸ்வைப் பற்றிய சாட்சியையும் கொண்டிருப்பாள். இவர்களிடம் இயேசுவைப் பற்றிய சாட்சி இல்லை. இஸ்ரவேலர் எல்லாரும் - முன்குறிக்கப்பட்ட இஸ்ரவேலர் - இரட்சிக்கப்படுவார்களென்று ரோமர் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் உபத்திரவ காலம் வருமுன்பு எய்க்மன் போன்றவரால் கொல்லப்பட்டவர். இவர்கள் ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே உயிர்த்தியாகம் செய்யும் 1,44,000 பேர்களுக்கு முன்னடையாளமாயிருக்கின்றனர். ஏழாம் முத்திரையைக் குறித்து ஒரே ஒரு வாக்கியம் மாத்திரமே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது - பரலோகத்தில் அரை மணி நேரம் அமைதல் உண்டாயிற்று. தேவன் மாத்திரம் அது என்னவென்று வெளிப்படுத்த முடியும். அடையாளங்களின் மூலமாகவும்கூட அது சித்தரிக்கப்பட வில்லை. (அது எனக்கு வெளிப்பட வேண்டுமென்று ஊக்கமாக ஜெபியுங்கள்). ஆறாம் முத்திரையை நாம் தியானிக்கும் போது, அதை அறிந்து கொள்ள பரமபிதா நமக்கு உதவி செய்வாராக. 6-ம் அதிகாரம் 12-ம் வசனம் முதல். அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன், இதோ பூமி மிகவும் அதிர்ந்தது, சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று. அந்தி மரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் கருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப் போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்று போயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத் தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக் கொண்டு (இந்த பராக்கிரமசாலிகளைப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் வேசித்தனத்தின் உக்கிரமான மதுவைக் குடித்தனர். இத்தகையவர் வேசி கொடுத்த மதுவைக் குடித்தனர்). பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்! அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலை நிற்கக் கூடும் என்றார்கள். குதிரை சவாரி செய்தவனின் காலமும் அக்குதிரைகளை எதிர்த்த ஜீவன்களின் காலமும் முடிவடைந்துவிட்டது. அதன் பின்னர் உயிர்த் தியாகம் செய்த ஆத்துமாக்களை பலிபீடத்தின் கீழ் நாம் கண்டோம். இவர்கள் கிறிஸ்தவர்களல்ல, அவர்கள் கடைபிடித்திருந்த கொள்கையின் காரணமாக கொலை செய்யப்பட்ட வைதீக (Orthodox) யூதர்கள் தாம் இவர்கள். தேவன் அவர்கள் கண்களைக் குருடாக்கினார். புறஜாதி சபை எடுக்கப்படும் நாள் வரை, அவர்கள் கண்கள் குருடாயிருக்க வேண்டும். ஏனெனில் தேவன் ஒரே சமயத்தில் இருவகை மக்களுடன் ஈடுபடுவ தில்லை. அவ்விதம் செய்வாரானால் அது வேதத்திற்கு முரணாயிருக்கும். அவர் இஸ்ரவேலரிடம் ஒரு தேசமாகத் தொடர்பு கொள்கிறார். ஆனால் புறஜாதிகளிடம் தனிப்பட்ட நபராகத் தொடர்பு கொண்டு அவர்களை வேறுபிரிக்கிறார். புறஜாதி சபை உலகின் எல்லா பாகங்களிலும் வாழும் மக்களிடையே தெரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆகவே அந்த சபையிலே ஒன்றிரண்டு யூதர்களும் காணப்படலாம். ஆனால் தானியேனின் எழுபது வாரங்களின் கடைசி பகுதியில் அவர் இஸ்ரவேலருடன் தொடர்பு கொள்ளும்போது, அவர்களிடம் ஒரு தேசமாகவே ஈடுபடுகிறார். அப்பொழுது புறஜாதியாரை முழுவதுமாக விட்டு யூதர்களிடம் திரும்பப் போகும் காலம் மிகவும் அருகாமையில் உள்ளது (அது ஒருக்கால் இன்றிரவாகவே இருக்கலாம்). ‘புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்’ என்று அவர் கூறியுள்ளார். எனவே காலம் முடிவடைந்துவிட்டது. ஆம், ஐயா, ‘அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்’. பலிபீடத்தின் மேல் இரத்தம் இனி இருக்காது, பலியானது அகற்றப்பட்டுவிட்டது. அங்கு புகையும், மின்னல்களும், நியாயத்தீர்ப்பும் தவிர வேறொன்றுமில்லை. இவையனைத்தும் ஊற்றப்பட்டதாக இன்றிரவு நாம் காணப்போகிறோம். ஆட்டுக்குட்டியானவர் தம் மத்தியஸ்த ஊழியத்தை விட்டு ஏற்கனவே புறப்பட்டுவிட்டார். மத்தியஸ்த ஊழியம் முடிவடைந்துவிட்டது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் - மீட்பின் இனத்தான் - புறப்பட்டு வந்து சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கிவிட்டார். அங்ஙனமாயின், காலம் முடிவடைந்து விட்டது. இப்பொழுது அவர்தாம் மீட்டுக் கொண்டவர்களைப் பெற்றுக்கொள்ள வருகிறார். ஆமென்! அது எனக்கு ஒருவித உணர்ச்சியை உண்டாக்குகிறது. ‘அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன். இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது’ என்று யோவான் கூறுகிறான். இயற்கையாவும் தடை செய்யப்படுகின்றன. தேவன், பிணியாளிகளைக் குணமாக்குவது, குருடரின் கண்களைத் திறப்பது போன்ற அரிய காரியங்களைச் செய்து வந்தார். இப்பொழுது இயற்கை யாவும் குப்புற விழுவதை நாம் காண்கிறோம். என்ன நிகழ்ந்ததென்பதைக் கவனியுங்கள் - பூமி அதிர்ச்சி, சூரியன் கறுக்கின்றது. சந்திரன் ஒளியைக் கொடாமல் போகின்றது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. ஆறாம் முத்திரை உடைக்கப்படும் போது இவையனைத்தும் சம்பவிக்கின்றன. ஐந்தாம் முத்திரையின் கீழ் காணப்பட்ட ஆத்துமாக்களைக் குறித்து அறிவிக்கப்பட்ட பிறகு, இது சம்பவிக்கின்றது. பாருங்கள் இவை நிகழும் தருணம் மிக அருகாமையில் உள்ளது. அது எப்பொழுது வேண்டுமானாலும் சம்பவிக்கலாம். ஏனெனில் சபை எடுக்கப்படுவதற்கென ஆயத்தமாயிருக்கின்றது. ஆனால் இவை நிகழும்போது, மணவாட்டி இங்கு இருக்கமாட்டாள். அவள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள், சபை சுத்திகரிக்கப்படுவதற்கென உபத்திரவ காலத்தில் இவை நிகழ்கின்றன. ஆகவே சபையானது இவையனைத் தையும் அனுபவிக்க வேண்டும். மணவாட்டியல்ல. அவர் தமது இருதயத்துக்கேற்ற மணவாட்டியை ஏற்கனவே கொண்டு சென்றிருப்பார். ஆம் ஐயா! அவர் அவளை மீட்டுக் கொண்டார். ஒரு மனிதன் தன் மணவாட்டியைத் தெரிந்து கொள்வது போன்று அவரும் அவளைத் தாமாகவே தெரிந்து கொண்டார். இப்பொழுது நாம் வேத வாக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். உங்களிடம் காகிதமும் பென்சிலும் இருக்கின்றதா? இச்செய்தியடங்கிய ஒலிநாடாக்களை நீங்கள் வாங்கவில்லையென்றால், நான் கூறும் வேதவாக்கியங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இவ்வேதவாக்கியங்களை நீங்கள் என்னுடன் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். மீட்பின் புத்தகத்தின் ஆறாம் முத்திரையின் கீழ் அடங்கியுள்ள இம்மகத்தான நிகழ்ச்சிகளையும் இரகசியங்களையும் குறித்து நாம் வேத வாக்கியங்களை ஒப்பிட்டுப் படிக்க வேண்டியவர் களாயிருக்கின்றோம். இவை யாவும் மறைக்கப்பட்டிருந்த இரகசியங்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஆறாம் முத்திரையின் இரகசியங்கள் ஒரு பெரிய புத்தகத்தில் அடங்கியுள்ளது - ஆறு சுருள்கள் ஒன்றாக சுருட்டப்பட்டுள்ளது. அது மீட்பின் புத்தகம் முழுவதையும் அவிழ்க்கிறது. அவ்வாறே முழு உலகமும் மீட்கப்பட்டது. அந்தப் புத்தகத்தை யாரும் வாங்காமற் போனால் சர்வ சிருஷ்டியும் அழிந்துவிடுமே என்று கருதியே யோவான் அழுதான், அவள் மூல அணுக்களாகவும், ஆகாய வெளிச்சமாகவும் மாறி, சிருஷ்டியாகவே இருக்க முடியாது. ஏனெனில் ஆதாம் அப்புத்தகத்தின் மேலுள்ள உரிமையை இழந்து போனான். அவன் மனைவியின் சொற்கேட்டதனால் அதை இழந்து போனான். அவளோ தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக சாத்தானின் விவேகத்திற்குச் செவி கொடுத்தாள். ஆதாம் உரிமையை இழந்த போது, அப்புத்தகம் ஏவாளைச் சோதித்த சாத்தானின் மாசுபடிந்த கரங்களை அடையவில்லை. அது சிருஷ்டி கர்த்தரான மூல சொந்தக்காரரின் கரங்களையடைந்தது. எந்த ஒரு உரிமைப் பத்திரமும் அவ்வாறே மூல சொந்தக்காரரிடம் செல்ல வேண்டும். அவர் அப்புத்தகத்தைத் தம் கரங்களில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அந்த புத்தகத்தை மீட்பதற்கு ஒரு கிரயம் செலுத்தப்பட வேண்டும். அதை யாராலும் செலுத்த முடியவில்லை. எனவே அவர் மீட்பின் இனத்தானைக் குறித்த ஒரு சட்டத்தை வகுத்தார். எந்த ஒரு மனிதனும் இனச் சேர்க்கையின் மூலம் பிறந்தவனாதலால், அவன் தன் முன்னோராகிய ஆதாமும் ஏவாளும் செய்த பாவத்தில் இருக்கிறான். ஆகவே அவ்விதம் பிறந்த மனிதன் கிரயத்தைச் செலுத்த முடியாது. எந்த பரிசுத்த போப்பாண்டவரும், போதகரும், வேத சாஸ்திர பட்டம் பெற்ற பண்டிதரும் அதற்குப் பாத்திரவானல்ல. ஒரு தேவ தூதன் கிரயத்தைச் செலுத்த முடியாது. ஏனெனில் தேவ நியமப்படி அது ஒரு இனத்தானாக - மனிதனாக - இருக்க வேண்டும். ஆகையால், தேவனே கன்னியின் வயிற்றில் மனிதனாக அவதரித்து, இனத்தானாகி, தம் இரத்தத்தைச் சிந்தினார். சிந்தப்பட்ட இரத்தம் யூதனின் இரத்தமல்ல, அல்லது புறஜாதியானின் இரத்தமுமல்ல. அது தேவனுடைய இரத்தமாகும். தேவனுடைய இரத்தத்தின் மூலமே நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று வேதம் கூறுகின்றது. ஒரு குழந்தை அதன் தகப்பனாரின் இரத்தத்தைப் பெறுகிறது. ஆணின் மூலமாகவே ஹெமோக்ளோபின் (Haemoglobin) உண்டாகின்றது. ஒரு பெட்டைக்கோழி முட்டையிடுகின்றது. சேவல் அதனுடன் சேராமல் அது முட்டையிட்டால், அந்த முட்டை பொறிக்காது. ஏனெனில் அதில் ஜீவனில்லை. அவ்வாறே ஒரு பெண், முட்டையைச் சுமக்கும் ஒரு கருவியாக மட்டும் இருக்கிறாள். ஆனால் ஜீவனையளிக்கும் கிருமி ஆணிடமிருந்து வருகின்றது. இயேசுவின் பிறப்பில் தேவனே ஆணின் பாகத்தை ஏற்றார். ஆகையால்தான், மேல் இருக்க, வேண்டியது கீழேயுள்ளதென்றும், பெரியதென்பது சிறியதாயிருக்கிறது’ என்றும் நான் கூறுவதுண்டு (Up is down and big is little). மகத்தான தேவன் ஒரு நுண்ணிய கிருமியாக கன்னியின் வயிற்றில் புகுந்து, தம்மைச் சுற்றிலும் இரத்த அணுக்களையும் (Cells) இரத்தத்தையும் உண்டாக்கிக்கொண்டு, இனச் சேர்க்கைக்கு அப்பாற்பட்டவராகப் பூமியில் பிறந்து வளர்ந்தார். அவர் மாமிசத்தில் நமது இனத்தானாகத் தோன்றித், தமது இரத்தத்தைச் சிந்தி நம்மை மீட்டுக் கொண்டார். அவரே மீட்பின் இனத்தானாவார். அவர் தமது இரத்தத்தை எவ்வித கிரயமுமின்றி அளித்து தம்மை மீட்டார். பின்பு அவர் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக பலிபீடத்தில் நின்று கொண்டு மீட்பின் புத்தகத்தைக் கையில் கொண்டிருக்கும் தேவனுடன் நமக்காகப் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். அங்ஙனமிருக்க, மரியாள் அல்லது யோசேப்பு அல்லது வேறெந்த மனிதனும் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்கிறான் என்று சொல்லும் துணிவு எப்படி உண்டாகிறது? இரத்தமின்றி அங்கு யாரும் மத்தியஸ்த ஊழியத்தைச் செய்ய இயலாது. தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே,அவர்தாம் கிறிஸ்து இயேசு என்று வேதம் கூறுகின்றது. கடைசி ஆத்துமா மீட்கப்படும் வரைக்கும் அவர் அங்கு நின்று கொண்டிருந்து. அதன் பின்னர் நாம் மீட்டுக்கொண்டவர்களை உரிமையாக்கிக்கொள்ள அவர் புறப்பட்டு வருவார். ஓ! எத்தனை மகத்துவமுள்ள பிதா நமக்குண்டு! எந்த ஒரு வார்த்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் நிலைவரப்பட வேண்டுமென்று நான் அடிக்கடி கூறியுள்ளேன். ஒரு வேத வாக்கியத்துடன் வேறொன்று இணைந்து போகாவிடில், நாம் ஒன்றையுமே நிரூபிக்க இயலாது. உதாரணமாக நான், ‘யூதாஸ் நான்று கொண்டு செத்தான் என்னும் வேதவாக்கியத்தையும், ‘நீ போய் அந்தப்படியே செய்’ என்னும் வேதவாக்கியத்தையும் எடுத்துக் கொண்டு அவைகளை ஒன்றொடென்று இணைக்க முடியாது. ஏனெனில் அவை மற்றைய வேதவாக்கியங்களுடன் பொருந்தா. ஆறாம் முத்திரையின் கீழடங்கியுள்ள இரகசியத்தைப் பரிசுத்த ஆவியானவர் எனக்கு வெளிப்படுத்தினபோது, அதனை நான் புரிந்துகொண்டேன். இன்றைய வேதவகுப்பில் வித்தியாசமான ஒன்றை நான் அளிக்க விரும்புகிறேன். ஏனெனில் நான் பேசுவதைக் கேட்டுக்கேட்டு நீங்கள் சலிப்படைந்திருக்க வகையுண்டு. ஆகையால் இன்றைக்கு வேறுவிதமாக இதை நடத்தலாமென்று எண்ணியுள்ளேன். இப்பொழுது மத்தேயு 24-ம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டியானவர் என்ன சொல்லியிருக்கிறாரென்று பார்ப்போம். கிறிஸ்துவே வேதாகமம் முழுமைக்கும் ஆக்கியோன் (Author) என்பதை யாவரும் அறிவர். இந்த 24-ம் அதிகாரத்தில் அவர் கூறும் செய்தி யூத ஜனங்களுக்காகும். நீங்கள் மத்தேயு 24-ம் அதிகாரத்தையும் வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்தையும் உங்கள் வேதாகமத்தில் இவ்விதம் திறந்து வைத்துக் கொண்டு ஒன்றொடொன்று ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறேன். ஒன்றில் ஆட்டுக்குட்டியானவர் அடையாளங்களின் மூலம் சித்தரிப்பதை வேறொன்றில் வெளிப்படையாகக் அறிவிக்கிறார். ஒன்றில் என்ன நிகழும் என்பதைக் கூறுகின்றார். மற்றொன்றில் அது நிகழுகின்றது. இதன் மூலம் அது முற்றிலும் உண்மையென்று ஊர்ஜிதப்படுகின்றது. மத்தேயு 24ம் அதிகாரத்தில் கூறப்பட்டவை உபத்திரவகாலத்தில் சம்பவிக்கும் ஒன்று என்பதை வேதபண்டிதர் யாவருமே அறிவர். அவ்வாறே ஆறாம் முத்திரையும் நியாயத் தீர்ப்பின் முத்திரையாயிருக் கிறது. அந்திக் கிறிஸ்து குதிரைகளின் மேல் சவாரி செய்வதை நாம் கண்டோம். பின்னர் சபை எடுக்கப்படுகின்றது. அதன் பின்பு உயிர்த் தியாகம் செய்த யூதர்களை நாம் பீடத்தின் கீழ் கண்டோம். நியாயத்தீர்ப்பு இந்த ஜனங்களின் மேல் விழுகிறது. அதன் மூலம் 144000 யூதர்கள் மீட்கப்படுகின்றனர். இவர்கள் யூதர்களே என்றும் புறஜாதிகள் அல்லவென்றும் நான் உங்களுக்கு நிரூபித்து காண்பித்தேன். இவர்களுக்கும் மணவாட்டிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இது நிகழும்போது மணவாட்டி ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள். ஆகையால் இவர்களை வேறெங்கும் பொருத்த முடியாது. மணவாட்டி மறுபடியும் வெளிப்படுத்தல் 19ம் அதிகாரத்தில் திரும்பவும் வருகிறாள். ஆறாம் முத்திரை நியாயத் தீர்ப்பின் முத்திரையாயிருக்கிறது. இப்பொழுது மத்தேயு 24ம் அதிகாரம் 1 முதல் 3 வசனங்களைப் படிப்போம். இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப் போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி, இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப் போகும் என்று மெய்யாகவே உங்களுக்குக் சொல்லுகிறேன் என்றார். (இப்பொழுது மூன்றாம் வசனம்). பின்பு அவர் ஒலிவ மலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்து வந்து, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் செல்லவேண்டும் என்றார்கள். இம்மூன்று வசனங்களுடன் நாம் தற்பொழுது நிறுத்திக் கொள்வோம். முதலிரண்டு வசனங்கள் கி.பி. 30ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் தேதியன்று பகலில் நிறைவேறியது. மூன்றாம் வசனம் அதே நாள் சாயங்காலம் நிறைவேறியது. அவர்கள் இயேசுவிடம் வந்து, ‘இது என்ன? அதுவென்ன? இந்த ஆலயத்தைப் பாருங்கள். எவ்வளவு பிரம்மாண்ட மாயிருக்கிறது?’ என்றனர். அவரோ, ‘ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அது இடிக்கப்பட்டு போகும்’ என்றார். அவர் ஒரு மத்தியானம் ஒலிவ மலைக்குச் சென்று அங்கு உட்கார்ந்தபோது, அவர்கள் அவரிடம், ‘சிலகாரியங்களைக் குறித்து நாங்கள் அறிய விரும்புகிறோம்’ என்றனர். யூதர்கள் அவரை மூன்று கேள்விகள் கேட்கின்றனர் என்பதைக் கவனிக்கவும். இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? (அதாவது ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி இடிக்கப்படுவது). உம்முடைய வருகைக்கு அடையாளம் என்ன? (இரண்டாம் கேள்வி) உலகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன? அனேகர் இம்மூன்று கேள்விகளின் நிறைவேறுதலையும் வேறொரு காலத்துடன் பொருத்தும் தவறைச் செய்கின்றனர். ஆனால் இயேசு எவ்வளவு அழகாக இம்மூன்று கேள்விகட்கும் விடையளிக்கிறாரென்று பாருங்கள். அது என்னை உணர்ச்சிவசப்படுத்துகின்றது. இப்பொழுது நாம் முதலாம் முத்திரையை இம்முதலாம் கேள்வியின் விடையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, இவ்விதம் ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு கேள்வியுடன் ஒத்துப் போகின்றதா என்று பார்ப்போம். அவ்விதம் அவை ஒத்துப் போனால், முத்திரையின் இரகசியங்கள் பூரணமாக நமக்கு வெளியாகிவிட்டன என்று அர்த்தம். முதலாம் முத்திரையை இப்பொழுது நாம் படிப்போம். வெளிப்படுத்தல் 6.1-2. ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி, நீ வந்து பார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன், அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான், அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது. அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். இந்த ஆள் யாரென்றும் நாம் பார்த்தோம்? அந்திக்கிறிஸ்து இப்பொழுது மத்தேயு 24ம் அதிகாரத்திற்கு வருவோம். (மத்தேயு 24.4-5). இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக் கொண்டு நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். பாருங்கள்? - அந்திக்கிறிஸ்து அதுதான் உங்கள் முத்திரை அவர் அதைக் குறித்து இங்கு பேசியுள்ளார். முத்திரை திறக்கப்படும்போது அதுவே வெளிப்படுகின்றது - மிகவும் அழகாக பொருந்துகின்றது. இப்பொழுது இரண்டாம் முத்திரை, மத்தேயு 24.6. வெளிப்படுத்தல் 6.3-4, மத்தேயு, 24.6 என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்க வேண்டியதே, ஆனால் முடிவு உடனே வராது. சரி, இரண்டாம் முத்திரையை எடுத்துச் கொள்வோம் (வெளிப்படுத்தல் 6.3-4). அவர் என்ன சொல்லுகிறார் என்பதை கவனியுங்கள். அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது, அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்து போடும்படி யான அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. சரியாகப் பொருந்துகின்றது. ஓ! வேத வாக்கியங்களுக்கு வேத வாக்கியங்களே பதிலுரைப்பதை நான் விரும்புகிறேன். நீங்களும் அதை விரும்புகிறீர்கள் அல்லவா? பரிசுத்த ஆவியானவர் தாமே இவை யாவையும் எழுதியுள்ளார். இப்பொழுது அவைகளை வெளிப்படுத்தித் தருகிறார். மூன்றாம் முத்திரைக்கு வருவோம். அப்பொழுது பஞ்சம் உண்டாகின்றது. மத்தேயு 24.7-8. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சி களும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். இப்பொழுது மூன்றாம் முத்திரையைப் பார்ப்போம். அது வெளிப்படுத்தல் 6.5-6-ல் காணப்படுகின்றது. அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லக் கேட்டேன். நான் பார்த்தபோது இதோ, ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். பாருங்கள், பஞ்சம், மூன்றாம் முத்திரையில் இயேசு சொன்னதே கூறப்பட்டுள்ளது. சரி, நான்காம் முத்திரை - கொள்ளை நோய்களும் மரணமும் மத்தேயு 24.7-8 வசனங்களைப் பார்ப்போம். ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். நான்காம் முத்திரை எங்குள்ளது என்று பார்ப்போம். வெளிப்படுத்தல் 6.7-8. அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது, நீ வந்து பார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன், அதின் மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. பாருங்கள் - மரணம்! இப்பொழுது ஐந்தாம் முத்திரை - மத்தேயு 24.9-13. அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள், என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். அப்பொழுது, அநேகர் இடறல டைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து ஒருவரையொருவர் பகைப்பார்கள். அநேகக் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். சென்ற இரவு நாம் ஐந்தாம் முத்திரையைக் குறித்து சிந்தித்தோம். அவர்கள் உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள் - ஒருவரையொருவர் காட்டிக் கொடுப்பார்கள். போன்றவை, இப்பொழுது ஐந்தாம் முத்திரையைக் கவனியுங்கள் வெளிப்படுத்தல் 6. 9-11. அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது தேவ வசனத்தினி மித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர் களுடைய ஆத்துமாக்களைப்பலி பீடத்தின் கீழே கண்டேன். அவர்கள், பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக் குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகாசத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது. அன்றியும் அவர்கள் தங்களைப் போலக் கொலை செய்யப்படப் போகிறவர்களாகிய தங்கள் உடன் பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாற வேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஐந்தாம் முத்திரையில், கொலை செய்யப்படுபவர்களை நாம் காண்கிறோம். மத்தேயு 24.9-13 வசனங்கள் அதையே உரைக்கின்றன - ‘உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக் கொடுத்து உங்களைக் கொலை செய்வார்கள்’ - அதே முத்திரை திறக்கப்படுகின்றது. இப்பொழுது நாம் ஆறாம் முத்திரைக்கு வருவோம். அதையே நாம் இப்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். மத்தேயு. 24.29-30. இதனுடன் நாம் வெளிப்படுத்தல் 6.12-17ஐயும் படிக்கப் போகிறோம். இதை தாம் நாம் ஆரம்பத்தில் படித்தோம் கேளுங்கள், இதுதான் இயேசு மத்தேயு 24:29,30 வசனங்களில் கூறியுள்ளார். அந்நாட்களில் உபத்திரவம் முடிந்தவுடனே (அது உபத்திரவ காலம், அவர்கள் அதனுள் பிரவேசித்தனர்). சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும். வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமார னுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷ குமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். இப்பொழுது நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஆறாம் முத்திரையைப் படிப்போம். அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன், இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கறுப்புக் கம்பளியைப்போல கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்தி மரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறது போல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப் போயிற்று, மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்று போயின. பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும் சேனைத் தலைவர்களும், பலவான்களும் அடிமைகள் யாவரும் சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக் கொண்டு. பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, நீங்கள் எங்கள் மேல் விழுந்து சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக் கொள்ளுங்கள். அவருடைய கோபக்கினையின் மகாநாள் வந்துவிட்டது. யார் நிலை நிற்கக்கூடும் என்றார்கள். எவ்வளவு அழகாகப் பொருந்துகின்து. இயேசு மத்தேயு. 24.29-ல் என்ன சொன்னார் என்பதைக் கவனியுங்கள் (எய்க்மனின் விவகாரம் போன்றவை). அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே சூரியன் அந்தகாரப்படும். சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட வர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனை மட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். பாருங்கள், இயேசு மத்தேயு 24ம் அதிகாரத்தில் கூறியதும், ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது யோவான் கண்டதும் ஒன்றாகவே இருக்கிறது, இயேசு உபத்திரவ காலத்தைக் குறித்துப் பேசுகின்றார். அவர்கள் இயேசுவை நோக்கி, இவைகள் எப்பொழுது சம்பவிக்கு மென்றும், தேவாலயம் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி எப்பொழுது இடிக்கப்படுமென்றும் கேட்கின்றனர். அடுத்தபடியாக அவர்கள், இரத்த சாட்சிகளாய் மரிக்கும் காலம் எப்பொழுது வருமென்றும், அந்திக்கிறிஸ்து எப்பொழுது எழும்புவானென்றும் அவன் எப்பொழுது தேவாலயத்தில் உட்காருவானென்றும் அவரிடம் கேட்கின்றனர். தானியேல்புத்தகத்தில், வரப்போகும் அதிபதியைக் குறித்து சொல்லப் பட்டிருக்கும் பாகத்தை நாம் இப்பொழுது படித்தால் நலமாயிருக்கும்... வேதத்தைப் படித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அது தெரியும். அவன் என்ன செய்வான்? அவன் அன்றாட பலிகளை எடுத்துப் போடுவான். அச்சமயம் அவன் என்னென்ன செய்வான் என்பது அதில் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுவும் கூட அதை வலியுறுத்தியுள்ளார். அவர், ‘பாழாக்கும் அருவருப்பைக் குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும் போது....’ என்று கூறியுள்ளார். அது என்ன? தேவாலயம் சுட்டெரிக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் ஓமரின் மசூதி நின்றது. அவர் மேலும், ‘யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஒடிப்போகக் கடவர்கள். வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக் கடவன். வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக் கடவன். ஏனெனில் மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்’ என்று கூறினார். இவை யாவும் நிறைவேறும். ஆறாம் முத்திரை திறக்கப்படும் இச்சமயத்தில் இது சரியென நிரூபிக்கப் படுகின்றது. இயேசு ஏழாம் முத்திரையைக் குறித்த போதகத்தை ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டார் என்பதை நீங்கள் கவனிக்க விரும்புகிறேன் (நாளை இரவு நாம் ஏழாம் முத்திரையைப் பற்றி சிந்திக்கப் போகிறோம்). அவர் உடனே உவமைகளைச் சொல்லத்தொடங்கிவிடுகிறார். ‘பரலோகத்தில் அரைமணி நேரம் அமைதல் உண்டாயிற்று’ என்று மாத்திரம் அவன் கூறுகிறான். ஆனால் இயேசு அதைக் குறித்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. வெளிப்படுத்தல் 6ம் அதிகாரம் 12ம் வசனத்தில், ஆறாம் முத்திரை உடைக்கப்படுவதைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கும். ஐந்தாம் முத்திரையைப் போன்றே ஆறாம் முத்திரை உடைக்கப்படும்போது அதை அறிவிக்க அங்கு ஒரு ஜீவன் இல்லை. ஏன்? இவை சுவிசேஷ காலம் முடிவு பெற்ற பின்னர், உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றன. ஆறாம் முத்திரை உபத்திரவ காலத்தை வர்ணிக்கின்றது. மணவாட்டி அப்பொழுது ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பாள். அதை அறிவிக்க ஒரு ஜீவன் அங்கில்லை. தேவன் சபையுடன் ஈடுபடுவதில்லை. ஏனெனில் அது அப்பொழுது எடுக்கப்பட்டிருக்கும். அவர் அப்பொழுது இஸ்ரவேலருடன் ஈடுபடுவார். அச்சமயம் வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்கதரிசிகளின் மூலம் பிரசங்கிக்கப்படும் ராஜ்யத்தின் செய்தியை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். இஸ்ரவேல் ஒரு தேசம் - தேவனுடைய ஊழியக்காரர் (Servants) கொண்டதேசம். இஸ்ரவேலர் உள்ளே கொண்டு வரப்படும்போது, அது ஒரு தேசிய விவகாரமாயிருக்கும். தாவீதின் குமாரன் சிங்காசனத்தில் உட்கார்ந்துகொண்டு, ராஜ்யத்தின் காலத்தில் ஆளுகை செய்வார். எனவே தான் அந்த ஸ்திரீ, ‘தாவீதின் குமாரனே’ என்று இயேசுவைக் கூப்பிட்டாள். தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின் படி அவன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப் பண்ணுவதாக தேவன் தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்திருந்தார். அது நித்தியமான சிங்காசனமாயிருக்கும். அதற்கு முடிவிராது. அதற்கு முன்னடையாளமாய் திகழவே சாலொமோன் ஒரு தேவாலயத்தைக் கட்டினான். அது ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி அழிக்கப்படுமென்று இயேசு கூறினபோது, அவர் எதைக் குறிப்பிடுகிறார்? அவர் திரும்ப வரப்போகிறார் என்பதை. ‘நீர் எப்பொழுது வரப் போகிறீர்?’ ‘நான் வரும் முன்பு இவை யாவும் சம்பவிக்கும்’ பூமியில் ராஜ்யபாரம் நிறுவப்படும்போது... நான், கூறப்போவது உங்களுக்கு, சற்று அதிர்ச்சியையளிக்கலாம். இதைக் குறித்து உங்களுக்கு கேள்வி ஏதாவது இருக்குமானால் - இதைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திராவிட்டால் - அதை என்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆயிரவருஷ அரசாட்சியின் போது, இஸ்ரவேல் ஒரு நாடாக இருக்கும். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் ஒரு நாடாக அப்பொழுது இருக்கும். ஆனால் மணவாட்டியோ மாளிகையில் இருப்பாள். அவள் அப்பொழுது ஒரு அரசியாக இருப்பாள். அவளுக்குக் கலியாணம் முடிந்திருக்கும். பூமியிலுள்ள அனைவரும் எருசலேம் பட்டினத்திற்குத் தங்கள் மகிமையைக் கொண்டு வருவார்கள். அதன் கதவுகள் இரவில் அடைக்கப்படாது. ஏனெனில் இராக்காலம் என்பது அப்பொழுது இருக்காது. கதவுகள் எப்பொழுதும் திறவுண்டிருக்கும், பூமியிலுள்ள இராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் இப்பட்டினத்திற்குள் கொண்டு வருவார்கள். (வெளிப்படுத்தல் 21, 22 அதிகாரங்கள்) ஆனால் மணவாட்டியோ ஆட்டுக்குட்டியானவருடன் இருப்பாள். ஓ! இது உங்களுக்குப் புரிகின்றதா? மணவாட்டி திராட்சைத் தோட்டத்தில் பணிபுரிய மாட்டாள். இல்லை, ஐயா! அவள் மணவாட்டி, அவள் ராஜாவுக்கு ராணியாக இருப்பாள். இஸ்ரவேல் நாட்டிலுள்ளவர் தாம் அப்பொழுது வேலை செய்வார்கள், மணவாட்டியல்ல. ஆமென். வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டு தூதர்கள் - இரண்டு தீர்க்கதரிசிகளை - கவனியுங்கள். அவர்கள் ‘பரலோக ராஜயம் சமீபமாயிருக்கிறது’ என்று பிரசங்கம் செய்வார்கள். அதுதான் தம் ஜனங்களாகிய யூதர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடைசி மூன்றரை வருட காலமாகும். தானியேல் எழுபதாம் வாரத்தின் கடைசி பாகம் இதுவே என்று நிரூபிக்க வேண்டுமாயின் .......... அதைக் குறித்த ஒரு கேள்விக்கு நாளை நான் பதிலுரைப்பேன். எழுபது வாரங்கள் அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட ஏழு வாரங்களின் மத்தியில் மேசியா சங்கரிக்கப்படுவார். அவர் மூன்றரை வருடகாலம் தீர்க்கதரிசனம் உரைத்து ஜனங்களுக்காக பலிசெலுத்தப்படுவார். இன்னும் இஸ்ரவேலுக்கு மூன்றரை வருட காலம் நியமிக்கப்பட்டுள்ளது. மேசியா சங்கரிக்கப்படும்போது, யூதர்கள் குருடாக்கப்பட்டபடியால் அவரை மேசியாவென்று அவர்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். மேசியா சங்கரிக்கப்பட்ட பின்னர், சுவிசேஷமும் கிருபையின் காலமும் புறஜாதி களுக்கு வருகின்றது. அப்பொழுது தேவன் இங்கொருவர் அங்கொருவ ராக ஒவ்வொரு காலத்திலும் தெரிந்தெடுத்து, அந்தந்த காலத்திற்கென்று நியமிக்கப்பட்ட தூதர்களின்கீழ் அவர்களைக் கொண்டு வருகிறார். முதலாம் தூதனை அவர் அனுப்பினார். அவன் பிரசங்கித்தான். அப்பொழுது எக்காளம் முழங்கினது (அதைப்பற்றி சற்றுகழித்து சிந்திப்போம்). எக்காளத்தொனி, போரை அறிவித்தது. எக்காளம் எப்பொழுதுமே யுத்தத்திற்கு அறிகுறியாயுள்ளது. லூதரைப் போன்று ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு தூதன் அனுப்படுப்படுகின்றான். அவன் என்ன செய்கின்றான்? அவன் வந்தவுடன் ஒரு முத்திரை திறக்கப்பட்டு வெளிப்படுகிறது. எக்காளம் தொனிக்கப்பட்டு போர் மூளுகிறது. பின்னர் அந்தத் தூதன் மரிக்கிறான். அவன் செய்தியை ஏற்றுக் கொண்டவர்களை அவன் முத்தரிக்கிறான். அதைப் புறக்கணித்தவர் மீது வாதை விழுகின்றது. அதன் பின்பு அவர்கள் ஸ்தாபனம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். (இவைகளைக் குறித்து நாம் ஏற்கனவே பார்த்தோம்). பின்னர் வேறொரு சபையின் காலத்தில், அந்திக்கிறிஸ்து அவனுடைய ஊழியத்துடன் புறப்பட்டு வரும்போது, தேவன் தமது ஊழியத்துடன் அங்கு வருகிறார். இவ்விரண்டு வல்லமைகளும் இணையாகச் சென்று கொண்டிருக்கின்றன. நீங்கள் ஒன்றைக் கவனிக்க விரும்புகிறேன். காயின் பூமிக்கு வந்த போது, ஆபேலும் பூமிக்கு வந்தான். கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபோது, யூதாசும் இங்கு வந்தான். கிறிஸ்து பூமியிலிருந்து எடுக்கப்பட்ட ஏறக்குறைய அதே சமயத்தில் யூதாசும் எடுக்கப்பட்டான். பரிசுத்த ஆவி சபையின் மேல் விழுந்த அதே சமயத்தில் தான் அந்திக்கிறிஸ்துவின் ஆவியும் விழுந்தது. இக்கடைசி நாட்களில் பரிசுத்த ஆவியானவர் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்போது, அந்திக்கிறிஸ்துவும் அரசியல் போன்றவைகளின் மூலமாக தன் உண்மையான தன்மைiயைக் காண்பிக்கிறான். அந்திக் கிறிஸ்து முழுவதுமாக கிரியை செய்யும் இச்சமயத்தில், தேவனும் முழுவதுமாக கிரியை செய்து நம்மை மீட்டுக் கொள்கிறார். இவ்விரண்டும் இணையாகச் சென்று கொண்டே யிருக்கின்றன. காயினும் ஆபேலும், நோவாவின் பேழையில் காகமும், புறாவும் யூதாசும் இயேசுவும், இப்படி தொடர்ச்சியாக சென்று கொண்டேயிருக்கிறது. மோவாபியரையும் இஸ்ரவேலரையும் பாருங்கள். மோவாப் ஒரு அஞ்ஞான தேசமல்ல. இல்லை, ஐயா! இஸ்ரவேல் ஜனங்கள் செலுத்தின அதே பலியை அவர்களும் செலுத்தினர். ஒரே தேவனுக்கு இருவரும் ஜெபங்களை ஏறெடுத்தனர். லோத்தின் குமாரத்திகளில் ஒருவள், அவள் தகப்பனாரின் மூலம் பெற்ற குமாரன் தான் மோபாப் என்பவன். அவன் மூலம் மோவாபிய சந்ததி உண்டானது. மீட்கப்பட்ட அவர்களுடைய சகோதரரான இஸ்ரவேலரை அவர்கள் கண்டபோது.... மோவாபியர் அடிப்படை தத்துவத்தைக் கொண்டவர்கள் (Fundamentalists). அவர்கள் ஒரு பெரிய ஸ்தாபனமாயிருந்தனர். ஆனால் இஸ்ரவேலரோ ஒரு ஸ்தாபனமாயிருக்கவில்லை. அவர்கள் சென்றவிட மெல்லாம் கூடாரங்களில் தங்கியிருந்தனர். ஆனால் மோவாபியருக்கோ கௌரவம் வாய்ந்தவர்களும், ராஜாக்களும் இருந்தனர். கள்ளத் தீர்க்கதரிசியாகிய பிலேயாமும் அவர்களுக்கு இருந்தான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிப்பதற்கென பிரயாணம் செய்த அவர்கள் சகோதரராகிய இஸ்ரவேலரை அவர்கள் சபிக்க முனைந்தனர். இஸ்ரவேலர் மோவாபியரிடம், ‘உங்கள் தேசத்தின் வழியாகப் பயணம் செய்ய எங்களை அனுமதியுங்கள். எங்கள் மாடுகள் தண்ணீர் குடித்தாலும், புல்லைத் தின்றாலும் அதற்குரிய கிரயத்தை நாங்கள் செலுத்தி விடுவோம்’ என்றனர். மோவாபியரோ, ‘இவ்வித எழுப்புதல் கூட்டங்கள் இங்கு நடத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம்’ என்றனர். மேலும் அவர்கள் என்ன செய்தனர் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் கள்ளக் தீர்க்கதரிசியாகிய பிலோயாமின் மூலம், தேவனுடைய பிள்ளை களாகிய இஸ்ரவேலர் பாவத்தில் வீழ்த்திடச் செய்தனர். இஸ்ரவேலர் மோவாபிய பெண்களை மணந்ததன் மூலம் விபச்சாரம் செய்தனர். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரிப்பதற்கென இக்காலத்தில் பிரயாணம் செய்யும் நம்மையும் சாத்தான் அவ்வாறே பாவத்தில் வீழ்ந்திடச் செய்கிறான். என்ன நேர்ந்தது? கள்ளத் தீர்க்கதரிசி பிராடெஸ்டென்ட் சபைகள் அனைத்தையும் வரவழைத்து ஸ்தாபனங்களை உண்டாக்கினான் - மோவாபியரின் காலத்தில் நடந்ததே மீண்டும் நடந்தது. ஆனால் இஸ்ரவேலரோ அதைக்கடந்து சென்றனர். அவள் வனாந்தரத்தில் அனேக வருடங்கள் கழித்தாள். போராட்டத்தில் ஈடுபட்ட முதியோர் அனைவரும் மரிக்க வேண்டியதாயிருந்தது. ஆயினும் அவள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்துக்குள் பிரவேசித்தாள். யோர்தானைக் கடக்கு முன்பு அவர்கள் அணிவகுத்து, செல்வதைக் கவனியுங்கள். அதை நான் மிகவும் விரும்புகிறேன். இப்பொழுது நாம் அந்தக் காலத்தில் பிரவேசிக்கும் சமயம் வந்துவிட்டது. தானியேலின் எழுபது வாரங்களில் அடங்கியுள்ள மூன்றரை வருட காலத்தைப்பற்றி நான் கூறினேன். அதை இன்னும் விவரிக்க விரும்புகிறேன். ஏனெனில் இங்குள்ள சிலர் அதை நன்றாக கவனிக் கின்றனர். வேத போதகன் என்ற முறையில் இதனைத் தெளிவாக்க நான் விரும்புகிறேன். தானியேல் அந்த நேரமானது வருவதை தரிசனத்தில் காண்கிறான். எழுபது வாரங்கள் நியமிக்கப்பட்டுள்ளதென்றும், அதன் மத்தியில் மேசியா பலியாக சங்கரிக்கப்படுவாரென்றும் அவன் கூறினான். அவன் கூறியவாறே அது நிகழ்ந்தது. தேவன் புறஜாதிகளுடன் தொடர்புகொண்டு அவருடைய நாமத்திற்கென ஒரு கூட்ட ஜனத்தைத் தெரிந்தெடுக்கிறார். அது முடிவு பெற்றவுடன், மணவாட்டி மேலே எடுக்கப்பட்டு, சபையானது புறம்பான இருளில் தள்ளப்படுகின்றது. அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும், அதே சமயத்தில் ஜனங்களின் மேல் உபத்திரவம் விழுகின்றது. உபத்திரவம் அவ்வாறு விழும்போது, வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் கூறப்பட்ட இரண்டு தீர்க்கதரிசிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர்களிடம் வருகின்றனர். அவர்கள் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் பிரசங்கிக்கின்றனர். ஒரு மாதத்தில் முப்பது நாட்கள் என்னும் கணக்கின்படி அது மூன்றரை வருட காலமாகும். அது தான் தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடைசி பாகம். தேவன் இப்பொழுது இஸ்ரவேல் ஜனங்களுடன் ஈடுபடுவதில்லை. நமது சபையைச் சேர்ந்த ஒரு அருமை சகோதரன் என்னிடம், ‘நான் இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று பிரசங்கிக்க விரும்புகிறேன். அங்கு எழுப்புதல் உண்டாயிருக்கிறது என்று நான் நம்புகிறேன்’ என்றார். ஒருவர் என்னிடம், ‘சகோ. பிரான்ஹாமே, நீங்கள் இஸ்ரவேல் நாட்டிற்கு இப்பொழுது செல்ல வேண்டும். அவர்கள் சத்தியத்தை இப்பொழுது புரிந்துகொள்கின்றனர்’ என்றார். யூதர்கள், ‘இவர் மேசியாவானால், ஒரு தீர்க்கதரிசி செய்யும் அற்புதங்களைச் செய்யட்டும். நாங்கள் எங்கள் தீர்க்கதரிசியை விசுவாசிக்கிறோம்’ என்றனர். (அவர்கள் அவ்விதமே விசுவாசிக்க வேண்டும்). ‘என்ன ஒரு அமைப்பு! நான் போய் அங்கு அடையாளங்களைச் செய்வேன்’ என்று எண்ணினேன். நான் கெய்ரோவுக்குச் சென்று, அங்கிருந்து இஸ்ரவேல் நாட்டுக்குச் செல்ல பயணச்சீட்டை வாங்கினேன். ‘அவர்கள் தீர்க்கதரிசியின் அடையாளத்தைக் கண்டால், இயேசுவை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்க்கலாம்’ என்று நினைத்தேன். ஸ்டக்ஹோம் சபையைச் சேர்ந்த லூயி பெட்ரூஸ் (Lewis Pethrus) என்பவர் யூதர்களுக்கு லட்சக்கணக்கான வேதாகமப் பிரதிகளை அனுப்பி வைத்தார். உலகெங்கிலுமுள்ள யூதர்கள் புறப்பட்டு இஸ்ரவேல் நாட்டில் இப்பொழுது ஒன்று சேருகின்றனர். அதை நீங்கள் ‘நள்ளிரவு மூன்று நிமிடங்கள்’ (Three minutes until midnight) என்னும் படக்காட்சியில் கண்டிருப்பீர்கள். தளபதி ஆல்லன்பி (General ¬Allenby) என்பவரின் காலத்தில் இங்கிலாந்து இஸ்ரவேல் நாட்டிற்குள் படையெடுத்தபோது, அதைக் கைப்பற்றிருந்த துருக்கியர் சரணடைந்தனர். ‘உலக மகா யுத்தத்தின் வீழ்ச்சி’ (Decline of the World War) என்னும் தலைப்பு கொண்ட புத்தகத்தின் இரண்டாம் பகுதியில் அது காணப்படுகின்றது. இங்கிலாந்து அந்நாட்டை இஸ்ரவேலருக்கு அளித்தது. இஸ்ரவேல் இப்பொழுது ஒரு தேசமாக வளர்ந்து கொண்டு வருகிறது. அவர்களுக்குச் சொந்த நாணயம், நோட்டுகள், கொடி, சைனியம் இவ்வனைத்தும் உள்ளன. அவர்கள் ஈரான் தேசத்திற்குச் சென்று யூதர்களிடம், அவர்களைத் தாய் நாடு கொண்டு செல்ல விரும்புவதாகக் கூறினர். அவர்கள் அங்குதான் இருக்கவேண்டும். இஸ்ரவேலர் தங்கள் தேசத்தை விட்டு வெளியே இருக்கும்வரை,தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாயிருக்கின்றனர். அது ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டது. அவன் அங்கு வரும் வரை, தேவனுடைய சித்தத்திற்குப் புறம்பாயிருந்தான். இஸ்ரவேலர் ஆகாய விமானத்தில் செல்ல மறுத்தனர். ஒரு வயோதிப ரபி, இஸ்ரவேல் ஜனங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் போது, கழுகின் செட்டைகளில் சுமந்து கொண்டு செல்லப்படுவர் என்று எங்கள் தீர்க்கதரிசி கூறியுள்ளார்’ என்று கூறினாராம் - அது தான் ஆகாய விமானம். இப்பொழுது அந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. அத்தி மரம் துளிர் விட்டு வளரத் தொடங்கிவிட்டது. ஆமென். தாவீதின் ஆறுமுனை கொண்ட கொடி மறுபடியும் அந்நாட்டில் பறக்கின்றது. உபத்திரவ காலம் மிகவும் அருகாமையில் உள்ளது. முத்திரைகள் உடைக்கப்பட்டு விட்டன. சபையும் பறந்து செல்ல ஆயத்தமாயிருக்கிறது. அவள் சென்றவுடன், உபத்திரவ காலம் தொடங்கும். அப்பொழுது கர்த்தர் 144000 பேர்களை அவர்களினின்று தெரிந்தெடுப்பார். ஆமென். ஓ! எல்லாம் பூரணமாக அமைந்துள்ளது. முத்திரைகள் திறக்கப்படுவதன் மூலம் இது எந்த காலத்தில் சம்பவிக்கின்றது என்பதை அறியலாம். இது ஜனங்களுக்கு அளிக்கப்படும் கடைசி மூன்றரை வருட காலமாகும். இச்சமயத்தில் தேவன் 144000 யூதர்களை அழைப்பார். அவர் இன்னமும் அவர்களுடன் ஈடுபடத் தொடங்கவில்லை. அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசி இப்பொழுது இல்லை. தீர்க்கதரிசியைத் தவிர வேறு யாரையும் அவர்கள் விசுவாசிப்பதில்லை. அவர்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. விரைவில் அவர்கள் தீர்க்கதரிசிக்குச் செவி கொடுப்பார்கள். தீர்க்கதரிசிக்கு அவர்கள் செவி கொடுக்க வேண்டுமென்று தேவன் தொடக்கத்திலேயே அவர்களுக்குக் கட்டளை யிட்டுள்ளார். அவர்கள் அதில் நிலைகொண்டிருக்கின்றனர். மோசே, ‘உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை உங்கள் நடுவே எழும்பப் பண்ணுவார். அவருக்கு நீங்கள் செவி கொடுப்பீர்களாக’ என்று சொல்லியிருக்கிறான். தீர்க்கதரிசிக்குச் செவி கொடாதவன் ஜனங்களின் மத்தியிலிருந்து அறுப்புண்டு போவான். அது உண்மை. அவர்கள் கண்கள் குருடாக்கப்படாமலிருந்தால், அவரை எளிதில் கண்டு கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் சாத்தானுக்கு இடங்கொடுத்து’ அவன் குறி சொல்லுகிறவன் - பெயல்செபூப்’ என்றும், அவனுடைய இரத்தப் பழி எங்கள் மேல் சுமரட்டும். அவன் ஒன்றுமில்லை’ என்றும் கூறினர். பாவம்,அந்த ஜனங்கள் குருடாக்கப்பட்டனர். ஆகவேதான் அவர்கள் எய்க்மன் போன்றவரால் கொல்லப்பட்டனர். உட்பிரவேசிக்க அவர்களுக்கு உரிமையிருந்தது. ஆனால் நம்மைத் தெரிந்துகொள்வதற்கென அவர்கள் சொந்த பிதா அவர்களைக் குருடாக்க வேண்டியதாயிற்று. இது வேதத்தில் காணப்படும் மிகவும் பரிதாபமான ஒரு செயலாகும். யூதர்கள் தங்கள் சொந்த பிதாவின் இரத்தம் சிந்தப்பட வேண்டுமென்று கூக்குரலிடும் காட்சியைப் பாவனை செய்து பாருங்கள்! அவர்களுடைய தேவன் இரத்தம் சிந்தினவராய் அங்கு தொங்கிக் கொண்டிருக்கிறார். ‘அங்கே அவர்கள் அவரைச் சிலுவையிலறைந்தார்கள்’ என்று வேதம் கூறுகின்றது. அவை மிகவும் முக்கியம் வாய்ந்த நான்கு வார்த்தைகளாம். அங்கே - உலகிலேயே மிகவும் புனிதமான பட்டினமாகிய எருசலேமில், அவர்கள் - உலகிலேயே மிகவும் பரிசுத்தமான ஜனங்கள், அவரை - உலகிலேயே மிகவும் முக்கியம் வாய்ந்த ஒருவரை, அறைந்தார்கள் - உலகிலேயே மிகவும் கொடூரமான மரணம். ஏன்? பக்தியுள்ள அந்த ஜனங்கள் - உலகியேலயே மிகப் பெரிய மார்க்கத்தைச் சார்ந்தவர்கள் - உலகில் காணப்படும் ஒரே ஒரு உண்மையான மார்க்கத்தைச் சார்ந்தவர்கள், வருவார் என்று வேதம் அறிவித்திருந்த அதே தேவனைச் சிலுவையிலறைந்தனர். அவர்கள் ஏன் அதைக் காணத் தவறினர்? அவர்கள் காணாதவாறு தேவன் அவர்களைக் குருடாக்கினாரென்று வேதம் கூறுகின்றது. ‘என்னில் பாவம் உண்டென்று உங்களில் யார் சொல்லக்கூடும்?’ என்று இயேசு அவர்களைக் கேட்டார். வேறுவிதமாகக் கூறினால், ‘நான் செய்வேனென்று வேதம் தீர்க்கதரிசனம் உரைத்ததை நான் செய்யாமல் இருந்தால் என்னைக் கேளுங்கள்’ என்று அவர் சொன்னார். அவிசுவாசமே பாவமாகும். தேவன் கூறியதை அவர் அவ்வாறே செய்துமுடித்தார். அவர்களோ அதைக் காணக்கூடாமற் போயிற்று. நீங்கள் ஜனங்களிடம் சத்தியத்தை எடுத்துரைக்கும்போது, வாத்தின் முதுகில் தண்ணீர் ஊற்றினால் அது எவ்விதம் ஒட்டாமல் விலகிப் போகுமோ, அவ்வாறே அவர்கள் சத்தியத்தை கிரகித்துக் கொள்ளாமல் இருக்கின்றனர். அது மிகவும் பரிதபிக்கப்படத்தக்க ஒரு காரியம். நாம் வாழும் இத்தேசத்தின் ஜனங்கள் மதப்பற்று கொண்டு அவர்கள் விரும்பியதையே செய்வதைக் காணும் போது.... அவர்கள் துணிகரமுள்ள வர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், இணங்காதவர்களாயும் அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் இருப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் நமக்கு உரைக்கவில்லையா? அவர்கள் தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். ‘இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு’. ஸ்தாபனங்கள் சத்தியத்தை மாற்றி அமைக்கின்றன. அவர்கள், எல்லா மகிமையும் தேவ வல்லமையும் அப்போஸ்தலருடைய காலத்துக்கும் ஆயிரம் வருட அரசாட்சிக்கும் உரியவை என்கின்றனர். நான் உங்களுக்கு ஏற்கனவே கூறியுள்ளபடி, ஒரு மனிதன், தேவன் கடந்த காலங்களில் செய்தவைகளுக்காக அவருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறான். அவர் எதிர்காலத்தில் செய்யவிருக்கும் காரியங்களையும் எதிர் நோக்கியிருக்கிறான். அவர் தற்போது செய்து கொண்டிருப்பவைகளை அசட்டை செய்கிறான். அவ்விஷயத்தில் மனிதன் மாறவேயில்லை. யூதர்கள் அங்கு ‘தேவனுக்கு மகிமை’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். யோவான் சுவிசேஷம் 6-ம் அதிகாரத்தில் சொல்லியபடி, ‘எங்கள் பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்கள்’ என்று தேவனுடைய அற்புதச் செயலை அவர்கள் பாராட்டிப் பேசினர். ஆனால் இயேசு, ‘அவர்கள் எல்லாரும் மரித்தனர்’ என்றார். இஸ்ரவேலர் வனாந்தரத்தில் கன்மலையின் தண்ணீரைக் குடித்தனர். இயேசு, ‘நானே அந்தக் கன்மலை’ என்றார். மேலும் அவர், ‘நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம் - ஏதேன் தோட்டத்தில் புசிக்கப்படாத ஜீவ விருட்சம். இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் மரிப்பதில்லை. அவனை நான் கடைசி நாளில் எழுப்புவேன்’ என்றார். மேசியா அங்கு நின்று கொண்டு அவர்களுடைய இருதயங்களுக்குத் தேவையானவைகளைப் பேசி, மேசியா செய்வாரென்று கூறின அனைத்தும் செய்து, அவரே மேசியாவென்று நிரூபித்தார். ஆயினும் அவர்கள் பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு, ‘அல்லவே அல்ல, அவன் மேசியாவாக இருக்க முடியாது. அவன் சரியான முறைப்படி தோன்றவில்லை. அவன் பெத்லகேமிலிருந்து வந்திருக்கிறான். அவன் முறை தவறிப் பிறந்தவனேயன்றி வேறுயாருமல்ல, அவன் ஒரு பைத்தியக்காரன். பிசாசு அவன் மூலம் கிரியை செய்கின்றது’ என்றனர். பாருங்கள், அவர்கள் கண்கள் குருடாக்கப்பட்டன. அவர்கள் தீர்க்கதரிசியை எதிர்நோக்கியிருக்கின்றனர். நிச்சயம் அவர்கள் தீர்க்கதரிசியைப் பெறுவார்கள் - இரு தீர்க்கதரிசிகள் அவர்களிடம் வருவார்கள். ஆறாம் முத்திரையில் கூறப்பட்டவர்கள், எடுக்கப்படுதல் நிகழ்ந்த பின்பு யாக்கோபின் இக்கட்டுக் காலத்திலுள்ள யூதர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேறொரு முன்னடையாளத்தை உங்களிடம் எடுத்துரைக்க விரும்புகிறேன். இதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும். தேவன் அதை உங்களுக்கு நிச்சயம் வெளிப்படுத்தித் தருவார். யாக்கோபு சேஷ்டபுத்திர பாகத்தை ஏசாவிடமிருந்து அபகரித்துக் கொண்டான். நான் கூறுவது சரியா? அவன் வெட்க சுபாவம் கொண்டவன் அவன் தகப்பனை ஏமாற்றினான். சகோதரனை ஏமாற்றினான், ஆயினும் சட்டப்படி சேஷ்டபுத்திரபாகத்தைப் பெற்றுக் கொண்டான். ஏனெனில் ஏசா அதை அவனுக்கு விற்றுப் போட்டான். பின்பு அவன் மாமனாரிடம் வேலை செய்து, புன்னை மரக் கொப்புகளை வெட்டி, வெண்மை தோன்றும்படி பட்டையை உரித்து ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகபுள்ளியுள்ள குட்டிகளைப் பொலியும்படி செய்து, இவ்வகையில் பணம் சம்பாதித்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது கவனியுங்கள். அவன் தன் ஜனங்களிடமிருந்து புறம்பாக்கப்பட்டான். தற்போதைய யூதர்களுக்கு அவன் ஒரு முன்னடை யாளமாயிருக்கிறான். தற்கால யூதர்கள் பணம் அபகரிப்பவர்கள். எந்த முறையிலாவது காசு சம்பாதிக்க வேண்டுமெனும் எண்ணம் கொண்டவர்கள். மற்றவரை அரும்பாடுபடுத்தியாவது அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் சற்று நாணம் கொண்டவர்கள். ‘அவனிடம் தொடர்பு கொள்ளாதே, அவன் எல்லாவற்றையும் அபகரித்து விடுவான்’ என்று யூதர்களைக் குறித்து சொல்கின்றனர். அவர்கள் அவ்வித தன்மை கொண்டவர்களாகவே இருக்க வேண்டும். ஆனால் இதனைச் சீர்திருத்தக்காரர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அவர்களுக்கு மனிதனின் ஆவியே அனுப்பப்பட்டது. ஆனால் கழுகின் காலத்தில் வார்த்தையின் பூரண வெளிப்பாடு கிடைக்கும். இதைப் புரிந்து கொண்டவர்கள் கரங்களை உயர்த்துங்கள் ...... மிகவும் நல்லது. முத்திரைகள் திறக்கப்படும்போது, தேவன் தற்பொழுது என்ன செய்கிறாரென்றும், அவர் முன் காலத்தில் என்ன செய்தாரென்றும், வருங்காலத்தில் என்ன செய்யவிருக்கிறார் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். ஆனால் சீர்திருத்தக்காரர் காலத்தில் அக்காலத்துக்குரிய ஆவி அவர்களுக்கு அனுப்பப்பட்டதனால், அதைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் யோவான், பவுல் இவர்களின் காலத்தில் சிங்கத்தின் ஆவி அவர்களுக்கு அனுப்பப்பட்டது. வார்த்தையாகிய சிங்கமே அவர்களுடன் இருந்தார். ஆகவே பவுல் வார்த்தையில் நிலைநின்று, ‘கள்ளச் சகோதரர் உங்கள் மத்தியில் எழும்பி ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்வார்கள் என்று அறிந்திருக்கிறேன். கடைசி காலம் வரைக்கும் அவர்கள் காணப்படு வார்கள். அக்காலம் கொடிய காலமாயிருக்கும்’ என்றான். ஏன்? அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான். அவனுக்குள் இருந்த வார்த்தை கடைசி காலத்தில் அது எவ்விதம் முடிவடையும் என்பதை முன்னறிவித்தது. ‘உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்’ என்று பவுல் கூறினான். அது தான் அந்திக்கிறிஸ்து அவன் கூறின விதமாகவே சம்பவித்தது. சபையானது இருளின் காலங்களில் பிரவேசித்தபோது ஒன்றும் செய்ய முடியவில்லை. ரோமாபுரி மத சம்பந்தமான ஆதிக்கத்தையும் அரசியல் ஆதிக்கத்தையும் ஒருங்கே கொண்டதாயிருந்தது. ஆகவே அவர்கள் பாடுபட்டு, தங்களைப் பலியாக ஒப்புக் கொடுப்பதல்லாமல் வேறொன்றும் செய்ய இயலவில்லை. அவர்கள் காளையின் ஆவியைக் கொண்டிருந்தனர். பின்னர் சீர்திருத்தக்காரர் தோன்றினர் - மனித முகம், சமார்த்தியம் கொண்டவர்கள் - மார்டின் லூதர், ஜான்வெஸ்லி, கால்வின், ஃபின்னி, நாக்ஸ் போன்றவர், அவர்கள் சீர்திருத்தம் செய்து ஜனங்களை வெளியே கொண்டுவந்தனர். ஆயினும் வெளிவந்த ஜனங்கள் மறுபடியும் ஸ்தாபன முறைகளைப் பின்பற்றி அவைகளுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். வேசி ஒருவள் இருக்கிறாளென்றும், அவளுக்கு வேசி குமாரத்திகள் உள்ளனர் என்றும் வேதம் கூறுகின்றது. ‘அவள் மனந்திரும்பும்படி தவணை கொடுத்தேன். அவளோ மனந்திரும்பவில்லை. ஆகவே அவளையும் அவள் பிள்ளைகளையும் அவர்களுக்குரிய இடத்தில் தள்ளுவேன்’ என்று தேவன் கூறியுள்ளார். அவர் அதை நிறைவேற்றுகிறார் என்று நாம் முத்திரையில் காண்கின்றோம். அவர் நிச்சயம் அதைச் செய்வார். அவர்களெல்லாரும் அவ்வழியே சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்பட்ட அனைவரையும் தேவன் அழைப்பார். அவர்கள் அதற்குச் செவி கொடுப்பார்கள். ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கும்’ என்று இயேசு கூறினார். நாம் செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் - அது செம்மறியாடுகளுக்குக் கொடுப்பதாகும். அக்குரலை வெள்ளாடுகள் அறிந்து கொள்ளாது. செம்மறியாடுகள் அச்சத்தத்தை (Voice) அறிந்து கொள்ளும். சத்தமென்பது ஆவிக்குரிய அடையாளமாகும். கர்த்தர் மோசேயிடம், ‘முந்தின அடையாளத்தை (ஆங்கிலத்தில் ‘முந்தின அடையாளத்தின் சத்தத்தை’ என்று எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அவர்கள் கண்டு உன்னை நம்பாமலும் உனக்குச் செவி கொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தை (அடையாளத்தின் சத்தத்தை) கண்டு நம்புவார்கள். ‘என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவி கொடுக்கும்’ என்றார். கடைசிநாட்களில் இவ்வித அடையாளங்கள் சம்பவிக்கும் போது, தேவனுடைய ஆடுகள் அவைகளை அறிந்து கொள்ளும், ‘என் ஆடுகள் என்னை அறிந்திருக்கின்றன. அவை அன்னியனுக்குப் பின் செல்வதில்லை’ ஆம், அவை அன்னியர்களின் பின்னால் செல்வதில்லை. இக்காலத்துக்குரிய நிரூபிக்கப்பட்ட அடையாளத்தை அவைகள் கண்டுகொள்ளும். யாக்கோபைக் கவனியுங்கள். தன் சொந்த தேசத்துக்குத் திரும்ப வேண்டுமென்ற வாஞ்சை அவனுக்குண்டானது. இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இப்பொழுது அதே வாஞ்சை உண்டாயிருக்கிறது. யாக்கோபு தான் இஸ்ரவேல். அவனுடைய பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்பட்டது. அவன் ஏமாற்றுதல், திருடுதல் போன்ற முறைகளைக் கையாண்டு பணம் சம்பாதித்தான். தன் சொந்த தேசத்துகுத் திரும்பவேண்டுமென்ற வாஞ்சை அவனுக்குள் உண்டானது. அவ்வாறு திரும்பிச் செல்லும் வழியில் அவன் தேவனைச் சந்தித்தான். அப்பொழுது அவன் பெயர் மாற்றப்பட்டது. ஏசாவுக்கு அவன் பயந்ததனால் மிகவும் களைப்புற்றிருந்தான். ஏசாவுடன் பண விவகாரத்தில் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ள விழைந்தான். யூதர்களும் அவ்வாறே ரோமாபுரியுடன் பண விவகாரத்தில் உடன்படிக்கை செய்துகொள்வார்கள். ஆனால் ஏசாவுக்கு யாக்கோபின் பணம் அவசியமில்லாமல் இருந்தது. அவ்வாறே ரோமாபுரி உலக செல்வமனைத்தையும் கொண்டுள்ளதால் அதற்கு யூதர்களின் பணம் அவசியமிராது. யாக்கோபு தனக்குண்டா யிருந்த துன்பகாலத்தில் ஒரு மனிதனுடன் போராடி, உண்மையானதைப் பிடித்துக்கொண்டான். அங்கு ஒரு மனிதன் வந்தார். யாக்கோபு தன் கரங்களால் அவரை இறுகப் பிடித்துக்கொண்டு அவரைப் போகவிடவில்லை. அந்த மனிதன், ‘நான் போகட்டும், பொழுது விடிகிறது’ என்றார். ஓ! அந்த பொழுது விடியும் நேரம், காலை விடியப் போகின்றது. யாக்கோபு அந்த மனிதனிடம், ‘நான் உம்மைப் போகவிடமாட்டேன். நான் உம்முடனே இருக்கப்போகின்றேன். காரியங்கள் இப்பொழுது மாறவேண்டும்’ என்றான். இவன் 144000 பேர்களுக்கு முன்னடையாள மாயிருக்கிறான். அவர்கள் பணம் சம்பாதிக்கும் வழியை வகுக்கும் யூதர்கள், அவர்கள் உண்மையான காரியத்தைப் பிடித்துக்கொள்ளும் போது, மோசேயும் எலியாவும் அங்கிருப்பார்கள். இஸ்ரவேலின் கோத்திரங்களைச் சேர்ந்த இந்த 144000 பேர்களும் தெரிந்துதெடுக்கப் படும் வரை அவர்கள் தேவனுடன் போராடுவார்கள். இது உபத்திரவ காலமாகிய யாக்கோபின் இக்கட்டுக் காலத்தில் நிகழும். அப்பொழுதுதான் 144000 பேர் அழைக்கப்படுகின்றனர். அந்த இரு தீர்க்கதரிசிகளும் யோவான் ஸ்நானனைப் போன்று, ‘பரலோக ராஜ்யம் சமீபமாயிருக்கிறது. இஸ்ரவேலே, மனந்திரும்பு’ என்று பிரசங்கிப்பார்கள். எதனின்று அவர்கள் மனந்திரும்ப வேண்டும்? அவர்கள் பாவத்தினின்றும் அவிசுவாசத்தினின்றும் மனந்திரும்பி தேவனிடத்தில் திரும்பவேண்டும். இயற்கைக்குச் சம்பவிக்கும் இம் மகத்தான காரியங்கள் பன்னிரண்டாம் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. சூரியன் கறுப்புக் கம்பளியைப் போல் கறுத்தது. இது இஸ்ரவேலருக்கு நிகழுகின்றது. புறஜாதிகளுக்கல்ல. உபத்திரவ காலத்தில் என்ன நேரிடுகிறது என்பதை இவ்வசனம் விவரிக்கிறது. இப்பொழுது யாத்திராகமம் 19.21-23 வசனங்களைப் பார்ப்போம். இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்படுவதை யாத்திராகமம் எடுத்துரைக்கிறது. அவர்கள்புறப்படு முன்னர் என்ன நிகழ்ந்ததென்று பார்ப்போம். இந்தக் குறிப்பை நான் எழுதும்போது நான் உணர்ச்சிவப்பட்டு சத்தமிடத் தொடங்கினேன். யாத்திராகமம் 10.21-23. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, தடவிக்கொண்டிருக்கத் தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். மோசே கையை வானத்திற்கு நேராக நீட்டினான், அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்று நாள் மட்டும் காரிருள் உண்டாயிற்று. மூன்றுநாள் மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தை விட்டு எழுந்திருக்கவும் இல்லை, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. ‘சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது’ பாருங்கள், இயற்கையில் சம்பவிக்கும் இவை, எதைக் காண்பிக்கின்றது? இஸ்ரவேலரைத் தேவன் அழைக்கும் தருணம் வந்துவிட்டது. எகிப்தை விட்டு இஸ்ரவேல் ஜனங்கள் வெளிவரும் தருணம் வந்தபோது, எகிப்தை இருள் சூழூந்தது. இப்பொழுது ரோமாபுரியின் கரங்களிலிருந்து அவர் அவர்களை விடுவிக்கிறார். அவர்கள் ரோமாபுரியுடன் ஏற்கனவே உடன்படிக்கை செய்து கொண்டிருப்பார்கள்.அதனின்று அவர்கள் விடுபட வேண்டும். அதே வாதை உண்டாகின்றது என்பதை கவனிக்கும். இந்த வாதை புறஜாதிகளின் மேல்விழும், கைவிடப்பட்ட புறஜாதி சபைகளுக்கு என்ன நேரிடுமென்பதைக் காண்பிக்க விரும்புகிறேன். வலுசர்ப்பம் ஸ்திரியின் மேல் (யூதா, இஸ்ரவேலர்) கோபங்கொண்டு வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை (கணக்கற்ற ஜனத்தொகை) ஊற்றிவிட்டது. அந்த வெள்ளம் ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களுடன் யுத்தம் பண்ணப் போயிற்று என்று வேதம் கூறுகின்றது (வெளிப்படுத்தல் 12-ம் அதிகாரம்). ரோமாபுரி தன்னுடைய சைனியத்தை ஸ்திரீயின் சந்ததியான மற்றவர்களுடன் யுத்தம் செய்ய அனுப்புகிறது. முதன் முறை, இஸ்ரவேலரை அவர் எகிப்திலிருந்து விடுவித்த போது, சூரியன் கறுத்தது. உபத்திரவ காலத்தின் முடிவிலும் அதுவே இரண்டாம் முறை சம்பவிக்கின்றது. தானியேல் 12-ம் அதிகாரத்தில் (நமக்கு சமயமிருந்தால் அதைப் படிக்கலாம்) புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகத் காணப்படுகிற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுபதாம் வாரத்தின் முடிவில் இஸ்ரவேலர் விடுவிக்கப்படவிருக்கும் காலத்தைக் குறித்து தானியேல் இங்கு குறிப்பிடுகின்றான், தானியேல் 12-ம் அதிகாரத்தை ஒரு நிமிடம் பார்ப்போம். உன் ஜனத்தின் புத்திரருக்காக (அது யூதர்கள்) நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான். யாதொரு ஜாதி யாரும் தோன்றினது முதல் அக்கால மட்டும் உண்டாயிராத ஆபத்துக் காலம் வரும் (மத்தேயு 24ம் அதிகாரத்தில் இயேசு கூறியுள்ளதை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், ஆறாம் முத்திரையையும் கவனியுங்கள், இவை யாவும் உபத்திரவ காலத்தைக் குறிப்பிடுகின்றன). அக்காலத்திலே (அதாவது தானியேலின் கடைசி ஏழு வருடங்களின் பிற்பகுதியில்) புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் (அதாவது ஆட்டுக்குட்டியானவரின் ஜீவப் புஸ்தகத்தில் பெயரெழுதப் பட்டுள்ள முன்குறிக்கப்பட்டவர்கள்) பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்தியநிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களையும் போலவும் என்றென் றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். அதன் பின்பு அவர் தானியேலிடம் புத்தகத்தை முத்திரை போடக் கூறினார். தானியேல், காலம் வரும்வரை இளைப்பாற வேண்டும். நீங்கள் மரித்தாலும் அல்லது உயிருடன் இருந்தாலும் யாதொரு வித்தியாச மில்லை. ஏனெனில் எப்படியாயினும் நீங்கள் உயிரோடு எழுந்திருப்பீர்கள், கிறிஸ்தவனுக்கு மரணம் என்பது ஒன்றுமில்லை. ஏனெனில் அவன் மரிப்பதேயில்லை (அவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்). புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படும் அனைவரும் விடுவிக்கப்படுவார்களென்று தானியேல் 12-ம் அதிகாரம் எடுத்துரைக் கிறது. உபத்திரவ காலத்திற்குப் பிறகு தேவன் தமது இரண்டாம் குமாரனான இஸ்ரவேலரை விடுவிக்கிறார். இஸ்ரவேல் தேவனுடைய குமாரன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எகிப்தில் அவனை விடுவித்தது போன்றே அவர் உபத்திரவ காலத்திலும் அவனை விடுவிப்பார். இங்கு சற்று நிறுத்திவிட்டு, இஸ்ரவேலரை அவர் தங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டு வருவதைக் கவனிப்போம். இந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக் கவனியுங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பாருங்கள் - மோசே எகிப்தில் செய்தது போன்று. வெளிப்படுத்தல் 11.3-5. என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக் கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்க தரிசனஞ் சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்கு முன்பாக நிற்கிற இரண்டு ஒலிவ மரங்களும் (செருபாபேல் ஆலயத்தை மீண்டும் கட்டுவான் என்பதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கிறதா?) இரண்டு விளக்குத் தண்டுகளும் இவர்களே. ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும் (கிறிஸ்துவின் வாயிலிருந்து பட்டயம் - வார்த்தை - புறப்படும் என்பது நினைவிருக்கிறதா?) அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்பட வேண்டும். வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் கிறிஸ்துவின் வாயிலிருந்து பட்டயம் புறப்பட்டுச் செல்லுகிறதென்று நாம் பார்த்தோம். அது தேவனுடைய வார்த்தை. தேவன் தம் சத்துருக்களை அவருடைய வார்த்தையினால் நிர்மூலமாக்குகின்றார். இங்கு கவனியுங்கள், இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் உரைக்கும்போது யாராகிலும் அவர்களுக்குத் தீங்கிழைக்க முற்பட்டால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்படுகின்றது. பரிசுத்த ஆவியின் அக்கினி - வார்த்தை, வார்த்தையே தேவன். வார்த்தையே அக்கினி. வார்த்தையே ஆவி. மோசேயைப் பாருங்கள். அவனுடைய வாயிலிருந்து என்ன புறப்படுகிறது என்பதைப் பார்ப்போம். எகிப்தில் யூதர்கள் கொடுமைக்கு ஆளாயினர், அவர்களைப் பார்வோன் போகவிடவில்லை. கர்த்தர் அப்பொழுது அவருடைய வார்த்தைகளை மோசேயின் வாயில் போட்டார். தேவனுடைய சிந்தனைகள் மோசேயின் இருதயத்திற்குள் நுழைந்தன. அவைகளை உச்சரிக்க மோசே அங்கு செல்கின்றான். அப்பொழுது அவை தேவனுடைய வார்த்தையாக ஆகின்றது. அவன் தன் கையை நீட்டி, ‘வண்டுகள் உண்டாகக் கடவது’ என்று கட்டளையிட்டான். அப்பொழுது வண்டுகள் உண்டாயின. இங்கு பாருங்கள். ‘ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்’ அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம், அது உடனே சம்பவிக்கும், ஆமென்! யாராகிலும் அவர்களைச் சேதப்படுத்த முயன்றால், அவர்கள் இவ்விதம் கொல்லப்பட வேண்டும். சகோதரனே, தேவன் அங்கு ஆதிக்கம் கொள்கிறார். ‘அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லி வருகிற நாட்களிலே மழை பெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு’ - எலியா. அதை எங்ஙனம் செய்ய வேண்டுமென்பதை அவன் அறிவான். ஏனெனில் ஏற்கனவே அவன் அதைச் செய்திருக்கிறான். ஆமென். மோசேயும் தண்ணீரை இரத்தமாக்க அறிவான். ஏனெனில் அவன் அதை ஏற்கனவே செய்திருக்கிறான். அதற்காகவே அவர்கள் பாதுகாக்கப்பட்டிருக் கின்றனர். ஆமென்! ஒரு நல்ல காரியத்தை உங்களிடம் இப்பொழுது கூறலாம். ஆனால் நாளை இரவுக்காக அதை ஒதுக்கிவைத்து விடுகிறேன். ‘அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போ தெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு’. தேவனுடைய வார்த்தையேயன்றி வேறெது இவைகளைச் செய்யமுடியும்? இயற்கைக்கு அவர்கள் விரும்பின எதையும் செய்யலாம். இவ்விரண்டு தீர்க்கதரிசிகள் தாம் ஆறாம் முத்திரையின் கீழ் சம்பவிப்பவைகளைச் செய்கின்றனர். தேவனுடைய வல்லமையானது இயற்கையைத் தடைசெய்கின்றது. ஆறாம் முத்திரை பூராவுமே இயற்கையைத் தடைசெய்யும் செயல்களாம். உங்களுக்கு இப்பொழுது புரிகின்றதா? அதுதான் ஆறாம் முத்திரை. யார் அதைச் செய்கின்றது? எடுக்கப்படுதல் நிகழ்ந்த பின்பு தோன்றும் இவ்விரண்டு தீர்க்கதரிசிகள், தேவனுடைய வல்லமையைக் கொண்டு, தேவனுடைய வார்த்தையின் மூலம், இயற்கையைக் தடை செய்கின்றனர். அவர்கள் வேண்டுமானால் பூகம்பங்கள் உண்டாகக் கட்டளையிடலாம், சந்திரனை இரத்தமாக்கவும், சூரியனை அஸ்தமிக்கவும் செய்யலாம். ஆமென்! சபையின் காலத்தில் முத்திரைகள் திறக்கப்படுவதைப் பாருங்கள். ஐந்தாம் முத்திரை உயிர்த்தியாகம் செய்த யூதர்களைக் குறிக்கின்றது என்பதை நாம் அறிந்து கொண்டோம். இப்பொழுது இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் தேவனுடைய வார்த்தையைக் கொண்டவர்களாய், அவர்கள் விரும்பின யாவையும் இயற்கைக்குச் செய்கின்றனர். அவர்கள் பூமியை அசைக்கின்றனர். யார் இவ்விதம் செய்வார்கள் என்பது நமக்குத் தெளிவானது - மோசேயும், எலியாவும், அவர்களிருவரும் தாங்கள் ஏற்கனவே செய்த ஊழியத்தை மறுபடியும் செய்கின்றனர், உங்களுக்கு இப்பொழுது ஆறாம் முத்திரை என்னவென்பது புரிகின்றதா? இரண்டு தீர்க்கதரிசிகளும் அதைச் செய்கின்றனர். கவனியுங்கள், இந்த ஆறாம் முத்திரையைத் திறந்ததுயார்? - தீர்க்கதரிசிகள். ஆமென், ஓ! நாம் கழுகின் நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்நாட்கள் இப்பொழுது நம்மிடையேயுள்ளன. அந்த தீர்க்கதரிசிகள் ஆறாம் முத்திரையின் சம்பவங்களை நிகழ்த்தினர். அவைகளைச் செய்ய அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. ஆமென்! ஆறாம் முத்திரையின் இரகசியம் இப்பொழுது வெளியானது. இவை சம்பவிக்கும் என்பதாய் இயேசு கூறியுள்ளார், பழைய ஏற்பாட்டிலும் தானியேல் போன்ற தீர்க்கதரிசிகளெல்லாரும் அதையே கூறியுள்ளனர். ஆறாம் முத்திரையின் கீழுள்ள சம்பவங்களை யார் நிகழ்த்தியது என்பது ஒரு இரகசியமாக இதுவரை இருந்து வந்தது. இரண்டு தீர்க்கதரிசிகள் அதை செய்வதாக நாம் இப்பொழுது அறிந்து கொண்டோம். வேதம் அவ்வாறே கூறுகின்றது. அவர்கள் எதை வேண்டுமானாலும் இயற்கைக்குச் செய்யலாம். அவர்கள் முன்பு செய்தவைகளையே அப்பொழுதும் செய்கின்றனர். ஏனெனில் அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஆமென்! மகிமை! இதனை நான் அறிந்தபோது, என் ஆசனத்தை விட்டு எழுந்திருந்து இங்குமங்குமாக நடந்து, ‘ஆண்டவரே, பரம பிதாவே, உமக்கு நன்றி செலுத்துகிறேன்’ என்று அவரைப் புகழ்ந்தேன். ஆறாம் முத்திரை திறக்கப்பட்டு விட்டது. ஆமென். இரண்டு தீர்க்கதரிசிகளையும் கவனியுங்கள், யாராகிலும் அவர்களைச் சேதப்படுத்த முயன்றால், அவர்கள் வாயிலிருந்து அக்கினி புறப்படுகின்றது - தேவனுடைய வார்த்தை, பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் வருகின்றார். அக்கினி அவர்கள் வாயிலிருந்து புறப்படுகின்றது. வெளிப்படுத்தல் 19-ம் அதிகாரத்தில் நாம் அதையே காண்கிறோம். கிறிஸ்துவின் வாயிலிருந்து ஒரு பெரிய பட்டயம் புறப்படுகின்றது - தேவனுடைய வார்த்தை அதைக் கவனித்தீர்களா? அவர் வரும்போது அவர் சத்துருக்களை அதன் மூலம் நிர்மூலமாக்குகிறார். நான் கூறுவது சரியா? இப்பொழுது அவர் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். அவரைக் கவனியுங்கள். இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் தீர்க்கதரிசனம் உரைக்கும் நாட்களில் மழை பெய்யாதபடி வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படுகின்றது. இயற்கையை அவர்கள் தடை செய்கின்றனர். மழை பெய்யாதபடி எலியா எவ்வளவு காலம் வானத்தை அடைத்தான்? (சபையார் ‘மூன்றரை வருடங்கள்’ என்று பதிலளிக்கின்றனர் - ஆசிரியர்) தானியேலின் எழுபதாம் வாரத்தின் கடைசி பாகம் எவ்வளவு காலம் நீடிக்கின்றது? (சபையார் ‘மூன்றரை வருடங்கள்’ என்று பதிலளிக்கின்றனர் - ஆசிரியர்). மோசே என்ன செய்தான்? அவன் தண்ணீரை இரத்தமாக மாற்றினான், ஆறாம் முத்திரையில் கூறப்பட்டுள்ள அற்புதங்கள் அனைத்தையும் செய்தான். வெளிப்படுத்தல் 11-ம் அதிகாரத்தில் இவ்விருவரும் அவர்கள் முன்பு செய்த அற்புதங்களையே செய்கின்றனர், ஆமென்! வேதத்தில் வெவ்வேறு பாகங்களில் கூறப்பட்டவை ஒன்றாகப் பொருந்துகின்றன. அதுதான் ஆறாம் முத்திரை திறக்கப்படுதலாம். ஆமென்! மகிமை! கவனியுங்கள், கர்த்தர் எகிப்தில் அவர் செய்த வாதைகளையே மீண்டும் செய்து, தம் புத்திரனாகிய இஸ்ரவேலை மீட்டுக் கொள்கிறார். அங்கு மோசேயை அனுப்பி இஸ்ரவேல் புத்திரை விடுவித்தார், இப்பொழுதும் அவர் அதையே செய்கிறார். அவர் ஆகாபிடம் எலியாவை அனுப்பி ஏழாயிரம் பேரை வெளியே கொணர்ந்தார். நான் கூறுவது சரியா? உபத்திரவ காலத்தில் அவர்களை அவர் மறுபடியும் அனுப்பி 144,000 பேர்களை மீட்டுக்கொள்கிறார். ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே, 144,000 பேர் மீட்கப்படுவதை அறிவிக்கும் வெளிப்படுத்தல் 7ம் அதிகாரம் கணித்தபடி சரிவர அமைந்திருப்பதைக் கவனியுங்கள். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக் கொடுக்கும் போது என்ன நேர்ந்ததென்பதைக் காண்போம். யாக்கோபு அவர் குமாரன், ஆனால் இயேசுவோ அவருடைய ஒரே பேறான குமாரன் மத்தேயு 27ம் அதிகாரத்தில் சம்பவித்ததென்ன என்பதைப் பார்ப்போம். அவருடைய குமாரன் அடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். அவர்கள் அவரைப் பரிகசித்தார்கள். அவர் பெரிய வெள்ளிக்கிழமையன்று பகல் மூன்று மணிக்குச் சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார். மத்தேயு 27ம் அதிகாரம் 45ம் வசனம். ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. அதையே அவர் இங்கு மறுபடியும் செய்கிறார். வெளி. 6.12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக் கண்டேன், இதோ பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது, சந்திரன் இரத்தம் போலாயிற்று. கறுப்பு, அந்தகாரம், எகிப்து - கறுப்பு, அந்தகாரம், இயேசுவை உயிரோடு எழுப்புவதற்கு முன்னால் கர்த்தர் அவரைச் சிலுவையில் ஒப்புக்கொடுக்கிறார். அப்பொழுது முதலாவதாக அந்தகாரம் உண்டானது மத்தியான வேளையில் சூரியன் அஸ்தமித்தது. நட்சத்திரங்கள் பிரகாசிக்காமற்போயின. இரண்டு நாட்கள் கழித்து தேவன் மகத்தான வெற்றி கொண்டவராய் அவரை எழுப்பினார். அவ்வாறே எகிப்தில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவை இருளடைந்த பின்னர், அவர் இஸ்ரவேலரை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டைச் சுதந்தரிக்கச் செய்தார். உபத்திரவ காலத்தில் இந்த இரண்டு தீர்க்கதரிசிகளும் தேவன் அவர்களுக்களித்திருந்த வார்த்தையைக் கொண்டவர் களாயிருந்தனர். தேவன் பேசக் கூறினவைகளை மாத்திரம் அவர்கள் பேசினார்கள். அவர்கள் தேவர்களல்ல. ஆனால் ஒரு வகையில் அவர்கள் தேவர்கள்தாம். ஏனெனில் இயேசு ‘தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் தேவர்கள் என்று சொல்லியிருக்க....’ என்றார். ஆம், அவர்களிடம் தேவனுடைய வார்த்தை அளிக்கப்படுகின்றது. அவர்கள் அதைப்பேசும் போது, அவர்கள் கூறினவிதமாகவே சம்பவிக்கின்றது, இவர்களிருவரும் தேவனுடைய கட்டளையைப் பெற்று, அவர்கள் விரும்பும்போதெல்லாம் பூமியை வாதிக்கின்றனர். அவர்கள் வானத்தை அடைக்கின்றனர், அதன் அர்த்தம் என்ன? கர்த்தர் மீட்பின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள 1,44,000 பேர்களை மீட்டெடுக்க தருணம் வந்துவிட்டது, அவர்கள் மீட்பின் புத்தகத்தின் முத்திரையின் கீழ் - ஆறாம் முத்திரையில் காணப்படுகின்றனர். என் அன்பார்ந்த நண்பர்களே, இதுவரை இரகசியமாயிருந்த ஆறாம் முத்திரை இதுவே. நான் குறிப்பெழுதியுள்ள பதினைந்து பக்கங்கள் இன்னமும் உள்ளன. இன்னும் அனேக காரியங்களை வேதத்திலிருந்து எடுத்துக் கூறமுடியும். ஆனால் இவை யாவும் உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துமென்று நான் ஐயப்படுகிறேன். ஏசாயா தீர்க்கதரிசி ஆறாம் முத்திரையைக் குறித்துப்பேசியிருக்கிறான். மீட்பின் முழு திட்டமும் வேதாகமம் முழுமையிலும் இடம் பெறுகின்றது. இயேசு ஆறாம் முத்திரையைக் கண்டார் என்று நாம் பார்த்தோம், மற்றவர்களும் அதைக் காண்கின்றனர். யாக்கோபு இதற்கு முன்னடை யாளமாயிருக்கிறான். எகிப்தில் நடந்தவையும், இயேசு சிலுவையிலறையப் பட்டபோது நிகழ்ந்தவையும், உபத்திரவ காலத்தில் சம்பவிக்க விருப்பவைகளுக்கு முன்னடையாளமாயுள்ளன. இப்பொழுது ஏசாயா 13ம் அதிகாரத்திற்குச் செல்வோம். ஏசாயா தீர்க்கதரிசன புத்தகம் ஒரு நிறைவான வேதாகமமாகும். ஏசாயா தொடக்கத்தில் சிருஷ்டிப்பைக் குறிப்பிட்டு, மத்தியில் யோவான் ஸ்தானனைக் குறித்துப் பேசி, ஆயிரம் வருஷ அரசாட்சியுடன் அதை முடிக்கிறான், வேதாகமத்தில் அறுபத்தாறு புத்தகங்கள் உண்டு. ஏசாயாவில் அறுபத்தாறு அதிகாரங்கள் உள்ளன. ஏசாயா 13ம் அதிகாரம் ஆறாம் வசனத்திலிருந்து படிப்போம். அலறுங்கள், கர்த்தரின், நாள் சமீபமாயிருக்கிறது, அது சர்வ வல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். கிறிஸ்து தோன்றுவதற்கு 2713 வருடங்களுக்கு முன்னால் ஆறாம் முத்திரையை ஏசாயா அறிவிப்பதைப் பாருங்கள். அவன் ஏறக்குறைய 2700 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தான். இந்த முத்திரை நிறைவேறுவதை அவன் காண்கிறான். ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். இயேசு என்ன கூறினார்? ‘அக்கிரமம் மிகுதியாவதனால், அநேகருடைய அன்பு தணிந்துபோம்.... மனுஷருடைய இருதயம் பயத்தினால் சோர்ந்துபோம்..’ கடல் கொந்தளிப்பு, மனிதனுடைய இருதயம் சோர்ந்து போகும். அவர்கள் திகிலடைவார்கள், வேதனைகளும் வாதங்களும் அவர்களைப் பிடிக்கும், பிள்ளை பெறுகிறவளைப்போல வேதனைப் படுவார்கள். ஒருவரையொருவர் பிரமித்துப் பார்ப்பார்கள், அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். இதை கவனியுங்கள், அவர்கள் முகங்கள் வெட்கத்தினால் மாறுபடுகின்றன. இன்னும் சில நிமிடங்களில் அதைக் குறித்துப் பார்ப்போம். இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிர கோபமுமாய் வருகிறது. (ஆட்டுக்குட்டியானவர் - அவையெல்லாம் அழிந்து போகின்றன. பார்த்தீர்களா? கவனியுங்கள்). வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும், சூரியன் உதிக்கையில் இருண்டுபோம், சந்திரன் ஒளி கொடாதிருக்கும். பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க் கரையும் நான் கண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். பாருங்கள், இயேசு என்ன பேசினாரோ அதையே ஏசாயாவும் கண்டான். அவர் தேசத்தை உபத்திரவங்களினால் சுத்திகரிக்கிறார். அது உபத்திரவ காலத்தில் சம்பவிக்கின்றது - ஆறாம் முத்திரை, ஆம், ஏசாயா ஒரு தீர்க்கதரிசி. ஆதலால் தேவனுடைய வார்த்தை அவனுக்கு வெளியாகிறது. இது 2700 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. இதை நான் உங்களிடம் கூற விரும்புகிறேன். ஏசாயா கூறினவாறு அனைத்துலகமே... ஒரு ஸ்திரீ பிரசவ வேதனைப்படுவது போன்று, எல்லா சிருஷ்டியும் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலறலும் தவிப்பும் எதற்காக? தாயாகப் போகும் ஒரு ஸ்திரியைப் போன்று இந்த பூமியும் - இயற்கையும் - தவித்துக் கொண்டிருக்கின்றது. நம்முடைய பட்டினத்தை நாம் உதாரணமாக எடுத்துக் கொள்வோம். இதில் மதுபான கடைகளும், வேசித்தனமும் எல்லாவித அசுத்தமும் நிறைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்பட்டினம் இருந்த நிலையில் அதைக் காணத் தேவன் நிச்சயம் விரும்புவார். ஓஹையோ நதி கீழே பாய்ந்து கொண்டிருந்தபோது, கடற்கழிகளும், வெள்ளச் சேதங்களும் அப்பொழுது இல்லை. இந்தப் பள்ளத்தாக்கில் பாவம் என்பதே அப்பொழுது கிடையாது. எருமைகள் சுதந்தரமாக திரிந்து கொண்டிருந்தன. அப்பொழுது அங்கு வாழ்ந்திருந்த இந்தியர்கள் எருமைகளை வேட்டையாடித் தின்று ஜீவனம் நடத்தினர். எந்தவிதமான சச்சரவும் அப்பொழுது இல்லை. ஆனால் மனிதர் இந்தப் பட்டினத்தில் பிரவேசித்தபோது, பாவமும் பிரவேசித்தது. பூமியின்மேல் மனிதன் பெருகினபோது, பாவமும் வன்முறைகளும் தோன்றின. ஆம், மனிதன் தான் இவைகளுக்குக் காரணம், ஏன், இவை அவமானமான செயலகளாகும். நான் என் பிறந்த ஊராகிய அரிசோனாவில் அன்றொரு நாள் நின்று கொண்டிருந்தேன். நான் சிறுவனாயிருந்தபோது, ஜெரோனிமோ (Geronimo). கோகைஸ் (Cochise) போன்ற அமெரிக்க இந்தியர்களைக் குறித்துப் படித்திருக்கிறேன். நான் ஊழியத்திற்கு வந்த பிறகு, இவ்விந்தியர்களுக்கு நான் பிரசங்கம் செய்திருக்கிறேன். அவர்கள் மிகவும் நல்லவர்கள். பின்னர் ஒருநாள், புராதன போரில் உபயோகித்த ஆயுதங்களை வைத்திருக்கும் டூம்ஸ்டோன் (Tombstone) என்ற இடத்திற்குச் சென்று அவைகளைப் பார்வையிட்டேன். அவர்கள் ஜெரோனிமோவைத் துரோகியாகக் கருதுவதுண்டு, ஆனால் என்னைப் பொறுத்தவரை அவன் வீரமுள்ள அமெரிக்கன். ஆம், அது உண்மை, அவன் தன் உரிமைக்காகப் போரிட்டான். நாமும் கூட அவ்வாறே செய்திருப்போம். அவனுடைய தேசம் அசுசிப்படுவதை அவன் விரும்பவில்லை. இப்பொழுது அது எந்நிலையிலுள்ளது என்பதைக் கவனியுங்கள். வெள்ளையன் அதில் புகுந்து அவன் குமாரத்திகளை வேசிகளாக ஆக்கினான். வெள்ளையன் தான் அயோக்கியன்! ஆனால் அமெரிக்க இந்தியனோ நடுத்தரமானவன். அவன் ஒரு எருமையைக் கொன்றுவருவான். அந்த ஜாதியிலுள்ள அனைவரும் எருமையின் மாமிசம் எல்லாவற்றையும் வீணாக்காமல் புசிப்பார்கள். அதன் தோலை அவர்கள் ஆடைகளாகவும் கூடாரம் போடவும் பயன்படுத் தினர்.ஆனால் வெள்ளையன் அங்கு வந்து, சுட்டுப் பழகுவதற்கென எருமைகளைக் குறிவைத்து சுட்டு வீழ்த்தினான். என்னே ஒரு அவமானச் செயல்! ஆப்பிரிக்கா கண்டத்தில் காட்டுமிருகங்கள் நிறைய உள்ளன. ஆர்தர் காட்ஃபிரேயும் (Arthur Godfrey) அவரைச்சார்ந்தோரும் ஹெலிகாப்டரில் சென்று அவைகளைச் சுட்டு வீழ்த்தியதாக நான் பத்திரிகையில் படித்தேன். ஒரு பெண் யானை சுடப்பட்டு சாகுந் தருவாயில் கண்ணீர் வடிப்பதும், இரண்டு ஆண் யானைகள் அந்த பெண் யானையைப் பிடித்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு புகைப்படம் பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டது. அது பாவமான செயல். அது ஒரு விளையாட்டல்ல! நான் வேட்டையாடச் செல்லும் பகுதியில், வெள்ளையர்கள் வந்து எட்டு அல்லது பத்து பெண்மான்களைச் சுட்டு வீழ்த்தி சென்றுவிடுவதையும் மான்குட்டிகள் தங்கள் தாயைத் தேடி இங்குமங்கும் ஓடும் பரிதாபமான காட்சியை நான் கண்டிருக்கிறேன். அது நல்ல வேட்டைக்காரத்தனம் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? என்னைப் பொறுத்தவiயில் அது கொடூரம் நிறைந்த கொலையாகும். இவ்விதம் வேட்டையாடும் அமெரிக்கத் துரோகிகள் தன் நாட்டில் நுழைய கனடா தேசம் அனுமதிக்காது என்று நான் நம்புகிறேன். அவர்கள் மிகவும் கீழ்த்தரமான வேட்டைக்காரர்கள் அவர்களில் ஆயிரத்தில் ஒருவர் மாத்திரமே ஒருக்கால் நல்லவராயிருக்கக்கூடும். அவர்கள் கண்டதை யெல்லாம் விருப்பப்படி சுட்டு வீழ்த்துகின்றனர். அவர்கள் இருதயக் கடினமுள்ள கொலைபாதகர். நான் அலாஸ்காவிற்குச் சென்றிருந்த போது, ஒரு மான்கூட்டமே மெஷின் துப்பாக்கியால் சுடப்பட்டு, குண்டுகள் கொம்புகளில் பாய்ந்து இறந்து கிடந்ததைக் கண்டேன். அமெரிக்க விமானிகள் இவைகளைக் கொன்றதாக என்னுடன் வந்திருந்த வழிகாட்டி (guide) கூறினார். ஒரு மான் கூட்டமே அழிக்கப்பட்டது. இது வெறும் கொலைபாதகமாகும். எருமைகளைக் கொன்றுவிட்டால், இந்தியர்கள் பட்டினிகிடந்து சாவார்கள் என்று வெள்ளையர் அறிந்திருந்தனர். இதன் காரணமாகவே கோகைஸும் அவனைச் சார்ந்த அனைவரும் சரணடைய நேர்ந்தது. ஏனெனில் அவர்கள் பட்டினியினால் அவதியுற்றனர். ஒரே பகலில் பஃபலோ பில் (Buffallo Bill) போன்றவர் நாற்பது அல்லது ஐம்பது எருமைகளைக் சுட்டுக் கொல்வார்கள். எருமைகளை அழித்துவிட்டால், இந்தியர்கள் ஒழிந்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தியர்களை அவர்கள் இவ்வாறு துன்புறுத்தியதன் காரணமாக நமது தேசியக்கொடியில் கறைபடிந்துவிட்டது. ஆனால் இப்பூமியை நாசம் செய்பவர்களை தேவன் நாசம் செய்வார் என்று வேதம் கூறுகின்றது. அன்றொரு நாள் நானும் என் மனைவியும் தெற்கு மலையின் (South Mountain) மேலேறி, பீனிக்ஸ் பள்ளத்தாக்கை நோக்கினோம். என் மனைவியிடம் நான், ‘இது மோசமாகக் காணப்படுகின்றதல்லவா?’ என்றேன். அதற்கு அவள், ‘எனக்குப் புரியவில்லையே’ என்றாள். நான் மேலும் விவரித்து அவளிடம், ‘இந்த ஸ்தலம் பாவத்தால் நிறைந்திருக் கின்றது. 150,000 அல்லது 200,000 ஜனத்தொகை கொண்ட இப்பள்ளத்தாக்கில் எவ்வளவாக விபச்சாரமும் மது அருந்துதலும் சபித்தலும் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்குவதும் நிறைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இங்கு முட்செடிகளும் புல் செடிகளும் தவிர வேறொன்றும் இருக்கவில்லை. நதியின் மணலில் ஓநாய்கள் இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந்தன. அவ்வாறே தேவன் அதை சிருஷ்டித்தார். ஆனால் மனிதன் அங்கு புகுந்தவுடன் என்ன செய்தான்? அவன் பூமியை அசுத்தத்தால் நிரப்பினான். தெருக்களும், சாக்கடைகளும், நதிகளும் அசுத்தமாக்கப்பட்டுவிட்டன’ என்றேன். அங்குள்ள தண்ணீரைக் குடித்தால் உங்களுக்கு எந்த வியாதியும் வரக்கூடும். இங்கு மாத்திரமல்ல, உலகம் பூராவுமே இந்நிலையிலுள்ளது. இயற்கையும் பூமியும் அசுசிப்பட்டுள்ளன. தேவனே கிருபையாயிரும்! உலகம் முழுவதுமே பிரசவவேதனையிலுள்ளதாக ஏசாயா கூறியிருக் கிறான். என்ன காரணம்? அவள் ஆயிரம் வருட அரசாட்சிக்கென்று புது உலகத்தைப் பிரசவிக்க முற்படுகிறாள். அந்த உலகம் பாவமற சுத்திகரிக்கப்பட்டிருக்கும். அங்கு புதிய ஜனங்கள் வாழ்வார்கள். அவர்கள் பாவம் செய்து பூமியை ஒருபோதும் அசுத்தப்படுத்தமாட்டார்கள். ஆம், உலகம் பிரசவ வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாமும் மணவாட்டியை உருவாக்குவதற்கென பிரசவ வேதனைப் பட்டுக்கொண்டிருக்கிறோம். எல்லாமே பிரசவ வேதனையடைந்து வேதனை மிகுதியால் அலறிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று சம்பவிக்க இருக்கிறது என்பதனை இது காண்பிக்கின்றது. இந்த ஆறாம் முத்திரையின் சம்பவங்கள் புதிய உலகத்தை உருவாக்குகின்றது. சகோதரனே, பூமியதிர்ச்சியினால் பூமி பிளவுண்டு போகும், நட்சத்திரங்கள் குலுக்கப்படும். எரிமலை குழம்பு பூமியின் மையத்தி லிருந்து மேற்பரப்புக்கு வரும், பூமி இவ்விதம் புதுப்பிக்கப்படும். பூமி சுற்றிக்கொண்டு வரும்போது, எல்லாமே தவிடு பொடியாகிவிடும். ஒரு நாள் காலையில் இயேசுவும் அவரது மணவாட்டியும் பூமிக்குத் திரும்ப வரும்போது, இது தேவனுடைய பரதீசியாக அமைந்திருக்கும், ஆவிக்குரிய போரில் கலந்து கொண்ட வீரர்கள் அவர்களுக்கு அருமையானவர்களுடனும் நண்பர்களுடனும் இங்குமங்கும் உலாவுவர். பரம சேனையின் தூதர்கள் இசைக்கும் பாட்டுகள் ஆகாயத்தை நிரப்பும். ‘நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, உனக்கென்று ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பாயாக. ஏவாள் பாவம் செய்து அதனை தோற்றுவிப்பதற்கு முன்பு இவ்வுலகம் இவ்வாறே இருந்தது’ என்பார். ஆமென். ஆம், ஆறாம் முத்திரை ஒன்றைச் செய்யப்போகின்றது. ஆம், ஐயா! முழு உலகமே ஆயிரம் வருஷ அரசாட்சிக்காக பிரசவ வேதனைப்பட்டு அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போதைய உலகம் அசுத்தத்தினால் நிறைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு இக்கூடாரத்தில் ‘இடிந்து போகும் உலகம்’ (The World is Falling Apart) என்பதைக் குறித்து பிரசங்கித்தது நினைவுக்கு வருகின்றது. இவ்வுலகில் எல்லாமே இடிந்து போகவேண்டும். அதற்குக் காரணம் காண்பிக்கிறேன். இப்பூமிக்கு வெளிப்புற ஆதாரமாக (frame) அமைந்துள்ள இரும்பையும் செம்பையும் அவர்கள் தொழிற்துறைகளுக் காகவும் யுத்தத்தில் உபயோகிப்பதற்காகவும் வெட்டி எடுக்கின்றனர். சமீபத்தில் செயின்ட் லூயி (St. Louis) போன்றவிடங்களில் பூகம்பம் உண்டானது. இதற்கு முன்பாக பூகம்பம் அங்கு உண்டாகவில்லை. ஏன்? இவ்வுலோகங்கள் வெட்டி எடுக்கப்படுவதால் அவள் மெலிந்துகொண்டே போகின்றாள். எல்லாவற்றையும் அங்கிருந்த அவர்கள் வெட்டி எடுத்துவிட்டனர். அரசியலும் கறைபட்டு விட்டதால் உத்தமமான யாரையும் அதில் காண்பது அரிதாயிருக்கிறது. அவர்களின் நல்லொழுக்கம் க்ஷீண திசையை அடைந்துள்ளது, ஆம், ஐயா! வெகு விரையில் ஆறாம் முத்திரையில் கூறியுள்ள சம்பவங்கள் நிகழவிருக்கின்றன. அவை நிகழும்போது அதுதான் முடிவு, அப்பொழுது ஏற்கனவே மணவாட்டி எடுக்கப்பட்டிருப்பாள், அரசி அவள் ஸ்தானத்தை வகிக்க ஏற்கனவே சென்றிருப்பாள், அவள் ராஜாவை மணந்து கொள்ளுவாள். இது நிகழும்போது, இஸ்ரவேலில் மீதியானவர்கள் முத்தரிக்கப்பட்டு, செல்ல ஆயத்தமாயிருப்பார்கள். அவ்வமயம் இயற்கையும் தன்கிரியைகளைச் செய்கிறாள். என்னே ஒரு சமயம்! ஆறாம் முத்திரையை விவரிக்கும் பாகத்தின் கடைசி வசனத்தைக் கவனியுங்கள். அடையாளங்களால் உறுதியாக்கப்பட்ட ஜீவனுள்ள தேவனின் வார்த்தையைக் கேட்டு பரிகாசம் செய்தவர் யாவரும் ... தீர்க்கதரிசிகள் காலங்கள் தோறும் செய்துவந்த அற்புதங்களைக் கண்டு நகைத்தவர் யாவரும் ஆறாம் முத்திரையின் சம்பவத்தின்போது, பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி, ‘ஆட்டுகுட்டியானவருடைய கோபத்துக்கு எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்வார்கள். ஏன்? அவர்கள் பரிகசித்த அதே வார்த்தையாக கிறிஸ்து வருகிறதை அவர்கள் காண்கின்றனர். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கண்டு நகைத்தனர். அதே வார்த்தைதான் இயேசுவான மாமிசத்தில் வெளிப்பட்டது. தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்ட அனைவரையும் அவர்கள் பரிகசித்தனர். அந்த வார்த்தையாகிய இயேசு வந்தபோது அவர்கள் ஏன் மனந்திரும்ப முடியாமற் போயிற்று? ஏனெனில் காலதாமதமாகிவிட்டது. அவர்கள் மேல் தண்டனை விழப்போகின்றது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். இத்தகைய ஆவிக்குரிய கூட்டங்களில் அவர்கள் பங்கு கொண்டு அங்கு பிரசங்கிக்கப்பட்ட அனைத்தையும் அறிந்திருந்தனர். தீர்க்கதரிசிகள் முன்னறிவித்துள்ள தண்டனை அவர்கள் முன்னால் அப்பொழுது நிற்கின்றது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். கிருபையை அவர்கள் கடைசி முறையாக உதறித் தள்ளிவிட்டனர். நீங்களும் கிருபையை உதறித் தள்ளினால், தண்டனை பெறுவதன்றி வேறு வழியில்லை. அதைச் சற்று சிந்தனை செய்து பாருங்கள். தண்டனை வரும்போது அவர்கள் ஒளிந்துகொள்ள இடமில்லாமற் போகும். அவர்கள் பரிவதங்களையும் கன்மலை களையும் நோக்கி, ‘எங்கள் மேல்விழுந்து ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கு எங்களை மறைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறுவார்கள் என்பதாக வேதம் எடுத்து ரைக்கிறது. அவர்கள் மனந்திரும்ப முயன்றனர். ஆனால் ஏற்கனவே ஆட்டுக்குட்டியானவர் வந்து தமக்குச் சொந்தமானவர்களைக் கொண்டு சென்றுவிட்டார். அவர்கள் பர்வதங்களையும் கன்மலை களையும் நோக்கி கெஞ்சினர். ஆனால் அப்பொழுது காலதாமதமாகிவிட்டது. என் சகோதரரே, சகோதரிகளே, தேவனுடைய கிருபையும் இரக்கங்களும் ஜனங்களுக்கு இப்பொழுது அளிக்கப்பட்டுள்ளது. நாம் மனந்திரும்ப தருணம் அளிக்கப்படவேண்டும் என்பதற்காக இரண்டாயிரம் ஆண்டுகளாக இஸ்ரவேலரின் கண்கள் குருடாக்கப் பட்டுள்ளன. அத்தகைய இரக்கத்தை நீ உதறித் தள்ளிவிட்டாயா? அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டாயா? நீ யாரென்றும், நீ எங்கிருந்து வந்தாய் என்றும், எங்கு போகின்றாய் என்றும் சற்றேனும் சிந்தித்துப் பார்த்ததுண்டா? எந்த வைத்தியனும் அதை உங்களுக்குக் கூறமுடியாது. வேதாகமத்தைத் தவிர வேறெந்த புத்தகமும் நீ யாரென்றும், நீ எங்கிருந்து வந்தாய் என்றும், எங்கு போகின்றாய் என்பதையும் உனக்கு அறிவிக்க முடியாது. ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் உங்களுக்குப் பதிலாக உங்கள் ஸ்தானத்திலிருந்து கிரியை செய்து கொண்டு வருகிறது. ஆகவே நீங்கள் எங்கு செல்வீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தேவன் உங்களுக்காக இதைச் செய்திருக்கும் போது, நாம் செய்யவேண்டிய சிறிய காரியம் அவர் நமக்கென செய்திருப்பதை ஏற்றுக்கொள்வதாகும். அதை தாம் நாம் செய்யவேண்டுமென்று அவர் நம்மிடம் கூறியுள்ளார். இப்பொழுது சற்று நேரம் தலைவணங்குவோம், என் அன்பார்ந்த நண்பர்களே, நான் இதுவரை உங்களிடம் பேசிக்கொண்டிருந்த தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளாமற் போனால், தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கும் கோபாக்கினைக்கும் ஆளாவீர்கள். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்த அதே நிலையில்தான் நீங்களும் இன்றிரவு இருக்கின்றீர்கள். நீங்கள் சுயாதீனத்தைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் ஜீவவிருட் சத்திற்கு செல்லலாம், அல்லது தேவன் வகுத்துள்ள நியாயத் தீர்ப்பின் திட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் புத்திசாலிகளும், சரியான சிந்தையுள்ளவர்களாகவும், எழுந்து நின்று இயேசுவை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ஆரோக்கியமுள்ளவர் களாயுமிருந்தால், பின்னை ஏன் அவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது? இதுவரை அவரை ஏற்றுக்கொள்ளாதவர் இங்கிருந்தால், உங்கள் கரங்களை உயர்த்தி, ‘சகோ பிரான்ஹாமே, எனக்காக ஜெபியுங்கள். நான் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். தண்டனை என் மேல் விழுவதை நான் விரும்பவில்லை’ என்று சொல்லுங்கள். நண்பர்களே, இப்பொழுது நான் உங்களிடம் கூறினது என்சொந்த கருத்துகளல்ல, பரிசுத்த ஆவியானவர் அதை அறிவார். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவு, இக்கூட்டங்களில் இதுவரை இருந்த ஒரு இரகசியத்தை உங்களுக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன். அது நிகழ்ந்ததை நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அது உங்கள் முன்னிலையில் நிகழ்ந்தது. அதை நான் ஒவ்வொரு இரவும் கண்டிருக்கிறேன் - தேவன் அளிந்திருக்கும் கிருபையை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். நீங்கள் கிறிஸ்தவர்களாக இல்லாமலிருந்தால், நீங்கள் அவர் இரத்தத்தின்கீழ் இல்லாமல் இருந்தால், நீங்கள் மறுபடியும் பிறந்து பரிசுத்த ஆவியைப்பெறாமலிருந்தால், இயேசுகிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் இவைகளுக்கு சாட்சியாயுள்ள ஞானஸ்நானத்தை அவருடைய நாமத்தில் பெற்று, அதன் மூலம் அவரை ஏற்றுக் கொண்டதாக நீங்கள் இதுவரை பகிரங்கமாக அறிக்கை செய்யாமலிருந்தால், தண்ணீர் உங்களுக்காக ஆயத்தமாயிருக்கிறது. ஞானஸ்நானத்திற்காக அங்கிகள் இருக்கின்றன, உங்களை ஏற்றுக் கொள்ள இயேசுவானவரும் கரங்களை விரித்து உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒருக்கால் அவர் அளித்துள்ள கிருபை உங்களை விட்டு எடுபடக் கூடும். ஒருக்கால், இது நீங்கள் புறக்கணிக்கும் கடைசி முறையாக இருக்கலாம், மறுபடியும் அது உங்கள் இருதயத்தைத் தொடாமலிருக்கலாம். உங்களால் முடியும்பபோதே அவரை ஏன் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது? கைகளையுயர்த்தினவர்களைப் பீடத்தின் முன்னால் வரச்சொல்வது தான் வழக்கமான செயலாகும். நாமும் அதைப் பின்பற்றுவதுண்டு. அது முற்றிலும் சரி, ஆனால் பீடத்தைச் சுற்றிலும் கூட்டமிருப்பதால் அவ்விதம் செய்ய இயலாது. ஆனால் ஒன்றை உங்களிடம் கூற விரும்புகிறேன். அப்போஸ்தலருடைய நாட்களில், ‘விசுவாசித்தவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று சொல்லப்பட்டது. உணர்ச்சி வசத்தின் காரணமாக இது நிகழ்கின்றது என்று நீங்கள் கருதவேண்டாம். ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும் போது, அந்த அனுபவத்துடன் உணர்ச்சியும் கூட உண்டாகின்றது என்பது மெய்தான். நீங்கள் உண்மையாக உங்கள் இருதயத்தில் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் ஆசனத்திலிருந்தே அவரை முழு இருதயத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்களுக்குள் ஒரு மாறுதல் உண்டாகும். அவ்விதம் மாறுதல் உண்டானது என்பதற்கு சாட்சியாக நீங்கள் எழுந்து நிற்கலாம். பிறகு நீங்கள் தண்ணீரண்டைச் சென்று, ‘நான் மணவாட்டியுடன் என் ஸ்தானத்தை வசிக்க விரும்புகிறேன்’ என்பதைச் சபையாருக்கு சாட்சியாக அறிவிக்க, ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன்’ என்று சொல்லுங்கள். இவ்வுலகில் அனேக நல்ல பெண்மணிகள் இருக்கின்றனர். அவர்களில் ஒருத்தியை நான் காணும்போது நான் தனித்திருக்கிறேன் என்று உணர்ச்சி எனக்குண்டாகிறது. அவள்தான் என் மனைவி. அவள் என்னுடன் வீட்டிற்குச் செல்கின்றாள். தொடக்கத்தில் அவள் என் மனைவியாயிருக்கவில்லை, ஆனால் அவள் எப்படி என் மனைவி யானால்? அவள் என் பெயரைத் தரித்துக் கொண்டாள். அவ்வாறே இவ்வுலகில் அனேக பெண்மணிகள் - சபைகள் - உண்டு. ஆனால் இயேசுவோ, தம் மனைவிக்காக வருகிறார். அவள் அவருடைய பெயரால் அழைக்கப்படுகின்றாள். கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களைத் தேவன் அவருடன் கொண்டு வருவார். நாம் அதில் எவ்விதம் பிரவேசிக்க முடியும்? ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுவதன் மூலம் அதனுள் நாம் பிரவேசிக்கலாம். நான் ஜெபம் செய்யும்போது, நீங்களும் ஜெபியுங்கள் - கூடாரத்துக்குள் இருப்பவர்களும், வெளியில் நிற்பவர்களும், அனேகர் அறைகளில் குழுமியிருக்கின்றனர். வெளியில் அனேகர் நின்று கொண்டிருக்கின்றனர். உங்களை நாங்கள் பீடத்திற்கு முன்னால் அழைக்க இயலாது. ஆனால் உங்கள் இருதயத்தை நீங்கள் பீடமாக்கிக் கொள்ளுங்கள். ‘கர்த்தராகிய இயேசுவே, இதை நான் விசுவாசிக்கின்றேன். நான் இரவின் காற்றில் நின்றுகொண்டிருந்தேன். நான் இவ்வறைக்குள் கூட்டத்தில் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். இதை நான் தவறவிடக் கூடாது’ என்று உங்கள் இருதயத்தில் ஜெபியுங்கள். சென்ற இரவு நான் உங்களிடம் கூறினவாறு.... நான் உண்மையை உங்களிடம் கூறினேன் என்பதை தேவன் அறிவார். பவுல், ‘நான் பொய்யுரைக்கவில்லை’ என்று சொன்னதுபோல் நானும் உங்களிடம் சொல்கிறேன். நான் கண்ட அத்தரிசனத்தில் மரித்து அங்கு சென்றவர் களை நான் கண்டேன், அவர்களைத் தொடவும் செய்தேன். சகோதரனே, சகோதரியே, அதை இழந்து போகவேண்டாம். இதைக் குறித்து அனேக கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் நான் சொல்வதைக் கேளுங்கள். அது உண்மையென்பது எனக்குத் தெரியும். அதை இன்னும் தெளிவாக எடுத்துரைக்க என்னால் முடியவில்லை. அதை நழுவவிட வேண்டாம். அவை யாவும் உங்களுக்கே, ஜெபம் செய்வோம். கர்த்தராகிய இயேசுவே என் முன்னிலையில் உறுமால்கள் கொண்ட ஒரு பெட்டி இருக்கின்றது. இந்த உறுமால்கள் வியாதியஸ்தருக்குப் பதிலாக இங்கு வைக்கப்பட்டுள்ளன. நான் கைகளை அவைகளின் மேல் வைத்து ஜெபிக்கும்போது, ‘பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து போட, பொல்லாத ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டன’ என்று வேதம் உரைக்கின்றது. விசேஷித்த அற்புதங்களும் அடையாளங்களும் பவுலினால் செய்யப்பட்டன. பவுலுக்குள் தேவனுடைய ஆவி இருந்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவன் பேசின காரியங்களும் வார்த்தைகளும் எல்லாமே அதிசயமாகத் தென்பட்டன. அவன் ஒரு எபிரேய வாக்கை எடுத்துக்கொண்டு, அதற்கு அர்த்தம் கொடுத்து அதனை உயிர்ப்பித்து, கிறிஸ்துவின் சபைக்கு அது எவ்விதம் பொருந்துகின்றது என்பதைக் காண்பிப்பான். தேவன் அவனுக்குள் இருந்தார் என்பதை ஜனங்கள் அறிந்திருந்தனர். அவன் மூலம் தேவன் வல்லமையான, அதிசயமான கிரியைகளை நடப்பிப்பதையும், அவன் முன்னறிவித்த காரியங்கள் அவ்வாறே நிகழ்வதையும் அவர்கள் கண்கூடாகக் கண்டு, அவன் தேவனுடைய ஊழியன் என்பதை அறிந்து கொண்டனர். ஆண்டவரே, இந்த மக்கள் தேவனுடைய வார்த்தையின் பேரில் வைத்துள்ள மதிப்பை நீர் அங்கீகரித்து, இயேசுவினிமித்தம் அவர்களை சுகமாக்க வேண்டுகிறேன். பேதுருவின் காலத்தில், பெந்தெகோஸ்தே நாளன்று ஜனங்கள் அவன் பேசுவதைக் கேட்டது போன்று, இக்கூட்டத்திலும் பேசுவதை ஜனங்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். பேதுரு தேவனுடைய வார்த்தையைத் தேர்ந்தெடுத்து, ‘கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேல் தீர்க்கதரிசனம் உரைத்ததன் நிறைவேறுதல் இதுவே’ என்று கூற, அதைக்கேட்ட மூவாயிரம் பேர் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றனர். பிதாவே, இன்றைக்கும் நாங்கள் உமது கிருபையால் நிற்கிறோம். இவர்கள் விசேஷித்தவர்கள் என்பதனால் அல்ல, சிங்கம், காளை, மனிதன் இவைகளின் காலம் உண்டாயிருந்ததுபோல், இப்பொழுது கழுகின் காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் வாழும் இக்காலம் ஆவியின் அபிஷேகம் பெறும் காலமாகும். இயேசு உயிரோடிருக்கிறார் என்பதை பரிசுத்த ஆவியானவர் இக்காலத்தில் கிரியைகளின் மூலம் நிரூபித்து, சாயங்கால வெளிச்சம் மறையும் முன்பு என்ன நிகழும் என்று அவர் கூறினாரோ, அதையே நடப்பித்துக் கொண்டு வருகிறார். அவர் இத்தகைய அற்புதமான செயல்களை நிகழ்த்துவதை நாங்கள் கண்ணாரக் கண்டு வருகிறோம். இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தின அந்த மகத்தான அக்கினி ஸ்தம்பத்தை, பவுலை வழியில் சந்தித்த அந்த ஸ்தம்பத்தை, விஞ்ஞானம் இப்பொழுது புகைப்படம் எடுத்துள்ளது. அதே அக்கினி ஸ்தம்பம் மோசேயை வனாந்தரத்தில் வழி நடத்தினதென்றும், அந்த அக்கினி ஸ்தம்பத்தின் மூலமாகவே அவன் வார்த்தையின் அபிஷேகம் பெற்று, வேதாகமத்திலுள்ள அனேக புத்தகங்களை எழுதினான் என்பதை நாங்கள் அறிவோம். அதே அக்கினி ஸ்தம்பம் பவுலை தமஸ்குவுக்குப் போகும் வழியில் சந்தித்தது,அதன் விளைவாக அவன் வேதாகமத்திலுள்ள அனேக புத்தகங்களை - தேவனுடைய வார்த்தையை - எழுதினான். இப்பொழுதும் ஆண்டவரே, அதே அக்கினி ஸ்தம்பத்தை நாங்கள் வார்த்தையின் அத்தாட்சியின் மூலமாகவும் விஞ்ஞான ஆராய்ச்சியின் மூலமாகவும் காண்கிறோம். அது தேவனுடைய வார்த்தையை இப்பொழுது எங்களுக்கு வெளிப்படுத்தித் தருகிறது. ஆண்டவரே, ஜனங்கள் சீக்கிரமாக விழிப்படையட்டும், ஜீவ புத்தகத்தில் பெயரெழுதப்பட்டவர் எவரோ அவர்களுக்கு முன்னால் இது பிரகாசிக்கும் போது, கிணற்றடியிலிருந்த பெயர் கெட்ட அந்த ஸ்திரீ அதை உடனடி யாகக் கண்டுகொண்டது போல, இவர்களும் அதைக் கண்டுகொள்ள அருள்புரியும். இப்பொழுதும் பிதாவே, உம்மை இருதயத்தில் ஏற்றுக்கொண்டவர் அனைவரும் பாவத்திற்கு முற்றுப்புள்ளியிட்டுவிட்டு பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று, தேவன் அவர்கள் பாவங்களை மன்னித்தாரென்றும், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக் கொண்டனர் என்பதையும் பகிரங்கமாக அறிக்கை செய்ய ஆயத்தப்படட்டும். பிதாவே, அதன் பின்பு பரிசுத்த ஆவியாகிய எண்ணெயை அவர்கள் மேல் ஊற்றி, தேவனுடைய ஊழியத்தில் அவர்கள் ஈடுபடவும் பொல்லாங்கான இக்கடைசி நாட்களில் உமது ஊழியக்காரராக விளங்கவும் அருள் புரியும். இன்னும் சிறிது காலமே உள்ளதென்றும், சபையானது எந்தநேரத்திலும் எடுக்கப்படக்கூடும் என்பதையும் நாங்கள் உணருகிறோம். ஆட்டுக்குட்டியானவர் எந்த நேரத்திலும் பிரகாரத்தை விட்டு, பலியானது வைக்கப்பட்டுள்ள தேவனுடைய சிங்காசனத்தைவிட்டுப் புறப்பட்டு வரக்கூடும். அப்பொழுது எல்லாம் முடிவடையும், அதன் பின்னர் இவ்வுலகிற்கு விமோசனமில்லை. அவள் ஏமாற்றம் கொண்டு, இயேசுவின் உயிர்த்தெழுதலின்போது நிகழ்ந்தவாறு, பூமியதிர்ச்சி களுக்கு ஆளாவான். கிறிஸ்துவும் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களும் உயிரோடு எழுந்தது போன்ற சம்பவம் இப்பொழுது நிகழும், அது எந்த நேரத்திலும் நிகழும் அந்த சந்தோஷகரமான நாளை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். பிதாவே, உம்பிள்ளைகளை இப்பொழுது உமது கரங்களில் ஏந்திக் கொள்ளும், உமது ஆட்டுக்குட்டிகளை உமது மடியில் இழுத்துக் கொள்ளும், உமது ஊழியத்திற்கென்று பலப்படும்வரை, அவர்களை உமது வார்த்தையினால் போஷியும். ஆண்டவரே, அவர்களை உமது கரங்களில் ஒப்புவிக்கிறோம், அவர்களுடைய ஜெபத்திற்குப் பதிலளியும், பிதாவே, மாற்கு 11-ம் அதிகாரத்தில், ‘நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ அவைகளைப் பெற்றுக் கொள்வோம் என்று விசுவாசி யுங்கள். அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்’ என்பதாய் நீர் சொல்லியிருக்கிறீர். இத்தனை ஆண்டுகளாய் சத்தியத்தை வெளிப் படுத்திக் கொண்டுவந்து, சென்ற வாரத்தில் முத்திரைகளின் இரகசியங்களை வெளிப்படுத்தின உம்மை மனப்பூர்வமாக விசுவாசிக்கிறேன். உம் வருகையின் சமயம் நாங்கள் நினைப்பதைக் காட்டிலும் மிக அருகாமையில் உள்ளது என்பதை நாம் நம்புகிறேன். தயவு கூர்ந்து என் ஜெபத்திற்கு விடையளியும். அழைக்கப்பட்ட தேவனுடைய ஒவ்வொரு பிள்ளையும் இந்த செய்தியை நேரடியாகவோ அல்லது ஒலிநாடாக்களின் மூலம் கேட்கும்போது, அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் சேர வேண்டுமென்று, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையை ஆதாரமாகக் கொண்டு கட்டளையிடுகிறேன். பிதாவே, சாயங்கால வெளிச்சம் பிரகாசிக்கட்டும், இவர்களை இயேசுவின் நாமத்தில் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். உள்ளில் அல்லது வெளியில் இருப்பவர்களில் யாராவது தேவனை விசுவாசித்து, பாவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக இதுவரை பகிரங்கமாக அறிக்கை செய்யாமலிருப்பீர்களாயின், தேவனுடைய இரகசியங்களைக் கோரி அதை இயேசுவின் நாமத்தில் பெற்றுக் கொண்டிருந்தால், தண்ணீர் குளம் உங்களுக்காக ஆயத்தமாயுள்ளது. ஞானஸ்நானம் பெற விரும்புவோர் அனைவருக்கும், எப்பொழுது வேண்டுமானாலும் - இன்றைக்கோ அல்லது நாளைக்கோ - ஞானஸ்நானம் கொடுக்க இங்கு ஆயத்தமாயுள்ளனர். ஆறாம் முத்திரையை நீங்கள் ரசித்தீர்களா? அதன் இரகசியம் வெளிப்பட்டது என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ‘எங்கள் மூலமாய் கேள்விப்பட்டதை விசுவாசிக்கிறவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?’ என்று எழுதப்பட்டுள்ளது. நாங்கள் கூறுவதை நீங்கள் விசுவாசித்தால், கர்த்தருடைய புயம் - அதாவது, தேவனுடைய வார்த்தை- உங்களுக்கு வெளிப்பட்டிருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால் நாளை காலை,என்னால் இயன்றவரை கேள்விகளுக்கு விடையளிக்க முற்படுவேன். அதற்கென்று இன்றிரவு நான் ஜெபத்தில் கழிப்பேன். ஒவ்வொரு இரவும் நான் சுமார் மூன்று மணிநேரமே உறங்குகின்றேன். சென்ற இரவு ஒரு மணிக்குத்தான் நான் படுக்கைக்குச் சென்றேன். மறுபடியும் மூன்று மணிக்கு எழுந்து படிக்கத் தொடங்கினேன். பாருங்கள், நான் உங்களிடம் கூறுபவைகளுக்கு உத்திரவாதமுள்ளவனாய் இருத்தல் வேண்டும். காலம் மிகவும் அருகாமையில் இருப்பதால், எந்தவிதமான மூடத்தனத்திற்கும், ஊகித்தலுக்கும் இது ஏற்ற சமயமல்ல. முதலில் நான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பின்பு, அது வார்த்தையோடு ஒட்டியுள்ளதா என்பதை நான் பார்க்க வேண்டும். தேவனுடைய கிருபையால் இதுவரை எல்லாம் சரிவர அமைத்து வந்திருக்கிறது. நான் வேதத்திலிருந்து அனேக பாகங்களைக் குறிப்பிட்டேன். அவையாவும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. நான் கூறுபவை ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்று அமைந்திருக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை யாவும் தேவனால் அருளப்பட்டவை. எனவே வார்த்தையாகிய தேவன் எனக்களிக்கும் வெளிப்பாட்டை வேதவாக்கியங்களுடன் இணைத்து காண்பிப்பதன் மூலம், இவை தேவன் உரைத்தவை என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். தேவன் இப்பொழுது எனக்களித்த வெளிப்பாடு நான் முன்பு கொண்டிருந்த கருத்துக்கு முற்றிலும் வேறுபட்டதாயுள்ளது. அதன் உண்மையான அர்த்தம் இதுவே என்று நான் சற்றேனும் நினைக்கவே யில்லை. ஆனால் அது வேதவாக்கியங்களுடன் சரிவர பொருந்துவதால், அது தேவன் உரைத்ததாயிருக்க வேண்டும். இதுவரை வெளிப்படாமல் இருந்த இரகசியத்தை தேவனே நம் சிந்தனைகளில் நுழையச் செய்கிறார். ஆம், தேவன் தாம் அதைச் செய்தார். ஓ! மனப்பூர்வமாய் அவரை நான் நேசிக்கிறேன். கைகளை உயர்த்தின உங்களுக்கு ஒன்றைக் கூறவிரும்புகிறேன். இது தனிப்பட்ட ஓர் விவகாரம். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வதற்கு சுயாதீனம் பெற்றிருக்கின்றீர்கள். காலம் மிகவும் குறுகியுள்ளபடியால், உங்களால் இயன்றவரை உள்ளே நுழைய பிரயாசப்பட வேண்டும்’ ‘ஆண்டவரே, என்னை வெளியில்விட்டு விடாதேயும், என்னை வெளியில் விட்டுவிடாதேயும், ‘கதவு அடைபடுகின்றது’ என்று நீங்கள் அவரிடம் மன்றாட வேண்டும். ஒரு நாளன்று தேவன் கதவை அடைத்துவிடுவார். நோவாவின் காலத்தில் அவர் அவ்விதம் செய்தார். அதன்பின்பு அவர்கள் கதவைத் தட்டினர். ஏழாம்ஜாமத்திலே... சிலர் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் ஜாமங்களில் நித்திரை செய்கின்றனர். ஆனால் ஏழாம் ஜாமத்தில், மணவாளன் வருகிறார். அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள்’ என்னும் அறிவிப்பு உண்டாகின்றது. அப்பொழுது புத்தியில்லாத கன்னிகைகள், புத்தியுள்ள கன்னிகைகளிடம், ‘உங்கள் எண்ணெயில் சற்று தாருங்கள்’ என்பார்கள். அப்பொழுது மணவாட்டி, ‘எனக்குப் போதுமான அளவு மாத்திரமே இருக்கின்றது. உங்களுக்கு வேண்டுமானால், நீங்கள் சென்று ஜெபம் செய்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்பாள். உறங்கிக் கொண்டிருக்கும் புத்தியில்லாத கன்னிகைகள் யாரென்பதை நீங்கள் அறிந்து கொண்டீர்களா? எபிஸ்கோபிலியன், பிரஸ்பிடேரியன், லூதரன்கள் இவர்களைனைவரும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள இப்பொழுது முயல்கின்றனர். ஆனால் அவர்களிடமுள்ள தவறு யாதெனில், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் அன்னிய பாஷை பேச முயல்கின்றனர். அவர்களில் அனேகர் இப்பொழுது அன்னிய பாஷை பேசுகின்றனர். இந்த கூடாரத்திற்கு வந்து ஜெபம் செய்துகொள்ள அவர்கள் வெட்கப்படுகின்றனர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு ஜெபம் செய்யவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். அப்படியானால் அது பரிசுத்த ஆவி என்று எண்ணுகின்றீர்களா? அது பரிசுத்த ஆவியின்றி அன்னிய பாஷை பேசுதலாகும். பரிசுத்த ஆவியானவர் அன்னிய பாஷை பேசுவாரென்பதை நான் நம்புகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்குப் போலியான ஒன்று நிலவுகின்றது. ஆம், ஐயா, ஆவியின் கனிகள் மாத்திரமே பரிசுத்த ஆவியைப் பெற்றதை நிரூபிக்கமுடியும் - பட்டையல்ல, அதன் கனிகள். கவனியுங்கள், கடைசி மணி நேரத்தில் அவள், ‘நான் அதைப் பெற்றுக் கொண்டேன் என்று விசுவாசிக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டே வருவாள். ஆனால் அவள் வரும்போது, மணவாட்டி ஏற்கனவே சென்றிருப் பாள், அப்பொழுது அவர்கள் கதவைத் தட்டுவார்கள். ஆனால் என்ன நேரிடும்? அவர்கள் உபத்திரவ காலத்திற்குள் தள்ளப்படுவார்கள். ‘அங்கே அழுகையும் பற்கடிப்பும்உண்டாயிருக்கும்’ என்று வேதம் உரைக்கின்றது. சகோதரனே, சகோதரியே, அது எப்பொழுது நேரிடும்? எனக்கு தெரியாது, ஆனால் அது மிக அருகாமையிலுள்ளது என்று நான் எண்ணுகிறேன். தினந்தோறும் என்னால் இயன்றவரை நான் மிருதுவாக நடக்க முயல்கின்றேன். இன்றைக்கு ஒரு காரியம் சம்பவித்தது. அதைக் கண்டபோது, என் மூச்சு நின்றுவிடும் போன்ற உணர்ச்சி உண்டானது. அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த ஒளி அங்கு நின்று கொண்டிருந்தது. அந்த காரியம் எனக்கு வெளிப்பட்டது. அது உண்மை என்பதை நானறிவேன். நான் எனக்குள், ‘ஆண்டவரே, அதை நான்மற்றவரிடம் சொல்லக் கூடாதே. என்னால் அதை சொல்ல முடியவில்லையே’ என்று கூறிக் கொண்டே அறைக்கு வெளியில் வந்து இங்குமங்குமாக நடக்கத் தொடங்கினேன். நான் கண்டதை உங்களிடம் கூறமுடியாதவனா யிருக்கிறேன். நாம் சந்தோஷமாக இச்சமயத்தைக் கழித்தோம். அல்லவா? கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென். நாம் இப்பொழுது மகத்தான காலத்தில் வாழ்ந்துகொண்டு வருகிறோம். என் இருதயம் சந்தோஷத் தினால் நிரம்பி வழிகின்றது. ஆனால் அதே சமயத்தில் இழந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களைக் குறித்து நினைக்கும்போது, என் இதயத்திலிருந்து இரத்தம் சொரிகின்றது. நாம் என்ன செய்ய முடியும்? பரிசுத்த ஆவியானவர் என் இருதயத்தில் கதறுவதை என்னால் உணர முடிகின்றது. நமதாண்டவர் எருசலேமையும் அதன் ஜனங்களையும் நோக்கி, ‘எருசலேமே, எருசலேமே, கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, நான் எத்னைத் தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று’ என்று சொன்னபோது இவ்விதம் தான் மனஸ்தாபப்பட்டிருக்க வேண்டும். நண்பர்களே, ஏதோ ஒன்று நடைபெறவிருக்கும் காலத்தில்நாம் இருக்கிறோம். அது என்னவென்பதைக் தேவனறிவார். அது எப்பொழுது நிகழுமென்பது யாருக்குமே தெரியாது. அது ஒரு இரகசியம், ஆனால் இயேசு, ‘இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறிவீர்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதே அதிகாரத்தில், மத்தேயு 24.32-ம் 33ம் வசனங்களைக் கவனியுங்கள், ‘அவர் தமது தூதர்களை அனுப்புவார். அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்’ என்று இயேசு கூறியுள்ளார். அதோடு அவர் நிறுத்திவிட்டார். ஆறாம் முத்திரைக்கு மேல் அவர் ஒன்றும் கூறவில்லை, அவர் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், முத்திரைகளைப் பற்றி கூறிவிட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டார். அதன் பின்பு அவர் என்ன கூறுகிறார் என்பதைக் கவனியுங்கள், ‘அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள்’. அவர் உவமைகளைச் சொல்லத் தொடங்கி விடுகிறார். ‘இவை யாவும் நிறைவேறும்’ என்று அவர் கூறுகின்றார். அவர் மூன்று கேள்விகளுக்குப் பதிலளிக்கின்றார். ‘இந்த அடையாளங்கள் என்ன? உமது வருகையின் அடையாளம் என்ன? உலகத்தின் முடிவின் அடையாளம் என்ன?’ ஆறாம் முத்திரையின் சம்பவங்கள் உலக முடிவைக் குறிக்கின்றது. ஏழாம் தூதன் கைகளை உயர்த்தி, ‘இனி காலம் செல்லாது’ என்று சதா காலங்களிலும் உயிரோடிருக்கிறவர் மேல் ஆணையிடுகிறான். பூமியானது ஒரு புதிய பூமியைப் பிறப்பிக்கும், அதற்கு மிக அருகாமையில் நாம் இருக்கிறோம். ஒ! எனக்கு நடுக்கமுண்டாகிறது. ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்? என்னால் வேறு என்ன செய்யமுடியும்? நான் தரிசனத்தில் கண்ட அந்த ஸ்தலத்தையும் அங்குள்ள அருமையான மக்களையும் நான் நினைவு கூர்ந்தேன். ‘ஆண்டவரே, இதை அவர்கள் இழந்து போகக் கூடாதே. அவர்களுக்கு இதை எடுத்துக் கூறி அவர்களெல்லாரையும் உள்ளே தள்ள முயல்கிறேன்’ என்று எண்ணினேன். ஆனால் அது சாத்தியமல்ல. ஏனெனில் என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். ஆனால் நமக்கு ஓர் ஆறுதல் உண்டு. அதாவது, ‘பிதவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், ஆனால் ஏனையோர் - ஸ்தாபனங்களைச் சார்ந்துள்ளோர் - ‘உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டி ராத யாவரையும் அவன் மோசம் போக்கினான்’. அது பரிதாபமான ஓர் காரியம். ஆனால் நாம் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனுடைய வார்த்தையில் நிலைநின்று, அவர் செய்யக் கூறின யாவையும் கவனமாகச் செய்தலாகும். அவர் சொன்ன யாவையும் நீங்கள் செய்யுங்கள். ‘அவர்கள் இதைச் செய்கிறார்களே, இவர்கள் அதைச் செய்கிறார்களே’ என்று ஸ்தாபனங்கள் செய்வதை நீங்கள் ஆலோசிக்க முற்பட்டால், அது எவ்வளவாக உங்களைப் பாதிக்கும் என்பதை நீங்கள் உணருவதில்லை. இதை நான் கூற விரும்புகிறேன் - ஒலிநாடாக்களில் இதை நீங்கள் பதிவு செய்யப் போவதில்லை என்று எண்ணுகிறேன். ஏனெனில் ஒலிநாடாக்களில் கேட்பவர்கள் இங்குமங்குமாக சிலவற்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு, தங்கள் சொந்த அர்த்தத்தை உண்டாக்கிக் கொள்கின்றனர். அனேகர் என்னிடம் வந்து, ‘சகோ. பிரான்ஹாமே, இத்தகைய ஊழியம் எங்களுக்கும் அளிக்கப்பட்டிருந்தால் நலமாயிருக்கும்’ என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவ்வூழியத்தினால் உண்டாகும் உத்திரவாதத்தின் தன்மையை உணராமல் நீங்கள் இவ்விதம் பேசுகின்றீர்கள். நீங்கள் சொல்லுவதை ஜனங்கள் அப்படியே நம்புகின்றனர். தவறான ஒன்றை நீங்கள் கூறி அதை ஜனங்கள் விசுவாசித்துப் பின் தொடர்ந்தால், தேவன் அவர்கள் இரத்தப்பழியை உங்களிடம் கேட்பார். சற்று யோசித்துப் பாருங்கள். அது மிகவும் பயங்கரமான ஒரு செயலாகும். ஆகவே, எல்லாரிடத்திலும் அன்பாயிருங்கள். இயேசுவினிடம் உங்கள் முழு இருதயத்தோடும் அன்பு கூறுங்கள். சாதாரண வாழ்க்கையை கடைபிடியுங்கள். எதையும் ஆலோசனை செய்து அதன் அர்த்தத்தையறிய விழையா தேயுங்கள். தேவனுக்கு முன்பாக எளியவர்களாயிருங்கள். நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஆலோசிக்கின்றீர்களோ, அவ்வளவு தேவனை விட்டு புறம்பே செல்வீர்கள். அவர் கூறுவதையே அப்படியே விசுவாசியுங்கள். ‘அவர் எப்பொழுது வருவார்?’ என்று அனேகர் ஆலோசித்து தங்களைக் குழப்பிக்கொள்கின்றனர், அவர் ஒருக்கால் இன்றைக்கு வந்தாலும் பரவாயில்லை, அல்லது இருபது வருடங்கள் கழித்து வந்தாலும் லட்சியமில்லை. நான் இன்றுபோல் என்றும் அவரைப் பின்பற்றுவேன். வேறெங்காவது என்னை உபயோகிக்க நீர் சித்தம் கொண்டால், இதோ ஆண்டவரே, நான் ஆயத்தமாயிருக்கிறேன். ஒருக்கால் உமது வருகை நூறு ஆண்டுகள் கழித்து இருந்தாலும் இருக்கலாம். எனக்குத் தெரியாது. என் சந்ததியில் ஐந்தாம் தலைமுறையிலுள்ளவர்கள் அதை ஒருவேளை காணலாம். எவ்வாறாயினும் நான் உம்முடன் சரியான பாதையில் நடக்க விரும்புகிறேன். உம் வருகைக்கு முன்பு நான் நித்திரையடைந்தால், அந்நாளில் நான் நிச்சயம் உயிரோடெழுவேன். அந்த மகிமையான மாளிகைக்கு சென்று வந்து எனக்கும், அந்த தேவனுடைய ராஜ்யத்தில் வயது சென்றவர் அனைவரும் வாலிப தோற்றம் கொண்டிருப்பார்கள். அவர்கள் வெள்ளை அங்கிகளைத் தரித்திருப் பார்கள். ஆண்களும், பெண்களும் வாலிப பருவத்தையடைந்து மிகவும் அழகாயிருப்பார்கள். அவர்கள் இனி ஒருபோதும் கிழவர்களாக முடியாது. அவர்கள் இனிபாவம் செய்வதில்லை. அங்கு பொறாமையோ அல்லது வெறுப்போ காணப்படுவதில்லை. இப்பொழுது நாடாக்கள் பதிவு செய்யப்படவில்லையென்று எண்ணுகிறேன். இன்னமும் மூன்று நான்கு நிமிடங்களுக்கு உங்களிடம் பேச விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதம்தானா? இப்பொழுது நான் கூறப்போவது தனிப்பட்ட விஷயமாகும். ஏனெனில் நாளைய ஆராதனை மிகவும் சிறந்ததாக இருக்கும். ஆகவே, நான் கூற விரும்புவதை இப்பொழுது கூறிவிடுகின்றேன். இதை நமக்கென்று பிரத்தியேகமாகக் கூறுகின்றேன். என் மனைவியாகிய மேடாவை (Meda) நான் நேசிக்கின்றேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என் முதல் மனைவியை நான் அதிகமாக நேசித்ததன் காரணத்தால், நான் இரண்டாம் முறை விவாகம் செய்துகொள்ள விரும்பவில்லை. தேவன் விவாகம் செய்து கொள்ளக் கூறாமலிருந்தால், நான் இரண்டாம் முறை விவாகம் செய்து கொண்டிருக்கவே மாட்டேன். ஒரு நாள் மேடா என்னிடம், ‘பில் (Bill) பரலோகத்தைக் குறித்த ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகிறேன்’ என்றாள். நானும் ‘சரி’ யென்றேன், அவள், ‘உங்கள் முதல் மனைவியாகிய ஹோப் (Hope) உங்களை நேசித்தாள். அவளை நீங்கள் அங்கு கண்டதாகக் கூறினீர்கள். நாம் அங்கு செல்லும்போது, எங்களில் யார் உங்கள் மனைவியாயிருப்பாள்? என்று கேட்டாள். அதற்கு நான், ‘நீங்கள் இருவருமே, ஆனால் எனக்கு மனைவியென்று யாரும் இருக்கமாட்டார்கள்’ என்றேன். இதைக்கேட்ட அவள், ‘எனக்குப் புரியவில்லை? என்றாள். நான் அவளிடம் ‘நாமிருவரும் ஒருவரையொருவர் நேசிக்கின்றோம். ஒரு அழகான வேசி என்னைக் கட்டித்தழுவி என்னை நேசிப்பதாகக் கூறினால் நீ விரும்புவாயா?’ என்று கேட்டேன். அவள் ஒருக்காலும் அதை விரும்பமாட்டேன்’ என்று பதிலுரைத்தாள். நான் மேலும் அவளிடம், ‘எனக்கும் கர்த்தராகிய இயேசுவுக்குமிடையே ஒருவரை மாத்திரம் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நீ யாரைத் தெரிந்துகொள்வாய்?’ என்றேன். அவள் ‘நான் உம்மை நேசித்தாலும், இயேசுவைத் தான் தெரிந்துகொள்ளுவேன்’ என்றாள். நான், ‘அதைக்கேட்டு சந்தோஷமடைகின்றேன். என்னைக் கட்டித்தழுவிய வேசி இயேசுவைக் கட்டித் தழுவி அவரை நேசிப்பதாகக் கூறினால், அதைக்குறித்து நீ என்ன நினைப்பாய்?’ என்று கேட்டேன். அவள், ‘அதை நான் முற்றிலும் விரும்புவேன்’ என்றாள். பாருங்கள், அது மாமிசப்பிரகாரமான அன்பிலிருந்து (Philleo) தெய்வீக அன்பாக (Agape) மாறுகின்றது, அது ஒருமேலான அன்பு, பரலோகத்தில் கணவன், மனைவி என்னும் நிலையும், குழந்தைகள் பெறுவது மென்பதும் கிடையாது. அங்கு இனசேர்க்கைக்குரிய சுரப்பிகள் (Glands) இருக்காது. இச்சுரப்பிகள் இல்லாதவர்களாய் உங்களைப் பாவனை செய்து பாருங்கள். பூமியின் ஜனத்தொகை அதிகரிக்க வேண்டுமென்று கருதியே நமக்கு இவை அளிக்கப்பட்டன. ஆனால் பரலோகத்தில் இச்சுரப்பிகள் இருக்கமாட்டா. அங்கு ஆண் சுரப்பிகளும் பெண் சுரப்பிகளும் இருப்பதில்லை. ஆனால் தேவனுடைய சிருஷ்டிப்பின் வடிவம் ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டாயிருக்கும். அங்கு மாமிசப்பிரகாரமான அன்பு காணப்படுவதில்லை. எல்லாமே தெய்வீக அன்பாய் இருக்கும். ஆகவே, மனைவியென்பவள் அழகான ஒரு உருவமாய் இருப்பாளேயன்றி, மனைவியென்னும் ஸ்தானத்தை வகிக்கமாட்டாள். இதைக்கேட்ட என் மனைவி ‘இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது’ என்றாள். வேறொரு சிறிய சம்பவத்தை உங்களிடம் கூறவிரும்புகிறேன். இதை நான் இதற்கு முன்பு பகிரங்கமாகக் கூறினதில்லை. ஒரு சிலருக்கு மாத்திரமே இதைக் கூறியிருக்கிறேன். மேற்கூறிய தரிசனம் கண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, நான் ஒரு சொப்பனம் கண்டேன். அந்த சொப்பனத்தில், பரலோகத்தில் கிரீடங்கள் அளிக்கப்படும்போது நான் அங்கு இருந்தேன். ஒரு பெரிய சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது. இயேசு அதின் மேல் வீற்றிருக்கிறார். பதிவுசெய்யும் தூதனும் (Recording ¬Angel) மற்றவரும் அங்கு நின்று கொண்டிருந்தனர். தந்தத்தால் செய்யப்பட்ட சுருள்வடிவமுள்ள ஒரு பிரம்மாண்டமான படிக்கட்டு அங்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கு நடப்பதை அங்கு கூடியிருந்த அனைவரும் காணத்தக்கவாறு அது அமைந்திருந்தது. நான் ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்தேன். அந்த படிக்கட்டில் ஏறிச் செல்வேன் என்ற எண்ணம் எனக்குச் சற்றேனும் இருக்கவில்லை. இயேசுவின் அருகில் நிற்கும் பதிவு செய்யும் தூதன் ஜீவ புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு பெயரைக் கூப்பிடுவான், அது எனக்குத்தெரிந்த பெயராயிருக்கும். பெயர் கூப்பிடப்பட்ட சகோதரனாவது சகோதரியாவது அங்கு வரும்போது, இயேசு அவர்களைப் பார்த்து, நல்லது, உத்தமும் உண்மையுமள்ள ஊழியக்காரனே, உள்ளே பிரவேசி’ என்பார். அவர்கள் ஒரு புதிய உலகத்திற்குள்ளும் சந்தோஷத்திற்குள்ளும் பிரவேசிப்பதை நான் கண்டேன். ‘உலகத்தோற்றத்துக்கு முன்னால் உங்களுக்கென்று ஆயத்தமாக்கப்பட்ட ஆண்டவரின் சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்’ என்று இயேசு அவர்களிடம் கூறினார். ‘ஓ, அவர்கள் சந்தோஷங் கொண்டு ஒருவரையொருவர் சந்தித்து மலைகளையும் பெரிய ஸ்தலங்களையும் கடந்து செல்வது அற்புதமான காட்சியல்லவா?’ என்று நினைத்தவாறே, ‘மகிமை’, அல்லேலூயா!, என்று சொல்லி குதிக்க ஆரம்பித்தேன். இவ்விதம் அநேகருடைய பெயர்கள் ஜீவ புத்தகத்திலிருந்து வாசிக்கப்பட்டன. பின்னர் பதிவு செய்யும் தூதன், ‘வில்லியம் பிரான்ஹாம்’ என்று என் பெயரை வாசித்தான், நானும் நடந்து செல்ல அழைக்கப்படுவே னென்று நான் நினைக்கவேயில்லை. நான் நடந்து செல்லும்போது அங்கு குழுமியிருந்த அனைவரும் என் முதுகில் தட்டி, ‘சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!’ என்றனர். நானும் அவர்களுக்கு நன்றி கூறியவாறே தந்தப் படிக்கட்டின் மேல் நடந்து சென்றேன். நான் முதற் படிகட்டில் கால் வைத்து, ‘அவரை நன்றாகக் காணட்டும்’ என்று நினைத்துக்கொண்டு அங்கு நின்றபோது, வேறு யாரோ ஒருவரின் கரம் என் கரத்தைப் பற்றியது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஹோப் பெரிய கறுத்த கண்களுடன், கறுத்த கூந்தல் பின்புறம் தொங்கினவாறு, வெள்ளையங்கி தரித்தவளாய் அங்கு நின்று கொண்டிருந்தாள். பின்பு வேறொரு கரம் என் மற்ற கரத்தைப் பிடித்தது. நான் பார்த்தபோது மேடா? கறுத்த கண்களுடன், கறுத்த கூந்தல் பின்புறம் தொங்கினவாறு, வெள்ளையங்கி தரித்தவளாய் அங்கு நின்று கொண்டிருந்தாள். இருவரும் ஒருவரையொருவர் நோக்கினர். அவர்களிருவரும் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு என்னுடன் நடந்து சென்றனர். நான் உறக்கத்தினின்று எழுந்து, ‘ஆண்டவரே, நான் சொப்பனத்தில் கண்டது உண்மையாகவே நிறைவேறட்டும்’ என்றேன். இவ்விருவரும் என் வாழ்க்கையில் ஈடுபட்டு, குழந்தைகளைப் பெற்றனர். நாங்கள் மூவரும் பரிபூரணப்பட்ட புதிய உலகத்திற்குள் நடந்து சென்றோம். அது மிகவும் அற்புதமான ஒரு காட்சியாகும், அதை இழந்து போக வேண்டாம். தேவ கிருபையைக் கொண்டு, உங்களால் செய்ய முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். மற்றவைகளை தேவன் பார்த்துக் கொள்வார். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் (சகோ. பிரான்ஹாம் மேடையை விட்டு இறங்கி, நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு ஸ்திரீக்காக ஜெபிக்கிறார் - ஆசிரியர்.) இக்கூட்டம் முடியும் வரை அவள் உயிரோடிருப்பாளென்று நினைக்க வேயில்லை. இப்பொழுது அவள் இரண்டு கரங்களையும் உயர்த்தி தேவனைத் துதிக்கின்றாள். அதற்காகவே நான்இவ்வளவு நேரமாக இங்கு தாமதித்தேன். என்ன நடந்ததென்று நான் சொல்கிறேன். மேடாவைக் குறித்தும் மற்றவரைக் குறித்தும் நான் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த ஒளி சுழன்று கொண்டே வந்து அவள் மேல் நின்றது. அவர் அற்புதமானவரல்லவா? நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் நீங்கள் சுகமடைந்து விட்டீர்களல்லவா? ஆமென்! அவர் உங்களுக்கு சுகமளித்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். தேவனுடைய கிருபை உங்களுக்கு பிரத்தியட்சமாயிருக்கிறது. ஓ, தேவனுக்கு மகிமை! முத்திரைகள் மீதுள்ள கேள்விகளும் விடைகளும் மார்ச் 24,1963 காலை பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா (தமிழாக்கம் : S. தாமஸ்) (பென்ஜமின் ஜேக்கப்) எங்கள் பரமபிதாவே,தேவனுடைய சமூகத்தில் மீண்டுமாக தேவனுடைய வார்த்தையின் மீது நாங்கள் ஐக்கியம் கொள்ளும் இந்த நேரத்திற்காக உண்மையிலேயே நாங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இந்தக் காலையிலே எங்களுக்கு உதவிசெய்யவும், எங்களை ஆசீர்வதிக்கவும், நீர் எங்களுடன் இருப்பதற்காக நாங்கள் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். எங்களுடைய விளக்குகள் எண்ணெயினால் நிரப்பப்பட்டதாகவும், திரி வெட்டப்பட்டு எரிகிறதாய் இருக்கவும், உம்முடைய மகத்தான நாமம் கனமடைய நீர் எங்களை இப்பொழுது உபயோகப்படுத்ததும், எங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுகிறோம். தேவனுடைய நேசகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் கேட்டுக் கொள்ளுகிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். செய்தி போய்க் கொண்டிருக்கும்போது, நான் உள்ளே வந்து கொண்டிருந்தேன். ஆகவே, நம்முடைய விளக்குகள் நிரப்பப்பட்டதாய் வைத்திருக்க வேண்டியது அவசியாய் இருக்கிறது..... இப்பொழுது செய்துகொண்டிருப்பது போலவே நீங்கள் செல்ல முடியாது, கவனியுங்கள், ஏனென்றால் எண்ணெய் எரியும்போது திரியில் கரி உண்டாகிறது. ஆகவேதான் திரி வெட்டப்பட வேண்டும்.... திரியின் முனையில் உள்ள கரியின் நிமித்தம் உங்கள் விளக்கின் திரி வெட்டப்பட்டதாய் இருக்கட்டும். என்னுடைய வயதுள்ள அநேக மக்கள், நிலக்கரியின் எண்ணெய் விளக்குகளை நாம் உபயோகப்படுத்தியிருக்கிறோம். அது எரியும்போது திரியின் முனையில் கரி உண்டாகும். அப்பொழுது அது வெளிச்சத்தை பாதிக்கிறதாய் இருக்கும். ஆகவே, கிறிஸ்துவுக்குளிருக்கும் உன்னத அழைப்பின் இலக்கை நோக்கி முன்னேற, திரியின் முனையில் உள்ள கரியைத் துண்டித்தவர்களாக இருக்க வேண்டும். ஈஸ்டர் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால் இப்பொழுது இது ஒரு வெகு அருமையான காலை நேரமாக இருக்கிறது. கர்த்தருக்குச் சித்தமானால் இன்றிரவு கடைசி முத்திரைக்கு வருவோம். அது ஒரு மிகவும் இரகசியமான முத்திரையாய் இருக்கிறது..... ஏனென்றால், அதை அறிந்துகொள்ளத்தக்கதாக வேதத்தில் எந்த இடத்திலும் அடையாளங் களினாலும் கூட கூறப்படவில்லை. அது பரலோகத்திலிருந்து நேரடியாக வரவேண்டும். இது எனக்கு ஒரு கடினமான வேளையாக இருக்கிறது. இது ஒரு வாரமாக நடந்துகொண்டிருக்கிறது. நான் ஒரு அறையிலேயே அடைந்திருப்பது இன்றைக்கு எட்டாவது நாள், இங்கே அநேக வேண்டுதல்கள் இருப்பதை காண்கிறேன். இவர்களில் அனேகர் நேரில் சந்தித்துப்பேச விரும்புகிறார்கள். நானும் அதை விரும்புகிறேன். நான் அவ்வித சந்திப்பை அளிக்க விரும்புகிறேன். ஆனால், இப்பொழுதே உடனடியாக அதைச் செய்யமுடியாது. அது ஏன் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்... இப்பொழுது கர்த்தருடைய சித்தத்தின் வெளிப்படுத்தலை அறிந்துகொள்ள நாம் முயற்சி செய்து கொண்டிருக் கிறோம். இப்பொழுது, நேரில் சந்திக்கும் சந்திப்பை வைத்துக் கொள்ளு வோமானால் நம்மை அதுவேறு திசைக்கு கொண்டு சென்றுவிடும். வியாதியஸ்தர்களுக்காக ஜெபத்தில் இருப்பது முற்றிலும் வேறொரு காரியமாயிருக்கிறது, தரிசனங்களையும், அதற்குரிய காரியங்களையும் போதிப்பது வேறொரு காரியமாக இருக்கிறது. அப்பொழுது நீங்கள் வேறுவிதமாக அபிஷேகிக்கப்படுகிறீர்கள். ‘நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டமரம்’ என்று வேதம் கூறுகிறது. நீர்க்கால்கள் - ஒரே தண்ணீர் வெவ்வேறு வாய்க்கால்களின் வழியாகச் செல்லுகிறது. தண்ணீரை எந்த வாய்க்காலின் வழியாகப் பெறுகிறோம் என்பதின்மேல் சார்ந்திருக்கிறது - எல்லாம் ஒரே ஆவிதான். பவுல், 1 கொரிந்தியர் 12ல், வரங்கள் அனேகம், ஆனால் ஆவியோ ஒன்று என்று கூறியுள்ளார். ஆகவே, நீங்கள் ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்து விட்டு, மற்றொரு காரியத்திற்கு வரும் போது ஆவியின் வித்தியாசமான நடத்துதலைப் பார்க்கிறோம், நான் என்ன கூற நினைக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வார்த்தையைப் போதிக்கும்போது, மக்கள் அதை புரிந்து கொள்ளும்படி செய்கிறீர்கள். இப்பொழுது அவர்களுடைய இருதயமெல்லாம் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. முத்திரைகள் என்றால் என்ன? என்பதில், இரவின் பின் இரவாக நான் இங்கு வரும்போதெல்லாம் ஒரே இறுக்கமாக (Tension) இருப்பதால், ஒரு அமைதியான சூழ்நிலை வரும்வரை நான் ஏதோ ஒன்றை பேசவேண்டியதாய் இருக்கிறது. அதன் பிறகு பரிசுத்த ஆவியானவர் முத்திரையை உடைக்கிறார். இவ்விதமாக மக்களின் இருதயம் ஒரு காரியத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும்போது, அவர்களை திடீரென்று வேறொரு காரியத்திற்குத் திருப்புவது கடினமாக இருக்கிறது. அப்பொழுது கூட உங்கள் மத்தியிலே நடந்து கொண்டிருக்கும் காரியங்களை உங்களால் காணமுடிவதில்லை என்பதை நான் அறிவேன். நீங்கள் அதை அறிந்து கொள்ளவில்லை என்பதை நான் நிச்சயம் அறிவேன். ‘சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம்’ என்று நீங்கள் கூறலாம். இந்த ஒலிநாடாக்கள் நமக்கு மாத்திரம் என்று நினைக்கிறேன். நீங்கள் இதைப் புரிந்துகொள்ள முடியாது என்று நான் கூறுகிறேன். ஆகவே எதையும் வியாக்கியானம் செய்ய வேண்டாம். இதற்கு உங்கள் வியாக்கியானத்தைக் கொடுக்க வேண்டாம். அவ்விதமாக செய்யும்போது நீங்கள் சத்தியத்தை விட்டு தூரமாக போய் விடுவீர்கள். இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களென்றால் என்னுடைய ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் கண்களில் தேவன் எனக்கு தயவு கிடைக்கும்படி செய்திருந்தால் நான் நீண்ட காலமாக இங்கே உங்களோடு இருந்து வருகிறேன். இந்த வெளிப்படுத்தல்கள் எப்பொழுதுமே உண்மையானவைகளாக இருந்திருக்கிறது என்பதை அறிவீர்கள். இப்பாழுது இந்த வெளிப்படுத்தல்கள் வார்த்தையோடு பொருந்துவதில் இரட்டிப்பாக நிரூபிக்கப்படுகிறது. ஆகவே இது ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ என்பதாக அமைந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். அது சரி. அது உங்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது என்னை உங்கள் சகோதரனாக பாவித்து என்னுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள். எதற்கும் உங்கள் சொந்த வியாக்கியானத்தைக் கூறவேண்டாம். ஒரு நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்ய முயலுங்கள். ஏனென்றால் நீங்கள் அப்படி வியாக்கியானம் செய்யும்போது உண்மையான காரியத்தைவிட்டு விலகிப்போய் விடுவீர்கள். நீங்கள் எல்லோரும் சுயஉணர்வு உள்ளவர்களாக இருந்து, ஏதோ ஒரு இரகசியமான காரியம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது நடந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்பதை நான் இப்பொழுது அறிந்திருக்கிறேன். நான் அதை கூறப்போவதில்லை. அது என்ன என்பதை நான் அறிந்து கொள்ளச் செய்ததே தேவனுடைய கிருபையாகும். அது ஏதோ ஒரு மிகப்பெரிய காரியமாக இருக்கிறது. அது இப்பொழுதே நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் அதைக் கண்டு கொள்வதற்கு உலகத்திலே ஒரு வழியும் இல்லை. அது என்னவென்பதை நான் அறிவேன் என்று வேதத்தை என் கையில் பிடித்தவனாக கூறுகிறேன். இது முன்னமே உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, எந்த வியாக்கியானமும் கொடுக்காமல் என்னை உங்கள் சகோதரனாக விசுவாசியுங்கள். நாம் ஒரு மகத்தான நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக் கிறோம். நாம் வசிக்கும் இக்காலத்தில் நீங்கள் உண்மையாக தாழ்மை யுள்ளவராகவும், ஒரு கிறிஸ்தவனாகவும், தேவனுக்காக ஜீவிக்கவும், உங்களுடைய உடன் வாழும் மக்களுடன் உண்மையுள்ளவராக வாழ முயற்சிக்கவும். நேற்று பிற்பகல் என்னுடைய அறையில் ஏதோ ஒன்று சம்பவித்தது. நான் அதிலிருந்து விலகவே முடியவில்லை. ..... இரண்டு வாரத்திற்கு முன் ஏதோ ஒன்று நடந்தது. நான் இந்த உலகத்தில் ஜீவிக்கும் வரைக்கும் நான் அந்த அனுபவத்திலிருந்து விலகவே முடியாது. இங்கிருக்கும் சபையானது இவைகளை அறிந்துகொள்ள வேண்டியதில்லை.... ஆகவே எதைக் குறித்தும் வியாக்கியானம் கூற வேண்டாம். உங்களுக்கு என்ன அறிவிக்கப்பட்டதோ அதை நினைத்துக்கொண்டு ஒரு கிறிஸ்தவ ஜீவியம் செய்து முன்னேறுங்கள், உங்கள் சபைக்குச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அங்கே ஒரு உண்மையான ஒளியாக இருங்கள். கிறிஸ்துவுக்காக வாஞ்சையுள்ள வர்களாய் இருந்து, நீங்கள் எவ்வளவாய் அவரை நேசிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குக் கூறுங்கள். எப்பொழுதும் உங்கள் சாட்சியை அன்புடன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்றி கூறுவீர்களானால், நீங்கள் பாதையை விட்டு விலகினவர்களாய் இருப்பீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்ய முயற்சித்த போது வழிவிலகி போவீர்கள். ஆகவே, வியாக்கியானம் செய்ய முயலவேண்டாம். முக்கியமாக இன்றிரவு, முத்திரை உங்கள் முன்பாக திறக்கப்படும்போது, அவ்விதம் வியாக்கியானம் செய்யவேண்டாம். ‘சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் ஜீவனுள்ள தேவனுடைய சபையாக அவ்விதம் செய்யக்கூடாதா?’ இல்லை. நான் உங்கள் நன்மைக்காகவே இதைக் கூறுகிறேன் என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். இப்பொழுது நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களானால், நான் சொல்வதற்குச் செவி சாயுங்கள். இங்கே, ஒலி அலைகளை இழுக்கும் ரேடியோவின் கம்பம் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்ளுவோம். அதை, உங்கள் கரத்தில் இருக்கும் ஒரு பட்டயத்தைச் சரியான முறையில் உபயோகிக்க வேண்டியதுபோல் உபயோகிக்க வேண்டியதாய் இருக்கிறது. அது செய்தியையோ அல்லது தீமையான காரியங்களையோ இழுத்துக் கொடுக்கக்கூடும். சாதாரண மக்கள் மத்தியில் ஆவி சற்று ஊற்றப்படும் போது அவர்கள் மத பாகுபாடுகளை உண்டாக்கிக் கொண்டு, தங்களுக்கென்று சிறு அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். இப்பொழுது, நீங்கள் அவ்விதம் செய்யவேண்டாம். இப்பொழுது நீங்கள் இருக்கிற வண்ணமாகவே இருக்க நினைவிருக்கட்டும். ஜாக்கிரதையாயிருங்கள். இப்பொழுது கவனியுங்கள். ஏதோவொன்றை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். இதே நேரத்தில் இந்த அறையில் பத்தாயிரக்கணக்கான ஓசைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? மக்களின் உண்மையான ஓசைகள் மின் அலைகளாக வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் ஏன் அவைகளைக் கேட்க முடிவதில்லை? அவைகள் ஓசைகள். அது சரிதானே? இதே நேரத்தில் அவைகள் இங்கே அலைகளாக மிதந்து கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த அறையில் மனித உருவங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அது சரி தானே? அப்படியென்றால் நீங்கள் ஏன் அவைகளைப் பார்க்கமுடியவில்லை? என்னுடைய சத்தத்தைப் போலவே அவைகளும் உண்மையான சத்தங்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் அவ்வோசைகளைக் கேட்க முடியவில்லை? அவைகள் வெளிப்படுவதற்கு முன்பு அவ்வொலியின் அலைகள் ஏதோ ஒன்றின் மீது படவேண்டியதாய் இருக்கிறது. இப்பொழுது ஒன்றும் வியாக்கியானம் கூறவேண்டாம். நீங்கள் எதையாகிலும் அறிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புவாரானால் அதை உங்களுக்கு அனுப்புவார். ஆகவே, இப்பொழுது உண்மையாகவே அமைதியா யிருங்கள். ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. நான் என்ன சொல்ல நினைக்கிறேன் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? நீ ஒரு கிறிஸ்தவனாக இருக்க உன்னை ஒரு வித்தியாசமான வனாக்கிக் கொள்ள முயலாதே. ஏனென்றால் உன்னையே நீ தேவனை விட்டு புறம்பாகக் கொண்டு போய்விடுவாய். நீங்கள் புரிந்து கொள்ளக் கூடுமானால், இதுதான் மூன்றாவது இழுப்பு, நீங்கள் இதை அந்நாளிலேயே கண்டு பிடித்திருக்கவேண்டும். மற்ற இரண்டு இழுப்புகளினால் போலியான காரியங்கள் உண்டானதுபோல் இதில் இருக்காது என்பதை நினைவுகூருங்கள். அதுதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. இந்த அறையிலே இப்பொழுது ஏதோ ஒன்று நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும். இந்த அறையில் உண்மையிலேயே தேவதூதர்களும், தேவனுடைய சத்தமும் இருக்கின்றன. இயற்கையான சத்தத்தை ஒரு கருவியின் மூலமாக அனுப்பினாலன்றி அதை நீங்கள் கேட்க முடியாமலிருக்க, ஆவியின் சத்தத்தை எப்படிக் கேட்கமுடியும்? இங்கில்லாத யாரோ ஒருவர் பாடுகிற பாட்டின் ஓசைகள் இப்பொழுது இங்கிருப்பதை நீங்கள் நம்பத்தக்கதாக நிரூபிக்கக்கூடும். அலைகளை இழுக்கக் கூடிய கருவியின்மேல் அவ்வலைகள் படும்போது, அது உண்மையான வியாக்கியானத்தை அளிக்கும். உருவங்கள் திரையின் மீது காணப்படுவது இதை உறுதிப்படுத்துகிறது. நான் என்ன கூற விரும்புகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? இப்பொழுது, தேவ ஆவியானவர் உண்மையான வார்த்தையின் மூலமாக பேசும்போது, அது சரியென்று தன்னைத்தானே உறுதிப்படுத்திக் கொள்கிறது. இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? அது சரிதான். இப்பொழுது மீண்டுமாக ஜெபிப்போம். பரம பிதாவே, நீர் எங்களுக்கு ஆவிக்குரிய காரியத்தைத் திறந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக நாங்கள் இப்பொழுது இயற்கையான காரியமாக இந்தபுத்தகத்தை திறக்கப் போகிறோம். தேவனே, இந்த கேள்விகளுக்குச் சரியான விடையளிப்பதனால் அது மக்களுக்கு பிரயோ ஜனமாக இருந்தது எனக் கூறத்தக்கதாக இப்பொழுது எனக்கு உதவி செய்யும். இவைகள் அவர்கள் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக தேவனுக்கு கனமும் மகிமையுமாக நாங்கள் ஒருமித்து வாழ்வதற்கு மக்கள் அறிந்து கொள்ள, நான் அதைப் புரிந்து கொண்டு, பிறகு மக்களுக்கு அதை அளிக்க அருள் செய்தருளும். ஆமென்! இங்கிருக்கும் இக்கருவி ஒலிப்பதிவு செய்வதை கட்டுப்படுத்துகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இங்கிருக்கும் சாய்வு மேஜையின் விளக்காய் உள்ளது. ஒலிப்பதிவு செய்வதைக் கட்டுப்படுத்தும் கருவி இங்கிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஒலிப்பதிவு செய்வதை எப்பொழுது நிறுத்தவேண்டும். எப்பொழுது நிறத்தக்கூடாது என்பதை ஒலிப்பதிவு செய்யும் அறையில் உள்ள சகோதரர்களுக்கு நான் சைகை காட்ட வேண்டும் என்று எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒலி நாடாக்கள் உலக முழுவதும் செல்லும் ஒரு ஊழியமாக இருக்கிறது. இது எல்லாவிதான மொழிகளில் எல்லாவிடங்களுக்கும் செல்லுகிறது. இங்கு சொல்லப்படும் சில காரியங்கள் மற்ற இடங்களில் சொல்ல முடியாது. ஆகவேதான் ஒலிப்பதிவைச் சிறிது நேரம் நிறுத்த வேண்டியதாய் இருக்கும். இப்பொழுது கேள்விகளுக்கு விடையளிப்பது ஒரு முக்கியமான காரியமாய் இருக்கிறது. சில கேள்விகள் செய்தியோடே சம்பந்தமற்றவை களாய் இருக்கின்றன. இக்கேள்விகளுக்கெல்லாம் நான் அவர்களுக்கு பதில் அளிக்க கொடுத்திருக்கிறார்கள். அநேக விண்ணப்பங்கள் வியாதியஸ்தர்களுக்காகவும், மற்ற காரியங்களுக்காகவும், ஜெபிக்கும் படிக் கேட்கும் வேண்டுதல்களாக இருப்பதால், அவைகள் பதில் அளிப்பதற்குரிய கேள்விகளாக இல்லையென்று எனக்கு அறிவிக்கப் பட்டது. இன்னும் சில விண்ணப்பங்கள் மற்ற வேதவார்த்தைகளைக் குறித்த கேள்விகளாக இருக்கின்றன. நேரமிருந்தால் எவ்வளவு சிறந்த முறையில் அவைகளுக்குப் பதில் அளிக்க முடியுமோ, அவ்வளவாகச் செய்யலாம். நான் ஒரு தவறு செய்வேனென்றால் தவறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வதில்லை. ஆகவே, எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? ஆமென்! கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் உன்னதங்களைக் குறித்து பேசும்போது அவ்விதமாகத் தான் இருக்கும்! என்னே! அற்புதமான இடம். என்னே! அற்புதமான நேரம். இக்கூடாரத்தின் பிரசங்க பீடத்தின் பின்னாக நான் நின்று செய்தி கொடுத்த எல்லா காலத்திலும், இப்பொழுது இருக்கும் சூழ்நிலைகளாகிய தேவனுடைய பிரசன்னத்திலும், ஆவிக்குரிய உலகத்திலும் இருப்பதுபோல் இதற்கு முன்னதாக எப்பொழுதுமே என்னுடைய ஊழியத்தில் இருந்தே கிடையாது. என்னுடைய ஊழியத்தில், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் எப்பொழுதாவது நிகழ்ந்த எல்லாவற்றைக் காட்டிலும் இது அதிக மேலானதான இருக்கிறது. மற்றக் காரியங்கள் எல்லாம் சுகமளித்தலுக் குரியவைகள் ஆனால் இவைகள் அதே ஆவியானவரால் தேவ இரகசியங்களை வெளிப்படுத்துவதாகும். நான் ஒரு இடத்தில் தங்கி இருக்கிறேன், சாப்பிடுவதற்கு வேறொரு இடத்திற்குச் செல்லுகிறேன். நான் தனிமையாகவே இருக்கிறேன். ஆகவே, இது ஒரு மகத்தான நேரமாகவே இருக்கிறது. இக்கேள்விகளுக்கு விடை அளிப்பது அதிக நேரம் நீடிக்காவிடில் இப்பொழுதே இக்காலையில் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பேன், சிறிது நேரம் நான் இக்காரியங்களிலிருந்து சற்று விலகியிருக்க வேண்டியதாயிருக்கிறது. மனித சிந்தை இவ்வளவுதான் தாங்கக்கூடும். அக்கினி ஸ்தம்பம் உனக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும் போது ஒரு மணி நேரம் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்திருப்பது ஒரு எளிதான காரியமல்ல. அவ்விதமான சூழ்நிலையில் அதிகமான நேரம் இருக்க முடியாது என்பதை அறிவீர்களா? மனிதன் அதைத் தாங்கமுடியாது. இங்கிருக்கும் இக்கேள்விகள் உண்மையிலேயே அருமையானவைகள். மக்களுக்கு இதைக் குறித்து இருக்கும் ஞானத்தை நான் பாராட்டுகிறேன். அக்கேள்விகளுக்குப் பதில் அளிக்க முயற்சிக்கிறேன். நான் அதைச் சரியாக அளிக்காவிட்டால் என்னை மன்னிப்பீர்களா? வேறு வியாக்கியானம் உங்களுக்கு இருந்து அது சரியென்று விசுவாசிப்பீர்களானால், அவ்வண்ணமாக முன் செல்லுங்கள். அது பாதிக்காது. இரட்சிப்புக்குரிய காரியங்களில் ஒன்றோ அல்லது இரண்டோ ஒத்துச்செல்லக்கூடும். அநேக கேள்விகள் சபை எடுக்கப்படுதலைக் குறித்தவைகளாக இருக்கின்றன. இனி வரும் காலங்களில் நடக்கப் போகும் காரியங்களைக் குறித்தும் கேள்விகள் உள்ளன. நாம் இப்பொழுது நம்முடைய போதகத்தில் சபைக்காலங்களை கடந்தவர்களாக இருக்கிறோம். 144,000 பேர்கள் அழைக்கப்படும் காலத்தையும் கடந்தவர்களாக இருக்கிறோம். இப்பொழுது முதலாவதாக 1. மத்தேயு 25ல் கூறப்பட்டிருக்கும் ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் மணவாட்டிக்கு ஊழியம் செய்பவர்களா? அல்லது அவர்கள் மணவாட்டியா? இவர்கள் மணவாட்டிக்கு பணிபுரிகிறவர்கள் என்றால், மணவாட்டி எங்கே இருக்கிறாள்? நான் சிறந்த முறையில் புரிந்து கொண்டபடி பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள். இது ஒரு அடையாளமாகவோ அல்லது உண்மையாகவோ கூறப்பட்டுள்ளது. பத்து பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள். ஆனால் இங்கே ஒரு எண்ணிக்கையாக அது கூறப்பட்டுள்ளது. புத்தியுள்ள கன்னிகள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டியிலே எண்ணெய் இல்லாதவர்களாக இருந்தார்கள். மத்தேயுவில் பத்து பேரில் ஐந்து பேர் மாத்திரமே உள்ளே சென்றதுபோல், ஐந்துபேர் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்லுவார்களா? இல்லை, அது அவ்வண்ணமல்ல, மணவாட்டியின் அங்கத்தினர்களுக்கு இவர்கள் எடுத்துக்காட்டாக வைக்கப்படிருக்கிறார்கள். அவர்கள் மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். என்னுடைய புரிந்து கொள்ளுதலின்படி இவர்கள்தான் கடைசி ஜாமத்தின் கன்னிகைகள். ஏழு ஜாமங்கள் இருக்கின்றன. நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் ஏழாம் ஜாமமாகிய நடு இரவிலே இந்த கன்னிகைகள் எழுந்து தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் செய்து கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். ஆனால் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகளோ.... இங்கே ஐந்து கன்னிகைகளைக் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் பேரை குறித்தும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இவைகள் உண்மையானவைகளின் ஒரு அடையாளமாக மாத்திரம் உள்ளன. இந்தக் கடைசி காலமாகிய ஏழாம் ஜாமத்திலே ஐந்து பேர் உறக்கத்தினின்று விழித்துக்கொண்டு மறுரூபமாக்கப்பட்டு மணவாளனுடன் சென்றார்கள். எடுத்துக் கொள்ளப்படப் போகிறவர்கள் ஐந்து பேர் மாத்திரம் என்பது அதன் அர்த்தமல்ல. ஏனென்றால், இந்த வாரம் நாம் பார்த்த வண்ணம் மணவாட்டி, சபையின் காலங்களிலெல்லாம் நித்திரை செய்து கொண்டிருக்கிறாள். எபேசு சபையின் தூதனாகிய பவுலின் நாட்களில், பவுல் அந்த சபையின் தூதனாக இருந்ததினால் அந்தச் சபையை ஏற்படுத்தினான். அக்காலத்தில் இருந்த ஆவி சிங்கத்தின் ஆவியாக இருந்தது. சிங்கமென்று சொல்லும்போது அது யூதாகோத்திரத்து சிங்கமாகிய கிறிஸ்துவையே குறிக்கிறது. கிறிஸ்துவே அந்த வார்த்தை.... பவுல் அக்காலத்திற்குரிய வார்த்தையுடன் வந்தார். அந்த யுகத்திலே ஆயிரமாயிரமானவர்கள் நித்திரையடைந்தார்கள். அது சரிதானே! அதற்குப் பிறகு அடுத்த யுகம் வந்தது. இருண்ட யுகத்திற்குள் சபை சென்றபோது காளையின் ஆவிபுறப்பட்டுச் சென்றது. காளையானது உழைப்புக்கும், பலிக்கும் உரிய மிருகமான இருப்பது போல ஆயிரமாயிரமான பேர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்கள். அடுத்தபடியாக சீர்திருத்த யுகமாகிய லூத்தரின் யுகம் வந்தது. அப்பொழுது மனிதஞானமுள்ள ஆவி சென்றது. இந்த யுகத்திலே மனிதன் தன் ஞானத்துடன் சென்றான். சீர்திருத்தம் தேவ ஞானத்தோடே மக்களைப் பிரித்துக் கொண்டு வருவதுடன் இருந்துவிட்டிருந்தால் நலமாயிருந் திருக்கக்கூடும். ஆனால் அவன் என்ன செய்தான்? செய்தியைக் கொண்டு வந்த மனிதனாகிய லூத்தரின் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் லூத்தரன் ஸ்தாபனத்தை உண்டாக்கிக் கொண்டார்கள். வெஸ்லியின் மரணத்திற்குப் பிறகு மெத்தோடிஸ்ட் ஸ்தாபனத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்பதை அறிவீர்கள். இப்பொழுது, நீங்கள் இதை கவனிக்க வேண்டும் என விரும்புகிறேன். மூன்றாவது யுகமாகிய பெந்தேகோஸ்தே யுகத்தைக் குறித்து சிலர் கேட்கலாம். ஒவ்வொரு யுகத்திலும் பரிசுத்த ஆவிக்குள் ஒரு மூழ்குதலை பெற்றார்கள். நீதிமானாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். பரிசுத்தமாக்கப்படுதல் பரிசுத்த ஆவியின் ஒரு கிரியையாகும். ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானமோ பரிசுத்த ஆவியைப் பெறுவதாகும். ஆகவேதான் ஒரு தீர்க்கதரிசி வரவேண்டியதாக இருந்தது. தூதனல்ல, பரிசுத்த ஆவியானவரே, பரிசுத்த ஆவியின் ஞானஸ்தான மூலமாக அவருடைய நிறைவே வந்தது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தூதன் அனுப்பப்பட்டு குழப்பங்களை அகற்றி ஒழுங்குப்படுத்தி சபையை அதன் நிலையில் நிறுத்தினான். கடைசியாக சபைக்கு எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது. சூரியன் அந்தகாரப்பட்டு,சந்திரன் இரத்தம் போலாவது.... போன்ற காரியங்களை மக்கள் புரிந்து கொள்ளாமல் சபையின் காலங்களில் இவைகளை இணைந்திருக்கிறார்கள். கர்த்தரை, அவருடைய சீஷர்கள் மூன்று கேள்விகள் கேட்டபோது, அவர் தந்த பதில்களை மக்கள் புரிந்துகொள்ள தவறிவிட்டனர். கடந்த இரவு எந்த கேள்வியும் கேட்கவில்லையென்று நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளையும் எடுத்து முத்திரைகளின் கீழ் வைத்திருக் கிறோம். முத்திரைகளே ஒரு முழு புத்தகமாக இருக்கிறது. டாக்டர், நீர் அதை விசுவாசிக்கிறீரா? எல்லாம் ஒன்றாக இணைந்திருக்கிறது. இயேசுவினிடத்தில் மூன்று கேள்விகளைக் கேட்டார்கள், ‘இது எப்போது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன?’ அவர் கொடுத்த விடைகளில், ஏழாம் முத்திரையைத் தவிர எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம். அது (ஏழாம் முத்திரை) என்னவென்று இன்னும் தெரியவில்லை. எல்லாம் சரியாகப் பொருந்தினது. அவைகளை முன்னும் பின்னுமாக ஜோடியாக இணைத்துக் காட்டினேன். நான் திரும்பவும் சென்று என்னுடைய பழைய குறிப்புகளை எடுத்துப் பார்த்தபோது அவைகளை அதனதன் இடத்தில் சரியாகப் பொருத்தாமல், ஒரு காரியத்தை மற்றொரு இடத்திலும், மற்றொன்றை வேறொரு இடத்திலும் தவறாகப் பொருத்தி யிருந்தேன். இவ்விதமாகத்தான் செய்திருந்தேன். நீங்கள் இதைப் பிடித்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அதைப் பிடித்துக் கொண்டீர்களா? ஆகவே, நான் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தேன். வெளிப்படுத்தலினால் வரும் புத்துணர்வை ரசித்துக் கொண்டேயிருந்தேன். அங்கே உட்கார்ந்து கொண்டு பென்சிலோ அல்லது பேனாவையோ வைத்துக் கொண்டு கொள்ளைநோய், யுத்தங்கள் போன்ற காரியங்களை எடுத்து அவைகளை எப்படி பொருத்துவது என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்பொழுதோ, எல்லாம் ஒழுங்காக ஜோடியாக அமைந்திருப்பதை நீங்கள் கண்டீர்களா? இப்பொழுது ஆறாம் முத்திரைவரை ஒழுங்காக பொருத்தப்பட்டு நின்று விட்டதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஆறாவது முத்திரைவரை முத்திரைகள் திறக்கப்பட்டு, இப்பொழுது பரலோகத்தில் அரைமணிநேரம் அமைதலில் நின்றிருக்கிறது. அரைமணி நேரம் அமைதல் என்று மாத்திரம் சொல்லப்பட்டு இருக்கிறது. இப்பொழுது இக்கேள்விகளுக்கு நான் துரிதமாக பதில் அளிக்க வேண்டியவனாக இருக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு பதிலும் நான்கு வாரத்தில் கொடுக்கும் செய்தியின் நீளத்திற்கு உள்ளது. நான் அவ்விதம் செய்யாமல் ஒவ்வொருவரின் கேள்விக்கும் என்னால் முடிந்தவரை பதில் அளிக்க விரும்புகிறேன். இந்த கன்னிகைகள் ஒவ்வொரு சபையின் காலத்திலும் இருந்தார்கள், தூதன் சபைக்கு வருகிறான், ‘எபேசு சபையின் தூதனுக்கு எழுத வேண்டியது என்னவெனில்,’ என்று கூறுவதைக் கவனிக்கவும். எபேசு சபைக்கு எழுதப்பட்டிருப்பதை வாசித்த பிறகு (மீண்டும் அதை ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஒரு முத்திரை திறக்கப்படுகிறது. இவ்விதமாகத்தான் எல்லாம் உங்களுக்கு அளிக்க நாங்கள் முயற்சிக்கிறோம். நான் என்ன கருதுகிறேன் என்பதை அறிந்து கொண்டீர்களா? முதலில் நாம் எதைப் பெற்றோம்? சபையின் காலங்கள். அது சரிதானே? அதற்குப் பிறகு, சபையின் காலங்களுக்குரிய செய்திகள், இப்பொழுது இது எல்லோருக்கும் தெளிவாக இருக்கிறதா? முதலில் சபையின் காலங்களும், சரித்திரமும் நமக்குக் கொடுக்கப் பட்டது. (நிசாயா ஆலோசனை சங்கம், நிசாயா ஆலோசனை சங்கத்துக்கு முந்தின காலங்கள், மற்றும் இவைபோன்ற காரியங்களை, சரித்திரத்திலும், நாம் கண்டுபிடிக்க முடிந்தவைகள்). அதன் பிறகு, வார்த்தையின் உண்மையான வியாக்கியானம் சரித்திரத்தோடு இணைந்து செல்லுகிறதைக் கண்டோம். இவ்விதமாக லவோதிக்கேயா காலமாகிய இக்கால மட்டும் கொண்டு வரப்பட்டோம். இக்காலத்திற்குரிய சரித்திரம் நமக்குக் கொடுக்கப்படவில்லை. இதுதான் சரித்திரம் எழுதப்படுவதாகும் என்பதை கவனிக்கவும், இக்காலத்தில் காரியங்கள் எப்படியிருக்கும் என்பதுதான் காட்டப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது முத்திரைகளுக்கு வந்து முத்திரைகள் திறக்கப்படுகிறது. தேவன் நமக்கு முத்திரைகளை திறந்திருக்கிறார். அது என்ன? முதலில் ஒரு சபையின் தூதன்... சபையின் காலம், அதற்குப் பிறகு ஏழு முத்திரைகள். இப்பொழுது ஏழாம் சபையின் காலத்தில்வரும் சீர்கேட்டைக் கவனிப்போம்.... ஆனால் ஏழாம் முத்திரையில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிவிக்கவில்லை என்பதை அறியவும். ஏனென்றால், இந்த சபையின் காலத்தின் முடிவில் இவைகளை வெளிப்படுத்த ஒரு தீர்க்கதரிசன வரம் வரவேண்டும். நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்களா? அது சரி. முத்திரைகள் ஒவ்வொன்றும், இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட மூன்று கேள்விகளின் விடைகளோடு பொருந்துவதை கண்டோம். இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? ஒரு கல்லின்மேல் ஒரு கல்இராதபடி எப்பொழுது இடிக்கப்படும்? உலகத்தின் மதத்திற்கு மையமான இடமாக வேறொரு இடம் எப்பொழுது ஸ்தாபிக்கப்படும்? அந்திக் கிறிஸ்து எப்பொழுது வருவான்? அவனை எதிர்க்க என்ன சென்றது? - வார்த்தை வார்த்தைக்கு எதிராக வார்த்தை. அதன் பிறகு அது அரசியலுக்குள் விழுந்தது. அப்பொழுது காளை புறப்பட்டுச் சென்றது. அதுதான் இரண்டாவது முத்திரை. இயேசு, மத்தேயு 24ல் அவ்விதமே கூறியுள்ளார். அதன் பிறகு அதிலிருந்து சீர்திருத்தக் காரரின் ஞானத்திற்கு வருகிறோம். அப்பொழுது மனிதமுகம் கொண்ட ஜீவன் புறப்பட்டு சென்றது. அதுதான் நடந்தேறியது அதன் பிறகு நான்காவது முத்திரைக்கு வரும்போது, மற்ற மூன்று முத்திரைகளின் காலத்தில் கிரியை செய்த அந்திகிறிஸ்து வல்லமைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது, அவனுக்கு மரணம் என்னும் நாமம் கொடுக்கப் படுகிறது. இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். ‘அவனை அக்கினியில் எரித்து அவளுடைய பிள்ளைகளையும் கொல்லுவேன்’ இதுதான் மரணம் சவாரி செல்வதாகும். பிராடெஸ்டண்டாரும், கத்தோலிக்கரும் - அவர்கள் ஒவ்வொருவரின் மீதும் மரணத்தின் அடையாளம் காணப்படுகிறது - அவளும் அவளுடைய பிள்ளைகளும் அழிக்கப்படுவார்கள். ஆகவே, நீங்கள் உங்கள் ஸ்தாபனத்தின் மீது சார்ந்திருப்பீர்களானால், இப்பொழுதே அதைவிட்டு வெளியே வாருங்கள். ஏழாம் முத்திரைக்கு வரும்போது இயேசு அங்கே நிறுத்திவிட்டார். சந்திரன் இரத்தமாகும், அந்தகாரம், மற்றும் நடக்கப்போகும் காரியங்களை அறிவிப்பதினால் அவர் ஆறாம் முத்திரையைத் திறந்தார். நாம் இங்கே வந்து ஆறாம் முத்திரையைத் திறந்தோம். ஆறாம் முத்திரையை திறந்தபோது, அதே காரியத்தைக் காண்பிக்கிறது. வேதத்தில் மூன்று வெவ்வேறான இடங்களில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள், வெளிப்படுத்தலில் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தீர்களா? கவனியுங்கள். வேதத்தில் இயேசு அவ்விதம் கூறின இடம், உலகத் தோற்றமுதல் மறைக்கப்பட்டிருந்ததை அவர் புத்தகத்தைத் திறந்து காட்டிய இடம், மற்றும் இந்த நாளுக்குரிய வெளிப்படுத்தல் ஆகிய இம்மூன்றும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மூன்று சாட்சிகள் ஒருமித்துக் கூறும்போது அது உண்மையாக இருக்கிறது. அது முற்றிலும் உண்மையாக இருக்கிறது. இப்பொழுது, இந்தக் கன்னிகைகள் தான் எல்லாம் ஒன்றாக சேர்ந்து முழுசரீரமாகப்படுகிறார்கள். இவர்கள்தான் புத்தியுள்ள கன்னிகைகள். புத்தியில்லாத கன்னிகைகள், புத்தியுள்ள கன்னிகைகள் தொடங்கின போதே தொடங்கினார்கள், எண்ணெய் வாங்க முயற்சித்தவர்கள் இவர்களே. இங்கே கவனியுங்கள். எல்லாம் ஒழுங்காக பொருந்துவதை கவனியுங்கள். அந்த அறையில் வெளிப்படுத்தப்பட்டவைகளை இங்கே நின்று கூறுவேனானால் உங்களுக்கு தலையே சுற்றிவிடும். அப்படியா னால் எல்லாவற்றையும் கூறும்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அதன் பிறகு, மக்களைவிட்டு பிரிந்து போகும்போது தேவ இரகசியங்கள் திறக்கப்படுகிறது. மக்களுக்குக்கூட அறிவிக்கப்பட முடியாத காரியங்கள் வெளிப்படுகிறது. ஏனென்றால் அவர்கள் சிறு உபதேசங்களை உருவாக்கிக் கொள்ளுவார்கள். சுகமளிக்கக்கூடிய இச்சிறு வரத்தை கவனியுங்கள். அது எவ்வளவாக சபையை குழப்பத்துக்குள்ளாக்கிவிட்டது. மக்கள் இதைக் கண்டபோது, ஒவ்வொருவரும் ஒருவித உணர்வு பெற்று ஒவ்வொருவரும் இதைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அது தவறு என்று என்னுடைய இருதயத்தில் அறிவேன். ஏனென்றால் தேவன் என்னிடம் அவ்விதம் கூறினார். இது உண்மையென்று தேவன் அறிவார். இது வெறும் போலியான காரியங்கள். இது மக்களைச் சிதறடிப்பதாகும். இப்பொழுது அது சரிதான். இப்பொழுது அக்காரியங்களைக் கூற முடியாது. அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. மூன்றாவது இழுப்பைக் குறித்து யாருக்கும் சொல்லவேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது உங்களுக்கு நினை விருக்கும்.... என்ன அறிவிக்கப்பட்டது என்பதை அறிவீர்கள். அந்த தரிசனத்திலே நின்று கொண்டு அந்த சிறிய பாதரட்சை (Shoe) க்கு லேஸ் போட முயற்சித்துக் கொண்டிருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீ பெந்தேகோஸ்தே பிள்ளைகளுக்கு இயற்கைக்கு மேலாக காரியங்களைக் கற்றுக் கொடுக்க முடியாது. இது மூன்றாவது இழுப்பாக இருக்கும். இதை அறியமுடியாது. ஆகவே தேவனுடைய கிருபையால் எனக்கு உதவி செய்யும் என்று கேட்டேன். நாம் இப்பொழுதே கடைசி நேரத்தில் இருக்கிறோம். கிருபாசனம் நியாயாசன மாக மாறுவதற்கு அதிக நேரமாகாது. இப்பொழுது ஏற்கெனவே நீங்கள் உன்னதங்களில் கூட்டி சேர்க்கப் படாதிருந்தால், இக்காரியங்கள் நிகழ்வதையும் இந்த மக்கள் உள்ளே வருவதையும் காணும்போதே, நீங்களும் உள்ளே வருவது மேலானதாக இருக்கும். இது வெறும் மகிழ்வதைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளே உன்னதங்களிலே உண்மையாக கூட்டப் பட்டிருப்பீர்களானால் இது ஒரு பயங்கரமான காரியம். கர்த்தருடைய தூதனானவருக்குப் பக்கத்தில் நின்று கொண்டு ஆனந்த சத்தமிட்டு துதித்துக் கொண்டிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அவ்வண்ணமல்ல. அது மரணத்துக்குள்ளாக்கும் பயமான ஒரு காரியமாகும். ஆகவே, உள்ளம் பொங்க மனமகிழ்ச்சியினால் நடனம் ஆடுவது சரிதான். ஆனால் இதற்கும் உண்மையான காரியத் திற்குள் வருவதற்கும் ஒரு வித்தியாசம் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். இது ஒரு பயத்திற்குரிய காரியமாகும். நீங்கள் இழந்து போனதாக கருதும் பயம் அல்ல. ஆனால் அங்கே நின்று கொண்டிருக்கும் தேவ தூதனுக்கும், பரிசுத்த ஆவியானவருக்கும் முன்பாக உண்மையிலேயே நின்று கொண்டிருப்பதுதான் பயத்துக்குரியதாக இருக்கிறது. இப்பொழுது அது (கன்னிகைகள் - தமிழாக்கியோன்) மணவாட்டியின் ஒரு பாகமாக இருக்கும். நித்திரை செய்து கொண்டிருப்பவர்களுடன் இவர்களும் சேர்க்கப்படுவார்கள். இப்பொழுது அடுத்த கேள்வியைக் கவனிப்போம். 2. சுவிசேஷகர்கள் வயலில் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டுமா? இந்த வேளையில் அவர்கள் என்ன சொல்ல கருதுகிறார்கள்? எந்தவிதத்திலும் அவர்கள் தொடர்ந்து ஊழியம் செய்ய வேண்டும். ஒரு காரியத்தையும் மாற்ற வேண்டாம். இக்காலையில் இயேசு வருவதாக இருந்தாலும் இன்றையிலிருந்து பத்து வருடங்களக்குப் பிறகு அது இருப்பதுபோல பிரசங்கம் பண்ணு. ஆனால் இந்த மணிவேளையில் இருப்பது போல ஜீவி. இப்பொழுது குழப்பமாக்கிக் கொள்ள வேண்டாம். அதைக் குறித்து தான் உங்களை எச்சரிக்க முயற்சிக்கிறேன். விசித்திரமாக இருக்க வேண்டாம். ஆனால் நீங்கள் ஏதாகிலும் தவறோ அல்லது தீமையோ செய்து கொண்டிருப்பீர்களானால், மனந்திரும்புங்கள். தேவனிடம் திரும்புங்கள். நீங்கள் எப்பொழுதும் செய்வதுபோல சுவிசேஷ ஊழியத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தால், தொடர்ந்து செய்யுங்கள். இயேசு நாளை வருவாரென்றால் உங்கள் கடமையில் உண்மையுள்ளவர்களாகக் காணப்படத்தக்கதாக இருங்கள்! நீங்கள் உங்கள் ஆலயத்தைக் கட்டிக் கொண்டிருந்தால் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். என்னுடைய பாக்கெட்டில் பணம் வைத்திருப்பதைப் பார்க்கிலும் அவ்விதமான வேலைக்குச் செலவழிப்பதையே நான் தெரிந்து கொள்ளுவேன். ஆகவே, நீங்கள் இருக்கிற வண்ணமாகவே தொடர்ந்து முன்னேறுங்கள். இப்பொழுது ஒவ்வொருவரும் புரிந்து கொண்டீர்களா? சரியானதை தொடர்ந்து செய்யுங்கள். நீங்கள் இருக்கிற வண்ணமாகவே செல்லுங்கள். இப்பொழுது எதையும் நிறுத்த வேண்டாம். கர்த்தருக்கு ஊழியம் செய்து கொண்டிருப்பது போலவே தொடர்ந்து செய்யுங்கள். இப்பொழுது உதாரணமாக, நீங்கள் ஒரு மனிதனிடத்தில் வேலை செய்வீர்களானால், எல்லாம் முடிந்து போவதற்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருக்கும்போது, ‘இன்னும் பதினைந்து நிமிடங்கள்தான் இருக்கிறது. ஆகவே நான் அங்கு சென்று உட்கார்ந்து கொள்ளுவேன்’ என்று கூறுவாயானால் அந்த பதினைந்து நிமிஷத்திற்கு உன்னுடைய கூலி குறைக்கப்படும். நீங்கள் கோதுமையைப் பயிரிட்டுக் கொண்டிருந்தால் கோதுமையைப் பயிரிடுங்கள். நீங்கள் உருளைக்கிழங்குகளைத் தோண்டிக் கொண்டிருந் தால், அவைகளைத் தோண்டிக் கொண்டிருங்கள். ‘அவைகளைத் தின்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்’ என்று கூறி எந்தவித வித்தியாசத்தையும் உண்டாக்க வேண்டாம். எப்படியாகிலும் தோண்டிக்கொண்டே இருங்கள். நீங்கள் இருக்கிற வண்ணமாகவே தொடர்ந்து இருங்கள். அன்றொரு நாள் யாரோ ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் எனக்கு வந்தது. அவர்களுக்கு யாரோ ஒருவர் இவ்விதம் கூறியிருக்கிறார். ‘காலம் சமீபமாக இருக்கிறது, பண்ணையை விற்றுவிடுங்கள். ஆயிர வருட அரசாட்சி ஆரம்பிக்கப் போவதால் உங்களுக்கு பண்ணையிலிருந்து வரும் உணவு தேவைப்படாது, ஆகவே அதை விற்றுவிடுங்கள். உம்முடைய பிள்ளைகள் இரட்சிக்கப்டாதவர்களாய் இருப்பதால் உபத்திரவ காலத்தில் அவர்கள் இருக்கும் பண்ணையில் பலனைப் புசிக்கட்டும். நீங்களோ உங்கள் பண்ணையை விற்றுவிடுங்கள்’. நான் இவ்வாறு கூறினேன், அவர் நாளை வருவாரானால், நான் ஒரு விவசாயியாக இருந்தால், இன்றைக்கு என்னுடைய பயிரை நான் நடுவேன். அவர் என்னை ஒரு விவசாயியாக உண்டாக்கி இருந்தால் என்னுடைய வேளையிலேயே நான் இருப்பேன். நான் ஒரு ‘மெக்கானிக்’காக இருந்தால் அவ்வண்ணமே இருப்பேன்’. அன்றொரு நாள் யாரோ ஒருவர் வந்து இவ்விதம் கூறியதாக என்னிடம் கூறினார். ‘நான் ஒரு புதிய காரை வாங்கி இருக்கிறேன். அதற்குரிய இன்னொரு சாவிக்கொத்தை உங்களிடம் கொடுக்கப்போகிறேன். ஏனென்றால் எடுத்துக்கொள்ளப்படுதல் வரப்போகிறது. ஆகவே அது எனக்குத் தேவைப்படாது’ என்று தன்னுடைய மேய்ப்பரிடம் கூறினாராம். அவருடைய மேய்ப்பர் எடுத்துக்கொள்ளப்படுதலை இழந்துவிடப்போ கிறார். அதுதான் ஆயத்தமாவதாகும். இல்லையா? அது அவ்விதமாகத் தான் இருக்கும். நாம் அவ்விதம் இருக்க வேண்டியதில்லை. நாம் விசுவாசத்தில் உறுதியாயிருந்து, தெளிந்த சிந்தையுள்ள கிறிஸ்தவனாக இருக்கவேண்டும். கடைசி நிமிடம் வரை ஊழியம்செய்வதற்காக நான் இங்கே நியமிக்கப்பட்டிருக்கிறேன். நான் செய்யவேண்டிய ஒரு வேலை உண்டு, நான் என்னுடைய கடமையில் உண்மையுள்ளவனாக காணப்படுவதையே விரும்புகிறேன். அவர் இந்தக் காலை வருவா ரென்றால், நான் இந்த பிரசங்க பீடத்தின் நடுவில் நின்று கொண்டிருக்க விரும்புகிறேன். நீங்கள் இவ்விதம் கூறலாம், ‘சகோதரன் பிரான்ஹாமே, அவர் இக்காலை வருவாரென்றால் நீங்கள் அங்கே வெளியே இருக்க வேண்டுமல்லவா’. இல்லை, ஐயா, இதுதான் என்னுடைய கடமையை நிறைவேற்றக்கூடிய இடம். அவர் வரும்போது, இங்கே நின்று கொண்டு, நான் பிரசங்கித்துக் கொண்டிருப்பவைகளையே பிரசங்கித்துக் கொண்டிருப்பேன், அப்பொழுது அவர் வரும்போது அவருடனே சென்று விடுவேன். உருளைக்கிழங்கு தோட்டத்தில் களையைப் பிடுங்கிக் கொண்டிருந் தால், என்னால் எவ்வளவாய் பிரயாசப்பட முடியுமோ அவ்வளவாய் பிரயாசத்தோடே களை பிடுங்கிக் கொண்டிருப்பேன். அவர் வரும்போது களை பிடுங்க உபயோகிக்கும் மண்வெட்டியைப் போட்டுவிட்டு எடுத்துக் கொள்ளப்படுவேன். யூபிலி வருஷத்திலே, களை பிடுங்குகிறவர்கள் களைகளைப் பிடுங்கிக்கொண்டே இருக்க வேண்டும். யூபிலி வருஷத்திற்கு இன்னும் பத்து நிமிஷம் இருந்தாலும், யூபிலி வருஷத்தில் எக்காளம் தொனிக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். எக்காளம் தொனிக்கும்போது வேலைசெய்து கொண்டிருக்கிறவர்கள் தங்கள் ஆயுதங்களை எறிந்துவிட்டு விடுதலையாகச் சென்று விடுவார்கள். எக்காளம் தொனிக்கும் வரை உங்கள் வேலைகளைச் செய்து கொண்டிருங்கள். 3. ஐந்தாம் முத்திரையின் வெளிப்படுத்தலின்படி மோசேயும், எலியாவும் மரிக்க வேண்டும்; அப்படியானால் ஏனோக்கைக் குறித்து என்ன? எனக்குத் தெரியாது, எனக்குத் தெரியவில்லையென்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லப்போகிறேன். எனக்குத் எல்லா விடைகளும் தெரியாது. எனக்குத் தெரியவில்லையென்றால் எனக்குத் தெரியாது என்று சொல்லுவேன். எனக்குத் தெரியும்வரை அதைச் சொல்லமாட்டேன். அடிக்கடி நானே அதைக்குறித்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். மோசேயும், எலியாவும் திரும்பவும் வந்து கொலை செய்யப்படுவார்கள் என்பதை நான் கண்டேன். ஆனால் ஏனோக்கு காலத்திற்கு முன்னமே எடுத்துக் கொள்ளப்பட்டான். அடிக்கடி நான் அதைக் குறித்து நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அதைக் குறித்து என்ன? ஆனால் இங்கே ஆறுதலாக ஒரே ஒரு காரியத்தைச் சொல்லுவேன். மோசே தேவனுக்கு நாற்பது வருஷம் மாத்திரம் சேவை செய்தார். அவர் நூற்றிருபது வருஷம் இருந்தார். முதல் நாற்பது வருஷம் அவர் கல்வியைக் கற்றார். இரணடாம் நாற்பது வருஷம் தேவன் அதை அவரிடத்திலிருந்து எடுத்துப் போட்டார். மூனறாம் நாற்பது வருஷம் அவர் தேவனுடைய சேவை செய்தார். அது சரிதான். ஆனால் ஏனோக்கு தேவனோடு ஐந்நூறு வருஷம் சஞ்சரித்து குற்றமில்லாதவனாகக் காணப்பட்டார். ஆகவே மோசேயும், எலியாவும் இன்னும் சிறிது நேரம் ஊழியம் செய்யதிரும்ப வருவார்கள். இதுதான் சரி என்று நான் கூறவில்லை. இதை தியானிப்பதற்காக உங்களுக்குத் தருகிறேன். அங்கே என்ன நடந்தது என்றோ, அல்லது தேவன் என்ன செய்யப் போகிறார் என்றோ நான் சொல்லமுடியாது. 4. வெளிப்படுத்தல் 3: 12ல் உள்ள மக்களுக்கு என்ன நாமம் கொடுக்கப்படும்? எனக்குத் தெரியாது. அவர்களுக்கு ஒரு புதியநாமம் கொடுக்கப் படுவதாக அவர் கூறினார். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை நாம் அங்கு செல்லும்போது அது அறிவிக்கப்படும். ஆனால் அது என்னவென்று இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. அவர் அதைச் செய்யப் போகிறார். பெறுகிறவர்கள் மாத்திரமே அதை அறிந்து கொள்ளத் தக்கதான ஒரு புதிய நாமத்தை அவர் கொடுப்பார்? 5. சகோதரன் பிரான்ஹாமே, விவாகரத்துக்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க ஏதாகிலும் வேதவாக்கியம் உண்டா? இது அதிக முக்கியமானதாகும். இது முக்கியமானதென்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தான் இது முத்திரைகளோடு சம்பந்தப்பட்டதல்ல. என்னுடைய சகோதரனோ, சகோதரியோ, இதை எழுதியவர் யாராயிருந்தாலும், எனக்குத் தெரிந்தவரை உன்னுடைய கணவனோ அல்லது மனைவியோ மரிக்கும்வரை நீங்கள் மறுபடியும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் வசனம் எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்கள் உயிருடன் இருக்கும் வரை அவர்கள் கட்டப்பட்டு இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. ஏதாகிலும் வேதவாக்கியம் உண்டா என்றுதான் கேட்கப்பட்டுள்ளது. நான் அறிந்தவரை எதுவும் இல்லை. திருமணமானவர்களில், ஒருவர் மரிக்கும்போதுதான் மற்றவர் கர்த்தருக்குள் இருக்கும் வேறு யாரையாகிலும் மணந்துகொள்ளலாம் என்று பவுல் கூறியுள்ளார். ‘மரணம் நம்மை பிரிக்கும் வரை’ என்றுள்ளது. இவ்வண்ணமாகத்தான் நீங்கள் வாக்கு கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே இதை அனுமதிக்க எந்த வசனமும் இல்லை. இதற்கேற்ற வார்த்தையை நீங்கள் கண்டிருந்தால் நல்லதுதான். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனக்கு ஒன்றும் தெரியாது. 6. வெளிப்படுத்தல் 6:6ல் எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே’ என்பது எதைக் குறிக்கின்றது? அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஏற்கெனவே அதைக் குறித்து பார்த்திருக்கிறோம். சிலசமயங்களில் யாராவது செய்திக்குச் சற்று தாமதமாக வரும்போது இங்கு சொல்லப்படும் காரியத்தை இழந்து விடுகிறார்கள்... எண்ணெயும் திராட்சரசமும் எதைக்குறிக்கிறது? எண்ணெய், பரிசுத்த ஆவிக்கு அறிகுறியாக உள்ளது என்பதை நாம் அறிவோம். வேதாகமத்தில் ஆராதனைக்குரிய காரியங்களில், திராட்சரசமும் எண்ணெயும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது என்னும் எண்ணம் எனக்கு உண்டாயிற்று. திராட்சரசம் எழுப்புதலை உண்டாக்குகிறது. வெளிப்படுத்தலினால் வரும் எழுப்பு தலுக்கு இயற்கையான திராட்சரசம் மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது. சபையை எது எழுப்புதலடைய செய்கிறது என்பதைச் சற்று நினைத்துப் பாருங்கள்? - எழுப்புதல், பலியிடுவதிலும் சபையின் ஆராதனையிலும் எண்ணெயும், திராட்சரசமும் ஒன்றாக இணைந்திருப்பதை கவனிக்கவும். க்ருடன்ஸ் ஒத்துவாக்கிய புத்தகத்திலோ (Cruden’s Concor dance) அல்லது வேறெந்த ஒத்துவாக்கிய புத்தகத்திலோ பார்ப்பீர்களானால், திராட்சரசமும் எண்ணெயும் ஆராதனை முறைமைகளில் ஒன்றாக இணைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இப்பொழுது இதைக் குறித்து கவனியுங்கள். எண்ணெய் எப்பொழுதும் பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது. ஏசேக்கியலிலும் மற்றும் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டின் முழுமையிலும் இதைக் காண்கிறோம். வியாதியஸ்தரை ஏன் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம்? அவர்கள் மீது ஊற்றப்படும் பரிசுத்த ஆவியை அறிகுறியாக எடுத்துக்காட்டுவதற்காகத்தான் வியாதியஸ்தரை எண்ணெயினால் அபிஷேகம் பண்ணுகிறோம் என்பதை கவனியுங்கள். புத்தியுள்ள கன்னிகைகள் எண்ணெயைப் பெற்றிருந்தார்கள், புத்தியில்லாதவர்கள் எண்ணெயைப் பெறவில்லை. ஆவி, அதுதான் எண்ணெய். எண்ணெய் தேவனைக் குறிக்கிறதென்றால், தேவன் ஆவியாய் இருக்கிறார் தெரியுமா? தேவன் வார்த்தையாய் இருக்கிறார். ‘ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து அந்த வார்த்தை மாம்சமானார். அதுதான் தேவன்’. இப்பொழுது வார்த்தை இயற்கையான உருவத்தில் அமர்ந்திருக்கிறதென்றால்.... விசுவாசியை எழுப்புதலடையச் செய்யும் வார்த்தையின் வெளிப்படுத்தல் போல, திராட்சரசம் தண்ணீரைக் குறிக்கிறது. இதற்கு முன்பு நான் இவ்விதம் காணவே இல்லை! மகிமை! அது என்ன? - வெளிப்படுத்தலினால் வரும் எழுப்புதல். அன்று நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது பெற்ற வெளிப்படுத்தலுக்கு முன்பு நான் அதை அறியவில்லை. மூன்றாம் சபையின் காலமாகிய இருண்டயுகத்தில் கறுப்புக் குதிரையின் மீது வந்தவன் எண்ணெயையும் திராட்சரசத்தையும் குறித்துக் கூறுவது இதைத்தான் குறிக்கிறது. அதைச் சேதப்படுத்தாதே என்று சொல்லப்பட்டதைக் குறித்த சரியானவிளக்கம் விடப்பட்டிருக்கிறது. மூன்றாம் முத்திரையின் ஒலிநாடாவை வாங்கி கேட்பீர்களானால் நாம் அதில் தெளிவாக விளக்கியிருப்பதைக் காண்பீர்கள். 7. சகோதரன் பிரான்ஹாமே, ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகமும், ஜீவ புஸ்தகமும் ஒரே புத்தகமா? நிச்சயமாக. இந்த புத்தகத்தில்தான் மீட்புக்குரிய எல்லா காரியங்களும் எழுதப்பட்டிருக்கிறது, ‘சகோதரன் பிரான்ஹாமே, நம்முடைய பெயர்கள் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக் கிறது. அன்றொரு இரவு என்னுடைய பெயர் அதில் எழுதப்பட்டது. இல்லை, உன்னுடைய பெயர் இப்பொழுது எழுதப்பட்டிருப்பதைக் கண்டாய், ஏனென்றால் உலகத்தோற்றத்திற்கு முன்பே பெயர்கள் அதில் எழுதப் பட்டிருக்கிறது. எல்லாம் ஒரே புத்தகம் என்பதை அறிந்து கொள்ளவும். 8. சகோதரன் பிரான்ஹாமே, கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவான் என்பது உண்மையா? 144000பேர் யார்? பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கப்படுவதற்காக முன்குறிக்கப் பட்டவர்கள் இவர்களா? அவர்களுடைய ஊழியம் என்ன? இங்கே, ஒரே கேள்வியில் மூன்று கேள்விகள் உள்ளன. முதல் கேள்வியானது, கிறிஸ்து வந்த பிறகு பிறந்த ஒவ்வொரு யூதனும் இரட்சிக்கப்படுவானா? இல்லை. யூதனோ, அல்லது புறஜாதியானோ, உலகத்தோற்றத்திற்கு முன் யாருடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதோ, அவர்கள் மாத்திரமே இரட்சிக்கப்படுவார்கள். மற்றவர்கள் இரட்சிக்கப்படுவதில்லை. அந்த புஸ்தகத்தில்தான் தேவரகசியம் அடங்கியிருக்கிறது. அந்த புஸ்தகம் திறக்கப்பட்டு இரகசியம் வெளிப்படுவதினால், ஒவ்வொருவருடைய பெயரும் வெளிப்படுவதில்லை. ஆனால் அவர்களுடைய பெயர்கள் அழைக்கப் படுகிறது. அதை இப்பொழுது புரிந்துகொண்டீர்களா? ‘லீ வேயில், அல்லது ஓர்மன் நெவில் அல்லது யாராகிலும் ஒருவர் இந்தச் சபையின் காலத்தில் இரட்சிக்கப்பட வேண்டும்’ என்று அந்த புஸ்தகம் கூறு வதில்லை. அவ்விதம் அது கூறுவதில்லை. என்ன இரகசியம் என்பதை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் நாமோ, அவைகளை வெளிப்படுத் தலினால் விசுவாசிக்கிறோம். இதைத்தான் நான் அன்றிரவு கூறினேன். ‘ஜெபர்சன்வில்லில் ஒருவர்தான் இரட்சிக்கப்படுவார் என்று சகோதரன் பிரான்ஹாம் கூறினார். ஆகவே நான் முயற்சிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று ஒருவர் சொன்னார். அது ஒரு உவமையைக் காண்பிக்கிறது. அதைக் கூறின வண்ணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆயிரம் பேர் இரட்சிக்கப்படலாம். எனக்குத் தெரியாது. அந்த ஒருவன் நான்தான் என்று இவ்விதமாகத்தான் நான் விசுவாசிக்க விரும்புகிறேன். நீங்களும் அவ்விதமே விசுவாசியுங்கள். நீங்கள் அவ்விதம் விசுவாசிக்கவில்லை யென்றால் உங்கள் விசுவாசத்தில் ஏதோ ஒரு தவறு உண்டு. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதைக் குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா, அல்லது இல்லையோ என்பதை நிச்சயமாக நீங்கள் அறியாதிருக்கும்போது எப்படி நீங்கள் மரணத்தைச் சந்திக்கச் செல்லுவீர்கள்? கால்களை மடக்கிக் கொண்டிருக்கும் ஒரு குருடனான முடவனிடம் சென்று அவனைப் பார்த்து, ‘கர்த்தர் உரைக்கிறதாவது, இதோ இயேசு கிறிஸ்து உன்னை முற்றிலும் சுகமாக்கிவிட்டார்’ என்று எவ்விதம் சொல்லுவாய்? சிலமணி நேரமாக மரித்து, குளிர்ந்துபோய் விறைத்துக் கிடக்கும் பிணத்திற்கு முன்பாக நின்றுகொண்டு, ‘கர்த்தர் உரைக்கிறதாவது, நீ எழுந்து காலூன்றி நில்’ என்று எப்படி சொல்லுவாய்?... நீ எதைக்குறித்து பேசுகிறாய் என்பதை அறிந்தவனாக இருக்கவேண்டும். ‘மரணம் எல்லாவற்றையும் பறித்துக் கொள்ளுகிறது. எல்லாம் நடந்தேறிவிட்டது’ என்று நீங்கள் கூறலாம். ஆனால் தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படும்போது, காரியங்களை மாற்றியமைப்பவர் தேவன். அது சரி, எல்லா யூதர்களும் இரட்சிக்கப்பட மாட்டார்கள். இல்லை, ஐயா! எல்லோரும் இரட்சிக்கப்படுவதில்லை. யூதர்கள் என்பது அவர்கள் எருசலேமை விட்டு வெளியே போனபோது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயராகும். நேபுகாத்நேச்சர்ர் அவர்களை அவ்விதம் அழைத்தான் என்று நான் நினைக்கிறேன். யூதா கோத்திரத்தார் அப்பொழுது கொண்டு போகப்பட்டதால் முதலில் யூதர்கள் என்னும் பெயர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. இப்பொழுது அவர்கள் யூதேயாவிலிருந்து வந்ததினால் அவர்களுக்கு யூதர்கள் என்னும் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேல் என்பது வித்தியாசமானதாகும். இஸ்ரவேல் யூதர்கள் என்னும் பெயர்கள் வித்தியாசமானவைகள். ஒவ்வொரு யூதனும் ஒரு இஸ்ரவேலன் அல்ல என்பதை கவனிக்கவும். இல்லை, அவன் ஒரு வெறும் யூதன்... எல்லா யூதர்களும் இரட்சிக்கப் படுவார்கள் என்று பவுல் கூறவில்லை. ஏன்? ஆதியிலிருந்து இஸ்ரவேல் என்பது மீட்புக்குரிய பெயராகும். எல்லா இஸ்ரவேலர்களும் இரட்சிக்கப் படுவார்கள். ஆனால் எல்லா யூதர்களும் இரட்சிக்கப்படுவதில்லை. ஆயிரமாயிரமான புறஜாதியின் மக்கள் லட்சக்கணக்கான ஸ்தாபன சபைகளில் இருந்து கொண்டே தங்களை கிறிஸ்தவர்கள் என்றும், கிறிஸ்துவின் சபையென்றும் அழைத்துக்கொள்கிறார்கள். இது ஒன்றுமே கிடையாது. இது, அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பதல்ல. ‘நீங்கள் இந்த ஸ்தாபனத்தையோ அல்லது அந்த ஸ்தாபனத்தையோ அல்லது ஏதாகிலும் ஒரு ஸ்தாபனத்தையோ சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் எங்களுடைய புத்தகத்தில் இல்லையென்றால் நீங்கள் இழக்கப்பட்டவர்கள்’ என்று மக்கள் கூறுகிறார்கள். அதுதான் மார்க்க பேதங்களைக் கொண்டுவந்து ஸ்தாபனங்களை உருவாக்குவ தாகும். நீங்கள் இரட்சிக்கப்பட ஒரே ஒரு வழி உண்டு. அது விரும்புகிறவா னாலும் அல்ல, ஒடுகிறவனாலும் அல்ல. இரங்குகிற தேவனாலேயாம். தேவன், தம்முடைய முன்னறிவினால் தம்முடைய மகிமைக்கென்று ஒரு சபையை முன் குறித்தார். அவர்கள் தான் இரட்சிக்கப்படுவார்கள் இதுதான் சரியான காரியம். ‘என்னுடைய விசுவாசம் அங்கே நங்கூரமிடப்பட்டிருக்கிறது’ என்று நீ கூறலாம். ஆனால், உன்னுடைய ஜீவியம், நீ அதற்குத் தகுதியற்றவன் என்று காட்டுகிறது. உன்னுடைய நங்கூரம் தவறானதாக இருக்கிறது. அது, கற்பாறையின் மீது நங்கூரமிடப்படாமல் மணலின்மீது போடப்பட்டிருக்கிறது. ஒரு சிறு அலை அதை தூரே எறிந்துவிடும். வார்த்தையானது வெளிப்படுத்தப்படும்போது, ‘என்னுடைய சபை அதைப் போதிப்பதில்லை’ என்று கூறுவாயானால் உன்னுடைய நங்கூரம் பாறையின்மீது போடப்படாமல் மணலின் மேல் போடப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது, அது உண்மையே. 144,000 பேர்கள் முன்குறிக்கப்பட்டவர்களா? ஆமாம் ஐயா! அவர்கள் இஸ்ரவேலர் - ஆவிக்குரிய இஸ்ரவேலர். அங்கே லட்சக்கணக்கான மக்கள் இருப்பார்கள் என்பதை நினைவு கூருங்கள். இப்பொழுது எத்தனைபேர் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எல்லோரும் இரட்சிக்கப்பட மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் யூதேயாவில் இருக்கிறார்கள். இப்பொழுது, எத்தனை பேர் அங்கிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு எண்ணம் உண்டா? எனக்குத் தெரியாது. ஆனால் அடுத்த உபத்திரவத்திற்குப் பிறகு ஒருவேளை பெருகக்கூடும், இவைகளைக் குறித்து ஒலிநாடா ஒன்று என்னிடம் உண்டு.... ஆப்பிரிக்காவில் டட்சு சீர்திருத்த சபையில் அந்த உடன்படிக்கை இருக்கிறது. அவர்களில் யாராவது இப்பொழுது இங்கே உட்கார்ந்து கொண்டிருப்பார்களானால், அது எப்படி என்பதைக் கூறுவேன். நீங்கள் இன்னும் அந்த பழைய ‘ஐடல் பெர்க் மத போதனைகளைப்’ பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இன்னும் டச்சு சீர்திருத்த சபையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் வெளிப்புறத்தில் அமெரிக்க பெயரை வைத்திருந்தாலும் அந்த பழைய ஐடல்பெர்க் மதபோதனை களையே போதிக்கிறீர்கள். அது சரியா இல்லையா என்று உன்னுடைய மேய்ப்பரைக் கேட்டுப்பார். ஆகவே, இந்த 144,000 பேர் பரிசுத்த ஆவியினால் முத்திரைப் போடப்படுவதற்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள் என்பதை கவனிக்கவும். ஆம் ஐயா! அது சரியாக அப்படித்தான். இது உங்களுக்கேற்றவாறு பதில் அளிக்கப்படவில்லை என்றால், ஒரு வேளை நான் தவறாக இருக்கக்கூடும். இது, சிறந்த முறையில் நான் அறிந்துகொண்டவாறு அளிக்கப்பட்டிருக்கிறது. 9. சகோதரன் பிரான்ஹாமே, சர்ப்பத்தின் வித்து என்னும் செய்தியைக் குறித்து நீங்கள் அதிக கடினமாக பிரயாசப்பட்டதினால்.... (ஓ. நான் இதைக் காணவே இல்லை. இது என்னை விட்டு நழுவிப்போனது).... இந்த வாரத்தில் சர்ப்பத்தின் வித்தைக் குறித்து, இந்த கேள்வியைக் கேட்பது சரியாக இருக்குமா? என்னுடைய நண்பர்கள் ஆதியாகமம் 4 : 1ஐ விளக்கும்படி கேட்டார்கள். என்னால் அது முடியவில்லை. நீர் எனக்கு உதவி செய்வீரா? இது இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயத்திற்கு புறம்பாக இருக்கிறது. ஆனாலும் தேவனுடைய ஒத்தாசையினால் என்னால் முடிந்தவரை முயற்சிக்கிறேன். இப்பொழுது கவனிப்போம். அதைக் குறித்து நான் சற்று சரிசெய்துகொள்ளட்டும், ‘நான் கர்த்தரிடமிருந்து ஒரு குமாரனைப் பெற்றேன்’ என்று அவள் அங்கு கூறினாள் என்று நினைக்கிறேன்..... ஏவாள் அதைக் கூறினாள் என்று நினைக்கிறேன். அன்றொரு இரவு ஏழாயிரத்திற்கு பதிலாக ஏழு நூறு என்று சொல்லிவிட்டேன். ஆகவே இது சரியா என்று சோதித்தும் பார்த்துக் கொள்ள விரும்புகிறேன்.... இது என்னை பயமுள்ளவனாக்கு கிறது. சந்துரு எப்பக்கமும் சூழ்ந்திருப்பதால் அதை உணர்ந்து நீங்கள் விழிப்புடன் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். (ஆமாம் அப்படித்தான்.) ‘ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தாள், அவள் கர்ப்பவதியாகி, காயினைப்பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்’ என்னுடைய சகோதரனோ, அல்லது சகோதரியோ, நான் இப்பொழுது உங்களுடைய கேள்விக்கு பதில் அளிக்கப்போகிறேன். இதை உங்கள் மீது வீசி எறிவதல்ல, நான் உங்களுக்கு உதவி செய்ய முயற்சிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். இதில் குற்றம் கண்டு பிடிப்பவராக இருப்பவரை நான் நேசிக்கிறேன்? ஆனால் இவர் குற்றம் கண்டு பிடிப்பவர் என்று நான் நினைக்கவில்லை. ‘எனக்கு உதவி செய்யும்’ என்று கேட்டிருக்கிறார். மக்கள் இதை விசுவாசித்தபோதிலும், கேள்வி கேட்பவர்களுக்கு சரியான முறையில் பதில் உரைக்க ஆவியானவர் அவர்களை நிலை நிறுத்தாததனால் இவ்விதம் கேட்டிருக்கிறார்கள். கேள்வி என்ன? ‘கர்த்தரால் ஒரு மனுஷனைப், பெற்றேன் என்று ஏவாள் கூறினாள்’ என்பதை அவர்கள் கூறுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. காரியம் சரியோ அல்லது தவறோ, ஜீவன் தேவனிடத்திலிருந்து வரவில்லையென்றால் அது எங்கிருந்து வரும் என்று நினைக்கிறீர்கள்? யூதாஸ்காரியோத்தை உலகத்திற்கு அனுப்பினது, யார்? அதை எனக்குச் சொல்லுங்கள். அவன், ‘கேட்டின் மகனாக’ பிறந்தான் என்று வேதம் கூறுகிறது. எலுமிச்சம் பழத்தில் புழு இருப்பது போல - இவ்விதமாக அவர்களைக் கேட்கும் பொழுது. கவனியுங்கள். இதை இன்னும் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்கே எழுதியிருக்கிற வண்ணமாக பார்க்கும் போது, இது ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டிருக்கிறது. இங்கே போதிக்கப்பட்டிருக்கிறபடி ஏவாள் தேவனிடத்திலிருந்துதான் இந்த குமாரனைப் பெற்றாள் என்று தோன்றுகிறது. இவர் ஒரு ஆவியாக இருக்கிறார், அவர் அதைச் செய்யமுடியாது, கவனித்தீர்களா? இப்பொழுது கவனியுங்கள், ‘கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன்’ என்பதை கவனிக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். இதற்கு சரியான ஒருவியாக்கியானம் இருக்கவேண்டும். ஆமாம், ஐயா. நாம் எப்பொழுதும் நம்முடைய பெற்றோரின் தன்மையைப் பெற்றுக்கொள்கிறோம். நீங்கள் அதை அறிவீர்கள். குழந்தையின் சுபாவத்தைக் கவனியுங்கள். ஆதாம் ஒரு தேவனுடைய குமாரன், ஏவாள் ஒரு தேவனுடைய குமாரத்தி, இவர்கள் தேவனுடைய சிருஷ்டிப்பின் முதன்மையானவர்களாக இருந்ததால், அவர்களில் சிறிதேனும் தீமை இருக்கவில்லை. தீமை அப்பொழுது காணப்படவும் இல்லை. அப்படி இருக்கும்போது, காயின் எப்படி ஒரு பொய்யனும், கொலைக்காரனுமாய் இருந்தான்? இவைகள் எங்கிருந்து வந்தன? நீங்கள் உங்களையே அதைக் கேட்டு பாருங்கள். அது தான் சர்ப்பத்தின் வித்து. அவ்விதம் வேதாகமம் கூறவில்லையா? அவனுக்குப் பிறகு வந்த அவனுடைய சந்ததியை கவனித்துப் பாருங்கள். இந்த உலகம் யாரைச் சேர்ந்ததாக இருக்கிறது? - பிசாசை. இப்பொழுது இதை ஆட்கொண்டிருப்பது யார்? - பிசாசு. முற்றிலும் சரி. பிசாசு உலகத்தை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். அவன் இயேசுவுக்கு இதின் எல்லா மகிமையையும், அழகையும் காண்பித்து, ‘நீர் என்னை பணிந்து கொண்டால்’ இதை உமக்குக் கொடுப்பேன்’ என்று கூறினான். அவன் அதை அடக்கி ஆண்டுக்கொண்டிருக்கிறான். இப்பொழுது அவன் அதைச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். பிசாசின் பிள்ளைகள் உலகஞானமுள்ளவர் களாய் இருக்கிறார்கள். காயினுடைய பிள்ளைகளில் வம்ச வரலாறுகளைக் கவனிப்பீர்களானால் அவர்களில் ஒவ்வொருவனும் சாதூரியமுள்ளவன் என்பதை அறிந்துகொள்வீர்கள். அவன் ஆபேலைக் கொலை செய்தபோது, தேவன் அவனுக்கு பதிலாக சேத்தைத் தந்தார். மரித்துபோன நீதிமான்கள் மீட்கப்படும்போது அவர்கள் உயிர்த்தெழுவதற்கு சேத் ஒரு ‘மாதிரி’யாக வைக்கப்பட்டிருக்கிறான். இப்பொழுது கவனியுங்கள். இயற்கையான வித்துக்களின் முதல் வித்து மரிக்கவேண்டும். இப்பொழுது உங்களுடைய சிந்தை திறக்கப்பட்டிருக் கிறதா? இயற்கையான வித்துக்களின் முதல் வித்தாகிய ஆபேல், இப்பொழுதிருக்கும் சபைக்கு மாதிரியாக இருக்கிறான். அந்த சந்ததி காக்கப்படுவதற்கு மற்றொருவன் எழும்பத்தக்கதாக ஒருவன் மரிக்க வேண்டியதாய் இருந்தது. இது மீண்டும் மறு பிறப்பாக இருக்க வேண்டியதாய் உள்ளது. நீங்கள் இதைப் பிடித்துக் கொண்டீர்களா? இது அவ்வண்ணமாகத் தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது ஒரு பூரணமான ‘மாதிரி’யாக உள்ளது. ஆகவே, ஆதாமுக்கு பிறந்த இயற்கையான மனிதன்கூட அந்த இயற்கையான போக்கை காண்பிக்கிறான். இது கிரியை செய்யாது. இயற்கையான மனிதன் தேவனுடைய காரியங்களைப் புரிந்து கொள்ளுவதில்லை. ஆகவேதான் இது மீண்டும் திருப்பப்படுவதற்காக (to restore) ஒருவன் இயற்கையாக வந்து மரிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற் காக, ஆபேல் மரித்தபோது அவள் ஸ்தானத்தில் சேத் வரவேண்டியதாய் இருந்தது. அவனில் இருந்து ஆவி எவ்விதமான மக்களைக் கொண்டுவந்தது என்பதை கவனியுங்கள். பயிர்செய்கிறவர்களும், ஆடு மேய்ப்பவர்களு மாகிய எளிமையான மக்கள்தான் அவனில் இருந்து தோன்றினார்கள். இந்த உலக ஞானத்தில் இருந்து கொண்டுவரப்படுகிறது எதுவென்பதைக் கவனித்துப்பாருங்கள். சாதூரியமானவர்களையும் கட்டடம் கட்டுகிறவர் களையும், உலோகங்களினால் சிறந்தவேலை செய்கிறவர்களையுமே உலகஞானம் பிறப்பித்திருக்கிறது. அவர்கள் எங்கே முடிகிறார்கள் என்பதை கவனியுங்கள். தேவன் தாழ்மையுள்ளவர்களை இரட்சித்து மற்றெல்லோரையும் அழித்துப்போட்டார். ‘சாந்த குணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்’ என்று இயேசு மத்தேயு 5ல் கூறவில்லையா? ஆகவே, கவலைப்பட வேண்டாம்? அவர்கள் நிற்பதற்கு ஒரு அடி இடம்கூட இருக்காது. அது காயினுடைய குமாரனாக இருக்கும் என்று அவர்கள் விசுவாசிப்பதில்லை. இதைக் குறித்துத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும் ஒலிநாடா நம்மிடம் இருக்கிறது. இல்லை, ஐயா. ஏவாள் புசித்தது ஒரு ஆப்பிள்பழம் அல்ல, அது ஒரு ‘ஏப்ரிகாட்’ என்னும் பழம் என்று விஞ்ஞானம் நிரூபிக்க போவதைக்குறித்த ஒருதுண்டு செய்திதாளை அவர்கள் வைத்திருந்ததை நான் கண்டேன். அந்தச் செய்தித்தாள் இப்பொழுது என்னுடைய வீட்டில் இருக்கிறது. அதுஒரு ஏப்ரிகாட் என்னும் பழம், மற்றும் மோசே தண்ணீரைக் கடக்கவில்லை யென்றும், சவக்கடலுக்கு மேற்கு கரையில் நாணல் நிறைந்திருக்கும் தரை வழியாகவே இஸ்ரவேலரைக் கொண்டுவந்தார் என்றெல்லாம் சொல்லுவது மாம்சீகசிந்தையே. ஒரு சமயம் தண்ணீரால் நிறைந்திருந்த இடம் இப்பொழுது நாணல்களால் நிறைந்திருக்கிறது. மோசே குறுக்கு வழியாக செல்ல அந்த வழியாகச் சென்றார். வைதீகமான சபைகள் இதை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. இதை நீங்கள் கவனித்தீர்கள். இதுதான் உண்மையென்று வைதீகமான சபைகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஓ. மனிதனே, சர்ப்பத்தின் வித்து - அந்திகிறிஸ்து மற்றும் எல்லாக் காரியங்களும் அங்கிருப்பதை உன்னால் காணமுடியவில்லையா? ஆமாம், ஐயா. 10. சகோதரன் பிரன்ஹாமே. ப்ளு (குடர) ஜூரத்தினால் அதிக சுகவீனமாக இருக்கும் என்னுடைய பேரனுக்காக தயவு செய்து ஜெபிக்கவும்.... (இது ஒரு ஜெய விண்ணப்பமாக இருக்கிறது) அவன் இப்பொழுது ரிவர்வியூ ஒட்டலில் இருக்கிறான். கர்த்தராகிய இயேசுவே, இந்த எளிமையான ஆள் இதை வீணாக எழுதவில்லை. அன்றொரு இரவு ஒரு சிறு பையனுக்கு இருந்த வாத ஜுரத்தை நீர் நீக்கினதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். நீர் மகத்தான தேவன் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த சிறுபையனுக் காக நாங்கள் எங்கள் ஜெபத்தை ஏறெடுக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் அவன் சுகமடைவானாக. ஆமென். யாராகிலும் ஒன்றை எழுதும்போது அது வீணாகப் போவதில்லை. அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் அதில் மறைவில் ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவும். அந்த சகோதரி... அந்த சிறுபையன்.... ஏதோ ஒன்று. 11. யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா, உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவி மற்றொரு மனிதனுக்குள் வருவதா? (இப்பொழுது அதைக்குறித்து... நான் இதைக்கூற பயப்படுகிறேன். இது எனக்கு தெரியாது. நான் மறுபடியும் அதைப் படிக்கட்டும்) யூதர்களுக்கு பிரசங்கிக்க வரும் எலியா (ஓ, ஆமாம்) உலகத்தில் வாழ்ந்த அந்த உண்மையான மனிதனா, அல்லது எலியாவின் ஆவியைப் பெற்றிருக்கும் வேறொருவனா? இதற்கு நான் சரியான பதில் கூறுவேனானால், ஏனோக்கைக் குறித்து கூற முடியும். ஆனால் நான் அதைச் செய்ய முடியாது. வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் நான் அறிந்திருக்கிறேன்... நான் அதை இவ்விதம் கூறட்டும். ஒலி நாடாவைக் கேட்கும் சகோதரர்கள் இதை புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அது அந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட மனிதன் என்று நான் விசுவாசிக்க முற்படுகிறேன். ஏனென்றால் எலிசாவின்மேல் எலியாவின் ஆவி அமர்ந்ததாகக் கூறவில்லையா? எலியா செய்தது போலவே அவனும் செய்தான். ஆனால் இது தான் உண்மையென்று நான் கூறமுடியாது. எனக்குத் தெரியாது. நான் உங்களோடு உத்தமமாய் இருக்கிறேன், எனக்குத் தெரியாது. 12. சகோதரன் பிரான்ஹாமே, ஞானஸ்நானத்தைக் குறித்து நீர் எனக்கு தயவு செய்து பதில் உரைப்பீரா? மத்தேயு 28:19 பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று போதிக்கிறது, பேதுரு, அப்போஸ்தலர் 2:38ல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் என்று போதிக்கிறார். அப்போஸ்தலர் நடபடிகளில் எப்பொழுது இந்த மாறுதல் வந்தது? இப்பொழுது நான் கர்த்தராகிய இயேசுவில் விசுவாசிக்கிறேன் நல்லது, இதை எழுதிய சகோதரனோ அல்லது சகோதரியோ, யாராயிருந்தாலும், இதிலே எந்த மாறுதலும் வரவில்லை. இயேசு எதை செய்ய சொன்னாரோ அதைதான் பேதுரு செய்தார். இப்பொழுது யாராகிலும் ஒருவர் வந்து பட்டப்பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பதை உபயோகப்படுத்துங்கள் என்று கூறுவார்களானால், தேவன் எதைச் செய்ய வேண்டாம் என்று கூறினாரோ, பேதுரு எதைச் செய்யக்கூடாது என்று கூறினாரோ அதையே செய்தார்கள்.... நான் உங்களுக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கிருப்பதை கவனியுங்கள். நான் உங்களுக்கு முன்பாக மூன்று பொருட்களை வைக்கப் போகிறேன். திரித்துவ மக்கள் மூன்று தனித்தனியான ஆட்களில் விசுவாசம் கொண்டிருப்பது போல, இதுதான் பிதா, இதுதான் குமாரன், இதுதான் பரிசுத்த ஆவி என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் இவ்விதமாக்கத்தான் விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிவீர்களா? அப்படியென்றால்... மத்தேயு 28.19-ல் ‘நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ (இல்லை, என்னை மன்னியுங்கள், அப்போஸ்தலர்) 2ஐ கூறுகிறேன் என்று நினைக்கிறேன் - இல்லை. லூக்கா 24.49) நான் அதைப் புரிந்துகொள்ள மீண்டும் அதைப் படிக்கட்டும், ஏனென்றால் அன்றொரு நாள் ஒருகாரியத்தைச் சொல்வதற்குப் பதிலாக அதல்லாத வேறொரு காரியத்தைச் சொன்னேன். இதை சரியாகச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சொல்லுவதன் தலைப்பை நான் அறிவேன். ஆனாலும் அவர் என்ன சொன்னார் என்பதை கவனிக்க விரும்புகிறேன், 28ம் அதிகாரம் 16ம் வசனத்திலிருந்து வாசிப்போம். ‘பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். அங்கே அவர்கள் அவரைக் கண்டு பணிந்து கொண்டார்கள்! சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி! வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது (மத்தேயு 28.16) இப்பொழுது தேவனுடைய வல்லமை எங்கிருக்கிறது? தேவன் எங்கிருக்கிறார்? வானத்தில் உள்ள எல்லா அதிகாரமும், பூமியில் உள்ள சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கும்போது, தேவன் எங்கிருக்கிறார்? அவர்களோடு பேசிக்கொண்டிருப்பவர்தான் அவர் என்பதை கவனியுங்கள். ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து’ இப்பொழுது திரித்துவக்காரர்கள் பயப்படுகிறார்கள். ‘நான் உங்களுக்கு பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்’, இது பரிசுத்த வேதாகமத்தில்கூட இவ்விதமாக இல்லை. கவனித்தீர்களா? ஒவ்வொரு பெயருக்கும் பின்னாக ‘நாமத்திலும்’ என்று சொல்லாமல், ‘பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில், என்றுதான் அவர் கூறினார். நாமங்களில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள் என்று சொல்லாமல் - நாமம் என்று ஒருமையிலே - பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே என்று தான் கூறினார். பிதா என்பது ஒரு நாமமா என்று உங்களைக் கேட்க விரும்புகிறேன். (சபையார் இல்லை என்று பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்) குமாரன் என்பது ஒரு நாமமா? (சபையார் இல்லை என்று பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்) எத்தனை பிதாக்கள் இருக்கிறீர்கள்? உங்களில் எத்தனைப்பேர் பிதா என்று அழைக்கப்படுகிறீர்கள்? எத்தனை குமாரர்கள் இருக்கிறீர்கள்? எத்தனை மனிதர்கள் இங்கிருக்கிறீர்கள்? உங்களில் எத்தனைபேர் ‘பிதா, குமாரன், அல்லது மனிதன்’ என்று அழைக்கப்படுகிறீர்கள்? ஒருமுறை ஒரு ஸ்திரீ என்னைப் பார்த்து, ‘சகோதரன் பிரான்ஹாமே, பரிசுத்த ஆவி என்பது ஒரு பெயர், அது ஒரு ஆள்’ என்று கூறினதுபோல் இது இருக்கிறது. ‘ஆமாம் ஐயா. நான் ஒரு ஆள். ஆனால் என்னுடைய பெயர் ஆளல்ல’ என்று நான் கூறினேன். நான் ஒரு ஆள் என்பதை அறிவீர்கள். என்னுடைய பெயர் வில்லியம் பிரான்ஹாம். ஆனால் நான் ஒரு ஆள். பரிசுத்த ஆவி ஒரு ஆள். அதுவாகத்தான் இருக்கிறார். அது ஒரு பெயரல்ல! அது ஒரு ஆளாக இருக்கும் தேவனின் ஒரு பட்டப் பெயர் என்பதை கவனிக்கவும். தேவனுடைய ஆள் தத்துவத்தின் ஒரு பட்டப்பெயராகும் - அவர் என்னவாக இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகலஜாதிகளுக்கும் போதித்து அவர்களுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்’ என்று அவர் சொன்னது - பிதாவின் நாமத்திலும், குமாரனின் நாமத்திலும், பரிசுத்த ஆவியின் நாமத்திலும் என்று சொல்லாமல், மற்றும், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமங்களில் என்றும் சொல்லாமல், பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் என்றுதான் சொன்னார். பிதா என்பதும், குமாரன் என்பதும், பரிசுத்த ஆவி என்பதும் நாமமில்லையென்றால், நாமத்தில் என்று சொல்லும் போது, அது எதைக் குறிக்கின்றது? இவைகளில் எதை நாமம் என்று அழைக்கப் போகிறீர்கள்? - எந்த நாமம் அது? பட்டப்பெயர்தான் நாமம் என்று சொல்லுவீர்களானால் எந்தப் பட்டப்பெயரினால் ஞானஸ்நானம் கொடுக்கப் போகிறீர்கள்? - பிதாவின் நாமத்திலா அல்லது குமாரனின் நாமத்திலா? நாமம் என்று ஒருமையில் சொல்லப்பட்டிருப்பதைக் கவனிக்கவும். நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பது மத்தேயுவின் புத்தகத்தின் கடைசி பகுதியாகும். இதை நான் எப்பொழுதுமே விளக்கியிருக்கிறேன். ‘ஜானும் மேரியும் அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்று ஒரு காதல் கதையின் கடைசி பகுதியை படித்துவிட்டு சொல்லுவீர்களானால், ஜானும் மேரியும் யார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேயில்லை. நீங்கள் மறுபடியும் கதையின் முதல் பாகத்திற்கு சென்று ஜானும் மேரியும் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நீங்கள் இதைத்தான் மத்தேயுவில் செய்து கொண்டிருக் கிறீர்கள். அப்புத்கத்தின் கடைசி பகுதியை மாத்திரம் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். காரியம் என்னவென்பதை அறிந்துகொள்ள மத்தேயுவின் முதல் பகுதிக்கு மறுபடியும் சென்று படியுங்கள். இது நீங்கள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, ‘ஜானும் மேரியும், அதற்குப் பிறகு சந்தோஷமாக வாழ்ந்தார்கள்’ என்று மாத்திரம் கூறுவதுபோல் இருக்கிறது. அது ஜான் ஜோன்சும் மேரியும் அல்லது அது ஜான் ஹென்றியும் வேறொத்தியும், இது ஜானுள் மற்றொருவளும் என்று இவ்விதமாக கூறுவீர்களானால், நீங்கள் அதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை, நீங்கள் அதைத் தெளிவாய் அறிந்துகொள்வதற்கு அந்தபுத்தகத்திற்கு மறுபடியும் சென்று முதலில் இருந்து படிக்க வேண்டும். இங்கே ஒரு சிறிய பகுதியை மாத்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதை சரியாக புரிந்து கொள்வதற்கு நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மத்தேயு சுவிசேஷத்தில் முதலாம் அதிகாரத்தை வாசிப்பீர்களென்றால், 18ம் வசனத்தில் இருந்து வம்சவரலாறு கொடுக்கப் பட்டிருப்பதை கவனிப்பீர்கள். இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது... (இது சரியா?) இப்போது, உங்களை ஒன்று கேட்கப்போகிறேன், இப்பொழுது மறுபடியும் கவனியுங்கள், இது தேவனாகிய (‘பிதா’ என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்) இது தேவனாகிய (‘குமாரன்’ என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்) இது தேவனாகிய (‘பரிசுத்த ஆவி’ என்று சபையார் பதிலுரைக்கிறார்கள்) இப்பொழுது இது யார்? (‘பிதா’ என்று சபை பதிலுரைக்கிறது - ஆசிரியர்) இது யார்? (‘பரிசுத்த ஆவி’ என்று சபை பதிலுரைக்கிறது - ஆசிரியர்) எல்லாம் சரியாய் இருக்கிறது. இப்பொழுது நாம் அதைப் புரிந்து கொண்டோம். இதை யார் என்று கூறினீர்கள்? - இது தேவனாகிய யார்? (பரிசுத்த ஆவி’ என்று சபையார் கூறுகிறார்கள்) பரிசுத்த ஆவி சரி. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது, அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே, அவள்..... கர்ப்பவதியானாள் (பரிசுத்த ஆவியினாலே’ என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்) தேவன்தாம் அவருடைய பிதா என்று நீங்கள் சொன்னீர்கள் என்று நினைத்தேன். இங்கே ஏதோ தவறு இருக்கிறது. அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்க முடியாது. நீங்கள் இதை அறிவீர்கள். இங்கே ஏதோ தவறு இருக்கிறது. இவர்கள் மூன்று ஆட்கள் என்றால், இவர்களில் யார் அவருடைய பிதா? ‘அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்’ என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. இதற்கும் தேவனாகிய பிதாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தேவன் தாம் தம்முடைய பிதா என்று இயேசு கூறினார். தேவன் தாம் அவருடைய பிதா என்பதை நாம் அறிவோம். அப்படியென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கவேண்டும். அப்படியென்றால் அவர் முறை தவறிப் பிறந்தவராக காணப்படுகிறார். இப்பொழுது நீங்களே உங்களை எங்கு கொண்டு வந்து விட்டீர்கள் என்பதை உணர முடிகிறதா? ‘அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத்தள்ளிவிட யோசனையாயிருந்தான். அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில்....’ அவன் ஒரு நல்ல மனிதனாக இருந்தான் என்பதை நினைவுகூருங்கள். இப்பொழுதே தேவனுடைய கரம் சமீபமாயிருக்கிறது. முன்குறிக்கப்பட்ட மக்கள் இதைப் பிடித்துக்கொள்வார்கள். ‘அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே, அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது தேவனால் உண்டானது’. நான் இதைத் தவறாகப் படித்தேனா? ஆமாம், நான் இதைத் தவறாக படித்தேன். இவளுக்குள் கர்ப்பம் தரித்திருப்பதற்கும் தேவனாகிய பிதாவுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது - அது பரிசுத்த ஆவியானவர். அது சரியா? அப்படியானால் அது என்ன? - பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய ஆவியே. இப்பொழுது நீங்கள் இதைப் புரிந்து கொண்டீர்கள். தேவனாகிய பிதாவும், பரிசுத்த ஆவியானவரும் ஒரே ஒரு ஆளாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு பிதாக்கள் இருக்கவேண்டும், அப்படியென்றால் எந்தவிதமான தேவனைப் பெற்றிருக்கிறீர்கள்? கவனியுங்கள். பரிசுத்த ஆவியாகிய தேவனும் பிதாவாகிய தேவனும் ஒரே ஒரு ஆள் தான். ‘அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்..... (இந்த ஆள் இங்கே இருக்கிறார்) ....... அவருக்கு ....... என்று பேரிடுவாயாக......... (என்ன? அவருடைய பெயர், அவருடைய பெயர் என்ன என்பதை நினைவுகூருங்கள்.) இயேசு : ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்: தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.... (யாருக்கு வார்த்தை வருகிறது)..... அவன் : இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்’. தேவனுடைய நாமம் என்ன? பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமம் என்ன? அவருடைய பெயர் இயேசு என்று வேதம் கூறுகிறது. இதைக் குறித்து விவாதம் செய்வதற்கு இக்கூடாரத்திற்கு வந்திருந்த ஒருவர் இவ்விதம் கூறினார். ‘சகோதரன் பிரான்ஹாம் மற்றெல்லாவற்றையும் தெளிவாக்கிவிட்டார். ஆனால் இதை அவரால் செய்யமுடியாது. இங்கே இவர்கள் மூன்று ஆட்கள் என்று தெளிவாகக் கூறுகிறது. மத்தேயு 3ம் அதிகாரத்தில் யோவான் இங்கே நின்று கொண்டிருக்கிறார். பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுவதற்கு இங்கே வருகிறார். அவர் தண்ணீருக்குள் சென்றார். யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். தண்ணீரிலிருந்து கரையேறின போது வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. வானத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கி வந்தார் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, ‘இவர் என்னுடைய நேசக் குமாரன் இவரில்’.... என்று கூறிற்று’. ஒரே நேரத்தில் மூன்று வித்தியாசமான ஆட்கள்’. பரிசுத்த ஆவியைப் பெறாதவர்களும், தேவனால் அழைக்கப்படாதவர் களும் பிரசங்க பீடத்தண்டைக்குப் போகக்கூடாது என்பதை இது மக்களுக்கு எடுத்துக்காட்டுகிறது. அது சரி. தேவனுடைய ஒத்தாசை யினால் இப்பொழுது அந்த மனிதனை எடுத்து அவருடைய தலையே சுற்றும்படியாக எல்லாவற்றையும் சேர்த்து ஒரு முடிபோட்டுவிட முடியும். (நான் அவ்விதம் நினைக்கவில்லை.... இவ்விதம் கூறினது சரியில்லை. என்னை மன்னிக்கவும். நான் அவ்விதம் நினைக்கவில்லை. கர்த்தாவே, நான் அவ்விதம் நினைக்கவில்லை.... அவர் இதைக் குறித்து என்னை எச்சரிப்பதை உணர்ந்தேன். நான் அவ்விதம் கூற நினைக்கவில்லை. நான் வருந்துகிறேன்) பரிசுத்த ஆவியானவர் அவருக்கு சில இரகசியங்களை வெளிப்படுத்தக் கூடும் என்று விசுவாசிக்கிறேன். - (அது தான் சரியென்று தோன்றுகிறது) ஒரு இசைக்கருவியை சுருதி கூட்டும்போது, ஏதாகிலும் தவறு செய்யும்போது நீங்கள் அதை உணரமுடியும். அதுதான் கிறிஸ்தவனுக் குரிய பண்பாகும். நீங்கள் சில தவறானதைச் சொல்லும்போது அதை அவர் விரும்புவது இல்லை. நான் அவ்விதம் கூறினபோது என்னை அங்கு நுழைக்கப் பார்த்தேன். நான் அந்தக் காட்சியில் இருக்கவில்லை. நான் அந்தக் காட்சியில் இருக்கவிரும்பவில்லை, அதைச் செய்கிறவர் அவர். அவரே அந்த வேலையைச் செய்யட்டும். எக்காளத்தை தொனிக்கச் செய்கிறவர் அவர். எக்காளங்கள் தானாகவே தொனிக்க முடியாத ஊமையான கருவிகள். அதற்குப் பின்னாக இருக்கிறவரின் சத்தம்தான் அதை தொனிக்கச் செய்கிறது. இப்பொழுது இங்கே கவனியுங்கள், மனிதன் தவறான முறையில் வார்த்தையை வியாக்கியானம் செய்கிறான். வார்த்தையானது கல்விமான்களுக்கும், ஞானிகளுக்கும் மறைக்கப்பட்டு பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கே பூமியின் மீது இயேசு கிறிஸ்து ஒரு ஆளாக நின்று கொண்டிருக்கிறார். வானம் நமக்கு மேலிருக்கும் ஆகாயமாகும். இப்பொழுது கவனியுங்கள். யோவான் இதற்குச் சாட்சியாக இருக்கிறார்.... பிதாவாகிய தேவன் இங்கிருக்கிறார். தேவனாகிய பரிசுத்த ஆவி புறாவைப் போல இங்கே இருக்கிறார். தேவனாகிய குமாரன் இங்கே இருக்கிறார் - என்று மூன்று ஆட்களாக சொல்லி இருக்க வேண்டும். அது தவறாகும். அங்கே நின்று கொண்டிருந்த யோவானுக்கு அவர் ஆட்டுக்குட்டியானவர் என்பது தெரியும்.. தேவனுடைய ஆவியானவர் ஒரு ஆட்டுக்குட்டியாக இருப்பதைக் காண்பதாக யோவான் சாட்சி கூறினான். தேவனாகிய ஆவியானவர்.... ஒரு புறாவைப் போல, என்று நான் நினைக்கிறேன். (அன்றிரவு இதே போல கூறினேன், ஏழு நூறு என்பதற்கு பதிலாக), தேவனுடைய ஆவியானவர் - இங்கே இந்த ஆட்டுக்குட்டி. தேவனுடைய ஆவியானவர் - தேவன் புறாவாக வந்தார். தேவனுடைய ஆவியானவர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது, ‘இவர் என்னுடைய நேசக்குமாரன், நான் இவரில் வாசம் பண்ண விரும்புகிறேன்’ என்னும் சத்தம் வானத்திலிருந்து வந்தது. வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் அவர். இப்பொழுது அவருடைய நாமம் என்ன? (‘இயேசு’ என்று சபையார் பதிலுரைக்கிறார்கள் - ஆசிரியர்). உண்மையாகவே. திரித்துவக்காரரின் மூன்று வெவ்வேறான தெய்வங்கள் என்னும் தத்துவமானது அஞ்ஞானிகளுடைய உபதேசமாகும். வேதாகமத்தில் அவ்விதம் கூறவில்லை. சிங்கத்தினுடைய செய்தியில் இது. கூறப்பட வில்லை. இது அந்திக்கிறிஸ்துவிலிருந்து உண்டான ஒரு காரியமாகும். எந்த ஒரு வேத சாஸ்திரியையும் கேட்டுப்பார். நிக்கொலாய் மதஸ்தரின் கொள்கையினால் தான் இது பிரவேசித்திருக்கிறது. ஆகவேதான் அது மார்டின் லூத்தருடனும் வந்தது. ஆகவே தான் அது ஜான் வெஸ்லியுடனும், வந்து பெந்தேகோஸ்தே மக்களிடத்திலும் ஊற்றப்பட்டிருக்கிறது. பெந்தேகோஸ்தே மக்கள் வந்தபோது ‘இயேசு மாத்திரமே’ என்னும் கூட்டத்தினரும் வந்தனர். இது மறுபடியும் தவறான தொன்றாகும். இயேசுவே எப்படி தம்முடைய பிதாவாக இருக்கமுடியும்? ஆகவே இது அதையும் வீழ்த்திவிடுகிறது. ஆனால், கழுகின் காலமொன்று வரவேண்டியதாயிருக்கிறது. அந்த காலத்தில்தான் எல்லா இரகசியங்களும் தெளிவாக்கப்பட வேண்டியதா யிருக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இவைகள் எல்லாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பட்டப் பெயர்களாய் இருக்கின்றன. அந்த மூன்று பேரையும் கவனித்துப் பாருங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியென்று மத்தேயு கூறுகிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று பேதுரு கூறுகிறார். பிதா யார்? கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, ‘என்னுடைய வலது பாரிசத்தில் உட்காரும்’ என்று கூறினார். அது சரியா? பிதா, குமாரன் - இயேசு, பரிசுத்த ஆவி - தேவனிடத்திலிருந்து புறப்பட்ட ‘லோகாஸ்’ என்னும் வார்த்தை. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய ஆள் தத்துவத்தை மூன்று வித்தியாச வழிகளில் வெளிப்படுத்தும் மூன்று பட்டப் பெயர்களாகும், அல்லது ஒரே ஒரு ஆளுக்குரிய மூன்று லட்சணங்களாகும். இதைச் சரியாக புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு - இவைகள் ஒரே தேவனில் மூன்று அலுவல்களாக இருக்கிறது. ஒரே தேவனின் மூன்று பண்புகள். மூன்று வித்தியாசமான யுகங்களில் தம்முடைய பிதாவின் தன்மையையும், குமாரனுக்குரிய தன்மையையும் பரிசுத்த ஆவிக்குரிய தன்மையையும் வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். தேவன் மூன்றில் பரிபூரணப்படுகிறார். அந்திக்கிறிஸ்துவின் இலக்கம் நான்கு என்பதை நினைவு கூறுங்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பது முற்றிலுமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறிப்பதாகும். இயேசுவின் நாமத்தில் மாத்திரம் ஞானநானம் கொடுப்பதும் தவறானதாகும். வெறும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பது முற்றிலும் தவறாகும். அநேக இயேசுக்களை நான் அறிந்திருக்கிறேன். ‘லத்தீன்’ (Latin) நாடுகளில் அநேக இயேசுக்கள் இருக்கிறார்கள். ஆனால் இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்து! இது யார் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. அனேக பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்னுடன் நேரடியாக பேசவேண்டுமானால், நான் ஒருவரே வில்லியம் மரியன் பிரான்ஹாம். அதுதான் நான். ஆனால் வேறு அநேக வில்லியம் பிரான்ஹாம்கள் இருக்கிறார்கள். ஆனால் அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்பவர் ஒருவர்தான் என்பது தெளிவாக உள்ளது. அவர் ஒருவரே. அதுதான் சரி. இதற்கும் மேலாக ஏதாகிலும் இருக்குமாயின், கடிதம் எழுதி நான் மற்ற கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் போது அனுப்பலாம். வியாதியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வியாதியஸ்தருக்கு ஜெபிக்க வேண்டியவனாகவும் இருக்கிறேன். 13. சகோதரன் பிரான்ஹாமே, இந்தக் கேள்வி இதில் பொருந்தவில்லை என்றால்.... பதில் கூறவேண்டாம். (அது நல்லது நான் அதைப் பாராட்டுகிறேன்) மிகவும் சிறியவர்களாகிய பிள்ளைகள் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்களா? உமக்கு நன்றி. அவர்கள் கையொப்பம் இடவில்லை. இல்லையென்றால், பரவாயில்லை. ஆனால் கவனியுங்கள். உலகத்தோற்றத்திற்கு முன்தேவன் ஒரு பெயரை ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதியிருக்கும்போது, உலகத்தில் உள்ள எதுவும் அதை அழித்துப் போட முடியாது. ஏனென்றால் அது கிறிஸ்துவின் இரத்தமாகிய மையினால் எழுதப்பட்டிருக்கிறது. அது இவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது அவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அல்லது எதுவாக இருந்தாலும், அது ஒன்றுபோலவே செல்லுகிறது. எல்லா பிள்ளைகளும், எல்லா சபையும், அங்கிருக்கும் ஒவ்வொன்றும்.... தேவன், தம்முடைய முன்னறிவினால்... இப்பொழுது, நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ‘சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் அங்கிருந்ததை நிரூபிக்க முடியுமா?’ என்று நீங்கள் கூறலாம். இல்லை, ஐயா, நான் அதை நிரூபிக்க முடியாது. தேவன் என்னை வேறொரு - காரியத்திற்கு கருவியாக உபயோகப்படுத்தக்கூடும், உங்களையும் அவ்விதமாகவே உபயோகப் படுத்துவார். ஆனால் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். அறிவினால் நான் இரட்சிக்கப்படாமல் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். அவ்விதமாகத்தான் நீங்களும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவ்விதமாகத்தான் நாமெல்லாரும் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், தேவன் எல்லைக்கப்பாற்பட்டவர் என்பதை நினைவு கூருங்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? - எல்லைக்கப்பாற் பட்டவர். எல்லைக்கப்பாற்பட்டவராய் இருப்பதால், அது அவரை சர்வ ஞானியாக்குகிறது. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? சர்வ ஞானி யென்றால் அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதாகும். எல்லைக்கப்பாற்பட்டவராக இல்லாமல் அவர் சர்வஞானியாக இருக்க முடியாது. அவர் அறிந்திருப்பதேயல்லாமல் வேறெதுவும் இருந்ததில்லை. பூமியின் மீது இருக்கும் ஒவ்வொரு கொசுவையும் அவர் அறிந்திருந்தார். ஒவ்வொரு கொசுவும் எத்தனை முறை தன் கண்ணை சிமிட்டும் என்றும், ஒவ்வொன்றிலும் எவ்வளவு கொழுப்பு இருக்கும் என்றும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்ந்தால் எவ்வளவாய் இருக்கும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். நீங்கள் சுவாசிக்கும் ஒவ்வொரு சுவாசத்தையும், உங்கள் நுரையீரலில் அது எவ்வளவு ஆழமாகச் செல்லும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதுதான் வரம்பிற்கப்பாற்பட்டவர் என்பதாகும். அவர் வரம்பிற்கப் பாற்பட்டவராக இருப்பது அவரை சர்வ ஞானியாக்குகிறது. அது சரியா? அவர் சர்வஞானியென்றால் அது அவரை சர்வ வியாபியாக்குகிறது. ஏனென்றால் அவர் நிமிஷத்தையும், மணியையும், நேரத்தையும் ஒரு வினாடியில் 55,000த்தில் ஒரு பாக அளவிற்கும் சரியாக அறிந்து, அது எப்பொழுது நடக்கும் என்பதையும் அறிவார். அறிவீர்களா? இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? அப்படியென்றால் எல்லாவற்றையும் அறிவார். ஆகவேதான் அவர் சர்வ வல்லமை உள்ளவராக இருக்கிறார். எல்லாவற் றையும் அறிந்திருக்கிறார், எல்லாவற்றையும் செய்கிறவராய் இருக்கிறார். இப்பொழுது கவனியுங்கள். தேவனால் முன் குறிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ... இயேசு எப்பொழுது - வேதம் கூறுகிறது. இயேசு கி.பி. 30ல் அடிக்கப்பட்டார் என்பதை நாம் அறிவோம். அது சரியா? கி.பி. 30ம் ஆண்டின் மத்தியிலே என்று நினைக்கிறேன். ஆனால் அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னால் அடிக்கப்பட்டார் என்று வேதம் கூறுகிறது. உங்களுடைய பெயர்கள் ... ஆட்டுக்குட்டியின் புத்தகத்தின் போது.... இந்த புத்தகத்தை மீட்டுக்கொள்ள ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது.... (இங்கே ஒரு மகத்தான காரியம் இருக்கிறது. அது உற்சாகத்தை எழுப்பக்கூடும்) கவனியுங்கள்! ஆட்டுக்குட்டியானவர்.... ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகம் உலகத்தோற்றத்திற்கு முன்பாக எழுதப்பட்டது என்று வேதம் கூறுகிறது என்பதை நினைவு கூறுங்கள். அந்தப் புத்தகத்தில் பேரெழுதப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும், மீட்கப்படு வதற்காக உலகத் தோற்றத்திற்கு முன்பாக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, உங்களுடைய பெயரும் அதில் எழுதப்பட்டது. நீங்கள் அதை இப்பொழுது புரிந்துகொண்டீர்களா? ஒழுங்கில்லாமல் எதுவுமில்லை. கடிகாரம் சுற்றிக் கொண்டிருப்பது போல் - தேவனுடைய பெரிய கடிகாரம் வேலை செய்வது போல இது இயங்கிக் கொண்டிருக்கிறது. உலகத் தோற்றத்திற்கு முன்பாக உங்களுடைய பெயர் அங்கு எழுதப்பட்டது, அந்தப் புத்தகத்தில் உள்ளவர்களை மீட்பதற்காக ஆட்டுக்குட்டியானவர் அடிக்கப்பட்டபோது, இப்பொழுது, அவர் தாம் மீட்டவர்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வருகிறார். (இப்பொழுது நான் இன்னும் தொடர்ந்து போகவிரும்ப வில்லை, இன்றைக்கு இன்னொரு கேள்விக்கு விடையளிக்க முடியாமல் போய்விடும்), எல்லாம் சரி. 14. (a) நரகமும், அக்கினியும் கந்தகமும் எரியும் கடலும் ஒன்றா? இல்லை, வேதாகமத்தில் நரகத்திற்கு என்ன மொழிபெயர்த் திருக்கிறார்களோ, நான் அதை விசுவாசிக்கிறேன்... இப்பொழுது இங்கே பண்டிதர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களை கனப்படுத்த விரும்புகிறேன். சகோதரன் ஐவர்சன் இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார், சகோதரன் வேயில் மற்றும் உண்மையான வேதபண்டிதர்களாகிய சகோதரர்கள் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். நரகம் தான் பாதாளம் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதுதான் பாதாளத்திற்குறிய கிரேக்க பதமாகும். ஆனால் அக்கினிக்கடல் என்பது வேறொன்றாகும். ஏனென்றால் வெளிப்படுத்தின விசேஷத்தில் நரகமும் மற்றெல்லாமும் அக்கினிக் கடலில் தள்ளப்பட்டன என்று பார்க்கிறோம். எல்லாம் சரி. இப்பொழுது கவனிப்போம். 14. (b) .... இல்லையென்றால் அக்கினிக்கடலாகிய நரகம் நித்திய மானதா? இல்லை, ஐயா, இல்லை ஐயா, சிருஷ்டிக்கப்பட்டதொன்றும் நித்தியமான தல்ல, இல்லை, சிருஷ்டிக்கப்பட்டதெல்லாம்.... ஆகவே தான் நித்திய நரகம் என்பது ஒன்று இருக்க முடியாது. நீங்கள் ஒரு நித்திய நரகத்தில் வேகப்போகிறீர்கள் என்று யாராகிலும் சொன்னால், எனக்கு அதற்குரிய வேதவாக்கியத்தைக் காட்டுங்கள். அவ்விதமான காரியம் ஒன்றுமில்லை. நரகமானது, பிசாசுக்கும் அவனது தூதர்களுக்கும், அந்திக்கிறிஸ்து வுக்கும் அவனது மக்களுக்கும் சிருஷ்டிக்கப்பட்டது. அது தான் மாமிச சரீரத்தில் தோன்றும் பிசாசு. அவனை அழிப்பதற்கென்றே அது சிருஷ்டிக்கப்பட்டது. முழு உலகத்திலும், எல்லா இடங்களிலும் ஒன்றே ஒன்றுதான் நித்தியமானதாக இருக்கிறது, அதுதான் தேவன். ஒரு அணுவோ, அல்லது எலக்ட்ரானோ, அல்லது காஸ்மிக் ஓளியோ (Cosmic Light), அல்லது மற்றெதுவோ உண்டாவதற்கு முன்னமே அவர் தேவனாக இருந்தார். அவர் சிருஷ்டிகர்த்தர். அவ்விதமாக இருப்பதுதான் நித்தியமாக இருக்க முடியும். அதற்குதான் ‘சோ’ (Zoe) என்னும் கிரேக்க வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ‘சோ’ - அது சரியில்லையா? கல்யாண வாக்குப்படி, உன்னுடைய தகப்பனார் உன்னுடைய தாயின் மூலம் தன்னுடைய ஜீவனை உனக்குள் அளித்திருப்பதுபோல தேவன் அந்த ஜீவனை உனக்களிக் கிறார் - அவன் அவ்விதம் தன் ஜீவனை ஒரு குமாரனுக்காக அளிக்கும் போது மகிழ்ச்சியுறுகிறான்.... (என்னைப் புரிந்து கொண்டீர்களா?).... அவ்விதமாகவே தேவன் தம்முடைய ஜீவனை ஒரு குமாரனுக்கு அளிக்கும்போது மகிழ்ச்சியுறுகிறார். அப்பொழுது நீ சோ’ என்னும் தேவனுடைய சொந்த ஜீவனைப்பெற்று, அவருக்குள் ஒரு பாகமாக மாறிவிடுகிறாய். நான் அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். கடைசி நாட்களில் அவர்களை எழுப்புவேன். இந்த ஒரே விதமாகத்தான் நீங்கள் நித்திய ஜீவனை பெற்றிருக்கிறீர்கள், அந்த நித்திய ஜீவன் வெளிப்படுவதற்கு, தான் எந்த சரீரத்திற்குள் வரவேண்டும் என்பதை அறிந்திருக்கிறது..... அது வெறுமையாக அங்கு கிடக்க முடியாது. கிறிஸ்துவின் ஆவி அந்த சரீரத்தின்மீது அசைவாடிக் கொண்டிருந்த போது (அந்த மகத்தான நாளிலே தேவனுடைய ஆவிகிறிஸ்துவின் மீது), அந்த சரீரம் மறுபடியும் எழுந்திருக்கும் என்பதை அது அறிந்திருந்தது - அதேபோலதான் பரிசுத்தவான்கள் தங்கள் சரீரத்தில். இயேசு மரித்தபோது, அவர் நரகத்திற்கு செல்லவேண்டியதாக இருந்ததால், அவர் அங்கு சென்றார். இதை நினைவுகூருங்கள். அங்கே பாலமென்னும் ஒரு தடுப்பு சுவர் இருந்தது. நோவாவின் காலத்தில் மனந்திருப்பாமலிருந்த ஆத்துமாக்களுக்கு பிரசங்கிப்பதற்காக அவர் நரகத்திற்குச் சென்றார். அது சரிதானா? அவர் நரகத்திற்குச் சென்று, தேவனிடத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டிருந்த ஆத்துமாக் களுக்கு பிரசங்கித்தார். மரணம் என்பது பிரிவினையாகும். அவர்கள் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தார்கள் - மீண்டும் திரும்ப போகமுடியாது. ஸ்திரீயின் வித்து என்று கூறப்பட்டவர் தான் அவர் என்று சாட்சி பகர இயேசு அங்கு சென்றார். சர்ப்பத்தின் வித்து ..... சர்ப்பத்தின் வித்து என்ன செய்தது என்பதை கவனித்தீர்களா? சிவப்புக் குதிரை. அந்திக்கிறிஸ்து பிரிவினையாகிய மரணத்தோடு முடிவடைகிறான். ஸ்திரீயின் வித்து ஜீவனானது வெண்மையான குதிரையுடன் முடிவடைகிறது - இயேசு கிறிஸ்து, அது என்னவென்பதை புரிந்து கொண்டீர்களா? - ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர் - ஸ்திரீயின் வித்துக்கு விரோதமாக சர்ப்பத்தின் வித்து, இப்பொழுது அறிந்து கொண்டீர்களா? ஓ, இதைக் குறித்து இன்னும் சற்று சிந்தித்தால் (அது நன்றாக இருக்குமல்லவா?). ஆனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம். 15. சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையில், முதலாம் குதிரையின்மீது ஏறியிருந்தவன் 2 தெசலோனிக்கேயரில் (2ம் அதிகாரம்) உரைக்கப்பட்டுள்ளபடி, பாவமனுஷனின் வெளிப்பாட்டின் நிறை வேறுதலா? ஆம், அது சரி. அதன் நிறைவேறுதல்தான். அது பாவமனுஷன்தான். இதே மனிதன்தான் மரணம் என்னும் மங்கின நிறமுடைய குதிரையின்மீது ஏறுகிறவரைக்கும் பல கட்டங்களில் குதிரையின்மீது ஏறியிருக்கிறவனாய் காணப்படுகிறான். கிறிஸ்துவோ நீதிமானாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப் படுதல் என்பவைகளோடு வெள்ளைக் குதிரையின்மீது ஏறினவராய், ஜீவனைப் பெறுவதற்கு வருகிறார். பாருங்கள். 16. கிறிஸ்துவின் மணவாட்டியில் இல்லாமல் பலவித ஸ்தாபனங் களிலிருக்கும் மறுபடியும் பிறந்த விசுவாசிகளுக்கு என்ன நேரிடும்? அவர்களுக்கு என்ன நேரிடும்? நல்லது, சந்று நேரத்திற்கு முன்பாக அதை விவரித்தோம் என்று நினைக்கிறேன். அவர்கள் உபத்திரவத்திற்குள் பிரவேசிக்கிறார்கள். அவர்கள் உபத்திரவ காலத்தில் இரத்தசாட்சிகளாக மரிக்கிறார்கள். அவர்கள் கடைசியில், ஆயிரம் வருஷ அரசாட்சிக்குப் பின், தங்களுடைய நியாயத் தீர்ப்புக்காக வருகிறார்கள். (பாருங்கள்?) ஏனெனில் வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. உயிருடன் இருப்பவர்களில் மீதியாக இருப்பவர்கள்.... மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடிவடையும் வரைக்கும் உயிரடையவில்லை. அதற்குப் பிறகு நீதிமான்களும், அநீதியுள்ளவர்களும் வந்து கிறிஸ்துவினாலும் மணவாட்டியினாலும் நியாயம் விசாரிக்கப்படுவார்கள். அவர் பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமான தமது பரிசுத்தவான்களோடு பூமிக்கு வந்தார். அது சரிதானா? - அவருடைய மணவாட்டி. நியாயசங்கம் உட்கார்ந்து, புஸ்தகங்கள் திறக்கப்பட்டன.... புஸ்தகங்கள் திறக்கப்பட்டன. ஜீவ புஸ்தகமாகிய மற்றொரு புஸ்தகம் திறக்கப்பட்டது. அவர் அங்கு செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பிரித்தெடுக்கிறார். அது சரிதானா? அதற்கும் மணவாட்டிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவள் அங்கு நியாயத்தீர்ப்பில் நிற்கிறாள், தன்னுடைய ....... ராணியும் ராஜாவுமாக ஒன்றாக இருக்கிறார்கள். அவர் தம்முடைய பரிசுத்தவான்களோடு வந்தார், பத்தாயிரம் மடங்கு பத்தாயிரமானவர்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள் - அவருடைய மனைவி, பிறகு நியாய சங்கம் உட்கார்ந்து, அதற்குப் பிறகு செம்மறியாடுகள் வெள்ளாடுகளிலிருந்து பிரிந்தெடுக்கப்பட்டன. (அன்றிரவு நான் கொண்டு வந்த அந்த சிறு தியானத்தை நினைவு கூருங்கள். அப்போது உங்களுக்கு விளங்கும், மாட்டிடையனைப் பற்றிய தியானம் பாருங்கள்? அதோ நீங்கள் புரிந்து கொண்டீர்கள்). சபை, ஸ்தாபனத்திலிருக்கும் மக்கள், சுத்தமான கிறிஸ்துவர்கள், செய்தியைப் பெற்றுக் கொண்டார்கள்..... அவர்கள் ஒருபோதும் அதைப் பார்க்க மாட்டார்கள். அது ஒரு போதும் அவர்களுக்குப் போதிக்கப்பட மாட்டாது. பலதிறந்ததாரும் கலந்திருக்கும் கூட்டத்திலிருப்பவர்கள் (இச்செய்தி பிரசங்கிக்கப்படுபவர்கள்) அவர்கள் பேரானது ஆட்டுக் குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தாலொழிய, மற்றபடி இச்செய்தியானது அவர்கள் தலையின் மேலாகக் கடந்து செல்லும். ஆனால் அவர்கள் அருமையான மக்கள், அவர்கள் மறுபடியும் எழுப்பப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குப் பிரசங்கித்த அதே கூட்டத்தாரால் அவர்கள் நியாயத் தீர்க்கப்படுவார்கள். பரிசுத்தவான்கள் பூமியை - நியாயத் தீர்ப்பார்களென்று அறியாதிருக்கிறீர்களா? அவர்களுக்குப் பிரசங்கிக்கப்படும், பாருங்கள்? அதிலிருந்து (கலப்பட மான கூட்டத்திலிருந்து, ஸ்தாபனங்களிலிருந்து - தமிழாக்கியோன்) வெளியே வரும்படியாக செய்தியைக் குறித்து சாட்சி பகர்ந்த அதே மக்களால் பிரசங்கிக்கப்படுவார்கள். அது விளக்கப்பட்டுவிட்டதென்று நான் நினைக்கிறேன். என்னிடம் இங்கே அனேக கேள்விகளிருக்கின்றன. 17. சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் ஆவியைப் பெற்ற ஏழாம் தூதனும், எடுக்கப்படுதலுக்குப் பிறகு உள்ள மூன்றரை வருடங்களில் 144000 யூதர்களிடத்திற்கு அனுப்பப்படும் எலியாவும் ஒரே மனிதன் தானா? எங்களில் சிலர் இதைக் குறித்து குழப்பத்தில் இருக்கிறோம். இல்லை, இவர் அவர் அல்ல. இருவரும் வெவ்வேறான மனிதர்கள். எலியாவைப் போன்ற தோற்றத்தில் வரும் எலிசா எலியாவல்ல. யோவான் ஸ்நானன் என்று அழைக்கப்பட்ட மனிதன் மீது வந்த எலியாவின் ஆவி எலியாவல்ல. லவோதிக்கேயா சபையின் கடைசிக் காலத்தில் தோன்றும் செய்தியாளனாகிய ஏழாம் தூதனாகிய மனிதன் உண்மையான எலியா அல்ல. அவர் தன்னுடைய ஜனங்களாகிய புறஜாதியாரிடத்தில் அனுப்பப்படும் ஒரு புறஜாதி மனிதனாயிருப்பார். எலியா..... எலியாவின் ஆவி மக்களுக்குள் அங்கு வரும்பொழுது அவன் ஒரு யூதனாயிருப்பான். ஏனெனில் அவர்கள் (தீர்க்கதரிசிகள் - தமிழாக்கியோன்) தங்கள் சொந்த ஜனத்தினிடத்திற்கு அனுப்பப் படுகிறார்கள். அதுதூன் எனக்குக் கிடைத்த வெளிப்பாடு. ஏனென்றால் நானும்.... டாமி ஆஸ்பர்ன் அவர்களும், நாங்கள் அதைப்பற்றி அப்போது பேசியபொழுது (டாமியும் நானும்) நான் அதை ஒரு போதும் அறியவில்லை. நான் வியாதியஸ்தருக்காக ஜெபித்துக் கொண்டு மட்டும் இருந்தேன். நான் அங்கு வந்தபொழுது, ஃபோர்ட் வெயின் சுவிசேஷ கூடாரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி. அயல் நிலங்களில் பணிபுரியும் ஒரு சுவிசேஷகர், வந்திருந்தார்கள். அவர் களுடைய மார்பகங்கள் இவ்வளவு பெரிதாக இருந்தன - புற்றுநோயால் அரிக்கப்பட்டு விட்டிருந்தது, அவர்கள் அந்தத் தெருவிலுள்ள நாங்கள் வசிக்கும் எங்கள் வீட்டில் இருந்தார்கள். நான் அந்த அருமையான சகோதரிக்காக ஜெபித்தேன். அவர்கள் சுகமாக்கப்பட்டு ஊழியத்திற்குத் திரும்பினார்கள். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தபோது - அங்கு பணிபுரியும் கிறிஸ்தவ சுவிசேஷ குழுக்களைப் பற்றி ஒரு புத்தகத்தை விட்டுப் போயிருந்தார்கள். நானும், ‘நல்லது, சுவிசேஷகர்கள் அருமையானவர்கள்’ என்று எண்ணினேன். நான் சுவிசேஷகர்களைக் குறித்து ஒருபோதும் அதிகமாய் சிந்தித்ததில்லை. ‘நல்லது அந்த வெளியிடங்களிலே தேவனுடைய ஒரு காரியாலமாகும். அது போல இங்கு பென் தெருவில் எட்டாம் நம்பர் இடம் என்னுடைய ஸ்தானமாயிருக்கிறது என்று எண்ணினவனாய் என்னால் முடிந்தவரை சிறப்பாக ஊழியம் செய்து வந்தேன். ஆனால் ஒரு நாள் என்னுடைய படிக்கும் அறையில் நான் உட்கார்ந்து கொண்டு நான் அந்தப் புத்தகத்தை எடுத்தேன். அதில் நீக்ரோ வகுப்பினரின் படம் ஒன்று இருந்தது. ஒரு வயது முதிர்ந்த தந்தை தலையில் நரைத்த முடியுடன் அதில் காட்சியளித்தார். அந்தப் படத்தின் கீழ் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது! ‘வெள்ளை மனிதனே, வெள்ளை மனிதனே, உன்னுடைய தந்தை எங்கேயிருந்தார்? நான் இப்போது வயோதிபனும் சிந்தை மழுங்கினவனுமாயிருக்கிறேன். என்னால் இப்போது சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. நான் வாலிபனாயிருந்தபோது இயேசுவை அறிந்திருப்பேனானால் நான் அவரை என் ஜனங்களிடத்திற்குக் கொண்டு சென்றிருப்பேன்’ ஆக, நான் அதைப் படித்தேன். ‘திரும்பவும் அதைப்படி, திரும்பவும் அதைப்படி’ என்று ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டேயிருந்தது. நான் படித்துக் கொண்டிருந்தேன்.... உங்களுக்கும் அந்த அனுபவம் வந்திருக்கும் - படித்ததையே திரும்பவும் திரும்பவும் படிப்பது, அதில் ஏதோ ஒன்றிருக்கிறது. நான் அன்று க்ரீன் மில் என்னும் உயரமான இடத்தில், அந்தக் குகையை விட்டு வெளியே வந்தபோது, மக்கள் எப்படி அன்னிய பாஷை பேசியும், உண்மையான பரிசுத்த ஆவியைப் பெற்று ஆர்ப்பரித்தும்கூட அந்திக் கிறிஸ்துவாகயிருக்க முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை - உண்மையான பரிசுத்த ஆவியைக் கொண்டு அன்னிய பாஷைகள் பேசி, பல பாஷைகளைப் பேசினாலும்கூட இன்னும் சாத்தானாயிருக்கிறார்கள். ஆம், அது சரிதான்! நான் அதை உங்களுக்கு நிரூபித்துக் காட்ட முடியும். ஆம், நிச்சயமாக! அவர்கள் அதைச் செய்தபோது கவனித்துப் பாருங்கள். ஆகவே அன்னிய பாஷைகள் பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கும் அத்தாட்சியல்ல, அது பரிசுத்த ஆவியின் வரங்களில் ஒன்றாகும். அவருடைய வரங்களில் ஒவ்வொன்றையும் பிசாசானவன் போலியாக செய்து காண்பிக்கக்கூடும் - தெய்வீக சுகமளித்தல் மற்றும் ஒவ்வொரு வரத்தையும், ‘அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, ‘கர்த்தாவே, பிசாசுகளைத் துரத்தினேன் அல்லவா, நான் செய்தேனல்லவா....’ (அது சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதாகும்....) ‘..... உம்முடைய நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோமல்லவா, இந்த எல்லாக் காரியங்களையும் நான் சொல்லுவேன், ‘என்னைவிட்டு அகன்று போங்கள். அக்கிரம செய்கைக்காரர்களே, நான் உங்களை அறியவும் இல்லை’ என்று கூறினார். ஒரே மழையானது நீதிமான்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் விழுவதாக வேதாகமம் கூறுகிறது. கோதுமை நிலத்தில் வளர்ந்திருக்கும் களையும் அதே மழையைப் பெறுவதனால், அந்த ஒரே மழையினால் சந்தோஷத்தைப் பெற்றுக் கூச்சலிடக் கூடும், ஆனால் அவர்களுடைய கனிகளினால் அவர்களை அறிவீர்கள்! அச்சிறு களையானது, கோதுமை பெருமளவிற்கு அதே மழையைப் பெற்று, நின்று குதூகலித்து, கூச்சலிடக்கூடும். அங்கே தான் புரிந்து கொள்கிறோம். ஆகவே அவர்கள் கூச்சலிடக் கூடும். அன்னிய பாஷைகளில் பேசக்கூடும். அவர்கள் விரும்பும் ஒவ்வொன்றையும் போலியாக செய்து காட்டக்கூடும், ஆனால் அந்த நாளிலே, ‘அக்கிரமச் செய்கைக்காரர்களே’ என்று அழைக்கப்படுவார்கள். நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னது போல, நான் சொல்வதற்கு செவி சாயுங்கள், கூர்ந்து கவனியுங்கள்! உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்து வார்த்தையோடு உங்களையே சோதித்துப் பாருங்கள். நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். குட்டையான முடியை உடைய பெண்களே, அதை வளர விடுங்கள். நீங்கள் அரைக்கால் சட்டை அணிந்திருப்பீர்களானால், அவைகளை களைத்து விடுங்கள். ஒரு பெண்மணியைப் போல நடவுங்கள். ஆண்களாகிய நீங்கள் இன்னமும் சிகரெட் புகைத்துக் கொண்டும், கேளிக்கைகளில் ஈடுபடுவீர்களானால், அதை நிறுத்துங்கள்! நீங்கள் அதைக் குறித்து எவ்வளவு பேசுகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு கவலையில்லை. நீங்கள் இன்னமும் அந்தச் சங்கங்களைப் பிடித்துக் கொண்டு, ‘இதுதான் அது’ என்றும் ‘அது தான் இது’ என்றும் கூறிக் கொண்டிருப்பீர்களானால் நீங்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. திரும்பிப் பார்த்து வார்த்தையோடு பரிசோதித்துப் பாருங்கள். நாம் கடந்து போகிறோம் ...... குட்டையான முடி, இந்தக் காலத்திற்குரிய மற்ற எல்லாக் காரியங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் ஜீவிக்க வேண்டும். நாம் இப்போது வேறு எதற்குள்ளாகவோ வந்து விட்டபடியால் தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்பாக அந்தப் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த இரகசியங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தச் சிறிய காரியங்களில் கீழ்படிகிறவர்களே இந்த மற்ற காரியங்களையும் பிடித்துக் கொள்வார்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையென்றால், கிழக்கும் மேற்கும் இருக்கிற தூரமாக அது உங்கள் தலையின் மேலாக கடந்து போகும். அது அப்படியே.... கிதியோன் தன் மனிதர்களைப் பிரித்தது போல - ஆயிரமாயிரமானவர் அங்கே இருந்தனர். ‘அதுமிகவும் அதிகம் அவர்களை மறுபடியும் பிரித்தெடு’ என்று தேவன் கூறினார். அவர்களுக்கு மற்றொரு சோதனையைத் தந்து, அவர்களை மறுபடியுமாகப் பிரித்தெடுத்தார் - அவர்களை மறுபடியுமாகப் பிரித்தெடுத்து, கடைசியாக அவனிடம் கையளவே உள்ள ஆட்கள் இருக்கும் வரை பிரித்தெடுத்தார். ‘இந்த வேலையைச் செய்ய நான் விரும்பும் கூட்டம் அது தான்’ என்றார். உண்மையில் நடந்தது அதுதான். பெந்தேகோஸ்தே ஸ்திரீகள், முன்னும் பின்னுமாக போவது, அங்கே உட்கார்வது, கேட்பது. ஆனால் வார்த்தையின் மூலம் அது தவறு என்று அறிந்திருப்பது. அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை ஐயா! ஒவ்வொரு வருடம் நான் கடந்து செல்லும்போதும், நான் இதைக்குறித்து போதிக்க ஆரம்பித்தபோது இருந்தைக் காட்டிலும் அதிகமான பெண்கள் தங்கள் முடிகளைக் குட்டையாக வெட்டிக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ‘அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் .... நீங்கள்....’ என்கிறார்கள். யாரோ ஒருவர் சொன்னார். ‘நல்லது, சகோதரன் பிரான்ஹாமே, மக்கள் உங்களை ஒரு தீர்க்கதரிசியாக கருதுகின்றனர்’ என்று, நான் ஒரு தீர்க்கதரிசி என்று நான் கூறுகிறதில்லை. நான் அவ்விதம் கூறுவதை நீங்கள் யாரும் கேட்டிருக்கமாட்டீர்கள். அவ்விதம் நீங்கள் கேட்டிருப்பீர்களானால், அவ்விதம் கருதுவீர்களானால்..... ‘நீங்கள் ஏன் பரிசுத்த ஆவியை எவ்விதம் பெற்றுக் கொள்வது என்று மக்களுக்கும் போதிக்கக் கூடாது? இதை எவ்விதம் பெறுவது, பரிசுத்த ஆவியின் வரங்களை எவ்விதம் பெறுவது போன்ற காரியங்களைப் போதித்து சபைக்குள் ஏன் உதவக்கூடாது?’ என்று கூறினார்கள். அவர்கள் தங்கள் ஏ, பி, சி (A B C) களை கற்றுக் கொள்ளக்கூட தங்கள் செவியை சாய்க்காதிருக்கும்போது, நான் எவ்விதம் அவர்களுக்கு அல்ஜீப்ரா (Algebra) கற்றுத்தர முடியும்? அது சரிதான். நீங்கள் இந்த சிறிய காரியங்களைச் செய்யுங்கள். இங்கே கீழே இறங்கி வந்து, சுத்தி செய்து கொண்டு, சரியாக துவங்குங்கள். ஆமென். மகிமை! நான் எதைக்குறித்து பேசிக் கொண்டிருந்தேன்? நான் பேசிக் கொண்டிருந்த பொருளைவிட்டு விலகிச் செல்ல நினைக்கவில்லை, என்னை மன்னியுங்கள், பார்த்தீர்களா? நல்லது ‘எங்களில் சிலர் குழப்பமடைந்திருக்கிறார்கள். எலியா ஒரே ஆள்தானா...?’ என்ற கேள்வி தான். இல்லை புறஜாதிகளுக்கு வரும் இந்த எலியா அந்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்ட புறஜாதி மனிதனாயிருப்பார். ஏனென்றால் ஒவ்வொரு முறையும் குழப்பத்திலிருந்து தம்பிள்ளைகளை வெளியே கொண்டுவர தேவன் அதே ஆவியை உபயோகிக்கிறார். அது அவருடைய நோக்கத்தை நன்றாக நிறைவேற்றுகிறது. ஆகவே அந்த ஆவி மறுபடியும் கீழிறங்கி வந்திருக்கிறது. ஏனென்றால், பாருங்கள்.... அதிக மெருகேற்றப்பெற்ற, கல்வியறிவு பெற்றவர்களை அவர் உபயோகிக்கக் கூடுமானால் - அத்தகைய இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் அதைப் பிடித்துக்கொள்வார். தன்னுடைய அச்சரங்களை (A B C)க் கூட சரியாக அறிந்திராத, தன்னுடைய வார்த்தைகளை சரியாக உச்சரிக்கத் தெரியாத, அப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் கொண்டு வருகிறார். வனாந்தரங்களிலிருந்து யாராவது ஒருவரை எங்காவது கொண்டுவந்து எளிய சிந்தை உள்ள மக்களிடம் அனுப்பி அவர்களுக்கு புரிய வைத்து, அவர்களை எடுத்துக் கொள்கிறார். (சகோதரர் பிரான்ஹாம் தன் விரலைச் சொடுக்குகிறார் - பதிப்பாசிரியர்) அவ்விதமாக. அது மெருகேற்றப்பட்டதாக வருமானால்.... பவுல் கூறியதுபோல, ‘நான் கல்வியின் மெருகோடு உங்களிடம் வரவில்லை, நான் உயிர்த்தெழுதலின் வல்லமையில் உங்களிடம் வருகிறேன்’ என்றார். அவருடைய கல்வியை அவரிடமிருந்து எடுத்துப் போட, அரேபியாவில் தேவன் மூன்றரை வருடம் எடுத்துக் கொண்டார். மோசேயிடமிருந்து அதை எடுத்துப்போட 40 வருடம் எடுத்துக் கொண்டார். பாருங்கள்? ஆகவே அது தான் விஷயம். கல்வியறிவு இல்லாமையை நான் ஆதரிக்கவில்லை. கல்வியறிவு தேவையில்லை என்பதை உங்களுக்குக் கூற முயற்சிக்கிறேன். இந்த உலகத்தின் ஞானம் மாறுபட்டதாயிருக்கிறது. சுவிசேஷம் பரவுவதற்கு கல்வியானது மிகப்பெரிய தடையாக இருந்திருக்கிறது. கல்வி அறிவு இல்லாமலிருந்தால், இந்தப் பெரிய வேத பாடசாலைகள் முதலியவைகள் இல்லாமலிருப்போம். மக்கள் எளிய மனதுள்ளவர்களாக தேவனுடைய வார்த்தைக்குச் செவி கொடுப்பார்கள், ஆனால் அவர்களோ அவ்வளவாக மெருகேற்றப்பட்டவர்களாக குழப்பப்பட்டு, அங்குள்ள எல்லாவித ஸ்தாபனங்களோடும் இறுக இணைக்கப்பட்டவர்களாய் அங்கேயே தங்கிவிடப் போகிறார்கள். அவ்வளவுதான் அவர்கள் அந்த ஆவியை பெற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்போதாவது ஒரு நல்ல ஸ்திரீயை மிகவும் கீழ்த்தரமான மனிதனுக்கு மணம் முடித்திருக்கிறீர்களா? ஒன்று அந்த கீழ்த்தரமான மனிதன் அந்த ஸ்திரீயைப்போல நல்லவனாவான். அல்லது, அந்த ஸ்திரீ அவனைப்போல கீழ்த்தரமானவளாவாள். பாருங்கள்? அது சரிதான். ‘அவர்களை விட்டு வெளியே வாருங்கள். நான் எடுத்துக் கொள்ளப் படுதலை நிகழ்த்த ஆயத்தமாகிறேன்’ என்று அவர் சொன்னதற்கு அதுதான் காரணம். உங்களை இங்கிருந்து வெளியே கொண்டு போய்விடத்தக்கதான விசுவாசம் உங்களுக்கிருக்க வேண்டும். 18. தானியேல் 9.27ல் உள்ள உடன்படிக்கை எப்போது ஒரு வாரத்திற்கு உறுதிப்படுத்தப்பட்டது? இயேசு கிறிஸ்து பூமியின் மீது யூதர்களுக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, உடன்படிக்கையில் பாதி வாரம் உறுதிப்படுத்தப் பட்டது. அவர் புறஜாதி மக்களிடம் செல்லவே இல்லை. அவர் தம்முடைய சீஷர்களுக்கு, ‘புறஜாதியாரிடத்திற்குச் செல்ல வேண்டாம்’ என்று கூறினார். அது யூதர்களுக்கு மாத்திரமே. அவர் மூன்றரை ஆண்டுகள் - அதாவது எழுபது வாரங்களின் பாதி, அவர் செய்வார் என்று தானியேல் கூறினதுபோல். அவர் யூதர்களுக்கு உறுதியாக உறுதிப்படுத்தப்பட்டார் என்பதை நினைவு கூருங்கள். இந்த புறஜாதியாரின் காலத்தை இதில் நுழைக்க அவர்களுடைய கண்கள் குருடாக்கப்பட்டிருந்தது. அந்த முழு திட்டத்தையும் உங்களால் காணமுடியவில்லையா? கவனியுங்கள். அவர் தம்மை ஒரு தீர்க்கதரிசியாக நிரூபித்தார். தீர்க்கதரிசி என்ன செய்வாரோ அதை அவர் செய்தார், தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் காண்பித்தார். ‘ஒருவன் தன்னை ஒரு ஞானதிருஷ்டிக்காரன் என்றோ அல்லது ஒரு தீர்க்கதரிசி என்றோ சொல்லிக்கொள்வான் என்றால், அவன் சொல்லுவதைக் கவனித்துப் பாருங்கள், அவன் கூறியவைகள் நிறை வேறும்போது, (அவன் கூறியது தொடர்ந்து நடந்து கொண்டே வரும் என்றால்.....)’, என்று உங்கள் சொந்த வேத வாக்கியமே கூறியவைகள். ‘தட்டுங்கள், அப்பொழுது திறக்கப்படும், தேடுங்கள்..... கண்டடைவீர்கள், கேளுங்கள் ..... கொடுக்கப்படும்’ என்று வேதம் கூறுவதை நீங்கள் காண்பதுபோல்.... தட்டுங்கள் என்று சொல்லும் போது, தொடர்ச்சியாகத் தட்டுங்கள் என்பதை கவனியுங்கள். (இதை உதாரணமாக காட்டுவதற்கு, சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மீது தொடர்ச்சியாகத் தட்டுகிறார் - ஆசிரியர்). நீதிமன்றத்தில் இருப்பதுபோல அங்கே உறுதியாய் இருங்கள். ‘நான் உன் பக்கமாக இருக்கிறேன்’ என்று கூறிக்கொண்டு அவன் கதவை தட்டிக்கொண்டே இருந்தாலும் ஒரு நீதிபதி பதிலுரைக்க மாட்டான். ‘கர்த்தாவே, நான் இதைப் பெற விரும்புகிறேன். ஆமென்,’ என்று அவரைத் தேடிக் கூறுவீர்களென்றால், அது மாத்திரம் போதாது, நீங்கள் அதை பெறும்வரைக்கும் அங்கே உறுதியாய் தரித்து நில்லுங்கள். (ஒலி நாடாவின் இரண்டாவது பக்கம்).... இங்கே மூன்றரை ஆண்டுகள் மறுபடியும் தீர்க்கதரிசிகளால் உறுதிப்படுத்தப்பட கொடுக்கப்படும் - புரிந்து கொண்டீர்களா? மோசேயும் எலியாவும் - வெளிப்படுத்தல் 11. இப்பொழுது, இது என்ன என்பதை நாம் பார்க்கட்டும். 19. நீங்கள் அவருடைய தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவராகயிருப்பீர்களானால், மணவாட்டி எடுத்துக் கொள்ளப்படும் போது அதில் போவீர்களா? ஆம். ஆம், ஐயா, அது சுலபமானதாயிருக்கிறது. 20. சகோதரன் பிரான்ஹாமே, பாகாலுக்குத் தங்கள் முழங்கால்களை முடக்காதவர்கள் ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தீர்களா? அல்லது எழுநூறா? ஏழாயிரம் என்று சொல்ல நினைத்தேன். அதற்காக என்னை மன்னியுங்கள், பாருங்கள். அது ஒரு பேசும் தோரணையாயிருந்ததது. நான் சற்று நேரத்திற்கு முன்பு சொன்னதுபோல.... நான் இங்கு நின்றதைக் கவனித்தீர்களா? ‘ஆட்டுக்குட்டியானவரைக் கண்டதற்கு அவர்கள் சாட்சி கொடுக்கிறார்கள்’ என்று கூறினேன். பார்த்தீர்களா? ஆட்டுக் குட்டியானவர் பூமியில் இருந்தார் தேவனுடைய ஆவியானவர் ஆட்டுக் குட்டியானவர் மீது வந்ததைக் கண்டதற்குச் சாட்சி கொடுக்கிறார்கள். இப்போது, ‘இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்’ என்று கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்த்தீர்களா? அது சரியான கிரேக்க பாஷையின் முறைப்படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் கவனிப்பீர்களானால், அது இவ்விதமாக இருக்கும்.... இப்போது வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள்.... பரிசுத்த யாக்கோபின் மொழி பெயர்பபில் ‘நான் வாசம் பண்ணப்பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்’ என்பதாக வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், நாம் இன்று சொல்வது போல சொல்வோமென்றால், ‘நான் உள்ளே வாசம் பண்ணப்பிரியமாயிருக்கும் என்னுடைய நேசக் குமாரன் இவர்’ என்று கூறுவோம் - அதைத் திருப்பிவிடுவோம், பாருங்கள். ‘நான் வாசம் பண்ணப்பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்’. இப்போது, இன்றைக்கு நாம், ‘நான் உள்ளே வாசம்பண்ணப் பிரியமாயிருக்கும் என்னுடைய நேசகுமாரன் இவர்’ என்று கூறுவோம் - அதே வார்த்தை வித்தியாசமாய் பொருத்தப்பட்டிருக்கிறது. இப்போது, தயவாக என்னை மன்னியுங்கள். சகோதரர்களே, தூர இடங்களில் இந்த ஒலி நாடாவைக் கேட்கிறவர்களே, நண்பர்களே, கேளுங்கள், நான் அதை அவ்விதம் சொல்ல நினைக்கவில்லை. நான் சவிசேஷத்தில் ஒரு ஊழியக்காரன், அதை எத்தனை முறை பிரசங்கித் திருக்கிறேனோ, அத்தனை முறையும் அது ஏழாயிரம் என்பதை அறிந்திருந்தேன். நான் எழுநூறு என்று சொல்ல நேர்ந்தது. எழுநூறு என்று நான் நினைக்கவில்லை. நான் அதை வேதத்திலிருந்து படிக்கவில்லை. நான் பேசிக்கொண்டிருக்கும்போது என் மனதில் அவ்வண்ணம் வந்தது. ஏழாயிரம் என்பதற்குப் பதிலாக எழுநூறு என்று கூறிவிட்டேன். அத்தகைய தவறுகளை நான் எப்போதும் செய்கிறேன். நான் நிச்சயமாக ஏதும் அறியாதவன். ஆகவே நீங்கள் என்னை மன்னித்துவிடுங்கள். அப்படிச் செய்ய நான் நினைக்கவில்லை. 21. கிறிஸ்துவின் மணவாட்டியும், கிறிஸ்துவின் சரீரமும் ஒன்றுதானா? ஆமாம், ஐயா! இங்கே கவனியுங்கள், நான் இதை ஆரம்பிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதன் மீது நான் ஒரு பிரசங்கமே செய்யக்கூடும். ஆனால் அதைச் செய்யமாட்டேன், ஆனால் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். தேவன், ஆதாமுக்கு அவள் மணவாட்டியை அவனுடைய விலாவில் இருந்து கொடுத்தபோது, அவன், ‘இவள் என் எலும்பில் எலும்பும், என் மாமிசத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்’ என்றான். அது சரிதானே? தேவன், கிறிஸ்துவுக்கு அவருடைய மணவாட்டியைக் கொடுத்தபோது, (ஆவியானவர் மணவாட்டியாகிய மாமிசத்தைத் தந்தார்) அவருடைய இருதயத்திற்குக் கீழாக அவர் குத்தப்பட்டார், தண்ணீரும், இரத்தமும், ஆவியும் புறப்பட்டு வந்தன, அதுதான் அவருடைய மாம்சத்தில் மாம்சமும், அவருடைய எலும்பில் எலும்புமாக உருவாக்கப்பட்டது. மணவாட்டி தாமே, கிறிஸ்துவின் எலும்பும் மாம்சமாகவும் இருக்கிறோம் - நிச்சயமாக. அவர்கள் அவ்விதமாகத்தான் இருக்கிறார்கள் ... அது தான் அவரது மணவாட்டி. 22. எடுத்துக்கொள்ளப்படுதலுக்கு முன்பு கிறிஸ்துவின் மணவாட்டிக்கு ஊழியம் இருக்குமா? நிச்சயமாக, இப்பொழுது நேரடியாக அது தான் நடந்து கொண்டிருக்கிறது. கிறிஸ்துவின் மணவாட்டி, நிச்சயமாக! அது தான் ஏற்ற வேளையின் செய்தி - கிறிஸ்துவின் மணவாட்டி நிச்சயமாக அவள், அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், போதகர்கள், சுவிசேஷகர்கள் மற்றும் மேய்ப்பர்களை உடையவளாய் இருக்கிறாள். அது சரியா? அது தான் கிறிஸ்துவின் மணவாட்டி. நிச்சயமாக, அவளுக்கு ஒரு ஊழியம் உண்டு. ஒரு மகத்தான ஊழியம் - இந்தக் காலத்திற்குரிய ஊழியம், அது மிகவும் எளிமையானதாக இருக்கும். இப்பொழுது நினைவுகூருங்கள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் கூட்டத்தில் நான்.... இருந்தீர்கள்? நான் எதைக் குறித்து பிரசங்கித்தேன் என்று நினைவிருக்கிறதா? எளிமை, ஓ..... அதை மறந்து விடவேண்டாம். அதைக் குறித்து மறுபடியும் எச்சரிக்க ஒரு நிமிஷம் நிறுத்தப்போகிறேன். ஏதாகிலும் ஒரு மகத்தான காரியம் நடக்கப்போவதாக தேவன் முன்னுரைக்கும் போது, மக்கள் தங்கள் ஞானத்தினால், என்ன நடக்கிறதோ அதை இழந்து போகும் வரை, வெகு தூரத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேவன் ஒரு காரியத்தை மகத்தானது என்று கூறும்போது, உலகம் அதைக் குறித்து நகைத்து, ‘ஒரு கூட்டம் அறிவில்லாதவர்கள்’ என்றுரைக்கிறது. அது சரி,மகத்தான உலகமும், மிக மகத்தான சபையும், ‘சிறுவனே, அது மகிமையானது!’ என்று சொல்லும்போது, தேவன் அவர்களைப் பார்த்து, ‘ஒரு கூட்டம் அறிவில்லாதவர்கள்’ என்று கூறுகிறார். ஆகவே, நீங்கள் விழிப்பாய் இருக்க வேண்டும்.... அது ஒரு வேளை அவ்விதமாகத்தான் இருக்கும், என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாக அதே வழிதான், ஆனால் அந்த வழியில்தான் அது அமைந்திருக்கிறது. கவனியுங்கள்! இங்கே மகத்தான, பரிசுத்த வைதீக சபை ஒன்று இருந்தது, ‘நமக்கு வார்த்தை தெரியும். நமக்குப் பள்ளிகள் உண்டு, நமக்கு வேதப்பள்ளிகள் உண்டு. நம்மிடம் தேர்ச்சிப் பெற்ற மனிதர்கள் உண்டு. நூற்றுக்கணக்கான வருடங்களாக யேகோவாவுக்கு உத்தமமாய் இருந்து வந்திருக்கிறோம். நாம் தான் ‘சபை’, நாம் தான் ஆலோசனை சங்கம், பரிசேயர்களும் சதுசேயர்களும் மற்றும் எல்லா ஸ்தாபனங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் சபையின் ஐக்கியம் நமக்குண்டு (நாம் பெற்றுக்கொண்டிருப்பதுபோல). சபையின் ஆலோசனை சங்கமாக நாமெல்லாரும் ஒன்றாக இருக்கிறோம். இங்கே நாம்தான் பெரிய மனிதர்கள். அது வேதவாக்கியத்திற்குரியவைகள் என்பதை நாம் அறிவோம். நதிக்கரையிலே ஆட்டுத்தோல் உடையணிந்து தாடியுடன் நின்று கொண்டிருக்கும் அந்த எளிமையில் உள்ள அறிவில்லாதவனைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’ என்று கூறினதைக் கவனியுங்கள். நிச்சயமாக அவர்கள் அதற்குச் செவிசாய்க்கமாட்டார்கள். ஆனால், வேதாகமம் மல்கியா 3ம் அதிகாரத்தில், ‘இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான்’ என்று கூறுகிறது. இதற்கு எழுநுற்று பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த மகத்தான தீர்க்கதரிசியாகிய ஏசாயா அங்கு நின்று கொண்டு, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தர வெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வை பண்ணுங்கள் என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று’ என்று கூறினான். அது சரி. ‘ஓ, எல்லா உயர்ந்த இடங்களெல்லாம் தாழ்த்தப்படும். இதைக்குறித்து அநேகமக்கள் பேசினார்கள். ‘இந்த மனிதன் வரும்போது தன்னுடைய விரலைச் சுட்டிக்காட்டி கட்டளையிடும் போது, மலைகள் அகன்று போய்விடும், பள்ளமான இடங்களெல்லாம் சமமாக்கப்படும். சகோதரனே, இங்கிருக்கும் வயல்களிளெங்கும் தானியத்தைப் பயிர் செய்யலாம். ஓ, இந்த மனிதன் வரும்போது நாம் மகத்தான காரியங்களைச் செய்யப் போகிறோம்’ என்று அநேகர் கூறினார்கள். தேவன் ஒரு இயந்திர கைப்பிடியைச் சுழற்றி ஒரு தாழ்வாரத்தைக் கீழே இறக்கி அதிலிருக்கும் மனிதனைப் பார்த்து, ‘என்னுடைய மேசியாவின் மகத்தான முன் தூதனே, வெளியே வாரும்’ என்று கூப்பிடுவாரென்றும், அதற்குப் பிறகு அவன் போனபிறகு அவர்கள் அதை மறுபடியும் இழுத்து, அவனுடைய ஊழியம் முடிந்தபிறகு மறுபடியும் இயந்திர கைப்பிடியை சுழற்றி அதைக் கீழே இறக்கி வேதப்பள்ளியின் பக்கத்தில் வைத்துவிட்டு, ‘நல்லது, என்னுடைய நேசக்குமாரனே, வெளியே வந்து அவர்களுக்கு அறிவியும்’ என்று கூறுவார் என்றும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஓ, அவர் வந்தபோது என்னென்ன நடந்தது என்பதை கவனித்தீர்களா? அவர்கள், பள்ளிக்கூடங்களில் படிக்காத ஒருவன் இங்கிருக்கிறான் - அவனிடத்தில் ஐக்கியத்தின் அட்டைகூட இல்லை - அவனிடத்தில் எந்தவிதமான அத்தாட்சி கடிதமும் இல்லை. அவனுடைய வாழ்க்கை யிலேயே ஒரு நாளாகிலும் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதாக கூறுவதற்கும் ஒருவருமில்லை. அவனுடைய பேச்சைப் பார்த்தால் கூட அவன் பள்ளிக்கூடத்திற்குப் போகாதது போலிருக்கிறது. மத சம்பந்தமான வார்த்தைகளைக் கூட அவன் பேசவில்லை. அவன், விரியன் பாம்பு, கோடாரி வனாந்தரம், மரம் போன்ற வார்த்தைகளைத்தான் பேசினான். அந்த நாளிலோ, அல்லது இந்த நாளிலோ அல்லது எந்த நாளிலோ இருந்த மதசங்கத்தின் அமைப்புகளுக்குரிய வார்த்தைகளையே அவன் பேசவில்லை. அவன் ஒரு அநாகரிக மனிதனாகக் காணப்பட்டான். அவன் யுதர்களில் இருந்து வந்தவன் போலவும், சவரம் செய்துகொள்ளாதவனும், தன் தலையின்மீது படியாமல் நின்று கொண்டிருக்கும் மயிரை உடையவ னாகவும் வந்தான். இரண்டு மாதத்திற்கொருமுறையோ, அல்லது மூன்று மாதத்திற்கொரு முறையோ மாத்திரம் குளித்தவனாக இருந்திருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். இரவில் அவன் ‘பைஜாமா’ போடாதவனாய் இருந்தான். அவன் எந்தவிதமான காரிலும் செல்லாத வனாகவும் இருந்தான். அவன் தன் பற்களை ‘பிரஷ்’ஷினால் சுத்தம் செய்யாதவனுமாயிருந்தான் - உண்மையில் இல்லை. அவன் வனாந்தரத்தில் தடியை ஊன்றி நடந்து வந்து, ‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்றும், அவருக்குப் பாதையை செவ்வைப் படுத்துங்கள் என்று வனாந்தரத்தில் கூப்பிடுகிறவரின் சத்தமாய் இருக்கிறேன்’ என்று கூறினான்.... போதகர்களில் சிலர் அங்கு நின்று கொண்டு, ‘ஊ! உன்னிடத்தில் இருக்கிறதா... இந்தப் பெருங்கூட்டத்தில் நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம், நாங்கள் அதைச் செய்ய முடியாது, நல்லது. உன்னுடைய அட்டை எங்கே? உன்னுடைய அடையாளச் சீட்டு எங்கே? என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டதை அவன் பொருட்படுத்தவில்லை. அவள் ஒரு செய்தியைக் கொண்டு வந்திருந்தான். அதையே அவன் பிரசங்கித்தான். அவர்கள், ‘ஆ, சற்று பொறுங்கள், நாங்கள் பேராயரை (Bishop) கொணடு வருகிறோம். அவர் என்ன சொல்லுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் அங்கே செல்லுகிறோம். இதைச் சபையின் தலைவர்தான் அங்கீகரிக்க வேண்டும். இவன் தேவனிடத்தில் இருந்து வந்திருப்பானானால் இவன் நம்முடைய பேராயரை அங்கிகரிப்பான்,’ என்று கூறினார்கள் - அங்கு ஆசனங்களைப்போட்டு மரியாதைக்குரிய பெரியோர்களை உட்கார வைத்திருப்பார்கள். அவன், ‘விரியன் பாம்புக்குட்டிகளே, புல்லின்கீழ் இருக்கும் சர்ப்பங்களே’ என்று கூறினான். (தங்களுடைய காலர் பட்டையை உயர்த்திப் போட்டுக் கொண்டிருக்கும் பரிசுத்த பிதாக்களையும், மற்றவர்களையும்). ‘வரும்கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? உங்களுடைய நேரம் சமீபமாய் இருக்கிறது. நீங்கள் இதைச் சிந்திக்கவில்லையா?...’ நீங்கள், ‘அவன் இதைச் சேர்ந்தவன் அல்லது அதைச் சேர்ந்தவன்’ என்று கூறலாம். ‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நான் ஆராதிக்கும் தேவன் இந்த கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராக இருக்கிறார்’. ஓ! மதத்தலைவர்களைப் போல அவன் பேசாமல் அதற்கு விரோதமாகப் பேசினான். ‘கோடாரியானது மரத்தின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது! நல்லக்கனி கொடாத மரமெதுவோ அது வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்! நான் உங்களுக்குத் தண்ணீரினால் மனந்திரும்புலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் கொடுக்கிறேன். ஆனால் எனக்குப் பின்னால் அவர் வருகிறார். சந்திரன் இரத்தம் போலாகும் மற்றும்... ஓ! ‘அவர் தம்முடைய களத்தை நன்றாய் விளக்கி, பதரை அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார். கோதுமையையோ களஞ்சியத்தில் சேர்ப்பார். அவர்களையும், கோதுமையையும் தனியே பிரிப்பார்.’ ஓ! என்னே செய்தி! அவர்கள் ‘ஊ! இந்த மனிதனா! இவன் என்ன சொல்லுகிறான்? - இது என்ன சமயம்? ஓ, படிப்பறியாதவன், நமக்கு அங்கு ஜோன்ஸ் இருக்கிறார். இந்த நாட்களில் யாராகிலும் எழுப்பப்பட வேண்டுமானால் அது இவராகத்தான் இருக்க முடியும். பேராயர் இன்னார் இன்னார்தான் இதைச் செய்ய முடியும். பரிசுத்த பிதாவாகிய இன்னார் இன்னார் தான் இதைச் செய்ய முடியும்’ என்று கூறினார்கள். தேவன் எளிமையில் மறைந்திருந்து, எளிமையில் கிரியை செய்கிறார், புரிகின்றதா? ஒரு நாள் அவர் அங்கு நின்று கொண்டிருந்தார். அவன் ‘ஆமாம், அவர் உங்கள் மத்தியிலே நின்று கொண்டிருக்கிறார்’ என்றான். அவன்தான் அந்த முன்னோடி என்பதை அவன் நிச்சயமாக அறிந்திருந்தான். அவன், தான் யார் என்பதை அறிந்திருந்தான். ஆகவே தான் அவர்களை அவன்அவ்விதம் அசைத்தான். ‘பயப்படாதிருங்கள், தொடர்ந்து நன்மையான காரியங்களைச் செய்து முன்னேறுங்கள். இராணுவ வீரர்களாகிய நீங்கள், உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படியுங்கள், தீமை ஏதாகிலும் செய்திருந்தால் நற்சீர் பொருந்துங்கள்... என்றான். ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்? நாங்கள் இவ்விதமான காரியங்களைச் செய்வதை விட்டுவிடட்டுமா? நாங்கள் இதை நிறுத்தி விடட்டுமா?’ அவன், ‘நீங்கள் இருக்கிறவண்ணமாகவே முன்னேறிச் செல்லுங்கள், முன்னேறுங்கள், நீங்கள் உருளைக் கிழங்கை பயிர் செய்தால், தொடர்ந்து பயிர் செய்யுங்கள். இராணுவ வீரர்களே, கொடுமை செய்யாதீர்கள், நீங்கள் எவ்விதம் இருக்கிறீர்களோ அவ்விதமாகவே தொடர்ந்து செல்லுங்கள், உங்களுடைய எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்’. ‘ரபீ, நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ ‘நீங்கள் இருக்கிற வண்ணமாகவே முன்னேறி செல்லுங்கள், நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் மத்தியிலே இருக்கிறார்’. (அவன் தன்னுடைய செய்தியின் நேரத்தை அறிந்திருந்தான்.) அவன் அந்த ஆளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை அறிந்திருந்தான். அவர் அங்கிருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான்.) ‘ஒருவர் உங்கள் மத்தியில் இருக்கிறார், நீங்கள் அவரை அறியவில்லை. நடந்து கொண்டிருக்கும் காரியங்களை நீங்கள் அறிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்’ என்றான். ‘ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது’ என்றான். ‘அவர் இங்கிருப்பார், நான் அவரை அறிந்து கொள்ளுவேன்’. கடைசியாக ஒருநாள் அவன், ‘இதோ அவர் இங்கிருக்கிறார், இதோ உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி’ என்றான். ‘என்னுடைய நேரம் இப்பொழுது வந்திருக்கிறது. நான் அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நான் இப்பொழுது சிறுக வேண்டும், நான் இந்தக் காட்சியை விட்டு செல்ல வேண்டும். இங்கிருந்து அவர் தொடர்ந்துகொண்டு செல்லுவார். இப்பொழுது ஆயிரவருட அரசாட்சி தொடங்க வேண்டியதாய் இருக்கிறது, காலம் சமீபமாய் இருக்கிறது’ என்றான். அவர் வரும்போது, ‘அவர் எல்லோரையும் அசைத்து, கோதுமையை பதரிலிருந்து பிரித்தெடுப்பார். அவர் பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பார். அவர் தம்முடைய களத்தை நன்றாக விளக்குவார். தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது’ என்று யோவான் கூறினான். ஆனால் இவன் யார்? - இந்த சிறியவன்.. ஓ! மனிதனே! அவர் வரும்போது ஒருமைல் நீளத்திற்கும் மேலான ஆவியை அவர் பெற்றிருப்பார். ‘அவர் பாலஸ்தீனாவில் நின்று கொண்டு, தம்முடைய வெண்மையான மேகங்களில் ஒன்றின்மீது நின்று கொண்டு, இந்த எல்லா ரோமர்களையும் பொறுக்கியெடுத்து அவர்களை நரகத்தில் போட்டுவிடுவார் - எல்லோரையும் அழிக்கும் வரை இவ்விதமாக செய்வார்’. இவ்விதமாகத்தான் அவர்கள் எல்லோரும் மேசியாவின் வருகையை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவ்விதமான வேலையில்தான், ஒரு சிறு ஆட்டுக்குட்டி, சாந்தமும், மனத்தாழ்மையுமாய் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் தள்ளிவிட்டுக் கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது. அவர் அவ்வளவு எளிமையாக வந்திருந்ததால் யோவானுக்கும் சந்தேகமுண்டாகி, ‘நீங்கள் அவரிடத்தில் போய், வருகிறவர் நீர் தானா?’ என்று கேட்கும்படி அனுப்பினான். அவ்வளவாக எளிமையில் வந்திருந்ததால் அந்தத் தீர்க்கதரிசியும் அதை இழந்துவிட்டான். ‘வருகிறர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரவேண்டுமா?’ என்று கேட்கும்படி ஆட்களை அனுப்பியிருந்தான். யோவான் சிறையில் வைக்கப்பட்டிருந்தபோது அவன் தன்னுடைய சீஷர்களை அனுப்பினான். ‘அவனுடைய கழுகின் கண்கள் திரையிடப் பட்டுவிட்டிருந்தன’ என்று பெம்பர் கூறினார் என்று நினைக்கிறேன். அவன் ஆகாயத்தில் இருந்தான். அவன் பூமிக்குக் கொண்டுவரப்பட வேண்டியதாய் இருந்தது. ஆனால் அவனுடைய தீர்க்கதரிசனம் முடிந்தவுன் அவன் மறுபடியும் பூமியில் விழுந்து கிடந்தான்.... ஏனென்றால் சிறையில் அடைக்கப் பட்டிருந்தான். இப்பொழுது அவனுடைய பெரிய செட்டைகள் அவனுக்கு அவசியப்படவில்லை. ஆகவே, அவைகளை அங்கே மடக்கி வைத்திருந்தான். ஆனாலும், மற்றவர்களைக் காட்டிலும் அவன் உயர பறந்திருந்தான். நான் ஒன்றைச் சொல்லட்டும், தேவன் அவனை உபயோகப்படுத்தினார். இயேசு அதை அறிந்திருந்தார்... ஏனென்றால் அவர் மாம்சத்தில் வந்த தேவனாயிருந்தார். அவன் சிறையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிந்துகொள்ள அவனுக்கு ஒரு புத்தகம் கொடுக்கப்படவில்லை. ‘இப்பொழுது ஒரு நிமிஷம் பொறுத்திருங்கள். நான் ஒரு கட்டுரை எழுதப்போகிறேன். நீங்கள் அதைக் கொண்டுபோய் அவன் சிறையில் இருக்கும்போது என்னிமித்தமாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்ளயோவானிடம் கூறி இதை அவனிடம் கொடுங்கள்’ என்று அவர் கூறினாரா? இல்லை, அவர் ஒருபோதும் அவ்விதம் கூறவில்லை. ‘அவன் வெளியே வருவதற்கு முன் வேத பாண்டியத்தில் தன்னுடைய டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று யோவானிடம் போய் சொல்லுங்கள்’ என்று இவ்விதமாக அவர் கூறவில்லை. வேண்டுமானால் அவனும் மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டு ஒரு புறக்கணிக்கிறவனாக இருந்திருக்கக்கூடும். யோவான் ஒரு உத்தமனாக இருந்து ஒரு கேள்வியைக் கேட்டான். ‘கூட்டம் முடியும் வரை காத்திருந்து, என்ன நடந்ததோ அதை யோவானுக்குச் சொல்லுங்கள். அப்பொழுது அவன் அறிந்து கொள்வான்’ என்று அவர் கூறினார். ‘அவன் சிறையில் இருக்கிறான், அவன் இங்கிருக்க முடியவில்லை, நீங்கள் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள், என்ன நடந்ததோ அதைக் கண்டிருக்கிறீர்கள். நீங்கள் போய் சொல்லுங்கள்’. அப்பொழுது அந்த சீஷர்கள் ‘நல்லது, ஆண்டவரே’ என்று கூறினார்கள். அவர்கள் மலையைக் கடந்து சென்றார்கள். பாறையின் மீது இயேசு உட்கார்ந்துகொண்டு அவர்கள் கடந்து செல்லும் வரைக்கும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்... அவர்கள் மலைமீது ஏறி செல்லும் வரைக்கும். அவர் சபையாரைப் பார்த்து, ‘யோவான் காலத்தில் யாரைப் பார்க்க, போனீர்கள்? எதைப் பார்க்கப் போனீர்கள்? தன்னுடைய காலர் பட்டையை அணிந்து’ மெல்லிய வஸ்திரத்தை அணிந்திருக்கும் நன்றாகப் படித்த மனிதனையா பார்க்க சென்றீர்கள்? அவ்விதமான மனிதனையா நீங்கள் காணச் சென்றீர்கள்? ‘இல்லை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அவர்கள் குழந்தையை முத்தமிட்டு, அரசனின் அரண் மனையில் வசிக்கிறார்கள். யோவான் அவ்வண்ணம் இருக்கவில்லை. அப்படியானால் நீங்கள் ஏன் சென்றீர்கள்? தன்னுடைய ஊழியத்தை ஒரு ஸ்தாபனத்தோடு இணைத்துக் கொண்டு, எல்லோரோடும் கைகளைக் குலுக்கிக் கொண்டிருக்கும் மனிதனையா பார்க்க சென்றீர்கள்? ஒருத்துவக்காரர் வேண்டாம் என்று சொல்லும்போது திரித்துவக்காரரிடம் ஐக்கியம் கொள்ளுவதற்காக அவர்களிடம் செல்வதும், திரித்துவக் காரர்கள் வேண்டாம் என்று சொல்லும்போது ‘தேவனுடைய சபை’ என்று அழைக்கப்படும் ஸ்தாபனத்திற்கோ அல்லது வேறெங்கேயோ செல்லுகிறார்கள். காற்றினால் அசையும் நாணலைப் போலிருக்கும் மனிதனையா பார்க்கச் சென்றீர்கள்?’ என்று கேட்டார். ஓ இல்லை! - யோவான் அவ்விதமாக இல்லை. ‘அப்படியென்றால் எதைப் பார்க்க சென்றீர்கள்? - ஒரு தீர்க்கதரிசியை’ என்று அவர் கூறினார். ‘அதுதான் சரி என்று கூறுகிறேன். ஆனால் நீங்கள் அறிந்திருந்த ஒன்றைச் சொல்லப் போகிறேன், அவன் ஒரு தீர்க்கதரிசியிலும் மேலானவனாக இருந்தான்....’ என்று அவர் கூறினார். ‘நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வேதாகமத்தில் மல்கியா இதோ எனக்கு முன்பாக நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய் வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று சொல்லப்பட்டிருப்பவன் இவனே’ என்றார். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை. அது சரி, ஓ! எளிமை - தாழ்மையுடன் இருங்கள். தேவன், மகத்துவமான தொன்றை வாக்குரைக்கும்போது - அது அவருடைய பார்வையில் மகத்துவமானதாகக் காணப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் இதை மனதில் வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.... இதை மனதில் வையுங்கள், இது நடக்கும்போது, அப்பொழுது நீங்கள் இதை மாற்றிவிட கூடும். வசந்த காலத்தில் பூக்கும் சிறிய மலர்களில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு சிறிய புல்லை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, ‘இப்பொழுது இதைப் பிடித்துக் கொண்டு, ஏதோ எளிமையானதொன்று இதைச் செய்திருக்கிறது, சந்திரனுக்கு ராக்கெட்டை அனுப்பி இருக்கும் அந்த மூளை இந்தச் சிறிய புல்லைச் செய்யமுடியுமா என்பதைக் காண விரும்புகிறேன்’. அதை நீங்கள் எப்பொழுதும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் அதன் மீது சார்ந்திருக்கலாம், நீங்கள் அதை எப்பொழுதும் பெற்றிருக்கலாம், புல்லின் இலை தன்னில் ஜீவன் உள்ளதாய் இருக்கிறது. அது மிகவும் எளிமையானதாகவும், தாழ்மையானதாகவும் இருக்கிறது.... ஒரு மனிதன் பெரிய மனிதனாக இருப்பது சரிதான், ஆனால் அவன் தன்னை எளிமையுள்ளவனாக்கிக் கொள்வதற்கு அவ்வளவு பெரியவனாக இருப்பானென்றால், அவன் தேவனைக் காண்பான். ஆனால் அவன் எளியவனாகவில்லையென்றால் அவன் அவரைக் காணவே முடியாது. நீங்கள் எளிமையுள்ளவர்களாக வேண்டும். 23a.வெளிப்படுத்தல் 5.9 வசனங்களில் ஆட்டுக்குட்டியானவர்.... கையிலிருந்து புத்தகத்தை வாங்கும்போது பாடிக் கொண்டிருப்பவர்களாகக் காணப்படுவர் எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்களா? இல்லை. வெளிப்படுத்தல் 6.5.9 வசனங்கள் - இல்லை, நீங்கள் கவனிப்பீர்களானால், இவர்கள் பரிசுத்தவான்களல்ல. அவர் இன்னமும் தமது உரிமையைச் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. இவர்கள் பரிசுத்தவான்கள் அல்ல. கவனித்தீர்களா, அவர்கள் மூப்பர்களும் ஜீவன்களும் அவர்கள் பாடுகின்றார்கள். அதை நாம் படிப்போம். அப்பொழுது அந்த நபர்.... அதன் பின்பு நான் முயற்சி செய்வேன்... இன்னும் அரை டஜன் கேள்விகள் உள்ளன. அதை சில நிமிடங்களில் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன். பார்க்கலாம். வெளிப்படுத்தல் 5.9 அதைச் சற்று படிக்கலாம்.... இந்த மனிதர் உத்தமாக இதைக் கேட்டிருக்கிறார். அதை அவர் அறிய ஆவலுள்ளவராய் இருக்கிறார். கவனியுங்கள். ‘அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங் களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூப வர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக் கொண்டு, ஆட்டுக்குட்டியான வருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்...... என்று புதிய பாட்டைப் பாடினார்கள்’. பாருங்கள், ‘தேவரீர் எங்களை மீட்டுக்கொண்டு, எங்களை ராஜாக் களும் ஆசாரியர்களுமாக்கினீர்’ - அது பரலோகத்திலுள்ள குழு - மீட்கப்பட்டவர்கள் அல்ல. சரி. 24. சகோதரன் பிரான்ஹாமே, எல்லா .... (சற்று பொறுங்கள் நான் நினைக்கிறேன்.... என்னை மன்னியுங்கள்) சகோதரன் பிரான்ஹாமே, தேவ பக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றுவிட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள். ஏதோ தவறுள்ளது. ஏதோ தவறுள்ளது. அவ்வளவுதான் அதற்குள்ளது. ஏதோ ஒன்று நிகழ்ந்துவிட்டது. பாருங்கள்? எங்கேயோ தவறு நேர்ந்திருக்கிறது. எல்லோரும் நல்லுணர்வுடன் இருக்கின்றீர்களா? வியாதி வேறொன்றும் இல்லையே? (சபையிலுள்ள ஒருவர் வெளிப் படுத்தல் 5.9ஐ மறுபடியும் படிக்கும்படி வேண்டுகிறார் - பதிப்பாசிரியர்). வெளிப்படுத்தல்.... எந்த பாகம், சகோதரனே? ஓ, அந்தக் கேள்வி! ஓ, விடையளிக்கப்பட்ட அந்தக் கேள்வி. இப்பொழுது அதைப் பார்க்கலாம். (23ம் கேள்வியின் தொடர்ச்சி - பதிப்பாசிரியர்) அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து : தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு.... (இங்குள்ளது! இங்குள்ளது! நான் தவறாகக் கூறிவிட்டேன். பாருங்கள்?) சகல கோத்திரங்களிலும்..... எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக் கொண்டு.... என்று புதிய பாட்டைப் பாடினார்கள். அது சரி, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓ, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் மாத்திரம் இங்கில்லாதிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? அவர் அனுமதிக்கவில்லை.... பாருங்கள், அந்த வாக்கியத்தின் முதல் பாகத்தை மாத்திரமே நான் படித்தேன். பாருங்கள், இங்கு ஒன்று எழுதப்பட்டிருந்தது. கடிகாரத்தைப் பார்த்துவிட்டு... அதைத் துரிதமாக முடிக்க எண்ணினேன், பரிசுத்த ஆவியானவர் என்னை அங்கு நிறுத்துவதைக் கண்டீர்களா? மகிமை! அதன் மற்ற பாகத்தை நான் படிக்கவில்லை. பாருங்கள், நான் இங்கு வைத்திருக்கிறேன். பாருங்கள். ‘அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்’ என்று படித்துவிட்டு நிறுத்திவிட்டேன். ஆனால் இங்கு பாருங்கள், ‘ஏனெனில்... சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை மீட்டுக் கொண்டு’. நிச்சயமாக, அவர்கள்தாம் அது.... என்னே, ஓ! என்னே! பாருங்கள். வேறொரு கேள்வியும் இங்கு உள்ளது. 23b. வெளிப்படுத்தல் 6.11ல் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டவர்களுடன் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்களை ஒப்பிட முடியுமா? இதைப் பார்க்கலாம். வெளிப்படுத்தல் 6... ஜனங்களே, நான் துரிதமாகச் செல்லமுடியாது. அவ்வளவுதான்... பாருங்கள், ஏனெனில் நான் தவறாகப் பதில் கூற நேரிடும். அப்படி நான் செய்ய அவர் விரும்பவில்ல. அது சத்தியம். எனவே எனக்கு உதவி செய்யும். அது உண்மையென்று தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் அறிவார். பாருங்கள் நான்... ஏதோ ஒன்று... நான் கடிகாரத்தைப் பார்த்தேன். 11-30 ஆகியிருந்தது. ‘நான் துரிதமாகச் செல்லாவிட்டால், வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் செய்ய முடியாது’ என்று எண்ணினேன். அதை நான் பெற்றுக்கொள்ள முயல்கிறேன். ஏனென்றால் நான்... என் சிந்தை .... என்னால் முடியவில்லை. நீங்கள் யோசித்துப் பாருங்கள், இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு மனிதன், பாருங்கள், அங்கு நான் ஏழு நாட்கள் இருந்திருக்கிறேன். இன்று மத்தியமும் எனக்கு வேலையுள்ளது. நான் தேவனிடத்தில் அறிந்துகொள்ள வேண்டும். நான் அந்தத் தவறைச் செய்யக்கூடாது என்று அவர் தீர்மானம் செய்திருந்தபடியால், அந்த வாக்கியத்தில் எஞ்சியுள்ள பாகத்தை நான் மறுபடியும் படிக்கக் கட்டளையிட்டார். என் மீது ஏதோ ஒன்று உருண்டு, ‘திரும்பிச் செல், திரும்பிச் செல்!’ என்று கூறினது. நான், ‘எங்கு திரும்பிச் செல்ல வேண்டும்? இப்பொழுது நிறுத்திவிட்டு, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்க வேண்டுமா? இது என்ன? நான் என்ன செய்துவிட்டேன்?’ என்று நினைத்துக் கொண்டேன். நான் அந்த வசனத்தை எடுக்கவேண்டும் என்று நினைத்த அதே சமயத்தில் யாரோ ஒருவர், ‘அந்த வசனத்தை மறுபடியும் படியுங்கள்’ என்றார். அதை நான் படித்தபோது, அந்தக் கேள்வியின் கடைசி பாகத்தின் விடை காணப்பட்டது. பாருங்கள். அதை நான் முதலில் பார்த்தபோது, அது அவ்விதம் தோன்றவில்லை - ‘அவர்கள் புதிய பாட்டைப் பாடினார்கள்’, ஆனால் அதற்கு கீழுள்ளது என்ன? - அதற்கு அடுத்து வருவது, ‘எங்களை மீட்டுக் கொண்டீர்’, நிச்சயமாக அது, மணவாட்டி - எடுத்துக் கொள்ளப்பட்ட பரிசுத்தவான்கள். உங்களால்... இங்கு.... நிச்சயமாக, ஆட்டுக்குட்டியானவர் புஸ்தகத்தைக் கையில் வைத்திருந்தார். அவர் அப்பொழுது மத்தியஸ்த கிருபையின் சிங்காசனத்தை விட்டு வந்து விட்டார். பாருங்கள்? பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கவனித்து வருகிறார் என்பதைப் பார்த்தீர்களா? அதையேதான் நான் அன்றிரவும் கூறினேன். அவர் என்னுடன் அறையில் பேசி முடித்தவுடன், நான் இங்கு வந்து உங்களிடம் அதைப் பிரசங்கிக்கிறேன். ஆட்டுக்குட்டியானவர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு வந்தபோது (ஓ, என்னே! அதையே ஒரு பொருளாகக் கொண்டு பேசலாம்) - ஆட்டுக்குட்டியானவர் தமது சிங்காசனத்தை விட்டு புறப்பட்டு வந்து விட்டார்.... அவர் அங்கு பிரசன்னமானபோது, நான் எழுந்து நின்றேன் - ஒளியாகிய கிறிஸ்து .... அவர் பிரசன்னமான போது .... மத்தியஸ்தராயிருந்த ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்தை விட்டுப் புறப்பட்டவுடன், இங்கு கீழே வருகிறார். சபைக்கு மீட்பின் காலம் முடிவடைகின்றது. திறக்கப்படும் அடுத்த மீட்பு யூதர்களுக்கு - 144000 பேர்களுக்கு. அது சரியா? ஏனெனில் அவர் மரத்தை வெட்டப் போவதாக வாக்களித்துள் ளார். உங்களுக்குத் தெரியும். இங்கு அவர் - ஆட்டுக்குட்டியானவர் - புறப்பட்டு வருகிறார். பின்பு மீட்பின் நாள் முடிவடைகின்றது. மீட்கப்பட வேண்டியவர்கள் ஏற்கனவே மீட்கப்பட்டு புத்தகத்தில் பெயரெழுதப் பட்டுள்ளனர். அவர் இங்கு புத்தகத்தைத் திறக்கிறார். ஓ, நன்றி ஆண்டவரே. ஒன்றைத் துரிதமாக முடிக்க முயன்ற உம் நடுக்கமுள்ள ஊழியக்காரனை மன்னிப்பீராக! இப்பொழுது, வெளிப்படுத்தல் 6.11ல் அங்கிகள் கொடுக்கப்பட்டவர் களுடன் ஒப்பிட முடியுமா? அதைப் பார்க்கலாம் (6.11) சரி, அது எதைக் குறிப்பிடுகிறது? வெள்ளை அங்கிகள்... ஆம், பீடத்தின் கீழுள்ள உயிர்த்தியாகம் செய்தவர்கள் - காலத்திற்கிடையேயுள்ள யூதர்கள், அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டன. 23c. வெளிப்படுத்தல் 7.11ல் கூறப்பட்டுள்ள, தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்ந்து வெளுத்தவர் களுடன்.... இல்லை, அவர்கள் வித்தியாசமானவர்கள், நிச்சயமாக, ஏனெனில் அவர்களுக்கு வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டதாக அங்கு பார்த்தோம். அவர்களுக்கு கிருபையாக வெள்ளை அங்கிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களோ தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டி யானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தனர். இவர்கள்தாம் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜாதிகளிலுமிருந்து வந்து, தேவனுக்கு முன்பாக உள்ள திரளான கூட்டம். அது சரி. 24. சகோதரன் பிரான்ஹாமே, தேவபக்தியுள்ள அனைவரும் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விட்டால், எலியாவும் மோசேயும் எங்கிருந்து வருவார்கள்? அவர்கள் யூதர்களாயிருப்பார்களா? அல்லது எங்களுக்கு அளிக்கப்பட்ட எலியா அவர்களுடன் கூட இருப்பாரா? இல்லை புறஜாதிகளை அழைப்பதற்கென இந்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்ட புறஜாதி தூதன் எடுக்கப்படுவார். ஏனெனில் முழு சபையும் - எல்லாருமே - எடுத்துக் கொள்ளப்படுகின்றனர். 11ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் அப்பொழுது கீழே கொண்டுவரப்படுகின்றனர். புறஜாதியாருக்குக் கிருபையின் காலம் முடிவடைந்து அது யூதர்களுக்கு அனுப்பப்படுகின்றது. இல்லை, இவ்விருவரும் ஒரே மனிதன் அல்ல என்று நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டினவரை, என்று நினைவு கூருங்கள். இது என்ன சொல்லுகிறதென்று பார்ப்போம். கேள்வி 25. வெளிப்படுத்தல் 6.6ல் உள்ள கோதுமையும் திராட்சரசமும்... அந்த வேதவாக்கியத்தைப் படிக்கும்போது, அது என்னவென்பதை அறிந்து கொள்ளலாம். ‘அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும் நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்’. அவர்கள் கோதுமையையும் திராட்சரசத்தையும் குறிப்பிடுகின்றனர் போலும்! - அது ஒன்றொடொன்றுள்ள தொடர்பு - அது கொரித்தியர் 11.24ல் கூறப்பட்டுள்ள இராப்போஜன மேசையில் நாம் அருந்தும் திராட்சரசத்துக்கு அடையாளமாயுள்ளதா? இல்லை - ஒன்று ஆவிக்குரிய அடையாளம், மற்றொன்று தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாட்டைக் குறிக்கின்றது. 26. நாம் கர்த்தருடைய சரீரத்தை சரிவர நிதானித்து அறியாததே அனேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்குக் காரணமாயிருக்கலாம் அல்லவா? (உண்மை) ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே... (இதைப் பார்க்கலாம், இதைப் புரிந்து கொள்ள முடியுமா என்று நான் பார்க்கட்டும், நீங்களல்ல, நான்தான். நீங்கள் சரியாகத்தான் அதை எழுதியிருக்கிறீர்கள், நான் தான்) நாம் இதுவரை கர்த்தருடைய சரீரத்தை சரிவர நிதானித்து அறியாததே அனேகர் வியாதியுள்ளவர்களாக இருப்பதற்குக் காரணமாயிருக்கலாம் அல்லவா? சரி, கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததனால், அனேகர் வியாதியுள்ளவர்களும் பலவீனருமாயிருக்கிறார்கள் என்று வேதவாக்கியம் கூறுகின்றது. அது மிகவும் உண்மை. ஏனெனில், கர்த்தருடைய சரீரம் என்பது மணவாட்டியாகும். பாருங்கள்? அனேகர் வழிதவறிச் சென்று விடுகின்றனர் - அதனுடன் அவர்கள் செல்வதில்லை. அது உண்மை. பாருங்கள், எவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையும் வாழ்ந்துவிட்டு, இராப்போஜனத்தில் பங்கு கொள்ளுகின்றனர் - அது சரியல்ல, பாருங்கள்? பொய் சொல்பவரும், களவு செய்பவரும், மது அருந்துபவரும் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும்போது.... அது மிகவும் பயங்கரம். நீங்கள் அப்படிச் செய்யக்கூடாது, பாருங்கள். .... ஆறாம் முத்திரை திறக்கப்பட்டதால் அது இப்பொழுது வெளிப்பட்டுள்ளதே - ஆறாம் முத்திரை திறக்கப்படுதல். இதை நாம் பார்க்கலாம். இல்லை, ஆறாம் முத்திரை திறக்கப்பட்டபோது அது யூதர்களுக்கென்று நாம் பார்த்தோம்’ பாருங்கள்? சபை ஏற்கனவே சென்றுவிட்டது. அது உபத்திரவ காலம். எனவே அது ஒன்றாகயிருக்காது. இல்லை, இவையிரண்டும் ஒன்றில்லை. ஒன்று ஆவிக்குரிய திராட்சரசம் - அதுதான் தேவனுடைய வார்த்தையின் வெளிப்படுத்தல். தேவனுடைய வார்த்தை வெளிப்படுவதனால் விசுவாசி ஊக்கமடைகிறான், மற்றொன்று இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் அடையாளமாயுள்ளது. அது கர்த்தருடைய இராப்போஜன மேசையில் அருந்தப்படுகின்றது. எனது புரிந்து கொள்ளுதலின்படி, இதுவே சரியான விடையாகும். 27. முன்குறிக்கப்படாத எவராவது ஆண்டவரை ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால், அவர்கள் விழுந்து போவார்களா? அவர்கள் முன்குறிக்கப்படாதிருந்தால், முடியாது, இல்லை, அவர்களால் முடியாது. 28. கத்தோலிக்க மார்க்கம் யூதர்களை ஏமாற்றி அவர்களுடைய செல்வத்தை எடுத்துக் கொள்ளும் என்று காண்பிக்கும் வேதவாக்கியம் எங்குள்ளது? ‘மிருகம் செல்வத்திற்காக ஏமாற்றும் என்று எங்கு கூறப்பட்டுள்ளது? அது அவ்விதம் உரைக்கவில்லை. ஆனால் நாங்கள் அவ்வாறு ஊகிக்கின்றோம்.... (அன்றிரவு, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா.... ஒலிநாடாவைக் கூர்ந்து கவனியுங்கள்) அவர்கள் அதைத் தான் செய்வார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் கூறினேன்.... பாருங்கள், கத்தோலிக்கர்கள் உலகத்திலேயே அதிக செல்வம் படைத்த குழு - அவர்களைப்போல் யாருமில்லை. அவர்களிடம் இல்லாதவை, யூதர்களிடம் உள்ளன. இன்று, நாட்டின் பொருளாதாரமே அங்குதான் இருக்கின்றது. ‘லைப் லைன்’ என்னும் செய்தித்தாளின்படி, நாம் இப்பொழுது வரிப்பணத்தைக் கொண்டு ஜீவனம் செய்துகொண்டு வருகிறோம்... வாஷிங்டன் டி.சியிலிருந்து வரும் வரிப்பணத்தைக் கொண்டு, அது இன்னும் நாற்பது வருடங்களில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். அதை தான் இப்பொழுது நாம் செலவு செய்துகொண்டு வருகிறோம். அவ்வளவு பின்னால் நாம் இருக்கிறோம்.... இன்னும் நாற்பது வருடங்களில் செலுத்தப்பட வேண்டிய வரிகள், நாடு பணமற்று விட்டது. காஸ்ட்ரோ (Castro) செய்த புத்திசாலித்தனம் என்னவெனில், அவன் பணநோட்டுகளை அச்சடித்து, அதைக்கொடுத்து, பாண்டு (Bond) பத்திரங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு அதை எரித்துப்போட்டு, இவ்விதம் நோட்டுகளை மாற்றிக்கொண்டான். அது ஒன்றே அவனால் செய்ய முடிந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் செய்ய வேண்டியதும் ஒன்றே ஒன்றுதான் (இது வில்லியம் பிரான்ஹாம் பேசுவது. இது என்னுடைய சொந்தக் கருத்து, நான் அவ்வாறு ஊகிக்கிறேன்) இயற்கையாக ஆலோசிப்போமானால், அது ஒருக்கால் லட்சக்கணக்கான மைல்கள் விலகியிருக்கலாம் - அந்தப் பணத்தில்... என்று நம்புகிறேன்... பொருளாசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது). அதுதான் காரியங்களைத் தொடங்கிவிடும் என்று நம்புகிறேன். கத்தோலிக்க சபை, ஆராதனை (Mass) போன்றவைகளுக்காக பணம் வாங்குகின்றது, உலகத்தின் செல்வத்தை அதனிடம் வைத்துள்ளது. அவள் ஐசுவரியமுள்ளவள் என்று வேதம் கூறுவது உங்களுக்கு ஞாபகமிருக் கிறதா? ஒரு தேசத்தில் மாத்திரமல்ல, வானத்தின் கீழுள்ள எல்லா தேசங்களிலும் அவள் ஐசுவரியமுள்ளவளாயிருக்கிறாள். அவள் பரவியிருக்கிறாள். அவளிடம் செல்வமுள்ளது. அவளிடம் இல்லாதது, யூதர்களின் ஆதிக்கம் கொண்ட ‘வால் தெரு’வில் (Wall Street) உள்ளது. யாக்கோபு திரும்பி வந்தபோது அவனிடம் பணமிருந்தது என்று சென்ற இரவு நாம் பார்த்தோம். அவன் இஸ்ரவேல், ஆனான் - அவனிடம் உண்மையாகவே பணம் இருந்தது. ஆனால் அவன் ஏசாவிடம் அதன் மூலம் எதையும் பெறமுடியவில்லை. ஏசாவிடமும் பணம் இருந்தது - பாருங்கள், முன்னடையாளமும் அதன் நிறைவேறுதலும் - பிழையின்றிப் பொருந்துகின்றது. இப்பொழுது கவனியுங்கள். அவர்கள் பணத்தையெல்லாம் ஒன்றாக சேர்க்க விரும்புவார்கள் என்றும் ரோம ஆதிக்கம் உடன்படிக்கையை முறித்து போட்டு, யூதர்களின் பணத்தை அபகரிக்கும் என்றும் கூறினேன். ஒருக்கால் அப்படி நிகழாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உடன்படிக்கையை முறித்துப் போடுவார்கள் என்று மாத்திரம் எனக்குத் தெரியும். என்ன காரணத்தினால் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில் அவர்கள் என்ன செய்வார்கள் என்று எனக்கு வெளிப்படுத்தப் படவில்லை. கவனியுங்கள். இன்றைக்கு.... நாம் இன்றைக்குச் செய்ய வேண்டிய ஒரே காரியம்.... நாம் வரிப் பணத்தை எடுத்துக் கொண்டு.... அது கூறுவது உண்மையாயிருக்குமானால், இன்னும் நாற்பது வருடத்தில் அது திரும்பச் செலுத்தப்பட வேண்டுமென்று... பாருங்கள், நம்முடைய தங்கம்... அதை நாம் செலவழித்துவிட்டோம். நாம் திவாலாகி விட்டோம். நம்மிடம் பணமில்லை. நம்முடைய முன் காலத்து நன்மதிப்பைக் கொண்டே நாம் வாழ்ந்து வருகிறோம். சபையும் அதையே இன்று செய்து வருகின்றது - மணவாட்டியல்ல. சபையும் சிங்கத்தின் காலத்தின் ஊழியத்தில் பெற்ற அந்த கீர்த்தியைக் கொண்டே இன்று வாழ்ந்து வருகின்றது. ‘நாங்கள் சபை, நாங்கள் தாய் சபை, நாங்கள் தொடங்கினோம்’ ... அது உண்மை, பாருங்கள்? அது முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழத்தலைப்படுகின்றது. மெதோடிஸ்டுகளும் அவ்வாறே முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்துவருகின்றனர். பாப்டிஸ்டுகளும் முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். பெந்தேகோஸ்தரும் தங்கள் ‘தேவனுக்கு மகிமை’ என்பதனால் வாழத்தலைப்படுகின்றனர். அனேக ஆண்டுகளுக்கு முன்பு பரிசுத்தவான்கள் ஆவியில் நடனமாடுவார்கள். ‘கர்த்தர் இதைச் செய்தார், அதைச் செய்தார்’ என்றெல்லாம் சாட்சியாகக் கூறுவார்கள். அவை முன்காலத்தில் நிகழ்ந்தவை. இப்பொழுது நாம் பெரியவர்களாகிவிட்டோம். சகோதரனே. ஓ என்னே! பாருங்கள்? - எல்லாம் முன்காலத்தில் பெற்றிருந்த நன்மதிப்பு. இந்த தேசமும், அதன் முற்பிதாக்கள் என்னவாயிருந்தனர் என்னும் முன்காலத்து நன்மதிப்பைக் கொண்டே வாழ்ந்து வருகின்றது. அதன் காரணமாக அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கின்றனர். இஸ்ரவேலர் முன் காலத்தில் என்னவாயிருந்தனர் என்பதற்கு தேவன் மதிப்பு கொடுக்கவில்லை. அக்காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையே அவர் பார்த்தார். கவனியுங்கள். இது தான் நடக்கும் என்று நினைக்கிறேன் (ஒருக்கால் அது அப்படியில்லாமலிருக்கலாம்). இந்தப் பிரச்சனையை உண்டாக்க நாம் நிர்ப்பந்தம் செய்யப்படும் காலம் வரும் என்று நினைக்கிறேன். நாம் பண நோட்டுகளை மாற்றுவதற்குப் பதிலாக .... அது ‘பிலிப் மாரிஸ்’ ஸுக்கு என்ன செய்யும்? விஸ்கி கம்பெனிகளுக்கு அது என்ன செய்யும்? எஃகு தொழிலுக்கு அது என்ன செய்யும்? வணிகத்துறை அனைத்திற்கும் அது என்ன செய்யும்? அது அவர்களை உடைத்துப் போடும். அவர்கள் பணமற்றவர்களாகி விடுவார்கள். அப்பொழுது நாம் அந்தப் பணத்தை கடன் வாங்கினால்... அவன் எவ்வளவு சமார்த்தியமுள்ளவன், பாருங்கள்? 29. ஒருவன் நமது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே, அவனுடைய மனச்சாட்சி கூறுபவைகளை அல்லது இக்கடைசிகால சத்தியத்தை எடுத்துரைத்தால், அவன் வேசியாகக் கருதப்படுவானா? ஒருவன்..... ஸ்தாபனத்தில் இருந்து கொண்டே.... சரி, ஸ்தாபனங்கள், பாருங்கள்... ஸ்தாபனங்களுக்கு பேச்சுரிமை அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கும் ஒருவனுடைய மனச்சாட்சிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஒருவன் உண்மையான விசுவாசியாக, தேவனுடைய ஆவியால் மறுபடியும் பிறந்தவனாக இருந்தால், என்றாவது ஒரு நாள் அவன் பேசக் கூடாதபடி தடைபண்ணப்படுவான். அது அவ்வளவு வெளிப்படையாக இருப்பதால், அவனால் அதைக் கண்டு கொள்ளாமலிருக்க முடியாது. நண்பர்களே, நீங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். எனக்குத் தெரிந்தவரைக்கும், தேவன் எக்காலத்திலும்.... ஒன்றைச் செய்ததில்லை... பாருங்கள். இயேசுவே அதற்கெல்லாம் பிரதானமாயிருந்து வந்துள்ளார். ஏனெனில் அவர் தேவன், அவர் மாமிசரூபம் கொண்ட இம்மானுவேல். இப்பொழுது, இந்த நபர் இயேசுவைப் பாருங்கள். அவர் இவ்வுலகிற்கு வந்த போது - நான் நினைக்கிறேன் - இவ்வுலகிலிருந்த பத்தில் ஒரு பாகம் பேர்கூட அவர் இவ்வுலகிலுள்ளதை அறிந்து கொள்ளவில்லை யென்பது உங்களுக்குத் தெரியுமா? மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், மற்றவையெல்லாம் சம்பவிக்கும் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட முன்னோடி இவ்வுலகில் தோன்றினபோது, இஸ்ரவேல் ஜனத்தொகையில் - நான் நினைக்கிறேன் - நூறில் ஒரு பாகம் கூட அதை அறிந்து கொள்ளவில்லையென்பது உங்களுக்குத் தெரியுமா? அது விசித்திரமாயில்லையா? ஏன், யூதர்களும் இதர ஜனங்களும் உலகம் பூராவும் அப்பொழுது இருந்தனர். இவ்வுலகில் இரட்சகர் அவர் என்று சாட்சி கொடுக்க இயேசு தோன்றினார் என்பது நினைவிருக்கட்டும். அது சரியா? ஏன், ஜனங்களுக்கு பின் ஜனங்கள், ஜாதிகளுக்கு பின் ஜாதிகள் அனேகர் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. ஆயினும் இவ்வுலகில் அது நடந்து கொணடேயிருந்தது. அவர் ஏன் மற்றவர்கள் அதை அறிந்து கொள்ளச் செய்யவில்லை? அவர் வந்தார், நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவர் மாத்திரமே அவரை ஏற்றுக் கொண்டனர். மற்றவர்களுக்கு இதைக் குறித்து அறிவிப்பதால் எவ்வித உபயோகமுமில்லை. ஏனெனில் அவர்களை அவர் மீட்டிருக்க முடியாது, அவர்கள் மீட்கப்படத்தக்கவர்கள் அல்ல. ஏன் அந்த ஆசாரியர்கள் அங்கு நின்று கொண்டிருந்தபோது.... அவர் ஏன் அந்த இடத்திற்கு வரவேண்டும்? ஏனெனில் முன்குறிக்கப்பட்டவர்கள் அங்கு சுற்றிலும் இருந்தனர். எனவே ஒரு குழுவுக்கு அவர் பிரசங்கம் செய்ய நேர்ந்தது. அவர் யாரென்பதை அறிந்திருக்க வேண்டிய மகத்தான பண்டிதர்கள், ‘இந்த மனிதன் பெயல்செபூல். இவன் எங்கள் மேல் ஆளுகை செய்யவிட மாட்டோம்’ என்றெல்லாம் கூறினர். ஆனால் ஒரு சிறிய வேசி - அவளுக்குள் ஜீவன் இருந்தது, அவள் நித்திய ஜீவனுக்கென்று முன்குறிக்கப்பட்டவளாயிருந்தாள் - அவள் நெறிதவறியவள் என்னும் பெயர் கொண்டிருந்தாள். தேவனுடைய வார்த்தை அவளிடம் நடந்து சென்ற போது, அவளுக்குள் இருந்த வித்தின் மேல் முதன்முறையாக வெளிச்சம் பட்டது. அவள் உடனே அறிந்து கொண்டாள். அந்த மீன்பிடிப்பவன் அங்கு வந்தான். இயேசு அங்கு அனேக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, அனேகருடைய இருதயங்களிலுள்ள இரகசியங்களையறிந்து கூறி, தம்மை வெளிப் படுத்திக் கொண்டிருந்தார். அதைக் கண்ட பரிசேயர்கள், ‘இந்த மனிதன் பெயல்செபூல்’ என்றனர். அவர்களுடைய சபையோருக்கு அவர்கள் பதில் கூறவேண்டியவர்களா யிருந்தனர். சபையோர் அங்கு நின்று கொண்டு, ‘டாக்டர் ஜோன்ஸ் அவர்களே, அங்கு சென்று அவர் கூறுவதைக் கேட்பீர்களா? அவர் என்ன பேசுகிறார் என்பதை அறிந்தவராக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல’ என்றனர். ‘அவர் பேசுவதை நான் கேட்க மாட்டேன்’ என்று அவர் மறுத்துவிட்டு அங்கிருந்து நடந்து சென்று விட்டார். கர்த்தர் அப்படிப்பட்டவருக்குள் வரமுடியாது. இயேசு அங்கு நின்று கொண்டு, ‘பாருங்கள், பாருங்கள் அங்கு ஒரு மனிதன் வருகிறான்.... அதோ அவருடைய சீஷர்களில் ஒருவன் .... அங்கு ஒரு மனிதன் வருகிறான்.... அவன் பெயர்.... அந்திரேயா’ என்கிறார். அங்கிருந்தவர்கள், அங்கிருக்கும் செம்படவர்களை உங்களுக்குத் தெரியுமல்லவா? அது சீமோனும் அவன் சகோதரர்களும், அவர்கள் அந்த வயோதிப யோனாவின் குமாரர்கள்..... வேறு யாரோ ஒருவனை அவர் தம்மிடம் வரவழைக்கிறார். அது யார்? அவர் என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்!’ என்கிறார்கள். அடுத்தபடியாக ஒருவன் அவர் அருகாமையில் வருகிறான். அவர், ‘உன் பெயர் சீமோன், நீ யோனாவின் குமாரன்’ என்று உரைக்கிறார். ஆனால் பரிசேயர் போன்றவர்களோ, ‘இந்த மனிதன் பெயல்செபூப். அவன் மீது ஒரு வகையான ஆவி தங்கியுள்ளது. அவன் விசித்திர மானவன். அவன் பேசுவதை நீங்கள் கேட்க வேண்டாம். அதை விட்டு அகன்று செல்லுங்கள். அவன் நடத்தும் வேறு எந்த கூட்டத்துக்கும் நான் இனிமேல் வரமாட்டேன். இது முடிந்தவுடன் நாம் இங்கிருந்து சென்று விடுவோம்’ என்றெல்லாம் கூறினர். ஏன் அவ்விதமாகவே அவர்கள் அவரைக் கருதினர். பாருங்கள் அவரிடம் வந்தவர்கள் தான் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். ஆனால் எல்லாரும் உதைத்துத் தள்ளிய வேசி அங்கிருந்தாள். நான் வேசித்தனத்தை ஆதரிப்பதாக எண்ணவேண்டாம் (இல்லவே இல்லை). முன்குறிக்கப்பட்ட வித்தை நான் உங்களுக்கு எடுத்துக் காண்பிக்கிறேன். இந்த மீன் பிடிப்பவனைப் பாருங்கள். அவன் படிப்பறியாதவன் என்று வேதம் உரைக்கின்றது. (அது சரியா?). அது மாத்திரமல்ல. அவன் பேதமையுள்ளவன்! அது சரியா, தவறா? நாம் அறிந்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அனேக காரியங்களைக் குறித்து நாம் மாத்திரம் பேதமையுள்ளவராயிருந்தால்! சரி, அவன் பேதமையுள்ளவனும் படிப்பறியாதவனுமாயிருந்தான். அவன் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்திற்கு நடந்து சென்றான். அவன் யாரென்று இயேசு பகுத்தறிந்து கூறினார் அந்த நேரத்திலேயே அது முடிவு பெற்றது. அதைக் குறித்து தர்க்கம் செய்யும் மற்றவனைக் கவனியுங்கள். ‘பாருங்கள் அவன் விசுவாசித்தான். அவன் யாரென்று கவனியுங்கள். அவன் யார் தெரியுமா? அவன் ஒரு செம்படவன். அவனுக்கு மொழியின் முதல் அட்சரங்கள்கூட தெரியாது, அவனிடம் நான் மீன் வாங்கியிருக் கிறேன். ரசீதில் கையொப்பமிடக்கூட அவனுக்குத் தெரியாது. அப்படிப் பட்டவர்கள்தான் இத்தகைய காரியங்களுக்கு செவிகொடுப் பார்கள்’ (கர்த்தருக்கு ஸ்தோத்திரம்) ‘அவனுக்கு .... அவனுடைய தகப்பனாரைப் பாருங்கள். அவனும் பேதமையுள்ளவன். அவன் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவேயில்லை. ஆனால் அப்படிப்பட்ட ஒருவனை தேவனே தம் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி, அவர் விரும்பும் முறையில் அவனைப் படிக்க வைக்கிறார். பள்ளிக்கூடத்திற்குப் போகாதிருப்பதை நான் ஆதரிக்கவில்லை. (நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்). அதை உதாரணமாக மாத்திரம் கூறுகின்றேன் - அந்த பள்ளிக்கூடங்களில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதைக் குறித்து. அத்தகைய காரியங்கள் - அது அவர்கள் அறிவுக்கெட்டாததனால். உங்களுக்கு தெரியுமா? நாட்டில் இருந்த யூதர்களில் மூன்றில் ஒரு பாகம்கூட அவர் வந்திருப்பதை குறித்து அறிந்திருக்கவில்லை. அந்த மூன்றில் ஒரு பாகத்தில் ஐந்தில் ஒரு பாகம் மாத்திரமே அவருடைய பிரசங்கங்களைக் கேட்டனர். அந்த ஐந்தில் ஒரு பாகத்தில் நூறில் ஒரு பாகம் மாத்திரமே அதை ஏற்றுக் கொண்டனர். அவருக்கு எத்தனைபேர் இருந்தார்களென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் அனைவரில் பன்னிரண்டு பேர் மாத்திரமே அவருக்கு சிலுவையினண்டையில் இருந்தனர். மற்றவர்கள் எங்கே? அந்த எழுபது பேர் சென்று விட்டார்கள். அவர் வியாதியஸ்தர்களைக் சுகப்படுத்தி தமது போதகத்தைக் குறித்து ஒன்றும் சொல்லாமலிருந்த சமயங்களில் .... அவர் வியாதியஸ்தர்களைக் சுகப்படுத்தினவராய் சுற்றித்திரிந்தார்.... ஓ,என்னே, அது அவர்மேல் தங்கியிருந்த தேவனுடைய ஆவியாகும். அதை நீங்கள் நம்புகிறீர்களா? அவர் வியாதியஸ்தர்களைக் சுகப்படுத்தின போது, ‘அற்புதம்’ என்று எல்லோரும் பாராட்டினார்கள். ‘ரபீ’ அது மிகவும் மகத்தான காரியம். சகோதரரே, நீங்கள் அவரை உங்கள் சபைக்கு அழைக்க வேண்டும். வல்லமையைக் குறித்து நீங்கள் பேசினால், அந்த மனிதன் உண்மையாகவே வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தும் வல்லமை கொண்டிருக்கிறார்’ என்றெல்லாம் அவரைப் பாராட்டினார்கள். சரி, போலியாட்கள் எழும்பத்தான் செய்வார்கள். (இதோ அவர்கள் வருகிறார்கள்).... ஏனெனில் ஒவ்வொரு குழுவும் உங்கள் சொந்த மனிதரைக் கொண்டிருக்க வேண்டும். இதோ அவன் வருகிறான். முதலாவது நடந்தது என்னவென்றால், ஒருநாள் அவர் உட்கார்ந்து கொண்டிருந்தார். ‘ரபீ, நாங்கள் உம்முடன் வர மனதாயிருக்கிறோம்’ ‘சரி, உட்காருங்கள், நாம் போகலாம். அவர் எழுபது பேர்களை அனுப்பினார். ஒருநாள், ஒரு மகத்தான அற்புதத்தை அவர் செய்த பின்பு, அவர் உட்கார்ந்து அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை விவரிக்கக் தொடங்கினார். ஏழாம் தூதனின் சத்தத்தின்போது.... சரி, அவர் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தையை - சத்தியத்தை - எடுத்துரைக்கத் தொடங்கினார். அவர்கள், ‘ஆஆஆ சற்று பொறுங்கள் இதைக் குறித்து எனக்குத் தெரியாது. இது போதகங்களுக்கு முரணாய் அமைந்துள்ளது’ என்றனர் அவர்கள் மேலும், ‘சரி, நாம் தேவாலயத்தை (Synagogue) விட்டுவிட்டு வந்தோம். சகோதரரே, ஒருக்கால் நாம் தவறு செய்திருக்கக்கூடும். நாம் திரும்பிச் சென்று விடுவது நல்லது. ஏனெனில் இந்த மனிதன் புதிர்போட்டு பேசுகிறார். அவர் ஒரு விசித்திரமான மனிதன். அதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றனர். பாருங்கள்? அது என்ன? - அந்த வித்து முன் குறிக்கப்படவில்லை. அது உண்மை. முதலில் அவர்கள் செய்தது என்னவென்றால் அவர்கள் போதகர் குழு ஒன்றை அமைத்து, அந்தப் போதகர்களிடம் பேசினார்கள். அவர்கள், ‘ஆஆஆ, உம்மம்ம், நாம் திரும்பி போய்விடுவது நல்லது. நாம் திரும்பிச் சென்று நமது ஸ்தாபனங்களை அடைந்து, நமது பத்திரங்களை மீண்டும் எடுத்துக் கொள்வோம் - அப்படிப்பட்ட ஒரு மனிதனை யார் புரிந்து கொள்ளக்கூடும்? இங்கு ஒருவிதமாகவும் அங்கு ஒருவிதமாகவும் அவர் கூறுகிறார்’ என்றார்கள். சிலரிடம் அவர் புதிராகப் பேசினார். மற்றவர்களிடம் அல்ல. எனவே அவர்கள் சென்றுவிட்டார்கள். அப்பொழுது அவர் திரும்பி, பன்னிரு வரையும் நோக்கி, ‘நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ?’ என்று கேட்டார். இப்பொழுது கவனியுங்கள். பேதுரு, ‘உங்களுக்குத் தெரியுமா? அந்த இடத்தில் நான் சென்றிருந்தேன். நான் வேறு எங்கு செல்ல முடியும்? உலகில் வேறெந்த இடத்திற்கு நான் செல்ல முடியும்? உலகத்தின் குப்பைகள் நிரம்பிய அந்த குப்பை களத்திற்கு நான் மறுபடியும் செல்ல முடியாது. வேறெங்கு நான் செல்வேன்? என்னால் முடியாது’ என்றான். அப்பொழுது இயேசு, ‘அப்படியானால் சரி, என்னுடன் வா’ என்றார். பார்த்தீர்களா? இருபத்தைந்து லட்சம் மக்களிடையே பன்னிரண்டு பேர் மாத்திரமே. லட்சக்கணக்கான மக்களிலிருந்து உலகத்தின் இரட்சகர்.... தாழ்மையுள்ளவர்களாயிருங்கள், தாழ்மையில் நிலைத்திருங்கள், கவனியுங்கள், பரிசேயர் அனைவரும் இருந்த போதிலும், அந்த வேசி அங்கு வந்து, ‘நீர் தீர்க்கதரிசியென்று காண்கிறேன். மேசியா வருவாரென்று அறிவேன். அவர் வரும்போது இவைகளைச் செய்வார்’ என்றாள். இயேசு, ‘நானே அவர்’ என்றார். அவள், ‘ஆம், அது உண்மை’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள், அவளை ஒரு முறையாவது நிறுத்தப் பாருங்கள், உங்களால் முடியாது. 30. சகோதரன் பிரான்ஹாமே, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல்கள். மத்தேயு 22.11ல் உள்ள மனிதன் யாரென்பதை விளக்கமாய் கூறுங்கள் -அதாவது கலியாண வஸ்திரம் தரிக்காத மனிதன்.... கல்யாண வஸ்திரமில்லாமல் இந்த மனிதன் பரலோகத்திற்குச் செல்ல முடியாது என்று நானறிவேன். அவன் விருந்தாளியென்று எனக்குத் தெரியும், மணவாட்டியல்ல. ஆம், அது சரி, அவன் என்ன நடக்கின்றதென்பதைக் காணமெல்ல உள்ளே நழுவிச் சென்றான். கவனியுங்கள். அதைக் குறித்து ஒரு முழு பிரசங்கமே செய்யலாம். வியாதியஸ்தர்களுக்கு ஜெபம் செய்து முடிக்க எனக்கு பத்து நிமிடங்கள் மாத்திரமேயுள்ளது. நான் இன்னும் கேள்விகளில் பாதிகூட முடிக்கவில்லை. (இந்த கேள்விகளுக்குப் பின்பு மற்றெல்லாவற்றையும் துரிதமாக முடிக்கப் போகின்றேன்.) இதுதான் நடந்தது. நீங்கள் கிழக்கத்திய நாடுகளின் பழக்கவழக் கங்களை அறிந்திருப்பீர்களானால், ஒரு மணமகன் தன் விவாகத்திற்காக அனேக அழைப்புகளை அனுப்புகிறான். அவன் அனுப்பியுள்ள ஒவ்வொரு அழைப்பிற்கும், அவன் ஒரு ஆளை ஒரு அங்கியுடன் கதவண்டையில் நிற்கச் செய்கிறான் - அழைப்புக்கிணங்கி வருபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எளியவராயிருந்தாலும், பணக்காரராயிருந்தாலும், அவர்கள் அனைவருமே அந்த கலியாண வஸ்திரத்தைத் தரித்துக் கொள்ள வேண்டும். அந்த ஆட்கள் கதவண்டையில் நின்று கொண்டு, கலியாணத்துக்கு வருபவர்களுக்கு அங்கியை உடுத்துவித்தனர். அவனுடைய வெளித் தோற்றத்தை அது மறைத்தது. அவன் கோடீசுவரனாக இருந்தாலும் சரி, மிகவும் ஏழ்மையானவனாக இருந்தாலும் சரி, விவசாயியாக இருந்தாலும் சரி, குழி வெட்டுபவனாயினும் சரி, இராஜகுடும்பத்து தனவந்தனா யிருந்தாலும் சரி (Plutocrat), அவர்களெல்லாரும் அந்த அங்கியை அணிந்தவராக அங்கு இருக்கின்றனர், ஏனெனில் அவன் வாசலில் நுழையும் முன்பு, அது அவனுக்கு அணிவிக்கப்படுகிறது. இப்பொழுது யோவான் 10ம் அதிகாரத்தைப் பாருங்கள், அந்த அதிகாரம்தான் என்று நினைக்கிறேன். ‘நானே வாசல்’ என்று அவர் அங்கு கூறியுள்ளார். (யோவான் 10.9) ‘நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால்....’ கலியாணத்திற்கு வருபவன் வாசலண்டை நிற்கிறாள். அங்குள்ள மனிதன் அவனுக்கு அங்கியை - பரிசுத்த ஆவியை - அணிவிக்கிறான். அவன் நுழையும்போது நீதியின் வஸ்திரத்தை அவனுக்குத் தருகிறான். நாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனிதன் ஏதோ ஒரு ஸ்தாபனத்தைச் சேர்ந்தவன். அவன் பக்கவழியாக நுழைந்து - ஜன்னலின் வழியாகவோ அல்லது நுழையக்கூடிய ஒரு துவாரத்தின் வழியாகவோ நுழைந்து - மேசையை அடைந்து அங்கு உட்கார்ந்துவிட்டான். மணவாளன் இங்கு வந்து சுற்றுமுற்றும் பார்த்த போது.... வித்தியாசமான வாத்துக்கள் முன்புண்டாயிருந்தன. இப்பொழுது இவன் வித்தியாசமான வாத்தாக இருக்கிறான். ‘பரிசுத்த ஆவியின் அபிஷேகம், இன்னும் மற்றவை, இல்லாமல் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்? நீ எப்படி உள்ளே வந்தாய்?’ என்று கேட்கிறான். எப்படியோ அவன் பக்கவழியாக நுழைந்து வந்தான். சரியான அழைப்பில்லாமல் அவன் வந்துவிட்டான். பாருங்கள்? அவன் கல்வி முறை போன்ற வழியில் வந்து உள்ளே நுழைந்து விட்டான். ‘அவனைக் கட்டிக்கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள்’ என்று அவன் கட்டளையிட்டான். அவன் உபத்திரவகாலத்திற்குள் சென்று விடுகின்றான். அவன் வாசலின் வழியாக உட்பிரவேசிக்கவில்லை. 31. மல்கியா 4ல் கூறப்பட்ட எலியாவும், வெளிப்படுத்தல் 11.3ல் உரைக்கப்பட்ட எலியாவும் ஒருவரா? மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா? ஆம், மல்கியா 4ன் எலியா மல்கியா 3ன் எலியாவல்ல. அதை நாம் நேற்றிரவு பார்த்தோம். ‘மற்ற இரண்டு சாட்சிகளும் வெவ்வேறு நபர்களா? - ஆம், இண்டு பேர், எனக்குள்ள வெளிப்பாட்டின்படி அவர்கள் மோசேயும் எலியாவும் (இதில் அதிக நேரம் நிலைத்திருக்க விரும்ப வில்லை.) 32. 1 இராஜாக்கள் 19.... பாகாலுக்கு முன்பாக முழங்காற்படி யாதவரின் எண்ணிக்கை.... ஆம், நன்றி. எழுநூறு பேருக்கு பதிலாக ஏழாயிரம்.... ஏழாயிரம் பேருக்கு பதிலாக எழுநூறு, அதை கவனித்தீர்களா? பாருங்கள். ஒரு மனிதன் இவ்விதம் பிரசங்கம் செய்ய வரும்போது... எலியா வனாந்தரத்திலிருந்து வந்தபோது, அவனிடம் ஒரு செய்தி உண்டாயிருந்தது. அவன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு நேரடியாக ராஜாவிடம் சென்று, ‘என் வாக்கின்படியே அன்றி, வானத்திலிருந்து பனியும்கூட பெய்யாதிருக்கும்’ என்றான். அந்த வார்த்தையே அவனுக்கு உண்டாயிருந்தது. அதைக் கூறிவிட்டு, மற்ற யாரிடமும் வேறொன்றையும் கூறாமல் திரும்பிச் சென்றுவிட்டான். வேறொரு செய்தி அவனுக்குண்டான போது, அவன் புறப்பட்டு வந்து அந்த செய்தியை உரைத்துவிட்டு, திரும்பவும் வனாந்தரத்துக்கு சென்றுவிட்டான். பாருங்கள்? இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களானால், நான் இந்த கூடாரத்திற்கு மூலைக்கல்லை நாட்டினபோது அவர், ‘ஒரு சுவிசேஷகனுடைய ஊழியத்தைச் செய்’ என்று கூறினார். அந்த ஊழியம் என்னை விட்டு எடுக்கப்பட்டு, வேறொன்று நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நான் இங்கு வந்து சுவிசேஷகனின் ஊழியத்தைச் செய்து, நீங்கள் எதுவரைக்கும் வந்திருக்கிறீர்கள் என்று கண்டு கொண்டிருக்கிறேன்! இதைப் புரிந்துகொள்ள சபை போதிய அளவுக்கு ஆவிக்குரியதாயிருக்குமென்று எதிர்பார்க்கிறேன். 33. சகோதரன் பிரான்ஹாமே, எலியா மூன்று முறை வரவேண்டுமென்று அறிகிறேன். அவன் ஏற்கனவே இருமுறை வந்து விட்டானென்றும், அவன் மறுபடியும் வருவானேன்றும் நீர் கூறுகின்றீர். அந்த எலியாவின் ஆவியைத் தன் மீது கொண்டுள்ளவன், இரண்டு பேர்களாகிய மோசே, எலியா என்பவர்களில் ஒருவனாக இருப்பானா? இல்லை, இல்லை, அவன் புறஜாதி சபைக்கு அனுப்பப்படும் புறஜாதியாயிருப்பான், தேவன் தமக்குச் சொந்தமானவர்களிடமே எப்பொழுதும் அனுப்புகிறார். அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எப்பொழுதும் அனுப்புகிறார்... அந்நேரத்தின் செய்தியை.... தேவன் யூதர்களுடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, எந்த புறஜாதி தீர்க்கதரிசியும் அப்பொழுது தோன்றவில்லை. அவ்வாறே தேவன் புறஜாதிகளுடன் தொடர்பு கொள்ளும்போது, யூத தீர்க்கதரிசிகள் வருவதில்லை. தேவன் மறுபடியுமாக யூதர்களிடம் திரும்பும்போது, அப்பொழுது புறஜாதி தீர்க்கதரிசிகள் இருக்கமாட்டார்கள். நான் கூறுவது புரிகின்றதா? சரி. 34. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு..... ஆம். ஒன்றிலிருந்து மற்றொன்றிக்கு மாறுவதற்கு முன்பாக ஒரு இடை சமயம் உண்டாயிருக்கும் - ஒரு செய்தியிலிருந்து வேறொரு செய்திக்குப் போவதற்கு முன்பு நான் உங்களுக்கு ஏற்கனவே விவரித்துக் கூறின விதமாக! பவுல் புறஜாதிகளிடம் சென்றது போன்று. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எடுத்துக்கொள்ளப் படுதலில் பங்கு கொள்ளாத சபை ஏதாவது முடிவில் இரட்சிக்கப்படுமா? இல்லை, ஊஹும், ஏனெனில் இரத்தம் போய்விட்டது. பாருங்கள். அப்பொழுது பரிந்து பேசுதல் இராது - புறஜாதியாரின் காலம் முடிவடைந்து விட்டது. எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்த பின்பு, எந்த ஒரு சபையும் இரட்சிப்படைய முடியாது. ஊஹும் சபை.... ‘அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்’ சபை எடுக்கப்பட்ட பின்னர் அப்படியொன்றும் நிகழாது. 35. சகோதரன் பிரான்ஹாமே, முதலாம் முத்திரையின் பிரசங்கத்தின் தானியேலின் எழுபது வாரங்களைக் குறித்து நீங்கள் குறிப்பிடுவதை நான் கவனித்தேன். தானியேலைக் குறித்த ஒலிநாடாவில், சுவிசேஷம் யூதர்களிடம் திரும்பும் போது, எழுபது வாரங்கள் தொடங்கும் என்பதாக அறிகிறேன். யூதர்களுக்கு - ஒரு வாரம் - ஏழு வருடங்கள்விடப்பட்டுள்ளதா? அல்லது வாரத்தின் பாதி மாத்திரமே - மூன்றரை ஆண்டுகள் - விடப்பட்டுள்ளதா? வாரத்தின் பாதி மாத்திரம் - தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபடி, இயேசு வாரத்தின் முதல் பாதியில் தீர்க்கதரிசனம் உரைத்தார் - இன்னும் ஒரு பாதி மாத்திரமே அவர்களுக்கு விடப்பட்டுள்ளது. 36. சகோதரன் பிரான்ஹாமே, வியாதியஸ்தர்களுக்காக இவ்வாரம் நீங்கள் ஜெபம் செய்யாததால், நீங்கள்.... அது ஒரு வேண்டுகோள். 37. சகோதரன் பிரான்ஹாமே, ஆராதனைக்குப் பிறகு என்னைச் சற்று காண்பீர்களா? அது ஒரு வேண்டுகோள். 38. சாத்தான் ஆயிரம் வருஷம் கட்டப்பட்டு வெளிப்படுத்தல் 20.8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்காக அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். இதற்கும் நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ள அர்மெகதான் யுத்தத்திற்கும் என்ன சம்மபந்தம்? புதிய பூமியிலுள்ள மனிதர்களிலிருந்து கோகும் மாகோகும் சேர்க்கப் படுவார்களா? இது நீண்ட ஒன்றாகும். நான் அதை ஆணித்தரமாக கூறவேண்டும். ஒருக்கால் என்னால் சரிவர இதை விவரிக்கக்கூடாமல் இருக்கலாம். என்னால் இயன்றவரை விவரிக்கிறேன். 38a. சாத்தான் ஆயிர வருஷம் கட்டப்பட்டு, வெளிப்படுத்தல் 20.8ல் கூறப்பட்டுள்ள யுத்தத்திற்கு அவிழ்த்து விடப்படுவதைக் குறித்து தயவுசெய்து விவரிக்கவும். அது அர்மெகதான் யுத்தம் அல்ல. அந்த யுத்தம் இந்தப்பக்கத்தில் நடக்கிறது. (அதாவது ஆயிரம் வருட அரசாட்சிக்கு முன்பு என்று குறிப் பிடுகிறார் - தமிழாக்கியோன்) - உபத்திரவகாலம் முடிவடைந்தவுடன்/ 38b. கோகு மாகோகு யுத்தத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமில்லை. ஒன்று ஆயிர வருட அரசாட்சிக்கு முன்பு, மற்றொன்று ஆயிர வருட அரசாட்சிக்குப் பின்பு. 38c. நான்காம் முத்திரையில் கூறப்பட்டுள்ளபடி, புதிய பூமியில் வாழும் மக்களினின்று கோகும் மாகோகும் சேர்க்கப்படுவார்களா? சாத்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, பொல்லாதவர் அனைவரையும் ஒன்று கூட்டி இந்த இடத்திற்கு அழைத்து வர புறப்பட்டுச் செல்கிறான். கர்த்தர் அப்பொழுது வானத்திலிருந்து அக்கியையும் கல்மழையையும் வருஷிக்கச் செய்கின்றார், அவர்கள் எரிந்துபோயினர் - ஆகமொத்தம் இரண்டு யுத்தங்கள். 39. ரோமன் கத்தோலிக்க சபையினரால் கொல்லப்பட்ட ஆறு கோடியே எண்பது இலட்சம் பேர். சரித்திரத்தில் எந்த சமயத்தில் கொல்லப்பட்டனர்? அது எவ்வளவு காலம் நீடித்தது? ஸ்மக்கர் என்பவர் எழுதியுள்ள ‘மகிமையான சீர்திருத்தம்’ என்னும் புத்தகத்தை வாசியுங்கள். சில கல்விமான்கள் அதை வைத்திருக் கின்றனர் என்று நினைக்கிறேன். அது சபையின் சரித்திரமாகும். அது எந்தபக்கத்திலுள்ளது என எனக்கு ஞாபகமில்லை. ஆனால் அது ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போ நாட்டவரான பரி. அகஸ்டின் என்பவரால் தொடங்கப்பட்டு சபைக்கு அளிக்கப்பட்டது. அது கி.பி. 354ல் தொடங்கி, கி.பி. 1850 வரை - அயர்லாந்தில் நேர்ந்த படுகொலைவரை - நீடித்தது. எனவே கி.பி. 354லிலிருந்து கி.பி. 1850 வரை, ரோமாபுரியுடன் போப்பாண்டவருடன் இணங்காததன் காரணத்திற்காக ஆறு கோடியே எண்பது லட்சம் பிராடெஸ்டெண்டுகள் கொல்லப்பட்டனர் என்று ரோமர் இரத்தசாட்சிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இது சரித்திரமாகும். அது தவறென்னு நீங்கள் கூறமுற்பட்டால், நீங்கள் ஜார்ஜ் வாஷிங்டன் அல்லது லின்கன் என்பவர்கள் இல்லவே இல்லை என்றும் கூட கூறலாம் (ஏனெனில் அதைக்காண நாம் அப்பொழுது பிறக்கவில்லை). அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்தனர் என்று நம்புகிறேன். அவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. 40. சகோதரன் பிரான்ஹாமே, 1 இராஜாக்கள் 19.18ம் வசனத்தில் ‘ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ் செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம் பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்’ என்று எழுதப்பட்டுள்ளது! அந்த எழு நூறைக் குறித்து தயவு செய்து விவரிக்கவும். அது ஏழாயிரம் தான், பாருங்கள். அவர்கள் பாகாலை முத்தம் செய்வதில்லை. இங்குள்ள உங்களில் எத்தனை பேர் முன்பு, கத்தோலிக் கராயிருந்தீர்கள்? நீங்கள் சிலைகளை முத்தம் செய்திருப்பீர்கள், பாபிலோன், நேபுகாத்நேச்சார் காலத்தில், புறஜாதி ராஜ்யம் உண்டாயிருந்த போது, ஒரு மனிதனை வழிபடும் வழக்கம் இருந்து வந்தது. நேபுகாத்நேச்சார் ஒரு மனிதனின் சொரூபத்தை உண்டாக்கினான். உங்களுக்கு ஆவிக்குரிய சிந்தை இருக்குமானால்... (இந்த வெளிப்பாட்டைக் கவனமாய் கேளுங்கள்). அவன் தனக்குக் கிடைத்த வெளிப்பாட்டின்படி தானியேலின் சொரூபத்தை உண்டுபண்ணினான் - பக்தியுள்ள ஒரு மனிதனை வழிபடுதல் (பார்த்தீர்களா?) ஏனெனில் தானியேலுக்கு அவன் பெல்தெஷாத்கார் என்று பெயர் சூட்டினான். அதுவே அவனுடைய தெய்வத்தின் நாமமாயிருந்தது. அந்த தெய்வத்துக்கு அவன் சொரூபத்தை உண்டுபண்ணினான் - அதுவே தானியேலின் சொரூபமாகும். தானியேல் தன் சொந்த சொரூபத்துக்கு முன்பாக வணங்க மறுத்தான். அதே வழக்கம் மறுபடியும் நம்மிடையே உள்ளது. இப்பொழுது கவனியுங்கள். நேபுகாத்நேச்சார் என்னும் அரசனின் மூலமாய் பாபிலோனின் நாட்களில் புறஜாதி ராஜ்யம் தோன்றினது. இந்த அரசன் பரிசுத்தமுள்ள மனிதன் ஒருவனின் சிலையை உண்டுபண்ணி, ஜனங்களெல்லோரும் அதை வணங்க வேண்டுமென்று நிர்ப்பந்தம் செய்து, சபையையும் அரசாங்கத்தையும் ஒருங்கே இணைத்தான். புறஜாதி ராஜ்யம் சொரூபத்தின் பாதங்களில் உண்டாகி, கையெழுத்து சுவரில் தோன்றினது. அப்பொழுது அரசியல் ஆதிக்கம் சபையையும் அரசாங்கத்தையும் ஒன்றுபடுத்தி சிலைகளை முத்தம் செய்ய நிர்ப்பந்தம் செய்தது - பரிசுத்த மனிதனின் சிலை,உண்மையாக. 41. சகோதரன் பிரான்ஹாமே, எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழும்போது, சரியானவைகளுக்கும் தவறானவைகளுக்கும் வித்தியாசம் அறியாத இச்சிறு பிள்ளைகள் அதில் செல்வார்களா? அவர்களுடைய பெயர்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், அது சரி. 42. சகோதரன் பிரான்ஹாமே, எலியாவின் பிரசங்கத்தின் மூலம் எழுநூறு பேர் இரட்சிக்கப்பட்டனர் என்று சென்ற இரவு கூறினீர்கள். நீங்கள் அர்த்தம் கொண்டது ஏழாயிரம் பேர் அல்லவா? ஆம், அது சரி அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். அது சரி,நான் அவ்விதம் கூறினேன். 43. சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் ஏழு முத்திரைகளை திறந்த பிறகு, கிருபையின் காலம் முடிவு பெறுமா? இல்லையென்று நம்புகிறேன். இல்லை, இல்லை, நண்பர்களே, அவ்வித கருத்தை உங்கள் சிந்தையில் கொள்ளவேண்டாம். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். உருளைக்கிழங்கு தோண்டுங்கள். சபைக்குச் செல்லுங்கள். இவ்விதம் தொடர்ந்து சென்று கொண்டிருங்கள். அது இன்று காலை சம்பவிக்குமானால், நீங்கள் செய்யவேண்டிய காரியங்களைச் செய்து கொண்டிருப்பவர்களாக காணப்பட வேண்டும். அவ்விதம் நீங்கள் வியாக்கியானம் செய்தால், அது எதற்கென்று குறிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அவமாக்குபவர்களாவீர்கள். அதைப்பற்றி சில விசித்திரமான உங்கள் சொந்த கருத்துக்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அமர்ந்திருந்து அத்தகைய காரியங்களைக் கேட்கும்போது, ‘நன்றி, ஆண்டவரே, நான் இன்னும் சற்று அருகாமையில் உம்முடன் நடக்கப் போகின்றேன்’ என்று கூறுங்கள். நீங்கள் செய்யும் வேலையிலிருந்து நின்று விட்டு, ‘நான் எல்லாவற்றையும் விற்றுவிடப் போகின்றேன்’ என்று கூறவேண்டாம். நாங்கள் இங்கிருந்து செல்வதற்குச் சற்று முன்பாக, ஒருநாள் வடக்கு கரோலினாவிலிருந்து ஒரு மனிதன் என்னிடம் ஓடோடி வந்து, ‘கர்த்தருக்கு மகிமை! அந்த மகத்தான இன்னார் எங்கிருக்கிறார் என்று தெரியுமா?’ என்று வினவினார். நான் ‘எனக்குத் தெரியாது’ என்று விடையளித்தேன். ‘அவர் ஆடியோ மிஷன் (Audio mission) நிர்வாகத்தின் தலைவர்’ என்றான் அவர். நான், ‘எது?’ என்று கேட்டேன். அவர், ‘ஆடியோ மிஷன்’ என்றார். நான், ‘எனக்குப் புரியவில்லை’ என்றேன். அவரோ ‘ஓ, இந்த மனிதர் அதற்குத் தலைவர்’ என்றார். நான் ‘அவருடைய பெயர் என்னவென்று சொன்னீர்கள்?’ என்று கேட்டேன். அவர், ‘ப்ரௌன் (Brown) அல்லது பிரான்ஹாம் (Branham) என்று நினைக்கிறேன்’ என்றார். ‘என்னுடைய பெயர் தான் பிரான்ஹாம்’ என்று பதிலளித்தேன். ‘நீங்கள் ஆடியோ மிஷனின் தலைவரா’ என்று அவர் கேட்டார், நான், ‘இல்லை, ஐயா’ என்றேன். அவர், ‘இப்பொழுது ஆயிரம் வருட அரசாட்சி எங்குள்ளது?’ என்று வினவினார். நான், ‘எனக்குத் தெரியாது’ என்று விடையளித்தேன். அவர், ‘அது இப்பொழுது இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் அதை அறியாமலிருக்கிறீர்கள்’ என்றார். நான், ‘இல்லை ஐயா, எனக்குத் தெரியாது’ என்று கூறினேன். அவர், ‘தேவனுக்கு மகிமை, சில நண்பர்கள் என்னிடம் வந்து அதைக் குறித்துக் கூறினர். நான் வேலையைவிட்டு விட்டேன்.நான் வேலை உடையை அணிந்திருக்கிறேன், பாருங்கள், சகோதரனே, எனக்கு ஆயிரம் வருட அரசாட்சி தேவை’ என்றார். நான், ‘நீங்கள் சற்று குழப்பமடைந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே, சகோதரனே?’ என்று கேட்டேன். அந்த சமயத்தில் ஒரு வாடகை கார் வந்தது. அதனுள் அமர்ந்திருந்த பெண்மணி, ‘நிறுத்து, நிறுத்து’ என்று ஓட்டுநரிடம் கூறினாள். ஒரு சிறு பெண்மணி காரை விட்டு வெளியே வந்து என்னிடம் ‘நீங்கள் என் கணவருக்காக ஜெபிக்க வேண்டும்’ என்றாள். நான், ‘சரி அம்மா அவருக்கென்ன?’ என்றேன். அவள், ‘உங்களைப் பேட்டி கண்டு ஜெபம் செய்துகொள்ள வேண்டுமானால், ஒரு மாத காலம் செல்லும் என்று கேள்விப்பட்டேனே?’ என்றாள். நான், ‘என்ன?’ என்று கேட்டேன். அவள், ‘ஆம், ஐயா, நான் பதட்ட நிலையிலிருக்கிறேன். நீங்கள் கண்டிப்பாக என் கணவருக்காக ஜெபம் செய்ய வேண்டும்? என்றாள். நான், ‘நிச்சயமாக. அவர் எங்கிருக்கிறார்? அவரைக் கொண்டு வாருங்கள்’ என்றேன். இந்த மனிதன் அங்கு நின்றுகொண்டு நடந்தவைகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம், ‘நீங்கள் வியாதியஸ்தருக்காகவும் ஜெபிப்பதுண்டா?’ என்று கேட்டார். நான், ‘ஆம், ஐயா’ என்று பதிலளித்தேன். ‘உங்கள் பெயர் என்னவென்று கூறினீர்கள், பிரான்ஹாம் அல்லவா? உங்களுக்கு ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து ஒன்றும் தெரியாதா’ என்று அவர் கேட்டார். நான், ‘சரி நான், ....இல்லை, எனக்குத் தெரியவில்லை. வேதத்திலிருந்து அதை என்னால் சரிவர புரிந்துகொள்ள முடியவில்லை’ என்றேன். அவரோ, ‘அது இங்கே இருக்கின்றது. ஜனங்கள் எல்லாவிடங் களிலுமிருந்து வந்திருக்கின்றனர்’ என்றார். நான், ‘எந்த இடத்தில் அது இருக்கின்றது?’ என்று கேட்டேன். அவர், ‘இங்குதான் இந்தியானாவிலுள்ள ஜெபர்ஸன்வில்லில். அந்த பாலத்தின் கீழ்’ என்று பதிலுரைத்தார். ‘ஐயா, நீங்கள் என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். எனக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. நாம் உள்ளே போய் சற்று அமருவோம். வேண்டுமானால் நாம் இதைக் குறித்து பேசலாம்’ என்றேன். நண்பர்களே, நீங்கள் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் ஒருக்காலும் ஒரு ஊழியத்திற்காக ஆசைப்பட வேண்டாம் (நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா?) நீங்கள்இருக்கும் இடத்திலேயே மிகவும் மகிழ்ச்சியுள்ளவர் களாயிருப்பீர்கள். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். 44. மணவாட்டி எடுத்துக்கொள்ளப்பட்ட பிறகு, உபத்திரவத்தின் வழியாக போகவேண்டியுள்ள சபையானது எப்போது நியாயத் தீர்ப்பு பெறுகிறது? (அது நியாயத் தீர்ப்புக்கு வருவதில்லை). அது ஆயிர வருஷ அரசாட்சிக்கு முன்பா அல்லது அதற்குப் பிறகா? (ஓ, என்னை மன்னியுங்கள். யார் இதை எழுதினீர்களோ, அவர்கள் என்னை மன்னிக்கவும்) மணவாட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, உபத்திரவத்தின் வழியாக போக வேண்டியுள்ள சபையானது எப்போது நியாயத் தீர்ப்பு பெறுகிறது? அது ஆயிர வருஷ அரசாட்சிக்குப் பிறகு அல்லது அதற்கு முன்பா? பிறகு - மணவாட்டியோடு செல்லாதவர்கள், மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியமளவும் உயிரடையவில்லை. பார்ப்போம். 45. கம்யூனிஸம் (பொது உடைமைக் கொள்கையானது) நேபுகாத் நேச்சார் இராஜாவைப் போல, தேவனால் தம்முடைய நோக்கம் நிறைவேறத்தக்கதாக எழுப்பப் பட்டதென்று நீங்கள் அநேக முறை சொல்லியிருக்கிறீர்கள். கடைசியில் உண்டாகப்போகும் உலக நிலையில் கம்யூனிஸம் எந்த ஸ்தானத்தில் பொருந்தும்? அது எவ்விதம் முடிவடைகிறது? வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வட திசை இராஜ்ஜியங் களாகிய கோகும் மாகோகும் இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம் பண்ணப்போகும் என்று அநேக கல்விமான்கள் நம்புகிறார்கள்.... (அது என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை) கம்யூனிஸம் கடைசியில் கத்தோலிக்க ஸ்தாபனத்தை அல்லது வாடிகனை (ரோமாபுரியில் போப் வசிக்கும் அரண்மணையை, ஆட்சி முறையை - தமிழாக்கியோன்) அதிர் வெடியினால் அழிக்கும் என சில ஒலிநாடாக் களில் நீங்கள் கூறியிருக்கிறீர்களென நம்புகிறேன். இது சரியா?) ஆம், வெளிப்படுத்தினவிசேஷம் 16.18.8லும் 12ம் அதிகாரத்திலும் நீங்கள் இதைக் காணலாம். இதை எழுதினவர் இங்கிருப்பாரானால், இங்கு அதைக் குறித்து உள்ள காகிதத் துண்டை எடுத்துக் கொள்ள விரும்புவாரானால் - நீங்கள் அதைக் காணலாம். ஆம்... ஐயையோ! மகா நகரமே... ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப் போனாளே, பூமியின் வர்த்தகர்களும் மற்றவர்களும் அவளுக்கு சரக்குகளைக் கொண்டு வந்திருந்தனர், அது அப்படியிருக்கும் அது சரி. கம்யூனிஸத்தைக் குறித்து மறந்து விடுங்கள். அது கடவுளைப் பற்றிய எண்ணமில்லாத காட்டுமிரண்டித்தனமான ஒரு கூட்டமேயன்றி, உலகத்தில் வேறொன்றுமல்ல. அது ஒரு அமைப்பாகும்.... (அது எவ்வளவு சுலபம் என்பதைக் காட்ட, நான் உங்களுக்கு சிலதைக் காட்டட்டும். ஏன், முழு ரஷ்யாவிலுமே நூற்றில் ஒரு பங்கு மக்களே இந்த கம்யூனிஸத்தை (பொது உடைமைக் கொள்கையை) ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு தூதன் தேவைப்படுகிறது. ஒரே ஒரு சதவிகிதம் - அப்படியானால் இன்னமும் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள் பக்கம் - ஒரே ஒரு சதவிகிதம், ஒரு சதவிகிதம் ஜனங்கள் எவ்விதம் தொண்ணூறொன்பது சதவிகிதம் மக்களைக் கட்டுப்படுத்தக்கூடும்? இதுவே உங்களுக்குக் காரியத்தை விளங்க வைக்க வேண்டும். தேவன் அதை அனுமதிக்கவில்லை என்றால், அவர்கள் அநேக வருடங்களுக்கு முன்பாகவே அக்கொள்கையை வெளியே தூக்கி எறிந்திருப்பார்கள். நிச்சயமாக. 46. சகோதரன் பிரான்ஹாமே, கடைசி மூன்றரை வருடங்களில், ரோமாபுரியானது யூதர்களின் அரசாங்கத்தை எடுத்துக்கொள்ளும் என்று கூறினீர்கள். அது ..... உபத்திரவ காலத்தின் முதல் மூன்றரை வருடங்களா அல்லது கடைசி மூன்றரை வருடங்களா? இது சரியா? அது கடைசி மூன்றரை வருடங்களே, அது சரிதான். முதல் மூன்றரை வருடங்களல்ல, ஏனென்றால் அது ஏற்கனவே கடந்துவிட்டது (இதற்குப் பிறகு இன்னொரு கேள்வியும் பெற்றுள்ளேன்.) 47. எனது அருமை சகோதரனே, 1 இராஜாக்கள் 17ம் அதிகாரத்தில் எலியா தீர்க்கதரிசி செய்ததாக சொல்லப்பட்டிருப்பது போல, மல்கியா 4.5ல் குறிக்கப்பட்டிருக்கும் எலியா தீர்க்கதரிசியும் வனாந்தரத்திற்குச் செல்வாரா? நல்லது, அவர் வனாந்தரத்திற்குப் போனார் என்று திட்டவட்டமாகக் கூற மாட்டேன். ஆனால் அவர் இவ்விதமாய் இருப்பார் பாருங்கள். அவர் எலியாவும் எலிசாவுமாக இருந்தார்.... நீங்கள் கவனித்தீர்களா? அதைப் போன்ற மனிதர்கள் பெரும்பாலும் ஒதுங்கியே இருக்கிறார்கள் - அவர்கள் மனிதர்களிடமிருந்து தள்ளியே ஜீவிக்கிறார்கள். அவர்கள் விநோத மானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஜனங்களோடு அதிகம் கலவாதிருக்கிறார்கள். எலிசாவும் எலியாவும் யோவான் ஸ்நானனும் எப்படியிருந்தார் களென்றும் அவர்களிலிருந்த ஆவியின் தன்மையையும் கவனித்தீர்களா? அந்த மனிதன் வனாந்தரத்தை விரும்புகிறவனாக இருப்பான் என நம்புகிறேன். அவன் ஒரு வேளை வனாந்திரத்தில் தங்குகிறவனாயிருக்கக் கூடும். அவன் ஒரு துறவியாக வனாந்திரத்திலேயே வாழ்பவனாக இருப்பானோ என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது. சில சமயங்களில் அவர்கள் அவ்விதம் வாழ்ந்தனர். எலிசா அவ்விதம் வாழவில்லை. ஆனால் எலியாவோ அவ்விதம் வாழ்ந்தான். பிறகு யோவானும் கூட வனாந்தரத்திலே வாழ்ந்தான். இந்த மற்ற தீர்க்கதரிசிகள் யூதேயாலிலிருந்து வரும்போது அவர்கள் எங்கே தங்குவார்கள் என்பது தெரியவில்லை. அதைச்சொல்வது கடினமான காரியம். அவர்கள் எங்காவது குன்றுகளில் தற்காலிகமாக தங்கக் கூடும். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கின்ற அந்த நாட்களில் என்ன செய்வார்களென்று தெரியவில்லை. நான் என்ன சொல்ல முயற்சிக்கிறேன் என்றால், இதுதான் இருக்குமா? ‘அவர்கள் வனாந்தரத்திலே வசிப்பவர்களாக இருப்பார்களா?’ என்று கேட்கப் பார்க்கிறார்கள். எங்காவது போதுமான காடுகளுள்ள வனாந் தரத்தை வசிப்பதற்கென்று தேடுவார்களென்றால், அவர்கள் வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிற்குத் தான் போகவேண்டும். பார்த்தீர்களா? ஆகவே அது யாராவது... வனாந்தரங்களெல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அதிகமான காடுவிடப்படவில்லை. ஆகவே ஒரே காரியம், அவர்கள் வனாந்தரத்தை விரும்புகிறவர்களாகவும் ஒருவேளை அதிகமாக வனாந்தரத்தில் தங்குகிறவர்களாகவும் இருக்கக்கூடும். மேலும் அவர்கள்.... அவர்களுடைய இயற்கைக் குணத்தைக் கவனிப்பீர்களானால், அவர்கள் விட்டுக் கொடுக்காதவர்களாக இருப்பார்கள். அது வரும்போது நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் விழிந்திருப்பீர் களானால் நீங்கள் அதைக் காண்பீர்கள். இப்போது, இங்கே ஒரு கேள்வியிருக்கிறது. அதை எப்படி அணுகுவதென்று தெரியவில்லை. இன்னும் ஒரு கேள்வி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒலி நாடாவை (ஒலிப்பதிவு செய்வதை) நிறுத்தச் சொல்லப் போகிறேன். 48. தேவன் ஒரே ஆள் தத்துவம் உள்ளவராயிருந்தால், மறு ரூபமலையில் அவர் ஏன், எப்படி தம்மிடமே பேச முடியும்? நான் இப்போதுதான் அதை விவரித்தேன். நான் உங்களிடம் இதைக் கேட்க விரும்புகிறேன். நான்.... இயேசுவானவர் பிதாவிடம் ஜெபித்தபோது, பார்த்தீர்களா.... நீங்கள் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றிருப்பதாக விசுவாசிக்கிறீர்கள், இல்லையா? சகோதரனே? நீங்கள் ஒருநிமிடம் எழுந்து நிற்க மாட்டீர்களா? நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றிருப்பதாக உரிமை கொண்டாடுகிறீர்களா? நானும் அப்படித்தான், அப்படியானால் இந்த இரகசியங்களை வெளியாக்க என்னிலேதானே வல்லமையை உடையவனாக இருப்பதாக நான் உரிமை கொண்டாட வில்லை. பிணியாளியைச் சுகமாக்கும் வல்லமை என்னிலே இல்லை. அது தேவனால் ஆகிறது. நீங்கள் ஒரு ஊழியக்காரர் என நம்புகிறேன். நான் தவறாக கூறாவிட்டால், நீங்கள் அர்கன்ஸாஸிலிருந்து வருகிறீர்கள். நல்லது, சுவிஷேத்தைப் பிரசங்கிக்க வேண்டுமென்னும் வாஞ்சை உங்களிலுள்ளது. சாதாரணமாக, நீங்கள் ஒரு பண்ணையிலும் அதைச் சுற்றியுள்ள இடத்திலும் வளர்க்கப்பட்டீர்கள். உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டு மென்று ஏதோ ஒன்று உங்களுக்குள் வந்தது. அது நீங்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுகிறதேயில்லை. அது பரிசுத்த ஆவியானவர் என அழைக்கப்படும் இன்னொருவர், அது சரியா? சரிதான். இப்போது உங்களைக் கேட்க விரும்புகிறேன். அந்தப் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள்ளே வாசம் பண்ணுகிறார். அது சரிதானா? நீங்கள் அவருடன் பேசுகிறீர்களா? சம்பாஷிக்கிறீர்களா? அவரிடம் ஜெபிக்கிறீர்களா? நல்லது. அவ்வளவுதான் நான் விரும்பியது.... உங்களுக்கு மிக்க நன்றி, இப்போது, அதைப் புரிந்து கொண்டீர்களா? உங்களை ஒன்று கேட்பேன், ‘பரலோகத்திலிருந்து இறங்கினவரும், பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனே யல்லாமல்’ என்று யோவான் 3ம் அதிகாரத்தில் இயேசு எவ்வாறு கூறினார்... (பாருங்கள்?) ‘பரலோகத்தில் இப்போது இருக்கிறார், பூமிக்கு வருவார்’. பாருங்கள்? ‘பரலோகத்தில் இப்போது இருக்கிறவரான மனுஷகுமாரன்’ என்று அவர் கூறியபோது இங்கே அந்த நபருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இப்போது, நீங்கள் அதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள். பரிசுத்த ஆவியானவர் என்னில் இருக்கும் விதமாகவே இயேசுவும் பிதாவானவரும் ஒரே ஆளாயிருந்தார் - நான் பிரசங்கிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அது நானல்ல, ஒரு வார்த்தையைப் பேசி..... உங்களுக்குத் தெரியும். ஒரு மிருகத்தை வரவழைக்கக் கூடியது நானல்ல, அங்கே உட்கார்ந்து கொண்டு அதைப் பார்த்து அம்மிருகத்தைக் கொன்று அதைப் புசிப்பது. அது சிருஷ்டிக்கும் வல்லமையாகும். அது மனிதர்களிலே கிடையாது. மருத்துவர்களால் தன் முதுகில் மீது கிடத்தப்பட்டு, இன்றிரவு இருதயக் கோளாறுடன் இருக்கும் ஒரு சிறு பையனை எடுத்துக்கொண்டு, ‘வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது’ என்று என்னால் கூற இயலாது.... இல்லை! ‘கர்த்தர் உரைக்கிறதாவது’ அதுமுடிந்துவிட்டது. அவனை மறுநாளில் மருத்துவர்களிடம் அழைத்துகொண்டு செல்லும்போது வியாதி முற்றிலுமாய் போய்விட்டிருக்கிறது. இரத்தத்தில் புற்றுநோயுடன் ஒரு சிறு பிள்ளை, கண்களெல்லாம் வீங்கிப் பெருத்துவிட்டிருந்தது. உடலெல்லாம் மஞ்சளாகி விட்டிருந்தது. வயிறும் கூட...... அந்தப் பிள்ளையை இங்கு கொண்டு வருவதற்காக கூட அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இரத்தம் கொடுப்பது முதலிய காரியங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஐந்து நிமிடம் கழித்து, சாப்பிடத் தனக்கு ஒரு ஹாம்பர்கர் (ஒருவகைத் தின்பண்டம் - தமிழாக்கியோன்) வேண்டுமென அது அழுதது. அடுத்த நாள் அப்பிள்ளையை மருத்துவரிடம் கொண்டுசென்ற போது அதன் அடையாளம் கூட காணப்படவில்லை. அது ‘வில்லியம் பிரான்ஹாம் உரைப்பதாவது’ என்பதா? அது ‘கர்த்தர் உரைப்பதாவது’ என்பதாகும்! ஆனாலும் அவர் என்னிலும் வித்தியாசப் பட்ட ஒரு தனி நபராயிருக்கிறார். ஆயினும் அவர் தெரிவிக்கப்படும் ஒரே வழி என் மூலமாகும், பாருங்கள்? அவ்வண்ணமாகவே இயேசுவும் பிதாவும் இருந்தார். ‘கிரியைகளை நடப்பிப்பது நானல்ல, என்னில் வாசம் பண்ணும் பிதாவே இவைகளைச் செய்கிறார்’ என்று இயேசு கூறினார். இப்போது ‘பரலோகத்திலிருந் திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை, பாருங்கள்? அது என்ன? - அவர் சர்வவியாபியாயிருந்தார். ஏனென்றால் அவர் தேவனாயிருந்தார். இப்போது, இந்த மற்றொரு கேள்வி, நான்.... (ஒரு தீர்க்கதரிசனம் சபையிலிருந்து கொடுக்கப்பட்டது - பதிப்பாசிரியர்). நன்றி பிதாவாகிய தேவனே - தேவரீர் ஆவியானவராக இங்கிருப்பதாக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். பிதாவே, ஒரு சமயம் சத்துருவானவன் வந்து கொண்டிருந்தபோது, ஆவியானவர் ஒரு மனிதன் மீது வந்திறங்கி அவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்துக் கூறினார் என்று எங்களுக்கு உரைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்கள் எவ்விதம் சென்று எதிரியை முறியடிப்பதென்றும், எதிரியை எங்கே கண்டுபிடிப்பதென்றும் அறிந்து கொண்டபடியினால் அது காரியங்களை ஒழுங்குபடுத்திற்று. பிதாவே, தேவரீர் எப்போதும் இருந்தது போலவே தேவனாகவே இருந்து வருவதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தேவரீர் இன்னும் அதே விதமாகவேயிருக்கிறீர். நாங்கள் மாறிப் போகிறோம், யுகங்கள் மாறுகின்றன. காலங்களும் மாறுகின்றன. ஜனங்களும் மாறுகிறார்கள். ஆனால் தேவரீர் ஒரு போதும் மாறுவதில்லை. உம்முடைய முறைமைகள் மாறாதவைகளாயிருக்கின்றன. உம்முடைய கிருபையும் மாறாததாயிருக் கின்றது, உம்முடைய கிரியைகளும் மாறாதவைகளாயிருக்கின்றன. ஏனெனில் அவை அற்புதமானவைகளும் மனிதன் புரிந்து கொள்ளக் கூடாதபடி அவனுடைய எத்தகைய அறிவுக்கும் அப்பாற்பட்டவைகளு மாயிருக்கின்றன. ஆகவே, கர்த்தாவே, உம்முடைய இரகசியங்கள் உம்முடைய ஊழியக்காரர்களின் இருதயங்களில் மறைக்கப்பட்டிருப்பதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அதற்காக, கர்த்தாவே, நாங்கள் மகிழ்ச்சியுள்ளவர்களாயிருக்கிறோம். உமக்குரிய ஒவ்வொரு மீனையும் பிடிக்கும் நிச்சயத்துடன் ஒவ்வொரு சிறிய மூலையிலும் வலையை வீசிப் பிடிக்கத்தக்கதாக மற்றவர்களையும் கொண்டுவரத் தக்கதாக அன்புடன் பிரயாசப்படவும் நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஒளி வீசும் விளக்குகளாக செல்வோமாக. அதன் பிறகு ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய மணவாட்டியை அவள் எப்போதும் தம்பக்கத்திலிருக்கத் தக்கதாக, கொண்டு செல்வார். அந்த நேரத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். எத்தனைபேர் வியாதியுள்ளவர்களாய் இங்கு உள்ளே இருக்கிறீர்கள். உங்கள் கரங்களை உயர்த்துங்கள் பார்ப்போம்? நல்லது, ஏறக்குறைய.... உங்கள் கரங்களை மறுபடியும் உயர்த்துங்கள் - ஏறக்குறைய நாற்பத்து ஏழு பேர். இப்போது மணி 11.30 ஆகிறது. வியாதியஸ்தர்களுக்காக நாம் இப்போதே ஜெபிக்கலாம். இரவு... நாம் அப்படிச் செய்வதை நீங்கள் விரும்புவீர்களா? நாம் அவ்விதம் ஜெபிக்க இதுவே நல்ல தருணம் என்று நான் நம்புகிறேன். ஏனென்று உங்களுக்குக் கூறுவேன். தூய ஆவியானவர் இங்கே உள்ளே நின்றுகொண்டு, அபிஷேகித்துக் கொண்டிருக்கிறார். இப்போது, நாம் அந்த ஆவியானவருக்குள், ஊடுருவிச் சென்றிருக்கும் வரை, ஏதோ ஒன்று இருப்பதைப் பார்க்கிறீர்கள், அந்த ஏதோ ஒன்றை நீங்கள் அறிவீர்கள்.... ஏதோ ஒன்று இங்கேயிருக்கிறது. நீங்கள் எப்போதாவது விசுவாசிக்கக் கூடுமானால் இப்போதுதான் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் எப்போதாவது விசுவாசிக்கப் போகிறீர்களென்றால், அது இப்போது தான். இப்போது, உண்மையிலேயே அமைதியாக வர விரும்புகிறோம். அந்த உட்பாதையில் அங்கேயிருப்பவர்கள், தங்கள் கரங்களை உயர்த்தியவர்கள், இந்தப் பாதைக்குள் வந்து, இந்த வழியாகச் செல்லட்டும். அப்போது நாங்கள் அவர்களைப் பாதை பாதையாக எடுத்துக் கொள்வோம் - நாற்பத்தைந்து அல்லது நாற்பத்து ஏழு பேர் மட்டுமே. அது அதிக நேரம் பிடிக்காது. என்னுடன் கீழே இறங்கி வரக்கூடுமா என்று சகோதரன் நெவில் அவர்களை கேட்டுக்கொள்ளப் போகிறேன். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். முதலாவது, நடைபாதைக்குள் வருகிறவர்கள், ஒவ்வொருவரும் நாங்கள் உங்கள் மீது கரங்களை வைத்து உங்களுக்காக இங்கே ஜெபிக்கத் தக்கதாக இப்போது ஒரு நிமிடம் எழுந்திருங்கள். இப்போது, அது சரி. அந்த ஜெப வரிசையில் வரப்போகிற ஒவ்வொரு வரும் - ஜெப வரிசையில் வரப்போகிறவர்கள். இப்போது, பாருங்கள், நாம் அதை நிச்சயமாய்ப் பெற்றுக் கொள்ளத் தக்கதாக நேரத்தை நஷ்டமாக்காமல் பாதுகாத்த வண்ணம், நாங்கள் இப்போது உங்களுக்காக ஜெபிக்கப் போகிறோம். கவனியுங்கள். நண்பர்களே, இப்போது நான் இதை உங்களுக்கு விவரித்துக் கூறட்டும். இயேசு கிறிஸ்து இதைக் கூறினார். ‘........... இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால் நடக்கட்டும்.....’ இப்போது கவனியுங்கள். ‘அவர்கள் அவர்களுக்காக ஜெபித்தால்’ என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. ‘அவர்கள் வியாதியஸ்தர் மீது கைகளை வைத்தால், அவர்கள் சுகமடைவார்கள்’ என்றும் அவர் ஒருபோதும் சொல்லவில்லை. தன்னில் தானே விசுவாசிக்கக்கூடாதவ ளாய், நிச்சயமாய் இரத்தத்தில் புற்று நோய் உடையவளாய் இருந்த ஒரு சிறு பெண்ணைத் தேவன் எடுத்து அவளுக்குப் பரிபூரண சுகம் கொடுக்கக் கூடுமென்றால்.... அடுத்ததாக அவர் ஒரு சிறு பையனை எடுத்து, அவனுக்கிருந்த கீல்வாத ஜுரத்தை அவனுடைய இரத்தத்திலோ அல்லது வேறு எதிலுமே மருத்துவர்கள் கண்டுபிடிக்கவும் முடியாதபடி அவர் அவனைச் சுகப்படுத்தக் கூடுமானால் - அவர் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இப்போதும் அந்தச் சிறிய பிள்ளைகள், ஜெபம் என்னவாய் இருக்கும் என்றும் அறியமாட்டார்கள். நான் அவர்கள் மீது கரங்களை மட்டும் வைத்தேன். அது காரியத்தை முடித்துவிட்டது. நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடியும். இப்போது, நீங்கள் ஜெபிப்பதற்காக நிற்கும் போது, பரலோகப்பிதாவே, தேவரீருடைய மகத்துவமான சமூகம் மகத்தான பரிசுத்த ஆவியானவராக இங்கிருக்கும்போது, யாருடைய படத்தை நாங்கள் வைத்திருக்கிறோமோ, யாரைக் குறித்து வேதத்தில் நாங்கள் வாசிக்கிறோமோ அவர் இப்போது இங்கே பிரசன்னமாயிருக் கிறார். அவர் தம்மை மானிட மாமிசத்தின் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அநேக ஆண்டுகளாக அவரை, ஒருமுறை கூட தவறாதவராக, நாங்கள் கண்டிருக்கிறோம். மானிட இருதயத்தின் எண்ணங்களையும் வெளிப்படுத்த வல்லவராக, அவர்கள் செய்தபாவத்தை வெளிப்படுத்த - என்ன நடந்ததென்பதை அப்படியே சரியாக அவர்களுக்குக் கூறி, என்ன நடக்கும் என்பதையும் ஒருமுறை கூட தவறாதபடி கூறியதைக் கண்டிருக் கிறோம். அப்படியானால் ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களின் தேவன் இயேசு கிறிஸ்துவின் மனித தேகத்தில் தேவனாகவேயிருக்கிறார் என்பதை அறிகிறோம். இப்போதும், அவருடைய ஆவியானவர் கல்வாரியில் சிந்தப்பட்ட இரத்தத்தின் கீழ் பரலோகத்திலிருந்து இறங்கி வந்து, உலகமானது எரிந்து போகுமுன்னே, மக்கள் மத்தியிலே இறங்கி வந்து தம்மை மானிட மாமிசத்தின் மூலமாக வெளிப்படுத்துகிறார் - அந்த மகத்துவமான பரிசுத்த ஆவியானவர் மானிட மாமிசத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது. இரத்தத்தினால் உண்டாகும் பரிகாரத்தையும், பரிசுத்த ஆவியையும் ஏற்றுக்கொண்ட அருமையான மக்கள் மானிட மாமிசத்தில் பிரதி நிதித்துவம் பெற்றுக் கொண்ட தேவனை தங்களுக்குள் பெற்றுக் கொள்கிறார்கள். ஆகவே, அது மானிட மாமிசமல்ல, அது அந்த கிரியை நடப்பிக்க மட்டுமே. ஞானஸ்நானம் முதலிய காரியங்களில் நடப்பது போல, ‘.... இந்த அடையாளங்கள் விசுவாசிக்கிறவர்களால் நடக்கும்’.... என்ற கட்டளை யுடன் வியாதியஸ்தர் மீது கைகளை வைப்பதன் மூலம், அவர்கள் விசுவாசித்தால் அவர்கள் சுகமடையத்தக்கதாக பரிசுத்த ஆவியானவர் பார்த்துக் கொள்வார். இப்போதும், பிதாவே, இந்தக் காரியங்கள் உண்மையானவை என்பதை நாங்கள்அறிவோம். நின்று கொண்டிருக்கும் இந்த ஜனங்கள் - பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கும் ஊழியக்காரர்களின் கரங்களின் கீழாக கடந்துபோகப் போகிறார்கள்.ஊழியக்காரர்கள் வியாதிஸ்தர் மீது கரங்களை வைக்க ஆயத்தமாயிருக்கின்றனர். கர்த்தாவே, இந்த மக்கள் மட்டும் விசுவாசித்தால், தேவரீர்வாக்குத்தத்தம் பண்ணின ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறுவது போல, இதுவும் நிறைவேறும் என அறிந்திருக்கிறோம். பிதாவே... விசுவாசமில்லாமல் இது நடக்க முடியாது. ஏனெனில் விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். எங்களால் அதைச் செய்யவே முடியாது. இப்போதும், விசுவாசத்தோடு நம்பி, எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குத்தத்தத்தோடு வேதத்திலுள்ள முத்திரைகள் திறக்கப்பட்டிருப்பது தேவன் தம்முடைய வார்த்தையைக் காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது. அவர்களுடையதைப் போன்ற அழிவுக்குரிய ஒரு சரீரத்தில் இருக்கும் எனக்கு வியாதியாயிருக்கும் அந்த அருமையான மக்களைப் பற்றிய உணர்வெல்லாம், கர்த்தாவே, எங்களுக்குள் வசிக்கும் அதே பரிசுத்த ஆவியானவர் தாம் அவர்களுக்குள்ளும் வசிக்கிறார் என்பதாகும், கர்த்தாவே. நாங்கள் ஒருவருக்காக ஒருவர் மனம் வருந்துகிறோம். புதிய இரத்தத்திலுள்ள புதிய உடன்படிக்கையை அறிந்தவர்களாய்.... பழையதே சுகத்தைத் தருமானால், புதியதாகிய இது எவ்வளவு அதிகமான மேன்மையானதாக இருக்கும்? பிதாவே, இந்த ஜனங்கள் தவறிப் போய்விடாமல், உம்முடைய ஊழியக்காரர்களின் கரங்களின்கீழ் கடந்து போகும்போது தங்களுடைய சுகத்தைப் பெற்றுக்கொள்ளட்டும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, ஆமென். இப்போது, நாம்.... இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் வரும் போது இந்தப் பக்கத்திலிருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள். பிறகு இவர்கள் திரும்பிப் போவார்கள், மற்றப்பக்கத்திலிருப்பவர்கள்.... இப்போது, இங்கு நிற்கப் போகிறவர்களாகிய சகோதரர்களில் சிலர்.... இங்கிருப்பவர்கள் ஊழியக்காரர்கள் என்று நம்புகிறேன். சகோதரர் நெட் எங்கேயிருக்கிறார்? நீங்கள் அந்த ஜெப வரிசையில் போகவிருந்தீர்களா, சகோதரர் நெட் அவர்களே? உங்களுக்காக ஜெபிக்கப்பட்டவுடனே, ஜெபிக்கிறவர்களின் வரிசையில் வந்து சேருங்கள். இப்போது, இந்தப் பக்கத்தில் இங்கேயிருப்பவர்கள், ஒரு கணம் அமர்ந்திருங்கள். இந்தப் பக்கத்திலிருப்பவர்களை வரவழைக்கிறேன். பிறகு நாங்கள் வந்து நடுபாதையிலுள்ளவர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கம் அனுப்புவோம். பிறகு இந்த உட்பாதையிலுள்ள வர்களுக்காக ஜெபித்து அவர்களை இந்தப் பக்கமாக அனுப்புவோம். நாம் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிப்போம். நான் சகோதரர் டெட்டி அவர்களை கேட்டுக் கொள்ளப்போகிறேன். அவர் எங்கே? ‘அந்த மகத்தான வைத்தியர் இப்போது அருகாமையில் இருக்கிறார்’ என்ற பாட்டை இசைக்கருவியில் நீங்கள் வாசிக்க விரும்புகிறேன். பியானோ வாசிப்பவரும், அவர்கள் எங்கிருந்தாலும் அவருடன் சேர்ந்து வாசியுங்கள், உங்களுக்கு விருப்பமானால், கேளுங்கள், அந்தப் பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்தச் சிறுபையன் மேடைக்குக் கொண்டுவரப்பட்ட வேளையை நினைவில் கொள்ளுங்கள். அச்சிறு ஏமிஷ் பெண்பிள்ளை ‘மகத்தான வைத்தியர் அருகில் இருக்கிறார்’ என்று இப்பாடலை இசைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு நீண்ட கறுத்த முடியிருந்தது... அல்லது வெண்மையான முடி ஓர் வேளையிருந்தது. (மென்னோனைட் அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த பெண்பிள்ளை ஒருத்தி) தலையைப் பின்னாக வைத்து படுத்திருந்தாள், கைகளை வைத்த மாத்திரத்தில் பரிசுத்த ஆவியானவர் அச்சிறு பையனைத் தொட்டார் (அவன் கால்கள் முடமாயிருந்தன) அவன் என் கரங்களிலிருந்து துள்ளிக் குதித்து மேடையில் நெடுக ஓடினான். அவன் தாய் தன் இருக்கையிலிருந்தெழுந்து மயங்கி விழுந்தார்கள் - துவக்கத்தில் அவர்கள் மெஸ்னோனைட் வகுப்பைச் சேர்ந்த ஒரு சகோதரி, என நம்புகிறேன் - தேவனுடைய ஆவியானவர், மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்த அல்லது ஏமிஷ் வகுப்பைச் சேர்ந்த, ஏதோ ஒரு வகுப்பைச் சேர்ந்தவளாயிருந்த (அவளுடைய தகப்பனாரும் மற்றவர்களும் மென்னோனைட் வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ அல்லது மற்ற ஏதோ வகுப்பைச் சேர்ந்தவர்கள் போலவோ உடையுடத்தியிருந்தனர்) அச்சிறு பெண்ணைத் தொட்டார். அவள் பியானோ வாசிப்பதை விட்டு தன் கரங்களை ஆகாயத்தில் விரித்தவளாக குதித்தெழுந்து, (அவளுடைய அழகிய முடியானது அவள் முகத்தின்மீது குறுக்காக விழுந்தது - அவள் ஒரு சம்மனசைப் போல காட்சியளித்தாள்) ஆவியில் பாட ஆரம்பித்தாள். அவள் அப்படி எழுந்து கரங்களை உயர்த்தி ஆவியில் பாடினபோது, பியானோவானது தொடர்ந்து, ‘மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார், இரங்குகிற இயேசு’ என்று அந்தப் பாடலை இசைத்துக்கொண்டேயிருந்தது. ஒவ்வொருவரும் அங்கே நின்று கொண்டு, ஆயிரக்கணக்கா பேர்கள், பியானோ கட்டைகள் தானாக மேலும் கீழும் போவதைக் கண்டனர், ‘அந்த மகத்தான மருத்துவர் இப்போது அருகில் இருக்கிறார், இரங்குகிற இயேசு....’ என்ற அந்தபாடல் இசைக்கப்பட்டது. ஜனங்கள் சக்கரமுள்ள நாள்காலிகளிலிருந்தும், கட்டில்களிலிருந்தும், நோயாளிகளைத் தூக்கிச் செல்லும் சாதனங்களிலிருந்தும் எழும்பி நடந்து சென்றார்கள். அதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இன்று காலையிலே இங்கேயே இருக்கிறார், அந்த அறையில் இருந்தது போலவே. இப்போது நம்ப மட்டும் செய்யுங்கள், அந்தப் பாடலை இசையுங்கள், உங்களுக்குச் சித்தமானால், ‘அந்த மகத்தான மருத்துவர்’ இப்போது, ஒவ்வொருவரும் ஜெபிப்போமாக. அவர்கள் அறையின் ஊடே நடந்து செல்லட்டும். இந்தப் பக்கமாகச் சென்று, உங்களுடைய இருக்கைக்கோ, நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்களோ, நீங்கள் கடந்து செல்லும் போது - பின் பக்கம் காலியாகி விட்டதா? சரி, இப்போது உங்களுடைய இருக்கைகளுக்குச் செல்லுங்கள், பிறகு நாம் எழுந்து நிற்போம். இப்போது கேளுங்கள், இவர்களுக்காக ஜெபிக்கும்போது நீங்களும் அவர்களுக்காக ஜெபியுங்கள். அப்போது உங்களுக்காக ஜெபிக்கப்படும் போது அவர்கள் உங்களுக்காக ஜெபிப்பார்கள். இப்போது, இங்குள்ள ஊழியக்காரர்களே, எழுந்திருங்கள், அவர்கள் வரும்போது அவர்கள்மீது நீங்கள் கரங்களை வைக்க விரும்புகிறேன். இப்போது, ஒவ்வொருவரும் தலைகளை வணங்கி, உங்கள் தலைகளைத் தாழ்த்தியிருங்கள், ஜெபித்துக் கொண்டிருங்கள், நீங்கள் கடந்து செல்லும்போது, அப்போது.. உங்கள்மீது கரங்கள் வைக்கப்பட்டிருக்கும் போது, தம்முடைய புத்தகத்திலுள்ள இரகசியங்களை வெளிப்படுத்து கிறவரும், மானிட இருதயத்தின் அந்தரங்கங்களையும் வெளிப்படுத்துகிற தேவனின் வாக்குத்தத்தம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் விசுவாசிப்பீர்களானால், அதை உறுதிப்படுத்துகிற தேவனாக அவர் இருக்கிறார். நல்லது, நாம் தலைகளை வணங்குவோமாக. இப்போதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே, இந்த ஜனங்கள் வரும்போது, சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமையானது அவர்கள் கடந்து செல்லும்போது அவர்களுடைய விசுவாசத்தை உடனே உயிர்ப்பிக்கட்டும், இயேசுவின் நாமத்தில். (சகோதரன் பிரான்ஹாம் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கிறார் - பதிப்பாசிரியர்). ******* ஏழாம் முத்திரை மார்ச் 24,1963 பிற்பகல் பிரன்ஹாம் கூடாரம் ஜெபர்ஸன்வில், இந்தியானா, அமெரிக்கா நாம் நின்ற வண்ணமாக, ஜெபத்தை ஏறெடுப்போம். சர்வ வல்லமையுள்ள தேவனே, சகல ஜீவன்களுக்கும் காரணரே, ஆவிக்குரிய எல்லா நல்ல அனுக்கிரகங்களையும் தந்தருள்பவரே, உம் சமூகத்தில் நாங்கள் கொண்டுள்ள இம்மகத்தான, அற்புதமான ஐக்கியத்திற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். ஆண்டவரே, எங்கள் ஜீவியத்தில் இது விசேஷித்த ஒன்றாகத் திகழ்கின்றது. நாங்கள் எவ்வளவு நேரம் இங்கு தங்க நேரிடினும், இது மறக்க முடியாத ஒரு சமயமாக உள்ளது. இந்தக் கூட்டத்தின் கடைசி இரவிலே ஆண்டவரே.... பண்டிகையின் கடைசி நாளிலே இயேசு அவர்கள் மத்தியில் நின்று, ‘ஒருவன் தாகமாய் இருந்தால் என்னிடத்தில் வரக் கடவன்....’ என்று சத்தமிட்டுக் கூறினதாக நாங்கள் வேதத்தில் காண்கிறோம். பரமபிதாவே, அச்சம்பவம் மறுபடியும் நிகழவும், எங்களை ஊழியத்திற்கும் அவரோடு சமீபமாக நடப்பதற்கும் அழைக்கும் அவருடைய சத்தத்தை நாங்கள் கேட்கவேண்டுமென்று ஜெபிக்கிறோம். இம்முத்திரைகள் திறக்கப்பட்டபோது அவருடைய சத்தத்தை நாங்கள் ஏற்கனவே கேட்டதை உணருகிறோம். இது கடைசி நாட்களென்றும், சமயம் அருகாமையிலுள்ளதென்றும் அவர் எங்களுடன் பேசினார். பிதாவே, நாங்கள் கேட்கும் இந்த ஆசீர்வாதங்களை, இயேசுவின் நாமத்திலும் அவருடைய மகிமைக்காகவும் தந்தருளும், ஆமென். நீங்கள் உட்காரலாம். என் ஜீவியத்தில் நான் நடத்தின எல்லா ஆராதனைகளைக் காட்டிலும், இவ்வாரம் நிகழ்த்தின. ஆராதனை மிகவும் மகிமையுள்ளதாயிருந்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். சுகமாக்கும் ஆராதனைகளில் மகத்தான அற்புதங்கள் நிகழ்வதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் இதுவோ அவையெல்லாவற்றிலும் மேலானதாயுள்ளது. இந்த ஆராதனை என் ஜீவியத்தில் மகத்தான ஒன்றாயுள்ளது. இச்சிறு கூடாரம் வெளிப்புற அமைப்பில் வித்தியாசமான தோற்றத்தைப் பெற்றுள்ளது மாத்திரமன்று, உட்புறத்திலும் அது வித்தியாசமான அமைப்பைப் பெற்றுள்ளது. இன்னும் ஒரு கூட்டம் (நூற்றுக்கு அதிகமானவர்கள்) இவ்வாரம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு ஆயத்தமாயுள்ளதாக பில்லி (Billy) என்னிடம் கூறினான். ஆகவே நாம் கர்த்தருக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! நீங்கள் தங்கியுள்ள ஸ்தலங்களில் சபைகள் இல்லாவிடில், இங்கு வந்து எங்களுடன் ஐக்கியங் கொள்ள உங்களை அழைக்கிறோம். இது உங்களுக்குத் திறந்துள்ளது என்பது நினைவிருக்கட்டும், நாங்கள் ஒரு ஸ்தாபனமல்ல, இது எக்காலத்தும் ஒரு ஸ்தாபனமாக ஆகிவிடாது என்று நம்புகிறேன். இங்கு மனிதரும் ஸ்திரீகளும், பையன்களும் பெண்களும் தேவனுடைய மேசையில் அமர்ந்து தேவனுடைய வார்த்தையின் பேரில் ஐக்கியங் கொள்கின்றனர். இங்கு எல்லாவற்றையும் நாங்கள் பொதுவாய் அனுபவிக்கின்றோம். ஒரு அருமையான போதகர் நமக்குண்டு. அவர் உண்மையான தேவனுடைய மனிதன். அதற்காக நான் நன்றியுள்ளவனா யிருக்கின்றேன். ஆகாரம் இவ்விடத்தில் சேகரிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து ஒரு ஆண்டிற்கு முன்பாகத் தோன்றின ஒரு தரிசனம் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? அது முற்றிலும் உண்மையாகும். எல்லா வயதினருக்கும் ஞாயிறு பள்ளி நடத்த இந்த இடம் போதிய வசதியுள்ளதாயிருக்கின்றது அதற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக் கின்றோம். ஒரு சமயம் ஒருவர் என்னிடம், அவர் பிள்ளைகளை அனுப்புவதற்கு ஞாயிறு பள்ளி இருந்தால் எவ்வளவு நலமாயிருக்குமென்று கூறினார். இப்பொழுது அவை உள்ளன. ஆகவே உங்களுக்குச் சபையில்லாமலிருந்தால், நீங்கள் எங்களுடன் ஐக்கியங் கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஒழுங்காகச் செல்வதற்கு நல்ல சபை ஒன்று இருக்குமாயின், அங்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுமாயின், ஏன் அது வேறிடத்தில் அமைந்துள்ள நம்மைப் போன்ற வேறொரு குழுவாகும். நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்து அனேகர் இங்கு வந்து தங்கி, இதைத் தங்கள் சபையாக ஏற்றுக் கொண்டதாக நான் அறிகிறேன். உங்களெல்லாரையும் ஆண்டவருடைய வார்த்தைக்கு அழைக்கிறேன். நான் இவ்விடம் விட்டு சென்றபோது, ஆராதனைகள் அனைத்தும் இக்கூடாரத்தில் நடைபெறுமென்று கூறினேன், எதிர்காலத்தில் ஆண்டவர் எனக்காக என்ன வைத்துள்ளார் என்பதனை நானறியேன். அதை நான் அவர் கரங்களில் சமர்ப்பித்துள்ளேன். (மூட நம்பிக்கையில், நான் விசுவாசம் வைப்பதில்லை) ஒவ்வொரு நாளும் நான் அவர் சமூகத்தில் காத்திருந்து அவருக்கென மேலான ஊழியத்தில் ஈடுபடும் ஸ்தலத்திற்கு என்னை நடத்த வேண்டுமென்று நான் வேண்டுகிறேன். என் ஊழியம் முடிவு பெறும்போது, அவர் என்னைச் சமாதானத்துடன் அவர் வீட்டிற்கு ஏற்றுக் கொள்வாரென்று நம்புகிறேன். இக்கூடாரத்தின் மக்களின் ஒத்துழைப்புக்காக நான் நன்றியுள்ள வனாயிருக்கிறேன். இக்கூடாரத்தைச் சுற்றியுள்ள எல்லா வீடுகளிலும் தூரத்திலிருந்து கூட்டத்திற்கு வந்தவர்கள் தங்கியிருப்பதாக பில்லி என்னிடம் கூறினார். தங்குவதற்கு வேறு ஸ்தலங்கள் இல்லாதவர்க்கு உங்கள் வீடுகளை நீங்கள் திறந்து கொடுத்திருக்கின்றீர்கள். உண்மையில் அது நல்ல கிறிஸ்துவ செயலாகும். சில வீடுகளில் மூலைமுடுக்களி ளெல்லாம் ஜனங்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் கூடைபந்து விளையாட்டு போட்டிக்காக வந்திருப்பவர்கள் விடுதி அறைகளை ஏற்கனவே பதிவு செய்துவிட்டதால், தங்குவதற்கு அறைகள் கிடைப்பது கடினமாகி விட்டது. இந்த சிறு கூடாரத்தில் இருபத்தெட்டு அல்லது முப்பது நாடுகளிலிருந்து ஜனங்கள் வந்திருக்கின்றனர். அல்லாமல் இரு அயல்நாடுகளிலிருந்து இந்த எழுப்புதல் கூட்டத்திற்கு ஜனங்கள் வந்துள்ளனர். எனவே ஜனநெருக்கம் அதிகமாகிவிட்டது. ஜெபர்ஸன்வில் ஜனங்கள் அதிகம் பேரைக் காணவில்லை என்று நான் கேள்விப்பட்டேன் என்று நான் இன்று சிலரிடம் கூறினபோது, அவர்கள், ‘எங்களால் உள்ளே நுழைய முடியவில்லை’ என்று பதிலளித்தனர். அவர்கள் கூடாரத்துக்கு வருவதற்கு முன்பாகவே அது நிரம்பிவிட்டது. ஆகவே பல்வேறு ஸ்தலங்களிலிருந்து ஜனங்கள் வருகின்றனர், மிக்க நன்றி. இச்செய்தியைப் பின்தொடர்ந்து ‘ஏழு எக்காளங்கள்’ என்னும் வேறொரு செய்தி எழலாம். ஆனால் முத்திரைகளிலே எல்லாமே அடங்கியுள்ளன. ஏழு சபைகள் அதில் காணப்படுகின்றன. அதை நாம் முதலில் பொருத்தினோம். அது மிகவும் முக்கியம் வாய்ந்தது. திறக்கப்பட்ட முத்திரைகள், சபை எங்கு செல்கின்றதென்றும், அது எவ்விதம் முடிவடைகிறதென்றும் நமக்குக் காண்பிக்கின்றன, நமக்குள்ளதை நாம் காண பரம பிதா கிருபையாய் நம்மை அனுமதிருத்திருக்கிறாரென்று நான் விசுவாசிக்கிறேன். இதனைக் கூற விரும்புகிறேன். அனேக ஆண்டுகளுக்கு முன்பாக நான் நிகழ்த்திய பிரசங்கங்களின் குறிப்புகளை நோக்கிப் பார்க்கும்போது, நான் எது சரியென்று அப்பொழுது நினைக்க முற்பட்டேனோ அதனை நான் பிரசங்கித்துக் கொண்டு வந்திருந்தேன். ஆனால் அது உண்மையான விளக்கத்திலிருந்து மாறுபட்டதாயிருந்தது. நான்கு முத்திரைகளையும் குறித்து நான் இருபது நிமிடப் பிரசங்கத்தில் பிரசங்கித் ததுண்டு. வெளிப்படுத்தலில் கூறப்பட்ட நான்கு முத்திரைகளின் மேலிருப்பவர்களை ஒன்றாக இணைத்து, ‘ஒரு வெள்ளைக் குதிரை சென்றது. அது ஒருக்கால் ஆதி சபையாயிருக்கலாம்’ என்றும் அடுத்த குதிரை சென்றது. அது பஞ்சத்தைக் குறிக்கிறது என்றும் இவ்விதமாக நான் பிரசங்கித்திருக்கிறேன். ஆனால் வார்த்தையின் உண்மையான அர்த்தம் வெளிப்பட்டபோது, நான் முன்பு பிரசங்கித்ததைக் காட்டிலும் அது முற்றிலும் மாறுபட்ட தாயிருந்தது. எனவே நாம் விழித்திருந்து காத்திருக்க வேண்டிய அவசியம் நமக்குண்டாயிருக்கிறது. இம்முறையும் அதை நாம் செய்ய வேண்டியவர் களாயிருக்கின்றோம். நான் கூறின அனேக காரியங்களைச் சிலர் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் எடுக்கப்படுதல் நிகழ்ந்து நாம் ஆண்டவரைச் சந்திக்கும்போது, நான் கூறினவை சரியென்று நீங்கள் அறிந்து கொள்வீர்கள். நான் கூறினவை முற்றிலும் சரியாகும். வெகு தூரத்திலிருந்து வந்திருப்பவர்களே! இவ்வளவு தொலை விலிருந்து பிராயணம் செய்து, உங்கள் விடுமுறைகளை இங்கு கழித்து, தங்குவதற்கு இடமில்லாமற் போனாலும் அதைப் பொருட்படுத்தாதிருக்கும் உங்கள் உத்தமத்தை நான் பாராட்டுகிறேன். எனக்கு எப்படித் தெரியுமென்றால், உங்களில் சிலருக்கு நான் இடவசதி செய்து கொடுத்தேன். உண்பதற்குப் பணமில்லாதிருந்தும் சிலர், எப்படியாவது அவர்கள் கவனித்துக் கொள்ளப்படுவார்கள் என்னும் விசுவாசத்துடன் இங்கு வந்துள்ளனர். ஆகாரம் இல்லாமலிருந்தாலும் தங்குவதற்கு இடமில்லாமலிருந்தாலும் பரவாயில்லை, எங்ஙனமாயினும் செய்தியைக் கேட்க வேண்டுமென்னும் உங்கள் மகத்தான விசுவாசம் பாராட்டுக் குரியது. எல்லாருமே நூற்றுக்கு நூறு அவ்விதமுள்ளனர். இந்தக் கூடாரம் கட்டப்படும்போது, அதைக் கட்டின என்மைத்துனரை நான் சந்தித்து அவர் செய்த வேலையை நான் பாராட்டினதுண்டு. நான் கட்டிடம் கட்டுபவனல்ல. அதைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் சதுர மூலை (Square Corner) யென்றால் என்னவென்பது எனக்குத் தெரியும், அது சரிவர அமைக்கப்பட்டுள்ளதா இல்லையா வென்று என்னால் அறிந்துகொள்ள முடியும். என் மைத்துனர் என்னிடம், ‘எல்லோரும் ஒற்றுமையுடன் இவ்விதம் ஒத்துழைத்த தருணம் இதற்கு முன்பு இருந்ததில்லை’ என்பதாய்க் கூறினார். சகோதரன் உட் (Bro. Wood), சகோதரன் ராபர்ஸன் (Bro. Roberson) எல்லோருமே அவரவர் வேலையைத் திறன்படச் செய்தனர். ஒலி பெருக்கியை அமைத்துக்கொடுத்த சகோதரன்.... எல்லாமே சரிவர நிறைவேறினது’ என்று அவர்கள் என்னிடம் கூறினர். அவர்களுக்கு ஏதாவது ஒரு அவசியம் காணப்பட்டபோது, அதைச் செய்வதற்கென்று ஒருவர் அங்கு வந்து நிற்பார். எனவே இம்முழு திட்டத்திலும் தேவன் காணப்பட்டார். அதற்காக நாங்கள்அவரைத் துதிக்கிறோம். சகோதரன் டாஷ் (Dauch). சகோதரி டாஷ், இன்னும் அனேகர் இதற்கென்று மிகுந்த பண உதவி செய்தனர். நான் இவர்கள் பெயர்களைக் கூறுவது அவர்களுக்கு விருப்பமிராது. செலுத்த வேண்டிய எல்லா தொகைகளும் செலுத்தி முடிந்துவிட்டது. அதற்கென்று நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இது உங்கள் சபையென்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரர். அனேக ஊழியக்காரர் தோன்றவும், ஏற்கனவே கிறிஸ்துவின் ஊழியக்காரராயிருப்பவர் இதனுள் வந்து இயேசுகிறிஸ்துவின் பேரில் ஐக்கியங் கொண்டு மகிழ்ச்சி கொள்ள வேண்டுமெனக் கருதியே இது கட்டப்பட்டுள்ளது. எல்லோருக்கும் வரவேற்புண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும். சில நேரங்களில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நான் ஸ்தாபன முறைமைகளைக் கண்டித்துப் பேசும்போது, இங்கு குழுமியுள்ள போதகரையோ அல்லது ஏதாவதொரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ குற்றப்படுத்துகிறேன் என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஏனெனில் எல்லா ஸ்தாபனங்களிலும் தேவன் தம் பிள்ளைகளை வைத்திருக்கிறார். அவர் ஸ்தாபனங்களை அங்கீகரிப்பதில்லை. ஆனால் ஸ்தாபனங்களிலுள்ள நபர்களை ஏற்றுக் கொள்ள அவர் ஆயத்தமா யுள்ளார். ஜனங்கள் ஸ்தாபனங்களின் முறைமைகளால் கட்டப்படும்போது, ஸ்தாபனங்கள் கூறுவதைத் தவிர வேறெதையும் அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. இதன் விளைவாக, அவர்கள் மற்றவர்களுடன் ஐக்கியங் கொள்ளத் தவறுகின்றனர். தேவன் ஸ்தாபன முறைமைகளில் விருப்பங் கொள்வதில்லை. அவை தேவனால் நியமிக்கப்படாத உலகப் பிரகாரமான செயல்களாகும். நான் எந்த தனிப்பட்ட நபரைக் குறித்தும் சொல்லவில்லை - அது கத்தோலிக்க ஸ்தாபனமோ, யூத ஸ்தாபனமோ அல்லது மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், ப்ரெஸ்பிடேரியன் ஸ்தாபனமோ, அல்லது மற்றைய ஸ்தாபனங்களோ - தேவன் தம் பிள்ளைகளை எல்லா ஸ்தாபனங்களுக்குள்ளும் வைத்துள்ளார். அவர்கள் ஒரு நோக்கத்துக்காள அங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன் - அவர்கள் அங்கு வெளிச்சத்தைத் தந்து எல்லாவிடங்களிலுமிருந்து முன் குறிக்கப்பட்ட வர்களைக் கொண்டு வருவதற்கென வைக்கப்பட்டுள்ளனர். அந்த மகத்தான நாளிலே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சபை ஆகாயத்தில் ஒன்று கூடுவதற்கென அழைக்கப்படுவதை நாம் காண்போம். அவரைச் சந்திக்க நாமெல்லாரும் மேலே எடுத்துக் கொள்ளப்படுவோம். அத்தருணத்திற்காக நான் காத்திருக்கிறேன். அநேக காரியங்களைக் குறித்து நாம் சொல்லலாம். கூட்டம் முடியப் போகும் கடைசி இரவாகிய இன்றிரவில்.... சுகமளிக்கும் கூட்டங்களில் ஜனங்கள் மகத்தான செயல்கள் நிகழுமென எதிர் நோக்கி நரம்பெல்லாம் முறுக்கேற்றப்படடவர்களாய் காத்துக் கொண்டிருப்பது வழக்கம் - அது போல் இன்றும் ஒவ்வொருவரும் மகத்தான செயல் நிகழ எதிர்நோக்கியிருக்கின்றனர் - முத்திரைகள் திறக்கப்பட்ட ஒவ்வொரு இரவும் அவ்வாறே நிகழ்ந்துளளது. இதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் முத்திரையைக் குறித்த இரகசியம் எனக்கு அறையில் வெளிப்பட்டபோது, அது அதைக் குறித்து நான் ஏற்கனவே கொண்ட கருத்தைக் காட்டிலும், அல்லது ஏனையோர் அதைப் பற்றிக் கொண்டிருந்த கருத்தைக் காட்டிலும் முற்றிலும் முரண்பட்டதாய் அமைந்திருந்தது. இன்று காலை நான் சுகமளிக்கும் கூட்டங்களை நடத்துவதற்குக் காரணமென்னவெனில், எட்டு நாட்களாக அந்த அறையில் ஜன்னல்கள் யாவையும் அடைத்து விட்டு மின்சார விளக்கைப் போட்டு அங்கு தங்கியிருந்து வெளிப்பாட்டைப் பெற்றுக் கொண்டதன் பலனாக, என் சுய சிந்தை ஆலோசிக்கும் தன்மையை இழந்து, அதனின்று அப்பாற்சென்றுவிட்டது. நான் காரில் ஏறி வேறெங்கும் செல்லவில்லை. சபைக்கென கடன் வாங்கிய பணத்திற்காக கையொப்பமிடுவதற்காக சில சகோதரர்களுடன் வங்கிக்கு (Bank) ஒரு முறை செல்ல நேர்ந்தது. அங்கிருந்து திரும்பி வந்தவுடன், நான் நேரடியாக அறைக்குச் சென்று விட்டேன். ஆனால் இதுவரை, அங்கு பெற்ற வெளிப்பாட்டிற்கு ஒத்த கருத்துக்கள் ஒன்றையும் யாருமே இதுவரை கூறியதில்லை. அவர்கள் அதைக் குறித்து திரும்பத் திரும்ப விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். எனக்குக் கிடைக்கப் பெற்ற வெளிப்பாடு மிகவும் அற்புதமானது. நான் தற்பொழுது தங்கியிருக்கும் சகோ. உட் (Wood)ன் வீட்டில் எப்பொழுதும் வாகனங்கள் நின்ற வண்ணமாகவே இருக்கும். இது போன்ற சமயங்களில் எட்டு அல்லது பத்து பேர்கள் அவர்கள் வீட்டில் தங்குவது வழக்கம். ஆனால் இச்சமயம் ஒருவரும்கூட அங்கு தங்கவில்லை. இன்று காலை நமது இரட்சகர் அவரது களைத்துப் போன தாசனாகிய எனக்குக் காண்பித்த கிருபையை நான் ஒருபோதும் மறவேன். ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு நான் பதிலுரைத்தேன். எனக்குத் தெரிந்தவரை அது சரியான பதிலென்று நான் நினைத்திருந்தேன். ஆனால் சடுதியாக, ஒரு பிள்ளையிடம் ஏதோ ஒன்றை நான் பிடுங்கினால் எவ்வாறு மனதில் குத்தப்படுவேனோ, அவ்விதமான உணர்ச்சியை நான் பெற்றேன். ஆனால் அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. ‘சுகமளிக்கும் ஆராதனை நான் ஆரம்பிக்க உந்தப்படுகின்றதால் அவ்வாறிருக்கும். ஒருக்கால் அதிக நோய்வாய்ப்பட்டவர்களுக்காக நான் உடனடியாக ஜெபம் செய்ய வேண்டியதாயிருக்கும். அதற்காகவே அத்தகைய உணர்ச்சியை நான் பெற்றேன்’ என்றெல்லாம் எண்ணினேன். உடனே ஜெபம் செய்ய வேண்டியவர்கள் யாராவது உண்டா என்று குழுமியிருந்தவர்களிடம் கேட்டேன். ஆனால் சில நிமிடங்கள் அதன் காரணம் வெளிப்பட்டது. ஒருவர் என்னிடம், ‘நீங்கள் படித்தவாக்கியத்தைத் திரும்பவும் படிப்பீர்களா?’ என்று கேட்டார். அப்பொழுது மேசையின் மேலிருந்த துண்டு காகித்தைக் கையிலெடுத்து மறுபடியும் படித்து, அதனை புத்தகத்துடன் ஒப்பிட்டுப பார்த்தபோது, கேட்கப்பட்ட கேள்விக்கு நான் தவறான பதிலுரைத்ததை உணர்ந்தேன். இதனை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது இயற்கைக்கு அப்பாற்பட்டது சம்பவிக்கும் போது, அது தேவனுடைய சிந்தையாகத்தான் இருத்தல் வேண்டும், அவை நிகழும்போது உங்கள் சுய சிந்தையிலிருந்து நீங்கள்அப்பாற் சென்றுவிட்டு, உங்கள் சிந்தை.... இதனை நான் விவரிக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் அதை என்னால் விவரிக்க இயலாது. நான் மாத்திரமல்ல, யாருமே அதை விவரிக்க முடியாது, ஏனெனில் எலியா என்னும் பாடுள்ள மனிதன் மலையின்மேல் தேவனுடைய சமூகத்துக்கு முன்பாக நின்று வானத்திலிருந்து எவ்வாறு அக்கினியை வரவழைத்து, அதன்பின்பு மழையையும் வரவழைத்து, வேறொரு சமயத்தில் மூன்றரை வருடம் மழை பெய்யாதபடி வானத்தையடைத்து, அந்நாளிலே மறுபடியும் மழைவரக் கட்டளையிட முடியும்? அவன் தேவனுடைய அபிஷேகத்தைப் பெற்ற வனாய், பாகாலின் நானூறு தீர்க்கதரிசிகளைக் கொலை செய்யத் தைரியம்கொண்டு, அதே சமயத்தில் அவனைக் கொல்லச் சபதமெடுத் திருந்த யேசேபேல் என்னும் ஒரு ஸ்திரீக்கு அஞ்சி, ஜீவன் தப்ப அவன் ஏன் வனாந்தரத்துக்கு ஓடிப் போக வேண்டும்? ஆவியானவர் அவனை விட்டு அப்பொழுது சென்றிருக்க வேண்டும். அவன் தன் சுய ஞானத்தைக் கொண்டு எதையும் சிந்திக்க இயலாமலிருந்தான். தேவதூதன் அவனுக்கு நித்திரையளித்து, இளைப்பாறச் செய்து, பின்னர் நித்திரையினின்று அவனை எழுப்பி, அப்பங்களைப் புசிக்கச் செய்து, மறுபடியும் அவனை நித்திரைக்குட்படுத்தி, பின்னர் எழுப்பி அப்பங்களைக் கொடுத்து, இவ்விதம் செய்து கொண்டே வந்தான். நாற்பது நாட்களளவும் எலியாவுக்கு என்ன நேரிட்டது என்று நாமறியோம். பின்னர் அவன் குகைக்கு இழுக்கப்பட்டு, அங்கே கர்த்தர் அவனை அழைத்தார். இயற்கைக்கு அப்பால் சம்பவிக்கும் நிகழ்ச்சிகளுக்கு வியாக்கியானம் அளிக்க முயல வேண்டாம். உன்னால் அது முடியாது. நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, அதைக்கண்டு முன்னேறிச் செல்வதேயாகும். இதுவரை நான் உங்களிடம் இவைகளைக் குறித்து தெளிவாக்க முயன்று வந்தேன். ஆனால் இனிமேல் நான் அவ்விதம் செய்யப்போவதில்லை. நீங்கள் அதை முற்றிலும் விசுவாசித்தாலும், சரி விசுவாசிக்காவிட்டாலும் சரி. சிறிது கழித்து அது ஏனென்று உங்களுக்குப் புலப்படும். இதுவரை நான் உண்மையாக இருக்கவே முயன்று வந்துள்ளேன். அதை தேவனறிவார். இன்று காலையிலும் கூட அந்தக் கேள்விக்கு நான் அறிந்தவரை உத்தமமாக பதிலளிக்கத் தான் முயன்றேன். வேத வாக்கியத்தின் முதலாம் பாகத்தை மாத்திரமே நான் படித்து பதிலுரைத் தேன். ஆனால் அது சரியான பதிலன்று. பரிசுத்த ஆவியானர் என் சிந்தனையை அறிந்து கொண்டு.... கடந்த இரண்டு, மூன்று நாட்களில் என்னவெல்லாம் சம்பவித்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். ‘ஏழாயிரம்’ என்று கூறுவதற்குப் பதிலாக ‘எழுநூறு’ என்று நான் இக்காலை கூறினேன், ஜனங்கள் தவறைப் புரிந்து கொண்டார்கள். நீங்கள் நன்றாக கவனிக்கிறீர்கள் என்பதற்கு இதுவே அத்தாட்சி. வேறொரு முறை ‘புறா’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘ஆட்டுக்குட்டி’ என்று சொல்லிவிட்டேன். ஆனால் அத்தவறை நானாகவே புரிந்து கொண்டுவிட்டேன். ஆனால் மற்றொரு தவறை நான் செய்தபோது, நான் தவறு செய்ததை உணரவில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவர் என் சிந்தனையைக் கவர்ந்து என் தவறை உணர்த்தினார். ஆகவே, நான் கூறுவது யாவும் சரியென்று இரட்டிப்பாக நிலைவரப்படுகின்றது. நான் கூறுவது சரியாவென்று தேவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றார். இவை யாவும் சத்தியமேயென்று நீங்கள் அறியவேண்டுமென்று அவர் விரும்புகின்றார். அவர்தான் இச்சத்தியத்தை அனுப்புகிறார். ஏனெனில் இவைகளை நான் சுயமாகக் கூறமுடியாது, இவை வெளிப்படும் போது, நானும் உங்களுடனே கூட அதைக் கற்றுக் கொள்கின்றேன். நாம் எந்த சமயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தேவனிடமிருந்து நான் பெற்றுள்ள அறிவுக்காக அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். சபை எடுக்கப்படுவதற்கு முன்னாலுள்ள கடைசி காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் போதே, தேவன் தம்முடைய வார்த்தையை ஆசீர் வதிக்கும்படியாக அவரை நாம் கேட்போம். எங்கள் பரம பிதாவே, மகத்தான இரவு இப்பொழுது வருகின்றது - ஒரு மகத்தான சம்பவம் நிகழ்ந்த அந்த மகத்தான சமயம். இவை ஜனங்களைச் சுற்றிலும் உள்ளது. பிதாவே, இன்றிரவு ஜனங்களுடைய இருதயங்களிலும் சிந்தனைகளிலும் எவ்வித சந்தேகமுமேற்படாதவாறு அவை வெளிப்பட வேண்டுமாய் நான் கெஞ்சுகிறேன். அதன் மூலம், தேவன் இப்பொழுதும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்றும், அவர் தமது ஜனங்களை இன்னமும் நேசிக்கிறார் என்றும், உலகம் காணவிழைந்த அந்த சமயம் இப்பொழுது அருகாமையில் வந்திருக்கிறது என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ளட்டும். ஏனெனில் அதுதான் உலகம் மீட்புக்காகக் கதறும் சமயம். யாவற்றையும் திரும்பக் கொண்டு வரும் சம்பவங்கள் நிகழ்வதை நாங்கள் அறிகிறோம். சபையை மறுபடியும் தேவனுடைய சமூகத்தில் கொண்டு வருவதற்கேற்ற காரியங்கள் சம்பவிப்பதை நாங்கள் காண்கிறோம். மணவாட்டி அவளுக்குரிய கலியான வஸ்திரம் தரித்துக்கொண்டு ஆயத்தமாவதை நாங்கள் காண்கிறோம். வெளிச்சம் ‘மினுக்கு’ ‘மினுக்கு’ என எரிவதை (Flicker) நாங்கள் காண்கிறோம். நாங்கள் முடிவுக்கு வந்துவிட்டோம் என்பதை உணருகிறோம். பரம பிதாவே, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக மகிமையில் சம்பவித்ததும், உம் அன்பார்ந்த அப்போஸ்தலனாகிய யோவான் காணச் சம்மதித்ததுமான அந்நிகழ்ச்சியைக் குறித்து நாங்கள் பிரசங்கிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் தாமே தம் வெளிப்படுத்தலின் வல்லமையோடு முன்வந்து, கடந்த இரண்டு இரவுகளில் செய்தது போன்று, இப்பொழுதும் நாங்கள் அறியவேண்டுமென்றிருப்பவைகளை வெளிப் படுத்தக் கோருகிறோம். எங்களையும், உம் வார்த்தையுடன் கூட இயேசுவின் நாமத்தில் உம்மண்டை சமர்ப்பிக்கிறோம். ஆமென். உங்கள் வேத புத்தகங்களை நீங்கள் திறக்க விரும்புவீர்கள். இது ஒரு சிறிய வசனம். அது கடைசி முத்திரையாகும், சென்ற இரவு நாம் ஆறாம் முத்திரையைக் குறித்துப் பேசினோம். முதலாம் முத்திரையில் அந்திக் கிறிஸ்து அறிமுகமாக்கப்படுகிறான். அவனுடைய சமயம் கடந்து வந்து.... எவ்வாறு தேவனுடைய வல்லமையைப் பெற்ற மிருகம் (குதிரை) அந்திக் கிறிஸ்துவின் வல்லமை பெற்றிருந்த மிருகத்துடன் போரிட்டது என்று நாம் பார்த்தோம். இதைக் குறித்த எந்த கேள்வியும் யாரிடமும் இருக்க முடியாது என்று நம்புகிறேன். சபையின் காலம் முடிவடைந்த பின்னர், மிருகங்கள் தோன்றுவதில்லை, சபை எடுக்கப்பட்ட பின்னர் உபத்திரவ காலம் வருகின்றது. நாம் கூறியவை சபையின் காலங்களுடன் எவ்வளவு அழகாக பொருந்துவதைப் பாருங்கள். அப்படியானால் அது தேவனிடத்திலிருந்து வந்ததாக இருக்க வேண்டும். மனித சிந்தை இவைகளை அறிந்துகொள்ள முடியாது. கடைசி காலங்களில் என்ன சம்பவிக்குமென்று இயேசு கூறிய வசனங்களை நாம் தியானிக்க தேவன் அனுமதித்தார். அவை ஆறு முத்திரைகளின் சம்பவங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன. ஆனால் இயேசுவோ ஏழாம் முத்திரையைக் கூறாமல் விட்டுவிட்டார். முத்திரைகள் உடைக்கப்பட்டபோது, ஏழாம் முத்திரையை எந்த ஒரு அடையாளத்தின் மூலமாகவும் அவர் வெளிப்படுத்தவில்லை, அது தேவன் மாத்திரம் முற்றிலும் அறியும் இரகசியமாகும். நாம் வெளிப்படுத்தின விசேஷம் 8ம் அதிகாரத்தில் ஏழாம் முத்திரையைக் குறித்து வாசிக்கப் போகின்றோம். ‘அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணி நேரமளவும் அமைதல் உண்டாயிற்று’ (ஏழாம் முத்திரையைக் குறித்து இது மாத்திரமே நாமறிவோம்.) உங்களை நான் அதிக நேரம் பிடித்து வைக்கப் போவதில்லை. ஏனெனில் உங்களில் அனேகர் இன்றிரவு பிராயணப்பட்டு வீடு போய் சேர வேண்டும். இன்று காலை மறுபடியும் சுகமளிக்கும் ஆராதனை வைக்க வேண்டுமென்றிருந்தேன். அப்படி வைத்திருந்தால், நீங்கள் மாலை வரை காத்திராமல் காலையிலேயே சென்றிருக்க ஏதுவாயிருக்கும். நானும்கூட நான் வாழும் அரிசோனாவிலுள்ள டூசானுக்குப் பிரயாணம் செய்ய வேண்டும். கர்த்தருக்குச் சித்தமானால் நான் மீண்டும் இங்கு வருவேன். ஜுன் மாதத்தில் சில நாட்கள் இங்கு வரவேண்டுமென்று என் குடும்பத்தினர் விரும்புகின்றனர். அவ்வமயம் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்து உங்களெல்லாரையும் சந்திக்க முற்படுவேன். நான் நடத்தவிருக்கும் அடுத்த கூட்டம் நியூ மெக்ஸிகோவிலுள்ள ஆல்புகர்க் என்னும் ஸ்தலமாகும். அங்கு 9, 10, 11-ம் தேதிகளில் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுளளன என்று நினைக்கிறேன். வியாழனன்றும், பெரிய வெள்ளிக்கிழமையன்றும் நான் அங்குதான் இருப்பேன். அதன் பின்னர் வடக்கு கரோலினாவிலுள்ள சதர்ன் பைன்ஸ் (Southern Pines) என்னும் ஸ்தலத்திலுள்ள ‘நள்ளிரவு சத்தம்’ (Midnight Cry) என்னும் பெயர் கொண்ட குழுவின் அங்கத்தினருடன் நான் தங்குவேன். இப்பொழுது அவர்கள் செய்தியைத் தொலைபேசியின் மூலமாகக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ‘சிறிய மலை’ (Little Rock)’ என்னும் ஸ்தலத்திலுள்ள ‘இயேசுவின் நாமம்’ ஜனங்களிடம் வந்துள்ளனர். அங்கிருந்து எனக்கு தந்தியடித் திருந்தனர். கடந்த ஆண்டு முதற்கொண்டு, நான் ஒரு இரவாகிலும் அவர்களுடன் பேசவேண்டு மென்று, அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். ஆகவே, அவர்கள் கன்வென்ஷனைக் குறித்து விளம்பரம் செய்துவிட்டு, பின்னர் எனக்குத் தெரியப்படுத்தலாமென்று நான் அவர்களிடம் கூறினேன். (அங்கு நடக்கவிருக்கும் கூட்டங்களைக் குறித்து சகோ. பிரான்ஹாம் யாரிடமோ பேசுகின்றார் - ஆசி). (ஹாஸ்ஸ்பிரிங்ஸ் என்ற இடத்திலா? நான் தவறாகப் புரிந்து கொண்டேன். ஜுன் 24 முதல் 26 முடிய) ஆகவே அது விளம்பரம் செய்தாகிவிட்டது. கர்த்தருக்குச் சித்தமானால் நான் அங்கு செல்வேன். ‘நீ போ’ என்று கர்த்தர் சொல்லும் இடத்திற்கு மாத்திரமே நான் போக விரும்புகிறேன். ஏனெனில் சத்துரு எனக்கு விரோதமாக அங்கு எழும்பினாலும், ‘நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வந்திருக்கிறேன். ஆகவே, பின்னாலே போ’ என்று என்னால் சொல்ல முடியும். நீங்கள் அப்பொழுது நிற்பது ஸ்திரமான ஸ்தலமாகும். அவர் உங்களை ஒரிடத்திற்கு அனுப்பினால், அவர் தாமே உங்களைக் கவனித்துக் கொள்வார். ஆனால் நீங்கள் ஊகித்து ஒரிடத்திற்குச் சென்றால், ஒருக்கால் அவர் அங்கே உங்களுடன் இருக்கமாட்டார். எனவே, அவருடைய சித்தத்தை நிச்சயமாக அறிந்த பின்னரே, அவ்விடம் செல்ல நான் விரும்புகிறேன். அவர் கூறாத எத்தனையோ காரியங்களை நான் செய்திருக்கிறேன். ஆயினும் என்னால் இயன்றவரை அவருடைய சித்தத்தை நான் நிச்சயமாக அறிய விரும்புகிறேன். கர்த்தர் உங்களெல்லாரையும் ஆசீர்வதிப்பாராக. இங்கு ஒரு வசனம் மாத்திரமேயுள்ளது என்று நாம் பார்க்கிறோம். அதைக் குறித்து சற்று சிந்திக்கலாம். நாம் 7-ம் அதிகாரத்தை விட்டு விட்டோம் என்பதை கவனியுங்கள். 6-ம் அதிகாரத்தில் ஆறாம் முத்திரை முற்று பெறுகிறது. ஆனால் ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கு மிடையில் சில காரியங்கள் சம்பவிக்கின்றன. அவை எவ்வளவு அழகாக 6-ம் அதிகாரத்துக்கும் 8-ம் அதிகாரத்துக்கும் இடையே வைக்கப்பட்டுள்ளன. வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரத்துக்குப் பிறகு சபை எடுக்கப்படுகின்றது. நான்கு குதிரைகளின்மீது சவாரி செய்தவர்கள் கடந்து சென்ற பிறகு சபை எடுக்கப்படுகின்றது. சபைக்கு நிகழவிருக்கும் யாவுமே வெளிப்படுத்தின விசேஷம் 4-ம் அதிகாரம் வரை நிகழ்ந்து விடுகின்றன. அந்திக்கிறிஸ்துவின் இயக்கத்தில் நிகழவிருக்கும் யாவும்கூட 4ம் அதிகாரத்துடனும் நான்காம் முத்திரையுடனும் நிறைவு பெறுகின்றது. அதன் பின்னர் அந்திக் கிறிஸ்து அவன் சேனைகளுடன் அழிக்கப்படுகின்றான். இயேசு கிறிஸ்து அவர் சேனைகளுடன் வருகின்றார். இத்தகைய போராட்டம், காலம் என்று ஒன்று உண்டாவதற்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும் சாத்தானும் அவனைச் சார்ந்த தூதர்களும் தள்ளப்பட்டனர். அவர்கள் பூமிக்கு வந்தனர். மறுபடியும் யுத்தம் தொடங்கியது. ஏனெனில் ஏவாள் தனக்கு அரணாகக் கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையின் எல்லையை மீறினாள். அன்று முதல் சாத்தான் தேவனுடைய வார்த்தையுடன் போராடி வென்றான். ஏனெனில் தேவனுடைய பிரஜையில் பலவீனமான ஒருத்தி இதற்குக் காரணமாயிருந்தாள். ஒவ்வொரு முறையும் சாத்தான் அதேவிதமாக யுத்தத்தில் வெற்றி கொண்டு வருகிறான். அதற்குக் காரணம் தேவனுடைய பிரஜைகள் அவருடைய வார்த்தையின் எல்லையை மீறுகிறார்கள். இக்கடைசி சபையின் காலத்திலும் ஸ்தாபன முறைகளின் மூலம் இதுவே சம்பவித்துக் கொண்டு வருகின்றது. அதை சிங்கத்தின் மேல் சவாரி செய்பவனைக் கொண்ட ஜீவனுள்ள தேவனின் உண்மையான பரிசுத்த சபை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்தாபனங்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல், சபையை வார்த்தையைவிட்டு விலகச் செய்து, சபையின் பாரம்பரியங்களை ஏற்றுக்கொள்ளச் செய்தது. ரோமன் கத்தோலிக்க சபையானது தத்துவங்களின் பேரில் கட்டப்பட்டுள்ளது என்பதனை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? ரோமன் கத்தோலிக்க சபையும் அதை ஒப்புக்கொள்கிறது. ஆகையால் இதைக் கூறுவதால் அவர்களுடைய இருதயம் புண்படாது. சமீபத்தில், அதாவது பத்து வருடங்களுக்கு முன்னர், மரியாள் உயிர்த்தெழுந்தாள் என்னும் வேறொரு கொள்கையை அவர்கள் புகுத்தியிருக்கின்றனர். செய்தித்தாள்கள் இதனைப் பிரசுரித்தன. இவையனைத்தும் ஸ்தாபனக் கொள்கையேயன்றி தேவனுடைய வார்த்தையல்ல. அண்மையில் நான் ரோமன் கத்தோலிக்க போதகர் ஒருவரை பேட்டி கண்டபோது, அவர், ‘சகோ. பிரான்ஹாமே, தேவன் தம்முடைய சபையில் இருக்கிறார்’ என்றார். நானோ ‘தேவன் தம்வார்த்தையில் இருக்கிறார்’ என்று பதிலுரைத்தேன். அப்பொழுது அவர், ‘நாம் இதைக்குறித்து தர்க்கிக்கக் கூடாது’ என்றார். நான் அவரிடம், ‘நான் தர்க்கிக்கவில்லை. நான் அறிந்துள்ளதை மாத்திரம் கூறுகிறேன்’ என்றேன். தேவன் தம் வார்த்தையிலிருக்கிறார் என்பது முற்றிலும் உண்மையாகும். ‘ஒருவன் எதையாவது அதனுடன் கூட்டினால் அல்லது எடுத்துப் போட்டால்...’ என்று வேதம் கூறுகின்றது. அவர், ‘கிறிஸ்து தம் சபைக்கு வல்லமையை அளித்து, அவர்கள் பூமியில் கட்டுவது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் என்று கூறினார்’ என்றார். ‘ஆம், அது உண்மை’ என்றேன் நான். அவர் ‘அந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, பாவத்திலிருந்து விடுவிக்க எங்களுக்கு அதிகாரமுண்டு என்று நாங்கள் எண்ணுகிறோம்’ என்றார். அப்பொழுது நான் ‘சபை எதைச் செய்யவேண்டுமென்று கூறப் பட்டதோ, அல்லது எதைச் செய்ததோ, அவ்விதமாகவே நீங்கள் செய்தால் நான் ஒப்புக்கொள்வேன். அப்படியானால் உங்கள் பாவமன்னிப்புக்கென்று நீங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளத் தண்ணீர் இங்கு ஆயத்தமாயிருக்கின்றது - ஒருவன் பாவம் நிவர்த்தியாகி விட்டது என்று சொல்வதனால் அது நிவர்த்தியாகாது’ என்றேன். திறவுகோல்களைக் கொண்ட பேதுரு பெந்தேகோஸ்தே நாளில் செய்ததைக் கவனியுங்கள். ரோமன் கத்தோலிக்கர் பேசிக்கொள்ளும் திறவுக்கோல்கள் பேதுருவினிடத்தில் தான் இருந்தன. குழுமியிருந்த ஜனங்கள், ‘சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும?’ என்று கேட்டனர், பேதுரு பிரதியுத்திரமாக நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றான். எதற்காக? பாவ மன்னிப்புக்கென்று. அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத் தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது’. அது உண்மையாகும். அதனுடன் அது முற்றுபெற்றது. ஆனால் நான் உங்களுக்குக் காண்பித்த வண்ணம், அந்திக் கிறிஸ்து வந்து.... என்னே வெளிப்பாடு! இவை யாவும் சம்பவித்ததை நாம் காணும்போது, அவை ‘கர்த்தர் உரைத்ததாவது’ என்று நாமறியலாம். வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரத்துக்கும் 8-ம் அதிகாரத்துக்கும் ஒரு இடைவேளை உண்டு. 7-ம் அதிகாரம் காரணமின்றி எழுதப்படவில்லை. அது காரணமின்றி இடையில் வைக்கப்படவில்லை. அது ஒரு நோக்கத்துக்காக அங்கு வைக்கப் பட்டுள்ளது. அது ஒரு காரியத்தை நமக்கு வெளிப்படுத்தும் வெளிப்பாடாகும். கணித ரீதியாக இவ்வறிவுக்கெட்டாத இரகசியம் எவ்வளவு அழகாகப் பொருந்துகின்றது என்பதைப் பாருங்கள். தேவனுடைய கணிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? இல்லாவிடில், நீங்கள் தேவனுடைய வார்த்தையைச் சரிவர புரிந்துகொள்ளாமல் தலறிப் போவீர்கள். தேவனுடைய ஒழுங்கின்படி அமைந்துள்ள கணிதத்தில் உங்கள் சொந்த எண்ணிக்கையைப் புகுத்துவீர்களானால் ஒரு பசு மரத்தின்மேல் புல்லைத் தின்பது போன்ற அபத்தம் நேரிட வகையுண்டு. தேவனுடைய எல்லா வார்த்தையும் கணித ரீதியாக அமைந்துள்ளது. ஆம், ஐயா! மிகவும் பூரணமானது. அதைப் போன்று கணிதத்தில் பரிபூரணமான வேறெந்த இலக்கியமும் எழுதப்படவில்லை. 8ம் அதிகாரம், ஏழாம் முத்திரை நிகழ்ந்த ஸ்தலத்தை மாத்திரம் குறிப்பிடுகின்றது. வேறொன்று அங்கு வெளிப்படவில்லை. அதற்கும் 7-ம் அதிகாரத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. எனக்கு மாத்திரம் சமயமிருந்தால், இந்த ஏழாம் முத்திரை ஆதியாகமம் தொடங்கி முடிவுவரை குறிப்பிடப்பட்டுள்ளது என்று காண்பிக்க விரும்புகிறேன். இன்று காலையில் நாம் இவைகளைக் குறித்துப் பேசினது நினைவிலுண்டா? இன்றிரவும் அதைக் குறித்து நாம் பேசும்போது, ஏழாம் முத்திரையையடைந்தவுடன் அது வேறுபடுகின்றது என்பதைக் கவனிக்கவும். இயேசுகிறிஸ்து முடிவு காலத்தைக் குறித்து பேசினபோது அவர் ஆறு முத்திரைகளைக் பற்றிப் பேசினார். ஆனால் ஏழாம் முத்திரையை அடைந்தபோது, அவர் நிறுத்திக் கொண்டார், இது ஒரு மகத்தான காரியம். இப்பொழுது ஆறாம் முத்திரையையும் ஏழாம் முத்திரையையும் இணைக்கும் 7ம் அதிகாரத்தைக் குறித்து நாம் சற்று பேசலாம். ஏனெனில் நாம் பேசுவதற்கு அது ஒன்று மாத்திரமேயுள்ளது. ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையில் இஸ்ரவேலர் அழைக்கப்படுகின்றனர். ‘யோகோவா சாட்சிகள்’ (Jehovah’s Witness) எனும் குழுவைச் சார்ந்திருந்த என் நண்பர்கள் அனேகர் இங்கிருக்கின்றனர். ஒருக்கால் அவர்களில் சிலர் இன்னும் யேகோவா சாட்சிகளாய் இருக்கலாம். அவர்களின் தலைவரான திரு. ரஸ்ஸல் (Russell) என்பவர், இந்த 144000 பேர் கிறிஸ்துவின் மணவாட்டியைப் குறிப்பதாகக் கருத்து கொண்டிருந்தார். ஆனால் அது உண்மையல்ல. இவர்களுக்கும் சபையின் காலங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அவர்கள் இஸ்ரவேலராகும் (இன்னும் சில நிமிடங்களில் அவ்வாக்கியங்களைப் படிக்கப் போகின்றோம்) இந்த 144000 யூதர்கள், சபையானது எடுக்கப்பட்ட பின்னர், உபத்திர காலத்தில் அழைக்கப்பட்டு முத்தரிக்கப்பட்டவர்கள். எனவே அவர்களுக்கும் சபையின் காலங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது வேதவாக்கியங்களுடன் அருமையாகப் பொருந்துகின்றது - தானியேல் கூறின கடைசி மூன்றரை வாரங்கள் தானியேலின் ஜனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன - புறஜாதிகளுக்கல்ல, தானியேலின் ஜனங்களுக்கு, தானியேல் ஒரு யூதன். இஸ்ரவேல் ஜனங்கள் அடையாளங்களால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசிகளை மாத்திரமே விசுவாசிப்பார். அப்போஸ்தல சபையின் காலம் முதற்கொண்டுள்ள சபையின் காலங்களில் பிராடெஸ்டன்ட் சபைகளுக்கு ஒரு தீர்க்கதரிசியும் கூட இருந்திதில்லை. அவ்விதம் யாராகிலும் இருந்தால் எனக்குக் காண்பியுங்கள். ஆதி அப்போஸ்தல காலத்தில் அகபு என்னும் தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான். அவன் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசி. ஆனால் புறஜாதியார் தேவனுடைய உரிமைக்குள் வந்து போது, பேதுருவுக்குப் பிறகு பவுல் புறஜாதிகளிடம் திரும்பி, அவருடைய நாமத்திற்கென்று புறஜாதிகளி லிருந்து ஒரு கூட்டம் ஜனங்களை - அதாவது மணவாட்டியை - ஆயத்தம் செய்ய தேவனிடத்திலிருந்து அதிகாரம் பெற்றிருந்தான். ஆனால் புறஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரிசி இருந்ததாக வரலாற்றில் சான்று எதுவுமில்லை. நீங்களே சரித்திரத்தைப் படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள். தீர்க்கதரிசி புறஜாதிகளுக்கு இருந்திருப்பானென்றால் அது தேவனுடைய வார்த்தைக்கு முரண்பாடுள்ளதாக அமையும். முதலாவது சென்ற மிருகம் ஒரு சிங்கமாகும். அதுதான் தீர்க்கதரிசி - தேவனுடைய வார்த்தை, அடுத்ததாக கிரியை - தியாகம், அதற்கடுத்தபடியாக மனிதனின் உபாயம். ஆனால் இந்தக் கடைசி காலங்களில், இதுவரை தவறாக நடத்தப்பட்ட, போதிக்கப்பட்ட காரியங்கள் அனைத்தும் சரியாக்கப்படும் என்னும் வாக்குத்தத்தத்தை நாம் பெற்றுள்ளோம். ஏனெனில் ஏழாம் தூதனின் செய்திகள் தேவனுடைய இரகசியங்களை பூர்த்தியாக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டுள்ளது. இவைகளைக் குறித்து நாம் ஏற்கனவே பேசியிருக்கிறோம். இவையாவும் வேதவாக்கியங்களுடன் முற்றிலுமாகப் பொருந்துகின்றன. அதுதான் காரணம். அறிவிக்கப்பட்ட அந்த மனிதன் தோன்றும்போது, அது மிகவும் எளிமையுள்ளதாயிருப்பதால், ஸ்தாபனங்கள் யாவும் அதைக் காணத் தவறிவிடுவர். சீர்திருத்தக்காரர்களின் பாரம்பரியங்களை அடிப்படை யாகக் கொண்ட ஸ்தாபனங்கள், அவர்களுடைய போதனைகளுக்கும் ஸ்தாபனங்களுக்கும் எதிராயிருக்கும் தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கின்றீர்களா? ஒரே ஒரு மனிதன் மாத்திரமே அந்த தீர்க்கதரிசியின் ஸ்தானத்தை ஏற்று நிறைவேற்ற முடியும். நான் அறிந்தவரை அது பூமியில் இருந்த ஒரே ஒரு ஆவி... அது அவனுடைய காலத்தில் தோன்றும் எலியாவாயிருக்க வேண்டும். அது அவ்விதமாகவே இருக்கும் என்று முன்னறிவிக்கப் பட்டுள்ளது. அது கிறிஸ்துவின் ஆவியேயன்றி வேறல்ல. கிறிஸ்து தோன்றினபோது, அவர் தேவனுடைய பரிபூரணமாய் இருந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசி அவர் தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் தேவன். கிறிஸ்துவை அக்காலத்தவர் எவ்விதம் வெறுத்தனர் என்பதைப் பாருங்கள். ஆனால் அவர் எவ்வாறு தோன்றுவாரென்று தேவனுடைய வார்த்தை கூறினதோ, அவ்வண்ணமாகவே அவர் தோன்றினார். அவர் தீர்க்கதரிசியாயிருந்தபடியால், அவருக்குள் வாசமாயிருந்து ஜனங்களின் சிந்தையைப் பகுத்தறிதல் போன்ற காரியங்களைச் செய்த கிறிஸ்துவின் ஆவியை அசுத்த ஆவியென்று அவர்கள் தேவதூஷணம்செய்த காரணத்தால், தேவனுடைய இராஜ்யத்துக்கு அவர்கள் புறம்பாயினர். அவரைக் குறி சொல்லுகிறவரென்றும் பிசாசென்றும் அழைத்தனர். குறி சொல்கிறவன் பிசாசின் ஆவியைக் கொண்டே குறி சொல்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறி சொல்பவன் ஒரு தீர்க்கதரிசியைப் போல் பாவனை செய்கிறபடியால், அது தேவனுக்கு முன்பாக தேவதூஷணமாகக் கருதப்படும். வேதத்தில் கூறிய தானியேலின் மூன்றரை வாரங்களுடன் எவ்வளவு நன்றாகப் பொருந்துகிறது என்று பாருங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்க்கதரிசியை, அவன் தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு விசுவாசிக்க வேண்டுமென்று பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது. ‘உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியா யிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். - சொப்பனங் களுக்கு அர்த்தம் விவரிப்பேன். யாருக்காகிலும் சொப்பனம் நேர்ந்தால், தீர்க்கதரிசியால் அதன் அர்த்தத்தை விவரிக்க இயலும். ஒருவன் தரிசனம் கண்டால், அது என்னவென்பதை அவன் வெளிப்படையாகக் கூறுவான். ‘தரிசனங்களின் மூலமாகவும் சொப்பனங்களின் மூலமாகவும் என்னை வெளிப்படுத்து வேன். அந்தத் தீர்க்கதரிசி கூறினது நிறைவேறினால் அவனுக்குச் செவி கொடுங்கள். ஏனெனில் நான் அவனுடன்கூட இருக்கிறேன். அது நிறைவேறாமற் போனால் அவனுக்குப் பயப்பட வேண்டாம்’ ஆம், ‘அவனிடமிருந்து விலகுங்கள், அவனைத் தனியே விடுங்கள்’. இஸ்ரவேலர் எக்காலத்தும் அதை மாத்திரமே விசுவாசிப்பர். இன்றிரவு நான் கற்பிக்கும் பாடத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஏன்? ஏனெனில் கர்த்தர் இஸ்ரவேலருக்கு அளித்த கட்டளையாகும் அது. புறஜாதியார் எத்தனை கைப்பிரதிகளை இஸ்ரவேல் நாட்டில் கொடுத்தாலும் எனக்குக் கவலையில்லை. உங்கள் அக்குளில் வேத புத்தகத்தைக் கொண்டவர்களாய் இஸ்ரவேல் நாட்டிற்குச் சென்று எதை நிரூபிக்க நீங்கள் முயன்றாலும் எனக்குக் கவலையில்லை. அவர்கள் தீர்க்கதரிசியையன்றி வேறு யாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அது முற்றிலும் உண்மை. ஏனெனில் தீர்க்கதரிசி மாத்திரமே தேவனுடைய வார்த்தையைச் சரியான இடங்களில் பொருந்தி, தேவனால் உறுதிப்படுத் தப்பட்ட தீர்க்கதரிசியாக இருக்கமுடியும். அப்பொழுது அவர்கள் நம்புவார்கள். பென்டன் ஹார்பர் (Benton Harbor) என்ற ஸ்தலத்தில் வாழ்நாள் பூராவும் குருடனாயிருந்த ஜான் ரையன் (John Ryan) என்பவர் பார்வையடைந்தார். அவர்கள் ‘தாவீதின் வீட்டிற்கு’ (House of David) என்னைக் கொண்டு சென்றனர். அங்கிருந்த நீண்ட தாடியை வைத்திருந்த யூத ரபி ஒருவர் என்னிடம், ‘நீங்கள் எந்த அதிகாரத்தினால் ஜான் ரையனுக்குப் பார்வையளித்தீர்?’ என்று வினவினார். நான் ‘தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் என்று பதிலுரைத்தேன். அவர் ‘தேவனுக்குக் குமாரன் உள்ளார் என்பதை நம்பமுடியாது’ என்றார். மேலும் அவர், ‘தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை மூன்று கடவுள்களாக்கி யூதர்களிடம் கொடுக்க முடியாது. நீங்களெல்லாரும் அஞ்ஞானிகளின் கூட்டம்’ என்று கூறினார். அப்பொழுது நான், ‘நான் அவ்வாறு தேவனை மூன்று துண்டுகளாக வெட்டுவதில்லை’ என்று கூறிவிட்டு, ‘ரபீ, உங்கள் தீர்க்கதரிசிகளில் ஒருவர் தவறாகக் கூறினார் என்று நீங்கள் விசுவாசிப்பது உங்களுக்கு விசித்திரமாயில்லையா?’ என்று கேட்டேன். அவரோ, ‘எங்கள் தீர்க்கதரிசிகள் தவறு ஒன்றையும் கூறினதில்லை’ என்றார். நான், ‘ஏசாயா 9, 6ல் ஏசாயா யாரைக் குறித்து உரைத்தார்?’ என்று கேட்க, ‘அவர் மேசியாவைக் குறித்து’ என்றார். ‘அப்படியானால் மேசியா என்பவர் மனித - தீர்க்கதரிசியாயிருப்பார், அப்படித்தானே?’ என்று கேட்க, அவரும், ‘ஆம், முற்றிலும் உண்மை’ என்றார், ‘மேசியாவாகிய தீர்க்கதரிசிக்கும், தேவனுக்குமுரிய உறவு என்னவாயிருக்கும்?’ என்று நான் வினவினேன். அவர் பிரதியுத்தரமாக, ‘அவர் தேவனாயிருப்பார்’ என்றார். நானும், ‘நீர் கூறுவது உண்மையே, அவ்விதமே வேதத்தில் கூறியிருக்கிறது’ என்றேன். அந்த யூதனுக்குக் கண்களில் நீர் ததும்பியது. அவர் என்னிடம், ‘வேறு ஒரு முறை நீங்கள் சொல்வதைக் கேட்க விரும்புகிறேன்’ என்றார். நான், ‘ரபீ, அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?’ என்றேன். அவர், ‘ஆம். தேவன் இந்த கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்’ என்றார். அவர் புதிய ஏற்பாட்டி லிருந்து வசனம் கூறுகிறார் என்று எனக்குத் தெரியும். ‘அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். அவர், ‘அதை நான் பிரசங்கித்தால், கீழே பள்ளத்தாக்கில் நான் யாசிக்க நேரிடும்’ என்றார். (அவருள்ள ஸ்தலம் மலையின் மேலுள்ளது). நான் அவரிடம், ‘நான் தேவனிடமிருந்து அகன்று போய் என் பெயர் அந்தக் கட்டிடத்தில், பொன்னினால் பொறிக்கப்படுவதைக் காட்டிலும், நான் தேவனுடன் ஒன்றுபட்டு, உப்பு பிஸ்கோத்தையும் தண்ணீரையும் குடித்து வாழ்வதையே விரும்புவேன்’ என்றேன். யூதனுக்கு இன்னமும் பணத்தின் பேரில்தான் சிந்தையுள்ளது. அதன் பின்னர் அவர் நான் சொல்வதற்குச் செவி கொடுக்க மறுத்துவிட்டார். ஆகவே, அவர் உள்ளே சென்றுவிட்டார். நீங்கள் தேவனை இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக்கி, பிதா, குமாரன், பரிசுத்தாவி என்றழைத்து, மூன்று தெய்வங்களாக ஒரு யூதனுக்கு சமர்ப்பிக்க முடியாது. கர்த்தருடைய கற்பனை யாதெனில், ‘என்னையன்றி வேறெ தேவர்கள் உங்களுக்கு உண்டாயிருக்க வேண்டாம். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்.....’. இயேசு என்ன கூறினார்? ‘இஸ்ரவேலே கேள், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்’, ஒரே தேவன், மூன்றல்ல. யூதர்களுக்கு மூன்று தெய்வங்களை நீங்கள் அளிக்கமுடியாது. எந்த ஒரு தீர்க்கதரிசியும் மூன்று தெய்வங்களைக் குறித்துப் பேச மாட்டான். அவன் அவ்விதம் பேசுவதை நீங்கள் கேட்கவே முடியாது. ஏனெனில் அது அஞ்ஞான பழக்க வழக்கங்களிலிருந்து தோன்றியதாகும். கவனியுங்கள். வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகள் தோன்றுவார்கள். அவர்களைக் குறித்து நாம் சற்று படித்திருக்கிறோம். நீங்கள் ஒலி நாடாக்களைக் கேட்டும் இன்னும் மற்ற விதங்களிலும் அவர்களைக் குறித்து நீங்கள் அதிகம் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் தீர்க்கதரிசிகளின் அடையாளங்களைக் கொண்டவர்களாய், முற்றிலும் உறுதிப்படுத்தப்பட்ட வர்களாயிருப்பார்கள். அப்பொழுது இஸ்ரவேலர் அவர்களுக்குச் செவி கொடுப்பார்கள். யேகோவா சாட்சி குழுவைச் சார்ந்த நண்பர்களே, இதைப் புரிந்து கொள்ளுங்கள், 144000 பேருக்கும் மணவாட்டிக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இந்த உங்கள் கருத்தை ஆதரிக்க வேதத்தில் எந்த பகுதியுமில்லை. அவர்கள் மணவாட்டியல்ல, யூதர்கள் - தானியேலின் எழுபது வாரங்களின் கடைசி பகுதியில் தோன்றும் மூன்றரை வருட காலங்களில் அழைக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்டவர்தாம் இவர். நான் இதை திரும்பத் திரும்பக் கூறுவது உங்களுக்கல்ல. இந்த செய்தியடங்கிய ஒலிநாடாக்கள் எல்லாவிடங்களிலும் செல்கின்றன. அதன் காரணமாகவே இதனை நான் திரும்பத் திரும்ப உரைக்கிறேன். இயேசு யாரென்பதை அறிந்து கொள்ளக் கூடாதவாறு தேவன் யூதர்களைக் குருடாக்கினார் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் மாத்திரம் நியாயப் பிரமாண காலத்தில் தேவன் அவர்களுக்களித்த தீர்க்கதரிசியை ஏற்றுக் கொண்ட சிந்தையை அப்பொழுது பெற்றிருந் தால், இயேசு செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்டு, ‘இவர் தான் மேசியா’ வென்று அவரை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். பின்னை ஏன் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை? அக்காலத்தில், ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட அப்போஸ்தலர் போன்றவர்கள் இயேசு செய்தவை களைக் கண்டு அவரை அறிந்து கொண்டனர். மற்றவர்கள் ஏன் அவரைக் கண்டு கொள்ளத் தவறினர்? ஏனெனில் அவர்கள் காணாதவாறு குருடாக்கப்பட்டனர். இப்பொழுதும்கூட அவர்கள் அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒரு காலத்தில் ஒரு தேசமாகும் வரை அதைக் காணத் தவறுவர். தேவனுடைய வார்த்தை ஒருபோதும் பொய்யாகாது என்பதை நினைவு கூறவும், நீங்கள் எவ்வளவோ உணர்ச்சிவசப்பட்டாலும், இன்னும் என்னென்ன சம்பவித்தாலும் அதைக் குறித்து ஒன்றுமில்லை. ஆயினும், தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. தேவன் கூறியவிதமாகவே அது சம்பவிக்கும். தேவனுடைய வார்த்தையின்படி இவை யாவும் சம்பவிக்க வேண்டியதென்பதை நாம் உணருகிறோம். இயேசு தம்மை தீர்க்கதரிசி யென்று நிரூபித்தபோதிலும், அவர்கள் அவரை அறிந்து கொள்ளாமைக்கு அதுவே காரணமாகும். கிணற்றடியிலிருந்த அந்த சமாரிய ஸ்திரீயும் கூட - அவர் அதற்குமுன் சமாரியாவுக்குச் சென்றதில்லை. அவர் சமாரியாவுக்குச் சென்று, அவ்வழியாகச் செல்ல அவசியமாயிருக்கிறது என்று கூறினார். அவர் அங்கு சென்றபோது, அந்த ஸ்திரீ அங்கிருந்தாள். அக்காலத்திலிருந்த மதபோதகர்களைக் காட்டிலும், சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மேலான நிலையில், அவள் தன் பாவ நிலையிலும் காணப்பட்டாள். அவ்வாறே அவள் சுவிசேஷத்தை ஏற்றுக் கொண்டாள். அக்காலத்து மதபோதகர்கள் அவரைப் புறக்கணித்தாலும் அவர்களிடையேயுள்ள ஒரு உத்தமமான மனிதன் (நிக்கோதேமு) அவர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிவதாக ஒப்புக் கொண்டாள். அமெரிக்காவின் தென்நாடுகளிலுள்ள ஒரு வைத்திய நிபுணருடன் அண்மையில் அவருடைய அலுவலகத்தில் நான் சம்பாஷிக்க நேர்ந்தது. அவர் லூயிவில் என்னும் ஸ்தலத்தில் பணிபுரியும் ஒரு நிபுணர், அது மாத்திரமல்ல, அவர் பெருந்தன்மையுடைய ஒருவர். அவரிடம் நான், ‘டாக்டர், உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன்’ என்றேன். அவரும் ‘சரி’யென்றார். நான், ‘உங்கள் வைத்திய அடையாள மாக, ஒரு கோலில் ஒரு பாம்பு சுற்றியுள்ளதே, அது எதைக் காண்பிக்கிறது?’ என்று கேட்டேன். அவர் எனக்குத் தெரியாது என்று பதிலுரைத்தார். நான் ‘இதுதான் அதன் அடையாளம். மோசே, உண்மையான கிறிஸ்துவுக்கு அடையாளமாக வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பத்தை உயர்த்தினானே, அது தெய்வீக சுகமளித்தலின் சின்னமா யுள்ளது’ என்றேன். இன்றைக்கு, மருந்துகள் தெய்வீக சுகமளித்தலுக்கு அடையாளமாயுள்ளது. அதை அநேகர் விசுவாசிப்பதில்லையெனினும், திறனுள்ள வைத்தியர்கள் அதை நம்புகின்றனர். ஆனால் அவர்களிடம் காணப்படும் அந்த அடையாளச் சின்னம், அவர்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி, சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆம், வைத்திய அடையாளமாக வெண்கலச்சர்ப்பம் ஒரு கோலில் தொங்கிக் கொண்டுள்ளது. இந்த யூதர்களைக் கவனியுங்கள். குருடாக்கும் செதில்கள் இவர்கள் கண்களை மூடிக்கொண்டுள்ளன. அது தேவனால் அங்கு வைக்கப்பட்டது. வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள் வரவிருக்கும் காலம்வரை அது அவ்வாறே இருக்கும். நீங்கள் ஒருக்கால் அவர்களிடம் மிஷினரிமார்களை அனுப்பலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்தத் தீர்க்கதரிசிகள் தோன்றும்வரை, இஸ்ரவேலர் மனம் மாறுவதில்லை. புறஜாதி சபை எடுக்கப்பட்ட பின்னரே அதுசம்பவிக்கும், காளையின் காலத்தில், சிங்கத்தின் அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. காளையின் ஆவி புறப்பட்டுச் சென்றதாக தேவன் தம் வசனத்தில் கூறியுள்ளார். சீர்திருத்தக்காரரின் காலத்தில் மனிதன் புறப்பட்டுச் சென்றான். அந்தந்தக் காலத்துக்குரியவைகளையே அவர்கள் ஏற்றுக் கொள்ள முடியும். அவர்கள் இப்பொழுது குருடாக்கப்பட்டிருக் கின்றனர். அவ்வளவுதான். ஆனால் புறஜாதிகளின் காலம் முடிவடையும் ஒரு சமயம் வரும். ஒரு மரமுண்டு, அதன் வேர்கள் யூதர்களாகும். அந்த மரம் வெட்டப்பட்டு, அதில் காட்டொலிவ மரமாகிய புறஜாதிகள் ஒட்டவைக்கப்பட்டனர். அது இப்பொழுது கனி கொடுத்துக் கொண்டு வருகின்றது. நான் இப்பொழுது பேசிக்கொண்டிருந்த (மணவாட்டி மரமாகிய) புறஜாதி மணவாட்டி முறிக்கப்பட்டு தேவனுடைய சமூகத்திற்கு எடுக்கப்பட்ட பின்னர், அவிசுவாசமுள்ள புறஜாதிகளை - உறங்கிக்கொண்டிருக்கிற கன்னி களை - நிர்மூலமாக்கி, மறுபடியும் யூதர்களை அவர் ஒட்டு போடுவார். அவ்விதம் செய்யப் போவதாக அவர் வாக்குத்தத்தம் செய்துள்ளார். நீங்கள் இப்பொழுது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று திண்ணமாக அறிந்திருந்தால் நலம். இல்லாவிடில், நீங்கள் இருளில் தடுமாறிக் கொண்டிருக்கின்றீர்கள். யூதர்கள் மனந்திரும்பும் காலம் வரும்போது வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் அபிஷேகத்தின் மூலம், அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் புறஜாதிகளின் காலம் நடந்து கொண்டிருக்கும் இச்சமயத்தில், அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிப்படுத்தல் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள இரண்டு தீர்க்கதரிசிகளும் எத்தகைய செய்தியைப் பிரசங்கிப்பார்கள் என்று நாம் பார்க்கலாம். அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைத் தெளிவாக நாம் காணலாம். முன் குறிக்கப்பட்ட 144000 பேர் - இஸ்ரவேலில் மீதியானவர்கள் - தேவனுடைய முத்திரையைப் பெற்றுக் கொள்வார்கள். இப்பொழுது நாம் படிக்கலாம். நன்றாகக் கவனியுங்கள். கூடுமானால் என்னோடுகூட நீங்களும் இதைப் படிக்க விரும்புகிறேன். ஏனெனில் சற்று கழித்து மறுபடியும் நான் இதைக் குறித்துச் சொல்லப் போகிறேன். 7ம் அதிகாரம். இது ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே உள்ளது. இவைகளுக்குப் பின்பு, (அதாவது இம்முத்திரைகளுக்குப் பின்பு - ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டது. அதுதான் உபத்திரவ காலம். எல்லோரும புரிந்து கொண்டீர்களா? ஆறாம் முத்திரை உடைக்கப்பட்டது. உபத்திர காலம் ஆரம்பமானது) பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது சமுத்திரத்தின் மேலாவது ஒரு மரத்தின் மேலாவது காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக் கண்டேன். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந் திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன். அவன் பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்டுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி, நாம் நமது தேவனுடைய (கவனியுங்கள், நமது தேவனுடைய) ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் (மணவாட்டியல்ல, ஊழியக்காரர், இஸ்ரவேலர் எப்பொழுதுமே தேவனுடைய ஊழியக்காரராயிருந்தனர். சபையோ பிறப்பின் மூலம் அவருடைய குமாரன். ஆபிரகாம் அவருடைய ஊழியக்காரன், நாமோ ஊழியக்காரர்களல்ல, நாம் பிள்ளைகள், குமாரரும் குமாரத்திகளும்) பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன், (இதனைப் படிக்கும்போது, மிகவும் நன்றாகக் கவனியுங்கள்) இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் (கோத்திரம் என்று அழைக்கப்படுகின்றனர்). ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத்கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம் (கோத்திரங்களைக் கவனியுங்கள்) ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், லேவி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். அங்கே பன்னிரண்டு கோத்திரங்கள். ஒவ்வொரு கோத்திரத்லிருந்தும் பன்னீராயிரம் பேர், பன்னீராயிரத்தைப் பன்னிரண்டால் பெருக்கினால் எவ்வளவு? - 144000. அவர்களெல்லாரும் இஸ்ரவேல் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். கவனியுங்கள். இவர்களுக்குப் பின்பு வேறொரு கூட்டம் வருகின்றது. மணவாட்டி ஏற்கனவே சென்றுவிட்டாள் என்று நாமறிவோம். ஆனால் இந்தக் கூட்டம் வருவதைப் பாருங்கள். இவைகளுக்குப் பின்பு நான் பார்த்தபோது, இதோ, சகலஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு, இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கின்றன எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியான வருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழ நின்று, சிங்காசனத்திற்கு முன்பாக முகங் குப்புற விழுந்து, தேவனைத் தொழுது கொண்டு, ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதா காலங்களிலும் உண்டாவதாக, ஆமென், என்றார்கள். அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் (மூப்பர்கள் எப்பொழுதும் தேவனுடைய சமூகத்திற்கு முன்பாக நிற்கின்றதை நாம் எல்லா மூத்திரைகளிலும் கண்டோம்). என்னை நோக்கி, வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். யோவான் யூதனாதலால் தன் சொந்த ஜனங்களை அடையாளம் கண்டு கொண்டான். அவர்களைக் கோத்திரம் கோத்திரமாக அவன் கண்டான். அவர்களை அடையாளம் கண்டு கொண்டு, கோத்திரம் கோத்திரமாக அவர்களைப் பெயர் சொல்லி அழைத்தான். ஆனால் இந்த திரள் கூட்டத்தை அவன் கண்டபோது அவனுக்குக் குழப்பம் உண்டானது. இதையறிந்த மூப்பனும், ‘வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்?’ என்று கேட்டான். (யோவான் பதிலுரைத்கிறான்). அதற்கு நான், ஆண்டவனே, அது உமக்கேதெரியும் என்றேன் (அவர்கள் யாரென்று யோவான் அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் சகல கோத்திரங்களிலும் (ஆங்கிலத்தில் Kindreds) பாஷைக்காரர்களிலும், ஜனங்களிலும் இருந்து வந்தவர்கள்). அப்பொழுது அவன், இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள், இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்ந்து வெளுத்தவர்கள். ஆனபடியால் இவர்கள், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள், சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக் குள்ளே வாசமாயிருப்பார். இவர்கள் இனி பசியடையவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை, வெளிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல்படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார், தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான். இப்பொழுது நாம் முத்திரைகளுக்கு வருவோம். முதலில் இஸ்ரவேல் கோத்திரத்தாரையும் பின்னர் உபத்திரவங்களில் சுத்திகரிக்கப்பட்ட சபையையும் கண்டோம். அவர்கள் மணவாட்டியல்ல. அவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்த உத்தம இருதயங் கொண்ட திரளான கூட்டத்தார். அவர்கள் மணவாட்டியல்ல. ஏனெனில் மணவாட்டி ஏற்கனவே சென்றுவிட்டான். இயேசுவானவர், சிங்காசனங்கள் வைக்கப்படுமென்றும், ஒவ்வொருவரும் நியாயாசனத்திற்கு முன்பாக நிற்க வேண்டுமென்றும் கூறினார். இந்த இஸ்ரவேல் கோத்திரத்தார் ஜீவனுள்ள தேவனுடைய முத்திரையினால் முத்தரிக்கப்பட்டவர்கள் என்று நாம் பார்க்கிறோம். ஜீவனுள்ள தேவனுடைய முத்திரை என்பது என்ன? நான் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்கென இதைக் கூறவில்லை. அநேக வேத பண்டிதர்கள், இரத்தத்தினால் வெளுக்கப்பட்ட திரளான கூட்டத்தார் மணவாட்டி என்று கூறுகின்றனர் என்று உங்களுக்குத் தெரியுமா? அவ்வாறே 144000 பேர்களும் கூட மணவாட்டியென்னும் கருத்தினை அநேகவேதபண்டிதர்கள் கொண்டுள்ளனர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அப்படியானால் அது சரிவர பொருந்தாமல் தவறான ஒன்றாகவே இருக்க முடியும். ஓய்வுநாள் ஆசரித்தலே தேவனுடைய முத்திரையாகுமென ஏழாம் நாள் ஆசரிப்புக்கார நண்பர்கள் கூறுகின்றனர். அதுதான் தேவனுடைய முத்திரை என்பதை நிரூபிக்க வேதத்தில் ஒரு வசனத்தையாவது காண நான் விரும்புகிறேன். அது ஒரு மனிதன் உண்டாக்கின கருத்தாகும். ஆனால் எபே.4.30, ‘அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தா திருங்கள்’ என்று கூறுகின்றது. ஆம், ஐயா. மத்தியஸ்த ஊழியம் முடிவடைந்தவுடன் தமக்குச் சொந்தமானவர் களை மீட்டுக்கொள்ள கிறிஸ்து வருகிறார் - அடுத்த எழுப்புதல் கூட்டம் வரை நீங்கள் முத்திரிக்கப்படவில்லை. நீங்கள் ஒரு முறை முத்தரிக்கப் பட்டால், தேவன் உங்களை ஏற்றுக் கொண்டாரென்பதற்கு அறிகுறியாக, அது தேவனால் பூர்த்தி செய்யப்பட்ட ஓர் கிரியையாகும். அதிலிருந்து நீங்கள் மறுபடியும் அகன்று போக முடியாது. ‘நான் அதைப் பெற்றிருந்தேன். இப்பொழுது அதினின்று நான் விலகிவிட்டேன்’ என்று நீங்கள் கூறலாம். அப்படியானால் நீங்கள் அதைப் பெற்றுக்கொள்ளவேயில்லை. அது மீட்கப்படும் நாள் வரை நிலைநிற்கும் என்பதாய் தேவன் கூறுகின்றார். அதைக் குறித்து நீங்கள் தர்க்கிக்க முனைந்தால், நீங்கள் தேவனிடம் தர்க்கம் செய்யுங்கள். இந்த இஸ்ரவேல் கோத்திரத்தார் தெரிந்து கொள்ளுதலின்படி இஸ்ரவேலில் மீதியானவர்கள், எலியா முதன் முதலாக இஸ்ரவேலரிடம் ஊழியம் செய்தபோது, ஏழாயிரம் விசுவாசிகள் தேவனுடைய கரத்தினால் காக்கப்பட்டனர். ஆனால் இப்பொழுதோ செய்தியை விசுவாசிக்கும் 144000 பேர் முன்குறித்தலின் மூலம் தெரிந்து கொள்ளப்படும் காலம் வரப் போகின்றது. ஒருக்கால் நீங்கள், ‘சகோதரனே, சற்று பொறும். இந்த தெரிந்து கொள்ளுதலைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. அதை நான் வேத புத்தகத்தில் காணவில்லை’ என்று சொல்லலாம். அது சரியா, தவறா என்று பார்க்கலாம். மத்தேயுவில் இதைப்பற்றி கூறப்பட்டுள்ளதா என்று ஆராயலாம். வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார், அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட வர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு, மறுமுனை மட்டும் நாலு திசைகளிலிமிருந்து சேர்ப்பார்கள். (மத். 24.31). தெரிந்து கொள்ளப் பட்டவர்கள் வெளிவருவார்கள். அது என்ன சமயம்? - உபத்திரவ காலம். தேவன் தாம் தெரிந்து கொண்டவர்களை அழைப்பார் - அவர்கள் தாம் யூதர்கள் - தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளுதலைக் குறித்து வேதம் கூறுகின்றது. பவுலும் அதைக் குறித்துச் சொல்கின்றான். கோடிக்கணக்கானவர்களின் மத்தியில், தெரிந்து கொள்ளுதலின் படியுள்ள 144000 பேர் செய்தியை விசுவாசிப்பார்கள். எலியாவின் காலத்தில் பாலஸ்தீனாவில் கோடிக்கணக்கானோர் இருந்தனர். ஆனால் ஏழாயிரம் பேர் மாத்திரமே இரட்சிக்கப்பட்டனர். அவ்வாறே தங்கள் தாய் நாடாகிய இஸ்ரவேல் நாட்டில் கோடிக்கணக்கான யூதர்கள் இருக்கின்றனர், ஆனால் 144000 பேர் மாத்திரமே தெரிந்து கொள்ளப்படுவர், அவர்கள் செய்தியை ஏற்றுக்கொள்வார்கள். புறஜாதி சபையிலும் அவ்வாறே சம்பவிக்கும், அதிலொரு மணவாட்டி உண்டு. அவள் தெரிந்து கொள்ளப்பட்டவள். தெரிந்து கொள்ளுதலின்படி அவள் அழைக்கப்படுவாள். தெரிந்து கொள்ளப்பட்ட விசுவாசிகளைத் தவிர மற்றவர் விசுவாசிப்பதில்லை. நீங்கள் ஒரு மனிதனுக்கு சத்தியத்தை எடுத்துரைத்து, தேவவசனத்தின் மூலம் அதை நிரூபித்து, அதை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிபடுத்தினாலும், அவன், ‘நான் அதை விசுவாசிக்க மாட்டேன்’ என்று தான் சொல்கின்றான். இன்னும் அதனுடன் விளையாடிக் கொண்டிருக்கவேண்டாம். இயேசு ‘பன்றிகளுக்கு முன் முத்துக்களைப் போடாதிருங்கள்’ என்றார். அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள். இல்லாவிடில் அவர்கள் உங்களைக் கால்களின் கீழ் மிதித்துப் போடுவார்கள், உங்களை அவர்கள் பரிகசிப்பார்கள். அவர்களை விட்டு அகன்று சென்று விடுங்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால்.... தெய்வீக சுகமளித்தலுக்கு விரோதமாகப் பேசும் ஒரு மனிதன் சிறிது காலம் முன்பு என்னிடம் வந்து, ‘உங்கள் தெய்வீக சுகமளித்தலின் பேரில் எனக்கு நம்பிக்கையில்லை’ என்றாள். அதற்கு நான், ‘அது சரிதான். நான் தெய்வீக சுகமளிப்பதில்லை. தேவன் ஒருவர் மாத்திரமே பரிபூரணர்’ என்றேன். அவன், ‘தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்று கிடையவே கிடையாது’ என்றான். நானோ, ‘நீ அதைக் கால தாமதப்படுத்திக் கூறுகின்றாய். ஒருக்கால் இவ்வாறு சில ஆண்டுகளுக்கு முன்னால் கூறியிருந்தால் சரியாயிருந்திருக்கும். ஆனால் இது வேறொரு காலம் - அதற்கு சாட்சி பசுர இப்பொழுது லட்சக்கணக்கானோர் உள்ளனர். ஆகவே, நீ காலதாமதமாகிவிட்டாய்’ என்றேன். ‘நான் அதை நம்ப முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் எனக்குக் கவலையில்லை’ என்று கூற, நானும், ‘ஆம், உன்னால் நம்பத்தான் முடியாது’ என்றேன். அவன் என்னிடம், ‘உங்களிடம் பரிசுத்த ஆவி இருந்தால், பவுல் செய்ததுபோல் என்னைக் குருடாக்குங்கள் பார்க்கலாம்’ என்றான். நான், ‘நீ ஏற்கனவே குருடாயிருக்கும்போது, உன்னை எப்படி நான் குருடாக்க முடியும்? உன் பிதாவாகிய பிசாசானவன் சத்தியத்தைக் காணாதவாறு உன்னைக் குருடாக்கிப் போட்டான். தெய்வீக சுகமளித்தலென்பது அவிசுவாசிக்ளுக்கல்ல. விசுவாசிகளுக்கு மாத்திரமே உரியது’ என்று பதிலுரைத்தேன். அங்கே தெரிந்து கொள்ளுதல் என்பது கிரியை செய்தது என்று நீங்கள் பார்க்கலாம். அதனுடன் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். இயேசுவும், அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால் இருவரும் குழியில் விழுவார்கள் அல்லவா?’ என்றார். ஆனால் அவர் ஒரு துன்மார்க்க ஸ்திரியிடம் வந்தபோது, அங்கே அனல் மூண்டது. அது என்ன? தெரிந்து கொள்ளப்பட்ட வித்து அங்கு விதைக்கப்பட்டிருந்தது. அவ்வாறே அவர் பேதுருவிடம் வந்தபோதும், அங்கேயும் தெரிந்து கொள்ளப்பட்ட வித்து புதைக்கப்ட்டிருந்தது. அவர்களெல்லாரும் சத்தியத்தை அறிந்து கொண்டார்கள். ‘பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்’. அது எனக்கு மிகவும் பிரியமான வசனம். கவனியுங்கள். விசுவாசி அதை விசுவாசிக்கிறான். ஆனால் அவிசுவாசியோ அதை விசுவாசிக்க முடிகிறதில்லை. சர்ப்பத்தின் வித்தைக் குறித்து தர்க்கம் செய்பவர்களிடம் நீங்கள் ஆதாரப்பூர்வமான வசனங்களை எடுத்துக் காண்பித்தாலும, அவர்கள் செவிகொடாமல் சென்று விடுவார்கள். அவர்களைத் தனியே விட்டுவிடுங்கள். தேவன் தர்க்கம் செய்பவரல்ல. அவருடைய பிள்ளைகளும் அவ்வாறே. கவனியுங்கள், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட 144000 யூதர்களும் மிருகத்தின் ஸ்தாபன கொள்கைகளுக்கோ அல்லது விக்கிரகங் களுக்கோ தலைவணங்கமாட்டார்கள். இஸ்ரவேல் நாடு மிருகத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தாலும், இவர்கள் மாத்திரம் வணங்க மாட்டார்கள். அவர்கள் தாம் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். புறஜாதி சபையிலும் அதுவே நிகழ்ந்து வருகின்றது. மணவாட்டி தெரிந்து கொள்ளப்பட்டவள். அவளை இத்தகைய கொள்கைகளுக்குள் இழுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஒருமுறை ஒளி அவர்களைத் தொட்டவுடன், அதனுடன் எல்லாமே சரியாகிவிட்டது. செய்தி அடையாளங்களினாலும் அற்புதங்களி னாலும் உறுதிப்படுவதை அவர்கள் கண்டு, தேவவசனங்களினாலும் அது நிரூபிக்கப்படுவதை அவர்கள் காணும்போது.... அவர்களுடன் இன்னும் நீங்கள் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் விசுவாசிக்கின்றனர். அவர்களால் விளக்கம் தரமுடியாமல் போனாலும், அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டனர் என்று மாத்திரம் அறிவர். நானும்கூட, ‘அநேக காரியங்களை நான் உங்களுக்கு விளக்க இயலாது. ஆனால் அவை யாவும் உண்மையென்று நானறிவேன்’ என்று கூறியதுண்டு. ஆறாம் முத்திரைக்கும் ஏழாம் முத்திரைக்கும் இடையே அவர் அந்த ஜனங்களை அழைக்கிறார். இதைக்குறித்து இயேசு மத்தேயு 24-ம் அதிகாரம் 31-ம் வசனத்தில் கூறியுள்ளார். அதை இப்பொழுது நாம் வாசித்தோம். எக்காளம் தொனிக்கும் போது - இரண்டு சாட்சிகளின் எக்காள சத்தம் கேட்கும் காலம் தான் யூதர்களுக்குக் கிருபையின் காலமா? கவனியுங்கள். ஒரு எக்காளம் தான் தொனிக்கிறது. அவர் ‘எக்காளம் ஊதுங்கள்’ என்கிறார். 31-ம் வசனத்தைக் பாருங்கள். ‘வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை (ஒருவரல்ல, இருவரை) அனுப்புவார்’.... அது என்ன? தேவன் பேச ஆயத்தமாகும் போது, எக்காள சத்தம் தொனிக்கிறது. அது எக்காலத்திலும் அவர் யுத்தத்திற்கு அழைக்கும் அவருடைய சத்தமாகும். தேவன் பேசுகின்றார். அப்பொழுது இத்தூதர்கள் எக்காள சத்தத்தோடே புறப்பட்டு வருகின்றனர். வேறொன்றைக் கவனித்தீர்களா? கடைசி தூதனின் செய்தியின்போது எக்காளம் தொனிக்கிறது. முதலாம் தூதனின் செய்தியின் போதும் இரண்டாம் தூதனின் செய்தியின் போதும், அவர் அதை அனுப்பினபோது எக்காளம் தொனித்தது. முத்திரைகள் அறிவிக்கப்பட்டபோது, ஒரு கூட்டம் ஜனங்களை அழைப்பதற்கென அது தேவனுடைய செய்கையாயிருந்தது. ஆகவே ஒரே எக்காள சத்தம், ஆனால் ஏழு முத்திரைகள் உடைக்கப்பட்டன. கவனியுங்கள், தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை வானத்தின் நான்கு திசைகளிலிருமிருந்து கூட்டிச் சேர்ப்பார். இயேசு ஆறு முத்திரைகளைக் குறித்து சொன்னார். ஆனால் ஏழாம் முத்திரையைக் குறித்து அவர் எங்குமே குறிப்பிடவில்லை. 32-ம் வசனத்தில் அவர், தெரிந்து கொள்ளப்பட்ட யூதர்களை அழைக்கும் சமயத்தைக் குறித்து ஒரு உவமையைக் கூறுகின்றார். அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றக்கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடுமபோது வசந்தகாலம் சமீபமாயிற்றுஎன்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். அவர்கள் அவரை, ‘உலகத்தின் முடிவுக்குரிய அடையாளம் என்ன?’ என்று கேட்டனர். இந்த யூதர்களை நீங்கள் காணும் போது..... இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, என்ன நடக்குமென்று நீங்கள் அறிவீர்கள். கவனியுங்கள். அவர் யாரிடம் பேசுகிறார்? புறஜாதிகளிடமா? இல்லை யூதர்களிடம். அவர், ‘என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைப்படுவீர்கள்’ என்றார். அவர்.... அந்த யூதர்கள் அங்கே துளிர்விடு கிறதைக் காண்கிறீர்கள், சபையானது எடுக்கப்படுதலுக்கு ஆயத்தப்படும், அதன் பின்பு பழைய உலகம் முடிய மூன்றரை வருட காலமேயுண்டாகும். அது பிறகு வெறுமையாகி, புதிய பூமிக்கு ஆயிர வருட அரசாட்சி காலம் வரும். சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்’ என்றார். பூமியில் ஆயிரம் வருடம் தேவனுடைய பார்வைக்கு ஒரு நாளாயிருக் குமானால், மூன்றரை வருட காலம் தேவனுடைய கணக்கின்படி சில வினாடிகளேயாகும். எனவே, தான் அவர், அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார்’ என்றார் (ஆங்கில வேதம், (it is near even at the doors என்கிறது - தமிழாக்கியோன்). இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’. என்ன? எது ஒழிந்து போகாது? யூதர்களை நிர்மூலமாக்க வேண்டுமென்று எல்லா காலங்களிலும் முயன்று வந்தனர், அவர்கள் ஒருக்காலும் அதைச் செய்ய முடியாது. கவனியுங்கள், பாலஸ்தீனாவக்குத் திரும்புகிற அதே யூத சந்ததிதான் இவைகள்யாவும் சம்பவிக்கக் காணும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அவள் ஒரு தேசமாகிவிட்டாள், அவளுடைய நாட்டிற்கென்று பிரத்தியேக நாணயமுண்டு, அப்படியானால் நண்பர்களே, இப்பொழுது நாம் எங்கிருக்கின்றோம்? முத்திரைகள் யாவும் திறக்கப்படுகின்றன, இச்சம்பவம் முத்திரைகளின் இடையில் நடைபெறுகின்றன. நாம் இப்பொழுது எங்கிருக்கின்றோம்? நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள் என்று நம்புகிறேன், எனக்குக் கல்வியறிவு கிடையாது. நான் பேசுவது என்னவென்பது எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் புரிந்துகொள்ளும் அளவிற்கு அதை விவரிக்க என்னால் ஒருக்கால் முடியாமல் இருக்கலாம். இவ்விதம் அர்த்தம் காணமுடியாதவாறு கலந்துள்ள என் வார்த்தைகளைத் தேவன் தாமே சரிவரப்பிரித்து உங்களுக்குத் தந்து, அது என்னவென்பதை உங்களுக்கு அறிவிப்பாராக. ஏனெனில் நாம் வாசலருகே இருக்கிறோம். அவர் யூதர்களிடம் தம் கவனத்தைத் திருப்புகிறார். முடிவு காலத்தில் என்ன நிகழும் என்பதையும் அவர் தெரியப்படுத்துகின்றார். இஸ்ரவேல் கோத்திரத்தார் சிதறடிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் நாமறிவோம். 2500 ஆண்டுகளாக அவர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் காற்றடிக்கும் நான்கு திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், அது நமக்குத் தெரியும். அதை வேத புத்தகத்தில் தேடி இப்பொழுது படிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் களைப்புறு முன்பு முக்கியமான சிலவற்றை நீங்கள் அறிய வேண்டுமென்று விரும்புகிறேன். இஸ்ரவேல் கோத்திரத்தார் ஒவ்வொருவரும் இப்பொழுது ஒரே இடத்தில் இல்லை. அவர்கள் சிதறடிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது எருசலேமில் கூடியுள்ள யூதர்களுக்கு அவர்கள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்ளென்று தெரியாது. அவர்களுடைய கோத்திரத்தைக் குறிக்கும் எந்தக் கொடியும் இப்பொழுது அவர்களிடமில்லை. அவர்கள் யூதர்கள் என்று மாத்திரமே அவர்களுக்குத் தெரியும். உலகம் பூராவும் அவ்விதமே அவர்கள் இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய புத்தகங்கள் எல்லாம் யுத்தங்களில் நிர்மூலமாக்கப் பட்டு விட்டன. அவர்களிடம், ‘நீங்கள் எந்த கோத்திரத்தைச் சார்ந்தவர்’ என்று கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எந்தக் கோத்திரத்திலிருந்து வந்தவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு அவர்களுடைய கோத்திரங்களின் பெயர் தெரியாவிட்டாலும் தேவன் அதை அறிவார். அது எனக்கு எவ்வளவ பிரியமாயுள்ளது? ‘உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார். அவர் எதையுமே இழந்து போவதில்லை. ‘நான் கடைசி நாளில் அவர்களை எழுப்புவேன்’ - அவர்கள் தங்கள் கோத்திரங்களைக் குறிக்கும் கொடிகளை இழந்து போயிருந்தாலும், அவர்கள் பென்ய மீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது ரூபன் இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களோ என்று அறியாமலிருந்தாலும், தேவன் அதை அறிந்து அவர்களை அழைக்கிறார். ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் பன்னீராயிரம் பேர் தெரிந்து கொள்ளப்பட்டதாக வெளிப்படுத்தல் 7-ல் வாசிக்கின்றோம். அவர்கள் கோத்திர ஒழுங்கின்படி அமைக்கப்படுகின்றனர். இப்பொழுது அவர்கள் அவ்விதம் இல்லாவிடினும் இனிமேல் அவர்கள் அவ்வமைப்பில் வருவார்கள். யார் இந்த கோத்திர ஒழுங்கில் வருவார்கள்? எல்லா யூதர்களுமா? இல்லை. தெரிந்து கொள்ளப்பட்ட 144000 பேர் இந்த கோத்திர ஒழுங்குக்குள் வருவார்கள். அவ்வாறே, சபையும் கிரமப்படி அவர்களுடைய ஒழுங்கில் வரவேண்டியவர் களாயிருக்கின்றனர். இந்தக் கோத்திரங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரு காரியத்தை நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள். சற்று முன்பு வெளிப்படுத்தல் 7-ம் அதிகாரத்தைப் படிக்கக் கூறினேன். என்னோடுகூட மறுபடியும் அதைப் படித்து, சொல்லப்பட்ட கோத்திரங்களின் பெயர்களைக் கவனமாய் பாருங்கள். வெளிப்படுத்தல் 7-ம் அதிகாரத்தில் தாண் கோத்திரமும் எப்பிராயீம் கோத்திரமும் காணப்படவில்லை. அவை மற்ற கோத்திரங் களுடன் எண்ணப்படவில்லை. அதை கவனித்தீர்களா? அவைகளுக்குப் பதிலாக யோசேப்பின் கோத்திரமும் லேவியின் கோத்திரமும் சேர்க்கப் பட்டுள்ளன, ஏன், எல்லாவற்றையும் நினைவில் கொள்ளும் தேவன் தம் வார்த்தையின் எல்லா வாக்குத்தத்தங்களையும் நினைவு கூருபவராய் இருக்கின்றார். தேவன் மறக்கிறவர் போலக் காணப்பட்டாலும், அவர் எதையுமே மறப்பதில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் நானூறு வருடங்கள் அடிமைகளாய் இருந்தனர். அவர் ஆபிரகாமிடம், அவன் சந்ததியார் அந்நிய தேசத்திலே நானூறு வருடகாலம் பரதேசிகளாயிருப்பார்களென்றும், அதன் பின்னர் அவர் பலத்த கரத்தினால் அவர்களை வெளியே கொண்டு வருவா ரென்றும் அறிவித்திருந்தார். அவர் மோசேயிடம், ‘நான் அளித்த வாக்குத்தத்தை நினைவுகூர்ந்தேன். அதை நிறைவேற்றவே நான் இறங்கினேன்’ என்றார். தேவன் ஒருபோதும் மறப்பவரல்ல. அவரளித் துள்ள சாபங்களை அவர் மறக்கிறவரல்ல. அவ்வாறே அவரளித்துள்ள ஆசீர்வாதங்களையும் அவர் மறக்கிறவரல்ல. அவர் கொடுத்த ஒவ்வொரு வாக்குத்தத்தையும் அவர் நிறைவேற்றுபவராயிருக்கிறார். இப்பொழுது நீங்கள் என்னுடன் படிக்க விரும்புகிறேன். உபாகமம் 29-ம் அதிகாரத்துக்குத் திரும்புங்கள். இந்த இரண்டு கோத்திரங்களும் அங்கு காணப்படாததற்கு ஒரு காரணமுண்டு. எல்லாவற்றிற்குமே ஒரு காரணமுண்டு - உபாகமம் 29-ம் அதிகாரத்தை வாசிப்போம். நாம் அதைப் புரிந்து கொள்ளத் தேவன் உதவிபுரிவாராக, உபாகமம் 29-ம் அதிகாரம் 16-ம் வசனத்திலிருநது ஆரம்பிப்போம், கவனியுங்கள். மோசே பேசுகின்றான். நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்து வந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்து வந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர்களுடைய அருவருப்புகளையும் அவர்களிடதிலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர் களையும் கண்டிருக்கிறீர்கள் (அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை - உதாரணமாக பரி. சிசிவியாவின் சொரூபம் போன்றவைகளை - வைத்திருந்தார்கள். (கவனியுங்கள்) ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரை விட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும, கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும், எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். அப்படிப்பட்டவன், இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால்.... ‘ஓ! அவன் தன் உள்ளத்தைத் தேற்றிக் கொள்கின்றான்’ (ஆங்கில வேதத்தில் He bless himself his heart’) என்பதாக சிலர் சொல் கின்றனர். இப்பொழுது அவர்கள் செய்கின்றது போன்று, ‘ஒரு சிறு சிலுவையையோ அல்லது அதைபோன்று வேறொன்றையோ அவர்கள் செய்து கொண்டனர். அது அஞ்ஞான பழக்க வழக்கமாகும். அவன் தன் மன இஷ்டப்படி நடந்து தன் உள்ளத்தைத் தேற்றிக் கொள்கின்றான். அது மாத்திரமல்ல.... ‘தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து’ - குடிக்கின்றான். ‘நீ ஆலயத்திற்குப் போவாயானால், குடித்தாலும் பரவாயில்லை’ என்று சொல்கின்றனர். கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும், இந்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும் (அதனின்று ஒன்றையும் எடுத்துப் போடாதே, ஒன்றையும் கூட்டாதே), கர்த்தர் அவன் பெயரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப் போடுவார் (அதாவது அவள் பூமியில் இருக்கும்போது - வானத்தின்கீழ் இருக்கும்போது) இந்த நியாயப் பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கை யினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப் போடுவார். எனவே, யாராவது ஒருவன் விக்கிரங்களைச் சேவிக்கவோ அல்லது விக்கிரங்களைப் பூண்டு கொண்டு, தன் மன இஷ்டப்படி அவன் உள்ளத்தைத் தேற்றிக் கொண்டு, விக்கிரங்களைத் தொழுவானாகில் தேவன், ‘ஆண், பெண், குடும்பம், கோத்திரம், அவள் நாமம் யாவும் மக்களிடையே இராதபடிக்கு அழிக்கப்படும்’ என்கிறார், நான் கூறுவது சரியா? அது எவ்வளவு உண்மை! சபையின் காலங்களில் விக்கிரகாரா தனை அதைதான் செய்தது, இப்பொழுதும் செய்து கொண்டு வருகின்றது. இப்பொழுது கவனியுங்கள், அந்திக்கிறிஸ்து எவ்வாறு சரியான இயக்கத்திற்கு விரோதமான இயக்கத்தைக் கொண்டு வந்தான் என்பதைக் கவனியுங்கள். தேவனுடைய பரிசுத்தவான்கள் மாதிரியே பிசாசும் கொண்டு வருகின்றான் என்பதை உங்களில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றீர்கள்? பாவம் என்பது என்ன? அது சரியான ஒன்று தாறுமாறாக்கப்படுதலாகும். பொய் என்பது என்ன? சத்தியம் தவறாக அருளப்படுவதே பொய் என்பதாகும். விபச்சாரம் என்பது என்ன? அது சரியான சட்டப்பூர்வமான கிரியை, தவறான வழியில் நடத்தப்படுதலாகும். பெயரைக் குலைத்துப் போடும் காரியத்தில், மரித்தோரின் சொரூபங்களைச் சேவிக்கிற அதே மிருகம்தான், சபையின் காலங்களில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைக் குலைத்துப் போட்டு அதற்குப் பதிலாகப் பட்டப் பெயர்களாகிய பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்பவைகளை அளித்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அதற்கும் அதே போன்ற சாபம் காத்திருக்கின்றது. தாணும் எப்பிராயீமும் இஸ்ரவேலின் மாய்மால அரசனாகிய யெரொபெயாமின்ஆடசியின் கீழ் அதையே செய்தனர். 1 இராஜாக்கள் 12-ம் அதிகாரம், 25 முதல் 30 வசனங்கள், நாம்சார்ந்திருப்பவைகளுக்கு இது ஒரு அடிப்படையாக அமைகின்றது. யெரொபெயாம், இப்பொழுது மலைத்தேசத்தில் சீகேமைக்கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக்கட்டினான். யெரொபெயாம், இப்பொழுது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். (பாருங்கள், அவன் இருதயத்தில் சிந்திக்கிறான். ஜனங்கள் எங்கே போய் விடுவார்களோவென்று பயப்படுகிறான்). இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் இராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்று போட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவாக்ள் என்று தன் மனதிலே சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆகையால் ராஜாவானவன் யோசனை பண்ணி பொன்னினால் இரண்டு கன்றுக் குட்டிகளை உண்டாக்கி,ஜனங்களைப் பார்த்து, நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம், இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருநது வரம்பண்ணின உங்கள் தேவன் என்று சொல்லி ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். இந்தக் காரியம் பாவமாயிற்று, ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண் மட்டும் போவார்கள். பாருங்கள். பெத்தேலில் எப்பிராயீமும், தாணும், அவன் சொரூபங்களை ஸ்தாபித்தான். அவர்கள் அதை வணங்கச் சென்றார்கள். நாம் இப்பொழுது ஏறக்குறைய ஆயிரம் வருட அரசாட்சியின் காலத்துக்கு வந்திருக்கிறோம். தேவன் இப்பொழுதும் அந்தப் பாவத்தை நினைவில் கொண்டிருக்கிறார். அவர்கள் கோத்திரங்களுடன் எண்ணப்படவில்லை. ஆமென்! மகிமை! அவர் எவ்வளவு நிச்சயமாக நல்ல வாக்குத்தத்தங்களை நினைவில் கொண்டுள்ளாரோ, அவ்வளவு நிச்சயமாக அவர் தமது சாபங்களையும் நினைவில் கொண்டிருக்கிறார். ஆகவேதான், என் நண்பர்களே, அது எவ்வளவு வினோதமாகக் காட்சியளித்தாலும், நான் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்க முயன்று வருகின்றேன். பாருங்கள், அப்பொழுது அவர்கள் அதன் விளைவைக்குறித்து சற்றேனும் சிந்திக்கவில்லை. ‘நாம் எப்படியும் தப்பித்துக் கொண்டோம்’ என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் ஆயிரம் வருட அரசாட்சிக் காலம் தொடங்கவிருக்கும் காலத்தில், அவர்கள் தேவனால் சபிக்கப்பட்ட விக்கிரகாராதனையைக் கைக்கொண்டதால், அவர்கள் நாமங்களும் அவர்கள் கோத்திரங்களின் நாமங்களும் அகற்றப்பட்டுவிட்டன. அவர் நிக்கொலாய் மதஸ்தினரையும் யெசேபேலையும் வெறுப்பதாகக் கூறவில்லையா? அவர்களை ஒருக்காலும் நம்பவேண்டாம். அதனின்று விலகுங்கள். அவர்களுடைய பெயர்கள் அகற்றப்பட்டதைக் கவனித்தீர்களா? ஏன், ஏனெனில் அவர்களுக்குப் புகட்டுவதற்கு அப்பொழுது, வானத்தின் கீழ் பலி செலுத்தப்பட்டு அதன் விளைவாகப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அருளப்படவில்லை. ஆகவே அவர்கள் தங்கள் சுயநலசிந்தை கொண்டு அவர்கள் விருப்பப்படி செய்தனர். ஆனால் எசேக்கியல், ஆயிரம் வருட அரசாட்சியைக் குறித்து தரிசனம் கண்டபோது, எல்லாம் சரிவர அமைந்திருக்கக் கண்டான். அந்த பகுதியை நீங்கள் படிக்க விரும்பினால் அதைக் குறித்துக் கொண்டு, வீட்டில் சென்று படியுங்கள். எசேக்கியேல் 48.1-7, மேலும் 23 முதல் 29 வசனங்கள். எல்லாக் கோத்திரங்களும் கிரமமாக இருப்பதை எசேக்கியேல் காண்கிறான். மறுபடியும் வெளிப்படுத்தல் 14-ம் அதிகாரத்தில், யோவான் அந்த கோத்திரங்கள் கிரமமாக இருப்பதைக் காண்கிறான். அந்தந்த கோத்திரம் அவரவர்க்குரிய ஸ்தலத்தில் இருக்கின்றது. என்ன நேர்ந்தது? ‘வானத்தின் கீழ் கோத்திரங்களின் நாமம் அகற்றப்படும்’ என்று அவர் கூறினது நினைவிருக்கிறதா? அவர்கள் வானத்தின் கீழுள்ளவரை அவர்களுடைய பெயர்கள் அகற்றப்பட்டிருக்கும். இந்த 144000 பேர்களும் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் தாம். சரியா? ஆனால் அவர்களுக்கு காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் பலி மாத்திரம் இருந்தபடியால், அவர்கள் குருடாக்கப்பட்டிருந்தனர். அவர்களுடைய பெயர்கள் வானங்களின் கீழிராதபடி அவர் அகற்றினார் என்பதைக் கவனியுங்கள், பரிசுத்த ஆவியின் நாட்களில் வாழும் புறஜாதிகள் பாவம் செய்தால், அவர்களின் பெயர்கள் ஜீவபுத்த கத்திலிருந்து முற்றிலுமாக எடுத்துப் போடப்படும். அவர்களுக்கு இவ்வுல கிலோ அல்லது வரப்போகும் உலகிலோ, மன்னிப்பேயில்லை. இஸ்ரவேல் ஜனங்கள் காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் கீழிருந்தனர். அவர்களுக்கு ஒரு ஸ்தானம் உண்டாயிருந்தது. தாண், எப்பீராயீம் கோத்திரங்கள் காணப்படவில்லை. அவர்கள் ஒருக்காலும மறுபடியும் சேர்க்கப்பட முடியாது. 144000 பேர்களை அவர் அழைத்தபோது, இவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. அவர்கள் அங்கு எண்ணப்படவுமில்லை. தாண், எப்பீராயீம் கோத்திரங்களுக்குப் பதிலாக யோசேப்பு, லேவி கோத்திரங்கள் நுழைக்கப்பட்டுள்ளன. அதை நீங்கள் வேதத்தில் காணலாம். அது உங்களுக்கு முன்னால் உள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தேவன் எச்சரித்திருந்தார். என்ன நேர்ந்தது? பயங்கரமான உபத்திரவ காலத்தில் அவர்கள் சுத்திகரிக்கப்படுகின்றனர். ஒரு நல்ல ஸ்திரீயாகிய கன்னிகையையே, அவளிடம் எண்ணெய் இல்லாமலிருந்த காரணத்தால், தேவன் அவளை உத்திரவத்தின் மூலம் சுத்திகரிக்கச்சித்தம் கொண்டால் - இஸ்ரவேல் கோத்திரங்களையும் அவர் உபத்திரவ காலத்தில் சுத்திகரிக்கின்றார். ஏனெனில் அது நியாயத் தீர்ப்பாகும். இஸ்ரவேலர் சுத்திகரிக்கப்பட்ட பிறகு 144000 பேர் வருகின்றனர். அவ்வாறே உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகளும் சுத்திகரிக்கப்பட்டு வெள்ளையங்கிகளைத் தரித்துக் கொள்கின்றனர். எவ்வளவு அழகாக பொருந்துகின்றதைப் பாருங்கள். யாக்கோபு உபத்திரவ சமயத்தைக் கடந்தது போன்றதாகும். இது. யாக்கோபு தன் சகோதரனாகிய ஏசாவுக்குத் தீங்கிழைத்ததால் அவன் உபத்திரவ காலத்தில் பிரவேசிக்க வேண்டியதாயிருந்தது. சேஷ்ட புத்திர பாகத்தைப் பெறுவதற்கென அவன் சகோதரனை ஏமாற்றினான். அவன் பெயர் யாக்கோபு என்பதிலிருந்து இஸ்ரவேல் என்னும் பெயராக மாறுவதற்கு முன்பாக அவன் சுத்திகரிப்புக்குள் பிரவேசிக்க வேண்டியதா யிருந்தது. இது தேவனுடைய ஒழுங்குக்கு ஒரு உதாரணம். இப்பொழுது வெளிப்படுத்தல் 8.1 ஐப் படிப்போம். (நீங்கள் எல்லாரும் களைப்பாயிருக்கிறீர்கள் என்று அறிகிறேன். இன்னும் சில நிமிடங்கள் கவனியுங்கள். பரம தேவனே, எங்களுக்கு உதவி புரியும் என்பது தான் என் ஜெபம்) இந்த ஏழாம் முத்திரை எல்லா காரியங்களும் முடிவடையும் சமயம் என்பதை நினைவு கூருங்கள். ஏழாம் முத்திரையைக் கொண்ட புத்தகத்தில் எழுதப்பட்டவை (உலகத் தோற்றத்துக்கு முன்னால் மீட்பின் திட்டம் அதில் முத்திரையிடப்பட்டிருந்தது) எல்லாமே முடிவடையும். அதுதான் முடிவு, கஷ்டத்தினால் போராடிக் கொண்டிருக்கும் உலகத்தின் முடிவு அதுவாகும். தவித்துக் கொண்டிருக்கும் இயற்கைக்கு அதுவே முடிவாகும். எல்லாவற்றிற்கும் அதுவே முடிவாகும். அதில் எக்காளங்கள் முடிவடைகின்றன, கலசங்கள் முடிவடைகின்றன, பூலோகமும் முடிவடை கின்றது. ‘காலம்’ என்பது கூட முடிவடைகின்றது. ‘இனிகாலம் செல்லாது’ என்று வேதம் உரைக்கின்றது. வெளிப்படுத்தல் 10ம் அதிகாரம் 1 முதல் 7 வசனங்களில் காலம் முடிவடைகின்றது. பலமுள்ள தூதன், ‘இனி காலம் செல்லாது’ என்கிறான்.... இந்த மகத்தான காரியம் நிகழும் நாட்களில்.... ஏழாம் முத்திரையின் முடிவில்... இந்தக் காலத்துடன் எல்லாமே முடிவடைகின்றன. சபையின் காலங்களின் முடிவும் அதுவாகும், ஏழாம் முத்திரையின் முடிவும் அதுவே. எக்காளங்கள் அப்பொழுது முடிவடைகின்றன. கலசங்களும் முடிவடைந்து ஆயிரம் வருட அரசாட்சியின் காலமும் ஏழாம் முத்திரையில் தொடங்கி விடுகின்றது. இது ஒரு ராக்கெட்டை ஆகாயமண்டலத்தில் வெடிப்பது போன்றதாகும். அந்த ராக்கெட் வெடித்து மேலே சென்று, மறுபடியும் வெடிக்கின்றது, அச்சமயம் ஐந்து நட்சத்திரங்கள் அதனின்று வெளியே வருகின்றன. அவ்வாறு வெளிவந்த ஒரு நட்சத்திரம், மறுபடியும் வெடித்து அதனின்று ஐந்து நட்சத்திரங்கள் புறப்பட்டுச் சென்று மறைந்து விடுகின்றன. அதுதான் ஏழாம் முத்திரையாகும். உலகத்தின் முடிவு அதுவாகும். இதனுடைய சமயமும் அதனுடைய சமயமும் முடிவடைகின்றன. ஏழாம் முத்திரையின் எல்லாமே முடிவடைகின்றன. அவர் அதை எவ்விதம் செய்யப் போகின்றார்? அதுதான் நமக்குத் தெரியாது. அல்லவா? நமக்குத் தெரியாது. இவை யாவும் முடிவடைந்து ஆயிரம் வருட அரசாட்சி தொடங்குவதற்குச் சமயம் வந்துவிட்டது. கவனியுங்கள். இந்த முத்திரை உடைக்கப்பட்டது ஒரு மகத்தான செய்கையாதலால், பரலோகம்கூட அரைமணி நேரம் அமைதியாயிருக்கக் கட்டளை பெற்றது. அது மகத்தானதொன்றல்லவா? அது என்ன? பரலோகம் அமைதியாயிருக்க உத்தரவு பெற்றது. அரைமணி நேரத்தில் எதுவும் நகரவும்கூட இல்லை. ஒரு நல்ல காலம் உண்டாயிருக்கும்போது, அரைமணி நேரம் என்பது ஒரு நீண்ட சமயமல்ல. ஆனால் ஜீவனுக்கும் மரணத்துக்கும் இடையே ஒரு ஐயப்பாடு உள்ளபொழுது, அரைமணி நேரம் என்பது ஆயிரம் வருடம் நீண்டது போன்றதுதான் காட்சியளிக்கும். அப்பொழுது நடக்கும் சம்பவங்கள் மகத்தானவை. ஆகவேதான் இயேசு அதைக் குறித்து ஒன்றுமே உரைக்கவில்லை - மற்றவர்களும்கூட, யோவான் அதை எழுதவும் கூடவில்லை. அவன்அதை எழுதி வைப்பதற்குத் தடை செய்யப்பட்டான். அமைதி உண்டாயிற்று என்று மாத்திரமே அவன் எழுதியுள்ளான். கின்னரங்களை வாசித்துக்கொண்டு தேவனுக்கு முன்பாக நின்ற இருபத்து நான்கு மூப்பர்களும் கின்னரம் வாசிப்பதை நிறுத்திவிட்டனர். பரலோகத்திலுள்ள தேவதூதர்களும் பாடுவதை நிறுத்திக் கொண்டனர். ஏசாயா தேவாலயத்தில் கண்ட கேரூபின்களும் சேராபீன்களும் அவ்வாறு செட்டைகள் கொண்டவர்களாய், இரண்டு செட்டைகளால் தங்கள் முகத்தை மூடிஇரண்டு செட்டைகளால் தங்கள் கால்களை மூடி, இரவும் பகலும் தேவனுடைய சமூகத்தில் பறந்து, ‘சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்’ என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவாலயத்திற்குள் நுழைந்தபோது, வாசல்களின் நிலைகள் அவர் களுடைய பிரசன்னத்தால் அசைந்தன. அத்தகைய பரிசுத்த சேராபீன் களும் கூட பாடுவதை நிறுத்திக் கொண்டு அமைதியாயினர். எந்த தேவதூதனும் பாடவில்லை. யாரும் போற்றித் துதிக்கவில்லை. பீட ஆராதனை வேறொன்றும் அங்கு நிகழவில்லை. பரலோகத்தில் அரைமணிநேர அளவு பயங்கர அமைதி உண்டாயிருந்தது. மீட்பின் புத்தகத்தில் காணப்பட்ட ஏழாம் முத்திரை உடைக்கப்பட்டபோது, வானத்தின் சேனைகள் அரைமணி நேரமளவு அமைதலாயிருந்தனர். சற்று யோசித்துப் பாருங்கள். ஆனால் அது உடைக்கப்பட்டுவிட்டது. ஆட்டுக் குட்டியானவர் தானே அதை உடைத்தார். என்ன நேர்ந்தது தெரியுமா? அவர்கள் அதைக்கண்டு பக்திபூர்வமான பயம் கொண்டிருக்க வேண்டு மென்று நினைக்கிறேன். அவர்கள் அதை முன்பு அறிந்திருக்கவில்லை. அதைக்கண்ட மாத்திரத்தில் அவர்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர். ஏன்? அது என்ன? நாம் யாரும் அது என்னவென்று அறியமாட்டோம். ஆனால் அதைக் குறித்து எனக்குக் கிடைக்கப்பெற்ற வெளிப்பாட்டை நான் உங்களிடம் கூறப்போகின்றேன். நான் எல்லை மீறிய மதப்பற்றுள்ளவன் (Fanatic) அல்ல, நான் ஒன்றை அறியாமலிருந்தால், கற்பனை செய்து ஒரு காரியத்தைக் கூறுவது கிடையாது. சிலருக்கு விசித்திரமாகத் தென்படும் காரியங்களை நான் கூறியதுண்டு. ஆனால் தேவன் நான் கூறுவதை சத்தியம் என்று நிரூபிக்கும் போது, அது உண்மையில் தேவனுடைய வார்த்தையாயிருக்கின்றது. நான் இப்பீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக நான் இதைக் குறித்து வெளிப்பாட்டைப் பெற்றுள்ளேன் என்று உறுதி கூறுகின்றேன். அது மூன்று பாகங்களாக அமைந்துள்ளது. அதன் ஒருபாகத்தை தேவ ஒத்தாசையைக் கொண்டு நான் உங்களுக்கு உரைக்கின்றேன். முதலில் அது என்னவென்பதை உங்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். ஏழு இடி முழக்கங்களை யோவான் கேட்டு அதை எழுதவேண்டுமென்றிருந்தபோது, அதை எழுத வேண்டாமென்று கட்டளை பெற்றான் அல்லவா? அவ்வாறு அடுத்தடுதது முழங்கின ஏழு இடிகளில்தான் அந்தப் பரமரகசியம் அடங்கியுள்ளது. அதை நான் நிரூபிக்க முற்படுவோம். அந்த இரகசியத்தைக் குறித்து யாருமே அறியமாட்டார். அதை எழுத வேண்டாமென்று யோவான் கட்டளை பெற்றான் - அதன் ஒரு அடையாளத்தைக்கூட எழுதவும் அவன் தடை செய்யப்பட்டான். ஏன்? இதற்காகத்தான் பரலோகத்தில் எவ்வித செயல்களும் அப்பொழுது இல்லை - அடையாளம் எழுதியிருந்தால் அது பரம இரகசியத்தை வெளியாக்கிவிடும். இப்பொழுது புரிகின்றதா? அது மகத்தான ஒன்றாயிருப்பதால் அதைக் குறித்து எழுதப்பட வேண்டும். ஏனெனில் அது நிகழ்ந்தாக வேண்டும். ஆனால் ஏழு இடிகள்....? ஏழு தூதர்களும் அவர்கள் எக்காளங்களை முழங்கத் தோன்றின போது - ஒரு இடி முழங்கினது. இஸ்ரவேல் ஜனங்கள் கூட்டப்பட்ட போது - ஒரு எக்காளம் தொனிக்கின்றது. காலம் என்பது முடிவடையும் போது கடைசி எக்காளம் தொனிக்கும். அப்பொழுது ஒரு இடிதான் முழங்கினது. ஆனால் இங்கு வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இடிகள் முழங்குகின்றன. சாத்தான் மாத்திரம் இதை அறிந்திருந்தால், அதிக கேடு விளைத்திருப்பான். இது ஒன்றை அவன் அறியவே மாட்டான். அவன் எந்த ஒரு காரியத்தையும் வியாக்கியானம் செய்து சுய அர்த்தம் கொடுக்க முடியும். அவ்வாறே ஆவியின் வரத்தைப் பெற்றது போன்று அவன் ஆள்மாறாட்டம் செய்ய முடியும். ஆனால் இதை மாத்திரம் அவன் அறியவே முடியாது. ஏனெனில் அது வேதத்தில் எழுதப்பட வேயில்லை. அது பரிபூரண இரகசியம். தேவ தூதர்கள் யாவரும் வாயடைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் சற்றேனும் அசைத்தால் கூட, இரகசியத்தை வெளியிட நேரிடும். ஆகவே தான் அவர்கள் ஒன்றும் பேசாமல், கின்னரம் வாசிப்பதையும் நிறுத்திவிட்டனர். ஏழு என்பது தேவனுடைய பரிபூரண எண்ணிக்கையாகும் (சகோ. பிரான்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழுமுறை தட்டுகிறார் - ஆசி.) ஏதோ ஒன்றை எழுத்துக் கூட்டி வாசிப்பது போல் ஏழு இடிகளும் ஒரே வரிசையில் ஒவ்வொன்றாக முழங்குகின்றன. அப்பொழுது யோவான் எழுத வேண்டுமென்றிருநதான். அப்பொழுது அவர், ‘அதை எழுத வேண்டாம் என்று கூறினார். இயேசு அது என்னவென்பதைத் தெரியப்படுத்தவில்லை. யோவானும் அதை எழுத முடியவில்லை. தேவ தூதர்களும் அது என்னவென்று அறியார்கள். அதுவென்ன? பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்களென்று இயேசு சொன்ன அதே காரியம்தான் அது. அவரும் கூட அதை அறிந்திருக்கவில்லை. தேவன்மாத்திரமே அதை அறிவாரென்று அவர் கூறினார். ஆனால் இந்த அடையாளங்களை நீங்கள் காணத் தொடங்கும் போது.... (இப்பொழுது உங்களுக்குப் புரிகின்றதா?) சரி). நாம் இந்த அடையாளங்களைக் காணத் தொடங்குகிறோம். சாத்தானுக்கு மாத்திரம் அது தெரிந்திருந்தால், நான் சொல்லுவதை நீங்கள் உண்மையெனக் கருத வேண்டும். நான் ஏதாவது ஒன்றைச் செய்யத் திட்டமிடும்போது, அதை நான் மற்றவர்களுக்கு அறிவிப்பதில்லை. அவர்கள் அதை மற்றவர்களிடம் பரப்புவார்கள் என்பதற்காகவல்ல. சாத்தான் அதைக் கேட்டுவிடுவான் என்ற ஐயத்தினால்தான், என் இருதயத்தில் அந்த இரகசியத்தைத் தேவன் பரிசுத்த ஆவியினால் மூடி வைத்திருக்கும் வரை, சாத்தான் என் இருதயத்திலுள்ளதை அறிந்து கொள்ளவே முடியாது. ஏனெனில் அது எனக்கும் தேவனுக்கும்மாத்திரம் அறியப்படும் ஒரு இரகசியமாயிருக்கும். நான் என் இருதயத்தில் மறைந்து கிடப்பதை வாயினால் அறிவிக்கும் வரை, அவன் அதைக் குறித்து ஒன்றையும் அறிய முடியாது. நான் பேசின பிறகு, அவன் அதைக் காதினால் கேட்டுத் தெரிந்து கொள்கிறான். நான் ஒரு காரியத்தைச் செய்யப்போவதாக மக்களிடம் அறிவிப் பேனானால், என்னைத் தோற்கடிக்க பிசாசு அவனால் இயன்றவரை முயல்வதை நீங்கள் பார்த்திருக்களாம். ஆனால் தேவனிடமிருந்து நேரடியாக வெளிப்பாட்டைப் பெற்று அதைக் குறித்து ஒன்றும் பேசாமலிருந்தால், அப்பொழுது அது ஒரு வித்தியாசமான காரியம். பிசாசு ஒன்றும் செய்ய முடியாது. சபை செய்யக்கூடிய எல்லாவற்றையும் பிசாசு செய்ய முயல்வான் என்பதை நினைவு கூறலாம். அவன் அவ்விதம் செய்ய முயன்றிருக்கிறான். அந்திக்கிறிஸ்துவின் மூலமாக அவன் அவ்விதம் செய்ததை நாம் கவனித்திருக்கிறோம். ஆனால் இந்த ஒரு காரியத்தில் மாத்திரம் அவன் போலியாகச் செய்யமுடியாது. ஏனெனில் அதைக் குறித்து அவனுக்குத் தெரியாது. அதை அறிந்து கொள்வதற்கும் அவனுக்கு வழியில்லை. அது மூன்றாம் இழுப்பாகும்’ அவனுக்கு அது புரியவுமில்லை. (1966ம் வருடம் ஏப்ரல் 10ந் தேதியன்று பிரான்ஹாம் கூடாரத்தின் சங்கம், செய்தியின் மீதியுள்ள பகுதியை வெளியிடத் தீர்மானித்தது. முதலாவதாக வெளியிடப்பட்ட பாகம் 645 - 652 பக்கங்களில் உள்ளது - ஆசி) ....... அதனுள்ளில் ஒரு இரகசியம் மறைந்து கிடக்கின்றது. உன்னதத்திலுள்ள தேவனுக்கு மகிமையுண்டவதாக! நான் முன்பு கருதியிருந்தவாறு, ஏனைய என் ஜீவிய காலத்தில் நான் கருத முடியாது. நான் கண்டபோது.... அது என்னவென்று எனக்குத் தெரியாது... அதனுடைய அடுத்தபடியை நான் அறிவேன். ஆனால் அதை எவ்விதம் அர்த்தம் கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. அது நிகழ இன்னும் அதிக காலமில்லை. அது நிகழ்ந்தபோது நான் இங்கு எழுதி வைத்துக்கொண்டேன் - உங்களால் காணமுடிந்தால்! ‘நிறுத்து! இதற்கு மேல் எழுதாதே’ என்னும் கட்டளை எழுந்தது. நான் மூட வைராக்கியம் கொண்டவனல்ல - நான் உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன். நான் தரிசனத்தில் கண்ட ஒரு சிறு பாதரட்சையைக் குறித்து உங்களிடம் விளக்கிக் கூறினது உங்களுக்குத் நினைவிருக்கலாம் - எப்படி அந்த ஆத்துமாவும் உள்ளான மனசாட்சியும் இன்னாருக்கு அடுத்தாற்போல உண்டாயிருந்தது என்றெல்லாம் விளக்கினேன். ஆனால் அது ஒரு பெரிய போலிக் குழுவை விளைவித்தது. எப்படி நான் மக்களின் கைகளைப் பிடிக்கும்போது ஒருவித அதிர்வு ஏற்பட்டது என்று கூறினபோது, எல்லாரும் கைகளைப் பிடிக்கும்போது அவ்வித அதிர்வு உண்டாவதாகக் கூறினர். ஆனால் அவர் என்னை உயரக் கொண்டுபோய், ‘இதுதான் மூன்றாம் இழுப்பு. இதை யாரும் அறியமாட்டார்கள்’ என்று கூறினது நினைவிருக்கிறதா? தரிசனங்கள் ஒருபோதும் தவறாவதில்லை. அவை முற்றிலும் உண்மையாகும். தூதர்களின் கூட்டத்தைப் பற்றிய தரிசனம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? சார்லி. இங்கேதான் இருக்கிறீர்கள். ஏதோ ஒன்று இந்த வாரம் சம்பவித்துக் கொண்டிருப்பதாக நான் உங்களிடம் கூறினேன்.... அது உங்களைச் சுற்றிலும் இருக்கின்றது. ஆனால் அதை நீங்கள் கவனித்தீர்களா என்று நான் வியப்புறுகிறேன். நான் இங்கிருந்து அரிசோனாவுக்குச் செல்லப் புறப்பட்டபோது, தூதர்களின் கூட்டத்தின் தரிசனத்தை நான் கண்டது நினைவிருக்கிறதா? ‘ஐயன்மீர், இதுவா சமயம்?’ என்னும் செய்தி ஞாபகமிருக்கிறதா? அங்கு ஒரே ஒரு பெருத்த இடிமுழக்கம் தான் உண்டானது, ஆனால் ஏழு தேவதூதர்கள் தோன்றினர். ‘ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி, நீ வந்துபார் என்று இடிமுழக்கம் போன்ற சத்தமாய்ச் சொல்லக் கேட்டேன்’ கவனியுங்கள். ஒரு இடிமுழக்கம் - ஆனால் அதில் முத்தரிக்கப்பட்ட ஏழு செய்திகள், இக்கடைசி காலம்வரை வெளிப்பட முடியாதவை. நான் சொல்லுகின்றது உங்களுக்குப் புரிகின்றதா? இந்த வாரத்தின் பரம இரகசியமான பாகத்தைக் கவனித்தீர்களா? அது தான் அது. அது மனிதனல்ல, அது கர்த்தருடைய தூதர்களாகும். மெக்ஸிகோவுக்கு மிகவும் அருகாமையில் மலையின்மேல் வந்தேன். அப்பொழுது இங்கு வீற்றிருக்கும் இரண்டு சகோதரர்கள் என்னுடன் இருந்தனர். அவர்கள் என்கால் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்த ஊமச்சியை (Cocklebur) எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மலையே அசையும்படி ஒரு பெருத்த இடி உண்டானது. அதை நான் என்னுடன் இருந்த சகோதரரிடம் அறிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் என்னிடம் ஒரு வித்தியாசத்தை கண்டனர். அவர் என்னிடம், ‘ஆயத்தப்படு! கிழக்கே போ’ என்றார். அந்தத் தரிசனத்தின் வியாக்கியானம் இவையேயாகும். சகோ. சாத்மனுக்கு (Sothman) அவர் வேட்டையாடிச் சென்றவேட்டை பொருள் கிடைக்கவில்லை. அவருக்கு வேட்டை பொருள் கிடைக்க நாங்களும் முயன்று வந்தோம். அவரோ என்னிடம், ‘இன்றிரவு அவருக்கு வேட்டை பொருள் கிடைக்காது. அது உனக்கு ஒரு அடையாளமாயிருக்கும். இந்த தேவ தூதர்கள் உன்னைச் சந்திக்க இருப்பதால், நீ உன்னை இப்பொழுது பிரதிஷ்டை செய்து கொள்ளவேண்டும்’ என்றார். அப்பொழுது நான் என் சுய உணர்வில் இல்லை. நான் அப்பொழுது மேற்கு திசையில் இருந்தேன். தேவதூதர்கள் கிழக்குத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் வந்தபோது, நானும் அவர்களுடன் எடுக்கப்பட்டேன். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? - கிழக்கிலிருந்து வந்தனர். இன்றிரவு நம் மத்தியிலுள்ள சகோ. ஃபிரட் சாத்மனும் (Bro. Fred Sothman) சகோ. நார்மனும் (Bro. Norman) அதற்குச் சாட்சிகள். நாங்கள் மலையை விட்டு கீழே இறங்கும் போது, சகோ. சாத்மனிடம் மேலேயே தங்கி வேட்டைபொருளைப் பெற்றுக் கொள்ள எவ்வளவோ தூண்டினேன். சகோ. சாத்மன், நான் கூறுவது சரியா? ஆம். அதோ அவர் அங்கே நின்று கொண்டிருக்கிறார். நான் அவரைத் தூண்டினேன். அவரோ, ‘வேண்டாம்’ என்று கூறிவிட்டார். நான் ஒன்றும் கூறவில்லை - கீழே இறங்கி வந்து கொண்டேயிருந்தேன். அன்று அந்த கூடாரத்தின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒன்று - சகோ, சாத்மன், நினைவிருக்கிறதா? சில காரியங்கள் அறிவிக்கப்பட்டவுடனே, உங்களையும் சகோ. நார்மனையும்.... சகோ. நார்மன் எங்கே? - அங்கே பின்னால் இருக்கிறார் - அங்கு நடந்தவைகளை வெளியே கூறக்கூடாது என்று உறுதிமொழி கூறச் சொன்னேன். அது சரியா? நான் இவ்விதம் திரும்பி, கூடாரத்தை விட்டு அப்பால் நடந்தேன் அல்லவா? நான் கூறுவது சரியா? ஏனெனில்அதுதான் அது. அது நிகழும் வரை நான் அதைக் குறித்து சொல்லி, ஜனங்களைப் புரிய வைக்கக்கூடாது. அங்கு ஒரு தேவதூதன் மாத்திரம் வித்தியாசமாகக் காணப்பட்டான். மற்ற தேவதூதர்களைக் காட்டிலும் அவன் மேலாகக் காட்சியளித்தான். அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர்கள் ஒரு கூட்டமாக வந்தனர். ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று தூதர்களும் மேலே ஒருவரும் இருந்தனர். எனக்குப் பக்கத்தில் இருந்த தேவதூதன் இடமிருந்து வலம் எண்ணும்போது, ஏழாவது தூதனாயிருப்பான். அவன் மற்ற தூதர்களைக் காட்டிலும் பிரகாசமுள்ளவனாய், மற்றவர்களைக் காட்டிலும் எனக்கு முக்கியமானவனாய் காணப்பட்டான். அவன் இவ்விதம் தன் மார்பை முன்னால் தள்ளியவாறு கிழக்கே பறந்து சென்றான் என்று நான் கூறினது நினைவிருக்கிறதா? அது என்னை மேலே தூக்கியது’ என்றும் நான் கூறினேன். ஞாபகமிருக்கிறதா? இதுதான் ஏழாம் முத்திரையைக் கொண்டது - என் வாழ்நாள் முழுவதும் என்னை வியப்புறச் செய்த ஒன்று. ஆமென்! மற்றைய முத்திரைகளும் கூட எனக்கு முக்கியமானவைதாம். ஆனால் இது எனக்கு எவ்வளவு முக்கியமானதென்று நீங்கள் அறியமாட்டீர்கள். என் வாழ்வில் ஒரு சமயம் ..... நான் ஜெபித்தேன். தேவனிடம் கதறி அழுதேன். அது பீனிக்ஸ் கூட்டத்திற்குப் பிறகு, என்னுடன் இருந்தவர்கள் அதை அறிவீர்கள். நான் மலையின்மேல் படுத்துக் கொண்டேன். ஒரு நாள் காலை நான் எழுந்திருந்து சபினோ கான்யானுக்கு (Sabino Canyon) - உயர்ந்த, கரடுமுரடான மலை. நான் அதன் மேலே சென்றபோது, ஒருநடைபாதை லெம்மன் மலைக்கு (Lemmon Mountain) சென்றது. அது முப்பதுமைல் நடை தூரமாகும். அங்கு முப்பது அடி உயரமுள்ள பனி பெய்திருந்தது. அதிகாலையில் அந்த மலையின் நடைபாதையில் நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். நான் திரும்பிச் செல்ல உந்தப்பட்டேன். நான் திரும்பி கரடுமுரடான பாறைகளின் நடுவே சென்றேன் - நூற்றுக்கணக்கான அடிகள் உயரமுள்ளவை. நான் இப்பாறைகளின் நடுவே முழங்காற் படியிட்டு, வேதபுத்தகத்தையும், கையிலுள்ள குறிப்பு எழுதும் காகிதங்கள் அடங்கிய புத்தகத்தையும் கீழே வைத்துவிட்டு, ‘தேவனாகிய கர்த்தாவே, இந்தத் தரிசனத்தின் அர்த்தம் என்ன? நான் மரிக்கவேண்டுமென்பதன் அறிகுறியா இது’ என்று கேட்டேன். (ஏதோ ஒன்று என்னைக் குலுக்கியதால் நான் மரிக்கும் தருணம் வந்துவிட்டதாக கருதினேன் என்று உங்களிடம் கூறினது நினைவிருக்கிறதா?) உங்களில் எத்தனை பேர் அதை நான் சொல்லக் கேட்டிருக்கிறீர்கள்? நிச்சயமாக எல்லாரும் கேட்டிருக்கிறீர்கள். அது என் மரணத்தைக் குறிப்பதாக நான் எண்ணினேன். பிறகு என் அறையில் நான்அவரிடம், ‘ஆண்டவரே அது என்ன? அது எதைக் குறிக்கிறது? நான் மரிக்கப் போகிறேன் என்பதுதான் அதன் அர்த்தமா? அப்படியானால், சரி, அதை நான் என் குடும்ப நபர்களுக்கு அறிவிக்க மாட்டேன். என் ஊழியம் முடிவடைந்து விட்டால், நான் போகட்டும்’ என்றேன். ஆனால் அவர் ஒரு சாட்சியை அனுப்பினார் - நான் கூறினது நினைவிருக்கலாம் - அது நான் நினைத்தவாறு அல்ல. அது என் ஊழியத்தின் தொடர்ச்சியாகும். நான் கூறுவது அர்த்தமாகின்றதா? - சபினோ கான்யானில் உட்கார்ந்து கொண்டு - பரமபிதா இதை அறிவார் - அது நிறைவேறுவதை நீங்கள் கண்டது எவ்வளவு உண்மையோ? அந்த தேவதூதர்கள் அங்கு இறங்கி வந்து ஒவ்வொரு செய்தியும் சரியே என்று உறுதிப்படுத்தினர். அப்படியானால், அது தேவனிடத்திலிருந்து வந்ததா இல்லையா என்பதை இதனால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அது தரிசனத்தின் மூலம் உங்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. ஆராதனை முடியும்வரை அதை உங்களிடம் கூறக்கூடாது என்னும் கட்டளை பெற்றேன். அன்று காலை சபினோ கான்யானில் கரங்களை உயர்த்தியவாறே உட்கார்ந்து கொண்டிருந்தபோது, காற்று என் பழைய கறுப்பு தொப்பியைக் கொண்டு சென்றது. நான் நின்று கொண்டு கரங்களை உயர்த்தி, ‘தேவனாகிய கர்த்தாவே, இதன் அர்த்தம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, நான் என்ன செய்ய வேண்டும்? நான் பரம வீட்டுக்குச் செல்ல வேண்டிய சமயம் வந்து விட்டிருந்தால், நான் அங்கு செல்லட்டும். அவர்கள் யாரும் என்னைக் கண்டுபிடிக்கவே முடியாது. நான் போக வேண்டுமானால், யாரும் அழுது துக்கிக்க நான் விரும்பவில்லை. நான் பரம பாதையில் நடந்து சென்றுவிட்டேன் என்று மாத்திரம் என் குடும்பத்தினர் நினைக்க விரும்புகிறேன். அவர்கள் என்னைக் கண்டுபிடிக்க முடியாத- என்னை எங்காவது மறைத்துக் கொள்ளும். நான் போகவேண்டுமானால், என்னைப் போக அனுமதியும். ஒருக்கால் என் மகன் ஜோசப் என் வேதபுத்தகம் இங்கிருப்பதைக் கண்டு பிடிக்கலாம். அது அவனுக்கு உபயோகமாயிருக்கும். நான் செல்ல வேண்டுமானால், நான் அங்கு செல்ல அனுமதியும்’ என்று ஜெபித்தேன். நான் என் கைகளை உயர்த்தியிருந்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று என் கையைத் தட்டியது. நான் எந்நிலையில் இருந்தேன் என்று என்னால் கூறு இயலாது. நான் உறங்கிக் கொண்டிருந்தேனா அல்லது நினைவிழந்த நிலையில் இருந்தேனா என்பது எனக்குத் தெரியாது. அது தரிசனமா? அதுவும் என்னால் கூற இயலாது. அது என் கையைத் தட்டியது. நான் பார்த்தபோது அது ஒரு பட்டயம். அதற்கு முத்துக்களால் செய்யப்பட்ட கைப்பிடி உண்டாயிருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது.அதன் உறை பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. அதன் வெட்டும் பாகம் (blade) மிகவும் பளபளப்பாக வெள்ளியினால் செய்யப்பட்டது போன்றிருந்தது. அது மிகவும் கூர்மையாகவும் இருந்தது. ‘மிகவும் அழகாயிருக்கிறதல்லவா? என் கையில் அது சரியாகப் பொருந்துகின்றது’ என்று எண்ணினேன். ஆனால், ‘பட்டயம் என்றாலே எனக்கு அதிக பயம். நான் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?’ என்று நினைத்தேன். அப்பொழுது ஒரு சத்தம் தோன்றி பாறைகளையும் அதிரச் செய்தது. அது, ‘இது இராஜாவின் பட்டயம்’ என்று உரைத்தது. அப்பொழுது அது கலைந்தது. அது, ‘ஒரு இராஜாவின் ஒரு பட்டயம்’ என்று கூறவில்லை. ‘அது இராஜாவின் பட்டயம்’ என்று தான் உரைத்தது. இராஜா என்பவர் ஒருவர் தான், அவர் தான் தேவன். அவருக்கு ஒரு பட்டயம் மாத்திரமே உள்ளது. அதுதான் அவருடைய வார்த்தை. அதை அனுசரித்து தான் நான் வாழ்கிறேன். ஆகவே தேவனே, உதவிபுரியும்... அவருடைய பரிசுத்த வஸ்திரத்தைக் கொண்டு வாருங்கள். அவருடைய பரிசுத்த வார்த்தை இங்குள்ளது. அது தான் தேவனுடைய வார்த்தை. ஆமென். ஓ! என்னே ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டு வருகிறோம் - என்ன மகத்தான காரியம். பரம இரகசியத்தைக் கண்டீர்களா? அந்த பட்டயம் என்னை விட்டு எடுபட்டபோது ஏதோ ஒன்று என்னிடம், ‘பயப்படாதே’ என்று உரைத்தது. ஒரு சத்தத்தை அப்பொழுது நான் கேட்கவில்லை - அது எனக்குள்ளே பேசினது. நான் அங்கு நிகழ்ந்தவாறே உங்களிடம் கூறுகிறேன் என்பது சத்தியம். அது, ‘பயப்படாதே, இதுதான் அந்த மூன்றாம் இழுப்பு’ என்றது. மூன்றாம் இழுப்பு - அது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவர், ‘நீ விளக்கம் கூறின யாவற்றிற்கும் போலியாட்கள் உண்டு. ஆனால் இதை நீ செய்ய முயற்சிக்காதே’ என்றார். அந்த தரிசனம் எத்தனைப் பேருக்கு ஞாபகமிருக்கிறது? அது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்பட்டு எல்லாவிடங்களிலும் சென்றுள்ளது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அது நிகழ்ந்தது. அவர், ‘இதை விளக்க முயற்சிசெய்ய வேண்டாம். இது தான் மூன்றாம் இழுப்பு. ஆனால் நான் உன்னை அங்கு சந்திப்பேன்’ என்றார். நான் ஒரு குழந்தையின் பாதரட்சையுடன் நின்று கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் ‘இப்பொழுது, முதலாவது இழுப்பைச் செய். அதை நீ செய்யும்போது, மீன் தன்னை வசப்படுத்தும் தூண்டிலின் பின்னால் ஓடும்’ என்றார். பின்புஅவர், ‘உன் இரண்டாம் இழுப்பைக் கவனி’ ஏனெனில் சிறு மீன்கள் மாத்திரமே இருக்கும்’ என்றார். அவர் பின்னும், ‘மூன்றாம் இழுப்பின் மூலம் அவைகளைப் பெற்றுக் கொள்வாய்’ என்றார். போதகர் எல்லாரும் ஒன்றுகூடி என்னிடம், சகோ. பிரான்ஹாமே, உங்களால் இதைச் செய்ய முடியும் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். அல்லேலூயா!’ என்றனர். ‘அங்குதான் நான் சிக்கலில் பிணைக்கப் பட்டேன் - இந்த போதக குழுவினருடன், நான் மக்களைச் சிநேகிக்கிறேன். நான் எல்லாவற்றையும் விளக்கித் தரவேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர். நான், ‘அதன் அர்த்தம் எனக்குப் புலப்படவில்லை, மீன்பிடிக்கும் முறையை நானறிவேன். மீன் பிடிக்கும்போது முதலாவதாக செய்ய வேண்டியது - இவ்விதம் தான் அதைச் செய்வது வழக்கம். சுற்றிலும் மீன்கள் உள்ளதை காணும்போது தூண்டிலை திடீரென்று இழுக்க வேண்டும்’ என்றேன். அதுதூன் மீன் பிடிக்கும்போது கையாள வேண்டிய உபாயம். நான் முதன் முறையான தூண்டிலை திடீரென்று இழுத்தபோது, மீன் அதில் அகப்பட்டது. ஆனால் அவை யாவும் சிறிய மீன்களாகும். கரையில் நான் தூண்டிலை இழுத்தபோது, ஒரு மீன் அகப்பட்டது. ஆனால் அது தூண்டிலின் மேல், தோல் சுற்றிக் கொண்டிருந்தது போன்று அவ்வளவு சிறியதாக இருந்தது. நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், ‘அப்படி செய்ய வேண்டாமென்று நான் உன்னுடன் சொன்னேன் அல்லவா?’ என்றது, நான் அழத் தொடங்கினேன். எல்லா கயிறுகளும் என்னைச் சுற்றிலும் இவவிதம் சிக்கலாக இருந்தது போன்று காணப்பட்டது. தலை தாழ்த்திய வண்ணம் நான் நின்றுகொண்டு அழுதபடியே, ‘தேவனே, என்னை மன்னித்தருளும். நான் ஒரு மூடன். தேவனே, என்னை மன்னித்தருளும்’ என்று மன்றாடினேன். கயிறு என்னைச் சுற்றிச் சிக்கிக் கொண்டிருந்தது. என் கையில் ஒரு குழந்தையின் பாதரட்சை இருந்தது. அதில் கோர்க்க வேண்டிய கயிறும் என்னிடமிருந்தது. அது சுமார் என் கைவிரலளவு பருமனா இருந்தது. சுமார் அரை அங்குல பருமனாக இருக்கும். ஆனால் பாதரட்சையிலுள்ள துவாரமோ மிகச் சிறியதாயிருந்தது - சுமார் ஒரு வீசம் அங்குலம் விட்டம் இருக்கும். அந்த பருமனான கயிற்றை அச்சிறு துவாரத்தில் கோர்க்க நான் முயன்றேன். அப்பொழுது ஒரு சத்தம் உண்டானது. அது, ‘பெந்தேகோஸ்தே குழந்தைகளுக்கு இயற்கைக்கு மேம்பட்ட பரம காரியங்களைக் கற்பிக்க உன்னால் இயலாது. அவர்களைத் தனியே விட்டு விடு’ என்றது. அப்பொழுது அவர் என்னைக் கொண்டு சென்று, ஒரு கூட்டம் நடக்குமிடத்தில் உட்கார வைத்தார். அது ஒரு கூடாரத்தைப் போன்று அல்லது ஆலயத்தைப் போன்று காட்சியளித்தது. அங்கு நான் பார்த்தபொழுது, ஒரு மூலையில் பெட்டியைப் போன்ற ஒரு சிறிய ஸ்தலம் இருந்தது. நீங்கள் புகைப்படத்தில் காணும் அந்த ஒளியானது எனக்கும் மேல் காணப்பட்ட ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தது. அது என்னிடமிருந்து இவ்விதம் சுழன்று சென்று அந்த கூடாரத்தின் மேல் தங்கி, என்னை நோக்கி, ‘உன்னை நான் அங்கு சந்திப்பேன். இதுதான் மூன்றாம் இழுப்பு. இதை யாரிடமும் கூறவேண்டாம்’ என்றது. சபினோ கான்யானிலும் அவர், ‘இது மூன்றாம் இழுப்பு என்றார். அதனுடன் மூன்று காரியங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று எனக்கு நேற்று வெளிப்பட்டது. மற்றொன்று இன்றைக்கு வெளியானது. மூன்றாவது என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் அது நான் அறியாத மொழியில் எழுதப்பட்டிருந்தது. நான் நின்ற வண்ணம் அதை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது மூன்றாம் இழுப்பு வந்தது. தேவனுடைய பரிசுத்த ஆவியானவர்.... ஓ! ஆகவேதான் பரலோகம் அமைதியாயிருந்தது. நான் இத்துடன் நிறுத்தி விடுவது நல்லது. இதற்கு மேல் ஒன்றையும் கூறாதபடிக்கு நான் ஆவியானவரால் தடைசெய்யப்படுகிறேன். ஏழாம் முத்திரை திறக்கப்படாத காரணம், அவர் அதை வெளிப்படுத்தாத காரணம், அதை யாரும் அறியக்கூடாது என்பதற்காகவே, அதைக் குறித்து நான் ஒன்றும் அறியாதிருக்கும் போதே, அனேக வருடங்கள் முன்பு அத்தரிசனம் எனக்கு உண்டானது. அது மற்றவை போன்று சரிவர தேவனுடைய வார்த்தையுடன் இணைகின்றது. அது அவ்விதம் இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை. தேவன் என் இருதயத்தை அறிவார். நாம் நினைப்பதைக் காட்டிலும் கால தாமதமாகிவிட்டது. ஓ! அது தேவனிடத்திலிருந்து வந்தது என்பதை அது காண்பிக்கிறது. ஏனெனில் இந்தக் கடைசி செய்தியில் தேவனளித்த வாக்குத்தத்தங்களுடன் அது வெகுவாக இணைகிறது. கவனியுங்கள், காலம் முடிவடையும் என்னும் இச்செய்தியில் (அதாவது இந்த முத்திரையில்).... அவர் ஆறு முத்திரைகள் என்னவென்பதை வெளிப்படுத்தினார். ஆனால் ஏழாம் முத்திரையைக் குறித்து அவர் ஒன்றும் கூறவில்லை. முடிவின் காலத்தின் முத்திரைத் தொடங்கும்போது, அது பரிபூரண இரகசியமாயிருக்கும் என்று வேதம் கூறுகின்றது. வெளிப்படுத்தல் 19.1-7ஐ நினைவுபடுத்திக் கொள்ளவும்.ஏழாம் தூதனின் செய்தியின் முடிவில், தேவனுடைய எல்லா இரகசியங்களும் அறியப்படும். நாம் ஏழாம் முத்திரை திறக்கப்படும் முடிவு காலத்தில் இருக்கிறோம். சென்ற ஞாயிறன்று நான், ‘தாழ்மையுள்ளவர்களாயிருங்கள், தாழ்மையுள்ளவர்களாயிருங்கள்’ தேவன் சிறிய காரியங்களின் மூலமாகவே கிரியை செய்கிறார்’ என்று பிரசங்கித்தபோது, நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று நானே உணரவில்லை. ஆனால் இப்பொழுது அது என்னவென்று எனக்குப் புலப்பட்டுவிட்டது. அது மிகவும் எளிய விதத்தில் காணப்படுகின்றது. அத்தகைய ஒன்று ரோமாபுரியிலுள்ள வாடிகனில் (Vatican) வெளிப்படும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஆனால் யோவான் ஸ்நானனைப் போன்ற ஒருவனுக்கு அது கிடைக்கின்றது. நம் கர்த்தரின் மாட்டுத் தொழுவத்தின் பிறப்பைப் போன்று அது எளிமையானது. தேவனுக்கு மகிமை! சமயம் வந்துவிட்டது நாம் அந்த சமயத்தில் வாழ்கிறோம். தேவனளிக்கும் தரிசனத்தின் உண்மையை உங்களால் காண முடிகின்றதா? - ஏழு தூதர்கள் அதை மேற்கு திசையிலிருந்து கொணர்ந்தனர். அவர்கள் மேற்கிலிருந்து கிழக்குதிசைக்கு வந்து, இன்றிரவு அளிக்கப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தனர், என்னே அதிசயம்! அந்த மகத்தான இடியின் சத்தமும், (இங்கு கொண்டுவரப்பட வேண்டிய ஊழியம் எல்லாம் வெளியாகி, அது தேவனிடத்தினின்று வந்தது என்று நிரூபிக்கப்பட்டு வந்தது. சற்று யோசனை செய்து பாருங்கள். முத்திரைகளின் இரகசியங்களை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த வாரம் அவை வெளிப்படுத்தப்பட்டன. யாராவது அதைக் குறித்து யோசித்தீர்களா? அந்த ஏழு தூதர்களும், வெளியாக்கப்படவிருக்கும் ஏழு செய்திகளாக நான் அதை உங்களுக்கு அளிக்க வேண்டுமென்று கருதி, அதற்கென்று என்னை இங்கு கொண்டு வந்தனர். ஏழாம் தூதன் மாத்திரம் மற்றவர்களைக் காட்டிலும் என் கவனத்தை அதிகம் கவர்ந்தான். அவர்கள் இவ்விதம் அங்கு நின்று கொண்டிருந்தனர். (நீங்கள் இதை கவனிக்க விரும்புகிறேன்) நான் இங்கு நின்று கொண்டு, சிறகுகளை அடித்து பறந்து செல்லும் அந்த சிறிய பறவைகளின் முதற் கூட்டத்தைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அவை கிழக்கு நோக்கி பறந்து சென்றன. அடுத்த படியாகக் காணப்பட்ட இரண்டாம் பறவைகூட்டம், முதற் கூட்டத்திலுள்ள பறவைகளைக் காட்டிலும் பெரிதாகவும் பிரகாசமாகவும் காணப்பட்டன. அவை புறாக்கள் போல் தோன்றின. அவைகளின் சிறகுகள் முனை கூர்மையாகவும் அமைந்திருந்தன. அவை கிழக்கு நோக்கி பறந்து சென்றன. முதலாம் இழுப்பு, இரண்டாம் இழுப்பு அடுத்தபடியாகத் தூதர்கள். நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த வெடி சத்தம் அகன்றது. நான் மேற்கு திசை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர்கள் வந்து என்னைக் கொண்டு சென்றதால் என் சுய உணர்வை இழந்தேன். நான் தூதர்களின் கூட்டத்துக்குள் நுழைந்தபோது, எனது இடது பாகத்தில் காணப்பட்டவன் தான் எனக்கு வினோதமாகக் காட்சியளித்த அந்த தூதன். இடமிருநது வலம் எண்ணும்போது, அவன் ஏழாம் தூதன். ஏழு சபையின் தூதர்களை நினைவில் கொள்ளுங்கள். ஜுனியர் ஜாக்ஸன் சொப்பனத்தில் கண்ட வெண்பாறையிலான கூர் நுனிக்கோபுரம் (Pyramid) ஞாபகத்திலிருக்கிறதா? அதன் அர்த்தத்தை நான் விவரித்துக் கூறினேனே? நான் உங்கள் மத்தியிலிருநது புறப்பட்ட அன்றிரவு, ஆறு சொப்பனங்கள் உண்டாயின. அவை யாவையும் ஒன்றையே சுட்டிக் காண்பித்தன. அதன் பின்னர், தரிசனம் உண்டாகி என்னை மேற்கிற்கு அனுப்பினது. ஜுனியர் அதை கவனித்துக் கொண்டிருந்தார். கவனியுங்கள், எவ்வளவு பரிபூரணமாக அமைந்துள்ளது. இயேசு கிறிஸ்துவின் கிருமையினாலேயே இவை உண்டாயின என்பதை நீங்கள் உணருகின்றீர்கள் என்று நான் நம்புகிறேன். அவரே எல்லாவற்றிற்கும் மூலமானவர், இதற்கு முன்பு நான் இவ்வளவு வெளிப்படையாகப் பேசாததற்கு ஒரே காரணம்... ஆனால், அந்த சமயம் அருகாமையில் வந்து கொண்டிருக்கிறது. கவனியுங்கள், இதை ஆணித்தரமாக உங்களிடம் கூற விரும்புகிறேன். நான் உங்களை விட்டுச் செல்லவிருக்கிறேன். நான் எங்கே போவேனென்னு தெரியாது. மற்ற விடங்களிலும் நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும். ‘நான் எல்லா விதமான மூடவைராக்கியக் கொள்கைகளையும் கேட்டிருக்கிறேன்’ என்று நீங்கள் ஒருக்கால் கூறலாம். அதைக் குறித்து எனக்குத் தெரியாது. நான் எந்த ஒரு மனிதனையும் நியாயத் தீர்க்கமுடியாது. எனக்காகவே மாத்திரம் நான் தேவனிடத்தில் பதில் கூற வேண்டியவனாயிருக்கிறேன். இத்தனை வருட காலமும், நான் தேவனுடைய நாமத்தில் கூறின ஏதாவதொன்று சரியாயிராமல் போயிருக்கின்றதா? அவ்விதம் யாருமே கூறமுடியாது. ஏனெனில் அவர் என்னிடம் கூறின விதமாகவே நான் உங்களுக்கு எடுத்துரைத் திருக்கிறேன். அது உண்மையென்று ஊர்ஜிதப்படுத்த இதைக் காண்பிக்க விரும்புகிறேன்.‘உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்’ - சொப்பனத்தின் அர்த்தத்தை விவரித்தல், யோசேப்பு சொப்பனத்தின் அர்த்தத்தை விவரித்தான். தரிசனங்களும் கண்டான். அது உண்மையா? கவனியுங்கள் - ஜுனியர் தன் சொப்பனத்தில் கூர்நுனிக்கோபுரம் வைக்கப்பட்ட ஒரு வயல்வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது பாறைகளில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. நான் ஜனங்களுக்கு அது என்னவென்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேனாம். ஜுனியர், அது சரியா இது நிகழ்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு இச்சொப்பனத்தை அவர் கண்டார். அடுத்தபடியாக, நான் நீண்ட கடப்பாறை போன்ற ஒன்றை எடுத்து அதை வெட்டினவுடன், அதற்குள் வெண்பாறை ஒன்று இருக்கக் கண்டேனாம். அதில் ஒன்றும் எழுதப்பட வில்லை.அப்பொழுது நான் மேற்கத்திய நாட்டிற்குச் செல்லப் புறப்பட்டேனாம். புறப்படும்போது, ‘நீங்கள் மேற்கத்திய நாட்டிற்குச் செல்லவேண்டாம். நான் திரும்பி வரும்வரை அதைப் பார்த்துக் கொண்டே இருங்கள்’ என்று கூறினேனாம். அந்த வெடி வெடிப்பதற்காக மேற்குக் சென்று, கிழக்கு நாட்டிற்கு பரிசுத்த ஆவியைப் பெற்றவனாகத் திரும்ப வந்து, எழுதப்படாத வார்த்தைக்கு அர்த்தம் உரைத்தேன். இது சர்வ வல்லமையுள்ள தேவனின் பார்வையில் பரிபூரணமாக அமையாவிடில், வேறு எது அமையும்? நண்பர்களே, நான் எதற்காக இதைக் கூறுகின்றேன்? நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்கவே. மற்றவை தேவனுடைய வார்த்தையுடன் சரிவர பொருந்தியது போன்று, இதுவும் தேவனுடைய வார்த்தையுடன் முற்றிலும் பொருந்துகின்றது. நண்பர்களே, நாம் முடிவு காலத்தில் வாழ்கிறோம். வெகு விரைவில் காலம் என்பது கடந்து செல்லும். இலட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள். தாங்கள் இரட்சிக்கப் பட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கானோர் அணுசக்தியின் காலத்தில் இரையாவார்கள். நாம் கடைசி மணி நேரத்தில் வாழ்ந்து வருகிறோம். சர்வ வல்லவரின் கிருபையாலும் அவருடைய ஒத்தாசையாலும் அவருடைய ஜனங்கள் கிறிஸ்துவின் அதிசீக்கிர வருகையை எதிர்நோக்கியிருக்கின்றனர். ‘(அவர் வருகைக்கு) இன்னும் எவ்வளவு காலம் உள்ளது? என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். ஒருக்கால் இருபது வருடம், அல்லது ஐம்பது வருடம், அல்லது நூறு வருடம் கூட செல்லலாம் - எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்று காலையிலும் அவர் வரக்கூடும். இல்லையேல் இன்றிரவு வரலாம் - எனக்குத் தெரியாது. அவர் வரும் நாளை அறிவதாகக் கூறுபவர் தவறு செய்கின்றனர். உண்மையில் அவர்களுக்குத் தெரியாது. தேவன் மாத்திரமே அதை அறிவார். தேவனுடைய சமூகத்துக்கு முன்பாக நான் சத்தியத்தை உங்களுக்கு எடுத்துரைத்தேன். அவை யாவையும் பரிசுத்த ஆவியினால் நான் பகுத்தறித்தேன், அவை ஒவ்வொன்றும் வேதத்தில் தங்கள் தங்கள் இடத்தில் சரியாகப் பொருத்தப்பட்டன. ஆனால், இந்த முத்திரையின் கீழ் அடங்கியிருக்கும் அந்த மகத்தான இரகசியம் என்னவென்பது எனக்குத் தெரியாது. அது என்ன கூறினது என்பதை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், நான் பார்த்தது அந்த ஏழு இடிகள் ஒன்றுக் கொன்று அருகாமையில் இருந்து கொண்டு, ஏழு வித்தியாசமான சமயங்களில் முழங்கி, நான் கண்டவற்றை வெளிப்படுத்தினது என்பதை மாத்திரம் நானறிவேன். அதை நான் கண்ட போது, அங்கு பறந்து வந்த அதன் அர்த்தத்தை நான் உற்று நோக்கினேன். ஆனால் அது என்னவென்பதை என்னால் அறிந்துகொள்ள இயலவில்லை. நான் கூறுவது முற்றிலும் உண்மையாகும். அது வெளிப்படுவதற்கு இன்னும் சமயம் வரவில்லை. ஆனால் அந்த சக்கரத்துக்குள் அது வருவதற்கு சமயம் அருகாமையில் தான் உள்ளது, நான் கர்த்தரின் நாமத்தில் இதைக் கூறுகிறேன் என்பதை நினைவுகூரவும். எந்த நேரத்தில் என்ன நேரிடும் என்பதை நீங்கள் அறியாதபடியினால், நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். இது ஒலிநாடாக்களில் பதிவு செய்யப்படுகின்றது. இதைக் கேட்கும் போது, என் நண்பர்களில் ஆயிரக்கணக்கானவர் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டு, ‘சகோ, பிரான்ஹாம் தன்னை தேவனுடைய சமூகத்தில் உயர்த்தி, தீர்க்கதரிசியாகவோ ஊழியக்காரராகவோ தன்னைப் பாவித்துக் கொள்கிறார்’ என்று கருதி என்னை விட்டு விலகக்கூடும். என் சகோதரரே, அது தவறாகும், நான் கண்டதையும் எனக்கு அறிவிக்கப் பட்டதையும் மாத்திரமே நான் உரைக்கிறேன். நீங்கள் என்ன வேண்டு மானாலும் செய்யலாம். என்ன நடக்குமென்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்றை நானறிவேன் - அதாவது அந்த ஏழு இடிகளும் பரலோகம் அமைதியான காரணத்தின் இரகசியத்தை தங்களுக்குள் வைத்துள்ளன (எல்லோருக்கும் புரிந்துவிட்டதா?) அந்த மகத்தான மனிதன் தோன்ற நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறோமே, அவர் தோன்றும் நேரம் இப்பொழுதாக இருக்கலாம். ஜனங்களைத் தேவனுடைய வார்த்தைக்குத் திருப்ப முயன்ற என்னுடைய ஊழியம் ஒருக்கால் அதற்கு அஸ்திபாரமாக அமைந்திருக்கும். அப்படியானால், நான் உங்களை விட்டு ஒரேயடியாகச் செல்ல நேரிடும். ஒரே சமயத்தில் நாங்கள் இருவர் இருக்க முடியாது. அப்படி இருக்க நேர்ந்தால், அவர் உயர வேண்டும், நான் தாழ வேண்டும். எனக்குத் தெரியாது. ஆனால் அந்த இரகசியம்... அதுவரை வெளிப்படுவதை நான் கண்ணாரக் காண தேவன் எனக்கு சிலாக்கியம் அளித்தார். இவ்வாரம் நடைபெற்ற யாவையும் நீங்கள் கவனித்துக் கொண்டு வந்தீர்களனென்று நம்புகிறேன். காலின்ஸ் (Collins) என்பவரின் மகன் அன்றிரவு சாகும் தருவாயில் இருந்ததை நீங்கள்நிச்சயம் கவனித் திருப்பீர்கள் - இரத்தப் புற்றுநோய் கொண்ட அந்தப் பெண்ணும், தேவனுடைய இராஜ்யம் வரப்போகின்றது. அது சந்தேகமான ஒன்றாய் இருந்து வந்து இப்பொழுது படிப்படியாக அது உறுதியாயுள்ளது. ஆனால் அது ஜனங்களை மூச்சு திணறச் செய்ய வேண்டாம். ‘நீதிமானாக்கப் படுதல்’ என்னும் சத்தியத்திலிருந்து, ‘பரிசுத்தமாக்கப்படுதல்’, பரிசுத்தா வியின் அபிஷேகம்’ போன்ற சத்தியங்களுக்கு வந்து, இப்பொழுது இந்த சத்தியத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் ஒவ்வொரு முறையும் தேவனுடைய அருகாமையில் இழுக்கப்பட்டுக் கொண்டே வருகிறோம். மெதோடிஸ்ட் போதகர்களே, ‘பரிசுத்தமாக்கப்படுதல்’ என்னும் உங்கள் செய்தியானது. லூத்தர் பிரசங்கித்ததைக் காட்டிலும் மேலானது என்பதை உங்களால் காண முடியவில்லையா? பெந்தேகோஸ்தரே, ‘பரிசுத்த ஆவியின் அபிஷேகம்’ என்னும் உங்கள் செய்தியானது, மெதோடிஸ்டுகள் பிரசங்கித்ததைக் காட்டிலும் மேலானது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியவில்லையா? நான் சொல்வது உங்களுக்குப் புரிகின்றதா? அனேக காரியங்கள் இப்பொழுது நம்மிடையே காணப்படுகின்றன. ஜனங்கள் சத்தியத்தைக் கூறாமல் பொய்யைக் கூறுவதை நான் வெறுக்கிறேன். ஆனால் சத்தியத்தை நான் மனப்பூர்வமாய் நேசிக்கிறேன், அது எவ்வளவு தான் மற்றவர்களுக்குத் தடங்கலாய் இருந்தாலும், அது சத்தியமாயிருந்தால், தேவன் அது சத்தியமென்று முடிவில் ஊர்ஜிதப்படுத்துவார். அவர் ஒரு நாளில் இதைச் செய்யாமற்போனால், நான் கண்ட தரிசனங்கள் தவறாயிருக்க வேண்டும். அது எங்கே என்னைப் பொருத்துகின்றது என்பதை நீங்கள் அறிகிறீர்கள் அல்லவா? ‘சகோ. பிரான்ஹாமே, அது எப்பொழுது சம்பவிக்கும்?’ என்னால்கூற முடியாது, எனக்குத் தெரியாது. ஆனால் வரப்போகும் ஒரு நாளில், நாம் இந்தப் பூமியில் சந்திக்காவிடிலும், அங்கே கிறிஸ்துவின் நியாயாசனத் திற்கு முனபாக சந்திக்கப் போகின்றோம். அந்த அறையில் தேவனிடமிருந்து வெளிப்பாடு வந்தபோது, முத்திரையின் ஒரு இரகசியம் மாத்திரம் வெளிப்படாததன் காரணம், ஏழு இடிகள் அவர்கள் சத்தங்களை முழங்கின போது, யாருக்கும் அதைக்குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அது எழுதப்படவுமில்லை. ஆகவே நாம் முடிவு காலத்தில் இருக்கின்றோம். தேவனுடைய வார்த்தைக்காக அவருக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசுகிறிஸ்துவுக்காக அவருக்கு நன்றி சொல்கிறேன். நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரமாக அவர் அனுப்பப்படாமலிருந்தால், நாம் நம்பிக்கையற்றவர்களாய் பெரிய பாவச்சேற்றில் மூழ்கிக் கிடந்திருப்போம். ஆனால் அவருடைய கிருபையினால், அவருடைய இரத்தம் நம்மைப் பாவமறக் கழுவுகின்றது. ஒரு வாளியிலுள்ள வெண்மையாக்கும் திரவத்தில் ஒரு துளி எழுதும் மையைப் போட்டால் அந்த மை இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும். அவ்வாறே நம் பாவங்களை நாம் அறிக்கை யிடும் போது, அது இயேசுவின் இரத்தத்தில் போடப்படுகின்றது. அதன் பின்பு அது காணப்படுவதில்லை. தேவன் அவைகளை மறந்துவிடு கின்றார். பாவம் செய்யாததுபோன்ற நிலைக்கு நாம் வந்து விடுகிறோம். அந்த பலியானது பீடத்தின்மேல் நமது பிரயாச்சித்தத்திற்காக இருக்கும்வரை, அவ்வளவுதான்.... நாம் இனி ஒரு போதும் பாவிகளல்ல. தேவனுடைய கிருபையால் நாம் கிறிஸ்தவர்களாகிறோம். நாமாகவே நாம் எப்பொழுதும் துன்மார்க்கமாகவே இருப்போம். ஆனால் தேவகிருபையோ நமக்குப் பிரத்தியட்சமானதால் நாம் இந்நிலையை அடைந்துள்ளோம் - கிறிஸ்தவ சகோதர சகோதரிகளாக. இது எனக்கு மகத்தான வாரமாக அமைந்தது. நான் களைப்புற்றிருக் கிறேன், என் சிந்தையும் களைப்புற்றிருக்கிறது. ஏனெனில் இதுதான் என்னால் செய்யக்கூடிய காரியம். ஒவ்வொரு நாளும் விசித்திரமான காரியங்கள் நடந்து கொண்டு வந்தன. சில நிமிடங்கள் அந்த அறையில் தங்கும்போது, நான் பிரமிக்கத்தக்க அளவுக்கு ஏதாவது சம்பவிக்கும். நான் முன்பு எழுதியிருந்த குறிப்புகளை எடுத்துக் கொள்வேன். டாக்டர், உரியர் ஸ்மித் (Dr. Uriah Smith) என்பவரும் மற்றவர்களும் எழுதிய புத்தகங்களைப் படிப்பேன். ‘இதுதான் அவர்கள் ஆறாம் முத்திரைக்குக் கூறும் வியாக்கியானம், இது நான்காம் முத்திரை. இந்த மனிதன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்’ என்று படிப்பேன். அவர் இவ்விதம் கூறியிருக்கிறார். மற்றொருவர் வேறுவிதமாகக் கூறியுள்ளார். அது சரிவரத் தென்படவில்லை. ‘அப்படியானால் அது என்ன ஆண்டவரே?’ என்று ஆண்டவரிடம் விண்ணப்பித்தவாறு இங்கும் அங்கும் நடப்பேன். பிறகு முழங்காற் படியிட்டு ஜெபித்து, மறுபடியும் வேதத்தைப் படிப்பேன் - பின்பு இங்கும் அங்கும் நடப்பேன். பிறகு நான் அமைதியாயிருக்கும்போது, சடுதியாக அது எனக்குத் வெளிப்படும். நான் உடனே பேனாவை எடுத்து அதைக் கண்டவிதமாகவே எழுதுவேன். அது வேதவாக்கியங்களுடன் பொருந்து கின்றதா என்று ஒப்பிட்டுப் பார்ப்பேன். அப்பொழுது அது உண்மையென நிருபிக்கப்படும். ‘அனேகம் பேருக்கு தரிசனங்களும் வெளிப்பாடுகளும் கிடைக் கின்றனவே’ என்று நான் எண்ணுவதுண்டு. அது தேவ வார்த்தைக்கு முரண்பாடாயிருக்குமானால், அதை விட்டு விடுங்கள். ஆம், அதை விட்டு விடுங்கள். நான் சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வேன். ‘நமது பள்ளிக்கூட வகுப்பு இதை ஆவலோடு கேட்கும். ஏனெனில் அது வேத வாக்கியங்களுடன் இங்கு பொருந்துகின்றது, அங்கும் பொருந்துகின்றது’ என்று எண்ணிக் கொள்வேன். இப்பொழுது இச்செய்தி ஒலிநாடாக்களில் உள்ளன. அதைக் கேட்க நீங்கள் வரவேற்கப்படுகின்றீர்கள். நான் கிறிஸ்தவ ஐக்கியத்தில், என்னால் இயன்ற மட்டும் அதை செய்திருக்கிறேன் - இயேசு கிறிஸ்துவினால் எல்லாருக்கும் தேவ கிருபை உண்டானது. இந்த வாரம் முழுவதும் என்னால் இயன்றவரை நான் அறிந்தவற்றை உங்களுக்குப் போதித்தேன். நீங்கள் மிகவும் நல்ல மாணாக்கராக இருந்தீர்கள். உங்களைக் காட்டிலும் யாரும் இவ்வளவு நன்றாக உட்கார்ந்திருக்க முடியாது. நீங்கள் பகல் ஒரு மணிக்கே வந்து ஐந்து மணி வரை அல்லது ஆலயம் திறக்கும் வரை காத்திருந்து, ஜனங்களை உள்ளே அனுப்பினீர்கள். நீங்கள் குளிரிலும் நின்று கொண்டிருந்தீர்கள். உரைபனியிலும் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். நீங்கள் எல்லாவற்றையும் செய்தீர்கள். உங்கள் கால்கள் வலிக்கு மட்டும் சுவர்களின் பக்கம் நின்று கொண்டிருந்தீர்கள். நீங்கள் எழுந்து நின்று, பெண்களுக்கும் நின்று கொண்டிருந்தவர் களுக்கும் உங்கள் ஆசனங்களை அளித்தீர்கள். ‘ஆண்டவரே, இது பரம இரகசியம் வெளிப்பட்ட வாரமாயிருந்த தல்லவா? என்று எண்ணினேன். எல்லாமே வினோதமாயிருந்தது. ஜனங்கள் வெளிப்புறத்திலும், ஜன்னல்கள், கதவுகள் அருகாமையிலும் பின்னால் சார்ந்து கொண்டு நின்று செய்தியைக் கேட்டனர். நான் ஒரு பேச்சாளர் என்று கூறுவதற்குத் தகுதியுடையவனல்ல. அதை புரிந்துகொள்ள எனக்குப் போதிய ஞானமுண்டு. அப்படியிருந்தும் ஜனங்கள் ஏன் அவ்விதம் செய்தியைக் கேட்க வேண்டும்? அவர்கள் என்னைப் போன்ற ஒருவன் பேசுவதைக் கேட்க வரவில்லை. ஆனால் ஏதோவொன்று ஜனங்களை இழுப்பதால் அவர்கள் வருகின்றனர். அவர்களை ஏதோவொன்று இழுக்கின்றது. நான் ஊழியத்தைத் தொடங்கின போது, என் மனைவி இந்தப் பாட்டைப் பாடினாள். ‘அவர்கள் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வருகின்றனர் தூரதேசத்திலிருந்து அவர்கள் வருகின்றனர் இராஜாவுடன் அவருடைய விருந்தாளிகளாக விருந்துண்ண திவ்விய அன்பினாலே பிரகாசிக்கும் அவருடைய பரிசுத்த முகத்தைக் காணவும் ஆசிர்வதிக்கப்பட்ட அவருடைய கிருபையில் - பங்கு கொள்ளவும் அவர் கிரீடத்தில் இரத்தினங்களாக ஜொலிக்கவும் இந்த யாத்திரீகர்கள் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்!’ இயேசுகிறிஸ்துவின் கிரீடத்தில் நீங்கள் விலையுயர்ந்த கற்களாக ஜொலிக்க வேண்டுமென்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். பவுலும் சபையிடம் நீங்கள், ‘இயேசுகிறிஸ்துவின் கிரீடத்தில் விலைமதிக்க முடியாத கற்களாகப் பிரகாசிக்க வேண்டும்’ என்று கூறினான். ஆம், நாம் இயேசு கிறிஸ்துவின் கிரிடத்தில் ஜொலிக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் ஸ்தானத்தில் ஒரு மனிதனை வைக்க நாம் பிரியப்படுவதில்லை. என்னைக் குறித்து நீங்கள் மறந்து விடுங்கள், நான் உங்கள் சகோதரன் - கிருபையினால் இரட்சிக்கப்பட்ட ஒரு பாவி. நான் ஜீவிப்பதற்கு எவ்வித தகுதியுமில்லை. அது முற்றிலும் உண்மை. நான் தாழ்மையாயிருக்க வேண்டும் என்பதற்காக அவ்விதம் கூறவில்லை. அது சத்தியம். நல்லது என்று கூறுவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை. ஆனால் தேவனுடைய கிருபையோ என் மங்கின கண்கள் காலத்திரைக்குப் பின்னாலுள்ளவைகளைக் காணச் செய்தது. hன் சிறு பையனாயிருந்தபோது, ஜனங்களை நான் அதிகமாய் நேசித்ததுண்டு. அவ்வாறே யாராவது ஒருவர் என்னை நேசித்து என்னிடம் பேசவேண்டுமென்று நான் விரும்பியதுண்டு. என்குடும்பத்தின் பெயர் இழுக்கடைந்த காரணத்தால் யாரும் என்னிடம் பேசுவது கிடையாது. ஆனால் என்னையே நான் தேவனிடம் சமர்ப்பித்தபோது, என் குடும்பம் ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவரின் வழி வந்திருந்ததால் (அவர்கள் எல்லாரும் கத்தோலிக்கர்).... எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்தேன், ஆனால் நான் அங்கு சென்றபோது, அவர்கள் வேறு வழியே சென்று கொண்டிருந்தனர். நான் முதலாம் பாப்டிஸ்டு சபைக்குச் சென்றபோது, அவர்களும் வேறு வழியில் செல்வதை நான் கண்டேன். அப்பொழுது நான், ‘ஆண்டவரே, உண்மையான ஒரு வழி இருக்க வேண்டுமே என்று கேட்டபொழுது, ஏதோவொன்று என்னிடம், ‘அது தான் தேவனுடைய வார்த்தை’ என்றது. நான் அன்றுமுதல் தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குக் கிடைக்கும் தரிசனங்கள் எல்லாவற் றையும் பாருங்கள், அன்று நான் மூலைக்கல்லை நாட்டின போது, அவர் அன்று காலை தரிசனத்தில் காண்பித்த அந்த வசனத்தை அதில் எழுதினேன். ‘சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு, எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு புத்தி சொல்லு. ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்’ (2. திமோ. 4.4-5). அருகாமையிலிருந்த அந்த இரு மரங்களும் கூட அதையே செய்ததை நான் கண்டேன். அது உண்மை. உங்களுக்கு மறுபடியும் ஆலோசனை கூறுகின்றேன், நீங்கள் யாரிடமும் ‘உங்களுக்கு நன்றி’ என்று சொல்ல வேண்டாம். ஒரு போதகன் அல்லது மரித்துப் போகும் எந்த மனிதனிடமும் நல்லது என்பது காணப்படும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவர்களிடம் நல்லது என்பது கிடையாது. அது யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, எந்த மனிதனிடத் திலும் நல்லது என்பது இல்லை. இங்கு அனேக எக்காளங்கள் இருந்தால், அவைகள் ஒன்றிலிருந்து இசை எழும்பினால், அதை ஒரு மனிதன் தான் எழுப்ப முடியும். எக்காளங்கள் தாமாகவே சப்தமிட முடியாது. அந்த எக்காளத்தை எவ்விதம் தொனிக்கச் செய்ய முடியும் என்று அறிந்து ஒருவன் மாத்திரமே எக்காளத்தை எடுத்து அதனின்று சப்தம் எழச செய்ய முடியும். அந்த சப்தம் அதை ஊதும் ஞானத்திலிருந்து வருகின்றது. எல்லா எக்காளங்களும் ஒரே மாதிரிதாம். அவ்வாறே எல்லா மனிதரும் ஒரேவிதம். எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரி இருக்கின்றனர். நமக்குள்ளே யாரும் பெரியவரில்லை. நமக்குள்ளே பெரிய மனிதரோ பெரிய ஸ்திரீகளோ கிடையாது. நாமெல்லாரும் சகோதரரும் சகோதரிகளுமாம். ஒருவர் மற்றவரைப் பெரியவராக கருத முடியாது. இல்லை, ஐயா! நாமெல்லாரும் மனித பிறவிகள், நான் கூறியதை நீங்கள் வியாக்கியானம் செய்ய வேண்டாம். இயேசு கிறிஸ்துவுடன் நெருங்கிய ஜீவியம் செய்து அவருக்கு கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துவதைத் தவிர வேறொன்றும் செய்ய வேண்டாம். எல்லோருக்கும் புரிகின்றதா? உங்கள் முழு இருதயத்தோடு அவரில் அன்புகூருங்கள். அவ்விதம் நீங்கள் செய்கின்றீர்களா? நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்தால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் எல்லோருக்கும் நன்றாகப் புரிகின்றதா. எல்லோரும் விசுவாசிக்கின்றீர் களா? நான் முதலில், ‘எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?’ என்று செய்தி அளித்தேன் என்பது நினைவிருக்கிறதா? அவர் தமது இரக்கத்தையும் அவர் நல்லவர் என்பதையும் உனக்கு வெளிப்படுத்தி யுள்ளாரா? - ஆமென். அவரில் உங்கள் முழு இருதயத்தோடும அன்புகூருவதற்குக் கவனமாயிருங்கள். நான் இப்பொழுது வீடு திரும்பப் போகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், ஜுன் மாதம் முதலாம் தேதியன்று மறுபடியும் வருவேன். கர்த்தர் என் இருதயத்தை ஏவினால், கோடையின் ஆரம்பத்தில் ஜுன் மாதம் அல்லது அதற்கருகாமையில், அல்லது இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில், நான் மறுபடியும் வந்து, ஏழு கடைசி எக்காளம்’ செய்தியை அளிக்க நான் ஏழு இரவுகளை ஒதுக்குவேன். உங்களுக்கு அது பிரியமாயுள்ளதா? தேவன் அதற்கென்று எனக்கு உதவி புரிய நீங்கள் எனக்காக ஜெபம் செய்வீர்களா? சரி, நாம் மறுபடியும் சந்திக்கும்வரை இந்த பழமையான நல்ல பாட்டை நினைவுகூருங்கள். நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முந்தியவர் நேசித்தால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் நீங்கள் தலைவணங்குங்கள். உங்கள் போதகர் கூட்டத்தை முடிக்கு முன்பு, உங்களுக்காக நான் ஜெபம் செய்ய விரும்புகிறேன். எங்கள் பரமபிதாவே, ஜனங்கள் இதை அறிந்து கொள்ளட்டும். ஆண்டவரே, சிலர் அதைப் புரிந்து கொள்ளவில்லையென்பதை நான் உறுதியாய் அறிவேன். ஆனால் பிதாவே, இவர்கள் இந்த நோக்கத்தை அறிந்து, நீர் அவர்களுக்கு அளித்த கிருபையின் காரணமாகவே இவை வெளிப்பட்டன என்று அறிந்து கொள்ளட்டும். நீர் எங்களுக்கு வெளிப்படுத்தினவைகளை நாங்கள் அறிந்துகொள்ள எங்களுக்கு அறிவைக் கொடுத்ததற்காக ஆண்டவரே, உமக்கு, நான் நன்றி செலுத்துகின்றேன். இந்த கூட்டத்திற்கு வந்துள்ள யாவருக்கும் நான் ஜெபத்தை ஏறெடுக்கிறேன். ஆண்டவரே, இங்குள்ள யாராவது விசுவாசிகளாயிராவிட்டால் அவர்கள் விசுவாசிக்கும்படி வேண்டிக் கொள்கிறேன். ஒலிநாடாக்களில் செய்திகளைக் கேட்கப் போகும் எல்லாருக்காகவும் நான் ஜெபிக்கிறேன். அவிசுவாசிகளின் வீட்டில் இந்த ஒலிநாடாக்கள் கேட்கப்படுமானால் - நிச்சயம் இது அங்கு கேட்கப்படும்.... பிதாவே அவர்கள் தேவதூஷணமான வார்த்தைகளைப் பேசும் முன்பு, முதலில் உட்கார்ந்து வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, சொல்லப்பட்டவைகளை அதனுடன் ஒப்பிட்டு அது சத்தியமா இல்லையா என்று உத்தமமாக அறிய முற்படுகின்றனர் என்பதை உம்மிடம் அறிவிக்கட்டும். பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். சுவர்களின் அருகாமையிலும், வெளிப்புறத்திலும், மோட்டார் வாகனங் களிலிருந்தும் செய்தியைக் கேட்டவர்களுக்காகவும், இந்த சிறு பிள்ளை களுக்காகவும் நான் ஜெபிக்கிறேன். ஆண்டவரே, எல்லோருக்காகவும் நான் ஜெபங்களை ஏறெடுக்கிறேன்’ ஆண்டவரே, என் ஜெபத்திற்கு நீர் பதிலுரைத்து அவர்களை ஆசீர்வதிக்க நான் வேண்டுகிறேன். ஆண்டவரே, முதலாவதாக எல்லோருக்கும் நித்திய ஜீவனை அளியும், ஒருவரும்கூட, கெட்டுப் போகாதபடிக்கு உம்மிடத்தில் மன்றாடுகிறேன். பிதாவே இம்மகத்தான சம்பவம் எப்பொழுது நிகழும் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த அடையாளங்கள் தோன்றுவதையும், வேத வாக்கியங்கள் நிறைவேறுவதையும் நாங்கள் காணும்போது, அவை எங்கள் இருதயங்களை அதிகமாய் எச்சரிக்கின்றன. பிதாவே, தேவனே, நீரே எங்களுக்கு ஒத்தாசை செய்ய வேண்டுகிறேன். எங்கள் அருமை போதகரான சகோ. நெவில்லுக்கு உதவிபுரிய மன்றாடுகிறேன். அவரைக் கிருபையினாலும், வல்லமையினாலும் அறிவினாலும் நிரப்பி, சேகரிக்கப்பட்ட இந்த ஆகாரத்தைக் கொண்டு அவர் தேவனுடைய ஆடுகளைப் போஷிக்கக் கிருபை செய்யும், தேவனே, எல்லா வியாதிகளையும் அவர்களை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமாய் கெஞ்சுகிறேன். ஜனங்கள் நோய்வாய்ப்படும் போது, எல்லாவற்றிற்கும் போதுமானதாயுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் இப்பொழுதும் எங்கள் பாவநிவாரணத்திற்காக பலிபீடத்தின் மேல் இருக்கிறது என்பதை அவர்கள் நினைவு கூரட்டும். அவர்கள் உடனே சொஸ்தமாக வேண்டுகிறேன். அவர்களுக்கு அதைரியத்தையளிக்கும், அல்லது தத்துவங்களை உண்டாக்கத் தூண்டும், பிசாசின் வல்லமையை அவர்களிடமிருந்து விலக்க வேண்டுமாய் கெஞ்சுகிறேன். சத்துருவின் எல்லா வல்லமைகளின்றும் அவர்களை விலக்கிக் காத்துக் கொள்ளும். உமது வசனத்திற்குத் திரும்ப எங்களைப் பரிசுத்தப்படுத்தும், ஆண்டவரே, இவைகளை எங்களுக்கு அருளும். ஆண்டவரே, எனக்கு உதவி புரிய உம்மிடம் மன்றாடுகிறேன். நான் சிறிது சிறிதாக மங்கத் தொடங்கிவிட்டேன். இன்னும் என்வாழ் நாட்கள் அதிகமாயிராது என்பதை அறிவேன். எனக்கு உதவி புரிய உம்மை வேண்டுகிறேன். நான் இச்செய்தியைக் கொண்டு செல்ல நியமிக் கப்பட்டிருக்கும் வரை, அதை உத்தமும் உண்மையுமாய் செய்யக் கிருபை புரியும் நான் இவ்வூழியத்தை முடிக்கும் காலம் வரும்போது, அந்த நதியின் அருகாமையில் வந்த அலைகள் புரளும் போது, அந்த பட்டயத்தை உத்தமும், உண்மையுமுள்ளவரும், சத்தியத்தை முழுவதுமாய் பிரசங்கிக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க அருள் புரியும். அதுவரை நான் திடகாத்திரமுள்ளவனாயும், ஆரோக்கியமுள்ளவனாயும், தைரியமுள்ள வனாயும் இருக்க உதவி புரியும். என் சபையை ஆதரியும். ஆண்டவரே, எங்களெல்லாரையும் ஒருமித்து ஆசீர்வதியும். நாங்கள் உம்முடையவர்கள். உமது ஆவி எங்கள் மத்தியில் இருப்பதை உணர்கிறோம். எங்கள் ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீரென நம்புகிறோம். நாங்கள் இப்பூமியில் வாழவிருக்கும் எஞ்சியுள்ள நாட்கள் பூராவும் எங்களையும் உமது வார்த்தையையும் உமது ஊழியத்திற்கென்று ஒப்புக் கொடுக்கிறோம். தேவகுமாரனும் எங்கள் அருமை இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால், அவருடைய மகிமைக்காக வேண்டுகிறேன். நேசிக்கிறேன் (கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக) நேசிக்கிறேன் (என் இதயப் பூர்வமாக) முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் (சகோ. பிரான்ஹாம் கூறிய கருத்துக்கள் - ஆசி) .... அவன் (சாத்தான்) அதைக் குறித்து ஒன்றும் அறியாதது நல்லது. ஏனெனில் அவன் அறிந்திருந்தால் ஆள்மாறாட்டம் செய்திருப்பான். அது தான் அவன் கையாளும் தந்திரம், ஆகையால் தான், கர்த்தர் முழு உலகிற்கும், பரலோகத்திற்கும் இதை மறைத்து வைத்து, யாரும் அறியக்கூடாத விதத்தில் செய்து விட்டார். தேவன் மாத்திரமே அதை வெளிப்படுத்த முடியும். ஆறாம் முத்திரையில் மூன்று விதநோக்கங்கள் இருப்பதை இன்றிரவு நீங்கள் அறிய விரும்புகிறேன். குதிரையின் மேல் ஏறியிருந்தவர்களிடமும் மூன்றுவித நோக்கங்கள் காணப்பட்டன. இவை எல்லாவற்றிலும் மூன்று வித நோக்கங்கள் உள்ளன. இது மறுபடியும் ‘மூன்று’, ‘ஏழு’ என்னும் எண்ணிக்கைகளுக்கு நம்மைக் கொண்டு செல்கின்றன - ஏழு முத்திரைகள், ஏழு கலசங்கள் போன்றவை. தேவனுடைய கணிதத்தில் மூன்று, ஏழு என்னும் எண்ணிக்கைகள் தேவனுடைய வார்த்தையை வெளிப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படு கின்றன. குதிரையின் மேலேறியிருந்தவர்களைக் கவனியுங்கள் - மூன்று குதிரைகள் புறப்பட்டுச் சென்றன. அவைகளில் ஒன்று வெள்ளை நிறம் கொண்டது. மற்றொன்று சிவப்பு நிறமுடையது. மற்றொன்று கறுப்பு நிறமுடையது. நான்காவது குதிரையின் நிறம் எல்லா நிறங்களும் கலந்ததாயிருந்தது, பாருங்கள், மூன்று வித நோக்கங்கள். அவர் சிங்கத்தை அனுப்பும் போதும், அதையே செய்தார். சிங்கம் என்பது அந்திக் கிறிஸ்துவிடம் போரிடும் தேவனுடைய வார்த்தையாகும். உபத்திரவ காலத்தில் அவர் காளையை அனுப்பினார் (பலி செலுத்தப்படும் மிருகம்). உபத்திரவம் வந்த காலத்தில் ஜனங்கள் அடிமைகளாகப் பணிபுரிந்து, தங்களைப் பலியாக ஒப்புக் கொடுப்பதை மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. அடுத்த சபையின் காலம் சீர்திருத்தக்காரரின் காலமாகும்’ அப்பொழுது தேவன் மனித ஞானத்தை அனுப்பினார் - மிருகம் மனித தலையைப் பெற்றிருந்தது. அது சீர்திருத்தக்காரரிடமிருந்து புறப்பட்டு சென்ற வல்லமையைக் குறிக்கின்றது. இன்றைக்கும் ஜனங்கள் சீர்திருத்தக்காரரின் காலத்தில் உண்டாயிருந்த கொள்கையின்படி வாழ்கின்றனர் என்பதில் வியக்கத்தக்கது ஒன்றுமில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் வேத கல்லூரிகள் போதித்த வண்ணம், சபை முறைகளைக் கடை பிடிக்கின்றனர். ஒரு காலத்தில் அது தேவன் கையாடிய முறையாகும். ஆனால் அந்தக் காலத்தை நாம் கடந்து விட்டோம். இப்பொழுது நாம் கழுகின் காலத்தில் பிரவேசித்துள்ளோம். எல்லாமே வெளிப்பட வேண்டிய காலமாயுள்ளது இது. வெளிப்படுத்தல் 10.1-7டன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களில் தேவரகசியம் நிறைவேற வேண்டும். இப்பொழுது திறக்கப்பட்ட ஆறாம் முத்திரையிலும் மூன்று வித நோக்கங்கள் அடங்கியிருப்பதை நாம் காணலாம். அம்மூன்று நோக்கங்களும் இவைகளே, முதலாவதாக, உறங்கிக் கொண்டிருக்கும் கன்னிகைகள் சுத்திகரிக்கப்படுவதற்கென உபத்திரவ காலத்தில் பிரவேசிக்க வேண்டும். அவளிடமிருந்து அவிசுவாசம் என்னும் பாவம் போக்கப்பட வேண்டும். செய்தியை அவள் புறக்கணித்ததால் அவள் சுத்திகரிக்கப்பட வேண்டும்! இது உபத்திரவ காலத்தில் நிகழ்கின்றது. வெளிப்படுத்தல் 6-ம் அதிகாரத்திலும் 8ம் அதிகாரத்திலும் இடையேயுள்ள 7ம் அதிகாரத்தில் அவள் சுத்திகரிக்கப்பட்டு, அவளுக்கு வெண்வஸ்திரம் அளிக்கப்படுகின்றது. அவள் மணவாட்டியல்ல, அவள் சபையைச் சார்ந்தவள். செய்தியை ஏற்றுக் கொள்வதற்கு அவளுக்குச் சந்தர்ப்பம் வாய்க்காமலிருந்திருக் கலாம். அல்லது கள்ளத் தீர்க்கதரிசிகளின் மூலமாய் அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருக்கலாம். எனினும், அவர்கள் உத்தம இருதயம் படைத்தவர்கள். தேவன் அவர்கள் இருதயங்களை அறிவார். அவர்கள் உபத்திரவ காலத்தில் சுத்திகரிக்கப்படுகின்றனர். வேறொரு சுத்திகரிப்பின் காலம் வருகின்றதைக் கவனித்தீர்களா? அது இஸ்ரவேலர் ஒன்று கூடும்போது நிகழும், இது இரண்டாம் நோக்கமாகும். உபத்திரவ காலத்தில் தேவன் இஸ்ரவேலரை சுத்திகரிப்பார். அங்கு ஒன்று கூடும் லட்சக்கணக்கானவர்களில், 144,000 பேர் தெரிந்தெடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றனர். தேவன் இஸ்ரவேலரை சுத்திகரிக்கின்றார். பூமி முழுவதும் சுத்திகரிக்கப்பட வேண்டுமென்பதை கவனியுங்கள். சந்திரனும், நட்சத்திரங்களும், இயற்கை யாவும் சுத்திகரிக்கப்பட வேண்டும், அது என்னவென்று தெரிகின்றதா? பூமியானது சுத்திகரிக்கப்பட்டு, தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, ஆயிரம் வருட அரசாட்சிக்கு ஆயத்தமாகின்றது. ஆயிரம் வருட அரசாட்சி வரவிருக்கின்றது. அழுக்குள்ள யாவும் ஆறாம் முத்திரையின் போது சுத்திகரிக்கப்பட வேண்டும். ஏழாம் முத்திரை திறக்கப்படும்போது, அதில் மூன்றுவித இரகசியங்கள் அடங்கியிருக்கின்றன என்பதை கவனித்தீர்களா? இதைக் குறித்து ஏற்கனவே நான் பேசியுள்ளேன். அதுதான் ஏழு இடி முழக்கங்களில் இரகசியமாகும். பரலோகத்திலுள்ள ஏழு இடிகள் இரகசியத்தை வெளியரங்கமாக்கும். அது கிறிஸ்துவின் வருகையின் போது வெளிப்படும், ஏனெனில் அவர் எப்பொழுது வருவாரென்பதை யாருமே அறியாரென்று இயேசுதாமே கூறியுள்ளார். யூதர்கள் அவரிடம் அதைக் கேட்டபோது, நீங்கள் கவனித்தீர்களா? நாம் ஆறு முத்திரைகளை மத்தேயு 24-ம் அதிகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஏழாம் முத்திரை விடப்பட்டதை நாம் கண்டோம். அவர் வரும் நாளையாவது நாழிகையாவது தேவன் மாத்திரமே அறிவாரென்றும், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள் என்று இயேசு கூறினார். ஆகவே, அது எழுதப்படாமலிருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே அவர்கள் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக்கொண்டனர். அப்பொழுது யாரும் எவ்வித செயல்களும் புரியவில்லை. தேவதூதர்களும் அதை அறியார்கள். அவர் எப்பொழுது வருவாரென்று யாரும் அறியார். ஆனால் அவர் வரும் சமயத்தில் ஏழு இடிகளின் சத்தம் முழங்கி அந்த மகத்தான காரியத்தை வெளிப்படுத்தும். ஆகவே, அது என்னவென்று நமக்குத் தெரியாது. அந்த நேரம் வரும்வரை அது வெளிப்படாது. ஆனால் அது வெளிப்படவேண்டிய அந்த நாளிலும், அந்த நேரத்திலும், அது திண்ணமாக வெளிப்படும். எனவே நாம் செய்யவேண்டியது என்னவெனில், தேவனுக்கு முன்பாக பயபக்தியுடன் இருந்து, அவருக்குச் சேவை செய்து, கிறிஸ்தவ ஜீவியம் செய்வதற்கு அவசியமான யாவற்றையும் கடைபிடித்தலாகும். ஆறாம் முத்திரை நமக்குத் திறக்கப்பட்டதை நாம் கண்டோம். ஆனால் அந்த நேரம் வரும்வரை, ஏழாம் முத்திரை ஜனங்களுக்குத் திறக்கப்படாது. இந்த ஏழு சப்தங்களும் முழங்க தேவன் அனுமதிக்க ஒரு காரணம் இருக்கவேண்டும். ஏனெனில், அது சம்பவிக்க வேண்டும். ஆட்டுக் குட்டியானவர் தம் கையில் புத்தகத்தை வாங்கி, ஏழாம் முத்திரையையும் திறந்தார் என்று பார்க்கிறோம். ஆனாலும் அது மறைக்கப்பட்ட இரகசியமாயிருக்கிறது. எவருமே அதை அறியார். ஆனால் அவர், ‘யாருமே அவர் வருகையின் நேரத்தை அறியமாட்டார்கள்’ என்றார். ஏழு இடிகளில் அடங்கியுள்ள இரகசியத்தையும் அவர்கள் அறியார்கள். ஏனெனில் இவையிரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டது. அதைக் குறித்து அவ்வளவுதான் நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். மற்றவை வெளிப்பட்டுவிட்டன. ஆனால் இது வெளிப்படவில்லை, நான்அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, ஏழு இடிகள் வரைக்கும் உள்ள இரகசியங்கள் எல்லாம் வெளிப்படுவதை நான் கண்டேன். அதுவரைக்கும் தான் நமக்கு வெளிப்பட்டுள்ளது. நாம் ஒவ்வொருவரும் தேவனைச் சேவித்து, நன்மையானவைகளைச் செய்து, நாம் வாழ்நாள் முழுவதும் அவரில் அன்புகூர்ந்து அவரைச் சேவிப்போம் என்று நம்புகிறேன். தேவன் மற்றவைகளைப் பார்த்துக் கொள்வார். தேவகிருபையால், முத்திரிக்கப்பட்டிருந்த ஆறு முத்திரைகளின்கீழ் அடங்கியிருந்த இரகசியங்களையும் நாம் அறிந்துகொண்டோம். ஆனால் ஜனங்களுக்கு ஏழாம் முத்திரையின் இரகசியம் வெளிப்படக்கூடாது என்பதையும் நாம் புரிந்து கொண்டோம். அவருடைய வருகையும் அவர் வரும் நாழிகையும் பூமி, அழிதலும்.. மத்தேயு 24ம் அதிகாரத்தில் அவர்கள், ‘உமது வருகைக்கும் உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன?’ என்று கேட்ட போது அவர் அதைக் குறித்து சொல்லிக் கொண்டே வந்து, முடிவில் 31ம் வசனத்தில் இஸ்ரவேல் ஒரு நாடாக ஒன்று சேரும் என்று சொல்லிவிட்டு, உடனே உவமை களுக்குச் செல்கின்றார்.‘அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்’. பின்னர், அப்படியே இவைகளை யெல்லாம் நீங்கள் காணும்போது சமயம் வந்துவிட்டது என்று அறியுங்கள்’ என்கிறார். இஸ்ரவேல் ஒரு நாடாக ஒன்று சேர்ந்ததை நீங்கள் காண்கிறீர்கள். ஆனால் அவர் ஏழாம் முத்திரையைக் குறித்து ஒன்றும் வெளிப்படுத்த வில்லை என்பதை கவனியுங்கள். இங்கேயும் ஏழாம் முத்திரையை அவர் திறந்தபோது, மறுபடியும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார். எனவே, அது இன்னமும் முற்றிலுமான ஒரு இரகசியமாயுள்ளது. அது வெளிப்படக்கூடிய நேரம் இன்னும் வரவில்லை. ஆகவே இதுவரை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். மற்றவை இயேசு தம் மணவாட்டிக்காக பூமிக்கு வரும் நேரத்தில் வெளிப்படும் அச்சமயம் என்னென்ன நேரிடுமோ, அது அப்பொழுது புலப்படும். அதுவரை, நாமெல்லாரும் ஜெபசிந்தையுடையவர்களாய், நல்ல கிறிஸ்தவ ஜீவியம் செய்து, அவருடைய வருகையை எதிர்நோக்கியிருப் போமாக. இந்த ஒலிநாடா யாரிடமாவது கிடைக்கப் பெற்றால், இதைக் கொண்டு ஒரு தத்துவத்தையோ அல்லது கொள்கைகையோ உண்டாக்கிக் கொள்ள முயலவேண்டாம். நீங்கள் செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று, தேவனுக்குத் தொடர்ந்து சேவை செய்வதேயாகும். ஏனெனில் இது ஒர் மகத்தான இரகசியமாயிருப்பதால் யோவான் அதை எழுத தேவன் அனுமதிக்க வில்லை. அவை முழங்கின.... அது திறக்கப்படுமென்று வாக்குத்தத்தம் செய்துள்ளார். ஆனால் இதுவரை அது திறக்கப்படவில்லை. அவர் நமக்குக் காண்பித்த எல்லாவற்றிற்காகவும் அவருக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நான் எட்டு நாட்களாக அந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். நான் உங்களுக்கு விளக்கின செய்தியை அனேகர் புரிந்து கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன். ஆவிக்குரிய காரியங்கள் அனேககாலங்களாக நடந்து கொண்டிருக் கின்றனவென்றும் அவைகளை நீங்கள் அறியாமலிருந்தீர்கள் என்றும் நான் உறுதியாகக் கூறமுடியும். ஆனால் இப்பொழுது நான் உங்களுக்கு அளித்த செய்தி தேவனால் அனுப்பப்பட்டு, வேதவாக்கியங்களால் விளக்கப்பட்டு, அது உண்மையென்று தேவனால் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் நான் இதை பிரசங்கிக்கும் முன்னமே, மேற்கத்திய நாட்டிற்குப் போக எத்தனித்திருக்கையில், ஒரு நாள் காலை பத்து மணிக்கு கர்த்தர் எனக்கு ஒரு தரிசனத்தை அருளினார். நான் உங்களிடம் தரிசனத்தைக் கூறினேன் - அதாவது ஏழு தூதர்கள் கூட்டமாக வந்த காட்சி. ஆனால் அதன் பொருள் எனக்கு அப்பொழுது விளங்கவில்லை. இதை நீங்கள், ‘ஐயன்மீர், இதுவா சமயம்?’ என்னும் செய்தியடங்கிய ஒலி நாடாவில் கேட்கலாம். ஆம், அதைதான் இப்பொழுது நீங்கள் கண்டு கொண்டிருக்கின்றிர்கள். அந்த ஏழு தூதர்கள்.... நான் அப்பொழுது மேற்கில் இருந்தேன். அந்த சிறு தூதர்கள் உங்களுக்கு நினைவிருக்கின்றதா? அவர்கள் கிழக்கு நோக்கிசென்றனர். அடுத்தபடியாகத் தோன்றிய தூதர்கள் - புறாக்கள் (சற்று பெரிய பறவைகள்) - அவைகளும் கிழக்கே சென்றன. நான் பார்த்துக்கொண்டே நின்றேன். அவைகள் என்னுடனே கூட இருந்தன. அதுதான் முதலாம் இழுப்பும் இரண்டாம் இழுப்புமாம். மூன்றாவது, மேற்கிலிருந்து பயங்கர வேகத்தில் வந்து என்னைத் தூக்கிக் கொண்டு சென்றனர். அதுதான் நான் மறுபடியும் கிழக்குக்கு வந்து ஏழு முத்திரைகளின் இரகசியங்களை அறிவித்ததாகும். ஜுனியர் ஜாக்ஸனும் தம் சொப்பனத்தில் அவ்விதமாகவே கண்டார். அந்த சொப்பனத்தின் அர்த்ததை நான் விவரிக்க தேவன் அனுமதித்தார். அந்த கூர்நுனி கோபரத்தின் உள்ளில் ஒரு வெண்பாறை உண்டாயிருந்தது. அதில் ஒன்றுமே எழுதப்படவில்லை. ஆகவே தான் இத்தூதர்களின் செய்தியோடு பொருந்தத்தக்கதாய், நான் மேற்குக்குச் சென்று மறுபடியும் வந்து சபைக்கு அதை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று, ‘நிகழவிருக்கும் அடுத்த காரியம் இந்த சபையில்தான் நிகழும்’ என்று நான் கூறினது நினைவிருக்கிறதா? வேறொரு காரியத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். ‘ஐயன்மீர், இதுவா சமயம்?’ என்னும் செய்தியடங்கிய ஒலி நாடாவை நீங்கள் கேட்டிருப்பீர்களானால் ஒரு தூதன் மாத்திரம் என் கவனத்தை அதிகம் கவர்ந்தான் என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் கேட்டிருப்பீர்கள் - மற்றைய தூதர்கள் சாதாரணமாகத் தென்பட்டனர். இவன் மாத்திரம் பிரத்தியேகமாயிருந்தான். கூர் நுனி கோபுரத்தின் அமைப்பில் வந்த தூதர்களின் கூட்டத்தில் இவன் என் இடது பாகத்தில் இருந்தான். அந்த கூர் நுனி கோபுரத்திலிருந்த வெண்பாறை எழுதப்படாமலிருந்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். கூர் நுனி கோபுர அமைப்பில் வந்த தூதர்கள் அந்த கூர் நுனி கோபுரத்திற்குள் என்னை ஏற்றுக் கொண்டனர் - தேவரகசியங்களை அவர்கள் மாத்திரமே அறிந்திருந்தனர். அந்த கூர் நுனி கோபுரத்திற்குள் அடங்கியிருந்த ஏழு முத்திரைகளின் இரகசியங்களை வெளிப்படுத்த வந்த தூதர்கள் தாம் இவர்கள். எனது இடது பக்கமிருந்த அத்தூதன், இடமிருந்து வலம் எண்ணினால் ஏழாம் தூதன் அல்லது கடைசி தூதனாயிருப்பான். அவன் என் இடது பாகத்திலிருந்தபடியால், நான் அவனை மேற்கு திசையில் நோக்கி நின்றேன், கிழக்கு நோக்கி வரும் அவன் என் இடது பாகத்தில் இருப்பான். அதுவே கடைசி தூதனின் செய்தியாகும் - மிகவும் கீர்த்தி வாய்ந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்ந்த வண்ணமாய், கூர்மையான சிறகுகள் பெற்றவனாய் என்னை நோக்கி பறந்து வந்தானென்று நான் உங்களிடம் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதுதான் ஏழாம் முத்திரை, அது இப்பொழுதும் பிரத்தியேகம் வாய்ந்தது. அது இன்னது என்பது நமக்கு இதுவரை தெரியாது. ஏனெனில் அது உடைக்கப்பட அனுமதியில்லை. இது எவ்வித கூட்டமாயிருந்தது என்பதை கூட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் கண்டிருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் ஆசனத்தின் முனையில் உட்காரும் அளவுக்கு அது சிலிப்புடையதாய் இருந்தது. பகல் ஒன்று அல்லது இரண்டு மணிக்கே நீங்கள் இங்கு வந்து, முன்னால் உட்கார வேண்டுமென்று கருதி, ஆலயம் திறக்கும் வரை காத்து நின்றீர்கள் - சுவர்களின் அருகாமையில் கால்கள் மறுத்துப்போக நின்று கொண்டிருந்தீர்கள். இது என்ன? பரிசுத்த ஆவியானவர் தம் தூதர்களை அனுப்பினார். அவர்கள் இவைகளை வெளிப்படுத்தித் தந்தனர். இவை தேவனுடைய வார்த்தையுடன் முற்றிலும் இணைந்து போவதைக் கவனியுங்கள். இது சத்தியம் என்பதை உங்களுக்கு உணர்த்த, அது நிகழும் இரண்டு மாதங்களுக்கு முன்னமே அவர் அதை அறிவித்தார், ஒன்றையுமே அறியாதவனாய் நான் மேற்குக்குச் சென்று, அவரளித்த வெளிப்பாட்டைப் பெற்றவனாய் மறுபடியும் வந்து உங்களுக்கு எடுத்துரைத்தேன். அவர் என்னை தரிசனத்தில் கொண்டு சென்றபோது, இதைக் குறித்து ஒன்றையாவது அப்பொழுது எனக்கு அவர் வெளிப்படுத்தவில்லை. நான் பயந்து போனேன். நான் வெடியில் இறந்து போவேன் என்று பயந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் அதன் அர்த்தத்தை எனக்கு விவரிக்க முடியவில்லை. அது தேவையாயிருந்த போது அந்த அறையில் எனக்கு வெளிப்பாடு கிடைத்தது. அவர் அளித்த வண்ணமாகவே நான் உங்களுக்கு எடுத்துரைத்தேன். ஆகவே, நண்பர்களே, தரிசனங்கள் பொய்யாகா, அவை முற்றிலும் உண்மை. தரிசனமும், வார்த்தையும், சரித்திரமும், சபையின் காலங்களும் ஒன்றோடொன்று இணைகின்றன. எனவே எனது அறிவுக்கேற்பவும், தேவனுடைய வார்த்தையின்படியும், அவருடைய தரிசனத்தின்படியும் வெளிப்பாட்டின்படியும், உங்களுக்கு அளிக்கப்பட்ட வியாக்கியானம் கர்த்தர் உரைத்ததாவது என்பதாம். கர்த்தர் உங்களெல்லாரையும் அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக! நாமெல்லாரும் நின்று அந்த நல்ல பழமையாக சபையின் பாடலைப் பாடுவோம். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக! ஆமென். நேசிக்கிறேன் (கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக) நேசிக்கிறேன் (என் இதயப் பூர்வமாக) முந்தியவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பைக் கல்வாரியில்.